நம் தமிழ் மழலையர்கள் தமிழ் படிக்கட்டும். பேசட்டும்.

8 views
Skip to first unread message

pollac...@gmail.com

unread,
Mar 16, 2017, 11:28:40 AM3/16/17
to நாள் ஒரு நூல், thiru-th...@googlegroups.com, tmi-...@googlegroups.com, currentt...@googlegroups.com, naamt...@googlegroups.com, thantha...@googlegroups.com


உலகம் முழுவதும் உள்ள நம் தமிழ் மழலையர்களும், தமிழ் தெரியாத தமிழ் மக்களும், எளிமையாகத் தமிழ் கற்றுக்கொள்வதற்கான அனைத்தும் உருவாக்கி வைத்துள்ளேன். உலகத் தமிழ் அமைப்புகளும், தமிழ் கற்பிக்க விரும்பம் உடைய மக்களும் 10 மாணவர்களை இணைத்துக் கொண்டு கற்பிக்கத் தொடங்கினால் அனைத்தையும் அளித்து உதவக் காத்திருக்கிறேன். நம் தமிழ் மழலையர்கள் தமிழ் படிக்கட்டும். பேசட்டும்.

இந்த முறையில் ஆசிரியர் ஓர் உதவியாளராக இருந்து ஊக்குவித்தால் போதும். நான் உருவாக்கிய கருவிகளே அவர்களைப் படிக்க வைக்கும். அத்தனை நுட்பமாக இக்கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழ் கற்பிப்பதற்காக 32 அட்டைகளை உருவாக்கியுள்ளேன். இவை 14 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, 14 மொழி பேசுபவர்களும் தமிழை எளிமையாகக் கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த அட்டைகளை வரிசையாகச் சொல்லிக் கொடுத்தால் போதும். அட்டைகளை எப்படிக் கற்றுத் தருவது என்பதற்கான காணொளி இது. https://www.youtube.com/watch?v=t12K_6hnSZg

32 அட்டைகளை நீங்களாகவே அச்சாக்கிக் கொள்ள விரும்பினால் இந்த PDF கோப்பினை இறக்கிக் கொள்ளவும். இதில் 4 பக்கங்கள் அ3 அளவில் உள்ளன. முதல் பக்கத்தின் மேல் இரண்டாவது பக்கத்தையும்
மூன்றாவது பக்கத்தின் மேல் நான்காவது பக்கத்தையும் கலர் ஜெராக்ஸ் எடுக்கும் இடத்தில் இதே அளவுள்ள கெட்டியான வெள்ளை அட்டையில் அச்சாக்கிக் கொள்ளவும். இப்பொழுது ஒவ்வொரு பக்கத்திலும் 16 அட்டைகள் கிடைக்கும். இரண்டு அச்சாக்கிய அட்டைகளில் கோடு போட்ட இடத்தில் வெட்டினால் தனித்தனியான 32 அட்டைகளாகிவிடும். பிறகு 1 முதல் 32 வரையிலான அட்டைகளை வரிசையாக அடுக்கிக் கொள்ளவும். அட்டையின் முன்பகுதியில் வரிசை எண் வெள்ளை வட்டத்திற்குள்ளும் பின்பகுதியில் வரிசை எண் மஞ்சள் வட்டத்திற்குள்ளும் இருக்கும். http://www.thamizham.net/print.pdf

தமிழ் கற்பிக்கும் 32 அட்டைகளைக் கணினியில், ஐபோன், ஐபேடு, ஆன்டிராய்டு கைபேசிகளில் படிக்கக்கூடிய PDF வடிவில் பெறுவதற்கான இணைப்பு இது http://www.thamizham.net/32cardslanguagelist.htm

32 தமிழ் கற்பிக்கும் அட்டைகளைப் புத்தக வடிவில் கணினியில் ஒவ்வொரு பக்கமாகத் திருப்பிப் படிக்கும் வகையில் வடிவமைத்த exe கோப்பினைப் பெற http://win.tamilnool.net/32TB.exe

32 தமிழ் கற்பிக்கும் அட்டைகளின் கணினி வடிவமான projector02.rar இறக்கி Unzip செய்து கணினியில் இயக்கினால் அதுவே எழுத்தை எழுதிக் காட்டும் எழுத்தை ஒலித்துக் காட்டும், இந்தக் கோப்பினைப் பெற http://www.thamizham.net/kal/projector/projector02.rar

யாருடைய உதவியும் இல்லாமல் நானே கணினியில் படித்துக் கொள்கிறேன் என்றால் Learn tamil through English இணைய பக்கத்தைத் திறந்து படிக்கலாம். http://www.thamizham.net/kal/ttenglish/index-u8.htm ஆங்கிலவழியில் தமிழ் கற்பதற்குரிய இணைய பாடங்கள் இந்த இணைப்பில் உள்ளன.

தமிழ் கற்பிப்பதற்காக எனது 25 ஆண்டு ஆசிரியர்பயிற்சிப் பணியில் நான் கண்டறிந்து அனைத்தையும் இந்த இணைய தளத்தில் இணைத்துள்ளேன். http://www.tamilteaching.in

பிரச்சனைகள் இருந்தால் அருள்கூர்ந்து தொடர்பு கொள்ளவும். உங்கள் நண்பர்களுக்கெல்லாம் இந்த மடலை அனுப்பி, தமிழ் கற்பிக்க விருப்பம் இருக்கும் நண்பர்களை ஊக்குவிக்கவும். உலகம் முழுவதும் உள்ள நம் தமிழ் மழலையர்களும், தமிழ் மக்களும், இன்னும் 6 மாதத்திற்குள் தமிழ்ச் செய்தித்தாளைப் படிக்க வைப்போம்.

அன்புடன்

M.Natesan., M.A., M.Sc., M.Ed., M.Phil., DDE, (பொள்ளாச்சி நசன்) pollac...@gmail.com - 97 88 55 2061, skype ID: pollachinasan1951 - 8667 421 322, (TAMIL FM) http://www.thamizham.net/thaa.htm -http://www.tamilteaching.in - www.thamizham.net..


Reply all
Reply to author
Forward
0 new messages