நண்பர்களுக்கு வணக்கம்.
பர்மாவில் உள்ள தமிழ் மக்களுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க விரும்புகிறேன். எனவே 32 தமிழ் கற்பிக்கும் அட்டைகளை பர்மிய மொழியில் உருவாக்கி அச்சாக்கி ஆசிரியர்களுக்குப் பயிற்சி தர விரும்புகிறேன். இதற்காக.......
பர்மிய மொழி தெரிந்த நண்பர்களை அன்போடு அழைக்கிறேன். நீங்கள் 450 சொற்களுக்கு பர்மிய மொழியில் ஒருங்குறியில் (Unicode Font) தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும். உங்கள் பெயர் மற்றும் முகவரி, 32 அட்டையின் இறுதியில் இணைக்கப்படும். இந்த அட்டைகள் கோரல்டிராவில் வடிவமைக்கப்பட்டு, அச்சாக்கப்பட்டு பர்மாவில் உள்ள தமிழ் மழலையர்களுக்குத் தமிழ் கற்றுத்தரப் பயன்படுத்தப்படும்.
அருள்கூர்ந்து
pollac...@gmail.com என்று மின்அஞ்சலுக்கு தங்களின் பர்மிய மொழிப்புலமை பற்றியும், தங்களின் கருத்தினையும் எழுதுமாறு அன்போடு வேண்டுகிறேன்.
