பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நாம் பெற்றது தமிழ்க்கல்வியா ?

7 views
Skip to first unread message

pollac...@gmail.com

unread,
Feb 19, 2017, 9:52:35 AM2/19/17
to நாள் ஒரு நூல், thiru-th...@googlegroups.com, tmi-...@googlegroups.com, currentt...@googlegroups.com, naamt...@googlegroups.com, thantha...@googlegroups.com
தமிழ் கற்றுக் கொள்ள இனி பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டாம். ஏனெனில் அங்கு சென்று தமிழ் கற்ற நீங்கள் உங்களது தமிழறிவை இந்த வினா நிரல் வழியாகச் சோதனை செய்து பாருங்கள். நீங்கள் என்ன அடைந்துள்ளீர்கள் என்று உங்களுக்கே தெரியும். 


1) உங்களுக்குத் தமிழில் பேசத் தெரியுமா ? ஆம் என்றால் நீங்கள் பேசுகிற தமிழில் அயற்சொற்கள் உள்ளனவா ? ஒரு நிமிடப் பேச்சில் எத்தனை அயற்சொற்கள் இருக்கின்றன ? அயற்சொற்கள் என்றால் என்ன என்று தெரியுமா ? அதற்கான அகராதி உங்களிடம் உள்ளனவா ?


2) நீங்கள் எழுதுகிற கட்டுரைகளில் அயற்சொற்கள் உள்ளனவா ? ஒரு வரியில் எத்தனை அயற்சொற்கள் உள்ளன ? எந்தச் சொற்கள் அயற் சொற்கள் என்று உங்களால் கண்டறிய முடியுமா ? 


3) நீங்கள் பேசுகிற, மற்றும் எழுதுகிற தமிழில் பிழைகள் உள்ளனவா ? பிழையும் அதற்கான தீர்வும் உங்களால் கண்டறிய இயலுமா ? (ஒற்றுப்பிழை, ஒருமை பன்மை, ரற, லழள, னணந வேறுபாடு பிழை இல்லாமல் எழுதவும், பேசவும் உங்களால் இயலுமா ? )


4) தமிழர் வாழ்வியல் என்றால் என்ன ? காலை முதல் இரவு உறங்கும் வரை தமிழ் இலக்கியங்களின் அடிப்படையில் அமைந்த வாழ்வியல் முறை பற்றி உங்களுக்குத்  தெரியுமா ? தெரியும் என்றால் அதன் அடிப்படையில் வாழ முயற்சி செய்தது உண்டா ? அந்த வாழ்வியல் முறைகளை உங்களால் வரிசைப்படுத்த இயலுமா ? 


5) தமிழன் என்று பெருமைப்படும் உங்களுக்குத் தமிழில் எத்தனை அகராதிகள் இருந்தன / இருக்கின்றன என்று தெரியுமா ? ஏதாவது ஒரு நிகண்டு அல்லது அகராதியை முழுமையாகப் படித்துள்ளீர்களா ? அயற்சொற்களுக்கான அகராதி ஆக்கப்பட்டுள்ளது உங்களுக்குத் தெரியுமா ? அந்த அகராதியைப் பயன்படுத்தி இருக்கிறீர்களா ? 


6) தமிழன் என்று பெருமைப்படும் உங்களுக்குத் தமிழில் எத்தனை இலக்கண நூல்கள் இருந்தன / இருக்கின்றன என்று தெரியுமா ? ஏதாவது ஒரு இலக்கண நூலையாவது முழுமையாகப் படித்து உணர்ந்துள்ளீர்களா ? தமிழில் எழுதும் பொழுது எங்கெங்கெல்லாம் பிழை வரும் என்றும் அதை எப்படித் தவிர்ப்பது என்றும் தெரியுமா ?


7) தமிழன் என்று பெருமைப்படும் உங்களுக்குத் தமிழில் எத்தனை இலக்கிய நூல்கள் இருந்தன / இருக்கின்றன என்று தெரியுமா ? அவற்றில் உங்களுக்கு விருப்பமான நூலாக இருந்து உங்கள் வாழ்வியலோடு இணைந்த ஏதாவது ஒரு இலக்கிய நூல் இருக்கிறதா ? அந்த நூல் காட்டியபடி வாழ முயற்சி செய்துள்ளீர்களா ?


8) தமிழ்க் கலைகள் 64 என்கிறார்களே அவை என்ன என்று உங்களால் வரிசைப்படுத்த இயலுமா ? அவற்றில் எத்தனை கலைகள் உங்களுக்குத் தெரியும் ?  எத்தனை கலைகளில் நீங்கள் நுண்புலமை உடையவராக இருக்கிறீர்கள் ?


9) நீங்கள் தமிழ்ப் படிக்க எத்தனை ஆண்டுகள் செலவழித்துள்ளீர்கள் ? மேலுள்ள எதையாவது உங்கள் கல்லூரி/ பள்ளி படிப்புகள் சொல்லிக் கொடுத்துள்ளனவா? இல்லை என்றால் வேறு எந்த வகையில் இந்தக் கல்வியைப் பெற இயலும் என்று உங்களால் கூற இயலுமா ?


10) தமிழக அரசே இப்படிப்பட்ட தமிழ்க் கல்வியைச் சொல்லிக் கொடுக்க விரும்பினால் அது நடக்குமா ? அதற்கான உரிமை தமிழக அரசுக்கு உள்ளதா ? தனக்கான கல்வியை வடிவமைக்கும் உரிமை யாரிடம் உள்ளது ? மத்திய அரசிடமா ? மாநில அரசிடமா ? 


11) இப்பொழுது நீங்கள் படிக்கும் கல்வி அமைப்பு எப்பொழுது யாரால் / எதற்காக / எப்படி வடிவமைக்கப்பட்டது என்று உங்களுக்குத் தெரியுமா ? 


12) இப்பொழுது கற்பிக்கப்படும் கல்வி என்பது ஒரு மனிதனுடைய அறிவுச் செல்வமாக உள்ளதா ? அல்லது வேலை தேடுகிற அடையாள அட்டையாக உள்ளதா ? 
Reply all
Reply to author
Forward
0 new messages