அன்புடையீர், வணக்கம்
தமிழ் கற்றல் 500 கையேடுகளை அச்சகத்திலிருந்து எடுத்து வந்து அனைத்தையும் நண்பர்களுக்கும், பெயர் பதிவு செய்து பணம் அனுப்பியவர்களுக்கும், கைபேசி வழியாகப் பணம் அனுப்பி முகவரி அனுப்புபவர்களுக்கும், தமிழ் கற்றல் கையேடுகளை அனுப்பிக் கொண்டிருக்கிறேன். 500 கையேடுகளை இதுவரை அனுப்பி விட்டேன்.
3000 கையேடுகள் அச்சாக்கச் சொல்லி இருக்கிறேன். ஒரு பள்ளிக்கு 5 கையேடுகள் என ரூ 100 அனுப்பும் பள்ளிகளுக்கு ஐந்து கையேடுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ளேன். கையேட்டுடன் எப்படிப் பயன்படுத்துவது என்பதற்கான துண்டறிக்கையும் இணைத்து அனுப்புகிறேன். 5 கையேடுகளைப் பெற்று மாணவர்களைப் படிக்க வைத்து. ஒரே மாதத்திற்குள் வெற்றி பெற்ற பிறகு, மடல் அனுப்பி உங்கள் பள்ளிக்குத் தேவையான அளவிற்குக் கையேடுகளைப் பெற்றுக் கொண்டு அனைத்து மாணவர்களையும் படிக்க வைக்கவும்.
ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஈடுபாடுள்ள ஒர் ஆசிரியர் இந்தக் கையேடுகளைப் பெற்று பயிற்சி கொடுத்து வெற்றி பெற்றால், அந்த மாவட்டமே அந்த ஆசிரியரைப் பார்த்து வழி நடக்கும். ஒரு மாவட்டத்திற்கு ஒரு ஆசிரியர் முன்வர அன்போடு கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கான அனைத்து உதவிகளையும் நான் செய்கிறேன். எப்படியாவது நம் மாணவர்களைச் செய்தித்தாள் படிக்க வைப்போம். முகநூல், வாட்ஸ்அப்., மின்அஞ்சல் என நண்பர்களுக்கு இந்தச் செய்தியை அனுப்பி ஈடுபாடுள்ள ஆசிரியரை இயங்க வைக்க ஊக்குவிக்கவும்.
பணம் அனுப்ப : M.Natesan., a/c : 611201508406 ICICI Bank, Pollachi, IFC Code: ICIC0006112
பெங்களுர் கணினித்துறையில் பணியாற்றுகிற நண்பர்கள் இணைந்து கிராமங்களைத் தேர்வு செய்து கல்விப் பணி செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கையேடுகளைப் பெற்றுப் பணியாற்று முன்வந்துள்ளது மகிழ்வைத்தருகிறது. ஸ்கைப் வழியாக அந்த ஆசிரியர்களுக்குப் பயிற்சியும் தரத் திட்டமிட்டுள்ளேன்.
விருப்பம் உள்ள பெற்றோர்கள் தங்கள் பகுதியில் உள்ள படிக்கத் தெரியாத (தமிழ்ச் செய்தித்தாளைக் கொடுத்தால் படிக்கத் தெரியாத) மாணவர்களுக்குப் பயிற்சி தந்து தன் குழந்தையையும், அருகிலுள்ள குழந்தைகளையும் படிக்க வைக்கத் திட்டமிட்டால் அவர்களை நான் அன்போடு வணங்குகிறேன். அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தலைவிட அருகில் உள்ள தமிழ்ப் படிக்கத் தெரியாத ஒரு குழந்தையைப் படிக்கவைத்தல் வணங்குதற்குரிய செயலாகும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் நம் தமிழ் மழலையர்கள் அனைவரையும் தமிழ்ச் செய்தித்தாளைப் படிக்க வைப்போம். இது அவர்களுக்குக் கண் கொடுத்தது போன்று அமையும்.
வாழ்த்துகளுடன்
பொள்ளாச்சி நசன் - தமிழம்.வலை, தமிழம்.பண்பலை.
