நிலை 1 - படிக்கும் மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்தலுக்கான படிநிலைகள்.,
2015 திசம்பர் திங்களில் தமிழே தெரியாத மாணவர்களுக்கான " தமிழ் கற்பித்தல் பயிற்சிப் பட்டறையில் " நான்கு நாள்கள் கலந்து கொண்டு, தமிழில் படிக்கும் திறனை வளர்த்துவதற்கான படிநிலைகளை ஒழுங்கு படுத்தி, வகுப்பு நடத்தினேன். நாள் ஒன்றுக்கு ஒரு மணிநேரம் என, நான்கு மணி நேரம் நான் வகுப்பு எடுத்ததை அப்படியே காணொளியாக்கிக் கொடுத்தார்கள். அந்தப் பயிற்சியின் விளைவாக, மாணவர்கள் மிகச் சிறப்பாகத் தமிழ்ப் படித்ததையும், புரிந்து கொண்டதையும் அந்த அமைப்பாளர்கள் எனக்கு அறிவித்திருந்தார்கள்.
சென்றவாரம், காணொளிகளை மிகுதரத்துடன் இணையத்தில் ஏற்றுகிற நுட்பத்தைக் கற்றவுடன், ஓராண்டுக்கு முன்பு அவர்கள் தந்த அந்தக் காணொளியை எடுத்துப் பார்த்தேன். மிகச் சிறப்பாக இருந்தது. தற்பொழுது நிலை 1 மாணவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இந்தக் காணொளிகள் உதவும் என்று நினைத்தேன். எனவே அவற்றை ஒழுங்குபடுத்தி, தனித் தனியாகத் தலைப்பிட்டு, வரிசைப்படுத்தி இந்தப் பக்கத்தில் இணைத்துள்ளேன். ஆசிரியர்கள் இதன்வழி, தங்கள் வகுப்பறையை மேம்படுத்திக் கொள்ள அன்போடு வேண்டுகிறேன்.