இன்று காலை என்னுள் தோன்றியது இது.
நாம் சரியாகச் சொல்லிக் கொடுக்கவில்லையோ
மக்கள் அனைவரும் இதுவே வழக்கமாக....
விழாக்கொண்டாடுதல், பரிசளித்தல், பாராட்டுப்
பெறுதல், பாராட்டுதல் என்கிற செக்குமாட்டுச்
செயலிலேயே மூழ்கியிருக்கிறார்களே....
நாம் சரியாகச் சொல்லிக் கொடுக்கவில்லையோ
என்று என்னுள் தோன்றியது.
தமிழறிஞர்கள் பெயரில் விழாக்கொண்டாடுகிறோம்
பரிசளிக்கிறோம், பாராட்டுகிறோம், ஆனால்
அந்த அறிஞர் சொன்னதை நாம் நம் வாழ்வில்
கடைபிடிப்பது இல்லை. திருவள்ளுவருக்கு
சிலைவைப்போம். அவர் சொன்ன ஒரு
குறளையாவது நம் வாழ்வில்
பயன்படுத்த மாட்டோம்
இதை நாம் சொல்லிக் கொடுக்கவில்லை.
பள்ளிகளில் இது இல்லவே இல்லை. பின்
எப்படி இது மக்களுக்குத் தெரியும்.
நாம் வாழ்ந்து காட்டுவோம் என்று வாழ்ந்தவர்கள்
சொல்லிக் கொடுக்கவில்லை. அவர்களைப் பார்த்து
நாம் கற்றுக் கொள்ளவும் இல்லை. செக்குமாடாக
ஒவ்வொரு நாளும் வாய்ச்சொல்லிலேயே
காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறோம்.
இதனால் பயன் இல்லை. ஒரு கருத்தையாவது
முன்னெடுத்து வாழ்க்கையில் இயங்குவோம்.
இதை நம் இறுதிவரை செயற்படுத்துவோம்.
அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல்
இன் நான்கும் இழுக்காது இயன்றது அறம்.
இது ஒன்று போதுமே, நல்ல மனிதனாக உயர...
1330 குறளையும் உள்வாங்கினால் எப்படி
இருக்கும். உலகமே பின்பற்ற வேண்டிய உயரிய
கருத்துப் பெட்டகமல்லவா இது.
இந்த எண்ணம் உடையவர்கள் என்னோடு
இணையவும். நாம் புதிய தமிழர்களாக
மேலெழுவோம்.
பொள்ளாச்சி நசன் - தமிழம்.வலை, தமிழம்.பண்பலை