தமிழ் எளிமையாகப் படிக்க......

41 views
Skip to first unread message

pollac...@gmail.com

unread,
Apr 19, 2018, 10:37:52 PM4/19/18
to நாள் ஒரு நூல்

அன்புடையீர்  வணக்கம். 


புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ் கற்பித்தல் என்பது கடினமானது. அதைச் சிறப்பாகச் செய்யும் உங்களுக்கு என் அன்பு வாழ்த்துகள். உலகிலுள்ள அனைத்துத் தமிழ் கற்பிக்கும் அமைப்புகளுக்கும், உதவ விரும்புகிறேன். தொடர்பு கொள்ளவும் pollac...@gmail.com,


குறைந்த வகுப்புகள்., குறைந்த நேரம், ஈடுபாடு குறைந்திருப்பது என்கிற காரணிகள்தான் புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்க் கற்பிப்பதற்குப் பிரச்சனைக்குரியவையாக இருப்பவை. 


எனவே தமிழக பாடத்திட்டத்தை, (220 நாள்கள் ஆண்டுக்கு) அங்கு பயன்படுத்த இயலாது. வெற்றி பெற இயலாது, அதற்காகவே கடந்த சில ஆண்டுகளாக என் முயற்சிகள் அனைத்தையும்  ஒருநிலைப்படுத்தி, குறைந்த நாள்களில், நிறைவாகக் கற்பிப்பதற்குரிய பாடத்திட்டங்களை வரிசைப் படுத்தியுள்ளேன்.


முதற்கட்டமாக இரண்டு கையேடுகளை உருவாக்கி உள்ளேன். இந்த இரண்டு கையேடுகளை நிறைவு செய்தால் தமிழகத்தின் எட்டாம் வகுப்பிற்கு இணையாகும். அடுத்த கையேடு நிறைவு செய்தால் பத்தாம் வகுப்பிற்கு இணையாகும். தொடர்ந்து இலக்கணம் மற்றும் பா எழுதும் ஆற்றலை உருவாக்குகிற பாடக்கையேடுகளை உருவாக்க உள்ளேன்.


அருள்கூர்ந்து இணையவும். ஆசிரியர்களுக்கும் தொடர்பாளர்களுக்கும் ஸ்கைப்வழி பயிற்சியும் தருகிறேன். பயன்படுத்தி நம் மழலையர்களை ஆற்றலுள்ள தமிழர்களாக மாற்ற வழி அமைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.


கருத்துத் திணித்தலாக இல்லாமல், இயல்பாக உணர்ந்து, உள்வாங்கி, புரிந்து, மேலெழ - படி அமைத்து வளர்த்தெடுக்க வேண்டும்.

முதல் படி - எதைக் கொடுத்தாலும் பிழையில்லாமல் படித்தலும், படித்ததைப் புரிந்து கொண்டு சொல்லுதலும். 
இரண்டாம் படி - பல்வேறு நிலைகளில் சொற்களஞ்சியம் பெருக்குதல் ( அகராதி, நிகண்டு களின் வழி அறிதல் )
மூன்றாம் படி - தொடர்களை உருவாக்குதல் என்கிற நிலையில் இலக்கண அடிப்படையில் தொடர்களை அறிதல், உணர்தல்.
நான்காம் படி - தொடர்களுக்கான இலக்கணத்தை நுட்பமாக அறிதல்
ஐந்தாம் படி - யாப்பு எழுதுவதற்கான படிநிலைகளை உள்வாங்கி மரபுப்பாக்கள் எழுதுதல்.

அன்புடன் 
ம.நடேசன்.,M.A.,M.Sc.,M.Ed.,M.phil.,DDE., முதுநிலை விரிவுரையாளர் (ஓய்வு)
email : pollac...@gmail.com, mobile : 9788552061, 8667421322

(தமிழின பதிவுக்கான எனது தளம்) http://www.thamizham.net
(கல்விக்கான எனது தளம்) http://www.pollachinasan.co.in/tt/index.htm
(24 மணிநேரமும் ஒலிக்கும் தமிழம்.பண்பலை) http://www.thamizham.net/thamizhamfm.htm
கையேடு தொடர்பான பதிவுக்கான இணையதளம்: http://www.pollachinasan.co.in/kk/index.htm 
திருக்குறளைக் கற்பிக்க http://www.pollachinasan.co.in/tkl300/index.html
அயற்சொற்களை அறிந்து மேலெழhttp://www.pollachinasan.co.in/tr0001/index.htm
பிழையின்றி எழுத பேச http://www.pollachinasan.co.in/tr0002/index.htm
தமிழ் கற்பிக்கிற இறுவட்டு பெறhttp://www.thamizham.net/kal/projector/projector02.rar
தமிழ் கற்பிக்கிற அட்டைகளின் 14 மொழிகளுக்கான இணைப்பு http://www.thamizham.net/32cards.htm
எனது முகநூல் இணைப்பு : https://www.facebook.com/pollachi.nasan
எனது வாட்ஸ்அப் இணைப்பு எண் : 8667421322
எனது ஸ்கைப் இணைப்பு ஐடி : pollachinasan1951

sorgal attai.jpg
total copy.jpg
kaiyadu.pdf
படிக்கத் தெரிந்தவர்கள் தொடரவேண்டிய கையேடு.pdf
Reply all
Reply to author
Forward
0 new messages