அன்பிற்குரிய நண்பர்களுக்கு வணக்கம்.
வெளி மாநிலங்களில் உள்ள நம் தமிழ் மழலையர்கள்/ தமிழ் மக்கள்
தமிழை எளிமையாகப் படிக்க 32 அட்டைகளை நான் உருவாக்கி உள்ளேன்,
இந்த அட்டைகளின்வழி பயிற்றுவித்தால் ( நாளொன்றுக்கு 1 மணி
நேரம் போதும் ) 30 நாள்களில் தமிழ்ச் செய்தித்தாள் படிப்பார்கள்.
அதன் தொடரியாக - நிலை 2, மற்றும் நிலை 3 க்கான பாடத்திட்டங்களும்
உருவாக்கி வைத்துள்ளேன். நம் தமிழ் மக்கள் தமிழிய ஆற்றல்
உடையவர்களாக மேலெழ நாம் படி அமைபோம். வெளி மாநிலங்களில்
தமிழ்ச் சங்கங்கள் வைத்திருப்பவர்களும், வெளிமாநிலங்களில் தமிழ்
கற்பிக்க விருப்பம் உடையவர்களும் என்னுடன் தொடர்பு கொள்ளவும்.
32 அட்டைகள் பெற
32 அட்டைகளை எப்படி நடத்துவது என்று பயிற்சி பெற
10 பேரை இணைத்துக் கொண்டு தமிழ் கற்பிக்கத் தொடங்கினால்
தமிழ் கற்பித்தலுக்கான அனைத்து உதவிகளும் செய்கிறேன்.
உங்கள் ஆன்டிராய்டு கைபேசியில் தமிழம்.பண்பலையை நிறுவி
பலரும் தமிழிய மக்களாக மேலெழ ஊக்குவிக்கவும்
300 திருக்குறளை ஒரே நாளில் கற்றுக்கொள்ள
அன்புடன்
பொள்ளாச்சி நசன், தமிழம்.பண்பலை, தமிழம்.வலை, 6 -11- 2016