இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், உயிர் ஓட்டம் ஆகியவற்றை
சீர்படுத்தி நோய்த்தடுப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலின் புற
அவயங்களுக்கு மட்டுமன்றி உள்ளுறுப்பு களுக்கும் பயிற்சி கிடைக்கிறது.
ஆரோக்கியமான உடம்பும், நீடித்த ஆயுளும் உண்டாகின்றன.
ஆண்கள், பெண்கள், சிறுவர், முதியவர் என் எல்லா வயதினரும் இலகுவாக பயின்று
உடனே பின்பற்றக் கூடியதாக இருக்கின்றது. பல்வேறு காலநிலைகளுக்கும்
ஏற்றதாக உள்ளதால் உலகில் எந்த நாட்டினரும் பயின்று செய்யலாம். உடலை
வருத்தாமலும், துன்புறுத்தாமலும் செய்யலாம். தற்கால வேகமான வாழ்க்கைக்கு
ஏற்றவாறு குறைந்த காலத்தில் (அரைமணி நேரத்தில்) முடிக்கக் கூடியவாறு
ஒன்பது பயிற்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
எளியமுறை காயகல்பப் பயிற்சி மனவளக்கலை பயிற்சிகளிலேயே உச்சகட்ட பயிற்சி
எனப்படுவது காயகல்பப் பயிற்சி. இது உயிருக்கான பயிற்சி. உயிர் வளப்
பயிற்சி. "காயம்' என்றால் உடல். "கல்பம்' என்றால் உறுதி. எனவே இது உடலை
உறுதியாக வைத் திருப்பதன் மூலம் வாழ்வின் வளமான நீண்ட ஆயுளை அளிக்க
வல்லது. காலையிலும் மாலையிலும் மூன்றே நிமிடங்களில் செய்து முடிக்கக்
கூடிய மிக மிக எளிமையான இப் பயிற்சியின் பயன்களோ அபரிதமிதமானவை.
முதுமையை தவிர்த்து, இளமையைக் காத்து நீண்ட காலம் வாழ்வதென்பது மனிதனது
சாத னைக்கு உட்பட்டதே. இதற்காக வழிமுறை களை இந்தியாவில் தோன்றிய
சித்தர்கள் கண்டறிந்து பின்பற்றினர். அவர்களில் பலர் பல நூறு ஆண்டுகள்
வாழ்ந்ததாக குறிப்புகள் கூறுகின்றன. இந்த வழிமுறைகளை சித்தர்கள் எழுத்து
வடிவில் விட்டுச் சென்றிருந்தாலும், அவர்கள் தங்கள் கவிகளில் கையாண்ட
சொற்றொடர்களின் முழுப்பொருளும் விளங்காதிருந்த காரணத்தினால், காயகல்பப்
பயிற்சியானது பல நூற்றாண்டுகளாக மூடு மந்திரமாகவே இருந்து வந்தது.
உதாரணமாக சிவவாக்கியர் என்ற சித்தரின் இந்தக் கவியை எடுத்துக் கொள்வோம்:
"உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
கருத்தினால் இருத்தியே கபாலமேற்ற வல்லீரேல் விருத்தரும் பாலராவர்,
மேனியும் சிவந்திடும் அருள்தரித்த நாதர்பாதம்
அய்யன்பாதம் உண்மையே' "மூலாதாரத்தில் இருக்கின்ற மிகச் சிறந்த வித்துச்
சக்தியை கருத்தினால் தலை உச்சிக்கு ஏற்ற முடிந்தால், வயது முதிர்ந்தவரும்
இள மையோடு இருப்பர். உடலும் சிவந்திடும்' என்பது இப்பாடலின் பொருளாகும்.
தாயுமானவர் என்ற சித்தரின் கவி இது:
"கால்பிடித்து மூலக் கனலைமதி மண்டலத்தின் மேலெழுப்பில் தேகம் விழுமோ
பராபரமே' இங்கு கால் என்பதன் அர்த்தம் காற்று என்பதாகும். வேதாத்திரி
மகரிஷி அவர்கள் 40 ஆண்டு காலம் தொடர்ந்து ஆராய்ச்சி நடத்தி, அதன் பயனாக
காயகல்பப் பயிற்சியை தற்காலத்திற்கு ஏற்ற வகையில் அனைத்து மக்களுக்கும்
கைகூடி வருகின்ற அளவிற்கு எளிமைப் படுத்தி உள்ளார்கள். இதனை
"இளவயதினருக்கு விருந்து பெரியவர்களுக்கு மருந்து' என மகரிஷி அவர்கள்
குறிப்பிடுவார்கள். காயகல்பப் பயிற்சியின் பயன்கள்
நோயில்லாமல் வாழலாம். இளமையோடு இருக்கலாம். முதுமையை தவிர்க்கலாம்.
மரணத்தைத் தள்ளிப்போடலாம். உடல் நலமும் மனவளமும் நன்றாக் இருக்கும்.
குறிப்பாக இளவயதினருக்கும், மனக் கட்டுப்பாடு மிகும். புகை பிடித்தல்,
சுய இன்பம் போன்ற பழக்கங்களிலிருந்து விடுபட முடியும்.
மூளைச் செல்கள் சுறுசுறுப்பாக்கப்பட்டு சிந்தனைத்திறன், நினைவாற்றல்
அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் நன்கு கவனம் செலுத்தவும் நல்ல
மதிப்பெண்கள் பெறவும் முடியும்.
ஆணுக்கு விந்தும், பெண்ணுக்கு நாதமும் கெட்டிப்பட்டு அதன் அளவும் தரமும்
அதிகரிக்கும். ஆண்மை ஓங்கும். உடல் உறவு விருப்பம் எப்பொழுதும் மனதுக்கு
கட்டுப்பட்டிருக்கும். தூக்கத்தில் விந்து கழிந்து போதல், உடலுறவின்போது
விரைவாக விந்து வெளியேறுதல் போன்ற குறைகள் நீங்கும். பெண்களுக்கு
மாதவிடாய் தொந்தரவுகள் நீங்கும். இப்பயிற்சியை செய்யும் தம்பதிகளுக்கு
பிறக்கக் கூடிய குழந்தைகள் உடல் வளமும், அறிவுக் கூர்மையும் உள்ளவர்களாக
இருப்பார்கள். இளமையிலேயே துறவு கொள்ளும் மற்றும் பொதுத் தொண்டில்
ஈடுபடும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இந்தப் பயிற்சி ஒரு
வரப்பிரசாதமாகும். நீண்ட காலமாக நிலவி வரும் ஆஸ்துமா, மூக்கில் நீர்
வடிதல், நீரிழிவு, இரத்த அழுத்தம், மூல நோய், தோல் வியாதி போன்ற நோய்கள்
படிப்படியாக குணமடைந்து உடல் நலமுறும். மனவளக்கலை அகத்தவப்
(எளியமுறை தியானப்) பயிற்சிகள் மனவளக்கலை என்றாலே மனதை வளப் படுத்தும்
கலை. மனதை ஏன் வளப்படுத்த வேண்டும்? மனித வாழ்வு வளம்பெற வேண் டுமென்றால்
மனதை வளப்படுத்த வேண்டும். ஏனெனில் மனம் வேறு மனிதன் வேறு அல்ல. மனதின்
மாண்பே மனிதனின் மாண்பு. மனதின் தாழ்வு மனிதனின் தாழ்வு .
துன்பம் இல்லாத இன்பம் நிறைந்த வாழ்வு வேண்டும் என்றால் மனதை
வளப்படுத்துவது அவசியம். ஏனெனில் செய்த தவறுகளே துன்பங்களாக வருகின்றன.
தவறுகள் எண் ணம், சொல், செயல் இவை மூன்றாலுமே இழைக்கப்படுகின்றன.
சொல்லுக்கும், செய லுக்கும் மூலம் எண்ணம். எண்ணத்திற்கு மூலம் மனம். எனவே
மனதை சரிசெய்தால் சகலதும் சரியாகிவிடும். மனதின் மாண்பைப் பற்றி சொல்லாத
மதங்களோ, சமயங்களோ, ஞானியர்களோ, அறிஞர்களோ இல்லை என்றே சொல்லலாம். "யெத்
பாவம். தத் பவதி' எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகி விடுகிறாய் என்கிறது
வேதம்.
"எல்லா காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள். அதனிடத்தினின்று ஜீவ
ஊற்று புறப்படும்' என்கிறது பைபிள். "நாம் இப்போது எப்படி இருக்கிறோம்
என்பது நமது எண்ணங்களின் விளைவே. நமது இருப்பு நமது எண்ணங்களின் உரு
வாக்கமே. எவனது சிந்தை தூய்மையானதோ, எவனது பேச்சு இனிமையானதோ, இன்பம்
அவனைத் தொடர்கிறது. அது அவனை விட்டு அகல்வதேயில்லை' என்கிறது தம்மபதம்.
"உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்துநின் றாடார் வினை கெடப் பள்ளம் மேடும் பறந்து திரிவரே
கள்ளமன முடைக் கல்வியில் லோரே' என்கிறது திருமூலரின் திருமந்திரம்.
"வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு' என்கிறார்
தெய்வப் புலவர் திருவள்ளுவர். எண்ணங்களைப் பற்றி சிந்தனையாளர் ஜேம்ஸ்
எலன் இவ்வாறு கூறுகிறார் : "எண்ணங்களே எமை வார்த்தன எண்ணங்களே எமை
உருவாக்கின கள்ள மனமுடையோனை துன்பம் தொடர்கிறது மாடுதனைத் தொடரும் வண்டி
போல் நல்ல மனமுடையோனை இன்பம் தொடர்கிறது அவனது சொந்த நிழலைப் போல்' இவை
எல்லாவற்றிட்கும் முத்தாய்ப்பு வைத்தாற்போல் வேதாத்திரி மகரிஷி அவர்கள்
தனது வழமையான எளிமையான பாணியில் இவ்வாறு கூறுகிறார்: "மனமது இயற்கையின்
மாபெரும் நிதியலோ
மனமதை தாழ்த்திட மயக்கத்தால் துன்பமே மனமதை உயர்த்தினால் மட்டிலா
இன்பமாம் மனத்திலே உளஎல்லாம் மற்றெங்கு தேடுவீர்? ஆகவே மனித வாழ்வு வளமாக
வேண்டுமென்றால் மனதை வளப்படுத்த வேண்டியது அவசியம். அதற்கு மனதிற்கு
பயிற்சி கொடுக்க வேண்டும். அதுவே மனப் பயிற்சி அல்லது உளப்பயிற்சி
எனப்படுகிறது. மனதிற்கு யார் பயிற்சி அளிப்பது? வேறு யார்? மனம் தனக்குத்
தானேதான் வைத்தியம் செய்து கொள்ள வேண்டும். எனெனில் தவறு இழைப்பது மனம்.
இனி தவறு செய்யக் கூடாது என்று தீர்மனிப்பதும் அதே மனம்தான். தவறு
செய்யாத வழியை தேர்ந்து ஒழுக வேண்டியதும் அதே மனம்தான். மனம் தன்னை
உயர்த்திக் கொண் டால் இன்பம், இடையறா இன்பம். மனதை தாழ்த்திக் கொள்வதும்
உயர்த்திக் கொள்வதும் மனிதனிடம் தான் இருக்கிறது. மனம் தனது மூலமான
உயிரில் ஒடுங்கி பின்னர் உயிரின் மூலமான இறைநிலையை எய்தினால்,
அறிவாகிறது . அந்நிலையைப் பெற்ற மனத்தினை கொண்ட மனிதனும் தெய்வமும்
தரத்தில் ஒன்றே. இந்த அற்புதத்தைத் தான் மனவளக்கலை சாதிக் கிறது. மனம்
என்பது ஒரு அலை இயக்கம். அலை யின் இயல்பு ஓடிக்கொண்டே இருப்பது. எனவே
மனமும் ஓடிக்கொண்டே இருக்கும். அதனை நிறுத்துவது சாத்தியமன்று. இத னையே
மகரிஷி அவர்கள் "மனத்தை அடக்க நினைத்தால் அலையும் மனத்தை அறிய நினைத்தால்
அடங்கும்' என்று சொல்கிறார்.
ஒடிக் கொண்டிருக்கும் நதியை தடுத்து அணைக் கட்டி திசை திருப்பி பாசனம்
செய்து பயன்படுத்துவதுப்போல், ஓடிக் கொண்டிருக் கும் மனதை திசை திருப்பி
ஏதாவது ஒன்றின் மேல் நிலைத்து நிற்க வைத்து பழக்கலாம். இதுவே தவம் அல்லது
தியானம் எனப்படும். தியானம் என்பதன் தமிழ் அர்த்தம் இடையேறாத நினைவு
என்பதாகும். சாதாரணமாக நீண்ட பழக்கத்தின் காரணமாக புலன்கள் மூலம் வெளியே
ஓடிக் கொண்டிருக்கும் மனத்தை உள்ளே திருப்பி அதன் மூலமான உயிரில் ஒன்றச்
செய்தல். புறநோக்காக இருக்கும் மனத்தை அகநோக்காக திருப்புதல். எனவே இதனை
அகநோக்குத் தவம் அல்லது அகத்தவம் என்கிறோம்.
மனவளக்கலையில் பயிற்றுவிக்கப்படும் தவமானது எளியமுறை குண்டலினி யோக
தியானம் எனப்படும். குண்டம் என்றால் நெருப்பு. அலி என்றால் ஆண் பெண் அற்ற
நிலை. அதாவது ஆணுமல்லாத பெண்ணுமல்லாத ஒரு சக்தி, அல்லது ஆற்றல். இதனை
செயலுக்கு வராமல் மூலாதாரத்தில் வளைந்து உறங்கிக் கிடக்கும் அதிசக்தி
வாய்ந்த நாகத்திற்கு ஒப்பிட்டு யோக நூல்கள் பகர்கின்றன. மூலாதாரம்
எனப்படுவது நமது முதுகுத்தண்டின் அடியில் உட்புறமாக ஆசன வாய்க்கு ஒரு
அங்குலம் மேலே உள்ள பகுதியாகும். இந்த சக்தியையே பக்தர்கள் வேதா
சக்தியென்றும், மனோதத்துவ நிபுணர்கள் மனித காந்த சக்தியென்றும், யோகிகள்
அதனை தெய்வீக ஆற்றலான குண்டலினி சக்தியென்றும் சொல்வார்கள். இதுவே நமது
உயிர் சக்தியாகும்.
உயிரின் மீது மனத்தை நிலை நிறுத்துவதே எளியமுறை குண்டலினி யோக தியான
முறையாகும். ஒடிக்கொண்டே இருக்கும் உயிரின் மீது எப்படி மனதை செலுத்துவது
என்ற கேள்வி எழலாம். ஆனால் அது சாத்தியமே. ஏனெனில் உயிருக்கு நமது உடலில்
இயக்க மையம் உண்டு. உடல் முழுவதும் இரத்தம் ஓடிக்கொண்டு இருந்தாலும்
அதற்கு இயக்க மையமாக இருதயம் இருப்பது போல், உடல் முழுவதும் காற்று
ஓடிக்கொண்டு இருந்தாலும் அதற்கு இயக்க மையமாக நுரையீரல்கள் இருப்பதுபோல்,
இந்த உயிருக்கும் இயக்க மையம் உண்டு. உயிரின் இயக்க மையம் பொதுவாக
பெரும்பாலான மனிதருக்கு மூலாதாரம் என்ற பால் உணர்ச்சிக்குரிய சுரப்பியிலே
அடிப்படையாக நின்று உடல் முழுவதும் பரவிக் கொண்டே இருக்கிறது. அந்த
மையமானது அங்கு இருக்கும் வரை உயிரின் இருப்பு மனதிற்கு தெரிவதில்லை.
அதனை அங்கிருந்து இடம் மாற்றி நெற்றிக்கண் அல்லது புருவ மத்தியில்
வைக்கும்போது உயிரானது ஒரு ஊறுணர்ச்சியாக மனதிற்கு புலப்படுகிறது.
இவ்வாறு இடம் மாற்றுவதற்கு முற்காலத்தில் சுவாசப் பயிற்சி, மந்திர ஒலி
எழுப்புதல் போன்ற முறைகள் மூலம் மூலாதாரத்தில் இருந்து ஒவ்வொரு மையமாக
இடம் மாற்றி ஆக்கினைச் சக்கரம் எனப்படும் புருவ மத்திக்கு கொண்டு
வருவார்கள். இதற்கு பத்துப் பதினைந்து ஆண்டுகள் ஆகும். அதுவரை
பிரமச்சரியம் அனுசரிக்க வேண்டும். பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும்போது
உயிர்ச்சக்தி மீண்டும் மூலாதாரத்திற்கு இறங்கி விடுவதால் அவர்களால் இந்த
முறையை பின்பற்ற முடியாது. இன்றைய சூழ்நிலைக்கு அவ்வாறான பயிற்சிகள்
கடினமானவை. நடைமுறைக்கு ஒத்து வராதவை. ஆனால் மன அழுத்தம் நிறைந்த இன்றைய
வாழ்க்கைக்கு மனவளப் பயிற்சிகள் அவசியம் தேவை. இல்லையென்றால்
மனக்குழப்பங்களும், கலக்கங்களும் ஏற்பட்டு அதன் விளைவாக தொல்லையும்
துன்பமும் பெருகுவதைப் பார்க்கிறோம். இந்த குண்டலினி யோகப் பயிறிசியை
இன்றைய விஞ்ஞான காலத்திற்கு ஏற்ற வகையில், குடும்ப வாழ்வில் ஈடுபட்டுள்ள
எல்லோரும், எம்மதத்தவரும், 14 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலாரும்
பின்பற்றுகிற வகையில் எளிமைப்படுத்தித் தந்துள்ளார்கள் தத்துவஞானி
வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
இந்த முறையில் ஏற்கனவே குண்டலினி சக்தி எழுப்பப் பெற்ற, முறையாக பயிற்றப்
பட்ட ஆசிரியர், தனது தவ ஆற்றலைப் பயன்படுத்தி, தனது உயிர்ச்சக்தியைக்
கொண்டு அழுத்தம் கொடுத்து பயிற்சியாளாரின் முதுகு தண்டு வழியாக,
காந்தத்தைக் கொண்டு இரும்பை இழுப்பது போல், ஒருவரது உயிர்ச்சக்தியை
மூலாதாரத்திலிருந்து மெதுவாக மேலே கொண்டு வந்து புருவ மத்தியில்
நிறுத்துகிறார். இது ஆக்கினை தீட்சை எனப்படும். அங்கேயே கவனிக்கும்
பயிற்சியாளாரின் மனதிற்கு உயிரின் இயக்கம் ஒரு நுண்ணிய அழுத்த உணர்வாக
கிடைக்கும். தொடர்ந்து செய்து வர நன்றாக விளங்கும். இப்படியாக
மனவளக்கலையில் பின்வரும் தவங்கள் பயிற்றுவிக்கப் படுகின்றன. ஆக்கினைத்
தவம்: குண்டலினி யோகத்தில் முதல் படி இது. இந்த தீட்சையை ஆசிரியர்
தொட்டுக் கொடுப்பதால் இதற்கு ஸ்பரிச தீட்சை எனப்படும். இது கோழி தனது
முட்டைகளை ஸ்பரிசத்தால் காத்து குஞ்சுகளை வெளிக் கொண்டு வருவதைப்
போன்றது. ஆக்கினைச் சக்கரத்தை "மெய்ஞ்ஞானம் என்ற அருட்கோயிலுக்குள்
புகும் வாயில்' என்று யோக நூல்கள் பகர்கின்றன. இந்த தவத்தினால் உயிருக்கு
விழிப்பு நிலைப் பேறு கிட்டுகின்றது. புலன்களை கடந்து நிற்கும் வல்லமை
பெறுகிறது. அறிவின் திறன் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது. உடல்
நலம், மன நலம் ஓங்குகிறது. முகம் அழகு பெறுகிறது. சாந்தி தவம் : எளிய
முறை குண்டலினி யோகத்தில் சாந்தி தவம் மிக முக்கியமானது. மூலாதாரத்தில்
உறங்கிக் கிடந்த குண்டலினி சக்தி ஆக்கினையில் இயக்கம் பெற்று சில சமயம்
உடல் தாங்கும் ஆற்றலுக்கு மேலாக ஓங்கும். அப்போது குண்டலினி சக்தியை மேலே
எழுப்பியது போல் ஆசிரியர் மீண்டும் அதனை ஆக்கினையிலிருந்து
மூலாதாரத்திற்கு கீழே இறக்கி விடுகிறார். எனவே இதனை இறங்குபடி தவம்
என்றும் சொல்லப்படுகிறது. தவக்கனலை இறக்கி சாந்தி தருவதால் சாந்தி தவம்
என்று பெயர் பெற்றது. இதன் பிறகு பயிற்சியாளர் வேண்டும்போது குண்டலினி
எனும் தனது உயிச்சக்தியை ஆக்கினையிலோ அல்லது மூலாதாரத்திலோ வைத்து
தவமியற்றும் வல்லமையை பெறுகிறார். சாந்தி தவத்தின் மூலம் தவ ஆற்றல் உடல்
ஆற்றலாக மாற்றம் பெறுகிறது. அது உடல் நலனுக்கும், நோய் எதிர்ப்புக்கும்
பயன்படுகிறது. உடல்வலி, காச்சல், அஜீரணம் போன்ற சாதாரண நோய்கள் சாந்தி
தவத்தால் நீங்குகின்றன. மலச்சிக்கல் விலகுகிறது.
துரிய தவம் : இது மூன்றாவதாக கற்றுக் கொடுக்கப்படும் தவமாகும். இந்த
தீட்சையை ஆசிரியர் தனது கண்கள் மூலம் கொடுப்பதால் இது நயன தீட்சை
எனப்படும். இது மீன் தன் முட்டைகளை தனது பார்வையினாலேயே பொறித்து
குஞ்சுகளை வெளிக் கொண்டு வருவதைப் போன்றது. உச்சந்தலையில் உணர்வை
நிறுத்தி தவம் இயற்றுவது துரிய நிலைத்தவம் அல்லது துரியம் எனப்படும்.
இதற்கு பிரம்மரந்திர தவம் என்ற பெயரும் உண்டு. யோக நூல்கள் உச்சந்தலையை
ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரைக்கு ஒப்பிட்டு இந்த தவத்தை "சகஸ்ராதார யோகம்'
என்று பகர்கின்றன. சகஸ்ரம் என்றால் ஆயிரம். அதாவது நமது மூளையில்
ஆயிரக்கணக்காகான சிற்றரைகள் உள்ளன. துரியத்தில் தவம் செய்யும்போது
உயிர்ச்சக்தி மூளையிலுள்ள சிற்றைரைகளிளெல்லாம் ஊடுருகி அசைந்து கொண்டு
போகும். அந்த ஓட்டம் இனிமையான ஓட்டமாக, ஒவ்வொறு இடத்திலேயும், அது
புதைந்து, புதைந்து வருவதாக ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விதமான் உணர்வாக
இருக்கும். துரிய நிலைத்தவம் இயற்ற இயற்ற, இதுவரை இயக்கத்திற்கு வராத
மூளையின் பல சிற்றரைகள் ஒவ்வொன்றாக இயக்கத்திற்கு வரும். அப்படி விழிப்பு
நிலை ஏற்படும்போது பிரபஞ்ச காந்த சக்தியோடு தொடர்பு கொள்ளும் அற்றல்
ஓங்கி உள்ளுணர்வு (øவெரவைழைö) ஒளிரும்.
துரிய தவத்தால் மனதிற்கு வேகமும், நுட்பமும், எளிதில் உணர்ச்சி வயப்படாத
நிலையும் கிடைக்கும். நாம் எண்ணும் உயரிய எண்ணம் பலபேர் உள்ளத்தில்
பிரதிபலிக்கும். உள்ளக் களங்கமும், உடல் களங்கமும் துடைக்கப்பட்டு தூய்மை
செய்யப்படுகின்றன.
இதனைத் தொடர்ந்து மனவளக்கலையில், அடுத்தடுத்த நிலைகளில், இறைநிலையோடு
எண்ணத்தை கலக்கவிட்டு ஐக்கியமாகும், குண்டலினி யோகத்தில் முடிவான உச்ச
நிலையான "துரியாதீதம்' எனப்படும் தவமும், மற்றும் பஞ்சேந்திரிய தவம்,
பஞ்சபுரித நவக்கிரகத் தவம், ஒன்பது மையத் தவம், நித்தியானந்தத் தவம்,
இறைநிலைத் தவம் ஆகிய தவங்கள் பயிற்றுவிக்கப் படுகின்றன.
இந்த தவப்பயிற்சிகளை முறையாக பயின்று தொடர்ந்து செய்து வர, மனதிற்கு
ஒர்மை கிட்டுகிறது. அறிவு கூர்மை பெறுகிறது. நமது எண்ணம், சொல்,
செயல்களில் நேர்மை பிறக்கிறது. வாழ்வு சீர்மையாக அமைகிறது. தவத்தின்
மேன்மையை தத்துவஞானி வேத்தாத்திரி? மகரிஷி அவர்கள் தனது கவியொன்றில்
இவ்வாறு கூறுகிறார் : ஓன்றி ஒன்றி நின்று அறிவைப் பழக்க உறுதி, நுட்பம்,
சக்தி இவை யதிகமாகும் அன்று அன்று அடையும் அனுபவங்கள் எல்லாம் அறிவினிலே
நிலைத்திவிடும், ஆழ்ந்து ஆய்ந்து நன்று என்று கண்டபடி செயல்கள் ஆற்றும்
நற்பண்பு புலன்களுக்கு அமைந்து போகும் என்றென்றும் கருவிடத்தே அறிவை
ஒன்றும் இயற்கைமுறை சிறப்புடைத்து ஈதே தவமாம். மனவளக்கலையில்
அகத்தாய்வுப் பயிற்சிகள்
உடற்பயிற்சிகளின் மூலம் உடலைப் பற்றியும் உடலோம்பலின் அவசியத்தைப்
பற்றியும் உணர்ந்து கொள்கிறோம். தவப்பயிற்சியின் மூலம் மனதிற்கு
பயிற்சியளித்து மனதை வளப்படுத்துகிறோம். செய்த தவறுகளே துன்பங்களாக
வருகின்ற என்பதை உணர்ந்து , எண்ணம், சொல், செயல்களால் தவறுகள்
செய்யாதிருக்க முயற்சிக்கிறோம். இருந்தும் அறிந்தும் அறியாமலும் மீண்டும்
மீண்டும் தவறிழைக்கிறோம். காரணம் என்ன? இதற்கு காரணம் நம்முள் இருக்கும்
களங்கங்கள். நாம் இதுவரை செய்த செயல்களால் விழைந்த அனுபோக அனுபவங்கள்
நம்முள் பதிவுகளாக இருக்கின்றன. அவை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்
தூண்டப்பட்டு செயலுக்கு வருகின்றன. ஒரு செயலை செய்யக்கூடாது என்ற
விளக்கத்தை பெற்ற பின்னரும் இந்தப் பழக்க பதிவின் காரணமாக அதை மீண்டும்
செய்கிறோம். பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே நடக்கும்
போராட்டமாகவே மனித வாழ்வு இருப்பதாக வேதாத்திரி மகரிஷி அவர்கள்
சொல்கிறார்கள்.
தன்முனைப்பு, பாவப்பதிவுகள், மயக்கம் என்ற மூன்று களங்கங்களோடு
உள்ளவன்தான் மனிதன். இதனையே ஆணவம், கன்மம், மாயை என்றும் சொல்வர்.
தானும், தன்னைச் சார்ந்த அனைத்தும் இறைநிலையின் ஆற்றலினாலேயே உருவாகின
என்பதை மறந்து, புலன் கவர்ச்சிக் காரணமாக அறிவு மயங்கி தனக்குள்
அடங்கியிருக்கும் பெருமைகள் அனைத்தும் தானே உருவாக்கி கொண்டதாக மனிதன்
கற்பனை செய்து கொள்கிறான். இதன் விளைவாக "தன்முனைப்பு' (நபழ) எழுகிறது.
இக்கற்பனையினால் பல தவறான உணர்ச்சி வயப்பட்ட எண்ணங்களும் செயல்களும்
உருவாகி அவை அவனுள் "பாவப் பதிவுகளாக' பதிகின்றன. அறிவு நிலையை மறந்து
புலன்களின் உணர்ச்சி நிலைகளில் "மயக்கம்' ஏற்படுகின்றது.
மனிதன் படுகின்ற துன்பங்கள் அனைத்திற்கும் காரணமாக இருப்பது இந்த மூவகைக்
களங்கங்களே. இந்தக் களங்கங்களால் பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற
பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்னும் ஆறு தீய
குணங்கள் எழுகின்றன. வடநூலார் இவற்றைக் காமம், குரோதம், லோபம், மோகம்,
மதம், மாச்சா??யம் எனக் குறிப்பிடுகின்றனர். இந்த ஆறு தீய குணங்களால்
ஆற்றப் படுவதே பொய், களவு, கொலை, சு??து, கற்பழிப்பு எனும் ஐந்து
பழிச்செயல்கள். இதனை பஞ்ச மாபாதகங்கள் என்கிறோம். எனவே மனிதன் மன
நிறைவாக, நிம்மதியாக, இன்பமாக வாழ வேண்டும் என்றால் இந்தக் களங்கங்களைப்
போக்கிக் கொள்ள வேண்டும். தன்னை தூய்மைப் படுத்தி குணநலப் பேறு பெற
வேண்டும். இதற்காக தன்னையே உள்நோக்க அறிவால் ஆராய்ந்து தன்னிடமுள்ள
உணர்ச்சி வயப்பட்ட குணங்களையெல்லாம் அறிந்து, அவற்றயெல்லாம் மாற்றி
அமைத்துக் கொள்ள தகுந்த போதனை மற்றும் சாதனை முறைகளே "அகத்தாய்வு' என்ற
பயிற்சியாகும். "ஐயப் பாடாஅது அகத்த துணர்வானைத்தெய்வத்தோ டொப்பக் கொளல்'
என்பது வள்ளுவப் பெருந்தகை வாக்கு. அகம் என்றால் நமது பதிவுகளை எல்லாம்
சுமந்திருக்கும் உள்ளம் அல்லது கருமையம். அதனை நாம் ஆய்வு செய்வதே
அகத்தாய்வு. நமது குறைகள பிறர் சொன்னால் ஏற்றுக் கொள்ள மனம் தயங்கும்.
எனவே நாமே நம்மை சுய பரிசோதனைக்கு உற்படுத்துகிறோம். ஆகவே இப்பயிற்சிகள்
"தற்சோதனை' என்றும் அழைக்கப் படுகிறன்றன. தற்சோதனையில் தானே குற்றவாளி,
தானே நீதிபதி. நாம் தினந்தோறும் சமையல் அறையில் எத்தனையோ பாத்திரங்களை
உபயோகிக்கிறோம். அவற்றை சுத்தப்டுத்தி வைத்தால்தான் மறுநாளைக்கு உதவும்.
அதுபோல் தேவை, பழக்கம், சு??ழ்நிலையின் கட்டாயம் ஆகிய மூன்றினாலும்
உந்தப்பட்டு விளைவறியாது பல செயல்கள் ஆற்றி நம்மை களங்கப்படுத்திக்
கொள்கிறோம். அவ்வப்போது அகத்தை ஆய்ந்து அக்களங்கங்களை போக்கிக்
கொண்டால்தான் வாழ்வு வளமாக அமையும். இந்த அகத்தாய்வை எப்படி செய்வது
என்று செயல் முறை பயிற்சிகளாக தருகிறது மனவளக்கலை. மனவளக்கலை அகத்தாய்வு
பயிற்சிகளில் ஐந்து ஆய்வுகள் அல்லது பயிற்சிகள் உள்ளன.
எண்ணம் ஆராய்தல்: எண்ணம் என்றால் என்ன? அது எவ்வாறு உண்டாகிறது? அதனுடைய
காரணம் என்ன? அதனுடைய விளைவுகள் எவை? என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
எண்ணம் எழும்போதே அந்த எண்ணத்திற்கான அடிப்படை என்ன? அந்த எண்ணம் செயலுரு
பெற்றால் அதன் விளைவுகள் நன்மையா? தீமையா? என்பதை ஆராய்ந்து, அவற்றை
ஒகுங்குப்படுத்தி நல்ல எண்ணங்களை வைத்துக் கொண்டு தீய எண்ணங்களை விட்டு
விடுவதற்கான ஒரு நல்ல பயிற்சி முறையே எண்ணம் ஆராய்தல் பயிற்சியாகும். ஆசை
சீரமைத்தல்: வேதாத்தி???? மகா??ஷி அவர்கள் ஆசைகளைத் துறக்கச்
சொல்லவில்லை. அவற்றைச் சீரமைத்துக் கொள்ளச் சொல்கிறார். அவர் தனது
கவியொன்றில் "மண் மீது பெண்துணையால்
பொன்கொண்டே வாழ்கின்றோம் மாற்ற்வதேன் மூவாசை மதிகொண்டே பயன்கொள்வோம்
என்று பகர்கிறார். ஆனால் மனம் உருவாக்கிக் கொள்ளும் ஆசைகளுக்கு எல்லையே
இல்லை. அவசியத் தேவை, நிறைவேற்றிக் கொள்ள வசதி வாய்ப்பு, விளைவு நன்மை
தரக்கூடியதாக இருந்தால்தான் அந்த ஆசையை நல்லது என்று சொல்லலாம்.
நிறைவேற்ற முடியாத ஆசைகளை எல்லாம் அதிகமாக மனம் உருவக்கிக் கொண்டே
இருப்பதனால் நாளுக்கு நாள் மனம் தளர்ச்சி அடைந்து கொண்டே போகிறது.
வாழ்க்கையில் வெற்றி கிட்டுவதில்லை. விரக்தி, வெறுப்பு முதலியவை
உண்டாகின்றன. ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமானால், எம்மாதி????யான
ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள இயலும் என ஆய்ந்து, ஆசைகளை ஒழுங்குப்படுத்திக்
கொள்வதற்கான முறையான பயிற்சியே ஆசை சீரமைத்தல் என்பதாகும்.
சினம் தவிர்த்தல்: மனித உறவுகளின் சீரழிவிற்கு பெரும்பாலும் காரணமாக
இருப்பது சினம். "தன்னைத்தான் காக்கின் சினம் காக்க காவாக்கால் தன்னையே
கொல்லும் சினம்' என்கிறார் வள்ளுவர். அத்தனை கொடுமையானது சினம்.
தனிமனிதனை சீரழிப்பதோடு குடும்பத்திலுள்ள இனிமையை கெடுப்பதும்,
சமுதாயத்தில் சண்டைச் சச்சரவுகளை வளர்ப்பதும் இந்த சினம்தான். அத்தகைய
சினத்தை எவ்வாறு தவிர்ப்பது என்பதற்கான முறையான பயிற்சியே சினம்
தவிர்த்தல் ஆகும்.
கவலை ஒழித்தல்: உடலுக்கோ மனதிற்கோ சிக்கல் வரும்போது அந்த சிக்கலை
சந்திக்க போதிய பலமில்லாத மன நிலையைக் கவலை என்கிறோம். இது ஒரு வகை சுய
பச்சாதாபமே. இந்தக் கவலையை எப்படி போக்கிக் கொள்வது என்ற பயிற்சியே கவலை
ஒழித்தல் ஆகும். நிறைவேறாத ஆசைகள் பலவற்றை உருவாக்கி அவற்றை அடக்கி
வைப்பதனால் மனபாரம் அதிகா??த்து நிம்மதி இல்லாமல் போய் விடுகிறது.
இப்பயிற்சியினால் அந்நிலை மாறி மனம் அமைதியாகி விடுகிறது. குடும்பத்தில்
இனிமை பெருகுகிறது. நான் யார்?: நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எங்கே
போக வேண்டும்? என்பதயெல்லாம் தொ??ந்து கொள்வதறகு தன்னிலை விளக்கம் அல்லது
தெய்வநிலை விளக்கம் என்ற பொருளைப்பற்றி ஆராய்ச்சி செய்வதே "நான் யார்?'
என்ற பயிற்சியாகும். "மனித வாழ்வு என்பது அறிவின் முழுமையை நோக்கிய
பயணம்' என்கிறார் சுவாமி விவேகானந்தர். அந்த பயணத்திற்கான தெளிவான வழியை
காட்டுவதே "நான் யார்?' என்ற பயிற்சியாகும்.
இவ்வைந்து விதமான அகத்தாய்வு பயிற்சிகளையும் பயின்ற அறிவுக்கு வாழ்வாங்கு
வாழ்கக்கூடிய ஒரு நல்ல தெளிவு உண்டாகி விடுகின்றது. அந்த தெளிவு வந்த
பின்பு துணிவும் பொறுப்புணர்ச்சியும் ஏற்படுகின்றன. விளைவறிந்து
செயலாற்றும் திறன், தனக்கோ, பிறருக்கோ துன்பமளிக்காமல், முடிந்தவைரை
பிறர் துன்பம் போக்கி வாழ்கின்ற பண்பு ஓங்கி குணநலப்பேறு கிட்டுகிறது.
மனவளக்கலை தவம், தற்சோதனை (அகத்தாய்வு), குணநலப்பேறு, முழுமைப்பேறு என்ற
நான்கு அங்கங்களைக் கொண்டது. தவத்தினால் மனம் அமைதி பெறுகிறது. மனதிற்கு
வலிமை கிடைக்கிறது. அகத்தாய்வினால் மனம் தனது களங்கங்களைப் போக்கி தூய்மை
பெற்று "நான் யார்?', "எனது வாழ்வின் நோக்கம் என்ன? ", என்ற தெளிவு
கிட்டுகிறது. தற்சோதனையில் பெறும் தெளிவக் கொண்டு எடுக்கும் முடிவை
தவத்தினால் மனதிற்கு கிடைத்திருக்கும் உறுதியைக் கொண்டு வாழ்வில்
எதிர்காலச் செம்மைக்குப் பயன்படுத்திக் கொள்ளும்போது கிடைப்பதுதான்
குணநலப்பேறு. தவத்தினாலும், தற்சோதனையினாலும் கிடைக்கும் குணநலப்பேற்றின்
இறுதிப்படியே முழுமைப்பேறு ஆகும்.
எனெவே பழக்கத்திற்கும், விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டு
இருக்கும் மனிதன் விளக்கத்தை தெளிவாகப் பெற்று, அந்த விளக்கத்தின் வழியே
பழக்கத்தையும் அதன் மூலம் வாழ்க்கையையும் மாற்றிக் கொண்டு இனிமையாக மன
நிறைவோடு வாழ்வதற்கு ஒரு முறையான பயிற்சி "மனவளக்கலை' ஆகும்.