ஒரு 1000 பேருக்கு அந்தக்காலத்தில் தன் நெசவுத்தொழிலில் வேலை கொடுத்தார்.
கார்
ஊர் மக்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அவசரத்தேவைகளுக்கு இலவசமாகப்
பயன்ப்டுத்திக்கொள்ளலாம். தன் பணியாட்களிடம் அதிக அன்பு செலுத்தினார்.
தான்
எஜமானன் என்பதைவிட இத்தனை மனிதர்களின் வாழ்க்கையை நடத்த உதவி புரிவதாக
மிகவும்
சந்தோஷித்தார்.
அப்பொழுது இரண்டாம் உலகப்போர் மூண்டிருந்தது. அன்றைய பிரிட்டிஷ்
சர்க்கார்
டெக்ஸ்டைல் ஏற்றுமதி வர்த்தகத்தைத் தடை செய்தது... வேதாத்திரியோ, நெய்து
அவற்றை
அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வர்த்தகத்தை நடத்திக்கொண்டிருந்தார்.
இதனால்
அவருக்கு பேரடி... வருமானம் தடை பட்டது (2001 ல் செப் 11 ல் ட்வின் டவர்
அடி
வாங்கியதால் ஸாஃப்ட்வேர் துறையினருக்கு வருமானம் இல்லாமல் எப்படி ஒரு
மரண
அடியோ ... அதைப்போல் பல மடங்கு...)..!
ஆனாலும் தன்னை நம்பி இருக்கும் ஜீவன்களை அப்படியே விட்டுவிட மனமின்றி,
கடன்
வாங்கி தொழில் செய்தார். வருமானம் இன்றி கடன் வாங்கினால் என்னவாகும்...?
தொடர்ந்து அப்படி நடத்தியதால் ஒரு காலகட்டத்தில் திவாலாகி தொழில்
நடத்தமுடியாமல் கடன் கட்ட முடியாமல் எல்லா சொத்துக்களும் ஜப்தியில்
போனது...
வேதாத்திரியும் அவரது இரு துணைவியாரும் வளர்ப்பு மகளும் வீடின்றி
தெருவிற்கு
வரவேண்டிய நிலை. அப்பொழுது அவருக்கு வயது ஏறக்குறைய 50. தன்னிடம்
வசதியிருந்தபொழுது கிடைத்த மரியாதை இப்பொழுது சுத்தமாக
போய்விட்டுருந்தது...
செல்லாக்காசானதால் நேற்றுவரை தன்னிடம் ஊழியம் செய்தவர்களே இன்று எள்ளி
நகையாடினர்... ஓ இதுதான் உலகமா...? துன்பங்கள் எத்தனை நல்ல பாடங்களை,
ஞானங்களை
அளிக்கிறது...?
பொது இடத்தில் ஓலையால் வேயப்பட்டு ஒரு குடிசை எழுப்பி அதில் தங்கி,
அதிகாலையில் துணைவிகள் இருவரும் பிட்டு அவித்துக்கொடுக்க அதை ஒரு
தூக்குவாளியில் போட்டு தெருத்தெருவாக விற்கலானார்... நேற்றுவரை கார்,
பங்களா
என்றிருந்துவிட்டு இன்று நிலை இப்படி ஆகிவிட்டதே என அனைவருக்கும்
வருத்தம்...
வாழ்க்கை எப்படியெல்லாம் ஒரு மனிதனைப் புரட்டிப்போடுகிறது...?!
ஒரு நாள், நல்ல மழை. இருட்டு. இடியுடன் கூடிய பேய் மழை. வெளியே யாரும்
வர
முடியாது. வேதாத்திரி தன் துணைவிகளையும் தன் வளர்ப்பு மகளையும்
அழைத்துக்கொண்டு
குடிசைக்கு வெளியே வந்தார்... அவர்கள் வந்த ஒரு சில நிமிடங்களில் அந்தக்
குடிசையின் மீது இடி விழுந்து தீப்பற்றி எரிந்தது...!
இருந்த ஒரே ஒரு குடிசையும் போய்விட்டது... இனி என்ன செய்ய...?
எப்படி கடன் அடைப்பது...? வாழ்க்கை ஒரு தமிழ் சினிமாவாக இருந்தால், ஒரே
பாட்டில் பணக்காரனாகிவிடலாம்...கடனையும்(கடன் என்றால் மீள முடியாத
கடன்...அந்தக் காலத்தில்...) அடைத்துவிடலாம். ஆனால் நிஜ வாழ்வில்
அப்படியா...?
தவத்தில், துரியத் தவத்தில் இன்னும் அடுத்த ஓராண்டிற்குள் என் கடனை
எல்லாம்
அடைத்துவிடுவேன் என சங்கற்பம் செய்துகொண்டார். இப்படி ஒரு நாளைக்கு பல
முறை
சங்கற்பம் செய்து கொண்டார். துரிய தவம் பலித்தது.... காலமும்
சூழ்நிலையும்
ஒத்துழைத்து அவர் ஓராண்டிற்குள் படிபடிப்பாய் எல்லாக் கடன்களையும்
அடைத்துவிட்டு, அதன் பின் பொதுவாழ்விற்கு வந்து விட்டார். துணைவிகள்
முதலில்
தயங்கினாலும் பின்னர் அவர் கொண்டிருந்த ஆன்மீக பயணத்திற்கு வழிவகுத்தனர்
ஒரு
சத்தியத்துடன். அது-
தாங்கள் எப்பொழுது விரும்பினாலும் மகரிஷி அவர்களை சந்திக்க அனுமதி
கொடுக்கவேண்டும்... அவரது அந்திமக்காலத்தில் பணிவிடைகள் செய்ய
தங்களுக்கு
வாய்ப்பு மறுக்கக்கூடாது என்றும் சத்தியம் வாங்கினர்.
பின்னர் சிறிது காலத்தில் துணைவியார் அவர்களும் அவருடன் ஆன்மீகப் பயணம்
மேற்கொண்டனர்.
இதுதான் தவத்தின் வலிமை...! ஆதலினால் நாம் தவம் செய்வோம்...