சாந்தி தவம்

41 views
Skip to first unread message

adambakkammvkmtrust

unread,
Jul 23, 2009, 10:42:26 PM7/23/09
to mvkmtrustadambakkam
என் இனிய அன்பர்களே! உங்களுக்கு இந்த முறை கடவுளின் அற்புத பரிசு ஒன்றை
இரகசியமாக சொல்ல விரும்புகிறேன். கடவுள் கொடுக்கும் பரிசை இன்முகத்தோடு,
பெற்றுக் கொள்வோமா? அல்லது வெறுப்போடு வேண்டாம் என்று மறுப்போமா? அப்படி
என்ன அந்தப் பரிசு என்கிறீர்களா? அது தான் வலி (pain). வலி கடவுளின்
அன்புக் கொடை என்றால் மனம் ஏற்றுக் கொள்கிறதா? வலி வலிக்கத்தான்
செய்யும். ஆனால் நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

வலி என்பது உயிர் காந்த (உயிர் சக்தி) ஓட்டத்தின் இடையே ஏற்பட்ட ஒரு மின்
குறுக்கு (short circute) ஆகும். இந்த மின் குறுக்கானது விடைபெறும்
வரையில் வலியானது இருக்கத்தான் செய்யும். நாம் கவனக்குறைவால் உடல்
பகுதியில் எங்கேனும் இடித்துக் கொண்டால், இடிபட்ட இடத்தில் வலி உயிர்
போகிறதே! என்று புலம்புவோம். உண்மையில் அடிபட்ட இடத்தில் ஓடிக்
கொண்டிருந்த உயிர்ச் சக்தியானது அதிரடியாக வெளியேறியதால் வலி என்ற மின்
குறுக்கு ஏற்படுகிறது. இந்த வலியை நரம்பு வழியாக மூளைக்குத்
தெரியப்படுத்துவதால், மூளையானது மின்குறுக்கு (வலி) ஏற்பட்ட இடத்திற்குத்
தேவையான அவசர (Emergency) தேவைகள் மற்றும் சேவைகளை (supply and service)
நிறைவேற்றிட பல்வேறு கட்டளைகளை பிறப்பிக்கின்றது. இதன் பலனாக மின்
குறுக்கு நீக்கப்படுகிறது. வலி குணமாகிறது. இதுவே பலமான அடியாக
இருப்பின், நமது நரம்பு வலி உணராத அளவுக்கு சேதம் அடைந்து விட்டலோ அல்லது
வலி தெரியாமல் இருக்க வலி நிவாரணிகள் (Pain Killers) எடுத்துக் கொண்டாலோ,
பாதிப்படைந்த இடத்தில் ஏற்பட்ட மின் குறுக்கு விவரம் மூளைக்குப் போய்
சேர்வதில்லை. ஆகையால் பாதிப்பு விரைவாக நிவாரணம் பெறமுடியாமல், தற்செயலாக
(casual) மாத்திரம் குணம் கண்டு வரும். வலி அதிகம் இருக்கும் போது மூளை,
நரம்பின் மூலம் உணர்ந்து அந்த இடத்திற்கு, உயிர்சக்தி, இரத்தம், சத்துப்
பொருட்கள், மற்றும் பிராண சக்தி ஆகியவற்றை முழுமையாகவும் விரைவாகவும்
அளித்து விரைவாக குணம் ஆக வழி வகுக்கிறது.

நண்பர்களே! வலி உணர்வு என்பது உடல் தன் அசௌகரியத்தை மூளைக்குத்
தெரிவிக்கும் தந்தியாகும். இதை வேறு ஒரு உதாரணம் மூலம் புரிந்து
கொள்வோம். ஒரு சாலையில் விபத்து நடந்து விடுகிறது. உயிர் காக்க அவசர
சிகிச்சை தேவைப்படுகிறது. அந்த சாலையில் தொலை தொடர்புக்கு வழி கிடைத்தால்
உடனே முதலுதவி கிடைக்க வாய்ப்பிருக்கிறதுதானே? அப்படி இல்லாமல் எந்தவித
தொடர்புக்கும் வழியில்லாமல் தவித்துக் கொண்டிருக்கும்போது தற்செயலாக அந்த
வழியே வரும் ஆம்புலன்ஸ் உங்களை காப்பாற்றலாம் அல்லவா? அதுபோலத் தான் வலி
என்ற மூளைதொடர்பு வசதி இருக்கும்வரை நீங்கள் நிவாரணம் பெறுவீர்கள். வலி
பொறுக்காமல் வலி நிவாரணிகளை எடுத்துக் கொண்டீர்களாயின், உங்கள் இரணம்
தற்செயலாக பாயும் இரத்தத்தில் உள்ள தன்மையாலும் பொருளாலும் மிக
மெதுவாகத்தான் குணமடையும். அதுவே வலியுடன் (உயிர்புடன்) இருக்கும்போது
விரைவாக குணமடையும் வாய்ப்பை பெறுகிறீர்கள். தங்களுக்கு எப்படி சௌகரியம்?
வலியுடன் விரைவாக குணம் பெறுதலா? அல்லது வலி தெரியாமல் நீண்டகால உடல்
பலவீனத்துடன் சகித்துக் கொண்டு வாழ்தலா? உங்களுக்கு நோய் நிவாரணம்
வேண்டுமா? வலி நிவாரணம் வேண்டுமா?

அன்பு நண்பர்களே! உயிர் உடல் இணக்கம் என்பது உயிர் உடலிலே உராய்வு
(friction) அல்லது வலி (strain) இன்றி இயங்குவதே ஆகும். “”பொறுத்தார்
பூமி ஆள்வார்” என்பது வள்ளுவன் வாக்கு. வலி பொறுத்தவர் உடலினை ஆளுமை
செய்வார் என்பது உன்னதம் உணர்ந்தவர் வாக்கு. தன்னையே ஆளத் தெரியாதவர்
எப்படி உலகை ஆளமுடியும்? ஆகவே வலி பொறுப்போம் உடலினை உயிர் தன்மையால்
ஆளுவோம்.

நண்பர்களே! நோய் நிவாரணம் என்ற பெயரில், வலி நிவாரணிகளை எடுத்துக்
கொண்டு, நோய் தன்மையை உணராமல் நாட்கணக்கில் நொந்து வாழ்ந்து பெரும்
நோயாளி களாக மாறுவதா வாழ்க்கை? எந்த ஒரு பெரும் நோயும் இரவோடு இரவாக
வந்துவிடுவதில்லை. பல நாட்களாக மூளை என்ற தலைமையிடத்திற்கு
தெரிவிக்கப்படாமல் (வலி நிவாரணிகள் மூலம்) இருந்தால் மட்டுமே நாட்பட்ட
நோய்கள் (chronic diseases) உருவாகிவிடுகின்றன. உதாரணத்திற்கு, ஒரு
புற்றுநோய் வளர 5 முதல் 7 வருடங்கள் ஆகும் என்று கணிக்கப் படுகிறது.
இத்தனை வருடங்கள் வலி நிவாரணம் செய்வதால் மாத்திரம், நோய் வளர்வது
தெரியாமல் இருந்து விடுகிறோம். பிற்பாடு எந்திரம் மூலம் (CT Scan)
கண்டுபிடிக்கப்படுகிறது.

நண்பர்களே! உயிர்ப்புடன் இருப்பது என்பது உயிர் ஓட்டத்துடன் இருப்பது
ஆகும். இந்த உயிர்ப்பானது உயிர் (ஆகாச சக்தி), பிராணவாய்வு (காற்று),
உடல் உஷ்ணம் (நெருப்பு), இரத்த ஓட்டம் (நீர்ப்பொருள்) மற்றும்
சத்துப்பொருள் (திடப்பொருள்) சீரான, நிலைத்த மற்றும் துடிப்புடன் ஒன்றுக்
கொன்று இணக்கமாக இயங்குவ தாகும். இதில் எந்த ஒன்று தடை பட்டாலும், உயிர்
உணர்விலே வலியாக உணரப்படும். இந்த தடை நீங்க உயிர்சக்தி யின்
வீரியத்தையும் தினிவையும் அதிகப்படுத்துதல் வலியை விரைந்து போக்கும்.
இதற்கு ஆழ்நிலை தியானம் கை கொடுக்கும்.

செயல்முறை : தாங்கள் தொடர்ந்து வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்பவராக
இருப்பின் அதிலிருந்து விடுபட சரியான வழி சாந்தி தவம் புரிவ தாகும். இந்த
தவம் மனவளக் கலை அறக்கட்டளையின் சார்பில் கற்றுத்தரப்படுகிறது. இந்த
சாந்தி தவத்தை செய்யச் செய்ய அனைத்து உடல் வலிகளிலிருந்தும் படிப்படியாக
விடு படுவீர்கள். இந்த சாந்தி தவத்தில் நீங்கள் பிராயணம் செய்வீர்களாயின்
பிரயாண கலைப்பே இருக்காது என்றால் பாருங்களேன்!

உயிர்ப்புடன் வாழ்வோம்! உடல் சுகம் பெறுவோம்!

Reply all
Reply to author
Forward
0 new messages