மகரிஷி

21 views
Skip to first unread message

adambakkammvkmtrust

unread,
Jul 24, 2009, 12:04:31 AM7/24/09
to mvkmtrustadambakkam
யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்கள் நெறிப்படுத்தி அருளியது

எளியமுறை குண்டலினி யோகம் & காயகல்பப் பயிற்சி

தொன்னாட்டு சித்தர்களால் கண்டறிந்த இக்கலையை வேதாத்திரி மகரிஷி அவர்களால்
ஏறக்குறைய 80 ஆண்டுகாலம் குண்டலினி யோகாப் பயிற்சியை நன்கு கற்று
இறையாற்றலை முற்றும் உணர்ந்தவர். தான் கற்ற சித்தர்களின் குண்டலினி
சக்தியை எல்லா மக்களும் அறிந்துகொள்ள உலக முழுவதும் பரப்பி உள்ளார்.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, தைவான், ஆஸ்திரேலியா,
இந்தோனேசியா, மலேசியா, பர்மா, சிங்கப்பூர் முதலிய நாடுகளிலுள்ள
இலட்சக்கணக்கான பேர்கள் இக்கலையைக் கற்று நல்ல பயனை அடைந்து
வருகிறார்கள். சுவாமிஜி மூவாயிரம் பாடல்களையும், 50 மேற்பட்ட தமிழ்
ஆங்கிலம் நூல்களையும் எழுதியுள்ளார். குண்டலினி யோகாப் பயிற்சியை
இந்தியாவிலுள்ள உயநிலைப் பள்ளிகளிலும், காலேஜுகளிலும்,
பல்கலைகழகங்களிலும், பட்டணங்களிலும், கிராமங்களிலும், ஆண் /பெண்
இருபாலர்களும் இனம், மதம், மொழி பேதங்கள் இன்றி போதிக்கிறார்கள்.


உடல் நலம் பெற உடற்பயிற்சி

மனநலம் பெற தியானப் பயிற்சி

உயிர் வளம் பெற காய கல்ப பயிற்சி

குண நலம் பெற அகத்தாய்வு பயிற்சி
வாழ்க வையகம்

வாழ்க வளமுடன்

Reply all
Reply to author
Forward
0 new messages