அன்பு நண்பர்களே,
2006ஆம் வருடத்தில் தீபாவளி தினத்துக்குச் சில தினங்கள் முன்னர் துவங்கப்பட்டு என்னால் பராமரிக்கப்பட்டு வரும் மழலைகள்.காம் தளம் மிகவும் சிறப்பாகப் பல ஆசிரியர்கள் தொடர்ந்து அளிக்கும் உன்னதமான கதைகள், கட்டுரைகள், கவிதைகள் முதலானவை தமிழிலும் ஆங்கிலத்திலும் பிரசுரம் செய்யப்பட்டு எண்ணிறந்த இணைய வாசகர்களால் படிக்கப்பட்டு, பாராட்டப் பட்ட நிலையில் இயங்கி வருகிறது.
அதன் பிறகு 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் இருக்கும் மனிதவள மேம்பாட்டுத் துறை வல்லுனர் திரு ஹரிஹர மஹாதேவன் அவர்களுக்காக அமைக்கப்பட்டு அன்று முதல் இன்றும் தொடர்ந்து மாதந்தோறும் 18ஆம் தேதி தவறாமல் புதிய படைப்புகள் பதிவிடப்பட்டுத் தொடர்ந்து சிறப்பாக நடத்தப்பட்டு வரும் கல்விச் சேவை இணையதளம் மழலைகள்.காம் தளத்திற்கிணையாக வளர்ச்சி பெற்றுள்ளது.
இந்நிலையில் பல ஆண்டுகளாகவே இணைய வாசகர்களுடன் வேறு பல பொருட்களைக் குறித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்யும் அவாவினால் இன்னும் சில இணையதளங்களை உருவாக்கி வைத்திருந்தேன் ஆனால் ஒரு இயந்திரவியல் பொறியாளனாக நான் செய்துவந்த தொழில்நுட்பப் பணிகளின் சுமையின் காரணமாக இவ்விணைய தளங்களில் முழுமூச்சுடன் செயல்பட என்னால் இயலவில்லை. சென்ற சில மாதங்களாக ஜூம்லா எனும் படைப்புகள் மேலாண்மைச் செயலியின் துணைகொண்டு இவ்விணைய தளங்களை சிறப்புற அமைத்து அனைத்து இணைய வாசகர்களும் அவற்றில் உறுப்பினராகப் பதிவு செய்து ஆசிரியர் நிலையைப் பெற்றுத் தங்கள் படைப்புகளைத் தாங்களே பதிவேற்றும் வண்ணம் நடத்திவருகிறன். இருப்பினும் இத்தளங்களில் பதிவு செய்துகொள்வது குறித்தும் படைப்புகளைப் பதிவேற்றம் செய்வது குறித்தும் விளக்கமான வீடியோ துணையுடன் விளக்க வேண்டியுள்ளதால் இணைய வாசகர்கள் பதிவு செய்வது தற்சமயம் குறைவாகவே உள்ளது.
இதனைச் சீராக்கி அனைவரும் உறுப்பினர்களாகப் பதிவு செய்ய ஏற்ற வகையில் விளக்க வீடியோ அமைத்துள்ளேன்.
எனது புதிய ஜூம்லா இணையதளங்களுள் ஒன்றினைப் பற்றிய விவரங்கள்:
இந்தியாவையும் இந்திய மக்களையும் குறித்த பல்வேறு விவரங்கள் இத்தளத்தில் தொகுத்து வழங்கப் படுகின்றன. வராற்று உண்மைகள், அரசியல் நிகழ்வுகள், இன்றியமையாத முக்கியச் செய்திகள், கதைகள், கட்டுரைகள், கவிதைகள், நகைச்சுவை, துணுக்குகள், வீடியோ காட்சிகள், பயணக்கட்டுரைகள், முதலியவற்றோடு மேலும் பல சுவையான அம்சங்களுடன் ஜொலித்துக் கொண்டிருக்கிறது இத்தளம். இவையனைத்தும் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வழங்கி வருகிறேன். வீடியோ பகுதியில் சுவாரஸ்யமான தமிழ், ஹிந்தி, ஆங்கிலத் திரைப்படங்கள் மற்றும் திரைப்படக் காட்சிகளும் அடங்கும்.
அத்துடன் ஹிந்தி மற்றும் மேலும் பல இந்திய மொழிகளிலும் படைப்புகளை வழங்குவதற்குரிய முயற்சி மேற்கொண்டுள்ளேன்.
எனது மற்ற ஜூம்லா இணையதளங்கள் குறித்துத் தொடர்ந்து செய்திகள் அனுப்புகிறேன்.
வாசக நண்பர்கள் யாவரும் இந்திய மக்கள் தளத்தில் வரும் படைப்புகளைப் படித்தும், பார்த்தும் கேட்டும் மகிழ வேண்டும். அது மட்டுமல்லாது உறுப்பினராகப் பதிவு செய்து கொண்டு தங்களது மேலான படைப்புகளையும் பிரசுரத்திற்கு அனுப்பித் தர வேண்டும். இது எனது அன்பான விண்ணப்பம்.
எனது ஜூம்லா இணையதளங்களில் உறுப்பினராகப் பதிவு செய்து படைப்புகளைப் பதிவேற்றும் முறை குறித்து விளக்க வீடியோ ஒன்றை எனது மற்றொரு ஜூம்லா இணையதளமான இணையப் போதனை -
http://www.webtutorial.in/ தளத்தில் வழங்கியுள்ளேன். அவ்வீடியோவின் சுட்டி கீழே காண்க:
அன்புடன்
உங்கள் ஆகிரா
--
AKR