தினம் ஒரு பாடல்

108 views
Skip to first unread message

AKR

unread,
Oct 26, 2009, 1:53:47 PM10/26/09
to muthami...@googlegroups.com
ஒருவரது உடலைக் கொன்றால் அத்துடன் அவரது வாழ்வு முடிந்து விடும். இன்பம் துன்பம் இரண்டிலிருந்தும் அவருக்கு விடுதலை கிடைக்கும், ஆனால் ஒருவரது உணர்சசிகளைக் கொன்றால் அவர் உயிருடன் இருக்கும் காலம் வரையிலும் மரண வேதனைக்கொப்பான துன்பத்தைத் தொடர்ந்து அனுபவித்து வாழ்வே நரகமாகி விடும்.
 
இதற்கு உதாரணம் அறியாச் சிறு வயதில் ஒரு பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்து அவள் பருவமடையு முன்னரே அவளது கணவன் இறந்துவிட்டாலோ அல்லது காணாமற் போய்விட்டாலோ அப்பெண்ணை அவளது மரணம் வரையிலும் ஒரு கைம்பெண்ணாக வைத்து அவளுக்கு வெள்ளைச் சீலையைக் கட்டிவிட்டு அல்லது தலையை மொட்டையடித்துக் காவிப்புடவையைக் கட்டவைத்து உயிருடன் கொல்லும் கொடுமையான வழக்கம் ஆகும். இவ்வழக்கம் நமது நாட்டில் நமது முந்தைய தலைமுறை வரையிலும் நடைமுறையில் இருந்தது.
 
இதில் ஒரு மிகப்பெரிய அநியாயம் என்னவெனில் அவ்வாறு மணமான தம்பதியினருள் பெண் மடிந்தால் அந்த ஆண் வேறொரு பெண்ணைத் தடையின்றி மணக்கலாகும் எனும் ஒருதலைப்பட்சமான பெண்ணடிமைத் தனத்தை வளர்க்கும் கேடுகெட்ட வழக்கம் ஆகும். பெண்ணடிமை ஒழிந்து ஆணுக்கு நிகரான உரிமையைப் பெண்ணுக்கும் வழங்குவதன் அவசியத்தை மஹாகவி பாரதியார், பாவேந்தர் பாரதி தாசன், தந்தை பெரியார் முதலிய பெரியோர்கள் வலியுறுத்தியதன் விளைவாக இப்பெண்ணடிமை நிலை காலப்போக்கில் மாறி வருகிறது.
 
 
படம்: பாக்யலக்ஷ்மி
பாடியவர்: பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
ஆண்டு: 1952
 
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி?
காரணம் ஏன் தோழி? ஆஆ ஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

 
இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி?
இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி?
காண்பது ஏன் தோழி? ஆஆ ஆஆஆ
 
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

 
மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவு கண்டேன் தோழி
மங்கையி்ன் கையில் குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி - அவர்
மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்து விட்டார் தோழி
மறந்து விட்டார் தோழி ஆஆ ஆஆஆ
 
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

 
கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன் கணவர் என்றார் தோழி
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி?
இளமையெல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம்
தெளிவுமறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்
மயங்குது எதிர்காலம் ஆஆ ஆஆஆ
 
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி?
காரணம் ஏன் தோழி? ஆஆ ஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Oct 25, 2009, 3:08:33 PM10/25/09
to muthami...@googlegroups.com
மஹாபாரதக் கதையில் பஞ்ச பாண்டவர்களான தருமன், பீமன், அருச்சுனன், நகுலன், சஹாதேவன் எனும் ஐந்து சகோதர்களும் அவர்களது பெரியப்பாவின் மகனான துர்யோதனின் கூட்டாளியான சகுனியுடன் சூதாடியதன் விளைவாக 12 வருடங்கள் வனவாசம் செய்ய நேரிட்டது. அவ்வனவாசம் முடியும் தருவாயில் பாண்டவர்கள் தங்கியிருந்த குடிலி்ன் அருகாமையில் வசித்து வந்த ஒரு அந்தணனுடைய அரணிக்கட்டையின் மேல் மான் ஒன்று உடலை உராய்ந்து விட்டுத் திரும்பிச் செல்கையில் அவ்வரணிக்கட்டை அதன் கொம்புகளில் சிக்கிக்கொண்டதால் மான் மிரண்டு ஓடியது. அரணிக் கட்டை என்பது நெருப்பை உண்டாக்குவதற்கு உதவும் கடைக்கோலும் கீழ்க்கட்டையும் கொண்டதொரு இயந்திரம்.
 
அவ்வந்தணன் தனது அரணிக்கட்டையை மீட்டுத் தருமாறு பாண்டவர்களிடம் முறையிட, அவர்கள் மானைத் துரத்திக் கொண்டே வனத்துக்குள் நீண்ட தூரம் சென்றபோதிலும் மான் அகப்படவில்லை. ஓடிய களைப்பு நீங்க ஒரு மரத்தின் அடியில் சற்றே இளைப்பாறுகையில் அவர்களுக்கு மிகவும் தாகம் எடுக்கவே தருமன் சொற்படி அருகில் இருக்கும் பொய்கையில் நீர் எடுத்து வர ஒவ்வொருவராகச் சென்ற தம்பியர் யாரும் திரும்பாமையால் தருமபுத்திரன் தானே பொய்கையை அடைந்தான். அங்கே அவனது தம்பிமார் ஐவரும் மயங்கி வீழ்ந்து கிடப்பதைக் கண்டு துணுக்குற்றாலும் தாக மிகுதியால் பொய்கையில் கை வைத்ததும் அசரீரி ஒலித்த்து, "யுதிஷ்டிரனே, நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தந்த பிறகே நீ நீரருந்தலாம் மீறினால் உன் தம்பியர் போல நீயும் மடிவாய்" என.
 
தருமனும் அசரீரியின் கேள்விகளுக்கு பதில் தந்தான். அவற்றுள் ஒரு கேள்வி, "உலகில் அதிசயமானது எது?" என்பதாகும். தருமன் தந்த பதிலாவது, "தினமும் தமது கண் முன்பாகவே தம்மைச் சார்ந்தவரும் பிறரும் ஒருவர் பின் ஒருவராக யமன் வாயிலுக்குச் செல்வது கண்ட பிறகும் மனிதர்கள் தாம் மட்டும் நிரந்தரமாக இவ்வுலகில் வாழ்வோம் என நினைக்கிறார்களே, அதுவே உலகில் அதிசயமானது" என்பதாகும்.
 
 
திரைப்படம்: அவன் தான் மனிதன்

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1975
 
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
 
தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்து விட்டோம் வெறும் பந்தம் வளர்த்து விட்டோம்
மனது துடிக்கின்றது மயக்கம் வருகின்றது
அழுது லாபம் என்ன அவன் ஆட்சி நடக்கின்றது
 
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
 
காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
கூட்டைத் திறந்து விட்டால் அந்தக் குருவி பறந்து விடும்
காலில் விலங்கு விட்டோம் கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம்
 
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
 
விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா சிறு மனமும் கலங்குதடா
கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா
கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா
 
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Oct 30, 2009, 12:55:56 PM10/30/09
to muthami...@googlegroups.com
மனிதன் தன் ஆசைகளைத் தன் தகுதிக்கு ஏற்ற விதத்தில் கட்டுப்படுத்திக் கொள்வது மகிழ்ச்சியாக வாழ்வதற்கு மிகவும் அவசியமாகும். தகுதிக்கு மீறி ஆசைப்படுபவன் தன்மானமிழந்து பெரும் துன்பத்துக்கு ஆளாக நேரிடும். குறிப்பாக ஒரு ஏழை செல்வச்சீமாட்டியான ஒரு பெண்ணை விரும்புவானாகில் அவன் வாழ்வில் பெரும் எதிர்ப்புககளை சந்திப்பது உறுதி. இத்தகைய ஆசை அவன் வாழ்வை நிலைகுலையச் செய்து அவன் செய்ய வேண்டிய கடமைகளைச் சரிவரச் செய்ய இயலாத சூழ்நிலை உருவாகி, அவன் வாழ்வின் அடிப்படையே ஆட்டம் காணக் கூடும்.
 
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுதல் தகாது.
 
 
படம்: ஆயிரத்தில் ஒருவன்

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1965
 
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
 
நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்
நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்
மாளிகையே அவள் வீடு மரக்கிளையில் என் கூடு
வாடுவதே என் பாடு இதில்
நான் அந்த மான் நெஞ்சில் நாடுவதெங்கே கூறு
 
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
 
ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு
ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு
பாதையிலே வெகுதூரம் பயணம் போகின்ற நேரம்
காதலை யார் மனம் தேடும் இதில்
நான் அந்த மான் நெஞ்சில் நாடுவதெங்கே கூறு
 
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Oct 31, 2009, 2:09:06 PM10/31/09
to muthami...@googlegroups.com
திருமணமாகும் வரை ஒரு பெண் தன் பெற்றோரின் கட்டுப்பாட்டில் வளர்வதால், தன் மனம் விரும்பும் இடங்களுக்குச் செல்வது, நண்பர்களுடன் கலந்து பழகுவது போன்ற செயல்களுக்கான முழு சுதந்திரம் அவளுக்குக் கிடைப்பதில்லை. இதற்குக் காரணம் நமது நாட்டின் சமுதாய அமைப்பு பெண்ணைப் போற்றிப் பாதுகாக்கும் விதமாக அமைந்ததுவே ஆகும். அப்பெண் திருமணமாகித் தன் கணவனுடன் குடும்பம் நடத்துகையில் தன் பெற்றோர்களுடன் வாழ்ந்த காலத்தை விடவும் அதிக சுதந்திரத்தை எதிர்பார்ப்பதும், கணவன் காலையில் பணிக்குச் சென்றால் மாலையில் சற்று நேரம் முன்னதாகவே வீட்டுக்குத் திரும்பி வர வேண்டும், அவனுடன் வெளி உலகைச் சுற்றிப் பார்க்கப் பல இடங்களுக்குச் செல்ல வேண்டும் என விரும்புவதும் இயல்பு.
 
இத்தகைய எதிர்பார்ப்புகளை ஓரளவேனும் பூர்த்தி செய்வது அவளது கணவனின் கடமையாகும். மாலை கணவன் நேரத்தோடு வீடு திரும்புவான், அவனுடன் அளவளாவி மகிழலாம், இல்லற சுகம் காணலாம் என எதிர்பார்த்து வீட்டு வாசலில் மாலை நேரங்களில் வந்து காத்திருப்பது நமது நாட்டில் மணமான பெண்கள் மேற்கொள்ளும் வழக்கமாக உள்ளது. வாழ்க்கையே ஓர் எதிர்பார்ப்பல்லவா?
 
அவ்வாறு வாசலில் வெகுநேரம் நின்று பார்த்துத் தன் கணவன் திரும்பிவரக் காணாது துயருற்ற ஒரு பெண் தன் மன ஆதங்கத்தை ஒரு சிட்டுக்குருவியிடம் வெளியிடுகிறாள்.
 
 
படம்: டவுன் பஸ்
இயற்றியவர்: கா.மு. ஷெரிஃப்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி
ஆண்டு: 1955
 
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை
விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை
விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே
 
பட்டு மெத்த விரிச்சு வச்சேன் சுமமாக் கிடக்குது - பசும்
பாலைக் காய்ச்சி எடுத்து வச்சேன் ஆறிக் கிடக்குது
பட்டு மெத்த விரிச்சு வச்சேன் சுமமாக் கிடக்குது - பசும்
பாலைக் காய்ச்சி எடுத்து வச்சேன் ஆறிக் கிடக்குது
 
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை
விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?
 
தலைய வாரிப் பூ முடிச்சேன் வாடி வதங்குது
தலைய வாரிப் பூ முடிச்சேன் வாடி வதங்குது - சதா
தெருவில் வந்து நின்று நின்று காலும் கடுக்குது - சதா
தெருவில் வந்து நின்று நின்று காலும் கடுக்குது
வாழிய வழியப் பாத்துப் பாத்துக் கண்ணும் நோகுது
வாழிய வழியப் பாத்துப் பாத்துக் கண்ணும் நோகுது - அவர்
வந்தால் பேச நிறைய சேதி நெஞ்சில் இருக்குது - அவர்
வந்தால் பேச நிறைய சேதி நெஞ்சில் இருக்குது
 
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை
விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Oct 27, 2009, 1:11:14 PM10/27/09
to muthami...@googlegroups.com
எத்தனையோ விதவிதமான இசைக் கருவிகள் இருந்தாலும் அவையனைத்திலும் மிகவும் சிறப்பானது புல்லாங்குழல். புல்லாங்குழலின் இசை மனிதர்கள் மட்டுமன்றிப் பிற உயிரினங்களையும் தன்னை மறந்து ரசிக்க வைக்கத்தக்கது. அதனாலேயே ஆநிரை மேய்க்கும் ஆயர்பாடிக் கண்ணன் புல்லாங்குழலைத் தன் வாத்தியமாகப் பாவித்தானோ?
 
 கண்ணன் குழலூதினால் அவ்விசையில் மயங்காதவர் உலகில் உண்டோ? மனிதர்கள் மட்டுமின்றி சுனை வண்டுடம் சோலைக் குயிலும் மனம் குவிய, வானில் உலாவரும் நட்சத்திரங்களும் தயங்கி நின்றிடுமன்றோ அவன் குழலிசை கேட்டு?
 
 
படம்: மீரா
இயற்றியவர்: கல்கி கிருஷ்ணமூர்த்தி
இசை: எஸ். வி. வெங்கட்ராமன், கே. வி. நாயுடு
பாடியவர்: எம்.எஸ். சுப்புலக்ஷ்மி
ஆண்டு: 1945
 
காற்றினிலே... வரும் கீதம் காற்றினிலே
காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம் காற்றினிலே வரும் கீதம்
 
பட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம் பண்ணொளி பொங்கும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும் மதுர மோகன கீதம்
நெஞ்சினிலே நெஞ்சினில் இன்பக் கனலை எழுப்பி
நினைவழிக்கும் கீதம் காற்றினிலே வரும் கீதம்
 
சுனை வண்டுடன் சோலைக் குயிலும் மனம் குவிந்திடவும்
வானவெளிதனில் தாரா கணங்கள் தயங்கி நின்றிடவும்
ஆ என் சொல்வேன் மாயப்பிள்ளை வேய்ங்குழல் பொழி கீதம்
காற்றினிலே வரும் கீதம்
 
காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்
 
நிலா மலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதியில்
நீல நிறத்து பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான்
காலமெல்லாம் காலமெல்லாம் அவன் காதலை எண்ணி
உருகுமோ என் உள்ளம் காற்றினிலே வரும் கீதம்
 
காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Oct 29, 2009, 11:05:28 AM10/29/09
to muthami...@googlegroups.com
படித்த இளைஞர்கள் பொருளீட்டுவதற்கெனப் பன்னாட்டு நிறுவனங்களிலும் அயல்நாடுகளிலுமே பெரும்பாலும் வேலை வாய்ப்பைத் தேடுகின்றனர். சுயதொழில் செய்து பிழைக்கலாம், வாழ்க்கையில் முன்னுக்கு வரலாம் என நம்பிக் கடனை வாங்கி, அவ்வாறு கடன் வாங்கிய தொகையை  மூலதனமாகக் கொண்டு தொழில் ஆரம்பிக்கும் பலர் அவ்வாறு சுயதொழில் ஆரம்பித்த பின்னர் சந்திக்கும் முதல் பிரச்சினை பணியாளர்களைத் தேடி நியமிப்பதாகும். பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தினால் சாதாரணத் தொழிலாளிக்கும் கை நிறையச் சம்பளக் கிடைக்கும் நிலைமை நிலவுவதால் சுயதொழில் செய்வோரிடம் குறைந்த ஊதியத்துக்கு வேலைக்கு வர யாரும் விரும்புவதில்லை.
 
அது மட்டுமின்றி சாதாரணமாக வீட்டு வேலை செய்வதற்கும் ஆள் கிடைக்காமல் பலர் அல்லலுறுகின்றனர். அவ்வாறு வேலைக்கு ஆள் கிடைத்தாலும் அவர்களால் பல தொல்லைகள் விளைவதுண்டு. வேலை செய்யும் வீட்டில் உள்ளோர் தங்களது உறவினரிடத்தும் நண்பர்கள் மற்றும் அண்டை அயலாரிடத்தும் கொண்ட கருத்து வேறுபாடுகளைப் பேச்சு வாக்கில் அறியும் பணியாளர் அதனை ஊரெங்கும் பரப்பி வம்பில் மாட்டி விடுவதும் உண்டு.
 
இந்நிலைமையை ஆராய்கையில் மஹாகவி பாரதியாரின் கவிதை நினைவுக்கு வருகிறது.
 
''கூலி மிகக் கேட்பார், கொடுத்ததெலாந் தான் மறப்பார்
வேலை மிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்.
ஏனடா நீ நேற்றைக்(கு) இங்கு வரவில்லை யென்றால்,
பானையிலே தேளிருந்து பல்லாற் கடித்ததென்பார்.
வீட்டிலே பெண்டாட்டி மேற் பூதம் வந்ததென்பார்.
பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்.
ஓயாமற் பொய்யுரைப்பார், ஒன்றுரைக்கவொன்று செய்வார்.
தாயாதியோடு தனியிடத்தே பேசிடுவார்.
உள் வீட்டுச் சேதியெலாம் ஊரம்பலத்(து) உரைப்பார்.
எள் வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்.
சேவகராற் பட்ட சிரம மிகவுண்டு கண்டீர்.
சேவகரில்லாவிடிலோ செய்கை நடக்கவில்லை!
இங்கிதனால் நானும் இடர் மிகுந்து வாடுகையில்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்...''

 
என்று தொடங்கி, பிற பணியாளர்களிடம் காணப்படும் இத்தகைய குறைபாடுகளற்ற சேவகனாய் கண்ணன் தனக்கு  அமைந்து தன்னையும் தன் குடும்பத்தையும் போற்றிப் பாதுகாத்ததாக மானசீகமாகக் கண்ணனைத் தன் சேவகனாகக் கொண்டு பாடிய பாடலின் முக்கியப் பகுதியை. படிக்காத மேதை திரைப்ப்டத்தில் ரங்கன் எனும் பெயருடன் தன் தாய்மாமனுக்கு சேவகனாய் அமைந்த சிவாஜி கணேசனைப் பற்றி அவரது தாய்மாமனான ரங்காராவ் எண்ணுவதாக அமைக்கப்பட்ட ஒரு அழகான காட்சியில் மிகவும் பொருத்தமான விதத்தில் படைத்துள்ளனர்.
 
 
படம்: படிக்காத மேதை
இயற்றியவர்: மஹாகவி பாரதியார்
இசை: திரையிசைத் திலகம் கே.வி. மஹாதேவன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
ஆண்டு: 1960
 
எங்கிருந்தோ வந்தான்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - கண்ணன்
எங்கிருந்தோ வந்தான்
 
சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடுவான்
சின்ன குழந்தைக்கு சிங்காரப் பாட்டிசைப்பான்
கண்ணை இமையிரண்டும் காப்பது போல் என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான் வாய் முணுத்தல் கண்டறியேன் கண்ணன்
 
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - கண்ணன்
எங்கிருந்தோ வந்தான்
 
பற்று மிகுந்து வரப் பார்க்கின்றேன் கண்ணனால்
பெற்று வரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்
பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய் - ரங்கன்
 
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - ரங்கன்
எங்கிருந்தோ எங்கிருந்தோ ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
ரங்கா ரங்கா ரங்கா ரங்கா
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Nov 1, 2009, 4:54:01 AM11/1/09
to muthami...@googlegroups.com
"கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்" என்று சொன்னார்கள் நமது முன்னோர்கள். இதன் பொருளை விளக்கிக் கூறவில்லை யாரும். "ஆயுட்காலப் பயிர்" என்று சொல்வது பொருத்தமானதென நான் கருதுகிறேன், காரணம் மனிதர்க்கு வாழ்க்கை திருமணத்தின் மூலமே அமைகிறது. திருமணம் செய்யாதவர் வாழ்க்கை வெறுமையாகவே காணப்படுகிறது. எனினும் திருமணம் செய்வதென்பது காலப்போக்கில் பொருளாதார ரீதியில் மிகவும் கடினமான விஷயமாகி வருகிறது, காரணம் விலைவாசி ஏற்றம். உணவுப் பொருட்கள் நாளுக்கு நாள் விலை உயர்ந்து சாமான்ய மக்கள் அவற்றை வெளிச் சந்தையில் எல்லோரையும் போல் விலை கொடுத்து வாங்க இயலாத சூழ்நிலை ஏற்கெனவே உருவானதாலேயே ரேஷன் கடைகளை நம்பி வாழ்க்கை நடத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது.
 
தமது குடும்பத்திலுள்ளோர் உண்பதற்கே மலிவு விலைக் கடைகளை நம்பியிருக்கும் நிலையில் உறவினர்களை எல்லாம் அழைதது அவர்களுக்கு விருந்து படைப்பதென்பது சாமான்ய மக்களுக்குப் பெரும் செலவை ஏற்படுத்துகிறது. ஒருவர் தன் ஆயுட்காலம் முழுதும் உழைத்துச் சேர்த்த பொருள் அனைத்தையும் செலவழித்தாலும் தன் ஒரு மகளுக்குக் கூட உரிய முறையில் திருமணம் செய்வதென்பது அரிதாகிவிட்டது.
 
இந்நிலை நீடித்தால் மாப்பிள்ளை, பெண் மற்றும் அவர்களின் பெற்றோரும் அவர்களது திருமணத்திற்குச் செல்லப் பேருந்துக் கட்டணத்துக்கும் வழியின்றி  மாட்டு வண்டிகளில் செல்வது ஒன்றே வழி எனும் நிலை நேர்ந்தாலும் நேரலாம்.
 
 
படம்: காவேரியின் கணவன்
இயற்றியவர்:
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி, எல்.ஆர். ஈஸ்வரி
ஆண்டு: 1959
 
மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே
பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே
 
புள்ளையப் பெத்த அம்மா வந்தா மொட்ட வண்டியிலே
புள்ளையப் பெத்த அம்மா வந்தா மொட்ட வண்டியிலே
பொண்ணைப் பெத்த அப்பா வந்தான் ஓட்ட வண்டியிலே
பொண்ணைப் பெத்த அப்பா வந்தான் ஓட்ட வண்டியிலே
 
மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே
 
காக்காக் கடி கடிச்சுக் கொடுத்த கம்மருகட்டு முட்டாயி
சோக்கா வாங்கித் தின்னுப்புட்டு விட்டானையா கொட்டாவி
காக்காக் கடி கடிச்சுக் கொடுத்த கம்மருகட்டு முட்டாயி
சோக்கா வாங்கித் தின்னுப்புட்டு விட்டானையா கொட்டாவி
ஓட்டாஞ்சல்லிய எடுத்துக் கிட்டு ஓடுனாங்க மாருக்கட்டு
ஓட்டாஞ்சல்லிய எடுத்துக் கிட்டு ஓடுனாங்க மாருக்கட்டு
ஓராழாக்கு அரிசி வாங்கி ஒலையில தான் போட்டுக்கிட்டு
 
கூட்டாஞ்சோறு ஆக்கிககிட்டு கும்மாளந்தான் போட்டுக்கிட்டு
கூட்டாஞ்சோறு ஆக்கிககிட்டு கும்மாளந்தான் போட்டுக்கிட்டு
கொழவிக் கல்லு புள்ளய ஒண்ணு குஷியாகப் பெத்துகிட்டு
கொழவிக் கல்லு புள்ளய ஒண்ணு குஷியாகப் பெத்துகிட்டு
 
ஆராரோ நீ ஆரோ அருமையான கொழந்தை யாரோ?
ஆராரோ நீ ஆரோ அருமையான கொழந்தை யாரோ?
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Oct 28, 2009, 2:32:59 PM10/28/09
to muthami...@googlegroups.com
ஒருவர் மேல் ஒருவர் புனிதமான அன்பு கொண்டு இருவர் மனமும் ஒன்றிணைந்த காதலர்கள் ஒருவரையொருவர் சந்திக்கையி்ல் பேரின்பம் அடைவது போலவே ஒருவரையொருவர் பிரிந்தால் துன்பப் படுவதும் இயல்பு. அவ்வாறு தன்னை விட்டுப் பிரிந்த காதலியின் முகம் காதலனுக்கும் காதலனின் முகம் காதலி்க்கும் அவர்கள் காணும் பொருடகள் யாவிலும் காட்சி கொடுக்குமெனக் கவிஞர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.
 
அது மட்டுமல்ல அப்பிரிவுத் துயரம் அவர்களது உயிரையும் வாட்டுமாம்.
 
 
திரைப்படம்: சித்ராங்கி
இயற்றியவர்: கு.மா. பாலசுப்பிரமணியம்
இசை: வேதா
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
ஆண்டு: 1964
 
புஷ்பலதா

நெஞ்சினிலே
நெஞ்சினிலே நினைவு முகம் நெஞ்சினிலே நினைவு முகம்
நிலவிலும் தெரிவதும் அழகு முகம் ஆசைமுகம்
நெஞ்சினிலே நினைவு முகம்
 
ஆருயிர் என்றுஅழைத்தவளே புது ஆசையை நெஞ்சில் விதைத்தவளே
ஆருயிர் என்றுஅழைத்தவளே புது ஆசையை நெஞ்சில் விதைத்தவளே நான்
ஓருயிர் நின்று தவிக்கையிலே நீ ஓடி மறைந்தது நீதியில்லை
 
நெஞ்சினிலே நினைவு முகம்
நிலவிலும் தெரிவதும் அழகு முகம் ஆசைமுகம்
நெஞ்சினிலே நினைவு முகம்
 
வானத்தின் தாரகைப் பூவெடுத்தேன் என்றும்
வாடாத மாலையாய் நான் தொடுத்தேன்
வானத்தின் தாரகைப் பூவெடுத்தேன் என்றும்
வாடாத மாலையாய் நான் தொடுத்தேன் அதில்
தேன் இல்லையே என்று சொல்லிவிட்டார்
தீண்டாமலலே மண்ணில் தள்ளி விட்டார் தள்ளி விட்டார்
 
நெஞ்சினிலே நினைவு முகம்
நிலவிலும் தெரிவதும் அழகு முகம் ஆசைமுகம்
நெஞ்சினிலே நினைவு முகம்
 
ஆயிரம் கோட்டைகள் கட்டி வைத்தேன் என்
அன்பையே தீபமாய் ஏற்றி வைத்தேன் ஆஆஆ
ஆயிரம் கோட்டைகள் கட்டி வைத்தேன் என்
அன்பையே தீபமாய் ஏற்றி வைத்தேன் அந்த
கோயிலிலே என்தன் தெய்வமில்லை நான்
கோரிய வரமும் கிடைக்கவில்லை
 
நெஞ்சினிலே நினைவு முகம்
நிலவிலும் தெரிவதும் அழகு முகம் ஆசைமுகம்
நெஞ்சினிலே நினைவு முகம்
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Nov 2, 2009, 2:44:22 PM11/2/09
to muthami...@googlegroups.com
Charity begins at home என்ற ஆங்கிலப் பழமொழியும்
 
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
 
எனும் திருக்குறளும் உணர்த்தும் பொருள் ஒன்றே. ஒவ்வொருவரும் தமது குடும்பத்தை அன்புடனும் அறநெறி வழுவாமலும் நடத்திச் சென்றால் பண்புடனும் பயனுடனும் அவரது வாழ்க்கை அமையும். இவ்வாறு ஒவ்வொரு குடும்பத் தலைவனும், அக்குடும்பத்தின் பிற உறுப்பினர்களும் பொறுப்புடன் செயல்பட்டால் அந்நாடும் சிறந்து விளங்குவது உறுதி.
 
தொன்றுதொட்டு நமது நாட்டில் நடைமுறையில் இருந்து வரும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் உடன் பிறந்த சகோதரர்கள் அவர்களுக்குத் திருமணம் முடிந்து பிள்ளைகள் பிறந்து வளர்ந்த காலத்திலும் ஒன்றாக இருந்து அனைவரது குடும்பங்களும் ஓரே குடும்பமாக வாழும் வாழ்க்கை முறையைக் கண்டு பிற நாட்டவர் அனைவரும் மிகவும் வியந்து பாராட்டுகின்றனர்.
 
இத்தகைய சிறந்த பாரம்பரியத்தை மதியாது சிலர் சுயநல மிகுதியால் தனிக்குடுத்தனம் எனும் பெயரில் சொந்த பந்தங்களைப் பிரிந்து அவதிப்படுவதுடன் செலவினங்களையும் அதிகப் படுத்துக் கொண்டு துன்புறுகின்றனர். இவ்வாறு குடு்ம்பத்திலிருந்து பிரிந்து செல்லும் போக்கு மாறிப் பெரும்பாலான குடும்பங்கள் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையை அனுசரித்து நடக்கும் பாதைக்குத் திரும்புவார்களேயானால் வீட்டுக்கும் நாட்டுக்கும் நலம் விளையும்.
 
 
 
படம்: பாமா விஜயம்

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம். எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: பி.சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
ஆண்டு: 1967

 
ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே
ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே
நூலை எடுக்கவும் மாலை தொடுக்கவும் நேரமில்லையடியோ
நூலை எடுக்கவும் மாலை தொடுக்கவும் நேரமில்லையடியோ அடியோ
ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே
 
எண்ணி வைத்தேன் ஏழெட்டு முத்துக்கள் காணவில்லை
ஏறிட்டு நானதைப் பார்க்கவில்லை
மார்பிலும் நானள்ளிச் சூடவில்லை
எண்ணி வைத்தேன் ஏழெட்டு முத்துக்கள் காணவில்லை
ஏறிட்டு நானதைப் பார்க்கவில்லை
மார்பிலும் நானள்ளிச் சூடவில்லை
அந்தக் கன்னத்தில் என்னடி முத்து்ம் வண்ணம் இந்தக்
கள்ளத் தனத்தினில் வந்ததடி
வாங்கிக் கொடுத்ததும் தாங்கிப் பிடித்ததும்
முத்துக்கள் போல் வந்து மின்னுதடி
ஒரு முத்து இரு முத்து மும்முத்து நால் முத்து அம்மம்மா
பெண்ணுக்கு எத்தனை முத்தமடி
 
ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே
 
ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓஓ
ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ
 
மாமன் மக்கள் தேடிய செல்வங்கள் யாருக்கடி?
ஆடிடும் பிள்ளைகள் பேருக்கடி
மிஞ்சிய செல்வங்கள் ஊருக்கடி கையில்
உள்ளதைக் கொண்டிங்கு வாழ்வதிலே
இந்த இல்லத்தில் நிம்மதி வாழுமடி
வீட்டு நலத்துக்கும் நாட்டு நலத்துக்கும்
வேற்றுமை என்பதே இல்லையடி
வீட்டுக்கு பிள்ளைக்கு ஊருக்கு நாட்டுக்கு
பங்கிட்டு வாழ்வது என்றைக்கும் நிம்மதி
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/
Reply all
Reply to author
Forward
0 new messages