தினம் ஒரு பாடல்

139 views
Skip to first unread message

AKR

unread,
Nov 25, 2009, 12:17:24 PM11/25/09
to muthami...@googlegroups.com
”குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயர் ஆயின எல்லாம்
நிலம்தரம் செயும் நீள்விசும்பு அருளும்
அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலம்தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்”
 
- திருமங்கையாழ்வார்
 
தாயைப்போல் அன்பு செலுத்த வேறு ஒருவர் உலகில் இல்லை. அதனாலேயே இறைவனை அடியார்கள் தாயினை விடவும் அன்பு செய்பவர் என்று குறிப்பிடுகின்றனர். அத்தகைய மேன்மை கொண்ட தாயின் அருமை இளவயதில் எல்லோருக்கும்  தெரிவதில்லை. இதன் காரணமாகவே தம் சுகம் ஒன்றையே பெரிதாக எண்ணி, தாய் தந்தையரைத் தவிக்க விடுவோரும் இவ்வுலகில் உளர்.
 
அவ்வாறு இளமை வேகத்தில் பெற்றோரை அலட்சியம் செய்து, கட்டிய மனைவிக்கும் துரோகம் செய்து தன் பொருளையெல்லாம் விலைமாது ஒருத்தியின் மோக வலையில் விழுந்து சிற்றின்பத்தி்ற்கெனவே செலவிட்டு வீணாகப் போன ஒருவன் தன் துன்பத்துக்கான காரணங்களை எண்ணிப்பார்த்து வருந்துகிறான். தன் உதாசீனத்தால் தன்னை வி்ட்டுப் பிரிந்து சென்ற தாய் தந்தையரைத் தேடியலைகிறான்.
 
அவன் தன் தாய் தந்தையரைக் கண்டானா? தான் செய்த தவறுகளுக்குப் பிராயச்சித்தம் செய்தானா?
 
இக்கேள்விகளை எழுப்பி அவற்றுக்கு விடையும் தரும் கதையே ஹரிதாஸ் கதை.
 
 
திரைப் படம்: ஹரிதாஸ்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1944
 
என்னுடல் தனிலொரு ஈ மொய்த்த போது
உங்கள் கண்ணில் முள் தைத்தாற் போல் இடிந்தும்
என்னுடல் நோய் கண்டு இரவொடு பகலும்
கண்ணுறங்காது உடல் இளைத்தும்
இன்னமுதூட்டி இன்பத் தாலாட்டி
என்னை ஆளாக்கிய பெருமைக்கு
என்னிடம் இயற்கையில் - உங்கள்
உள்ளுருகும் அன்பினுக்கு ஒரு கைம்மாறேது?
 
என்னுயர் தவப் பயன் அம்மையே அப்பா!
இம்மையில் எனது கண்கண்ட என் அருட்கடவுள்
அம்மையே அப்பா! எனக்கொரு நற்கதியுண்டோ?
என்னரு நிதியாம் அம்மையே அப்பா
என் பிழை பொருத்தருள்வீரோ?
என்னுயிர்த் துணையாம் அம்மையே அப்பா!
எங்கு சென்றுங்களைக் காண்பேன்?
 
அம்மையப்பா உங்கள் அன்பை மறந்தேன்
அம்மையப்பா உங்கள் அன்பை மறந்தேன்
அறிவிலாமலே நான் அறிவிலாமாலே நன்றி மறந்தேன்
அறிவிலாமாலே நன்றி மறந்தேன்
தாயே தந்தையே அருமைத் தாயே தந்தையே!
அருமைத் தாயே தந்தையே என்னருமைத் தாயே தந்தையே!
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Nov 26, 2009, 2:49:15 PM11/26/09
to muthami...@googlegroups.com
பரத்வாஜர், ரைப்யர் என்ற இரு நெருங்கிய சினேகிதர்களான அந்தணர்கள் வனத்தில் ஆசிரமங்கள் அமைத்து வாழ்ந்து வந்தனர். ரைப்யரும் அவரது புதல்வர்களான பராவசு, அர்வாவசு எனபவர்களும் நன்றாக வேதம் ஓதி வித்வான்களாகப் புகழ் பெற்றார்கள். பரத்வாஜர் பெரும்பாலும் தவத்திலேயே தன் நேரத்தையெல்லாம் கழித்துவந்தார். அவரது மகனான யவக்ரீதன், ரைப்யரும் அவரது இரு மகன்களும் அவர்களது கல்வித்திறமையால் தன் பிதாவையும் தன்னையும் விட அதிக மதிப்பைப் பெற்றிருந்தது கண்டு பொறாமையுற்றான். அவர்களை விடவும் மேலான நிலையடைய வேண்டி தேவேந்திரனைக் குறித்துக் கடும் தவம் செய்தான்.
 
தன் தவத்துக்கிறங்கி வந்து காட்சி கொடுத்த இந்திரனிடம், "பிராம்மணர்கள் இதுவரை ஓதியிராத வேதங்கள் யாவும் எனக்கு வர வேண்டும், நான் பெரிய வித்துவானாக வேண்டும். இதற்கு எனக்கு நீங்கள் வரம் தர வேண்டும்" எனவே, இந்திரன், "பிராம்மணனே, படிப்புக்கு வழி படிப்பேயாகும், தவமல்லல, தகுந்த குருவை நாடிக் கற்றுக்கொள்" என்று சொ்ல்லிவிட்டு மறைந்தான். யவக்ரீதன் இந்திரன் அறிவுரையை செவிமடுக்காது மீண்டும் முன்னிலும் மிகுந்த கடுமையான தவத்தை மேற்கொண்டான். தவத்தின் இடையே கங்கையில் நீராடச் செல்கையில் கங்கையின் கரையில் ஒரு வயோதிக பிராம்மணன் அமர்ந்து கொண்டு கையால் மணலைப் பிடிப்பிடியாக அள்ளித் தண்ணீரில் போட்டுக் கொண்டருக்கக் கண்டு, "என்ன செய்கிறாய் கிழவா?" என்று கேட்டான்.
 
அக்கிழவன், "கங்கையாற்றின் குறுக்கே ஒரு அணை கட்டுகிறேன்" என்றான். யவக்ரீதன் அவனைப் பார்த்து நகைத்து, "ஓடும் ஆற்றை இம்மாதிரி தடுத்துச் சேது கடட முடியாது, வேறு காரியத்தைப் பார்" என்றான்.
 
"நீ படிக்காமலேயே பண்டிதனாக முயல்கையில் நான் இவ்வாறு சேது கட்ட முயலக் கூடாதா?"  என்று பதிலுக்கு அக்கிழவன் கேட்கவே, அக்கிழவன் இந்திரன் என்று அறிந்து, "நான் எவ்வாறு ஒரு வித்துவானாக முடியுமோ அவ்வாறே எனக்கு வரம் தருவீர்" என்று கேட்டு இந்திரனின் ஆசிகளைப் பெற்றுச் சென்று, கல்வி கற்றுப் பெரிய பண்டிதனானான்.
 
உண்மை நிலவரம் இவ்வாறிருக்க, காளிதாசனும் காளமேகமும் காளியின் அருளால் கல்வியை முறையாகப் பயிலாமலேயே பெரும் கவிஞர்களானார்களென்று நமக்கெல்லாம் காதில் பூ சுற்றும் கதைகளும் உண்டு. எவ்வாறாயினும் காளிதாசனும் காளமேகமும் பெரும் புலவர்கள் என்பதில் ஐயமில்லை.
 
திரைப்படம்: மஹாகவி காளிதாஸ் 
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1966
 
 
மாணிக்க வீணையே மரகதப் பதுமையே வைரத்தில் தோய்ந்த மனமே
மதங்கமா முனிவரின் மாதவச் செல்வியே மாதுளம் சிவந்த விழியே
ஆணிப்பொன் கட்டிலே அரியாசனத்திலே அரசாள வைத்த தேவி
அறியாத நெஞ்சிலே ஓம் எனும் எழுத்திலே ப்ரணவம் தந்த காளி
 
யார் தருவார் இந்த அரியாசனம்?
யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி
அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி
அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம் - அம்மா
யார் தருவார் இந்த அரியாசனம்?
 
பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் - உயர்ந்த
பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் - உயர்ந்த
பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
சேரும் சபையறிந்து செல்லாதவன்
சேரும் சபையறிந்து செல்லாதவன் - அங்கு
தேர்ந்த பொருள் எடுத்து சொல்லாதவன் தனக்கு
 
யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி
அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
 
கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா? - உன்
காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா?
கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா? - உன்
காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா?
சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா? ஆ..
சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா? - உன்
சிங்காரக் கைக்கு அபிநயம் வேண்டுமா?
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Nov 27, 2009, 11:23:05 AM11/27/09
to muthami...@googlegroups.com
தினம் ஒரு பாடலுடன் என் மனதின் ஆழத்தில் உள்ள சில கருத்துக்களை தமிழ் நண்பர்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை கிடையாது. இவ்வாறு நான் பகிர்ந்து கொள்ளும் செய்திகளையும் பாடல்களையும் தொகுத்து
 
 
எனும் வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறேன். நண்பர்கள் யாவரும் கண்டு தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய அன்போடு வேண்டுகிறேன்.
 
அத்துடன் குழந்தைகளின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு நடத்தப் படும் மழலைகள்.காம் இணையதளத்திலும் அனைவருக்கும் கல்வி இலவசமாகக் கிடைக்க வேண்டும் எனும் நோக்கில் நடத்தப்படும் கல்விச் சேவை இணையதளத்திலும் பிரசுரம் செய்யத்தகுந்த படைப்புகளை வரவேற்கிறேன்.
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Nov 27, 2009, 2:46:34 PM11/27/09
to muthami...@googlegroups.com
குலப்பெண்களிடம் இயல்பாகவே நிறைந்திருக்கும் குணம் நாணம். நாணமே ஒரு பெண்ணின் அழகுக்கு அழகு சேர்க்கிறது. நாணமில்லாப் பெண்களிடம் முழுமையான அழகிருக்காது. இத்தகைய நாணமுள்ள பெண்கள் அதிகம் பேச மாட்டார்கள். யாருடனும் அளவோடு பேசிப் பழகுவது இவர்களது சுபாவம் ஆகும். இவர்கள் காதல் வயப்பட்டு விட்டால் இந்த அளவான பேச்சும் மிகவும் குறைந்து விடும். இத்தகைய பெண்ணொருத்தி தன் மனதைக் கொள்ளை கொண்ட காதலனைச் சந்தித்தாலோ பேச்சு முற்றிலும் நின்றுவிடும். ஆயினும் தன் மனதில் இருக்கும் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் தனது கண்கள் வழியாகவே தன் காதலனுக்கு உணர்த்தும் சக்தியும் பெற்றிடுவாள் அப்பெண். அவளுடன் உறாவாடுகையில் அவளது காதலனுக்கும் அவளது விழிகள் பேசும் மொழி புரிந்து தன் பார்வையாலேயே தன் மனத்தின் எண்ணங்களை அவளுக்கு உணர்த்தும் சக்தி கிடைத்துவிடும் போலும். அதனாலேயே திருவள்ளுவர்,
 
கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய் சொற்கள்
என்ன பயனும் இல
 
என்று எழுதி வைத்தாரோ?
 
 
 
திரைப்படம்: கொடிமலர்

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி.பி. ஸ்ரீநிவாஸ்
ஆண்டு: 1966
 
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்
 
அல்லிக்கொடியே உன்தன் முல்லை இதழும் - தேன்
ஆறு போலப் பொங்கி வர வேண்டும் - வர வேண்டும்
அல்லிக்கொடியே உன்தன் முல்லை இதழும் - தேன்
ஆறு போலப் பொங்கி வர வேண்டும்
அங்கம் தழுவும் வண்னத் தங்க நகை போல் - என்னை
அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும் - என்னை
அள்ளிச் சூடிக்கொண்டு விட வேண்டும் ம்...
 
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்
 
முத்துச் சரமே என் பக்கம் இருந்தால் வே
றென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும் மொழி வேண்டும்?
முத்துச் சரமே என் பக்கம் இருந்தால் வே
றென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்?
முன்னம் இருக்கும் இந்த சின்ன முகத்தில் -  பல
மொழிகள் பாடம் பெற வர வேண்டும் - பல
மொழிகள் பாடம் பெற வர வேண்டும் ம்...
 
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Nov 28, 2009, 11:23:37 AM11/28/09
to muthami...@googlegroups.com
ஒரு பெண் குழந்தையாய் இருக்கையில் அனைவரோடும் மிகவும் பிரியத்துடன் நெருக்கமாகப் பழகுகிறாள். ஆண் பெண் வெறுபாடு பார்ப்பதில்லை. அதே பெண் பருவமடைந்து விட்டால் எங்கிருந்தோ நாணம் வந்து அவளுக்குள் குடி புகுந்து கொள்வதால் அவள் பிறருடன் பழகுவதில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆண்களுடன் பேசிப் பழக நாணுகிறாள். தன் கண்ணையும் கருத்தையும் கவர்ந்த ஒரு ஆடவன் மேல் காதல் ஏற்பட்டாலோ அவளது நாணம் பன்மடங்காகப் பெருகி, அவளது உள்ளத்தில் ஆசை அலைகள் கரைபுரண்டு எழுந்தாலும் அவற்றை வெளிக்காட்டிக்கொள்ள இயலாத சூழ்நிலையை ஏற்படுத்துவதால் தன் உள்ளத்தில் எழும் எண்ணங்களைப் பிறரிடம் மட்டுமின்றித் தன் காதலனிடமும் வெளிப்படுத்த வழியின்றித் தவிக்கிறாள்.
 
அவ்வாறு காதல் உணர்வுகளாலும் நாணத்தாலும் அலைமோதும் மனத்தினளாய் அவதியுறும் பெண்ணொருத்திக்கு அவளது காதலன் அவளது தவிப்பைப் போக்க சொல்லும் ஆலோசனைகள் என்ன?
 
 
திரைப்படம்: சங்கிலித் தேவன்
இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்
இசை: டி.ஜி. லிங்கப்பா
பாடியோர்: பி. லீலா, டி.எம் சௌந்தரராஜன்
ஆண்டு: 1960
 
தென்றல் உறங்கிடக் கூடுமடி என்தன் சிந்தை உறங்காது - புவி
எங்கும் உறங்கிடக் கூடுமடி என்தன் கண்கள் உறங்காது - புவி
எங்கும் உறங்கிடக் கூடுமடி என்தன் கண்கள் உறங்காது
தென்றல் உறங்கிடக் கூடுமடி என் சிந்தை உறங்காது
 
நீலக் கடலலை ஓடி வருவதில் நெஞ்சம் பறிகொடுப்பேன்
நீலக் கடலலை ஓடி வருவதில் நெஞ்சம் பறிகொடுப்பேன் - இன்று
கோடி அலைகள் என் நெஞ்சில் எழுவதை யாரிடம் போய் உரைப்பேன்  - இன்று
கோடி அலைகள் என் நெஞ்சில் எழுவதை யாரிடம் போய் உரைப்பேன் - இனி
 
தென்றல் உறங்கிடக் கூடுமடி என்தன் சிந்தை உறங்காது
 
துள்ளித் திரிந்தாள் சுற்றிப் பறந்தாள் பிள்ளைப் பருவத்திலே ஏஏ..ஏஏ..ஏஏ..ஏஏ..
துள்ளித் திரிந்தாள் சுற்றிப் பறந்தாள் பிள்ளைப் பருவத்திலே - நாண
வெள்ளத்திலே இவள் உள்ளம் மிதப்பது கன்னிப் பருவத்திலே - நாண
வெள்ளத்திலே இவள் உள்ளம் மிதப்பது கன்னிப் பருவத்திலே
கன்னிப் பருவத்திலே
 
கண்களில் ஏறிப் பெண்மையில் ஓடிய காதலை விட்டுவிடு
கண்களில் ஏறிப் பெண்மையில் ஓடிய காதலை விட்டுவிடு
நங்கைப் பருவம் வேதனை தந்தால் - இள
நங்கைப் பருவம் வேதனை தந்தால் நாணத்தை விட்டுவிடு - நெஞ்சே
நாணத்தை விட்டுவிடு
 
உற்றவர் கண்ணும் பெற்றவர் கண்ணும் உண்மை அறிவதில்லை
உற்றவர் கண்ணும் பெற்றவர் கண்ணும் உண்மை அறிவதில்லை - இதைக்
கற்றவர் அல்லால் மற்றவார் யாரும் காரணம் சொன்னதில்லை - இதைக்
கற்றவர் அல்லால் மற்றவார் யாரும் காரணம் சொன்னதில்லை
 
தென்றல் உறங்கிடும் நேரத்திலும் நம் சிந்தை உறங்காது - புவி
எங்கும் உறங்கிடும் காலத்திலும் நம் கண்கள் உறங்காது - புவி
எங்கும் உறங்கிடும் காலத்திலும் நம் கண்கள் உறங்காது
தென்றல் உறங்கிடும் நேரத்திலும் நம் சிந்தை உறங்காது
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Nov 29, 2009, 1:03:02 PM11/29/09
to muthami...@googlegroups.com
உலகில் உயிர் வாழ்க்கையையே வியாபாரமாக்கிய மனிதர்களின் கொடுஞ்செயலால் இன்று பொருளாதார ஏற்றத் தாழ்வு உலகெங்கிலும் பெருமளவில் நிலைபெற்றுள்ளது. மனிதரில் ஒரு சாரார் தேவைக்கு அதிகமான அளவில் சொத்து சேர்த்து ஆடம்பர வாழ்க்கை நடத்துவதும், மற்றொரு சாரார் தினமும் வயிற்றுப் பசிக்கு உணவிடவே, "திண்டாடித் திண்ணைக் காலைப் பிடிக்கும் நிலையில்" திணறுவதும் அன்றாடம் நிகழும் பரிதாபகரமான நிலை உலகில் நிலவுகிறது. இருப்பினும் செல்வச் செழிப்போடு வாழ்பவர் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனரா? வறுமையில் வாடுவோர் அனைவரும் மகிழ்ச்சி இன்றித் தவிக்கின்றனரா? எனில் இல்லையென்றே சொல்ல வேண்டும்.
 
பெரும் செல்வந்தர்களில் பலர் தம் மனதுக்குப் பிடிக்காத சூழ்நிலையில் தங்கள் துன்பங்களை வெளியிடவும் முடியாத சங்கடமான மனநிலையில் வாழவேண்டிய கட்டாயத்தில் தவிப்பதும், கையில் சல்லிக்காசும் இல்லாமல் தவிப்பவர் பலர் அன்றாடம் கிடைத்ததை உண்டு, கிடைத்த இடத்தில் படுத்து, நிம்மதியாகத் தூங்கி, வாழ்வை மகிழ்ச்சியாகக் கழிப்பதும் நம் கண்முன்னே நிகழ்வதைப் பார்க்கிறோம்.
 
எத்தனைக் கோடிப் பணமிருந்தாலும் நிம்மதியை விலைககு வாங்க முடியுமா?
 
 
திரைப்படம்: முத்து மண்டபம்

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1962
 
சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா
சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல் வாழுகிறேன் ஒரு பக்கமடா ஆஆஆஆஆஆ
சொன்னாலும் வெட்கமடா ஆஆஆஆஆஆ
 
பொன்னோடு பொருள் படைத்தேன் பூவைக்கு நான் பூ முடித்தேன்
பொன்னோடு பொருள் படைத்தேன் பூவைக்கு நான் பூ முடித்தேன்
மன்னாதி மன்னனைப் போல் மாளிகையில் வாழ்கிறேன்
 
சொன்னாலும் வெட்கமடா ஆஆஆஆஆஆ
 
பாய் விரித்துப் படுப்பவரும் வாய் திறந்து தூங்குகிறார்
பாய் விரித்துப் படுப்பவரும் வாய் திறந்து தூங்குகிறார்
பஞ்சணையில் நான் படுத்தும் நெஞ்சிலோர் அமைதியில்லை
பஞ்சணையில் நான் படுத்தும் நெஞ்சிலோர் அமைதியில்லை
கொஞ்சிவரும் கிளிகளெல்லாம் கொடும்பாம்பாய் மாறுதடா
கொஞ்சிவரும் கிளிகளெல்லாம் கொடும்பாம்பாய் மாறுதடா
கொத்தி விட்டு புத்தனைப் போல் சத்தியமாய் வாழுதடா
 
இல்லாத மனிதருக்கு இல்லையென்னும் தொல்லையடா
உள்ளவர்க்கு வாழ்க்கையிலே உள்ளதெல்லாம் தொல்லையடா ஆஆஆஆஆஆ
 
சொன்னாலும் வெட்கமடா ஆஆஆஆஆஆ
 
அன்னமில்லை என்றாலும் அமைதி கொண்ட மானிடனே
அன்னமில்லை என்றாலும் அமைதி கொண்ட மானிடனே
உன் வாழ்வை நினைக்கையிலே என் மனது தவிக்குதடா
உன் வாழ்வை நினைக்கையிலே என் மனது தவிக்குதடா
வண்ணமுத்து மண்டபமும் வைரநகைப் பஞ்சணையும்
வண்ணமுத்து மண்டபமும் வைரநகைப் பஞ்சணையும்
உன்னிடத்து நான் தருவேன் நிம்மதியை நீ தருவாய்
 
சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல் வாழுகிறேன் ஒரு பக்கமடா
சொன்னாலும் வெட்கமடா ஆஆஆஆஆஆ
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Nov 30, 2009, 11:10:49 AM11/30/09
to muthami...@googlegroups.com
உடன்பிறந் தவர்களைப் போலே - இவ்
வுலகினில் மனிதரெல் லாரும்;
திடங்கொண் டவர்மெலிந் தோரை - இங்குத்
தின்று பிழைத்திட லாமோ?
............
அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்.
சிறியரை மேம்படச் செய்தால் - பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்.
.............
வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்.
 
ஒன்றென்று கொட்டு முரசே!-அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே!
நன்றென்று கொட்டு முரசே!இந்த
நானில மாந்தருக் கெல்லாம்.
 
எனும் மஹாகவி பாரதியாரின் பாடல் வரிகளில் கண்ட நெறியைப் பின்பற்றி நம்மிற்பலர் தாம் ஈட்டிய செல்வம் மற்றும் தமது நேரத்திலும் உழைப்பிலும் பெரும்பகுதியை சமுதாய நன்மைக்காகவே செலவிட்டு, சமூகத்தொண்டு செய்வது ஒன்றே தமது வாழ்க்கையின் நோக்கமெனக் கொண்டு வாழ்கின்றனர். இவர்களில் ஒரு சாரார் மனித உயிர்காக்கும் நல்ல நோக்கத்துடன் இரத்த தானம், கண் தானம், உடலுறுப்புகள் தானம் முதலான இயக்கங்களை ஏற்படுத்தித் தன்னுடன் பிற நல்லுள்ளம் கொண்ட அன்பர்கள் பலரையும் ஒன்று சேர்ததுப் பாடுபடுகின்றனர்.
 
இத்தகைய தொண்டு செய்வோரைத் தலைவணங்கிப் போற்றுவோம். அதே சமயம் இத்தகைய அன்பர்கள் தமது நலத்தைத் தியாகம் செய்து பாமர மக்கள் நல்வாழ்வுக்கெனத் தொகுத்து அளிக்கும் தானங்களைப் பெற வேண்டிய சூழ்நிலையிலுள்ள மனிதர்களுக்கு, அதற்கேற்ற மருத்துவச் சிகிச்சை கிடைக்கப் பெறுவது குதிரைக் கொம்பாகவே உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் நம் நாட்டை ஆள்வோர் மருத்துவக் கல்வியை வியாபாரமாக்கி, அரசு மருத்துவமனைகள் முறையாக இயங்க ஆவன செய்யாது, தமது சுயலாபத்தை மட்டுமே சிந்தித்து செயல்படும் போக்கேயாகு்ம்.
 
இத்தகைய போக்கு மாறி அரசுகள் உண்மையிலேயே மக்களுக்காக, மக்களைக் கொண்டு மக்களால் நடத்தப் படும் சூழ்நிலை உருவாவது மிகவும் அவசியம். அத்தகைய நல்லாட்சி நாட்டில் நிலவுகையில் மேற்குறிப்பிட்ட அன்பர்களின் தொண்டு மென்மேலும் சிறந்து மனிதகுலம் மிகவும் மேன்மையடையும் என்பதில் ஐயமில்லை.
 
 
திரைப்படம்: கருப்புப் பணம்

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
 
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை
 
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
 
இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார் - சிலர்
கிணற்றில் இருந்து கொண்டு உலகளப்பார்
இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார் - சிலர்
கிணற்றில் இருந்து கொண்டு உலகளப்பார்
நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார் - அந்த
நீசரை யார் உலகில் பொறுத்திருப்பார்
நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார் - அந்த
நீசரை யார் உலகில் பொறுத்திருப்பார்
 
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
 
பாலென அழுவோர்க்குப் பால் தருவோம் - பசுங்
கூழெனத் துடிப்போர்க்கு சோறிடுவோம்
பாலென அழுவோர்க்குப் பால் தருவோம் - பசுங்
கூழெனத் துடிப்போர்க்கு சோறிடுவோம்
தாயகம் காப்போரின் தாள் பணிவோம் - யாவும்
தனக்கென நினைப்போரை சிறையிடுவோம்
தாயகம் காப்போரின் தாள் பணிவோம் - யாவும்
தனக்கென நினைப்போரை சிறையிடுவோம்
 
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/
Reply all
Reply to author
Forward
0 new messages