தினமலர் 17.04.2016
தமிழகத்தில், திருப்பணி என்ற பெயரில், கடந்த, ஏழு ஆண்டுகளில், 17 புராதன கோவில்கள், அறநிலையத்துறை துணையுடன் சிதைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதன் பின்னணியில், சர்வதேச சிலைக் கடத்தல் கும்பல்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. தமிழகத்தில் பாரம்பரிய சிறப்பு மிக்க கோவில்களைப் பாதுகாக்க, 17 உறுப்பினர் அடங்கிய வல்லுனர் குழுவை அமைக்கும் நடவடிக்கைகளை, தமிழக அரசு கிடப்பில் போட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தை, உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது.