Fwd: தினம் ஒரு பாடல்

2 views
Skip to first unread message

AKR Consultants

unread,
Nov 7, 2015, 8:14:23 AM11/7/15
to muthami...@googlegroups.com
தினம் ஒரு பாடல்:

மனித வாழ்வு மாயமானது. பிறப்பும் தெரிவதில்லை, இறப்பும் தெரிவதில்லை. இடையில் உயிர் உடலில் ஒட்டுக்கொண்டிருக்கும் சொற்ப காலமே வாழ்க்கை. நீண்ட ஆயுளுடன் தீர்க்காயுசாய் வாழ்க என மூத்தோர் வாழ்த்தினாலும் அந்நீண்ட ஆயுள் முடிகையில் ஆயுள் சொற்பமே என்பது ஒவ்வொருவரும் உணர்வர். காலம் மிகவும் வேகமாகக் கடந்து போகிறது. இளமை விரைவில் மாறி முதுமை எய்தி மரணத்தை நோக்கியே ஒவ்வொரு ஜீவனும் உலகில் பிரயாணம் செய்வது இயற்கை நியதி. அத்தகைய இயற்கை நியதியை வென்று மரணமில்லாப் பெருவாழ்வு வாழும் 
வழியொன்று நிச்சயம் உண்டு. அதுவே இறை பக்தி.

எம்மதத்தவராயினும் தம் விருப்பத்திற்குரிய இறையை வழிபடுதலே ஆணவம் அகன்று மெய்யறிவுண்டாக ஒரே வழி. நமக்குப் பொருளின் மீதும், சிற்றின்பத்தின் மேலும் பிற பெருமைகள் பேசிக்கொள்வதில் கிடைக்கும் ஏதோ இனம் புரியாத ஒரு திருப்தி உணர்வினாலும் ஆணவம் உண்டாகிறது. அத்தகைய ஆணவம் மாயையை உண்மை என நம்மத் தூண்டி மெய்யறிவைச் சிதைக்கிறது. அவ்வாறு ஆணவ மாயையில் மூழ்கித் தம் அறிவை இழப்போர் அப்பிறவியில் கடைத்தேறுவது கடினமே. ஜென்மம் கடைத்தேற வேண்டுமெனில் ஆணவம் அகல வேண்டும். 

ஆணவம் அகல ஆண்டவன் துணை வேண்டும்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேராதார்.

என்று ஒன்றே முக்காலடியில் இறை வழிபாட்டின் இன்றியமையாமையை தெய்வப் புலவர் தெளிவாக விளக்கியுள்ளார்.

"புல்லாகி, பூண்டாகி, புழுவாகி, மரமாகி
பல்விருகமாகி பறவையாய், பாம்பாய்
கல்லாய்,மனிதராய், பேயாய், கணங்களாய்
வல் அசுரராகி செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்'' என்கிறார் மாணிக்கவாசகர்.

ஒவ்வொரு மதத்திலும் இறை வழிபாட்டின் மேன்மை தெள்ளத் தெளிய விளக்கப்பட்டுள்ளதால் மக்கள் நம்பிக்கையோடு வழிபாடு செய்து வாழ்வின் துன்பங்களிலிருந்து விடுபட்டு மேலான பரகதியடைய ஏதுவாகிறது.  கிரித்தவர்கள் வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் மற்றும் கிரிஸ்துமஸ் முதலான ஒவ்வொரு விசேஷ தினத்தன்றும் தவறாமல் தேவாலயத்துக்குச் சென்று இறைவனை வழிபடுகின்றனர். முஸ்லிம்கள் தினந்தோறும் ஐந்து முறை குறிப்பிட்ட நேரங்களில் அவர்கள் எங்கிருந்த போதிலும் அங்கிருந்தே மண்டியிட்டு எல்லாம் வல்ல இறையை 
வணங்கி வழிபடுகின்றனர். இவர்கள் அனைவரும் ஆணவம் அகன்று நல்லறிவு பெற வேண்டியே இறைவனை வழிபடுகின்றனர். சிலர் அறியாமையால் பொன்னும் பொருளும் நிலையற்ற பிற இன்பங்களும் அடைய வேண்டியும் வழிபடுவதுண்டு. எவ்வாறு வழிபட்டாலும் நல்வழி நடந்து அன்புடன் அனைவருடனும் நட்புறவுடன் பழகி நேர்மையாக வாழ்வதே பெருந்தவமாகும்.

பலவிதமான இன்னல்களும் இன்பங்களும் அனுபவிக்கும் வாழ்வில் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு முறையாவது இறையருளை வேண்டித் தொழுவது நன்மை பயக்கும்.


திரைப்படம்: திருநீலகண்டர்
ராகம்: கமாஸ்
தாளம்: ஆதி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இசை: பபநாசம் சிவன்
எம்.கே. தியாகராஜ பாகவதர்

ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
உச்சரிக்க வேண்டும் ஜென்மம் கடைத்தேற
ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
உச்சரிக்க வேண்டும் ஜென்மம் கடைத்தேற

ஓரு நாள் ஆஆஆஆ ஆஆஆ

வெறு நாளாக்கி ஈஈஈ ஈஈஈஈ
வெறு நாளாக்கிப் பின் ஜனநாதித் துயர்
வெறு நாளாக்கிப் பின் ஜனநாதித் துயர்
வேலைக்குள் மூழ்கி வீண் காலம் கழிக்காமல்
வேலைக்குள் மூழ்கி வீண் காலம் கழிக்காமல்

ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
உச்சரிக்க வேண்டும் ஜென்மம் கடைத்தேற

ஓரு நாள் ஆஆஆஆ ஆஆஆஆ

பெண்டு பிள்ளை வீடு கன்று மாடு தனம்
பெண்டு பிள்ளை வீடு கன்று மாடு தனம்
பெருமையான பெரும் வெள்ளம் ஓஓஓஓ ஓஓஓஓஓ
பெண்டு பிள்ளை வீடு கன்று மாடு தனம்
பெருமையான பெரும் வெள்ளம் இதைக்
கண்டு நெஞ்சில் ல்ல்ல்ல் ல்ல்ல்ல்ல் இதைக்
கண்டு நெஞ்சில் மோகம் கொண்டு சென்று சாடிக்
கடல் மூழ்காதே பெரும் பள்ளம் இதைக் 
கண்டு நெஞ்சில் மோகம் கொண்டு சென்று சாடிக்
கடல் மூழ்காதே பெரும் பள்ளம் தனில்
கொண்டமிழ்த்தி விடுமே
கொண்டமிழ்த்தி விடுமே பள்ளம் தனில்
கொண்டமிழ்த்தி விடுமே பின் கரை
கொள்ள வெகு வருத்தமே பள்ளம் தனில்
கொண்டமிழ்த்தி விடுமே பின் கரை 
கொள்ள வெகு வருத்தமே ஏஏஏ ஏஏஏஏஏ ஏஏஏ ஏஏஏஏஏ
கொண்டமிழ்த்தி விடுமே பின் கரை 
கொள்ள வெகு வருத்தமே முனிவர்
தொண்டு செய் சிவபதமே நினைந்தால்
தொண்டு செய் சிவபதமே நினைந்தால்
தோணியாகி வுருமே ஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஏ
தோணியாகி வுருமே ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ அதனால்

ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
உச்சரிக்க வேண்டும் ஜென்மம் கடைத்தேற

ஓரு நாள் ஆஆஆஆ ஆஆஆஆ



Reply all
Reply to author
Forward
0 new messages