தமிழ் நண்பர்கள் தமிழ்நாடு பற்றிய விவரங்களை அறிய வேண்டும் எனும் ஒரே நோக்கில் இக்கடிதத்தை அனுப்புகிறேன். எனக்கு 62 வயதாகிறது. என் இளமைப் பருவத்தை இனிமையாகக் கழித்து நான் வாழ்வில் உயர உறுதுணையாயிருந்த தமிழ்நாடு இன்று சீரழிகிறது. அச்சீரழிவைச் சீர் செய்து இன்றைய இளையதலைமுறையினரும். வருங்கால சந்ததிகளும் நலமடைய வேண்டும் எனும் ஓரே நோக்கம் தவிர வேறில்லை எனக்கு. இது யாருக்கும் வாக்கு சேகரிக்கும் முகாந்திரத்தில் எழுதிய மடல் அல்ல என்பதைப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு மேலும் மேலும் சீரழிந்து மக்கள் இலவச அரிசிக்கும், பருப்புக்கும் கையேந்தி நிற்கும் நிலையடையக் காரணங்கள் என்ன, அத்தகைய மோசமான நிலையிலிருந்து மீள்வது எப்படி என்பதை மிக விளக்கமாக எடுத்துக்கூறுகிறது நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு
http://makkalarasu.in/download/2016-ntk.pdf எனும் இந்த 316 பக்க ஆவணம். இதனைத் தயாரித்து வழங்கியவர்கள் பல படித்த அறிவிற் சிறந்த தமிழ் இளைஞர்கள். தமிழ் நண்பர்கள் வரும் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பதென்பது அவரவர் விருப்பம், உரிமை ஆனால் தமிழ்நாட்டின் தற்போதைய உண்மை நிலைமையும் அதை சீர்படுத்த என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அறிவது அவசியம். அத்தகைய அறிவைப் பெற அது குறித்த விவரங்கள் பலவும் இந்த ஆவணத்தில் குறிப்பிடப் பட்டுள்ளன.