வேலை
இல்லை!
கேம்பஸ்
இன்டர்வியூ
படுத்து
விட்டது.
ஆஃப்
கேம்பஸ்
இன்டர்
வியூ
ஆப்பு.
பல
நிறுவனங்களும்
ஆட்களைக்
குறைத்துக்கொண்டு
இருக்கின்றன.
பலர்
வேலை
இழந்து
விட்டார்கள்.
இவையெல்லாம்
எம்.என்.சி
எனப்
படும்
மல்டி
நேஷனல்
நிறுவனங்களை
வைத்துச்
சொல்லப்படுபவைகள்.
ஸ்மால்
மீடியம்
என்டர்பிரைசஸ்
எனப்படும்
சிறு
நிறுவனங்களைப்
பற்றி
யாரும்
மூச்சுவிடுவதில்லை.
நியாய
தர்மம்
பேசும்
எல்லோரும்
பெரு
நிறுவனங்களுக்கே
வேலைக்குப்
போவார்கள்.
வேலையைவிட்டுத்
துரத்தி
விட்டால்,
சுரண்டல்
அது
இது
என்று
புலம்புவார்கள்.
சிறு
நிறுவனங்களை
நடத்தி
வந்த
பலர்
மூடியே
விட்டார்கள்.
மீதி
இருக்கும்
சிறு
நிறுவனங்களும்
இழுத்துக்கோ,
பிடிச்சிக்கோ
என்று
இழுத்துக்கொண்டு
கிடக்கின்றன.
சிறு
முதலாளிகள்
இதுவரை
ஈட்டிய
லாபம்
மொத்தத்தையும்
கொட்டி
னாலும்
நிறுவனத்தைத்
தூக்கி
நிறுத்த
முடிவதில்லை.
இதற்கு
முழுமுதற்
காரணம்
மத்தியிலும்,
மாநிலத்திலும்
ஆட்சி
செய்துகொண்டிருப்பவர்கள்தான்.
இது
இப்படி
இருக்க...
படித்து
முடித்துவிட்டுக்
காத்திருக்
கும்
யாரும்
வேலையில்லை
என்று
விரக்தியில்
எல்லாம்
சுத்தவில்லை.
பைக்,
ஸ்மார்ட்போன் ,
மால்,
கேர்ள்
ஃப்ரெண்ட்
என
ஜாலியாகச்
சுற்றிக்
கொண்டிருக்கிறார்கள்.
வேலை
கிடைக்க
வேண்டும்
என்ற
பிரஷர்
இல்லை;
வேலை
தேடியாக
வேண்டும்
என்ற
டிசையர்
இல்லை.
வேலை
இல்லை
என்ற
கூக்குரல்
கேட்கும்
அதே
நேரத்தில்
வேலைக்கு
ஆள்
வேண்டும்
என்று
விளம்பரத்துக்கும்
குறைந்த
அளவே
ஆட்கள்
வருகிறார்கள்,
அதாவது
இளைஞர்கள்.
இதற்குக்
காரணம், 45- 50
வயதுக்குள்
இருக்கும்
இளமையான
தந்தைமார்கள்தான்.
தான்
வேலைக்காகப்
பட்ட
கஷ்டம்
தன்
மகன்
பட
வேண்டாம்
என
அவர்கள்
நினைப்பதுதான்
காரணம்.
பைக்கை
வாங்கிக்கொடுத்து,
ஜாலியா
சுத்துடா,
வேலை
கிடைக்கிறப்ப
பார்த்துக்கலாம்
என
அனுப்பி
விட்டு
அவர்களும்
ஹாயாகச்
சுற்றி
கொண்டிருக்கிறார்கள்.