Fwd:

0 views
Skip to first unread message

Venugopal Mp

unread,
Jul 9, 2017, 2:25:06 PM7/9/17
to mkumba8284

---------- Forwarded message ----------
From: Venugopal Mottur Padmanabhan <Venugopal....@cbo.gov.om>
Date: 2017-07-06 9:19 GMT+04:00
Subject:
To: "mpv...@gmail.com" <mpv...@gmail.com>


கதவை உடைச்சுட்டுஉப்பு இருக்கான்னு கேட்கிற காஜல் அகர்வால் மாதிரி திடீர்னு உள்ள வந்தாய்ங்க இரண்டு பேர்...

முகத்தை அவ்ளோ சீரியஸா வெச்சுக்கிட்டு, ``ஜி.எஸ்.டி வருது சார். எல்லா ரேட்டும் ஏறப்போகுது. சீக்கிரமா பழைய காரைக் கொடுத்துட்டுப் புது கார் வாங்கிக்கோங்க, இப்போ வாங்கினா டிஸ்கவுன்ட் இருக்கு.’’

‘‘
இல்லீங்க... கார் வாங்குற ஐடியா இல்லை.’’

‘‘
என்ன சார், இப்படிச் சொல்லிட்டீங்க பழைய கார்  இரண்டு லட்சம், டிஸ்கவுன்ட் 35,000. டேக்ஸ், ஆன் ரோடுன்னு கணக்கு பண்ணா, சார் நீங்க மூன்று லட்சம் கட்டினா போதும். இதே காரைப் புதுசா வாங்கிக்கலாம். வேற கலர்ல... செம்ம ஆஃபர் சார்... வாங்குங்க.’’

‘‘
நான் இப்போ வெச்சிருக்கிற காரை கலர் மாத்துறதுக்கு மூணு லட்சம் தரணுமா... என்னய்யா சொல்ற?’’

‘‘
நீங்க பணம்கூட கட்டவேணாம் சார். லோன் போட்டுக்கலாம். பழைய காரை விக்கிறோம்ல... அந்தப் பணத்தை டவுன் பேமென்ட்டா வெச்சு முடிச்சிடுறேன். ஒரு 10 கையெழுத்துப் போட்டா போதும். புதுசு என்ன கலர் சார் வேணும்?’’

‘‘
டாய்... என்னமோ கத்தரிக்காய் வாங்குற மாதிரி கார் வாங்கச் சொல்ற... ஓடிரு.’’

‘‘
சார், ஜி. எஸ்.டி வந்தா, நீங்க 15,000 ரூபாய் அதிகமா கட்ட வேண்டி வரும்.’’

‘‘
அடேய்... அது கார் வாங்குறவன்தானே கட்டணும். நான் சும்மாதானே இருக்கேன். ஏண்டா குழப்புறீங்க... போங்கடா பேசாம.’’

‘‘
சார் சொன்னா கேளுங்க.. உங்களுக்குத்தான் நஷ்டம்’’னு சொல்லிட்டே போறான்...

உண்மையிலயே நமக்கு நஷ்டம் ஆகிடுமோ, குழப்புறானுகளே....


Reply all
Reply to author
Forward
0 new messages