லெமூரியா- குமரிக்கண்டம்- கோண்ட்வானா
“லெமூரியாதான் குமரிக்கண்டம் , குமரிக்கண்டம்தான் லெமூரியா” என்று முன்பெல்லாம் சில தமிழறிஞர்களும் – தமிழார்வலர்களும் எழுதியும் பேசியும் வந்தனர். இப்போதும் சிலர் இதை உறுதியாக நம்புகின்றனர். இதனிடையே, அண்மைக் காலமாக வெளிவரும் நூல்களில், குமரிக் கண்டம் பற்றி எழுதும் தமிழார்வலர்கள் ‘குமரிக் கண்டம்’ எனும் சொல்லைத் தொடர்ந்து அடைப்புக் குறிக்குள் ‘கோண்ட்வானா‘ என்று எழுதுகிறார்கள்.
ஆய்வரங்களிளும்,கருத்தரங்களிலும் “குமரிக் கண்டம் அல்லது கோண்ட்வானா” என்று பேசுகிறார்கள். குமரிக்கண்டம்- லெமூரியா – கோண்ட்வானா இம்மூன்றும் ஒன்றுதான் என்பது, உண்மையல்ல.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் கண்டுபிடிக்கப்பட்ட ரயில்வண்டி 1850 களில் பல நாடுகளிலும் பரவத் தொடங்கியது. அப்போது ரயில் வண்டியை இயக்கத் தேவைப்படும் நிலக்கரிப் படிவங்களி தேடும் பணியில் புவியியலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுனர். இந்தியாவில் 1853 ஆம் ஆண்டு ரயில் அறிமுகப் படுத்தப் பட்டது. நிலக்கரிப் படிவங்களை கண்டுபிடிப்பதற்கென்றே 1851 ஆம் ஆண்டு ஜியலாஜிக்கல் சர்வே ஆப் இந்தியா துவங்கப் பட்டது. இந்தத் துறையை சேர்ந்த புவி இயலாளர் ‘மெட்லிகாட்’ , இந்தியாவின் கிழக்குப் பகுதியில் மேற்கு வங்கம், ஜார்கண்ட் , மத்தியப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதி இங்கெல்லாம் நிலக்கரிப் படிவங்களை கண்டுபிடித்தார். நிலக்கரி உள்ள படிவப் பாறைகளில் ‘கிளஸ்ஸாப்டேரிஸ்’ எனும் தொல் தாவர இலை எச்சங்களையும் அவர் கண்டு பிடித்தார்.
சற்றேறக்குறைய இதே காலகட்டத்தில் தென் அமெரிக்கா , ஆஸ்த்ரேலியா ஆகிய பகுதிகளிலும் இதே போன்ற தொல்லுயிரெச்சங்கள் உள்ள படிவப் பாறைகள் ஐரோப்பிய புவியியலாலர்களால் கண்டறியப் பட்டன. தொல்தாவர எச்சங்கள் மட்டுமின்றி, ‘தேராப்சிட்ஸ்’ எனும் தரை வாழ் விலங்கினத்தின் தொல்லுயிர் எச்சங்களும் இபகுதிகளில் கண்டு பிடிக்கப்பட்டன. தென் அமெரிக்கா , தென்னாப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா காணப்படும் “பெர்மியன்” காலத்தை( சுமார் 26 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது) சேர்ந்த, இப்படிவப் பாறைகளும், அவற்றிலுள்ள தொல்லுயிரெச்சங்களும், ஒன்றை ஒன்று மிகவும் ஒத்திருந்தன . இன்று பல ஆயிரம் கி.மீ. அகலமுள்ள கடலால் பிரிக்கப் பட்டுள்ள நிலப் பரப்புகள் ஒன்றிலிருந்து ஒன்றிற்கு அந்தக் காலத்தில் விலங்குகள் எப்படி இடம் பெயர்ந்து சென்றிருக் முடியும் ? எனவே, ‘இந்த கண்டங்களுக்கு இடையே இவற்றை இணைத்த வண்ணம் ஒரு பெரும் நிலப் பரப்பு, பாலம் போல் இருதிருக்க வேண்டும்- அந்த நிலப்பரப்பின் வழியாகத்தான் விலங்குகள் ஒரு கண்டத்தில் இருந்து மற்றொரு கண்டத்திற்கு சென்றிருக்க வேண்டும் – பின்னர் அந்த நிலப்பரப்பு கடலில் மூழ்கியிருக்கவேண்டும்’ என்று பிரிட்டிஷ் புவியியலாளர்கள் நினைத்தார்கள். இதன் அடிப்படையில், தென் அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா, மடகாஸ்கர் , இந்தியா மற்றும் ஆஸ்த்ரேலியாவிற்கு இடையே ஒரு பெரும் நிலப்பாலம் இருந்திருக்க வேண்டும்’ எனும் கோட்பாட்டை 1860 ஆம் ஆண்டு, ‘எர்னெஸ்ட் ஹெயின்ரிச் ஹேக்கல்’ எனும் புவியியலாளர் முன் வைத்தார். மடகாஸ்கர் தீவில் வாழ்ந்து வரும் ‘லெமூர்’ எனும் விலங்கினம் இன் நிலப்பரப்பில் நிறைய இருந்திருக்க வேண்டுன் என்று எண்ணிய ‘பிலிப் ஸ்க்லேட்டர்’ எனும் உயிரியலாளர், இப்பெரும் நிலப் பரப்பிற்கு “லெமூரியா” என்று பெயர் வைத்தார்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
(Subduction Zones Drift & Sea-Floor Spreading) [2]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா
கால்பந்து ஒட்டுபோல்
தையலிட்ட
கடற் தளத்தின் மேல்
கோல மிட்டு
காலக் குமரி எல்லை வரைந்த
வண்ணப் பீடங்கள்
நாட்டியம் புரியும் !
நண்டு போல் நகர்ந்து,
கண்டத் தளங்கள்
துண்டு துண்டாய்த் தவழும்
கடல் சூழ்ந்திட !
'ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே மத்தியதரைக் கடல் பிரதேசம், நீரில்லாத இரண்டு மைல் ஆழக் குழியாக உப்புக் கலவைப் பொருள் மிகையாகக் கொண்டிருந்தது. அட்லாண்டிக் கடலை ஜிப்ரால்டர் பெரு மலைத்தொடர் மறைத்து, ஒருசில நதிகள் மட்டும் சேரும் மத்திய தரைக் கடல் வெள்ளம் அனைத்தும் ஆவியாகப் போனது. கப்பலின் துளைக்கருவி வெகு ஆழத்தில் தோண்டிப் பார்த்ததில், பல பகுதிகளில் பாலைவன வெப்பத்தில் காய்ந்துபோன ஆயிரக் கணக்கான அடி உயர உப்புக் குளங்களும், ஏரிகளும் காணப்பட்டன '.
டாக்டர் வில்லியம் ரயான், [Glomar Challenger Deep Sea Exploration (1970)]
'கடற்தளங்கள் நீட்சியைக் கண்டுபிடித்து விளக்குவது நம் கையில்தான் இருக்கிறது. மைய அட்லாண்டிக் பிறழ்ச்சிப் பீடத்தின் இருபுறமும் உள்ள கடற்தளம் ஆண்டுக்கு சுமார் ஓரங்குல நீளம் நகர்ந்து கொண்டு வருகிறது. கடற்துளையில் எடுத்த மாதிரிகள் வடிகால் புழுதிக்கும், அடிக்கடற் பாறைக்கும் இடையில் உள்ள எல்லையைக் காட்டின. அத்துடன் அவை எத்துணை இளைய பருவத்தை உடையவை என்று வயதைக் காட்டி, அடிக்கடல் பூர்வப்படிவங்கள் [Undersea Basement Fossils] வெஜினரின் மகத்தான கண்டங்களின் புலப்பெயர்ச்சி நியதியை மெய்ப்பித்தது '.
டாக்டர் ஆர்தர் மாக்ஸ்வெல் [Co-Leader, Wood Hole Oceanographic Institution]
'450 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆஃபிரிக்காவின் ஸகாராப் பாலையின் மீது துருவப் பனிக்கூண்டு [Polar Ice Dome] படிந்து கிடந்தது. அதை மெய்ப்பிக்க அல்ஜீரியா பாலைவனத்தில் பனிப்பாறை செதுக்கிய கற்பாறைகள் இப்போதும் பிழைத்திருப்பதை காணலாம். பூர்வக் காந்தத்தைச் [Paleo-magnetism] சோதிக்கும் போது அல்ஜீரியா பகுதி ஒருகாலத்தில் தென்துருவத்தில் பனிமூடிக் கிடந்திருக்க வேண்டும் என்று தெரிய வருகிறது. அல்ஜீரியா பகுதி இப்போது பூகோளத்தின் வளைவில் பெயர்ச்சியாகி 8000 மைல் தூரம் வடக்கே நகர்ந்துள்ளது.
250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆஃபிரிக்காவின் ஸகாரா பாலைவனம் தென்துருவத்தில் இருந்து பனிப்பாறையால் மூடியிருந்த காலத்தில், பூமத்திய ரேகை வட அமெரிக்காவின் மத்தியப் பகுதி வழியாகச் சென்றிருக்க வேண்டும். குளிர்ப் பிரதேசங்களான அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற இடங்களில் நிலக்கரிச் சுரங்கங்கள் அந்த யுகத்தில்தான் தோன்றி யிருக்க வேண்டும் '.
டாக்டர் ரோட்ஸ் ஃபேர்பிரிட்ஜ், கொலம்பியா பல்கலைக் கழகம்.
முன்னுரை: பிரபஞ்சத்தின் அண்டங்கள், பஞ்ச பூதத்தின் அங்கங்கள், உலகத்தில் வாழும் உயிரினங்கள் எல்லாம் சக்தி மயத்தால் முறையே ஓர் ஒழுக்க நியதியைப் பின்பற்றி இயங்கினாலும், அவற்றின் இயக்கத்திலும் வடிவத்திலும் தொடர்ந்து மாறுபாடுகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வேறுபாடுகளை நோக்கும் போது, பிரபஞ்ச நியதிகள் முற்றிலும் சீரானவை என்றோ அல்லது முழுவதும் சீரற்றவை என்றோ அழுத்தமாகச் சொல்லமுடியாது. ஆனால் நமக்குத் தெரிந்த பிரபஞ்சக் கோட்பாடுகளைச் [Laws of the Universe] 'சீரற்ற ஒழுங்கு நியதிகள் ' [Disorderly Order Hypothesis] என்று இரண்டு முரண்பாடுகளையும் இணைத்து நாம் விளக்கம் சொல்லலாம்!
அட்லாண்டிக் பெருங்கடல் மெதுவாக அகன்று வருகிறது என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது! ஆனால் பசிபிக் பெருகடல் மெதுவாகக் குறுகிக்கொண்டு வருகிறது! ஈரோப்பில் இருக்கும் ஆல்ஃப்ஸ் மலைத்தொடர் வளர்ச்சியாகி உயரம் அதிகமாகிக் கொண்டே போகிறது! பூதக் கண்டம் ஆஃப்பிரிக்கா செங்கடல் வடமுனையில் பிளக்கப் போகிறது! இமாலயச் சிகரங்களை இந்தியாவின் கனத்த உபகண்டம் அழுத்தி, அழுத்தி அவற்றை உயர்த்தை மிகை யாக்கிய வண்ணமா யிருக்கின்றன! ஹவாயி தீவுகள் வடமேற்குத் திசையில் மெதுவாகப் பெயர்ந்து ஜப்பான் தீவுகளை நோக்கிச் செல்கின்றன!
வட அமெரிக்காவும், ஐரோப்பாவும் எதிர்ப்புறம் மெல்ல மெல்ல நகர்ந்து இடைவெளியை அகலமாக்கி வருகின்றன! அமெரிக்காவில் காலிஃபோர்னியா கடற்கரையில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரம் வடபுறமாகச் சரிந்து கொண்டிருக்கிறது! மைய அட்லாண்டிக் கடற்தட்டுப் பிறழ்ச்சிப் பீடம் [Mid-Atlandic Tectonic Plate Ridge] குறுக்கே வெட்டிச் செல்லும் ஐஸ்லாந்து தீவின் அருகில் உள்ள சூர்ட்ஸி [Surtsey, Iceland] என்னும் தீவு 1963 நவம்பர் 14 இல் வட அட்லாண்டிக் கடலில் திடாரென எழுந்த எரிமலையால் புதிதாகத் தோன்றியது!
தென்துருவத்தில் இருக்கும் அண்டார்க்டிகாவில் முதலில் 1967 ஆண்டிலும், அடுத்து 1969 ஆண்டிலும் நெடுத்தொடர் மலைகளின் [Transantarctic Mountains] பனிபாறைகளில் டைனோசார்ஸ் காலத்திய நிலத்துறை விலங்குகளின் பூர்வப்படிவத் துணுக்குகளைக் [Fossil Fragments of Land Creatures] கண்டுபிடித்து, அமெரிக்க தேசீய விஞ்ஞான அறக்கூடம் [National Science Foundation] உளவு செய்தது. அந்த மாதிரிகளில் ஒன்று செம்மறி ஆடு போல் ஊர்ந்திடும் விலங்கான லிஸ்டிரோசாரஸ் [Lystrosaurus]. அண்டார்க்டிகாவில் முதன்முதல் கண்டுபிடிக்கப் பட்ட முதுகெலும்புள்ள பூர்வ மூலப்படிவம் [Index Fossil] அந்த விலங்கு. அந்த விலங்குகள் ஆஃபிரிக்கா, இந்தியா, சைனா ஆகிய நாடுகளில் 180-225 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக அறியப்படுகின்றன.
குலோமர் சாலஞ்சர் கப்பலின் கடற்தள உளவுப் பயணம்:
1968 ஆம் ஆண்டில் 'ஆழக்கடல் துளை தோண்டுத் திட்டம் ' [Deep Sea Drilling Project] என்று பெயர் பெற்ற மாபெரும் கடற்தட்டு உளவுப்பணி ஆரம்பிக்கப் பட்டது. குலோமர் சாலஞ்சர் கப்பல் காலிஃபோர்னியா கடற்தள ஆயில் துளைக் கம்பெனி [California Offshore Oil Drilling Co. Global Marine Inc] தயாரித்தது. கடற்தளப் பாறைகளில் 20,000 அடி ஆழத்தில் துளையிட்டு மாதிரிகளைக் கொண்டுவந்து சோதிப்பதே அதன் முக்கியப் பணி. தேசீய விஞ்ஞான அறக் கட்டளை [National Science Foundation] வழியாக அமெரிக்க மைய அரசு உளவுக்கு நிதிக்கொடை அளித்தது. அப்பணிகளைச் செய்தவை அமெரிக்காவின் பூதள ஆய்வுக் கூட்டு நிறுவகங்கள் [JOIDES Gruop (Joint Oceanographic Institutions for Deep Earth Sampling)].
குலோமர் சாலஞ்சர் கடற்துளைக் கருவி 1968 ஆம் ஆண்டு போட்ட முதல் துளையில் மெக்ஸிகோ வளைகுடாவில் 12,000 அடி ஆழத்தில் நுழைந்து பெட்ரோலியம் கச்சா ஆயில் இருப்பதைக் கண்டுபிடித்தது! இதுவரைக் கடலில் இத்தனை ஆழத்தில் ஆயில் ஒளிந்துள்ள தென்று யாரும் ஊகித்தது கூட இல்லை! மூன்றாவது துளையை அட்லாண்டிக் கடற்தளத்தில் தோண்டி, அட்லாண்டிக் கடல் மெய்யாக அகன்று வருகிறது என்று கண்டு பிடித்தது. 1968 ஆண்டு இறுதியில் ஆஃபிரிக்காவின் மேற்திசையில் சென்று, மைய அட்லாண்டிக் கடற்தட்டுப் பீடத்தின் தென்புற மிருந்து துவங்கி இருபுறமும் தொடர்ந்து துளைக்கு மேல் துளையிட்டு மாதிரிகளைச் சோதித்து மகத்தான கடற்தட்டு மெய்ப்பாடுகளைக் கண்டு பிடித்தது.
குலோமர் கப்பல் நான்கு வருடங்களாகப் பணி செய்து சுமார் 400 துளைகளைக் கடற் பாறைகளில் தோண்டி பல அரிய புதிய பூகோளச் செய்திகளைக் கூறி யிருக்கிறது. உலகக் கண்டங்களை விட, கடற்தளங்கள் இளைய காலத்தவை என்று கண்டுபிடித்துள்ளது. பூர்வ வடிகால் புழுதிகள் [Oldest Sediments] 160 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் உண்டாகி யிருக்கின்றன என்று கண்டுள்ளது.
அதற்கு முரணாகச் சமீபத்தில் உளவிய கிரீன்லாந்தின் பாறைகள் சுமார் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று காட்டி யுள்ளது. பூகோள விஞ்ஞானிகள் தற்போது பூமியின் முழு வயதை 4.5 பில்லியன் ஆண்டாகக் கணிக்கிறார்கள். ஆனால் பூகோளக் கடற்தளத்தின் வயதை சுமார் 180 மில்லியன் ஆண்டாகத்தான் மதிப்பிடுகிறார்கள்.
1970 இல் குலோமர் கப்பல் ஆய்வாளர்கள் ஆஃபிரிக்கா கண்டம் வடதிசை நோக்கி மெதுவாக நகர்ந்து, மத்தியதரைக் கடல் அகலத்தைக் குறுக்கி வருகிறது என்று நிரூபித்திருக்கிறார்கள். அந்த நகர்ச்சியால் கடற்தட்டுகள் பிறழ்ந்து, எப்போதாவது ஸிசிலியில் உள்ள எட்னா சிகரத்தில் [Mount Edna, Sicily] எரிமலைக் குமுறலையும், கிரீஸ், துருக்கி ஆகிய நாடுகளில் நிலநடுக்கத்தையும் உண்டாக்குகின்றன! படிப்படியாக அழுத்தி மத்தியதரைக் கடற்தட்டு மடங்கி ஆல்ஃப்ஸ் மலைத் தொடரை உயர்த்திக் கொண்டே போகிறது என்றும் கூறி யிருக்கிறார்கள்!
சுனாமி உண்டாக்கிய சுமாத்திரா கடற்தட்டுப் பிறழ்ச்சி:
இந்தோனேசியாவுக்கு மேற்கே சுமாத்திரா தீவுக்கு அருகே கடற்தளத்தில் அதே கோணத்தில் சாய்திருக்கும் சுமாத்திர நிலநடுக்கப் பழுது [Sumatran Fault] சுமார் 1100 மைல் நீளத்தில் இருப்பதாக அறியப்படுகிறது. 2004 ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி வெடித்த கடற்தள பூகம்பத்தில் பூதவடிவில் எழுந்த சுனாமி கால் மில்லியன் நபர்களைக் கொன்றதோடு, பனிரெண்டு நாட்டுக்குக் கடற்கரை நகரங்களைத் தகர்த்து விட்டது. நிலநடுக்கத்தின் போது மாபெரும் ஆற்றல் மிக்க அசுர சுனாமியை எழச்செய்த கடற்தள முறிவின் நீளம்: சுமார் 700-800 மைல், அகலம்: 60 மைல்! அதாவது 48,000 சதுர மைல் [800x60] பரப்பும், பல ஆயிரம் அடி ஆழமுள்ள கடல் வெள்ளத்தை செங்குத்தாகத் தூக்கிப் பல முறைக் குலுக்கிப் போட்டுச் சுனாமிப் பேரலைகள் கரைநோக்கி அடுத்தடுத்துப் படையெடுத்துள்ளன! அபார ஆற்றல் கொண்ட அந்த அசுர நிலநடுக்கத்தைத் தூண்டிய கடற்தட்டுப் பிறழ்ச்சிப் பழுது [Plate Tectonic Fault] சுமாத்திரா பழுது! பல்லாண்டுகளாக இக்கடற்தட்டுப் பழுது எண்ணற்ற நிலநடுக்கங் களை உண்டாக்கியுள்ள பூகம்பத் திடலாக இருந்து வருகிறது. 1833 ஆம் ஆண்டில் அதே பழுதுத் தொடரில் மிகப்பெரும் பூகம்பம், Mw:9 [Mercalli Scale] அளவு நிர்ணயத்தில் எழுந்து பேரழிவு செய்துள்ளது.
சுமாத்திரா தீவு 1100 மைல் நீளமும், 250 மைல் அகலமும் கொண்டது. தீவுக்கு மேற்கே 180 மைல் தூரத்தில் அதன் முழு நீளத்திற்கும் இணையாக, ஒரு பயங்கர நில அதிர்வுப் படுகுழி காணப் படுகிறது. சுமாத்திரா பூகம்ப பழுதுக்குழி [Sumatran Fault Trench] குமுறிக் கொண்டிருக்கும் உலகக் கடற்தளப் பிறழ்ச்சிக் குழிகளிலே மிகப் பெரியது. அன்னத்தின் கழுத்துபோல் வளைந்த அந்தப் பூகம்ப பழுது 1100 மைல் நீண்டதாக தீவுக்கு இணையாகக் கடற்தளத்தில் தோன்றி யிருக்கிறது. கடற்தட்டுத் திணிப்பால் [Ocean Plate Subduction Process] வளர்ந்திருக்கும் சுமாத்திராவின் மலைத்தொடரும், பழுதுக் குழிக்கு இணையாக மலைப் பாம்புபோல் படுத்துக் கிடக்கிறது!
மெஸோசாயிக் யுகத்தின் [Mesozoic Era] ஆரம்ப காலத்தில், அதாவது 240 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு குமுறிக் கொண்டிருந்த கடற்தட்டுத் திணிப்பு அரங்கத்தில் [Subduction Zone], சுமாத்திரா தீவு அமைந்துள்ளது. அந்த நாட்டிய அரங்கம் சுமாத்திரா தீவு போல் இணை யாகச் சாய்ந்த கோணத்தில் நீண்டு வளைந்துள்ளது. பல மில்லியன் ஆண்டுகளாக படிப்படியாகக் கடற்தட்டுத் திணிப்பால் உண்டான கருங்கல் குன்றுகளில் மாதிரிகளை எடுத்து ஆராய்ந்ததில் கீழிருக்கும் கடற்தட்டின் உயர அளவுகளையும், பண்புகளையும் கண்டிருக் கிறார்கள்.
அவை யாவும் திணிப்பைச் சார்ந்த கருங்கல் வகையான, நிலநடுக்கத் தன்மை கொண்ட கால்க்-ஆல்கலைன் ரகத்தைச் [Subduction Related I-type, Volcanic Arc, Calc-Alkaline type] சேர்ந்தவை. கருங்கல் மாதிரியில் உள்ள ஸ்டிராஞ்சியம் ஏகமூலத்தின் ஆதி விகிதத்தை [Strontium Isotope Initial Ratio] உளவு செய்தால், திணிப்புத் திடல் கலந்துள்ள பூதளக் குழம்பின் மேற்தட்டு பகுதியைச் [Magmas from Upper Mantle with Subduction Contamination] சேர்ந்ததாக அறியப் படுகிறது.
ஆர்கான் ஏகமூலங்கள் [Ar40-Ar39 Dating], ருபீடியம், ஸ்டிராஞ்சியம் கதிரியக்கத் தேய்வு காலத்தை [Rubidium-Strontium (Rb-Sr) Dating] ஆராய்ந்து, சுமாத்திரா குன்றுகளின் கருங்கல் மாதிரிகளின் வயதைக் காண முடிந்தது. கருங்கற்கள் 5.5 முதல் 192 மில்லியன் ஆண்டு வயதுகளைக் கொண்டிருந்தன. [Sulit Granite: 192 Ma], [Lassi Pluton: 52 Ma], [Lolo Pluton: 12 Ma], [Sungaipenuh Granite: 5.5 Ma] [Ma (Million Years Ago)]. சுமாத்திரா பாறைகளில் காந்தசக்தி ஜுராஸிக் யுகத்தின் [Jurassic Era] ஆரம்பத்தில் சுமார் [193-15 Ma] மில்லியன் ஆண்டுகளுக்கு இடையிடையே ஏற்பட்டுள்ளது என்பதும் அறியப்பட்டது.
கண்டத் தீவுகளுக்கும் கடற் தீவுகளுக்கும் உள்ள வேறுபாடுகள்:
உலகிலே உண்டாகி யிருக்கும் தீவுகளை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். 1. கண்டத் தீவுகள். 2. கடற் தீவுகள். கண்டத் தீவுகள் [Continental Islands] என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போம். பெருங் கண்டத்துடன் அதன் அருகே தணிந்த கடல் ஆழத்தில் தளப்பரப்பால் இணைக்கப்பட்ட தீவே, கண்டத் தீவு என்று அழைக்கப்படுகிறது. இலங்கைத் தீவு உப கண்ட மான இந்தியாவின் கண்டத் தீவு என்று சொல்லலாம். கடந்த 20,000 ஆண்டுகளில் பெருங் கண்டத்துடன் பிணைந்து கொண்ட தீவுகளே அப்பெயரைப் பெறுகின்றன. கண்டத் தீவுகளில் உள்ள சில செடி கொடிகள், உயிர் ஜந்துகள் [Fauna & Flora, Species] பெருங் கண்டத்தில் உள்ளவை போல் இருக்கின்றன. குறிப்பிட்ட இடத்தில் பிறந்து விருத்தியாகும் ஜந்துகள் [Endemic Species] அங்கு இருப்பது அபூர்வந்தான்.
கடற் தீவுகள் [Ocean Islands] என்றால் என்ன ? பூமியின் உட்கருவிலிருந்து கடற்தளத்தில் துளையிட்டு எரிமலைகள் சீறி எழுந்து, கடல் ஆழத்தில் உண்டாக்கப்பட்ட தீவுகள் இப்பெயரால் அழைக்கப்படுகின்றன. ஹவாயி தீவுகள், ஐஸ்லாந்து தீவுகள் ஆகிய வற்றை இவற்றுக்கு உதாரணமாகக் கூறலாம். கண்டங்களை ஒட்டாமல், கண்டங்களுக்கு அப்பால் உண்டானவை இத்தீவுகள். மைய அட்லாண்டிக் பிறழ்ச்சித் தட்டுக் கடற்பீடம் குறுக்கே செல்லும் ஐஸ்லாந்தில் உள்ள சூர்ட்ஸி [Surtsey, Iceland] என்னும் தீவு 1963 நவம்பர் 14 இல் வட அட்லாண்டிக் கடலில் எழுந்த எரிமலையால் புதிதாகத் தோன்றியது! அத்தீவுகள் எப்போதும் ஒரு பெருங் கண்டத்துடன் பிணைக்கப் படுவதில்லை. செடி, கொடிகள், விலங்கினங்கள் கடல் வழியாகக் கொண்டு செல்லப்பட வேண்டும். கடல்மீது வந்த தாவர இனங்கள், விலங்கினங்கள் மட்டுமே அத்தீவுகளில் பிழைத்திருக்க முடியும். நிலப் புதுநீரில் வளரும் மீனினம் போன்ற பலதரப்பட்ட உயிர் ஜந்துகள் அந்த தீவுகளில் கிடையா. கண்டத்திற்கு அப்பாலிருக்கும் கடற்தீவுகளில் புத்தின ஜந்துகள் வளர்ச்சிக்கு மையமாக [Centres of Speciation]
இருக்கின்றன. குறிப்பிட்ட இடவிருத்தி ஜந்துகள் [Endemic Species] வளர இத்தீவுப் பகுதிகளின் சூழ்நிலைகள் உதவுகின்றன.
கடலில் மூழ்கிய தமிழகத்தின் தென்திசைக் குமரிக் கண்டம்
1960 ஆம் ஆண்டில் அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிதிக்கொடை அளித்து, இந்து மாக்கடலில் கடற்தள ஆராய்ச்சியாளர் செய்த உளவில், தமிழகத்தின் கன்னியா குமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதைக் கண்டுபிடித்திருக் கிறார்கள். முதலாக கப்பலில் சென்று ஒலிச் சமிக்கை அனுப்பி உளவு செய்ததில் [Ultra-Sonic Probing] தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத் தொடர் ஒன்று இருப்பதைக் கண்டார்கள். அத்திட்டம் ஏனோ 1960 ஆண்டுக்குப் பிறகு தொடரப்பட வில்லை! 1960-1970 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இந்து மாக்கடல் கடற்தள வரை படங்களில், குமரிக் கண்டத்தின் பூர்வீக அமைப்பு நிலை காணப்படுகிறது. அரபிக் கடலுக்குத் தெற்கில், லட்சத் தீவுகள் நீட்சியில் மால்டிவ் தீவின் வடக்குப் பகுதியுடன் பிணைந்து, தெற்கில் சாகோஸ் ஆர்கிபிலாகோ [Chagos, Archipelago] வரை சுமார் 2000 மைல் தூரம் வரைக் குமரிக் கண்டம் இருந்திருப்பதாகத் தெரிகிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த [கி.மு.8000] பனி யுகத்தின் போது [During the Ice Age] இந்து மாக்கடலில் கடல்நீர் மட்டம் குன்றிக் குமரிக் கண்டம் முழுவதும் புறத்தே தெரியும்படி மேலாக உயர்ந்திருந்தது.
பனி யுகத்தில் எங்கோ பனி திரண்டு நீர் சுண்டிப்போய் உலகெங்கும் கடல் மட்டநீர் தணிவாக இருந்தது. அப்போது உலகத்தில் கண்டங்கள், தீவுகள் பல பகுதிகளில் பிணைந்திருந்தன! ஐரோப்பாவுடன் இங்கிலாந்து, பிளாரிடாவுடன் கியூபா தீவு, ஆஸ்திரேலியாவுடன் பப்பா நியூகினி தீவு, தமிழகத்துடன் இலங்கைத் தீவு, சுமாத்திரா ஜாவா போர்னியோ தீவுகள் தென் கிழக்காசியாவின் பெருந்தளத்துடன் இணைந் திருந்தன என்று கருதப்படுகிறது! இலங்கை தமிழகத்துடன் இணைந்திருந் ததற்கு, இப்போதும் தெரியும் தணிவாக உள்ள கடல்மட்ட நீர் நிலையே சான்றாக இருக்கிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்து வால்மீகி முனிவர் எழுதிய இராம கதையில், அனுமார் படையினர் பாறாங் கற்களைக் கொண்டு வந்து, ஈழத்தின் தணிந்த கடற்தள மீது கற்பாலம் கட்டிக் கடந்திருப்பது அறியப்படுகிறது. பனியுகம் மாறி வெப்பம் மிகையான காலத்தில் பனிப் பாறைகள் உருகி கடல் மட்டம் மெதுவாக படிப்படியாக உயர்ந்து குமரிக் கண்டம் மூழ்கிப் போயிருக்கலாம் என்று உறுதியாக நம்ப இடமிருக்கிறது. அதன் விளைவில் குமரிக் கண்டம் சிதறி ஆஃபிரிக்கா முதல், ஆஸ்திரேலியா வரை உள்ள மடகாஸ்கர், லட்சத் தீவுகள், அந்தமான் தீவுகள், இந்தோனியாவின் தீவுகள் போன்றவை பிரிவு பட்டன என்று ஒரு சாரார் குறிப்பிட்டுள்ளார்கள்.
'லெமூரியா கண்டம் ' [Lemuria Continent] இந்து மாக்கடல் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்று முதலில் கூறியவர் 19 ஆம் நூற்றாண்டு பூதளவாதி பிலிப் ஸ்கிலேட்டர் [Geologist, Philip Sclater]. விக்டோரியன் டார்வின் நியதியைப் பின்பற்றுவோர் மடகாஸ்கர் தீவில் மட்டும் தனித்து வாழும் லெமூர் குரங்குகளை [Lemurs] எடுத்துக் காட்டி யிருக்கிறார்கள். அவற்றின் பூர்வப்படிவப் பிரதிகள் [Fossils of Lemurs] ஆஃபிரிக்காவிலும், தென் கிழக்காசியாவிலும் தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஜெர்மன் டார்வின்வாதியான ஏர்னெஸ்ட் ஹேக்கல் [Ernst Haeckel] ஆதி லெமூரியாவின் உயிர் மூலவிகள் [Genes] யாவும் இந்து மாக்கடலில் மூழ்கி மடிந்ததால் காணாமல் போயின என்று கூறியதை எடுத்துக் கொண்டு பிலிப் ஸ்கிலேட்டர் லெமூரியா கண்டம் (குமரிக் கண்டம்) ஒன்று ஆங்கே இருந்திருக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்.
From: http://www.sepiamutiny.com/sepia/archives/004456.html
R. Mathivanan, then Chief Editor of the Tamil Etymological Dictionary Project of the Government of Tamilnadu, in 1991 … [produced] the following timeline …:
ca. 200,000 to 50,000 BC: evolution of “the Tamilian or Homo Dravida”,
ca. 200,000 to 100,000 BC: beginnings of the Tamil language
50,000 BC: Kumari Kandam civilisation
20,000 BC: A lost Tamil culture of the Easter Island which had an advanced civilisation
16,000 BC: Lemuria submerged
6087 BC: Second Tamil Sangam established by a Pandya king
3031 BC: A Chera prince in his wanderings in the Solomon Island saw wild sugarcane and started cultivation in Tamilnadu.
1780 BC: The Third Tamil Sangam established by a Pandya king
7th century BC: Tolkappiyam (the earliest extant Tamil grammar)… [Link]
+++++++++++++++++++++++++++++++
(தொடரும்)
தகவல்
1. The Continental Mosaic -Reader 's Digest Atlas of the World [1987]
2. Hutchinson Encyclopedia of the Earth By Peter Smith [1985]
3. Earth 's Restless Crust -ABC 's of Nature, Reader 's Digest [1984]
4. The Long Journey of Continents By: Ronald Schiller -The Marvels & Mysteries of The World Around US, Reader 's Digest Publication [1972]
5. Continental Drift & Plate Tectonics [www.zephryus.co.uk/geography/home.html] (Mar 20, 2003)
6. Pangaea, Gondwana, Laurasia, Plate Tectonics, Alfred Wegener From: Wikipedia Encyclopedia
7. Theory of Continental Drift By: Jim Cornish, Newfoundland, Canada (Sep 2001)
8. Continental Frift, Geology & Oceanography. [Several Internet Articles]
9. Everyday Geography By: Kevin McKinney (1993)
10 Eduard Suess, Austrian Scientist From: Wikipedia Encyclopedia
11 Our Changing Earth By: Tusco Wilson Ph.D. Frontiers of Science, National Geographic Society [1982]
12 This Changing Earth By: Samuel Matthews, National Geographic Society [Jan 1973]
13 Our Restless Planet Earth Rick Gore By: National Geographic Society [Aug 1985]
14 Fossils, Annals of Life Written in Rocks By: David Jeffery, National Geographic Society [Aug 1985]
15 The Earth 's Fractured Surface By: National Geographic Society [1995]
16 Physical Earth By: National Geographic Society [1998]
17 The Shaping of a Continent, North America 's Active West [1995]
18 National Geographic Picture Atlas of our World [1990]
19 Differences Between Continental & Oceanic Islands [www.abdn.ac.uk/zoohons/lecture1]
20 The Evolution of the Sumatran Earthquake Fault System, Indonesia, Andy McCarthy. Ph.D. [July 9, 2002]
21 Isotopic Dating of Sumatran Fault System By: Imtihanah & MPhil
22 The Sumatran Fault System By Professor Kerry Sieh & Danny Natawidjaja [Nov 1999]
23 Kumari Kandam & Lemuria [http://en.wikipedia.org/wiki/Lemuria_(continent)
24 Kumari Kandam By: Chitta Ranjan Myilvaganan, Sydney, Australia. [Jan 30, 2005]
25. http://www.sepiamutiny.com/sepia/archives/004456.html (May 22, 2007)
26. http://www.crystallotus.com/Lemuria/04.htm
27. http://en.wikipedia.org/wiki/Lemuria_(continent) [July 3, 2011]
28. http://en.wikipedia.org/wiki/Kumari_Kandam [July 7, 2011]
****
jaya...@tnt21.com [S. Jayabarathan (July 15, 2011) [R-1]
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
லெமூரியா- குமரிக்கண்டம்- கோண்ட்வானா
--‘பிலிப் ஸ்க்லேட்டர்’ எனும் உயிரியலாளர், இப்பெரும் நிலப் பரப்பிற்கு “லெமூரியா” என்று பெயர் வைத்தார்.
அன்பர்கள் லோகநாதன்,ஜெயபரதன் ஆகியோருக்கு நன்றி...
லெமூரியா- குமரிக்கண்டம்- கோண்ட்வானா ( பாகம்-2)
ஆக , லெமூரியா என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் நிலவிய கருத்துக்களின் அடிப்படையில் எழுந்த ஒரு புவி உயிரியல் கோட்பாடு என்பது தெளிவு. ‘அல்ல,அல்ல, லெமூரியா என்பது ஓர் தமிழ்ச்சொல்லே’- என வாதிடுவோரும் உளர். மதிவாணன் எனும் ஓர் அன்பர் எழுதிய சிறு நூல் ஒன்றில் , அந்த அன்பர் கூறுவதாவது.
“ குமரிக் கண்டம் முழுதும் மூலிகைகள் நிறைந்திருந்தன- எல்லாம் இலைகள் –இலை மூலிகைகள், மூலிகை என்பது மூலிரை என்று மருவும்- இலைமூலிகை என்பது, இலைமூலிரை என மாறும் – இலைமூலிரை என்பது மருவி இலெமூரிய என்றாகும், ஆதலின் குமரிக்கண்டம்தன் லெமூரியா “
சரி, இப்போதைக்கு லேமூரியாவை விட்டு விட்டு குமரிக் கண்டம் பக்கம் வருவோம். குமரிக் கண்ட கோட்பாட்டிற்கு வித்திட்டவர்கள், இடைக்கால உரையாசி ரியர்கள் – இளம்பூரனர், அடியார்க்கு நல்லார் ( காலம்-பன்னிரெண்டாம் நூற்றாண்டு ?), போன்றோர் எனத் தெரிகிறது. காரணம், சங்க இலக்கியங்கள் , பதினெண் கீழ் கணக்கு நூல்கள், இரட்டைக் காப்பியங்கள் , பக்தி இலக்கியங்கள் இவை எதிலும் குமரிக் கண்டம் எனும் சொல் காணக் கிடைக்கவில்லை. (இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறேன்). சிலம்பில் , புகார் காண்டம் வேனிற் காதையில், “ நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ் வரம்பறுத்த தண் புனல் நாடு “ என்று தமிழ்நாடு பற்றிய நேரான தெளிவான கருத்தது காணப்படுகிறது. தொடியோள் என்றால் குமரி- பௌவம் என்றால் கடல் என்று நேரடியாகப் பொருள் கொள்ளாமல் “ தொடியோள் நதியும் என்னாது, பௌவம் என்றது என்னையெனின் – பஹுறுளி ஆற்றிற்கும் குமரி என்னும் ஆற்றிற்கும் இடையே நாற்பத்தியொன்பது நாடுகளும் கடல் கொண்டு ஒழிந்ததால் குமரியாகிய பௌவம் என்றார்” என்று அடியார்க்கு நல்லார் விரித்து எழுதியுள்ளார். அடியார்க்கு நல்லார் பன்னிரெண்டாம் நூற்றாண்டை சேர்ந்தவர்- அரும்பத உரை ஆசிரியரின் உரையைத் தழுவி சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர் என்று கருதப் படுகிறது.
“அடியார்க்கு நல்லாரின் உரை கடுகளவும் கட்டுச்செய்தியாய் இருக்கமுடியாது” என முழங்கும் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் “ இன்றைய குமரி முனைக்குத் தெற்கே ஈராயிரம் மைல் நீள நிலப்பரப்பு இருந்தது—அதன் தேன் கோடியில் பஹ்ருளி ஆறும், வடகோடியில் குமரி ஆறும் பாய்ந்தோடின-குமரிக் கண்டத் தென்கோடியில் பனிமலைத் தொடர் போலும் பன் மலையடுக்கத்து குமரித் தொடர் இருந்தது—இந்தக் குமரிக் கண்டத்தில்தான் தமிழ் தோன்ற்யது-தமிழன் தோன்றினான்” என உறுதியாக நம்புகிறார். “முதல் கடல் கோளில் குமரிமலையும் பஹ்ருளியாறும் அதன் கரையில் கட்டப்பட்ட (தென்) மதுரை உட்பட்ட பாண்டி நாட்டின் தென்பெரும்பகுதி மூழ்கியது. இரண்டாம் கடல் கோளில் பாண்டியர்களின் இரண்டாம் தலைநகராகிய , வடபுலத்தில் நெய்தல் நிலத்தில் அமைந்த கதவம் (அல்லது கபாடம் அல்லது புதவம் அல்லது அலைவாய் ) அழிந்தது. மூன்றாம் கடல் கோளில் குமரியாற்றை கடல் கொண்டது. நான்காம் கடல் கோள் மணிமேகலை காலத்தில் கவேரிபூம்பட்டினத்தைக் கொண்டது.” என பாவாணர் அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறார்.
கடைச் சங்க காலத்திற்கு முன் இரு மிகப் பெரும் கடல் கோள்கள் நிகழ்ந்திருப்பின் , அவை பற்றிய செய்திகள் , குறிப்புகள் எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டில் பரவா லாகப் பேசப்பட்டிருக்கும். ஆனால் இல்லை- நாற்பத்தியொன்பது நாடுகள் பற்றிய செய்திகளோ , குமரி மலை –குமரி ஆறு- குமரிக் கண்டம் போன்ற சொற்களோ,தொடர்களோ எங்கும் காணப் படவில்லை.

(இலக்கியங்களில் உள்ள குமரிக்கோடு மற்றும் கடல்கோள் பற்றிய குறிப்புகள் --நாளை )

“அடியார்க்கு நல்லாரின் உரை கடுகளவும் கட்டுச்செய்தியாய் இருக்கமுடியாது” என முழங்கும் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் “ இன்றைய குமரி முனைக்குத் தெற்கே ஈராயிரம் மைல் நீள நிலப்பரப்பு இருந்தது—அதன் தென் கோடியில் பஃறுளி ஆறும், வடகோடியில் குமரி ஆறும் பாய்ந்தோடின-குமரிக் கண்டத் தென்கோடியில் பனிமலைத் தொடர் போலும் பன் மலையடுக்கத்து குமரித் தொடர் இருந்தது—இந்தக் குமரிக் கண்டத்தில்தான் தமிழ் தோன்ற்யது-தமிழன் தோன்றினான்” என உறுதியாக நம்புகிறார். “முதல் கடல் கோளில் குமரிமலையும் பஃறுளியாறும் அதன் கரையில் கட்டப்பட்ட (தென்) மதுரை உட்பட்ட பாண்டி நாட்டின் தென்பெரும்பகுதி மூழ்கியது. இரண்டாம் கடல் கோளில் பாண்டியர்களின் இரண்டாம் தலைநகராகிய , வடபுலத்தில் நெய்தல் நிலத்தில் அமைந்த கதவம் (அல்லது கபாடம் அல்லது புதவம் அல்லது அலைவாய் ) அழிந்தது. மூன்றாம் கடல் கோளில் குமரியாற்றை கடல் கொண்டது. நான்காம் கடல் கோள் மணிமேகலை காலத்தில் கவேரிபூம்பட்டினத்தைக் கொண்டது.” என பாவாணர் அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறார்.
இது இங்கே பயன்படும் என்று நினைக்கிறேன் --
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ மிகவும் பொருத்தமான அசைப்படம் இது நண்பர் துரை அவர்களே. இந்த அசைப்பட இணைப்பை இடுங்கள். என் கட்டுரையில் அதைச் சேர்த்து விடுகிறேன்.பல மில்லியன் ஆண்டுகள் நிகழ்ந்த பூதள இடப்பெயர்ச்சி இயக்கத்தைச் சில வினாடிகளில் தந்து விட்டீர்கள்.பாராட்டுகள்,ஜெயபாரதன்
அன்பர் துரை அவர்களுக்கு , மிக நன்றி, இன்னும் ஓரிரு நாட்களில் continental drift, ocean floor spreading, plate tectonics இவை பற்றியெல்லாம் கோண்ட்வானா தலிப்பின் கீழ் எழத எண்ணம்-தங்களின் அசைபடம் நிச்சயம் உதவும்....

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
---இனியொரு விதி செய்வோம்
”இனியாவது செய்வோம்” -துரை.ந.உ
வெண்பா : ‘மரபுக் கனவுகள்’ : http://marabukkanavukal.blogspot.in/குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/காட்சி:மூன்றாம் உலகம் :http://duraigif.blogspot.in/படம் : அட........! :ttp://duraipics.blogspot.in/கவிதை : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/ஹைக்கூ :வானம் வசப்படும் :http://duraihaikoo.blogspot.in/புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
லெமூரியா- குமரிக்கண்டம்- கோண்ட்வானா (பாகம்-3)
இலக்கியங்களில் சுனாமி-குமரி பற்றிய குறிப்புகள்....
புறநானூறு..122 ஆவது பாடல் மலையமான் திருமுடிக்காரியை கபிலர் பாடியது --தமிழ் இலக்கியத்தில் கடல்கோள் பற்றிய முதல் குறிப்பு இப்பாடலில் உள்ளதாக அறிகிறேன்
.."கடல்கொளப் படா அது .............காரி நின் நாடே" திருக்கோயிலூரை ஆண்டமன்னன் காரி...இவ்வூர் கடற்கரையிலிருந்து வெகு தூரம்-ஆதலின் 'கடல்கொளப் படா அது'-அப்படியென்றால் கடற்கரையிலிருந்த ஊர்கள் கடல்கோள் வயப்பட்டன....என கொள்ளலாம்.
இனி 'கலித்தொகை' காண்போம்...
.“மலிதிரை ஊர்ந்து தன் மண் கடல் வவ்வலின்
மெலிவு இன்றி மேல் சென்று மேவார் நாடு இடம்பட
புலியோடு வில் நீக்கி புகழ் பொறித்த கிளர் கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர் தென்னவன்“ (முல்லைக்கலி 104 ஆம் பாடல்)
எ - து : தன் நாட்டைக் கடலினுடைய மிக்க திரையேறிக் கைக்கொண்டு விடுகையினாலே தனக்கு நாடு இடமுண்டாம்படியாக மனத்தின் இளைப் பின்றாய்ப் பகைவரைத் தன் வலியினாலே தாழ்க்கவேண்டி அவர்மேலே சென்று அவருடைய புலிப்பொறியையும் விற்பொறியையும் அவர் நாட்டி னின்றும் போக்கி விளங்குகின்ற கயலை அவ்விடத்தே பொறித்த புகழையுடைய கெடாத தலைமையினையுடைய பாண்டியனுடைய பழைய புகழை நிலைபெ.றுத்தின
பாண்டியன் , தன நாட்டை கடல் அலைகள் ஊர்ந்து வந்து (அய்யா...சொல்லாட்ச்சியை கவனியுங்கள்)கவர்ந்து(வவ்வலின் ) கொண்டதால் மேற்கே சென்று சோழனையும் சேரனையும் வென்று மீன் கொடி நாட்டினான். உயிர்ச சேதம் பற்றி இங்கே ஒன்றும் சொல்லப்படவில்லை.(கிழக்குக் கடற் கரையோரம் பாண்டியன் ஆண்டிருக்கிறான்-அதனால்தான் மீன் கொடியானது போலும்).
ஆக, கபிலர்-காரி காலத்திலோ -கலித்தொகை காலத்திலோ -அல்லது அதற்கு முன்னரோ-தமிழக கடற்கரையின் சில பகுதிகள் கடலால் கொள்ளப்பட்டன என்பது தெளிவு.
ஆனால் அது சுனாமியா...?
நமக்குத் தெரிந்து 1964 ஆம் ஆண்டு தனுஷ்கோடியின் சில பகுதிகள் கடலுக்கு இரையாகின..
அது 'STORM SURGE'
.....சில ஆண்டுகளுக்கு ஒருமுறை கிழக்குக்கரையைத் தாக்கும் புயற் காற்றால் ஆந்திரம்-ஒரிசா -வங்கம் ஆகிய பகுதிகளும் பேரழிவை சந்திக்கின்றன. ஆனால் இவையெல்லாம் சுனாமியாலா- , அல்லவே.
சுனாமியின் போதும் சரி - STORM SURGE போதும் சரி , ருத்ரதாண்டவம் ஆடிடும் அலைகள் , ஆட்டம் முடிந்தபின் , பின்வாங்கி சென்றுவிடுகின்றன. இவைகளால் நிலம் இழக்கப்படுவது குறைவே.
இனி, LGM -என அழைக்கப்படும் "இறுதி இறுகுபனி காலம்" ( LAST GLACIAL MAXIMA-LGM) பற்றி நாம் அறிவோம்...
சுமார் 18000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒன்று.
அது சமயம் கடல் மட்டம் தற்போது உள்ளதைவிட 120 மீ குறைந்திருந்தது . இது உலகம் முழுவதும் நிகழ்ந்த நிகழ்வு
நம் மாமல்லபுரத்திற்கு கிழக்கேயும், காரைக்கால் பகுதிக்கு கிழக்கேயும் கடலில் 120 மீ ஆழத்தில் கிடைத்த பவளப்பாறைகளே இதற்க்கு சான்று.
அதாவது கடந்த 18000 ஆண்டுகளில் கடல் மட்டம் 120 மீ உயர்ந்துள்ளது-ஒரே சீராக அல்ல -சில ஏற்ற இறக்கங்களோடு.
சுமார் ஆறாயிரம் அல்லது எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடல்மட்டம் சுமார் ஆறு அல்லது எட்டு மீ உயர்ந்து வந்து ஒரு நிலையை அடைந்தது . அதன் பின் ஓரிரு மீ உயர்வதும் தாழ்வதுவுமாக நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இது தற்போது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள புவியியல் உண்மை.
இதன் பின்னணியில் நோக்கும் போது மலிதிரை ஊர்ந்து வந்து வவ்வியதின் பொருளை உணர முடிகிறது...
மணிமேகலையில் சுனாமி சிந்தனைகள
மணிமேகலைக் காப்பியத்தில் கடல்கோள் பற்றிய குறிப்புகள் பல்வேறு காதைகளில் பரவிக் கிடக்கின்றன.சாத்தனார் பல்வேறு பாத்திரங்கள் வழியாக காவேரிபூம்பட்டிணம் கடலால் அழிந்த செய்தியை நமக்கு தெரிவிக்கிறார்.
பூம்புகார் நகரின் கடற்கரையில் உப்பளத்தின் அருகே மணற்குன்று ஒன்றில் வருந்திக் கொண்டிருந்த மன்னன் கிள்ளிவளவனைப் பார்த்து, சாரணர் ஒருவர், “-----உன் மாநகர் கடல் வயிறு புகூஉம்” (24: 62-63) என்று எச்சரித்ததாக மணிமேகலையின் பாட்டி சித்திராபதி, இராசமாதேவியிடம் கூறுகிறார். இந்தக் குறிப்பு ‘ஆபுத்திரன் நாடு அடைந்த காதை’ யில் காணப்படுகிறது.
தொடந்து, மணிபல்லவத்தீவிற்கு ஆபுத்திரனோடு சென்ற மணிமேகலையிடம், அத்தீவிலிருந்த புத்த பீடிகையை காத்துவந்த தீவதிலகை, “பலர் தொழு பாத்திரம் கையில் ஏந்திய , மடவரல் நல்லாய்-நிந்தன் மாநகர் கடல் வயிறு புக்கது”(25: 174-176) என்றும், “வானவான் விழாக்கோள் மாநகர் ஒழிந்தது” (25:197) என்றும், “விரிதிரை வந்து வியன் நகர் விழுங்க, ஒருதனிப் போயினன் உலக மன்னவன்; அருந்தவன் தன்னுடன், ஆய் இழைத் தாயரும் வருந்தாது ஏகி , வஞ்சியுள் புக்கனர்”(25: 203-206)என்றும், கூறுகிறாள். இவை ‘ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை’ யில் வருகின்றன.
இதனை அடுத்து, வஞ்சி மாநகர் சென்று அங்கே தவ வாழ்க்கை மேற்கொண்டிருக்கும் தன் தாத்தா மாசாத்துவானை பார்க்கும் மணிமேகலை, “-------மாநகர் கடல் கொள, அறவண அடிகளும் தாயாரும் ஆங்கு விட்டு, இறவாது இப்பதி புகுந்தது கேட்டு -----“, தான் இங்கு வந்துள்ளதாகக் கூறுகிறாள்.(28:79-82).இதற்கு பதிலலிக்கும் மாசாத்துவான் “காவரிப்பூம்பட்டிணம் கடல் கொள்ளும்” (28: 135)என அறிந்தே தான் அங்கே செல்லாமல் வஞ்சியிலே தங்கிவிட்டதாக கூறுகிறார். இக்காட்சிகள் ‘கச்சி மாநகர் புக்க காதையில்’ காணக் கிடைக்கின்றன.
இதனை அடுத்து வரும் ‘தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை’யில், வஞ்சி நகர் வந்து தன்னை வணங்கிய மணிமேகலையிடம், அறவண
அடிகள் “-----நகர் கடல் கொள்ள , நின் தாயரும் யானும் –இப்பதி படர்ந்தனம்” என்று கூறுவதாக, சாத்தனார் சுட்டிக் காட்டுகிறார்.(29: 35-36)
இதுகாறும் எடுத்துக்காட்டிய மேற்கோள்களிலிருந்து, சீத்தலை சாத்தனார் வாழ்ந்த காலத்திலோ அல்லது அதற்கு சற்று முன்போ, கவேரிபூம்பட்டிணத்தை கடல் கொண்டது என்று எண்ண முடிகிறது.
“ஆங்குவிட்டு இறவாது இப்பதி புகுந்தது கேட்டு” எனும் தொடரின் மூலம் ‘கடல்கோளில் பலர் இறந்திருக்கலாம்’ என்றும் எண்ணத் தோன்றிகிறது.
சங்ககாலத்திலும், பின் வந்த இரட்டைக்காப்பியங்கள் காலத்திலும் சிறந்த துறைமுகநகரமாகவும், மிகச்சிறந்த வணிகப் பெருநகரமாகவும் விளங்கிய பூம்புகார் பற்றிய சிறப்பான செய்திகள் அதன்பின் தோன்றிய இலக்கியங்களில் அவ்வளவாக இல்லை. ஆதலின் கி.பி. ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டில் பூம்புகார் கடலால் கொளப்பட்டது என ஊகிக்க இடமுண்டு.
“விரிதிரை வந்து வியன் நகர் விழுங்கியது”----
-படிப்படியாக மில்லிமீட்டர் மில்லிமீட்டர் அளவில் உயரும் கடல்மட்டம் நிகழ்வு அல்ல இது.
நிலம் பிறழ்ந்து அதனால் ஏற்பட்ட கடல் கோளாகக் கருதவும் வாய்ப்பில்லை . அதற்கேற்ற தரவுகள் கிட்டவில்லை.
புயல்- சூறாவளி பற்றிய செய்தியும் இல்லை...
ஆகா, இது சுனாமியாக இருக்கக்கூடும்.
“இறவாது இப்பதி புகுந்தது கேட்டு”
உயிர் இழப்புகள் பல இருந்திருக்கலாம்.
சிலம்பில் குமரிக் கோடு
“அடியிற் றன்னளவு அரசர்க்கு உணர்த்தி, வடிவேல் எறிந்த வான்பகை பொறாது , பஹுருளியாருடன் பன்மலையடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள, வடதிசை கங்கையும் இமயமும் கொண்டு தென்திசை ஆண்ட தென்னவன் வாழி”(சிலம்பு-மதுரை-காடுகாண் )
சிலம்பில் இந்தப்பாடல் மட்டுமே கடல்கோள் பற்றி குறிப்பதாக உள்ளது, நான் அறிந்தவரை.
இந்தப் பாடலின் அடிப்படையில் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் தன் நூல்களில் குமரிக்கண்டம் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்.
அவர் சொன்னார் என்பதிற்காக அனைத்தையும் அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என எதிர்பார்ப்பது முறையன்று.
பாவாணர் உட்பட பல தமிழறிஞர்கள் ‘குமரிக்கோடு’-என்பதற்கு ‘இமயம் போன்று பெரிய மலை’ என பொருள் கொள்கிறார்கள்.
கோடு என்பதற்கு நீர்க்கரை என்றும் வளைவு என்றும் பொருள் உண்டு..
நீர்க்கரை என்று பொருள் உண்டு என அரும்பதவுரையாசிரியர் கூறுகிறார். அகர முதலியும் தெரிவிக்கிறது.
கோடியக்கரை = வளைந்த கரை
மந்தரை சூழ்ச்சி படலத்தில் கூனியை குறிப்படும் கம்பர் “உள்ளமும் கோடிய கொடியாள் “ என்கிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் நான் கேரளத்திலும் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஆய்வு செய்து கொண்டிருந்தேன். கொல்லங்கோடு, குறுந்தங்கோடு,இடைக்கோடு என பலப்பல கோடு என முடியும் ஊர்கள். .எல்லாம் நீர்க்கரைகளில் உள்ளன. மலை என்று ஒன்று எங்கும் இல்லை.
குமரி மலை – குமரிக் கண்டம் போன்ற சொற்கள் மேர்கணக்கிலோ-கீழ்க் கணக்கிலோ-காப்பியங்களிலோ- பக்தி இலக்கியங்களிலோ எங்கேணும் கண்டதுண்டா-இருப்பின் தெரிவியுங்கள். ஆதலின் குமரிக் கோடு என்பதற்கு வளைந்த குமரி கடற்கரை என்றே பொருள் என எண்ணத் தோன்றுகிறது.
இப்படிப் பொருள் கொண்டால் குமரி முனைக்குத் தெற்கே ஒரு அகண்டம் இருந்தது எனும் பேச்சே எழவில்லை.
இனி, பஹுருளியாறு ---இந்த ஒரு பாடலிலும் , புறநானூறில் ஒன்றிலும்
(“பஹுருளியாற்றின் மணலினும் பலவே”) தவிர வேறு எங்கேணும் இந்த ஆற்றைப் பார்த்ததுண்டா? இருந்தால் தெரிவியுங்கள்- ‘இலக்கியம் காலத்தை காட்டும் கண்ணாடி’ , காவேரி காப்பியங்களில் எங்கெல்லாம் பாய்கிறாள்.
பரளியாறு என்று ஒரு சிற்றாறு தென் பகுதியில் உண்டென அறிகிறேன்.
கொடுங்கடல்- என்பதற்கு கொடிய கடல் என்று பொருள் கொள்ள வேண்டுமா-
அல்லது வளைந்த கடல் என்று கொள்ளலாமா?
வளைந்த வாளை கொடுவாள் என்கிறோமே...
கொடுக்காய்ப் புளி , வளைந்த காய் அல்லவா....
(கொடு + கடல்= கொடுக்கடல் / கொடுங்கடல் ?.......)
இனி, இதுவரை கிடைத்துள்ள புவியியல் தரவுகளின் அடிப்படையில் பல நூறு அடிகள் உயரமுள்ள மலைத்தொடர் குமரி முனைக்குத் தெற்கே இருந்ததாகவோ பின்னர் அது கடலில் மூழ்கியதாகவோ நம்ப இயலவில்லை.
Journal of Bio-Geography (2000) 27, 1153-1167 இதழில் உள்ள கட்டுரையைப் பாருங்கள்.
கீழேயுள்ள கூகுள் பதிமத்தையும் கவனியுங்கள்.
குமரி முனை –மணப்பாடு-இடிந்தகரை-ராமேஸ்வரம் பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வுப் பணிகள் மூலம் சுமார் 3200 /4000 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதிகளில் கடல் மட்டம் சுமார் மூன்று மீ உயர்ந்திருக்கக்கூடும் எனத்தெரிகிறது(ஒரேயடியாக அல்ல –படிப்படியாக) . அப்போது கடல் நீர் பல சதுர கி.மீ நிலப் பரப்பில் விரிந்து பரவியிருக்கும்..நாகரீகம் தோன்றத் துவங்கிய காலத்தில் நிகழ்ந்த இந்நிகழ்வு செவி வழிச் செய்தியாக பல தலைமுறை கடந்து கலித்தொகையில் ‘ஊர்ந்து வவ்வல்’ என இடம் பெற்றிருக்கிறது. சிலம்பாசிரியர் அதை ‘ கொடுங்கடல் கொள்ள’
என சொல்லி விட்டார். உரையாசிரியர்கள் ஏழ்தெங்க நாடுகளை சேர்த்து விட்டார்கள்.பின் வந்தவர்கள் நம் காலத்தில் இமயமலை போன்ற பெரிய மலைகளையும், கங்கை போன்ற பெரிய ஆறுகளையும் காட்டிவிட்டார்கள்.
ஆக, குமரிக் கண்டம் –குமரியாறு- குமரிநாடு பற்றிய குறிப்புகள் ஏதும் பண்டைய இலக்கியங்களில் இல்லாத காரணத்தால், இவையாவும் இடைக்கால் உரையாசிரியர்களின் கற்பனையே என் எண்ணத் தோன்றுகிறது.”குமரிக் கண்டம்” எனும் பெயரில் சில தமிழ் ஆர்வலர்கள் வெளியிடும் படங்களும் (காண்க: ஜெயபாரதன் அவர்களின் இடுகைகள்) ஊகங்களின் அடிப்படையில் உருவானவையே.
லெமூரியா- குமரிக்கண்டம்- கோண்ட்வானா (பாகம்-4)
லெமூரியா மற்றும் குமரிக் கண்டம் பற்றி இதுவரை பார்த்தோம் ; இனி
கோண்ட்வானா:
கோண்ட்வானா எனும் சொல்லை அறிமுகம் செய்தவர், ஜியலாஜிக்கல் சர்வே ஆப் இந்தியாவைச் சேர்ந்த மெட்லிகாட் எனும் புவியியலாளர். 1860 களில் ஜார்கண்ட் மற்றும் தாமோதர் நதி பள்ளத்தாக்குகளில் உள்ள படிவப் பாறைகளில் நிலக்கரிப் படிவங்களை அவர் கண்டு பிடித்தார். அந்தப் பாறைகள் இருந்த வனப் பகுதிகளிலும் மலைப் பகுதிகளிலும் “கோண்ட்” இன பழங்குடியினர் வாழ்ந்து வந்தார்கள். அவர்களின் நினைவாக அந்த படிவப் பாறைகளுக்கு ‘கோண்ட்வானா பாறைகள்’ என பெயர் வைத்தார். அந்தப் பாறைகள் உருவான காலம் கோண்ட்வானா காலம் என அழைக்கப்பட்டது. தொடந்து பூமிப்பந்தின் தென் பாதியில் நடந்த புவியியல் ஆய்வுகளின் போது இந்த கோண்ட்வானா பாறைகள் தென்அமெரிக்கா,ஆப்ரிக்கா, ஆஸ்த்ரேலியா ஆகிய கண்டங்களிலும் பெருமளவில் உள்ளது கண்டு பிடிக்கப்பட்டது. (பின்னாளில் இக்கண்டங்களின் ஒருங்கிணைந்த பகுதிக்கு கோண்ட்வானா நிலம் என்ற பெயர் சூட்டப் பட்டது- இது பற்றி பிறகு பார்ப்போம்.)
இனி, கண்டங்கள் நிலைத்திருப்பவை-நகரும் தன்மை அற்றவை எனும் கருத்து புவியியலாளர்கள் மத்தியில் நிலவிவந்ததால் , 1850 களில் அரும்பிய லேமூரீயா கோட்பாடு கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக் காலம் புகழ் பெற்று விலகியது. 1910களில் பெர்லின் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வந்த ஆல்பிரட் வேக்னர் எனும் பருவநிலையியலாளர் (இவர் புவியியலாளர் அல்ல) , ஆப்ரிக்காவின் மேற்குக் கரையும் தென் அமெரிக்காவின் கிழக்குக் கரையும் அமைப்பில் ஒன்று போல் இருப்பது கண்டு வியந்தார். இதே போன்ற வியப்பு இதற்கு ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஒரு சிலருக்கு ஏற்பட்டது. ஆனால் “இது இப்படித்தான்” என்று அவர்கள் விட்டுவிட்டார்கள். ஆனால் ஆல்பிரட் வேக்னரால் அப்படி விட்டுவிட முடியவில்லை. “ஒருவேளை இந்த இரண்டு கண்டங்களும் முன்பு ஒன்றாக இணைந்து இருந்திருக்குமோ” எனும் எண்ணம் அவர் மனத்தில் உதித்தது. அந்த எண்ணங்களின் அடிப்படையில் “கண்டப் பெயர்ச்சி” (காண்டினெண்டல் டிரிப்ட்) கோட்பாட்டை 1913இல் வேக்னர் முன் வைத்தார். “இன்று பூமியில் உள்ள கண்டங்கள் முன்பு ஒன்றாக இணைந்திருந்தன-பின்னர் அவை பிரிந்து நகர்ந்து இன்றைய நிலையை அடைந்துள்ளன”-என்பதுதான் காண்டினெண்டல் டிரிப்ட் கோட்பாட்டின் சாரம். ஆனால் அன்றைய புவியியல் அறிஞர்கள் வேக்னேரின் கோட்பாட்டை எள்ளி நகையாடினர். “We need not learn Geology from a weather man” என நையாண்டி செய்தனர், ‘அடர்த்தி குறைவான நிலப்பரப்புப் பாறைகள் , அடர்த்தி அதிகமான கடல்பரப்புப் பாறைகளை எப்படிக் கிழித்துக் கொண்டு நகந்திருக்கும்’ என அவர்கள் வினா எழ்ப்பினர். ஆக, வேக்னேர் உயிரோடு இருந்த பொது அவரின் கோட்படுகள் ஏற்றுக் கொள்ளப் படவில்லை என்பது கசப்பான உண்மை.
( தொடரும்) pl. see videos and images in net in "continental drift"
கீதா அவர்களுக்கும் , காளை அய்யா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. சின்னப் பையனாய் இருந்தபோது சாக்லேட்டை சாப்பிட்ட மகிழ்ச்சி ,
“கோண்ட்” இன பழங்குடியினர் வாழ்ந்து வந்தார்கள். அவர்களின் நினைவாக அந்த படிவப் பாறைகளுக்கு ‘கோண்ட்வானா பாறைகள்’ என பெயர் வைத்தார். அந்தப் பாறைகள் உருவான காலம் கோண்ட்வானா காலம் என அழைக்கப்பட்டது.
பெருகடலடி முகடுகள்- கடலடி நிலப்பரப்பு பரவுதல்
(MID OCEANIC RIDGES AND OCEAN FLOOR SPREADING)
நிலப் பரப்பில் உள்ள பாறைகள் அடர்த்தி குறைந்த சிலிக்கா மற்றும் அலுமினியம் (Si Al) நிறைந்தவை-ஆனால் கடலடிப் பரப்பில் உள்ள பாறைகளில் சிலிக்காவுடன் அடர்த்திமிகுந்த மக்நீசயுமும் (SiMa) அதிகம்; ஆதலின் கண்டங்கள் கடல் பரப்பை கிழத்துக் கொண்டு செல்ல இயலாது என்பதே அன்றைய புவியியலாலர்களின் வாதம்- வேக்னேர் 1930ஆம் ஆண்டு வடதுருவத்தில் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது இயற்கை எய்தினார். அது ஒரு சோகக்கதை.
காலங்கள் மாறின – கருத்துக்களும் மாறின-
இரண்டாம் உலகப் போர் துவங்கியது. அமெரிக்காவின் ‘பிரின்ஸ்டன் பல்கலைக்கழக’த்தில் புவியியல் பேராசிரியராகப் பணியாற்றிய ஹேரிஹெஸ் (24.05.1906—25.08.1969), அமரிக்கக் கடற்படையில் ரியர் அட்மிரல் பதவியேற்று, அட்லாண்டிக் பெருங்கடலில் பணியாற்றினார். அப்போது அவர் அட்லாண்டிக் பெருங்கடலின் மையப் பகுதியில் கடலுக்கடியில், வடக்கு-தெற்காக பல ஆயிரம் கி.மீ. நீளமுள்ள மலை முகடு (MID OCEANIC RIDGE) இருப்பதையும், அந்த முகட்டின் மையப் பகுதியிலிருந்து எரிமலைக் குழம்பு வெளியேறி கிழக்கு-மேற்காக பரவுவதையும் கண்டறிந்தார். இந்த புதிய புவியியல் உண்மையை “ கடலின் கீழுள்ள நிலப் பரப்பு பரவுதல் (OCEAN FLOOR SPREADING)“ எனும் தலைப்பில் வெளியிட்டார். இதனை 1960 களில் அறிவியல் உலகம் ஏற்றுக் கொண்டது.
கடலடி நிலப்பரப்பு பரவும் போது அதனோடு சேர்ந்து கண்டங்களும் நகந்திருக்க வேண்டும் எனும் உண்மையும் வெளிப்பட்டது. இந்த கடலடி முகடுகள் அட்லாண்டிக் பெருங்கடலில் மட்டுமல்ல, இந்தியப் பெருங்கடலிலும், மற்றைய பெருங்கடல்களின் அடியிலும் உள்ளது காலப் போக்கில் கண்டு பிடிக்கப் பட்டது. தொடர்ந்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டனலெமூரியா- குமரிக்கண்டம்- கோண்ட்வானா (பாகம்-5)
பெருகடலடி முகடுகள்- கடலடி நிலப்பரப்பு பரவுதல்
(MID OCEANIC RIDGES AND OCEAN FLOOR SPREADING)
நிலப் பரப்பில் உள்ள பாறைகள் அடர்த்தி குறைந்த சிலிக்கா மற்றும் அலுமினியம் (Si Al) நிறைந்தவை-ஆனால் கடலடிப் பரப்பில் உள்ள பாறைகளில் சிலிக்காவுடன் அடர்த்திமிகுந்த மக்நீசயுமும் (SiMa) அதிகம்; ஆதலின் கண்டங்கள் கடல் பரப்பை கிழத்துக் கொண்டு செல்ல இயலாது என்பதே அன்றைய புவியியலாலர்களின் வாதம்- வேக்னேர் 1930ஆம் ஆண்டு வடதுருவத்தில் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது இயற்கை எய்தினார். அது ஒரு சோகக்கதை.
காலங்கள் மாறின – கருத்துக்களும் மாறின-
இரண்டாம் உலகப் போர் துவங்கியது. அமெரிக்காவின் ‘பிரின்ஸ்டன் பல்கலைக்கழக’த்தில் புவியியல் பேராசிரியராகப் பணியாற்றிய ஹேரிஹெஸ் (24.05.1906—25.08.1969), அமரிக்கக் கடற்படையில் ரியர் அட்மிரல் பதவியேற்று, அட்லாண்டிக் பெருங்கடலில் பணியாற்றினார். அப்போது அவர் அட்லாண்டிக் பெருங்கடலின் மையப் பகுதியில் கடலுக்கடியில், வடக்கு-தெற்காக பல ஆயிரம் கி.மீ. நீளமுள்ள மலை முகடு (MID OCEANIC RIDGE) இருப்பதையும், அந்த முகட்டின் மையப் பகுதியிலிருந்து எரிமலைக் குழம்பு வெளியேறி கிழக்கு-மேற்காக பரவுவதையும் கண்டறிந்தார். இந்த புதிய புவியியல் உண்மையை “ கடலின் கீழுள்ள நிலப் பரப்பு பரவுதல் (OCEAN FLOOR SPREADING)“ எனும் தலைப்பில் வெளியிட்டார். இதனை 1960 களில் அறிவியல் உலகம் ஏற்றுக் கொண்டது.
கடலடி நிலப்பரப்பு பரவும் போது அதனோடு சேர்ந்து கண்டங்களும் நகந்திருக்க வேண்டும் எனும் உண்மையும் வெளிப்பட்டது. இந்த கடலடி முகடுகள் அட்லாண்டிக் பெருங்கடலில் மட்டுமல்ல, இந்தியப் பெருங்கடலிலும், மற்றைய பெருங்கடல்களின் அடியிலும் உள்ளது காலப் போக்கில் கண்டு பிடிக்கப் பட்டது. தொடர்ந்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன

கடலடி நிலப்பரப்பு பரவும் போது அதனோடு சேர்ந்து கண்டங்களும் நகந்திருக்க வேண்டும் எனும் உண்மையும் வெளிப்பட்டது. இந்த கடலடி முகடுகள் அட்லாண்டிக் பெருங்கடலில் மட்டுமல்ல, இந்தியப் பெருங்கடலிலும், மற்றைய பெருங்கடல்களின் அடியிலும் உள்ளது காலப் போக்கில் கண்டு பிடிக்கப் பட்டது.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
லெமூரியா- குமரிக்கண்டம்- கோண்ட்வானா (பாகம்-6 –(நிறைவுப் பகுதி))
கண்டப்பெயர்ச்ச்சி , கடலடி நிலப்பரப்பு பரவுதல் ஆகிய கோட்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகளின் பயனாக , “பெரும்தட்டுகளின் கட்டமைப்பு” எனும் அருமையான கோட்பாடு ஒன்ற உருவானது. இதுவரை விடையளிக்கப்படாத வினாக்கள் பலவற்றிற்கு இந்த கோட்பாடு விடை அளித்தது. இதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பொது, முற்காலத்தில் இணைந்திருந்ததாகக் கருதப்படும் கண்டங்களில் உள்ள அழற் பாறைகள், உருமாற்றுப் பாறைகள் மற்றும் படிவப் பாறைகளின் வயது–அமைப்பு-புவி வேதியியற்கூறுகள் தொல்லுயிர் எச்சங்களின் தொகுப்பு, வயது போன்றவை அறிவியற் பூர்வமாக ஆய்ந்து ஒப்பு நோக்கப்பட்டன. கண்டங்களுக்கு இடையே விரிந்து கிடக்கும் பெருங்கடலின் தரை ௨௨பகுதிகளில் உள்ள பாறைகளும் பெரும் ஆய்வுகளுக்கு உட்படுத்தப் பட்டன.
இந்த ஆய்வுகளின் அடிப்படையில் சுமார் 22.5 கோடி ஆண்டுகளுக்கு முன் , பூமியின் பரப்பில் உள்ள எல்லா கண்டங்களும் ஒன்றாக சேர்ந்து ஓர் பெரிய அகண்டமாக இருந்திருக்கவேண்டும் எனு கருத்தை புவியியலாளர்கள் வெளியிட்டனர். இந்தப் பேரகண்டத்திற்க்கு “பான்ஜியா”-( பெரும் நிலப் பரப்ப) என்று பெயரும் இட்டனர். சுமார் 2.5 கோடி ஆண்டுகளுக்குப் பின் பான்ஜியா பேரகண்டம் வடக்கே “லவ்ரேஷ்ய” என்றும் தெற்கே, “கோண்ட்வானா” என்றும் இரு அகண்டங்களாகப் பிரிந்தது. தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா , மடகாஸ்கர், இந்தியா , ஆஸ்திரேலியா , அண்டார்க்டிக்கா ஆகிய தென் கண்டங்கள் ஒன்றாக இணைந்திருந்த நிலப்பகுதியே கோண்ட்வானா அகண்டம்.

PLATE TECTONICS என்று அழைக்கப்படும் இந்த “ பெரும்தட்டுகளின் கட்டமைப்பு” கோட்பாடு பல புரியாத புதிர்களை அவிழ்க்கிறது. இந்தக் கோட்பாட்டின்படி பூமியின் மேலுள்ள தட்டுகள் இன்றும் நகர்ந்து கொண்டுதானிருக்கின்றன – ஆண்டிற்கு சுமார் 5 செ .மீ . என்ற அளவில்.
ஆதலின் , தமிழ் ஆர்வலர்கள் “ குமரிக்கண்டம்தான் கோண்ட்வானா....லேமுரியாதான் குமரிக் கண்டம் ..” என்றெல்லாம் குழப்பிக் கொள்வதை கைவிடவேண்டும்.
உலகம் யாவையும் .......ஆக்கலும்-நிலைபெறுத்தலும்-நீக்கலும்.......
லெமூரியா- குமரிக்கண்டம்- கோண்ட்வானா
“லெமூரியாதான் குமரிக்கண்டம் , குமரிக்கண்டம்தான் லெமூரியா” என்று முன்பெல்லாம் சில தமிழறிஞர்களும் – தமிழார்வலர்களும் எழுதியும் பேசியும் வந்தனர். இப்போதும் சிலர் இதை உறுதியாக நம்புகின்றனர். இதனிடையே, அண்மைக் காலமாக வெளிவரும் நூல்களில், குமரிக் கண்டம் பற்றி எழுதும் தமிழார்வலர்கள் ‘குமரிக் கண்டம்’ எனும் சொல்லைத் தொடர்ந்து அடைப்புக் குறிக்குள் ‘கோண்ட்வானா‘ என்று எழுதுகிறார்கள்.
ஆய்வரங்களிளும்,கருத்தரங்களிலும் “குமரிக் கண்டம் அல்லது கோண்ட்வானா” என்று பேசுகிறார்கள். குமரிக்கண்டம்- லெமூரியா – கோண்ட்வானா இம்மூன்றும் ஒன்றுதான் என்பது, உண்மையல்ல.
லெமூரியா
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் கண்டுபிடிக்கப்பட்ட ரயில்வண்டி 1850 களில் பல நாடுகளிலும் பரவத் தொடங்கியது. அப்போது ரயில் வண்டியை இயக்கத் தேவைப்படும் நிலக்கரிப் படிவங்களி தேடும் பணியில் புவியியலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுனர். இந்தியாவில் 1853 ஆம் ஆண்டு ரயில் அறிமுகப் படுத்தப் பட்டது. நிலக்கரிப் படிவங்களை கண்டுபிடிப்பதற்கென்றே 1851 ஆம் ஆண்டு ஜியலாஜிக்கல் சர்வே ஆப் இந்தியா துவங்கப் பட்டது. இந்தத் துறையை சேர்ந்த புவி இயலாளர் ‘மெட்லிகாட்’ , இந்தியாவின் கிழக்குப் பகுதியில் மேற்கு வங்கம், ஜார்கண்ட் , மத்தியப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதி இங்கெல்லாம் நிலக்கரிப் படிவங்களை கண்டுபிடித்தார். நிலக்கரி உள்ள படிவப் பாறைகளில் ‘கிளஸ்ஸாப்டேரிஸ்’ எனும் தொல் தாவர இலை எச்சங்களையும் அவர் கண்டு பிடித்தார்.
சற்றேறக்குறைய இதே காலகட்டத்தில் தென் அமெரிக்கா , ஆஸ்த்ரேலியா ஆகிய பகுதிகளிலும் இதே போன்ற தொல்லுயிரெச்சங்கள் உள்ள படிவப் பாறைகள் ஐரோப்பிய புவியியலாலர்களால் கண்டறியப் பட்டன. தொல்தாவர எச்சங்கள் மட்டுமின்றி, ‘தேராப்சிட்ஸ்’ எனும் தரை வாழ் விலங்கினத்தின் தொல்லுயிர் எச்சங்களும் இபகுதிகளில் கண்டு பிடிக்கப்பட்டன. தென் அமெரிக்கா , தென்னாப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா காணப்படும் “பெர்மியன்” காலத்தை( சுமார் 26 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது) சேர்ந்த, இப்படிவப் பாறைகளும், அவற்றிலுள்ள தொல்லுயிரெச்சங்களும், ஒன்றை ஒன்று மிகவும் ஒத்திருந்தன . இன்று பல ஆயிரம் கி.மீ. அகலமுள்ள கடலால் பிரிக்கப் பட்டுள்ள நிலப் பரப்புகள் ஒன்றிலிருந்து ஒன்றிற்கு அந்தக் காலத்தில் விலங்குகள் எப்படி இடம் பெயர்ந்து சென்றிருக் முடியும் ? எனவே, ‘இந்த கண்டங்களுக்கு இடையே இவற்றை இணைத்த வண்ணம் ஒரு பெரும் நிலப் பரப்பு, பாலம் போல் இருதிருக்க வேண்டும்- அந்த நிலப்பரப்பின் வழியாகத்தான் விலங்குகள் ஒரு கண்டத்தில் இருந்து மற்றொரு கண்டத்திற்கு சென்றிருக்க வேண்டும் – பின்னர் அந்த நிலப்பரப்பு கடலில் மூழ்கியிருக்கவேண்டும்’ என்று பிரிட்டிஷ் புவியியலாளர்கள் நினைத்தார்கள். இதன் அடிப்படையில், தென் அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா, மடகாஸ்கர் , இந்தியா மற்றும் ஆஸ்த்ரேலியாவிற்கு இடையே ஒரு பெரும் நிலப்பாலம் இருந்திருக்க வேண்டும்’ எனும் கோட்பாட்டை 1860 ஆம் ஆண்டு, ‘எர்னெஸ்ட் ஹெயின்ரிச் ஹேக்கல்’ எனும் புவியியலாளர் முன் வைத்தார். மடகாஸ்கர் தீவில் வாழ்ந்து வரும் ‘லெமூர்’ எனும் விலங்கினம் இன் நிலப்பரப்பில் நிறைய இருந்திருக்க வேண்டுன் என்று எண்ணிய ‘பிலிப் ஸ்க்லேட்டர்’ எனும் உயிரியலாளர், இப்பெரும் நிலப் பரப்பிற்கு “லெமூரியா” என்று பெயர் வைத்தார்.
குமரிக்கண்டம்
ஆக , லெமூரியா என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் நிலவிய கருத்துக்களின் அடிப்படையில் எழுந்த ஒரு புவி உயிரியல் கோட்பாடு என்பது தெளிவு. ‘அல்ல,அல்ல, லெமூரியா என்பது ஓர் தமிழ்ச்சொல்லே’- என வாதிடுவோரும் உளர். மதிவாணன் எனும் ஓர் அன்பர் எழுதிய சிறு நூல் ஒன்றில் , அந்த அன்பர் கூறுவதாவது.
“ குமரிக் கண்டம் முழுதும் மூலிகைகள் நிறைந்திருந்தன- எல்லாம் இலைகள் –இலை மூலிகைகள், மூலிகை என்பது மூலிரை என்று மருவும்- இலைமூலிகை என்பது, இலைமூலிரை என மாறும் – இலைமூலிரை என்பது மருவி இலெமூரிய என்றாகும், ஆதலின் குமரிக்கண்டம்தன் லெமூரியா “
சரி, இப்போதைக்கு லேமூரியாவை விட்டு விட்டு குமரிக் கண்டம் பக்கம் வருவோம். குமரிக் கண்ட கோட்பாட்டிற்கு வித்திட்டவர்கள், இடைக்கால உரையாசி ரியர்கள் – இளம்பூரனர், அடியார்க்கு நல்லார் ( காலம்-பன்னிரெண்டாம் நூற்றாண்டு ?), போன்றோர் எனத் தெரிகிறது. காரணம், சங்க இலக்கியங்கள் , பதினெண் கீழ் கணக்கு நூல்கள், இரட்டைக் காப்பியங்கள் , பக்தி இலக்கியங்கள் இவை எதிலும் குமரிக் கண்டம் எனும் சொல் காணக் கிடைக்கவில்லை. (இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறேன்). சிலம்பில் , புகார் காண்டம் வேனிற் காதையில், “ நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ் வரம்பறுத்த தண் புனல் நாடு “ என்று தமிழ்நாடு பற்றிய நேரான தெளிவான கருத்தது காணப்படுகிறது. தொடியோள் என்றால் குமரி- பௌவம் என்றால் கடல் என்று நேரடியாகப் பொருள் கொள்ளாமல் “ தொடியோள் நதியும் என்னாது, பௌவம் என்றது என்னையெனின் – பஹுறுளி ஆற்றிற்கும் குமரி என்னும் ஆற்றிற்கும் இடையே நாற்பத்தியொன்பது நாடுகளும் கடல் கொண்டு ஒழிந்ததால் குமரியாகிய பௌவம் என்றார்” என்று அடியார்க்கு நல்லார் விரித்து எழுதியுள்ளார். அடியார்க்கு நல்லார் பன்னிரெண்டாம் நூற்றாண்டை சேர்ந்தவர்- அரும்பத உரை ஆசிரியரின் உரையைத் தழுவி சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர் என்று கருதப் படுகிறது.
“அடியார்க்கு நல்லாரின் உரை கடுகளவும் கட்டுச்செய்தியாய் இருக்கமுடியாது” என முழங்கும் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் “ இன்றைய குமரி முனைக்குத் தெற்கே ஈராயிரம் மைல் நீள நிலப்பரப்பு இருந்தது—அதன் தேன் கோடியில் பஹ்ருளி ஆறும், வடகோடியில் குமரி ஆறும் பாய்ந்தோடின-குமரிக் கண்டத் தென்கோடியில் பனிமலைத் தொடர் போலும் பன் மலையடுக்கத்து குமரித் தொடர் இருந்தது—இந்தக் குமரிக் கண்டத்தில்தான் தமிழ் தோன்ற்யது-தமிழன் தோன்றினான்” என உறுதியாக நம்புகிறார். “முதல் கடல் கோளில் குமரிமலையும் பஹ்ருளியாறும் அதன் கரையில் கட்டப்பட்ட (தென்) மதுரை உட்பட்ட பாண்டி நாட்டின் தென்பெரும்பகுதி மூழ்கியது. இரண்டாம் கடல் கோளில் பாண்டியர்களின் இரண்டாம் தலைநகராகிய , வடபுலத்தில் நெய்தல் நிலத்தில் அமைந்த கதவம் (அல்லது கபாடம் அல்லது புதவம் அல்லது அலைவாய் ) அழிந்தது. மூன்றாம் கடல் கோளில் குமரியாற்றை கடல் கொண்டது. நான்காம் கடல் கோள் மணிமேகலை காலத்தில் கவேரிபூம்பட்டினத்தைக் கொண்டது.” என பாவாணர் அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறார்.
கடைச் சங்க காலத்திற்கு முன் இரு மிகப் பெரும் கடல் கோள்கள் நிகழ்ந்திருப்பின் , அவை பற்றிய செய்திகள் , குறிப்புகள் எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டில் பரவா லாகப் பேசப்பட்டிருக்கும். ஆனால் இல்லை- நாற்பத்தியொன்பது நாடுகள் பற்றிய செய்திகளோ , குமரி மலை –குமரி ஆறு- குமரிக் கண்டம் போன்ற சொற்களோ,தொடர்களோ எங்கும் காணப் படவில்லை.
இலக்கியங்களில் சுனாமி-குமரி பற்றிய குறிப்புகள்....
குமரி முனை –மணப்பாடு-இடிந்தகரை-ராமேஸ்வரம்
பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வுப் பணிகள் மூலம் சுமார் 3200 /4000 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதிகளில் கடல் மட்டம்
சுமார் மூன்று மீ உயர்ந்திருக்கக்கூடும் எனத்தெரிகிறது(ஒரேயடியாக அல்ல –படிப்படியாக)
. அப்போது கடல் நீர் பல சதுர கி.மீ நிலப் பரப்பில் விரிந்து
பரவியிருக்கும்..நாகரீகம் தோன்றத் துவங்கிய காலத்தில் நிகழ்ந்த இந்நிகழ்வு செவி
வழிச் செய்தியாக பல தலைமுறை கடந்து கலித்தொகையில் ‘ஊர்ந்து வவ்வல்’ என இடம்
பெற்றிருக்கிறது. சிலம்பாசிரியர் அதை ‘ கொடுங்கடல் கொள்ள’
என சொல்லி விட்டார். உரையாசிரியர்கள் ஏழ்தெங்க நாடுகளை சேர்த்து விட்டார்கள்.பின் வந்தவர்கள் நம் காலத்தில் இமயமலை போன்ற பெரிய மலைகளையும், கங்கை போன்ற பெரிய ஆறுகளையும் காட்டிவிட்டார்கள்.
ஆக, குமரிக் கண்டம் –குமரியாறு- குமரிநாடு பற்றிய குறிப்புகள் ஏதும் பண்டைய இலக்கியங்களில் இல்லாத காரணத்தால், இவையாவும் இடைக்கால் உரையாசிரியர்களின் கற்பனையே என் எண்ணத் தோன்றுகிறது.”குமரிக் கண்டம்” எனும் பெயரில் சில தமிழ் ஆர்வலர்கள் வெளியிடும் படங்களும் (காண்க: ஜெயபாரதன் அவர்களின் இடுகைகள்) ஊகங்களின் அடிப்படையில் உருவானவையே.
கோண்ட்வானா:
கோண்ட்வானா எனும் சொல்லை அறிமுகம் செய்தவர், ஜியலாஜிக்கல் சர்வே ஆப் இந்தியாவைச் சேர்ந்த மெட்லிகாட் எனும் புவியியலாளர். 1860 களில் ஜார்கண்ட் மற்றும் தாமோதர் நதி பள்ளத்தாக்குகளில் உள்ள படிவப் பாறைகளில் நிலக்கரிப் படிவங்களை அவர் கண்டு பிடித்தார். அந்தப் பாறைகள் இருந்த வனப் பகுதிகளிலும் மலைப் பகுதிகளிலும் “கோண்ட்” இன பழங்குடியினர் வாழ்ந்து வந்தார்கள். அவர்களின் நினைவாக அந்த படிவப் பாறைகளுக்கு ‘கோண்ட்வானா பாறைகள்’ என பெயர் வைத்தார். அந்தப் பாறைகள் உருவான காலம் கோண்ட்வானா காலம் என அழைக்கப்பட்டது. தொடந்து பூமிப்பந்தின் தென் பாதியில் நடந்த புவியியல் ஆய்வுகளின் போது இந்த கோண்ட்வானா பாறைகள் தென்அமெரிக்கா,ஆப்ரிக்கா, ஆஸ்த்ரேலியா ஆகிய கண்டங்களிலும் பெருமளவில் உள்ளது கண்டு பிடிக்கப்பட்டது. (பின்னாளில் இக்கண்டங்களின் ஒருங்கிணைந்த பகுதிக்கு கோண்ட்வானா நிலம் என்ற பெயர் சூட்டப் பட்டது- இது பற்றி பிறகு பார்ப்போம்.)
இனி, கண்டங்கள் நிலைத்திருப்பவை-நகரும் தன்மை அற்றவை எனும் கருத்து புவியியலாளர்கள் மத்தியில் நிலவிவந்ததால் , 1850 களில் அரும்பிய லேமூரீயா கோட்பாடு கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக் காலம் புகழ் பெற்று விலகியது. 1910களில் பெர்லின் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வந்த ஆல்பிரட் வேக்னர் எனும் பருவநிலையியலாளர் (இவர் புவியியலாளர் அல்ல) , ஆப்ரிக்காவின் மேற்குக் கரையும் தென் அமெரிக்காவின் கிழக்குக் கரையும் அமைப்பில் ஒன்று போல் இருப்பது கண்டு வியந்தார். இதே போன்ற வியப்பு இதற்கு ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஒரு சிலருக்கு ஏற்பட்டது. ஆனால் “இது இப்படித்தான்” என்று அவர்கள் விட்டுவிட்டார்கள். ஆனால் ஆல்பிரட் வேக்னரால் அப்படி விட்டுவிட முடியவில்லை. “ஒருவேளை இந்த இரண்டு கண்டங்களும் முன்பு ஒன்றாக இணைந்து இருந்திருக்குமோ” எனும் எண்ணம் அவர் மனத்தில் உதித்தது. அந்த எண்ணங்களின் அடிப்படையில் “கண்டப் பெயர்ச்சி” (காண்டினெண்டல் டிரிப்ட்) கோட்பாட்டை 1913இல் வேக்னர் முன் வைத்தார். “இன்று பூமியில் உள்ள கண்டங்கள் முன்பு ஒன்றாக இணைந்திருந்தன-பின்னர் அவை பிரிந்து நகர்ந்து இன்றைய நிலையை அடைந்துள்ளன”-என்பதுதான் காண்டினெண்டல் டிரிப்ட் கோட்பாட்டின் சாரம். ஆனால் அன்றைய புவியியல் அறிஞர்கள் வேக்னேரின் கோட்பாட்டை எள்ளி நகையாடினர். “We need not learn Geology from a weather man” என நையாண்டி செய்தனர், ‘அடர்த்தி குறைவான நிலப்பரப்புப் பாறைகள் , அடர்த்தி அதிகமான கடல்பரப்புப் பாறைகளை எப்படிக் கிழித்துக் கொண்டு நகந்திருக்கும்’ என அவர்கள் வினா எழ்ப்பினர். ஆக, வேக்னேர் உயிரோடு இருந்த பொது அவரின் கோட்படுகள் ஏற்றுக் கொள்ளப் படவில்லை என்பது கசப்பான உண்மை.
பெருகடலடி முகடுகள்- கடலடி நிலப்பரப்பு பரவுதல் (MID OCEANIC RIDGES AND OCEAN FLOOR SPREADING)
நிலப் பரப்பில் உள்ள பாறைகள் அடர்த்தி குறைந்த சிலிக்கா மற்றும் அலுமினியம் (Si Al) நிறைந்தவை-ஆனால் கடலடிப் பரப்பில் உள்ள பாறைகளில் சிலிக்காவுடன் அடர்த்திமிகுந்த மக்நீசயுமும் (SiMa) அதிகம்; ஆதலின் கண்டங்கள் கடல் பரப்பை கிழத்துக் கொண்டு செல்ல இயலாது என்பதே அன்றைய புவியியலாலர்களின் வாதம்- வேக்னேர் 1930ஆம் ஆண்டு வடதுருவத்தில் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது இயற்கை எய்தினார். அது ஒரு சோகக்கதை.
காலங்கள் மாறின – கருத்துக்களும் மாறின-
இரண்டாம் உலகப் போர் துவங்கியது. அமெரிக்காவின் ‘பிரின்ஸ்டன் பல்கலைக்கழக’த்தில் புவியியல் பேராசிரியராகப் பணியாற்றிய ஹேரிஹெஸ் (24.05.1906—25.08.1969), அமரிக்கக் கடற்படையில் ரியர் அட்மிரல் பதவியேற்று, அட்லாண்டிக் பெருங்கடலில் பணியாற்றினார். அப்போது அவர் அட்லாண்டிக் பெருங்கடலின் மையப் பகுதியில் கடலுக்கடியில், வடக்கு-தெற்காக பல ஆயிரம் கி.மீ. நீளமுள்ள மலை முகடு (MID OCEANIC RIDGE) இருப்பதையும், அந்த முகட்டின் மையப் பகுதியிலிருந்து எரிமலைக் குழம்பு வெளியேறி கிழக்கு-மேற்காக பரவுவதையும் கண்டறிந்தார். இந்த புதிய புவியியல் உண்மையை “ கடலின் கீழுள்ள நிலப் பரப்பு பரவுதல் (OCEAN FLOOR SPREADING)“ எனும் தலைப்பில் வெளியிட்டார். இதனை 1960 களில் அறிவியல் உலகம் ஏற்றுக் கொண்டது.
கடலடி நிலப்பரப்பு பரவும் போது அதனோடு சேர்ந்து கண்டங்களும் நகந்திருக்க வேண்டும் எனும் உண்மையும் வெளிப்பட்டது. இந்த கடலடி முகடுகள் அட்லாண்டிக் பெருங்கடலில் மட்டுமல்ல, இந்தியப் பெருங்கடலிலும், மற்றைய பெருங்கடல்களின் அடியிலும் உள்ளது காலப் போக்கில் கண்டு பிடிக்கப் பட்டது. தொடர்ந்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

“பெரும்தட்டுகளின் கட்டமைப்பு” (PLATE TECTONICS))
கண்டப்பெயர்ச்ச்சி , கடலடி நிலப்பரப்பு பரவுதல் ஆகிய கோட்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகளின் பயனாக , “பெரும்தட்டுகளின் கட்டமைப்பு” எனும் அருமையான கோட்பாடு ஒன்ற உருவானது. இதுவரை விடையளிக்கப்படாத வினாக்கள் பலவற்றிற்கு இந்த கோட்பாடு விடை அளித்தது. இதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பொது, முற்காலத்தில் இணைந்திருந்ததாகக் கருதப்படும் கண்டங்களில் உள்ள அழற் பாறைகள், உருமாற்றுப் பாறைகள் மற்றும் படிவப் பாறைகளின் வயது–அமைப்பு-புவி வேதியியற்கூறுகள் தொல்லுயிர் எச்சங்களின் தொகுப்பு, வயது போன்றவை அறிவியற் பூர்வமாக ஆய்ந்து ஒப்பு நோக்கப்பட்டன. கண்டங்களுக்கு இடையே விரிந்து கிடக்கும் பெருங்கடலின் தரை ௨௨பகுதிகளில் உள்ள பாறைகளும் பெரும் ஆய்வுகளுக்கு உட்படுத்தப் பட்டன.
இந்த ஆய்வுகளின் அடிப்படையில் சுமார் 22.5 கோடி ஆண்டுகளுக்கு முன் , பூமியின் பரப்பில் உள்ள எல்லா கண்டங்களும் ஒன்றாக சேர்ந்து ஓர் பெரிய அகண்டமாக இருந்திருக்கவேண்டும் எனு கருத்தை புவியியலாளர்கள் வெளியிட்டனர். இந்தப் பேரகண்டத்திற்க்கு “பான்ஜியா”-( பெரும் நிலப் பரப்ப) என்று பெயரும் இட்டனர். சுமார் 2.5 கோடி ஆண்டுகளுக்குப் பின் பான்ஜியா பேரகண்டம் வடக்கே “லவ்ரேஷ்ய” என்றும் தெற்கே, “கோண்ட்வானா” என்றும் இரு அகண்டங்களாகப் பிரிந்தது. தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா , மடகாஸ்கர், இந்தியா , ஆஸ்திரேலியா , அண்டார்க்டிக்கா ஆகிய தென் கண்டங்கள் ஒன்றாக இணைந்திருந்த நிலப்பகுதியே கோண்ட்வானா அகண்டம்.
PLATE TECTONICS என்று அழைக்கப்படும் இந்த “
பெரும்தட்டுகளின் கட்டமைப்பு” கோட்பாடு பல புரியாத புதிர்களை அவிழ்க்கிறது. இந்தக்
கோட்பாட்டின்படி பூமியின் மேலுள்ள தட்டுகள் இன்றும் நகர்ந்து கொண்டுதானிருக்கின்றன
– ஆண்டிற்கு சுமார் 5 செ .மீ . என்ற அளவில்.
வணக்கம்...துண்டு துண்டாக அனுப்பிய பதிவுகளை கோர்த்து அனுப்புகிறேன். இனி வரும் நாட்களில் முழு கட்டுரைகளையே அனுப்புவேன்.லெமூரியா- குமரிக்கண்டம்- கோண்ட்வானா
“லெமூரியாதான் குமரிக்கண்டம் , குமரிக்கண்டம்தான் லெமூரியா” என்று முன்பெல்லாம் சில தமிழறிஞர்களும் – தமிழார்வலர்களும் எழுதியும் பேசியும் வந்தனர். இப்போதும் சிலர் இதை உறுதியாக நம்புகின்றனர். இதனிடையே, அண்மைக் காலமாக வெளிவரும் நூல்களில், குமரிக் கண்டம் பற்றி எழுதும் தமிழார்வலர்கள் ‘குமரிக் கண்டம்’ எனும் சொல்லைத் தொடர்ந்து அடைப்புக் குறிக்குள் ‘கோண்ட்வானா‘ என்று எழுதுகிறார்கள்.
ஆய்வரங்களிளும்,கருத்தரங்களிலும் “குமரிக் கண்டம் அல்லது கோண்ட்வானா” என்று பேசுகிறார்கள். குமரிக்கண்டம்- லெமூரியா – கோண்ட்வானா இம்மூன்றும் ஒன்றுதான் என்பது, உண்மையல்ல.
லெமூரியா
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் கண்டுபிடிக்கப்பட்ட ரயில்வண்டி 1850 களில் பல நாடுகளிலும் பரவத் தொடங்கியது. அப்போது ரயில் வண்டியை இயக்கத் தேவைப்படும் நிலக்கரிப் படிவங்களி தேடும் பணியில் புவியியலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுனர். இந்தியாவில் 1853 ஆம் ஆண்டு ரயில் அறிமுகப் படுத்தப் பட்டது. நிலக்கரிப் படிவங்களை கண்டுபிடிப்பதற்கென்றே 1851 ஆம் ஆண்டு ஜியலாஜிக்கல் சர்வே ஆப் இந்தியா துவங்கப் பட்டது. இந்தத் துறையை சேர்ந்த புவி இயலாளர் ‘மெட்லிகாட்’ , இந்தியாவின் கிழக்குப் பகுதியில் மேற்கு வங்கம், ஜார்கண்ட் , மத்தியப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதி இங்கெல்லாம் நிலக்கரிப் படிவங்களை கண்டுபிடித்தார். நிலக்கரி உள்ள படிவப் பாறைகளில் ‘கிளஸ்ஸாப்டேரிஸ்’ எனும் தொல் தாவர இலை எச்சங்களையும் அவர் கண்டு பிடித்தார்.
சற்றேறக்குறைய இதே காலகட்டத்தில் தென் அமெரிக்கா , ஆஸ்த்ரேலியா ஆகிய பகுதிகளிலும் இதே போன்ற தொல்லுயிரெச்சங்கள் உள்ள படிவப் பாறைகள் ஐரோப்பிய புவியியலாலர்களால் கண்டறியப் பட்டன. தொல்தாவர எச்சங்கள் மட்டுமின்றி, ‘தேராப்சிட்ஸ்’ எனும் தரை வாழ் விலங்கினத்தின் தொல்லுயிர் எச்சங்களும் இபகுதிகளில் கண்டு பிடிக்கப்பட்டன. தென் அமெரிக்கா , தென்னாப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா காணப்படும் “பெர்மியன்” காலத்தை( சுமார் 26 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது) சேர்ந்த, இப்படிவப் பாறைகளும், அவற்றிலுள்ள தொல்லுயிரெச்சங்களும், ஒன்றை ஒன்று மிகவும் ஒத்திருந்தன . இன்று பல ஆயிரம் கி.மீ. அகலமுள்ள கடலால் பிரிக்கப் பட்டுள்ள நிலப் பரப்புகள் ஒன்றிலிருந்து ஒன்றிற்கு அந்தக் காலத்தில் விலங்குகள் எப்படி இடம் பெயர்ந்து சென்றிருக் முடியும் ? எனவே, ‘இந்த கண்டங்களுக்கு இடையே இவற்றை இணைத்த வண்ணம் ஒரு பெரும் நிலப் பரப்பு, பாலம் போல் இருதிருக்க வேண்டும்- அந்த நிலப்பரப்பின் வழியாகத்தான் விலங்குகள் ஒரு கண்டத்தில் இருந்து மற்றொரு கண்டத்திற்கு சென்றிருக்க வேண்டும் – பின்னர் அந்த நிலப்பரப்பு கடலில் மூழ்கியிருக்கவேண்டும்’ என்று பிரிட்டிஷ் புவியியலாளர்கள் நினைத்தார்கள். இதன் அடிப்படையில், தென் அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா, மடகாஸ்கர் , இந்தியா மற்றும் ஆஸ்த்ரேலியாவிற்கு இடையே ஒரு பெரும் நிலப்பாலம் இருந்திருக்க வேண்டும்’ எனும் கோட்பாட்டை 1860 ஆம் ஆண்டு, ‘எர்னெஸ்ட் ஹெயின்ரிச் ஹேக்கல்’ எனும் புவியியலாளர் முன் வைத்தார். மடகாஸ்கர் தீவில் வாழ்ந்து வரும் ‘லெமூர்’ எனும் விலங்கினம் இன் நிலப்பரப்பில் நிறைய இருந்திருக்க வேண்டுன் என்று எண்ணிய ‘பிலிப் ஸ்க்லேட்டர்’ எனும் உயிரியலாளர், இப்பெரும் நிலப் பரப்பிற்கு “லெமூரியா” என்று பெயர் வைத்தார்.
--
---------- Forwarded message ----------
From: Singanenjam Sambandam <singa...@gmail.com>
Date: 2014-04-26 17:33 GMT+05:30
Subject: Re: [MinTamil] புவிப் பக்கம்........
To: Jana Iyengar <iyenga...@gmail.com>லெமூரியா- குமரிக்கண்டம்- கோண்ட்வானா (பாகம்-6 –(நிறைவுப் பகுதி))
கண்டப்பெயர்ச்ச்சி , கடலடி நிலப்பரப்பு பரவுதல் ஆகிய கோட்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகளின் பயனாக , “பெரும்தட்டுகளின் கட்டமைப்பு” எனும் அருமையான கோட்பாடு ஒன்ற உருவானது. இதுவரை விடையளிக்கப்படாத வினாக்கள் பலவற்றிற்கு இந்த கோட்பாடு விடை அளித்தது. இதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பொது, முற்காலத்தில் இணைந்திருந்ததாகக் கருதப்படும் கண்டங்களில் உள்ள அழற் பாறைகள், உருமாற்றுப் பாறைகள் மற்றும் படிவப் பாறைகளின் வயது–அமைப்பு-புவி வேதியியற்கூறுகள் தொல்லுயிர் எச்சங்களின் தொகுப்பு, வயது போன்றவை அறிவியற் பூர்வமாக ஆய்ந்து ஒப்பு நோக்கப்பட்டன. கண்டங்களுக்கு இடையே விரிந்து கிடக்கும் பெருங்கடலின் தரை ௨௨பகுதிகளில் உள்ள பாறைகளும் பெரும் ஆய்வுகளுக்கு உட்படுத்தப் பட்டன.
இந்த ஆய்வுகளின் அடிப்படையில் சுமார் 22.5 கோடி ஆண்டுகளுக்கு முன் , பூமியின் பரப்பில் உள்ள எல்லா கண்டங்களும் ஒன்றாக சேர்ந்து ஓர் பெரிய அகண்டமாக இருந்திருக்கவேண்டும் எனு கருத்தை புவியியலாளர்கள் வெளியிட்டனர். இந்தப் பேரகண்டத்திற்க்கு “பான்ஜியா”-( பெரும் நிலப் பரப்ப) என்று பெயரும் இட்டனர். சுமார் 2.5 கோடி ஆண்டுகளுக்குப் பின் பான்ஜியா பேரகண்டம் வடக்கே “லவ்ரேஷ்ய” என்றும் தெற்கே, “கோண்ட்வானா” என்றும் இரு அகண்டங்களாகப் பிரிந்தது. தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா , மடகாஸ்கர், இந்தியா , ஆஸ்திரேலியா , அண்டார்க்டிக்கா ஆகிய தென் கண்டங்கள் ஒன்றாக இணைந்திருந்த நிலப்பகுதியே கோண்ட்வானா அகண்டம்.
PLATE TECTONICS என்று அழைக்கப்படும் இந்த “ பெரும்தட்டுகளின் கட்டமைப்பு” கோட்பாடு பல புரியாத புதிர்களை அவிழ்க்கிறது. இந்தக் கோட்பாட்டின்படி பூமியின் மேலுள்ள தட்டுகள் இன்றும் நகர்ந்து கொண்டுதானிருக்கின்றன – ஆண்டிற்கு சுமார் 5 செ .மீ . என்ற அளவில்.
2) ஒரு கண்டத்தோடு மற்றொரு கண்டம் மோதும் போது,
பலநூறு மைல்கள் நீளத்திற்கு நிலநடுக்கம் ஏற்பட வேண்டும் அல்லவா?
ஆனால் அவ்வாறு ஏன் ஏற்படுவதில்லை!
--

பரிதியில் எழும் சூரிய தீப்புயல்கள் புரியும் தீவிர விளைவுகள்

2012 மார்ச் 30 ஆம் தேதி முல்லார்டு விண்வெளி விஞ்ஞான ஆய்வுக் கூடத்தைச் (UCL’s Mullard Space Science Laboratory) சேர்ந்த டாக்டர் ஸெர்கி ஸகராவ் (Dr. Sergei Zharkov) தேசீய வானியல் கூட்டரங்கில் (National Astronomy Conference) தனது ஆய்வு உரையை நிகழ்த்திய போது கீழ்வரும் அதிசயத் தகவலை முதன்முதல் எடுத்துக் கூறியிருக்கிறார். அதாவது பரிதியின் காந்த புலத்தாலும், மின்னேறிய துகள்களாலும் சூரிய தீப்புயல்கள் (Solar Eruptions) எழும்போது பரிதிப் பூகம்பங்கள் (Sunquakes) உண்டாக்கப் படுகின்றன. காரணம் : அப்போது பரிதியிலிருந்து பேரளவு காந்தத் திரட்சி வடிவு (Magnetic Structure) சூரிய மண்டலச் சூழ்வெளியில் வெளியேறுகிறது. சூரியப் பூகம்ப நிகழ்ச்சியின் முதல் நோக்கை ஆய்வு செய்து 1990 ஆண்டு முடிவில் அறிவித்தவர் இருவர் : கோஸோவிசெவ் & ஸர்காவ் (Kosovichev & Zharkov) . கடந்த பத்தாண்டு காலத்தில் பரிதிச் சூழ்வெளியில் வீசப் பட்ட சூரிய தீப்புயல்களின் (Solar Flares) வலுமிக்க துகள் கற்றைகள் தாக்கி (Impact of Powerful Beams of Particles) பரிதிக்குள் புகுந்து சூரியப் பூகம்பங்களை (Sunquakes) உண்டாக்கும் என்பது உறுதியாக நிலைநாட்டப் பட்டது. இப்போது 2012 இல் வெளியான புதிய ஆய்வு அறிக்கையில் பரிதியின் “காந்தப் புலத் திணிவு எழுச்சிகளும்” (CME Coronal Mass Ejections) சூரியப் பூகம்பத்தை உண்டாக்குகிறது என்பது தெரிய வருகிறது.
இந்த விஞ்ஞானிகள் இருவரும் 2011 பிப்ரவரி 15 இல் பரிதியில் நேர்ந்த தீப்புயல்களை ஆய்வு செய்து 2011 மார்ச்சில் நேர்ந்த கிழக்கு ஜப்பான் புகுஷிமா பகுதி 9.0 ரிக்டர் நிலநடுக்கத்தை விட 1000 மடங்கு ஆற்றல் உள்ள சூரியப் பூகம்பம் எழுந்ததைக் கூறியிருக்கிறார். அந்த சூரியப் பூகம்பத்தைத் தூண்டியது பரிதிக் காந்த புலத்தின் புயலான இரு வால் முனைகளே. அதாவது தீப்புயலில் உள்ள காந்தப் புலத்தின் திடீர் விரிவுதான் சூரிய பூகம்பத்தை உண்டாக்கி உள்ளது. பரிதி மண்டலத்தில் பாயும் தீப்புயலின் சராசரி வேகம் வினாடிக்கு 600 கி.மீ. தூரம் (600 km/sec) (360 mps). அதே பூகாந்தப் புயல் (Geomagnetic Storm) பூமியைத் தாக்கி துருவங்களில் ஒளித்தோரணமும் தோன்றியது.
பரிதியில் நேரும் இந்தக் கண்கொள்ளாக் காட்சிகள் சூரியச் சூழ்வெளியிலிருந்து எப்படிப் பரிதி மேற்தளத்திற்கும் உட்கருவுக்கும் சக்தியும் நெம்பு நிறையும் (Energy and Momentum) வருகின்றன என்று ஆராய விஞ்ஞானிகளுக்கு மிகவும் உதவுகின்றன.
பரிதியின் மேற்தளத்தில் குளத்தில் விழுந்த கல் வரையும் வட்டங்கள் போல் சூரிய பூகம்பங்கள் ஏற்படுவதாக 1972 ஆம் ஆண்டிலே உல்ஃப் (Wolff) என்பரால் முன்னறிவிக்கப் பட்டது. அவை சூரிய தளத்தின் கீழே திடீரன எழும் சக்தியால் வளையும் ஒலி அலைகள் தோன்றி மெய்யாக மேற்தளத்தில் வட்டங்களாய் உண்டாகின்றன என்று டாக்டர் ஸெர்கி ஸகராவ் (Dr. Sergei Zharkov) சொல்கிறார். 2012 ஆண்டில் பரிதியின் கொந்தளிப்பு மிகையாக ஏறுவதால் அதன் உச்சநிலை 2013 இல்அதிகமான சூரிய பூகம்ப எண்ணிக்கையுடன், அவற்றின் மூல காரணங்களையும் முக்கிய விளைவுகளை அறியவும் உதவும்.
அடித்தட்டு நகர்ச்சியின் போது பூமிக்குள்ளே என்ன நிகழ்கிறது ?
பூமிக்குள் அடித்தட்டு நகர்ச்சியைத் (Plate Tectonics) துடிக்க வைத்துப் பூகம்பத்தை எந்த விதப் புறத் தூண்டல் உண்டாக்குகிறது என்பதைப் பூதள விஞ்ஞானிகள் இதுவரைக் குறிப்பிட்டுக் காட்ட வில்லை ! ஆனால் அவர்கள் கருதுவது : பூமியின் உட்கருவில் எழும் வெப்பம் மெதுவாக உள்தட்டு (Mantle) ஓட்டத்தைத் தடிப்பான மேல்தட்டு (Lithosphere) அடுக்கில் எழுப்பி விடுகிறது. கடந்த மில்லியன் கணக்கான ஆண்டுகளாய்க் கடையும் இந்த கொந்தளிப்பு இயக்கமே கடற்தட்டுகளையும், அடித்தட்டுகளையும் நகர்த்தி வருகிறது. பூதள விஞ்ஞானிகள் இவ்வித அடித்தட்டு நகர்ச்சி நிகழ்ந்து கடந்த 2.5 முதல் 4 பில்லியன் ஆண்டுகளாகப் பூமியின் மேல் தளத்தை உருவாக்கி வந்திருக்கிறது என்று மதிப்பிடுகிறார்கள். இப்போதும் அந்த நகர்ச்சி தொடர்ந்து இயங்கி வருகிறது.
இந்திய மண்திணிவு எதிர்த்துத் தள்ளுவதால் இமயத்தின் சிகரங்கள் உயர்ந்து கொண்டே போகின்றன ! ஹவாயித் தீவுகள் ஜப்பானை நோக்கி அங்குல அங்குலமாய் நகர்கின்றன ! ஐரோப்பாவும் வட அமெரிக்காவும் ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்கின்றன ! அதாவது அட்லாண்டிக் கடல் அகலமாகிப் பசிபிக் கடல் சுருங்கி வருகிறது ! இன்னும் மில்லியன் ஆண்டுகள் தாண்டி ஒருவர் நோக்கினால் உலகக் கண்டங்களின் புதிய அமைப்பில் வேறு முகத்தோடு செதுக்கப் பட்டிருக்கும் ! பூமியானது மாபெரும் ஏழு அடித்தட்டுகளோடு பல்வேறு சிறு அடித்தட்டுகளைப் பின்னி மேல் தளத்தை அமைத்துக் கொண்டுள்ளது ! உள்ளே உள்ள பூமியின் வெப்ப திரவம் வலுவற்ற பகுதிகளின் வழியே கசிந்து வெளியேறி அவற்றில் எரிமலை அரங்குகள், தீவுகள் உண்டாகின்றன.
ஓராண்டில் சுமார் ஒரு மில்லியன் நிலநடுக்கங்கள் பூமியில் நேருகின்றன என்று பூதள விஞ்ஞான நூலில் குறிப்பிடப் பட்டுள்ளது ! இவற்றில் பல மிகச் சிறிய அதிர்வுகள். கருவிகளால் மட்டுமே அவை உணரப்பட்டுப் பதிவாகின்றன. ஒவ்வோர் ஆண்டிலும் சராசரிச் சுமார் 10,000 பூகம்ப மரணங்கள் நேருகின்றன. அதாவது ஓராண்டில் இரண்டு பூகம்பங்கள் நேர்ந்தால் சராசரி மரணங்கள் 5000 (2X5000 =10,000) ஏற்படலாம். 1900 ஆண்டு முதல் 2009 வரை 6.1 முதல் 9.5 ரிக்டர் அளவீட்டில் சுமார் 50 அசுரப் பூகம்பங்கள் நேர்ந்துள்ளன ! அவற்றில் 2004 ஆம் ஆண்டு இந்து மாக்கடலில் 9 ரிக்டர் அளவீட்டில் நேர்ந்த இந்தோனேஷியா கடற்தட்டுப் பூகம்பத்தில் எழுந்த சுனாமி அலையடிப்பில் தென்னாசியக் கடற்கரை நாடுகளில் 250,000 மக்கள் உயிரிழந்தனர் ! உடைந்த இல்லங்கள், இழப்புகள் பல பில்லியன் டாலர் மதிப்புள்ளவை ! வரலாற்றில் மாபெரும் மனித இனச் சேதம் !
பூகம்ப நகர்ச்சியும் பூமியின் பூதள மின் ஜனனியும்
பூகம்பம் என்பது பூமிக்கடியில் எழுந்து மேல் தளத்தில் அல்லது கடற் தளத்தில் நேரும் ஒரு திடீர் நில அதிர்ச்சி ! அந்த நிலநடுக்கத்தைப் பூமிக்கடியில் மெதுவாகப் பாறைகளில் சேமிக்கப்பட்ட சக்தியின் வெளிப்பாடே உண்டாக்குகிறது ! இந்தச் சக்திக்கு மூல காரணி யாது ? எப்படிச் சக்தி பாறைகளில் சேமிப்பாகிறது ? ஏன் திடீரென நிலநடுக்கம் ஏற்படுகிறது ? பூமியின் உள்ளமைப்புப் படத்தைப் பார்த்தால் “லித்தோ கோளம்” (Lithosphere) முறியும் பாறைகளைக் கொண்டதாகத் தெரியும். அக்கோளம் சுமார் 100 கிலோமீடர் (60 மைல்) தடிப்புள்ளது. மேலும் “ஆஸ்தெனோ கோளத்தின்” (Asthenosphere) சூடான பிளாஸ்டிக் பாறையில் அது மிதக்கிறது. லித்தோ கோளம் அனைத்தும் “நகர்ச்சி அடித்தட்டுகள்” (Tectonic Plates) எனப்படும் ஏழு பெரும் துண்டங்களாகவும் பல்வேறு சிறு துண்டங்களாகவும் பிரிக்கப் பட்டுள்ளன ! அந்த நகர்ச்சி அடித்தட்டுகள் ஆண்டுக்குச் சதா 1 முதல் 1.8 செ,மீடர் நகர்ந்து செல்வதால், ஒன்றை ஒன்று முட்டி, மோதி, நழுவிக் குதிரை ஏறி எல்லைப் பகுதியில் (Plate Boundaries) தள முறிவுகளை ஏற்படுத்துகின்றன. அவ்விதம் அடுத்தடுத்து ஜப்பான், இந்தோனேஷியா, ஸான்பிரான்சிஸ்கோ, தென்னமெரிக்காவின் பெரு (Peru) நாட்டுப் பகுதிகளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
பூதள விஞ்ஞானிகள் பூமி உட்கருவின் காந்தத் தளத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கத்துக்கு என்ன காரணம் என்பதை நீண்ட காலமாக அறிந்திருந்தார்கள். நமது பூமி மற்ற சூரியக் கோள்களைப் போல் தனது உட்புறப் “பூதள மின் ஜனனியைக்” (Internal Geodynamo) கொண்டு சுயக் காந்த தளத்தை உண்டாக்கிக் கொள்கிறது. பூமியின் மின் ஜனனி சாதாரண மின்சார ஜனனி போல் சுழலும் உட்கருவின் இயக்கத்தால் மின்னோட்டத்தை நிகழ்த்துகிறது. நிலவைப் போல் ஏழு மடங்கு கொள்ளளவுள்ள ஓர் இரும்புத் திரவக் கடல் பூமிக்குள் சுற்றிப் பூதள மின் ஜனனியாக இயங்கி வருகிறது.
பரிதி வடுக்களின் விளைவுச் சமன்பாடு
பூமியின் மாறுதலைப் பற்றி ஒளிக்காட்சி (Earth Change TV) முறையில் அறிவித்து வரும் மிட்சல் பாட்டிரோஸ் (Mitchel Battros) என்பவர் சூரிய வடுக்களின் தீவிரக் காந்த சக்தி பூமியைத் தாக்கி விளைவிக்கும் தீங்குகளுக்கு ஒரு சமன்பாட்டை (Sunspot Effect Equation) எழுதி யிருக்கிறார். அவர் சூரிய மழை (Solar Rain) என்றொரு நூலை எழுதியிருக்கிறார். அவர் தயாரித்த சமன்பாடு கீழே கொடுக்கப் பட்டுள்ளது :
Mitch Buttros Equation :
Sunspots ==>> Solar Flares ==>> (Solar) Magnetic Field Shift ==>> (Earthern) Shifting Ocean & Jet Stream Currents ==>> Extreme Weather & Human Disruption

கடற் தளப்பரப்பு விலகி நகர்தல் !
1962 இல் லாரென்ஸ் மார்லி (Lawrence Morley) என்பவர் கடற்தள விரிவைப் பற்றி முதன்முதல் அறிவித்தைப் பல பூதள விஞ்ஞானிகள் நிராகரித்தார். லாரென்ஸ் மார்லி, அடுத்து டிரம்மண்டு மாத்யூஸ், ·பிரெடெரிக் வைன் ஆகிய மூவரும் கடற்தளம் தொடர்ந்து சீராக ஆண்டுக்கு 2.5 செ.மீடர் வீதத்தில் விலகிக் கொண்டு வருவதாக அறிவித்தனர். அடித்தட்டுகள் விலகும் போது பிளவில் எரிமலைக் குழம்பு கசிந்து பிறகு குளிர்ந்து படிகிறது. அப்போது அவை தமது காந்த முனை அமைப்புகளையும் முத்திரை செய்தன. சராசரி அரை மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை பூகாந்தம் முனைத் திருப்பம் செய்கிறது. அதே போல் கடற்தளப் பாறைகளும் தமது காந்த முனைத் திருப்பங்களைப் பதிவு செய்கின்றன. அதாவது பூமியின் கடற்தளம் ஒரு “பூத நாடாப் பதிவு மானி” (Giant Tape Recorder) போல் இயங்குகிறது ! இவ்விதமாக அனைத்துக் கடற்தளங்களும் வெவ்வேறு காந்த முனைகளைப் பதிவு செய்த பாறைத் துண்டங்கள் கொண்டதாக காணப் படுகின்றன. அந்த கடற்தள அடித்தட்டுகளைத் [Seabed Tectonic Plates] தொடர்ந்து தள்ளிக் கொண்டு நகர்த்தி வருவது பூமியின் உட்கரு வெப்பச் சக்தியே !

>>பூமி சுற்றிக் கொண்டிருக்கிறதே, இதைச் சுற்றிவிட்ட விசை (force) எது? என்பது போன்றது எனது கேள்வி!>>புவி போன்ற கோள்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை கெப்ளர் விதிகள் தெளிவிக்கின்றன.--அன்புடன்பாரதி
தமிழகத்தில் தொல்லுயிரெச்சங்கள்