வேதமும் தமிழ் மறையும்

23 views
Skip to first unread message

thiruthiru

unread,
Aug 1, 2011, 11:37:36 AM8/1/11
to மின்தமிழ்
ஆழ்வார்கள் அருளிய நாலாயிரமும் வேதங்களின் சாரம் என்று பொதுவாகச் சொல்லி
விடுவோம். அது எப்படி என்று யாராவது கேட்டால் நம்மில்
பெரும்பாலானோருக்குத் தெரியாது. இன்னும் சொல்லப் போனால் நாம் இரண்டையுமே
கற்காமல், அனுபவிக்காமல் எத்தன்னையோ இழந்து கொண்டிருக்கிறோம்.
நாம் ,வேதமும் பிரபந்தமும் வேறல்ல ஒன்றே எனத் தெளிவு பெற ஸ்ரீ அஹோபில
மடம் 46ம் பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஸ்ரீரங்கநாத யதீந்த்ர மஹா
தேசிகன் ஸ்வாமி அருள்வதைக் கேட்க

http://thiruppul.blogspot.com/2011/07/14.html

thiruthiru

unread,
Aug 1, 2011, 7:56:19 PM8/1/11
to மின்தமிழ்
திரு மோகனரங்கனாரே!
"நம்மாழ்வார் முதலிய ஆழ்வார்கள் வந்து நாலாயிரம் அருளப் போகிறார்கள்
என்று வேதம்
சூசிப்பிக்கின்றது ஒரு மந்திரத்தால் என்று பல ஆண்டுகளுக்கு முன் கூறியவர்
ஸ்ரீமத் உ வே ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமி அவர்கள்.

ஆனால் அழகியசிங்கர் தாமாகவே சொல்வதுபோல் சொல்கிறார். இன்னார் சொல்வார்,
இன்னாரிடமிருந்து தெரிந்துகொண்ட விஷயம் இது என்று ஆகரம்(reference)
சொல்வது
வழக்கமில்லை போலும். "
இதேபோல் திரு உ.வே.பிரதிவாதி பயங்கரம் ஸ்வாமி மீதும் குற்றம் சுமத்தி,
அது இன்னும் மோசம், அடுத்தவர் எழுதிய ஒரு கட்டுரையையே தான் எழுதியதாகப்
போட்டுக் கொண்டதாக,ஒரு இடத்தில் அதுவும் அவர் வாழ்ந்த காலத்தில் வெளியான
இதழ் ஒன்றில் சமீபத்தில் படித்தேன். அதை ஸ்கான் செய்து இங்கு எப்படி
இணைப்பது என்று தெரியவில்லை. அடியேனுக்கு மின்தமிழ் டைஜஸ்ட் ஆக
வருகிறது.

On Aug 1, 9:55 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> வேதக் கருத்துகளை ஸ்ரீமத் அழகியசிங்கர் கூறுவது நன்றாக இருக்கிறது.
>
> எப்படி ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கும் மேலாக திவய ப்ரபந்தங்களை வேதங்களுக்குச்
> சமானமாக ஸ்ரீவைஷ்ணவம் கொண்டாடி வருகிறது என்பதை நன்கு வலியுறுத்துகிறார்.
>
> ஆனால் நான்கு வேதங்களுக்கும் ஈடாக நம்மாழ்வார் அருளிய நான்கு திவ்ய
> ப்ரபந்தங்களைச் சொல்லுமிடத்து ஏன் இவ்வளவு தடுமாட்டம் என்பது தெரியவில்லை.
> மாற்றி மாற்றிச் சொல்லிக்கொண்டு போகிறார்.
>
> ருக் வேத ஸாரம் -- திருவிருத்தம்
>
> யஜுர் வேத ஸாரம் -- திருவாசிரியம்
>
> அதர்வண வேத ஸாரம் -- பெரிய திருவந்தாதி
>
> சாம வேத ஸாரம் -- திருவாய்மொழி.
>
> சுவாமிகள் இந்தக் க்ரமத்தைப் போட்டு இப்படியும் அப்படியும் மாற்றும் போது பாவம்
> நினைவுக் கோளாறோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது.
>
> மேலும் ஒரு விஷயம்.
>
> நம்மாழ்வார் முதலிய ஆழ்வார்கள் வந்து நாலாயிரம் அருளப் போகிறார்கள் என்று வேதம்
> சூசிப்பிக்கின்றது ஒரு மந்திரத்தால் என்று பல ஆண்டுகளுக்கு முன் கூறியவர்
> ஸ்ரீமத் உ வே ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமி அவர்கள்.
>
> ஆனால் அழகியசிங்கர் தாமாகவே சொல்வதுபோல் சொல்கிறார். இன்னார் சொல்வார்,
> இன்னாரிடமிருந்து தெரிந்துகொண்ட விஷயம் இது என்று ஆகரம்(reference) சொல்வது
> வழக்கமில்லை போலும்.
>
> பத்ரன் இருவருக்குத்தான் சொல்வது என்கிறார். பலபத்ரன் என்று சொல்வதுண்டே.
>
> ஆனால் வேதங்களைப் பற்றி ப்ராசீனமான அத்யயனம் பண்ணுகிறவர்களின் பார்வை என்ன
> என்று திரு திருதிரு அவர்கள் ஒலிப்பதிவுகள் நிறைய செய்வதற்கு ஸ்வாமிகள் ஒரு
> தக்க இடம்.
>
> வேதங்களைப் பற்றிய பேட்டிகளைப் பதிவு பண்ணிப் போடுவாரா திரு திருதிரு.
> எதிர்பார்க்கலாமா?
>
> ஆடியோ லிங்க் தந்தமைக்கு நன்றி.
>
> ***
>
> 2011/8/1 thiruthiru <rajamr...@gmail.com>> ஆழ்வார்கள் அருளிய நாலாயிரமும் வேதங்களின் சாரம் என்று பொதுவாகச் சொல்லி

> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
Aug 2, 2011, 8:38:13 AM8/2/11
to mint...@googlegroups.com
விளங்கவில்லை? யார் காலத்தில் யார், யார் எழுதியதை யார் எழுதியது என்று சொன்னது?
கொஞ்சம் புரியும் படி சொல்லுங்கள் ஐயா!

க.>

2011/8/2 thiruthiru <raja...@gmail.com>:

N. Ganesan

unread,
Aug 2, 2011, 8:42:27 AM8/2/11
to மின்தமிழ்

On Aug 1, 11:55 am, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>


wrote:
> வேதக் கருத்துகளை ஸ்ரீமத் அழகியசிங்கர் கூறுவது நன்றாக இருக்கிறது.
>
> எப்படி ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கும் மேலாக திவய ப்ரபந்தங்களை வேதங்களுக்குச்
> சமானமாக ஸ்ரீவைஷ்ணவம் கொண்டாடி வருகிறது என்பதை நன்கு வலியுறுத்துகிறார்.
>

திவ்விய பிரபந்தங்கள் ஆயிரக்கணக்கான வருஷங்களாகவா உள்ளன?

ஸ்ரீமத் அழகிய சிங்கர் உரையை நீங்களோ, ராஜம் ரகுவோ, இங்குள்ள மற்ற
அடியார்களோ தட்டச்ச வேண்டும். எல்லோருக்கும் படிக்கக் கிடைக்கும்.

அன்புடன்,
நா. கணேசன்

thiruthiru

unread,
Aug 2, 2011, 9:55:58 AM8/2/11
to மின்தமிழ்
மன்னிக்க வேண்டுகிறேன். அது திடீரென ஏற்பட்ட மின்தடையால் அடியேன் சொல்ல
வந்ததை முழுமையாகச் சொல்ல முடியாமல் அரைகுறையாய் நின்று, அன்பின் திரு
ரங்கனார் அடியேனைத் தவறாகப் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்து விட்டது.
விரிவாய் பின்னர் எழுதுவேன். திரு ரங்கனாரும் மற்றவர்களும் பொறுத்து அருள

வேண்டும்.

On Aug 2, 5:38 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> விளங்கவில்லை? யார் காலத்தில் யார், யார் எழுதியதை யார் எழுதியது என்று சொன்னது?
> கொஞ்சம் புரியும் படி சொல்லுங்கள் ஐயா!
>
> க.>
>

> 2011/8/2 thiruthiru <rajamr...@gmail.com>:> இதேபோல் திரு உ.வே.பிரதிவாதி பயங்கரம் ஸ்வாமி மீதும் குற்றம் சுமத்தி,

thiruthiru

unread,
Aug 2, 2011, 3:59:24 PM8/2/11
to மின்தமிழ்
திரு ரங்கனார் ஸ்வாமி,
அடியேன் உம் அளவு ஞானஸ்தன் இல்லை. படித்தவனும் இல்லை. அதனால் மற்ற
விஷயங்களில் நான் நுழையப் போவதில்லை.
உமக்கு சரியாக பதில் கூறும் திறமையுள்ளவர்கள் இங்கு வருவதில்லை.
அது கிடக்கட்டும். எனக்கு எரிச்சல் என்று நீரே கற்பனையாக எழுதுவது
சிரிப்பைத் தான் வரவழைக்கிறது. நான் யாரையும் த்வேஷிப்பவனில்லை.
சில நேரங்களிலே மேடைகளில் பேசுவோருக்கு சில தடுமாற்றங்கள் ஏற்படும்
என்பது பல நேரங்களில் செய்திகளாக அறிகிறோம். அது தவறு என்று சுட்டிக்
காட்டும் உரிமை எல்லாருக்கும் உண்டு. ஆனால் சொல்கின்ற விதங்கள் எப்டி
இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பது அவரவர்கள் நிலையைப் பொறுத்தது
அவ்வளவுதான்.
பிரதிவாதி பயங்கரம் ஸ்வாமி காலத்தில் நான் பிறக்கவில்லை. அவர்
கருத்துக்கள் முழுவதும் நான் படித்தவனுமில்லை. அதனால் அவரைத் தனிப்பட்ட
முறையில் தாக்கவோ அல்லது அவர் நூல்களை விமர்சனம் செய்யவோ நான்
விரும்பவில்லை. படித்த ஒன்றைச் சொன்னேன். அவ்வளவுதான்.
இனி ஜீயர் ஸ்வாமிகள் குறித்து;--
இந்த உரைகள் துவங்குமுன் அவர் என்னிடம் கேட்டது திரு மொழி
வ்யாக்யானங்கள். அவர் விரும்பிக் கேட்டவை பெரியவாச்சான் பிள்ளை அருளியது
கிடைத்தால் பார் அது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும்
பி.ப.அண்ணங்கராச்சாரியார் வியாக்யானங்கள் அவஸ்யம் வேண்டும் என்று
என்னிடம் சொன்னார். அதை இணையத்திலிருந்து தரவிறக்கிக்
கொடுத்திருக்கிறேன். ஒரு வேளை அதை ஸ்ரீ அண்ணங்கராச் சாரியார்தான்
ஆராய்ச்சி பண்ணிக் கண்டு பிடித்திருந்தாலும், பேச்சு ஸ்வாரஸ்யத்தில்
அதைச் சொல்ல மறந்திருக்கலாம். அதை இருட்டடிப்பு என்று நீங்கள் கருத
வேண்டியதில்லை.

இந்த அனுக்ரஹ பாஷணங்கள் சின்ன ஜீயர் ஆஸ்ரமத்தில் மாலை நேரங்களில்
நடக்கிறது. நேரில் கேட்பவர்கள் நாங்கள் ஒரு சிலரே.வெளியூரிலிருந்து வரும்
ஸேவார்த்திகளில் சிலர் ஒரு வேளை இங்கு தங்கி மறுநாள் போகிறவர்களாக
இருந்தால் வந்து கேட்பார்கள். அப்படி ஒரு அம்மணி-- ஏதோ தென்கலை என்று
இளப்பமாக ஆரம்பித்தாள்.அவள் என்ன சொல்ல வந்தாள் என்றுகூட ஜீயர்
கேட்கவில்லை. வாங்கு வாங்கென வாங்கி விட்டார்.அப்படி அந்த அம்மணியைத்
திட்டும்போது அவர் சிலாகித்தது அந்த நாள் பிரதிவாதி ஸ்வாமியில்
ஆரம்பித்து இந்த நாள் வேளுகுடி ஸ்வாமி வரையிலும்தான். இனி ஒரு முறை இந்த
மாதிரி எதுவும் எங்கும் பேசாதே என்றுதான் சொல்லி அனுப்பினார். ஆக
அவருக்கு உண்மையிலேயே ஸ்ரீ அண்ணங்கராச்சாரியார்தான் வேதக் கடலிலே
புகுந்து ஆராய்ச்சி பண்ணி பிறர் யாருமே அறிந்திராத விஷயத்தை முதன்
முதலில் உலகுக்குச் சொல்லியிருந்தாலும் அதை வேண்டுமென்றே மறைத்திருக்க
வாய்ப்பில்லை.
திரு நா.கண்ணன் ஸ்வாமி,
யார் யார் யார் என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருக்கிறீர்கள். படித்த ஒன்று
கிரந்தம் கலந்து வருவதால் உங்கு தண்ணச்சு செய்தாவது அதை இடுவோம் என்றால்
அதற்கும் முடியாமல் இருக்கிறது.
நக்கீர ரங்கனார் கொஞ்சம் மென்மையாகவே கண்டனங்களை இடலாம் என்பது அடியேன்
கருத்து.
அப்புறம் ரங்கனாரே!
(ஆனால் இதே அழகியசிங்கர், தேசிகன் ரஹஸ்யத்ரய ஸாரத்தில் ஆழ்வார்கள்
என்னதான்
பெரும் ஞானவான்கள் என்றாலும் அவர்களிடத்தில் வர்ணாஸ்ரம ரீதியான ஜாதி
வ்யவஸ்தையைப் பார்த்தேயாக வேண்டும். அவர்கள் என்னதான் ஞானவான்களாயினும்
ஜாதி
போகாது என்று சொல்லி, உதாரணமாக, பசுவையும், மாதா என்பதையும் வைத்துக்
கொடுத்துள்ள விளக்கங்களுக்கு என்ன சொல்வார்? என்ற கேள்வியும் கூடவே
எழுந்தது.
சரி நமக்கு எதற்கு வம்பு என்று விட்டுவிட்டேன்)
இந்த தேசிகன்தான் நீர் ஏற்காத ஒன்றைச் சொல்லியிருக்கிறாரே! அவரை ஒதுக்கி
விட வேண்டியதுதானே! எதற்காக அவர் இயற்றியதைத் தமிழாக்கி
சிரமப்படவேண்டும்? அதுவும் உம் தெளிந்த கருத்துப் படி அவர்தான்
ஆழ்வார்களையே இழிவு படுத்தியிருக்கிறாரே!

Innamburan Innamburan

unread,
Aug 2, 2011, 6:12:24 PM8/2/11
to mint...@googlegroups.com

நண்பர் திரு. திரு திரு அவர்களுக்கு,
புரிகிறது. இங்குள்ள சர்ச்சையில் தலையை கொடுக்கும் அளவுக்கு, எனக்கு ஆர்வமில்லை. பிரதிபலன்களை தாங்கும் தேக பலமும் இல்லை. சிந்தனைகளின் வம்சாவளியை பற்றி, 'காக்கேபெறேஸென்ப்' என்ற இழையில் சில நாட்கள் முன்னால் எழுதியிருந்தேன். பெரியவர்கள் மற்றவர்கள் கருத்துக்களை எடுத்தாளும் போது, மூலம், ஆதாரம், சான்றுகள், நன்றி நவிலல் ஆகிய பண்புகளை பின்பற்றுவது உத்தமம். அந்த காலத்தில், டா. ராதாகிருஷ்ணன் என்ற உலக பிரபல தத்துவ ஆசிரியர் நமது அதிபராக இருந்தார். எனக்கு அவர் மீது மிக்க மரியாதை உண்டு. டா. நாகராஜ சர்மா என்ற தத்துவ ஆசிரியர், கொஞ்சம் கூட சளைக்காமல், விடாக்கொண்டனாக, டா. ராதாகிருஷ்ணன் எங்கு எங்கெல்லாம் இரவல் வாங்கிய கருத்துக்களை, மூலம், ஆதாரம், சான்றுகள், நன்றி நவிலல், இல்லாமல் தனதாக பதிப்பிக்கிறார் என்று ஹிந்து இதழில் எழுதுவார். அவர்களும் போடுவார்கள். டா. ராதாகிருஷ்ணனும் கண்டு கொள்ளமாட்டார்.

நீங்கள் அனுமதித்தால், என்னுடைய இந்த இடுகையை, அறிமுகத்துடன், 'காக்கேபெறேஸென்ப்' என்ற இழையிலும் பதிவு செய்வேன்.
நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்
02 07 2011

N. Kannan

unread,
Aug 2, 2011, 7:03:18 PM8/2/11
to mint...@googlegroups.com
2011/8/3 thiruthiru <raja...@gmail.com>:

> நக்கீர ரங்கனார் கொஞ்சம் மென்மையாகவே கண்டனங்களை இடலாம் என்பது அடியேன்
> கருத்து.

அன்பின் திருதிரு

நம்ம ரங்கனை நாம் அறியாததா?
தமிழின் பால் உள்ள ஆழ்ந்த பற்றின் காரணமாக, ஆழ்வாராதிகளின் பனுவலில்
திளைக்கும் குழந்தையாக உள்ள அவருக்கு தன் தாயைப்பற்றி ஒரு மாத்து
குறைவாய் சொன்னால் கூட பொறுக்காது.
கோபம் இருக்கும் இடத்தில்தானே குணம் இருக்கும்.
அவருக்கு இசப்பாட்டு பாட ஆள் இல்லை என்ற குறை எனக்கும் உண்டுதான் :-))
அவருக்கு வயதிற்கு மீறிய ஞானம். யாருக்கும் அஞ்சா நெஞ்சுரம். என்ன
செய்வது பாரதி, கவிஞர் (திருலோகம்) வழியில் வருபவர். அப்படித்தான்
இருக்கும்.
இவர்கள் அதிசயப்பிறவிகள். காந்தி பாரதியைப் பற்றிச் சொன்னது போல் நாம்
தான் இவர்களை அணுசரித்து அன்பு காட்ட வேண்டும்.
பொலிக! பொலிக! பொலிக!
போயிற்று வல்லுயிர் சாபம்!
கலியும் கெடும்!

நா.கண்ணன்

Mohanarangan V Srirangam

unread,
Aug 2, 2011, 10:45:10 PM8/2/11
to mint...@googlegroups.com
>>>நக்கீர ரங்கனார் கொஞ்சம் மென்மையாகவே கண்டனங்களை இடலாம் என்பது அடியேன்
கருத்து.<<< 

நக்கீரர் எல்லாம் இல்லை ஸ்வாமி. ஏதோ தோன்றுவதை எழுதிவிட்டு இப்படி தத்துப் பித்து என்று மாட்டிக்கொள்ளும் அப்பாவி ஜீவன் அவ்வளவுதான். 

உங்கள் மனத்தை மிகவும் வருத்தியிருக்கிறேன் என்று தெரிகிறது. மன்னித்துக்கொள்ளுங்கள். 

நேற்று இந்த இடுகை உம் இடுகையோடு க்ராஸ் ஆகியிருக்கிறது. முதலில் உம் இடுகை எனக்கு வந்து சேர்ந்திருந்தால் இதை அனுப்பியிருக்க மாட்டேன், மன்னிக்கவும். 

***


2011/8/3 thiruthiru <raja...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Innamburan Innamburan

unread,
Aug 3, 2011, 1:45:26 AM8/3/11
to mint...@googlegroups.com
இசப்பாட்டு பாட அச்சம்.

N. Kannan

unread,
Aug 3, 2011, 9:03:37 AM8/3/11
to mint...@googlegroups.com
அறிவு இருக்கும் இடத்தில் அச்சதிற்கு ஹேது ஏது?

க.>

2011/8/3 Innamburan Innamburan <innam...@gmail.com>:

Mohanarangan V Srirangam

unread,
Aug 3, 2011, 10:06:04 AM8/3/11
to mint...@googlegroups.com
என்னைக் கண்டு அச்சப்படுகிறேன் என்று இ சார் சொல்வதற்குப் பதிலாக என்னை இரண்டு அடி அடித்திருக்கலாம். பலருடைய வருத்தங்களைச் சம்பாதித்துக் கொள்கிறேன். அப்புறம் என்ன ஆன்மிகம் வேண்டிக் கிடக்கிறது என் பவுசுக்கு என்று புரியவில்லை. :-(( 


2011/8/3 N. Kannan <navan...@gmail.com>
Reply all
Reply to author
Forward
Message has been deleted
Message has been deleted
0 new messages