அடியேன் திக்குமுக்காடிவிட்டேன்.
~
“...“இவர்கள் மூவரும் கூடி நிற்கச் செய்தே இவர்கள் அளவல்லாதபடியே அவர்க்கும் இடம் காண வேண்டும்படி ‘நீயும் திருமகளும் நின்றாயால்’ என்கிறபடியே, ஸர்வேஸ்வரனும் பிராட்டியும் கூட நெருக்க, இவர்களிலேயொருவர், ‘இஃது இருந்தபடியென்? நாம் மூவருமே என்றிருந்தோம். அவ்வளவன்றிக்கே இருந்ததீ ! இது விளக்கேற்றிப் பார்க்க வேண்டி யிருந்ததீ !’ என்ன, அவர்களிலே ஒருவர் ஸவிபூதிகனான ஸர்வேஸ்வரனை ஒரு விளக்காக ஏற்ற, மற்றையவர் தத் விஷயத்தில் பக்தியை ஒரு விளக்காக ஏற்ற, அநந்தரம் மற்றையவர் ஸாக்ஷாத்காரத்தாலே அநுபவித்தாராயிருக்கிறது...”
இது மொழி நடையா? தத்துவ விசாரணையா? பக்தி மஞ்சரியா? ஆழ்கடலில் மூழ்கி நித்தியசுகானுபவம் போல.
~
மனிதருக்குப் பொறி தட்டியிருக்கிறது: பழம் நழுவினால் போதாது; பாலில் விழுந்ததே; அதை சொல்லும்.
~
ஶ்ரீரங்கம் மோஹனரங்கன் வந்துட்டார்! வந்துட்டார்! வந்துட்டார்! யார்ரா! மோளம் கொட்றது? கெட்டி மேளம்! கெட்டி மேளம்! ஹே! கெட்டி மேளம்!
இந்த அரிய நூலை வாங்கி வர ஏற்பாடு ஆகிறது. இந்த பூலோகத்தில் எங்கு இருந்தாலும் தெண்டன் சமர்ப்பித்த வண்ணமிருக்க ஹேதுவாயிற்று.
இன்னம்பூரான்
09 02 2012அச்சின் இடைகழியிலே இந்த அருமையாகிப் போன வ்யாக்யானத்தை அழகிய பதிப்பாக்கி விளக்கேற்றி வைத்திருக்கிறார் திரு வேங்கடகிருஷ்ணன்.
நம் வேலை திருக் கண்டேன்; பொன் மேனி கண்டேன் என்று மகிழ வேண்டியதுதான்.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
பல நூற்றாண்டுகளாக ஓலைச் சுவடிகளில் மறைந்திருந்து, அச்சு ஏற்றத்தையும், வழிவழியான நூல்படிப்பு நெறியினரின் கண்களையும் தப்பித்து இந்த வ்யாக்யானம் இருந்து வந்திருப்பது ஆச்சரியம்தான்.
--
பல நூற்றாண்டுகளாக ஓலைச் சுவடிகளில் மறைந்திருந்து, அச்சு ஏற்றத்தையும், வழிவழியான நூல்படிப்பு நெறியினரின் கண்களையும் தப்பித்து இந்த வ்யாக்யானம் இருந்து வந்திருப்பது ஆச்சரியம்தான்.
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*

அன்பு மோகனரங்கம்,எனக்கு ஒரு சந்தேகம். சரம ஸ்லோகம் என்பது என்ன? இது நாள் வரை சரம ஸ்லோகம் என்பது ஒருவர் இறந்த பின் அவர் பெருமைகள் குறித்து பாடப்படும் வரிகள் என நினைத்திருந்தேன்.இது பற்றி ஒரு கதையும் கேட்டுள்ளேன். ஒரு அரசன் ஒரு புலவரை அழைத்து தன்னைப் பற்றி ஒரு சரம ஸ்லோகம் பாடச் சொல்கிறான். புலவர் மறுக்கிறார். மன்னன் கட்டாயப் படுத்திட வேறு வழியின்றி அவரும் பாடுகிறார். அவர் பாடி முடிக்கும் தருணம் மன்னன் இறந்து விழுகிறான். இறந்த அரசன் யார், பாடிய புலவர் யார் என்பதெல்லாம் மறந்து விட்டது.சிரித்திடாதீர்கள் என் அறிவுக் குறைவு குறித்து. விளக்கம் தந்திடுங்கள் எனக்கு.
தங்கள் மீள் வருகைக்கு நன்றி. மீண்டும் அந்தர்தியானமாகிவிடுவேன்
என்றெல்லாம் பயமுறுத்த வேண்டாம்:-) இந்த மண்ணில் சத்யத்தைப் பேசுவோர்
குறைந்து வரும் வேளையில் வேதங்களை இயற்றிய வேத வியாசரே தலையில் அடித்துச்
சத்தியம் செய்யும் விஷயங்களை எங்களைப் போன்ற அறிவிலிகளும் புரிந்து
கொள்ளும் வண்ணம் எழுதும் உங்கள் எழுத்து ஓர் சேவை. எனவே தொடர்ந்து
எங்களுடன் இருந்து ஜீவன் உய்விக்கும் வழிதனைக் காட்டுவீர்.
இந்த அன்பர் (நடராஜன்) செய்வதே சரி. தெரியாத விஷயங்களைக் கேட்டுட்
தெளிதல் மதி. நம்மில் பலர் அபிப்பிராயங்களே உண்மை என்று மதி மயங்குவதைக்
காண்கிறேன். தங்களுக்கு இன்று ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக அறிவுத்
தேட்டமுடைய ஒரு சம்பிரதாயம் பெரும் தனமாகக் கிடைத்துள்ளது. அதைத் தாங்கள்
மின்வெளியில் விநியோகம் செய்வது எங்கள் நல்லூழ். வாழ்க!
நா.கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இது சும்மா நடுவில் எட்டிப் பார்த்தல்.
On Feb 9, 6:23 am, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> பல நூற்றாண்டுகளாக ஓலைச் சுவடிகளில் மறைந்திருந்து, அச்சு ஏற்றத்தையும்,
> வழிவழியான நூல்படிப்பு நெறியினரின் கண்களையும் தப்பித்து இந்த வ்யாக்யானம்
> இருந்து வந்திருப்பது ஆச்சரியம்தான்.
>
அரிய கண்டுபிடிப்பு. நம்மாழ்வார் ஆரியத்தமிழால்
சங்கம் வென்ற அகவல் சென்ற நூற்றாண்டில் கண்டறியப்பட்டது. அதில்
சொல்லப்படும் பெருமரம்
- யால் (ஆலமரம்) பரிபாடல் சொல்லும் வேதப்பொருள்.
ஆமா தொடர்பும் அரிதானது. ஆரியத்தமிழை விளக்கும்
அரியசொல் ஆமா. நம்மாழ்வார் அகவல் ஏட்டில்
கிடைத்ததுபோல், ஸ்ரீவைஷ்ணவர்கள் நம்பிள்ளை படியை
தேடியெடுத்து அச்சிட்ட அமுதான சேதியை எங்களுக்கு
அளிப்பதற்கு நன்றி.
திருமிகு. வேங்கடகிருஷ்ணன் போல் தமிழ்ப் பேராசிரியர்கள்
பாடுபட்டால் இன்னும் எத்தனையோ கருவூலங்கள்
தமிழன்னைக்குச் சேரும். பல பிரபந்தங்கள், தலபுராணங்கள்,
வ்யாக்கியானங்கள் ‘கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே
வேரில் பழுத்த பலா’ நிலையில் உள்ளன.
முனைவர் நா. கண்ணன் தமிழ்நாட்டில் இருக்கும்போது
பேரா. வே. ரா. மாதவனைத் தமிழ்ப் பல்கலையில் பேட்டி
காண வேண்டும். ஏடு தேடி அளிக்கும் அ. சுகுமாரன் அவர்களின்
முயற்சியால் கிட்டிய பண்டில்களில் ஏதாவது இலக்கியம்,
இலக்கணம், உரைகள் சிக்கினவா என்று வே. ரா. மாதவன்
போன்றோர் அறிவித்தால் மகிழ்வு.
நிறைய எழுதுங்கள்.
நல்ல தமிழில் எழுதுவோர் இணையத்தில்
உங்களை முன்மாதியாய்க் கொண்டு இன்னும்
அதிகம்பேர் முன்வரணும்.
அன்புடன்
நா. கணேசன்
> ஸ்லோக நுட்பங்கள் இடத்திற்கு ...
>
> read more »
பல நூற்றாண்டுகளாக ஓலைச் சுவடிகளில் மறைந்திருந்து, அச்சு ஏற்றத்தையும், வழிவழியான நூல்படிப்பு நெறியினரின் கண்களையும் தப்பித்து இந்த வ்யாக்யானம் இருந்து வந்திருப்பது ஆச்சரியம்தான்.
பல நூற்றாண்டுகளாக ஓலைச் சுவடிகளில் மறைந்திருந்து, அச்சு ஏற்றத்தையும், வழிவழியான நூல்படிப்பு நெறியினரின் கண்களையும் தப்பித்து இந்த வ்யாக்யானம் இருந்து வந்திருப்பது ஆச்சரியம்தான்.
..
அச்சின் இடைகழியிலே இந்த அருமையாகிப் போன வ்யாக்யானத்தை அழகிய பதிப்பாக்கி விளக்கேற்றி வைத்திருக்கிறார் திரு வேங்கடகிருஷ்ணன். நம் வேலை திருக் கண்டேன்; பொன் மேனி கண்டேன் என்று மகிழ வேண்டியதுதான்.
முதல் மூன்று திருவந்தாதிகளுக்கு உரை விரிவாகவும், நான்முகன் திருவந்தாதிக்குச் சிறிது சுருக்கமாகவும் நம்பிள்ளைபடி அமைந்திருக்கிறது.பொதுவாக திருமந்திரம், த்வயம், சரம ஸ்லோகம் என்று ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய நுட்பங்கள் சூர்ணைகளின் வடிவில் நூல்களாக ஆனது பிள்ளை லோகாச்சாரியாரின் காலத்தை ஒட்டித்தான். சற்று முன்னர், பின்னர் என்றபடி. பகவத் விஷய வ்யாக்யானங்களிலும், மற்றைய திவ்ய பிரபந்த உரைகளிலும் ரஹஸ்யங்கள் என்னும் மேற்கூறிய மூன்று நுட்பங்களின் பொருள் சிறப்புகள் விரவித் துலங்கிக் கிடக்கும். நம்பிள்ளை படியிலோவெனில் ரஹஸ்யார்த்தங்களான திருமந்திர, த்வய, சரம ஸ்லோக நுட்பங்கள் இடத்திற்கு இடம் விளக்கெரித்துக் காட்டப் படுகின்றன. இந்த அம்சம் இந்த நூலின் காலத்தைச் சரிவர கணக்கிடப் பயன்படலாம்.நம்பிள்ளை செய்ததோ அன்றி அவர் காலத்தை ஒட்டிப் பின்னர் வந்த மகனீயர்கள் யாரேனும் செய்ததோ நிச்சயம் இந்த வ்யாக்யானம் ஒரு விசேஷமான வ்யாக்யானம். There is very large presence of Nampillai in and through this commentary.இந்த நூலின் அர்த்த விசேஷங்களைத் தொடர்ந்து இந்த இழையில் எழுதுவதாக எண்ணம்.நூல் விவரம் :-நம்பிள்ளை படி - இயற்பா வ்யாக்யானம்(முதல் நான்கு திருவந்தாதிகள்)டாக்டர் M A வேங்கடக்ருஷ்ணன்,(பேராசிரியர், துறைத்தலைவர்,வைணவத்துறை, சென்னைப் பல்கலைக் கழகம்)ரூ 400 . 00 (ரூபாய் நானூறு மட்டும்)கீதாசார்யன்7, தெற்கு மாட வீதி,திருவல்லிக்கேணி,சென்னை 600005போன் 28441653***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இதே வாய் நாளைக்கு ‘நீ டாக்டரா’ என்று கேட்கும்போது உதவியாக இருக்கும். :)
--
அன்புடன்,
ஹரிகி.