தூபம் (சாம்பிராணி) புகைப்பொருளுக்குப் பயனாகும் சுருளி/சுள்ளி (Hardwickia Pinnata) மரம் பற்றி விரிவாகப் பார்த்தோம். இந்தச் சுருளி/சுள்ளியை சாம்பிராணி மரம் என்பர். இந்தச் சுள்ளிமரம் குடகில் இருந்து குமரி வரை உள்ள (endemic) பெருமரம். இதனை ஆச்சா மரவகை என்றார் நச்சினார்க்கினியர். முதலாம் ராசேந்திரன் மெய்க்கீர்த்தியில் “சுள்ளி சூழ்மதில் கொள்ளிப் பாக்கையும்” எனப் புகழப்படுவது. இப் பெரிய சுள்ளிமரம் சாலமரம் (சங்க இலக்கிய யா மரம், shorea robusta = யா/ஆ/ஆச்சா (பிங்கலந்தை) ) போலப் நீண்டு வளர்வது. எனவே, கோட்டை மதில்கள் அமைக்கப்பயன்பட்டுள்ளதைச் சோழ மகாராசன் மெய்க்கீர்த்தி காட்டுகிறது. சுள்ளியம் பேரியாறு (சூர்ணி) என்ற கேரளாவின் பெரிய ஆற்றின் பெயர் தரும் இது. சுருளிமலைப் பகுதியில் முல்லைப்பெரியாறு எனத் தோன்றி, கொடுங்கோளூர் அருகே கடலில் கலக்கும் பெருநதிக்கு இப் பெருமரம் பெயர் தருகிறது. சுள்ளியம்பேரியாறு/சுள்ளியாறு இன்று பெரியாறு எனக் கேரளாவில் பெயர்.
பழைய தமிழ் இலக்கியங்களிலே, நாகம் என்ற மரம்பற்றிச் செய்திகள் உண்டு.:
நாக நறுமணம் - பெருங்கதை
நல்லிணர் நாகம் நறவம் சுரபுன்னை - பரிபாடல்
நறும்போது கஞலிய நாகு முதிர் நாகத்து - சிறுபாண்
ஒளிதிகழ் உத்தி உருகெழு நாகம் - பரிபாடல்
அதாவது, பாம்புப் படத்தில் உள்ள பொரிகள் போல, நாக மரத்தின் பூக்கள் இருப்பவை. வடமொழியில் இம்மரப் பெயர் ‘நாககேசரம்’. தமிழில் நாககேசரம் > நாகேசுரம் என்று வழங்குகிறது.
நாகம் (நாககேசரம்) - தமிழ்ச் சங்க இலக்கியத்தில்
Sri Lankan ironwood, Indian rose chestnut, or cobra's saffron
”The flowers are 4-7.5 cm diameter, with four white petals and a centre of numerous yellow stamens. The flowers have many uses - they are used to make an incense and also used to stuff pillows in some countries.”
“Also known as Ceylon Ironwood, Penaga Lilin and many other names, this is a medium to large evergreen tree that can reach up to 36 meters tall and originated from Sri Lanka. The young leaves are usually red in colour, turning greyish-green when mature.It has smooth barks but sometimes scaly (as in the picture below), exuding aromatic white resin when bruised. The thing about its flower is that it only blooms during dry season and lasts only for a day. The flower may blossoms as early as 3 a.m. and closes just before sunset. After some times, it bears round fruit that is dehiscent (the type of fruit that split opens when ripe).”
”While the incense sticks made from the flowers of this plant are popular worldwide for their intense fragrance”
சங்கத் தமிழில் நாகம் எனப்படும் இம்மரம் (Cobra's Saffron)
பூக்கள் நறுமணம் மிக்கவை. ஊதுவத்தி தயாரிப்பில் பயன்படுவதுண்டு.
எனவே, சுருளி என இதனை அழைப்பதும் உண்டு. தூப நறுமணப் பொருளால்
சுருளி/சுள்ளி என்று முதன்மைப் பெயர் சங்கத்தில் பெறுவது Hardwickia Pinnata மரம்தான்.