TEIDCO Foundation - ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட அமைப்பு. அதன் ஐந்தாவது மாநில மாநாடு நேற்று காரைக்குடியில் நடைபெற்றது.
தமிழ்நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களில் சிறு தொழில் மட்டுமன்றி பல்வேறு வகையான உயர் ரக வணிக முயற்சிகளில் இயங்கி செயல்பட்டு வரும் பலரையும் ஒன்றிணைத்து முன்னோக்கி கொண்டு செல்வதில் இந்த அமைப்பு சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது.
இந்த அமைப்பின் தலைவர் திரு சுந்தரவடிவேல் உலக நாடுகள் பலவற்றில் பணியாற்றி அனுபவம் பெற்ற பொறியாளர். குழுவில் இணைந்து செயல்படும் ஒவ்வொருவரும் மட்டுமின்றி திரு. கோவி பார்த்திபன் அவர்களும் இணைந்து நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் எனக்கு அன்னை ரமாபாய் விருதை வழங்கினார்கள்.
மக்களின் நலனுக்காக சீரிய திட்டங்களை வகுத்து செயலாற்றி வரும் இந்த அமைப்பின் செயற்குழுவினருக்கு எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
-சுபா
21.12.2025