"வள்ளுவம் ஏன் வாழ்வியலாகவில்லை? தீர்வுகளை நோக்கி. ". என்ற எமது நூலில் வள்ளுவத்தை "துறைசார் வள்ளுவமாக " 20 + துறைகளுக்கு தனித்தனியே நூல்களாக வெளியிட்டு அவற்றை அந்தத் துறைசார் மக்களிடம் தொடர்ந்து கொண்டுசெல்ல வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன்.
அதையொட்டி இந்தத் தேர்தல் சமயத்தில் "வழிகாட்டும் வள்ளுவம்: தலைவர்களுக்கு" என்ற நூலை 112 பக்கத்தில் , 285 திருக்குறள்களை தேர்ந்தெடுத்து தொகுத்து வெளியிடலாம் என்று சிந்தித்த நிலையில் 2000 நூல்களை அச்சிட்டுத் தாருங்கள், 234 தொகுதிகளில் நிற்கும் நான்கு முக்கிய கட்சிகளுக்கும், சுயேச்சை வேட்பாளர்களுக்கும் சேர்த்து 2000 வேட்பாளர்களுக்கு கொண்டுசேர்க்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று ஒரு போட்டித்தேர்வு நிறுவனம் பொறுப்பேற்றது.
அதையொட்டி நூல்கள் அச்சடிக்கப்பட்டு ஒரு வாழ்த்துக் கடிதத்துடன் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களில் அனைத்துத் தொகுதி வேட்பாளர்களுக்கும் நேரில் நூல் மாணவர்களால் கையளிக்கப்படும். அனைத்தும் புகைப்படம் எடுத்து முகநூல், insta வில் #Thirukkural4leadership
#leadershipKural4MLAs
#தலைவர்களுக்குதிருக்குறள் ஆகிய hashtag -களுடன் பதிவிடப்படும். திருக்குறளை தலைவர்களுக்குப் பரப்பும் சிறு முயற்சி..
தலைமைப் பண்புகள் குறித்த பயிற்சியை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உலகத் தமிழ் அமைப்புகள், பொது வாழ்க்கைக்கு வருபவர்களுக்கு 10 மணி நேரம் வழங்கவும் திட்டமிட்டுள்ளேன்..
தேவையானவர்கள் பதிவுசெய்ய :
https://www.valaitamilacademy.org/course_leadership-qualitiesஇதற்காக இந்நூல் குறள் பார்வையிலும், மற்றொன்று பொதுவான கருத்துகளையும் உள்ளடக்கி பயிற்சி வழங்கப்படும்.
நூலைப்பெற:
www.KuralAngadi.com