கோவை அய்யாமுத்து

9 views
Skip to first unread message

தேமொழி

unread,
Dec 20, 2025, 10:24:55 PM (24 hours ago) Dec 20
to மின்தமிழ்

aiyaamuthu.jpg

கோவை அய்யாமுத்து
அயர்வறியா உழைப்பாளி என்று,காந்தியடிகளால் போற்றப் பட்டவர்.கதர் அய்யாமுத்து என்று அறியப்பட்டவர். சுதந்திரப் போராட்ட வீரர்.இவரும்,இவர் மனைவி கோவிந்தம்மாள் இருவரும் சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்றவர்கள்.ராஜாஜி, பெரியார் இருவரிடமும் அணுக்க மாக இருந்தவர்.
வைக்கம் போராட்டத்தில் பெரியார் சிறை சென்றவுடன்,அடுத்தநாள் இவர் பங்கேற்று போராட்டம் தொடர்ந்தது.
குடியரசு பத்திரிகையை ஈரோட்டில் இருந்து,சென்னைக்கு மாற்றி நிர்வகித்தவர்.
""ராஜாஜி என் தந்தை ", " காந்தி தரிசனம் ", ""நான் கண்ட பெரியார் "" உள்பட பல நூல் ஆசிரியர்.இவரது
""எனது நினைவுகள் "" என்னும் நூல் வரலாற்றுப் பெட்டகம் ஆகும்.
மலைக்கள்ளன் என்ற திரைப்படத்தில்
"எத்தனை காலம்தான் ஏமாற்றுவா ர் இந்த நாட்டிலே ""-- இந்தப் பாடலின் பல்லவி தஞ்சை ராமையா தாஸ் அவர்களுடையது.பின்னர் அவர் விலகிவிடவே, மீதி பாடல் இவர் எழுதியது.
1947 லேயே கஞ்சன் என்ற திரைப் படம்
திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி,தயாரித்தவர்.
நேர்மையாளர்.
கிணத்துக்கடவு அருகே உள்ள இவரது
தென் னம் தோப்பு ( சுமார் 16 ஏக்கர் )
ராஜாஜி இல்லம் என்ற அவர் வீடு அத்தனையும், தமிழ்நாடு சர்வோதய சங்கத்துக்கு அளித்தவர். அங்கே உள்ள தோப்பில் கோவை அய்யாமுத்து,கோவிந்தாம்மாள் இவர்களின் எளிய சமாதிகள் உள்ளன.
இவர் 21.12.1975 ல் காலமானார்.
இன்று அவர் நினைவு நாள்.
நினைவு அஞ்சலிகள்.


பின் குறிப்பு :: தற்போது சீரமைக்கப் பட்ட peoples park அன்னபூர்ணாவில் சுவர் ஓவியமாக பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் படம் உள்ளன..
இவர் படம் இல்லாதது ஒரு குறையே.
அதே போல் கோவை RS புரம் DB சாலையில் ஆங்காங்கே நகர பிரமுகர்கள் படம் வைத்திருப்பதிலும் இவர் படம் மிஸ்ஸிங்.

ஏறத்தாழ 40 ஆண்டுகள் முன்பே, பொள்ளாச்சி மகாத்மா காந்தி திருமண மண்டபத் தில், இவரது உருவம் சுவர் ஓவியமாக வரையப் பட்டுள்ளது.

இவர் என் தாயாரின் சித்தப்பா ( என் சின்ன அப்புச்சி ) ஆவார்.

Reply all
Reply to author
Forward
0 new messages