ஆயா / தாய்

309 views
Skip to first unread message

N D Llogasundaram

unread,
Dec 25, 2010, 7:53:18 AM12/25/10
to mint...@googlegroups.com
திருமதி கமலம் அவர்களுக்கு
 
ஆயா எனும் சொல் பல இடங்களில் வெவ்வேறு  விதமாகப் பயன் படுகிறது
 
வடக்கு தமிழகத்தில் ஆயா என்றால் பாட்டி = தந்தை வழியும் தாய் வழியிலும் பொது வழக்கு
 
மேலும் பொதுவாக வயது நன்கு  முதிர்ந்த பெரியோர் களைக் குறிக்கவும் பயன்படுகின்றதும் அறிவீர்கள்
 
தென் தமிழகத்தில் ஆய்ச்சி >>> ஆச்சி  எனும் சொல் ஏறத் தாழ அப்பொருளில் வழங்குகிறது
 
வட இந்தியாவில் தாதா தாதி என்றால் அப்பாவழி பாட்டன்-பாட்டி 
                                     நானா   நானி  (#)   என்றால் அம்மாவழி பாட்டன்-பாட்டி
 
ஏறக்குறைய இதற்கு இணையாக தமிழகத்து சில ஊர்களிலும் இலங்கையிலும்
                                      அப்பப்பா அப்பம்மா அம்மம்மா  அம்மப்பா போன்ற
                                      புது வடிவங்கள் தோன்றி   உள்ளன பற்றியும் அறிவீர்கள் 
 
                   ஆயா எனும் சொல் ஆங்கிலோ இந்தியர்களால் அவர்கள் வீட்டில்
                   குழந்தைகளை பார்த்துக் கொள்ள மற்றும் சிறு சிறு வீட்டு வேலைக்கு
                  வைத்துக் கொண்ட  பெண்ணை  குறிக்கவும்  மாறி உள்ளது அச்சொல்
                   ஆங்கில அகராதியிலும் அப்பொருளிலேயே குறிக்கப்படும் அளவிற்கு சென்றுள்ளது  
 
                சில காலங்களில்/இடத்தில் மகப்பேறு காலத்தில்  அல்லது மருத்துவமனையில்
               உதவிக்கு வரும் மகளிரை   ஆயா என அவர் செய்யும் பணி யினால் அழைப்பது காணலாம்
  
 
    பழங்கால தமிழ் நுல்களில்
          அன்னை அத்தன்
          அம்மை அப்பன்
           தாய் தந்தை
         எனும் சொற்களே பெற்றோர்களைக் காட்டுவதாக  உள்ளன.
 
             இதனில் தாய் எனும் சொல்
              தை எனும் வயிற்றினைக் குறிக்கும் சொல் வழி பிறந்துள்ளது
                    தையல் - தையலாள் > > > > > மகப்பேறு பெற்றவள் 
                               (தனித்தன்மையால் வயிறு   சிறுத்த புலிவகை சிறுத்தை   எனப் பட்டது)
 
           வட மொழிலும் சகோதரன் சகோதரி எனும் சொற்கள்
                     உதரம் = வயிறு எனும் சொல்வழியே தான் பிறந்துள்ளது 
                      + தரன் = கோதரன் = ஒரே வயிற்றினில் உதித்தவர்கள்
                                          அ , ஆ  முன் உ , ஊ   வர ஓர்  'ஓ'  தோன்றும்
                                          (வடமொழி புணர்ச்சி இலக்கணம் )
                                          புருஷ + உத்தமன் = புருஷோத்தமன் போன்று                                
   
                                  ##   
                                    (இதனை 'நாநா' 'நாநி'  என்று எழுதுவதே மிகச்சரியான transliteration ஏனெனில்
                                      வடமொழியில் இரட்டைச்சுழி 'னகரம்' கிடையாதே / (X)சீனிவாசன் - ஸ்ரீநிவாசன் போல்

N. Ganesan

unread,
Dec 25, 2010, 8:16:13 AM12/25/10
to மின்தமிழ்

On Dec 25, 6:53 am, N D Llogasundaram <selvindl...@gmail.com> wrote:
> திருமதி கமலம் அவர்களுக்கு
>
> ஆயா எனும் சொல் பல இடங்களில் வெவ்வேறு  விதமாகப் பயன் படுகிறது
>
> வடக்கு தமிழகத்தில் ஆயா என்றால் பாட்டி = தந்தை வழியும் தாய் வழியிலும் பொது
> வழக்கு
>
> மேலும் பொதுவாக வயது நன்கு  முதிர்ந்த பெரியோர் களைக் குறிக்கவும்
> பயன்படுகின்றதும் அறிவீர்கள்
>
> தென் தமிழகத்தில் ஆய்ச்சி >>> ஆச்சி  எனும் சொல் ஏறத் தாழ அப்பொருளில்
> வழங்குகிறது
>

நகரத்தார் இல்லங்களில் வழங்கும் ஆச்சி முதிய பெண்ணுக்கு
மாத்திரம் இல்லை. தலைவி என்ற பொருளில் எல்லா பெண்களுக்கும்
(ஆச்சி < நாச்சி) நாச்சி என்பது அம்மன் பெயர்களில் உள்ளாற்போல்.
மாரிமுத்து, காளிமுத்து, நாச்சிமுத்து, பேச்சிமுத்து, ....
அம்மனின் அருள்பெற்றுப் பிறந்தவர்கள்.


> வட இந்தியாவில் தாதா தாதி என்றால் அப்பாவழி பாட்டன்-பாட்டி
>                                      நானா   நானி  (#)   என்றால்
> அம்மாவழி பாட்டன்-பாட்டி
>
> ஏறக்குறைய இதற்கு இணையாக தமிழகத்து சில ஊர்களிலும் இலங்கையிலும்
>                                       அப்பப்பா அப்பம்மா
> அம்மம்மா  அம்மப்பா போன்ற
>                                       புது வடிவங்கள் தோன்றி
>  உள்ளன பற்றியும் அறிவீர்கள்
>

>                   * ஆயா* எனும் சொல் ஆங்கிலோ இந்தியர்களால் அவர்கள் வீட்டில்


>                    குழந்தைகளை பார்த்துக் கொள்ள மற்றும் சிறு சிறு வீட்டு
> வேலைக்கு
>                   வைத்துக் கொண்ட  பெண்ணை  குறிக்கவும்  மாறி உள்ளது அச்சொல்
>
> ஆங்கில அகராதியிலும் அப்பொருளிலேயே குறிக்கப்படும் அளவிற்கு சென்றுள்ளது
>
>                 சில காலங்களில்/இடத்தில் மகப்பேறு காலத்தில்  அல்லது
> மருத்துவமனையில்

>                உதவிக்கு வரும் மகளிரை   *ஆயா* என


> அவர் செய்யும் பணி யினால் அழைப்பது காணலாம்
>
>     பழங்கால தமிழ் நுல்களில்
>           அன்னை அத்தன்
>           அம்மை அப்பன்
>            தாய் தந்தை
>          எனும் சொற்களே பெற்றோர்களைக் காட்டுவதாக  உள்ளன.
>

>              இதனில் *தாய் *எனும் சொல்
>              * தை* எனும் வயிற்றினைக் குறிக்கும் சொல் வழி பிறந்துள்ளது


>                     தையல் - தையலாள் > > > > > மகப்பேறு பெற்றவள்
>

தை என்றால் வயிறு என்ற பொருள் உள்ளதா?

தை - இளம்பெண்களுக்கு ஆன பெயர் என்று உவேசா எழுதியுள்ளார்.
தையலாள் கோயில்களில் அம்பாளின் பெயர், தையல்
வாலாம்பிகை என்றாகிறது.

நா. கணேசன்

>                                (தனித்தன்மையால் வயிறு   சிறுத்த புலிவகை சிறு
> த்தை   எனப் பட்டது)
>
>            வட மொழிலும் சகோதரன் சகோதரி எனும் சொற்கள்
>                      உதரம் = வயிறு எனும் சொல்வழியே தான் பிறந்துள்ளது

>                      ச*க* + *உ*தரன் = *சகோதரன்* = ஒரே வயிற்றினில்
> உதித்தவர்கள்
>                                           அ , ஆ  முன் உ , ஊ   வர ஓர்  '*ஓ' *

N. Ganesan

unread,
Dec 25, 2010, 8:35:19 AM12/25/10
to மின்தமிழ்
On Dec 25, 6:53 am, N D Llogasundaram <selvindl...@gmail.com> wrote:
>
> >  இதனில் *தாய் *எனும் சொல்
> >    * தை* எனும் வயிற்றினைக் குறிக்கும்
> சொல் வழி பிறந்துள்ளது

தாய் என்ற சொல்லின் வேர் தை அன்று.

ஆய் என்னும் சொல் யாய், ஞாய், தாய் என்றெல்லாம்
முன்னொட்டு பெறுகிறது. யாயும் ஞாயும் யாராகியரோ? - குறுந்தொகை.
எனவே அத் தொகுதிச் சொற்களில் இருந்து தாய் மாத்திரம்
பிரித்துத் தனியே எடுத்து ‘தை’ மூலம் என்று சொல்ல இயலாது.

ஐ என்ற வேரில் இருந்து தந்தை, எந்தை, நுந்தை, ... போல,
ஆய் வேர் அளிப்பது: ஞாய், யாய், தாய், ....

> >   தையல் - தையலாள் > > > > > மகப்பேறு பெற்றவள்
>

தை என்றால் வயிறு என்ற பொருள் உள்ளதா?

தை - இளம்பெண்களுக்கு ஆன பெயர் என்று உவேசா எழுதியுள்ளார்.
தையலாள் கோயில்களில் அம்பாளின் பெயர், தையல்
வாலாம்பிகை என்றாகிறது.

தை என்னும் தொழிற்பெயர் தச்சன் என்று பெயர்ச்சொல் ஆகிறது.
தை என்னும் திராவிட/தமிழ் வினைச்சொல்லில் இருந்து
தக்‌ஷன் (தச்சன்) என்ற பெயர் பிறந்தமையை ஐராவதம் மகாதேவன்
தன் ‘Early Tamil Epigraphy' நூலில் விளக்கியுள்ளார்.

நா. கணேசன்

Kamala Devi

unread,
Dec 25, 2010, 12:05:15 PM12/25/10
to mint...@googlegroups.com
நல்ல விளக்கம்..நன்றி சார்
கமலம்
 
http://www.kamalagaanam.blogspot.com



From: N D Llogasundaram <selvi...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Saturday, 25 December 2010 20:53:18
Subject: [MinTamil] ஆயா / தாய்
--
 

Kamala Devi

unread,
Dec 25, 2010, 12:08:11 PM12/25/10
to mint...@googlegroups.com
நன்றி கணேசன்
அத்தன் --என்ற விளியே அச்சா, அச்சன் ஆக மருவியதாக வரலாறு.
அம்மம்மா--இலங்கையில் மட்டுமல்ல. என்டெ மகளின் குழந்தை என்னை அம்மம்மா
என்றே அழைப்பான், மலையாளத்திலும் அம்மம்ம உண்டு.
கமலம்

http://www.kamalagaanam.blogspot.com

நா. கணேசன்

--


N. Ganesan

unread,
Dec 25, 2010, 12:14:19 PM12/25/10
to மின்தமிழ்

On Dec 25, 11:08 am, Kamala Devi <saahith...@yahoo.com.sg> wrote:
> நன்றி கணேசன்
> அத்தன் --என்ற விளியே அச்சா, அச்சன்  ஆக மருவியதாக வரலாறு.
> அம்மம்மா--இலங்கையில் மட்டுமல்ல. என்டெ மகளின் குழந்தை என்னை அம்மம்மா
> என்றே அழைப்பான், மலையாளத்திலும் அம்மம்ம உண்டு.
> கமலம்

நன்றி கமலம்.

தமிழலங்காரச் செய்யுள் - காளாஞ்சி முனி, இட்டவி -
ஒரு பக்கம் ஸ்கான் செய்து இங்கே இடமுடியுமா?
புத்தக முதல் பக்கமும் வேண்டும்.
அமெரிக்கா வந்திருந்தீர்களா?

அன்புடன்,
நா. கணேசன்

> --- Hide quoted text -
>
> - Show quoted text -

Kamala Devi

unread,
Dec 25, 2010, 12:22:46 PM12/25/10
to mint...@googlegroups.com
கணேசன்
ஞான் யூ. எஸ் வரவில்லை, கணவரின் உடல்நலம் பயணத்துக்கு ஏற்குமோ என்ற பயத்தில்
அப்போதைய என்டெ பயணம் கேன்சலாகிவிட்டது
அந்நூல், யூ.எஸ்.ஸிலிருந்து வந்த மாணவர் சுனில் குட்டனிடம் கொடுத்தனுப்பினேன்.
நிங்ஙளின் முகவரியும் நிங்ஙள் கொடுத்த தொலைபேசி எண்ணும் கூட அனுப்பினேன்.
அந்த நூலோடு, மறவர் சரிதம் எனும் நூலும் அனுப்பியிருந்தேன்
அவர் எனக்கு பின்னர் எழுதவே இல்லை.
நிங்ஙலும் நன்றி சொல்லி எழுதவில்லை,அப்படியானால் நிங்ஙள் கேட்பது பார்த்தால், --
மிகவும் கவலையாக உள்ளது.
கணேசன் , சதயமாயிட்டும் அவர் நிங்ஙளை சந்திக்கவில்லையா?
என்று கேட்கக்கூட தயக்கமாக உள்ளது
கவலையுடன் கமலம்

http://www.kamalagaanam.blogspot.com

நன்றி கமலம்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to
this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil


N. Ganesan

unread,
Dec 25, 2010, 12:47:00 PM12/25/10
to மின்தமிழ்

On Dec 25, 11:22 am, Kamala Devi <saahith...@yahoo.com.sg> wrote:
> கணேசன்
> ஞான் யூ. எஸ் வரவில்லை, கணவரின் உடல்நலம் பயணத்துக்கு ஏற்குமோ என்ற பயத்தில்
> அப்போதைய என்டெ பயணம் கேன்சலாகிவிட்டது
> அந்நூல், யூ.எஸ்.ஸிலிருந்து வந்த மாணவர் சுனில் குட்டனிடம் கொடுத்தனுப்பினேன்.
> நிங்ஙளின் முகவரியும் நிங்ஙள் கொடுத்த தொலைபேசி எண்ணும் கூட அனுப்பினேன்.
> அந்த நூலோடு, மறவர் சரிதம் எனும் நூலும் அனுப்பியிருந்தேன்
> அவர் எனக்கு பின்னர் எழுதவே இல்லை.
> நிங்ஙலும் நன்றி சொல்லி எழுதவில்லை,அப்படியானால் நிங்ஙள் கேட்பது பார்த்தால், --
> மிகவும் கவலையாக உள்ளது.
> கணேசன் , சதயமாயிட்டும் அவர் நிங்ஙளை சந்திக்கவில்லையா?
> என்று கேட்கக்கூட தயக்கமாக உள்ளது
> கவலையுடன் கமலம்
>
>  http://www.kamalagaanam.blogspot.com
>

நல்ல வேளையாகக் கேட்டேன். எந்த நூல் கிடைத்தாலும்
பிடிஎஃப் செய்துதருகிறேன்.

உங்கள் நண்பர் யாரிடமிருந்தும் போனோ, இ-மெயிலோ,
புத்தகங்கள் (அஞ்சலிலோ) எதுவுமே இதுவரை இல்லை.

புத்தகங்கள் அவரிடம் இருக்கின்றனவா? என்று கேட்கவும்.

அன்புடன்,
நா. கணேசன்


>
>

> Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to
> this group, send email to- Hide quoted text -
>
> - Show quoted text -...
>
> read more »

RAJAGOPALAN APPAN

unread,
Dec 26, 2010, 10:28:48 PM12/26/10
to mint...@googlegroups.com
 யாய் என்கிற புறநானூற்றுச் சொல்லே திரிந்து ஆய் ஆகியிருக்கலாம்.யா வுக்கு ஆ போலியாக வருவதுண்டு. யாறு, ஆறு ஆவதும், யானை, ஆனை யாவதும் போல. யாய், ஆய் ஆகிப் பின் ஆயா ஆகியிருக்கலாம். ஆயா வுக்கும் கூடத் தமிழே மூலமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.
அ.ரா 

2010/12/25 N. Ganesan <naa.g...@gmail.com>

--

devoo

unread,
Dec 27, 2010, 12:56:18 AM12/27/10
to மின்தமிழ்
>>ஆயா வுக்கும் கூடத் தமிழே மூலமாக இருக்கலாம்<<

’திரு நாராயணபுரத்து ஆய்’ என்றோர் அடியவர் மேல்கோட்டையில்
வாழ்ந்துள்ளார். ஓர் அன்னையைப் போன்ற பரிவுடன் இறைவனுக்குப் பாலமுது
ஸமர்ப்பித்ததால் அப்பெயர் பெற்றார் என்பர், நடாதூர் அம்மாளைப்போல.
ஜநந்யாசார்யர் என்பது வடமொழி வடிவம். இவர் ஸ்ரீவசந பூஷணத்திற்கு உரை
செய்துள்ளார்.

ஆய், ஆயா தமிழ்ச்சொற்களே.

வைணவ நூல்களின் மணிப்ரவாள நடை பலருக்கும் பிடிக்காதிருக்கலாம்; ஆனாலும்
பல அரிய சொற்களை அவற்றிலிருந்து பெற முடிகிறது. தமிழ் வளம் காட்டும்
உரைவளமாக அதைப் பார்க்கும் பக்குவம் வரவேண்டும்


தேவ்

On Dec 26, 9:28 pm, RAJAGOPALAN APPAN <appan.rajagopa...@gmail.com>
wrote:


>  யாய் என்கிற புறநானூற்றுச் சொல்லே திரிந்து ஆய் ஆகியிருக்கலாம்.யா வுக்கு ஆ
> போலியாக வருவதுண்டு. யாறு, ஆறு ஆவதும், யானை, ஆனை யாவதும் போல. யாய், ஆய் ஆகிப்
> பின் ஆயா ஆகியிருக்கலாம். ஆயா வுக்கும் கூடத் தமிழே மூலமாக இருக்கலாம் என்று
> தோன்றுகிறது.
> அ.ரா
>

> 2010/12/25 N. Ganesan <naa.gane...@gmail.com>

Hari Krishnan

unread,
Dec 27, 2010, 1:04:56 AM12/27/10
to mint...@googlegroups.com


2010/12/27 RAJAGOPALAN APPAN <appan.ra...@gmail.com>

 யாய் என்கிற புறநானூற்றுச் சொல்லே திரிந்து ஆய் ஆகியிருக்கலாம்.யா வுக்கு ஆ போலியாக வருவதுண்டு. யாறு, ஆறு ஆவதும், யானை, ஆனை யாவதும் போல. யாய், ஆய் ஆகிப் பின் ஆயா ஆகியிருக்கலாம். ஆயா வுக்கும் கூடத் தமிழே மூலமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.
அ.ரா 
யாயும் ஞாயும் யாரா கியரோ

யாய் என்றால் யார், ஞாய் என்றால் யார்?  ஞாயம் திரிந்து நாயம் ஆனாற்போல் ஞாய் திரிந்து..........?   

நன்றி.  தொடர்க.

--
அன்புடன்,
ஹரிகி.

N. Ganesan

unread,
Dec 27, 2010, 5:38:25 AM12/27/10
to மின்தமிழ்

On Dec 26, 9:28 pm, RAJAGOPALAN APPAN <appan.rajagopa...@gmail.com>
wrote:

>  யாய் என்கிற புறநானூற்றுச் சொல்லே திரிந்து ஆய் ஆகியிருக்கலாம்.யா வுக்கு ஆ
> போலியாக வருவதுண்டு. யாறு, ஆறு ஆவதும், யானை, ஆனை யாவதும் போல. யாய், ஆய் ஆகிப்
> பின் ஆயா ஆகியிருக்கலாம். ஆயா வுக்கும் கூடத் தமிழே மூலமாக இருக்கலாம் என்று
> தோன்றுகிறது.
> அ.ரா
>

இருக்கலாம்.

ஆயா - ஆய் + ஆய் - தாயின் தாய்
- என இருக்கலாம்.

ஆய், தாய், ஞாய், யாய் - இவற்றைப் போல வேறுண்டா?

கணேசன்


> 2010/12/25 N. Ganesan <naa.gane...@gmail.com>

> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -

RAJAGOPALAN APPAN

unread,
Dec 27, 2010, 10:08:31 AM12/27/10
to mint...@googlegroups.com
'யாயும் யாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்' என்றுதானே பாடல். என் யாயும், நின் யாயும் எந்த வகையில் தொடர்புடையவர்கள்? என் தந்தையும், நின் தந்தையும் எம்முறையில் உறவினர் ஆவர்? என்று தானே பொருள். பாடலில் 'ஞாயும்' என்று யாரையும் சுட்டியதாகத் தெரியவில்லையே. விளையாட்டாக எதுவும் இல்லையே?
அ.ரா

2010/12/27 Hari Krishnan <hari.har...@gmail.com>
--

Hari Krishnan

unread,
Dec 27, 2010, 11:44:41 PM12/27/10
to mint...@googlegroups.com


2010/12/27 RAJAGOPALAN APPAN <appan.ra...@gmail.com>
யாயும் யாயும் யாரா கியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்' என்றுதானே பாடல். என் யாயும், நின் யாயும் எந்த வகையில் தொடர்புடையவர்கள்? என் தந்தையும், நின் தந்தையும் எம்முறையில் உறவினர் ஆவர்? என்று தானே பொருள். பாடலில் 'ஞாயும்' என்று யாரையும் சுட்டியதாகத் தெரியவில்லையே. விளையாட்டாக எதுவும் இல்லையே?
அ.ரா

யாயும் ஞாயும் யாங்காகியரோ

என்பதுதான் பாடம்.  இதில் ஐயமிருப்பின்,


இங்கு பாடல் எண் 40 காணவும்.  தட்டுப்பிழையோ என்ற ஐயமெழின், உங்களிடமிருக்கும் அச்சுப் புத்தகத்தை (உவேசா பதிப்பானால் சிறப்பு.  மற்ற பதிப்பானாலும் சரியே.) எடுத்துப் பாடல் 40 ஒருமுறை ஒப்பிட்டுப் பார்க்கவும்.  இரண்டாவது சீரில் உள்ளவள் ஞாய்.  யாய் அல்லள்.  

RAJAGOPALAN APPAN

unread,
Dec 28, 2010, 9:34:30 AM12/28/10
to mint...@googlegroups.com
//இங்கு பாடல் எண் 40 காணவும்.  தட்டுப்பிழையோ என்ற ஐயமெழின், உங்களிடமிருக்கும் அச்சுப் புத்தகத்தை (உவேசா பதிப்பானால் சிறப்பு.  மற்ற பதிப்பானாலும் சரியே.) எடுத்துப் பாடல் 40 ஒருமுறை ஒப்பிட்டுப் பார்க்கவும்.  இரண்டாவது சீரில் உள்ளவள் ஞாய்.  யாய் அல்லள்.//
 
 
 தாங்கள் குறிப்பிட்டுள்ளபடி மதுரைத் தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தில் 'யாயு ஞாயும் யாரா கியரோ' என்றே காணப்படுகிறது. உ.வே.சா பதிப்பு என்னிடத்தில் இல்லை. என்னிடம் உள்ளது திருமாளிகைச் செளரிப்பெருமாளரங்கனின் குறுந்தொகை மூலமும் உரையும். வேலூர் வித்யா ரத்னாகர அச்சுக்கூடத்தில் பதிப்பித்து 1915ல் விலை ரூ 2க்கு வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் கண்டுள்ளபடி:

யாயும் யாயும் யாரா கியரோ

வெந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்
யானு நீயு மெவ்வழி யறிதுஞ்
செம்புலப் பெயந்நீர் போல
வன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே.

உரையிலும் கூட, (என்) யாயும் (நின்) யாயும் எவ்விதத் தொடர்புடையார்? என்றே பொருள் கூறியிருக்கிறார்.
அ.ரா



 

2010/12/28 Hari Krishnan <hari.har...@gmail.com>
--

Hari Krishnan

unread,
Dec 28, 2010, 9:53:52 AM12/28/10
to mint...@googlegroups.com


2010/12/28 RAJAGOPALAN APPAN <appan.ra...@gmail.com>

 தாங்கள் குறிப்பிட்டுள்ளபடி மதுரைத் தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தில் 'யாயு ஞாயும் யாரா கியரோ' என்றே காணப்படுகிறது. உ.வே.சா பதிப்பு என்னிடத்தில் இல்லை. என்னிடம் உள்ளது திருமாளிகைச் செளரிப்பெருமாளரங்கனின் குறுந்தொகை மூலமும் உரையும். வேலூர் வித்யா ரத்னாகர அச்சுக்கூடத்தில் பதிப்பித்து 1915ல் விலை ரூ 2க்கு வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் கண்டுள்ளபடி

யாயும் ஞாயும் என்பதே சரியான பாடம்.

ஒரு கணேஷ் வசந்த் கதையில், வசந்த்... ‘அது என்ன பாஸ் நாயும் நாயும்....அப்டின்னு வருமே’
கணேஷ்: யாயும் ஞாயும்டா.....

இதை சுஜாதா கூட கதையில் எழுதியிருக்கிறார்.  உவேசா பதிப்பு இருந்தால் சரிபார்க்கவும்.

RAJAGOPALAN APPAN

unread,
Dec 28, 2010, 10:55:43 PM12/28/10
to mint...@googlegroups.com

தகவலுக்கு மிக்க நன்றி ஐயா.

அ.ரா

2010/12/28 Hari Krishnan <hari.har...@gmail.com>


--

N. Ganesan

unread,
Jan 5, 2011, 8:13:22 PM1/5/11
to மின்தமிழ்

அன்பின் அ. ரா.,

என்னிடம் குறுந்தொகை 1937, உவேசா பதிப்பு இருக்கிறது.
(சென்னைக்கு எல்ஐசி கட்டிடம் கொண்டுவந்தவர்
நா. வரதராஜுலு நாயுடு எனக்களித்தது).

228-ஆம் பக்கம், பாடல் 40 இருக்கிறது.

யாயு ஞாயும் யாரா கியரோ

- தொடக்க அடி.

நா. கணேசன்


On Dec 28 2010, 8:34 am, RAJAGOPALAN APPAN


<appan.rajagopa...@gmail.com> wrote:
> //இங்கு பாடல் எண் 40 காணவும்.  தட்டுப்பிழையோ என்ற ஐயமெழின்,
> உங்களிடமிருக்கும் அச்சுப் புத்தகத்தை (உவேசா பதிப்பானால் சிறப்பு.  மற்ற
> பதிப்பானாலும் சரியே.) எடுத்துப் பாடல் 40 ஒருமுறை ஒப்பிட்டுப் பார்க்கவும்.
>  இரண்டாவது சீரில் உள்ளவள் ஞாய்.  யாய் அல்லள்.//
>
>  தாங்கள் குறிப்பிட்டுள்ளபடி மதுரைத் தமிழ் இலக்கிய மின் தொகுப்புத்
> திட்டத்தில் 'யாயு ஞாயும் யாரா கியரோ' என்றே காணப்படுகிறது. உ.வே.சா பதிப்பு
> என்னிடத்தில் இல்லை. என்னிடம் உள்ளது திருமாளிகைச் செளரிப்பெருமாளரங்கனின்
> குறுந்தொகை மூலமும் உரையும். வேலூர் வித்யா ரத்னாகர அச்சுக்கூடத்தில்
> பதிப்பித்து 1915ல் விலை ரூ 2க்கு வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் கண்டுள்ளபடி:
>
> யாயும் யாயும் யாரா கியரோ
> வெந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்
> யானு நீயு மெவ்வழி யறிதுஞ்
> செம்புலப் பெயந்நீர் போல
> வன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே.
>
> உரையிலும் கூட, (என்) யாயும் (நின்) யாயும் எவ்விதத் தொடர்புடையார்? என்றே
> பொருள் கூறியிருக்கிறார்.
> அ.ரா
>

> 2010/12/28 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
>
>
>
>
>
> >  2010/12/27 RAJAGOPALAN APPAN <appan.rajagopa...@gmail.com>


>
> >> யாயும் யாயும் யாரா கியரோ
>
> >> எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்' என்றுதானே பாடல். என் யாயும், நின்
> >> யாயும் எந்த வகையில் தொடர்புடையவர்கள்? என் தந்தையும், நின் தந்தையும்
> >> எம்முறையில் உறவினர் ஆவர்? என்று தானே பொருள். பாடலில் 'ஞாயும்' என்று யாரையும்
> >> சுட்டியதாகத் தெரியவில்லையே. விளையாட்டாக எதுவும் இல்லையே?
> >> அ.ரா
>
> > யாயும் ஞாயும் யாங்காகியரோ
>
> > என்பதுதான் பாடம்.  இதில் ஐயமிருப்பின்,
>
> >http://pm.tamil.net/pub/pm0110/kurunto.pdf
>
> >  <http://pm.tamil.net/pub/pm0110/kurunto.pdf>இங்கு பாடல் எண் 40 காணவும்.
> >  தட்டுப்பிழையோ என்ற ஐயமெழின், உங்களிடமிருக்கும் அச்சுப் புத்தகத்தை (உவேசா
> > பதிப்பானால் சிறப்பு.  மற்ற பதிப்பானாலும் சரியே.) எடுத்துப் பாடல் 40 ஒருமுறை
> > ஒப்பிட்டுப் பார்க்கவும்.  இரண்டாவது சீரில் உள்ளவள் ஞாய்.  யாய் அல்லள்.
>
> > --
> > அன்புடன்,
> > ஹரிகி.
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at

RAJAGOPALAN APPAN

unread,
Jan 6, 2011, 9:53:11 AM1/6/11
to mint...@googlegroups.com
 குறுந்தொகை உ.வே.சா. பதிப்பில் உள்ளபடி, பாடலின் இரண்டாம் சீர் 'ஞாய்' தான் என்பதை உறுதிப்படுத்தியமைக்கு மிக்க நன்றி ஐயா.
அ.ரா

2011/1/6 N. Ganesan <naa.g...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

RAJAGOPALAN APPAN

unread,
Jan 7, 2011, 2:23:18 AM1/7/11
to mint...@googlegroups.com
தாயைக்குறித்து 'ஞாய்' என்ற சொல் பிற இலக்கியங்களில் பயின்று வந்துள்ளதை, யாரேனும் அறிந்தவர்கள், சுட்டிக்காட்ட வேண்டுகிறேன். உ.வே.சா பதிப்பில் பிழை இருக்க வாய்ப்பில்லை. வித்யா ரத்னாகரப் பதிப்பில், யாயும் யாயும் என்று சொற்களைப் பிரித்தே அச்சிடப்பட்டிருக்கிறது. ஒரு வேளை யாயும் யாயும் என்பதில், நிலைமொழி ஈற்றிலுள்ள மகர மெய்யும் வருமொழியின் முதலிலுள்ள யகரமும் புணரும் போது 'ஞ'கரம் தோன்ற இடமிருக்குமோ என்று படுகிறது. அதற்குப் புணர்ச்சி விதி உண்டா என்பதையும் அறிஞர்கள் கூற வேண்டுகிறேன்.
அ.ரா


2011/1/6 RAJAGOPALAN APPAN <appan.ra...@gmail.com>

N. Ganesan

unread,
Jan 7, 2011, 7:26:11 AM1/7/11
to மின்தமிழ்

On Jan 7, 1:23 am, RAJAGOPALAN APPAN <appan.rajagopa...@gmail.com>
wrote:


> தாயைக்குறித்து 'ஞாய்' என்ற சொல் பிற இலக்கியங்களில் பயின்று வந்துள்ளதை,
> யாரேனும் அறிந்தவர்கள், சுட்டிக்காட்ட வேண்டுகிறேன். உ.வே.சா பதிப்பில் பிழை
> இருக்க வாய்ப்பில்லை.

ஞாய்:

ஆயர் மகனையும் காதலை, கைம்மிக
ஞாயையும் அஞ்சுதி ஆயின், அரிதுஅரோ!
நீ உற்ற நோய்க்கு மருந்து( கலித்தொகை,107)
(முனைவர் கல்பனா சேக்கிழார் பதிவு தருகிறேன்,
http://www.sekalpana.com/2010/10/blog-post_4663.html

சூளாமணி:
கோயின் முகத்தது கோடுயர் சூளிகை
வேயின் முகத்ததின் மாமழை வீழ்வது
ஞாயின் முகத்த நகைத்திரண் முத்தணி
வாயின் முகத்து மடுத்திது சொன்னார்
http://library.senthamil.org/120.htm

தமிழ், தமிழ் என்று அரசபீடம் ஏறி 15,000+ கோடிக்கு
சாராய விற்பனை.
நல்ல தட்டெழுத்தர்களிடம், நம் இலக்கண, இலக்கியங்களை
ஒப்புவித்து, மேர்பார்வையும், மெய்ப்பும் பார்த்து
வலையில் யூனிகோட் ஆக்கித் தருவது யார்? எப்போது? :(

மதுரை தமிழ்ச் சங்கம், செந்தமிழ் ஆய்விதழ் பிரதிகள்,
புத்தகங்கள், பிடிஎஃப் ஆகவாவது யார் செய்து தமிழன்னைக்கு
அளிப்பார்??

N. Ganesan

unread,
Jan 7, 2011, 7:27:35 AM1/7/11
to மின்தமிழ்

கலித்தொகை - அனந்தராமையர் பதிப்பு யாராவது ‘ஞாய்’ என்ற
சொல்லைப் பார்த்துத் தரவும். ரங்கனாரிடம் இருக்கலாம்.

நானும் முயல்வேன்.

நா. கணேசன்


On Jan 7, 6:26 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Jan 7, 1:23 am, RAJAGOPALAN APPAN <appan.rajagopa...@gmail.com>
> wrote:
>
> > தாயைக்குறித்து 'ஞாய்' என்ற சொல் பிற இலக்கியங்களில் பயின்று வந்துள்ளதை,
> > யாரேனும் அறிந்தவர்கள், சுட்டிக்காட்ட வேண்டுகிறேன். உ.வே.சா பதிப்பில் பிழை
> > இருக்க வாய்ப்பில்லை.
>
> ஞாய்:
>
> ஆயர் மகனையும் காதலை, கைம்மிக
> ஞாயையும் அஞ்சுதி ஆயின், அரிதுஅரோ!
> நீ உற்ற நோய்க்கு மருந்து( கலித்தொகை,107)

> (முனைவர் கல்பனா சேக்கிழார் பதிவு தருகிறேன்,http://www.sekalpana.com/2010/10/blog-post_4663.html

kalpanasekkizhar92

unread,
Jan 7, 2011, 7:33:49 AM1/7/11
to mint...@googlegroups.com
கலித்தொகை அனந்தராமையர் பதிப்பு எங்கள் தமிழ்துறையில் இருக்கின்றது. திங்கள் அன்று பார்த்துவிட்டு கூறுகின்றேன்.


7 ஜனவரி, 2011 5:57 pm அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
அன்புடன்

முனைவர் கல்பனாசேக்கிழார்
அண்ணாமலைப்பல்கலைக்கழகம்
http://kalpanase.blogspot.com
mail -kalpanas...@gmail.com
அமிழ்தென்று தமிழுண்ணும்
அன்பர் வாழ்கவே!

N. Ganesan

unread,
Jan 7, 2011, 7:38:16 AM1/7/11
to மின்தமிழ்

On Jan 7, 6:33 am, kalpanasekkizhar92 <kalpanasekkiz...@gmail.com>
wrote:


> கலித்தொகை அனந்தராமையர் பதிப்பு எங்கள் தமிழ்துறையில் இருக்கின்றது. திங்கள்
> அன்று பார்த்துவிட்டு கூறுகின்றேன்.
>

என் மேஜையில் இருக்கிறது :)
பெரும்புலவர் கம்பராமன் ஐயா ‘செந்தமிழ்ப் பித்தர்’ கணேசருக்கு
என்றெழுதித் தந்தது.

-------------

அனந்தராமையர் போன்ற உழைப்பாளிகளோ, அதுபோல்
ஒரு பதிப்போ பிற நூல்களுக்கு இல்லை. அவர் காட்டும்
மேற்கோள்கள், அம்மம்மா!

உங்கள் நூலகத்தில் அவசியம் இடம்பெற வேண்டிய நூல் -
இ.வை.அ. பதிப்பு.

அன்புடன்,
நா. கணேசன்


> 7 ஜனவரி, 2011 5:57 pm அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:

> mail -kalpanasekkiz...@gmail.com


> அமிழ்தென்று தமிழுண்ணும்

> அன்பர் வாழ்கவே!- Hide quoted text -

LNS

unread,
Jan 7, 2011, 10:17:46 AM1/7/11
to mint...@googlegroups.com
கலித்தொகை 107: கழக வெளியீட்டிலும் 'ஞாய்' என்றே இருக்கிறது. 

'ஆய்' என்ற சொல்லை பொருத்த வரை ஹாப்ஸ்ன் ஜாப்ஸ்ன் அகராதி கீழ்கண்டவாறு கூறுகிறது:

AYAH , s. A native lady's-maid or nurse-maid. The word has been adopted into most of the Indian vernaculars in the forms āya or āyā, but it is really Portuguese (f. aia, 'a nurse, or governess'; m. aio, 'the governor of a young noble'). [These again have been connected with L. Latin aidus, Fr. aide, 'a helper.']


அன்புடன்,

LNS

RAJAGOPALAN APPAN

unread,
Jan 7, 2011, 11:56:22 AM1/7/11
to mint...@googlegroups.com
 கலித்தொகையிலும், சூளாமணியிலும் ஞாய் பயின்றுவந்துள்ள பாடல்களைச் சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி ஐயா.
அ.ரா

2011/1/7 N. Ganesan <naa.g...@gmail.com>
--

N. Ganesan

unread,
Jan 8, 2011, 3:42:43 PM1/8/11
to மின்தமிழ்

On Jan 7, 10:56 am, RAJAGOPALAN APPAN <appan.rajagopa...@gmail.com>
wrote:


>  கலித்தொகையிலும், சூளாமணியிலும் ஞாய் பயின்றுவந்துள்ள பாடல்களைச்
> சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி ஐயா.
> அ.ரா
>

ஞாயர் = “நின் தாயர்” என்னும் பொருளில் 3 இடங்களில்
கலித்தொகையில் காண்க.

> 2011/1/7 N. Ganesan <naa.gane...@gmail.com>

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at

Reply all
Reply to author
Forward
0 new messages