நாமக்கல் கவிஞர் இராமலிங்கரின் நூல்கள் - ஆங்கிலத்தில்

500 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Feb 21, 2009, 10:05:15 AM2/21/09
to மின்தமிழ், Santhavasantham, panb...@googlegroups.com
நாமக்கல் கவிஞர் இராமலிங்கரின் நூல்கள் சாகித்திய அகாதமி வெளியீடாக
வேதாரணியம் (உப்பு சத்தியாகிரகம் நடந்த இடம்) வெளியிடப்படுகின்றன.

திருமிகு. நாமக்கல் ராஜா (வெ. ராமலிங்கம்பிள்ளை மகன் எனக்கு அனுப்பின
அழைப்பிதழை இணைத்துள்ளேன்).

விழாவில் யாராவது கலந்துகொண்டு விரிவாகப்படங்களுடன் பதியலாமே.

நன்றி!

நா. கணேசன்


----- Forwarded Message ----
From: R.Raja
Sent: Thursday, February 12, 2009 3:08:49 AM
Subject: Invitations

Dear all,
I am pleased to send invitations to two events - 1. Namakkal Kavignar
Residence Hall inauguration in Vedaraniam and 2. Sahitya Akademi
releasing the translation of Namakkal Kavignar's autobiography "En
Kathai" translated into English by Shashikala.
I realize that Vedaraniam event on 14th may not be feasible, but if
you are in Chennai on 21st Feb, I would love to see you at the
Connemara Library at 5:30PM. The invitations are attached.
Best wishes,
Raja

invitation.jpg
academyinvitation.jpg

Kannan Natarajan

unread,
Feb 21, 2009, 3:53:22 PM2/21/09
to minT...@googlegroups.com
> விழாவில் யாராவது கலந்துகொண்டு விரிவாகப்படங்களுடன் பதியலாமே.

செயதியை தெரிவித்த திரு. கணேசன் அவர்களுக்கு நன்றி.

திரு. நாமக்கல் இராஜா அவர்களை மின்தமிழ் குழுமத்தில் இணையச் சொன்னால் பயனுள்ளதாக இருக்கும். அவரே விழாவைப் பற்றியும், மேற்கொண்டு அவர் எதிர்நோக்கும் வளர்ச்சிப் பணிகளை பற்றியும் அவ்வப்போது, இக்குழுமத்தில் தெரிவிக்கலாம்.

அவரின் மின்னஞ்சல் இருப்பின், இக்குழுமத்தில் இணைய மட்டுறுத்தினர்கள் கூட அழைக்கலாம்.

தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்

Narayanan Kannan

unread,
Feb 21, 2009, 10:34:30 PM2/21/09
to minT...@googlegroups.com
2009/2/22 Kannan Natarajan <thar...@gmail.com>:

>
> திரு. நாமக்கல் இராஜா அவர்களை மின்தமிழ் குழுமத்தில் இணையச் சொன்னால்

> பயனுள்ளதாக இருக்கும். அவரின் மின்னஞ்சல் இருப்பின், இக்குழுமத்தில் இணைய மட்டுறுத்தினர்கள் கூட


> அழைக்கலாம்.
>


நல்ல யோசனை. நாமக்கல் கவிஞரின் புத்தகங்களையும் மின்னாக்கம் செய்தது
போலிருக்கும். கணேசனாருக்கு முகவரி தெரியுமா? முனைவர்.இளங்கோவன்?

கண்ணன்

annamalai sugumaran

unread,
Feb 22, 2009, 12:28:14 AM2/22/09
to minT...@googlegroups.com

 
 நாமக்கல் கவிஞர் இராமலிங்கரின் வாரிசுகளின் இரண்டு பேட்டிகள் ( மீள் பதிவு )

  1) அமுதசுரபியில் வந்த ஒரு பேட்டி

மறக்க முடியாத அப்பா: நாமக்கல் கவிஞர்
 
-எழுத்தாளர் அலர்மேலு ரிஷி 
 
இவ்வாண்டு அகில உலக அகிம்சை ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது காந்தி அன்பர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி. தீவிரவாதம் உலகெங்கும் தலைவிரித்தாடும் சூழலில் இவ்வாண்டு வெறும் அறிவிப்போடு மட்டுமல்லாமல் உண்மையிலேயே அகிம்சை ஆண்டாக அமைய காந்தி எந்த ராமனைப் பிரார்த்தித்தாரோ அதே ராமனை நாமும் பிரார்த்திக்கிறோம். காந்தி ஜயந்திஅக்டோ பர் 2 ம் தேதி. அதுமட்டுமல்ல. காந்தீய வழியில் வாழ்ந்த நாமக்கல் கவிஞர் பிறந்த மாதமும் இதுவே. (அக்டோ பர் 18.) மறக்கமுடியாத அப்பா வரிசையில் நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்களின் புதல்வர் இராஜா இராமலிங்கம் அவர்களுடனும் புதல்வி திருமதி சரசுவதி ரங்கநாதன் அவர்களுடனும் எழுத்தாளர் அலர்மேலு ரிஷி அமுதசுரபிக்காகக் கண்ட பிரத்தியேகப் பேட்டி இங்கே:

கவிஞரின் மகள் திருமதி. சரசுவதி ரங்கநாதன், 1969 முதல் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் வாழந்து வருகிறார். டெட்ராய்ட் மாகாணத்தில் வாழ்கிறார் கவிஞரின் மகன் திரு. இராஜா. இவர்கள் இருவரையும் நேரடியாகச் சந்தித்து, பின் தொலைபேசி மூலம் விளக்கம் கேட்டு அவர்களுடைய தந்தையைப் பற்றிய தகவல்களை அறிந்தோம். :

கே: கவிஞரின் வாரிசுகள் என்று உங்களைக் குறிப்பிடுவதே உங்களுக்குப் பெருமையாக இருக்கும். உங்களிருவரோடும் 40 ஆண்டுப் பழக்கமுடையவள் நான் என்பதால் உங்களைக் கண்டு உரையாடுவது எனக்கும் பெருமையாக இருக்கிறது. உங்கள் தந்தைக்கும் காந்திக்கும் கொள்கைப் பிடிப்பில் இருந்த ஒற்றுமையைப் போலவே அக்டோ பர் மாதம் இருவரையும் நினைவுகூரும் மாதமாக அமைந்திருப்பது அதிசயம்தான். காந்தீயக் கொள்கைகள் பல உண்டே? அவற்றில் உங்கள் தந்தை தீவிர ஈடுபாடு கொண்ட கொள்கை எது?

சரசுவதி: மூதறிஞர் இராஜாஜி ஒருமுறை என் தந்தையைப் பற்றிக் குறிப்பிட்டபோது "பாலகங்காதரர் விதைத்த வித்து மகாகவி சுப்ரமணிய பாரதியாக முளைத்தது. காந்தி விதைத்த வித்து இராமலிங்கம் பிள்ளையாக முளைத்தது" என்றார். குறிப்பிட்ட ஒரு கொள்கை என்றில்லாமல் காந்தியின் அனைத்துக் கொள்கைகளிலும் ஈடுபாடுடையவர் எங்கள் தந்தை. அதனால் தான் 'காந்திய வழிக் கவிஞர்' என்றழைக்கப்பட்டார். காந்தியத்தைக் காப்பது நம் கடமை என்ற ஒரே குறிக்கோளுடன் வாழ்ந்தார். காந்தியின் அஹிம்சை, சுதந்திரப்பற்று, ஆங்கிலேயரின் ஆட்சிக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம், சத்திய நெறி, தீண்டாமை ஒழிப்பு, சாதி வேறுபாடற்ற சமதர்மக் கொள்கை, மதநல்லிணக்கம், மது ஒழிப்பு, கிராமக் கைத் தொழில் பாதுகாப்பு, கிராம சுயராஸ்ஜியம், தாய் மொழிக்கல்வி, என ஒவ்வொரு கொள்கையிலும் காந்தியின் அடிச் சுவட்டில் வாழ்ந்தவர். எளிய தமிழில் இந்தக் கொள்கைகளை விளக்கி நூற்றுக்கணக்கான கவிதைகள், பாடல்கள் எழுதி மக்களிடம் கொண்டு சென்றார். காந்திய பக்தியை அவர் வெளிப்படுத்திய விதம் இது.

கேள்வி: உங்கள் நினைவாற்றலிலிருந்து சில கவிதைகளைக் கூற முடியுமா?

சரசுவதி: ஒத்துழையாமையில் முதலில் உப்பு சத்யாக்கிரகத்தைச் சொல்லலாம். உப்பு இருந்தால் கஞ்சி போதும் என்று வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள ஏழை விவசாயிகள் வாழும் இந்தியாவில் உப்புக்கும் வரி விதித்தது ஆங்கில அரசாங்கம். இதனால் மனம் நொந்துபோன காந்தி இதை எதிர்த்துத் தொண்டர் படையுடன் தண்டி கடற்கரைக்குப் போய் உப்புக் காய்ச்சினார். அதே நேரத்தில் அகில இந்திய அளவில் காந்தீயத் தொண்டர்கள் அணி வகுத்துச் சென்று உப்பு காய்ச்சினர். தமிழ் நாட்டில் உப்புக் காய்ச்ச இராஜாஜி தலைமையில் தொண்டர்கள் வேதாரண்யம் சென்றனர். யாத்திரை புறப்படும் தினத்தில் காலையில் என் தந்தை அழகான ஒரு பாடலை இயற்றி அன்றைய வழிநடைப் பயணத்தில் பாடினார். என் தந்தைக்கும் கணீரென்ற நல்ல குரல் வளம். ஷகத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்ஷ என்ற பாட்டு அது. இப்பாடலில் சத்திய நெறி, உயிரைக் கொல்லாமை, அறப்போர் ஆகிய எல்லாக் கொள்கைகளுமே வலியுறுத்தப்பட்டிருக்கும். இதைக் கேட்ட இராஜாஜி என்ன கூறினார் தெரியுமா?! 'இன்றைய வழி நடைக்கு ஒரு பாட்டெழுத பாரதி இல்லையே என்று குறைப்பட்டேன். கவிஞரின் பாடல் அதை நிறைவு செய்துவிட்டது' என்று பாராட்டினார். வழிநெடுக இந்தப் பாடலைப் பாடிச் செல்லும்படி கேட்டுக் கொண்டார். இந்தப்பாடல்தான் என் தந்தை ஒரு சிறந்த கவிஞர் என்று உலகிற்கு அடையாளங்காட்டியது.

இதைப் போல அவ்வப்போது காந்தீயத் தொண்டர்களுக்கு எழுதிக் கொடுத்த பாடல்கள் ஏராளம், ஏராளம். காந்தீயக் கொள்கைகளை விளக்கி நடைபெறும் கூட்டங்களில் கடவுள் வாழ்த்துப் பாடுவதுபோல் இவருடைய "சாந்த காந்தி சத்தியத்தின் சங்க நாதம் கேட்குது, ஆய்ந்து பார்க்கத் தேவையில்லை அதிலிருக்கும் நன்மையை." என்ற பாடல் அநேகமாக எல்லாக் கூட்டங்களிலும் பாடப்படுவது வழக்கம். இந்த அளவுக்கு இதைப் பிரபலப்படுத்தியவர் 'காந்தியின் உண்மையான தொண்டர்' சின்ன அண்ணாமலை என்பவர். என் தந்தையின் ஏராளமான கவிதைத் தொகுப்புக்கள், புத்தக வடிவில் வெளிவரத் துணை நின்றவர் இவர்.

கே: இராஜா! உங்கள் நினைவிற்கு வரும் கவிதைகள்?...
இராஜா: கதர் இயக்கத்திற்கு என் தந்தை எழுதித் தந்த பாடல் தொண்டர்களுக்குப் பெரிதும் பயன்பட்டது. திரைப்படத்திலும் சில பாடல்கள் இடம் பெற்றன. "ஆடுராட்டே....." இராட்டையில் நூல் நூற்பதைப் பற்றிச் சொல்லும் போது இன்னொரு சுவையான செய்தியும் குறிப்பிட வேண்டும். என் தந்தை மட்டும் நூல் நூற்கவில்லை. எங்கள் குடும்பமே நூல் நூற்றது. அவருடைய குழந்தைகளான நாங்கள் இராட்டைக்குப் பதில் கையில் வைத்து நூல் நூற்கும் மெல்லிய கருவியான தக்ளியில் நூல் நூற்போம். அதைக் கொண்டு போய்க் கடையில் கொடுத்து எங்கள் தந்தைக்குச் சட்டை வாங்கித் தந்து மகிழ்ந்திருக்கிறோம். என் தாயார் மற்ற பெண்களையும் அழைத்துக் கொண்டு கதர்த்துணிகளை விற்றிருக்கிறார். தன் குழந்தைகளைக் கதர் அணியச் செய்ததோடு எங்கள் திருமணங்களிலும் கதர் அணியச் செய்தார். என் தாயார் கடைசி மூச்சு வரை கதர் மட்டுமே அணிந்தார்.

சரசுவதி: மது ஒழிப்பு பிரசாரத்திலும் தீவிர ஈடுபாடுகொண்டார். அதற்கான கவிதையில் குடிப்பழக்கமுள்ள கணவனால் அல்லப்படும் அபலைப் பெண்களின் அவலங்களை Kவியமாய்ச் சித்திரத்துப் பாடியிருக்கிறார். ஷகுடிப்பதைத் தொலைப்பதே கோடிகோடி புண்ணியம், மக்களை வதைத்திடும் மனைவியை உதைத்திடும் துக்கமான கள்ளினைத் தொலைப்பதே துரைத்தனம்ஷ என்ற பாடல் கள்ளுக்கடை மறியலின் போது பாடியது. தீண்டாமை ஒழிப்புக்கு ஆதரவளித்துக் கவிதையாக்கியிருக்கிறார் என் தந்தை. மக்களில் ஒருசாராரை மட்டும் தீண்டக் கூடாது என்ற கேடுகெட்ட வழக்கத்தைச் சாடி அவர் கூறும் விளக்கம் அருமையானது. "வியாதியஷ்தர்களைத் தீண்டி மருத்துவம் செய்யும்போது அது புண்ணிய காரியம் என்கிறோம். பசுக்களையும் தாவரங்களையும் போற்றிக் காப்பதைத் தருமம் என்கிறோம். இப்படிப் பேசும் நாம் மக்களில் ஒருசாராரை மட்டும் தீண்டத்தகாதவர் என்பது எந்தவிதத்திலும் நியாயம்' என்று கேட்கிறார். அதற்காக அவர்பாடிய பாடலில் "தீண்டாமை என்கிற. தீய வழக்கம் தீரத் தொலைந்திடச் செய்வேன்..மூடரும் சிரிக்குமிந்த முறையிலா வழக்கமேன்?ஷஷ என்று பாடுகிறார்.

இராஜா: என் தந்தையின கொள்கை "அச்சம் தவிர்" சாதியைப் பொறுத்தவரை உயர்வு தாழ்வு கற்பிப்பதை வெளிப்படையாக எதிர்த்தார். இதில் அரசியல் வாதிகளும் இவருக்கு ஒரு பொருட்டல்ல. இந்த எதிர்ப்பினால் சில பெரிய அரசியல்வாதிகளைப் பகைத்துக் கொள்ள நேரிட்டபோதும் இவர் கவலைப்படவில்லை. அன்பு நெஞ்சங்களை அரவணைத்துச்செல்லும் இந்து முஷ்லீம் கதாபாத்திரங்களை ஒரு சேரப்படைத்து சிறுகதைகள் பலவும் புதினங்களும் எழுதியிருக்கிறார். 1952ல் ஒரே நேரத்தில் 5 மொழிகளில் மலைக்கள்ளன் என்ற இவருடைய மர்ம நாவல் திரைப்படமாக்கப்பட்டது. திரைப்பட உலகிலே இது ஒரு சாதனை. இந்நாவலில் ஒரு முஷ்லீம் கதாபாத்திரத்தைப் படைத்து கதை முடிவில் புதிரை அவிழ்க்கிறார். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி ஆருக்குப் பெயர் வாங்கித் தந்த திரைப்படம் இது. பல இசைமேதைகள் என் தந்தையின் பல பாடல்களை மேடையில் பாடிப் பிரபலப்படுத்தியிருக்கிறார்கள். எஷ்.ஜி. கிட்டப்பாவின் பல மேடை நாடகங்களுக்கென்றே இவர் எழுதித் தந்த பாடல்களை கிட்டப்பா பாடுவார் என்று சொல்லியே விளம்பரப்படுத்தி கவிஞர் பாடல்கள் என்ற தாரக மந்திரத்தால் கூட்டத்தைச் சேர்ப்பது வழக்கம்.

கே: சத்தியத்தைக் கடைப்பிடிப்பதில் சோதனைகள் வருவது உண்டே? அரிச்சந்திரன் கதையில் நாம் பார்க்காததா? காந்தியைக் கவர்ந்ததும் இந்த நாடகம் தான். உங்கள் தந்தையின் சத்தியத்திற்கு சோதனை வந்ததுண்டா?

சரசுவதி: உண்டு. சேலம் ஜில்லா போர்டு உறுப்பினர் பதவிக்கு என் தந்தை ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கையூட்டுப் பெற்றுப் பழக்கப்பட்ட ஒருவர் ஜில்லா போர்டு தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். அவர் Kர் ஆளிடம் பெரியதொகை ஒன்றினைக் கொடுத்து, தன்னை ஆதரிக்கும்படி என் தந்தையிடம் அனுப்பி வைத்தார். குழம்பிப்போன என் தந்தை நிமிர்ந்து பார்த்தார். எதிரே சுவரில் அவரே வரைந்து Kவியமாய்த் தீட்டியிருந்த காந்தியின் புன்னகை பூக்கும் முகத்தைப் பார்த்தார். உடனே தெளிவு பிறந்தது. பணம் வாங்க மறுத்துவிட்டார். இதுபோன்று கையூட்டு கொடுக்கும் பேர்வழிகள் பதவிக்கு வந்தால் நிர்வாகமும் ஊழலாகி விடும் என்பது அவரது கருத்து.

எங்களை வளர்த்த முறையிலும் காந்தியப் பற்றைப் பார்க்கலாம். எங்களுக்குள் சண்டை வாக்குவாதம் என்று வந்தால் எங்களை அழைத்து ஒருவர் கைமேல் மற்றவர் கையை வைத்து "காந்தி சத்தியமாக இனிமேல் சண்டைபோடமாட்டோ ம்" என்று மூன்றுமுறை சொல்ல வைப்பார். நேரில் பார்க்காத கடவுளைவிட சத்தியத்தின் உருவமாய்த் தெரியும் காந்தியின் பேரால் செய்யும் சத்தியத்தையே விரும்புனார்.

கே: அவரே வரைந்த காந்தி என்று சொன்னீர்கள். கவிஞர் Kவியரும் கூட. அவர் Kவியர் என்ற வகையில் பாராட்டப்பட்டதுண்டா?

சரசுவதி: என் தந்தை எந்த அளவு கவிஞரோ அதற்கு இணையாக Kவியரும் கூட. பாரதமாதாவிற்கு மணிமகுடம் சூட்டப்படுவதுபோல் என் தந்தை வரைந்த Kவியம் அகில இந்திய அளவில் முதல் பரிசு பெற்றது. பரிசளிப்பு விழா டில்லி தர்பாரில் நடைபெற்றது. ஐந்தாம் ஜியார்ஸ் மன்னர் முடிசூட்டிக்கொள்ளும் அவ்விழாவில் மன்னரே என் தந்தைக்குத் தங்கப் பதக்கம் அணிவித்துப் பாராட்டினார். "ஆஷ்தானக் கவிஞர்" என்ற அந்தஷ்தும் அளித்துக் கௌரவித்தார். சிபாரிசு எதுவுமின்றி அங்கீகாரம் தேடிவந்த ஒரு காலம் அது. என் தந்தை Kவியர் என்பதை அறிந்த மகாகவி பாரதி " நீர் எம்மை Kவியத்தில் தீட்டும். யாம் உம்மைக் காவியத்தில் தீட்டுவோம்" என்று பாராட்டியபடியே கேட்டுக் கொண்டாராம். Kவியமும் தீட்டப்பட்டது; காவியமும் பாடப்பட்டது.

கே: நேர்காணலின் நிறைவாக ஒரு கேள்வி: உங்கள் தந்தையின் அந்திம காலத்து நிகழ்ச்சி. அதாவது நெஞ்சில் நீங்காது நிலைத்து நிற்பதோடு நீங்கள் நினைவுக்குக் கொண்டுவராமலே நினைவில் முன்வந்து நிற்கும் நிகழ்ச்சி பற்றி?

இராஜா: என் தந்தை கடைசியாகக் கலந்துகொண்ட நிகழ்ச்சி 25ம் ஆண்டு சுதந்திர தின வெள்ளிவிழா ஆண்டு நிகழ்ச்சி. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அடுத்த வாரத்திலேயே தம் வாழ்க்கை பூரணத்துவம் அடைந்ததுபோல் இம்மண்ணுலகை நீத்தார். மனதுக்கு நிறைவான நிகழ்ச்சி அவர் கலந்துகொண்ட அந்தக் கடைசி நிகழ்ச்சி. இந்திய அரசாங்கம் அவரைநினைவுகூரும் விதமாக அஞ்சல்தலை வெளியிட்டுக் கௌரவித்துள்ளது. ஒவ்வொரு சுதந்திரதினமும் ஒவ்வொரு காந்தி ஜெயந்தியும் அவரை நினைவுபடுத்துவதாகத்தான் உள்ளது. 
 
 
--------------------------------------------------------------------------------------------------------


            நன்றி  :   http://www.thannambikkai.net/


நேர்காணல் - நாமக்கல் கவிஞர் பேரன் எச். நடராஜன் அவர்களுடன்
 

"தமிழன் என்றோர் இனம் உண்டு
தனியே அவற்கொரு குணம் உண்டு"
என்றதொரு எழுச்சியினை பாட்டில் வடித்த
குன்றாத புகழுக்கு சொந்தக்காரர்.
தமிழ்நாட்டு அரசவையின் முதல் கவிஞர்
தேசியக் கவிஞராய் அறியப் பெற்று
காந்தியக் கவிஞரென அழைக்கப் பெற்ற
நாமக்கல் கவிஞர் தம்மை நாநிலமே போற்றி நிற்கும்.
ஆண்ட இனம் இங்கே அடிமை தளையகற்ற
அஞ்சா நெஞ்சமுடன் வெஞ்சிறை ஏற்றவர்
விடுதலை உணர்வூட்டும் கவிதைகள்
நெடும்புகழ் காவியங்கள், ஓவியங்கள்
கட்டுரையில் வன்மை, கதைகளில் திண்மை
எண்ணத்தில் உண்மையென பாங்காக
பலபடைத்த பல்கலைக் குரிசில்
இராமலிங்கம் பிள்ளை பெற்றிட்ட பேரன்
விற்பனைத் துறையில் வியத்தகு சாதனைப்
படைக்கின்ற வித்தகன் - நடராசன்!
வரலாற்று பேராசான் பெற்றிட்ட நற்பிள்ளை
கவிஞர் வழி வந்துற்ற பேரப்பிள்ளை
தாத்தாவின் ஆற்றலிலும் - தந்தை
முனைவர் அனுமந்தன் அறிவினிலும்
பட்டறிவு பெற்றிட்ட பண்பாளர்.
பட்டத்தை வரலாற்றுப் பாடத்தில்
பெற்றிட்டாலும், விற்பனை மேலாண்மை துறைபோகி
வியந்தேற்றும் சாதனைகள் பல படைத்து
இந்துஸ்தான் பெட்ரோலியம் குழுமத்தில்
தன்னுழைப்புத் தனித் திறனால்
படிப்படியாய் உயர்ந்திட்டே இன்று
மூத்த விற்பனை மேலாளர் ஆனார்.
தான்பெற்ற அனுபவக் கல்விதனை
தன்முனைப்பு செயலோடு மற்றவர்க்கும்
பயிற்றுவிக்கும் பயன்பாட்டு நோக்கோடு நூல் படைத்தும்
'முடியும் முடியும் முனைந்து செயல்பட்டால்
முடியாததென்பது இவ்வுலகில் இல்லை' என்பதற்கு
தன்னையே எடுத்துக்காட்டி தருகின்றார் நேர்காணலில்…
- நிர்வாக ஆசிரியர்

நாங்கள் எல்லாம் நாமக்கல் கவிஞரை பார்த்ததில்லை. கவிஞரின் பேரன் என்கிற வகையில், தாத்தா அவர்களுடன் இருந்த தங்கள் நினைவுகளை, 'தன்னம்பிக்கை' வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே….

நான் நாமக்கல் கவிஞர் மகள் திருமதி. இராஜலட்சுமியின் மகன். கவிஞரின் கடைசிக் காலங்களில், தாத்தாவுடன் அதிக நேரம் செலவழித்த பேரன்களில் அதிக பங்குப் பெற்றவன் என்பதில் பெரும் மகிழ்வடை கிறேன்.

1972ஆம் ஆண்டில் சென்னையில் உள்ள எங்கள் இல்லத்தில்தான் கவிஞர் மறையும் வரை வாழ்ந்தார்கள்.

அந்த காலக்கட்டங்களில் அவரை விட்டு அகலாமல், அவர் கூடவே இருந்து, அவரின் தேவையை அறிந்து பணிவிடை செய்யும் வாய்ப்பைப் பெற்றவன் என்பதை நினைக்கும் போது, அது நான் பெற்ற பெரும் பாக்கியம் என்றே கருதுகிறேன்.

எனது தாத்தவிடம் இருந்து ஆத்மார்த்தமாக பல விசயங்களை கற்றுக் கொண்டேன்.

என்னுடைய தந்தையார் டாக்டர் கி.ர.அநுமந்தன் அவர்கள், கவிஞருக்கு மருமகன் போன்று இல்லாமல், மகனாகவே செயல்பட்டதுடன், கவிஞரின் பக்தனாகவே இருந்து, அவர் நூல்களை வெளியிடுவது, அவருக்கு பணிவிடைகள் செய்வது என எல்லா வகையிலும் அவருக்கு ஆதரவாக இருந்து, கவிஞர் மெச்சும் மருமகனாக திகழ்ந்தார்.

நான் என் தாத்தாவுடன் இருந்து அறிந்த வகையில் கடைசிவரை அவர் தன்னம்பிக்கை யுடன் வாழ்ந்தவர். கடைசி காலம் வரை எதற்கும் கலங்காமல், எந்தப் பிரச்சனைகள் வந்தாலும் தைரியமாக சமாளிக்கும் திறனைக்கண்டு வியந்திருக்கிறேன்.

கவிஞருடன் இருக்கும் போது, உங்களுக்கு மக்கள் தொடர்பு எப்படி இருந்தது?

பொதுவாக கவிஞரை ஒரு தேசியக் கவிஞராகவே, காந்தீயக் கவிஞராகவே இன்னும் சொல்லப் போனால் தேசிய சொத்தாகவே மக்கள் பார்த்தார்கள்.

எனது தாத்தா நாமக்கல் கவிஞர் அவர்கள் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு, அதனால் தடி அடிகட்கு ஆட்பட்டு அடக்கு முறையால் சிறைப்பட்ட போது காலில் அடிபட்டு சகஜமாக நடக்கவியலா நிலையில் ஒரு ஆள் துணையுடன்தான் பொது இடங்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

நாமக்கல் கவிஞர் சட்ட சபையில் எம்.எல்.சி. ஆக இருந்தபோது, சிறு பாலகனான என்னை துணைக்கு அழைத்துச் சென்ற காலங்களில் அறிஞர் அண்ணா, காமராசர் போன்ற பெரிய பெரிய தலைவர்களையெல்லாம் மிக நெருக்கமாக சந்திக்கும் அரிய வாய்ப்புகளைப் பெற்று இருக்கிறேன்.

கவிஞர் சென்னையில் எங்கள் வீட்டில் இருந்த சமயங்களில் அவரைப்பார்க்க வராத வி.ஐ.பி.க்களே இல்லை என்றே சொல்லலாம். இந்த நாட்களில் பெரிய பெரிய பிரபலங்களை பார்த்து உரையாற்றும் மிகப்பெரிய வாய்ப்பு களை பெற்று மகிழ்ந்தவன். இம்மாதிரி நேரங்களில் அவர்களுடன் எப்படியெல்லாம் அளவலாவி மகிழ்ந்தார் என்பதெல்லாம் சுவையான நிகழ்ச்சிகளாகும்.

குறிப்பாக ஒன்றை சொல்லுங்களேன்….

கவிஞர் ஆள் துணையில்லாமல் நடக்க சிரமப்படுவார் என்பது அனைவரும் அறிந்ததே! அதே நேரத்தில் அவருக்கு ஒரு காது சரியாகக் கேட்காது என்பது நாங்கள் மட்டுமே அறிந்தது. அந்த கேட்காத காது பக்கம் அமர்ந்திருப்பவர் ஏதேனும் பேசினால் உதட்டசைவைப் பார்த்து சிரித்துக் கொண்டே சமாளித்து விடுவார். அது கேட்க வில்லை என்பதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் மேலும் மேலும் சிரிப்பாலே ஓட்டிவிடுவார். அருகில் இருக்கும் எனக்கும் சிரிப்பு வந்துவிடும்.

அவர் கவிதை எழுதுவதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?

அவர் மறைவதற்கு முதல் நாள் கூட ஒரு கவிதையை எழுதி, அதை என்னிடம் காட்டி நன்றாக வந்து இருக்கிறதா என்று கேட்டார்.

இப்படி கடைசிவரை கவிதையே உயிர் மூச்சாய், கவிதையுடனேயே வாழ்ந்தவர் நாமக்கல் கவிஞர்.

சிறு வயதில் என்னை அவர் மடியில் இருத்தி கவிதைச் சொல்லித் தந்து எனக்கு ஆர்வம் ஊட்டியவர்…. அதனால்தான் ஒரு தலைப்பைக் கொடுத்து கவிதை எழுத சொன்னால் உடனே எழுதும் ஆற்றல் பெற்றுள்ளேன். நான் தமிழில் ஈடுபாடும் எழுத்து பேச்சுத் திறனும் பெற்றதற்குக் காரணம் கவிஞருடன் அதிகமாக உடன் இருந்து பழகி வாழ்ந்தவன் என்பது தான்.

மேலும் இளம் வயதில் சிலகாலம் நாமக்கல்லில் படிக்கும் போது தாத்தாவுடன் இருந்து வந்தேன். தாத்தா சென்னையில் வாழ்ந்தபோது, அவருடன் பல தலைவர் களுடன் ஏற்பட்ட சந்திப்புகள், இதுபோன்ற நிகழ்ச்சிகளால் ஏற்பட்ட உணர்வுகளால் உந்தப்பட்டு நான் எழுச்சிப் பெற்றேன்.

மேலும் மோகனூரில் ஒரு எளியக் குடும்பத்தில் பிறந்து, பிறகு பெரிய தலைவர்களான மகாத்மா காந்தி, நேரு போன்றவர்களுடன், பழகி, அவர்களுடன் இணைந்து கம்பீரமாக வாழ்ந்த வாழ்வு எனக்கு இளமையிலேயே உற்சாகத்தையும் எழுச்சியையும் உருவாக்கியது. நாமும் தாத்தாவைப்போல உயர்ந்த இடத்தைப் பிடிக்க வேண்டும், பலர் போற்ற வாழ வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் விதைத்தது.

நமது 'தன்னம்பிக்கை' இதழுக்கு பொருத்தமான கவிஞரின் கவிதை வரிகளை சொல்லுங்களேன்….

"தமிழன் என்று சொல்லடா

தலை நிமிர்ந்து நில்லடா"

என்ற கவிஞரின் எழுச்சிமிக்க வரிகளை தமிழக அரசு பெரிதும் மதித்து போற்றி தமிழகத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும், ஊரில் நுழைகின்ற இடத்தில் பெரிய அளவில் விளம்பர பலகைகளை அமைத்து கவிஞரை பெருமை படுத்தியுள்ளது.

தமிழக அரசு தலைமைச் செயலகம் 'நாமக்கல் கவிஞர் மாளிகை'யில் செயல்படுகிறது என்பதை நினைக்கும் போதெல்லாம் சிறந்த மரியாதை கவிஞருக்குக் கிடைத்ததை எண்ணி பெருமைப்படுகிறேன்.

 



 

2009/2/22 Narayanan Kannan <nka...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages