‘சங்கினோடும் நேமியோடும் தாமரைக்கண்களோடும்’
என ஆழ்வாரைப் பித்தராக்கிய பெருமையையுடைய
திருக்கண்களை உடையவன்.
’தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகமிவமக்ஷிணீ ....’
என்று உடையவரின் நயநங்களிலிருந்து நீர் பெருகக் காரணமான திருக்கண்களை
உடையவன்.
“கண்ணன்”
எல்லா இடத்திலும் நிறைந்து விளங்குபவன்.
கண் – இடம்
ஐ, ஆல், கு, இன், அது, கண்
’கண்’ ஏழாம் வேற்றுமை உருபு.
பைஞ்சாய் கொன்ற மண்படு மருப்பிற்
காரேறு பொருத கண்ணகன் செறுவி . . . .210
(பெரும் பாணாற்றுப்படை)
‘எங்குமுளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து... ’
என்று ஆழ்வார் அரக்கன் வீயத் தோன்றிய
சிங்கப்பிரானைப் பாடுவார்.
எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பதால்
கண்ணன் எனப்படுகிறான்.
பிரகலாதாழ்வான் காலத்திற்குப் பிற்பட்டது க்ருஷ்ணாவதாரம்.
’கரந்த சில் இடந்தொறும் இடம் திகழ் பொருள்தொறும்’
நிறைந்து விளங்குவதால் கண்ணன் என்று பெயர்.
கண்ணன் – விஷ்ணு
இந்த அழகிய சொல் பரத்வத்தையும் சுட்டுகிறது.
எளிமையின் எல்லை நிலமாகிய ஆயர் சிறுவனையும்
கண் முன் நிறுத்துகிறது.
தேவ்
ஆம். கண்ணபிரானை விஷ்ணுவாகக் கொள்ளும் வழக்கம்
ஏற்பட்டு 2000 வருஷத்திற்கு மேல் ஆகிவிட்டது.
முக்கியமான சான்று: 1000-கணக்கான காசுகளில்,
சிலைகளில் மதுராவிலும், காந்தாரத்திலும்
கண்ணன் 4 கரங்களுடன் காட்டப்படுகிறான். (2000 வருஷம் முன்னே).
விஷ்ணு எனப் பொருள்.
கண்ணகி (< கர்ணகி/லக்ஷ்மி) 4 கரத்தோடு சிலைகள் 7-ஆம் நூற்றாண்டிலே
இலங்கையிலே கிடைப்பதைப் 10 ஆண்டு முன்னமே சுட்டிப்
படத்தோடு விளக்கியுள்ளேன்,
ஒருமுறை நாக. இளங்கோ கூட கண்ணகியின் 4 திருக்கரம்
பற்றிய ஐயத்தைக் கேட்டார். அம்மடலைத் தேடினால் கிடைக்கும்.
http://groups.yahoo.com/group/tamil-ulagam/
கண்ணகி பற்றிச் சில நோட்ஸ்:
http://groups.google.com/group/minTamil/msg/2a35cdf42efcc856
http://groups.google.com/group/minTamil/msg/3d25b341497153b9
http://groups.google.com/group/minTamil/msg/0219659c31295804
http://groups.google.com/group/minTamil/msg/3772f89fe8aa9ffa
நா. கணேசன்
“கண்ணன்”
> முக்கியமான சான்று: 1000-கணக்கான காசுகளில்,
> சிலைகளில் மதுராவிலும், காந்தாரத்திலும்
> கண்ணன் 4 கரங்களுடன் காட்டப்படுகிறான்.//
குழலூதும் நிலையில் நிற்கும் வேணுகோபாலன் சிலையானாலும், உலோகப்
படிமமானாலும் நான்கு கரங்களுடன்தான் தமிழகத்தி்லும் வடிவமைத்துள்ளனர்.
இது வியப்பளிப்பதாக உள்ளது. நல்லவேளை, வெண்ணெய்க்காடும் பிரானுக்கு
நான்கு கரங்கள் இல்லை.
தேவ்
Madras Lexicon:
கண்ணன்² kaṇṇaṉ
, n. < Pkt. KaṇḥaKṛṣ- ṇa. 1. Kṛṣṇa; கிருஷ்ணன். (திவ். திருவாய். 10, 5,
1.) 2. Viṣṇu; திருமால். (திவா.)
நல்லவேளை. தேவகிக்கு திரு,திப்பென்று சதுர்புஜனாக வந்து நின்ற போது
பயந்து போனதுபோல் கோகுலம் பயந்து போயிருக்கும்! வெண்ணெய் எடுத்தல் என்பது
ஆத்ம பரிபாலனம்தானே! நான்கு கரமெல்லாம் நமக்குத்தாங்காது. 'களவுண்டு,
ஆப்புண்ட எளிமை எத்திறம்?' எனும்படியாக இருக்கவே விண்ணப்பம்.
க.>
நான்கு கரமெல்லாம் நமக்குத்தாங்காது.
கண்ணன் இயல்பான திருவுருவத்தில் இருக்கும் போது நான்கு கரங்களுடனேயே இருந்ததாகத் தான் சில பெரியவர்கள் சொல்கிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லிப் படித்ததாக என் நினைவில் நிற்பவை:
1. கிருஷ்ண வாசுதேவனைப் பார்த்து, தானே உண்மையில் திருமாலாகிய வாசுதேவன் என்று எண்ணிக் கொண்ட பௌண்ட்ர வாசுதேவன் செயற்கையாகப் பொம்மைக்கரங்கள் இரண்டு செய்து வைத்துக் கொண்டானாம். பாகவதம் இப்படி சொல்கிறதா என்று சரி பார்க்க வேண்டும்.
2. கீதையில் விசுவரூபத்தைக் கண்டு கதி கலங்கி நின்ற பார்த்தன் 'கண்ணா. நீ பழையபடி நான்கு கரங்களுடன் கூடிய உன் சௌம்யமான திருவுருவத்தில் மீண்டும் தோன்றுவாய்' என்று பயத்துடன் விண்ணப்பிக்கிறான். சுலோகம் வேண்டுமாயின் எடுத்துத் தருகிறேன்.
அன்பன்,
குமரன்.
K. V. Zvelebil, Tamil Literature (Handbuch der Orientalistik),
E. J. Brill, 1975, Leiden/Cologne, pg. 112,
"also Mu. IrAkavaiGkAr, Pattin2itEviyappaRRic cila kuRippukkaL,
ArAyccittokuti, 2nd ed., Madras, 1964, pp. 230-240, who
considers the connection between TirumAvuNNi of NaR. 216,
TirumAmaNi of Cil. 12.49 and TirumApattin2i of the Patikam,
and between KarNakA, karNikA and KaNNaki;
by the same author, "Pattini vaNakkam (Kalaikkatir, 1956,
repr. in KatturaimaNikaL, Maan2aamaturai, 1959, pp. 47-56) where
he gathers further instances of the worship of Pattin2i from
epigraphic and other sources in ToNTainATu, KoGkunATu,
Ceylon and the Nilgiris, and quotes some folk versions
(p. 55)."
N. Ganesan
> பற்றிய ஐயத்தைக் கேட்டார். அம்மடலைத் தேடினால் கிடைக்கும்.http://groups.yahoo.com/group/tamil-ulagam/
>
> கண்ணகி பற்றிச் சில நோட்ஸ்:http://groups.google.com/group/minTamil/msg/2a35cdf42efcc856http://groups.google.com/group/minTamil/msg/3d25b341497153b9http://groups.google.com/group/minTamil/msg/0219659c31295804http://groups.google.com/group/minTamil/msg/3772f89fe8aa9ffa
>
> நா. கணேசன்
>
>
>
> > இந்த அழகிய சொல் பரத்வத்தையும் சுட்டுகிறது.
> > எளிமையின் எல்லை நிலமாகிய ஆயர் சிறுவனையும்
> > கண் முன் நிறுத்துகிறது.
>
> > தேவ்- Hide quoted text -
>
> - Show quoted text -- Hide quoted text -
>
> - Show quoted text -
On Mar 25, 8:05 pm, Kumaran Malli <kumaran.ma...@gmail.com> wrote:
> கண்ணன் இயல்பான திருவுருவத்தில் இருக்கும் போது நான்கு கரங்களுடனேயே
> இருந்ததாகத் தான் சில பெரியவர்கள் சொல்கிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லிப்
> படித்ததாக என் நினைவில் நிற்பவை:
>
> 1. கிருஷ்ண வாசுதேவனைப் பார்த்து, தானே உண்மையில் திருமாலாகிய வாசுதேவன் என்று
> எண்ணிக் கொண்ட பௌண்ட்ர வாசுதேவன் செயற்கையாகப் பொம்மைக்கரங்கள் இரண்டு செய்து
> வைத்துக் கொண்டானாம். பாகவதம் இப்படி சொல்கிறதா என்று சரி பார்க்க வேண்டும்.
>
திருப்பதி மலையில் பெருமாளுக்கு இரண்டு கரங்கள்தான்.
செய்கரங்கள் பின்னால் இரண்டைச் சேர்த்து அலங்காரம் cஎய்ய்யப்படுகிறது.
வேங்கடேசன் இரண்டு கரங்களுடன் இருப்பது மாதிரி படங்கள்
வலையில் உள்ளனவா?
இதுபற்றி இங்கே தேவோ, வேறொருவரோ குறிப்பிட்டனர்.
மேலும் விபரம் அறிந்தோர் இருப்பர். முத்தையா ஸ்தபதி வீட்டுக்கு
வந்தபோதும்
சொன்னதாக ஞாபகம்.
நா. கணேசன்
> 2. கீதையில் விசுவரூபத்தைக் கண்டு கதி கலங்கி நின்ற பார்த்தன் 'கண்ணா. நீ
> பழையபடி நான்கு கரங்களுடன் கூடிய உன் சௌம்யமான திருவுருவத்தில் மீண்டும்
> தோன்றுவாய்' என்று பயத்துடன் விண்ணப்பிக்கிறான். சுலோகம் வேண்டுமாயின்
> எடுத்துத் தருகிறேன்.
>
> அன்பன்,
> குமரன்.
> 2009/3/25 devoo <rde...@gmail.com>
>
>
>
> > Mar 25, 6:05 pm, "N. Ganesan"
>
> > “கண்ணன்”
> > > முக்கியமான சான்று: 1000-கணக்கான காசுகளில்,
> > > சிலைகளில் மதுராவிலும், காந்தாரத்திலும்
> > > கண்ணன் 4 கரங்களுடன் காட்டப்படுகிறான்.//
>
> > குழலூதும் நிலையில் நிற்கும் வேணுகோபாலன் சிலையானாலும், உலோகப்
> > படிமமானாலும் நான்கு கரங்களுடன்தான் தமிழகத்தி்லும் வடிவமைத்துள்ளனர்.
> > இது வியப்பளிப்பதாக உள்ளது. நல்லவேளை, வெண்ணெய்க்காடும் பிரானுக்கு
> > நான்கு கரங்கள் இல்லை.
>
திரு மளூர் நவநீதக் கண்ணன்.
மிக அழகான ஒய்சளர் காலச் சிலை என்று நினைக்கிறேன்.
http://www.desikan.com/blogcms/wiki/index.php?id=doddamallur
நா. கணேசன்
> க.>
கைகள் கூட இருந்தால் பிரச்சனை இருக்கு. சிவனிடம் மத்தளம் வாசித்துக்
கொண்டிருந்த வாணன், அவரிடம் வாசிக்க இரண்டு கை போதாது என்று சொல்ல, சிவன்
ஆயிரம் கைகளை வழங்கி விடுகிறார். வாணனுக்கு தலைக்கனம் பிடித்துவிடுகிறது.
மத்தளம் வாசிப்பதை விட்டு, எல்லோரையும் தும்சம் செய்ய ஆரம்பித்தான்.
இவனுக்கு உஷா என்றொரு பெண். அவளின் மீது கிருஷ்ணனின் பேரன் அநிருத்தன்
காதல் கொள்கிறான். ஆனால் இதுவறிந்த அசுரன் சண்டைக்கு வருகிறான். நம்
கண்ணன் அச்சமரில் அவனது ஆயிரம் கைகளையும் வாங்கி இரண்டை மட்டும் விட்டு
வைக்கிறான். இதோ, இக்கதை சொல்லும் திருவாய்மொழி:
நேர்சரிந் தாங்கொடிக் கோழிகொண் டான்,
பின்னும் நேர்சரிந் தானெரி யுமன லோன்,
பின்னும் நேர்சரிந் தான்முக்கண் மூர்த்திகண் டீர்,
அப்பன் நேர்சரி வாணந்திண் டோ ள்கொண்ட அன்றே. 7.4.8
க.>
நீங்கள் கூறுவதற்கு ஆதாரம் உண்டு.ஆயினும் திருவாய்ப்பாடியில் அவன்
காட்டிய ஸௌந்தர்யமே அனைவரையும் கவர்கிறது.
அக்ஷரப்ரம்மத்தில் தோய்ந்த அத்வைதிகளையும் அது ஈர்க்கிறது.
தேவ்
தேவ்
ததாஸ்து :-)
நல்லவேளை குளிர்விக்க வந்தார் (சூடு பறக்கிறது ;-))
க.>
ஆகா! திவாகர்!!
இப்பாடல்தான் திருவாய்மொழியை மதுரை தமிழ்ச் சங்கம் ஏற்றுக்கொள்ள வைத்தது!
இதை இப்படியே பாரதி பயில்வதைக் காண்க.
ஆகா..இன்று என்ன நன்னாள்!!
க.>
எங்க போயிட்டீங்க? இவ்வளவு நாள்?
அறிந்தவரை எழுதுவது நம் இயல்பு. அறியாததையும் எழுதுவது பெரியோர் இயல்பு
(உம். தேவ் சுட்டிக்காட்டினார், எப்படி பெரியாழ்வார் வாயில் தேவலோக
வேதப்பிரயோகம் வந்தது என்று).
திருவாய்மொழிக்குக் காத்திருக்கும் சாகசபட்சி
க.>
அவன் கிருஷ்ணன் செய்வது black magic என்று எண்ணியிருந்தான். அவனுக்குத்
தெரிந்ததைச் செய்து அவனும் 'தான்' வாசுதேவன் என்றான். ஒரு நாள் அவன்
கிருஷ்ணனிடம் வந்து உன் சக்கரத்தைக் கொடு, பிரயோகித்துப் பார்க்க
வேண்டுமென்றான். கிருஷ்ணன் அது இலகுவான செயலல்ல என்று சொல்லிப்
பார்த்தான். அவன் வலியுறுத்தவே, கிருஷ்ணனன் அவனிடம் சக்கரத்தைக் கொடுக்க,
அது சீறிப்பாய்ந்து சென்று வருகையில் வாங்கத்தெரியாமல் தலை அறுந்துபட
மாய்ந்து போனான்.
க.>
சீமாலிகனவனோடு தோழமைகொள்ளவும்வல்லாய்.
சாமாறுஅவனைநீயெண்ணிச் சக்கரத்தால்தலைகொண்டாய்.
ஆமாறறியும்பிரானே. அணியரங்கத்தேகிடந்தாய்.
ஏமாற்றம்என்னைத்தவிர்த்தாய். இருவாட்சிப்பூச்சூட்டவாராய். 8.
(நன்றி. காவல்கழனி வேங்கடகிருஷ்ணன்)
க.>
க்ருஷ்ண: என்பது கண்ணன் என்ற திருப்பெயருக்கு நேரில்லை; க்ருஷ்ண > கண்ணன் என்பதும் சரியில்லை என்று முன்பே சொல்ல நினைத்தேன். ஆனால் தகுந்த விளக்கத்துடன் சொல்லல் வேண்டுமே என்று விட்டேன். அருமையான விளக்கங்களுடன் எடுத்துச் சொன்னீர்கள். மிக்க நன்றி வேங்கடேஷ்.
விரைவில் திருவாய்மொழித் தொடர் தொடரும் என்று சொல்லியிருக்கிறீர்கள். கூடியிருந்துக் குளிரக் காத்திருக்கிறேன்.
கண்ணன் என்பது தூய தமிழ் வார்த்தை என்று அடியேனுடைய ஆச்சார்யர் கூறுவர். வடமொழியில் உள்ள "க்ருஷ்ணன்" என்ற நாமத்தின் தமிழ்ச்சொல் "கண்ணன்" என்று சிலர் நினைப்பர். ஆனால் அது உண்மையில்லை என்பர்.
அறை - சிறுமலை.
Thirumalai Vinjamoor Venkatesh wrote:
> தேவ் சார்,
>
> திருவெள்ளரை ஸ்வாமியை ஒரே ஒரு தடவை ஸேவித்துள்ளேன். சென்ற வருடம் தான். அடியேனுடைய நண்பர் ஸ்ரீரங்கம் சடகோபனுடைய நேரடி ஆச்சார்யர், திருவெள்ளரை மேலத் திருமாளிகை ஸ்வாமி. சென்ற வருடம் அவருடன் சென்று ஸேவித்தோம். பிறகு, என் நண்பர் சொல்வார், அவர் ஒவ்வொரு தடவை ஸ்வாமியை ஸேவிக்கும்பொழுதும், அடியேனைப் பற்றி விசாரித்ததாய். அடியேனுடைய பேறு
> என்றுதான் சொல்லவேண்டும்.
>
> அடியேன்
> வேங்கடேஷ்
>
>
> ________________________________
> From: devoo <rde...@gmail.com>
> To: மின்தமிழ் <minT...@googlegroups.com>
> Sent: Thursday, 26 March, 2009 11:24:10 AM
> Subject: [MinTamil] Re: கண்ணன்
>
> ஆஹா ! செவிக்கினிய செஞ்சொற்கள்.
> ஸப்தபூருஷ வைஷ்ணவத்வம் பொலிகிறது.
> தினவுகெடச் சொன்னீர்கள்.
> திருவெள்ளரை ஸம்பந்தமும் இருக்கக் கூடும்.
>
> தேவ்
>
>
>
> Add more friends to your messenger and enjoy! Go to http://messenger.yahoo.com/invite/
V, Dhivakar wrote:
> 'கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே'
>
> எத்தனை 'ண' பார்த்திங்களா?
>
> கண்ணன் என்பது அழகான தமிழ்ப்பெயர்தான். சங்கத்தமிழ்ப் புலவர்கள் வைத்துக் கொண்ட
> பெயர் ஆயிற்றே! வடமொழியில் கன்னா அல்லது கன்னையா என்றுதான் சொல்வார்கள்.
கண்ணா (kaNHa), கண்ணையா (kaNHaia)
> வடமொழியில் கிருஷ்ணனை கன்னா எனும் பெயர் வருவதற்குக் காரணம் 'சைதன்யர்' எனக்
> கேள்விப்பட்டுள்ளேன். பாகவதத்தில் இந்த 'கன்னா; சொல் வருகிறதா என்று
> இங்குள்ளோர் சொல்லவேண்டும்.
>
கண்ண ( < க்ருஷ்ண) என்ற சொல் சைதன்ய பிரபுவிற்கு
1500 வருஷத்திற்கு முன்னரே பிராகிருதத்தில் வருகிறது.
பிராகிருதச் சொல்லாகிய கண்ணன் (< க்ருஷ்ண) தமிழ் ஏற்றது
என்று பல இடங்களில், நிகண்டுகளில் அறிஞர்கள் எழுதியுள்ளனர்.
அன்புடன்,
நா. கணேசன்
தேவ் ஐயா. இந்த வார்த்தையின் பொருள் விளங்கவில்லை. ஸப்தபூருஷ வைஷ்ணவத்வம் என்றால் என்ன?
V, Dhivakar wrote:
> க்ரவீரபுரத்தின் அரசன், ஸ்ரீகாலவ வாசுதேவன்!
>
கரவீரபுரம்.
கரவீரம் = அலரிப்பூ
அலரியூர் மொழிபெயர்ப்பு கரவீரபுரம்.
மஹாவிஷ்ணுவை ஒரு solar deity என்பது இந்தியக் கலைநிபுணர்
வழக்கு. விஷ்ணுவின் திரிவிக்கிரம அவதாரம் இதை விளக்கி நிற்கிறது.
கதிரவன் போல மூன்று அடி - குணக்கில் எழுதல், நண்பகலில் உச்சிக்கு
நேர் மேலே விளங்குதல், மாலையில் படிதல். இந்த solar deity ஆனதால்
மஹாவிஷ்ணுவுக்குத் தாமரை சம்பந்தம். நாபிக் கொப்பூழில்
அகில உலகமும் பத்மமாக உதித்தல் (பிறப்புக் கடவுள் பிரமனை அதில்
கண்மலரால் படைக்கிறார்). பதுமமலர்ப் பொகுட்டில்/கர்ணகத்தில்
பிரமன் பிறக்கிறான், அதில் ராஜீவ லோசனனின் பார்வை என்பது
சூரியன் உதிக்க மலரும் கமலப்பூ. பழைய விஷ்ணு சிலைகள் கையில் தாமரையைப்
பிடித்திருக்கும். அனந்தபுரத்தினில்
ஆடகப் பசும்பொன்னால் ஆன அனந்தபத்மநாபன் கையிலும்
தாமரைப் பூ உண்டு. தொட்டமளூர் கண்ணனுக்கும் கண் பெரிது,
பெரியாழ்வார் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை குழந்தைக் கண்ணனுக்காக
தமிழில் தோற்றுவிக்கிறார் அன்றோ?
கண்ணன் < க்ருஷ்ண. கண்ண, கண்ணையா என்னும் வடநாட்டாரின்
பிராகிருதச் சொல் என்பது நிகண்டும், மொழியியல் சாஸ்திரமும்.
நா. கணேசன்
> Cricket on your mind? Visit the ultimate cricket website. Enter http://beta.cricket.yahoo.com
N. Ganesan wrote:
> அழகாக எழுதியிருக்கிறீர்கள், சுவைத்தேன். வாழ்க!
>
இதையும் சேர்த்து வாசித்தருள்க:
http://groups.google.com/group/minTamil/msg/7d5bc14f79bb2e2c
வைணவத்தின் அழகே இவ்விரு இந்தியச் செம்மொழி மரபை "சிறப்பிக்கும்" வகையில்
உள்வாங்கிக் கொண்டதே! எம்பெருமானாருக்கு மேல் ஆழ்வார் உள்ளத்தை அறிந்தவர்
வேறுண்டோ? செம்மொழி தமிழின் உயர்வு அறிந்தாருண்டோ?
உண்மையில் ஆழ்வார்கள்தான் இதற்கு வித்திடுகிறார்கள். வேதாந்தம் இல்லாமல்
இவர்கள் மொழி புரியாது. "வேதம் தமிழ் செய்தல்" என்பதென்ன எளிய காரியமா?
சாதித்துக் காட்டியிருக்கிறார்களே. நாம் ஏன் இப்படியொரு தாழ்வு
மனப்பான்மையில் உழன்று பிறமொழிப் பகைமை கொண்டுள்ளோம்!
க.>
அதனை வெகு அழகாகத் தமிழில் பேர்த்து இராமகிருஷ்ன மடம்
(சென்னை) வெள்யிட்டுள்ளது. இரண்டு மொழிகளிலும் அந்நூலைப்
படித்துப் பாருங்கள்.
நூலறிந்தோர் இங்கு எழுதவும் வேண்டுகோள்.
நா. கணேசன்
> Add more friends to your messenger and enjoy! Go to http://messenger.yahoo.com/invite/
வைணவமரபில் கேள்வி இல்லாமல் எதையும் ஏற்றுக்கொண்டதில்லை. நரேந்திரனுக்கு
நிச்சயம் பிடித்திருக்கும்!
க.>
2009/3/26 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஸப்தபூருஷ வைஷ்ணவத்வம் என்றால் என்ன?//
’ஸப்தபூருஷ வைஷ்ணவத்வம்’
எந்தை தந்தை தந்தை தந்தை தம்மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
எம்பெருமானுக்கு மனம்,மொழி,மொய்களால் தொண்டு பூண்டு
அமுதமுண்ணும் தொல்குடியினர். (அமுது – பகவத்குணாநுபவம்)
ஏழாட்காலும் பழிப்பில்லாமல் வாழும் இக்குடியினரைப் போற்றுவது
மரபு; இது திருமகள் கொழுநன் திருவுள்ளமுகக்கும் செயல்.
ஆழங்காற்படும் தன்மையால் இவர்கள்தம் வாய்மொழியில் கல்யாணகுணாநுபவம்
பரிமளியா நிற்கும்.
சிறந்த எடுத்துக்காட்டு – வேளுக்குடி க்ருஷ்ணன் அவர்கள்.
1997 ம் ஆண்டு ரசிக ரஞ்ஜனி அரங்கில் பரனூர்ப் பெரியவர் உரை நிகழ்த்துமுன்
இவர் முகமன் கூற எழுந்தார்.
சொல்லமுதப் பெருங்கடலைச் செவிமடுத்த அவையோர் கல்லாய்ச் சமைந்தனர். உரையை
நிறைவு செய்யும் தருவாயில் நிறுத்தாமல் தொடருமாறு பெரியவர் சைகை
செய்தார்.இவர் உடன்படவில்லை.
பரனூர்ப் பெரியவர் தொடர்ந்து இவரது புலமையையும், தந்தையாரான வேளுக்குடி
வரதாசார்யரின் சொல் திறமையையும்
மனமாறப் பாராட்டினார்.
இதைத் தமிழ் செய்யுமாறு கோரலாம்; அடியவர்களும்,அறிஞர் பெருமக்களும்
சேர்ந்து செய்ய வேண்டிய பணி.
அடியேன் பொரியைப் பொறி என்று எழுதுபவன்; திருவெள்ளறையைத் திருவெள்ளரை
ஆக்கினேன். அறிஞர்கள் அன்போடு திருத்துகின்றனர்;
ஆகவே இதற்குச் சற்றும் தகுதியற்றவன்.
தேவ்
On Mar 26, 7:16 am, Thirumalai Vinjamoor Venkatesh
<vinjamoor_venkat...@yahoo.com> wrote:
> கணேசன் சார்,
>
> <சுவாமி சித்பவனானந்தரின் குரு, நண்பர் ராமகிருஷ்ண மடத்த் துறவி
> இருந்தார்கள், பெயர் ஞாபகம் வரவில்லை. அவர் விரிவாக இதனைத்
> தன் ராமானுஜர் வரலாறு (ஆங்கில மூலம்) நூலில் எழுதியுள்ளார்.
>
> அதனை வெகு அழகாகத் தமிழில் பேர்த்து இராமகிருஷ்ன மடம்
> (சென்னை) வெள்யிட்டுள்ளது. இரண்டு மொழிகளிலும் அந்நூலைப்
> படித்துப் பாருங்கள்.>
>
> மிக்க நன்றி, நிச்சயம் வாங்கிப் படிக்கிறேன்.
>
> அடியேன்
> வேங்கடேஷ்
This is the book I am talking about:
Swami Ramakrishnananda (b. 1863),
Life of Sri Ramanuja
1965 [2d ed.]. 273 p.,
Madras, Sri Ramakrishna Math
It was reprinted in 1977 also.
Swami Ramakrishnanandar wrote
the original in his Bengali language.
A first attempt to tell about ri Ramanujar
to Bengalis! Then his Bengali book
was translated into English:
Translation of Ramanuja-carita.
Previously serialized in the English monthly,
Vedanta kesari, 1949 to 1954.
Then Mylapore Ramakrishna Math printed
it. I've the copy somewhere, and I don't
know whether this book is still in print.
May be someone from Chennai can check
at the RK Math, Mylapore.
See Paa. Raa.'s 100 book titles:
http://kuripugal.blogspot.com/2009/01/100.html
This is a beautiful Tamil translation of
Swami Ramakrishnanandar's original book:
ராமானுஜர்(வாழ்க்கை வரலாறு) - ராமகிருஷ்ண மடம் வெளியீடு
Hope some people here read both
English and Tamil books & discuss.
All the best,
N. Ganesan
அதனை வெகு அழகாகத் தமிழில் பேர்த்து இராமகிருஷ்ன மடம்
(சென்னை) வெள்யிட்டுள்ளது. இரண்டு மொழிகளிலும் அந்நூலைப்
படித்துப் பாருங்கள்.//
ஸ்வாமி ராமக்ருஷ்ணாநந்தா; பரமஹம்ஸரின் சீடர்;
முதலில் சசி பூஷண சக்ரவர்த்தி என்ற பெயர்.
சென்னை ராமக்ருஷ்ண மடத்தை முதலில் நிர்வகித்தவர்.
1911 ம் ஆண்டு ஸமாதியானார்.
இவர் ராமாநுஜ சரிதத்தை வங்கமொழியில் எழுதினார்
என்று நினைக்கிறேன்.
தேவ்
இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
நம்மையு டையவன் நாராய ணன்நம்பி,
என்பது அன்னை மொழியல்லவா? இந்த சொந்தம்/பந்தம் ஏழேழ் பிறவிக்கு மட்டுமா? இல்லை.
நம்மையுடையவன் நாராயணன் நம்பி!
எனவே நாம் அவன் உடமை.
இப்படி இருத்தல் வைணவத்துவம்!
க.>
அஞ்சற்க!
உங்களுக்கு அவன் உடமை இல்லை என்பது போல் தோற்றமளித்தாலும், அவனுக்கு நீர்
உடமை. தன் சொத்தை காத்து, வேண்டிக்கொள்ளும் திறம் அவனுக்குண்டு (இது
ஒண்ணுதான் நமக்கு ஒரே பற்றுக்கோல்!).
க.>
நீர் 'அடியேன்' 'அடியேன்' எனும் போதே 'சேஷபூதன்' என்பது தன்னியல்பாய்
வெளிப்படுகிறது. அது போதும் அவனுக்கு!
2009/3/27 Thirumalai Vinjamoor Venkatesh <vinjamoor...@yahoo.com>: