பெண்ணே உங்கள் வருங்கால கணவர்

17 views
Skip to first unread message

n.prasannam

unread,
Dec 2, 2014, 11:08:48 AM12/2/14
to HAVE-A...@yahoogroups.com, sadgo...@googlegroups.com, tamila...@googlegroups.com, mint...@googlegroups.com
 
As per Facebook
Subramanian Ramachandran shared Puradsifm's photo.

2 hrs · 

girl.jpg

 

Puradsifm with VinoVirus Kumar and 2 others

பெண்ணே உங்கள் வருங்கால கணவர்

1. கார் வைத்து இருக்க வேண்டும்,

2. சொந்த வீடு இருக்க வேண்டும்,
கை நிறைய சம்பாதிக்க வேண்டும்(சாப்ட்வேர்/பாரீன் மாப்பிளை யாக இருக்கனும் உள்ளூர் பயல்க எல்லாம் ஆண்கள் இல்லையோ?),

3. ஆன்சைட் செல்லும் வாய்புகள் இருக்க வேண்டும்,

4. முக்கியமா திருமணதிற்கு பின் தனி குடுத்தனம் போக தயாராக இருக்க வேண்டும்,

5. அக்கா தங்கை இருக்க கூடாது,

6. அமெரிக்கன் அக்சென்ட் ஆங்கிலம் பேச வேண்டும்

7. உங்க தாய் தந்தையர் மீது மரியாதையும் பணிவும் இருக்க வேண்டும் (ஆனால் அதை உங்களிடம் எதிர்பார்க்க கூடாது!)

8. பிஸியாக இருக்கனும் ஆனாலும் உங்களுக்காக நேரம் ஒதுக்கணும்,

9. பிட்டாக இருக்க வேண்டும்,

10.அலுவலகத்திற்கு அருகிலே வீடு இருக்க வேண்டும் (மாமியார் வீடு மட்டும் மிக தூரத்தில் இருக்க வேண்டும்),

11.கெட்ட பழக்க வழக்கம் இருக்க கூடாது அதை நிரூபிக்க ரத்த சோதனை சான்றிதழ் அளிக்க வேண்டும்,

இதை அனைத்தையும் எதிர்பார்க்கும் நீங்கள், இதுவும் ஒரு வித வரதட்சணை என்று புரியவில்லையா?
மொத்தத்தில் எ டி எம் போன்ற மெசினுடன் வசதியான வாழ்க்கைக்கு நீங்கள் தரும் லட்சம் தான் இந்த வரதட்சணை.
காஸ்டிலியான மாப்பிள்ளை வேண்டும் என்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் குடுக்க தயாராக இருக்கும் நீங்கலும் வட்டிக்கு விட்டு சம்பாதிக்கும் சேட்டும் ஒன்று தான்.
இனியும் வரதட்சணைக்கு ஆண்கள் மட்டும் தான் காரணம் என்று புலம்புவதை நிறுத்துங்கள். தன்னால் விடியும்.

 

image001.jpg

Oru Arizonan

unread,
Dec 2, 2014, 11:48:42 AM12/2/14
to mint...@googlegroups.com
உயர்திரு  பிரசன்னம் அவர்களே,

எந்த ஒரு இழை மடலாடலிலும் கலந்துகொள்ளாது, "கருமமே கண்ணாயினார்" போலத் தினம் ஒரு தகவலைத் தந்து மகிழ்விப்பவர் நீங்கள். ஃ பாரின் பிள்ளைகளின் பெற்றோர்கள் நீங்கள் கொடுத்துள்ளதை உணர்ந்துதான் இருக்கிறார்கள்.  அது தமிழ்ப் பெண்களை நினைத்து அவர்களை மிகவும் நடுங்க வைக்கிறது.  இதில் சாதி, சமய வேறுபாடு இல்லை.

இதைப்  பல பிள்ளைகளின் பெற்றோர்கள் எங்களிடம் சொல்லி மிகவும் குமுறி இருக்கிறார்கள்.  எனவே, இங்கு இருக்கும் பிறந்து வளர்ந்த/அல்லது வளர்ந்த தமிழ்ப் பிள்ளைகள், இங்கு பிறந்து வளர்ந்த/அல்லது வளர்ந்த பெண்களை விரும்புகிறார்கள்.   தமிழ் நாட்டுடன் தொடர்பு அற்றுப் போகக்கூடாது என்னும் பெற்றோர்களுக்கு இது ஒரு சவாலாகவே அமைந்து வருகிறது.

இதைப் பெண்ணியம் பேசும் பெருந்தகையாளர்கள் சரியான மனநிலையில் ஆய்ந்தறிந்து, இளம்ஆண் /பெண்களிடம், தமிழ்ப் பண்பை வளர்த்து நிலைநிறுத்த முயற்சிக்க வேண்டும் என்பதே எனது ஏக்கம்.

தங்களுடைய இப்பதிவு தமிழக இளம்பெண்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் ஒரு சவாலாகும்.  இந்தப்  பதிவு (உயர்திரு பிரசன்னம் அவர்களின் பதிவு) மின்தமிழில் விவாதிக்கப்படவேண்டிய ஒரு முக்கியமான கருத்தாகும்.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 





--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

தேமொழி

unread,
Dec 2, 2014, 4:32:57 PM12/2/14
to mint...@googlegroups.com
///
இதைப் பெண்ணியம் பேசும் பெருந்தகையாளர்கள் சரியான மனநிலையில் ஆய்ந்தறிந்து, இளம்ஆண் /பெண்களிடம், தமிழ்ப் பண்பை வளர்த்து நிலைநிறுத்த முயற்சிக்க வேண்டும் என்பதே எனது ஏக்கம்.
///



ஹ...ஹ...ஹா...சிரிப்புத் தாளவில்லை.

காசு கொடுத்து வாங்கினால் பொருக்கி எடுத்து ...பார்த்துதான் வாங்க முடியும். பின்னே கண்ணை மூடிக்கொண்டு பொறுக்கியையா தேர்வு   செய்வார்கள்.

வரதட்சணை என்ற பெயரில் தண்டம் அழும்பொழுது, அவர்கள் கொடுத்த காசுக்கு, அவர்கள்  வசதிக்கு ஏற்ற மாப்பிள்ளையைப் பார்க்க வேண்டியதுதான்.  

இந்தியப் பெண்களின் புத்திசாலித்தனம் சிறப்பானது.... நுகர்வோர் அடிப்படையில்  அவர்கள் திறமைசாலிகளாக இருப்பதைப் பாராட்டுகிறேன்.


என் பிள்ளை டாக்டர் ....இன்ஜினியர் ...என்ற மிதப்பில் அதே தகுதி உள்ள பெண்களிடம் வரதட்சிணை கேட்பது, பார்க்க திரைப்பட நடிகை போலிருக்க வேண்டும்...பழக நாய்க்குட்டி போலிருக்க வேண்டும்...ஒரு குரல் கொடுத்தால் போட்டது போட்டபடி போட்டுவிட்டு ஓடி வந்து சொல்லிய வேலையைச் செய்யும் வேலைக்காரியாகவும் இருக்க வேண்டும்.  .... எத்தனை எத்தனை எதிர்பார்ப்புகள் காலமா காலமாய்.

என் தங்கை மருத்துவர் ..அவருக்கு மாப்பிள்ளை பார்த்த பொழுதே இந்த கோமாளித்தனங்கள்  நடந்தன.  வரதட்சிணை என்று யாராவது வாய் திறந்தால் வந்தவர்களுக்கு அப்பா வாசல் பக்கம் கை காட்டி விடுவார்கள்.  

பேசாமல் அனைவரும் பிள்ளைகளை காதல் திருமணம் செய்ய விட்டு விடுங்கள்....சரியான துணையை தேர்ந்தெடுக்கும் வகையில் திறமையை வளர்த்துவிடுங்கள் ....பிறகு அவர்கள் பாடு. பிள்ளைகளை வளர்த்து அவர்களிடம் இருந்து உதவியை  எதிர்பார்க்க தென்னம்பிள்ளைகளையா வளர்க்கிறார்கள்?  

என் பிள்ளை முதலில் நடந்தான்.. பேசினான்......என் பெண் உனது பெண்ணிற்கும் முன்னரே திறமைசாலியாக அதைச் செய்தாள் ..இதைச் செய்தாள் என்று பெருமை பேச விரும்பும் பெற்றோர்கள் ..என் பிள்ளை முதன் முதலில்  காதலித்தான், என் பெண் தானே மாப்பிள்ளை பார்த்துக் கொண்டால்  என்று ஏன் பெருமை பேசுவதில்லை?

அத்துடன் பெண்களைக் குறை சொல்வதை விட்டுவிடுங்கள்.  

யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும். 

மரியாதையும் அன்பும் கொடுப்பவர்களுக்குத் தானே பதிலுக்குக் கிடைக்கும்.

தமிழர் பண்பாடு என்றால் வீரமும் காதலும் என்றுதான் கேள்விப்படிருக்கிறேன்...

..... தேமொழி

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Dec 2, 2014, 4:53:51 PM12/2/14
to mint...@googlegroups.com
//இந்தியப் பெண்களின் புத்திசாலித்தனம் சிறப்பானது.... நுகர்வோர் அடிப்படையில்  அவர்கள் திறமைசாலிகளாக இருப்பதைப் பாராட்டுகிறேன்.//

இது முற்றிலும் மாற்றுபட்ட, நான் சற்றும் எதிர்பார்க்காத கோணம், அன்பின் தேமொழி!  என்னைத் தூக்கிவாரிப்போடவைத்த கோணம்.

ஆணும், பெண்ணும் வாழ்வு முழுவதும் இணைவது நுகர்வோர் அடிப்படையா?!

பெண்களை மட்டும் குறை சொல்வதில்லை.  இந்தியாவில் தமிழ் ஆண்மகன்களின் மனநிலையும் மாறித்தான் போயிருக்கிறது.  அந்தவகையில் நீங்கள் கருத்துப் பதிந்திருப்பதும் உண்மையே.  

ஆனால், முன்பு இழைக்கப்பட்ட அநீதி தவறு என்று சரியாகக் கருத்துப் பதிந்த நீங்கள், திரும்ப அதே மாதிரி அநீதி இப்பொழுது ஆண்களுக்கு இழைக்கப்படவேண்டும் என்று எண்ணுவது தங்களுக்குகே நியாயமாகப் படுகிறதா, தேமொழி?

திருமணம் வியாபாரமாகத்தான் மாறிவருகிறது.  இரு குடும்பங்களின் இணைப்பாகக் கருதப்படுவதில்லை.  உறவு பெருகுவதற்காக எனக் கருதப்படுவதில்லை.

இதற்குமேல் கருத்துப் பரிமாற எனக்குத் தயக்கமாக இருக்கிறது, தேமொழி!

ஒரு அரிசோனன் 

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Dec 2, 2014, 5:30:52 PM12/2/14
to mint...@googlegroups.com
///
இதற்குமேல் கருத்துப் பரிமாற எனக்குத் தயக்கமாக இருக்கிறது, தேமொழி!
///

:)) விட்டுவிடுங்கள்...நான் மாற்றுக் கோணத்தைக் காட்ட விரும்பினேன். 



///
அதே மாதிரி அநீதி இப்பொழுது ஆண்களுக்கு இழைக்கப்படவேண்டும் என்று எண்ணுவது தங்களுக்குகே நியாயமாகப் படுகிறதா, தேமொழி?
///

ஆண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்ன என்று புரியவில்லை.  

ஒருவர் எதிர்பார்ப்புகள் கொண்டிருப்பது போலவே  மற்றவரும் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி ....வாழ்க்கையைப் பற்றிக் குறிக்கோள்கள் கொண்டிருப்பது அநீதி அல்ல.

ஒப்பந்தம் போல பேசி முடிவெடுக்கும் பொழுது ஒப்பந்த நிபந்தனைகள் ஒத்துவராவிட்டால் கையெழுத்திடத் தேவையில்லையே.  கைகுலுக்கிவிட்டு அவரவர் வழியில் நடக்கலாம்.  அந்தப் பெண்ணைத்தான்  திருமணம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.  நிபந்தனைகள் ஒத்து வரும், மனதிற்கேற்ற மற்றொரு இடம் கிடைக்கலாம்.  

அத்துடன் நிபந்தனைகளை இருசாரரும் வைப்பதில் தவறுமில்லை.   ஒரு சாரரே வைத்ததைப் பார்த்து பார்த்து பழகிப்போனதால் காலமாறுதல் ஒத்துக்கொள்ள முடிவதில்லை.  

பெண்கள் திருமணமானதும்,  உனக்கு நான் வேண்டுமா உன் குடும்பம் வேண்டுமா...முடிவு செய்...இது போன்ற வசனம் உள்ள ஒரு சாவித்திரி ஜெமினியின் பழைய  படம் ஒன்றை சமீபத்தில் கூடப் பார்த்தேன்.  இப்பொழுதெல்லாம் இது இது என் நிபந்தனை ....ஒத்துக் கொண்டால் பார்க்கலாம்...தொடருவோம்... என்று முன்னரே முடிவு செய்யும் நிலைமை என்பது தெரிகிறது.  

ஒருவருக்கு எதிர்பார்ப்புகள் இருப்பது தவறு அல்ல. விட்டுக் கொடுக்க வேண்டும் என்றால் இருவருக்குமே அது நடைமுறையில் இருக்க வேண்டும்.  தான் பணம் வாங்கினால் அது தவறல்ல ஆனால் பெண் அதற்கேற்ற வசதி எதிர்பார்த்தால் வியாபாரி என்பது போல பேசுவது சரி அல்ல. 

மேர்செடிஸ் பென்ஸ் வாங்கி ப்ராபெர்ட்டி டாக்ஸ்,  இன்ஷூரன்ஸ்,  பெட்ரோல் போட்டு கட்டுப்படி ஆகாது என நினைப்பவர்கள், அவர்கள் வசதிக்குத் தக்க கைக்கடக்கமான மாருதி சுசுக்கி வாங்கி ஓட்டிக் கொள்ளுங்கள். 



..... தேமொழி
Reply all
Reply to author
Forward
0 new messages