
என்னுடைய பள்ளிப் படிப்பு பழனியில். கோவிலைச் சுற்றி எங்காவது ஒரு இடத்தில் கே.பி.எஸ் கிருபானந்த வாரியார் போன்றவர்களின் நிகழ்ச்சியுடன் இவர் நிகழ்ச்சியும் நடக்கும். இவருடைய இசை அமைதியான ஆற்றொழுக்குப் போன்றது. முருகபக்தரான இவர் கண்ணனைப்பற்றியும் சிந்தை குளிரப் பாடியவர். ஏனோ மின்தளத்தில் உள்ள வைணவர்கள் இவரைக் கண்டுகொள்வதில்லை
http://www.youtube.com/watch?v=kLUywcuPz1I
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.
சரி கேள்விக்கு வருவோம்
இந்த விழியக் காட்சியில் தோன்றும் சிறுமிகளில் ஒருத்தி கலிபோர்னியா இசைப் பள்ளியில் இசை கற்றவர். இங்கே சில வரிகள் பாடுவார். அவரின் அம்மா அப்பா எல்லாம் கலைஞர்கள்
யாரோ இவர் யாரோ என்ன பேரோ
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சத்தம் கேக்குது
ஆராய்ச்சிக் குஞ்சு