
ஆகிய பத்துபேர் உரையெழுதினர் என்று பழைய வெண்பா ஒன்று தெரிவிக்கிறது.
போன்றோர் எளியவுரை படைத்தனர்.
போன்றோர் பகுத்தறிவுப் பார்வையில் உரை தந்தனர். பொதுவுடைமைப் போக்கிலும் சமயநோக்கிலும் எழுதப்பட்ட உரைகளும் உண்டு. இவ்வுரைகளில் பலவற்றுள் திருவள்ளுவரின் முகம் தெரியவில்லை. உரையாசிரியர்களின் முகங்களே தெளிவாகத் தெரிகின்றன.
போன்றோர் விரிவாக எழுதியுள்ள உரைகள் தொடங்கிக் குறளினும் சுருக்கமாக வந்துள்ள திரு.வெற்றிவேலின் ஒரு வரி உரை ஈறாக அமைந்துள்ள உரைகள் கற்பாரை வியப்பில் ஆழ்த்துகின்றன.
போன்றவை புதிய ஒளி வழங்கும் குறிப்பிடத்தக்க நூல்களாகும்.
தமிழறிஞர்களும், ஆர்வலர்களும் எந்த வகையிலேனும் திருக்குறள் தொடர்பான நூல் படைப்பதில் தணியாத ஆர்வம் உடையவர்களாக விளங்குகிறார்கள். இப்போக்கு மகிழ்ச்சிக்குரியதே. ஆனால், பெரும்பாலான உரைகள் முன் வந்த உரைகளையே பெரிதும் சார்ந்து உரையாசிரியர்களின் பங்களிப்பு ஏதுமின்றி காணப்படுகின்றன.
எந்தப் போக்கில் அமைந்த உரையாக இருந்த போதிலும் அதில் ஐம்பது விழுக்காட்டிற்கு மேல் பரிமேலழகரின் உரை பின்பற்றப்பட்டிருத்தல் காணலாம். ஒரு சிலவற்றிலேயே புதிய விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன. பரிமேலழகரை நச்சுக்கருத்துகளை விதைத்தவர் என்று குற்றஞ் சுமத்தும் அறிஞர் தேவநேயபாவாணர்கூட அவருடைய பதசாரங்களையும் நுட்பவுரைகளையும் அங்கங்கே அப்படியே ஏற்றுத் தனித்தமிழ்ப்படுத்திப் போற்றிக்கொள்வது காணலாம்.
ஒரு குறளுக்குப் பல பொருள் சொல்லப்படும்போது எது சரியான பொருள் என்பதைத் தெளிய வேண்டிய அவசியம் நேரிடுகிறது. இந்த முயற்சியில் ஈடுபட்டுப் பண்டைய உரைகளோடு பின் வந்த உரைகள் பலவற்றையும் ஒப்பநோக்கி, அவற்றில் நிலவும் உரை வேற்றுமைகளை ஆய்ந்து தம்முடிபினைத் தந்து "திருக்குறள் உரை வேற்றுமை" என்னும் நூலை முனைவர் இரா. சாரங்கபாணி உருவாக்கியுள்ளார். பல தெளிவுகளைத் தருவது அந்நூல். இத்தனை முயற்சிக்குப் பின்னும் சில குறட்பாக்கள் பெரும்பாலோர் தெரிவிக்கும் விளக்கத்துக்கு வேறான புதிய விளக்கம் காண்பதற்கு இடம் அளிக்கின்றன.
பண்டைய உரையாசிரியர்களையும் இன்றைய அறிஞர்களையும் மயங்கச் செய்யும் குறள்களில் ஒன்றாக அமைச்சு அதிகாரத்தின் இரண்டாவது குறள் அமைந்துள்ளது. அமைச்சர்க்கு இருத்தற்குரிய இயல்புகளைத் தெரிவிக்கும் அக்குறள்:
இக்குறளில் ஐந்து தன்மைகள் குறிக்கப்படுவதாகக் கொண்டு பண்டைய உரையாசிரியர்கள் உரைகண்டுள்ளனர். மணக்குடவர் குடிகாத்தல் என்பதைக் குடி என்றும், காத்தல் என்றும் இரண்டாகப் பிரித்து, ஏனையவற்றோடு சேர்த்து, "அஞ்சாமையும் குடிகாத்தலும் இந்திரியங்களைக் காத்தலும் நூன்முகத்தான் அறிதலும் முயற்சியும் என்னும் ஐந்தும் கூட மாட்சிமைப்பட்டவன் அமைச்சன் ஆவான்," என்று உரையிட்டுள்ளார். பரிப்பெருமாளும் காளிங்கரும் இக்கருத்தையே கொண்டுள்ளனர்.
பரிதியார் குடிகாத்தல் என்பதைப் பிரிக்காமல், கற்றறிதல் என்பதைக் "கற்று" என்றும் "அறிதல்" என்றும் இரண்டாகப் பிரித்து, ஏனையவற்றோடு கூட்டி, "தருகணாண்மை, குடிகாத்தல், கல்வி, அறிவுடைமை, உத்தியோகம் என்னும் அஞ்சு குணமுள்ளவன் மந்திரி என்றவாறு," என்று உரைகண்டுள்ளார். தொல்காப்பிய உரையாசிரியராகிய பேராசிரியரும் இவ்வாறே இக்குறளுக்குப் பொருள் கண்டுள்ளார் என்பது தொல்காப்பியப் பொருளதிகார 273ம் நூற்பாவுக்கு அவர் வரைந்துள்ள உரைப்பகுதியில் தெரிகிறது.
இனிப் பரிமேலழகர் கண்ட உரையினைக் காணலாம். அவர் இக்குறளோடு இதற்கு முன்னுள்ள குறளை இணைத்து உரை வரைந்துள்ளார். இதற்கு முன்னுள்ள குறள்,
"கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு." (631)
இரண்டாம் குறளில் இடம்பெற்றுள்ள ஐந்து என்பது அதற்கு முன்னுள்ள குறளில் இடம் பெற்றுள்ளவற்றைச் சுட்டுவதாகக் காட்டினார். ஆனால் அதிலும் ஐந்து பொருள்கள் இல்லை.
என்று இரண்டாகப் பிரித்து ஐந்தாக்கிக் கொண்டார். அதனை இக்குறளோடு தொடர்புபடுத்தி, "வினை செய்தற்கண் அசைவின்மையும், குடிகளைக் காத்தலும், நீதிநூல்களைக் கற்றுச் செய்வன தவிர்வன அறிதலும், முயற்சியும் மேற்சொல்லிய அங்கங்கள் ஐந்துடனே திருந்த உடையானே அமைச்சனாவான்," என்று விளக்கம் தந்துள்ளார்.
பரிமேலழகர் இரண்டாவது குறளில் நான்கு பண்புகளே சுட்டப்படுகின்றன என்று சொல்வது பொருத்தமாக இருக்கிறது. ஆனால் இக்குறளை மேற்குறளோடு இணைத்து உரை கண்டிருப்பது இயல்பாக இல்லை.
திருக்குறள் நூல் முழுவதிலும் ஒவ்வொரு குறளும் ஒவ்வொரு தனிக்கருத்தைத் தெரிவிக்கும் தனித்தனி அலகாகவே அமைந்திருக்கிறது. அதனால்தான் பண்டைய உரையாசிரியர்கள் அதிகாரக் குறள்வரிசையினைத் தங்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொண்டுள்ளனர். எனவே பரிமேலழகர் தரும் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
ஆகிய நான்கும் ஒரு பகுதியாகவும், ஐந்து என்பது மற்றொரு பகுதியாகவும் சுட்டப்பெறுதல் காணலாம். ஓடு (ஆள்வினையோடு) என்னும் உருபும், உடன் (ஐந்துடன்) என்னும் சொல்லுருபும் இப்பிரிவினைக் காட்டும் வகையில் அமைந்துள்ளன.
திருக்குறளில் சில இடங்களில் "ஐந்து" என்னும் தொகைச்சொல் இடம்பெற்றுள்ளது. அங்கெல்லாம் அஃது எப்பொருளைச் சுட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்வது இங்கு அஃது உணர்த்தும் பொருளை அறுதியிடத் துணைபுரியும்.
திருவள்ளுவர் ஐந்து என்னும் தொகைச்சொல்லால் சுட்டப்படுவன புதியனவாக இருந்தால் அவற்றை விரித்துக் கூறி ஐந்து என்று தொகைச்சொல் கொடுத்து முடிக்கிறார். ஐந்து என்னும் தொகைச் சொல்லால் சுட்டப்படுவன பலருக்கும் எளிதில் அறியக் கூடிய பொருள்களாக இருந்தால் ஐந்து என்று மட்டும் குறித்துச் செல்கிறார். இது திருவள்ளுவர் மேற்கொண்ட நெறியாக அமைந்துள்ளது.
என்னும் இடங்களில் ஐந்து என்பதால் குறிக்கப்படுவனவற்றை முன்னே கூறிப் பின்னர் ஐந்து என்னும் தொகைச்சொல் குறிக்கப்படுதல் காணலாம். இவ்வாறு விரித்துக் கூறாவிட்டால் அவை யாவை என்பது விளங்காமல் போய்விடும்.
என்னும் இடங்களில் ஐம்பொறிகளைக் கிளந்து கூறாமல் தொகைச் சொல்லால் குறித்துச் செல்வது காணலாம்.
இதனால் ஐம்பொறிகளை விளக்கிக் கூறாமல் ஐந்து என்று குறித்துச் செல்வது திருவள்ளுவரிடம் காணப்படுவதோர் இயல்பு என்பது தேற்றம்.
இதனை மனதில் கொண்டு "வன்கண்" என்று தொடங்கும் குறட்பாவினை நோக்கினால், "வன்கண்மையும் (தளரா முயற்சியும்) குடிகாத்தலும், கற்றறிதலும் ஆள்வினையும் ஆகிய நான்கும் பொறிகள் ஐந்துடனே செம்மையாக உடையவனே அமைச்சனாவான்," என்பதே இதன் பொருள் என்பது விளங்கும்.
அமைச்சன் குறையில்லா ஐம்பொறிகளையும் அவற்றை அடக்கிக் காக்கும் திறனும் உடையவனாக இருப்பதே அவனுக்கு மாட்சியாகும். அரசியல் தலைமை ஏற்போர்க்குப் பொறிகளில் குறை இருத்தல் கூடாது என்பதனால்தான் திருதராட்டிரன் அரசாள முடியவில்லை என்பது பாரதத்தால் விளங்குகிறது. பொறிகளில் குறைபாடுடைய அமைச்சனின் செயற்பாட்டில் இடர்பாடு நேரிடும். பொறிகளின் ஆசைக்கு இடம் கொடுக்கும் அமைச்சன் இடறி விழுந்து தான் அழிவதோடு, தன் அரசனுக்கும் அழிவினை ஏற்படுத்துவான். பெண்ணிடம் கொண்ட காமத்தால் நெறி தவறிய அமைச்சர் சிலரை வரலாறு கண்டிருக்கிறது. இக்கருத்துக்கு ஏலாதி எனும் நூலும் வலிமை சேர்க்கிறது. "நாற்றம் சுவைவெஃகி நல்லார் இனம்சேர்தல் தேற்றானேல் தேறும் அமைச்சு" (17) என்கிறது ஏலாதி.
இவ்வாறு இக்குறளுக்குப் பொருள் கண்டவர் யாரேனும் உண்டோ என்று தேடியபோது, பின்னாளைய உரையாசிரியர்களுள் கடவுள் மறுப்புக் கொள்கை என்னும் தளத்தில் நின்று தம் போக்கில் உரைகண்ட புலவர் குழந்தை ஒருவர் மட்டும் பொருள் கண்டுள்ளார் என்பது தெரிய வருகிறது. "வன்கண் முதலிய நான்கும், ஐம்பொறித் தூய்மையும் திருந்த உடையவனே அமைச்சனாவான். ஐந்து - தொகைக்குறிப்புச் சொல். வன்கண் முதலிய நான்கோடு ஐம்பொறித் தூய்மையும் உடையவனென்க," என்பது அவரது உரை.
திருக்குறளில் எழும் ஐயங்களுக்குத் திருக்குறளின் துணைகொண்டு தெளிவு தேடினால் தகுந்த விளக்கம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
MOBILE 09345419948
www.puduvaisugumaran.blogspot.com
வணக்கம்,
திருக்குறளை எதில் வடித்து வைத்தார் திருவள்ளுவர்? ஒலைச் சுவடியெனில் அது இன்னமும் எங்கேயேனும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறதா? யாரேனும் அறிந்திருந்தால் தையை கூர்ந்து தெரிவிக்கவேண்டுகிறேன்.
இதற்குப் பேர்தான் "அப்துல்கலாம் கேள்வி" என்பது! அவரிடம் தமிழ் மரபு
அறக்கட்டளை பற்றி விளக்கியபோது இப்படித்தான் கேட்டார். தெரியாமல்
கேட்கவில்லை. வள்ளுவனின் மீது அவருக்குள்ள கட்டற்ற காதலால் அப்படிக்
கேட்டார். வள்ளுவன் கைப்பட எழுதிய ஓலை கிடைத்தால் கண்ணில்
ஒட்டிக்கொள்ளலாமே எனும் ஆதங்கத்தால் அப்படிக் கேட்டார். ஏதாவது தெய்வீக
அதிசயம் நடந்தாலன்றி அவ்வோலை 2000 சொச்சம் வருடங்களுக்குப் பிறகு இன்று
கிடைக்க வழியில்லை. ஹரி அண்ணா விளக்கிவிட்டார்.
க.>
இதற்குப் பேர்தான் "அப்துல்கலாம் கேள்வி" என்பது! அவரிடம் தமிழ் மரபு
அறக்கட்டளை பற்றி விளக்கியபோது இப்படித்தான் கேட்டார்.
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
இக்குறள் அமைப்பினைக் கூர்ந்து நோக்கினால்,
- வன்கண்
- குடிகாத்தல்
- கற்றறிதல்
- ஆள்வினை
ஆகிய நான்கும் ஒரு பகுதியாகவும், ஐந்து என்பது மற்றொரு பகுதியாகவும் சுட்டப்பெறுதல் காணலாம். ஓடு (ஆள்வினையோடு) என்னும் உருபும், உடன் (ஐந்துடன்) என்னும் சொல்லுருபும் இப்பிரிவினைக் காட்டும் வகையில் அமைந்துள்ளன.
திருக்குறளில் சில இடங்களில் "ஐந்து" என்னும் தொகைச்சொல் இடம்பெற்றுள்ளது. அங்கெல்லாம் அஃது எப்பொருளைச் சுட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்வது இங்கு அஃது உணர்த்தும் பொருளை அறுதியிடத் துணைபுரியும்.
திருவள்ளுவர் ஐந்து என்னும் தொகைச்சொல்லால் சுட்டப்படுவன புதியனவாக இருந்தால் அவற்றை விரித்துக் கூறி ஐந்து என்று தொகைச்சொல் கொடுத்து முடிக்கிறார். ஐந்து என்னும் தொகைச் சொல்லால் சுட்டப்படுவன பலருக்கும் எளிதில் அறியக் கூடிய பொருள்களாக இருந்தால் ஐந்து என்று மட்டும் குறித்துச் செல்கிறார். இது திருவள்ளுவர் மேற்கொண்ட நெறியாக அமைந்துள்ளது.
- பொருள், கருவி, காலம், வினை இடனோடு ஐந்தும் (675)
- பிணியின்மை, செல்வம், கல்வி, விளைவு, இன்பம், ஏமம் அணி என்ப நாட்டிற்கு இவ் ஐந்து (738)
- உடை, செல்வம், ஊண், ஒளி, கல்வி என்று ஐந்தும் (939)
- அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்து (983)
என்னும் இடங்களில் ஐந்து என்பதால் குறிக்கப்படுவனவற்றை முன்னே கூறிப் பின்னர் ஐந்து என்னும் தொகைச்சொல் குறிக்கப்படுதல் காணலாம். இவ்வாறு விரித்துக் கூறாவிட்டால் அவை யாவை என்பது விளங்காமல் போய்விடும்.
- உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் (24)
- ஐந்து அவித்தான் ஆற்றல் (25)
- ஒருமையுள் ஆமைபோல் ஐந்து அடக்கல் ஆற்றின் (126)
என்னும் இடங்களில் ஐம்பொறிகளைக் கிளந்து கூறாமல் தொகைச் சொல்லால் குறித்துச் செல்வது காணலாம்.
இதனால் ஐம்பொறிகளை விளக்கிக் கூறாமல் ஐந்து என்று குறித்துச் செல்வது திருவள்ளுவரிடம் காணப்படுவதோர் இயல்பு என்பது தேற்றம்.
"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார் "
திருக்குறளில் கடவுள் வாழ்த்தில் வரும் இந்தக்குறளில்
குறிப்பிடப்படும் மலர் எதுவாக இருக்கலாம் .?
எந்த மலரில் ஏகியதால் இறைவனுக்கு பெருமை வந்திருக்கும் ?.
இதுக்குறித்து அறிந்தவர்கள் விளக்கினால் தெரிந்தது கொள்ளலாம் .
எனக்கு சில கருத்துக்கள் இது பற்றி உண்டு , அதையும் சரி பார்க்கலாம் .
அன்புடன் ,
ஏ.சுகுமாரன்
இக்குறள் அமைப்பினைக் கூர்ந்து நோக்கினால்,
- வன்கண்
- குடிகாத்தல்
- கற்றறிதல்
- ஆள்வினை
சுவாரசியமான கேள்வி.
கணினியின் மூளை "கல்" (மண்) தானே! சிலிகான் :-)
பிரபஞ்சத்தில் சேதிகள் (information) அழிவதில்லை என்பதோர் கோட்பாடு!
மறந்துவிட்டால், எங்கு இச்சிந்தனை வந்ததோ அந்த இடத்திற்குப் போனால்
மீண்டும் ஞாபகம் வந்துவிடும் :-) சிந்தனை கூட அந்தரத்தில் நிற்கும் போல
;-)
க.>
"மலர்மிசை ஏகினான் குறளில் குறிப்பிடப்படும் மலர் எதுவாக இருக்கலாம்?
//அடியார்களின் மனமாகிய "தாமரை" மலரில் வீற்றிருக்கும் கடவுளின் பெருமை பொருந்திய திருவடிகளை இடைவிடாது நினைப்பவர், மேலான வீட்டுலகில் அழிவின்றி வாழ்வர்.- முனைவர் ச.சாம்பசிவனார் உரை.//
பதிலுக்கு நன்றி !
வேறு யாராவது இது வரை மனத்தினை தாமரை மலர் என்று கூறி இருக்கிறார்களா ?
நம் மனமான தாமரையில் இறைவன் குடியேறியபின் , அவரை மேலும் நினைக்க வேண்டுமா ?
//"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார் "//
மனமாகிய தாமரை மலரில் குடிகொண்ட இறைவனின் திருவடியை நினைப்பவர்
மேலுஉலகதிலேயே இருப்பார்கள் என்பது தான் பொருளா ?
நிலமிசை என்பது மேல் உலகமான வீடா ?
அது இந்த பூமியை குறிப்பது ஆகாதா ?
தயவு கூர்ந்து எனக்கு விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .
அன்புடன் ,
ஏ சுகுமாரன்
வேறு யாராவது இது வரை மனத்தினை தாமரை மலர் என்று கூறி இருக்கிறார்களா ?
நம் மனமான தாமரையில் இறைவன் குடியேறியபின் , அவரை மேலும் நினைக்க வேண்டுமா ?
"தாமரை நெஞ்சம்" நு பாரதிராஜா ஒரு படம் எடுத்தாருன்னு நினைவு
2008/11/4 annamalai sugumaran <amirth...@gmail.com>:
> நெஞ்சம் வேறு மனம் வேறு !
> எல்லா மனிதருக்கும் மனம் உண்டு ,மனம் இருப்பதால் தான்
> மனிதன் .
> அன்புடன்
--
My blogs:(all in Tamil)
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
> "தாமரை நெஞ்சம்" பாரதிராஜா ஒரு படம் எடுத்தாருன்னு நினைவு
வள்ளுவம் என் சமயம் என்று கூறுபவரிடம் இப்படியான பதிலா!!!!
திரைப்படத்தின் இயக்குனரின் பெயர் தவறு. தாமரை நெஞ்சம் 1968ல் வெளிவந்த படம். அதன் இயக்குனர் கே.பாலச்சந்தர்.
//மலர்" மீது வீற்றிருக்கும் இறைவனின் சிறந்த திருவடிகளைப் பணிய வேண்டும்,என்று 3ஆம் குறளுக்கு விளக்கவுரை மணிமேகலைப் பிரசுரத்தின் திருக்குறள் உரை தெரிவிக்கிறது//
மலர்மிசை ஏகினான் என்பதற்கு வீற்றிந்தான் என்ற பொருள் வராதே ?
ஏகியதால் இறைவன் பெருமைக்கொண்ட அந்த மலரைப்பற்றி
நிச்சயம் நமது பெரியோர்கள் கூறியிருப்பார்கள் .
இன்னும் கொஞ்சம் சிந்திப்போம் !
ஏ.சுகுமாரன்
எந்த மலர் என்ற குழப்பத்தை நீக்கிவிட - பொதுவாக மலர் என்று பல உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்தவுலகில் நிலைத்து நீடூழி வாழ விரும்புபவர் "மலர்" மீது வீற்றிருக்கும் இறைவனின் சிறந்த திருவடிகளைப் பணிய வேண்டும்,என்று 3ஆம் குறளுக்கு விளக்கவுரை மணிமேகலைப் பிரசுரத்தின் திருக்குறள் உரை தெரிவிக்கிறது.
நெஞ்சம் என்பதற்கு மனம் என்றே மு.வா ,மற்றும் சாலமன் பாப்பையா முதலியோர் குறள் உரை , "நெஞ்சம் அடுத்தது காட்டும் முகம் " என்பதற்கு மனம் என்று கூறியிருக்கிறார்கள் .
ஆனால் வைர நெஞ்சம், என்கிறோம் , நெஞ்சக்கு நீதி என்கிறோம் ,நெஞ்சம் நிறைய
அன்பு என்கிறோம் .
இத்துடன் மனம் என்பதை பொருத்தி பாருங்கள் .
பொருள் சரியாக வருகிறதா ?
மனம் பிரபஞ்சத்துடன் தொடர்புடையது .
நெஞ்சம் மனிதனுடன் மட்டும் இப்போது உருவாகிறது ,
மனிதனுடன் மடிகிறது .
ஏ.சுகுமாரன்
//மு.வா. - அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்,இன்ப உலகில் நினைத்து வாழ்வார்.
கருணாநிதி: - மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு,உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.//
<<<<"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நன்றி ஐயா,
நன்றி ஐயா,
வேளுக்குடி கிருஷ்ணன் உபன்யாசத்தில் கேட்டது. மிகச்சரியாக நாடிகளின்
பெயர் தெரியவில்லை. கருத்து இதுதான். அதாவது,
இதயக்கமலம் எனும் பயன்பாடு நீண்டநாட்களாக நம் மண்ணில் உள்ளது. வேத
காலத்திலிருந்து இறைவன் நம் இதயத்தில் வாழ்கிறான் என்று சொல்வதுண்டு.
இறைவன் எங்கு, எங்கு? என்று தேடமுடியாதற்குக் காரணமும் இதுவே. அவன்
நாமாகவே இருந்து செயல்படுத்துகிறான் என்பது இந்திய நோக்கு.
மேலும் இங்கு "நிலம்" என்பது புவி அல்ல. அது புவி எனில் 'புவிமிசை' என்று
கையாண்டிருப்பார் வள்ளுவர். இங்கு நிலம் என்பது 'திருநாடு' அல்லது
'வைகுந்தம்' (உம்.அருளொடு "பெருநிலம்" அளிக்கும் - என்பது கலியன்
வாக்கு).
இந்த இதயக்கமலத்தில்தான் ஆழ்துயிலில் ஆன்மா அடங்குகிறது. இதை
நித்தியப்பிரளயம் என்பர். ஒவ்வொருநாளும் நாம் புதிது, புதிதாய்
உயிர்த்தெழுகின்றோம் (இயேசு கதை நினைவிற்கு வருகிறது).
சதீஷ் சொல்லுகின்ற கிரமம் பிராணன் வெளியேறுவதைத்தான் வேதம் முதல், யோக
சாத்திரங்கள் பேசுகின்றன. ஆனால் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள்
வேறுவகையாகச் சொன்னார். அதாவது, இதயத்தினுள்ளே சில நாடிகள் உண்டாம்
(மீண்டும் கேட்டால் பெயர்களை எடுக்கமுடியும்). அந்த நாடிகளுள் முதன்மையான
நாடி ஒன்று உண்டாம். அந்த நாடியில் பிராணனை நிறுத்திக் காத்திருக்க
விஷ்ணு தூதர்கள் வந்து வைகுந்தத்திற்கு அழைத்துச் செல்வர் என்று
சொன்னார். "தூதர்கள்" போன்றவை metaphor என்று கொண்டாலும் வள்ளுவர் இந்த
யோகமுறையைத்தான் அப்பாடலில் சொல்கிறார் என்று கொள்ளமுடியும்.
வேளுக்குடி இப்பாடலுக்கான பொருள் இது என்று சொல்லவரவில்லை. வேறொரு
இழையில் பேசிக்கொண்டிருக்கும் போது கிடைத்த தகவல்.
பொருந்துகிறது. சரியாக!!
கண்ணன்
2008/11/4 Satheesh kumar R <svp...@gmail.com>:
<<<<"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
அதே போல் "நீடு வாழ்வார்" என்பதையும் "அமரத்தன்மையுடன்" என்று கொள்ள
வேண்டியுள்ளது. இவர்கள் தேவர்கள் அல்ல. தேவர்களும் சம்சாரிகளே.
அவர்களுக்கு 'பதிவிக்காலம்' உண்டு. ஆயின் இறைவனுடன் சேர்ந்து வாழும்
வைகுந்தவாசிகளுக்கு 'காலம் நித்யமாய் அழிந்துவிடுகிறது. எனவே அவர்களைத்
தேவர்களிடமிருந்து வேறுபடுத்த "நித்யசூரிகள்" எனும் பதத்தைப்
பயன்படுத்துகின்றனர்.
எனவே வள்ளுவர் இக்கருத்தை, மலர்மிசை ஏகினான் (இறைவன்) மாணடி வேண்டும்
போது (சரணாகதி), அவனே இச்ஜீவனை தன் இல்லத்திற்கு அழைத்துக் கொள்கிறான்
என்றும் அதன் பின் அவன் நீடு வாழ்வான் (நித்யசூரியாய்) என்றும் கொள்ள
வேண்டியுள்ளது.
வள்ளுவர் இந்திய உள்ளத்தின் நாடி பிடித்து குறள் செய்தவர்.
கண்ணன்
2008/11/5 devoo <rde...@gmail.com>:
தந்தை பெரியாரிடம் ஒரு நிருபர் , இவ்வளவு தீவிரமாக கடவுளை எதிர்கிறிர்களே ,
அவர் நேரில்வந்துவிட்டால் என்ன செய்வீர்கள் என கேட்டார் .
பெரியார் சற்று கூட தயங்காமல் , அவரே நேரில் வந்துவிட்டால் கடவுள் இருக்கிறார் என ஒப்புகொள்வேன் , வேறு வழி என்ன இருக்க்கிறது என்றார்
அப்படித்தான் இந்தகுறளுக்கு மிக பொருத்தமான அர்த்தம் கூறிவிடுங்கள் .
நாங்களும் உங்களுக்கு வாழ்க போட்டுவிட்டு உங்கள் பக்கம் வந்து விடுகிறோம் .
எங்களுக்கு எந்த பிடிவாதமும் இல்லை .
96 தத்துவங்களைப்பற்றி திரு மூலர் பாடல்
""முப்பதும் முப்பதும்
முப்பதருவரும்
செப்ப மிதிளுடைக்
கோயிலுள் வாழ்வார்கள் "
அன்புடன் ,
ஏ.சுகுமாரன்
//இருக்கும் பொருளைவிட்டுஇல்லாத பொருள் தேடிஏதேதோ சொல்லுகிறார்ஞானத்தங்கமே இவர்ஏதும் அறியாரடி ஞானதங்கமே!//வேந்தர் ஐயா ,தந்தை பெரியாரிடம் ஒரு நிருபர் , இவ்வளவு தீவிரமாக கடவுளை எதிர்கிறிர்களே ,
அவர் நேரில்வந்துவிட்டால் என்ன செய்வீர்கள் என கேட்டார் .
பெரியார் சற்று கூட தயங்காமல் , அவரே நேரில் வந்துவிட்டால் கடவுள் இருக்கிறார் என ஒப்புகொள்வேன் , வேறு வழி என்ன இருக்க்கிறது என்றார்அப்படித்தான் இந்தகுறளுக்கு மிக பொருத்தமான அர்த்தம் கூறிவிடுங்கள் .
நாங்களும் உங்களுக்கு வாழ்க போட்டுவிட்டு உங்கள் பக்கம் வந்து விடுகிறோம் .
எங்களுக்கு எந்த பிடிவாதமும் இல்லை
அன்பின் சுகுமாரன்அந்த குறளுக்கு என்ன பொருள்னு உங்களுக்கு தோணுதோ அதுதான் பொருள்வள்ளுவர் திருக்குறளை நம்போல் எளிய மக்களுக்குதான் 1.75 அடியில் எழுதி இருககார்/
'இல்ல இல்ல, நாந்தான் கரெக்டு' என்று யாராவது பிடிவாதம் பிடித்தீர்களானால், நாலடியார் என்ற பெயரையும் மாற்றி மூணேமுக்கால் அடியார் என்று அழைக்கவும். அதன்பிறகு திருக்குறள் ஒண்ணேமுக்கால் அடி என்று சொல்லலாம். :-)))
ஆகவே அந்த மூன்று சீர்களால் ஆன அடியை ஒரு முழு அடியாகத்தான் கணக்கில் கொள்ளவேண்டும். குறள் இரண்டு அடிகளால் ஆனது. ஒண்ணேமுக்கால் அடியால் அன்று.
முழு அடியானாலும் முக்கால் அடியானாலும் அடி அடிதான்
குறளடி ஒன்னு இருக்காமே? அதி ஏமி?
ஏமி? இப்புடு தெலுசா?