முட எருதுக்கு உணவூட்டும் சிறுவர்வல்ஆண் அருமுனை நீந்தி, அல்லாந்து,
உகுமண் ஊறு அஞ்சும் ஒருகாற் பட்டத்து
இன்னா ஏற்றத்து இழுக்கி, முடம் கூர்ந்து,
ஒரு தனித்து ஒழிந்த உரனுடை நோன் பகடு
அம்குழை இருப்பை அறைவாய் வான்புழல்
புல் உளைச் சிறாஅர் வில்லின் நீக்கி,
மரை கடிந்து ஊட்டும் வரைஅகச் சீறூர்! (அகம். 107:12-18)
காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார்
பொருள்:
பாலை நிலத்தின் போர் முனையைக் கடந்து வந்த எருது
ஒன்று, ஓடையில் சறுக்கும் மண்கொண்ட
ஏற்றத்தில் சறுக்கி விழுந்ததால் அதன் ஒரு கால் முடம்பட்டு,
ஒரு தனியிடத்தில் கிடந்தது. சிறிய தலைமயிரை உடைய
சிறுவர்கள், அழகிய தளிரையுடைய இருப்பையின் மலரை,
வில்லால் உதிர்த்து, எருதுக்கு அருகில் போட்டு அதனை
உண்ணச் செய்தனர். அந்தத் தளிரை உண்ண வரும்
மரை மானை அவர்கள் விரட்டும் காட்சியை உடையது மலைச்
சாரலில் உள்ள சிற்றூர்.
Beyond this are villages nestling in the hills;
Here, a strong bull plodded its way through a sloping path,
Slipped and broke its leg to grieve sorely all alone.
The urchins of the village strike with their darts
And cause the tender leaves, as also the blooms, to fall;
They chase away the competing marai deers
And feed the forlorn bull.