Re: மணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் - பெண்கள் - கண்ணகி

1,133 views
Skip to first unread message

rajam

unread,
Oct 1, 2011, 8:54:03 PM10/1/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram, karuannam annam, Narayanan Kannan, C.R. Selvakumar

மணிமேகலைக் காப்பியத்தில் காணும் பெண்களைப் பற்றி எழுத விரும்பி மேற்கொள்ளும் முதல் முயற்சி இது. கண்ணகி இல்லாமல் சிலப்பதிகாரம் இல்லை என்று தெரியும். அந்தக் கண்ணகியே "மணிமேகலைக்" கதையையும் தொடங்கிவைக்கிறாள்!
இந்தப் பகுதி "மணிமேகலையில் கண்ணகி" பற்றியது. 
++++++++++++++++++++++++++++++++++++++++++

மணிமேகலையில் கண்ணகி
------------------------------------ 

மணிமேகலையில் கண்ணகியா? 

ஆம்! 

கண்ணகி பற்றி மாதவி சொன்ன ஒரு செய்திதான் மணிமேகலைக் கதையைத் தொடங்கிவைக்கிறது. 

மணிமேகலைக் காப்பியத்தில் மணிமேகலைதான் படிமை வடிவத்தில் உள்ள கண்ணகியைப் பார்க்கிறாள்; அவளோடு உரையாடுகிறாள். 

அது சரி, கண்ணகி பற்றி மணிமேகலைக்கு எப்படித் தெரிகிறது? தெரிந்தபின் அவள் என்ன செய்கிறாள்? 

இங்கே பார்ப்போம். 

முன்னுரையாகத் தெரிந்துகொள்ளவேண்டியது: கோவலன் மதுரையில் நேர்மையில்லாத வகையில் கொலைப்பட்ட பிறகு காவிரிப்பூம்பட்டினத்தில் மாதவி மணிமேகலையோடு ஒரு மாதவர் உறைவிடத்தில் தங்கியிருக்கிறாள். 

++++++++++++++++++++++  

கண்ணகி-மணிமேகலை அறிமுகம்
-------------------------------------------

காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரவிழா. அந்த விழாவிற்கு மணிமேகலையொடு மாதவி வரவில்லை. அது மாதவியின் தாய் சித்திராபதிக்குத் தணியாத துன்பம் கொடுக்கிறது. அதனால் சித்திராபதி மாதவியின் தோழி வயந்தமாலையைக் கூப்பிட்டு, "இந்த ஊரார் பரப்பும் அலரை [மாதவிக்கு] எடுத்துச் சொல்லு" என்று அவளை மாதவி இருக்கும் மாதவர் உறைவிடத்துக்கு அனுப்புகிறாள். 

வயந்தமாலை மாதவியின் வாடிய மேனியைக் கண்டு வருந்துகிறாள். தான் கற்ற கலைகளையெல்லாம் பயன்படுத்தாமல் புறக்கணித்துவிட்டு, மாதவி தவ வாழ்க்கை மேற்கொண்டதை அந்த ஊர் மக்கள் பழிக்கிறார்கள் என்று தெரிவித்து, ஊரார் அப்படிச் சொல்லுவது நல்லதில்லை, நாணத்தக்கது என்று சுட்டிக்காட்டுகிறாள். 

மாதவி வயந்தமாலைக்கு என்ன மறுமொழி சொல்கிறாள்? 

தன் காதலன் கோவலனுக்கு உண்டான கொடுமையான துயரத்தைக் கேட்டபோது மாதவி உயிர்விடவில்லை, இல்லையா. தான் அப்படி உயிர்விடாத அதனாலேயே ஊராரின் புகழைத் தான் இழந்ததாகவும் அது வெட்கப்படத்தக்கது என்றும் தொடங்கி, பத்தினிப் பெண்டிர் எப்படி நடந்துகொள்வார்கள் என்று விளக்கிச் சொல்கிறாள். 

அப்போதுதான் கண்ணகி பற்றிய குறிப்பு வருகிறது

"பத்தினிப்பெண்கள் தங்கள் காதலர் இறந்தால் அவருக்கு மூட்டிய தீயை அணுகி இருந்து ஊதுலைபோல் மூச்சு விட்டுத் தங்கள் உயிரைக் கொடுப்பார்கள். அப்படிக் காதலரோடு சேர்ந்து உயிர் கொடுக்காதவர்கள் (தமக்கு எனத் தனியாகத்) தீ வளர்த்து அதில் புகுந்து உயிர் விடுவார்கள். அப்படி உயிரைப் போக்கிக்கொள்ளாவிட்டால் தம் காதலரோடு (அடுத்த பிறவியில்) சேர்ந்து வாழவேண்டிய வாழ்க்கைக்கு நேர்ந்துகொண்டு நோன்பு இருப்பார்கள். ஆனால், எங்கள் ஆயிழை [கண்ணகி] அப்படியெல்லாம் எதுவும் செய்யவில்லை. அவள் தன் கணவனுக்கு ஏற்பட்ட கொடிய துயரைப் பொறுக்கமுடியாமல் மணம்பொருந்திய கூந்தல் தன் முதுகில் பரந்துகிடக்க, கண்ணீரில் நனைந்த தன் அழகிய மார்பகத்தைத் திருகி, காவலனின் பெரிய ஊருக்குத் தீ மூட்டிய மாபெரும் பத்தினி."

"காதலர் இறப்பின் கனை எரி பொத்தி
ஊதுலைக் குருகின் உயிர்த்து அகத்து அடங்காது
இன் உயிர் ஈவர்; ஈயார் ஆயின்
நல் நீர்ப் பொய்கையின் நளி எரி புகுவர்;
நளி எரி புகாஅராயின் அன்பரோடு
உடன் உறை வாழ்க்கைக்கு நோற்று உடம்படுவர்
பத்தினிப் பெண்டிர் பரப்பு நீர் ஞாலத்து;
அத்திறத்தாளும் அல்லள் எம் ஆயிழை;
கணவற்கு உற்ற கடும் துயர் பொறாஅள்
மணமலி கூந்தல் சிறு புறம் புதைப்பக்
கண்ணீர் ஆடிய கதிர் இள வன முலை
திண்ணிதின் திருகித் தீ அழல் பொத்திக்
காவலன் பேரூர் கனை எரி மூட்டிய
மாபெரும் பத்தினி" 

மாதவி, ஆம், மாதவிதான் கண்ணகியை இப்படி உரிமையோடு "எம் ஆயிழை" என்று குறித்துச் சொல்லி அவளை "மாபெரும் பத்தினி" என்று பாராட்டுகிறாள். பிற பத்தினிப் பெண்கள்போல நடந்துகொள்ளாமல், கணவன்மேல் உண்டான நேர்மையற்ற பழிச்சொல்லைத் துடைப்பதற்காகக் கண்ணகி எடுத்துக்கொண்ட முயற்சியும் [அதாவது, பாண்டிய அரசனிடம் வழக்குரைத்து வென்றது] செய்த செயலுமே [அதாவது, மதுரையை எரித்தது] அவளை ஒரு "மாபெரும் பத்தினி"யாக மாதவிக்குக் காட்டியது. எந்த வகையிலும் கணவனைக் "காப்பாற்றிய" பெண் அல்லவா அவள்! அதனால்தான் அவள் "மாபெரும் பத்தினி." 

இப்படிக் கண்ணகியை "மாபெரும் பத்தினி" என்று வியந்து பாராட்டிய மாதவி, கோவலன் கொலைப்பட்ட கொடுமையான செய்தி கேட்டு ... தான் செய்தது என்ன என்றும் சொல்கிறாள். பெருமைக்குரிய தவத்தில் ஈடுபட்டவர் வாழும் இடத்துக்கு வந்து, அறவண அடிகள் காலில் விழுந்து, துன்பம் மேலிட்ட நிலையில் தன் காதலனுக்கு ஏற்பட்ட கடுமையான துயரத்தைச் சொன்னாள். அறவண அடிகள் அவளுக்கு அறவுரை சொல்லி, ஐந்துவகை ஒழுக்கத்தின் அடக்கம் பற்றிச் சொல்லி, துயரத்திலிருந்து மீளும் வகையைக் காட்டினார்.

"பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்;
பிறவார் உறுவது பெரும் பேரின்பம்;
பற்றின் வருவது முன்னது; பின்னது
அற்றோர் உறுவது, அறிக! ... "

[சுருக்கமான பொருள்: இவ்வுலகில் பிறந்தவர்கள் அடைவது மேல்மேலும் பெருகிவரும் துன்பமே. பிறவாதவர்களுக்குக் கிடைப்பது பேரின்பம். துன்பம் என்பது ஒன்றன்மேல் வைத்த பற்றினால் வருவது. அந்தப் பற்றைத் துறந்தவர்கள் அடைவது பேரின்பம். இதைத் தெரிந்துகொள்.]

இப்படிச் சொல்லி ... காமம், கொலை, கள், பொய், களவு என்ற ஐந்தும் முழுவதுமாக அடங்கும் இயல்பையும் ["ஐவகைச் சீலத்து அமைதி"] காட்டி, பிறப்பிலிருந்து விடுபடும் வழி இது என்று விளக்கினார் அறவண அடிகள்.

அப்படி வழிகாட்டிய மாதவர் உறைவிடத்தில்தான் மாதவி இப்போது மணிமேகலையோடு தங்கியிருக்கிறாள்.

வயந்தமாலைக்கு மாதவி சொன்ன இந்தச் செய்தியெல்லாம் அங்கே பூத்தொடுத்துக்கொண்டிருந்த மணிமேகலையின் காதில் விழுகிறது. தன் தந்தையும் தாயும் பட்ட கொடுந்துன்பத்தைக் கேள்விப்பட்டதனால் அவள் நெஞ்சு கலங்கி, அழகிய சிவந்த கண்களின் அழகை அழிக்கும் வகையில் கண்களில் நீர் உருண்டு வெளிப்பட்டு அவள் தொடுத்துக்கொண்டிருந்த மணம் பொருந்திய மலர் மாலையை நனைக்கிறது. 

மணிமேகலையின் கண்ணீரால் மலர் மாலை தூய்மை இழந்தது என்று மாதவி சுட்டிக்காட்டுகிறாள். மகளின் கண்ணீரைத் தன் அழகிய சிவந்த கையினால் துடைத்து, புதிய தூய மலர்களை மணிமேகலையே மீண்டும் கொண்டுவரவேண்டும் என்று சொல்கிறாள். 

இப்போதுதான் உண்மையான "மணிமேகலை"க் கதை தொடங்குகிறது

இங்கே இன்னொன்றும் பார்க்கவேண்டும் ... இப்போதுதான் மாதவி-மணிமேகலை உறவு [பெற்றவள்-மகள் உறவு] விடுபடத் தொடங்குகிறது. அதை இன்னொரு பதிவில் விளக்கமாகப் பார்ப்போம். 

மணிமேகலையும் சுதமதியும் புதுமலர் கொண்டுவருவதற்காக மலர்வனம் செல்கிறார்கள்.


தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிகள்
----------------------------------------

புதிய தூய மலர்கள் கொண்டுவருவதற்காக மலர்வனத்துக்கு மணிமேகலை போனதை எட்டிகுமரன் என்னும் தன் நண்பன் மூலம் கேட்டு, சோழ இளவரசன் உதயகுமரன் அவளைத் தேடிப் போகிறான். சுதமதி அவனுக்கு மணிமேகலை தவ வழியில் போகிற நிலையைச் சொல்லி அவனைத் திருப்பி அனுப்புகிறாள். மணிமேகலாதெய்வம் மணிமேகலையை மணிபல்லவத்தீவுக்குக் கொண்டுவருகிறாள். மணிபல்லவத்தீவில் இருந்த புத்தபீடிகையை வணங்கிய மணிமேகலை தன் பழம்பிறப்பு உண்மையை அறிகிறாள். ஆபுத்திரன் கோமுகிப் பொய்கையில் இட்டுப் போன அமுதசுரபி மணிமேகலை கைக்கு வருகிறது. மணிமேகலை காவிரிப்பூம்பட்டினத்துக்கு அமுதசுரபியோடு வருகிறாள். அறவண அடிகளைக் கண்டு வணங்கி மணிபல்லவத்தீவுச் செய்திகளைச் சொல்கிறாள். அறவண அடிகள் சொன்னபடி, அமுதசுரபியைக் கொண்டு பசித்த உயிர்களின் பசிப்பிணி தீர்க்க முனைகிறாள். ஒரு சாபத்தினால் யானைத்தீ என்ற அடங்காப் பசி ஏற்பட்டு அங்கே திரிந்துகொண்டிருந்த காயசண்டிகை என்பவளுடைய நெடுங்காலப் பசி மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபி மூலம் தீர்கிறது. பசி நோய் தீர்ந்த காயசண்டிகை அந்த ஊரைவிட்டுக் கிளம்பி, தன் ஊரை நோக்கிப் போகிறாள். மணிமேகலை இப்படி அறம் செய்வதைக் கேள்விப்பட்ட உதயகுமரன் மீண்டும் அவளைத் தேடி வருகிறான். அவனிடமிருந்து தப்பிக்கவேண்டி மணிமேகலை காயசண்டிகை உருவம் எடுக்கிறாள். அதே நேரத்தில் உண்மைக் காயசண்டிகையைத் தேடி வந்த அவள் கணவன் காஞ்சனன் உதயகுமரனிடம் காயசண்டிகை வடிவில் இருந்த மணிமேகலை உரையாடுவது கண்டு தவறாக நினைத்து, காத்திருந்து, நள்ளிரவில் அங்கே மீண்டும் வந்த உதயகுமரனை வாளால் வெட்டிக் கொன்றுவிடுகிறான். இது தெரிந்த சோழ அரசனும் அரசியும் (== உதயகுமரனின் பெற்றோர்) மணிமேகலையைச் சிறைப்படுத்துகிறார்கள். மணிமேகலையைச் சிறையிலிருந்து விடுவிக்க ... சித்திராபதி, அறவண அடிகள், மாதவி, சுதமதி எல்லாரும் சோழ அரசியிடம் வருகிறார்கள். அப்போது அறவண அடிகளிடம் அறம் கேட்ட மணிமேகலை, "நான் இனி அந்த ஊரில் இருந்தால் 'உதயகுமரனுக்குக் கூற்றாக இவள் இருந்தாள்' என்று மக்கள் பேசுவார்கள், அதனால் இங்கே இருக்கமாட்டேன். ஆபுத்திரன் இப்போது பிறந்திருக்கும் நாட்டில் அவனப் பார்த்துவிட்டு, பிறகு வஞ்சி நகரம் போய்ப் பத்தினிக்கடவுளைப் பார்த்தபின் எல்லா இடங்களுக்கும் போய் நல்லறம் செய்வேன்" என்று சொல்லிவிட்டுக் கிளம்புகிறாள். சாவக நாட்டில் போய் ... ஆபுத்திரனை ... அதாவது இந்தப் பிறவியில் புண்ணியராசனாகப் பிறந்திருக்கும் அரசனைப் பார்த்து அவனை மணிபல்லவத் தீவுக்கு வரவைத்து அவனுடைய பழம்பிறப்பை அவன் உணரச்செய்தபின் மணிபல்லவத்திலிருந்து வஞ்சி மாநகரத்துக்குத் திரும்புகிறாள்.

 

மணிமேகலை-கண்ணகி உரையாடல்
-------------------------------------------

கண்ணகி, கோவலன் இருவரையும் கடவுளாக வடித்துவைத்திருக்கும் கோட்டத்தைக் காணும் வேட்கையுடன் மணிபல்லவத்திலிருந்து வான வழியில் வருகிறாள் மணிமேகலை. 

"தணியாக் காதல் தாய் கண்ணகியையும்
கொடை கெழு தாதை கோவலன் தன்னையும்
கடவுள் எழுதிய படிமம் காணிய 
வேட்கை துரப்பக் கோட்டம் புகுந்து ..."

[சுருக்கமான பொருள்: குறையாத காதல் கொண்டிருந்த தாய் கண்ணகியையும், பிறர்க்குக் கொடுத்தலில் சிறந்த தந்தை கோவலனையும் கடவுள் வடிவத்தில் அமைத்திருப்பதைக் காணும் ஆவல் உந்த, அந்தக் கோட்டத்தின் உள்ளே நுழைந்து ...]


(இங்கே ஒரு கேள்வி எழுகிறது. கண்ணகி கோட்டம் என்றால் மட்டுமே இன்று பலருக்கும் புரியும். ஆனால் ... கோவலனுக்கும் அங்கே ஒரு சிலை இருந்திருக்கவேண்டுமே ... சாத்தனார் கூற்றுப்படி? அந்தக் கோவலன் படிமம் எங்கே போயிற்று?)


கோட்டத்தின் உள்ளே போன மணிமேகலை கண்ணகியின் பண்புகளைப் போற்றிச் சொல்லி, அழுது கேட்கிறாள்:

"அற்புக்கடன் நில்லாது நல் தவம் படராது
கற்புக்கடன் பூண்டு நும் கடன் முடித்தது
அருளல் வேண்டும்"

[சுருக்கமான பொருள்: (தாங்கள்) "தான்" என்பது அறுந்த நிலையில் படும் கடமையை மேற்கொள்ளவில்லை; நல்ல தவம் செய்யும் முயற்சியில் ஈடுபடவில்லை; கற்பு என்ற கடமையை மேற்கொண்டு உங்கள் கடமையைச் செய்து முடித்தது பற்றித் தெரிவிக்கவேண்டும்.]

குறிப்பு: உரையாசிரியர் கருத்துப்படி, "அற்புக்கடன்" என்பது காதலன் இறப்ப உடன் இறத்தலும், தீப்பாய்தலும். "நல் தவம் புரிதல்" என்பது நல்ல தவ வழியில் சேருதல். அதாவது ... கைம்மை நோன்பை நோற்று உடம்பை வருத்துதல். "கற்புக்கடன்" என்பது கற்பைக் கடனாகக் கொள்ளுதல்.

மணிமேகலையின் வியப்பு இப்படி இருந்திருக்கலாம்: கோவலன் இறந்தபோது கண்ணகி இந்த உலகில் தன் இருப்பை நீக்கி அவனைப் பின்தொடர்ந்து தானும் இறக்கவில்லை ["அற்புக் கடன்" ஆற்றவில்லை]; அதன் பிறகு உயிரோடு இருந்தும் அவள் தவ வாழ்க்கையையும் மேற்கொள்ளவில்லை. அப்படி இருந்தும் தன் தாயான மாதவியே "மாபெரும் பத்தினி" என்று போற்றக்கூடிய அளவில், கண்ணகி கற்புக் கடமையை எப்படிச் செய்து முடித்தாள்? 

அது பற்றிய விளக்கத்தை இப்போது கண்ணகிப்படிமத்திடம் கேட்கிறாள்.


அப்போது அந்தப் பத்தினிக் கடவுள் (கண்ணகி) சொல்கிறாள்: 

"எம் இறைக்கு உற்ற இடுக்கண் பொறாது
வெம்மையின் மதுரை வெவ் அழல் படு நாள்
மதுராபதி எனும் மாபெரும் தெய்வம் 
இது நீர் முன் செய் வினையின் பயனால் ...
... சாபம் கட்டியது ஆகும்
உம்மை வினை வந்து உருத்தல் ஒழியாது எனும்
மெய்ம்மைக் கிளவி விளம்பிய பின்னும் 
சீற்றம் கொண்டு செழுநகர் சிதைத்தேன்"

[சுருக்கமான பொருள்: எம் தலைவருக்கு (== கோவலனுக்கு) உண்டான துன்பத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் மதுரை நகரம் வெம்மையான தீயில் எரிந்தபோது ... மதுராபதி என்ற பெயருடைய ஒரு மிகப் பெரிய தெய்வம் வந்து எனக்குச் சொன்னது: "இது நீங்கள் உங்கள் முற்பிறவியில் செய்த ஒரு செயலின் பயன் தான். அந்த முற்பிறவியில் ஒருத்தி இட்ட சாபம்தான் இப்போது கூடிவந்திருக்கிறது ... . (நீங்கள்) செய்த எந்தச் செயலும் ஏதாவது ஒரு வடிவில் வந்து தன் பயனைக் கொடுக்காமல் விடாது." இப்படி அந்தப் பெரும் தெய்வம் உண்மையை விளக்கிச் சொன்ன பிறகும் ... அடக்க முடியாமல் பொங்கிவந்து வெளிப்பட்ட என் கோபத்தால் ... செழிப்பாக இருந்த ஊரைச் சிதைத்தேன்.]

முற்பிறவியில் அப்படிக் கோவலனும் கண்ணகியும் என்ன செய்தார்கள்? அதற்காக யார் என்ன சாபம் இட்டார்கள்?


கோவலன் முற்பிறவியில் பரதன் என்றவனாக இருந்து செய்தது
----------------------------------------------------------------------------- 

கலிங்க நாட்டில் தாய உரிமையோடு (== மரபு வழிச் சொத்துரிமையோடு) வசு, குமரன் என்று இரண்டு மன்னர் இருந்தார்கள். அவர்கள் முறையே, சிங்கபுரம் கபிலை என்று இரண்டு இடங்களை ஆண்டுவந்தார்கள். ஒரு முறை, இரண்டு பேருக்கும் இடையே பெரிய போர். அதனால், ஆறு காவதப் பரப்பளவில் யாரும் போக வர முடியவில்லை.

ஆனால், பாவம், பொருள் ஈட்டுவதற்காக, சங்கமன் என்பவன் பல அணி, ஆபரணங்களை எடுத்துக்கொண்டு, யாருக்கும் தெரியாமல், தன் மனைவியுடன் அந்த வழியே போகிறான். போய், அரிபுரத்தைச் ( == சிங்கபுரத்தைச்) சேர்கிறான் அங்கே தான் கொண்டுவந்த பொருள்களை விற்கப் பார்க்கிறான். சங்கமனைப் பார்த்தவர்கள் அந்தச் செய்தியைப் பற்றிப் பேசிக்கொள்கிறார்கள். 

சிங்கபுர மன்னனுக்கு வேலை செய்து வந்த பரதன் என்பவன் சங்கமனைப் பிடித்துக்கொண்டுபோய் "இவன் ஓர் ஒற்றன்" என்று மன்னனிடம் சொல்லி, குற்றம் செய்யாத சங்கமனைக் கொலைப்படுத்துகிறான்.

சங்கமன் மனைவி பெயர் நீலி. அவள் தன் கணவன் சங்கமன் நேர்மையில்லாத முறையில் தவறாகக் கொலைப்பட்டது தாங்காமல் அழுது அரற்றி ஒரு மலைமேலிருந்து விழுந்து தன் உயிரைப் போக்கிக்கொள்கிறாள். அப்போது அவள் இட்ட சாபமே இப்போது வந்து கட்டியிருக்கிறது.

முற்பிறப்பில் பரதனாக இருந்தவனே இப்பிறப்பில் கோவலன். அவன் அந்தப் பிறப்பில் செய்த குற்றம் ... குற்றம் செய்யாத சங்கமனை ஒற்றன் என்று சொல்லிக் கொலைப்படுத்தியது. அந்தச் சங்கமன் மனைவி நீலி இட்ட சாபமே இந்தப் பிறவியில் கோவலனை அவன் செய்யாத தவறுக்காகக் கொலைப்படுத்தியது.

[குறிப்பு: போன பிறவியில் கண்ணகியின் பெயர் என்ன என்று தெளிவாகத் தெரியவில்லை. போன பிறவியில் பரதனின் மனைவியாக இருந்த நீலிதான் இந்தப் பிறவியில் கோவலன் மனைவி கண்ணகியா? மணிமேகலையில் அப்படித் தெளிவான குறிப்பு இல்லை.]


கண்ணகி சொல்வது
------------------------- 

"உம்மை வினைவந்து உருத்தல் ஒழியாது எனும்
மெய்ம்மைக் கிளவி விளம்பிய பின்னும்
சீற்றம் கொண்டு செழு நகர் சிதைத்தேன்"

[சுருக்கமான பொருள்: முன்பு செய்த செயலின் பயன் உருவெடுத்து வந்து தன் பயனைக் கொடுக்காமல் விடாது என்று அந்த மதுராபதித் தெய்வம் உண்மையை விளக்கிச் சொன்ன பிறகும் ... என் சீற்றத்தினால் வளம் பொருந்திய (மதுரை) நகரத்தைச் சிதைத்தேன்.]


இங்கே ஒரு கேள்வி எழுகிறது. கண்ணகி மதுரையை எரித்தபோதுதான் மதுராபதித் தெய்வம் கண்ணகிக்குத் தோன்றிக் கோவலனின் பழவினை பற்றிச் சொல்கிறாள். அதைக் கேட்டபின்னரும் சீற்றம்கொண்டு வளமான மதுரையைச் சிதைத்ததாக கண்ணகி சொல்கிறாள். அதை இங்கே மணிமேகலையில் படிக்கிறோம். மதுரை எரிந்ததற்குப் பின்னும் வேறு என்ன சிதைவு நடந்திருக்கும்? தெரியவில்லை.

இங்கே இன்னொரு கேள்வி எழலாம். அப்படி மதுரையைத் தீயுண்ணச் செய்த கண்ணகியும் பழவினையால் கொலைப்பட்ட கோவலனும் தேவர்கள் புடைசூழ விண்ணுலகம் சென்றார்கள் என்று படிக்கிறோம். அந்த நல்ல நிகழ்ச்சி எப்படி இயன்றது? 

கண்ணகி விளக்குகிறாள் ... அது அவர்கள் அதற்குமுன் செய்த நல் வினைப் பயனால் இயன்றது.

அந்த நல்வினைப் பயன் தீர்ந்த பிறகு, தன் சினத்தால் அவள் மதுரையை அழித்த பாவம் எந்த வகையிலாவது தன் பயனைக் கொடுக்குமாம்.

"மேற்செய்த நல் வினையின் விண்ணவர்ச் சென்றேம்
அவ்வினை இறுதியின் அடு சினப் பாவம்
எவ்வகையானும் எய்துதல் ஒழியாது"

[சுருக்கமான பொருள்: முன்பு செய்த நல் வினையின் பயனால் விண்ணவராய்ப் போனோம். விண்ணவர் உலகத்தில் நல்வினை நுகர்ச்சிக் காலம் முடிந்த பிறகு மதுரையைச் சினத்தினால் அழித்த பாவம் எந்த வகையிலாவது வந்து (என்னை) அடையாமல் போகாது.]


"உம்பர் இல்வழி இம்பரில் பல்பிறப்பு
யாங்கணும் இருவினை உய்த்து உமைப் போல
நீங்கரும் பிறவிக் கடலிடை நீந்திப்
பிறந்தும் இறந்தும் உழல்வோம்"

[சுருக்கமான பொருள்: மேல் உலக வாழ்க்கை இல்லாமல் போன பிறகு, இந்த உலகத்தில் பல பிறவிகளும் எடுத்து இரு வினைகளாலும் எங்கேயும் செலுத்தப்படுவோம்; உங்களைப் போலவே நீங்குவதற்கு அரிதான பிறவிக் கடலில் நீந்தி, பிறந்தும் இறந்தும் உழலுவோம்.]


அதற்குப் பின் என்ன நடக்குமாம்? 

மழை பொய்க்காத மகத நாட்டில் புத்த ஞாயிறு தோன்றுமாம். 

"மறந்தும் மழை மாறா மகத நன்னாட்டுக்
கரவு அரும் பெருமைக் கபிலையம்பதியில்
அளப்பரும் பாரமிதை அளவின்று நிறைத்துத்
துளக்கம்-இல் புத்த ஞாயிறு தோன்றிப் "

[சுருக்கமான பொருள்: மறந்துகூட மழை பொய்க்காத நல்ல மகத நாட்டில் மறைத்தல் இல்லாத அருமையான பெருமையை உடைய கபிலை நகரில் புத்த ஞாயிறு தோன்றும் -- (உயிர்கள்) அளவிலாத நோவைச் சுமந்துகொண்டிருக்கும் நிலையை ஊடுருவி நிறைத்துக்கொண்டு.]


அப்படித் தோன்றும் புத்த ஞாயிறு எங்கே இருப்பிடம் கொள்ளும்? ஒரு போதி (மரத்தின்) மூலத்தில் வந்து பொருந்தும். அதன் பின் அறம் தெரிவிக்கும்.

"போதி மூலம் பொருந்திவந்து அருளித் 
தீதறு நால்வகை வாய்மையும் தெரிந்து 
பன்னிரு சார்பின் பகுதித் தோற்றமும்
அந்நிலை எல்லாம் அழிவுறு வகையும்
இற்று என இயம்பிக் குற்ற வீடு எய்தி
எண்ணறும் சக்கரவாளம் எங்கணும் 
அண்ணல் அறக்கதிர் விரிக்கும் காலை"

[சுருக்கமான பொருள்: (அந்தப் புத்த ஞாயிறு) போதி மரத்தடியில் சேர்ந்து இருந்து, தீது இல்லாத நான்கு வகை உண்மைகள், பன்னிரண்டு வகை நிதானங்கள், அவை எல்லாம் அழியும் வகை, எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லி, குற்றங்களிலிருந்து நீங்கி, சக்கரவாளம் எங்கும் அறக்கதிரைப் பரப்பும்; அப்போது ...]

"பைந்தொடி தந்தையுடனே பகவன் 
இந்திர விகாரம் ஏழும் ஏத்துதலின்
துன்பக் கதியில் தோற்றரவு இன்றி
அன்புறு மனத்தோடு அவன் அறம் கேட்டுத்
துறவி உள்ளம் தோன்றித் தொடரும்
பிறவி நீத்த பெற்றியம் ஆகுவம்"

[சுருக்கமான பொருள்: பைந்தொடி! உன் தந்தையுடன் நானும் பகவனுடைய ஏழு இந்திர விகாரமும் தொழுததின் பயனால், துன்பம் சேர்க்கும் வழியில் போகாமல் அன்புடைய மனத்துடன் அவன் (== புத்தன்) சொல்லும் அறமொழிகளைக் கேட்டு, துறக்கும் மனப்பக்குவம் அடைந்து, தொடர்ந்துவரும் பிறவிகளை நீக்கும் பெருமையை அடைவோம்.]

"அத்திறம் ஆயினும் அநேக காலம்
எத்திறத்தார்க்கும் இருத்தியும் செய்குவம்"

[சுருக்கமான பொருள்: எங்கள் போக்கு அப்படி அமைந்தாலும், பல காலம் எவ்வகைப் பட்டவருக்கும் வேண்டுவன செய்வோம்.]

"... நீயும்
முறைமையின் இந்த மூதூர் அகத்தே
அவ்வவர் சமயத்தறிபொருள் கேட்டு
மெய்வகை இன்மை நினக்கே விளங்கிய
பின்னர்ப் பெரியோன் பிடக நெறி கடவாய்
இன்னது இவ்வியல்பு"

[சுருக்கமான பொருள்: நீயும் இந்த (வஞ்சி) மூதூரில் பல சமயத்தவரும் அறிந்த பொருளை அவரவர் சொல்லக் கேட்டு, அவற்றில் உண்மைப் பொருள் இல்லை என்பதை விளங்கிக்கொண்டபின் பெரியோனுடைய பிடக நெறியைக் கடந்து போகமாட்டாய். இதுவே இயல்பு.]

இப்படிக் கண்ணகி மணிமேகலைக்கு எடுத்துச் சொல்கிறாள்.


உடனே, மணிமேகலை என்ன செய்கிறாள்? முன்பு ஒரு முறை மணிபல்லவத்தீவில் மணிமேகலா தெய்வம் தனக்குத் தந்த மந்திரம் ஒன்றை, அதாவது மாற்று உருவம் கொள்ளும் மந்திரத்தை, ஓதி ஒரு மாதவன் வடிவம் எடுக்கிறாள்.

"இன்னது இவ்வியல்பு எனத் தாய் எடுத்து உரைத்தலும்
இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும்
விளைபொருள் உரையார் வேற்றுருக் கொள்க என
மையறு சிறப்பின் தெய்வதம் தந்த 
மந்திரம் ஓதி ஓர் மாதவன் வடிவாய் ...
... ... ... ..."

[சுருக்கமான பொருள்: இது இன்னதின் இயல்பு என்று (கண்ணகியாகிய) தாய் எடுத்துச் சொன்னதும், (முன்பு ஒரு முறை, மணிபல்லவத்தீவில் வைத்து) இவள் இளைய பெண் என்று ஒருவரும் உனக்குத் தத்தம் சமயத்தின் தத்துவங்களை எடுத்துச் சொல்லமாட்டார்கள் என்று சொல்லி வேற்று உருவம் கொள்வதற்கு என்று (மணிமேகலா) தெய்வம் தந்த மந்திரத்தை மணிமேகலை ஓதி ஒரு மாதவன் வடிவம் எடுத்து ...]

மாதவன் வடிவில் மணிமேகலை வஞ்சி நகரத்தில் புகுந்து அங்கே பல சமயவாதிகளைக் கண்டு அவர்களுடைய கொள்கைகளைக் கேட்டுத் தெரிந்துகொள்கிறாள். அப்படி அவள் கண்டு கேட்ட சமயத்தவர்: வைதிக மார்க்கத்து அளவை வாதி, சைவ வாதி, பிரம வாதி, வைணவ வாதி, வேத வாதி, ஆசீவக நூல் அறிந்தவன், நிகண்ட வாதி, சாங்கிய மதத்தோன், வைசேடிகன், பூதவாதி
 
+++++++++++++++++++++++++++++++++++++
படித்து மகிழ்க!

அன்புடன்,
ராஜம்






















 




annamalai sugumaran

unread,
Oct 1, 2011, 11:56:35 PM10/1/11
to mint...@googlegroups.com



மதிப்பிற்குரிய முனைவர் ராஜம் ,
நன்றாக இருக்கிறது ,நன்றி 


ஆனால் தாங்கள் கூறுவதுபோல் பரதனின் மனைவியான நீலி மறுபிறப்பில் கண்ணகியாகப பிறந்திருக்க  வாய்ப்பில்லை .
[குறிப்பு: போன பிறவியில் கண்ணகியின் பெயர் என்ன என்று தெளிவாகத் தெரியவில்லை. போன பிறவியில் பரதனின் மனைவியாக இருந்த நீலிதான் இந்தப் பிறவியில் கோவலன் மனைவி கண்ணகியா? மணிமேகலையில் அப்படித் தெளிவான குறிப்பு இல்லை.]

ஏனெனில் நீலியாக இருந்தபோது கணவனை இழந்து அவர்பட்ட துயரத்தை ,மறுபிறவியிலும் கண்ணகியாக பிறந்து அதே கணவனைப் பிரிந்த துயரை 
அடையவேண்டிய அவசியம் இல்லை .
இவ்வ்று துயரப்படவேண்டிய ,அத்தகைய கொடுமையை செய்த  வேறு ஒரு பெண்ணிற்கு கழுவாயாகஅப்பெண்ணே ,இப்பிறப்பில் கண்ணகியாகபிறந்திருக்க  வாய்ப்பிருக்கும் என நினைக்கிறேன் .
இது எனது கருத்துதான் தான் .
ஒன்றும் முடிவானதில்லை 
அன்புடன் 
சுகுமாரன் .




2011/10/2 rajam <ra...@earthlink.net>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
 It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !

Innamburan Innamburan

unread,
Oct 2, 2011, 1:27:38 AM10/2/11
to mint...@googlegroups.com
இனி இலக்கிய ரசனையில் மனதி செலுத்தலாம். நன்றி பல,

rajam

unread,
Oct 2, 2011, 2:06:23 AM10/2/11
to mint...@googlegroups.com

ஆனால் தாங்கள் கூறுவதுபோல் பரதனின் மனைவியான நீலி மறுபிறப்பில் கண்ணகியாகப பிறந்திருக்க  வாய்ப்பில்லை .

நான் அப்படிச் சொல்லவில்லையே!


Subashini Tremmel

unread,
Oct 2, 2011, 3:32:05 AM10/2/11
to rajam, மின்தமிழ், Subashini Kanagasundaram
மணிமேகலையை மீண்டும் உங்கள் விளக்கங்கள் வழி அறிந்து கொள்வது மிகவும் எளிதாக இருக்கின்றது.

கதை ஒன்றுக்குள் ஒன்று என்று செல்வது பிரமிப்பாக இருக்கின்றது. 

பல கேள்விகளையும் முன் வைக்கின்றீர்கள். இவை விடை காண வேண்டியவையே.. ஆக மொத்ததில் மிக அருமையான இலக்கிய விருந்து தொடர் உருவாகியுள்ளது. அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன்.

சுபா

2011/10/2 rajam <ra...@earthlink.net>

மணிமேகலைக் காப்பியத்தில் காணும் பெண்களைப் பற்றி எழுத விரும்பி மேற்கொள்ளும் முதல் முயற்சி இது. கண்ணகி இல்லாமல் சிலப்பதிகாரம் இல்லை என்று தெரியும். அந்தக் கண்ணகியே "மணிமேகலைக்" கதையையும் தொடங்கிவைக்கிறாள்!
இந்தப் பகுதி "மணிமேகலையில் கண்ணகி" பற்றியது. ..



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Geetha Sambasivam

unread,
Oct 2, 2011, 4:13:00 AM10/2/11
to mint...@googlegroups.com
கண்ணகியோடு மணிமேகலை உரையாடியதெல்லாம் இப்போதே அறிந்தேன் அம்மா. நன்றி. 

2011/10/2 rajam <ra...@earthlink.net>

மணிமேகலைக் காப்பியத்தில் காணும் பெண்களைப் பற்றி எழுத விரும்பி மேற்கொள்ளும் முதல் முயற்சி இது. கண்ணகி இல்லாமல் சிலப்பதிகாரம் இல்லை என்று தெரியும். அந்தக் கண்ணகியே "மணிமேகலைக்" கதையையும் தொடங்கிவைக்கிறாள்!
இந்தப் பகுதி "மணிமேகலையில் கண்ணகி" பற்றியது. 
++++++++++++++++++++++++++++++++++++++++++

+++++++++++++++++++++++++++++++++++++
படித்து மகிழ்க!

அன்புடன்,
ராஜம்






















 




rajam

unread,
Oct 2, 2011, 1:23:55 PM10/2/11
to Subashini Tremmel, மின்தமிழ்
ஊக்கத்துக்கு நன்றி, சுபா!

பல கேள்விகளையும் முன் வைக்கின்றீர்கள். இவை விடை காண வேண்டியவையே..
 
மணிமேகலையைப் படித்துப் புரிந்துகொள்வது நல்லது; தேவையானது. அது ஒரு கருத்துச் சுரங்கம். பாவம், "புத்த மத இலக்கியம்" என்ற நோக்கில் மட்டுமே பார்க்கப்பட்டால் ... அதில் புதைந்து கிடக்கும் பிற பல செய்திகளைக் கண்டுகொள்ள முடியாமலே போகும்.
கருத்தோடு, கவலையோடு, கேட்கிறேன் ... கண்ணகி கோட்டம் பற்றிப் பேசுகிறவர்கள் கோவலன் படிமம் பற்றி ஏன் பேசுவதில்லை? இலக்கியம் சொல்வது பொய்யா?  
பிற பின்னர்.
அன்புடன்,
ராஜம்


rajam

unread,
Oct 16, 2011, 10:33:14 PM10/16/11
to மின்தமிழ்
மணிமேகலைக் காப்பியத்தில் விசாகை என்ற ஒரு பெண்ணின் கதை சொல்லப்படுகிறது.
அவளைப் பற்றித் தெரிந்துகொள்ளணுமா?
மணிமேகலையில் கண்ணகி கதை சொன்னேன். கண்ணகி கோட்டம் போனவங்க யாராவது அங்கெ கோவலன் சிலை இருக்கா, இல்லயா-னு சொல்லுங்க-னு கேட்டேன். (ஏன்னா மணிமேகலை அப்படிக் கேக்கச் சொன்னா.) ஒரு பதிலும் காணோம்.
நான் பாட்டுக்கு எங்க அம்மா சொன்ன மாதிரி ஓலைப் பாயிலெ நாய் ... பெஞ்ச மாதிரி ... என்னவோ கொட்டித் தள்றேனே, பரவாயில்லயா? 

karuannam annam

unread,
Oct 16, 2011, 10:52:49 PM10/16/11
to mint...@googlegroups.com, rajam


2011/10/17 rajam <ra...@earthlink.net>

மணிமேகலைக் காப்பியத்தில் விசாகை என்ற ஒரு பெண்ணின் கதை சொல்லப்படுகிறது.
அவளைப் பற்றித் தெரிந்துகொள்ளணுமா?
தொடர்க திருமிகு ராஜம். 

நான் பாட்டுக்கு எங்க அம்மா சொன்ன மாதிரி ஓலைப் பாயிலெ நாய் ... பெஞ்ச மாதிரி ... என்னவோ கொட்டித் தள்றேனே, பரவாயில்லயா? 

வீணோ என எண்ண வேண்டா.தங்கள் பதிவுகள் நாளைய ஆய்வின் அடிப்படை. 
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

DEV RAJ

unread,
Oct 17, 2011, 1:02:51 AM10/17/11
to மின்தமிழ்
Oct 17, 7:33 am, rajam :

> மணிமேகலைக்
> காப்பியத்தில் விசாகை
> என்ற ஒரு பெண்ணின் கதை.................

'விசாகை' பற்றி விரிவாகச் சொல்லுங்கள்.
இழை பல சாகைகளோடு விரியட்டும்.
ஆர்வலர்கள் பலரும் கட்டாயம் இணைந்து ஈடுபடுவர்


தேவ்

Innamburan Innamburan

unread,
Oct 17, 2011, 1:07:55 AM10/17/11
to mint...@googlegroups.com
'நான் பாட்டுக்கு  ... என்னவோ கொட்டித் தள்றேனே, பரவாயில்லயா? '
என்றெல்லாம் எழுதலாகாது. நீங்கள் க்ளுப்தமாக எழுதுவதால், நாங்கள் விரும்பிப் படிக்கிறோம்.
பயனடைகிறோம்.
அன்புடன்,
இன்னம்பூரான்

rajam

unread,
Oct 17, 2011, 2:11:57 AM10/17/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram, Narayanan Kannan, C.R. Selvakumar
விசாகை
----------

யார் இந்த விசாகை? மணிமேகலைக் காப்பியத்தில் அவள் பங்கு என்ன?


தருமத்தன் என்பவனுக்கு மாமன் மகள் விசாகை. இருவரும் இளைய வயதினர், அழகு பொருந்தியவர்கள். இருவரும் ஒருவரை ஒருவர் பேணி வந்தார்கள். அதாவது ஒருவர்மேல் ஒருவர் அன்புகாட்டிவந்தார்கள் என்று வைத்துக்கொள்ளலாம். 

ஊராருக்கு அது பொறுக்கவில்லை! மைத்துனன் முறைமையால் யாழோர் (== கந்தருவர்) வழக்கப் படி நடந்துகொள்கிறார்கள் என்று ஊரில் அலர் (== வம்புப் பேச்சு) எழுந்தது. அதுவும் அந்தப் பெண் ... விசாகையைப் பற்றித்தான் அந்த வம்புப் பேச்சு, பாவம்.


"மைத்துனன் முறைமையால் யாழோர் மணவினைக்கு 
 ஒத்தனள் என்றே ஊர் முழுது அலர் எழ ..."


"யாழோர் மணவினை" என்றால் ... தக்க வயது வந்த ஓர் ஆணும் ஒரு பெண்ணும் உறவினர் யாருடைய குறுக்கீடும் இல்லாமல் தாமாகவே சேர்ந்து ஆண்-பெண் உறவுகொள்ளுதல். 

"யாழோர்" என்று தமிழில்/தமிழக வழக்கத்தில் சொல்லப்பட்டவர்கள் ஆரிய வழக்கத்தில் "கந்தருவர்" என்று அறியப்படுவார்கள்.

நிற்க.


ஊராரின் பேச்சு விசாகையை வருத்துகிறது. அவள் தன் வீட்டை விட்டு வெளியேறி, காவிரிப்பூம்பட்டினத்தில் இருக்கும் உலக அறவியின் வழியே போய் ... கந்திற்பாவையிடம் வேண்டுகிறாள் உலகத்தவரின் பழியை நீக்கும்படி.

கந்திற்பாவையும் விசாகையின் வேண்டுகோளுக்கு இணங்கி ஊராருக்கு அவள் "மழை தரும்" பெருமை உடையவள் என்று சொல்கிறது. அதாவது, அவள் கற்புடைய பெண் என்று உறுதி சொல்வதாக வைத்துக்கொள்வோம்.

ஆனாலும், ஊராரின் மனதில் படிந்த கறை நீங்காது என்று நினைத்த விசாகை ... இந்தப் பிறவியில் அவனோடு (== தருமதத்தனோடு) நான் சேர முடியாது, அடுத்த பிறவியிலாவது அவனுடைய மனைவி ஆவேன் என்று தன் தாயிடம் சொல்லிவிட்டு ஒரு கன்னி மாடத்துக்குப் போய்விடுகிறாள்! 

"கன்னி மாடமா?" 

ஆம், ஒரு "கன்னி மாடம்" மணிமேகலைக் காப்பிய காலத்தில் பூம்புகாரில் இருந்திருக்க வேண்டும். முதல் முதலாக ஒரு கன்னி மாடம் பற்றி மணிமேகலையில்தான் தெரியவருகிறது. பிற குறிப்பு ஏதும் இல்லை.

அப்புறம்? தருமதத்தன் என்ன செய்கிறான்? 

தருமதத்தன், அவன் தந்தை, தாய் எல்லாரும் காவிரிப்பூம்பட்டினத்தை விட்டு வெளியேறுகிறார்கள். தாழ்ந்துபோகச் செய்யும் துன்பத்தை நீக்கின கந்திற்பாவையைப் புகழ்கிறார்கள். தக்கண (== தென்) மதுரைக்குப் போகிறார்கள். 

தென்மதுரைக்குப் போன தருமதத்தன் ஒரு முடிவு செய்கிறான்.  

இனி இந்தப் பிறவியில் விசாகையைத் தவிர வேறொரு பெண்ணை விரும்புவதில்லை என்று உறுதிகொள்கிறான்.

வணிகம் செய்கிறான். பெரும் பொருள் ஈட்டுகிறான். சிறந்த வணிகர்களுக்கு வேந்தன் கொடுக்கும் "எட்டி"ப் பட்டத்துக்குரிய பூவைப் (== எட்டிப்பூ) பெறுகிறான். மிக உயர்ந்த செல்வப் பெருக்குடன் வாழ்ந்துவருகிறான். 

இப்படியே ... ஆண்டுகள் உருண்டு போயின. அவனுக்கும் 60 ஆண்டு அகவை ஆகிறது.

அப்போது ஓர் அந்தணன் தருமதத்தனிடம் போய்ச் சொல்லுகிறான்.

" ... ஈங்கு
என் செய்தனையோ இருநிதிச் செல்வ!
பத்தினி இல்லோர் பல அறம் செய்யினும்
புத்தேள் உலகம் புகாஅர் என்பது
கேட்டும் அறிதியோ? கேட்டனை ஆயின்
நீட்டித்திராது நின் நகர் அடைக ..."

[சுருக்கமான பொருள்: பெரும் செல்வத்தை உடையவனே, இங்கே இருந்துகொண்டு என்ன செய்கிறாய்? பத்தினி இல்லாதவர்கள் பல அறச் செயல்களைச் செய்தாலும் புத்தேள் (== தேவர்) உலகத்தை அடையமாட்டார்கள் என்பதைக் கேட்டுப் புரிந்துகொண்டிருக்கிறாயா? கேட்டதைப் புரிந்துகொண்டாய் என்றால் ... இனியும் காலம் தாழ்த்தாமல் உன் ஊருக்குத் திரும்பிப் போ.]

தக்கண மதுரை நகரமே வெறுமையாகும்படி ... தருமதத்தன் அங்கேயிருந்து வெளியேறிப் புகாருக்கு வருகிறான். 

அப்படித் தருமதத்தன் அங்கே வந்ததை விசாகை கேள்விப்படுகிறாள்; வீட்டுப் பக்கம் வருகிறாள். வெட்கப்படாமல், பலர் முன்னிலையில் அவன் முன்னே போய் ... பின்வருமாறு சொல்கிறாள்.


"நம்முள் நாம் அறிந்திலம்; நம்மை முன்னாள்
மம்மர் செய்த வனப்பு யாங்கு ஒளித்தன?
ஆறைந்து இரட்டி யாண்டு உனக்கு ஆயது; என்
நாறைங்கூந்தலும் நரை விராவுற்றன;
இளமையும் காமமும் யாங்கு ஒளித்தனவோ?" 

[சுருக்கமான பொருள்: நமக்கு ஒருவரை ஒருவர் அடையாளம் தெரியவில்லை. நம்மை மயக்கிய அந்தப் பழைய அழகு எங்கே மறைந்து போனது? உனக்கு 60 ஆண்டுகள் அகவை. எனக்கு நரை கலந்த கூந்தல். நம் இளமையும் காம உணர்வும் எங்கே ஒளிந்துகொண்டன?]


"இப்பிறப்பாய்! இனி யான் நின் அடி அடையேன்;
அப்பிறப்பு யான் நின் அடித்தொழில் கேட்குவன்"

[சுருக்கமான பொருள்: இந்தப் பிறவியில் உனக்கு அடிச்சியாக இருக்கமாட்டேன். அடுத்த பிறவியில் உனக்கு அடித்தொழில் செய்வேன்.]


"இளமையும் நில்லா; யாக்கையும் நில்லா;
வளவிய வான்பொருள் செல்வமும் நில்லா;
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்;
மிக்க அறமே விழுத்துணை ஆவது;
தானம் செய் ..."

[சுருக்கமான பொருள்: இளமை, உடல், பெருத்த செல்வம் ... இவை ஒன்றுமே நிலையானதில்லை. புதல்வர் மூலமாய்க்கூடப் புத்தேள் உலகத்தை அடைய முடியாது. சிறந்த அறமே உயர்ந்த துணை ஆகும். அதனால் தானம் செய்.]


இப்படி மாமன் மகள் விசாகை சொன்னதைத் தருமதத்தன் கேட்கிறான்.

விசாகையுடன் சேர்ந்து பலவகை நல்ல அறம் செய்கிறான்.

குமரிப் பெண்ணாகவே மூப்பு அடைகிறாள் விசாகை. அமரன் (== கந்திற்பாவை) அருளால் பழிச்சொல் நீங்கிய விசாகை ஊரார் நடுவே போய்வரத் தயங்கவில்லை.

அப்படி ஒரு நாள், கொடிகள் பறக்கும் வீதியில் அவள் வந்துகொண்டிருக்கும்போது ... 

கருமை உள்ளம் கொண்ட கயவன் ஒருவன் விசாகைமேல் காமம் கொள்கிறான். காமம் கொண்டு, தன் தலையில் சூடியிருந்த பூமாலையை எடுத்து அவள்மேல் போட முயல்கிறான்.


"சுரி இரும் பித்தை சூழ்ந்து புறம் தாழ்ந்த
விரி பூ மாலை விரும்பினன் வாங்கி 
தொல்லோர் கூறிய மணம் ஈது ஆம் என
எல் அவிழ் தாரோன் இடுவான் வேண்டி
... "

[சுருக்கமான பொருள்: தன் சுருண்ட கரிய தலைமுடியைச் சுற்றி, கீழே தொங்குகிற மலர் மாலையை விருப்பத்தோடு வளைத்து எடுத்து ... "மரபுவழிப்பட்டவர்கள் சொன்ன மணமுறை இதுதான்" என்று சொல்லி (அவள் மேலே) போட வேண்டி ...]


அப்படி அந்தக் கயவன் விசாகையின் மேல் அந்த மாலையைப் போட்டானா?

"மாலை வாங்க ஓங்கிய செங்கை 
நீலக் குஞ்சி நீங்காது ஆகலின்
ஏறிய செங்கை இழிந்திலது இந்தக்
காரிகை பொருட்டு ..." 

[சுருக்கமான பொருள்: தன் தலையில் சூடியிருந்த மாலையை எடுத்த செங்கையை ... அவனால் தன் கரிய தலைமுடியை விட்டு எடுக்க முடியவில்லை; மேலே தூக்கிய சிவந்த கை கீழே இறங்கவில்லை.]


இதை அந்தக் கயவனுடைய தந்தை ககந்தன் கேள்விப்படுகிறான். 

ககந்தனுக்குக் கடுமையான சினம் பொங்குகிறது. மகனின் துயரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் அவனை வாளால் வெட்டிக் கொன்றுவிடுகிறான்!

அப்படிப்பட்ட முறை தவறாத மன்னர் குலம் சோழர் குலம்! 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++


விசாகையின் கதை ஏன் சொல்லப்படுகிறது?

தவ வழிப்பட்ட மணிமேகலையை விரும்பிய சோழ இளவரசன் உதயகுமரனைக் காயசண்டிகையின் கணவன் காஞ்சனன் வாளால் வெட்டி வீழ்த்திவிடுகிறான், இல்லையா?

இந்தச் செய்தியைச் சோழ அரசனுக்குத் தெரிவிக்க வருகிறவர்கள் ... அரசனை வாழ்த்தி ... அவன் முன்னோரின் நேர்மை முறையை எல்லாம் எடுத்துச் சொல்லி ... ஒரு பீடிகை போடுகிறார்கள்.

அப்போதுதான் விசாகை கதையைச் சொல்கிறார்கள். 

இப்போதும் அந்த மாதிரி நடக்கிறதா என்று மன்னன் கேட்கிறான்.

மன்னனுக்கு அவன்மகன் உதயகுமரனின் செய்தி தெரிவிக்கப்படுகிறது.


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


விசாகையின் கதையில் புதைந்து கிடக்கும் உண்மைகள் பல.

காப்பியத்தின் ஒவ்வொரு வரியும் ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்கிறது; தேடுபவருக்குத் திறமை இருந்தால் கிட்டும் புதைபொருள் நிறைய.

மாமன் மகள், மைத்துனன் உறவு முறை, யாழோர் மணமுறை, ஊரார் வம்பு, கன்னி மாடம், தென்மதுரையில் வணிகம் செய்ய வாய்ப்பு, வணிகத்தில் சிறந்தோர் வேந்தனிடமிருந்து எட்டிப்பூ பெறுதல், வணிகன் போனபின் மதுரை வெறிச்சோடுதல், பத்தினி இல்லாமல் எந்த அறம் செய்தாலும் பயன் இல்லை என்பது, அகவை முதிர்ந்த நிலையில் காமம் விலகுதல், சோழர் குல அரசியல் நேர்மை, ...  

இப்படி ஒரு சிறு கிளைக்கதையில் எத்தனைத் துணைக்கருத்து வளம்!
"இளமையும் நில்லா; யாக்கையும் நில்லா" என்று தொடங்கும் வரிகளை எத்தனைப்பேர் மனப்பாடம் செய்திருப்போம்! அவை யாரால் எப்போது ஏன் சொல்லப்பட்டன என்று விசாகை கதையைப் படித்தால் அல்லது எப்படித் தெரியவரும்? 

அதனால்தான் மணிமேகலையைப் படிக்கவேண்டும்! 
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Dhivakar

unread,
Oct 17, 2011, 2:37:25 AM10/17/11
to mint...@googlegroups.com, rajam
அருமையான காதல் கதை. அதை நீங்கள் விளக்கும் அழகே அழகு. விசாகை ஒருவேளை
இந்தக்காலத்துப் பெண்மணியாக இருந்தால் (இந்த வயதான காலத்தில்) கலியாணம்
செய்திருப்பாளோ என்னவோ..

என்ன இருந்தாலும் என்ன, காதல் இனிமையானது, நிரந்தரமானது, காமமில்லாத
காதல் இன்னமும் இனிமையானது என்பதையே இந்தக் கதை சொல்வதாக எனக்குத்
தோன்றுகிறது.

மணிமேகலையில் அதிகமான அளவுக்கு வடசொல் கலந்திருப்பதாகப் படுகிறது. ராஜம்
அம்மா, சரிதானா?

விசாகை எனும் இன்னொரு பெண் பௌத்தத்தில் பேசப்படுகிறாள். எங்கள்
ஆந்திரப்பகுதியில் பௌத்தம் பழைய கால மதம் என்பதற்கு ஏராளமான பழைய
சின்னங்கள் இன்னும் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. விசாகை எனும் பௌத்தத்
துறவிப் பெண் இங்கு இருந்தமையால் விசாகப்பட்டினம் என்று சொல்வதாக சிலர்


சொல்கிறார்கள்.

இதை ஹிண்டு வில் ஒருவர் எழுத அதை மறுத்து விசாகேசுவரன் என்கிற முருகன்
பெயரால் வந்ததுதான் இந்த நகரம் என்று நான் எழுதியது வேறு கதை.

அன்புடன்
திவாகர்

2011/10/17 rajam <ra...@earthlink.net>:

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Dhivakar

unread,
Oct 17, 2011, 2:44:55 AM10/17/11
to mint...@googlegroups.com, rajam
முதல் திருமுறையான சம்பந்தர் தேவாரத்தில் இப்படி உறவு முறைக் காதல்
செய்தி ஒன்று உண்டு. இந்தக் காதலுக்கு வீட்டில் ஒப்புதல் இல்லை.
திருமருகல் எனும் திருத்தலத்தில், தன் மாமன் வழித்துணையாக கூப்பிட்டான்
என்ற ஒரே காரணத்துக்காக கன்னிப்பெண்ணான முறைபெண் அவனுடன் போகும்போது
காட்டு வழியில் மாமனை பாம்பு ஒன்று கடித்து அவன் விழ, இந்தப் பேதைப் பெண்
ஊருக்கும் திரும்ப முடியாமல், முறை மாமனை அப்படியே விடாமலும்
செய்வதறியாமல் அழுதுகொண்டிருக்கும் காட்சி உண்டு.

திவாகர்

2011/10/17 Dhivakar <venkdh...@gmail.com>:

--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Innamburan Innamburan

unread,
Oct 17, 2011, 2:54:54 AM10/17/11
to mint...@googlegroups.com

~ சரியாக சொன்னீர்கள். செய்தி மட்டுமல்ல. மென்மையாக பகரும் வாழ்வியல் தத்துவங்கள். என்னை ஆக்ரமித்த இலக்கியம் மணிமேகலை. 


ஒரு சிறிய பிற்கால செய்தியை விசாகையின் '.....இளமையும் காமமும் யாங்கு ஒளித்தனவோ?" ...’ நினைவூட்டுகிறது.ஜெர்மனியின் பிரபல இருதய அறுவை டாக்டர் சாவர்ப்ரூக் முதுமை அடைந்து, தள்ளாமையால் வாடும்போது, அவரது உள்ளக்கிடக்கையை புரிந்து கொண்ட சிஷ்ய கோடிகள், அவரை, அவருடைய இளமை காதலியிடம் இட்டு செல்கிறார்கள். ஒப்பன் ஹார்ட் அறுவையை கண்டுபிடித்த அவரின் அறுபது வருட காதலி, சர்ஜரி̀~ அறுவை சிகிச்சை! அவர் தன்னுடைய இளமை காதலியுடைய புறங்கைகளை பிடித்து, வருடி, ‘ரத்தக்குழாய்கள் தடித்து விட்டன. நானே அறுவை சிகிச்சை செய்கிறேன்’ என்கிறார். கூட இருந்தவர்கள் மெளனமாக கண்ணீர் வடித்தனர். இதை படித்து ஐம்பது வருடங்கள் ஆயின. கண்ணின் முன் விசாகை நிறுத்தி விட்டார். நன்றி, ராஜம்.

இன்னம்பூரான்

17 10 2011


Vinodh Rajan

unread,
Oct 17, 2011, 3:00:03 AM10/17/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram, karuannam annam, Narayanan Kannan
இந்த இழையை இப்போதே காண்கிறேன். (நான் வலையில் படிப்பதால், பல இழைகளை தவறவிட நேர்கிறது)

மிக்க நன்றி.

எனக்கு மீண்டும் ஒர் சந்தேகம்.

சிலப்பதிகாரத்தில் கண்ணகியும் கோவலனும் அருகதேவனை வணங்கும் ஜைன சிராவகர்கள். 

ஆனால், மணிமேகலையில் அவர்கள் புத்த பகவானை ஏத்தும் பௌத்தர்கள் ஆனது எப்படி ?

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------

===========================================
அவ்வவர் சமயத்தறிபொருள் கேட்டு
மெய்வகை இன்மை நினக்கே விளங்கிய
பின்னர்ப் பெரியோன் பிடக நெறி கடவாய்
இன்னது இவ்வியல்பு
============================================

மேற்கண்டவை எவ்வளவு உண்மை :-)

-----------------------

========================================
போதி மூலம் பொருந்திவந்து அருளித் 
தீதறு நால்வகை வாய்மையும் தெரிந்து 
பன்னிரு சார்பின் பகுதித் தோற்றமும்
அந்நிலை எல்லாம் அழிவுறு வகையும்
இற்று என இயம்பிக் குற்ற வீடு எய்தி
எண்ணறும் சக்கரவாளம் எங்கணும் 
அண்ணல் அறக்கதிர் விரிக்கும் காலை
========================================

மைத்திரேயர் புத்தராக தர்மத்தை போதிக்கும் நிகழ்வு மிகவும் அழகாக விபரிக்கப்பட்டுள்ளது. சதுர் ஆர்ய சத்யங்களும் (நால்வகை வாய்மை) ப்ரதீத்யசமுத்பாதத்தின் துவாதசநிதானங்களுமே (பன்னிருசார்பு) புத்த தர்மத்த்தின் அடிப்படைகள். இதில் அறிந்து கொள்ள வேண்டியது எத்தனை புத்தர்கள் தோன்றினும், அவர்கள் போதிக்கும் ”தர்மம்” ஒன்றே.

அதேனாலேயே, 

யோ ப்ரதீத்யசமுத்பாதம் பஸ்யதி ஸ தர்மம் பஸ்யதி
யோ தர்மம் பஸ்யது ஸ புத்தம் பஸ்யதி

எவர் ப்ரதீத்யசமுத்பாதத்தை காண்கிறாரோ அவர் தர்மத்தை காண்கிறார்
எவர் தர்மத்தை காண்கிறாரோ அவர் புத்தரை காண்கிறார்.

என்று பௌத்த சூத்திரங்கள் கூறுகின்றன.

//மாதவன் வடிவில் மணிமேகலை வஞ்சி நகரத்தில் புகுந்து அங்கே பல சமயவாதிகளைக் கண்டு அவர்களுடைய கொள்கைகளைக் கேட்டுத் தெரிந்துகொள்கிறாள். அப்படி அவள் கண்டு கேட்ட சமயத்தவர்: வைதிக மார்க்கத்து அளவை வாதி, சைவ வாதி, பிரம வாதி, வைணவ வாதி, வேத வாதி, ஆசீவக நூல் அறிந்தவன், நிகண்ட வாதி, சாங்கிய மதத்தோன், வைசேடிகன், பூதவாதி//

இதையும் எழுதுவீர்கள் தானே ?

வி

Geetha Sambasivam

unread,
Oct 17, 2011, 8:21:14 AM10/17/11
to mint...@googlegroups.com
சிலப்பதிகாரத்தில் கண்ணகியும் கோவலனும் அருகதேவனை வணங்கும் ஜைன சிராவகர்கள். //
 
அப்புறமா எப்படி வைதீக முறைத் திருமணம்??

2011/10/17 Vinodh Rajan <vinodh...@gmail.com>

Vinodh Rajan

unread,
Oct 17, 2011, 8:45:27 AM10/17/11
to mint...@googlegroups.com


On Monday, October 17, 2011 5:51:14 PM UTC+5:30, myself wrote:
சிலப்பதிகாரத்தில் கண்ணகியும் கோவலனும் அருகதேவனை வணங்கும் ஜைன சிராவகர்கள். //
 
அப்புறமா எப்படி வைதீக முறைத் திருமணம்??

நான் படித்தவரை:

~~~~~~~~~~~~~~~~~~~


கண்ணகி சமண சமயத்தைச் சார்ந்த இல்லற நெறியினள். அதாவது சாவக நோன்பி. சமண சமயத்தில் மூவகை மூடங்களைப் பற்றிய கோட்பாடு உண்டு. அவை எடுத்துக்காட்டாக, உலக மூடம், தேவ மூடம், பாஷண்டி மூடம் என்பனவாகும். உலகமூடம் என்பது மலையின் மேல் ஏறிவிழுதல், நெருப்பில் பாய்தல், ஆறு, கடல் ஆகியவற்றில் மூழ்குதல் ஆகிய இச்செயல்களால் புண்ணியம் கிடைக்கும் என்று நம்புவது. சமண சமயக் கோட்பாட்டின்படி இவை தவறானவை. புண்ணியத்தைத் தரும் என்று எண்ணும் நம்பிக்கையும் மூடத்தனமானது எனலாம். அதனால்தான் கண்ணகி தேவந்தியின் வேண்டுகோளை ஏற்காமல் பீடன்று எனவுரைக்கிறாள்.

[....]

இப்படிப்பட்ட சீரியோர் கூடிய ஸ்ரீகோயிலில் (சமணர் கோயில்) பஞ்சபரமேஷ்டிகள் (அரஹந்தர், சித்தர், ஆச்சாரியர், உபாத்தியாயர், சர்வ சாதுக்கள் இவர்களைப் பஞ்சபரமேஷ்டிகள் என அழைப்பது சமணசமய மரபு) நிலைபெற்ற, ஐந்து சக்தியும் கூடிவந்து கலந்த பெரிய மன்றத்தின்கண், பொற்பூவினை உடைய, எழில் விளங்கும் நிழலின் கண் அசோக மரத்தின் கீழ் அபிடேக நாளிலும் தேர்த்திருநாளிலும் சாரணர் (சாரணர் = சமணத்துறவியர், மக்களுக்கு அறநெறி கூறுவோர்) வரத்தகுமென்று சாவகர் (சமணத்தைப் பின்பற்றும் மக்கள்) யாவரும் கூடியிருந்த சிலாவட்டத்தை (சிலாவட்டம் = சாரணர் அமர்ந்து அறம் கூறும் மேடை) கண்ணகியும் கோவலனும் வலம்வந்து வணங்கினர். பின் அங்குக் கவுந்தியடிகளைக் கண்டு வணங்கினர்.

மறவுரை நீத்த மாசறு கேள்வியர் அறவுரை கேட்டு அறிவனை ஏத்தச் செல்லும் எண்ணமுடையேன். ஆதலால் நானும் வருகிறேன் எனக் கவுந்தியடிகள் அவர்களுடன் மதுரை புறப்பட்டார்

[...]

சிலாதலத்தில் (சிலாவட்டம்) அமர்ந்திருந்த சாரணரை, கண்ணகி, கோவலன், கவுந்தி அடிகள் மூவரும் வணங்குகின்றனர்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கண்னகி ஜைன மதத்தவள் என்பதற்காகவே ஆறுமுகநாவலர் கண்ணகி கோவில்களை கண்டித்தார் என்றும் கூறப்படுகிறது.

------------------------------------------------------------------

இந்துக்களும் பெளத்தர்களும் கண்ணகியை பெண் தெய்வமாகப் போற்றி வழிபடுகின்றனர். நல்லை ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலருக்கு முற்பட்ட காலத்தில் வடபகுதியில் பல கண்ணகி அம்மன் ஆலயங்கள் காணப்பட்டன.

சமண சமயத்தைச் சேர்ந்த சீமாட்டிக்கு கோயில் கட்டி வழிபடுவது தவறு என நல்லை ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாலவர் வலியுறுத்தினார். வடபகுதியில் காணப்பட்ட பல கண்ணகி அம்மன் ஆலயங்கள் முத்துமாரி அம்மன் ஆலயங்களாக மாற்றம் பெற்றன. சைவ சமயத்தை நிறுவுவதில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் ஆற்றிய பங்களிப்பு பிறிதாக நோக்கப்பட வேண்டியதொன்றாகும். ஆனாலும் இன்றளவும் தமிழ் மக்கள் மத்தியில் கண்ணகி வழிபாடு காணப்படுகிறது.



-------------------------------------------------------------------

வி

Subashini Tremmel

unread,
Oct 17, 2011, 3:35:45 PM10/17/11
to rajam, மின்தமிழ், Narayanan Kannan, C.R. Selvakumar, Subashini Kanagasundaram


2011/10/17 rajam <ra...@earthlink.net>
விசாகை
----------
..

சில கேள்விகள் எழுகின்றன...


ஆம், ஒரு "கன்னி மாடம்" மணிமேகலைக் காப்பிய காலத்தில் பூம்புகாரில் இருந்திருக்க வேண்டும். முதல் முதலாக ஒரு கன்னி மாடம் பற்றி மணிமேகலையில்தான் தெரியவருகிறது. பிற குறிப்பு ஏதும் இல்லை.

கன்னி மாடம் என்பது பெண் துறவிகள் தங்கும் இடம் என்று கொள்ளலாமா? 


அப்புறம்? தருமதத்தன் என்ன செய்கிறான்? 

தருமதத்தன், அவன் தந்தை, தாய் எல்லாரும் காவிரிப்பூம்பட்டினத்தை விட்டு வெளியேறுகிறார்கள். தாழ்ந்துபோகச் செய்யும் துன்பத்தை நீக்கின கந்திற்பாவையைப் புகழ்கிறார்கள். தக்கண (== தென்) மதுரைக்குப் போகிறார்கள். 

தென்மதுரைக்குப் போன தருமதத்தன் ஒரு முடிவு செய்கிறான்.  

மாமன் மகள் விசாகை எனும் போது அவர்கள் இணைந்திருக்க ஏன் சமூகம் குறை சொல்கின்றது.  மாமன் மகளை காதலிப்பது தமிழ் பண்பாட்டில் வழக்கில் உள்ள ஒன்று தானே. 

செய்யுளில் மைத்துனன் முறைமை என வருகின்றதே.. இங்கே மைத்துனன் என்பதன் பொருள் என்ன?

 

இனி இந்தப் பிறவியில் விசாகையைத் தவிர வேறொரு பெண்ணை விரும்புவதில்லை என்று உறுதிகொள்கிறான்.

வணிகம் செய்கிறான். பெரும் பொருள் ஈட்டுகிறான். சிறந்த வணிகர்களுக்கு வேந்தன் கொடுக்கும் "எட்டி"ப் பட்டத்துக்குரிய பூவைப் (== எட்டிப்பூ) பெறுகிறான். மிக உயர்ந்த செல்வப் பெருக்குடன் வாழ்ந்துவருகிறான். 

கடமையே கண் என ஆனான் போலும். என்ன செய்வது அவனது காதல் மனத்தை சமூகம் புரிந்து கொள்ள வில்லையே. 


இப்படியே ... ஆண்டுகள் உருண்டு போயின. அவனுக்கும் 60 ஆண்டு அகவை ஆகிறது.

..
..

[சுருக்கமான பொருள்: இந்தப் பிறவியில் உனக்கு அடிச்சியாக இருக்கமாட்டேன். அடுத்த பிறவியில் உனக்கு அடித்தொழில் செய்வேன்.]

வயதாகி விட்டதால் விசாகை இப்படி குறிப்பிடுகின்றாரா அல்லது காதல் குடும்ப வாழ்க்கை என்பது நிலையற்றது என்ற தெளிவின் அடிப்படையிலா ? எது பொருந்தும் ?



இப்படி மாமன் மகள் விசாகை சொன்னதைத் தருமதத்தன் கேட்கிறான்.

விசாகையுடன் சேர்ந்து பலவகை நல்ல அறம் செய்கிறான்.

விசாகை அவனுக்கு சேவையென்னும் நல்ல வழி காட்டியிருக்கின்றாள் என்றே கொள்ளலாம் இல்லையா ?
 
..

..

ககந்தனுக்குக் கடுமையான சினம் பொங்குகிறது. மகனின் துயரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் அவனை வாளால் வெட்டிக் கொன்றுவிடுகிறான்!

அப்படிப்பட்ட முறை தவறாத மன்னர் குலம் சோழர் குலம்! 

நேர்மையும் அறமும் எவ்வளவு முக்கியம் என்று அக்கால மன்னர்கள் வாழ்ந்து காட்டியிருக்கின்றார்கள்.
 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
..
..

மன்னனுக்கு அவன்மகன் உதயகுமரனின் செய்தி தெரிவிக்கப்படுகிறது.


அருமை. கதைக்குள் கதை.. !

அடுத்த பகுதிக்குக் காத்திருக்கின்றேன். 

அன்புடன்
சுபா




++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


விசாகையின் கதையில் புதைந்து கிடக்கும் உண்மைகள் பல.

காப்பியத்தின் ஒவ்வொரு வரியும் ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்கிறது; தேடுபவருக்குத் திறமை இருந்தால் கிட்டும் புதைபொருள் நிறைய.

சொல்பவர் சொன்னால் புரியாதவையும் தெளிவாகப் புரிகின்றதே.  மிக்க நன்றி. :-)

 

மாமன் மகள், மைத்துனன் உறவு முறை, யாழோர் மணமுறை, ஊரார் வம்பு, கன்னி மாடம், தென்மதுரையில் வணிகம் செய்ய வாய்ப்பு, வணிகத்தில் சிறந்தோர் வேந்தனிடமிருந்து எட்டிப்பூ பெறுதல், வணிகன் போனபின் மதுரை வெறிச்சோடுதல், பத்தினி இல்லாமல் எந்த அறம் செய்தாலும் பயன் இல்லை என்பது, அகவை முதிர்ந்த நிலையில் காமம் விலகுதல், சோழர் குல அரசியல் நேர்மை, ...  

இப்படி ஒரு சிறு கிளைக்கதையில் எத்தனைத் துணைக்கருத்து வளம்!
"இளமையும் நில்லா; யாக்கையும் நில்லா" என்று தொடங்கும் வரிகளை எத்தனைப்பேர் மனப்பாடம் செய்திருப்போம்! அவை யாரால் எப்போது ஏன் சொல்லப்பட்டன என்று விசாகை கதையைப் படித்தால் அல்லது எப்படித் தெரியவரும்? 

அதனால்தான் மணிமேகலையைப் படிக்கவேண்டும்! 
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்,
ராஜம்


 















Geetha Sambasivam

unread,
Oct 17, 2011, 4:57:54 PM10/17/11
to mint...@googlegroups.com
கன்னி மாடம் என்பது பெண் துறவிகள் தங்கும் இடம் என்று கொள்ளலாமா? //
 
திருமணம் ஆகாத இளம்பெண்கள் தங்க வைக்கப்படும் இடம்.  கடுமையான சட்டதிட்டங்கள் உண்டு என்பார்கள்.  அரசகுமாரிகள் கூடக் கன்னிமாடத்தில் இருப்பார்கள். 
 
மாமன் மகள் விசாகை எனும் போது அவர்கள் இணைந்திருக்க ஏன் சமூகம் குறை சொல்கின்றது.  மாமன் மகளை காதலிப்பது தமிழ் பண்பாட்டில் வழக்கில் உள்ள ஒன்று தானே. //
 
அதான் எனக்கும் புரியலை;  வட மாநிலங்களில் இப்படியான முறையில் திருமணம் முடிப்பது  பழக்கம் இல்லை.  ராஜம் அம்மா தான் தெளிவு ஆக்கவேண்டும்.

 
2011/10/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>


2011/10/17 rajam <ra...@earthlink.net>
விசாகை
----------
..

சில கேள்விகள் எழுகின்றன...

Geetha Sambasivam

unread,
Oct 17, 2011, 5:06:50 PM10/17/11
to mint...@googlegroups.com
படிச்சேன்;  நன்றி.

2011/10/17 Vinodh Rajan <vinodh...@gmail.com>


On Monday, October 17, 2011 5:51:14 PM UTC+5:30, myself wrote:
சிலப்பதிகாரத்தில் கண்ணகியும் கோவலனும் அருகதேவனை வணங்கும் ஜைன சிராவகர்கள். //
 
அப்புறமா எப்படி வைதீக முறைத் திருமணம்??

நான் படித்தவரை:

rajam

unread,
Oct 17, 2011, 9:52:15 PM10/17/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram, Geetha Sambasivam, Dhivakar V, Innamburan Innamburan
பின்னூட்டம் கொடுத்துக் கேள்விகளும் கேட்ட எல்லாருக்கும் -- திவாகர், இன்னம்பூரார், கீதா, சுபா, -- நன்றி!
என் கருத்து:
1. ஆமாம், திவாகர், மணிமேகலையில் வடசொற்கள் மிகுதி. வடசொற்களை எடுத்துவிட்டால் ... 30 காதை அளவுள்ள காப்பியம் 30 வரிக்குள் முடிந்துவிடலாம். ஆனால் ... அருமையான பல வேறுபட்ட சமய தத்துவம் பற்றித் தெரியாமலே போகும்.  சம்பந்தர் தேவாரத்தில் நீங்கள் குறிப்பிட்ட கதை கொஞ்சம் நினைவுக்கு வருகிறது; முழுமையாக இல்லை, மறந்து போச்சு! விளக்கிச் சொல்லுங்களேன், திவாகர்.
2. இன்னம்பூரார் அவர்களின் ... மருத்துவர் பற்றிய கதை நெஞ்சை நெகிழவைத்தது. அன்பு, காதல், இதுக்கெல்லாம் இனம், மதம், நாடு,, காலம் , ... வேறுபாடே இல்லை ஐயா, வேறென்ன சொல்ல? 
3. மாமன் மகள் - மைத்துனன் உறவு முறை பற்றி எனக்கும் குழப்பமே. மணிமேகலையில்தான் முதல் முறையாக இந்த மாதிரிச் செய்தி கிடைக்கிறது. மேல் விளக்கம் இல்லை. (சிலப்பதிகாரத்தில் நாத்தூண் நங்கை, மாமி போன்ற உறவு முறைச் சொற்கள் உண்டு.) எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் ... பலவகைப்பட்ட பழக்க வழக்கங்களைப் பின்பற்றுபவர்கள் மணிமேகலைக் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்திருக்கவேண்டும். மணிமேகலை முழுவதும் .... பலவகை மரபுகள், சமயங்கள் ... இப்படிப்பட்ட கருத்து(க்)கள் ஊடுருவிக் கிடக்கின்றன. விசாகை கதை காட்டுவது ஒரு குறிப்பிட்ட கூட்டத்தார் இன்னொரு கூட்டத்தாரின் மரபை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே. இதேபோல ... மணிமேகலையில் காணும் பிற செய்திகளும் பலவகைப்பட்ட மக்களின் கருத்தைக் குறிப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.
4. "மைத்துனன்" யார் என்றால் மணிமேகலை விளக்கம் தரவில்லை. பிறகு, இறையனார் களவியல் உரையில் ... "மைத்துன கோத்திரத்தான் மகள் வேண்டிச் சென்றால் மறாது கொடுப்பது" என்று ஆரிய மணமுறையான "பிரசாபத்தியம்" என்பதற்கு விளக்கமாகச் சொல்கிறது. ஆரிய மண முறைகள் எட்டு (பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், அசுரம், இராக்கதம், பைசாசம்). தமிழ் மண முறை ஒன்று (களவு ==> கற்பு). இப்படித்தான் இலக்கியவழி அறிகிறோம்.
5. "கன்னி மாடம்" -- இது பற்றிய வேறு எந்தக் குறிப்பும் மணிமேகலையில் இல்லை. யாருக்காக, ஏன், எங்கே, எப்போது, எப்படி, யாரால் இப்படி ஒன்று அமைந்து நடந்தது என்று சான்றுகளுடன் தெரியவில்லை. இப்படி ஒன்று அந்தக் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்திருக்கவேண்டும், அது மட்டுமே தெரிகிறது.

அன்புடன்,
ராஜம் 


--

Raja sankar

unread,
Oct 17, 2011, 10:20:15 PM10/17/11
to mint...@googlegroups.com
அன்பின் ராஜம்,

மிக அருமையாக கதையை சொல்லி இருக்கிறீர்கள்.

மாமன் மகன் திருமணம் பற்றி என்னுடைய கருத்து.

மாமன் மகனாக இருந்தாலும் தானாக இருவரும் சென்று திருமணம் செய்து கொள்வது அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் கந்திற்பாவை விசாகையை கன்னி என்று சொல்வதில் இருந்து பார்த்தால் ஊராரின் அலர், விசாகையை, தன்னுடைய கன்னித்தன்மை இழந்துவிட்டாள் என்று பேசுவதாகவே இருக்கலாம். இதுவும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.


ராஜசங்கர்

2011/10/18 rajam <ra...@earthlink.net>

rajam

unread,
Oct 17, 2011, 10:29:50 PM10/17/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram, Geetha Sambasivam, Dhivakar V, Innamburan Innamburan
சுபாவின் பிற கேள்விகளுக்கு என் கருத்து:
----------------------------------------------
[சுருக்கமான பொருள்: இந்தப் பிறவியில் உனக்கு அடிச்சியாக இருக்கமாட்டேன். அடுத்த பிறவியில் உனக்கு அடித்தொழில் செய்வேன்.]

வயதாகி விட்டதால் விசாகை இப்படி குறிப்பிடுகின்றாரா அல்லது காதல் குடும்ப வாழ்க்கை என்பது நிலையற்றது என்ற தெளிவின் அடிப்படையிலா ? எது பொருந்தும் ?

வயதாகிவிட்டதால் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. அவளே சொல்லுகிறாளே ... இளமை, காமம் எல்லாம் எங்கே போயின என்று. "இளமையும் நில்லா; யாக்கையும் நில்லா ..." என்பதை இங்கே விசாகை கதையிலும் பிற பல இடங்களிலும் மணிமேகலைக் காப்பியம் வற்புறுத்துகிறது. 'இளமை, உடல் கட்டு, அழகு, காமம் ... போன்ற எல்லாம் நிலையற்றவை, புதல்வரைப் பெற்றால்கூட அவர்கள் தேவர் உலகம் போக உதவ மாட்டார்கள், அதனால் அறம் செய்' என்பதை இந்தக் காப்பியம் வலியுறுத்துகிறது.

விசாகை அவனுக்கு சேவையென்னும் நல்ல வழி காட்டியிருக்கின்றாள் என்றே கொள்ளலாம் இல்லையா ?
ஆமாம், உறுதியாக! 
திவாகர் இந்த "விசாகை" பற்றி மேற்கொண்டு எடுத்துச் சொன்னால் நன்றாக இருக்கும். "விசாகை" என்ற ஒரு பௌத்த துறவி பெயரில் "விசாகப்பட்டினம்" என்ற ஊரின் பெயர் அமைந்தது என்பது பற்றிய தன் மாறுபட்ட கருத்தை அவர் எடுத்து விளக்கினால் நன்றாக இருக்கும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++

பின்னூட்டம் கொடுத்துக் கேள்விகளும் கேட்ட எல்லாருக்கும் -- திவாகர், இன்னம்பூரார், கீதா, சுபா, -- நன்றி!
என் கருத்து:
1. ஆமாம், திவாகர், மணிமேகலையில் வடசொற்கள் மிகுதி. வடசொற்களை எடுத்துவிட்டால் ... 30 காதை அளவுள்ள காப்பியம் 30 வரிக்குள் முடிந்துவிடலாம். ஆனால் ... அருமையான பல வேறுபட்ட சமய தத்துவம் பற்றித் தெரியாமலே போகும்.  சம்பந்தர் தேவாரத்தில் நீங்கள் குறிப்பிட்ட கதை கொஞ்சம் நினைவுக்கு வருகிறது; முழுமையாக இல்லை, மறந்து போச்சு! விளக்கிச் சொல்லுங்களேன், திவாகர்.
2. இன்னம்பூரார் அவர்களின் ... மருத்துவர் பற்றிய கதை நெஞ்சை நெகிழவைத்தது. அன்பு, காதல், இதுக்கெல்லாம் இனம், மதம், நாடு,, காலம் , ... வேறுபாடே இல்லை ஐயா, வேறென்ன சொல்ல? 
3. மாமன் மகள் - மைத்துனன் உறவு முறை பற்றி எனக்கும் குழப்பமே. மணிமேகலையில்தான் முதல் முறையாக இந்த மாதிரிச் செய்தி கிடைக்கிறது. மேல் விளக்கம் இல்லை. (சிலப்பதிகாரத்தில் நாத்தூண் நங்கை, மாமி போன்ற உறவு முறைச் சொற்கள் உண்டு.) எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் ... பலவகைப்பட்ட பழக்க வழக்கங்களைப் பின்பற்றுபவர்கள் மணிமேகலைக் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்திருக்கவேண்டும். மணிமேகலை முழுவதும் .... பலவகை மரபுகள், சமயங்கள் ... இப்படிப்பட்ட கருத்து(க்)கள் ஊடுருவிக் கிடக்கின்றன. விசாகை கதை காட்டுவது ஒரு குறிப்பிட்ட கூட்டத்தார் இன்னொரு கூட்டத்தாரின் மரபை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே. இதேபோல ... மணிமேகலையில் காணும் பிற செய்திகளும் பலவகைப்பட்ட மக்களின் கருத்தைக் குறிப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.
4. "மைத்துனன்" யார் என்றால் மணிமேகலை விளக்கம் தரவில்லை. பிறகு, இறையனார் களவியல் உரையில் ... "மைத்துன கோத்திரத்தான் மகள் வேண்டிச் சென்றால் மறாது கொடுப்பது" என்று ஆரிய மணமுறையான "பிரசாபத்தியம்" என்பதற்கு விளக்கமாகச் சொல்கிறது. ஆரிய மண முறைகள் எட்டு (பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், அசுரம், இராக்கதம், பைசாசம்). தமிழ் மண முறை ஒன்று (களவு ==> கற்பு). இப்படித்தான் இலக்கியவழி அறிகிறோம்.
5. "கன்னி மாடம்" -- இது பற்றிய வேறு எந்தக் குறிப்பும் மணிமேகலையில் இல்லை. யாருக்காக, ஏன், எங்கே, எப்போது, எப்படி, யாரால் இப்படி ஒன்று அமைந்து நடந்தது என்று சான்றுகளுடன் தெரியவில்லை. இப்படி ஒன்று அந்தக் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்திருக்கவேண்டும், அது மட்டுமே தெரிகிறது.

அன்புடன்,
ராஜம் 


On Oct 17, 2011, at 1:57 PM, Geetha Sambasivam wrote:

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil


--

rajam

unread,
Oct 17, 2011, 10:53:56 PM10/17/11
to mint...@googlegroups.com
நன்றி, ராஜசங்கர்.  
சங்க இலக்கியத்திலும்கூட "மகட் போக்கிய தாய்" என்ற துறையை நம் மரபு வழி உரையாசிரியர்கள் சரியாகப் புரிந்துகொள்லவில்லையோ என்று எனக்கு ஐயம். "போக்கிய" என்ற சொல் ஆட்சி ஏன் என்று யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. "மகளைப் போகச் செய்த தாய்" என்றுதானே பொருள் கொள்ள வேண்டும்???
நீங்கள் சொல்லும் மரபு உண்மை! தானாக இருவரும் சென்று திருமணம் செய்துகொள்ள முடியாது. அதனால் தானோ என்னவோ ... "கற்பு" என்பது "களவு" என்பதைத் தொடர்ந்து அமையும் என்று இலக்கணத்திலும் சொல்லிவிட்டார்கள்.
இலக்கியத்தில் இதையெல்லாம் இன்னும் ஆழமாகப் படித்துப் புரிந்துகொள்ளவேண்டும். நான் அறிந்தது மிகச் சிறிய அளவே.
அன்புடன்,
ராஜம் 

Raja sankar

unread,
Oct 17, 2011, 11:08:11 PM10/17/11
to mint...@googlegroups.com
மகட் போக்கிய தாய் என்றால் மகளை திருமணம் செய்து கொடுத்த என்றும் வருவதாக கொள்ளல்லாம் என நினைக்கிறேன். தாய் தன்னுடைய மகளை/மகனை திருமணம் செய்து கொள்ளவிரும்பினால் பெரும்பாலும் எதிர்ப்பு வருவதில்லை. இதை இன்றும் திருமணமேடையில் பெண்வழி உறவினர்களுக்கு இடம் உண்டு என்பதோடு பொருத்திப்பார்க்கவேண்டும். மேலும் தமிழர்கள் தாய்வழிச்சமூகமாக இருந்ததையும் இது காட்டுகிறது என்றும் கொள்ளலாம்.

இதை எழுதும் போது எனக்கொரு கேள்வி எழுந்தது, மகளை பிர்ந்த தாய் பாடுவது போல் பல சங்க பாடல்கள் உள்ளன. ஆனால் மருமகளை கொண்டு வர போன மகனைப்பற்றி தாய்/தந்தை பாடுவது போல் ஏதேனும் பாடல்கள் உண்டா?

ராஜசங்கர்

2011/10/18 rajam <ra...@earthlink.net>
"மகட் போக்கிய தாய்

rajam

unread,
Oct 17, 2011, 11:25:00 PM10/17/11
to mint...@googlegroups.com

இதை எழுதும் போது எனக்கொரு கேள்வி எழுந்தது, மகளை பிர்ந்த தாய் பாடுவது போல் பல சங்க பாடல்கள் உள்ளன. ஆனால் மருமகளை கொண்டு வர போன மகனைப்பற்றி தாய்/தந்தை பாடுவது போல் ஏதேனும் பாடல்கள் உண்டா?
எனக்குத் தெரிந்து இல்லை. அதோடு ... தந்தை பாடுவது இல்லை; தந்தை மகளைக் கொடுக்க மறுப்பது பற்றிப் புலவர் சொல்லுவதாக அமைந்த பாடல்கள் மட்டுமே "மகட்பாற் காஞ்சி" என்ற துறைப்பட்டு, அதுவும் புறப் பாடல்களில் தொகுக்கப்பட்டுள்ள்ளன.
"மகட்பாற் காஞ்சி" மிக அருமையான துறை! இயன்ராபோது அது பற்றி எழுதுகிறேன்.


rajam

unread,
Oct 17, 2011, 11:58:02 PM10/17/11
to mint...@googlegroups.com
தட்டச்சுப்பிழை ("தொகுக்கப்பட்டுள்ள்ளன," "இயன்ராபோது") பொறுத்தருள்க! :-) :-) :-)  
முத்துமாறனிடம் இதுபற்றி நான் தனியாகப் பேசவேண்டும்! :-)

DEV RAJ

unread,
Oct 18, 2011, 12:26:12 AM10/18/11
to மின்தமிழ்
Oct 17, 12:00 pm, Vinodh Rajan

>>> சிலப்பதிகாரத்தில் கண்ணகியும் கோவலனும்
அருகதேவனை வணங்கும் ஜைன சிராவகர்கள்.<<<


சிலம்பு - மேகலை காப்பியங்களைப் படிக்கும்போது
சமய ஒழுக்கம் பற்றிய குழப்பம் நேர்வது இயற்கை.

"சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின் ..... "
"குன்றாக் கொள்கைக் கோவலன்.."
போன்ற வரிகள் கோவலனைச் சாவக நோன்பைக்
கடைப்பிடிப்பவன் என்பதை உறுதிபடத் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து
"கோவலன் நாவில் கூறிய மந்திரம்
பாய்கலைப் பாவையின் மந்திர மாதலின்...."
என வரும்போது ச்ராவகர்களுக்கு தெய்வங்களைக்
குறித்த மந்திர ஜபம் உண்டா எனும் கேள்வியும் எழுகிறது.

மாதவியும், மணிமேகலையும் பவுத்தப் பள்ளி சேர்ந்ததற்கும்
பவுத்த ஈர்ப்பைக் காட்டிலும் சமூகக் காரணமே
மையமாகத் தோன்றுகிறது

(குறுக்கீடாயின் ராஜம் அவர்கள் மன்னிக்க வேன்டும்)

தேவ்

rajam

unread,
Oct 18, 2011, 12:34:23 AM10/18/11
to mint...@googlegroups.com
தேவ், ஓ, தேவா!!!

> (குறுக்கீடாயின் ராஜம்
> அவர்கள் மன்னிக்க
> வேன்டும்)
>

எனக்கென்ன? கோவலனோ,
மாதவியோ, பிறரோ ... யார்
எந்தச் சமயத்தை
எதற்காகப்
பின்பற்றினார்கள் என்று
தெளிவாகத் தெரியாமல்
இருக்கும்போது நான் ஏன்
எதற்காகத் தலை தடுமாறி ...
எந்தக் குற்றத்துக்காக
உங்களை மன்னிக்க
வேண்டும்? அடக் கடவுளே!


நாம் இங்கே பார்ப்பது
இலக்கியச் சான்று
மட்டுமே; தனிப்பட்ட
கொள்கை இல்லை, இல்லை,
இல்லை! :-) :-) :-)

அன்புடன்,
ராஜம்


> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
> may like to visit our Muthusom Blogs at: http://
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-
> unsub...@googlegroups.com

Banukumar Rajendran

unread,
Oct 18, 2011, 1:16:47 AM10/18/11
to mint...@googlegroups.com
//"கோவலன் நாவில் கூறிய மந்திரம்

பாய்கலைப் பாவையின் மந்திர மாதலின்...."
என வரும்போது ச்ராவகர்களுக்கு தெய்வங்களைக்
குறித்த மந்திர ஜபம் உண்டா எனும் கேள்வியும் எழுகிறது.//

சீவக சிந்தாமணியில் இருக்கிறதே!

பதுமையார் இலம்பகத்தில், பதுமையை பாம்பு கடித்துவிடுகிறது. பாம்பின் விழத்தை சீவகன் மந்திரம் சொல்லி
விஷம் இரங்க செய்கிறான்!


//மாதவியும், மணிமேகலையும் பவுத்தப் பள்ளி சேர்ந்ததற்கும்
பவுத்த ஈர்ப்பைக் காட்டிலும் சமூகக் காரணமே
மையமாகத் தோன்றுகிறது//


ஏன் அப்படி! :-))


இரா.பானுகுமார்,
சென்னை








2011/10/18 DEV RAJ <rde...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

Dhivakar

unread,
Oct 18, 2011, 1:33:26 AM10/18/11
to rajam, mint...@googlegroups.com, Subashini Kanagasundaram, Geetha Sambasivam, Innamburan Innamburan
ராஜம் அம்மா!

http://www.hindu.com/thehindu/mp/2002/08/26/stories/2002082600970201.htm

விசாகை எனும் இளவரசி புத்தத் துறவியானது பற்றி பல கதைகள் உள்ளன. அசோக மன்னர் கலிங்கத்தை வென்றதும், அவன் மகள் விசாகையும் தந்தையோடு மனம் மாறி பௌத்தத்தில் சேர்ந்து துறவியாக கலிங்கத்தில் திரிந்து சேவை செய்ததாக செவி வழிக் கதை உண்டு. கலிங்கப்போரில் அசோகன் வென்றபின் அவனுக்குப் பயந்து கலிங்க சிற்றரசர்கள் சிலர் பௌத்தமதத்தில் மாறியதாகவும் அப்படிப்பட்ட சிற்றரசர் ஒருவரின் பெண்ணான விசாகை என்பவள் துறவறம் பூண்டு பௌத்த சேவை செய்ததாகச் சொல்கிறார்கள். எது உண்மை எனத் தெரியாது. இதே போல ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி ஆலயத்திலும் ஒரு விசாகை எனும் இளவரசி ஆண்டவன் மேல் காதல் கொண்டு அங்கேயே தங்கிவிட்டதாகவும், அதனால் கோபமுற்ற அவள் தந்தை அங்கு படையெடுத்து வந்ததாகவும் இறைவன் தடுத்தாட்கொண்டதாகவும் ஒரு கதை உள்ளது. காலப்போக்கில் செவி வழியாகப் பல கதைகள் வரும்போது அது இடைச்செருகல்களோடு சுவையாக சொல்லப்படவேண்டும் என்பதற்காகவே சொல்லப்படுவதாகவே தெரிகிறது.

மணிமேகலை போன்ற இலக்கியங்கள் அக்கால நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டுவது போல இங்கெல்லாம் ஆதாரங்கள் இல்லை. பழைய கிராமப்புறப் பாடல்களையும், செவி வழிக் கதைகளையுமே ஆதாரமாக எடுத்துக் கொள்ளவேண்டிய அவல நிலை.

அன்புடன்
திவாகர்



2011/10/18 rajam <ra...@earthlink.net>:

rajam

unread,
Oct 18, 2011, 1:35:39 AM10/18/11
to mint...@googlegroups.com
அன்பின் பானுகுமார்,
சீவகசிந்தாமணி அருமையான காப்பியம். பலருக்கும் அதைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. இயன்றால், அந்த அழகான காப்பியத்தின் கதைகள், கருத்து ... எல்லாம் பற்றி ... தெரியாத என் போன்றவர்களுக்குத் தெரிவியுங்களேன். மிகவும் நன்றியுடையவளாக இருப்பேன்.

அன்புடன்,
ராஜம்

rajam

unread,
Oct 18, 2011, 2:11:56 AM10/18/11
to mint...@googlegroups.com, Dhivakar V
மிக நன்றி, திவாகர்! மணிமேகலை காட்டும் விசாகை சாதாரணப் பெண், இளவரசி இல்லை.
ஏதோ, கிடைத்த இலக்கியச் சான்றுகளை வைத்து அந்தக் கால நிலையைப் புரிந்துகொள்ளப் பார்க்கிறேன், அவ்வளவே.
அன்புடன்,
ராஜம்

DEV RAJ

unread,
Oct 18, 2011, 3:00:08 AM10/18/11
to மின்தமிழ்
Oct 18, 10:16 am, Banukumar Rajendran

>>பதுமையார் இலம்பகத்தில், பதுமையை பாம்பு கடித்துவிடுகிறது. பாம்பின் விழத்தை
சீவகன் மந்திரம் சொல்லி விஷம் இரங்க செய்கிறான்! <<

'ணமோகார மந்த்ரம்' தவிர ரோக நிவர்த்தி போன்ற காம்யார்த்த மந்திரங்கள்
வேத சமயத்தைப்போலச் சமணத்திலும் உள்ளன போலும் ! இவ்வழக்கம்
மூவகை மூடத்துடனும் சேராதா ?

தனி இழையில் நீங்கள் இதை விரிவாக எழுதலாம்.


தேவ்


On Oct 18, 10:16 am, Banukumar Rajendran <banukuma...@gmail.com>
wrote:

karuannam annam

unread,
Oct 18, 2011, 3:04:01 AM10/18/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram, Narayanan Kannan, C.R. Selvakumar, rajam
எளிய சொற்களில் அருமையாகக் காப்பிய மேற்கோளுடன் மணிமேகலைக் காப்பிய அறிமுகத்தைப் பாத்திரங்கள் வாயிலாகக் காட்டும் அன்பிற்கினிய நண்பர் திருமிகு இராஜம் அவர்களுக்கு மிக்க நன்றி. நண்பர்களின் பின்னூட்டங்களும் அருமை. 




"யாழோர்" என்று தமிழில்/தமிழக வழக்கத்தில் சொல்லப்பட்டவர்கள் ஆரிய வழக்கத்தில் "கந்தருவர்" என்று அறியப்படுவார்கள்.

யாழோர் மிக நல்ல இணையாக இருக்கிறது. வடசொல்லுக்கு இணைச்சொல் தேடி இடும் முயற்சி காலம்தோறும் நிழ்கிறது போலும்.
திருமறைக்காட்டில் அம்பாள் யாழைப்பழித்த மொழியாளுக்கு இணையாக  வடசொல் கண்டு கொண்டும் கொடுத்தும் வழங்குகிறார்கள்.



"நம்முள் நாம் அறிந்திலம்; நம்மை முன்னாள்
மம்மர் செய்த வனப்பு யாங்கு ஒளித்தன?
ஆறைந்து இரட்டி யாண்டு உனக்கு ஆயது; என்
நாறைங்கூந்தலும் நரை விராவுற்றன;
இளமையும் காமமும் யாங்கு ஒளித்தனவோ?" 



"இளமையும் நில்லா; யாக்கையும் நில்லா;
வளவிய வான்பொருள் செல்வமும் நில்லா;
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்;
மிக்க அறமே விழுத்துணை ஆவது;
தானம் செய் ..."

மணிமேகலையின் தலைமையறம்.



காப்பியத்தின் ஒவ்வொரு வரியும் ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்கிறது; தேடுபவருக்குத் திறமை இருந்தால் கிட்டும் புதைபொருள் நிறைய.

அகவை முதிர்ந்த நிலையில் காமம் விலகுதல்
என்ன இன்பம் எனக்கு நல்கும் இருக்கின்றாள் என்பது ஒன்றே என்பது போல
தருமத்தன்அமைதி அடைந்துள்ளன்.

நன்றியுடன்
சொ.வினைதீர்த்தான்
 

Nagarajan Vadivel

unread,
Oct 18, 2011, 11:28:44 AM10/18/11
to mint...@googlegroups.com
காப்பியங்களிலும் இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள உறவின் முறைகளை வரிசைப்படுத்தி ரத்த உறவு மற்ற உறவுகளை தரவுத்தளமாக உருவாக்கலாம்
மாசாத்துவான் மாநாய்க்கன் என்ற சொற்கள் இருவிதமான வணிகத்தைக் குறிப்பதும் அதே நேரம் அவர்கள் இருவேறு சமயத்தைச் சேர்ந்தவராக இருப்பதும் பூம்புகார் நகரம் வேற்றுமையில் ஒற்றுமை எனப் பல்வேறு சமயத்தைச் சார்ந்தவர்கள் ஒற்றுமையுடன் மத பேதமின்றி பெண்கொடுப்பதை வழக்கமாகக் கொண்டவர்களாக வாழ்ந்திருக்கக் கூடும். இதை உறுதிப்படுத்த எத்னோ மெத்தடாலாஜி முறைகளைப் பயன்படுத்து ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்
நாகராசன்
http://www.dunags.com/Nagarathar.aspx
 
Following are some terminology used in Nagarathar lifestyle.
Aiyyah
Grandpa (Paternal & Maternal)
Appatha Grandma (Faternal)
Aayyah Grandma (Maternal)
Appachi Father
Aatha Mother
Periappachi Father 's elder brother/ Mother's elder sister's husband
Periatha Father's elder brother's wife/Mother's elder sister
Chithappa Father's younger brother/Mother's younger sister's husband
Chinnatha Father's younger brother's wife/Mother's younger sister
Ammaan Mother's brother/Father in law/Father's sister's husband
Ammaanpendir Mother's brother's wife
Annan Elder brother
Aachi Elder sister
Thambi Younger brother
Thangachi Younger sister
Annanpendir Elder brother's wife
Aiythan Sister's husband/Mother's brother's son/Father's sister's son/brother in law
Aiythai Father's sister/Mother in law
Aiythiandi Father's sister's daughter/Mother's brother's daughter/Sister in law
Thambipendir Younger brother's wife


2011/10/18 karuannam annam <karu...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Subashini Tremmel

unread,
Oct 20, 2011, 3:17:04 PM10/20/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram


2011/10/17 Geetha Sambasivam <geetha...@gmail.com>

கன்னி மாடம் என்பது பெண் துறவிகள் தங்கும் இடம் என்று கொள்ளலாமா? //
 
திருமணம் ஆகாத இளம்பெண்கள் தங்க வைக்கப்படும் இடம்.  கடுமையான சட்டதிட்டங்கள் உண்டு என்பார்கள்.  அரசகுமாரிகள் கூடக் கன்னிமாடத்தில் இருப்பார்கள். 

அப்படியா. எந்த காலகட்டத்தில் கன்னிமாடம் வழக்கில் இருந்தது. பின்னர் எப்படி இந்த வழக்கம் மறைந்தது ? (இன்னமும் வழக்கில் இருக்கின்றதா எனத் தெரியவில்லை-கேள்விப்பட்டதில்லை)

சுபா

 
மாமன் மகள் விசாகை எனும் போது அவர்கள் இணைந்திருக்க ஏன் சமூகம் குறை சொல்கின்றது.  மாமன் மகளை காதலிப்பது தமிழ் பண்பாட்டில் வழக்கில் உள்ள ஒன்று தானே. //
 
அதான் எனக்கும் புரியலை;  வட மாநிலங்களில் இப்படியான முறையில் திருமணம் முடிப்பது  பழக்கம் இல்லை.  ராஜம் அம்மா தான் தெளிவு ஆக்கவேண்டும்.

 
2011/10/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>


2011/10/17 rajam <ra...@earthlink.net>
விசாகை
----------
..

சில கேள்விகள் எழுகின்றன...

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
Oct 20, 2011, 3:18:10 PM10/20/11
to rajam, மின்தமிழ், Geetha Sambasivam, Dhivakar V, Innamburan Innamburan, Subashini Kanagasundaram
விளக்கங்களுக்கு நன்றி  ராஜம் அம்மா. 

சுபா

2011/10/18 rajam <ra...@earthlink.net>
Reply all
Reply to author
Forward
0 new messages