தெளிவான கருத்துப் பரிமாற்றத்துக்கு அனுமன் காட்டும் வழி, பல
பேரிடர்களைச் சந்தித்தபோதும் பாரதத்தின் உறுதி குலையாமை, நாட்டு
நலனுக்கு மக்களின் பங்களிப்பு, அயலகம் வாழ் இந்தியர்களின் பொறுப்பு, மொழி
நீடித்து வளர நாம் செய்ய வேண்டுபவை இவை குறித்து இவர் கூறும்
கருத்துக்கள் மனம் கவர்வதாக உள்ளன. 20 நிமிடம் நீடிக்கும் இந்த
பேட்டியைக் கீழ்க்கண்ட சுட்டியில் கேட்கலாம்
தேவ்
பாரதிய வித்யா பவனில், ‘பிசினஸ் கம்யூனிகேஷன்’ பற்றிய ஒரு டிப்ளமா
படிப்பு அணமையில் டாக்டர் கலாம் அவர்களால் துவக்கப்பட்டது. அதற்கு
அடியவன் தான் பிரொகிராம் இயக்குநராக இருக்கிறேன். சென்ற வகுப்பில்,
சோஷியல் மீடியா மற்றும் டுவிட்டர்’ பற்றி பேசும் போது, 140 எழுத்துகளில்
எழுதுவதை அனைவரும் ஒரு பெரிய உலக சாதனையாக கருதுவதைப்பற்றி கூறி,
திருக்குறளைத்தான் உதாரணமாக கூறினேன். ஒவ்வொரு திருக்குறளும் 25 முதல்
40 எழுத்துக்களில் அமைக்கப்பட்ட்டுள்ளது. டுவிட்டரில் கால் பகுதியிலேயே
அரிய கருத்துக்களை கொடுத்தவர் திருவள்ளுவர்.
தமிழ்நாட்டு தமிழர்களை விட அயல் நாடு வாழ் தமிழர்கள் தான் அதிக அளவில்,
தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, தமிழை வளர்க்கிறார்கள். இன்றைய
இளைஞர்களிடையே தமிழ் ஆர்வத்தை வளர்க்க வேண்டுமென்றால், நவீன தொழில்
நுட்பம் வாயிலாகத்தான் செல்லவேண்டும்.
அன்புடன்
சீனிவாசன்
91766 50273
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
எத்தனை பேர் இந்த மின்செவ்வியைக் கேட்டீர்கள் என்று தெரியவில்லை. தேவ்
அவர்கள் புதிய சரித்திரம் படைத்திருக்கிறார்கள். ஒரு மடலாடற்குழுவின்
சார்பாக, மடலாடற்குழுவின் சீரிய நடவடிக்கையாக, மடலாடற்குழு உருப்பினர்களை
வைத்தே, மடலாடல் என்பதின் அடுத்த நிலையான நேர் (ஒலி) காணல் எனும்
நிலைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். இதன் அடுத்த வளர்ச்சியாக நான்
வீடியோ கான்பெரன்சிங் (விழியப்பேச்சு) என்பதை எதிர் நோக்குகிறேன்.
மின்தமிழ் என்பது வெறும் ஊர் வம்பு பேசும் குழு அல்ல என்பதை எவ்வளவு
தூரம் உள்வாங்கியிருந்தால் தேவ் போன்ற பெரியவர்கள் மரபு விக்கி எனும்
பெரும் பொறுப்பையும், இப்போது மின்காணல் (மின்னாடல்?) எனும் உத்தியைக்
கையாண்டு டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் வலது கை போல் இருக்கும்
திரு.ஸ்ரீநிவாசன் அவர்களைப் பேட்டி கண்டிருப்பார்கள் என்று வியக்கிறேன்.
ஒரு மடலாடற்குழு எவ்வளவு தூரம் ஆக்கபூர்வமாகத் தன்னை வெளிக்காட்டிக்
கொள்ள முடியும் என்பதற்கு இதுவொரு உதாரணம். இதில் என்னைக் கவர்ந்த
இன்னொரு உளவியல் கூறு என்னவெனில், அந்தக்காலத்து மடலாடற்குழுக்களெல்லாம்
வெறும் hero worship செய்யும் தனிநபர் பஜனை மடங்களாக இருக்கும் போது,
தன்னியல்பாக எங்கள் உந்துதல் ஏதுமில்லாமல் ‘இது தம் குழு’ எனும் பீடுடன்
தமிழ் மடலாடற்குழு சரித்திரத்திலேயே இதுவரை இல்லாத அதிசயமாக இம்மாதிரி
ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இதுவே நல்லதொரு மடலாடற்குழு என்பது எப்படி
இயங்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணம் போலவும்
அமைந்துவிட்டது.இம்மாதிரியான ஜனநாயகச் சிந்தனையை, செயலை நாம்
வளர்த்தெடுக்க வேண்டும். அதுவே மின்தமிழ் மின்வெளியில் நிரந்தரமாக இருக்க
வழிசெய்யும். மடலாடற்குழுக்கள் தனி நபர்களை மட்டும் நம்பி செயல்படல்
கூடாது. அந்த நபர் இல்லையெனில் பின் இயக்கம் முடங்கிவிடும்!
தேவ் அவர்கள் ஒரு தேர்ந்த போட் காஸ்டர் போல் (மின்தமிழ் வானொலி அண்ணா!)
இதை அவரது வளமான குரலில் வழங்கி, இதன் தொழில்நுட்ப வேலையையும்
(ஒலிவாங்கி, சீர்செய்து, சேவியில் ஏற்றி, சோதனை செய்து வெளியிடுவது
வரையிலான அனைத்துப் பொறுப்பையும்) ஏற்று செய்திருப்பது ஆச்சர்யப்பட
வைக்கிறது. வாழ்த்துக்கள் தேவ்,
அடுத்து செல்வன். அவர் குரலை இப்போதுதான் முதன்முறை கேட்கிறேன். அவர்
எழுத்தை வைத்து வேறு மாதிரி குரலை எதிர்பார்த்தேன் :-) மிகத் தேர்ந்த
நிருபர் என்பதை இப்பேட்டியில் நிலைநாட்டி இருக்கிறார். ஏதோ சி.என்.என்
பேட்டி போல் கால அளவைக் கணக்கில் கொண்டு, பேச்சு போகிற திசையில் வழி
தவறிவிடாமல் தம் பணியை மிகக்கவனமாகச் செய்திருக்கிறார். மிக நல்ல
கேள்விகள். அவரது கடைசி கேள்வி என்னை சிந்திக்க வைக்கிறது. மின்தமிழ்
2020 என்னவாக இருக்கும்?
பேட்டியின் நாயகர் ஸ்ரீநிவாசன். வழக்கம் போல் அருமையாக பதில்
சொல்லியிருக்கிறார். ‘சொல்லின் செல்வன்’ அநுமனை மறக்காமல், strategist
கிருஷ்ணன் எனும் புதுக்கோணம் காட்டி old wine in new bottle என்பதைச்
சொல்லாமல் சொல்லியிருக்கிறார். அவர் சொல்வது போல் உலகின் முதல் டிவிட்டர்
(சிட்டி) திருக்குறள்தான்!!
I strogly believe in Positive Thinking and the power of cooperative
(collective) thinking in changing ourselves, thereby changing the
society. அந்த வழியில்தான் மின்தமிழ் நடை போட்டுக்கொண்டு இருக்கிறது.
அதற்கு ஸ்ரீநிவாசன் போன்றோரின் உற்ற துணை அவசியம் தேவை. அவர் நம்
குழுவிற்காக எதுவும் செய்யத்தயாராக உள்ளதை தன் செல்பேசி எண்ணைக்
கொடுத்திருப்பதன் மூலம் கோடிகாட்டி இருக்கிறார்.
இது போன்ற மின்னாடல்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும். அடுத்ததாக யாரைப்
பேட்டி காணலாம் என்று இங்கு பரிந்துரை செய்யலாம்.
நாளை நமதே! வாழ்க!
Kudos to Dev & Selvan!!
அன்புடன்,
நா.கண்ணன்
2010/8/11 devoo <rde...@gmail.com>:
>
> http://blip.tv/file/3988212
>
ஏற்றத் தாழ்வுகள் எப்போதும் இருக்கும் என்ற சீனிவாசனின் பதில், உண்மையே.
ஆயினும் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்பது நம் கனவு. அப்போது
தான், மக்களாட்சியின் முழுப் பயனையும் மக்கள் பெற முடியும். இவ்வளவு
அறிவியல் - நுட்பியல் வளர்ச்சி இருந்தும், இந்த இடைவெளிகளைக் குறைக்க
இயலாது எனில் அது, உண்மையான வளர்ச்சி இல்லை.
பிற மொழிச் சொற்களைத் தமிழ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற சீனிவாசன்,
திவ்யம், சத்தியம் உள்ளிட்ட சில சொற்களுக்குத் தமிழில் பொருத்தமான
மாற்றுச் சொற்கள் இல்லை என்கிறார். சத்யமேவ ஜெயதே என்பதை வாய்மையே
வெல்லும் என மொழிபெயர்த்த போது, சத்தியத்தின் மூன்றில் ஒரு பகுதி பொருளே
வாய்மை என இராஜாஜி விமர்சித்ததாகக் கூறியுள்ளார். இந்தக் கூற்றினைத்
தமிழறிஞர்களுக்கு மடை மாற்றுகிறேன். தக்க சொற்களைத் தெரிவிக்க
வேண்டுகிறேன். ஒருவேளை அவ்வாறு இல்லாவிடில் தமிழில் உருவாக்க முயல்வோம்.
அன்புடன் என்றும்,
அண்ணாகண்ணன்.
முதல்ல இங்க போய் NHM Writer install செய்யுங்க. ஆன்லைன் பெட்டியிலேயே
காலத்தை ஓட்டிடாதீங்க!
http://software.nhm.in/products/writer
தாயார் மகாலக்ஷ்மியைப் பற்றி அவ்வளவு அழகாக எழுதிய தாங்கள், ‘ஸ்ரீ’ என்று
எழுத முடியவில்லை என்றால், ‘திரு’வே திரு திருவென்று முழிப்பாள். Key in
”sri” ’ஸ்ரீ’ வந்துவிடும். கேப்பிட்டல் அல்ல ஸ்மால் லெட்டர்ஸ்.
ஸ்கைப், பேஸ்புக் இவையெல்லாம் குழந்தைகளே பயன்படுத்த
ஆரம்பித்துவிட்டார்கள். எனவே தயக்கமின்றி, உள்ளே புகுந்து விளையாடிப்
பாருங்கள். ஜிடாக்கில் கூட பேசலாம் (கூகுள் எல்லாம் செட்டு, செட்டாகத்
தருகிறது). நாம் கணினியில் கேட்கும் எதையும் உடனே பதிவு செய்ய முடியும்.
Wavepad என்றொரு செயலி (மென்பொருள்). அதை வைத்து இதைச் செய்ய முடியும்.
நான் இங்கு அதை அறிமுகப்படுத்தி, தேனீ போன்றோர் கரை கண்டுவிட்டனர் ;-)
தங்களது கேள்விகள் பிடித்திருந்தது. ஸ்ரீநிவாசன் ‘எப்படி’ பதில் சொல்வார்
என்று சிந்திக்க வைத்த கேள்விகள். உதாரணமாக மின்தமிழ் பற்றிய கேள்வி ;-)
மின்தமிழ் என்றவுடன் அவர் ‘தமிழ் கலைச்சொற்களுக்கு’ போய்விட்டார்.
என்னைப் பொறுத்த மின்தமிழ் என்பது ஒரு உளவியல் பொறி. மின்தமிழில் தினம்
நாம் காணும் முகத்தைக் கொஞ்சம் ஊன்றிக் கவனித்தால் உலகமே தெரியும்!
நல்லது, கெட்டது, ஆசாபாசங்கள் எல்லாம். நம்மை நாம் அறிந்து கொள்ள உதவும்
பொறி ‘மின்தமிழ்’. இந்த தரிசனம் முதலில் ஆகிவிட்டால் இறை தரிசனம் அடுத்த
கட்டம் :-)) [இது புரிந்தால் ஆன்மீகத்தின் முதல் கட்டம் என்று பொருள்!]
கண்ணன்
2010/8/12 செல்வன் <hol...@gmail.com>:
மிக நல்ல சிந்தனை. ’செந்தமிழ் மாநாடு’ கண்டு மீண்டிருக்கும் ஐராவதம் ஐயா
மிகச் சரியான தேர்வு. ஐயாவின் தோழர், சீடர் நம் நரசய்யாதான் (அவர்
பேரிலேயே ஐயா இருக்கு). அவர்தான் இதைச் செய்து தர வேண்டும். எப்படிச்
செய்வது போன்ற தொழில் நுணுக்கங்களை நாம் ஒரு குழு அமைத்து சொல்லித்
தரலாம். அந்தக் குழுவில் தாங்கள் அவசியம் சேர வேண்டும்.
//இசை, இலக்கியம், மருந்துவம், சிற்பம், ஓவியம், textile technology
evolution, பட்டு பருத்தி உற்பத்தி, இயற்கை - பாரம்பரிய விவசாயம்//
மிக நல்ல யோசனை. முதலில் ஒரு பட்டியல் தயாரித்தால் தேவலை.
1. திரு. ஐராவதம் மகாதேவன்.
2.
3.
4.
5.
???
கண்ணன்
2010/8/12 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>:
> கண்ணன்,
சர்வ ஜனா சுகினோ பவந்து!
க.>
2010/8/12 ஆராதி <aara...@gmail.com>:
க.>
2010/8/12 செல்வன் <hol...@gmail.com>:
இப்படி ஒவ்வொரு கேள்வியாக அலசுவோமா?
அவர்தான் இங்கு இருக்கிறாரே! அலசல் சுவையாகலாம்!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நல்ல தலைப்பு தமிழ்தேனி ஐயா
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மேடையில் பேசுவது ஒரு கலைதான். ஏன் நடுக்கம் வருகிறது என்று நானும்
நுணுக்கி, நுணுக்கி ஆராய்கிறேன். புரியவில்லை. நம் அறியாமை நம்மையறியாமலே
தொடையில் இறங்கி ஆட்டுகிறது போலும் :-))
க.>
நீட்ட்டோலை கூட இல்லையென்றால்! ரண்டாங்கிளாஸ்லே பாலு வாத்தியார்
சொல்லிகொடுத்ததை வைத்துக்கொண்டு தஞ்சாவூர் திலகர் மடலில், மஹாகவி
பாரதியின் புகழ் பாட, அடித்த பரிசு அவரின் 'பகவத்கீதை'. பத்திரமா
இருக்கு.
இன்னம்பூரான்
பி.கு. கோட் போட்டுக்கலை.
2010/8/12 N. Kannan <navan...@gmail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil