இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லதுமற்
றென்றுவரு மோஅறியேன் எங்கோவே - துன்றுமல
வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து
சும்மா இருக்கும் சுகம் > திருவருட்பா 1959
conquest of mind என்ற தலைப்பில் வெளியான சிவானந்தரின் (இவர் பிறப்பால் தமிழர்) ஆங்கில நூல் ''மனத்தை வெல்வது எப்படி?'' என்ற தலைப்பில் மொழி பெயர்க்கப்பட்டு அதன் இரண்டாம் பதிப்பு 2010 இல் வெளியானது. தமிழாக்கியவர் சுவாமி சுவருபானந்தா. அதில் முதல் 50 பக்கங்கள் வரை சிதானந்தாவின் அறிமுகவுரை. அதில் இருந்து சில துணுக்குகள் கீழே. பக்கம் - 25 > மனஅடக்கம் மிகவும் முக்கியமானது, மிகவும் கடினமானது. ஆனால் அதைச் செய்தே ஆகவேண்டும். எனவே தான், பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் நீங்கள் நீண்ட காலம் முயற்சி செய்ய வேண்டும். எஃகனைய உறுதியும் தீவிரமான இச்சா சக்தியும் (will power) கொண்ட ஒரு சாதகனுக்கு முடியாதது என்று எதுவும் கிடையாது.
மனம் எதைச் செய்ய விரும்புவதில்லையோ அதைச் செய்யுங்கள். மனம் செய்ய விரும்புவதைச் செய்யாதீர்கள். இது இச்சா சக்தியை (விருப்பாற்றலை) வளர்க்கவும் மனதை அடக்கவும் உள்ள பல வழிகளில் ஒன்றாகும்.
மனம் அதிகமாக விரும்பும் பொருள்களை விட்டுவிட வேண்டும். மனம் எந்தப் பொருளைப் பற்றி இடைவிடாது எண்ணி நிற்கிறதோ, அடிக்கடி எண்ணுகிறதோ அதை நீக்கிவிட வேண்டும். உங்களுக்கு கத்தரிக்காயோ, ஆப்பிளோ மிகவும் பிடிக்கும் என்றால் அதை முதலில் விட்டுவிட வேண்டும். இதனால் உங்களுக்கு மிகுந்த மன அமைதி, இச்சா சக்தி வாய்த்ததாக இருக்கிறது.
மனமானது சினம் கொண்டு பகைவனைத் தாக்க முற்படுகையில் உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொண்டு 'நான் கோவத்திற்கும், வெறுப்பிற்கும் அடிமையில்லை' என்று சொல்லுங்கள். இவ்வாறாக மனமானது இச்சா சக்தியை வளர்ப்பதால் அடக்கப்படுகிறது.
பக்கம் - 39 ''எழுந்திருங்கள், வாழ்க்கை வீணாகிக் கொண்டிருக்கிறது. இந்த சம்ஸார சக்கரத்தில் நீங்கள் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள். பல்வேறு எதிர்பார்புகள் மற்றும் சிக்கல்களால் நீங்கள் வறுத்தெடுக்கப்படுகிறீர்கள். நீங்கள் அதை உணர்வதில்லை. ஆனால் வாழ்க்கை படிப்படியாக கழிந்து கொண்டேயிருக்கிறது என்ற இந்த எண்ணங்களை இடைவிடாது எண்ணுங்கள்.உங்களால் படிப்படியாக மனதை அடக்கமுடியும். யோக வாஷிஷ்டத்தின் வைராக்ய ப்ரகரணத்தைப் படியுங்கள். உடலுக்கு இயற்கையாக எந்தவித அழகும் கிடையாது. அதன் அழகு ஆத்மனில் ஒளிரும் பிரகாசத்தினாலேயே யாகும். பஞ்ச பூதங்களால் ஆன உடலில் ஒன்பது ஓட்டைகள் எனும் சாக்கடைகள் வழியாக எத்தனையோ இழிவான பொருள்கள் வெளியேறிய வண்ணம் உள்ளன. இது ஒரு ஜடப்பொருள். அபவித்ரமானது. இந்த எண்ணத்தை எப்பொழுதும் மனதில் கொள்ளுங்கள். இதைப் பற்றிய ஒரு தெளிவான படத்தை மனதில் யாண்டும் வைத்திருங்கள். இத்தகையதொரு மனப்பயிற்சியால் நீங்கள் காமத்தையும் மனத்தையும் வெல்லலாம்.
பக்கம் - 42 . மனவெற்றிக்கு சுயதண்டனை எவ்விதம் பயன்படுகிறது என்பதைப் சுவாமி சிவானந்தா, ''மனதைக் கட்டுப்படுத்துங்கள், 'ஏ மனமே! உறுதியாயிரு. ஒரே எண்ணத்தில் உறுதியாயிரு. பரம்பொருளே ஒரே உண்மையாகும் என்று மனதிடம் சொல்லுங்கள். அது சுற்றித்திரியுமானால், அது அலையுமானால் தனிமையான ஒரு இடத்திற்கு செல்லுங்கள்.உங்கள் கன்னத்தில் நீங்களே இரண்டுமூன்று அடி கொடுங்கள். அப்பொழுது மனம் நிலைபெறும்.சுயதண்டனை மனதை அடக்குவதில் பெரிதும் உதவுகிறது. லக்ஷியத்திலிருந்து மனம் நழுவுகையில், கேட்ட எண்ணங்களை மனம் வரவேற்கையில் அதை நீங்கள் சாட்டையினாலோ கழியினாலோ அதை அடித்துவிடுவதாக பயமுறுத்துங்கள்'' என்று கூறுகிறார்.
இனி, சிவானந்தரின் நேரடி உரை. இதற்கும் 1 முதல் 318 வரை பக்கங்கள் இடப்பட்டுள்ளன.
பக்கம் 1 > மனதை அடக்கி, எல்லா எண்ணங்கள், ஆசைகளையும் அமைதிப்படுத்தி உயர்த்துவது என்பது மனிதனை எதிநோக்கியுள்ள மிகப் பெரிய பிரச்சனையாகும். மனதை அடக்கிவிட்டால் அவனை அரசர்க்கு அரசனாகக் கருதலாம்.
பக்கம் - 5 > ஆன்மீகத்தின் முதற்படியே மன அடக்கம்தான். மனதை அடக்குதல் என்பது உலகை வெல்வதற்கு நிகர். தன்னை வெல்லுதல் அல்லது மனதை வெல்லுதலே அனைத்திலும் உயர்ந்த வெற்றியாகும்.
பக்கம் - 9 .> மனதை இல்லாதாக்க மற்றொரு முறை வைராக்கியமாகும். புலன் வாழ்க்கையில் உள்ள குறைகளைக் கண்டுபிடித்து அதில் ஒரு ருசியின்மையை உண்டாக்கிக் கொள்வதாகும். பொருள்கள் அழிபவை. புலன் இன்பம் தற்காலிகமானது, பொய்யானது.
மனதைப் பொருள்களில் இருந்து அகற்றவும். அகற்றி பகவானுடன் சேர்க்கவும்.
ஆசையைத் துறத்தல் வாசனாக்ஷயமாகிறது. இது மனோ நாசத்திற்கு வழி வகுக்கும். இன்பம் தரும் பொருள்களை விரும்புதல் பந்தம். அதை விடுத்தல் மோட்சம். ஆசைதான் மனதின் மிக அடிப்படை அம்சமாகும். மனமும் ஆணவமும் (யான்மை) ஒரு பொருள் இருசொற்கள் ஆகும்.
பக்கம் - 10 > எண்ணங்கள் அல்லது சங்கல்பங்களை அடக்குங்கள். கற்பனை அல்லது பகற்கனவை தவிருங்கள். அப்போது மனம் அழிந்துவிடும். சங்கல்பங்களை இல்லாதாக்குவதே மோட்சம் அல்லது விடுதலையாகும். கற்பனை இன்றேல் மனம் இல்லை. உலகம் எனும் பொய்த்தோற்றம் உங்கள் கற்பனையினாலேயே யாகும். உங்களது கற்பனை பூரணமாக நின்றுவிட்டால் அது மறைந்துவிடுகிறது.
பக்கம் - 13 > "ஓம், நான் சாட்சி மாத்திரமே. நான் யார்? நன் எண்ணமற்ற ஆத்மா. இந்தப் பொய்யான எண்ணங்கள் மற்றும் மனப் படங்களுடன் எனக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. அவை அப்படியே இருக்கட்டும். அவற்றுடன் எனக்கு சம்பந்தம் இல்லை" என்று சொல்லுங்கள். எல்லா எண்ணங்களும் மறைந்துவிடும். நெய்யற்ற விளக்கு போல மனம் அழியும்.
பக்கம் - 17 > ஒழுக்கத் தூய்மையின்றி எந்த சாதனையும் வெற்றி பெறாது. காரமான எரிச்சலூட்டும் உணவுகளை தவிருங்கள். இரவு வெகு தாமத உணவைத் தவிருங்கள். இடையிடையே கொறிக்கும் வழக்கத்தைத் தவிருங்கள்.
பக்கம் - 22 > ஒரு நாளில் மன அடக்கத்தைப் பெற்றுவிட முடியாது. ஆனால் இடையறாத பயிற்சியினாலும் தொடர்ந்த வைராக்கியத்தினாலும் வெற்றி உங்களுடையதே. உண்மையான ஒரு வீரராகுங்கள். தன்னை வெல்லுங்கள் , அதாவது மனதை வெல்லுங்கள்.
பக்கம் - 23 > அனைத்து தீமைக்கும் காரணம் "யான்" "எனது" தான். பயம், வெறுப்பு, பொறாமை, சந்தேகம், ஏமாற்றம், கோவம் போன்றவற்றின் வடிவில் தோன்றும் ஆணவத்தை அழியுங்கள்.
நெருப்பின் முன்னிலையில் இருன்பு தகதகவென ஒளிர்கிறது. இரும்பிற்கும் தனக்கென எந்தவித பிரகாசமும் கிடையாது. ஆனால் நெருப்புடன் தொடர்பு ஏற்படுகையில் அது அதைப்போல ஒளிர்கிறது. அது போல் அறிவு ஆத்மனின் ஒளியைக் கடன் வாங்கி, "நான் செய்பவன், நன் அனுபவிப்பவன்" என உணர்கிறது.
பக்கம் - 24 > மனதை அடக்கி உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் ஒழுங்குபடுத்துங்கள். மனதை கலங்காமல் வைத்திருங்கள். தீயதை நினையாதீர்கள். நீங்கள் மரணமிலாப் பெருவாழ்வினுள் புகுவீர்கள்.மனமெனும் பாம்பை அடக்கியவன் எவனோ அவனே மோட்சமெனும் சாம்ராஜ்யத்தினுள் புகுகின்றான்.
மனம் வெறுமையை வெறுக்கிறது. ஆசையைப் போலவே வெறுப்பும் குருடானது. அதே வேரைக் கொண்டது. ஆசையும் வெறுப்பும் இதயம் எனும் மரத்தில் உட்கார்ந்திருக்கும் இரு குரங்குகள். அவை இரண்டும் மரத்தை ஆட்டி அசைக்கின்ற வரை அமைதி அங்கே இராது.
பக்கம் - 26 > காமம் நிறைந்த மனம் ஆன்மாவைப் பற்றியோ கடவுளைப் பற்றியோ ஆழ்ந்த விஷயங்களையோ ஒருபொழுதும் அறிய முடியாது. புலன் வழி மனம் ஆன்மீக விஷயங்களைப் புரிந்து கொள்ளாது. தெய்வீக எண்ணங்களால் உங்கள் மனதை நிரப்புங்கள். தீய ஆசைகள் கற்றும் உணர்ச்சிகள் எழுவதை கட்டுப்படுத்துங்கள். நல்ல எண்ணங்களால் உணர்சிகளை எழுப்புங்கள். மனதில் எழும் எண்ணங்களை தொடர்ந்து கட்டுப்பாடிற்குள் வைத்திருத்தல் பயிற்சியாகும்.
பக்கம் - 27 > கடந்த எண்ணத்தின் விளைவே மனமாகும். அது நிகழ்கால சிந்தனையால் தொடர்ந்து மாற்றப்படுகிறது. பகற்கனவு, மனசுழற்சி மற்றும் நெறியற்ற எண்ணத்தால் மனதின் சக்திகள் விரயமாவதைத் தவிருங்கள். தன்னடக்கம் என்பது முதலில் மனதில் தான் ஆரம்பமாக வேண்டும். முதலில் சமம் (மன அடக்கம்) வருகிறது. அதன் பின் தமம் (புலனடக்கம்) வருகிறது. உணர்வு மனதின் (conscious mind) கீழே ஒரு பெரும் சேமிப்பு கிடங்கு போல அடி உணர்வு மனம் (subconscious mind ) பெரும் பங்கு வகிக்கிறது. அந்த அடி உணர்வு மனத்திலிருந்து தான் உங்களது ஆசைகள், தூண்டுதல்கள் மற்றும் சிதறல்கள் தோன்றுகின்றன.
உணர்வு மனம் அடி உணர்வு மனதுடன் சேர்ந்தே செயல்புரிகிறது. ஒருபொழுதும் அது மற்றதை கண்டிப்பதில்லை. உங்கள் மனம் வெறுமையாய் இருக்க வேண்டாம். வாய் மௌனத்தை விட மனோ மௌனம், இதய மௌனம் சிறந்தது. கடவுளிடம் ஓய்வைக் காணும் வரை மனித மனம் ஓய்வைக் காணாது.
பக்கம் - 28 > சித்தம் என்பது அடிஉணர்வு மனம். அதுவே மனதின் பொருள். அது நினைவின் இருப்பிடம். செயல்களின் சம்ஸ்காரங்கள் அல்லது பதிவுகள் இங்கே உள்ளன. ஆணவம் மறைந்தால் பிரபஞ்ச உணர்வு வாய்க்கிறது.
பக்கம் - 29 > மனம் குதித்துக் கூத்தாடும் குரங்கைப் போன்றது.மனம் எனும் குரங்கு முடிந்தவரை ஆடட்டும்.பொறுமையாய் இருந்து கண்காணியுங்கள். அதற்கு கொஞ்சம் அனுமதி அளியுங்கள். ஒழுங்காக தியானம் செய்ந்கள். தினம் தினம் மனதின் குதி யாட்டம் குறையும். மனதை அடக்கியவனே உண்மையில் பலவான். மனதை வெல்பவனே அனைத்து வீரர்களிலும் சிறந்தவன்.
பக்கம் - 30 > பிராணனின் மகிமையில்தான் உடல் தோலின் அழகு அடங்கியிருக்கிறது. ஆத்மனிலிருந்து வெளியாகும் ஒளியினால் தான் உடல் அழகு பெறுகிறது. பஞ்ச பூதங்களால் ஆன இந்த ஒன்பது ஓட்டைகளைகே கொண்ட நாறும் சரீரம் ஒரு ஜடவஸ்து. அபவித்ரமானது. பலவிதமான கழிவுப பொருள்கள் இதிலிருந்து சதா வெளியேறிக் கொண்டிருக்கின்றன. எப்பொழுதும் இந்த எண்ணத்தை வரவழையுங்கள். தெளிவான, விளக்கப்பட்ட,இத்தகைய உருவத்தை மனதில் கொள்ளுங்கள். இத்தகைய மனப் பயிற்சியால் நீங்கள் மனதை வெல்லமுடியும்.
பக்கம் -32 > கோவத்திலிருந்து தான் எல்லாத் தீயகுணங்களும் எழுகின்றன. நீங்கள் கோவத்தைக் கட்டுப்படுத்திவிட்டால் அனைத்து தீய குணங்களும் தாங்களாகவே மறைந்துவிடும்.
பக்கம் - 36 > சுதந்திரமாக உள்ளவர் மனதை அடக்கியவர் மட்டுமே. உண்மையான சுதந்திரம் என்பது மனம் பொருளில் இருந்து விடுபடுவதே. போர்க்களங்களில் அடையப்பெரும் வெற்றியைவிட மனதை வெல்வது சிறந்ததாகும். அமைதி உடைய மனிதன் ஆகுங்கள். உலகியல் மனிதனை உடல் வெல்கிறது. ஆனால் யோகி உடலை வெல்கிறான். மனஅடக்கம் தான் தன்னடக்கம்.
மனமானது தீய எண்ணங்களுக்கு ஆட்படாமலும், புலன் பொருள்களின் கவர்ச்சிக்கு உட்படாமலும் இருக்கையில் அது பேருண்மைகளை கிரக்கிறது. நிரந்தர அமைதியின் உரைவிடமாகிறது. தூய்மைபடுத்தப்பட்ட மனம் உங்களது சிறந்த நண்பன்.
பக்கம் - 49 > ''நான் யார்?'' என்று விசாரம் செய்யுங்கள். மானசீகமாக ஓம் ஜெபம் செய்யுங்கள். ஆத்மனில் தியானம் செய்யுங்கள். அனைத்து எண்ணங்களும் தாமாகவே மறைந்துபோம். நீங்கள் சத்சிதானந்த அத்மனில் வசிப்பீர்கள்.
தனியே அமர்ந்து மனதின் விருத்திகளைக் கவனியுங்கள். உதாசீனமாயிருங்கள் (carefree). சாட்சி மாத்திரமாயிருங்கள். விருத்திகளுடன் உங்களை ஒன்றுபடுத்திக் கொள்ளாதீர்கள். அப்பொழுது மனம் உங்களுக்கு அடங்கும்.
ஆசையாம் எரிபொருளை இல்லதாக்கிவிட்டால் எண்ணமாகிய தீ அடங்கிவிடும். சங்கல்பம் இல்லாதானால் பிரமம் மட்டுமே ஒளிரும். நட்பு, கருணை, சந்தோசம், இன்பத்தில் உதாசீனம், துன்பம், பண்பு போன்ற தெய்வீக குணங்களை வளருங்கள். நீங்கள் பூரண அமைதியைப் பெறுவீர்கள்.
கடந்த காலத்தைப் பற்றி எண்ணாதீர்கள்.எதிர் காலத்திற்கு திட்டம் வகுக்காதீர்கள். மனத்தை கோட்டை கட்ட அனுமதிக்காதீர்கள். நிகழ்காலத்தில் வாழுங்கள் (Be in present). மனமேதை விருன்பவில்லையோ அதை செய்யுங்கள்.உங்கள் ஆசைகளை பூர்த்திசெய்ய விரும்பாதீர்கள். எதையும் எதிர்பார்க்காதீர்கள். நல்ல ஆசைகளால் கேட்ட ஆசைகளை அழியுங்கள். முக்தி என்னும் ஒரே ஆழமான ஆசையால் நல்ல ஆசைகளையும் அழியுங்கள்.
பக்கம் - 70 > எண்ணம் அற்றால் உலகம் இல்லை. எண்ணங்கள், பெயர்கள், உருவங்கள் பிரிக்கமுடியாதவை. மனதின் இயல்பு புறத்தே பாய்வது. புலன்கள் பொருளுடன் தொடர்பு ஏற்படுவதால் உண்டாகும் எண்ணங்களின் மூலம் அவை இன்பத்தை நுகர முயல்கின்றன.
ஒரு பொருளுடன் மனம் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு தாவுகிறது. ஏனெனில் பொருளும் தொடர்ந்து திருப்தியை அளிக்காது. எனவே அவை அடிக்கடி தொடர்ந்து மாற்றப்படவேண்டும். இவ்வாறு மனம் அமைதியற்றிருக்கிறது. அமைதியற்ற மனதில் உலகிற்கும் புலன்களுக்கும் அப்பாற்பட்ட உண்மை அறிவு தோன்றாது. எனவேதான் எண்ணம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். பிறகு அழிக்கப்பட வேண்டும்.
பிறகு ஞானம் எழுகிறது. அது எண்ணத்திற்கு அப்பாற்பட்டது. மனதை வெல்லுங்கள். அதை உங்கள் வேலைக்காரனாக்குங்கள் அது உங்கள் எஜமானனாக அனுமதிக்காதீர்கள்.
தைரியமாய் இருங்கள். ஆண்மையுடனிருங்கள். தூண்டுதல்களுக்கு இரையாகாதீர்கள். அதைரியமடையாதீர்கள்.எழுந்திருங்கள்.
கச்சை கட்டிக்கொண்டு மனதை வெல்லுங்கள்.
நீங்கள் மனதை வென்றுவிட்டால் உங்களை புற உலகத்தால் ஒன்றும் செய்யஇயலாது.
பக்கம் - 78 > பொருள்களில் நாட்டம் கொள்ளாதீர்கள். உங்கள் தேவைகளைக் குறையுங்கள். வைராக்கியத்தை வளருங்கள். வைராக்கியம் மனதை மெலிதாக்குகிறது. அதிகமாகப் பழகாதீர்கள், அதிகமாகப் பேசாதீர்கள், அதிகமாக நடக்காதீர்கள், அதிகமாக சாப்பிடாதீர்கள், அதிகமாகத் தூங்காதீர்கள்.
உங்கள் உணர்சிகளை அடக்குங்கள். ஆசைகள் வாசனைகளை விடுங்கள். கோவம், காமத்தை அடக்குங்கள். தியானத்தின் மூலம் அசுத்த மனதை அடித்து வீழ்த்துங்கள். பூரண பிரம்மச்சரியத்தை கடைபிடியுங்கள். ஆன்மீகப் பாதையில் அரைகுறை பேச்சே கிடையாது.
பக்கம் - 84 > மனம் மிகவும் ஏமாற்றும் தன்மையது.அது உங்களை அறியாமைக் குழியில் தள்ளிவிடும். மனதின் சொல்லைக் கேட்காதீர்கள் மன ஓட்டத்திற்கு எதிராக நீந்துங்கள். மனம் தான் உங்கள கடும் பகைவன். இதை எப்பொழுதும் நினையுங்கள். இவ்விதம் மனதை நடத்துங்கள். மனதிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். எப்பொழுதும் மௌன சாட்சியாய் இருங்கள். மனம் அதன் விருத்திகளுடன் ஒன்றிவிடாதீர்கள். எப்பொழுதும் அக ஆய்வு செய்து சுய சோதனையைச் செய்யுங்கள். மனம் ஒரு திருடனைப்போல் பதுங்கும். அதனால் எந்த தீமையையும் செய்ய முடியாது. படிப்படியாக அது கட்டுக்குள் வரும். அது உங்கள் பணிவான வேலையாளாக மாறும்.
மனதுடன் ஒத்துழைகாதீர்கள். மனதை மென்மையாக்க இது தான் வழி. மனதை அடக்க இதுவே வழி. ''சினிமாவுக்கு போ'' என்று மனம் சொன்னால், ''நான் சாதனா வாரத்திற்கு தான் போவேன்'' என்று அதனிடம் சொல்லி உடனே ஆனந்த குடீருக்கு கிளம்புங்கள். '' மாமிசமும் முட்டையும் சாப்பிடு '' என்று மனம் சொன்னால் பால், பழம், சாப்பிடுங்கள், ''நாவல் செய்தித் தாள்களை படி'' என்று மனம் சொன்னால் கீதை, உபநிஷதம், கர்மயோக சாதனையைப் படியுங்கள்.
பக்கம் - 87 > அனைத்து மனித துயரங்களுக்கும் பிறப்பு இறப்புக்கும் அடிப்படைக் காரணம் அஹங்காரம் (யான்மை, ego) தான். அஹங்காரம் தன்னை உடல், மனம், பிராணன் மற்றும் புலன்களுடன் ஒன்றுபடுத்திக் கொள்கிறது. எங்கு அஹங்காரம் உண்டோ அங்கு எனது சுயநலம்,விருப்பு, வெறுப்பு, காமம், கோவம், பேராசை, வஞ்சகம், கர்வம், பொறாமை, மயக்கம், அறியாமை,ஏமாற்றுத்தனம், துடுக்குத்தனம், வாசனைகள், ஆசைகள், சங்கல்பங்கள் விருத்திகள், பூவுலக வாழ்வுடன் ஒட்டிக்கொள்ளுதல் (அபிநிவேசம்), கர்த்தா மனப்பான்மை, கர்த்ருத்வம்அனைத்தும் உண்டு.
அஹங்காரத்தை அழித்தல் என்பது மனதை அழிப்பதாகும். புலன்களை அடக்குவதும் மனம் அல்லது அஹங்காரத்தை அழிப்பதுவேயாகும்.
பிறர் மீது அதிகாரத்தையும் செல்வாக்கையும் அஹங்காரம் செலுத்த விரும்புகிறது. பட்டங்கள், பதவி, மதிப்பு, புகழ், செல்வம், வீடு, மனைவி, குழந்தைகள் ஆகியவற்றை அவன் விரும்புகிறான். அவன் கதனக்கு புகழ் தேடுகிறான். பிறரை அவன் ஆள விரும்புகிறான். யாராவது அவனது குற்றம் குறைகளைச் சுட்டிக் காட்டினால் அவன் மனம் நோகிறான். யாராவது அவனைப் புகழ்ந்தால் அவன் பெருமிதம் கொள்கிறான். அவனுக்கு ஒன்றும் தெரியாது நான் சொல்வது தான் சரி. அவன் சொல்வது முற்றிலும் தவறு. என்னைவிட அவன் கீழானவன், நான் அவனைவிட மேலானவன் என்று ஆணவம் சொல்கிறது. தன கொள்கையை பிறர் அங்கீகரிக்க வேண்டும். தன்வழியில் பிறர் வரவேண்டும்என்று அவன் விரும்புகிறான்.
அஹங்காரம் (ego அல்லது யாண்மை) அல்லது ஆணவம் என்பது மனிதனிடம் உள்ள தன்னை முன்னிறுத்தும் உணர்வாகும். பிரார்தனை மற்றும் பக்தியின் மூலம் நீங்கள் இறைவனின் அருளைப் பெற்றால் ஆணவத்தை எளிதில் அழிக்கலாம். இந்த அஹங்காரம் (I feeling) பிரபஞ்ச அஹங்காரத்தில் (cosmic I feeling) கரையும்பொழுது நீங்கள் கடவுளுடன் ஒன்றிப்பீர்கள். ஆத்மஞானம் கிட்டும். //எனக்கு எதுவும் தெரியாது, ஏதும் தெரியாது - i don't know anything, I know nothing//
பக்கம் - 93 >பக்தி மார்கத்தில் ஒரு சாதகன் பகவானிடம் சரணாகதி அல்லது தன்னை ஒப்படைப்பதன் மூலம் தனது அஹங்காரத்தை இல்லாதாக்கின்றான். ''இறைவா! நான் உன்னுடையவன். அனைத்தும் உன்னுடையதே. உனது இச்சைப்படியே நடக்கும்'' என்று அவன் சொல்கிறான். அவன் தன்னை இறைவன் கையில் உள்ள கருவியாக எண்ணுகிறான். தனது செயல்கள், அவற்றின் பயன்கள் அனைத்தையும் பகவானிடம் ஒப்படைத்துவிடுகிறான். இறைவனைத் தவிர வேறெதுவும் இல்லை. அனைத்தும் பகவானாலேயே நிகழ்கின்றன. அவனன்றி ஓரணுவும் அசையாது, அனைத்தும் இருப்பதும் அமைவதும் அவனாலேயே என்று அவன் கருதுகிறான்.
பக்கம் - 95 > வயல்களில் பாயும் தண்ணீர் அந்தந்த வயல்களின் உருவத்தை ஏற்பது போல ஒரு பொருளை நாடும் மனமும் அந்தப் பொருளின் உருவத்தை எடுத்துக் கொள்கிறது. ஒவ்வொரு பொருளும் ஒருஎண்ணமே. அது மனதிலிருந்து தொடங்கி, மனதிலேயே ஒடுங்குகிறது.
பார்ப்பவன் புலன் உறுப்புகள் மற்றும் பொருள்கள் இருந்தாலும் மனம் அவற்றுடன் சேரும் போதுதான் பொருளைப் பார்க்க முடியும். எனவே மனம் ஒரு கருவி.
பக்கம் - 98 > மனம் குரங்கைப் போன்றது. தன்னிடம் இருக்கும் பொருள்களால் அது ஒருபொழுதும் திருப்தி அடையாது. தன்னிடம் இல்லாத பொருள்களை நோக்கி அது தாவும். அதற்கு எப்பொழுதும் பன்மை தேவைப்படுகின்றது. ஒருமையை அது வெறுக்கிறது. ஒழுங்கான தியானத்தினால் இதைப் பழக்கி ஆத்ம அமிருதத்தை அதை சுவைக்க வையுங்கள்.
//ஒவ்வொரு நாளும் வாக்குறுதி மேற்கொள்ள வேண்டும். இதாவது, எந்த பெண்ணையும் கற்பனையால் நினைக்கமாட்டேன். பகல்கனவு, மனவுரையாடல் ஆகியவற்றில் ஈடுபடமாட்டேன் என்று.//
பக்கம் - 102 > உங்கள் வாக்குறுதிகளை உங்களால் காப்பாற்ற முடியாவிட்டால், புதிய வாக்குறுதிகளை உண்டாக்குங்கள். புதிய சாதகன் தனது உறுதிமொழிகளில் பல தடவை தவறுவான். அவன் மீண்டும்மீண்டும் முயலவேண்டும். கடைசியில் வெற்றி அடைவான்.
பக்கம் - 103 > அனைத்து புலன் இன்பங்களும் பொய்யானவை, முற்றிலும் அர்த்தமற்றவை, மிகவும் ஆபத்தானவை என்று திரும்பத்திரும்ப மனதுக்கு பாடம் புகட்டுங்கள். புலனின்பம் எவ்வளவு பொய்யானது, துன்பமயமானது என்று தெளிவாக எண்ணுங்கள்.எந்தநிலையிலும் அசுத்த மனதின் போதனைகளுக்கு செவி கொடுக்காதீர்கள்.
பக்கம் - 125 > ஒரு புள்ளி நிலையில் ஒரு எண்ணத்திற்கு மேல் இருக்க முடியாது. ஒருஎண்ணம் மனதைவிட்டு அகன்றால் தான் மற்றொரு எண்ணம் மனதினுள் புகமுடியும்.
யாருடைய பயிற்சியும், வைராக்கியமும் தீவிரமாக இருக்கிறதோ அவருக்கு தியானத்தில் சீக்கிரமாக வெற்றி கிட்டும்.
பக்கம் - 143 > நிறையப் படித்து, அறிந்து, கற்பித்த பின்னரும் தனது மனம் புலன்களைஅடக்காதவன்ஒருமாபெரும் முட்டாள்.
பக்கம் - 145 > மனதிற்கு சலுகை காட்டாதீர்கள். அதனுடன் கடுமையாகிருங்கள். பொறுக்கும் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். பொறுமை இச்சாசக்தியை வளர்க்கிறது.மனதையும் புலன்களையும் யார் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறானோ அவனே ஆத்ம நாயகன், ஆன்மீக சாம்ராஜ்ஜியத்தின் பேரரசன். சண்டையில் ராஜ்ஜியத்தை வெல்பவனை விட மனதை வெல்பவனே பெரியவன். மனம் கொந்தளிப்பது அழிவுக்கு அறிகுறி. மனோநாசம் முக்தி. மனதை இல்லாதாக்குங்கள் பூரணத்துவத்தை அடையுங்கள். உங்கள் சத்சிதானந்த சொரூபத்தில் நிலைத்திருங்கள்.
பக்கம் - 157 > மனம் ஒரு ஆட்டைப் போன்றது. ஆடு ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்குத் தாவுகிறது. அது எந்த செடியையும் முழுவதுமாக உண்பதில்லை. சித்தம் பன்றி போன்றது. பன்றி மலத்தில் உழல்கிறது. அது எப்பொழுதும் மோசமான விஷயங்களையே எண்ணுகின்றது. பன்றியை பலியிடுவதற்கு பதிலாக சித்தத்தைப் பலியிடுங்கள்.
பக்கம் - 169 > ''நான் பிராணன் அல்ல, புலன்கள் அல்ல' இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டவன் நான். நான் இவற்றினுடையவும்இவற்றின் செயல்களுடையவும் வெறும் சாட்சி மாத்திரமேஎ. நான் ஸத்சிதானந்த சொரூபம்'. இது மட்டுமே வேதாந்த நிர்குண தியானத்திற்கு போதுமானது. உடனேயே நீங்கள் உயர்ந்த நிலைக்குப் போய்விடுவீர்கள். இதுவே மிகச் சிறந்த சூத்திரம்.
பக்கம் - 172 > மனதில் ஏதாவது எண்ணம் எழுகையில்,''இந்த விருத்தி(எண்ணம்) ஏன் எழுந்தது? அது யாருடன் தொடர்புடையது? நான் யார்?'' என்று விசாரம் செய்யுங்கள். எல்லா எண்ணங்களும் தாமாகவே அழியும். எல்லா மனசெயலகளும் நிற்கும். மனம் உள்நோக்கித் திரும்பும். அது ஆத்மனில் நிலைபெறும். இதுவே வேதாந்தசாதனை. சாதனையில் தொடர்ந்து நீங்கள் முயலவேண்டும். எந்த வகையான எண்ணங்கள் எழுந்தாலும் ''நான் யார்'' என்ற எண்ணம் அனைத்து உலகியல் எண்ணங் களையும் அழித்துவிடும். அந்த எண்ணமும் தானே மறையும். ஆணவம் அகலும். எஞ்சுவது கேவல அஸ்தி.