இரவு வான் நோக்குவோம்...

745 views
Skip to first unread message

S.Partha sarathy

unread,
Jan 30, 2010, 10:03:52 AM1/30/10
to mint...@googlegroups.com
அனைவருக்கும் வணக்கம்..
வானவியலின் அடிப்படையான இரவு வான் நோக்குதல் ( night sky watching) குறித்து இவ்விழையில் கலந்துரையாடலாம். எனக்கு தெரிந்ததை உங்களுடன் பகிந்துகொள்ள நினைக்கின்றேன். அதைவிட அதிகமாக தங்களிடமிருதும் தெரிந்துகொள்ள விரும்புகின்றேன்.

வானம் ஒரு பரந்த ஆராய்ச்சிக்கூடம். அதில் ஆராய்சி செய்வதற்கு ஏறாளம் உள்ளன. ஆனால் அதற்கு படிப்பறிவு தேவையில்லை. யார்வேண்டுமாலும் அனுபவித்து மகிழலாம்.

தற்போது  சூரியன் மாலையில் மறைந்ததும் மேற்குவானில் மிகப்பிரகாசமாக நட்சத்திரம் போன்று தெரிவதே வியாழன் கோள் ஆகும்.
சுமார் இரவு ஏழு மணிக்குப்பிறகு கிழக்குவானில் மிகப்பிரகாசமாக சிகப்பு நிறத்தில் தெரிவதே செவ்வாய் கோள் ஆகும். இன்று முழுமதிக்கு சற்று மேலே உள்ளது.

தொடரும்...

அன்புடன்
பார்த்தசாரதி

annamalai sugumaran

unread,
Jan 30, 2010, 10:10:59 AM1/30/10
to mint...@googlegroups.com
பார்த்தாரதி வாழ்த்துக்கள்
சொல்ல்ங்கள் எல்லோரும் சேர்ந்து பார்ப்போம் !
அன்புடன்
ஏ சுகுமாரன்
2010/1/30 S.Partha sarathy <spsar...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !

srirangammohanarangan v

unread,
Jan 30, 2010, 10:18:40 AM1/30/10
to mint...@googlegroups.com
பழந்தமிழகத்தில்   இப்படி   வானை    நெடுநேரம்    உற்றுக்  கவனித்தபடியே   ஊண்  உறக்கமின்றி    இருப்பார்களாம். (இதைப்பற்றி   முன்னரே    மின் தமிழில்  ஓரிரு  ஆண்டுகளுக்கு  முன்னர்   எழுதியிருக்கிறேன்)   அன்னாருக்குக்  கணியன்  என்று  பெயர்.   கணியன்  பூங்குன்றன்    பிரபலம்.    அதுபோல்   புதுயுகக்  கணியர்களை  கணினி  வழி   உருவாக்குங்கள்.   

--

Thiruvengada Mani T.K

unread,
Jan 30, 2010, 10:45:00 AM1/30/10
to mint...@googlegroups.com

வாருங்கள் வாருங்கள் கொஞ்சநேரம் வானத்தையும் பார்த்து மகிழலாம்.

 

“சின்னவயதில் மொட்டைமாடியில் பெற்றோர் சொல்லித்தர அண்ணாந்து வேடிக்கைப் பார்த்த சமாச்சாரங்கள். அதோ அங்கே அரைவட்ட வடிவாக 5 நட்சத்திரங்களும் பக்கத்தில் மேலொன்றும் கீழொன்றுமாக இரு நட்சத்திரங்களும் தெரிகிறதே அதுதான் சப்தரிஷி மண்டலம். ஏழு பெரும் ரிஷிகளும் நட்சத்திரங்களாக மாறி வானமண்டலத்தை அலங்கரிக்கிறார்கள். அதோ அந்த 5ஆவது நட்சத்திரம் தெரிகிறதே அது தான் வசிஷ்டமகரிஷி – அதற்கு பக்கத்திலே சின்னதாக ஒட்டிக்கொண்டு இன்னொரு குட்டிநட்சத்திரம் தெரிகிறதே அதுதான் அருந்ததி. அரைவட்ட வடிவாக உள்ள 5 நட்சத்திரங்களுக்குப் பக்கத்தில் மேலொன்றும் கீழொன்றுமாக இருக்கும் இரு நட்சத்திரங்களையும் ஒரு நேர்க்கோட்டில் இணைத்துக் கீழே இழுத்தால் வடகோடியில் பிரகாசமாகத் தெரியும் ஒரு நட்சத்திரத்தில் முடிகிறதே அதுதான் துருவ நட்சத்திரம்….. ….. ……”

 

            இவையெல்லாம் சிறுவயதில் கேட்ட பாலபாடங்கள்.  இப்போதும் வானத்தையும் நட்சத்திரக் கூட்டங்களையும்  பார்த்தால் ஒரு தனி மகிழ்ச்சிதான். சொல்லுங்கள்….  தினம் கொஞ்சநேரம் கண்சிமிட்டும் அந்த அற்புதங்களையும் கொஞ்சம் ரசித்து ஆராயலாம்.

 

தி.மணி

 

 



2010/1/30 S.Partha sarathy <spsar...@gmail.com>

--

S.Partha sarathy

unread,
Jan 30, 2010, 12:11:55 PM1/30/10
to mint...@googlegroups.com
ஊக்குவிக்கும் அனைவருக்கும் நன்றி.
தற்போது செவ்வாய் குறித்து சில தகவல்கள்:

செவ்வாய் கோள் நேற்றுதான் (29ம் தேதி) சூரியனுக்கு நேர் எதிரே அமைந்தது (Opposition). அதாவது  சூரியன் மேற்கே மறையவும் சரியாக இது கிழக்கே உதித்தது. இச்சமயத்தில் செவ்வாய் பூமிக்கு மிகஅருகில் அமைகின்றது.
மேலும் இக்கோளினை நாம் காணும் பகுதி முழுவதும் சூரிய ஒளி படுவதால் தொலைநோக்கி வழி காண்பவர்க்கு முழு வட்டமாகத் தெரியும்.
வெறும் கண்ணால் பார்ப்பவர்க்கு மிகப்பிரகாச்மான சிகப்பு நட்சத்திரம் போன்று தெரியும். வரும் நாட்களில் பூமிக்கும் செவ்வாய்க்கும் உள்ள் தூரம் அதிகரிப்பதால் இதன் பிரகாசம் குறைந்து கொண்டே வரும். எனவே செவ்வாயைப் பார்ப்பதற்கு இதுவே சிறந்த தருனம். இது இருகின்ற விண்மீன் தொகுதி கடகம் ஆகும்.


அன்புடன்
பார்த்தசாரதி

 பி.கு.: செவ்வாய்க்கும் பூமிக்கும் தற்போது உள்ள தூரம் : சுமார் 10கோடி கி.மீ
தொலைவில் இருக்கும்போது உள்ள தூரம் : சுமார் 37 கோடி கி.மீ.
சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் : சுமார் 15 கோடி கி.மீ.


2010/1/30 Thiruvengada Mani T.K <tkt...@gmail.com>

S.Partha sarathy

unread,
Jan 30, 2010, 9:25:00 PM1/30/10
to mint...@googlegroups.com
பெரிய செவ்வாய் புரளி ( Great mars Hoax):
கடந்த மடலில் ஜன 29ம் தேதி செவ்வாய் பூமிக்கு அருகில் அமைந்த்து என்று பார்த்தோம். இவ்வாறு இவ்விரு கோள்களும் சுமார்26 மாதங்களுக்கு ( 2வருடம் 2மாதம்) ஒரு முறை அருகே அமையும். கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்டு 27ம் தேதி அதேபோல் அருகே வந்தன. ஆனால் ஒரு சிறப்புடன். என்னவென்றால்...
 சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றிவரும் பூமிக்கு அண்மைப் புள்ளி (perihelion) மற்றும் சேய்மைப்புள்ளி ( aphelion) என்பது இருப்பது போன்றே செவ்வாய்க்கும் உண்டு.ஆனால் அன்று செவ்வாய் அண்மை ப்புள்ளியிலும் பூமி சேய்மைப்புள்ளியிலும் இருந்ததால் அவற்றிர்க்கு இடையே உள்ள தொலைவு மிகமிக்க் குறைவு. என்வே ”செவ்வாய் மற்றநாட்களில் தெரிவதைவிட பெரியதாய் தெரியும்..தொலைநோக்கி வழியே பார்த்தால் அதனை நிலவு போன்று காணலாம்” என் ஒரு வானியலாள்ர் பேட்டி அளித்திருந்தார். மற்றநாட்களில் தொலைநோக்கியின் வழியே பார்த்தாலும் சிறு புள்ளியாகவே தெரியும் செவ்வாயானது அச்ச்மயத்தில் வட்டமான தட்டு போன்று தெரியும் என்பதையே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
ஆனால் ஊடங்களில் வந்த செய்தி என்னவென்றால்..
”ஆகஸ்டு மாதம் 27ம்தேதி செவ்வாயை நிலவு போன்று காணலாம்”. தொலைநோக்கி என்ற வார்த்தையை முழுங்கிவிட்டனர். விளைவு.. SMS, email என ”ஆகஸ்டு மாதம் 27ம்தேதி செவ்வாயை நிலவு போன்று காணலாம்”. என்ற செய்தி காட்டுத்தீயாய் பரவியது. ஒரு சிலரோ ஒரே இரவில் வானில் இரண்டு நிலா என்று build-up வேறு.
சரி அந்த வருடத்தோடு முடிந்த்து பிரச்சனை என்றால் பரவாயில்லை. ஆனால் ஒவ்வொரு ஆகஸ்டு மாதமும் இந்தப் புரளி வந்துகொண்டே இருக்கின்றது..
இந்த வருடமும் வரும்.

உண்மையில் அருகே இருக்கும் இப்பொழுது எந்த செய்தியும் கிடையாது!


அன்புடன்
பார்த்தசாரதி




2010/1/30 S.Partha sarathy <spsar...@gmail.com>

S.Partha sarathy

unread,
Jan 31, 2010, 9:54:25 AM1/31/10
to mint...@googlegroups.com
அழகிய செவ்வாய் கோளை கிழககு வானில் பார்த்துவிட்டீர்களா? வியாழன் கோள்? வியாழன் கோளை இன்னும்  பார்க்கவில்லை என்றால் சீக்கிரம் பார்த்துவிடுங்கள். ஏனெனில் இப்போது சூரியன் மறையவும் மேற்குவானில் தெரிகின்ற இக்கோள் இன்னும் சில வாரங்களில் சூரியனை நோக்கி நகர்ந்து சூரியனுக்கு பின்னால் சென்று விடும். எனவே மாலை வானிலிருந்து மறைந்துவிடும்.
வியாழன் (பிரகஸ்பதி, குரு) கோளை அடையாளம் காணுவது மிகச்சுலபம். வெள்ளி கோளுக்கு (தற்போது சூரியனுக்கு அருகில் உள்ளதால் காணஇயலாது) அடுத்தபடியாக வானில் பிரகாசமாக் இருப்பது வியாழனே ஆகும். வானம் இருள ஆரமிக்கவும் மேற்கு வானில் மிகபிரகாசமாகத்தெரியும்.
அன்புடன்
பார்த்தசாரதி


2010/1/31 S.Partha sarathy <spsar...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Jan 31, 2010, 10:27:30 AM1/31/10
to mint...@googlegroups.com
இரவில் மொட்டை மாடியில் தந்தையின் பக்கத்தில் படுத்துக்கொண்டே

கண் சிமிட்டும் நக்ஷத்திரங்களைக் கண்டு மகிழ்ந்த காலங்கள் பொன்னானவை

மொட்டை மாடிகளே காணாமல் போய்விட்டன

இப்போது வீட்டின் உள்ளே படுக்கை அறையின் உள் பக்கம் தளத்தில் ரேடியம்
பூசி வான் மண்டலத்தை செயற்கையாக உருவாக்கி வெட்ட வெளியில்
படுத்துக்கொண்டிருப்பதைப் போன்று ஒரு தோற்றம் அளிக்கிறார்கள்

மாயத்தோற்றங்களில் மனம் மகிழும் மாந்தர்கள் அதிகமாகிவிட்டனர்


திரு பார்த்தசாரதி அவர்களே நீங்கள் உண்மையான

வான் வெளி மண்டலத்தில் இருக்கும் உண்மையான கோள்களைப் பற்றிக்
கூறுங்கள் நாம் உண்மையை நோக்கி நகர்வோம்


அன்புடன்
தமிழ்த்தேனீ


31-1-10 அன்று, S.Partha sarathy <spsar...@gmail.com> எழுதியது:


--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

S.Partha sarathy

unread,
Feb 1, 2010, 10:19:22 AM2/1/10
to mint...@googlegroups.com
நன்றி தமிழ்த்தேனீ அவர்களே!
 //////வியாழன் கோளை இன்னும்  பார்க்கவில்லை என்றால் சீக்கிரம் பார்த்துவிடுங்கள். ஏனெனில் இப்போது சூரியன் மறையவும் மேற்குவானில் தெரிகின்ற இக்கோள் இன்னும் சில வாரங்களில் சூரியனை நோக்கி நகர்ந்து சூரியனுக்கு பின்னால் சென்று விடும். எனவே மாலை வானிலிருந்து மறைந்துவிடும்./////

இன்றாவது வியாழன் மற்றும் செவ்வாய் கோள்களைப் பார்த்துவிட்டீர்களா? தெரியவில்லை எனில் வியாழனை உங்கள் வீட்டில் அருகிலுள்ள கட்டங்கள் மறைக்கத்தொடங்கியிருக்கும். என்வே இருள ஆரமிக்கவும் உயரமான இடத்திலிருத்து பார்க்கவும்.
வியாழன் கோள் நாளை சுமார் மாலை 7.30ம்ணிக்கு அஸ்தமனம் ஆகிவிடும்.
அது இருக்கும் விண்மீன் தொகுதி கும்பம் ஆகும்.

அடுத்த மடலில் விண்மீன் தொகுதிகளைப்பற்றிப் பார்ப்போம்.


அன்புடன்
பார்த்தசாரதி


2010/1/31 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

S.Partha sarathy

unread,
Feb 3, 2010, 11:13:13 AM2/3/10
to mint...@googlegroups.com
அனைவருக்குமான இரவு வான் நோக்குதல்
அருமையான இரவு வான். கண்ணைப்பறிக்கும் ந்ட்சத்திரங்கள். நிலவு இல்லை எனில் வானின் அழகே தனி.... இரவு சுமார் 8 மணிக்கு மேல் வானின் முடிசூடா மன்னனாக செவ்வாய் - யார்பார்வையிலிருந்தும் தப்ப முடியாமல்..

இப்பொழுது ஒரு கேள்வி: செவ்வாய் எங்கே இருக்கின்றது? (சுமார் 8மணி என    வைத்துக்கொள்வோம்.)
பதில்: ம்ம்ம்ம்....கிழக்கு வானில் அடிவானில் இருந்து சுமார் 30டிகிரி உயரத்தில்

பார்ப்பவர் உடனடியாக அதே நேரத்தில் பார்த்தால் அங்கே இருக்கும்..இல்லையேல் வேறு ஒரு இடம் நோக்கி நகர்ந்திருக்கும்.

கேள்வி: இன்று வியாழன் எங்குள்ளது?
பதில் : மாலை சூரியன் மறைந்தபின் மேற்குஅடிவானிலிருந்து
15டிகிரி உயரத்தில் உள்ளது.

பார்ப்பவர் அதேநேரத்தில் ஒரு பத்து நாட்கள்  கழித்துப்பார்த்தால் அங்கே அது இருக்காது.

இதுவே வான் நோக்குதலின் அடிப்படைப் பிரச்சனை.
இப்பொழுது இருப்பது சிறிது நேரங்கழிந்து அங்கே இருப்பதில்லை....
இன்று இருப்பது சிறிது நாள் கழித்து இருப்பதில்லை...

அப்படியானால் ஒருவர் தான் விரும்பும் ஒரு வான் பொருளை எப்படி மற்றவர்கள் அடையாளம் காணும் வைகையில் கூறுவது?


தொடரும்...

அன்புடன்
பார்த்தசாரதி






2010/2/1 S.Partha sarathy <spsar...@gmail.com>

வினோத் ராஜன்

unread,
Feb 3, 2010, 1:04:22 PM2/3/10
to மின்தமிழ்
ஒரு குட்டி கேள்வி :-)

வீட்டில சும்மாங்கட்டி.. பொழுதுபோகலைன்னா வானத்த பார்க்குற டெலெஸ்கோப்
வாங்கனும்னா எவ்வளவு செலவாகும் ?

V

On Feb 3, 9:13 pm, "S.Partha sarathy" <spsarath...@gmail.com> wrote:
> *அனைவருக்குமான இரவு வான் நோக்குதல்*


> அருமையான இரவு வான். கண்ணைப்பறிக்கும் ந்ட்சத்திரங்கள். நிலவு இல்லை எனில்
> வானின் அழகே தனி.... இரவு சுமார் 8 மணிக்கு மேல் வானின் முடிசூடா மன்னனாக
> செவ்வாய் - யார்பார்வையிலிருந்தும் தப்ப முடியாமல்..
>

> இப்பொழுது ஒரு *கேள்வி*: செவ்வாய் எங்கே இருக்கின்றது? (சுமார் 8மணி என


> வைத்துக்கொள்வோம்.)

> *பதில்*: ம்ம்ம்ம்....கிழக்கு வானில் அடிவானில் இருந்து சுமார் 30டிகிரி


> உயரத்தில்
>
> பார்ப்பவர் உடனடியாக அதே நேரத்தில் பார்த்தால் அங்கே இருக்கும்..இல்லையேல் வேறு
> ஒரு இடம் நோக்கி நகர்ந்திருக்கும்.
>
> கேள்வி: இன்று வியாழன் எங்குள்ளது?
> பதில் : மாலை சூரியன் மறைந்தபின் மேற்குஅடிவானிலிருந்து
> 15டிகிரி உயரத்தில் உள்ளது.
>
> பார்ப்பவர் அதேநேரத்தில் ஒரு பத்து நாட்கள்  கழித்துப்பார்த்தால் அங்கே அது
> இருக்காது.
>
> இதுவே வான் நோக்குதலின் அடிப்படைப் பிரச்சனை.
> இப்பொழுது இருப்பது சிறிது நேரங்கழிந்து அங்கே இருப்பதில்லை....
> இன்று இருப்பது சிறிது நாள் கழித்து இருப்பதில்லை...
>
> அப்படியானால் ஒருவர் தான் விரும்பும் ஒரு வான் பொருளை எப்படி மற்றவர்கள்
> அடையாளம் காணும் வைகையில் கூறுவது?
>
> தொடரும்...
>
> அன்புடன்
> பார்த்தசாரதி
>

> 2010/2/1 S.Partha sarathy <spsarath...@gmail.com>


>
>
>
> > நன்றி தமிழ்த்தேனீ அவர்களே!
> >  //////வியாழன் கோளை இன்னும்  பார்க்கவில்லை என்றால் சீக்கிரம்
> > பார்த்துவிடுங்கள். ஏனெனில் இப்போது சூரியன் மறையவும் மேற்குவானில் தெரிகின்ற
> > இக்கோள் இன்னும் சில வாரங்களில் சூரியனை நோக்கி நகர்ந்து சூரியனுக்கு பின்னால்
> > சென்று விடும். எனவே மாலை வானிலிருந்து மறைந்துவிடும்./////
>
> > இன்றாவது வியாழன் மற்றும் செவ்வாய் கோள்களைப் பார்த்துவிட்டீர்களா?
> > தெரியவில்லை எனில் வியாழனை உங்கள் வீட்டில் அருகிலுள்ள கட்டங்கள்
> > மறைக்கத்தொடங்கியிருக்கும். என்வே இருள ஆரமிக்கவும் உயரமான இடத்திலிருத்து
> > பார்க்கவும்.
> > வியாழன் கோள் நாளை சுமார் மாலை 7.30ம்ணிக்கு அஸ்தமனம் ஆகிவிடும்.
> > அது இருக்கும் விண்மீன் தொகுதி கும்பம் ஆகும்.
>
> > அடுத்த மடலில் விண்மீன் தொகுதிகளைப்பற்றிப் பார்ப்போம்.
>
> > அன்புடன்
> > பார்த்தசாரதி
>

> > 2010/1/31 Tthamizth Tthenee <rkc1...@gmail.com>


>
> > இரவில் மொட்டை மாடியில்  தந்தையின் பக்கத்தில் படுத்துக்கொண்டே
>
> >> கண் சிமிட்டும்    நக்ஷத்திரங்களைக்  கண்டு  மகிழ்ந்த காலங்கள்  பொன்னானவை
>
> >> மொட்டை மாடிகளே  காணாமல் போய்விட்டன
>
> >> இப்போது   வீட்டின் உள்ளே படுக்கை அறையின்  உள் பக்கம் தளத்தில் ரேடியம்
> >> பூசி  வான்  மண்டலத்தை  செயற்கையாக  உருவாக்கி  வெட்ட வெளியில்
> >> படுத்துக்கொண்டிருப்பதைப் போன்று ஒரு  தோற்றம்  அளிக்கிறார்கள்
>
> >> மாயத்தோற்றங்களில்  மனம் மகிழும்   மாந்தர்கள்  அதிகமாகிவிட்டனர்
>
> >> திரு பார்த்தசாரதி அவர்களே  நீங்கள்  உண்மையான
>
> >> வான் வெளி மண்டலத்தில்  இருக்கும்  உண்மையான  கோள்களைப் பற்றிக்
> >> கூறுங்கள்  நாம் உண்மையை நோக்கி  நகர்வோம்
>
> >> அன்புடன்
> >> தமிழ்த்தேனீ
>

> >> 31-1-10 அன்று, S.Partha sarathy <spsarath...@gmail.com> எழுதியது:


> >> > அழகிய செவ்வாய் கோளை கிழககு வானில் பார்த்துவிட்டீர்களா? வியாழன் கோள்?
> >> வியாழன்
> >> > கோளை இன்னும்  பார்க்கவில்லை என்றால் சீக்கிரம் பார்த்துவிடுங்கள். ஏனெனில்
> >> > இப்போது சூரியன் மறையவும் மேற்குவானில் தெரிகின்ற இக்கோள் இன்னும் சில
> >> > வாரங்களில் சூரியனை நோக்கி நகர்ந்து சூரியனுக்கு பின்னால் சென்று விடும்.
> >> எனவே
> >> > மாலை வானிலிருந்து மறைந்துவிடும்.
> >> >  வியாழன் (பிரகஸ்பதி, குரு) கோளை அடையாளம் காணுவது மிகச்சுலபம். வெள்ளி
> >> > கோளுக்கு (தற்போது சூரியனுக்கு அருகில் உள்ளதால் காணஇயலாது) அடுத்தபடியாக
> >> > வானில் பிரகாசமாக் இருப்பது வியாழனே ஆகும். வானம் இருள ஆரமிக்கவும் மேற்கு
> >> > வானில் மிகபிரகாசமாகத்தெரியும்.
> >> >  அன்புடன்
> >> > பார்த்தசாரதி
>

> >> > 2010/1/31 S.Partha sarathy <spsarath...@gmail.com>


>
> >> > > பெரிய செவ்வாய் புரளி ( Great mars Hoax):
> >> > > கடந்த மடலில் ஜன 29ம் தேதி செவ்வாய் பூமிக்கு அருகில் அமைந்த்து என்று
> >> > பார்த்தோம். இவ்வாறு இவ்விரு கோள்களும் சுமார்26 மாதங்களுக்கு ( 2வருடம்
> >> > 2மாதம்) ஒரு முறை அருகே அமையும். கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்டு 27ம் தேதி
> >> அதேபோல்
> >> > அருகே வந்தன. ஆனால் ஒரு சிறப்புடன். என்னவென்றால்...
> >> > >  சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றிவரும் பூமிக்கு அண்மைப் புள்ளி
> >> > (perihelion) மற்றும் சேய்மைப்புள்ளி ( aphelion) என்பது இருப்பது போன்றே
> >> > செவ்வாய்க்கும் உண்டு.ஆனால் அன்று செவ்வாய் அண்மை ப்புள்ளியிலும் பூமி
> >> > சேய்மைப்புள்ளியிலும் இருந்ததால் அவற்றிர்க்கு இடையே உள்ள தொலைவு மிகமிக்க்
> >> > குறைவு. என்வே ”செவ்வாய் மற்றநாட்களில் தெரிவதைவிட பெரியதாய்
> >> > தெரியும்..தொலைநோக்கி
>

> ...
>
> read more »

S.Partha sarathy

unread,
Feb 3, 2010, 1:17:15 PM2/3/10
to mint...@googlegroups.com
  ///பொழுதுபோகலைன்னா வானத்த பார்க்குற டெலெஸ்கோப்
வாங்கனும்னா எவ்வளவு செலவாகும் ?///

குழந்தைகளுக்கு என்றால் சுமார் ரூ.3000 ( a small refractor type), ஓரளவு நன்றாகப் பார்க்கவேண்டுமானால் ரூ.10,000.
அன்புடன்
பார்த்த்சாரதி

2010/2/3 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>

--

Innamburan Innamburan

unread,
Feb 3, 2010, 1:51:23 PM2/3/10
to mint...@googlegroups.com
சுமாரான டெலெஸ்கோப் பத்தாயிரம் ரூபாயில் வாங்கலாம். பலவிதமான சிபாரிசுகள் செய்யலாம். முதற்கண்ணாக, காவலூர் போய், ஒரு தர்மதரிசனம் பண்ணிவிட்டு வந்தால், ஆர்வம் மிகும். 
இன்னம்பூரான்

2010/2/3 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>
ஒரு குட்டி கேள்வி :-)

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
இன்னம்பூரான்

Subashini Tremmel

unread,
Feb 3, 2010, 2:05:08 PM2/3/10
to mint...@googlegroups.com
அருமையான் வித்தியாசமான இழை. தொடருங்கள். சிறப்பாக உள்ளது.
 
அன்புடன்
சுபா

2010/2/3 S.Partha sarathy <spsar...@gmail.com>

S.Partha sarathy

unread,
Feb 4, 2010, 4:49:53 AM2/4/10
to mint...@googlegroups.com
Alert: இன்னும் ஒரு வாரத்தில் குரு( வியாழன்) சூரியனுக்கு அருகில் சென்றுவிடும். எனவே தற்போதே அதை பார்த்துவிடுங்கள். மாலை மேற்கு வானில் இருள ஆரமிக்கவும் சுமார் 6.30 க்கு மேல் பிரகாசமான நட்சத்திரம் போன்று தெரிய ஆரமிக்கும். 7.30க்கு அடிவானில் மறைந்துவிடும்.
வெறும் 5நிமிடம் மட்டும் செலவிட்டு மாடியிலிருந்து பார்க்கவும்.

குருவின் மேல் உங்களது பார்வை தவறாது விழட்டும்.!
மீண்டும் காண மாதங்கள் ஆகும்.

அன்புடன்
பார்த்தசாரதி

2010/2/4 Subashini Tremmel <ksuba...@gmail.com>

V, Dhivakar

unread,
Feb 4, 2010, 5:16:37 AM2/4/10
to mint...@googlegroups.com
குருவின் மேல் உங்களது பார்வை தவறாது விழட்டும்.!
 
குருவின் பார்வை எப்போது விழுமோ :((

 
On 2/4/10, S.Partha sarathy <spsar...@gmail.com> wrote:
Alert: இன்னும் ஒரு வாரத்தில் குரு( வியாழன்) சூரியனுக்கு அருகில் சென்றுவிடும். எனவே தற்போதே அதை பார்த்துவிடுங்கள். மாலை மேற்கு வானில் இருள ஆரமிக்கவும் சுமார் 6.30 க்கு மேல் பிரகாசமான நட்சத்திரம் போன்று தெரிய ஆரமிக்கும். 7.30க்கு அடிவானில் மறைந்துவிடும்.
வெறும் 5நிமிடம் மட்டும் செலவிட்டு மாடியிலிருந்து பார்க்கவும்.




--
Dhivakar
http://www.vamsadhara.blogspot.com
http://aduththaveedu.blogspot.com

Subashini Tremmel

unread,
Feb 4, 2010, 10:57:14 AM2/4/10
to mint...@googlegroups.com
திரு.பார்த்த சாரதி,
இங்கே (ஸ்டுட்கார்ட் - ஜெர்மனி) மாலை 5:00 மணிக்கு இருட்டி விடுகின்றதே. இப்போதெல்லாம் பனி/மழை கொட்ட தயாராக இருக்கும் இருள் மேகங்கள் நட்சதிரங்களை மறைத்துக் கொண்டு விடுகின்றன. எங்கே நான் குருவைப் பார்ப்பது..?:-)
 
சுபா
2010/2/4 S.Partha sarathy <spsar...@gmail.com>

OAGAI NATARAJAN

unread,
Feb 4, 2010, 1:09:53 PM2/4/10
to mint...@googlegroups.com
அன்பின் பார்த்தசாரதி,
 
சென்னையில் இந்தத் தொலைநோக்கிகள் எங்கு கிடைக்கும் என்று தெரியுமா? அறியத்தர வேண்டுகிறேன்.
 
சென்னை வான் நோக்குதலுக்கு அருகதையற்ற இடம் என்று எண்ணுகிறேன். இரவு வானம் தூசிகளால் மங்கலாக்கபட்டு மிகப் பிரகாசமானவை மட்டுமே கண்ணுக்குப் புலப்படுகின்றன. நீங்கள் சொன்னபடி செவ்வாயைக் கண்டுகொண்டேன். குரு பார்வை இன்னும் கிட்டவில்லை. இந்த மங்கலிலும் ஓரியன் நட்சத்திரக் கூட்டம் கண்டுகொள்ளக் கூடியதாக இருக்கிறது.
 
இன்னொரு கோரிக்கை. நமது ஜோதிட மொழியின் அஸ்வனி முதல் ரோஹினி வரையிலான 27 நட்சத்திரப் பெயர்களுக்கு இணையான ஆங்கிலப் பெயர்களை அறியத்தருமாறு வேண்டுகிறேன்.
 
அன்புடன்
 
ஓகை நடராஜன்.
 
 
 
 
 
 
 

 
2010/2/3 S.Partha sarathy <spsar...@gmail.com>

S.Partha sarathy

unread,
Feb 4, 2010, 10:40:15 PM2/4/10
to mint...@googlegroups.com
 ///சென்னையில் இந்தத் தொலைநோக்கி
கள் எங்கு கிடைக்கும் என்று தெரியுமா? அறியத்தர வேண்டுகிறேன்.////

ஐயா, சென்னையில் பேரா.தேவதாஸ் என்பவரிடம் வாங்கினேன். மலிவான விலை.அவடர் ஓர்  Amateur Astronomer.. 50 வருடங்களுக்கு முன்பே அவர் Fellow of British Royal Astronomical Society ஆனவர். உலகின் சிறந்த வானவியலாளர் Patric Moore  இடம் பாராட்டுபெற்றவர். 86 வயது இளைஞர்.
முகவ்ரி:
No 3/2, Chakrapani Road, Guindy, Chennai - 600032
+(91)-(44)-22450941

http://en.wikipedia.org/wiki/P._Devadas

2. Camera citi- for imported tesscopes. http://www.alibaba.com/member/in108517860.html

    ///நமது ஜோதிட மொழியின் அஸ்வனி முதல் ரோஹினி வரையிலான 27 நட்சத்திரப் பெயர்களுக்கு இணையான ஆங்கிலப் பெயர்களை அறியத்தருமாறு வேண்டுகிறேன்.///

கண்டிப்பாக தருகின்றேன் ஐயா. அவற்றை நேரடியாகக் காணுவதை நோக்கியே இவ்விழை நகர்கின்றது.


அன்புடன்
பார்த்தசாரதி

  



2010/2/4 OAGAI NATARAJAN <enge...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Feb 5, 2010, 5:03:36 AM2/5/10
to mint...@googlegroups.com
திரு. பட்ரிக் மூர் சுயமாகவே வானவியல் படித்து புகழ
 பெற்றவர்.


 
2010/2/5 S.Partha sarathy <spsar...@gmail.com>



--

S.Partha sarathy

unread,
Feb 5, 2010, 8:43:51 AM2/5/10
to mint...@googlegroups.com
  ///திரு. பட்ரிக் மூர் சுயமாகவே வானவியல் படித்து புகழ
 பெற்றவர்.///

ஆமாம் ஐயா. அதனால் என்னவோ அவருடைய புத்தகங்கள் என்னைப் போன்ற பொழுதுபோக்கு வானவியலில் ஆர்வமுள்ளவர்களுக்கு எளிய ஆசானாக விளங்குகின்றன.


அன்புடன்
பார்த்தசாரதி

2010/2/5 Innamburan Innamburan <innam...@googlemail.com>

S.Partha sarathy

unread,
Feb 5, 2010, 9:21:24 AM2/5/10
to mint...@googlegroups.com

////இங்கே (ஸ்டுட்கார்ட் - ஜெர்மனி) மாலை 5:00 மணிக்கு இருட்டி விடுகின்றதே. இப்போதெல்லாம் பனி/மழை கொட்ட தயாராக இருக்கும் இருள் மேகங்கள் நட்சதிரங்களை மறைத்துக் கொண்டு விடுகின்றன. எங்கே நான் குருவைப் பார்ப்பது..?:-)////

வானில் ஒரு பொருளின் தோன்றும் இடம் பார்ப்பவரின் நேரம், நாளை மட்டும்  அல்ல பார்ப்பவர் இருக்கும் இடத்தையும் பொருத்தது ஆகும் என்பதை ஞாபகப்படுத்திவிட்டீர்கள்.
உங்கள் ஊரில் சூரியன் 5 மணிக்கு மறையும் என்றால் குருவும்  6 1/2 மணிக்கெல்லாம் மறைந்துவிடும்.
 எனவே வெளிநாட்டில் இருப்பவர்கள் சூரியன் மறையும் நேரத்திலிருந்து கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். உங்களுக்கும் சாதகமாகவே சூரியனை சார்ந்து சொல்லிவருகின்றேன்.

Subashini Tremmel

unread,
Feb 5, 2010, 10:02:23 AM2/5/10
to mint...@googlegroups.com
அதிலும் ஒரு பிரச்சனை இருக்கின்றது. இங்கு வருடம் முழுதும் 5 மணிக்கு இருட்டுவதில்லை.
 
படிப்படியாக வெளிச்சம் இருக்கும் நேரம்  கூடி ஜூலை/ஆகஸ்டு மாதத்தில் இரவு 11 மணி வரை சூரிய வெளிச்சம் இருக்கும். அப்போது காலை 3:30/4 மணிக்கு பகல் தெரியத் தொடங்கிவிடும். பின்னர் செப்டம்பர் தொடங்கி பகல் நேரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும். டிசம்பர் ஜனவரியில் பகல் காலை 8:30/9:00 லிருந்து மாலை 4:30/5:00 என்ற வகையில் இருக்கும்.
-சுபா

2010/2/5 S.Partha sarathy <spsar...@gmail.com>

S.Partha sarathy

unread,
Feb 5, 2010, 10:25:12 AM2/5/10
to mint...@googlegroups.com
  ///ஜூலை/ஆகஸ்டு மாதத்தில் இரவு 11 மணி வரை சூரிய வெளிச்சம் இருக்கும்.///

அப்படியெனில் மாலை என்பது அங்கு எந்த நேரமோ?


அன்புடன்
பார்த்தசாரதி

2010/2/5 Subashini Tremmel <ksuba...@gmail.com>

N. Kannan

unread,
Feb 5, 2010, 9:57:33 PM2/5/10
to mint...@googlegroups.com
மாலையா? எப்போதும் grey-ஆக இருக்கும். நவம்பர்-டிசம்பரில் depression ஆகி
தற்கொலை செய்து கொள்வோருண்டு. உங்க ஊர் வெய்யிலைத் திட்டாதீர்கள்;-))
கொரியா வந்த பின் தான் வெயிலின் அருமை புரிகிறது. இங்கு பனிக்காலத்திலும்
நல்ல சூரிய ஒளி உண்டு. ஆனால் குளிரும் (ஊட்டி மாதிரி).

க.>

2010/2/6 S.Partha sarathy <spsar...@gmail.com>:

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Tthamizth Tthenee

unread,
Feb 6, 2010, 2:55:29 AM2/6/10
to mint...@googlegroups.com
இங்கே துபாயில் பனியால் பாதிக்கப்பட்டு
காய்ச்சலில் விழுந்து இன்றுதான் சற்றே பரவாயில்லை
இந்த துபாய்க் குளிர் எலும்பில் ஊடுருவுகிறது


சென்னை வெய்யிலின் அருமை இப்போதுதான் தெரிகிறது

அன்புடன்
தமிழ்த்தேனீ

6-2-10 அன்று, N. Kannan <navan...@gmail.com> எழுதியது:


--

Innamburan Innamburan

unread,
Feb 6, 2010, 3:24:30 AM2/6/10
to mint...@googlegroups.com
You may have a Astronomy station there.
I

2010/2/6 Tthamizth Tthenee <rkc...@gmail.com>



--

Tthamizth Tthenee

unread,
Feb 6, 2010, 3:44:17 AM2/6/10
to mint...@googlegroups.com
http://www.wunderground.com/global/stations/41194.html

அன்புடன்
தமிழ்த்தேனீ

6-2-10 அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதியது:

S.Partha sarathy

unread,
Feb 6, 2010, 11:43:15 AM2/6/10
to mint...@googlegroups.com
அனைவருக்குமான இரவு வான் நோக்குதல்:
////இதுவே வான் நோக்குதலின் அடிப்படைப் பிரச்சனை.
இப்பொழுது இருப்பது சிறிது நேரங்கழிந்து அங்கே இருப்பதில்லை....
இன்று இருப்பது சிறிது நாள் கழித்து இருப்பதில்லை...
அப்படியானால் ஒருவர் தான் விரும்பும் ஒரு வான் பொருளை எப்படி மற்றவர்கள் அடையாளம் காணும் வைகையில் கூறுவது?////

தொடருவோம்....
நீங்கள் கூர்ந்து கவனிந்து இருந்தீர்களேயானால் அனைத்து விண்மீன்களுமே கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகர்வதை உணர்ந்திருப்பீர்கள். உதாரணமாக, சீரிய இடைவெளியில் அருகருகே  மூன்று விண்மீன்கள் இருப்பதை  அறிந்திராதாவர் யாரும் (கிராமப்புரத்தில்) இருக்க இயலாது. இதைக்கொண்டு நேரத்தைக்கூற இயலும் சிலர் கூறகேட்டிருக்கின்றேன் (எவ்வாறு என்று அவர்களும் அறிந்திலர்).
இதைப்போன்றே விண்மீன் குழுக்களை நமக்கு தோன்றியவாறு கற்பனை செய்து கொண்டால் வானில் விண்மீன்களை அடையாளம் காண்பது சிறிது சுலபம் ஆகிவிடும் அல்லவா?

இன்று நில்வின் இருப்பிடத்தை அடையாளம் காண அதற்கு அருகில் இருக்கும் எதாவது பிரகாசமான விண்மீன் அல்லது விண்மீன்குழுவை கற்பனை செய்து குறித்துக்கொண்டால்  மறுநாள் நில்வு அவற்றிற்கு கிழக்கே நகர்ந்திருப்பதைக் காணலாம்.
தினமும் நீங்கள் இவ்வாறு குறித்துக்கொண்டே வந்தால் 28வது நாள் நீங்கள் துவங்கிய இடத்தின் அருகில் நிலவு அமைந்திருக்கும்!

அதாவது வானில் நிலவின் இருப்பிடத்தை அறிய 27 விண்மீன் குழுக்கள் போதுமானது!

தொடரும்....


அன்புடன்
பார்த்தசாரதி
குறிப்பு: ஒரு விண்மீன் போறாதா எதற்கு விண்மீன்குழு (asterism) என்ற கேள்வி எழலாம் அல்லவா?
பதில்:அருகில் உள்ள விண்மீன்கள் பிரகாசம் வித்தியாசம் இல்லாமல் ஒன்றுபோல் இருந்தால்?....அவற்றை எல்லாம் சேர்த்து ஒரு குழுவாக்கிவிட்டால் எளிது அன்றோ?



2010/2/4 S.Partha sarathy <spsar...@gmail.com>

S.Partha sarathy

unread,
Apr 7, 2010, 11:11:04 AM4/7/10
to mint...@googlegroups.com
///இன்னும் ஒரு வாரத்தில் குரு( வியாழன்) சூரியனுக்கு அருகில் சென்றுவிடும். எனவே தற்போதே அதை பார்த்துவிடுங்கள். மாலை மேற்கு வானில் இருள ஆரமிக்கவும் சுமார் 6.30 க்கு மேல் பிரகாசமான நட்சத்திரம் போன்று தெரிய ஆரமிக்கும். 7.30க்கு அடிவானில் மறைந்துவிடும்.

வெறும் 5நிமிடம் மட்டும் செலவிட்டு மாடியிலிருந்து பார்க்கவும்.
////

வணக்கம். இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. வியாழன் கோளை பார்த்த ஞாபகம் இருக்கின்றதா? இன்றும் மேலே கூறியவாறு பிரகாசமான நட்சத்திரம் மாலை மேற்குவனில் சூரியன் மறைந்தபின் தெரிகின்றது அல்லவா? அதுதான்... வியாழன் ..அல்ல. அது வெள்ளிக் கோள். வியாழன் கோள் இப்போது காலை கிழக்குவானில் சூரியன் உதிக்கும் முன் தெரிகின்றது. (இரண்டு மாதங்களுக்குமுன் கூறுயது போன்று அது சூரியனுக்கு கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசையில் சென்றுவிட்டது.)
வெள்ளிக்கோளுக்கு சற்று கீழே நட்சத்திரம் போன்று தெரிவது புதன் கோள் ஆகும். புதன் கோள்  கண்ணில் தென்படுவது சற்றே கடினம். சூரியனிலிருந்து ஓரளவு விலகி இருக்கும்  காலம் மட்டும் வானம் தெளிவாக இருந்தால் தென்படும். என்வேதான் ”பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது” என் சொல்லக் கேள்வி.  புதன் இவ்வார இறுதி வரை தெரியலாம்.

வெள்ளி மற்றும் புதன் ஆகியவற்றை இன்று நான் எடுத்த படத்தில் காணலாம்.

அன்புடன்
பார்த்தசாரதி


2010/2/4 S.Partha sarathy <spsar...@gmail.com>ற்
Venus-Mercury.JPG

Tthamizth Tthenee

unread,
Apr 7, 2010, 11:36:27 AM4/7/10
to mint...@googlegroups.com
மிக  அருமையான செய்திகளும்  படமும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
7-4-10 அன்று, S.Partha sarathy <spsar...@gmail.com> எழுதினார்:

OAGAI NATARAJAN

unread,
Apr 7, 2010, 12:29:59 PM4/7/10
to mint...@googlegroups.com
மிக அருமை. நாளை மாலை நான் காண முயற்சிக்கிறேன்.
 
ஓகை நடராஜன்.

2010/4/7 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

S.Partha sarathy

unread,
May 13, 2010, 11:50:05 AM5/13/10
to mint...@googlegroups.com
கடந்த மாதம் மாலையில் மேற்குவானில் இருந்த புதன் இனி காலையில் கிழக்கு வானில் தோன்றும்.
சனி மற்றும் செவ்வாய் கோள்களைக் காண இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் வான் வரைபடத்தைக் காணவும்.

அன்புடன்
பார்த்தசாரதி

2010/4/7 S.Partha sarathy <spsar...@gmail.com>
2010 05 வான்வரைபடம்.jpg

Hari Krishnan

unread,
May 13, 2010, 10:46:02 PM5/13/10
to mint...@googlegroups.com


2010/5/13 S.Partha sarathy <spsar...@gmail.com>

கடந்த மாதம் மாலையில் மேற்குவானில் இருந்த புதன் இனி காலையில் கிழக்கு வானில் தோன்றும்.
சனி மற்றும் செவ்வாய் கோள்களைக் காண இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் வான் வரைபடத்தைக் காணவும்.
அன்புடன்
பார்த்தசாரதி

நீங்கள் அனுப்பியிருக்கும் படத்தைப் பார்த்தால் மாடிக்கு உடனே ஓடத் தோன்றுகிறது.   முதல்ல உங்களுடைய ஆர்வத்தையும் நீங்கள் தொடர்ந்து மேற்கொள்ளும் முயற்சிகளையும் மனமார வாழ்த்திவிடுகிறேன்.

நாற்பது வருடங்களுக்கு முன்னால், நங்கநல்லூரில் ஆகாயம் பளிச்சிடும்.  கொத்துக் கொத்தாக நட்சத்திர மண்டலங்கள் தெள்ளத் தெளிவாகத் தெரியும்.  மணிக்குவியலுக்கு நடுவில் பட்டையடித்த புகைமண்டலத்தைப் போல ஒரு ஒளிப்பாதை பளிச்சென்றே புலப்படும்.  எத்தனையோ இரவுகள் நட்சத்திரங்களின் துணையோடு கழிந்திருக்கின்றன.

நகர வெளிச்சம் எப்போது விரிவாகத் தொடங்கியதோ அப்போதே நட்சத்திர வெளிச்சம் போய்த் தொலைந்தது.  மெர்க்குரி விளக்குகள் இருந்த காலத்திலேயே உச்சி வானத்தில் ஒண்ணேகாலடி விட்டத்துக்கு மட்டும் இடம் விட்டுவிட்டு, உச்சந்தலைச் சொட்டையைப் போல அங்கே மட்டும் கொஞ்ச கொஞ்சமாக நட்சத்திரங்கள் காட்சியளிக்கும்.  மிச்ச இடம் பூராவையும் மெர்க்குரி விளக்கின் ஒளி மங்கலாகப் படர்ந்து வியாபித்து மறைத்திருக்கும்.  ‘அனங்கவேள் செய்த ஓவியம் புகையுண்டதே போன்ற உருவாள்’ அப்படின்னு கம்பன் சீதையைப் பற்றிச் சொன்னதை அப்படியே ஆகாயத்துக்குச் சொல்லிவிடலாம்.  அப்புறம் சோடியம் வேப்பர் வந்தது.  வானம் முழுக்க மசங்கலான ஆரஞ்ச்தான்.  பகலில் நீலம், இரவில் ஆரஞ்ச் என்று வானம் நிறம் மாற்றிக்கொள்கிறது.  சோடியம் வேப்பர் வந்த நாளாக நட்சத்திரங்களோடு பழக்கம் விட்டுபோனது,

பெங்களூரில் எந்தக் குறைவும் இல்லை.  அதிகம் போனால் மேகங்கள் தெரியும்.  தேடித் தேடி, மிக முயன்று உற்றுப் பார்த்தால், பௌர்ணமி சந்திரன் தெரியும்.  பகல்வேளைகளில் ஏதோ போனப் போறது என்று சூரியன் தெரியும்.  

சோடியம் வேப்பரை ஊடுருவி வான் பார்க்க ஏதாவது வழி இருக்கிறதா?  அதுக்கு டெலஸ்கோப்பு, பயாஸ்கோப்பு எல்லாம் வாங்க வசதி இல்லாதவங்களால பாக்க முடியுமா?  இருந்தா சொல்லிக் கொடுங்க.  இல்லாட்டி பரவால்ல.  படத்தைப் பார்த்து மனசுல பாத்துக்கறேன்.  கோழிபடத்தை வரைஞ்சு வச்சுக்கொண்டு மனோரமா சோறு சாப்பிடுவாங்களே, அந்த மாதிரி. :))
--
அன்புடன்,
ஹரிகி.

S.Partha sarathy

unread,
May 16, 2010, 6:20:31 AM5/16/10
to mint...@googlegroups.com
இன்று ஞாயிறு( மே16) மாலை சூரியன் மறைந்தபின் மேற்கு வானில் பிறைநிலவிற்கு மிகமிக அருகில் வெள்ளிக் கோள் அமைந்திருக்கும் காட்சியை மறக்காமல் பார்க்கவும்.

அன்புடன்
பார்த்தசாரதி

2010/5/13 S.Partha sarathy <spsar...@gmail.com>

devoo

unread,
May 16, 2010, 3:25:16 PM5/16/10
to மின்தமிழ்
மிகவும் ப்ரகாசமாக ஒளிர்கிறது ஐயா

தேவ்

On May 16, 5:20 am, "S.Partha sarathy" <spsarath...@gmail.com> wrote:
> இன்று ஞாயிறு( மே16) மாலை சூரியன் மறைந்தபின் மேற்கு வானில் பிறைநிலவிற்கு
> மிகமிக அருகில் வெள்ளிக் கோள் அமைந்திருக்கும் காட்சியை மறக்காமல் பார்க்கவும்.
>
> அன்புடன்
> பார்த்தசாரதி
>

> 2010/5/13 S.Partha sarathy <spsarath...@gmail.com>


>
>
>
> > கடந்த மாதம் மாலையில் மேற்குவானில் இருந்த புதன் இனி காலையில் கிழக்கு வானில்
> > தோன்றும்.
> > சனி மற்றும் செவ்வாய் கோள்களைக் காண இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் வான்
> > வரைபடத்தைக் காணவும்.
>
> > அன்புடன்
> > பார்த்தசாரதி
>

> > 2010/4/7 S.Partha sarathy <spsarath...@gmail.com>


>
> > ///இன்னும் ஒரு வாரத்தில் குரு( வியாழன்) சூரியனுக்கு அருகில் சென்றுவிடும்.
> >> எனவே தற்போதே அதை பார்த்துவிடுங்கள். மாலை மேற்கு வானில் இருள ஆரமிக்கவும்
> >> சுமார் 6.30 க்கு மேல் பிரகாசமான நட்சத்திரம் போன்று தெரிய ஆரமிக்கும்.
> >> 7.30க்கு அடிவானில் மறைந்துவிடும்.
>
> >> வெறும் 5நிமிடம் மட்டும் செலவிட்டு மாடியிலிருந்து பார்க்கவும்.
> >> ////
>
> >> வணக்கம். இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. வியாழன் கோளை பார்த்த ஞாபகம்
> >> இருக்கின்றதா? இன்றும் மேலே கூறியவாறு பிரகாசமான நட்சத்திரம் மாலை மேற்குவனில்
> >> சூரியன் மறைந்தபின் தெரிகின்றது அல்லவா? அதுதான்... வியாழன் ..அல்ல. அது
> >> வெள்ளிக் கோள். வியாழன் கோள் இப்போது காலை கிழக்குவானில் சூரியன் உதிக்கும்
> >> முன் தெரிகின்றது. (இரண்டு மாதங்களுக்குமுன் கூறுயது போன்று அது சூரியனுக்கு
> >> கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசையில் சென்றுவிட்டது.)
> >> வெள்ளிக்கோளுக்கு சற்று கீழே நட்சத்திரம் போன்று தெரிவது புதன் கோள் ஆகும்.
> >> புதன் கோள்  கண்ணில் தென்படுவது சற்றே கடினம். சூரியனிலிருந்து ஓரளவு விலகி
> >> இருக்கும்  காலம் மட்டும் வானம் தெளிவாக இருந்தால் தென்படும். என்வேதான் ”பொன்
> >> கிடைத்தாலும் புதன் கிடைக்காது” என் சொல்லக் கேள்வி.  புதன் இவ்வார இறுதி வரை
> >> தெரியலாம்.
>
> >> வெள்ளி மற்றும் புதன் ஆகியவற்றை இன்று நான் எடுத்த படத்தில் காணலாம்.
>
> >> அன்புடன்
> >> பார்த்தசாரதி
>

> >> 2010/2/4 S.Partha sarathy <spsarath...@gmail.com>ற்
>
> >> *Alert: *இன்னும் ஒரு வாரத்தில் குரு( வியாழன்) சூரியனுக்கு அருகில்


> >>> சென்றுவிடும். எனவே தற்போதே அதை பார்த்துவிடுங்கள். மாலை மேற்கு வானில் இருள
> >>> ஆரமிக்கவும் சுமார் 6.30 க்கு மேல் பிரகாசமான நட்சத்திரம் போன்று தெரிய
> >>> ஆரமிக்கும். 7.30க்கு அடிவானில் மறைந்துவிடும்.
> >>> வெறும் 5நிமிடம் மட்டும் செலவிட்டு மாடியிலிருந்து பார்க்கவும்.
>

> >>> *குருவின் மேல் உங்களது பார்வை தவறாது விழட்டும்.!*


> >>> மீண்டும் காண மாதங்கள் ஆகும்.
>
> >>> அன்புடன்
> >>> பார்த்தசாரதி
>

> >>> 2010/2/4 Subashini Tremmel <ksubash...@gmail.com>


>
> >>> அருமையான் வித்தியாசமான இழை. தொடருங்கள். சிறப்பாக உள்ளது.
>
> >>>> அன்புடன்
> >>>> சுபா
>

> >>>> 2010/2/3 S.Partha sarathy <spsarath...@gmail.com>
>
> >>>> *அனைவருக்குமான இரவு வான் நோக்குதல்*


> >>>>> அருமையான இரவு வான். கண்ணைப்பறிக்கும் ந்ட்சத்திரங்கள். நிலவு இல்லை எனில்
> >>>>> வானின் அழகே தனி.... இரவு சுமார் 8 மணிக்கு மேல் வானின் முடிசூடா மன்னனாக
> >>>>> செவ்வாய் - யார்பார்வையிலிருந்தும் தப்ப முடியாமல்..
>

> >>>>> இப்பொழுது ஒரு *கேள்வி*: செவ்வாய் எங்கே இருக்கின்றது? (சுமார் 8மணி


> >>>>> என    வைத்துக்கொள்வோம்.)

> >>>>> *பதில்*: ம்ம்ம்ம்....கிழக்கு வானில் அடிவானில் இருந்து சுமார் 30டிகிரி


> >>>>> உயரத்தில்
>
> >>>>> பார்ப்பவர் உடனடியாக அதே நேரத்தில் பார்த்தால் அங்கே இருக்கும்..இல்லையேல்
> >>>>> வேறு ஒரு இடம் நோக்கி நகர்ந்திருக்கும்.
>
> >>>>> கேள்வி: இன்று வியாழன் எங்குள்ளது?
> >>>>> பதில் : மாலை சூரியன் மறைந்தபின் மேற்குஅடிவானிலிருந்து
> >>>>> 15டிகிரி உயரத்தில் உள்ளது.
>
> >>>>> பார்ப்பவர் அதேநேரத்தில் ஒரு பத்து நாட்கள்  கழித்துப்பார்த்தால் அங்கே
> >>>>> அது இருக்காது.
>
> >>>>> இதுவே வான் நோக்குதலின் அடிப்படைப் பிரச்சனை.
> >>>>> இப்பொழுது இருப்பது சிறிது நேரங்கழிந்து அங்கே இருப்பதில்லை....
> >>>>> இன்று இருப்பது சிறிது நாள் கழித்து இருப்பதில்லை...
>
> >>>>> அப்படியானால் ஒருவர் தான் விரும்பும் ஒரு வான் பொருளை எப்படி மற்றவர்கள்
> >>>>> அடையாளம் காணும் வைகையில் கூறுவது?
>
> >>>>> தொடரும்...
>
> >>>>> அன்புடன்
> >>>>> பார்த்தசாரதி
>
> >>>>>  --
> >>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >>>> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >>>> like to visit our Muthusom Blogs at:

> >>>>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> >>>> send email to minT...@googlegroups.com
> >>>> To unsubscribe from this group, send email to
> >>>> minTamil-u...@googlegroups.com
> >>>> For more options, visit this group at
> >>>>http://groups.google.com/group/minTamil
>
> --

> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com


> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

> For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil

S.Partha sarathy

unread,
Jun 13, 2010, 10:12:23 AM6/13/10
to mint...@googlegroups.com

2010 ஜூன்10 – ஜூலை9 வரை கோள்களின் நிலைகள்

 

புதன் :  ஜூன் மாத ஆரம்பத்தில் சூரியன் உதிப்பதற்கு சுமார் 70நிமிடங்கள் முன்னால் கிழக்கில் உதயமாகும். மெல்ல சூரியனை நோக்கி நகர்ந்து ஜூன் 28ம் தேதி சூரியனுக்கும் பூமிக்கும் இடையே அமைகின்றது. இக்கோளைக் காண்பதற்கு ஏற்ற காலம் ஜூன் முதல் வார கால காலைப்பொழுது ஆகும். இது ரிஷபத்திலிருந்து கடக விண்மீன் தொகுதிக்கு நகர்கின்றது.

வெள்ளி: மேற்கு வானில் சூரியன் மறையவும் நன்கு தெரியும். இது கடகத்திலிருந்து சிம்மம் விண்மீன் தொகுதி நோக்கி தொகுதிக்கு நகர்கின்றது.

          ஜூன் 15 அன்று வெள்ளிக் கோள் நிலவிற்கு அருகே 3.7டிகிரி வடக்கே அமைகின்றது

செவ்வாய்: மாலை சூரியன் மறந்த பின் சிம்மம் தொகுதியில் சிகப்பு நட்சத்திரம் போன்று தெரியும். பூமியிலிருந்து விலகி வருவதால் மங்கலாகிக்கொண்டே வரும். இக்கோள் ஜூன் 6ம்தேதி மகம் நட்சத்திற்கு வடக்கே மிக அருகில் 0.9டிகிரியில் தெரியும்.

வியாழன்: இது அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன்னால் கிழக்கு உச்சி வானின் அருகே மிகபிரகாசமாக நட்சத்திரம் போன்று தெரியும். இது மீனம் விண்மீன் தொகுதியில் உள்ளது.

சனி:     இரவு ஆரம்பிக்கவும் மேற்கு உச்சி வானில் தெரிய ஆரமிக்கும். இது கன்னி விண்மீன் தொகுதியில் உள்ளது..

அன்புடன்

பார்த்தசாரதி


2010/5/17 devoo <rde...@gmail.com>

S.Partha sarathy

unread,
Jun 13, 2010, 10:27:49 AM6/13/10
to mint...@googlegroups.com
இம்மாத இரவு வான்வரைபடம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
அன்புடன்
பார்த்தசாரதி

2010/6/13 S.Partha sarathy <spsar...@gmail.com>
2010 06 skychart.bmp

வினோத்-VINOTH

unread,
Jun 13, 2010, 10:35:14 AM6/13/10
to mint...@googlegroups.com


2010/6/13 S.Partha sarathy <spsar...@gmail.com>

இம்மாத இரவு வான்வரைபடம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

வரைபடத்திற்கு நன்றி, ஜோதிடத்தில் இது போன்ற நிகழ் வரைபடம் இப்போதுதான் பார்க்கிறேன்


ஒரு சின்ன கேள்வி

ஒரு முக்கோணம், அதன் வால் பாகத்தில் 3, 4 நட்சத்திரத்துடன் முக்கோணம் வடக்கு பார்த்து ஒரு நட்சத்திர கூட்டம் இருக்குமே.

அதன் பெயரை தெரிந்து கொள்ளலாமா.









( இப்படத்தில் மைய நாயகன் என் ராசி :) )


--
சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
வினோத்
http://tamil2friends.com/friends/vinoth

S.Partha sarathy

unread,
Jun 13, 2010, 10:50:02 AM6/13/10
to mint...@googlegroups.com
நல்வரவு வினோத்!
//ஜோதிடத்தில் இது போன்ற நிகழ் வரைபடம் இப்போதுதான் பார்க்கிறேன்//
உண்மைதான். இது ஜோதிடதிற்கானது அன்று..  வான் நோக்குதலை பழகுவதற்கும் இரவு வானை ரசிப்பதிற்கும்.

//ஒரு முக்கோணம், அதன் வால் பாகத்தில் 3, 4 நட்சத்திரத்துடன் முக்கோணம் வடக்கு பார்த்து ஒரு நட்சத்திர கூட்டம் இருக்குமே.//

நீங்கள் சொல்லுவதை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை.

அன்புடன்
பார்த்தசாரதி

2010/6/13 வினோத்-VINOTH <vino...@gmail.com>

--

வினோத்-VINOTH

unread,
Jun 13, 2010, 4:10:09 PM6/13/10
to mint...@googlegroups.com


2010/6/13 S.Partha sarathy <spsar...@gmail.com>

நல்வரவு வினோத்!

நன்றி ஐயா
 
//ஜோதிடத்தில் இது போன்ற நிகழ் வரைபடம் இப்போதுதான் பார்க்கிறேன்//
உண்மைதான். இது ஜோதிடதிற்கானது அன்று..  வான் நோக்குதலை பழகுவதற்கும் இரவு வானை ரசிப்பதிற்கும்.

//ஒரு முக்கோணம், அதன் வால் பாகத்தில் 3, 4 நட்சத்திரத்துடன் முக்கோணம் வடக்கு பார்த்து ஒரு நட்சத்திர கூட்டம் இருக்குமே.//

நீங்கள் சொல்லுவதை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை.

N

      *

*             *
      :
      :


S

கிட்டத்தட்ட இந்த வடிவத்தில் வடக்கு நோக்கி ஒரு கூட்டம் இருக்கும்....

இதன் பெயர்...

devoo

unread,
Jun 13, 2010, 11:59:22 PM6/13/10
to மின்தமிழ்
Jun 13, 9:12 am, "S.Partha sarathy"
>>> செவ்வாய்*: மாலை சூரியன் மறந்த பின் சிம்மம் தொகுதியில் சிகப்பு நட்சத்திரம் போன்று தெரியும். பூமியிலிருந்து விலகி வருவதால் மங்கலாகிக்கொண்டே வரும். இக்கோள் ஜூன் 6ம்தேதி மகம் நட்சத்திற்கு வடக்கே மிக அருகில் 0.9டிகிரியில் தெரியும். <<<

கோசாரப்படிப் பலன் சொல்லும் சோதிடர்களும் 26/05/2010 முதல் செவ்வாய்
சிம்ம ராசியில் இருப்பதாகவே கணித்துப் பலன் கூறுகின்றனர்; மகம் ,பூரம்,
உத்திரம் முதல் பாதம் ஆகியவற்றுக்கு இதன் பாதிப்பு இருக்கும்.

கோசாரப்படி சனி கன்னியிலும், வியாழன் மீனத்திலும் தொடர்ந்து இருந்து
வருகின்றன; சோதிடக் கணிப்பின்படி பிற கோள்களும் நீங்கள் கூறும்
ராசியில்தான் உள்ளன


தேவ்

seethaalakshmi subramanian

unread,
Jun 14, 2010, 12:09:06 AM6/14/10
to mint...@googlegroups.com
தம்பி தேவிடம் சோதிடம் தெரிந்து கொள்ளலாம் போல் இருக்கின்றது
சீதாம்மா

2010/6/13 devoo <rde...@gmail.com>

devoo

unread,
Jun 14, 2010, 12:17:54 AM6/14/10
to மின்தமிழ்
Jun 13, 11:09 pm, seethaalakshmi subramanian

> > தம்பி தேவிடம் சோதிடம் தெரிந்து கொள்ளலாம் போல் இருக்கின்றது < <


கற்றுக் கொள்வதற்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்;
வலைமனை தொடங்கிப் பலன் சொல்ல ஆரம்பித்து விடுகிறேன்


தேவ்

S.Partha sarathy

unread,
Jun 14, 2010, 3:58:20 AM6/14/10
to mint...@googlegroups.com
///கோசாரப்படி சனி கன்னியிலும், வியாழன் மீனத்திலும் தொடர்ந்து இருந்து

வருகின்றன; சோதிடக் கணிப்பின்படி பிற கோள்களும் நீங்கள் கூறும்
ராசியில்தான் உள்ளன///

ஐயா, வானவியல் என்பது நேரடியாக பார்த்து பின்பற்றுவது. சோதிடம் என்பது இதை அடிப்படையாக கொண்டு பிரிந்து வளர்ந்தது. எனவே,அதன் கணிப்பில் வானவியலின் சாயலைக் காணலாம், சிலநேரங்களில் விண்மீன்தொகுதியின் எல்லைகள் மட்டும் வானவியலில் இருந்து வேறுபடுவது உண்டு. எனவே குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி போன்றவை மாறுபட்டு அமைவதுண்டு.


அன்புடன்
பார்த்தசாரதி

2010/6/14 devoo <rde...@gmail.com>

--

S.Partha sarathy

unread,
Jun 14, 2010, 4:12:35 AM6/14/10
to mint...@googlegroups.com
வினோத், நீங்கள் பார்த்த திசை தெற்கிலா, வடக்கிலா, உச்சியிலா எனக்கூறினால் தாங்கள் நினைப்பதை என்னால் ஓரளவு ஊகிக்க முடியும்.
அன்புடன்
பார்த்தசாரதி

2010/6/14 வினோத்-VINOTH <vino...@gmail.com>

Astrologer Vighnesh சென்னை

unread,
Jun 14, 2010, 5:32:14 AM6/14/10
to mint...@googlegroups.com
Dear Dev Sir,

எல்லையில்லாமல் பரந்து விரிந்து கிடைக்கும் இந்த பிரபஞ்சத்தில் விண் மீண்கள் இருப்பிடத்தை வானஇயல் சாஸ்திரம் ஜோதிட கணித மூலமாக நிர்னயித்து ஒரு வருடம் முன்பாக பஞ்சாங்கமாக அளித்து வருகிறார்கள்

.

தற்போது அதே பஞ்சாங்கம்

20 வருடம் முன்பாக அதாவது 2030ல் கிரக நிலைகளை ஆன்லைன் பஞ்சாங்கம் மூலமாக அறிந்து கொள்ள முடியும்.

தற்காலத்தில் அதாவது கடந்த

2 நூற்றான்டுகளாக நவீன விஞ்ஞான வளர்ச்சியால் அதி நவீன தொலைநோக்கி மூலமாக க்ரக நிலைகளை உற்று நோக்கி உறுதிப் படுத்திக்கொள்கிறார்கள்.

ஆனால் நம் முன்னோர்கள் இவை எல்லாம் இல்லாமல் வாய்பாடு மூலமாக பஞ்சாங்கம் கனிக்கும் வித்தையை அறிந்து அவ்வாறே ஒவ்வோறு வருடமும் பஞ்சாங்கம் என்ற பெயரில் நம் வீடுகளில் பவனி வந்து கொண்டு இருக்கிறது

.

இதில் என்ன விஷயம் முக்யம் என்றால் ஒவ்வொறு பஞ்சாங்கமும் க்ரக ஸ்திதிகளை வெவ்வாறாக அளித்தாலும்

(அயனாம்ஸ வித்தியாசத்தினால்) க்ரஹன சமயம் என்பது மிகவும் துல்யமாக கணிக்கப்படுவது (rigorous calculation) ஒரே நேரம் காண்பிக்கிறது. மேலும் என்ன அதிசயம் என்றால் 60 வருடமாக •(சுழற்ச்சி) முறையில் தேதி வாரியாகவும் நட்சத்திர ரீதியாகவும் மழை பெய்தால் மிச்ச மீதியுள்ள நாட்களில் எவ்வாறாக மழை பெய்யும் என ஒரு கணிதம் முறை உண்டு. மேலும் நில நடுக்கம் . விளை பொருள்கள் சுபிக்ஷ நிலை வரட்சி. நாடுகளின் ஒற்றுமை யுத்த அபாயம் போன்றவையும் ஒவ்வொறு வருடமும் கணிக்கப் படுகிறது.

astrovighnesh

chennai

I have started my new web page please visit it: http://www.astrovighnesh.com. Thank you.

2010/6/14 devoo <rde...@gmail.com>


தேவ்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
K V.Vighnesh
Chennai-93
mbl: +919382633377 or 9444961820
kvvig...@yahoo.co.in
http://astrolovighnesh.blogspot.com
http://in.groups.yahoo.com/group/Astro-Health-Remedies/join
skype: astrovighnesh

S.Partha sarathy

unread,
Jun 14, 2010, 6:52:07 AM6/14/10
to mint...@googlegroups.com
Dear vighnesh,
pl. let us discuss about astrology in sepearate heading and not in this thread.
with regareds,
S.Parthasarathy

2010/6/14 Astrologer Vighnesh சென்னை <lakshmi...@gmail.com>

வினோத்-VINOTH

unread,
Jun 14, 2010, 12:30:41 PM6/14/10
to mint...@googlegroups.com


2010/6/14 S.Partha sarathy <spsar...@gmail.com>

வினோத், நீங்கள் பார்த்த திசை தெற்கிலா, வடக்கிலா, உச்சியிலா எனக்கூறினால் தாங்கள் நினைப்பதை என்னால் ஓரளவு ஊகிக்க முடியும்.

கிட்டத்தட்ட உச்சியில்

ஆனால் சில நேரம் தென்மேற்கில் அல்லது மேற்கில், உச்சியில், இப்படி மாறிமாறி இருக்கும்
ஆனால் எப்போதுமே வடக்கு திசையை நோக்கியே இருக்கும்

இவ்வாறு



N

      *

*             *
      :
      :


S

S.Partha sarathy

unread,
Jun 14, 2010, 12:53:53 PM6/14/10
to mint...@googlegroups.com
ஓ...நீங்கள் நினைப்பது அன்னப்பறவை என்ற தொகுதி (Cygnus or Northern cross) என்று அழைப்பார்கள். இணைக்கப்பட்ட கோப்பைப் பார்த்து உறுதி செய்யவும். நீங்கள்க் கூறியது போல  இது வடக்கு திசையை கண்டுபிடிக்க உதவும் ஒரு தொகுதி.

அன்புடன்
பார்த்தசாரதி

2010/6/14 வினோத்-VINOTH <vino...@gmail.com>
2010/6/14 S.Partha sarathy <spsar...@gmail.com>

வினோத், நீங்கள் பார்த்த திசை தெற்கிலா, வடக்கிலா, உச்சியிலா எனக்கூறினால் தாங்கள் நினைப்பதை என்னால் ஓரளவு ஊகிக்க முடியும்.

கிட்டத்தட்ட உச்சியில்

ஆனால் சில நேரம் தென்மேற்கில் அல்லது மேற்கில், உச்சியில், இப்படி மாறிமாறி இருக்கும்
ஆனால் எப்போதுமே வடக்கு திசையை நோக்கியே இருக்கும் .


இவ்வாறு


N

      *

*             *
      :
      :


S

--
சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
வினோத்
http://tamil2friends.com/friends/vinoth

cygnus.jpg

வினோத்-VINOTH

unread,
Jun 14, 2010, 1:38:34 PM6/14/10
to mint...@googlegroups.com


2010/6/14 S.Partha sarathy <spsar...@gmail.com>

ஓ...நீங்கள் நினைப்பது அன்னப்பறவை என்ற தொகுதி (Cygnus or Northern cross) என்று அழைப்பார்கள். இணைக்கப்பட்ட கோப்பைப் பார்த்து உறுதி செய்யவும். நீங்கள்க் கூறியது போல  இது வடக்கு திசையை கண்டுபிடிக்க உதவும் ஒரு தொகுதி.

உறுதியாகச்சொல்ல இயலவி்ல்லை

ஏனென்றால் அந்த கூட்டத்தில் நடுவில் நட்சத்திரம் இருக்காது.

ரொம்ப நன்றிங்க, விட்டுடுவோம்.

S.Partha sarathy

unread,
Jun 25, 2010, 4:09:59 AM6/25/10
to mint...@googlegroups.com
பகுதி சந்திரகிரகணம் ஜுன் 26, 2010
பகுதி சந்திரகிரகணம் (partial lunar eclipse) நாளை சனிக்கிழமை மாலை 3.47 க்கு ஆரம்பித்து மாலை 06.28 க்கு கிரகணம் முடிவதால் தமிழ்நாட்டில் இதைக் காண இயலாது. நாளை முழுநிலவு உதிக்கும் நேரம் மாலை 06.39 மணி.ஆனால் நிலவு உதிக்கும்போது அரிநிழல் (penumbra) தெரிய வாய்ப்பு உண்டு. இதனால் நிலவின்  வடமேற்கு விளிம்பு மங்கலாகத் தெரியலாம்.. அரிநிழல் கிரகணம் முடியும் நேரம்  மாலை 7.49 மணி ஆகும்.
penumbral eclipse.JPG

இவ்வருட ஆங்கிலப்புத்தாண்டு அன்று நான் எடுத்தப்படத்தில் தென்மேற்கில் அரிநிழல் தெரிகின்றது. ஆனால் நாளை தெரியும் கிரகணத்தை தமிழ்நாட்டில் இருந்து பார்ப்போர்க்கு நிலவின் வடமேற்கு விளிம்புப் பகுதியில் அரிநிழல் தெரியும்.
தெளிவான வான் நாளை அமைய வாழ்த்துக்கள்.

அன்புடன்
பார்த்தசாரதி
குறிப்பு: புவியின் இருந்து நாம் பார்க்கும்ப்போது, நிலவின் மேற்குப் பகுதி நமக்கு கிழக்கு திசையில் உள்ளது.

penumbral eclipse.JPG

Innamburan Innamburan

unread,
Jun 25, 2010, 5:51:03 AM6/25/10
to mint...@googlegroups.com
'அரிநிழல்' நல்லதொரு மொழிபெயர்ப்பு.


2010/6/25 S.Partha sarathy <spsar...@gmail.com>
penumbral eclipse.JPG

S.Partha sarathy

unread,
Jul 10, 2010, 12:08:29 AM7/10/10
to mint...@googlegroups.com

நன்றி: துளிர் (குழந்தைகள் அறிவியல் மாதஇதழ்)


2010 ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 9 வரை வரை கோள்களின் நிலைகள்

 

புதன் :  ஜூலை மாத கடைசிவாரத்திலிருந்து மாலைவானில் புலப்பட ஆரமிக்கின்றது. ஆகஸ்டு 3ம் தேதி சூரியனிலிருந்து அதிக பட்சமாக 27 டிகிரி பிரிந்து இருப்பதால் இதனை எளிதாகக் காண இயலும்.. இது கடக விண்மீன் தொகுதிலிருந்து சிம்மம் தொகுதிக்கு நகர்கின்றது.

வெள்ளி: மேற்கு வானில் சூரியன் மறையவும் நன்கு பிரகாசமாகத் தெரியும். இக்கால கட்ட்த்தில் இது சூரியனிலிருந்து சுமார் 42 முதல் 45 டிகிரி வரை பிரிந்துள்ளது. இது சிம்மத்திலிருந்து கன்னி விண்மீன் நோக்கி தொகுதிக்கு நகர்கின்றது.

செவ்வாய்: மாலை சூரியன் மறந்த பின் சிம்மம் தொகுதியில் சிகப்பு நட்சத்திரம் போன்று தெரியும். பூமியிலிருந்து விலகி வருவதால் மங்கலாகிக்கொண்டே வரும்.

வியாழன்: இது அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன்னால் மேற்கு உச்சி வானின் அருகே மிகபிரகாசமாக நட்சத்திரம் போன்று தெரியும். தற்போது நள்ளிரவிற்கு சற்று முன்னதாக உதயமாகும் இக்கோள் ஆகஸ்டு மாத ஆரம்பத்தில் மாலை சுமார் 9 மணிக்கு உதயமகின்றது.  இது மீனம் விண்மீன் தொகுதியில் உள்ளது.

சனி:     இரவு ஆரம்பிக்கவும் மேற்கு வானில் தெரிய ஆரமிக்கும். இது கன்னி விண்மீன் தொகுதியில் உள்ளது.

முக்கிய நிகழ்வுகள்:

ஜூலை 10: வெள்ளிக் கோள் மகம் நட்சட்த்திரத்திற்கு வெகு அருகே 1.1 வடக்கே அமைதல்

ஜூலை 12: அமாவாசை. முழு சூரிய கிரகணம். இந்தியாவில் இக்கிரகணம் தெரியாது.

ஜூலை 13: புதன் கோள் நிலவிற்கு அருகே 4.3 டிகிரி வடக்கே அமைதல்

ஜூலை 26 : முழுநிலவு.

ஜூலை 28: டெல்டா அக்குவாரிட்ஸ் விண்கற்களின் தூரல். மணிக்கு சுமார் 20 விண்கற்கள் கும்பம்    விண்மீன்கள் தொகுதியிலிருந்து விழுவதுபோல் தோன்றும். உச்சநிலை அதிகாலை 2மணி. நிலவு வெளிச்சம் மிகுதியினால் இம்முறை எண்ணிக்கை குறைவாகத் தெரியலாம்.

ஜூலை 28 : நிலவு கேட்டை நட்சத்திரத்திற்கு அருகே 1.3 டிகிரி வடக்கே அமைதல்

ஆகஸ்டு 2:  செவ்வாய் சனிக்கு தெற்கே சுமார் 2 டிகிரியில் அமைதல்

ஆகஸ்டு 3: புதன் சூரியனிலிருந்து அதிகபட்சமாக 27 டிகிரி பிரிந்து இருத்ட்தல். புதன்னைப் பார்ப்பதற்கு சிறந்த தருணம்.



2010 07 skychart july small.jpg



அன்புடன்
சே. பார்த்தசாரதி
2010 07 skychart july small.jpg

kalairajan krishnan

unread,
Jul 11, 2010, 1:23:06 AM7/11/10
to mint...@googlegroups.com
dear partha sarathy,
thak you very much
I am very happy see the planets and stars in tamil
I am having many things about it to share
thak you again
Yours
Dr. K. Kalairajan,
Alagappa University
Karaikudi.

 
--
Dr. K. Kalairajan (Cell: 94435 01912)
Assistant Registrar
Alagappa University
KARAIKUDI -630 003
2010 07 skychart july small.jpg

S.Partha sarathy

unread,
Jul 11, 2010, 4:47:57 AM7/11/10
to mint...@googlegroups.com
நன்றி..நல்வரவு முனைவர்.கலைராஜன் அவர்களே.
அன்புடன்
சே.பார்தசார்தி

2010/7/11 kalairajan krishnan <kalair...@gmail.com>
2010 07 skychart july small.jpg

kalairajan krishnan

unread,
Jul 12, 2010, 12:38:10 AM7/12/10
to mint...@googlegroups.com
ஐயா வணக்கம்
காளைராசன் (காளையார்கோயிலில் பிறந்தவன் என்பதால்)
கலைராசஜன் அல்ல,  நன்றி
வானியல் ​தொடர்பாக  தமிழ்ச் ​செய்திகள் என்னிடம் அதிகம் உள்ளன,
கூடிய விரைவில் அவற்றைத் தங்களுடனும் எனைய மின்தமிழ் அன்பர்களுடனும் பகிர்ந்து ​கொள்ள ஆவலாய் உள்ளேன்,
 
அன்புடன்
கி. காளைராசன்

 
2010 07 skychart july small.jpg

s.bala subramani B+ve

unread,
Jul 12, 2010, 8:48:52 AM7/12/10
to mint...@googlegroups.com
Dear Partha sarathy sir,
i am keen reader of your valuable articles,being related with integrated ocean studies for exploring our sunkenland need to contact u personally .
 
can u send ur contact number.
 
s.balasubramani B+ve

S.Partha sarathy

unread,
Jul 12, 2010, 1:31:45 PM7/12/10
to mint...@googlegroups.com
கண்டிப்பாக பால சுப்பிரமணி அவர்களே! எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியே!
 with regards,
S.Parthasarathy
mobile # :9444731336

2010/7/12 s.bala subramani B+ve <sunke...@gmail.com>

s.bala subramani B+ve

unread,
Jul 15, 2010, 6:52:18 AM7/15/10
to mint...@googlegroups.com


2010/7/12 S.Partha sarathy <spsar...@gmail.com>



--
S.Balasubramani B+ve

s.bala subramani B+ve

unread,
Jul 15, 2010, 7:05:29 AM7/15/10
to mint...@googlegroups.com
மிக்க நன்றி பார்த்தசாரதி அவர்களே

விசும்பும
வின் மீன்களும்
 எனக்கு மிகவும் பிடித்தமானது
சிறு வயதில் என் தந்தையை
மாடியில் படுத்து கொண்டு  நான் கேட்ட கேள்விகளுக்கு
இப்பொழுது தாங்கள் விடை தருகிறிர்கள்.

புவியின்  வேகத்தை அச்சின் நகர்வை
கப்பல் வெள்ளியின் மூலம் நம்மால்
அளக்க முடியுமா..

கடல்  பயணம்களில் மீனவர்களின்
விண்மீன் அறிவையும்
லட்ச தீவுகளில்
குறிப்பாக
மினிகாய் மாலுமிகளின் வான் அறிவை கண்டு வியந்து இருக்கிறேன்.

திரு ஜகந்நாதன் பிநிலன் அவர்களின் பனுவல்களை படித்த அனுபவங்களோடு
தங்களின் படிப்பித்தல் வளபடுத்திகறது.

அன்புடன்
சிவ. பாலசுப்ரமணி B+ve













S.Partha sarathy

unread,
Aug 12, 2010, 9:35:13 PM8/12/10
to mint...@googlegroups.com

நன்றி: துளிர் (குழந்தைகள் அறிவியல் மாதஇதழ்)


2010 ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 9 வரை வரை கோள்களின் நிலைகள்

சே.பார்த்தசாரதி

 

புதன் :  ஆகஸ்ட் 10தேதியிலிருந்து சூரியன் மறையவும் மேற்கு அடி வானிலிருந்து சுமார் 26டிகிரி உயரத்தில் மாலை வானில்  புதன் கோளைக் காணலாம். இது சிம்மம் தொகுதியில் உள்ளது.

வெள்ளி: மேற்கு வானில் சூரியன் மறையவும் நன்கு பிரகாசமாகத் தெரியும். இது சூரியனிலிருந்து சுமார் 42 முதல் 46 டிகிரி வரை பிரிந்துள்ளது. இது கன்னி விண்மீன் தொகுதியில் உள்ளது.

செவ்வாய்: மாலை சூரியன் மறைந்த பின் சிம்மம் தொகுதியில் சிகப்பு நட்சத்திரம் போன்று தெரியும். பூமியிலிருந்து விலகி வருவதால் மங்கலாகிக் கொண்டே வரும்.

வியாழன்: ஆகஸ்டு மாத ஆரம்பத்தில் மாலை சுமார் 9 மணிக்கு கிழக்கு வானில் உதயமாகும் இக்கோள் இம்மாத இறுதியில் சுமார் 71/2 மணிக்கு உதயமாகும். மிகப்பிரகாசமான நட்சத்திரம் போன்ற இக்கோள் மீனம் விண்மீன் தொகுதியில் உள்ளது.

சனி:             இரவு ஆரம்பிக்கவும் மேற்கு வானில் தெரிய ஆரம்பிக்கும். இது கன்னி விண்மீன் தொகுதியில் உள்ளது.

முக்கிய நிகழ்வுகள்:

ஆகஸ்டு 10:  அமாவாசை. வெள்ளிக் கோள் சனிக்கோளிற்கு 3டிகிரி தெற்கே அமைதல்

ஆகஸ்டு 12: புதன் கோள் நிலவிற்கு அருகே 4.3 டிகிரி வடக்கே அமைதல்.

பெர்சியஸ் விண்கற்கள் தூரல் – ஸ்ஃப்ட் டட்டில் வால்மீன் பாதையை பூமி கடக்கும் போது ஏற்படுகின்றது. மணிக்கு சுமார் 80 விண்கற்கள் பெர்சியஸ்    விண்மீன்கள் தொகுதியிலிருந்து விழுவதுபோல் தோன்றும். நள்ளிரவிற்குப்பின் வடகிழக்கு திசையில் இதை காணலாம்.

ஆகஸ்டு 18 : நிலவு கேட்டை நட்சத்திரத்திற்கு அருகே 2 டிகிரி வடக்கே அமைதல்

ஆகஸ்டு 20: வெள்ளி சூரியனிலிருந்து அதிகபட்ட்சமாக 46 டிகிரி பிரிந்து இருத்தல்

ஆகஸ்டு 24 : முழுநிலவு.

ஆகஸ்டு 25: காலை சுமார் 5.28 க்கு வடமேற்கு திசையிலிருந்து 5.33 வரை தென்கிழக்கு திசைநோக்கி சர்வதேச விண்வெளி                                நிலையம் ஒரு நட்சத்திரம் போன்று சீராக செல்வதை தென் தமிழ்நாட்டுப் பகுதிகளில்                                                                        காணலாம்.

செப்டம்பர் 1: வெள்ளி சித்திரை நட்சத்திரத்திற்கு 1 டிகிரி தெற்கே அருகில் அமைதல்

செப்டம்பர் 3: புதன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே அமைதல். இதன் பிறகு புதன் மெல்ல கிழக்கு வானில் தோன்ற ஆரமிக்கும்.

செப்டம்பர் 7: கிழக்கு வானில் புதன் நிலவிற்கு 2டிகிரி அருகே அமைதல்

செப்டம்பர் 8 : அமாவாசை




.   
2010 08 skychart aug small.jpg

        
2010 08 skychart aug small.jpg

kalairajan krishnan

unread,
Aug 13, 2010, 12:54:24 AM8/13/10
to mint...@googlegroups.com
ஐயா பார்த்தசாரதி அவர்களுக்கு வணக்கம்
 
நான் ​தொடர்ந்து வானத்தைப் பார்த்து மகிழும் பழக்கம் உடையவன்
ஜோதிட ராசிக்கட்டங்களின் அடிப்படையில் கிரகங்கள் இருக்கும் இடத்தை அறிந்து ​கொண்டு அவற்றைப் பார்த்து மகிழ்வேன்,  சிலபொழுது வணங்கியும் மகிழ்வேன்,
 
தங்களது இந்தத் தகவல்கள் எனக்கு உதவியாக உள்ளன,  இவற்றைக் கண்ணுறும்​போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,
 
மிக்க நன்றி
அன்பன்
கி. காளைராசன்,

--
முனைவர் கி, காளைராசன்
உதவிப் பதிவாளர்
அழகப்பா பல்கலைக்கழகம்
காரைக்குடி - 630 003
தமிழ்நாடு, India.

S.Partha sarathy

unread,
Aug 13, 2010, 1:51:59 AM8/13/10
to mint...@googlegroups.com

ஊக்குவிப்பதற்கு நன்றி ஐயா.

அன்புடன்
சே.பார்த்தசாரத்

2010/8/13 kalairajan krishnan <kalair...@gmail.com>
--

S.Partha sarathy

unread,
Sep 9, 2010, 12:55:18 PM9/9/10
to mint...@googlegroups.com

2010 செப்டம்பர் 10 முதல் அக்டோபர் 9 வரை கோள்களின் நிலைகள்

சே.பார்த்தசாரதி

நன்றி: துளிர் (குழந்தைகள் அறிவியல் மாதஇதழ்)

புதன் :          இக்காலம் முழுவவதும் கிழக்குவானில் சூரியனுக்கு சற்று முன்னதாக உதயமாகும். செப்டம்பர் மாத மூன்றாம் வார இறுதியில் விடியற்காலையில் கிழக்கு அடிவானில் தெரியும். இது சிம்மம் தொகுதியிலிருந்து கன்னி தொகுதிச் செல்கின்றது..

வெள்ளி:      மேற்கு வானில் சூரியன் மறையவும் நன்கு பிரகாசமாகத் தெரியும். இது கன்னி விண்மீன் தொகுதியிலிருந்து துலாம் தொகுதிக்குச் செல்கின்றது.

செவ்வாய்: மாலை சூரியன் மறைந்த பின் மேற்கு வானில் சிகப்பு நட்சத்திரம் போன்று தெரியும். பூமியிலிருந்து விலகி வருவதால் மங்கலாகிக் கொண்டே வரும். இதுவும் கன்னி விண்மீன் தொகுதியிலிருந்து துலாம் தொகுதிக்குச் செல்கின்றது.

வியாழன்:   இக்கோள் சூரியன் மறையவும் கிழக்கு வானில் உதயமாகும். இரவு கிழக்கு வானில் மிகப்பிரகாசமான நட்சத்திரம் போன்ற இக்கோள் மீனம் விண்மீன் தொகுதியில் உள்ளது.

சனி:             மேற்கு வானில் சூரியனுக்கு அருகில் நெருங்கி வருவதால் இதை காண்பது கடினம். இது கன்னி விண்மீன் தொகுதியில் உள்ளது.

முக்கிய நிகழ்வுகள்:

செப்டம்பர் 11 : நிலவு சித்திரை நட்சத்திரத்திற்கு அருகே 2.8 டிகிரி தெற்கே அமைதல்

செப்டம்பர் 11 : நிலவு வெள்ளிக்கு அருகே 1 டிகிரி தெற்கே அமைதல்

செப்டம்பர் 19:  புதன் காலை கிழக்குவானில் சூரியனிலிருந்து அதிகபட்சமாக 18 டிகிரி பிரிந்து இருத்தல். புதனை பார்க்க உகந்த நாள்.

செப்டம்பர் 21: வியாழன் சூரியனுக்கு  நேர் எதிரே அமைதல்

செப்டம்பர் 23:  சம இரவு பகல் நாள்

                        முழுநிலவு நாள்.

அக்டோபர் 8: அமாவாசை

அக்டோபர் 9: வெள்ளி நிலவிலிருந்து 3 டிகிரியில் அமைதல்





2010 09 skychart sep.jpg

அன்புடன்
சே.பார்த்தசாரதி


2010 09 skychart sep.jpg

S.Partha sarathy

unread,
Oct 10, 2010, 9:27:29 AM10/10/10
to mint...@googlegroups.com

2010 அக்டோபர் 10 முதல் நவம்பர் 9 வரை கோள்களின் நிலைகள்

சே.பார்த்தசாரதி


நன்றி: துளிர் (குழந்தைகள் அறிவியல் மாதஇதழ்)


புதன் :          இம்மாத ஆரம்பத்தில் கிழக்குவானில் சூரியனுக்கு சற்று முன்னதாக உதயமாகி 18ம் தேதி சூரியனுக்குப் பின்னால் செல்கின்றது. பிறகு அது மேற்கு வானில் சூரியன் மறையவும் தெரியத்தொடங்கி சூரியனிலிருந்து மெல விலகுவருகின்றது. இருப்பினும் இக்காலத்தில் சூரியனுக்கு அருகிலேயே இக்கோள் இருப்பதால் இதைக் காண்பது கடினம். இது கன்னி தொகுதியிலிருந்து துலாம் தொகுதிவழியாக விருச்சிகம் தொகுதிச் செல்கின்றது..

வெள்ளி:      இம்மாத ஆரம்பத்தில் மேற்கு வானில் சூரியன் மறையவும் நன்கு பிரகாசமாகத் தெரியும் இக்கோள் மெல்ல சூரியனை நோக்கி நகர்ந்து இம்மாத இருதியில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே அமைகின்றது. அதன்பின் கிழக்குவானில் சூரியனுக்கு சற்று முன்னதாக உதயமாகும் . இது துலாம் விண்மீன் தொகுதியிலிருந்து மீண்டும் கன்னி தொகுதிக்குச் செல்கின்றது.


செவ்வாய்: மாலை சூரியன் மறைந்த பின் மேற்கு வானில் சிகப்பு நட்சத்திரம் போன்று தெரியும். பூமியிலிருந்து விலகி வருவதால் மங்கலாகிக் கொண்டே வரும். இது துலாம் விண்மீன் தொகுதியிலிருந்து விருச்சிகம் தொகுதிக்குச் செல்கின்றது

.

வியாழன்:   இக்கோள் சூரியன் மறையவும் கிழக்கு வானில் தெரியும். இரவு கிழக்கு வானில் மிகப்பிரகாசமான நட்சத்திரம் போன்ற இக்கோள் மீனம் விண்மீன் தொகுதியிலிருந்து கும்பம் தொகுதிக்குச் செல்கின்றது


சனி:             இக்கோள் காலை கிழக்குவானில் சூரியனிலிருந்து விலகிவருவதால் இம்மாத இறுதியிலிருந்து விடிவதற்குமுன் இதைக் காண இயலும். இது கன்னி விண்மீன் தொகுதியில் உள்ளது.

யுரேனஸ்:   இது வானில் வியாழன் கோளிற்கு சுமார் 2 டிகிரி* அருகே வடகிழக்கில் இக்கோள் தற்போது உள்ளது.(படத்தைப் பார்க்கவும்). வானம் தெளிவாக இருப்பின் இதை இருகண்நோக்கி (பைனாகுலர்ஸ்) அல்லது தொலைநோக்கி மூலம் காண இயலும். அருகருகே உள்ள இவ்விருகோள்களையும் ஒரே சமயத்தில் இருகண்நோக்கியினால் எளிதில் காணலாம்.

                        *குறிப்பு:  நிலவின் விட்டம் ½ டிகிரி என நினைவில் கொண்டால் வான்பொருள்களுக்கு இடையில் தெரியும் தூரத்தை ஒப்பிடுவது எளிதாகும்.

முக்கிய நிகழ்வுகள்:

அக்டோபர் 17  :            புதன் சூரியனுக்கு நேர் பின்புறமாக அமைகின்றது.

அக்டோபர் 21:  வேட்டைக்காரன் விண்கல் தூரல்கள் (Orionids meteor shower). ஹாலி வால் நட்சத்திரத்தின் பாதையை பூமி கடக்கும் போது வால்மீனின் உதிரிகள் நம் வளிமண்டலத்தில் உராய்ந்து ஒளிக்கீற்று தூரல்கள் போல் கீழே வேகமாக விழுகின்றன. தெளிவாக வானம் இருந்தால் நள்ளிரவிற்குப் பின் குறிப்பாக அதிகாலை 3 முதல் 4 மணிவரை சுமார் 20வரை விண்கற்கள் விழுவதைக் காணலாம். இத்தூரல்களை இம்மாதம் 20 முதல் 24 தேதிவரை காண இயன்றாலும் அதிகம் தோன்றுவது 21, 22ம் தேதி  அதிகாலை ஆகும். வேட்டைக்காரன் மற்றும் மிதுனம் தொகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் அதிகம் எதிர்பார்க்கலாம். விழும் வேகம் வினாடிக்கு 66கி.மீ.! காணத்தவராதீர்.

குறிப்பு: இம்மாத காலைநேர விண்மீன்தொகுதிகளை அடையாளம் காண ஜனவரி/பிப்ரவரி மாத துளிர் இரவுவான் வரைபடத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

அக்டோபர் 23:  முழுநிலவு          

அக்டோபர் 29:   வெள்ளி பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் அமைதல்.

நவம்பர் 6:         அமாவாசை

நவம்பர் 5,6:      தெற்கு ரிஷப விண்கல் தூரல்கள் ( southern Taurid meteor shower).  ரிஷப தொகுதியின் தெற்குப் பகுதியிலிருந்து தோன்றுவதுபோல் காணலாம். இவை என்கே (Encke) வால்மீன் பாதையை பூமிகடப்பதினால் ஏற்படுகின்றது. தெற்கு  ரிஷப விண்கல் தூரல்கள் நள்ளிரவு முதல் காலை1மணிவரை சுமார் 5 விண்கற்கள் விழக்காணலாம். விழும் வேகம் வினாடிக்கு 27கி.மீ. (சற்றே மெதுவான வேகம்).

சர்வதேச விண்நிலையம் நன்கு தெரியும்  சில நாட்கள்:

அக்டோபர் 21: மாலை சுமார் 6.58க்கு மேல் தென்மேற்கிலிருந்து வடமேற்கு நோக்கி நட்சத்திரம் போன்று நகரும்போது 7.03க்கு உச்சிவான் அருகே புவியின் நிழலில் மறைந்துவிடக் காணலாம்.

அக்டோபர் 23:  மாலை சுமார் 6.15 க்கும் 6.21க்கும் இடைப்பட்ட நேரத்தில் தென்மேற்கிலிருந்து வடகிழக்கு நோக்கி  உச்சி வான் வழியே கடந்து செல்வதை தமிழகத்தில் காணலாம் .





2010 10 skychart Oct small.jpg


அன்புடன்

சே. பார்த்தசாரதி                                

2010 10 skychart Oct small.jpg

S.Partha sarathy

unread,
Nov 9, 2010, 11:56:28 AM11/9/10
to mint...@googlegroups.com

2010 11 skychart NOV.jpg


2010 நவம்பர் 10 முதல்  டிசம்பர் 9வரை கோள்களின் நிலைகள்

சே.பார்த்தசாரதி


நன்றி: துளிர் (குழந்தைகள் அறிவியல் மாதஇதழ்)


புதன் :          இம்மாத ஆரம்பத்தில் மேற்குவானில் சூரியன் மறையவும் மெல்ல அதிலிருந்து விலகி இம்மாத கடைசியில் தெரிய ஆரம்பிக்கின்றது. இது விருச்சிகம் தொகுதியிலிருந்து பாம்பாட்டி தொகுதிவழியாக தனுசு தொகுதிக்குச் செல்கின்றது.

வெள்ளி:      இம்மாத ஆரம்பத்தில் கிழக்குவானில் சூரியனுக்கு சற்று முன்னதாக இக்கோள் உதயமாகும் . பிறகு இது சூரியனிலிருந்து விலகி அதிகாலை வானில் நன்கு பிரகாசமாகத் தெரிய ஆரம்பிக்கின்றது. இக்காலம் முழுவதும் கன்னி விண்மீன் தொகுதியில் உள்ளது.

செவ்வாய்: மாலை சூரியன் மறைந்த பின் மேற்கு வானில் சிகப்பு நட்சத்திரம் போன்று தெரியும். பூமியிலிருந்து விலகிச் செல்வதால் மங்கலாகிக் கொண்டே வருகிறது. இது விருச்சிகம் தொகுதியிலிருந்து பாம்பாட்டி தொகுதிவழியாக தனுசு தொகுதிச் செல்கின்றது.

வியாழன்:   இக்கோள் சூரியன் மறையவும் கிழக்கு வானில் தெரியும். இரவு கிழக்கு வானில் மிகப்பிரகாசமான நட்சத்திரம் போன்ற இக்கோள் கும்பம் விண்மீன் தொகுதியில் உள்ளது.

சனி:             இக்கோள் காலை கிழக்குவானில் சூரியனிலிருந்து விலகிவருவதால் இம்மாதம் அதிகாலையில் இதைக் காணலாம் . இது கன்னி விண்மீன் தொகுதியில் உள்ளது.

யுரேனஸ்:   இது வானில் வியாழன் கோளிற்கு சுமார் 3 டிகிரி* அருகே வடகிழக்கில் இக்கோள் தற்போது உள்ளது.(படத்தைப் பார்க்கவும்). வானம் தெளிவாக இருப்பின் இதை இருகண்நோக்கி (பைனாகுலர்ஸ்) அல்லது தொலைநோக்கி மூலம் காண இயலும். அருகருகே உள்ள இவ்விருகோள்களையும் ஒரே சமயத்தில் இருகண்நோக்கியினால் எளிதில் காணலாம்.

                        *குறிப்பு:  நிலவின் விட்டம் ½ டிகிரி என நினைவில் கொண்டால் வான்பொருள்களின் தூரத்தை ஒப்பிடுவது எளிதாகும்.

முக்கிய நிகழ்வுகள்:

நவம்பர் 17      சிம்மம் விண்கல் தூரல்கள் (Leonids meteor shower).டெம்பிள்-டர்டிள் வால் நட்சத்திரத்தின் பாதையை பூமி கடக்கும் போது வால்மீனின் உதிரிகள் நம் வளிமண்டலத்தில் உராய்ந்து ஒளிக்கீற்று தூரல்கள் போல் கீழே வேகமாக விழுகின்றன. தெளிவாக வானம் இருந்தால் நள்ளிரவிற்குப் பின் மணிக்கு சுமார் 20வரை விண்கற்கள் விழுவதைக் காணலாம்

                        குறிப்பு: இம்மாத காலைநேர விண்மீன்தொகுதிகளை அடையாளம் காண பிப்ரவரி/மார்ச் மாத துளிர் இரவுவான் வரைபடத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

நவம்பர் 21:       முழுநிலவு

டிசம்பர் 1   :      அமாவாசை புதன்கோள் சூரியனிலிருந்து அதிகபட்சமாக 21 டிகிரி பிரிந்து இருப்பதால், மாலை இருள் சூழும் நேரம் இதைக் காண்பது எளிது (மாலை 6.45 – 7.00 மணி)

டிசம்பர் 5:         அமாவாசை

டிசம்பர் 7:         புதன் நிலவிலிருந்து சுமார் 1 டிகிரி தெற்கில் அமைதல்.

சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) நன்கு தெரியும்  சில நாட்கள்:

நவம்பர் 17      சென்னையில் மாலை சுமார் 6.53க்கு வடமேற்கிலிருந்து தென்கிழக்கு நோக்கி நட்சத்திரம் போன்று நகரும்போது சுமார் 4 நிமிடங்கள் கழித்து புவியின் நிழலில் மறைந்துவிடக் காணலாம். மாநிலத்தின் தெற்கே செல்ல செல்ல சில வினாடிகள் தாமதாமகவும் வடகிழக்குப் பகுதியிலிருந்தும் தோன்ற ஆரம்பிக்கும். அடிவானிலிருந்து அதிகபட்சமாக 45 டிகிரி உயரத்தில் இதைக் காணலாம்.

2010 11 skychart NOV.jpg

Innamburan Innamburan

unread,
Nov 9, 2010, 11:59:12 AM11/9/10
to mint...@googlegroups.com
Oh! Tk U, Partahasarathy.
innamburan


rajam

unread,
Nov 9, 2010, 1:11:26 PM11/9/10
to mint...@googlegroups.com
நன்றி, திரு. பார்த்தசாரதி அவர்களுக்கு.
அந்தக் காலத்தில் (1958-1961) கணித இளங்கலை வகுப்பில் நான் படித்தபோது, வானவியல் (astronomy) ஒரு பகுதிப்பாடம். அப்போதும் அதன் பிறகும் -- ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை The Hindu செய்தித்தாளில் இதே போல வான்படம் ("night sky in ...") இருக்கும். அதைத் தனியாக எடுத்துவைத்து, மொட்டை மாடியில் போய் நான் செலவழித்த நேரத்துக்கு அளவில்லை. ஒவ்வொரு மீன்-அமைப்பையும்  (constellation) கண்டுபிடிப்பது விளையாட்டாகத் தொடங்கி விருப்பமாகிப் பைத்தியமாயிற்று. எந்தவொரு கோள்மறைப்பும் (eclipse) என் கண்ணுக்குத் தப்பியதில்லை -- வைத்தவிழி வாங்காமல் பார்த்திருப்பேன்! அந்தப் பயிற்சியும் தமிழின்மேல் காதலும் சேர்ந்து என்னை உலுக்கிவிட்டன! எழுதிக் குவித்த கவிதைகள் எண்ணிலடங்கா! 
இன்றும் என்னால் அவற்றை இனம் காண முடியும். ஆனால், அமெரிக்காவில் களங்கமில்லா வானைப் பார்ப்பதும் இரவில் விண்மீன்களைக் காண்பதும் ஒரு சில இடங்களில் மட்டுமே முடியும். "விண்மீன் மழை" (meteor shower) பெய்யும் இரவுகளில் சில "தோட்டங்களில்" (parks) அல்லது மிக உயரமான கட்டிட மாடிகளில் இருந்து இந்த விண்மீன் மழையைப் பார்க்கமுடியும். ஒரே ஒருமுறை எனக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது -- நள்ளிரவில் விண்மீன் மழை கண்டது அழகான காட்சி.
தகவலுக்கு நன்றி.
அன்புடன்,
ராஜம்

s.bala subramani B+ve

unread,
Nov 10, 2010, 2:44:43 AM11/10/10
to mint...@googlegroups.com
நன்றி


 
2010/11/9 S.Partha sarathy <spsar...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
S.Balasubramani B+ve
2010 11 skychart NOV.jpg

kalairajan krishnan

unread,
Nov 10, 2010, 2:47:06 AM11/10/10
to mint...@googlegroups.com
ஐயா பார்த்தசாரதி அவர்களுக்கு வணக்கம்,

மிகவும் பயனுள்ள தகவல்க​ளைத் தந்துள்ளீர்கள்,

முக்கிய நிகழ்வுகள்:
நவம்பர் 17      சிம்மம் விண்கல் தூரல்கள் (Leonids meteor shower).டெம்பிள்-டர்டிள் வால் நட்சத்திரத்தின் பாதையை பூமி கடக்கும் போது வால்மீனின் உதிரிகள் நம் வளிமண்டலத்தில் உராய்ந்து ஒளிக்கீற்று தூரல்கள் போல் கீழே வேகமாக விழுகின்றன. தெளிவாக வானம் இருந்தால் நள்ளிரவிற்குப் பின் மணிக்கு சுமார் 20வரை விண்கற்கள் விழுவதைக் காணலாம்
அவசியம் பார்த்துவிடுகி​றேன்,  ஓரிரண்டு விண்கற்கள் விழுவ​தைத்தான் இதுவ​ரை நான் பார்த்துள்​​ளேன்,
20வ​ரை விழுவ​தைப் பார்ப்பதற்காகக் காத்திருக்கி​றேன்,

தங்களது தகவல்கள் நன்றாகவும் பயனுள்ளதாகவும் உள்ளன,
நன்றியுடன்
அன்பன்
கி.கா​ளைராசன்
--
​திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி  படியுங்கள்,
http://www.freewebs.com/thirupoovanam/

அன்னதானம் ​செய்வோம்,  கண்தானம் ​செய்வோம்.  இவ்விருதானங்களையும் சிவபெருமான் ஏற்றுக் ​கொள்கிறார்,

N. Kannan

unread,
Nov 10, 2010, 6:49:38 AM11/10/10
to mint...@googlegroups.com
தூமகேது (ஹேலீஸ் காமெட்) வந்த வருடம் நான் அமெரிக்காவில் பயணப்பட்டிருந்தேன்.

விமானம் நடுவானில் இருக்கும் போது கேப்டன் எங்களை அழைத்து தூமகேதுவைப்
பார்க்கச்சொன்னார். அது வாழ்வில் கிடைக்காத அனுபவம்!

க.>

2010/11/10 rajam <ra...@earthlink.net>:

S.Partha sarathy

unread,
Dec 9, 2010, 10:05:21 AM12/9/10
to mint...@googlegroups.com

நன்றி: துளிர் (குழந்தைகள் அறிவியல் மாதஇதழ்)



2010 12 skychart DEC smal.jpg




2010 டிசம்பர் 10 முதல்  2011  ஜனவரி  9 வரை கோள்களின் நிலைகள்

சே.பார்த்தசாரதி

புதன் :      இம்மாத ஆரம்பத்தில் மேற்குவானில் சூரியன் மறையவும் தெரிய ஆரம்பிக்கும் இக்கோள் பின்னர் சூரியனை நோக்கிச் செல்வதால் இரண்டாவது வாரத்தில் காண்பது கடினம்.. இது தனுசு தொகுதியிலிருந்து பாம்பாட்டி தொகுதிக்குச் சென்று மீண்டும் தனுசு தொகுதிக்குத் திரும்புகின்றது.

வெள்ளி:   இம்மாதத்தில் கிழக்குவானில் சூரியனுக்கு முன்னதாக உதயமாகும் இக்கோள் அதிகாலை வானில் நன்கு பிரகாசமாகத் தெரியும். இது கன்னி விண்மீன் தொகுதியிலிருந்து துலாம் தொகுதி வழியாக விருச்சிகம் தொகுதிக்குச் செல்கின்றது.

செவ்வாய்:        மாலை சூரியன் மறைந்த பின் மேற்கு அடிவானில்  மங்கலான சிகப்பு நட்சத்திரம் போன்று தெரியும் இதைக் காண்பது மிகக்கடினம். இது இக்காலம் முழுவதும் தனுசு தொகுதியில் உள்ளது.

வியாழன்:         இம்மாத ஆரம்பத்தில் சூரியன் மறையவும் உச்சி வானின் கிழக்கே தெரியும் இக்கோள் , இம்மாத இறுதியில் உச்சி வானின் மேற்கே தெரியும். இரவு வானில் மிகப்பிரகாசமான நட்சத்திரம் போன்ற இக்கோள் கும்பம் விண்மீன் தொகுதியிலிருந்து மீனம் தொகுதிக்கு நகர்கின்றது.

சனி:         நள்ளிரவிற்குப்பின் உதயமாகும் இக்கோளை அதிகாலையில் கிழக்குவானில் இம்மாதம் காணலாம் . இது கன்னி விண்மீன் தொகுதியில் உள்ளது.

யுரேனஸ்: இது வானில் வியாழன் கோளிற்கு வடகிழக்கில் சுமார் 2 டிகிரி* அருகே இக்கோள் தற்போது உள்ளது.இவை இரண்டுக்கும் உள்ள தொலைவு குறைந்து கொண்டே வந்து 0.5 டிகிரி வரை நெருங்கி வருகின்றன.(படத்தைப் பார்க்கவும்).. அருகருகே உள்ள இவ்விருகோள்களையும் ஒரே சமயத்தில் இருகண்நோக்கியினால் எளிதில் காணலாம்.

                   *குறிப்பு:  நிலவின் விட்டம் ½ டிகிரி என நினைவில் கொண்டால் வான்பொருள்களின் கோண தூரத்தை (angular distance) ஒப்பிடுவது எளிதாகும்.

முக்கிய நிகழ்வுகள்:

டிசம்பர் 13  : மிதுனம் விண்கல் தூரல்கள் (Geminids meteor shower). ஃபேதான் குறுங்கோள் உதிரிகளின் பாதையை பூமி கடக்கும் போது அவை நம் வளிமண்டலத்தில் உராய்ந்து ஒளிக்கீற்று தூரல்கள் போல் கீழே வேகமாக விழுகின்றன. தெளிவாக வானம் இருந்தால் நள்ளிரவிற்குப் பின் மணிக்கு சுமார் 120வரை மிதுனம் தொகுதியிலிருந்து விண்கற்கள் விழுவதைக் காணலாம். மிக அற்புதமானது. காணத்தவராதீர்.

                   குறிப்பு: இம்மாத காலைநேர விண்மீன்தொகுதிகளை அடையாளம் காண மார்ச்/ஏப்ரல் மாத துளிர் இரவுவான் வரைபடத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

டிசம்பர் 21:    முழுநிலவு. முழு சந்திரகிரகணம். இந்தியாவில் பகலாக இருக்கும்போது கிரகணம் நடப்பதால் இங்கு தெரியாது.

டிசம்பர் 22   : குளிர்கால சூரியன் நகராதிருத்தல் ( Winter Solstice). தெற்கு நோக்கி சென்று கொண்டிருந்த சூரியன் நின்று விட்டு வடக்கு நோக்கி நகர்கின்றது (உத்திராயணம்). சூரியன் மகரரேகைக்கு மேலாக இருத்தல். எனவே  பூமியின் வடகோளத்திற்கு குறுகிய பகல் - நீண்ட இரவு ஆகும்.

ஜனவரி 4:      குவாட்ரான்டிட்ஸ் விண்கல் தூரல்கள் (Quadrantids meteor shower). 2003EH1 என்ற குறுங்கோள் உதிரிகளின் பாதையை பூமி கடப்பதால் ஏற்படுவது. இருட்டான இடத்திலிருந்துமணிக்கு 100 வீதம் உழவன் தொகுதியிலிருந்து ( Bootes)  அதிகாலை விழக்காணலாம். காணத்தவராதீர்.

ஜனவரி 4:      அமாவாசை . பகுதி சூரிய கிரகணம். வடமேற்கு இந்தியாவில் தெரியும். தமிழ்நாட்டில் தெரியாது.

ஜனவரி 8:      வெள்ளிக் கோள் சூரியனிலிருந்து அதிகபட்சமாகப் பிரிந்து இருத்தல் (47டிகிரி)

ஜனவரி 9:      புதன் கோள் சூரியனிலிருந்து அதிகபட்சமாகப் பிரிந்து இருத்தல் (23டிகிரி). புதனை எளிதாகக் காண இயலும் நாள். 

2010 12 skychart DEC smal.jpg

kalairajan krishnan

unread,
Dec 10, 2010, 7:14:00 AM12/10/10
to mint...@googlegroups.com
ஐயா பார்த்தசாரதி அவர்களுக்கு வணக்கம்,

இந்தமாதம் முழுவதும் நல்ல ம​ழை,

சந்திரன், குரு இவர்க​ளைத் தவிர ​வேறு கிரகங்க​ளைக் கண்ணால் காண இயவில்​லை,

தங்களது இந்தப்படத்தின் உதவியால் ​​தெளிவான வானம் இருக்கும் ​போது முயன்று பார்க்கி​றேன்


தகவலுக்கு நன்றி

S.Partha sarathy

unread,
May 24, 2011, 4:58:58 AM5/24/11
to mint...@googlegroups.com
நன்றி: துளிர் (குழந்தைகள் அறிவியல் மாதஇதழ்)


2011-6-10.jpg


கோள்களின் நிலைகள்

ஜூன் 10 முதல் ஜூலை 9 வரை

சே.பார்த்தசாரதி

(நன்றி : துளிர் அறிவியல் மாத இதழ்)

 

சூரியன் உதிக்கும் முன் தெரியும் கோள்கள்:

வெள்ளி:     இம்மாத அதிகாலை விடியும் நேரத்தில் கிழக்கு அடிவானில் தெரியும். இக்கோள் சூரியனை நோக்கி வானில் நகர்வதால் இம்மாத இறுதியில் இதைக்காண்பது கடினம் ஆகும். இக்கோள் ரிஷபம் விண்மீன்தொகுதியிலிருந்து மிதுனத்திற்க்குச் செல்கிறது

செவ்வாய்:      செவ்வாய் கோள் வானில் சூரியனிலிருந்து அதிக தூரம் மேற்கு நோக்கிப் பிரிந்து வருவதால் அதிகாலை கிழக்குவானில் நன்கு தெரிய ஆரபிக்கின்றது. இக்கோள் மேஷம் தொகுதியிலிருந்து ரிஷபத்திற்கு நகர்கிறது.

வியாழன்:        இம்மாத இறுதியிலிருந்து காலைவானில் பிரகாசமான பொருள் இதுவே ஆகும்.  இதை காலை கிழக்கு வானில்  காண இயலும். இது  மேஷம் தொகுதியில் உள்ளது.

( குறிப்பு : காலை நேர விண்மீன் தொகுதிகளை அடையாளம் காண கடந்த நவம்பர் மாத துளிர் இரவு வான் வரைபடத்தை உபயோகிக்கலாம்)

 

சூரியன் மறைந்தபின் தெரியும் கோள்கள்:

புதன்:           புதன் ஜூன் மாத இரண்டாம் வாரத்தில் காலை கிழக்குவானிலிருந்து சூரியனைக் கடந்து மேற்குவானில் மாலை நேரக்கோளாக மாறுகின்றது. ஜூலை மாத முதல் வாரத்திலிருந்து வெறும் கண்களால் காணலாம். இது ரிஷபம் விண்மீன் தொகுதியிலிருந்து மிதுனம் வழியாக கடகத்திற்குச் செல்கிறது.

சனி:             இம்மாதம் மாலை இருள் சூழும் நேரத்தில் கிழக்கு உச்சிவானில் தெரியத்தொடங்கும்  இக்கோளினை நள்ளிரவு வரைக் காணலாம். இம்மாதம் முழுவதும் கன்னி விண்மீன் தொகுதியில் சித்திரை நட்சத்திரத்திற்கு சற்று 10 டிகிரி மேற்கில் காணலாம்.



அன்புடன்
சே. பார்த்தசாரதி
2010/12/10 kalairajan krishnan <kalair...@gmail.com>
--
2011-6-10.jpg

Geetha Sambasivam

unread,
May 24, 2011, 5:05:07 AM5/24/11
to mint...@googlegroups.com
நன்றி.

2011/5/24 S.Partha sarathy <spsar...@gmail.com>
நன்றி: துளிர் (குழந்தைகள் அறிவியல் மாதஇதழ்)


2011-6-10.jpg


கோள்களின் நிலைகள்

ஜூன் 10 முதல் ஜூலை 9 வரை

சே.பார்த்தசாரதி

(நன்றி : துளிர் அறிவியல் மாத இதழ்)

 

சூரியன் உதிக்கும் முன் தெரியும் கோள்கள்:

வெள்ளி:     இம்மாத அதிகாலை விடியும் நேரத்தில் கிழக்கு அடிவானில் தெரியும். இக்கோள் சூரியனை நோக்கி வானில் நகர்வதால் இம்மாத இறுதியில் இதைக்காண்பது கடினம் ஆகும். இக்கோள் ரிஷபம் விண்மீன்தொகுதியிலிருந்து மிதுனத்திற்க்குச் செல்கிறது

செவ்வாய்:      செவ்வாய் கோள் வானில் சூரியனிலிருந்து அதிக தூரம் மேற்கு நோக்கிப் பிரிந்து வருவதால் அதிகாலை கிழக்குவானில் நன்கு தெரிய ஆரபிக்கின்றது. இக்கோள் மேஷம் தொகுதியிலிருந்து ரிஷபத்திற்கு நகர்கிறது.

வியாழன்:        இம்மாத இறுதியிலிருந்து காலைவானில் பிரகாசமான பொருள் இதுவே ஆகும்.  இதை காலை கிழக்கு வானில்  காண இயலும். இது  மேஷம் தொகுதியில் உள்ளது.

( குறிப்பு : காலை நேர விண்மீன் தொகுதிகளை அடையாளம் காண கடந்த நவம்பர் மாத துளிர் இரவு வான் வரைபடத்தை உபயோகிக்கலாம்)

 

சூரியன் மறைந்தபின் தெரியும் கோள்கள்:

புதன்:           புதன் ஜூன் மாத இரண்டாம் வாரத்தில் காலை கிழக்குவானிலிருந்து சூரியனைக் கடந்து மேற்குவானில் மாலை நேரக்கோளாக மாறுகின்றது. ஜூலை மாத முதல் வாரத்திலிருந்து வெறும் கண்களால் காணலாம். இது ரிஷபம் விண்மீன் தொகுதியிலிருந்து மிதுனம் வழியாக கடகத்திற்குச் செல்கிறது.

சனி:             இம்மாதம் மாலை இருள் சூழும் நேரத்தில் கிழக்கு உச்சிவானில் தெரியத்தொடங்கும்  இக்கோளினை நள்ளிரவு வரைக் காணலாம். இம்மாதம் முழுவதும் கன்னி விண்மீன் தொகுதியில் சித்திரை நட்சத்திரத்திற்கு சற்று 10 டிகிரி மேற்கில் காணலாம்.



அன்புடன்
சே. பார்த்தசாரதி



2011-6-10.jpg

கி.காளைராசன்

unread,
May 24, 2011, 5:15:35 AM5/24/11
to mint...@googlegroups.com

Tirumurti Vasudevan

unread,
May 24, 2011, 6:38:59 AM5/24/11
to mint...@googlegroups.com
குழந்தைகளுக்கு புரிய வைக்க வான் மண்டலம் குறித்த நகர் படம் ஏதேனும் உண்டா?
சூரியன், கிரகங்கள், அவை சுற்றும் பாதை....

2011/5/24 <mintamil...@googlegroups.com>:
> இரவு வான் நோக்குவோம்...
>
> "S.Partha sarathy" <spsar...@gmail.com> May 24 02:28PM +0530 ^
>
> *நன்றி: துளிர் *(குழந்தைகள் அறிவியல் மாதஇதழ்)
>
>
> [image: 2011-6-10.jpg]
>
>
> *கோள்களின் நிலைகள்***
>
> *ஜூன் 10 முதல் ஜூலை 9 வரை*
>
> சே.பார்த்தசாரதி**

--
http://www.swaminathar.org/
http://aanmikamforyouth.blogspot.com/
http://techforelders.blogspot.com/

S.Partha sarathy

unread,
May 24, 2011, 7:31:02 AM5/24/11
to mint...@googlegroups.com
//குழந்தைகளுக்கு புரிய வைக்க வான் மண்டலம் குறித்த நகர் படம் ஏதேனும் உண்டா?
சூரியன், கிரகங்கள், அவை சுற்றும் பாதை....///

ஐயா, இவற்றைப்பற்றிய தகவல்கள் நட்சத்திரங்கள் போன்றே கொட்டிக்கிடக்கின்றன இணைய வானில். 

http://www.nasa.gov/audience/forstudents/k-4/index.html
இது போன்ற எண்ணற்ற தளங்கள்...

அன்புடன்
சே. பார்த்தசாரதி



2011/5/24 Tirumurti Vasudevan <agni...@gmail.com>

Geetha Sambasivam

unread,
May 24, 2011, 7:33:04 AM5/24/11
to mint...@googlegroups.com
நன்றி ஐயா, அருமையா இருந்தது.  மீண்டும், மீண்டும் பார்க்க வைக்கிறது.

2011/5/24 S.Partha sarathy <spsar...@gmail.com>
//குழந்தைகளுக்கு புரிய வைக்க வான் மண்டலம் குறித்த நகர் படம் ஏதேனும் உண்டா?

திவாஜி

unread,
May 26, 2011, 2:11:16 AM5/26/11
to மின்தமிழ்
ஐயா நன்றி!

On May 24, 4:31 pm, "S.Partha sarathy" <spsarath...@gmail.com> wrote:
ஐயா, இவற்றைப்பற்றிய தகவல்கள் நட்சத்திரங்கள் போன்றே கொட்டிக்கிடக்கின்றன
இணைய
> வானில்.
>

> http://www.kidsastronomy.com/solar_system.htmhttp://kids.nineplanets.org/http://www.nasa.gov/audience/forstudents/k-4/index.html

Reply all
Reply to author
Forward
0 new messages