என்ற பல்வேறு பணிகளை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் செய்துவருகிறது.
என்ற பல்வேறு இலக்குகளை நோக்கமாகக் கொண்டு எழுந்தது மக்கள் நூல் வெளியீட்டகம்.
நூற்றுக்கு மேற்பட்ட இளைய எழுத்தாளர்களும், கல்வியாளர்களும், அறிவியலாளர்களும் எழுதிய நூல்கள் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
பலதுறை வல்லுநர்களும் மத்திய அரசு, தமிழக அரசு ஆகியவற்றின் கல்வி நிலையங்களில் செல்வாக்குப் பெற்ற வல்லுநர்களும் இப்பட்டியலில் அடங்குவர். நிறுவனத்தின் நூல் வெளியீட்டோடு தொடர்புடைய தகைசான்ற எழுத்தாளர் பலர் விருதுகள் பெற்றுள்ளனர்.
ஆகிய துறைகளில் ஏறத்தாழ 2500க்கு மேற்பட்ட நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சோதிடத்தை ஏற்க சோதித்து இடம் சேருங்கள்!
சோதிடத்தைத் தெளிவு இன்றிக் கற்றுக் காசுக்கு ஆசைப்பட்டுக் கண்ட கண்ட பலன்களைக் கற்றுக்குட்டித்தனமாகச் சொல்பவர்களால்தான் சோதிடம் சறுக்குவதுண்டே தவிர, விபரமானவர்கள், துல்லியமாகக் கணிப்பவர்களால் சோதிடத்திற்குப் பெருமையே சேர்ந்திருக்கிறது. என் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் தாய் மணிமேகலை தமிழ்வாணன் சென்னையில் பிரபல மருத்துவமனை ஒன்றில் உயிர்ப் போராட்டம் நடத்தியபோது அம் மருத்துவமனையின் ஐந்து பிரிவுகளைச் சேர்ந்த தலைசிறந்த மருத்துவர்கள் என் தாயாரைக் கவனித்து வந்தார்கள். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, எப்படியும் என் தாயாரைக் காப்பாற்றுங்கள் என்றும்கூட நான் வேண்டிக் கொண்டேன்.
இவர்கள் ஒன்றுகூடிப் பேசி "சாரி, இவர்கள் பிழைக்கப்பட்டார்கள்" என்றனர்.
ஆனால் என் உள்ளுணர்வு மட்டும் இந்தச் சிறந்த மருத்துவர்களின் கருத்திற்கு மாறாக இருந்தது. தாயின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு எங்கள் குடும்ப ஜோதிடரான பாலன் நாயரிடம் சென்று காண்பித்தேன்.
அவர் "இந்த ஜாதகர் இன்டென்சிவ் கேரில் அல்லவா இருக்கிறார்" என்றார். அத்துடன் இன்னும் 11 நாளில் நார்மல் வார்டுக்கு வருவாங்க. அதிலேர்ந்து 8 நாளில் டிஸ்சார்ஜ் ஆவாங்க. இப்போது மாரக திசையே (மரண அறிகுறி) இல்லை. நிச்சயமம் பிழைப்பாங்க. அதன் பிறகு ஒன்றரை வருஷம் வாழ்வாங்க. இதற்குப் பிறகுதான் ஒரு பெரிய கண்டம் இருக்கு என்றார். அது போல் மிகச் சரியாக 11ஆவது நாள் நார்மல் வார்டுக்கு மாறி, பின்னர் 8ஆம் நாள் டிஸ்சார்ஜ் ஆகி மிகச் சரியாக ஒன்றரை ஆண்டுகளில் காலமானார்கள் என்றால் நீங்கள் நம்புவீர்களா?
மருத்துவர்களால் கைவிடப்பட்டு, சோதிடரால் நம்பிக்கையூட்டப்பட்டதால் என் தாய்க்குக் கடைசி வரை சிறப்பான கவனிப்பை அளித்தோம். பாலன் நாயரைச் சந்தித்திராவிட்டால் எங்கள் தாயை நாங்கள் என்றோ இழந்திருப்போம். தமிழகத்திலேயே சோதிட நூல்களை அதிகமாக வெளியிட்டிருக்கும் மணிமேகலைப் பிரசுர இயக்குனருக்கு அதில் நம்பிக்கை இல்லாவிடில் எப்படி?
தமிழ்நாட்டில் அதிகமான ஜோதிட நூல்களை ஒரே கூரையின் கீழ் வெளியிட்டிருக்கும் நிறுவனம் எங்கள் மணிமேகலைப் பிரசுரம் தான். எங்களிடம் இருக்கும் ஜோதிட நூல்களின் தலைப்பு எண்ணிக்கை மட்டும் 76.
எங்கள் பதிப்பகத்தின் ஜோதிடப் புரட்சி என்று ஒன்றை அவசியம் குறிப்பிட வேண்டும். காலங்காலமாகத் தொட்டால் அப்பளம்போல் உடைகிற பழங்காலத்துப் பஞ்சாங்க இதழ்களை வைத்துக் கொண்டு பல ஜோதிடர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள்.
இதைப் பார்த்ததும் எனக்கு இவற்றையெல்லாம் தொகுத்து நவீன, கையடக்கப் பதிப்பாக வெளியிட்டால் என்ன என்று சிந்தித்தேன்.
20 ஆண்டுகளுக்கு ஒரு நூல் வீதம் திருக்கணிதப் பஞ்சாங்க முறையில் 1926 முதல் 1945 என்று ஆரம்பித்து 2020 வரை 7 தொகுதிகளை வெளியிட்டேன். பின்னர் ஜோதிடர்களின் கோரிக்கைக்கிணங்க வாக்கியப் பஞ்சாங்கமும் 20 வருடங்களுக்கு ஒரு தொகுதி வீதம் 1926இல் ஆரம்பித்து 2010 வரை வெளியிட்டிருக்கிறேன். 2020க்கான தொகுதிக்குப் பணி நடந்து கொண்டிருக்கிறது.
ஜாதகத்தை எவரிடம் கொண்டு போனாலும் சற்று உற்றுக் கவனியுங்கள். உடனே அவர் ஜோதிட வேதப்புத்தகம் போல் ஒன்றை எடுத்துச் சரிபார்ப்பார். அது பெரும்பாலும் மணிமேகலைப் பிரசுரப் பஞ்சாங்கமாகத்தான் இருக்கும்.
அந்த அளவிற்கு இன்று ஜோதிடர்கள் மத்தியிலும் எங்கள் வெளியீடுகள் மிகப் பிரபலம்.
இப்போதுள்ள 76 ஜோதிட நூல்களின் எண்ணிக்கையோடு புதிதாக ஒரு நூலை 18.1.09 அன்று சென்னைப் புத்தகத் திருவிழாவில் மதியம் 3 மணிக்கு வெளியாகும். 32 நூல்களுடன் சேர்த்து வெளியிடுகிறோம். எண் கணித மேதை டாக்டர் ஜே.என்.எஸ். செல்வன் எழுதியுள்ள எண்கள் எதையும் செய்யும் என்ற நியூமராலஜி புத்தகம் தான் அது.
சோதிடத்தை முழுமையாக ஏற்க, வாழ்வின் துன்பங்களை மனரீதியாக வெற்றிகொள்ள நம்மிடமே வழி இருக்கிறது. ஜோதிட நூல்களைப் பயிலாமல் தள்ளியிருந்துகொண்டு இதை ஏற்க முடியாது என்கிற வாதத்தை எப்படி ஏற்கச் சொல்கிறீர்கள்?
நன்றி: தினமணிதிருமகள் நிலையத்தின் புதிய வெளியீடுகள்
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட்டு வருகிறது திருமகள் நிலையம்.
போன்ற எழுத்தாளர்களின் நூல்கள் உள்பட பல நூற்றுக்கணக்கான நூல்களை வெளியிட்டுள்ளது திருமகள் நிலையம்.
இந்த ஆண்டு பல புதிய நூல்களை வெளியிட்டுள்ளது திருமகள் நிலையம்.
குறிப்பாக எழுத்தாளர் ஜெய்சக்தியின் "கனிந்த மனத் தீபங்களாய்" (3 பாகங்கள்) வெளிவந்துள்ளது.
கனிந்த மனத் தீபங்களாய் மனித உறவுகளின் மேன்மையை உணர்த்தும் ஓர் இனிய நாவல். ஜெய்சக்தி அவர்களின் முதல் நாவல் என்றால் நாம் நம்பிதான் ஆக வேண்டும். காரணம் நாயகன், நாயகி கதாபாத்திரங்களை மிகவும் அழகாக கையாண்டுள்ளதை பார்க்கும் போது ஏதோ பொன்னியின் செல்வன் கால கட்டத்திற்கு சென்றுவிட்ட பிரமிப்பு ஏற்படுகிறது.
தனது எழுத்தில் முழு ஈடுபாடு கொண்டு எழுதும் போதுதான் இவ்வாறு எழுத முடியும். அவ்வகையில் "கனிந்த மனத் தீபங்களாய்" நாவலில் எழுத்தாளர் ஜெய்சக்தி, மிக பெரிய தவமாக இருந்து இவ்நாவலை படைத்து இருக்கிறார் என்பது புரிகிறது.
என பல புதிய நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது திருமகள் நிலையம்.
சென்னை புத்தகக் காட்சி அரங்க எண். 366, 377ல் இந்நூல்கள் விற்பனைக்கு உள்ளது. இத்தகவல்களை திருமகள் பதிப்பகத்தின் உரிமையாளர் திரு. திருப்பதி அவர்கள் தெரிவித்தார்.
நன்றி: தினமணிதனித்தன்மையுடன் விளங்கும் பூம்புகார் பதிப்பகம்
தமிழ் மக்களின் அன்பால் அரவணைப்பால் வளர்ந்துவரும் எங்கள் பூம்புகார் பதிப்பகம் கால் நூற்றாண்டைத் தாண்டி கன்னித் தமிழ் வளர்ச்சிக்குத் தனது எளிய பங்கை இனிதே வழங்கி வருகிறது.
1975ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தோற்றம் கண்ட பூம்புகார் பதிப்பகம் "காமராஜ் ஒரு சரித்திரம்" என்ற நூலை முதல் வெளியீடாக்கித் தனது வரலாற்றைத் தொடங்கியது.
முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் திருமிகு பிரம்மானந்த ரெட்டி அவர்கள் கரங்களால் வெளியிடப்பட்டு டாக்டர் செவாலியர் சிவாஜிகணேசன், கவிஞர் கண்ணதாசன், தமிழ்வாணன் ஆகியோரால் பெற்றுக்கொள்ளப்பட்ட "காமராஜ் ஒரு சரித்திரம்" பூம்புகாரின் முதல் வெளியீட்டு விழாவாகும்.
புகழ்மிக்க அம்மனிதமாமணி பற்றிய ஒரு நூல் பதினொன்று பதிப்புகள் கண்டது; ஒரு இலட்சம் படிகளை விற்பனையில் தாண்டியது என்பது சாதனை நாயகருக்கும் பெருமை, எங்களுக்கும் பெருமை. "வையத்துள் வாழ்வாங்கு வாழும் நெறி வகுத்த" வள்ளுவப் பெருந்தகையின் திருக்குறள் நூலுக்கு எங்கள் பதிப்பகப் புதிய உரை இப்போது இருபத்தி ஐந்தாம் பதிப்பு வெளிவந்துள்ளது. இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் படிகள் தமிழ் மக்கள் கரங்களுக்குச் சென்று சேர்ந்துள்ளன.
தரத்தில் சிறந்த எங்கள் வெளியீடுகளில் பல, தமிழ் அரசின் தமிழ் வளர்ச்சித்துறைப் பரிசுகளைப் பெற்றுள்ளன.
தமிழகத்தின் தலைசிறந்த எழுத்து வேந்தர்களின் படைப்புகளை வெளியிடும் பெரும் பேறு பெற்றிருக்கிறது எங்கள் பூம்புகார் பதிப்பகம்.
கவிதை, நாவல், சிறுகதை, தத்துவம், ஆன்மிகம், அறிவியல் நுண்கலை எனத் துறைதோறும் பயனளிக்கிற, பண்பை வளர்க்கிற படிப்பவர் சுவையுணர்வைப் பேணுகிற படைப்புகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.
வள்ளுவப் பெருந்தகை வரையறுத்துக் கூறும் "இலங்கு நூல்" நவில்தொறும் நயம் பயக்கும் நூல் - "நுண்ணிய நூல்" என்பன எங்கள் இதயதாகமாகவும், இலட்சிய வெறியாகவும் உள்ளன.
பேரறிஞர் அண்ணாவின் சீரிய எழுத்துச் செல்வம் இதுவரை பதின்மூன்று பெரும் தொகுதிகளாக எங்கள் பூம்புகார் வாயிலாக வெளிவந்துள்ளது.
10வது ஆண்டில் சீதை பதிப்பகம்
நாற்பதாம் ஆண்டில் வசந்தா பதிப்பகம்
இவருடைய பல நூல்களை பல பதிப்புகள் வெளிவந்துள்ளன. பல பரிசுகள் பெற்றவை. தமிழ்நாட்டுப் பாட நூல்களிலும் பிற மாநிலத்தின் தமிழ்ப் பள்ளிகளிலும் பாடமாக இடம் பெற்றவை. பல மொழிகளில் மொழி பெயர்த்த சிறப்புடையவை. பல பல்கலைக் கழக மாணவர்கள் இவர் படைப்புகளை ஆய்வு செய்து எம்.பில்., டாக்டர் பட்டங்களைப் பெற்றுள்ளனர். நாற்பது ஆண்டுகளாக வசந்தா பதிப்பகம் சிறப்பாக இயங்க வழிகாட்டி வருபவர். இன்று அவர் வழியைப் பின்பற்றி அவர் மகன் டாக்டர் மோ. பாட்டழகன் தம் முழு நேரத்தையும் பதிப்புத் துறையில் செலுத்தி எழுச்சி மிக்க இளம் பதிப்பாளர் வரிசையில் நிற்பவர்.
சென்னை செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை (8/1/09) 32வது புத்தகக் கண்காட்சி தொடங்கியது. "இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியை குழந்தைகளுக்காக அர்ப்பணிப்புச்செய்திருக்கிறோம். குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை நிறைய ஏற்பாடு செய்திருக்கிறோம்."
குழந்தைகளுக்கான குறும்படம் காட்டப்படுகிறது. குழந்தைகளுக்கான ஓவியப் போட்டியும் நடத்துகிறோம். இந்த ஓவியப் போட்டி பற்றி எல்லாப் பள்ளிகளுக்கும் ஏற்கனவே தெரியப்படுத்தியிருக்கிறோம். சுமார் 1000 குழந்தைகள் இந்த ஓவியப் போட்டியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் குழந்தைகளை மூன்று வயதுப்பிரிவுகளாகப் பிரித்து போட்டியை நடத்துகிறோம். "நான் கண்ட புத்தகக் காட்சி" என்ற தலைப்பில் மாணவர்கள் ஓவியம் வரைய வேண்டும்.
இதுதவிர நுழைவுச் சீட்டைத் தினசரி குலுக்கல் நடத்தி அதற்கும் பரிசு கொடுக்கிறோம்.
இந்த ஆண்டு கிட்டத்தட்ட 3 இலட்சம் இலவச நுழைவுச் சீட்டுகளை விநியோகித்திருக்கிறோம். சென்ற ஆண்டு 528 அரங்குகள் புத்தகக் காட்சியில் இடம் பெற்றிருந்தன. இந்த ஆண்டு அது 600 ஆக உயர்ந்திருக்கிறது.
நேஷனல் புக் டிரஸ்ட், பப்ளிகேஷன் டிவிஷன் போன்ற அரசு சார்ந்த பதிப்பகங்களும் இந்த ஆண்டு இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பிற மொழி பதிப்பக அரங்குகளும் இடம் பெற்றிருக்கின்றன.
மலேசிய எழுத்தாளர்களின் புத்தகங்களை விற்பனை செய்வதற்கென்றே ஓர் அரங்கு இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் உள்ளது. இதை மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பல பதிப்பாளர்கள் இந்த வருடம் குறைந்தபட்சம் 10 - 20 தலைப்புகளில் புதிய புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இது மகிழ்ச்சியளிக்கும் செய்தி. இன்னொன்று எல்லா பதிப்பாளர்களும் குழந்தைகளுக்கான புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
32வது சென்னை புத்தகக் காட்சி பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. காரணம், முதல் நாளே அதிக அளவில் மக்கள் வருகை தந்துள்ளனர் என்றார் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் செயலாளர் ஆர்.எஸ்.சண்முகம்.
சுனாமி போல வந்த படிக்கும் ஆர்வம்!
ஆகிய இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன.
அவர் கூறியது:- அந்தக் காலத்திலேயே ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாயின் "போரும் வாழ்வும்" என்ற 2,100 பக்கம் உள்ள மிகப் பெரிய புத்தகத்தைத் தமிழில் கொண்டு வந்தவர் அவர்.
பாரதியார் கவிதைகளை ஒன்றரை ரூபாய் மலிவு விலையில் கொண்டு வந்து அன்றைய முதலமைச்சர் காமராஜைக் கொண்டு வெளியிடச் செய்தார். கிட்டத்தட்ட 191 புத்தகங்களைப் பதிப்பித்த அவர் தனது 54 வயதிலேயே மறைந்துவிட்டார் என்பது வருத்தத்திற்குரிய செய்தி. தனது வருமானத்தை எல்லாம் நல்ல நூல்களைக் கொண்டு வருவதில் செலவழித்த அவர் இறுதியில் வறுமைப்பட நேர்ந்தது துரதிர்ஷ்டம்.
இந்த நூலை எழுதிய பழ.அதியமானையும் நூலை வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்தையும் பாராட்டுகிறேன்.
திருப்பாவைதான் எனக்குப் பிடித்தது!
சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். எனக்குப் பிடித்தது ஆண்டாளின் திருப்பாவைதான். ஆண்டாளின் திருப்பாவையை எல்லாரும் ஆன்மீகம் சம்பந்தப்பட்டது என்று நினைக்கிறார்கள். ஆனால் சாப்பிடும் உணவைப் பற்றிக் கூட ஆண்டாள் சொல்கிறார். திருப்பாவையைச் சின்ன வயதில் கேட்டபோது புரிந்து கொண்டவிதம் வேறு. வயதாக ஆக அதைப் புரிந்து கொள்வது வேறு.
எல்லாரும் மார்கழி மாதத்தைப் பீடை மாதம் என்று சொல்வார்கள். ஆனால் அது உண்மையில் "பீடு" மாதம். குளிரில் முடங்கிக் கிடக்காமல் செயல்பட வேண்டும் என்ற சொல்வதற்கே அதைப் பீடு மாதம் என்றார்கள். மார்கழி மாதத்தைப் பற்றி - அதன் பனியைப் பற்றி - எல்லாம் ஆண்டாள் சொல்லியிருக்கிறார்.
படிக்கும் பழக்கம் இப்போது ரொம்பவும் குறைந்து போய்விட்டது என்று எல்லாரும் சொல்கிறார்கள். நெட்டில் போய்ப் பார்த்தாலும் அங்கேயும் படிக்கத்தானே செய்கிறோம்?
40 - 50 வருடங்களுக்கு முன்பு நூலகம்தான் உலகைத் தெரிந்து கொள்ள இருந்த ஒரே சாதனம். அதுவும் எங்கேயாவது ஒன்று இருக்கும். நூலகத்தைத் தேடித் தேடி அலைய வேண்டும். புத்தகங்களைத் தேடி எடுத்து, குறிப்பு எடுத்துப் படித்த காலம் ஒன்றிருந்தது. அப்படிப் படித்ததினால் சமூகப் பார்வை, சமூகச் சார்பு படித்தவர்களுக்கு அதிகம் ஏற்பட்டது.
ஆனால் இப்போது புத்தகக் காட்சிக்கு சுற்றுலா வருவதுபோல வருகிறார்கள்.
இங்கு வாங்கும் புத்தகங்களை மறக்காமல் அவசியம் படிக்க வேண்டும்.
எழுத்தாளர் பதில் சொல்ல வேண்டும்!
மதுரையிலிருந்து சென்னைப் புத்தகக் கண்காட்சியில் "அறிவை விரிவு செய்" என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்ற வந்திருந்த பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் கூறியதாவது:-
"இப்போது வருகிற புத்தகங்களின் கட்டமைப்பு மிகவும் நன்றாக இருக்கிறது. புத்தகத்தைப் பார்த்தவுடனேயே அதை வாங்க வேண்டும் என்று தூண்டும் அளவில் புத்தகங்களின் அழகு நம்மைக் கவர்கிறது.
முன்பெல்லாம் பள்ளி மாணவர்களுக்குப் பரிசளிப்பதற்காக பாரதி, பாரதிதாசன் நூல்களைத் தருவார்கள். அவற்றைப் பார்த்தவுடனேயே மாணவர்களுக்கு போட்டிகளில் ஏன் கலந்து கொண்டோம் என்றிருக்கும்.
போன்றவை எனக்குப் பிடித்த நூல்கள்.
உரையாடல் வடிவ நூல்களின் முன்னோடி!
புத்தகக் காட்சியில் இடம் பெற்றுள்ள தென்திசை பதிப்பகத்தை ஆரம்பித்து ஒரு சில ஆண்டுகளேயானாலும் தமிழ்ப் பதிப்புலகில் தனக்கெனத் தனிப்பாதையை வகுத்துக் கொண்டு செயல்படுகிறது.
நல்ல புத்தகம் மட்டுமே கொண்டு வரவேண்டும். அதிலும் நான்கு பேருக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும். இதுதான் எங்கள் முக்கிய குறிக்கோள்.
பறவையியல் அறிஞரான சலீம் அலி குறித்த நூலை எங்கள் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இஸ்லாமிய பக்கீர்கள் குறித்து இரஹ்மத்துல்லா எழுதியுள்ள புத்தகமும், அரவானிகளின் வாழ்வு குறித்து ப்ரியா பாபு எனும் திருநங்கை எழுதியிருக்கும் அரவாணிகள் & சமூக வரைவியல் என்ற புத்தகமும் நாங்கள் வெளியிட்டவையே.
என வித்தியாசமான படைப்பாளிகளின் படைப்புகளின் அணிவகுப்பு தென்திசை மூலமாகவே நடந்தேறியுள்ளது.
ஒரே துறை சார்ந்த இரண்டு அறிஞர்களைச் சந்திக்க வைத்து அவர்களை விவாதிக்கவிட்டு அந்த உரையாடலை புத்தகமாக்க முடிவு செய்தோம்.
அரசியல் குறித்து நல்லகண்ணு - அ.மார்க்ஸ் ஆகியோரும், பாலியல் குறித்து சாருநிவேதிதா - நளினி ஜமீலா ஆகியோரும் கலந்துரையாடியதைப் புத்தகங்களாகக் கடந்த வருடம் கொண்டு வந்தோம்.
இந்த நூல்களுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இந்த வருடம் சமயம் குறித்து தொ.பரமசிவம் - சுந்தர்காளி ஆகியோரைச் சந்திக்க வைத்து புத்தகமாக்கிக் கொண்டு வந்திருக்கிறோம்.

தவணை முறையில் விற்பனை!
எங்களுடைய நிறுவனம் 1913ம் ஆண்டு கல்கத்தாவில் நிறுவப்பட்டது. 1960ல் சென்னையில் துவங்கப்பட்டது. இந்தியாவின் பல இடங்களில் கிளைகள் உள்ளன. நாங்கள் முழுக்க முழுக்க ஆங்கிலப் புத்தகங்களையே வெளியிட்டிருக்கிறோம். குறிப்பாக "என்சைக்கிளோபிடியா" என்று சொல்லப்படுகிற கலைக் களஞ்சியங்களை அதிகமாக வெளியிட்டிருக்கிறோம். விஞ்ஞான கலைக் களஞ்சியம், உலக மிருகங்களைப் பற்றிய கலைக் களஞ்சியம் என்று நிறைய வெளியிடுகிறோம். "ஹால்ஸ்பரீஸ் லாஸ் ஆஃப் இந்தியா" என்ற புத்தகம் 43 பாகங்களைக் கொண்டது. அதன் விலை 1 இலட்சத்து 25 ஆயிரத்து 295 ரூபாய். "என்சைக்ளோபிடியா ஆஃப் ரிலிஜியன் அன்ட் எதிக்ஸ்" என்ற புத்தகத்தின் விலை 62 ஆயிரம் ரூபாய்.
இந்த ஆண்டு...இவை புதுசு!
150 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஜி.யு.போப்பின் "தமிழிலக்கண நூல்" புதுவடிவம் எடுக்கிறது.
போன்ற குழந்தைகளுக்கான நூல்கள்.
குறிப்பிடத்தக்க பிற நூல்கள்.
ஆகியவை நம்பிக்கை மலர்களாக மலர்ந்திருக்கின்றன.
வேலை தேடுவோருக்கு உதவும் வகையில் "வங்கித் தேர்வு வழிகாட்டி"யை நெல்லை கவிநேசன் எழுதியுள்ளார்.
போன்றவை இந்த வரிசையில் நிற்கின்றன.
"தினமணி"யின் முன்னாள் ஆசிரியர் ஏ.என்.சிவராமன் எழுதிய "சுதந்திரப் போராட்ட வரலாறு" இந்த ஆண்டு மறுபதிப்பு கண்டுள்ளது. முல்லை முத்தையா தொகுத்த "காணக் கிடைக்காத கடிதங்கள்" என்ற 100 சிறந்த கடிதங்களின் தொகுப்பு, முல்லையின் கொல்லையில் இந்த ஆண்டு பூத்திருக்கின்றன.
ஆகிய ரஷ்ய மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளது.
"கடலோரத்தில் ஒரு சிறுவன்" என்.துபொவ் எழுதிய ரஷ்ய நாவல். இதைத் தமிழில் யூமா வாசுகி மொழிபெயர்த்திருக்கிறார்
போன்ற மலையாளக் கவிதை நூல்களையும், கரிவெள்ளூர் முரளி எழுதி யூமா வாசுகி மொழிபெயர்த்த "சே குவேரா" மலையாள நாடகத்தையும் என்.சி.பி.எச் வெளியிட்டுள்ளது.
போன்ற நூல்களை அவற்றில் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
ஆகிய நூல்களை வெளியிடுகிறது.
தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் "அறிவியல், தத்துவம், சமுதாயம்" அலைகளின் இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க வீச்சாகத் திகழ்கிறது.
"பெளத்தத்தின் சமூகத் தத்துவமும் சமத்துவமின்மைப் பிரச்னையும்" என்ற உமா சக்ரவர்த்தியின் நூலும், "ஆளும்வர்க்கமாக அறிவு ஜீவிகள்" என்ற அசோக் சக்ரவர்த்தியின் நூலும் புதிய வெளியீடுகள்.
நா.வானமாமலை எழுதிய 6 - 7 நூல்கள் இந்த ஆண்டு அலைகளின் வரிசையில் சேர்கின்றன.
மருதனின் "இந்தியப் பிரிவினை - இரத்த சரித்திரம்" என்ற நூலும், "ஒபாமா பராக்" என்ற ஒபாமாவின் வாழ்க்கை வரலாற்று நூலும் கிழக்கின் புதிய வரவுகள்.
என்று மொழிபெயர்ப்பு நூல்களை ஆங்கிலப் புத்தக வடிவமைப்புடன் தரமாக வெளியிட்டிருக்கிறது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு "பிரபாகரன்" என்ற பெயரில் வெளிவருகிறது.
600 ஆண்டு கால மதுரை வரலாறு!
தமிழினி பதிப்பகம் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சிக்காக ஒரு பெரிய புத்தகத்தைக் கொண்டு வந்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த சு.வெங்கடேசன் மதுரையின் 600 ஆண்டு கால வரலாற்றை நாவல் வடிவில் எழுதியிருக்கிறார்.
கி.பி.1310 இல் மாலிக்காபூர் படையெடுப்பு தொடங்கி 1910 வரை மதுரையின் வரலாறு நூல் முழுக்க விரிந்து செல்கிறது.
மாலிக்காபூர் (1310 - 1350), விஜயநகரப் பேரரசு (1350 - 1737), அதன்பின் கிழக்கிந்திய கம்பெனி, ஆர்க்காடு நவாபு, பிரெஞ்ச் படையெடுப்புகள் என மதுரை அழிந்து, சிதைந்து, மீண்டும் மீண்டும் உதித்தெழுந்த வரலாறு நாவலாகியுள்ளது.
இந்த ஆண்டு... இவை புதுசு!
இந்த ஆண்டு பாரிநிலையத்தின் புதிய வெளியீடுகள்.
இராதா மணாளன் எழுதிய "திராவிட இயக்க வரலாறு" சென்ற ஆண்டு அதிகம் விற்பனையான நூல்களில் முதலிடத்தைப் பிடிக்கிறது.
செண்பகா பதிப்பகம் "ஓவியக் குறள்" என்கிற பெயரில் வெளியிட்டிருக்கும் திருக்குறளில் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் ஒரு வண்ண ஓவியமென 133 வண்ண ஓவியங்களுடன் ஆர்ட் பேப்பரில் பரிசுப் பதிப்பாக வெளிவருகிறது.
ஆகிய இரு நூல்களும் எம்.ஏ.பழனியப்பன் செண்பகா பதிப்பகத்திற்காக எழுதிய நூல்கள்.
புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாயின் மூன்று குறுநாவல்கள் தனித்தனி நூல்களாக வெளிவருகின்றன.
பத்து ரூபாய் விலையில் மருத்துவம், வீட்டுப் பராமரிப்பு, குழந்தைகளுக்கான நூல்களை செண்பகா பதிப்பகம் இந்த ஆண்டு வெளியிட்டுள்ளது.
ஆகிய இரண்டு நூல்களும் பூங்கொடி பதிப்பகத்தின் குறிப்பிட வேண்டிய நூற்களாக இந்த ஆண்டு மலர்கிறது.
விரிவுரை பூங்கொடியின் பக்திக் கடலில் சிறு துளிகள்.
பூங்கொடி பதிப்பகத்தின் புது மலர்களாக மலர்கின்றன.
ஆகிய நூல்களைக் கொண்டு வருகிறது.
நூலும் கவிதாவின் புதிய வெளியீடுகள்.
குழந்தைகளைப் பற்றி 3 குறும் படங்கள்!
சென்னை புத்தகக் காட்சியில் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து (9/1/09) உலக திரைப்படம் மற்றும் குறும்பட ஆவணப்படத் திரைவிழா நடைபெற்று வருகிறது.
ஆகிய மூன்று குறும்படங்களே அவை.
இதில் முதலிரண்டு குறும்படங்களும் திரைப்படங்களிலும், விளம்பரப் படங்களிலும் வற்புறுத்தி நடிக்க வைக்கப்படும் குழந்தை நட்சத்திரங்களின் அவல நிலை பற்றிய படங்கள்.
கீதா இளங்கோவனின் "லிட்டில் ஸ்பேஸ்" ஒரு இரயிலில் பயணம் செய்யும் மனவளர்ச்சி குறைந்த சிறுவனைப் பற்றிய கதை. தனது மனவளர்ச்சிக் குறைபாட்டால் பிற பயணிகளிடத்தில் இருந்து ஒதுங்கியிருக்கும் அந்தச் சிறுவன், அங்குள்ள ஒரு பெண்ணின் அன்பான பேச்சால் எப்படி இயல்பான குழந்தைபோல மாறுகிறான் என்பதே கதை.
குழந்தைகளுக்கான "சி.டி" மாத இதழ்!
சென்னை புத்தகக் காட்சி இந்த வருடம் குழந்தைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகளுக்கான அரங்குகள் நிறைய இருக்கின்றன. அவற்றில் ஒன்றான "சட்வட் இன்ஃபோசல்" அரங்கில் குழந்தைகளுக்கான சிடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதோடு கூட "சி பாலக்" என்ற குழந்தைகளுக்கான ஆங்கில "சி.டி" இதழ் விற்பனையும் அமோகமாக நடைபெறுகிறது.

இன்றைய குழந்தைகள் புத்தகம் படிப்பதை விட "டி.வி" போன்ற காட்சி ஊடகங்களைப் பார்ப்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள். குழந்தைகள் வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைப் பார்த்து அவர்களுடைய நேரத்தை வீணாக்குவதைவிட உருப்படியாக அவர்களுடைய கல்வி வளர்ச்சிக்கும், பொது அறிவு வளர்ச்சிக்கும் உதவும் வகையில் "சி.டி" தயாரித்தால் என்ன என்று தோன்றியது. அதில் தோன்றியதுதான் எங்களுடைய "சி பாலக்" சிடி மாத இதழ்.
என அனைத்தும் கற்றுக்கொள்ளும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு மாதமும் 4 கதைகள் வெளியிடப்படுகின்றன.
இந்தியாவில் உள்ள இரண்டு மாநிலங்களைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் கொடுக்கப்படுகின்றன.
குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்காக யோகா கற்றுத் தரும் பாடங்களும் இந்த சிடியில் உள்ளன.
இந்தி கற்றுக் கொள்ளும் ஆர்வம் உள்ள குழந்தைகளுக்கு அதை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு பல இடங்களில் இருப்பதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு இந்தி கற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சியும் இந்த சிடியில் உள்ளது.
விஞ்ஞான அறிவை வளர்ப்பதற்காகவும், நம்மைச் சுற்றியுள்ள பொருட்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காகவும் நிறைய அறிவியல் விஷயங்களும் இந்த சிடியில் உள்ளன. உதாரணமாக "மோட்டார் இன்ஜின் எப்படி வேலை செய்கிறது?" என்பதைப் படங்களுடன் விளக்கியிருக்கிறோம்.
வரலாறு தொடர்பான செய்திகளும் இதில் உள்ளன.
பொது அறிவு என்கிற பகுதியில் உலகச் செய்திகள், இந்தியச் செய்திகள் தரப்படுகின்றன.
புத்தகங்களைப் படிக்கவைக்க வேண்டும்: ஸ்டாலின் குணசேகரன்
சென்னை புத்தகக் காட்சியில் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையைச் சேர்ந்த ஸ்டாலின் குணசேகரன் "இளைய பாரதமே எழு" என்ற தலைப்பில் சொற்பொழிவாற்ற திங்கள்கிழமை (12/01/09) வந்திருந்தார்.
அவர் நம்மிடம் கூறியதாவது:-
நிறையப் படித்தவர்கள், ஆய்வாளர்கள்தாம் புத்தகம் வாசிப்பார்கள் என்று கருத்து இருக்கிறது. உண்மை அப்படியில்லை. கூலித் தொழிலாளி கூட புத்தகம் படிக்க ஆர்வமாக இருப்பார். என்னுடைய "விடுதலை வேள்வியில் தமிழகம்" என்ற புத்தகத்தின் விலை ரூ.600. அந்தப் புத்தகத்தின் சில பக்கங்களை மட்டும் ஒரு தனியார் நூலகத்தில் படித்துவிட்டு புத்தகத்தை வாங்க ஆசைப்பட்ட கூலித் தொழிலாளி ஒருவருக்கு அவ்வளவு விலை கொடுத்து வாங்க வசதியில்லை. அவர் தினமும் தனது மதிய உணவுக்காகச் செலவு செய்யும் 20 ரூபாயை ஒரு மாதம் சேமித்து அந்தப் புத்தகத்தை வாங்கியிருக்கிறார். இதை அவர் எனக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்தார்.
நான் சிறுவயதாக இருக்கும்போது "குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள்" என்ற ரஷ்ய மொழிபெயர்ப்புப் புத்தகத்தை எனது தந்தை வாங்கிக் கொடுத்தார். அதைத்தான் முதன்முதலில் வாசித்தேன்.
நான் சிறுவயதில் படித்த இன்னொரு புத்தகம், பூ.சோமசுந்தரம் மொழிபெயர்த்த "உண்மை மனிதனின் கதை" என்ற புத்தகம். அது நீண்டநாட்களாக மறுபதிப்பு இல்லாமல் இருந்தது. இப்போது மறுபதிப்புக் கண்டிருக்கிறது. அது எனக்கு இப்போதும் பிடித்த புத்தகம்.
விடியல் பதிப்பகம் வெளியிட்ட "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" என்ற புத்தகமும் எனக்குப் பிடித்தது.
வெளியிடப்பட்டன.

இந்த ஆண்டு...இவை புதுசு!
முழுத் தொகுப்பு அம்ருதா பதிப்பகத்தில் இருந்து வந்த அமுதக் கலசங்கள்.
ஆகிய நூல்களை வெளியிட்டிருக்கிறது.
இதழ் தொகுப்பு, "வெளி"நாடக இதழ்த் தொகுப்பு ஆகியவற்றைச் சொல்லலாம்.
ஆகிய நூல்கள் புதிய வெளியீடுகளாகும்.
முத்தையா வெள்ளையன் எடுத்த பேட்டிகளின் தொகுப்பான "அது - இது - எது", மொழிபெயர்ப்பு நூலான "குழந்தைப் போராளி" ஆகியவை கருப்பு பிரதிகளின் வெளிச்ச வெளியீடுகளாக இந்த ஆண்டு உருவாகியுள்ளன.
பாரதி புத்தகாலயத்தின் பாதையில் பதிந்த சிறுகதைத் தடங்கள்.
அறிவியல் நூல்களில் இரா.நடராசனின் "விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள்" குறிப்பிடத்தக்கவை.
போன்றவை விகடன் பிரசுரத்தின் பன்முகத்தன்மைக்குக் கண்ணாடியாக அமைந்தவை.
40 நிமிடத்தில் 11 குறும்படங்கள்!
சென்னை புத்தகக் காட்சியில் உலக திரைப்படம் மற்றும் குறும்பட ஆவணப்படத் திரைவிழா நடைபெற்று வருகிறது.
பெற்றோரின் சச்சரவுகள் குழந்தைகளின் மனதை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைச் சித்திரிக்கும் "தி சில்ரன் ஆர் வாட்சிங் அஸ்" ஓர் இத்தாலிய குறும்படமாகும்.
ஆங்கிலத்துக்கென்றே ஓர் அரங்கம்!
இன்று பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு எது தேவை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஷேக்ஸ்பியர் 37 நாடகங்களை எழுதியுள்ளார். நான் அவற்றில் இருபத்திரண்டை கதை வடிவில் எழுதியிருக்கிறேன்.
தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஆங்கில மொழியில் திறன் அவசியம் என்பதால் ஆங்கிலத்தில் திறனை வளர்க்கும் வகையில் ஆங்கில இலக்கணம், ஸ்போக்கன் இங்கிலீஷ், லெட்டர் ரைட்டிங் புத்தகங்களையும் வெளியிட்டிருக்கிறேன். பதிப்பகம் ஆரம்பித்து 9 வருடம் முடிந்து 10 ஆண்டு நடந்து வரும் வேளையில், மொத்தம் 86 புத்தகங்களை நானே எழுதி வெளியிட்டிருக்கிறேன்.
எனக்குத் தெரிந்த கல்லூரி ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு என்ன தேவை என்பதைக் கேட்டு அதற்காகப் புத்தகம் எழுதி வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.
ஆங்கிலத்தில் திறனை வளர்க்கும் புத்தகங்கள் தவிர, பொது அறிவு புத்தகங்கள், சுயமுன்னேற்றப் புத்தகங்களையும் வெளியிட்டு இருக்கிறேன் என்றார்.
நன்றி: தினமணி

சென்னை புத்தகக் காட்சிக்கு உள்ளே வரும் பாதையில் காணப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் வளைவுகளை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறேன். குமுதத்திற்கான வளைவுகளையும் வடிவமைத்தேன்.
இந்தக் கண்காட்சியைப் பலரும் இரசித்துப் பார்க்கிறார்கள். நிறையப் பேர் விசாரித்திருக்கிறார்கள். தொடர்பு எண்ணை வாங்கிக் கொண்டு போனவர்கள் ஏராளம். இதற்கு முன் நெய்வேலி புத்தகக் கண்காட்சியிலும், புனேயிலும், பெங்களூரிலும் இதுபோல கண்காட்சிகள் நடத்தி இருக்கிறேன் என்றார்.
நன்றி: தினமணி
சிறந்த தமிழ் நூல்கள், பதிப்பகங்களுக்குப் பரிசு: தமிழக அரசு அறிவிப்பு
2007ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் நூல்கள் மற்றும் பதிப்பகங்களுக்கு பரிசுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது
பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் மற்றும் வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியலை தமிழக அரசு செவ்வாய்க்கிழமை (13/1/09) வெளியிட்டுள்ளது.
சிறந்த தமிழ் நூலுக்கு ரூ. 20 ஆயிரமும், அதனை வெளியிட்ட பதிப்பகத்துக்கு ரூ. 5 ஆயிரமும் பரிசு வழங்கப்படும்.
பரிசு பெற்ற நூல்கள், நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பகங்கள்:-
நன்றி: தினமணி
சத்தமில்லாமல் ஒரு தொண்டு!
"A Contemporary Tamil Prose Reader" என்ற அந்தப் புத்தகத்தின் மூலம் இக்காலத் தமிழில் உள்ள பல்வேறு எழுத்து நடைகளைத் தெரிந்து கொள்ள முடியும். படிப்பவர்களுக்கு அலுப்புத் தட்டாதவகையில் தயாரிக்கப்பட்ட 23 பாடங்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. பல்வேறு எழுத்தாளர்களின் 15 படைப்புகளும், 8 கட்டுரைகளும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளன. அந்தக் கட்டுரைகளிலும், படைப்புகளிலும் உள்ள பல்வேறு எழுத்து நடை தொடர்பான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அந்தப் படைப்புகளில் காணப்படும் கடின சொற்களுக்கும், அதில் உள்ள பண்பாட்டு அடிப்படையில் உருவாகி வழங்கிவரும் சொற்களுக்கும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த படைப்புகளின் உரைநடையில் உள்ள இலக்கண நுட்பங்களும் ஆங்கிலத்தில் விரிவாக விளக்கப்படுகின்றன.
வணக்கம் இந்த வருடம் புத்தக விழாவில் இந்த குட்டிப்பையனின் புத்தகமும்(அமர்நாத்யாத்திரை) கிழக்கு பதிப்பகத்தாரால் வெளியிடபட்டுள்ளது.
எனக்கு கொஞ்சம் வேலைப்பழு இருந்த காரணத்தால் மராட்டிய மாநில அரசின் கொங்கன ரெயில்வே பற்றிய (ஹிஸ்டோரிகல் இங்சீனியரீங்)Part I பாதியில் நிற்கிறது(திடீரென்ற மராட்டிய மாநில அரசியலில் மாற்றம் (தற்போதைய முதல்மந்திரி அசோக் சவானும் எனக்கு நல்ல நன்பர் தான் இருந்தாலும் அவர்களை தொந்திரவு செய்ய விருப்பமில்லை, அதனால் கொங்கான ரெயில்வே புத்தகம்(ஆங்கிலம், தமிழ், இந்தி மராட்டி) இந்த கண்காட்சியில் இடம் பெறவில்லை, அதே போன்று ராக தேவன் இளையராஜா,(தமிழ்) அஸ்டவிநாயகர்(மராட்டியமாநில புகழ்பெற்ற எட்டு விநாயகர் ஆலய வரலாறு(மராட்டி தமிழ்,) விட்டல் ருக்மனி திருக்கோவில் (தமிழ் மராட்டி), மற்றும் கடற்கோட்டை(மாவிரன் சத்திரபதி சிவாஜி தனது ஆட்சிகாலத்தில் கட்டிய கடற்கோட்டைகள் பற்றிய புத்தகம் (ஆங்கிலம் தமிழ்) போன்றவைகள் இந்த வருடத்தின் முடிவிற்குள் உங்களின் கரங்களுக்கு வந்து சேரும்.
உங்களது ஊக்கம் தான் எனக்கு பெரிய பரிசு,
நன்றி: தினமணி
உங்களது கருத்துக்களை பதிக்க மறவாதீர்கள்

சிறுவயதில் தொழுநோய்க்கான அறிகுறி இருக்கவே அதற்குச் சிகிச்சை பெறுவதற்காக இளமையிலிருந்தே குடும்பத்தைப் பிரிந்து, கும்பகோணத்தில் கிறிஸ்தவக் கன்னியர்கள் நடத்தும் மடத்தில் வளர்ந்தவர். தொழுநோய் முற்றிலும் நீங்கிய நிலையில் திருமணம் முடித்து ஒரு மகனுக்குத் தாயாகியுள்ள முத்துமீனாள், தன் சிறுவயது முதல் தொழுநோயின் காரணமாகத் தனக்கு நேர்ந்த அனுபவங்களை மிக இயல்பாக இந்த நாவலில் சித்திரித்துள்ளார்.
மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.இ பாடத் திட்டங்களில் பயிலும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் "எடு ரைட்" குறுந்தகடுகளை வெளியிட்டுள்ளது. மெட்ரிகுலேஷன் பாடத் திட்டம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொருவிதமாக இருக்கிறது. எனவே அந்தந்த மாநிலத்தின் பாடத் திட்டத்திற்கு ஏற்ப ஒவ்வொரு பாடத்திற்கும் குறுந்தகடுகளை உருவாக்கியிருக்கிறார்கள். தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பயிலும் 6ம் வகுப்பு மாணவர் முதல் 10ம் வகுப்பு மாணவர் வரை இந்தக் குறுந்தகடுகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அதுபோல சி.பி.எஸ்.ஐ பாடத் திட்டத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் குறுந்தகடுகளை எடுரைட் தயாரித்திருக்கிறது. இந்தக் குறுந்தகடுகளில் ஒலி, ஒளி, அனிமேஷன் போன்றவை மூலம் பாடங்கள் விளக்கப்படுகின்றன. அறிவியல் பாடங்களுக்குச் சோதனைக்கூட செய்முறைகள் படங்களுடன், அனிமேஷன் முறையில் செய்துகாட்டப்பட்டுள்ளன. வெறும் புத்தகத்தை மட்டும் படித்து பாடங்களை மாணவர்கள் புரிந்து கொள்வதைவிட இம்மாதிரியான ஒலி, ஒளி, அனிமேஷன்கள் மூலம் புரிந்து கொள்வது மிகவும் எளிது. மனதில் பாடங்கள் எளிதாகவும் ஆழமாகவும் நன்றாகவும் பதிய இது ஒரு சிறந்தமுறை.
வாசிப்புப் பழக்கம் குறையவில்லை!
சென்னை புத்தகக் காட்சிக்கு புகழ்பெற்ற எழுத்தாளர் கி.இராஜநாராயணன் வியாழக்கிழமை (15/01/09) வந்திருந்தார். அவருடைய நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு புத்தகக் காட்சி அரங்கில் வெளியிடப்பட உள்ளது. வாசகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த அவரை அணுகினோம். சிரிப்பு மாறாத முகத்துடன் அவர் நம்மிடம் பேசியதாவது:-
"இப்போது பக்தி குறைந்துவிட்டது சிலர் சொல்வார்கள். நான் அவர்களைப் பார்த்துக் கேட்பேன். திருப்பதி உண்டியலிலும், பழனி உண்டியலிலும் குவிகிற பணத்தைப் பற்றி என்ன சொல்றீங்க? ஐயப்பன் கோவிலுக்குப் போகிற மக்கள் கூட்டத்தைப் பற்றி என்ற சொல்றீங்க? என்று." அதுபோலத்தான் வாசிப்புப் பழக்கமும் குறைந்து போய்விட்டது என்று சொல்வது.
இப்போது எழுதப் படிக்கத் தெரிந்த மக்கள் முதலில் இலக்கிய வாசிப்பிற்கு வரும்போது நிறைய படிக்கிறார்கள். புத்தக வணிகம் பெருகிவருகிறது. சிறு பத்திரிகைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

நன்றி: தினமணி
என கல்வியியல் தொடர்பான நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டு தனது தனித்துவத்தை நிறுவியுள்ளது சாந்தா பப்ளிஷர்ஸ்.
நன்றி: தினமணி
ஏன் கேட்க வேண்டும்?
தாயின் கர்ப்பத்தில் நாம் இருந்தபோது நமக்குத் தேவையான எல்லாமும் எந்த முயற்சியும் இல்லாமல் நமக்குக் கிடைத்தன. பிறந்த பின்பும் அந்தக் கர்ப்பத்தில் இருந்த குழந்தையைப் போலவே எல்லாமும் எந்த முயற்சியும் செய்யாமல் நமக்குக் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதற்காகத் தேடலில் ஈடுபடுகிறோம். அப்படி நமக்குத் தேவையானதைத் தேடும்போது கிடைப்பவர்தான் கடவுள்.
ஆங்கிலத்தில் தமிழை டைப் அடிக்கலாம்!
சென்னைப் புத்தகக் காட்சியில் நமது கவனத்தை ஈர்க்கும் இன்னொரு விஷயம் கணினித் தமிழ். கணினித் தமிழ் தொடர்பாக நிறைய அரங்குகள் இடம் பெற்றிருக்கின்றன.
எல்லாக் கம்ப்யூட்டர்களிலும் உள்ள கீ போர்டு ஆங்கில மொழிக்கானது. அந்தக் கீ போர்டுகளைப் பயன்படுத்தியே தமிழை டைப் செய்ய வேண்டியுள்ளது.
தமிழில் டைப் செய்ய தமிழ் டைப் ரைட்டிங் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலை இப்போது மாறிவிட்டது. தமிழில் டைப் செய்ய மென்பொருள்களை பல நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன.
அவற்றில் சாப்ட்வியூ நிறுவனம் உருவாக்கியுள்ள "அமுதம்" என்ற மென்பொருளும் ஒன்று. இது கம்ப்யூட்டரில் தமிழை டைப் அடிக்க எளிமையான வழிமுறைகளைக் கொண்டுள்ளது.
இதில் உள்ள டிரான்ஸ்லிட்டரெஷன் முறையில் ஆங்கிலத்தில் தமிழை எளிதாக டைப் செய்யலாம். "அவன்" என்பதற்கு "avan" என்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் போதுமானது.
இந்த மென்பொருள், விண்டோஸ் 95 முதல் விண்டோஸ் விஸ்டா வரையிலுள்ள ஆபரேடிங் சிஸ்டம் அனைத்திலும் வேலை செய்யக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
டிரான்ஸ்லிட்டரெஷன் முறை தவிர, தமிழ் 99, தமிழ் டைப்ரைட்டர் ஆகிய முறைகளும் அமுதத்தில் உள்ளன.
நன்றி: தினமணி
கோலாலம்பூர் தமிழ் இணைய மாநாடு ஓர் உணர்ச்சி மிகு மாநாடு. தமிழ் மரபு
அறக்கட்டளை உருவான தருணம் பலரைப் பாதித்தது. அதிலொருவர் ஆண்டோ! இவர் மிக,
மிக சுறு, சுறுப்பான நபர் (பிசி). ஆயினும் தமிழ் மரபு அறக்கட்டளையை
இந்தியாவில் பதிவு செய்ய நேரம் எடுத்துக் கொண்டது அவர்
பெருந்தன்மையையும், நம்மீது அவருக்கு இருக்கும் நம்பிக்கையையும்
காட்டுகிறது. த.ம.அ காரியதரிசி அவர்.
க.>
புத்தகம் வாங்க வந்த குழந்தைகள்!
சென்னை புத்தகக் காட்சியில் "காணும் பொங்கலான" வெள்ளிக்கிழமை (16/01/09) விடுமுறை நாளானதால் கூட்டம் நிரம்பி வழிந்தது. பெற்றோர் - குழந்தைகள் கூட்டம் புத்தகக் காட்சி அரங்கை நிறைத்தது. அரங்கிற்குள் செல்ல நுழைவுச் சீட்டு வாங்க நீண்ட வரிசையில் மக்கள் நின்றிருந்தது ஆச்சரியத்தைத் தந்தது.
எங்கிருந்து வருகிறீர்கள்? என்று விசாரித்தோம்.

வாசிப்புப் பழக்கத்தை வளர்க்க வேண்டும்!: எழுத்தாளர் பொன்னீலன்

அவர் கூறியது:-
தாய்மொழிக் கல்வி இன்று குறைந்துவிட்டது என்பதற்காக புத்தக வாசிப்பு குறைந்துவிட்டது என்று சொல்ல முடியாது. புத்தகம் படிப்பவர் புத்தகம் படிப்பதால் தனது வாழ்க்கைப் பார்வையை விசாலப்படுத்திக் கொள்கிறார். இந்தக் கோணத்தில் பார்த்தால் தமிழ்நாட்டில் வாசிப்புப் பழக்கம் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது. புத்தக வாசிப்பை இரசிப்பது அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.
என்னுடைய பேத்தி ஹாரிபாட்டர் கதைகளை எல்லாம் படித்துவிட்டாள். "பட்டாம் பூச்சி" என்ற நெடுங்கதைப் புத்தகத்தை அவளிடம் கொடுத்தேன். படித்து முடித்துவிட்டாள். புத்தகத்தில் அவளுக்குப் புரியாத சொற்களைப் பற்றிச் சந்தேகம் கேட்டாள். இதிலிருந்து பெற்றோர் புத்தக வாசிப்புப் பழக்கத்தைக் குழந்தைகளுக்கு ஊட்டி வளர்த்தால் வாசிப்புப் பழக்கம் குறையாது என்பது தெரிகிறது.
முன்பைப் போல் இடதுசாரி சிந்தனை உள்ள புத்தகங்கள் அதிகம் வருவதில்லை, குறைந்துவிட்டது என்று சொல்கிறார்கள். ஆனால் இது உண்மையல்ல. தலித்தியம், பெண்ணீயம் சார்ந்த நிறையப் புத்தகங்கள் வெளிவருகின்றன. அவையும் இடதுசாரி சிந்தனை உள்ள புத்தகங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மார்க்சியம் என்பது பொருளாதார, அரசியல், பண்பாடு ஆகியவற்றின் விடுதலைக்கானது. அதில் தலித்தியம், பெண்ணியம் ஆகியவையும் அடங்கும். எனவே இந்த மாதிரி புத்தகங்களை மார்க்சியத்தின் வளர்ச்சிநிலை என்றுதான் பார்க்க வேண்டும். இப்போது வருகிற புத்தகங்களின் கருத்துகளைச் சரியான முறையில் ஒருங்கிணைத்தால் நல்ல வளர்ச்சிநிலை சமூகத்தில் ஏற்படும்.
எனக்கு ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு புத்தகங்கள் பிடித்தன. ஆரம்ப காலத்தில் மு.வ.வின் புத்தகங்கள் பிடித்தன. பின்னர் கல்கி. அதன் பின் ஜெயகாந்தனின் எழுத்துகள்.
இரகுநாதனின் "பஞ்சும் பசியும்" நாவல் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் என் மனதில் இருக்கிறது. ப.சிவகாமி எழுதிய "ஆனந்தாயி", ஜே.டி.குரூஸ் எழுதிய "ஆழி சூழ் உலகு" எல்லாம் என்னைக் கவர்ந்த நூல்கள்.
முன்னோடிக்கு முதல் மரியாதை!

சக்தி வை.கோவிந்தனின் அரும்பணிகளைப் பற்றி பலவித ஆய்வுகள் செய்து "சக்தி வை.கோவிந்தன்: தமிழின் முன்னோடி படைப்பாளுமை" என்ற நூலை பழ.அதியமான் எழுதியுள்ளார். காலச்சுவடு பதிப்பகம் இந்த அரிய நூலை வெளியிட்டிருக்கிறது. இதுவரை யாருக்கும் தெரியாத பல அரிய செய்திகள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன. அதற்காக நூலாசிரியர் மேற்கொண்ட கடும் உழைப்பு நூல் முழுக்கத் தெரிகிறது. நூலின் பின்னிணைப்பாக சக்தி காரியாலயம் வெளியிட்டுள்ள 191 நூல்களைப் பற்றிய விவரம் இணைக்கப்பட்டுள்ளது.
ஓர் எழுத்தாளர்...பல நூல்கள்...ஓர் அரங்கு!

பத்திரிகையாளர் ஞாநி எழுதிய பல நூல்கள் அந்த ஓர் அரங்கில் இடம் பெற்றிருந்தன. இதில் இன்னுமொரு சிறப்பு, ஞாநி எழுதிய "ஓ பக்கங்கள்" என்ற நூலை மூன்று பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன. குமுதம் பு(து)த்தகம், விகடன் பிரசுரம், கிழக்குப் பதிப்பகம் ஆகியவை அந்த நூலின் வெவ்வேறு தொகுதிகளை வெளியிட்டுள்ளன.
இந்த ஆண்டு...இவை புதுசு...
புதிய பதிப்பு முயற்சிகளை விட சிறந்த பழைய நூல்களின் மறுபதிப்பே தமிழ்ப் புத்தகாலயத்தின் பிரதான பணியாக இருக்கிறது. அகிலனின் "வேங்கையின் மைந்தன்" சரித்திர நாவலின் 19ம் பதிப்பு தற்போது வெளிவந்துள்ளது.
அகிலனின் பிற நாவல்களான "சித்திரப் பாவை", "வெற்றித் திருநகர்" மீண்டும் பதிப்பிக்கப்பட்டவை. க.அபிராமியின் "மல்டி மீடியா கற்றுக் கொள்ளுங்கள்" என்ற நூலின் திருத்தப்பட்ட நான்காம் பதிப்பும், "பேசாமல் பேசுவோம் - வெற்றியளிக்கும் உடல்மொழி"யும் தமிழ்ப் புத்தகாலயத்தின் முத்திரை பதித்த குறிப்பிடத்தக்க நூல்கள்.
பரிசலின் இன்னொரு குறிப்பிடத்தக்க நூல்.
என்பது குறிப்பிடத்தக்க செய்தி.
எனப் பல்வேறு பாதைகளில் பயணம் செய்யும் ஆழி பப்ளிஷர்ஸ் இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க பல நூல்களை வெளியிட்டுள்ளது.
ஆகிய நூல்கள் ஆழியின் பரந்த தளத்திற்குச் சாட்சியமாகத் தோன்றியிருக்கின்றன.
அடையாளத்தின் அழுத்தமான பதிவுகள். உலகப் புகழ்பெற்ற நூல்களைத் தமிழில் அறிமுகம் செய்யும் முயற்சியாக;
வாசகர்களுடன் "தினமணி" ஆசிரியர் உரையாடல்

இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், பதிப்பக உரிமையாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என்று பல்வேறு தரப்பினரும் ஆசிரியரிடம் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
மற்ற பதிப்பகங்களில் தாங்கள் வாங்கிய புத்தகங்களை ஆசிரியரிடம் காட்டி ஆட்டோகிராப் வாங்கிச் சென்றவர்களும் உண்டு.
"நவீன இலக்கியங்களைப் பற்றி எழுத பல இலக்கிய ஏடுகள் இருப்பதால், பழந்தமிழ் இலக்கியங்களை ஜனரஞ்சகமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம், காலத்தைக் கடந்து நிற்கும் போதுதான் படைப்புகள் இலக்கிய அந்தஸ்தைப் பெறும்" என்று ஆசிரியர் பதில் அளித்தார்.
புதினங்கள், சிறுகதைகள், புதுக் கவிதை பற்றிய அவரது கருத்தைக் கேட்டபோது, 50 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த படைப்புகள் வாசகர்களின் வரவேற்பைப் பெற்றிருந்தால் அதற்கு இலக்கிய அந்தஸ்து அளித்தால் போதுமானது என்று கருத்துத் தெரிவித்தார். சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்ற படைப்புகளின் சமகால இலக்கியங்கள் பல காணாமல் போனதுபோல, இப்போது எழுதப்படுவதிலும் ஒரு சில மட்டுமே காலத்தின் பரிசோதனைக் கூடத்தில் தேர்வு பெறும் என்று கருத்துத் தெரிவித்தார்.
தான் ஊர் ஊராகப் பிரயாணம் செய்பவர் என்றும் பல ஊர்களில் "தினமணி" கடைகளில் கிடைப்பதில்லையே ஏன் என்கிற கேள்வியுடன் ஆசிரியரை எதிர்கொண்ட தாராபுரம் அன்வர் அலி, "தினமணி"யின் துணிவான தலையங்கங்களையும் தெளிவான கண்ணோட்டத்தையும் பாராட்டினார். வெளிமாநிலங்களுக்குச் சென்றாலும், திரும்பி வந்து அத்தனை நாள் தினமணியையும் படித்துவிட்டுத்தான் மறுவேலை என்று தெரிவித்தார். திருப்பூர் புத்தகத் திருவிழாவின் அமைப்பாளரும், பாரதி புத்தகாலயத்தின் நிர்வாகியுமான கே. நாகராஜன், திருப்பூர் புத்தகத் திருவிழாவில் "தினமணி" பங்கேற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
பெண்களுக்கான பகுதிகள் அதிகமாக இடம்பெற வேண்டும் என்றும் தான் "தினமணி"யின் வாசகி என்பதில் பெருமையடைவதாகவும் சொன்னார் புழுதிவாக்கத்தைச் சேர்ந்த வாசகி கோமதி குணசேகரன்.
மாணவர் பத்திரிகையாளர் திட்டத்தைத் தொடங்க வேண்டும், சிறுவர்மணியில் மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துவிட்டு, "தமிழ் மணி, கார்ட்டூன், துணிச்சலான தலையங்கம் என்று "தினமணி" தூள் கிளப்புகிறது," என்று பாராட்டினார் பல்லாவரத்தைச் சேர்ந்த எஸ்.சி. மகாலிங்கம்.
"தினமணி"யின் முன்னாள் ஆசிரியர் ஏ.என். சிவராமனின் கட்டுரைகள் புத்தகமாக வெளிவர வேண்டும்; ஆசிரியரின் துணிவை தலையங்கம் வெளிப்படுத்துகிறது என்றார் சென்னை பிராட்வேவைச் சேர்ந்த புலவர் தமிழ்மணி.
சித்த மருத்துவ நூல்களுக்காக ஓர் அரங்கு!

"மூலிகைமணி" மாத இதழை நாங்கள் 1965ல் தொடங்கினோம். அதற்கு முன்பு எங்களுடைய தாத்தா ஏ.ஆர்.கண்ணப்பர் மூலிகைகளைப் பற்றி 1964ல் தினமணியில் தொடராக எழுதினார்.
நாங்கள் பரம்பரை சித்த மருத்துவர்கள். மூலிகைகளின் மருத்துவ குணங்களைப் பற்றியும் அவை வேலை செய்யும் விதத்தைப் பற்றியும் தெளிவாக எடுத்துரைக்கும் நூல்களையே இங்கு விற்கிறோம்.
போன்றவற்றின் மருத்துவ குணங்களை விளக்கியிருக்கிறோம்.
இன்னொன்றையும் சொல்ல வேண்டும்.
"சந்திரயான்" அண்ணாதுரையிடம் சில கேள்விகள்!

மாணவர்களின் கேள்விகளுக்கு எளிமையாக அவர் பதில் கூறினார்.
சந்திரயான்-1 இல் ஏன் மனிதர்களை அனுப்பவில்லை?
சந்திரனுக்கு மனிதர்களை அனுப்புவதில் உள்ள சிக்கல்கள் என்ன என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். சந்திரயான்-4 ஐ அனுப்பும்போது நிச்சயமாக மனிதனை அனுப்புவோம். 2018 இல் அமெரிக்கா மனிதனை நிலவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. அந்தச் சமயத்தில் நாமும் அனுப்ப முயற்சி செய்வோம்.
நிலவுக்கு செயற்கைக்கோளை அனுப்பியது போல வேறு கிரகங்களுக்கு அனுப்பும் எண்ணம் உண்டா?
செவ்வாய் கிரகத்துக்கு அனுப்புவதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
புத்தகக் காட்சிகள் ஒவ்வோராண்டும் நடைபெறுகின்றன. அதுபோல விண்வெளி தொடர்பான காட்சிகளை நடத்துவீர்களா?
விண்வெளி தொடர்பான நடமாடும் கண்காட்சிகள் நடத்த வாகனங்கள் எங்களிடம் உள்ளன. முறையாகத் தொடர்பு கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.
உங்களுக்குச் சிறுவயதிலேயே விஞ்ஞானத்தில் ஆர்வம் இருந்ததா?
நான் விண்வெளித்துறையில் சேர்ந்தது ஒரு விபத்து. விபத்தாக நேர்ந்த ஒன்றிலேயே நான் இவ்வளவு சாதிக்க முடியும் என்றால் இளமையில் விஞ்ஞானத்தில் ஆர்வமாக உள்ள நீங்கள் எவ்வளவு சாதிக்க முடியும் என்று எண்ணிப் பாருங்கள்.
சந்திரயான்-1 இல் ஏன் நீங்கள் வெளிநாட்டுத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினீர்கள்?
உங்களுக்கு யாரோ தவறாகச் சொல்லியிருக்கிறார்கள். சந்திரயான்-1 முழுக்க முழுக்க நமது தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது. குறிப்பாக பொக்ரான் அணுகுண்டு சோதனைக்குப் பிறகு வெளிநாடுகள் நமக்குத் தொழில்நுட்ப உதவிகளைத் தர மறுத்துவிட்டன.
முன்பெல்லாம் நமக்கான செயற்கைக்கோள்களை வெளிநாடுகளில் செய்து வெளிநாடுகளிலேயே ஏவிக் கொண்டிருந்தோம். பின்னர் இங்கே தயாரித்து வெளிநாடுகளில் இருந்து ஏவிக் கொண்டிருந்தோம். இப்போது நம்நாட்டில் தயாரித்து நாம் நாட்டிலேயே ஏவுகிறோம்.
சந்திரயான்-1 ஐச் செலுத்தியதால் ஏதாவது பொருளாதார நன்மை இருக்கிறதா?
இந்த ஆண்டு...இவை புதுசு...
ஆகியவற்றைச் சொல்லலாம்.
ஆகிய நூல்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
சிறுவர்களுக்கான "பண்புமலர்க் கதைகள்" 5 பாகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கு.சீ.சுதர்ஸன் எழுதிய "ஹிந்துத்துவம் - ஓர் அறிவியல் கண்ணோட்டம்" சக்தி புத்தக நிலையத்தின் சிறந்த வெளியீடுகள்.
கி.சூர்யநாராயணராவ் எழுதிய "மாதவனின் அடிச்சுவட்டில்" இன்னொரு சிறந்த நூல்.
ஆகியவை விழிகளுக்குப் பெருமை சேர்ப்பவை.
என எல்லா நூல்களும் சினிமா...சினிமா என்றே போதி வெளியிட்டுள்ளது.
ஆகியவை கீழைக்காற்றில் தோன்றிய ஒளிக்கீற்றுகள்.
உங்களுக்கு யாரோ தவறாகச் சொல்லியிருக்கிறார்கள். சந்திரயான்-1 முழுக்க
முழுக்க நமது தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது. குறிப்பாக பொக்ரான்
அணுகுண்டு சோதனைக்குப் பிறகு வெளிநாடுகள் நமக்குத் தொழில்நுட்ப
உதவிகளைத் தர மறுத்துவிட்டன.
கணேசர் என்ன சொல்லுகிறார்.
நாசா ஒத்துழைப்பு இருக்கு என்ற செய்திகளை நான் வாசித்தேன். ஒருகால்
சந்திரயானில் மட்டும் இராமல் இருக்கலாம்.
கிரயோஜனிக் இயலி ருசியாவின்தொழில் நுட்பம்
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
I have enough love for you to forgive your follies.
ஆகிய நூல்களை பாவை பப்ளிகேஷனில் வந்த சிறந்த புத்தகங்களில் சில எனச் சொல்லலாம்.
ஆகியவை தோழமையின் வெளியீடே.
ஆகியவை இந்த ஆண்டு விடியலில் உதித்த சிறந்த நூல்கள்.
ஆகிய இரண்டு கவிதை நூல்களை வெளியிட்டிருக்கிறது.
ஆகிய நூல்களும் குறிப்பிடத்தக்கவை.
ஆகியவற்றைச் சொல்லலாம்.
200 ஆண்டுகளுக்கு முன்பு...!
என சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டும் நூல் ஒன்றை "அலைகள் வெளியீட்டகம்" கொண்டு வந்துள்ளது. ஆங்கிலத்திலிருந்து தமிழில் இந்த நூலை வி.என்.இராகவன் மொழிபெயர்த்திருக்கிறார்.
கிறிஸ்தவ மத பிரச்சாரத்திற்காகப் பிரான்சிலிருந்து இந்தியாவிற்கு வந்த (கி.பி.1789 - 1828) அபே ஜெ.எ.துபுவா தனது மதப் பிரசாரத் தேவைக்காக இந்திய மக்களைப் பற்றிய - குறிப்பாகத் தென்னிந்திய மக்களைப் பற்றி தொகுத்த விவரங்கள் நூல் வடிவில் வெளிவந்திருக்கிறது. பிரெஞ்சு மொழியில் இருந்து ஆங்கிலத்தில் வெளிவந்த ஒரு பதிப்பை ஜி.யு.போப் தொகுத்திருக்கிறார். அவர் எழுதிய குறிப்புகளும் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன.
என்பதைப் பற்றியெல்லாம் மிகத் துல்லியமாக நூல் எடுத்துக் கூறுகிறது.
குறையவில்லை புத்தக விற்பனை!
சென்னைப் புத்தகக் காட்சியில் அரங்கு அமைத்திருந்த பதிப்பாளர்கள் சிலரைச் சந்தித்து இந்த ஆண்டு புத்தகக் காட்சியின் விற்பனை எப்படி, எந்த வகைப் புத்தகங்கள் அதிகம் விற்பனையாகின, அடுத்த வருடப் புத்தகக்காட்சி எப்படி மேம்பட்டதாக இருக்க வேண்டும் என்ற கேள்விகளை அடுக்கினோம்.
பாரதி புத்தகாலயம் நாகராஜன்:- போன வருட அளவுக்கு இந்த ஆண்டும் விற்பனையாகியுள்ளது. சீரியஸான புத்தக வாசகர்கள் வழக்கமாக வருகிறார்கள்.
ஏற்கெனவே வெளிவந்த புத்தகங்களைவிட புதிய புத்தகங்கள் அதிகம் விற்பனையாகியுள்ளன. "ஜோதிபாசு வாழ்க்கை வரலாறு" அதிகம் விற்பனையான நூல்களில் ஒன்று. கல்விச் சிந்தனைகள் பற்றிய புத்தகங்கள், நாவல்கள் அதிகம் விற்பனையாகின.
ஆங்கிலப் புத்தகங்களை மட்டுமே வாசிக்கும் வாசகர்கள் இப்போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கிலப் புத்தகங்களையும் அதிகம் வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது நல்ல மாற்றம்.
சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு இளைஞர்கள் அதிகமாக புத்தகக் காட்சிக்கு வந்திருந்தனர். குழந்தைகள் அதிகம் வந்திருந்தனர். குழந்தைகளுக்குப் புத்தகம் வாங்கித் தர வேண்டும் என்று பெற்றோர் நினைப்பது நல்ல விஷயம்.
தமிழ்ப் புத்தகாலயம் அகிலன் கண்ணன்:- இந்த ஆண்டு மக்கள் வருகை குறைவு. அதற்குக் காரணம் புத்தகக் காட்சியைப் பற்றிய விளம்பரங்கள் குறைவு. குறிப்பாக அச்சு ஊடகமான பத்திரிகைகளில் விளம்பரம் குறைவு. தொலைக்காட்சிகளும், சில பத்திரிகைகளும் தந்த செய்திகளால்தான் இந்த அளவுக்கு மக்கள் வந்திருக்கிறார்கள். மக்களின் தேடல்களை நிறைவு செய்யும்விதத்தில் புத்தகங்கள் வந்திருந்தன. பலவித சப்ஜெக்ட்களை தேர்வு செய்து வாங்கிச் சென்றனர்.
அதிகமாக விற்பனையான பிற நூல்கள்.
இப்போது மக்கள் வாழ்க்கைக்கு நேரடியாகப் பயன்படக்கூடிய புத்தகங்களையே நிறையப் பேர் விரும்புகிறார்கள். அதிலும் சிரமம் இல்லாமல் படிக்கவே விரும்புகிறார்கள். பாரதியார் கவிதைகள் புத்தகத்தைக் கூட கவிதைகளை விளக்கி புத்தகம் வெளியிட்டால் நல்ல வரவேற்பு இருக்கும் என்று தோன்றுகிறது.
நிவேதிதா பதிப்பகம் ஆர்.தேவகி:- இந்த ஆண்டு புத்தகக் காட்சிக்கு மாணவர்கள் வருவது குறைவாக இருந்தது. ஆனால் இளைய வயதினர் அதிகம் வந்தனர். ஆன்மிகத் தேடல் அதிகமாக உள்ளது. ஆன்மிகத்துடன் சுயமுன்னேற்றம் சேர்ந்துள்ள நூல்களை இன்னும் அதிகம் வாங்கினார்கள்.
வழக்கமாகச் சமையல் நூல்கள் அதிகம் விற்பனையாகும். இந்த ஆண்டும் அதற்கு விதிவிலக்கல்ல. "உணவின் வழி உடல் நலம்" என்ற புத்தகத்தை விரும்பி வாங்கிச் சென்றார்கள். இந்த ஆண்டு முதல் நான்கு நாட்கள் கூட்டம் கொஞ்சம் குறைவாக இருந்தது. பின்னர் கூட்டம் அதிகரித்ததால் பாதிப்பில்லை. புத்தகம் வாங்குவது குறையவில்லை.
படைப்புகளுக்கே முக்கியத்துவம்...
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் காந்தி கண்ணதாசனைச் சந்தித்து 32வது புத்தகக் காட்சியைப் பற்றியும், அடுத்த ஆண்டு புத்தகக் காட்சிக்கு என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் என்றும் கேட்டோம். அதற்கு அவர் கூறியதாவது:-
சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு புத்தகக் காட்சியைப் பற்றிய விளம்பரம் குறைவு. அதற்கு முக்கிய காரணம், விளம்பரத்திற்கு உதவும் இரண்டு முக்கிய ஸ்பான்சர் இந்த வருடம் கிடைக்காததுதான். ஆனால் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் கொடுத்த பெரிய ஆதரவு மக்களை இந்த அளவுக்கு வரவழைத்திருக்கிறது. அதற்காக ஊடகங்களுக்கு என் நன்றி.
சென்ற வருடத்தைவிட இந்த ஆண்டு 20%லிருந்து 40% வரை அதிகம் வருவார்கள் என்று நினைத்திருந்தோம். ஆனால் 10% பேரே அதிகம் வந்திருந்தனர். அது சிறிது ஏமாற்றமளித்தாலும், ரொம்ப சந்தோஷம் தரக்கூடிய செய்தி குழந்தைகள் அதிக அளவில் வந்திருந்ததுதான். வருங்காலத் தலைமுறைக்கு புத்தக வாசிப்புப் பழக்கம் ஏற்படுவது மிக முக்கியமானது. குழந்தைகளின் கூடவே பெண்களும் வந்திருந்தார்கள்.
எவ்வளவுதான் புத்தக அட்டையைக் கவரும் விதமாக போட்டாலும் வாசகர்கள் தங்களுக்குத் தேவையான புத்தகங்களை மட்டுமே தேடிச் சென்று வாங்கினார்கள்.
புத்தகக் காட்சி நடக்கும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து எல்லாப் பகுதிகளுக்கும் செல்ல பேருந்து வசதி அதிகமாக உள்ளது. அதனால் சிறப்புப் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யவில்லை.
33வது புத்தகக் காட்சிக்கு ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே பணிகளை முடுக்கிவிட நினைத்திருக்கிறோம். இதைவிடச் சிறப்பாகத் திட்டமிட்டுப் புத்தகக் காட்சியை நடத்த அது உதவும் என்றார்.
நன்றி: தினமணி