தமிழ்க்கருவிகள் Tamiltools பகிர்க!
அனைவருக்கும் தமிழ்நாடு நாள் வாழ்த்துக்கள், 1040 ஆவது ராஜராஜ சோழன் சதய விழா வாழ்த்துக்கள், இந்த நன்னாளில் நமது வள்ளுவர் வள்ளலார் வட்டத்தின் முதல் செயலி கூகுள் ப்ளேயில், ஆண்ட்ராய்டு தொலைபேசிக்காக வெளியிடப்பட்டுள்ளது. நண்பர்கள் கூகுள் பிளேவில் இதனைத் தேடி, தங்கள் கைபேசியில் நிறுவிப் பயன் பெற்றுக் கொள்ளுங்கள். இது எங்கள் முதல் செயலி என்பதால் முற்றிலும் இலவசமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. எப்போதும் போல உங்கள் ஆதரவு எதற்கும் கிடைக்கும் என்று நம்புகிறோம்.
அவரவர் தாய்மொழியை அவரவர் போற்றுங்கள், அவரவர் தாய்மொழி அழியாமல் இருக்க, தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்யுங்கள். இதோ எங்களின் பங்களிப்பு, இந்த நன்னாளில், எனது தாய் மொழியான தமிழை அனைவரும் மிக எளிதில் பயன்படுத்தும் படி, ஒரு செயலியை உருவாக்கியுள்ளோம். அதன் பெயர் #தமிழ்க்கருவிகள்.
இந்தச் செயலி Google chrome-ல் இருக்கும் புக்மார்க் போன்றது. இதன் மூலம் உலகில் உள்ள பல சிறந்த தமிழ் செயல்பாடுகளை உடைய கருவிகளை இணைக்க முயற்சித்துள்ளோம்.
எல்லாராலும் எல்லாவற்றையும் நினைவில் வைத்துக்கொள்ள இயலாது, சில நேரங்களில் சேமிக்க மறந்து விடுவோம், இவை அனைத்திற்கும் ஒற்றைத் தீர்வாக இந்தச் செயலி அமையும். இது கிட்டத்தட்ட மைக்ரோசாப்ட் ஆபீஸ் போல இருக்கும், இந்தச் செயலி ஒரே சொடுக்கில் 120 தமிழ் இணையதள செயல்பாடுகளை அணுக உதவும்.
கல்வி, அகராதி, ஆய்வுக்கட்டுரை, இணையதளம், இலக்கியம், உரை ஒலி மாற்றி, ஒலி உரை மாற்றி, உரையாடி, எழுத்துப்பெயர்ப்பு, எழுத்துரு, கருவிகள், சொல்லாய்வு, அங்காடி, தட்டச்சு, மொழிபெயர்ப்பு, தொல்லியல், அகழ்வாய்வு, கல்வெட்டு போன்றவற்றவை பயண்படுத்த உதவுகிறது.
வேற ஏதும் பயனுள்ள இணையதளங்களை, இதில் இணைக்கலாம் என்று பரிந்துரைக்க விரும்பினால் பரிந்துரையுங்கள். இந்தச் செயலியைப் பயன்படுத்துவதில் பாதுகாப்பு சிக்கல்கள் எதுவும் இல்லை. மூன்றாம் தரப்பு பக்கங்களில் ஏதேனும் சிக்கல்களைச் சந்தித்தால், அருள்கூர்ந்து எங்களுக்குத் தெரிவித்து உதவவும். எங்கள் செயலியிலிருந்து தொடர்புள்ள இணைப்புகளை நீக்குவதன் மூலம், அவற்றை உடனடியாகச் சரி செய்யலாம்.
எங்களால் முடிந்ததை செய்து விட்டோம், இது அனைவருக்கும் பயன்பட, அனைவரிடம் கொண்டு செல்ல வேண்டியது, உங்கள் அனைவரின் பொறுப்பு.
விரும்புக! பிடித்திருந்தால் பகிர்க!
https://play.google.com/store/apps/details?id=com.valluvarvallalarvattam.tamiltoolsநன்றி,
இவண்
இங்கரசால் நார்வே & அர்ச்சித்
வள்ளுவர் வள்ளலார் வட்டம்