எனக்கு ஒரேமாதிரி ஒரு அனுபவம் கிடைப்பட்துண்டு ..நான் பயணித்து வரும் சிறிய ஸ்பிரிட் ஸ்கூட்டரை இந்த இடத்தின் வாசலில் நிறுத்தும் போதெல்லாம் எங்கிருந்தோ ஓடிவரும் ஒரு கிழட்டு காவல் காரார் "சார் இங்கே நிறுத்தக்கூடாது " வேறு இடத்தில் நிறுத்துங்கள் "என்று தவறாமல் கூறுவார் ஆனால் முன்பே அங்கே பல இருசக்கர வாகனங்கள் சுகமாகக் குந்திக்கொண்டிருக்கும்
என்னிடம் பட்டும் ஏன் இப்படி சொல்கிறார் என்பதை சிந்தித்துக்கொண்டே ஒவ்வரு முறையும் வண்டியை தள்ளிவிட எங்காவது இடம் கிடைக்கிறாதா என்று என்றும் பிஸியானஅந்த புஸி தெருவில் அலைத்து வண்டியைவிட்டுவிட்டு வருவதும் ஒரு வாடிக்கை ஆகிவிட்டது .இதையே எனது பொறுமைக்கும் ,சகிப்புத்தன்மைக்கும் ஒரு சோதனையாக நான் எடுத்துக்கொள்வதுண்டு .
பாண்டிச்சேரியில் புஸி தெருஎன்பது லால் பகதூர் சாஸ்த்திரி ரோடு என மாற்றப்பட்டு பல காலம் ஆகிவிட்டது .ஆனாலும் இன்னமும் மக்கள் புஸி எனும் பெயரை மறக்க விரும்பவில்லை ..
லால்பகதூர் சாஸ்த்ரி பிறந்த ஊரில் கூட அவர்பெயரில் இப்படிப்பட்ட அழகான ஒரு தெரு அவர் பெர்யரில் இருக்குமா என்பது சந்தேகமே..
அங்கே இருக்கும்டாக்டர் , ஒரு நல்ல தோல் சிகிச்சை தரும் டாக்டர் எனப்பெயர் எடுத்து விட்டவர் .புதுச்சேரியில் இருக்கும் தோல் டாக்டர்களில் மிகப் பிரபலமானவர் .
மூன்று .
முதல்முறை வந்தபோது எனக்கு கையிலும் காலிலும் நிறைய புண்கள் இருந்தது அவைகளைக் காட்டியதும் ,என்னைப் பார்த்து தாங்கள் இனிய மனிதர் என எனக்குத் தெரியும் எனக்கூறிவிட்டு , இனிப்பு எந்த அளவு எனக்கு இருக்கிறது என அறிய சக்கரை அளவை உணவுக்கு முன்னும் ,உணவுடபின்னும் சோதித்து வருமாறுக் கூறி ,வேறு சில சோதனையும் எழுதிக்கொடுத்து ,மேலேத் தடவ சில களிம்புகளும் எழுதிக்கொடுத்தார் .
ஒருவாரம் கழித்து இரண்டாவது தடவை சோதனை முடிவுகளுடன் போன போதும் ,"அத்தனை சர்க்கரை இப்போது இல்லையே ? ஒருவேளை முன்பு அதிகம் இருந்து அதன் பாதிப்பு இப்போது இருக்கிறதோ " என சிந்தித்துக் கொண்டே வேறு சில களிம்புகளும் ,மாத்திரைகளும் எழுதிக்கொடுத்தார் .
மூன்றாம்முறை வந்தபோதும் புண்கள் அத்தனை விரைவாக உடலைவிட்டுப் போகவில்லை ,ஒன்று போனால் வேறு ஒன்று வேறு இடத்தில் வருகிறது என்பதை கண்டு சற்று குழப்பம் அடைந்து டாக்டர் ஸ்ரீதர் மீண்டும் சில மாத்திரைகளை அதிகப்படுத்தியும் ,வேறு பல களிம்புகளை இன்னமும் கூட்டியும் எழுதிக்கொடுத்தார் .
பின்பு " சார் ! இன்னும் ஒரு வாரம் பார்ப்போம் ,மாற்றம் இல்லை எனிளில் வேறு சில சோதனைகள் எடுப்போம் "
"சரி டாக்டர் நீங்கள் எனன சொல்கிறீர்களோ அப்படியே செய்வோம் ?
என்று பொறுமையுடன் கூறிவிட்டு வெளியே வந்தபோது இந்தப் புண்கள் வந்ததற்கான மூல காரணம் தேனீ மாவட்டத்தில் பொட்டிபுரம் என்ற இன்னுமும் மேலாடை அணியாத ஆண்களும் பெண்களும் வாழும் ஒரு ஆதிகுடிகள் கிராமத்து மக்களைப் பற்றி ஆண்டாண்டுகளாக இருந்து வரும் சில நம்பிக்கையின்
அடிப்படையில் கருக் கொண்டிருக்கிறது என்பதை நான் சொன்னால் இந்த மெத்தப் படித்த டாக்டர் ஒப்புக்கொள்வாரா ?என்ற சிந்தனை என்னுள் எழுந்தது .
வண்டியை எடுத்துக்கொண்டு கடற்கரையில் சென்று அமர்ந்த போதும்
இரண்டு மாதங்களுக்கு முன் பொட்டிபுரம் சென்றிருந்தபோது தங்கள் கைகள் இரண்டிலும் இராஜரராஜன் காலத்துப பாணியில் "கேயுரம்" அணிந்து ,மேலாடை அணியாமல் தலையில் தலைப்பாகையுடன் இன்னமும் ஆயிரம் ஆண்டு பழமையை தங்கள் மரபாகப் பேணிக் காத்துவரும் மக்களை சந்தித்ததை ,பெண்களும் அவ்வாறே மேலாடை அணியாமல் தங்கள் மரபை இன்னமும் பெருமையுடன் காத்துவருவதை காண நேர்ந்த சம்பவத்தை மனம் அசைப் போடத்தொடங்கியது .
கையிலே வெள்ளி கேயுரம் ! திறந்த உடல் ! தலையில் முண்டாசு !
அவர்களைப் பொறுத்தவரை காலம் ஆணியடித்தது போல் அப்படியே நின்று விட்டது .
சரித்திரம் அவர்களைப் பொருத்தமட்டில் இன்னமும் நிகழ்காலமாகவே இருந்து வருகிறது .இன்னமும் அது இறந்த காலம் ஆகவில்லை
நாங்கள் அங்கே சென்றதோ சரித்திரத்தின் .சம்பவங்களை கோர்வையாக இணைக்கும் சக்திவாய்ந்த தொல்லிலக்கியங்கள் ஏதாவதோ அல்லது தொல்தமிழர்தம் அறிவாற்றல் குறித்து ஏதாகிலும் தரவுகள் ஓலைச் சுவடியில் கிடைக்காதா என்ற அவாவின் உந்துதலால் தான் .ஆனால் நாங்கள் அங்கேக் கண்டது வரலாற்றின் வாழும் சின்னம்தான் .
தேனிமாவட்டத்தில் தேவாரம் அருகில் இருக்கும் பொட்டிபுரம் கிராம மக்கள் ஆண்கள் பெண்கள் இருபாலரும் .அங்கே இன்னமும் நாகரீக மக்கள் தங்கள் கிராமத்தை சுற்றி பரவலாக வாழ்ந்த போதிலும் ,ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் 'சுற்றி எரியும் சுடரின் நடுவே இருக்கும் கர்ப்பூர குவியல் போல்' ,தங்கள் மரபு காணாமல் போய்விடும் அபாயங்களே அதிகம் இருக்கும் அந்தச் சுழலில் கூட விடாப்பிடியாகத் தங்கள் மரபை பல நூற்றாங்குகலாகக் காத்துவரும் தொல்தமிழரைக் ஆனால்உண்மையில் நாங்கள் அங்கேக் கண்டது வரலாற்றின் வாழும் சின்னங்களைத் தான் ....
.வரலாறு என்பதன் அவசியம் கடந்து போன காலத்தை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்ப்பதற்காக மட்டும்தானா இருக்கிறது . சொல்லப்போனால் வரலாற்றின் தேவை நிகழ்காலத்தின் தேவைக்கேற்ப மாறக்கூடியது . வாழ்வின் வளர்ச்சியே நாம் புறப்பட்ட இடத்தையும் இதுவரை கடந்து வந்த
பாதையை நினைவு படுத்திக் கொள்வதையும் அதிலிருந்து பாடங்கள் பெறுவதையும் பொறுத்துத்தான் அமைகிறது
வரலாறு எத்தனை ஆழமாகப் பாடங்களை ஒரே ரீதியில் கூறினாலும் அதன் பாடங்களைச் சரிவரப் புரிந்து
கொள்ளாதவர்கள் வரலாற்றில் இடம் பெறுவதில்லை.
வரலாற்றுக்கு ஆதாரமான காலத்தை ஆய்வதற்கு அந்தக் காலத்தைய இலக்கியமும், நிகழ்காலத்தில் செய்யப்படும்
தொல்பொருள் ஆய்வும் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
அகழ்வாய்வில் பெறப்படும் முடிவுகளை அந்தக் காலத்தைய இலக்கியச் செய்திகளோடும், அந்தக் காலத்தைய இலக்கியச்
செய்திகளை அகழ்வாய்வில் பெறப்படும் சான்றுகளோடும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும் . அப்போதுதான் ஓர் உறுதியான
முடிவுக்கு வரஇயலும்.
ஆனால் உலகின் பெரும்பாலான இடங்களில் இதுவரை அகழ்வாய்வில் பெறப்பட்ட சான்றுகள் இலக்கியத்தோடு
ஒப்பிடப்பட்டு முடிவுகள் பெறப் படவில்லை .காரணம் அங்கே
தொல்லிலக்கியங்கள் அகப்படவில்லை.
எகிப்தில் பிரமிடுகள் வரலாற்றைப் பறை சாற்றிக் கொண்டு கண்ணுக்கேதிரே இன்னும் நிற்கின்றன. காலத்தை வென்ற
சான்றுகள்தாம் அவை. ஆனால் ஒரே குறை ஒப்பு நோக்கத் தொல்லிலக்கியங்கள் மட்டும் அங்கே ஏதும் கிடைக்கவில்லை .நம்
நாட்டிலேயே கூட வட இந்தியாவில் சிந்து வெளியில் மொகஞ்சோதரோ , ஹாரப்பா அகழ்வாய்வில் கிடைத்த
முடிவுகள் சான்றுகள் இருக்கின்றன . ஆனால் அந்த ஆய்வை நிலை நிறுத்தும் வகையில் ஒப்புநோக்கத் தக்க
தொல்லிலக்கியங்கள் தான் கிடைக்கப் பெறவில்லை .
ஆனால் தமிழ்நாட்டின் நிலையோ நேர்மாறானது. இங்கே தொல்லிலக்கியங்கள் கொட்டிக் கிடக்கின்றன
ஒப்பிட்டுப்பார்க்க. தொல்லிலக்கியங்கள் கூறும் சான்றுகளைத் தேடும் தொல்பொருள் ஆய்வுதான் அத்தனை
தீவிரமாக இல்லை. பூம்புகாரின் சிறப்புக்களைக் கூறும் சிலப்பதிகாரம்
நம்மிடம் உண்டு; ஆனால் பூம்புகார் இன்னும் ஆழ்கடலில் பத்திரமாகத் தேடுவாரின்றி உறங்கிகொண்டு இருக்கறது ..
ஆனால் தமிழ்நாட்டின் வரலாற்றை நிலை நிறுத்த எந்த அகழ்வாய்வும் தேவைப்படாத அளவில் நம்மிடம் மிக
முக்கிய ஆதாரங்கள் உள்ளன. அதுவே வழி வழி வந்து இன்றும் நிலைத்திருக்கும் பழந்தமிழர் மரபு ஆகும் .
தொல்லிலக்கியங்களில் பேசப்படும் அதே மொழியை இன்றும்
வழி வழியாகப் பேசிவரும் பழங்குடிகளான தமிழர் மரபு இன்றும் நீடித்து வருகிறது .இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன் இயற்றப்பட்ட அதே இலக்கண விதிப்படி இன்னும் அதே போல் பாடல் இயற்றும் வல்லமை கொண்ட தமிழர்
மரபு இழை இன்னும் அறுபடாமல் வாழ்ந்து வருகிறது; சீரிளமை குறையாமல் தமிழ்க்குடி வாழ்ந்து வருகிறது.
’வாழும் வரலாற்றுச் சின்னங்கள்தான் தொல் தமிழர்கள் .அவர்களிடமே இன்னும் தொல்லிலக்கியங்கள் ஓலைச்
சுவடிகளிலே எழுதப்பட்டு ஆண்டாண்டு காலமாகப் பாதுகாப்பாக உள்ளன; வாழும் தொல்குடிகளும்
இருக்கின்றனர்; ஆனால் இதை அனைவரும் ஒப்புக் கொள்ளும் வகையில் புறச் சான்றுகளான அகழ்வாய்வுகள்
தான் தேவை .
இத்தகைய ஆயிரம் ஆண்டுகள் முந்திய மரபினைப் போற்றும் ஒரு தொல்குடி ஒன்றைத தான் நாங்கள் பொட்டிபுரத்தில் கண்டோம் .அவர்களிடம் தொல் இலக்கியங்கள் ,தமிழர் தொல் அறிவின் தரவுகள் அடங்கிய ஓலைச்சுவடிகள் கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் அவர்களை அணுகினோம் .
இந்த ஓலைச் சுவடி த தேடும் புனிதப் பணிக் கூட எனக்குக் கிடைத்தது ,ஒருத்தற்செயல் எனக் கூற இயலாத விணையின் தொடர்ச்சி என்றுதான் நான் நினைக்கிறேன்
,
ஜெர்மனியை தலையிடமாக கொண்டு தமிழ் மரபு காக்கும் சீரிய பணியைச் செய்துவரும்" தமிழ் மரபு அறக்கட்டளை"என்ற அமைப்பு ஒரு விழா ஒன்றை 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்ப்பாடு செய்திருந்தது .அதில் சிறப்பு விருந்தினராக தஞ்சை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ராஜேந்திரன்அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போது இன்னமும் தமிழ்நாடு எங்கும் தேடுவாரின்றி விரவிக் கிடக்கும் ஓலைச் சுவடிகளின் அவல நிலை பற்றி குறிப்பிட்டார் .
சிறு வயதிலிருந்தே இத்தகைய சிந்தைனையில் ,ஓலைச் சுவடிகளின் பாதுகாப்போரோ ,படிஎடுப்போரோ இன்றி அழிந்து வரும் தமிழர் அறிவைத் தாங்கிய ஓலைச் சுவடிகள் ,குறிந்து கவலைக் கொண்டிருந்த எனக்கு ,துணை வேந்தர் பேச்சு காதில் தேனும் பாலும் சேர்ந்து பாய்ந்தது போல் இருந்தது .
தமிழ்மரபு அறக்கட்டளையின் திருமதி சுபாஷினி டிரமல் எடுத்துக்கொண்ட தீவிர உழைப்பாலும் .,விடா முயற்சியாலும் தமிழ்மரபு அறக்கட்டளை ,தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்துடன் ஓலைச் சுவடி சேகரிப்புக் குறித்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது .
புரிந்துணர்வு ஒப்பந்தம் ----துணைவேந்தர்முனைவர் ராஜேந்திரன் அவர்களும் தமிழ்மரபு அறக்கட்டளை சுபாஷிணியும்
பிறகு இருபிரிவாக பிப் 2010- மார்ச் 2010- வரை பலமாவட்டங்களில் .குக்கிராமங்களில் தெருத்தெருவாக அலைந்து திரிந்து இன்னமும் ஓலைச் சுவடி வைத்திருப்பவர் முகவரி கண்டுபிடித்து ,பின்பு அவர்களிடம் நயந்து பேசி ,அவர்கள் செய்யும் நல்ல காரியத்தின் தன்மையைப் பற்றி விளக்கி அவர்களிடம் இருந்து ஓலைச் சுவடியை தானமாகப் பெறுவோம் .
இவ்வாறு அந்த இருமாதத்தில் பெற்றது தோராயமாக 26,000
ஏடுகள் பெற்றோம் .
அடுத்து அடுத்து செப்டம்பர் 2010மாதம் மட்டும் ஒரே மாதத்தில்
46,000 ஏடுகள் பெற்றோம் .
இந்தச் செய்தியை " தி ஹிந்து " ஆங்கிலபத்திரிக்கை பெருமையுடன் வெளியிட்டது .
ஆனால் எழுதுவதைப்போல் அந்தப்பணி அத்தனை சுலபமாக இருந்ததில்லை .கிட்டத்தட்ட மொத்தம் 15000 km குறுக்கும் நெடுக்குமாக பயணம் செய்திருப்போம் .
எத்தனை எத்தனை காத்திருப்புகள் ,எத்தனை ஏமாற்றங்கள் ,எத்தனை சோதனைகள் அத்தனையும் தாண்டித்தான் இந்த சேகரத்தை செய்ய முடிந்தது .
ஒரு இடத்தில் நிறையஅன்பொழுகப் நேரம் பேசி அவர்களை மனம் இளகச் செய்து ஓலைச் சுவடியை வீட்டில் இருக்கும் பரணில் இருந்து எடுத்து வர சம்மதம் வாங்கி ,நாங்களே ஏறிமூட்டையை இறக்கி ,
தூசியைத்தட்டிவிட்டு மூட்டையைப் பிரித்தால் ,எங்கள் கண்களில் ரத்தக்கண்ணீர் வந்தது .
இத்தனையும் ஓலைச் சுவடிகள்தான் ! ஒரு கிராமத்தில் மூட்டை ஒன்றில் கட்டிவைக்கபட்டிருந்த சுவடிகளின் கதியை பார்த்தீர்களா ?
என்னஎன்ன செய்திகள் அதில் இருந்ததோ ? எத்தனை அறிஞர்கள் கரம் தொட்டு எழுதியதோ ?
நம் தலை முறையில் இவைகளைக் காக்கத்தவறிவிட்டோம் ! .
இனியாவது இந்நிலை வேறு எங்கும் ஏற்ப்படுவதர்க்கு முன் அவைகளை மீட்கவேண்டாமா ?
தமிழர்களான நாம் உண்மையில் அதிர்ஷ்டம் செய்தவர்கள்.
ஆயிரம், இரண்டாயிரம் வருஷத்திற்கு முன் வாழ்ந்த ஒரு கவியின் உள்ளத்தை அறியக்கொடுத்து
வைத்திருக்கிறோம்; அந்த மொழி இன்னும் அதே வடிவில் இருக்கிறது . இன்னும் அதில் உள்ள சொற்கள் நமக்குப்
புரிகின்றன. அதே பொருளில் இன்னும் அதே சொல்
புழக்கத்தில் இருக்கிறது . ஆயிரம் வருடத்திற்கு முந்தைய இத்தாலிய, லத்தீன்
நூல்களை அவற்றைத் தாய் மொழியாகக் கொண்டு வாசிப்பவர் தற்போது இல்லை; ஆயிரம் வருஷத்திற்கு முன்
இருந்த ஆங்கில நூல் எதையும் தற் காலத்து ஆங்கிலேயர்களால் படித்து விட முடியாது.
ஆனால் இது எப்படித் தமிழ் நாட்டில் மட்டும் நிகழ்ந்தது ?இதில்தான் தமிழர் தம் தொல்லறிவு வெளிப்படுகிறது .
தன்னைச் சுற்றி இருந்த இயற்கையின் கொடையான செடி கொடி மரங்கள் இவை களைத் தனது உணவு மற்றும் உடல்
நலம் பேணும் மருத்துவ குணங் களைக் கண்டு அவற்றைத் தக்கவாறு பயன்படுத்த அறிந்த தொல் தமிழ் இனம் மன வழி
, செவி வழி பெற்ற கருத்துக் கோவைகளை வரி வடிவில் மாற்றுவதற்கு ஏற்ற சாதனம் ஒன்றைத் தங்கள் ஆற்றல்மிகு
அறிவால் கண்டனர் .
கற்பக விருக்ஷமான பனை மரத்தின் ஓலைகளின் பெரும் பயன் பாட்டைக் கண்டனர். பனை ஓலைகளில்
எழுதப்பட்டவை எவ்விதப் பராமரிப்பு இல்லாத போதும் குறைந்தது 300 ஆண்டுகளாவது இருக்கும் திறன் அறிந்தனர்
தொடர்ந்த பராமரிப்பு இருப்பின் ஓலைகளின் ஆயுள்
நீடிப்பதையும் கண்டனர் . இவ்வாறு பழந்தமிழர் தொல் இலக்கி யங்கள் , அறிவுச் செல்வங்கள் காலம் காலமாக
ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டுத் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டன. வட இந்தியாவில் பனை ஓலைகள்
கிடைக்காத இடங்களில் பத்திரங்கள் எனப்படும் இலைகளில் எழுதும் வழக்கம் இருந்தது .
.இதுவே தமிழ் நாட்டின் தொல் இலக்கியங்கள் தொடர்ந்து பாதுகாப் பட்டதன் காரணம் ஆனது. தமிழின் குன்றாத
சீரிளைமைக்கு ஓலை களே ஒருவகையில் காரணம் ஆனது .
தொன்ம இலக்கியங்களை ஓலைகளில் பாதுகாத்துப் படிஎடுத்துப் பாதுகாத்து வருங்கால சமுதாயத்திற்கு தங்கள்
மரபின் செல்வங்களாக வழங்கியதே அன்றிருந்த மொழியும்,
இலக்கணமும் இன்னும் ஜீவனுடன் விளங்குவதற்குக் காரணமானது எனலாம் . இன்றும் தமிழின் தொன்மைக்குச்
சான்றாக நமக்குக் கிடைத்துள்ள எண்ணற்ற இலக்கியங்களுக்கும், அறிவுசார் நூல்களுக்கும் காரணம்
ஓலைச் சுவடிகளில் எழுதும் பழக்கமே ஆகும் . பனையின்
கொடையால்தான் நமக்கு ஜீவனுள்ள நமதுதமிழ்மொழியும்
அதன் தொன்மை இலக்கியங்களும் கிடைத்துள்ளன .
.முன்னையோரின் புலமை, அவர்களுடைய கல்வி பண்பாட்டுப் பெருமை முதலியவற்றை அறிந்து கொள்வதற்குத் துணை
நிற்பது ஓலை சுவடிகள் மூலம் அவர்கள் விட்டுச் சென்ற அறிவுசார்ந்த சொத்துக்களேயாகும். சென்ற நூற்றாண்டுவரை
அவற்றைச் செல்வமாக மதித்துப் பூசித்து வந்தனர். சுவடிகள்
இல்லாத வீடுகளே தமிழ் நாட்டில் இல்லை என்று
சொல்லும்படி, அவை சிற்றூர்கள் அனைத்திலும் நீக்கமற
நிறைந்திருந்தன . தமிழின் தொன்மையை அறிவதற்குத்
துணையாக நிற்கும் சங்க நூல்களைச் சுவடிகளில்தான்
எழுதித் தொடர்ந்து போற்றிப் பாதுகாத்தனர். பனை ஓலையை
நன்கு பதப்ப டுத்தி ஒழுங்குபட நறுக்கிச் சுவடிவடிவில்
அமைத்து எழுதினர். இன்றும் தமிழகத்தில்
பல்லாயிரக்கணக்கான ஓலைச் சுவடிகள் தமிழ் நாட்டின்
கிராமங்களில் பரவலாகக் காணப்படுவது நமது
பண்டையோரின் அறிவின் ஆழத்தை நமக்கு எடுத்துக்
காட்டுகின்றன.
சீனர், கிரேக்கர், பினிசியர், உரோமர், எபிரேயர், அர்மீனியர்,
அராபியர் ஆகியோர் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை பைரஸ்
என்னும் ஒருவகை புல்லையே எழுதப்படும் பொருளாகப்
பயன்படுத்தினர். பேப்பர் என்ற சொல்லும் ''பைபரஸ்'' என்னும்
சொல்லிலிருந்து உருவானது என்பர். ஆனால் இவை நமது
தொல்தமிழர் பயன்பாட்டில் இருந்த ஓலைச் சுவடிகளுக்குத்
தரத்தில் ஈடாகாது .
நம் மூதாதையரும்காலம் காலமாக தங்கள் வருங்கால சந்ததியினருக்கு பயன்படுமே என எத்தனை வாஞ்சையுடன் எத்தனையோ முறை இந்தச் சுவடிகளை படியெடுத்து ,மையிட்டு ,கணக்கற்ற முறை அயராமல் இதனைச் செய்து இத்தனைக் காலம் காத்து வைத்துவிட்டனர் .
ஆனால் கடந்த ஐம்பது ஆண்டுகளாக அச்சு இயந்திரமும் ,ஆங்கிலப்படிப்பும் நம்மிடையே பரவலானப்பிறகு ஓலைச் சுவடிகள் படிப்பாரும் முறையாக எழுதுவாரும் இல்லாமல் போனதால் படியெடுக்க ஆளிலாமலும் ,படிக்க இயலாமலும் பல இடங்களில் உபயோகமில்லா பொருள்கள் இடப்பெறும் பரணில் தானே நமது பாரம்பரிய அறிவு சின்னஞ்சிறு கிராமங்களில் இன்னமும் உறங்குகிறது ..
டார்வின் சொன்ன நியதியின் படி "தகுதி படைத்தது மட்டுமே நிலைத்து நிற்கும் " என்பதை மெய்ப்பிபதைப் போல் இன்றும் தமிழகத்தின் மூலை முடுக்குக் கிராமங்களில் கூடஇன்னமும் ஓலைச் சுவடிகள் எப்படியோ காணக்கிடக்கிறதே ? அதிலும் கிடைக்கும் சுவடிகளில் அறுபது விழுக்காட்டுக்கு மேல் சித்தர்களின் மருத்துவ முறைகளும் ,சித்தர்கள் கண்ட மந்திர யந்திர ஞானத்தை விளக்கும் நூல்கள் அதிகம் கிடைக்கின்றதுவே? .
மக்களின் ஆதரவு வாழையடி வாழைஎன இல்லாமல் போனால் எப்படி இப்படி படி எடுத்து இத்தனைக் காலமிந்த சுவடிகள் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் ? .
மக்களுக்கு இந்த ஓலைச் சுவடிகளில் எழுதி இருக்கும் விஷயங்களின் நம்ம்பிக்கை இராமல் போயிருந்தால் ஏன் இதை இத்தனை சிரமம் ஏற்று தொடர்ந்து படி எடுக்கிறார்கள்? .வீட்டிலேயும் மடங்களிலும் ஏன் பாதுகாத்து வைக்கிறார்கள் ? .
அதை முறையாக பயன்படுத்துவோர் அருகிப போனாலும் ,இதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் உயர்ந்தவை ,இவை வரும் சந்ததியினருக்கு பயன்படும் என்ற எண்ணமும் நம்பிக்கையும் நம் மக்களுக்கு குறையாமல் இருந்து வந்திருக்கிறது .
இப்போதெல்லாம் மக்கள் நிறைய இடங்களில் புதிய கான்கீரீட் வீடுகளுக்கு மாறும் போது பழைய ஒலைகுடிசைகளிலேயே தேவை இல்லாத பொருகளுடன் அரிய ஓலைச் சுவடிகளையும் விட்டு விட்டு சென்று விடுகின்றனர் .
ஓலைச் சுவடிகள் கான்கீரீட் வீடுகளுக்கு பொருந்தாதவை என நினைக்கின்றனர் .
பல இடங்களில் இத்தகைய சோக அனுபவங்களைநாங்கள் பெற்றிருக்கிறோம்
"இங்குதான் ஒரு ஆண்டுக்கு முன் பெட்டிநிறைய ஓலைச் சுவடிகள் கிடந்தன ,நாங்கள் தினமும் எடுத்து விளையாடுவோம் " என அந்த கிராமத்து சிறுவர்கள் சிதைந்துக் கிடக்கும் குடிசை வீடுகளை சுட்டிக் காட்டியபோதெல்லாம் ,ஒரு கவித்துவமான மலையாளப்படம் பார்க்கும் உணர்வு எங்களை சூழும் .எங்கள் கண்களில் ரத்தக்கண்ணீர் தான் வடியும் மௌனம் களைய மணி கணக்காகும் .
இவ்வாறு ஓலைச் சுவடியை தேடிளையும் போதுதான் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் ஒரு அடைமழையில்
தேனீ மாவட்டத்தில் நுழைந்தோம் .
தேனியில்அந்த இரவு தங்கிவிட்டு மறுநாள் விடியலிலேயே தேவாரம் என்னும் ஊர் புறப்பட்டோம் .
தேவாரம் என்பது மூவர் பாடிய தெய்வீகப் பாடலை பொதுவாக குறித்தாலும் ,தேவாரம் என்ற சொல் வீடுகளிலேயும் ஆலயங்களிலேயும் இருக்கும் கர்ப்பகிரகங்களையும் குறிக்கும் கல்வெட்டு சொல் என அறிந்திருந்ததால் அந்தப்பகுதியில் ஏதாவது அறிய வகை ஓலைச் சுவடி கிடைக்கக் கூடும் என்ற நம்பிக்கை உள்ளத்தில் இருந்தது .
தேனியில் தேடும் போது நாங்கள் வழக்கமாக எங்கு ஓலைச் சுவடி தேடிப்போனாலும் முதலில் தேடிப்போவது அந்த கிராமத்து கிளை நூலகங்களுக்குத்தான் .ஏனெனில் அதுதானே உள்ளூரின் சரஸ்வதி பண்டாரம் .அங்கேப் போனால் சரஸ்வதியே எங்களுக்கு பலமுறை என்குப்வது என பலவழியில் உணர்த்துவதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம் .
அன்றும் அவ்வாறே கிளை நூலகம் சென்று பேசிக்கொண்டு இருந்த போதுதான் ,அங்கே வந்த இரு கல்லூரி மாணவர்கள் ," ஆணும் பெண்ணும்
இன்னமும் மேலாடை அணியாமல் வாழும் பொட்டிபுரம் " பற்றிக் கூறினார் .
" நாங்கள் அந்த கிராமம் மலை உயரத்தில் இருக்கிறதா" எனக்கேட்டோம் .ஆனால் அந்த மாணவர்களோ பொட்டிபுரம் தேவரத்தில் இருந்து சுமார் இருபது கிலோ மீட்டர் தூரத்தில் சமவெளியில் இருப்பதாகக் கூறியதும் .,எங்கள் ஆவல் இன்னும் அதிகம் ஆனது .
எவ்வாறு இந்த்துனை நாகரீக கிராமங்களிடையே இந்த கிராமம் மட்டும்
பேருக்குத்தக்கபடி கட்டுபொட்டியாக இருக்கிறது என்பதை அறிய துடித்தோம் .
ஆனால் அங்கே போவது அத்தனை சுலபமில்லை என்றார் கிளை நூலகர் சாவதானமாக .நாங்கள் ஏன்சார் சாலை மோசமா ? அல்லது மக்கள்தான் மோசமா என பரபரத்தோம் .
அப்போதே ஓலைச் சுவடி ஈர்ப்பு எங்களுக்குள் உணரஆரபித்துவிட்டது .
நூலகரோ "அதெல்லாம் இல்லை ,உங்களை பொட்டிபுரம் மக்கள் நேரடியாகப் பார்த்துவிட்டால் உங்கள் உடலெங்கும் புண்கள் வநது விடும் .அவர்கள் பார்வை அப்படிப் பட்டது ."
"இது உண்மையா சார்" என மீண்டும் கேட்டோம் .
" உண்மையோ பொய்யோ ,இந்த நம்பிக்கையினால் தான் பொட்டிபுரம் யாரும் போவதில்லை .அவர்களும் இந்த நாகரீக மக்கள் தொந்தரவின்றி நிம்மதியாக வாழ்கிறார்கள் " என்றார்
முன்வைத்த காலை பின்வைக்க விரும்பாத நாங்கள் பொட்டிபுரம் சென்று பார்க்க தீர்மானித்தோம் .அந்த இரு மாணவர்களும் " உங்களுக்கு ஆவது எங்களுக்கும் ஆகட்டும் சார் ,நாங்கள் வழிகாட்ட வருகிறோம்" என முன்வந்தனர் .
ஒருவாறு எங்கள் நால்வர் அணி புறப்பட்டது .செல்லும் வழியிலேயே நான் எங்கள் குழுவினரை எச்சரித்தேன் " .பெண்களை உற்றுப்பார்க்கக் கூடாது .யாரிடம் பேசுவதானாலும் நான் மட்டுமே பேசுவேன் வேறு யாரும் வாயைத் திறக்கக்கூடாது " என தீர்மானித்தோம் .
ஒருவாறு பொட்டிபுரமும் வந்துவிட்டது .
நாங்கள் எதிர்ப்பார்த்தபடி எங்களை யாரும் ஊர் எல்லையில் மறிக்கவில்லை.
ஆண்களும் பெண்களும் இயல்பாக அவரவர் வேலையில் ஈடுபட்டிருந்தனர் .அநேகமாக பெறும் பாலோர் முதற் மரியாதை ராதா மாதிரி ஜக்ககட் போட்டிருக்கவில்லை .ஆண்களும் சட்டை அணிவதில்லை .
எங்களை யாரும் தடுக்காததால் நேரே ஊரின் உள்ளே சென்றோம் .
அங்கே இருந் ஒரு பெரிய வீட்டின் முன் ஊர்தியை நிறுத்தி
"இங்கே யார் கிராமத்தலைவர் எனக்கேட்டோம்"
நாங்கள் நின்ற வீட்டுக்காரர்தான் கிராம தலைவராம்
அவர்பெயர் ஜாக்கையான் என்று கூறி சிலர் அவரை கூப்பிட்டுவர சென்றனர் .
எங்களுடன் வந்த ஒருவர் காரில் இருந்து இறங்கி அங்கே அருகில் இருந்த ஒரு கல்லில் உட்க்கார்ந்தார் .அவ்வளவுதான் சுமார் பத்து பெயர்கள் அவர்மேல் பாய்ந்தனர் அவ்வாறு அலாக்காக தூக்கி ஓட ஆரமித்துவிட்டனர் .
எங்களுக்கோ ஒன்றும் புரியவில்லை .
நான் விரைவாக அவர்களை அணுகி ,என்னங்க ! என்னாங்க பணறீங்க அவரை என ஓடி அவர்களில் இருவரை பிடித்தேன் .
அவர்கள் விறைப்பாக " இவர் எங்கள் சாமிக்கல்லில் உட்க்கார்ந்து விட்டார்"
நான் நயமாக "ஐயா இவருக்கு இந்தக்கல் சுங்கள் சாமிக் கல் என்றுத்தேரியாது .அவரை இந்த முறை மன்னித்து விடுங்கள் நான் உங்கள் தலைவர் ஜக்கயனுக்கு நண்பர் .
தயவு செய்து விட்டுவிடுங்கள் " என வேண்டினேன் .
அவர்களும் ஒருவாறு எங்கள் ஓட்டுனரை விடுவித்தனர் .
அதற்குள் அவர்கள் தலைவர் ஜக்கையன் வந்துவிட்டார் .
நான் தான் அவர் எனக்கு நண்பர் என முன்பே எல்லோரிடமும் கூறிவிட்டேனே ,எனவே சற்று முன்னால் சென்று அவரை கட்டிப்பிடித்துக்கொண்டேன் .அவர்மேல் வீசிய வேப்பெண்ணை வாசத்தையும் பொருட்படுத்தாமல்
அவரை கட்டியனைத்த என்னை தலைவருக்கும் பிடித்துவிட்டது போலும் .அவர் முகத்தில் சிரிப்பு வநது விட்டது என்னை உற்று சில நிமிடம் பார்த்தார்
.அது போதாதா எங்களுக்கு முதலில் ஓலைச் சுவடிகளைப் பற்றி பேச்சை ஆரமிக்காமல் ,அவரின் இரு முழங்கையிலும் அணிந்திருந்த வெள்ளி கேயுரத்தை பார்த்து வியந்து பாராட்டி பேச ஆரமித்தேன் .
தலைவர் இன்னம் மகிழ்ச்சி ஆகிவிட்டார் .கேயூரத்தைக் கழட்டிநான் பார்க்க என கையில் தந்து விட்டார் .
எப்படியும் கால் கிலோவுக்கு குறையாது ,ஆனால் வெள்ளி மிகவும் பழசானதால் அத்தை பளபளபில்லை பல நூற்றாண்டின் வாசம் அதில் அடித்தது .எனன இருந்தாலும் அது நல்ல வில்லை போகும் ஒரு கலை பொருள்தான் .
பிறகு மெதுவாக எங்கள் பயணத்தின் நோக்கம் ,ஓலைச் சுவடிகளை பாதுகாக்க வேண்டியதின் அவசியம் முதலியவற்றைபற்றிய எங்கள் பிரசங்கங்கள் ஆரம்பமானது .
பல நூறு நபர்களை மசியவைக்கும் வசியம் எங்களுக்கு தெரியும் ஆதலால் தலைவர் ஜக்கையாவும் விரைவில் அவரிடம் ஓலைச் சுவடி இருப்பதை ஒப்புக்கொண்டார் ,பின்பு அடுத்து அதைதரவும் ஒப்புக்கொண்டார் .இப்போது சிரிப்பு அவர்களிடம் இருந்து எங்கள் முகத்தில் மாறிவிட்டது .
சக்கையா நாளை காலை பத்து மணிக்கு மேல் பொட்டிபுரம் வந்தால் .அவர் ஓலைச் சுவடிகளை எடுத்து வைத்துக்கொண்டு தயாராக ஈர்ப்பதாகத் தெரிவித்தார் .
அடுத்தநாள் நாங்களும் பொட்டிபுரத்தில் பத்து மணிக்கு சரியாக ஆஜர் ஆனோம் .
அவர் வீட்டில் இருந்தவர்கள் அவர் வேறு இடத்தில் எங்களுக்காக காத்திருப்பதாக ,இடத்தை சொன்னனர் ,
அது ஒரு தனியான கூரை வீடு .அங்கே பரப்பப்பட்டிருந்த மணல்கூட ஒரு தனி ரகமாகவும் ,வாசமாகவும் இருந்தது .
குறைந்தது ஐம்பது வருடமாவது அதை கொட்டி ஆகியிருக்கக்கூடும் .
அங்கே ஜக்கையனைப் பார்க்க இன்னும் இருவர் காத்திருந்தனர் .
அதுதான் அவரின் ரிஜெஸ்டேட்மற்றும் கோர்போரடே அலுவலகம் போலும் .வந்திருந்தவர்கள் ஜக்கையாவிடம் மந்திரிக மருத்துவம் பார்க்க வந்திருந்தனர் .
நானும் தலைவர் ஜக்கையாவும் ,மணலைப்பாருங்கள் நூறாண்டுபழசு !
ஜக்கையா ஓலைச் சுவடிகளை எடுத்து எனது கையில் தந்தார் .அப்போதும்என்னை சில நிமிடம் உற்றுப்பார்த்தார் .
அப்போதெல்லாம் எனக்கு மற்றவர்கள் முன்பே அவர்களின் பார்வையைப் பற்றிக் கூறியது நினைவில் வரவில்லை .எனது கவனம் முழுவதும் அவர்தந்த 12 கட்டுகளைப் பார்ப்பதில் தான் இருந்தது .அத்தனையும் பெரும்பகுதி வைத்தியம் மாந்திரீகம் அடங்கியவை .அதில் கண்பார்த்தல் என்றுக்கூட ஒரு கட்டு இருந்தது .கண்ணினாலேயே நோய் தீர்ப்பது .அதில் நோய் வரவழிக்கும் முறையும் இருக்கும் என எனக்கு அப்போது தோன்றவில்லை .
ஓலைச் சுவடிகளைப் பெற்றுக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டோம் .
விரைவில் அனைத்தையும் படித்து அதில் எனன இருக்கிறது என தன்னிடம் கூறவேண்டும் என ஜெக்கியா கேட்டுக்கொண்டார் .
நானும் ஒப்புதல் கொடுத்தேன் .இன்னுமும் முழுதும் படிக்கவில்லை .
எனன எனன மர்மங்கள் இதில் இருந்து வரப்போகிறதோ ?
இதுவரை மனிதகுலம் கண்டிராத சுவடிகள் அவை !
அப்படித்தான் ஜக்கை யா.எங்களிடம் கூறினார் .
அவர்கைத்தேடி யாரும் வநது சுவடிகளைக் கேட்டதில்லையாம் .
இவர்களும் காட்டியதில்லையாம் .
.என்னமோ என்மேல் ஒரு நம்பிக்கை இறைவன் சித்தம் அனைத்தையும் தந்துவிட்டனர் .
இவைகளை விரைவில் படித்து இவைகளில் எனன இருக்கிறது எனக் கூறுகிறேன் ,என்று கூறி விடை பெற்றேன் .
ஆனால் அடுத்தவாரத்தில் இருந்து உடலில் அரிப்பு ஆரபித்தது புண்கள் ஏற்ப்படலாயின .நான் சுமார் 40,௦௦௦ 000 ஓலைச் சுவடிகளை எனது அறையில் வைத்துக் கொண்டு ஒரு மாதம் தினமும் இரவில் உறங்கி இருக்கிறேன் .
அது காரணமா / அல்லது ஜெக்கியா இருமுறை என்னை உற்றுபார்த்தது காரணமா எனத் தெரியவில்லை .
ஆனால் ஓலைச் சுவடிகளைப் பார்த்து செய்தியாக போட தஞ்சை விருந்தினர் விடுதிக்கு வந்த தி ஹிந்து நிருபரிடம் இந்த கதையைக் கூறியபோது ,நான் எதோ பழைய சம்பவம் கூறுகிறேன் என நினைத்து நான் தனியே பிறகுவந்து உங்கள் கதைகளை அனுபவங்களைக் கேட்க்கிறேன் என்று கூறிப் போய்விட்டார் ,.
ஆனால் அருகில் இருந்து இதைக் கேட்டுக்கொண்டிருந்த விருந்தினர் புலம் காப்பாளர் முனைவர் சுப்பிரமணியம் ,"சார் நான் தேனீ தேவாரம் தான் ,பொட்டிபுரம் ஆட்களைக் கண்டாவே நாங்கள் ஓடி பதுங்கி விடுவோம் .அத்தனை பயம் " என பீதி கிளப்பிவிட்டார் .
ஆனால் எங்கள் மெத்தப்படித்த டாக்க்டரிடம் தான் இதை எப்படி சொல்வது எனத் தெரியவில்லை .
நான் இந்த செய்திகை சொல்லாத வரை டாக்டரின் சோதனைகள் தொடரும் .
எப்படியோ உங்களிடம் சொல்லிவிட்டேன் .
நீங்கள் யாராவது டாக்க்ட்டரிடம் சொல்லிவிட்டால் உங்களுக்குஎனக்கு கிடைக்கும் விருதில் பாதி கொடுத்துவிடுகிறேன் என்று சொரிந்து கொண்டே உறுதிகூறுகிறேன்.
நன்றி யுகமாயினி
அண்ணாமலை சுகுமாரன்
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948
My goal is simple.
It is complete understanding of the universe, why it as it is and why it exists as all !