மு.இளங்கோவன்
புதுச்சேரி
நக்கீரனில் அவர் பெயர் ஜெயபாஸ்கரன் என்றுதானே கொடுக்கப் பட்டுள்ளது, ஏன்
பெயரை மாற்றிவிட்டீர்கள்
விஜயராகவன்
On Aug 24, 2:54 am, மு இளங்கோவன் <muelango...@gmail.com> wrote:
> கவிஞர் செயபாசுகரன் அவர்கள் நாடறிந்த நல்ல கவிஞர்.கட்டுரையாளர்.அண்மையில்
> அமெரிக்காவின் பெட்னா விழாவில் கலந்துகொண்டு அனைவரின் பாராட்டையும்
> பெற்றவர்.பல்வேறு இதழ்களில் பணியாற்றிய பட்டறிவுடையவர்.எளிமையான
> வடிவமாகக் கவிதையை வழங்கி அனைவரையும் கவிதைக்களத்துக்கு அழைத்துச்
> செல்வதில் வல்லவர்.
> இவர் நேர்காணல் இனிய உதயம் இதழில் வெளியானது.கற்று மகிழலாம்.http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=3112
> > புதுச்சேரி- 원본 텍스트 숨기기 -
>
> - 원본 텍스트 보기 -
On Aug 24, 3:50 am, chithan <chithanka...@yahoo.co.in> wrote:
> வணக்கம்
> நக்கீரனில் மட்டுமல்ல அவரே எல்லா இடங்களிலும் பயன்படுத்துவது ஜெயபாஸ்கரன்
> என்றுதான், நாம் யார் அவர் பெயரை மாற்ற? இதே போன்று திருப்பூர் கிருஷ்ணன்
> பெயரை பா. மா.க இலக்கியக் கூட்டத்தில் அழைப்பிதழில் பெயர் மாற்றி
> கிருட்டிணன் என்று அழைக்க கிருஷ்ணன் மருத்துவர் முன்னாலேயே தன் பெயரை
> மாற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அதே நேரம் பா.செயப்பிரகாசம்
> அன்று முதல் இன்றுவரை அப்படியே அழைக்கப்படுகிறார். தன்னை அழைத்தும்
> கொள்ளுகிறார்/ அதை பாராட்டும் அதே வேளையில்
> இதென்ன அடுத்தவர் சம்மதமில்லாமலேயே பெயர் மாற்றும் அசட்டுத் தனமான
> போக்கு?
> சித்தன்
>
சில தமிழ்ப் பேராசிரியர்கள் அப்படியும் எழுதுகிறார்கள். ஏன்? என்று நான்
கேட்டபோது அவர்கள் சொன்ன பதில்: அப்படியும் ஒருமுறை செந்தமிழில்
நீண்ட நெடுங்காலமா உண்டு என்பதை மற்றோருக்கும், மாணவருக்கும் கற்பிக்க
என்றார்.
தமிழர்கள் இப்பொழுது இரண்டு தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடுகிறார்கள்.
அதுபோல இம்முறையை வைக்க வேண்டியதுதான். நானும் மு. இளங்கோவன்
போன்றோரிடம் வரிவடிவத்தில் சில மாற்றங்கள் உள்ள முறையும்
வரவேண்டும் (அதாவது, உ/ஊ உயிர்மெய்களை விலங்கு பூட்டிய தளைகளுடன்
எழுதுவது, விலங்குகளை உடைத்து தனியாக மற்ற உயிர்மெய்கள்
போல் எழுதும் சீர்முறை) என்பதுண்டு.
ஜெயபாஸ்கரன் அமெரிக்காவில் உள்ளபோது செயபாசுகரன் என்று
எழுதிய பதிவுகள் வெளியாயின. படித்துப் பாருங்கள்:
http://maniyinpakkam.blogspot.com
எதார்த்தமாகப் பார்த்தால், இருமுறைகளும் இருக்கும்
என்றே தோன்றுகிறது.
நா. கணேசன்
`தமிழ்மரபு` - என என்றும் அசையாத , மாராத கருத்து இருப்பதாக வைத்துக்
கொள்வோம் - அப்படி ஒன்றும் இல்லை. அதற்காக மற்றவர்கள் அதிகாரபூர்வமாக
அறியக்கூடிய, அவருக்கு இச்சையான பெயரை மாற்றலாமா? மேலும் `தமிழ்மரபின்`
படி ஆண்கள் வேஷ்டிதான் அணிந்து வேலைக்கு போகவேண்டும், பெண்கள் சேலை
உடுத்தித் தான் எப்பொழுதும் இருக்க வேண்டும் என மற்றவர்களை வறுப்புருத்த
முடியுமா? நீங்களே ஒத்துக் கொள்வீர்களா? `தமிழ்மரபு` கம்பன்படி
ஆணிவைத்து, ஓலையில் தானே எழுதவேண்டும்? ஏன் கணீனி, கீபோர்ட் எல்லாம்.
மதிப்புடன்
விஜயராகவன்
அந்தப் பக்கத்தில் செயபாசுகரன் என்ற சொல்லே இல்லை, ஜெயமோகன் என்ற
வார்த்தை இருக்கு.
> எதார்த்தமாகப் பார்த்தால், இருமுறைகளும் இருக்கும்
> என்றே தோன்றுகிறது.
>
> நா. கணேசன்
பரவலாக அறியப்படும் முறைகளை மாற்றினால் குழப்பம்தான் வரும். அந்த
குழப்பத்தினால் தான் பலர் தமிழை முழுவதுமாக தவிற்ப்பர். ஆங்கிலத்தை
குழப்பம் இல்லாமல் எழுதமுடியும் போது, தமிழில் ஏன் குழம்ப வேண்டும்,
ஒவ்வொரு அடியிலும் எது சரி, எது தப்பு என்ற எண்ணத்தை உண்டாக்குவது மொழி
பிரயோகத்தை தடுப்பதாகும்.
On Aug 24, 5:46 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> On Aug 24, 11:18 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> > On Aug 24, 3:50 am, chithan <chithanka...@yahoo.co.in> wrote:
>
> > ஜெயபாஸ்கரன் அமெரிக்காவில் உள்ளபோது செயபாசுகரன் என்று
> > எழுதிய பதிவுகள் வெளியாயின. படித்துப் பாருங்கள்:http://maniyinpakkam.blogspot.com
>
> அந்தப் பக்கத்தில் செயபாசுகரன் என்ற சொல்லே இல்லை, ஜெயமோகன் என்ற
> வார்த்தை இருக்கு.
>
நிறைய பதிவுகளில் செயபாசுகரன் என்று மணி எழுதியிருக்கிறார்:
http://maniyinpakkam.blogspot.com/2009/07/fetna_22.html
அப்பதிவுகளை கவிஞர் செயபாசுகரன் படித்தார்.
செயபாசுகரனை அழைத்த பெட்னா அழைப்பிதழ் எனக்கு வந்தது.
செயபாசுகரன் என்றே பார்த்த நினைவு.
> > எதார்த்தமாகப் பார்த்தால், இருமுறைகளும் இருக்கும்
> > என்றே தோன்றுகிறது.
>
> > நா. கணேசன்
>
> பரவலாக அறியப்படும் முறைகளை மாற்றினால் குழப்பம்தான் வரும். அந்த
> குழப்பத்தினால் தான் பலர் தமிழை முழுவதுமாக தவிற்ப்பர். ஆங்கிலத்தை
> குழப்பம் இல்லாமல் எழுதமுடியும் போது, தமிழில் ஏன் குழம்ப வேண்டும்,
> ஒவ்வொரு அடியிலும் எது சரி, எது தப்பு என்ற எண்ணத்தை உண்டாக்குவது மொழி
> பிரயோகத்தை தடுப்பதாகும்.
நல்ல தமிழை மு. இளங்கோ போன்றோர் நன்கறிவர்,
அவர்கள் கற்பிப்பதால் தமிழ் வளரும்.
நல்ல தமிழ் நடையைப் பல பதிவர்கள் பேராசிரியர் மு. இளங்கோ
போன்றோரிடமிருந்து கற்பதாக அறிவேன். பலருக்கும் பரிந்துரை
மு. இளங்கோவனார் எழுத்துக்களைச் செய்வது வழக்கம்.
நா. கணேசன்
> நிறைய பதிவுகளில் செயபாசுகரன் என்று மணி எழுதியிருக்கிறார்:http://maniyinpakkam.blogspot.com/2009/07/fetna_22.html
அந்த பக்கத்தில் ஜெயபாசுகரன் என்ற பேர் இருக்கு.
இப்போது ஒரே பெயரை 3 முறைகளாக எழுதுகிறார்கள்
ஜெயபாஸ்கரன் ( அவர் சொந்தப் பெயர்)
செயபாசுகரன்
ஜெயபாசுகரன்
செயபாஸ்கரன்
இந்த அடிப்படையான, சிம்பிள் விஷயத்திலேயே ஏன் இவ்வளவு மாற்றங்களும்,
குழப்பங்களும். நம் விருப்பு வெறுப்புகளை மற்றவர்கள் மீது
திணிக்கலாமா ? நீங்கள் சுட்டிக்காடியுருக்கும் பக்கத்திலேயெ ஜெயமோகன்,
ராஜேந்திரன், ஜான் போன்ற பெயர்கள் உள்ளன, அதனால் அந்த மணி என்பவரின்
கீபோர்டில் J எழுத்து செயலற்றுவிட்டது என நான் நம்பவில்லை.
விஜயராகவன்
On Aug 24, 6:11 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> அதனால் அந்த மணி என்பவரின்
> கீபோர்டில் J எழுத்து செயலற்றுவிட்டது என நான் நம்பவில்லை.
>
> விஜயராகவன்
செயபாசுகரன் என்றெழுதும் முறை தமிழில்
என்றும் இருக்கும்.
நா. கணேசன்
செயபாசுகரன் என்னும் பெயருக்கு
ஜெயபாஸ்கரன் என்று ஒலிதான் என்று
உறுதியாய்த் தெரிவிக்கணும், தமிழ் இலக்கண
மரபு வழியில் எழுதும்போது என்றால்,
வலைப்பக்கங்களில் bold-face செ, சு இரண்டுக்கும்
செயபாசுகரனில் பயன்படுத்தலாம்.
உ-ம்: ஜடாயு எழுதியுள்ள சர்வக்னர் பற்றிய பதிவு:
voicing உள்ள வல்லின எழுத்துப் போலச் செய்வதும்
தகும்.
http://www.tamilhindu.com/2009/08/thiruvalluvar-and-sarvajna/
நா. கணேசன்
On Aug 24, 3:50 am, chithan <chithanka...@yahoo.co.in> wrote:
தமிழ்ப் புலமை நடாத்தும் ஆசானே,
நல்ல காட்டு - ”சானகி நகுவள் என்று நாணத்தால் சாம்புகின்றான்”
சுவைத்தேன்.
வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே. 5
சிதைந்தன வரினும் இயைந்தன வரையார். 6
தொல்காப்பியம் தமிழ் மொழிக்கு வரம்பு காட்டும் வரை,
செயபாசுகரன் தமிழ்தான்.
நா. கணேசன்
> தொல்காப்பியம் தமிழ் மொழிக்கு வரம்பு காட்டும் வரை,
> செயபாசுகரன் தமிழ்தான்.
தொல்காப்பியம் கிபி 5ம் நூற்றாண்டு தமிழ் வரை வரம்பு கட்டியது, 21ம்
நூற்றாண்டு தமிழை 1500 ஆண்டுகள் பிந்தள்ள வேண்டும் என்பது சாத்தியமில்லை.
தொல்காப்பியம் விவசாய சமுதாயம் ஏற்பட்டதற்கு முன்பு எழுதப்பட்டது, அதன்
அடிப்படை சிறிய அரசியல் சிதறுண்ட மனிதக் கூட்டங்கள். தற்கால அர்சியல்,
தொழில், சர்வதேச வணிக சமுதாயத்திற்கு 1500 வயதான இலக்கணத்தை இழுப்பது,
பிற்போக்குவாதம்.
ஆங்கில உரைநடைக்கு யாராவது 10 நூற்றாண்டு பீவுல்ஃப் அல்லது ஆங்கிலோ-
சாக்ஸன் கிரானிகிள்ஸ் இலக்கணத்தை இழுக்கின்றனரா?
http://en.wikipedia.org/wiki/Beowulf
http://en.wikipedia.org/wiki/Anglo-Saxon_Chronicle
நா. கணேசன்
பொது இலக்கணம் சிலர் சில இதழ்களில் கடைப்பிடிப்பது அல்ல. அது பலர் , பல
இடங்களில் பயன்படுத்துவது.
அவ்வகையில் தவறில்லை.
தாங்கள் பேசும் எழுத்துச் சீர்த்திருத்தம் வந்த பின் பழைய தமிழ் எப்படி
மறந்து போகுமோ, அது போல்தான் இதுவும். அப்போது யாராவது இப்படி தமிழ் ஒரு
காலத்தில் இருந்தது என்று எழுதுவார்கள். சில குழுக்கள் இருக்கும். அதை
நாமும் பாராட்டுவோம்.
ஆனால், பெயர் என்பது ஒருவருடைய சுயம். அதில் என் மூக்கை நுழைக்க எனக்கு
உரிமையுண்டா? என்பதே கேள்வி.
தமிழில் செந்தமிழ், கொடுந்தமிழ் என்றெல்லாமுண்டுதான். பெரியாழ்வார்
`சீதரா!` என்று எழுதிவிட்டு, வீட்டில் ஸ்ரீதரா என்றுதான் விளிப்பார்.
ஆனால், இங்கு இலக்கியம் எழுதவில்லை. பொதுச்சபையில் ஒருவர் பெயரை
எழுதுகிறோம். அழைக்கிறோம். அப்போது இந்த விதி பொறுந்தாது.
க.>
On Aug 24, 8:26 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2009/8/24 N. Ganesan <naa.gane...@gmail.com>:
சிறீதரன் என்றெழுதி ஸ்ரீதரன் என்றும் படிப்பதுண்டே.
செயகாந்தன் என்றெழுதி ஜெயகாந்தன் என்றும் படிக்கலாமே
கணேசன் gaணேசன் என்பதில்லையா அதுபோல்.
வலைப்பக்கத்தில் bold-face கொடுக்கலாம்.
கவிஞர் செயபாசுகரனுக்கு அவர் பெயரைத் தமிழில்
எழுதுவதில் பிரச்சினையில்லை.
நா. கணேசன்
> க.>
நீங்கள் அவருடைய ஸ்போக்ஸ்மேனா? அவருடைய உண்மையான உணர்வுகள் உங்களுக்கு
எப்படி தெரியும்? ஒரு கவிஞர் - மற்றவர்கள் செலவில் மற்றநாட்டுக்கு சென்று
சொற்பொழிவு நடத்தும் போது - ஓரளவு டிப்ளோமாடிக் ஆக இருப்பார். அதற்காக
அவர் பெயரை மாற்றலாமா? இதுதான் கண்ணியமா?
திரு.கணேசனார் அவர்கள் எடுத்துக்காட்டியதுபோல் வடசொற்களைப்
பயன்படுத்தும்பொழுது
வட எழுத்துகளை நீக்கி எழுத வேண்டும் என்பது தமிழ் இலக்கண மரபு.
ஒவ்வொரு மொழியையும் இவ்வாறு வழங்க வேண்டும் எழுத வேண்டும் என்பது
தொல்காப்பியர் போன்ற ஆன்றோர் கருத்து.அதனைப் பினபற்ற மாட்டேன் என்று
அடம்பிடிப்பது மொழிச் சிதைவுக்கு வழிவகுக்கும்.இவ்வாறு
அணைகட்டி,வரம்பிட்டு மொழியைப் பாதுகாக்காமல் இருந்திருந்தால் பலரும்
நூற்றாண்டுகள்தோறும் செய்த தமிழ் அழிப்பு வேலைகளால் தமிழ்மொழி என்ற ஒன்று
இல்லாமல் போயிருக்கும்.
தமிழ்நாட்டை ஆங்கிலத்தில் எழுதும் பொழுது TAMILNADU என்று ஏன் இவ்வாறு
எழுதுகின்றீர்கள். THAMIZHNADU என்று எழுத வேண்டியதுதானே.
புதுச்சேரி என்பதை PUDUCHERRY என்று ஏன் எழுதுகின்றீர்கள்.PUDHUCHERRY
என்று எழுத வேண்டியதுதானே.ஆங்கிலம் என்றால் மரபு.தமிழ் என்றால் தாழ்வா?
மொழியறிவு பெற்றவர்கள் மொழிகுறித்து சொல்லும் நல்ல கருத்துகள் எனில்
ஏற்றுக்கொள்ளத் தயாக்கம் ஏன்? மருத்துவர் நோய் முதல் நாடி தரும் மருந்தை
ஏற்காமல் உங்கள் விருப்பத்துக்குக் கடையில் தெரியும் வண்ண மாத்திரைகளை
எடுத்து வாயில் போட்டால் உயிருக்கு உலைவைத்த கதையாக மாறும்.அதுபோல்
அவரவர் விருப்பப்படி மொழியை ஆள முனைந்தால் மொழி காணாமல்போகும்.
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்(தமிழ்மறை)
> திரு.கணேசனார் அவர்கள் எடுத்துக்காட்டியதுபோல் வடசொற்களைப்
> பயன்படுத்தும்பொழுது
> வட எழுத்துகளை நீக்கி எழுத வேண்டும் என்பது தமிழ் இலக்கண மரபு.
திரு.கணேசனாரே `தமிழ் இலக்கண மரபு` என சொல்லுவாரே தவிற, அவர் பேசும்/
எழுதும் மொழி 21ம் நூற்றாண்டு தமிழ்தான், அது 21ம் நூற்றாண்டு தமிழை
ஒத்துதான் இருக்கும்
> ஒவ்வொரு மொழியையும் இவ்வாறு வழங்க வேண்டும் எழுத வேண்டும் என்பது
> தொல்காப்பியர் போன்ற ஆன்றோர் கருத்து.அதனைப் பினபற்ற மாட்டேன் என்று
> அடம்பிடிப்பது மொழிச் சிதைவுக்கு வழிவகுக்கும்.இவ்வாறு
> அணைகட்டி,வரம்பிட்டு மொழியைப் பாதுகாக்காமல் இருந்திருந்தால் பலரும்
> நூற்றாண்டுகள்தோறும் செய்த தமிழ் அழிப்பு வேலைகளால் தமிழ்மொழி என்ற ஒன்று
> இல்லாமல் போயிருக்கும்.
யார் இந்த `பலர்` - தமிழ் அழிப்பு வேலை செய்தவர்? ஒரு மொழியை பேசலாம்,
அல்லது வேறு மொழியை பேசலாம், எப்படி ஒரு மொழியை `அழிப்பது` என்பது
புரிதற்கு அப்பால் உள்ளது. மொழி நம் செய்முறை - அது அழிப்பதற்கு ஒரு
சாமான் இல்லை.
> தமிழ்நாட்டை ஆங்கிலத்தில் எழுதும் பொழுது TAMILNADU என்று ஏன் இவ்வாறு
> எழுதுகின்றீர்கள். THAMIZHNADU என்று எழுத வேண்டியதுதானே.
> புதுச்சேரி என்பதை PUDUCHERRY என்று ஏன் எழுதுகின்றீர்கள்.PUDHUCHERRY
> என்று எழுத வேண்டியதுதானே.ஆங்கிலம் என்றால் மரபு.தமிழ் என்றால் தாழ்வா?
ஆங்கிலத்தில் அப்படி எழுதுவது, convention not Tradition. கன்வென்ஷன் நம்
சௌகரியத்திற்கு பயன்படுத்துவது, நாம் ஒவ்வொரு வார்த்தையையும் ஆதிமூலம்
இருந்து அளந்து கொள்ள முடியாது, அதனால் மற்றவர்கள் எப்படி
பயன்படுத்துகின்றனரோ, அப்படியே செய்கிறோம். 30 வருடம் முன்பு, மெட்ராஸ்
மாகாணம் என சொல்லப்பட்டது, இப்போது TAMILNADU. யாரும் 2000 ஆண்டு, மரபு
என உணர்சி கொட்டுவதில்லை. நாளையே தமிழ்நாடு அரசாங்கம் THAMIZHNADU என ஆணை
பிறப்பித்தால், நாம் எழுதுவதும் மாறும். TAMILNADU என்பது உத்தியோக
பூர்வமான பெயர். அப்படித்தான் சொந்த பெயர்களையும் எழுத வேண்டும்.
விஜயராகவன்
On Aug 23, 8:54 pm, மு இளங்கோவன் <muelango...@gmail.com> wrote:
> கவிஞர் செயபாசுகரன் அவர்கள் நாடறிந்த நல்ல கவிஞர்.கட்டுரையாளர்.அண்மையில்
> அமெரிக்காவின் பெட்னா விழாவில் கலந்துகொண்டு அனைவரின் பாராட்டையும்
> பெற்றவர்.பல்வேறு இதழ்களில் பணியாற்றிய பட்டறிவுடையவர்.எளிமையான
> வடிவமாகக் கவிதையை வழங்கி அனைவரையும் கவிதைக்களத்துக்கு அழைத்துச்
> செல்வதில் வல்லவர்.
> இவர் நேர்காணல் இனிய உதயம் இதழில் வெளியானது.கற்று மகிழலாம்.http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=3112
>
> மு.இளங்கோவன்
> புதுச்சேரி
http://panimalar.blogspot.com/2009/07/2009-2.html
(பெட்னா 2009) வட அமெரிக்கா தமிழ்ச்சங்க பேரவை - பாகம் 2
முதல் இரண்டு நாட்களுக்கு பிறகு இறுதி நாளான மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள்
அனைத்தையும் இலக்கிய நிகழ்சியக அமைத்து இருந்தார்கள் விழா குழுவினர்கள்.
இலக்கிய நிகழ்ச்சிகளாக திரு.தமிழருவி மணியன், திரு.சிலம்பொலி செல்லப்பன்,
கவிஞர் திரு.செய பாசுகரன் அவர்கள் வழங்கினார்கள்.
இந்த இலக்கிய கூட்டம் மிகவும் ஆழ்ந்த கருத்துக்களை கொண்ட கூட்டமாக
அமைந்தது என்றால் அது மிகையாகாது. அவரவர் பங்குக்கு மிகவும் ஆழமாகவும்
அழகாகவும் உதாரணங்களுடன் விளக்கினார்கள்.
சிலம்பொலி ஐயா விளக்கிய சிறப்பு நாடக நிகழ்சியும், தமிழ் இலக்கியங்களில்
இருந்து இலக்கிய உதரணங்களை தமிழர்கள் காட்ட தவறுவதையும் மிகவும்
வருத்தமாக ஆழ்ந்த கருத்துகளுடனும், தகுந்த உதாரணங்களுடன் விளக்கினார்கள்.
கவிஞர் ஐயா செய பாசுகரன் அவரது பங்காக சொன்ன மையில், கைப்பை, சாமியார்
கவிதைகள் மிகவும் அருமை. மகிழ்ந்தோம் சிரித்தோம் ஒவ்வொரு கவிதைக்கும்
அவ்வளவு நேரம் சிரித்தோம். உண்மையிலே புதுக்கவிதைகள் அழகுதான், அவர்
குறிப்பிட்டது போலே.
நிகழ்ச்சிகளுக்கு ஒப்புக்கொண்டதை போல் வைரமுத்து விழா மேடைக்கு ஊரில்
இருந்தும் வராமல் போனதை பார்க்கும் போது மிகவும் வருத்தமா இருந்தது.
நிறைவுரையில் அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்கள். முனைவர். இரா
திருமுருகன் அவரது ஆராய்ச்சி தொகுப்பான காவடி சிந்துவையும் எங்களிடம்
கொடுத்து அனுப்பினார்கள். மனதுக்கு நிறைவாகவும், மகிழ்ச்சியகவும் விழா
மண்டபத்தை விட்டு சென்றோம். வெளியே வந்தும் விழா ஏற்பாட்டாளர்களையும்
முக்கிய விருந்தினர்களையும் தனி பட்ட முறையில் பார்த்து
விடைபெற்றுக்கொண்டு வருவதற்கு கூடுதலாக ஒரு மணி நேரம் பிடித்தது.
வாழ்க பெட்னாவின் சேவை வாழ்க அந்த குழுவினர்கள்.
Posted by பனிமலர்
வாடகை ....
வாடகை
ஆயிரம் ரூபாய்.
குடிநீருக்கு
ஐம்பது.
மின்சாரத்திற்கு
மாதந்திரக்
குத்துமதிப்பாக
இருநூறு.
முறைவாசலுக்கும்
கழிவறைக்கும்
முப்பது ருபாயாம்.
ஆகமொத்தம்
ஆயிரத்து இருநூற்று
எண்பது ருபாயை
தேதி தவறாமல்
கொடுத்து வருகிறேன்
வீட்டுக்காரனுக்கு.
நாள் கடத்தாமல்
வாடகை தருவதாக
என்னை
வியந்து போற்றுகிறான்
வீட்டுக்காரன்.
அவனிடம்
சொல்லிக் கொள்வதில்லை
நான்.
கொடுக்கிற வாடகை,
வீட்டருகே கூவும்
வேப்பமரத்துக் குயிலுக்காகவும்
உனக்குத் தெரியாமல்
வந்து போகும்
காற்றுக்காகவும் தான்
என்று.
> வாழ்க பெட்னாவின் சேவை வாழ்க அந்த குழுவினர்கள்.
என்ன சொன்னாலும், ஒருவர் பெயரை இப்படி சொதப்புவது - அதுவும் தாங்கள்
அழைத்த அதிதியை சொதப்புவது சரி இல்லை. ஒருவர் விருப்பத்தை தெரிந்து
கொள்ளாமல், ஜெயபாஸ்கர் என்பவரின் பெயரை இரண்டாக துண்டித்து செய பாசுகரன்
என்பது எழுதுவது சரி இல்லை.
நான் உலகத்தில் நடப்பதெல்லாம் சரி கட்டப்போவதில்லை. ஆனால் இக்குழுவில்,
இந்த பிரச்சினை வெளிவந்ததால், சில எண்ணங்களை வைத்தேன். இந்த
விவாதத்திற்கு ஆரம்பம் பெட்னா இல்லை, ஜெயபாஸ்கரனைப் பற்றி இளங்கோவன்
எழுதியது.
விஜயராகவன்
ஆம். அருமையான கருத்து.
மீக்குறி (அ) தடிப்பான் இட்டும் காட்டலாம்.
புதிதாகத் தமிழ் எழுதுவோர் பலருக்கும்
பயனுள்ளதாய் இருக்கும். 3 ஆண்டுகள்
தொடர்ந்து எழுதுவோர் எழுத்துக்கள்
இலக்கணத்துக்கு இயைந்து வருவதைப்
பார்க்கிறோம்.
நா. கணேசன்
On Aug 24, 1:34 pm, மு இளங்கோவன் <muelango...@gmail.com> wrote:
> தாங்கள் எழுதும் தமிழ் பலவகையிலும் பிழைபடவும் அயற்சொல் கலப்பு
> வகைதொகையின்றியும் உள்ளது.முதலில் பிழையின்றி எழுதப் பழகுங்கள்,பின்னர்
> உரையாடல் தொடர்வோம்.ஒற்றுப்பிழையும்,பிறமொழிச்சொற் கலப்பும் இல்லாமல்
> கல்கி,மு.வ.போன்றவர்கள் எழுதிய எளிய நடையில் எழுதுவது சிறப்பு.அதனைக்
> கற்கவும்
> அன்புள்ள
> மு.இளங்கோவன்
> புதுச்சேரி
பரஞ்சோதி முனிவரின் பாடல் நினைவுகூர வைக்கிறது:
பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை
மண்ணி டைச்சில விலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணி டைப்படக் கிடந்ததா வெண்ணவும் படுமோ?
நா. கணேசன்
மு.இளங்கோவன் அவர்களுக்கு
அயற்சொல் கலப்பை தவிற்பதென்றால், இங்கு பலவர் எழுதமட்டார்கள். கல்கி,
முவ போன்றோர் சம்பளத்திற்காக உழைத்தவர்கள், அதனால் தங்கள்
நிர்வாகத்திற்கு மனம்கோணாமல் எழுதினார்கள், மேலும் அவர்களுக்கு ஒரு
எடிடர் குழுவே செயல்பட்டிருந்தது, அவர்கள் தவறு எதுவாவது இருந்தால்
திருத்துவதற்கு. அவர்களுக்கு ஒரு படிப்பவர் வட்டம் இருந்து, அதனால்
பிழைப்பு நடத்தினர். என் ஊதியம் தமிழ் எழுதி வருவதன்று - அதனால் ஊதியம்
வாங்காதவர்களிடமிருந்து , மொழி பற்றிய அறிவுரைகளை கேட்பதில்லை - அதுவும்
என் பெயரை சரியாக எழுதாதவர்கள் மொழி பற்றிய அறிவுரை செய்வது வியப்பாக
உள்ளது.
உங்கள் அக்கறைக்கு நன்றி
விஜயராகவன்
கவிஞர் செயபாசுகரன் நல்ல தமிழில் அவர் பெயர் எழுதுவதைப்
பற்றிக் கவலைப்படுவதில்லை. தமிழ் மரபை வளர்க்கும்
கண்ணன் நடராசன் கிரந்தம் இன்றி எழுதுகிறார்.
ஆக, நடராஜன், நடராசன் என்றும், ஜெயபாஸ்கரன், செயபாசுகரன்
என்றும் எழுதப்படலாம் அல்லவா?
புஹாரி என்னும் கவிஞர் தமிழில் முதல் கூகுள் குழு
தோன்றி மரபு வளர்ப்பவர். சொல்லி விளக்கியபின்
புகாரி ஆனார். கூத்தாநல்லூர் ஷாபு சாபு என்றே
கையெழுத்திடுகிறார். கிறிஸ்தவம், கிறித்துவம்
என்றும் எழுதப் படுகிறது.
மொழிமரபு தெரியாமல் வைக்கப்பெற்ற பெயர்களை
மரபை விளக்கும் போது இசுலாமியர், கிறித்துவர்
பெயர் மாற்றங்களைப் பார்க்கிறோம்.
வடமொழிப் பெயர்கள் பலவும் தமிழ் இலக்கியத்தைப்
பார்த்தால் தமிழாக்கத்தில் கிடைக்கின்றன.
ஜானகி என்பதுதான் பெயர். எனவே சானகி
என்று எழுதக் கூடாது என்றா கம்பன் நிறுத்தி விட்டான்?
அம் மரபை விட்டுவிட முடியாதல்லவா?
நா. கணேசன்
On Aug 24, 2:52 pm, NATARAJAN SRINIVASAN <engee...@gmail.com> wrote:
> வடமொழிச் சொற்களை கிரந்த எழுத்துகள் கலந்து எழுதுவது தமிழரின் நீண்டநாள் மரபு.
> இந்து மத பெயர்கள் மட்டுமல்ல முகமதிய மற்றும் கிருத்துவப் பெயர்கள் கூட கிரந்த
> எழுத்துகள் கலந்தே எழுத வேண்டியிருக்கிறது. இவ்வாறு பெயர் கொண்டிருப்பவர்களை
> தமிழர்கள் அல்லர் என்று சொல்லிவிட முடியாதே! இன்னொருவரின் பெயரை அவர்
> விரும்புமாறு எழுதுவதும் அழைப்பதுமே முறை. அவர் விரும்பாதபோதும் அவர் பெயரை
> தமது கோட்பாட்டுக்கேற்ப மாற்றிச் சொல்லுதல் எவ்விதம் சரி? பல நூற்றாண்டுகளாக
> நடைமுறையில் இருக்கும் இவ்வெழுத்துகளின் மேலுள்ள ஒவ்வாமையால் மற்றோரைப்
> புண்படுத்துதல் ஏற்பதற்கில்லை.
>
> நடராஜன்.
>
> 2009/8/25 விஜயராகவன் <viji...@gmail.com>
நேர்காணலை - கற்பதா? வாசிப்பதா? தமிழாசிரியர் விளக்கவும்.
இரண்டாவதாக ஜெயபாஸ்கரனின் பெற்றோர் வைத்த பெயரை மாற்றுவதற்கு அவருக்கே
( ஜெயபாஸ்கரனுக்கு ) உரிமையில்லை என்பது என்வாதம்.
இதில் மூன்றாம் நபர் - வேண்டாத வேலை
து.குமரேசன்
On Aug 24, 6:54 am, மு இளங்கோவன் <muelango...@gmail.com> wrote:
> கவிஞர் செயபாசுகரன் அவர்கள் நாடறிந்த நல்ல கவிஞர்.கட்டுரையாளர்.அண்மையில்
> அமெரிக்காவின் பெட்னா விழாவில் கலந்துகொண்டு அனைவரின் பாராட்டையும்
> பெற்றவர்.பல்வேறு இதழ்களில் பணியாற்றிய பட்டறிவுடையவர்.எளிமையான
> வடிவமாகக் கவிதையை வழங்கி அனைவரையும் கவிதைக்களத்துக்கு அழைத்துச்
> செல்வதில் வல்லவர்.
> இவர் நேர்காணல் இனிய உதயம் இதழில் வெளியானது.கற்று மகிழலாம்.http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=3112
>
ஜெயபாஸ்கரன் எண்ணங்களைப் பற்றி யாருக்கும் தெரியாத பட்சத்தில், ஏன் அதையே
குறிப்பிடுகிறீர்கள்?
தமிழ் மரபை வளர்க்கும்
> கண்ணன் நடராசன் கிரந்தம் இன்றி எழுதுகிறார்.
இன்னும் சிலர் கிரந்தத்துடன் மரபை வளர்க்கின்றனர்
> ஆக, நடராஜன், நடராசன் என்றும், ஜெயபாஸ்கரன், செயபாசுகரன்
> என்றும் எழுதப்படலாம் அல்லவா?
ஒருவர் பரவலாக தெரியப்படும், அதிகாரபூர்வமான பெயர்களை அப்படியே
பயன்படுத்த வேண்டும்.
>
> புஹாரி என்னும் கவிஞர் தமிழில் முதல் கூகுள் குழு
> தோன்றி மரபு வளர்ப்பவர். சொல்லி விளக்கியபின்
> புகாரி ஆனார். கூத்தாநல்லூர் ஷாபு சாபு என்றே
> கையெழுத்திடுகிறார். கிறிஸ்தவம், கிறித்துவம்
> என்றும் எழுதப் படுகிறது.
நல்ல பண்பு என்பது மற்றவர்களை எப்படி அவர்கள் விருப்பப்படி அழைக்க
வேண்டும், என தெரிந்து அப்படி நடக்க வேண்டுமே தவிற, மற்றவர்களை தங்கள்
விருப்பு படி மாற்றிக் கொள்ள வேண்டும் என வற்புருத்தல் அல்ல.
> மொழிமரபு தெரியாமல் வைக்கப்பெற்ற பெயர்களை
> மரபை விளக்கும் போது இசுலாமியர், கிறித்துவர்
> பெயர் மாற்றங்களைப் பார்க்கிறோம்.
> வடமொழிப் பெயர்கள் பலவும் தமிழ் இலக்கியத்தைப்
> பார்த்தால் தமிழாக்கத்தில் கிடைக்கின்றன.
தமிழ் மரபின் சாக்கில் மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுப்பவர்கள் , தமிழ்
மரபின் படி உடை உடுத்துகின்றனரா, சாப்பிடுகின்றனர? ஆங்கிலமற்ற தமிழில்
பேசுகின்றனரா, எண் எழுதுகின்றனரா? `தமிழ் மரபு` என்பது பம்மாத்து, ஒரு
கபட நாடகம்.
> ஜானகி என்பதுதான் பெயர். எனவே சானகி
> என்று எழுதக் கூடாது என்றா கம்பன் நிறுத்தி விட்டான்?
> அம் மரபை விட்டுவிட முடியாதல்லவா?
>
> நா. கணேசன்
மரபு வேண்டுமென்றால் நீங்கள் வேண்டுமென்றால் உங்கள் குழந்தைகளுக்கு சானகி
என பெயரிடுங்கள், ஆங்கிலத்தில் Saanaki என ஆவணங்களில், பாஸ்போர்டுகளில்
கொடுங்கள் , ஆட்சேபணையே இல்லை. மற்றவர்களுக்கு மரபு பற்றி அறிவுரை சொல்ல
வேண்டாம்.
மற்றவர்களிடம் இருந்து அடிக்கடி உபதேசம் பெருவது, மானுடத்தின் எவ்வளவு
பெரிய பாரம் என உணருங்கள். மற்றவர்கள் கேட்காத உபதேசங்கள் யாருக்கும்
பிடிப்பதில்லை.
On Aug 24, 5:44 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> On Aug 24, 9:20 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> > நடராஜன் ஐயா,
>
> > கவிஞர் செயபாசுகரன் நல்ல தமிழில் அவர் பெயர் எழுதுவதைப்
> > பற்றிக் கவலைப்படுவதில்லை.
>
> ஜெயபாஸ்கரன் எண்ணங்களைப் பற்றி யாருக்கும் தெரியாத பட்சத்தில், ஏன் அதையே
> குறிப்பிடுகிறீர்கள்?
>
> தமிழ் மரபை வளர்க்கும்
>
> > கண்ணன் நடராசன் கிரந்தம் இன்றி எழுதுகிறார்.
>
> இன்னும் சிலர் கிரந்தத்துடன் மரபை வளர்க்கின்றனர்
>
> >
அது கிரந்த மரபு. தமிழ் இலக்கண மரபு அன்று.
உங்கள் மடல்களால் ஏன் ற, ர பிரச்சினை என்று புரிகிறது.
நா. கணேசன்
>
> உங்கள் மடல்களால் ஏன் ற, ர பிரச்சினை என்று புரிகிறது.
>
> நா. கணேசன்-
உங்கள் கருத்து என்ன? ற, ர இரண்டையும் வைத்துக் கொள்ள வேண்டுமா? அது
டிகுளோசியாவை அதிகமாக்காதா?
மரபு (heritage), சம்பிரதாயம் (tradition), வழக்கு (convention)
போன்றவற்றை விளக்க இவ்விழை பயன்படும் என்று கருதுகிறேன்.
The word "tree" is not the tree என்பார் ஜே.கிருஷ்ணமூர்த்தி. மொழி
என்பது ஒரு abstraction. பேச்சு மொழியின் அனைத்துக்கூறுகளையும் எழுத்து
கொண்டுவந்துவிட்டது என்று கூறமுடியாது. நாம் பேசுவதை அப்படியே
எழுதமுடியாமல் தவிக்கும் போதுதான் வழக்கு என்பது வருகிறது. பின் சீர்மை
என்பது வருகிறது. மொழி உயிருள்ள ஒன்று என்பதால் அது காலத்திற்குத்
தக்கவாறு வளர்கிறது. மொழி வளரும் போது புதிய இலக்கியமும், இலக்கணமும்
பிறக்கின்றன.
இதையெல்லாம் மனதில் கொண்டால் தமிழ் மொழி பற்றிய புரிதல் கூடும்.
கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.
க.>
| The argument is a classic case of missing the wood for the tree! Why are some tamilians so much against using the letters of Grantha when the pronounciation is important? I am amazed at the small mindedness of many Tamilians who criticise everything just because it has a northern tinge. Does the love for Tamil depend upon the degree of hatred for other languages? Jayakanthan once while acknowledging the Gnanapeeth award said, "they give us awards; we apply tar on hindi letters; that is the difference between them and us!" Narasiah |
Tamil always has this dual tradition: whether Kamban or Mu.Va.
we write இராசராசன் or இராஜராஜன், both are allowed.
I think it will wrong to say that இராசராசன் is wrong.
The temple itself is called "iraacaraacEccaram" in Tamil.
Tamil letters, unlike Sanskrit letters, have multiple sound values
while pronouncing. To show a letter has a voicing or aspirated sound,
we can always use a superscript or bold-face options.
Alvars, Kampan, ... cared for more of Tamil grammar while
using names than maintaining Grantha characters in their
writings.
N. Ganesan
திரு.நரசையா, கிரந்தம் என்பது தமிழ்நாட்டில் உருவானது, வட்டெழுத்து
உருவான போது, சமகாலத்தில் அதுவும் உருவானது, வட்டெழுத்து தமிழ்நாட்டுக்கு
எவ்வளவு சொந்தமோ, அவ்வளவு சொந்தம் கிரந்தமும். அதனால் அதை northern tinge
என யாரும் நினைக்க வேண்டாம். கேரளா, மற்றும் தென்கிழக்காசியாவிற்கு , அது
ஏற்றுமதி செய்யப் பட்டது.
> தமிழ்நாட்டை ஆங்கிலத்தில் எழுதும் பொழுது TAMILNADU என்று ஏன் இவ்வாறு
> எழுதுகின்றீர்கள். THAMIZHNADU என்று எழுத வேண்டியதுதானே.
On Aug 24, 12:07 pm, மு இளங்கோவன் <muelango...@gmail.com> wrote:
> தமிழ்நாட்டை ஆங்கிலத்தில் எழுதும் பொழுது TAMILNADU என்று ஏன் இவ்வாறு
> எழுதுகின்றீர்கள். THAMIZHNADU என்று எழுத வேண்டியதுதானே.
அதைவிட ஒன்று: இங்கிலீசில் ழ இல்லையே,
THAMIழ்NAADU என்று எழுதலாம்.
ஒரே கேள்வி: THAMIழ்NAADU வெள்ளைக்காரர்கள் ஒத்துக்கொள்வார்களா?
நா. கணேசன்
> புதுச்சேரி என்பதை PUDUCHERRY என்று ஏன் எழுதுகின்றீர்கள்.PUDHUCHERRY
> என்று எழுத வேண்டியதுதானே.ஆங்கிலம் என்றால் மரபு.தமிழ் என்றால் தாழ்வா?
>
On Aug 25, 4:07 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/8/24 விஜயராகவன் <viji...@gmail.com>
>
>
>
> > > தமிழ்நாட்டை ஆங்கிலத்தில் எழுதும் பொழுது TAMILNADU என்று ஏன் இவ்வாறு
> > > எழுதுகின்றீர்கள். THAMIZHNADU என்று எழுத வேண்டியதுதானே.
>
> It is not Azhagiri! It is Alagiri! - மு க அழகிரி சொல்கிறார்.
> It is not Alarudhin! It is Azharudhin! - அஸாருதீன் சொல்கிறார்...
>
சிறப்பு ழகரத்தைச் சரியாக ஆங்கில எழுத்தில் குறிப்பிட
வழி இருக்கிறது. அது l-ன் கீழ் ஓர் அடிகோடிட்டு எழுதுவது.
அன்புடன்,
நா. கணேசன்
இது வெள்ளைக்காரர் பிரச்சினையே இல்லை, அது தமிழ்நாட்டு அரசின் ஆணையால்
வருவது. தமிழ்நாடு தன் அதிகாரபூர்வமான பெயரை Tamilnadu என மாற்றட்டும்,
உடனே நாமும் அப்படி மாற்றுவோம்.
இந்த தளத்தில் http://www.tn.gov.in/ THAMIZHNADU என எழுதவேண்டும் என்ற
கோரிக்கையை, முதலமைச்சருக்கு முன் வையுங்கள்.
இதை ஒரு நூறாண்டுகளுக்கு முன்பே, தமிழ்நாட்டில் பரவலாக பயன்படுத்தி
இருந்தால்.
LATIN LETTER LLLA என்று Unicode-ல் சேர்த்து இருக்கலாம். :-)
On Aug 25, 4:47 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Aug 24, 12:07 pm, மு இளங்கோவன் <muelango...@gmail.com> wrote:
>
> > தமிழ்நாட்டை ஆங்கிலத்தில் எழுதும் பொழுது TAMILNADU என்று ஏன் இவ்வாறு
> > எழுதுகின்றீர்கள். THAMIZHNADU என்று எழுத வேண்டியதுதானே.
>
> அதைவிட ஒன்று: இங்கிலீசில் ழ இல்லையே,
>