ஜனகமகாராஜனின் அரசவை.
ராம,லக்ஷ்மணர்களோடு விஸ்வாமித்திரர் அரசவையில் வீற்றிருக்கிறார்.
அப்போது அந்த வில் வண்டி வருகிறது, ஆம் சிவதனுசு எனும் அசாத்தியப்பெருமைகொண்ட வில் அது!
எட்டு சக்கரம் கொண்ட வண்டியில் அதனை வைத்து,
'உறுவலி யானையை ஒத்த மேனியர்
செறிமயிர்க்கலெனத்திரண்ட தோளினர்'
எனக்கம்பன் வர்ணிக்கும் பலசாலியானவர்கள் இழுத்துக்கொண்டுவருகின்றனர்.
சபைமுழுவதும் ஆர்வமாய் காத்திருக்கிறது. வேடிக்கைபார்க்க மக்கள் எல்லாம் அங்கும் இங்குமாய் கூடி அமர்ந்திருக்கிறார்கள்.
"என்ன வில் இது !ஆகாசத்தைத் தொடுவதுபோல இப்படி கம்பீரமாய் இருக்கிறதே!"
என்று பேசிவியக்கிறார்கள்.
திண்நெடு மேருவைத்திரட்டிற்றோ.....மேருமலைத்திரட்டி இந்தவில்லைப்பண்ணினார்களா?
வண்ண வான்கடல் பண்டுகடைந்த மத்தென்பர்......கடலில் மந்தரமலையைக்கடைந்த அந்தமலையே திரும்பவும் வந்துவிட்டதா?
அண்ணல் வாள் அரவினுக்கு அரசனோ?.........பாம்புக்கெல்லாம் அரசனாக இருக்குமோ?
விண் இரு நெடிய வில் வீழ்ந்ததோ?..... வானவில் என்று சொல்வார்களே அதுதான் கீழே வீழ்ந்து இவ்வளவு பெரிதாக வளர்ந்திருக்கிறதா?
'என், "இது கொணர்க" என, இயம்பினான்?' என்பார்;
'மன்னவர் உளர்கொலோ மதி கெட்டார்?' என்பார்;
'முன்னை ஊழ் வினையினால் முடிக்கில் ஆம்' என்பார்;
'கன்னியும் இச் சிலை காணுமோ?' என்பார். ’
கம்பர் அழகாக வர்ணனை செய்திருப்பதைக்கவனியுங்கள்
"என்ன இது எதுக்கு இதைக்கொண்டுவந்திருக்காங்க எப்படி இதைப்போய் வளைக்கமுடியும் அரசனுக்கு புத்தி கெட்டுப்போய்விட்டதா?"என ஒருவரைஒருவர் பார்த்துப்பேசிக்கொள்கிறார்களாம்.
இப்படி அனைவரும் பார்த்து பிரமிக்கும் வில்லை வளைப்பவனுக்குத்தான் மகளைத்திருமணம் செய்துகொடுப்பதாய் ஜனகன் முடிவெடுத்ததற்குக் காரணம் இருக்கிறது..
சீதை ஒருநாள் அம்மானை ஆடினாளாம்.முணுகாயைவைத்துக்கொண்டு அதுகீழே விழாமல் ஆடுவது அம்மானை எனும் ஓர் பெண்கள் விளையாட்டு.. ஆடும்போது ஒருகாய் கீழே விழவும் அது , சிவதனுசு வைக்கப்படிருந்த பெட்டிக்குக்கீழே உருண்டு ஓடிப்போனதாம்.
இதை ஜனகர் பார்த்துக்கொண்டே இருந்தாராம்.சீதை அடுத்தகணமே தன் இடதுகையால் அந்தப்பெட்டியை சற்றும் சிரமமின்றி அனாயாசமாய் நகர்த்திவிட்டு அமமானையைக் குனிந்து பொறுக்கிக்கொண்டாளாம். மலையைத்தூக்கிவைக்கும் வலிமைகொண்ட தன் மகளுக்கு அப்போதே எப்படிப்பட்ட மாப்பிளையைப்பார்க்கவேண்டுமென ஜனகர் தீர்மானித்துவிடுகிறார்.அதனால்தான் சிவதனுசை யார் எடுத்து வளைக்கிறார்களோ அவருக்கே என்மகளை மாலையிடச்செய்வேன் என்று நினைத்துக்கொள்கிறார்.
இப்போது வில் சபை நடுவில் வீற்றிருக்கிறது.
ராமன் உட்கார்ந்திருக்கும் விதத்தைப்பார்த்தால் அவன் எடுத்து முறித்துவிடுவான்போல இருக்கிறதாம்..ஏற்கனவே தாடகையை வதம் செய்திருக்கிறதே ராமனின் சொல்லொக்கும் கடியவேகச் சுடுசரம்?
‘வந்தெதிர்ந்த தாடகை தன் உரத்தைக்கீறி வரு குருதிப்பொழிதர வன் கணையொன்று ஏவி’ என்கிறார் குலசேகர ஆழ்வார்.
இன்றும் பாலபருவத்தினர் விளையாட்டாய் சொல்கிறார்களே ‘ராமர்விட்ட பாணம் திரும்பிப்பார்த்தா காணோம்’ என்று?!
ராமர் விட்ட பாணம் எப்படி இருக்கும் என்று கேட்டால் எப்படி பேசின மாத்திரத்தில் சொல் செவியில் போய் விழுகிறதோ அப்படி ஒரு கடையவேகச்சுடுசரமாம்! அதுவும் வயிரக்குன்ற கல்லொக்கும் தாடகையின் நெஞ்சைத்துளைத்து அப்பால் போனதாம் . அது கல்லா புல்லார்க்கு நல்லோர் சொன்ன பொருள் எனப்போயிற்றன்னே என்கிறார் கம்பன். நல்லோர்கள் புல்போன்ற அற்பர்களுக்கு சொன்ன வார்த்தைகள் அவர்களின் ஒரு செவி வழி சென்று மறு செவி வழியே வெளியேறுவது போலவாம்!
வவணக்கம், வாழியநலம்
கம்பன் தீட்டும் காட்சிகளெல்லாம் கண்முன் விரியும் நாடகக் காட்சிகள்!
“இந்தப் பிள்ளையைப் பார்த்ததும், வில்வளைக்கும் நிபந்தனையைக் கைவிட்டு
நேரடியாக சீதையை இவனுக்கு மணமுடிக்க வேண்டாமோ”
என்று ஊர்மக்கள் பொருமும் காட்சியில் கம்பனின் சொல்லாட்சி மயங்க வைக்கிறது..
“ கோமுனிவர்க்கொரு நாணிலை என்பார்”….
“ வெள்ள மணைத்தவன் வில்லை எடுத்திப்
பிள்ளை முன் இட்டது பேதைமை என்பார்”
என்கின்ற வரிகளிலாகட்டும்,
சீதையின் மனநிலையை
பஞ்சரங்கு தீயின் ஆவி பற்றநீடு கொற்றவில்
நெஞ்சரங்கம் வெஞ்சரங்கள் வெய்யகாமன் எய்யவே
சஞ்சலம் கலந்தபோது தையலாரை உய்யவந்(து)
அஞ்சல் அஞ்சல் என்கிலாத ஆண்மையென்ன ஆண்மையே”
என்று வெளிப்படுத்தும் வரிகளிலாகட்டும்…
கம்பனுக்கு நிகர் எவருளர்?
கம்பன் நினைவுகளைத் தூண்டியதற்கு நன்றி,ஷைலஜா, அவர்களே..
சு.ரவி
Thanks & Regards,
S.Ravi
Vice President – IT
Alicon Castalloy Limited
Gat No: 1426, Village Shikrapur, Tal. Shirur,
Dist. Pune 412 208 Maharashtra, India
Tel: +91 2137 677100
Fax: +91 2137 677130
Mobile: +91 9561011689
E-Mail: s.r...@alicongroup.co.in
Homepage: www.alicongroup.co.in
Together,We make it happen
P Before printing, think about the environment
----
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

நன்றி திரு ரவி. கம்பனை த் தாங்கள் அழகுற படம்பிடிக்கிறீர்கள் மேலும் தரலாமே?
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
நல்வரவு திரு ரவிக்குஅன்று இசைக்கவியுடன் பொதிகையில் கவிதை வாசித்தவரா இவர் ஹரிண்ணா?
இராமனைப் பார்த்ததும் சீதைக்கு சந்தேகம் வந்துடுதாம். வலிமையான மன உறுதிகொண்ட என்னை இளகச் செய்து, என் உயிரை அப்படியே கவர்ந்து போறானே இந்தத் திருடன், இவன் யாரா இருக்கக் கூடும் ? ஒருவேளை மன்மதன்னு சொல்றாங்களே இவன் தான் அவனோ அப்படின்னு. மன்மதன்னா அவனுக்கான இலக்கணம் கைல கரும்பு வில் இருக்குமே, ஆனா இவனோட மலையொத்தத் தோளில் மூங்கில் வில் அல்லவா இருக்குது ? அப்ப கண்டிப்பா இவன் காமன் இல்லைன்னு முடிவு பண்ணாங்களாம்.
‘உரைசெயின். தேவர்தம் உலகு உளான் அலன்-
விரைசெறி தாமரை இமைக்கும் மெய்ம்மையால்;
வரி சிலைத் தடக் கையன். மார்பின் நூலினன்.
அரசிளங் குமரனே ஆகல்வேண்டுமால்
ஒருவேளை தேவனோ ? இருக்க முடியாது. இவன் தாமரைப் போன்ற கண்கள் இமைக்கின்றன. தேவர்களின் கண்கள் இமையாக் கண்கள். எவ்ளோ பெரிய கை, அதுல எவ்ளோ பெரிய வில்லு. மார்பில் வேறு நூல் இருக்கு. அப்படின்னா இவன் ஒரு அரசக் குமாரனாகத்தான் இருக்க முடியும் என்று முடிவு செய்தாராம். ஆனாலும் இவன் சாதாரணமானவன் இல்லை. பெண்களிடையே இருக்கும் இயல்பான நாணத்தையும், மன உறுதியையும் வழிவழியாய் பெற்ற என்னை கலங்கச் செய்தவன். அந்த குணங்கள் இவனைப் பாத்ததும் எங்க போச்சுன்னே தெரியல. பாதங்கள் வருந்த மண்ணில் நடந்து போனான். போனவன் சும்மாப் போனானோ ? என் கண்வழி நுழைந்து என் உள்ளத்தைக் கவர்ந்து சென்ற விசித்திர கள்வன்
பெண்வழி நலனொடும். பிறந்த நாணொடும்.
எண்வழி உணர்வும். நான் எங்கும் காண்கிலேன்-
மண்வழி நடந்து. அடி வருந்தப் போனவன்.
கண்வழி நுழையும் ஓர் கள்வனே கொலாம்?<<<
நம்மூர்ல கணவன்மார்கள் பெண்டாட்டி கூட போய்ட்டு இருப்பாங்க. எதிரே நல்ல அழகானப் பெண்ணொருத்தி வருகிறார்னு வைச்சுக்கோங்க. உடனே அம்மிணிக்கு மூக்கு வேர்த்துடும். அந்தப் பெண் கடந்து போனது, " அங்க என்ன பார்வை. அதுவும் நான் பக்கத்துல இருக்கும் போதே... அப்படின்னு ஒரு இடி தோள்ல இடிப்பாங்க. உடனே நம்மாள் சொல்வாரு.. " என்ன பேசற நீ. நான் அப்படிப் பட்ட ஆளா. ஆரஞ்சு கலர் புடவைக் கட்டி, பச்சைக் கலர் ஜாக்கெட் போட்டுக்கிட்டு, முகமெல்லாம் சிரிப்பாவும், காதுல ஜிமிக்கி அசைந்தாட, குறும்பு நிறைஞ்ச கண்ணோட எதிர வந்தப் பெண்ணை நான் பாக்கவே இல்லை . சொன்னா நம்பனும் " அப்படிங்கறா மாதிரி, சீதை சொல்றாங்க.. >>>>>
இந்திர மணி, மிக உயர்ந்தது. அதன் நீலத்தை இவன் கொண்டுள்ளான். கருத்தக் கூந்தல், சந்திரனைப் போல முகம். தாழ்ந்து நீண்ட கைகள். அழகியத் தோள்கள் இவையா என்னை நிலை குலையச் செய்தவை. அல்லவே அல்ல. அதோ அதோ... அந்த சிரிப்பு. புன்முறுவல். என் உயிரை அப்படியே எடுத்துட்டுப் போகுது. ஒவ்வொண்ணா சிறப்பை எடுத்துச் சொல்லி அதெல்லாம் ஒண்ணுமெ இல்லை. அந்தச் சிரிப்புத் தான் என் உசுரக் கவர்ந்ததுன்னு சொல்லும் போதே அவங்க என்னல்லாம் கவனிச்சிருக்காங்கன்னு தெரியலையா ?
இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்.
சந்திர வதனமும். தாழ்ந்த கைகளும்;
சுந்தர மணி வரைத் தோளுமே. அல;
முந்தி. என் உயிரை. அம் முறுவல் உண்டதே>>>>>
---
மேனேஜர் முறைச்சுட்டுப் போறார். அப்பாலிக்கா நேரம் கிடைக்கிறப்ப வரேன்.
Iyappan Krishnan
*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை என்னாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
2013/4/18 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
இராமனைப் பார்த்ததும் சீதைக்கு சந்தேகம் வந்துடுதாம். வலிமையான மன உறுதிகொண்ட என்னை இளகச் செய்து, என் உயிரை அப்படியே கவர்ந்து போறானே இந்தத் திருடன், இவன் யாரா இருக்கக் கூடும் ? ஒருவேளை மன்மதன்னு சொல்றாங்களே இவன் தான் அவனோ அப்படின்னு. மன்மதன்னா அவனுக்கான இலக்கணம் கைல கரும்பு வில் இருக்குமே, ஆனா இவனோட மலையொத்தத் தோளில் மூங்கில் வில் அல்லவா இருக்குது ? அப்ப கண்டிப்பா இவன் காமன் இல்லைன்னு முடிவு பண்ணாங்களாம்.
‘உரைசெயின். தேவர்தம் உலகு உளான் அலன்-
விரைசெறி தாமரை இமைக்கும் மெய்ம்மையால்;
வரி சிலைத் தடக் கையன். மார்பின் நூலினன்.
அரசிளங் குமரனே ஆகல்வேண்டுமால்
ஒருவேளை தேவனோ ? இருக்க
நம்மூர்ல
பெண்வழி நலனொடும். பிறந்த நாணொடும்.
எண்வழி உணர்வும். நான் எங்கும் காண்கிலேன்-
மண்வழி நடந்து. அடி வருந்தப் போனவன்.
கண்வழி நுழையும் ஓர் கள்வனே கொலாம்?<<<கண்வழி! விழியில் புகுந்து என்ற திரைப்பாடலுக்கு இந்த வரி தான் வித்தோ?
" என்ன பேசற நீ. நான் அப்படிப் பட்ட ஆளா. ஆரஞ்சு கலர் புடவைக் கட்டி, பச்சைக் கலர் ஜாக்கெட் போட்டுக்கிட்டு, முகமெல்லாம் சிரிப்பாவும், காதுல ஜிமிக்கி அசைந்தாட, குறும்பு நிறைஞ்ச கண்ணோட எதிர வந்தப் பெண்ணை நான் பாக்கவே இல்லை . சொன்னா நம்பனும் " அப்படிங்கறா மாதிரி, சீதை சொல்றாங்க..
இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்.
சந்திர வதனமும். தாழ்ந்த கைகளும்;
சுந்தர மணி வரைத் தோளுமே. அல;
முந்தி. என் உயிரை. அம் முறுவல் உண்டதே>>>>>
| மடித்த வாயினன்; வழங்கு எரி வந்து |
| பொடித்து இழிந்த விழியன்; அது போழ்தின் |
| இடித்த வன்திசை; எரிந்தது நெஞ்சம்; |
துடித்த கண்ணினொடு இடத் திரள் தோள்கள்
கோபத்தால் உதட்டை மடிப்பது, கண்களிலிருந்து நெருப்புப்பொறி பறப்பது வலிய தசைகளின் பேரொலி கேட்கிறது இடது கண்ணும் தோளும் துடிப்பது,, ராவணனின் கோபத்தை அதி அற்புதமாக சித்தரிக்கிறார் கம்பர்!
|
அதுக்கு முன்னாடி குகன் அறிமுகத்தைக் குடுக்கிறார் பாரு கம்பர்..
கொம்பு துத்தரி கோடு அதிர் கன் சாதாரண ஆள் இல்லை.
யாரோ இவர் யாரோ என்ன பேரோ அறியேனே என சீதை பாடுவதான பாடல் நினைவுக்கு வருகிறது..
காட்சி கண்முன்னே விரிகின்றது ஜீவ்ஸ். அற்றம் நீத்த மனத்தினன். அற்றம் என்றால் துன்பம், அச்சம், அழிவு, அவமானம், குற்றம், கேடு, சோர்வு, துன்பம். ஆனால் இந்த இடத்தில் என்ன அர்த்தம் வரும் என்பதை அதற்கு அடுத்து வரும் சொல் தீர்மானிக்கும் 'அன்பினன்'. அப்படின்னா அற்றம் என்பதற்கு அச்சம் என்பதே சரியான தேர்வாக இருக்கும். :)
அடடா... இதை இப்பத்தான் பாக்கறேன். ராம நாடகக் கீர்த்தனைகள்ள, அருணாசலக் கவிராயர் பாடியிருக்கும் இந்தப் பாடலை சீதை பேசுவதைப் போல இயற்றவில்லை. ராமர் பேசுவதைப் போலவாக்கும் இயற்றியிருக்கிறார்.
2013/4/18 shylaja <shyl...@gmail.com>யாரோ இவர் யாரோ என்ன பேரோ அறியேனே என சீதை பாடுவதான பாடல் நினைவுக்கு வருகிறது..
>>>ஆமாம் முன்னே நீங்க குழுமம் ஒன்றில் சொல்லி நான் அறிந்துகொண்டுவிட்டேனே! சந்திரபிம்ப முக மலராலே..என்ற வரியை பைரவி ராகத்தில் எம் எஸ் பாடுவதை முதலில் கேட்டபோது ராமராக இருக்காதே என தோன்றியது!!! ஆனால் நிச்சயமாய் தெரியவில்லை
அந்த இவர் யாரோ குழப்புதோ? ஆம்பளைங்களும் பொம்பளைங்கள (குறிப்பா வூட்டுக்காரம்மாவ) இவர்னு சொல்லலாம். :))>>>>>
இன்னொண்ணு. ‘யாரென்று ராகவனை எண்ணினீர் அம்மா’ பாடல், அப்படியே கம்பனிலிருந்து நேரா சுடச்சுட வந்து இறங்கியிருக்கு. இதோ இந்தக் கம்பராமாயணப் பாடல்:பார் என, புனல் என, பவன, வான், கனல்பேர் எனைத்து, அவை, அவன் முனியின் பேருமால்;கார் எனக் கரிய அக் கமலக் கண்ணனையார் எனக் கருதி, இவ் இடரின் ஆழ்கின்றீர்?>>
(கம்பராமாயணம், ராவணன் சூழ்ச்சிப் படலம்)
--
அன்புடன்,
ஆஹா.... கமலக்கண்ணன் என்கிற பெயரும் இங்கே அழகு!!
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
தெரியலை திவாகர் நான் அயல் மாநிலத்தில் இருக்கிறேனே..
இந்தப்பாடலை நானும் தமிழ்பாடப்புத்தகத்தில் படித்திருக்கிறேன்..பிறகு அண்மையில் நடிகர் சிவகுமார் தன் சொற்பொழிவில் இதனை நன்கு விவரித்த விதம் பிடித்தது.
போன ஆட்சி வரையில் கம்பராமாயணம் உள்ளிட்ட பல இலக்கியங்கள் பாடப் பகுதியிலிருந்து விலக்கப்பட்டுள்ளன என்றுதான் நானும் கேள்விப்பட்டேன். இந்த முறை எப்படியோ, தெரியாது.இந்தப்பாடலை நானும் தமிழ்பாடப்புத்தகத்தில் படித்திருக்கிறேன்..பிறகு அண்மையில் நடிகர் சிவகுமார் தன் சொற்பொழிவில் இதனை நன்கு விவரித்த விதம் பிடித்தது.
எந்தப் பாடலை சொல்கிறீர்கள்? தண்டலை மயில்கள் ஆட பாடலையா? இதை விவரித்தாரா!
>>>>கம்பராமாயண சொற்பொழிவு அடிக்கடி செய்றாரே டிவில ? பத்திரிகைகளிலும் எழுதுகிறார். அப்படி ஒருமுறை சொற்பொழிவு செய்தபோது இந்தப்பாடலுக்கு நல்ல விளக்கம் சொன்னார்.
--
அன்புடன்,
ஹரிகி.நட்பும் சுற்றமும் நலமே என்பதைமட்டும் கேட்க வாணி அருள்கவே.God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
எந்தப் பாடலை சொல்கிறீர்கள்? தண்டலை மயில்கள் ஆட பாடலையா? இதை விவரித்தாரா!திரு ஹரிகி அவர்களே நீங்கள் கேட்கும் தொனி புரிகிறது :)>>>
எந்தப் பாடலை சொல்கிறீர்கள்? தண்டலை மயில்கள் ஆட பாடலையா? இதை விவரித்தாரா!திரு ஹரிகி அவர்களே நீங்கள் கேட்கும் தொனி புரிகிறது :)
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
க. ரவி / சு. ரவி:இருவருமே கவிதை எழுதுபவர்களா?
இவர்களில் யார் ஓவியம் வரைபவர்?
அழகு அழகான படங்கள் வரையும் ரவி யார்?
..... தேமொழி