|| ஸ்ரீ ஹரயே நம: ||
தேவ்
ஆகா
பொலிக பொலிக பொலிக
போயிற்று வல்லுயிர்ச்சாபம்
கலியும் கெடும் கண்டுகொண்மின்
|| ஸ்ரீ ஹரயே நம: ||
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இரண்டு அழகிய உதாரணங்கள் சொல்லுவார்கள்.
முதலில் கஜேந்திர மோட்சம். கஜேந்திரன் ஆதிமூலமே! என்று பிளிறியவுடன்
தொட்டதை தொட்ட இடத்தில் விட்டு காற்றென விரைந்தானாம் இறைவன்.
அடுத்து, எங்குளன் கண்ணன்! இங்கில்லையா? என்று இரணியன் தூண் புடைத்தபோது
அந்த நொடிக்காகக் காத்திருந்தது போல் பட்டென வந்தானாம். அது மட்டுமில்லை,
இவன் எந்தத்தூணைத் தட்டுவான் என்று தெரியாததால் எல்லாத்தூணிலும் ரெடியாக
இருந்தானாம்.
அதனால்தான் அவன் சர்வேஸ்வரன்!
நா.கண்ணன்
இரண்டு அழகிய உதாரணங்கள் சொல்லுவார்கள்.
முதலில் கஜேந்திர மோட்சம். கஜேந்திரன் ஆதிமூலமே! என்று பிளிறியவுடன்
தொட்டதை தொட்ட இடத்தில் விட்டு காற்றென விரைந்தானாம் இறைவன்.
அடுத்து, எங்குளன் கண்ணன்! இங்கில்லையா? என்று இரணியன் தூண் புடைத்தபோது
அந்த நொடிக்காகக் காத்திருந்தது போல் பட்டென வந்தானாம். அது மட்டுமில்லை,
இவன் எந்தத்தூணைத் தட்டுவான் என்று தெரியாததால் எல்லாத்தூணிலும் ரெடியாக
இருந்தானாம்.
பெயரில் ஸர்வேச்வரத்வம் மிளிர்கிறது.
செயலிலோ தாழ நின்று முகம் கொடுக்கும் நீர்மை !
ஈச்வரன் இப்படி இருந்தால் தாஸர்கள் எப்படி இருக்க வேண்டும் ?
இறைவனோடு நாள்தோறும் ஊர்க்கதை பேசிக்கொண்டிருந்த
திருக்கச்சி நம்பிகள் கோஷ்டீபூர்ணருக்குத் தொண்டு செய்து
வரதன் உகப்பைப் பெற்றாராம்.
அவர் கை ஒடிய விசிறி வீசியது என்ன ஆயிற்று ?
சாதாரண விசிறி அன்று; திரு ஆலவட்டம், அளவில் பெரியது.
‘நீர் விசிறி வீசினீர்; நான் பேசினேன்.
அதுக்கு இது சரியாப்போச்சு.
அடியவர்க்குத் தொண்டு செய்து தாஸத்வ பூர்த்தி பெற்று வாரும்’
என்று வரதன் அனுப்பி விட்டானாம்
தேவ்
தேவ்ஜீ உம்மை துரத்துகிறார். அவர் சொல்கின்ற குணத்தைக் காட்டுகிற மாதிரி
இப்போ நீங்க அவனோட பெயரைச் சொல்லணும்.
அவர் சர்வேஸ்வரன் என்று அவன் என்றுமே நினைத்ததில்லை என்கிறார்.
ஏழைப்பங்காளன் என்கிறார். விஜயராகவனைத் துரத்துங்கள் :-))
நா.கண்ணன்
2011/3/28 devoo <rde...@gmail.com>:
காளையாரே!
தேவ்ஜீ உம்மை துரத்துகிறார். அவர் சொல்கின்ற குணத்தைக் காட்டுகிற மாதிரி
இப்போ நீங்க அவனோட பெயரைச் சொல்லணும்.
பரமனின் ஸித்த உபாயத் தன்மைக்கு வைணவம் முதன்மை தரும். ‘நெறிவாசல்
தானேயாய் நின்றானை..’ என்கிறது அருளிச்செயல். ’அவனை அடைவதற்கு அவனே
உபாயம் ’ -
ஸித்தோபாய சோதந அதிகாரத்தில் ஸ்வாமி தேசிகனும்
இதை விளக்கியுள்ளார். ஒரு வழியை - உபாயத்தை நாம் தேடியலைய வேண்டாதபடி
எம்பெருமானே ஆறும் (வழியும்), இறுதிப் பொருளான பேறுமாக நிற்கிறான்
என்பது திரண்ட பொருள். பிழை இருப்பின் பெரியவர்கள் திருத்த வேண்டும்
தேவ்
101 அச்யுத ;> தம்மையடைந்தவர்களைவிட்டு நீங்காதவர், அடைந்தவர்களுக்குத்
தவறுதல் வராமலிருக்கும்படி செய்பவர்.
நண்பர் திரு.விஜயராகவன் சொல்லியபடி
அன்பன்
கி.காளைராசன்
--
மறை வழி நிற்போர் யாராயினும் முதலில் இத்திருநாமத்தோடு ‘நம:’ சப்தம்
சேர்த்து ஆசமநீயம் செய்வர்.
‘ச்யுதம்’ நழுவுதல்; அ + ச்யுதம் - நழுவி விடாமல் காத்தல். இவன்
திருவடிகளைப் பற்றிக் கொள்ளவில்லையெனில் எல்லையற்றுப் பரந்து
விரிந்திருக்கும் சிக்கல் நிறைந்த ப்ரக்ருதி மண்டலத்தில் இந்த அல்ப
ஜீவன் நழுவிப்போய்த் தொலைந்துவிட வாய்ப்புண்டு. வைக்கோல் போரில் விழுந்த
குண்டூசியை மீண்டும் தேடி எடுக்க முடியுமா ?
அச்யுத: - தஞ்சமடைந்தோரை ஒருகாலும் கைவிடாதவன்.
திரு காளைராஜன் ,
இனிமை நிறைந்த ஆயிரம் திருநாமங்கள் - ”ரிஷிபி: பரிகீதாநி” -
மாமுனிவர்களும் இதை விடாமல் ஓதிவருகின்றனராம். நீங்கள் மேற்கொண்டது நல்ல
முயற்சி. ஆனால் முதல் திருநாமம் ‘விச்வம்’. அதிலிருந்து தொடங்கினால்
நல்லது. இதற்கு முந்தைய திருநாமம் ‘ஸர்வாதி:’ , ஆனால் ’ஸவர்வாதி’ என்று
பதிவாகியுள்ளது.
மனத்துயரை நீக்கும் அருமருந்து மாதவனின் திருநாமங்கள். காலையில் செய்தி
தெரிந்ததும் உடனே கண்ணன் சாருக்கு இதைத்தவிர வேறொன்றும் எழுதத்
தோன்றவில்லை. உறவினரைப் பிரிந்திருக்கும் அவருக்கு உற்ற துணை ஹரி நாமம்
மட்டுமே. பரனூர்ப் பெரியவர் பலமுறை கூறியது.
|| ப்ரணாமோ து:க்க சமந: தம் நமாமி ஹரிம் பரம் ||
தேவ்
On Apr 1, 6:42 am, கி.காளைராசன் <kalairaja...@gmail.com> wrote:
> ஹரிர் ஹரி:
> தினம் ஒரு திவ்ய நாமம்
>
> 101 அச்யுத ;> தம்மையடைந்தவர்களைவிட்டு நீங்காதவர், அடைந்தவர்களுக்குத்
> தவறுதல் வராமலிருக்கும்படி செய்பவர்.
>
> நண்பர் திரு.விஜயராகவன் சொல்லியபடி
>
> அன்பன்
> கி.காளைராசன்
>
> --
> திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,http://www.freewebs.com/thirupoovanam/
ஆனால் முதல் திருநாமம் ‘விச்வம்’. அதிலிருந்து தொடங்கினால்
> நல்லது.
இடையிலேயே இப்பேறு எனக்குக் கிடைக்கப் பெற்றது.
எனக்குக் கிடைக்கப் பெற்றதை அப்படியே மின்தமிழ் அன்பர்களுடன் இங்கே
பகிர்ந்து கொண்டு வருகிறேன்.
நண்பர் திரு.விஜயராகவன் அவர்களுடன் தொடர்பு கொண்டு "விச்வம்" என்ற
முதல் திருநாமத்திலிருந்து விரைவில் எழுதுகிறேன்.
இதற்கு முந்தைய திருநாமம் ‘ஸர்வாதி:’ , ஆனால் ’ஸவர்வாதி’ என்று
> பதிவாகியுள்ளது.
ஐயா, இறைவனது திருநாமத்தில் ஒரு சிறுதவறும் வரக்கூடாது. இத் தவறைத்
திருத்திக் கொள்கிறேன்.
ஐயா, எழுத்தில் பிழையிலிருந்தால் அதைச் சுட்டிக் காட்டி, திருத்திக்
கொள்ளவும், கூடுதலான விளக்கம் அளித்தும் உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்
கொள்கிறேன்.
உற்ற துணை ஹரி நாமம்
அன்பன்
அலுவலகப் பணி, தேர்தல் பணி முதலான பல்வேறு காரணங்களால் ஏப்ரல் 1ஆம்
தேதிக்குப் பின்னள் என்னால் தொடர்ந்து எழுத இயலவில்லை. தினமும்
ஹரிநாமம் எழுத முடியாமல் ஆனதிற்காக வருந்துகிறேன். எனது இந்த இயலாமைக்கு
இறைவன் என்னை மன்னித்தருளுட்டும்.
இங்கே இப்போது ஸ்ரீஹரி நாமம் தொடர்கிறது.
ஹரிர் ஹரி:
தினம் ஒரு திவ்விய நாமம்:
102. வ்ருஷாகபி : >
தர்மமே உருக் கொண்டதான சிறந்த வராகாவதாரம் செய்தவர்.
103 கிடைக்கப் பெற வேண்டியுள்ளது.
104 ஸவர்வ யோகவிநிஸ்ஸ்ருத: >
சாஸ்திரங்களால் அறியப்பட்டவையும் அவரவர் பக்தியினால்
ஏற்படுத்தப்பட்டவையுமான உபாயங்கள் எல்லாவற்றினாலும் வேத ரகஸ்யங்களை
யறிந்து க்ரகிப்பது போலவே எளிதில் கிரஹிக்கவும், அடையவும் கூடியவர்.
"ஜகத் பிரபுவான மஹாத்மாவைத் தன் புத்தியைக் கொண்டே அறிந்தாலும் அவர்
தமது மஹிமையை அவன் அறிந்ததனால் அன்பு கூர்ந்து அவனை அனுஸரிக்கிறார்"
என்கிறது ஸ்ரீ பெளஸ்ரீகரம்.
105 வஸு : >
தம்மை அடைந்தவர்களிடத்தில் மிக்க அன்புடன் தாமே வஸிப்பவர்.
106 மற்றும் 107 எனக்குக் கிடைக்கப்பெற வேண்டியுள்ளது.
108 ஸமாத்மா: >
ஆஸ்ரிதர்களின் ஏற்றத் தாழ்வுகளைப்பாராது எல்லாரையும் ஸமமாக மனத்தில்
நினைப்பவர் "எல்லாப் பிராணிகளிடத்திலும் நான் ஸமாமாயிருப்பவன்" என்பது.
109 ஸம்மித : >
ஆஸ்ரிதர்கள் தங்களுக்கு அடங்கியிருப்பதாக நினைக்கும்படி அவர்களுக்கு
உட்பட்டிருப்பவர். "தாமரைக் கண்ணனான எனது ராமன் இன்னும் பதினாறு
வர்ஷங்கள் நிரம்பாமலிருப்பவன்" என்று தசரதனும், "இவன் எனதுசொந்தப்
பிள்ளை என்று வசுதேவனும் சொல்வது".
110 ஸம : >
பழகினவரென்றும் பழகாதவரென்றும் ஆவல் அதிகமாயுள்ளவரென்றும் ஆவல்
குறைவாயுள்ளவரென்றும் உள்ள வித்தியாஸம் முதலியவற்றைப் பாராமல் ஒரே விதமான
கெளரவம் வைப்பவர்.
111 அமோக : >
தமது ஸம்பந்தம் விண்போகாதவர். "ராமா! உம்மைக் காண்பதும் துதிப்பதும்
பயன்படாமற் போவதில்லை, எந்த மனிதர்கள் உம்மிடம் பக்தியுள்ளவர்களோ
அவர்களும் பயன்பெறாமல் போவதில்லை" என்று ஸ்ரீ ராமாயணம் யுத்தகாண்டத்தில்
சொல்லப்பட்டுள்ளது.
112 புண்டரீகாக்ஷ :>
புண்டரீகம் என்னப்படும் பரமபதத்தில் நித்திய வாஸிகளாயிருப்பவருக்குக்
கண்போன்றவர். "மேலுலகத்தில் கண்போல எங்கும் ப்ரகரித்திருப்பவர்"
என்பது புருஷஸுக்தம்.
103, 106, 107 ஆகிய நாமங்கள் எனக்குக் கிடைக்க வேண்டியுள்ளன. இவைகளை
பண்டிட்ஜீ அவர்கள் அறியத் தந்தால் படித்துப் பயனடைவோம்.
மின்னாள் என்பது நம் அம்பாள் பேரு.
கண்ணனை மின்னுரு என்பது திருமங்கையாழ்வார்.
அழகழகாக இறைவன்/இறைவியர் பெயர்கள் தமிழில் உள்ளன. முன்பு நா.கணேசன்
அம்பாள் பெயரை (அஞ்சு என்று தொடங்கும்) ஒரு இழையில் பேசினார்.
அழகான தமிழ்ப் பெயர்களை. அத்தனை பாடல் பெற்ற தலங்களில்
எழுந்தருளியிருக்கும் இறைவன்/இறைவியின் பெயர்களை தொகுத்து வெளியிட
வேண்டும்.
பவளாவின் செய்திமாலையில் நிறையப் பெயர்கள் வருகின்றன. ஒரு தொகுப்பை
அளியுங்களேன்? அல்லது எல்லோரும் சேர்ந்து!
நா.கண்ணன்
2011/4/19 கி.காளைராசன் <kalair...@gmail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
> அழகான தமிழ்ப் பெயர்களை. அத்தனை பாடல் பெற்ற தலங்களில்
> எழுந்தருளியிருக்கும் இறைவன்/இறைவியின் பெயர்களை தொகுத்து வெளியிட > வேண்டும்.> பவளாவின் செய்திமாலையில் நிறையப் பெயர்கள் வருகின்றன. ஒரு தொகுப்பை
> அளியுங்களேன்? அல்லது எல்லோரும் சேர்ந்து!
நல்ல கருத்து,
நிச்சயம் செய்கிறோம் ஐயா,
ஐயா வினைதீர்த்தான், கணேசன் இருக்கிறார்கள்,
சகோதரி பவளா, கீதா, சாரதா
மற்றும் அனைவரும் சேர்ந்து இதைச் செய்து முடிக்கிறோம்.
நல்ல கருத்து,
நிச்சயம் செய்கிறோம் ஐயா,
ஐயா வினைதீர்த்தான், கணேசன் இருக்கிறார்கள்,
சகோதரி பவளா, கீதா, சாரதா
மற்றும் அனைவரும் சேர்ந்து இதைச் செய்து முடிக்கிறோம்.
அன்பன்
கி.காளைராசன்
114. வ்ருஷாக்ருதி : >
தர்மமே உருவமாகவுடையவர் ;
ஜனங்களின் தாபங்களை யெல்லாம் சமனம் செய்து அமிழ்தம் பொழிவதுபோலக்
குளிர்ந்திருக்கும் திவ்யரூபமுள்ளவர். "பதினாயிரம் நிறைமதிகளுக்கு
ஒப்பான ஒளியினால் எல்லாவற்றையும் நிரப்பிக் கொண்டிருக்கிறார்" என்பது
ஸ்ரீ பாஞ்சராத்ரம் ஸாத்வத ஸம்ஹிதை.
விஷ்ணு ஸஹஸ்ரநாமம் அடுத்த சொற்தொடர் ......
ருத்ரோ பஹுஸிரா பப்ருர் விஸ்வயோநிஸ்ஸுசி ஸ்ரவா: |
அம்ருதஸ் ஸாஸ்வதஸ்தாணுர் வராரோஹோ மஹாதப: ||
115. ருத்ர : >
இப்படிப்பட்ட திவ்யரூபத்தினால் பலவகையான திவ்வய சேஷ்டி தங்களாலும்
பக்தர்கள் நெஞ்சுருகி ஆனந்தக் கண்ணிர் விடும்படி செய்பவர்.
-------
116 பஹுசிரா :>
அநேகம் தலைகளையுடைய ஆதிசேஷனாகவும் இருப்பவர்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
117 பப்ரூ :>
ஆதிசேஷரூபத்தில் உலகங்களைத் தாங்குகிறவர்.
------
118 விஸ்வயோநி : >
அடைந்வர்கள் எல்லாரையும் தம்முடன் ஒன்றாகக் கூட்டிக் கொள்ளுகிறவர்.
119 சுசிஸ்ரவா : >
பக்தர்களால் சொல்லப்படும் இன்சொற்களைக் கேட்பவர். "தனஞ்சயனே!
கேட்பதற்கினிமையான பக்தர்களின் பரிசுத்தமான சொற்களை மட்டும் நான்
கேட்கிறேன்.
குற்றங்களான சொற்களைக் (அன்பில்லாத சொற்களை) கேட்பதில்லை. அதனால்,
என்னை, "சுசிஸ்ரவஸ்" என்பர், என்று ஸ்ரீமஹாபாரதம் சாந்திபர்வம்
மோக்ஷதர்மத்தில் பகவான்
அருளிச் செய்வது.
சுசிச்ரஸ் :
’செவிக்கினிய செஞ்சொல்’ எனும் அருளிச்செயலின் சொல்லாட்சி
இத்திருநாமத்தோடு நன்கு பொருந்துகிறது -
“கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே”
அருளிச்செயல் அச்சுதனுக்கும், அவன் அடியார்களுக்கும் மிகுந்த
உகப்பைத் தருகிறது என்பது உறுதியாகிறது
தேவ்
On May 4, 3:10 am, கி.காளைராசன் <kalairaja...@gmail.com> wrote:
> ஹரிர் ஹரி
> தினம் ஒரு திவ்விய நாமம்......
>
> 119 சுசிஸ்ரவா : >
> பக்தர்களால் சொல்லப்படும் இன்சொற்களைக் கேட்பவர். "தனஞ்சயனே!
> கேட்பதற்கினிமையான பக்தர்களின் பரிசுத்தமான சொற்களை மட்டும் நான்
> கேட்கிறேன்.
> குற்றங்களான சொற்களைக் (அன்பில்லாத சொற்களை) கேட்பதில்லை. அதனால்,
> என்னை, "சுசிஸ்ரவஸ்" என்பர், என்று ஸ்ரீமஹாபாரதம் சாந்திபர்வம்
> மோக்ஷதர்மத்தில் பகவான்
> அருளிச் செய்வது.
>
> --
> திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,http://www.freewebs.com/thirupoovanam/
120 அம்ருத : >
முக்தியை யளித்து மூப்பு இறப்புக்களை ஒழிப்பவர்.
எக்காலமும் ஸேவித்தால் போதுமென்று தோன்றாமல் மேன்மேலும் விருப்பத்தை
விளைவித்து அம்ருதம் போலச் சுவையுள்ளவராக இருப்பவர். "கண்ணனைக்
கண்டவர்கள் அம்ருதம் உண்டாற்போலப் போதுமென்று திருப்தி
பெறாமலிருந்தனர்" என்று சொல்லப்படுகிறது.
121 சாஸ்வதஸ்தாணு : >
தேவலோகத்திய அம்ருதம் போலன்றி என்றும் அழிவில்லாமலும் யாரும்
அபகரித்துக் கொண்டு போகாமலிருக்கும்படி பக்தர்களிடம் நிலையாயும்
இருப்பவர்.
122 வராரோஹ : >
மீண்டு கீழுலகம் போதில்லாமையினால் மேலேறி அவரை அடைவது எல்லாவற்றாலும்
சிறந்ததாகும்படி இருப்பவர். "அப்பா! இந்தப் பொன்னுலகம் முதலானவையும்
பரமாத்மாவின் பரமபதத்திற்கு நரகங்கள் போன்றவை" என்று
சொல்லப்பட்டிருக்கிறது.
123 மஹாதபா : >
சிறந்த ஞானமுள்ளவர். ஆறுகுணங்களில், ஞானம் பலம் என்னும் இரண்டு குணங்கள்
ஸங்கர்ஷணன் கூறுகளாக வகுக்கப்பட்டுள்ளன. அவற்றில், ஞானமாவது - ஜனன
மரணங்களாகிய ஸம்ஸாரமார்கத்தில் அனாதிகாலமாக நடந்து கொண்டு வருந்தும்
ஜீவராசிகளுக்கு ஸ்ரமபரிகாரம் செய்வதற்காக அந்தக் கார்ய காரணங்களை அறிந்து
கார்யவர்க்கங்களைத் தம்தம் காரணங்களில் அடக்குவதற்குரிய ஸர்வஜ்ஞத்வம்.
124 ஸர்வக : >
ஸம்கஹரிக்கப்பட்டன வற்றையெல்லாம் தாம் அடைந்து வஹிப்பவர். இதனால் பலம்
என்னும் இரண்டாம் குணம் குறிப்பிக்கப்பட்டது. பலமாவது - அப்படி
ஸம்ஹரிக்கபட்டவற்றை யெல்லாம் தம்மிடத்தில் வைத்துத் தாங்குவதற்குரிய
வன்மை. இது மேற்சொல்லிய ஞானத்திற்கு முக்யமான அங்கம்.
சம்ஹரிக்கப்பட்டவற்றை யெல்லாம் திரும்பவும் படைத்துக் கார்யங்களான
ப்ரபஞ்சங்கள் அனைத்தையும் அடைகிறவர். இங்கு ப்ரத்யும்னன் என்னும்
இரண்டுகுணங்கள் ப்ரத்யும்னவ்யூகத்தின் கூறுகளாக வகுக்கப்படுகின்றன.
அவற்றுள்
ஐஸ்வர்யமென்பது விசித்ரமான உலகங்களை உண்டுபண்ணும் திறமை வெளிப்படுவது.
அதனை இந்த நாமம் தெரிவிக்கிறது.
திருப்பூவணப் புராணத்தில் கீழ்க்கண்ட பாடல்களில் "பானு" என்ற சொல் இடம்
பெற்றுள்ளது.
227
பங்கமற்றமறைவழுத்து"பானு"கம்பனாயிரஞ்
சங்கவாயினாலுமித்தலத்துமேன்மைதானுரைத்
தங்கையாயிரத்திரட்டிகொண்டுதீட்டவமைகிலா
திங்கொர்நாவில்யான்விரித்தெடுத்தியம்பலாகுமோ
648
எல்லொளிவானவனென்னொருமடமானெங்குற்றா
ளொல்லையினீயிதுசொல்லெனவுத்தரகுருவுற்றே
யல்லடுநின்கதிர்வெம்மையினாற்றலளாயோடிப்
பல்குதவந்தனையாற்றினளென்னலுமப்"பானு"
997
பம்புமாயிரமம்புலமானுமோர்"பானு"
கம்பனாயிரமுகத்தினுமாயிரஞ்சங்கந்
தம்பமாமிரண்டாயிரங்கைகொடுசாற்ற
நம்புமாயிரமறையொலிநாற்றிசைநடப்ப
1145
இரந்திடுமமையத்தெம்பிரான்வீரவின்னதும்புரிதிநீயென்னாக்
கரந்தலைக்கொண்டுவணங்கியே"பானு"கம்பனைத்தக்கனற்கவந்தம்
விரைந்துநீகொணர்தியென்னலுமந்தமேதகுபூதமாங்குய்ப்பப்
புரிந்தவவ்வேள்விக்கரிந்தமைத்தலையைப்பொருத்தினனெழுகெனவுரைத்தான்
1280
மானவுயரிடபரவிதன்னின்மணிகன்னிகைவைசாகமாக
நானமதுபண்ணினர்கணவில்பலதானப்பலமுநண்ணிவாழ்வா
ரானவமுதோதகமாமத்தீர்த்தத்துற்றதக்கிணாயனத்திற்
"பானு"மதிதனையரவம்பற்றிடுநாண்மூழ்கினரப்பலத்தைச்சேர்வார்
127 விஷ்வக்ஸேந : >
எங்குமுள்ள ஜனங்கள் தம்மை ரக்ஷராகக் கொண்டு ஜீவிக்கும்படி செய்பவர். இது
ரக்ஷிப்பதைத் தொழிலாகவுடைய அநிருத்தவயூகம். சக்தி, தேஜஸ் என்னும்
இரண்டு குணங்கள் அநிருத்தவ்யூகத்திற்குச் சிறந்தவைகளாக
வகுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுள், சக்தியாவது - எதையும் காப்பாற்றும்
ஸாமர்த்தியம். அதனை இந்த நாமம் குறிப்பிடுகிறது.
128 ஜனார்த்தன: >
தமது ரக்ஷணத்திற்கு விரோதம் செய்யும் சத்ருஜனங்களை உதவிதேடாமல்
அழிப்பவர். இங்கு, இரண்டாவது குணமாகிய தேஜஸ் குறிப்பிக்கப்படுகுறது.
தேஜஸ் என்பது தனக்கு ஓர் உதவியைத் தேடாது கார்யத்தை முடிக்கும் திறமை
129 வேத (1/2) : >
தம்மால் தேகங்களையும் இந்திரியங்களையும் அடைந்திருக்கும் மனிதர்கள்
முதலானவர்கள் சாஸ்திரங்களைத் தம்மிடமே அடையும்படி கொடுப்பவர்.
"ப்ரம்மாவைப் படைத்து அவருக்கு வேதங்களையும் அளிக்கிறவர்" என்பது ஸ்ருதி.
-----
129 வேத (2/2): >
இந்தக்காரணம் பற்றித்தான் ஸங்கரஷணருக்கு,
1.அப்யுபாயம் (ப்ரகதியை அடைவதற்குக் கருவி)
2.ஆகம: (சாஸ்திரம் வருமிடம்)
3. பந்தா (வழி)
4. நேதா (நடத்துகிறவர்)
5. ப்ராம்மண;
6. ஆசார்ய (உபதேசிப்பவர் ) என்று நாமங்கள் கூறப்பட்டிருக்கின்றன.
------------
131அவ்யங்க : >
சிக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யொதிஷம், கல்பம் என்னும்
ஆறுவேதாங்கங்களும் தம்மிடத்தில் குறைவின்றி நிரம்பியிருப்பவர்.
132 வேதாங்க : >
வேதத்தைத் தமது சரீரமாக உடையவர். சரீரத்தினால் ஆத்மா அறியப்படுவதுபோல
வேதத்தினால் அறியப்படுகிறவர். "வேதம் தம்முடைய ஆஜ்ஞையாக இருப்பதனால்
அதைக் கருவியாக உடையவர்" என்பது.
------
133 வேதவித் : >
வேதங்களினால் அறியப்படும் தர்மத்தை அனுஷ்டிக்கும் படி செய்து அதைத்
தமக்கு ஆராதனமாகப் பெற்றுக் கொள்விறவர். இது ப்ரத்யும்னர் என்னும்
வ்யூகம்.
இந்தவ்யூகத்திற்கு,
1. தம்மம்,
2. ப்ரத்யோதயிதா (= விளங்கச் செய்பவர்.)
3. ப்ரவர்த்தயிதா (= நடத்துகிறவர்) என்று நாமங்கள் உள்ளன.
அடுத்த சொற்தொடர் லோகாத்யகக்ஷஸ் ஸுராத்யக்ஷோ தர்மாத்யக்ஷ;
க்ருதாக்ருத: | சதுராத்யக்ஷ
135
லோகாத்யக்ஷ
தர்மாநுஷ்டானத்திற்குத் தகுதியுள்ள மனிதர்களை ப்ரத்தியக்ஷமாக அறிபவர்.
------
136 ஸுராத்யக்ஷ : >
அவர்களால் ஆராதிக்கப்படும் தேவர்களை ப்ரத்தியக்ஷமாக அறிபவர்.
137 தர்மாத்யக்ஷ: >
அவ்வற்றிற்குரிய பலன்களைக் கொடுப்பதற்காகத் தர்மாதர்மங்களை நேராகக் காண்பவர்.
தர்மபலன் கிடைப்பதும் தர்மஞ்செய்தவர்களுக்குப் பலன் கிடைக்காமற் போவதும்
இல்லாமலிருக்கும்படி அந்த அந்தப் பலன்களை சரியாகக் கொடுப்பதற்காக
எல்லாவற்றையும் ப்ரத்யக்ஷமாக அறிந்திருப்பவர். இவர் அநிருத்தவ்யூகம்.
-------
அநகோ விஜபோ
ஜேதா விஸ்வபோநி :
புனர்வஸு : ||
143
ப்ராஜிஷ்ணு
இந்தப் பரரூபத்தையே பகிர்ந்து கொண்டு உபாஸிப்பவர்களுக்குப் பலப்படும்
தன்மையுள்ளவர்.
-----
--
144 போஜனம் :>
பக்தர்களால் உணவுபோல ஸுகமாக அனுபவிக்கப்படுகிறவர்.
145 போக்தா:>
பக்தர்களால் நிவேதனம் செய்யப்படும் ப்ராபணம் முதலிய சுவையுள்ள
பதார்த்தங்களை அம்ருதத்தைப் போல அங்கீகரித்து உண்பர். நெய் பால்
சர்க்கரைகளோடு கோதுமையைச் சேர்த்துப் பாகம் செய்யப்பட்ட பாயஸம்
ப்ராபணமென்னப்படும்.
----
146 ஸஹிஷ்ணு:>
அவர்கள் அறிந்தும் அறியாமலும் மனம் வாக்குக் காயங்களினால் தம்மிடத்திலும்
தம்மடியாரிடத்திலும் செய்யும் அபராதங்கள் எல்லாவற்றையும் பொறுக்கும்
தன்மையுள்ளவர்.
-----
147 ஜகதாதிஜ:>
உலகங்களுக்கு முதற்பொருள்களாகிய மும்மூர்த்திகளுள் ஒருவராக அவதரித்தவர்.
148 அனக:>
ப்ரபஞ்சத்தில் அவதரித்தும் பாவம் சிறிதும் பற்றாதவர்.
-----
149 விஜய :>
ப்ரம்மருத்திரர்களாகிய மற்ற இரண்டு மூர்த்திகளும் சிருஷ்டி சம்ஹாரம்
முதலிய தத்தம் காரியங்களில் ஜயம் பெறும்படி செய்பவர்.
129 வேத :>
1/2
தம்மால் தேகங்களையும் இந்திரியங்களையும் அடைந்திருக்கும் மனிதர்கள்
முதலானவர்கள் சாஸ்திரங்களைத் தம்மிடமே அடையும்படி கொடுப்பவர்.
"ப்ரம்மாவைப் படைத்து அவருக்கு வேதங்களையும் அளிக்கிறவர்" என்பது ஸ்ருதி
-----
129 வேத:>
2/2
இந்தக்காரணம் பற்றித்தான் ஸங்கரஷணருக்கு,
1.அப்யுபாயம் (ப்ரகதியை அடைவதற்குக் கருவி)
2.ஆகம: (சாஸ்திரம் வருமிடம்)
3. பந்தா (வழி)
4. நேதா (நடத்துகிறவர்)
5. ப்ராம்மண;
6. ஆசார்ய (உபதேசிப்பவர் ) என்று நாமங்கள் கூறப்பட்டிருக்கின்றன.
------------
ஹரிர் ஹரி
தினம் ஒரு திவ்விய நாமம் ....
2/3:>
எந்தன் இதயத்தில் வாசம் செய்வதையே பெரும்பேறு என்று எண்ணி எப்போதும்
இருந்துவரும் எம்பெருமானாரே! மிகவும் உயர்ந்த குணங்கள் கொண்டவரே!
-----
3/3:>
உம்மிடம் நான் செய்யும் விண்ணப்பம் ஒன்று உள்ளது. இந்த உடல் கொண்ட
காரணத்தால், பலவிதமான பிறவிகள் எடுத்து, பிறப்பதும் இறப்பதுமாக அடியேன்
உள்ளேன். இதன் காரணமாக பலவிதமான துன்பங்களை அனுபவித்தும் வருகிறேன்.
இந்தத் துன்பங்கள் இருப்பினும் எப்போதும் எங்கும் உமது திருவடிகளில்
மாறாத அன்பு கொண்ட உமது அடியார்களின் தெண்டனாக, அவர்களின்
திருவடிகளுக்குத் கைங்கர்யம்செய்துவரும்படி என்னை நீவிர் செய்ய வேண்டும்.
131அவ்யங்க:>
சிக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யொதிஷம், கல்பம் என்னும்
ஆறுவேதாங்கங்களும் தம்மிடத்தில் குறைவின்றி நிரம்பியிருப்பவர்.
132 வேதாங்க:>
வேதத்தைத் தமது சரீரமாக உடையவர். சரீரத்தினால் ஆத்மா அறியப்படுவதுபோல
வேதத்தினால் அறியப்படுகிறவர். "வேதம் தம்முடைய ஆஜ்ஞையாக இருப்பதனால்
அதைக் கருவியாக உடையவர்" என்பது.
133 வேதவித் :>
வேதங்களினால் அறியப்படும் தர்மத்தை அனுஷ்டிக்கும் படி செய்து அதைத்
தமக்கு ஆராதனமாகப் பெற்றுக் கொள்விறவர். இது ப்ரத்யும்னர் என்னும்
வ்யூகம்.
இந்தவ்யூகத்திற்கு,
1. தர்மம்,
2. ப்ரத்யோதயிதா (= விளங்கச் செய்பவர்.)
3. ப்ரவர்த்தயிதா (= நடத்துகிறவர்) என்று நாமங்கள் உள்ளன.
அடுத்த சொற்தொடர் லோகாத்யகக்ஷஸ் ஸுராத்யக்ஷோ தர்மாத்யக்ஷ;
க்ருதாக்ருத: | சதுராத்யக்ஷ
------
135
லோகாத்யக்ஷ
தர்மாநுஷ்டானத்திற்குத் தகுதியுள்ள மனிதர்களை ப்ரத்தியக்ஷமாக அறிபவர்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
வாமன அவதாரத்தை உபேந்திரராகக் குறிப்பிடுவார்கள்!!
ஹரிர் ஹரி
தினம் ஒரு திவ்விய நாமம் ....
160 ஸங்க்ரஹ :>
பக்தர்களால் எளிதில் ஏற்றுக் கொள்ளப்படுகிறவர்.
ஹரிர் ஹரி
தினம் ஒரு திவ்விய நாமம் ....
161 ஸர்க :>
ஸ்ருஷ்டிக்கப்படுகிறவர்
திரிவிக்ரமாவதாரஞ் செய்து திருவடித் தாமரைகளை யாவரும் எளிதில் பற்றும்படி தம்மைத் தாமே ஆக்கியளிப்பவர்.
ஹரிர் ஹரி
தினம் ஒரு திவ்விய நாமம் ....
162 த்ருதாத்மா :>
ஆத்மாக்களைத் தரிப்பவர்;
இப்படித் தம்மைத் தருவதனால் ஆத்மாங்களை உய்விப்பவர்.
ஹரிர் ஹரி
தினம் ஒரு திவ்விய நாமம் ....
163 நியம :>
அடங்குபவர்
அடுத்த்தவர்களைப் பகைக்கும் மஹாபலி முதலிய அசுரர்களை அடக்குகிறவர்.
164
நாமம் கிடைக்கப் பெற வேண்டியுள்ளது. கிடைத்தவுடன் இங்கே பதிப்பிக்கிறேன்.
----
அடுத்த சொற்தொடர் வேந்யோ வைத்யஸ் ஸதாயோகீ வீரஹா மாதவோ மது :|
அதீந்த்ரியோ:
மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல :
ஹரிர் ஹரி
தினம் ஒரு திவ்விய நாமம் ....
165 வேத்ய :>
அறியக்கூடியவர்.
இப்படி அவதாரங்களினால் புலன்களுக்கெட்டாத மஹிமையை வெளிப்படுத்தி யாவரும் அறிவதற்கு எளிதாயிருப்பவர்.
ஹரிர் ஹரி
தினம் ஒரு திவ்விய நாமம் ....
166 வைத்ய :>
வித்தையைக் கற்றவர்
தம்மைத் தியானிப்பவர்களுக்குப் பிறப்பு இறப்புக்களை நிவர்த்தி செய்யும் வகை அறிந்தவர்
ஹரிர் ஹரி
தினம் ஒரு திவ்விய நாமம் ....
167 ஸதாயோகீ :>
இப்படி ஜனன மரணங்களைப் போக்கும் விஷயத்தில் எப்போதும் ஊக்கத்துடன் இருப்பவர்.
ஹரிர் ஹரி
தினம் ஒரு திவ்விய நாமம் ....
168 வீரஹா :>
யுக்திவாதங்களினால் பரமாத்மஜ்ஞானத்தைக் கெடுக்கும் தர்க்கசூரர்களை ஒழிப்பவர்.
உலகம் பொய்யென்றும் பகுஷார்த்தமற்றதென்றும் ஈஸ்வரனில்லை என்றும் சொல்லும் கொடிய பகைவர்களும் நன்மையில்லாதவர்களுமாகிய அந்தக் கீழ்மக்களை ஸம்ஸாரங்களில் அஸுரப் பிறப்புகளிலேயே நான் எப்போதும் போடுகிறேன் என்று கீதையில் பகவான் சொல்வது.
ஹரிர் ஹரி
தினம் ஒரு திவ்விய நாமம் ....
169ஆவது திருநாமம் கிடைத்தவுடன் பதிப்பிக்கிறேன்.
170 மது :>
தேன் போன்றவர்
ஞானிகளான பக்தர்களுக்கு அமிழ்தம் போல் இன்சுவையாய் இருப்பவர்.
ஹரிர் ஹரி
தினம் ஒரு திவ்விய நாமம் ....
171 :>
அதீந்த்ரிய
புலன்களுக் கெடாதவர்
ஹரிர் ஹரி
தினம் ஒரு திவ்விய நாமம் ....
172 மஹாமாய :>
மிக்க மாயையுடையவர். தம்மைச் சரணமடையாத ஜனங்கள் அனைவருக்கும் திரைபோல் ஸ்வரூபம் தெரியாமல் மறைப்பதாகிய மாயை என்னப்படும். ஸங்கல்பத்தை உடையவர்.
ஹரிர் ஹரி
தினம் ஒரு திவ்விய நாமம் ....
173 மஹோத்ஸாஹ :>
மிக்க ஊக்கமுடையவர்.
எல்லாவற்றையும் படைப்பதாகிய ஈஸ்ரசக்தி மிகப் பெரியதாகவிருப்பவர். ஈஸ்வரன் போல ஒன்றும் செய்யாமல் தொழிலற்றிருப்பவர் அல்லர். தனக்கு ஒரு மேலதிகரியில்லாமல் தங்குதடையில்லாத தம் ஸங்கல்பலேசத்தினால் மாத்திரமே அவரவர் ஊழ்வினையின் தகுதிப்படி பலன்களைப் பகுத்துக் கொடுக்கும் ஸர்வசக்த்ர் என்பது.
இது ஜஸ்வர்யமென்னும் குணம்.
ஹரிர் ஹரி
தினம் ஒரு திவ்விய நாமம் ....
174 மஹாபல :>
மிக்க வலிமையுள்ளவர்.
மற்று ஓர் உதவியை எதிர்பாராது எல்லாவற்றையும் நடத்தும் சிறந்த மஹிமை உள்ளவர். தமது மஹிமையைத் தவிர வேறு ஆதாரமில்லாமல் எல்லாவற்றையும் தமது தேகத்தைப் போலத் தாமே தரித்திருப்பவர் என்பது. நீர் காற்று மலை பூமி முதலியவற்றிலுள்ள தாங்கும் சக்தி பகவானுடையசக்தி என்னும் கடலில் ஒரு சிறு திவலையாகத் தோன்றும் படியிருப்பவார் . இதுபலமென்னும் குணம்.
ஹரிர் ஹரி
தினம் ஒரு திவ்விய நாமம் ....
விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொற்தொடர் மஹாபுத்திர்
மஹாவீர்யோ
மஹாசக்திர்
மஹாத்யுதி :|
அநிர்தேஸ்யவபுஸ்
ஸ்ரீ மாநமேயாத்மா மஹாத்ரித்ருத்:||
175 மஹாபுத்தி:>
மிக்க ஞானமுள்ளவர். எக்காலமும் எவ்விடங்களிலுமுள்ள எல்லாப் பொருள்கள்கயைம் ஐயந்திரிபின்றி அறிவதாகிய பேரறிவுள்ளவர். "ஸர்வஜ்ஞர்" இது ஞானமெனுங் குணம்.
ஹரிர் ஹரி
தினம் ஒரு திவ்விய நாமம் ....
177(1) மஹாசக்தி :>
பெரிய சக்தியுள்ளவர்.
தமது சரீரத்தின் ஏகதேசமாகிய ப்ருக்குதியின் பரிணாமத்தினால் உலகங்களையெல்லாம் படைக்கும் பெரும் திறமையுள்ளவர். சிலந்தியானது தன் சரீரத்தின் எச்சிலினால் நூலையுண்டாக்கி அதற்குத்தானே கர்த்தாவாக இருப்பதுபோலப் பிரக்குதியின் பரிணாமங்களாகிய உலகங்களை நினைந்தமாத்தித்தில்
177 (2) மஹாசக்தி:>
படைப்பதனால் நிமித்தகாரண மென்னப்படும் கர்த்தாவாகவும் உபாதான காரணமென்னப்படும் மூலகாரணமாகவும் இருப்பவர் என்பது. இது சக்தி என்னும் குணம்.
ஹரிர் ஹரி
தினம் ஒரு திவ்விய நாமம் ....
169ஆவது திருநாமம் கிடைத்தவுடன் பதிப்பிக்கிறேன்.
169
மாதவ
“மா” என்னப்படும் பரமாத்ம ஞானத்தைக் கொடுப்பவர். மெளனம், த்யானம், யோகம் இம்மூன்றும் பொருந்தினவர்.
ஹரிர் ஹரி
தினம் ஒரு திவ்விய நாமம் ....
178 மஹாத்யுதி :>
மிக்க ஒளியுடையவர்.
"உள்ளும் புறமுமுள்ள இருளனைத்தையும் நினைத்த அளவில் ஒழித்துவிடும் ப்ரகாசமுள்ளவர் என்பது. ஸுர்யன் முதலியவற்றின் ஒளி இதன் ஒரு சிறுதுளி. இது தேஜஸ் என்னும் குணம். மேலே சொல்லிய ஆறு திருநாமங்களிலும் மஹா (அளவிடமுடியாத குணம்) என்னும் விசேஷணம் அமைந்துள்ளது.
ஹரிர் ஹரி
தினம் ஒரு திவ்விய நாமம் ....
179 அநிர்தேஸ்யவபு :>
குறிப்பிட முடியாத திருமேனியை உடையவர். மேற்குறிய ஆறு குணங்களும் அளவற்ற கடல்கள் போல நிரம்பியிருப்பதனால் திவ்யமங்கள விக்கிரகத்திற்கு உவமை சொல்லக் கூடாதவர்.