காமாட்சி அம்மன் விளக்கு - லட்சுமி காசு
தமிழக இல்லங்களில் பெரும்பாலும் காணப்படும் காமாட்சி அம்மன் விளக்கு மற்றும் மங்கல நாணில் கோர்க்கப்பட்டிருக்கும் லட்சுமி கால் காசு இவை இரண்டிலும் உள்ள உருவம் கஜ லட்சுமி எனப்படும் இருபுறம் யானை கொண்ட திருமகள் உருவமே .
ஆனால் பின்வரும் வினாக்கள் என் உள்ளத்தில் தோன்றியதால் விடைகளை எதிர்பார்த்து இப்பதிவை தொடுக்கிறேன்
1) காமாட்சி அம்மன் விளக்குக்கு ஏன் லட்சுமி உருவம் ?
2) கஜ லட்சுமி வழிபாடு தமிழ் நாட்டில் அவ்வளவு பொதுவானதா ? நான் அறிந்த வகையில் கஜ லட்சுமி தனி கோயில் ஏதும் தமிழ் நாட்டில் இல்லை
3) காஞ்சி காமாட்சி அம்மனை தாரா தேவி எனக்கொண்டாள் புத்த மதத்திற்கும் இந்த விளக்கிற்கும் தொடர்பு உண்டா ? சாஞ்சி ஸ்தோபம் சிற்பங்களில் கஜலக்ஷிமி
4)ஆசீவக மரபின் அழியாச் சின்னங்கள் - திருநிலை
ஆதி. சங்கரன் ஐயா அவரின் கருந்து இக்குறியீடு திருநிலை என்றும் இந்த பெண்கடவுள் மாதங்கி என்றும் கூறுகிறார் .
க. நெடுஞ்செழியன் ஆசீவகப்பாழிகளில் தங்கி பணிபுரிந்த மாதங்கி என்ற பெண் அய்யனார் உடைய சீடராக கருதுகிறார் ..
5) சரவணபெலகொலா கஜ லட்சுமி
6) மாதங்கி அம்மன் பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்திலும் , திருவெண்காடு ஆலயத்திலும் உண்டு
பெரும் குழப்பமாக உள்ள கஜ லட்சுமி வழிபாடு தமிழ் மரபில் ஏன் இன்றும் சிறந்து விளங்குகிறது ?
தமிழ் இலக்கியங்களில் ககலக்ஷ்மி குறித்த பாடல்கள் உண்டா ?