பல ஆண்டுகளாக தமிழ் ஓம் எழுத்து
கணி ஒருங்குகுறியில் இருப்பதையும்,
பாலைவனத்தில் பிறந்த உலக சமயங்கள்
ஆன யூதம், கிறித்துவம், இஸ்லாம் இவற்றில்
இல்லாவிடினும், இந்தியா தந்த ஹிந்து,
பௌத்தம், ஜைநம், சீக்கியம் இவற்றில்
ஓம் இருப்பதையும், ஏகாட்சரமாக தமிழ்
சித்தர் திருமூலர் திருமந்திரங்களில்
வரையறுத்துப்பதையும் பேராசிரியருக்கு
சுட்டிக் காட்டினோம். மைக்ரோசாப்ட் தரும்
தமிழ் ஓம் எழுத்து - ஹிந்தி ஓம் ஏகாக்ஷரத்துக்கு
இணையாக:
http://3.bp.blogspot.com/_TqVEWBx7H0U/SgLa6oCsojI/AAAAAAAAAdY/8t_OcpjfOj0/s1600-h/Tamil_Om.jpg
தேரவாதம் பௌத்த முன்னோர்கள் வகுத்த நெறி.
தேரவாதிகளில் அறிஞர்களாய் செயல்படும் தேரர்கள்
நூற்றாண்டுதோறும் இருந்திருக்கிறார்கள்.
கவிமணி தேசிகவினாயகம் பிள்ளையின்
ஊர் நாஞ்சில்நாட்டு தேரூர். பழைய ஆவணங்களில்
தேரரூர் என்றுள்ளது. அவ்வூரில் மிகப் பெரிய
அவலோகிதன் சிற்பம் கிடைத்துள்ளது
(நாகர்கோயில் எஸ். பத்மநாபன் ஆராய்ச்சிகள்).
சம்ஸ்கிருதத்துக்கு சரிநிகர் சமானமானது தமிழ்
என்று நிறுவ காலங்காலமாக முயற்சிகள் நடந்துள்ளன.
சமய உலகில் நடராஜரின் டமருகத்தில் ஒருபுறம்
பிறந்த ஓசை வடமொழி என்றும், இன்னொருபுறம்
பிறந்தது தமிழ் மொழி ஓசை என்றும் புராணம் கூறும்.
திராவிடவாதம் இந்தியவியலில் அறிஞர்களில்
பலர் ஆராய்ந்து வகுக்கும் நெறிகளில் ஒன்று.
ஆய்வுலகின் திராவிடவாதிகளாய் எல்லிஸ், கால்ட்வெல்,
வ.ஐ.சு, ஹார்ட், ஐராவதம், ஆஸ்கோ பார்ப்போலா, ...
போன்றோரைக் குறிப்பிடலாம். உ-ம்:
திராவிடம் போற்றிய வ.அய். சுப்பிரமணியம்
(18.02.1926 - 29.06.2009)
பேராசிரியர் பக்தவத்சல பாரதி
http://www.kalachuvadu.com/issue-116/page75.asp
நடராஜாவின் துடியில் பிறக்கும் இரு மொழி
ஓசைகளையும் இணைக்கும் ஏகாக்ஷரம்
பிரணவம். ஆசியா முழுக்க ஓம் எழுத்து
பிரபலம். யோகா மேலை நாடுகளில் பரவி
வருவதால் ஓம் அறியாதார் இன்றில்லை.
திராவிடவாதியான அறிஞர் ஆஸ்கோ பார்ப்போலா
பிரணவத்தின் தொல்வரலாற்றை மொழியியல்
நோக்கில் ஆராய்ந்து அதன் வேர் திராவிடம்
என்று ஆய்வேடு எழுதினார்:
http://www.scribd.com/doc/15050686/Parpola-Om
இந்தக் கோட்பாடு சம்ஸ்க்ருத அறிஞரிடையே
வெளிப்படுத்த பல ஆண்டுகள் ஆனமையை
என்னிடம் சொல்லியிருக்கிறார்.
மஹாசிவராத்திரி வழிபாடுகளுடன்,
நா. கணேசன்
அண்மையில் சென்னைப் பல்கலை ஓய்வுபெற்ற
தமிழ்ப் பேராசிரியர் ந. தெய்வசுந்தரம் யூனிகோடில்
தமிழ் எழுத்தாக ஓம் இடம்பெறலாமா? என்ற
கேள்வியை எழுப்பினார். அவர் தமிழ் பிளாக்கை
அப்பொழுதுதான் பார்த்தாராம்:
http://www.unicode.org/charts/PDF/U0B80.pdf
பல ஆண்டுகளாக தமிழ் ஓம் எழுத்து
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Mar 3, 2:26 am, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
> காலத்துக்கு ஏற்ற தேவையான பதிவு
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
>
கருத்துகளுக்கு நன்றி. தமிழில் ஓம் ஏகாக்ஷரம் களையப்பட்டால்
வறடாகிவிடும். கை வைக்காமல் பார்த்துக்கொள்ளப்படணும்.
தமிழ் கிரந்தம் இன்னும் கணினியில் இல்லை, முழுமையாக
இயங்கும்போது பழைய கல்வெட்டுக்களையும், மலையாளம்,
ஹிந்தி, தெலுங்கு நாம் படிக்க ஒரு லிபியாகப் பயன்படும்.
அன்புடன்,
நா. கணேசன்