பருந்தின் ஆலவட்டம் - Flight of the Eagle

133 views
Skip to first unread message

N. Kannan

unread,
Aug 29, 2010, 9:14:40 AM8/29/10
to மின்தமிழ்
பள்ளிக்காலங்களில் ஜே.கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி நந்து அறிந்திருக்கவில்லை. வள்ளலாரைப் பற்றி ம.பொ.சி எழுதிய புத்தகம் இருந்தது (வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (பள்ளிப் பதிப்பு) போல், ஸ்வாமி அண்ட் பிரண்ட்ஸ் என்று ஆர்.கே.நாராயணன் புத்தகம் இருந்தது போல் ஜே.கிருஷ்ணமூர்த்தி பற்றி யாரும் அறிமுகம் செய்யவில்லை. அவன் வளர்ந்த கிராமம் ஒரு சிவஸ்தலம். காமகோடி பீடம் ஆச்சார்யர் வந்த போது எல்லோரும் விழுந்து சேவிக்கச் சொன்னார்கள். நந்து மகிழ்வுடன் விழுந்து சேவித்தான். ஏனெனில், காலில் விழுந்து சேவிப்பது என்பது குழந்தையிலிருந்து அவனுக்குக் கற்பிக்கப்பட்டு வந்தது. மேலும் பெரியவர்கள் நாற்காலியில் உட்கார்ந்திருந்தால் நாம் மரியாதையாக தரையில் அமரவேண்டும் என்ற நாசூக்கும் நந்து கற்றிருந்தான். ஆனால், அந்த ஊரிலேயே யாரும் ஜே.கே பற்றி அவனிடம் சொன்னதில்லை. கிராமத்து வாழ்க்கையில் அரசமரத்துப் பிள்ளையார் உண்டு, ஆற்றோர முனீஸ்வரர் உண்டு, முருகன் உண்டு, சிவனுண்டு, பெருமாளுண்டு. சங்கரர் உண்டு, இராமானுஜர் உண்டு, பெரியாருண்டு, அண்ணா உண்டு ஆனால் ஜே.கிருஷ்ணமூர்த்தி கிடையாது. யாரும் அதைப்பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
 
கல்லூரி வந்து சேர்ந்தது ஒரு பெரிய திருப்பம். இவன் அரைக்கால் சட்டையுடன் கல்லூரியில் சேர மனு வாங்கப் போனபோது உதட்டோர ஆங்கிலத்தில் பேசி இவனைக் கேலி செய்த விடலையர் கூட ஜே.கே பற்றி இவனுக்குச் சொன்னதில்லை. இவனது ஆங்கில வாத்தியார் அப்படியே தன்னை ஆங்கிலேயன் போல் பாவித்து நடத்துவார் ஆனால் அவருக்கும் ஜே.கேயின் இருப்பு தெரிந்திருக்கவில்லை. அது ஏன்? இவரது நாத்திகப் பேராசிரியர் எல்லா நாத்திக சிந்தனையாளர்கள் பற்றியும் பேசுவார். பரீட்சைப் பேப்பரில் ‘ஓம்’ என்று எழுதும் சந்திரசேகரனைக் கிண்டல் அடிப்பார். இவனை தன்னுடைய சிந்தனைப்போக்கில் வழி நடத்த எண்ணிய அவர் கூட ஜே.கே பற்றிச் சொன்னதில்லை. கல்லூரி சேப்பலில் இலவசமாக பைபிள் புத்தகம் தருவார்கள். இவன் வாங்கிக்கொள்ளமாட்டான். ஸ்வாமி (Swami and Friends)யின் நினைவு உடனே வந்துவிடும். தன்னை மதம் மாற்றிவிடுவார்கள் என்று அம்மாதிரிப் புத்தகங்களை வாங்கிக்கொள்ளமாட்டான். அக்கல்லூரியில் விவேகாநந்தர் பற்றிய முழு வால்யூமும் இருந்தது. இவனுக்கு விவேகாநந்தர் பிடித்திருந்தது. அவரது நெஞ்சு நிமிர்த்திய போட்டோ பிடித்திருந்தது. ஆனால் அக்கல்லூரி நூலகத்தில் ஜே.கே பற்றி எந்தப் புத்தகமும் இவன் கண்டதில்லை. இவனை எப்படியும் சிவாநந்தர் வழியில் கொண்டு வந்துவிட வேண்டுமென்று வேதியியல் ஆசிரியருக்கு ஆசை. ஆனால் இவனோ நாத்திகம் பாதி, ஆத்திகம் பாதி என்று இருந்தான். ஆப்ரகாம் சொல்வதை நம்புவதா? ஐயங்கார் சொல்வதை நம்புவதா? என்ற குழப்பம். ஐயங்கார் வாத்தியார் இவனை முதன் முதல் நெருங்கி வந்த போது தோள் மீது கை போட்டு முதுகில் ஏதோ தேடினார். இவனுக்கு பயம். வாத்தியார் எதுக்கு தோள் மீது கை போடுகிறாரென்று! சரி! ஆத்திகமா! நாத்திகமா என்று இவர்கள் இருவரையும் மோதவிட்டுப் பார்த்துவிட வேண்டியதுதான் என்று ஒரு வெள்ளிக்கிழமை மாலையில் இவன் வகுப்பு மாணவர்களுக்காக ஆப்ரகாமையும், ஐயங்காரையும் மோதவிட்டுப் பார்த்தான். எல்லோருக்கும் ஒரே வேடிக்கை. ஐயங்கார் பேசினால் சாமி இருப்பது போல் தோன்றும். ஆப்ரகாம் பேசும் போது அது இல்லாதது போல் தோன்றும். ஆக, அந்த டிபேட் பெரிய குழப்பத்தில் இவனை கொண்டு போய் விட்டது. ஆனால் ஐயங்கார் ஸ்வாமிகள் எப்படியும் இவனை சிவாநந்தர் வழிக்குக் கொண்டு வந்துவிட வேண்டுமென்பதில் கவனமாக இருந்தார். மீனாட்சி கோயில் ஆடி வீதிக்கு வாரா, வாரம் போக வேண்டியதாய் போய் விட்டது. புதிய, புதிய வாயில் நுழையாத பஜன்களையெல்லாம் பாட வைத்தார்கள். இவனுக்கு கோரக்கன் கோயில் பலிக்கு முன் கட்டிய ஆடுதான் நினைவிற்கு வந்தது. அவ்வளவு பெரிய கல்லூரியில் யாரும் இவனுக்கு ஜே.கே பற்றிச் சொன்னதில்லை.
 
கல்லூரி முடிந்து ஆய்வகம் வந்த போது பல்கலைக்கழக வளாகத்தில் இருந்தான்.அங்குள்ள நூலகம் இவன் அதுவரை பார்த்த நூலகங்களிலேயே பெரிதான நூலகமாக இருந்தது. இவன் புத்தகப்புழு அல்லன். ஆனாலும் நூலகம் எப்போதும் இவனைக் கவர்ந்தது. ஒருநாள் இவன் கண்ணில் கிருஷ்ணமூர்த்தி பட்டார்.
 
 
ReaderJK.jpg
 
புத்தகத்தை கையில் எடுத்து படித்துப் பார்த்தான். ஒன்றுமே புரியவில்லை. சரி இது நமக்கு சரிப்பட்டு வராது என்று புத்தகத்தை இருந்த இடத்தில் வைத்துவிட்டு நகர்ந்தவன் தான். இவன் கல்யாணம் ஆகும்வரை யாரும் ஜே.கே பற்றி இவனிடம் பேசியதே இல்லை.
 
 

Jiddu Krishnamurti

"If I may I would like to point out we are not entertaining you. We are not indulging in some kind of intellectual game, or trying to point out what kind of belief you should have; or to seek a leader to solve our problems. We are not doing any kind of propaganda to persuade you to think in a particular direction, or to convince you of a particular point of view. But we are thinking together, observing together the problems, the crisis, that we are facing, the war, destruction, corruption, and the superstitions in the name of religion; all that nonsense that goes on in the name of religion, god and so on ..."

Jiddu Krishnamurti, Madras 1st public talk 26th December 1981

 
ReaderJK.jpg

srirangammohanarangan v

unread,
Aug 29, 2010, 11:14:58 AM8/29/10
to mint...@googlegroups.com
வாங்க நந்து வாங்க.
நல்வரவு :--)))

 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

ReaderJK.jpg

N. Kannan

unread,
Aug 31, 2010, 7:09:43 AM8/31/10
to மின்தமிழ்
2.
 
நந்துவின் கிராமத்தில் ஜே.கேயை அறியாதோர் அதிகமிருந்தது ஆச்சர்யமில்லை. ஏனெனில் அது சாதாரண குக்கிராமம். விவசாயம்தான் பிரதானம். ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிக்கும் பள்ளிக்கூடமுண்டு. எஸ்.எஸ்.எல்.சி பரீட்சை எழுத மானாமதுரை போக வேண்டும். எவன் மானாமதுரைவரை போய் பரிட்சை எழுதுவான்? அக்கிரகாரத்திலாவது அறிவுஜீவிகள் உண்டா எனில்? அங்கும் கிடையாது. திருநெல்வேலி பிராமணரான கிருஷ்ண அய்யர் திருப்புவனம் வந்து ஹோட்டல் வைத்தார். ஸ்ரீகிருஷ்ணா பவன் என்று பெயர் வைத்தார். நல்லபடியாக ஓடியது. அவரது உறவுக்காரர்கள் எல்லோரும் அவருக்கு ஒத்தாசையாக அங்கு வந்துவிட்டனர். நில, புலமென அதிகமான போது விவசாயத்தைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள தனது மச்சினனை அனுப்பினார். அன்றிலிருந்து கோபாலய்யர் விவசாயி ஆகிவிட்டார். அவர் பேச்சு, நடை உடை எதிலும் பிராமணத்துவம் பார்க்கமுடியாது. எப்போதாவது ஆவணியாவிட்டம் வந்தால் இவரைப் பூணூல் மாற்றிக் கொள்ளப் பார்க்கலாம். அவ்வளவுதான். சரி, பஞ்சாங்க ஐயங்கார் வீடு எப்படி? அவருக்கும் நில புலன்கள் உண்டே. அவர் விவரமாக பெரிய பையனை வக்கீல் படிக்க வைத்தார். சின்னவனை விவசாயி ஆக்கிவிட்டார். நாராயணன் ஆவிணியாவிட்டம் என்றால் கூட வர மாட்டான். கேட்டால், ‘ஆமா! என்னை எவன் பிராமணன் என்பான்?’ என்று சொல்லி வெட்கப்பட்டு சிரிப்பான். கோவிந்த ஐயங்கார் மட்டும் திண்ணையில் உட்கார்ந்து கொண்டே விவசாயம் பார்ப்பார். அதை அப்படியே அவர் பிள்ளை காளமேகமும் செய்தான். அது எப்படி சாத்தியப்பட்டது என்றறியும் திறன் நந்துவிற்கு இல்லை.
 
சரி, இந்தப் பிராமணப்பசங்களுக்கு வேதம் சொல்லிக்கொடுக்கலாமென்று மதுரையிலிருந்து ஒரு கனபாடிகள் வந்தார். அப்படியாவது இன்னொரு மொழி இவர்களுக்கு பரிட்சயமாகட்டுமென்று. ஆனால் எவனாவது போனால்தானே! அவர் ஒரு மாதம் பார்த்துவிட்டு ‘இது ஒண்ணும் சரிப்படாது’ என்று போய்விட்டார். நந்துவிற்கு அந்த மாமாவின் முகத்தில் ஒரு தேஜஸ் இருப்பதாக புலப்படும். அதற்காக சமிஸ்கிருதம் படிக்கவா முடியும்?
 
ஆனால் அங்கிருந்த பள்ளிக்கூடம் இவர்களுக்கு மாற்று மொழி சொல்லிக்கொடுக்க ஒரு திட்டம் போட்டது! அதாவது, மாலை நேரங்களில் ஆங்கிலம் வந்து கற்றுக்கொள்ளும் சிறார்களுக்கு உச்சிக்குடுமி ஐயர் கடையிலிருந்து ஒரு லட்டு, ஒரு மிக்சர் பொட்டலம் தரப்படும் என்று அறிவித்தது. நந்துவிற்கு இதுவொரு நல்ல திட்டமாகப்பட்டது. ஏனெனில் உச்சிக்குடுமி ஐயர் கடைக்குப் போய் சாப்பிட தனியாகக் காசு வேண்டும். இவன் தந்தையை வேண்டிய நேரத்தில் காண்பதரிது. சித்தியாவோ கோபக்காரர். காசு நிச்சயம் தருவார். ஆனால் அது சிவன் நெற்றிக்கண்ணைத் திறந்து கொண்டு அருள் செய்வதற்கு ஒப்பானது. நந்துவிற்கு தீக்காயம் பட்டுப் பழகிவிட்டது. இந்த நிலையில் ஆங்கிலம் கற்றுக் கொண்டால் கசக்கவா செய்யும்? ஆனாலும், அங்கும் கூட்டமில்லை. கிராமத்துப் பசங்களை லட்டு, மிக்சர் கொடுத்தெல்லாம் அவ்வளவு எளிதில் மயக்கிவிட முடியுமா என்ன? ஆனாலும், நாலு பேர் இருந்ததால் அந்த வகுப்பு ஓடியது.
 
இவன் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த போது, இந்தி வாத்தியார் ஒருவர் இருந்தார். மகாலிங்கமென்று பெயர். அவரை ஹிந்தி பண்டிட் என்றுதான் சொல்லுவார்கள். அவர் பள்ளியில் சொல்லிக்கொடுத்தது போதாது என்று மாலை வேளைகளில் வீட்டிற்கும் வந்துவிடுவார். பசங்களின் தொல்லை தாங்காத பெற்றோர்கள் சிறுவர்களை மாலைப் பாடத்திற்கு உட்கார வைத்து விடுவர். ஆத்திரம் தாங்காத நந்து பண்டிட் உட்காரும் ஈசிசேர் கம்பைக் கழட்டிவிட்டு அப்படியே வைத்துவிடுவான். அவர் பாடம் ஆரம்பிக்க வந்து உட்கார, ஈசிசேர் படுதா நழுவிக்கொள்ள ‘படார்’ என்று பின் மண்டை ஈசிசேர் கட்டையில் மோத..மூட் அவுட்டாகி பாடம் நடத்தாமல் போய்விடுவார். ஆனால் நந்துவிற்கு பேருதவி செய்தது சில கட்சிகள். அவை இந்தியை எதிர்த்தால் பள்ளிக்கூடமே மூடப்படும் எனும் நற்செய்தியை மாணவர்களிடம் பரவ விட்டது. இந்தத் தேனினும் இனிய சேதி கேட்டு நந்து போன்ற மாணவர்கள் இந்தி எதிர்ப்பில் ஈடுபட்டனர். எதற்குச் செய்கிறோம் என்ற புரிதல் இல்லாமல் ஜாலியாக மாணவர்கள் வகுப்பைப் பகீஷ்கரித்தனர். ஒருநாள் பள்ளி கேட்டுக்கு உள்ளே உட்கார்ந்து கொண்டு ‘இந்தி ஒழிக!’ என்று கத்திக் கொண்டிருந்த போது (விடுமுறை நாளில்) ஒரு லாரி நிறைய ‘சட்டி போலீஸ்’ வந்திறங்கி லத்தியைக் கொண்டு மாணவர்களை வாங்கு, வாங்கு என்று வாங்கி விட்டது. நந்து இரண்டு அடியில் சுவரேறிக் குதித்து ஓடிவிட்டான். இவன் அண்ணன் மறவன். நின்று அடி வாங்கி. லாக் அப்பில் வைக்கப்பட்டான். இவன் வந்துதான் வீட்டிற்குச் சேதி சொன்னான்.
 
அது தவிரவும் அந்த ஊர் முரட்டு ஊர். நினைத்தால் வெட்டு. நினைத்தால் குத்து. இவன் தாத்தா கூட சுருள் கத்தி வைத்திருந்தார். வாக்கிங் ஸ்டிக்கில் ஒரு பட்டாக்கத்தி மறைந்திருக்கும். கேட்டால் தற்காப்பிற்கு என்பார். இவன் பள்ளிக்கூடம் போகும் போது இரண்டு கொலைகள் பார்த்திருக்கிறான். முதற்கொலை கோரக்கன் கோயிலில் ஒரு ஆட்டின் தலை வெட்டப்படுவது. இரண்டாவது இவன் அக்கா கிளாஸ்மேட் பொரிகடலைக்காரப் பையன் அந்த ஊர் பெரிய ரவுடியை வயிற்றில் குத்தி சாய்ததை. முதல் கொலையைக் கண்டு விட்டு வகுப்பில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் போது வாந்தி எடுத்தான். இரண்டாவது கொலையை ஊரே பார்த்தது. ஆனாலும் வீட்டிற்கு ஓடி வந்து, வரும் போதே டவுசரெல்லாம் நனைந்து போய், இரண்டு நாள் கடும் ஜுரத்தில் வீழ்ந்து விட்டான். இந்த அழகில் அந்த ஊரில் எப்படி அறிவு ஜீவிகளைக் காணமுடியும்?
 
ஆனாலும், அங்கு அறிவு ஜொலித்த ஒரே இடம் பார்பர் ஷாப்தான். அங்கு போனால் வரிசையாக படம் தொங்கிக்கொண்டிருக்கும். ஸ்டாலின், மார்க்ஸ், இங்கர்சால், அம்பேத்கார் என்று. இவர்களெல்லாம் யார் என்று யாரும் இவனுக்கு விளக்கிச் சொன்னதில்லை. சவரக்கடையில் கிடக்கும் நாளிதழ்களைக் கூட தைர்யமாக எடுத்துப் படித்துவிட முடியாது. எவனாது முரடன், மிலிட்டரிக்காரன் வந்து விட்டான் எனில். படிக்கும் பேப்பரை அறைந்து வாங்கிப் படிப்பான். அங்கு என்றும் வாய் பேசியதில்லை. எடுத்தவுடன் கைதான் பேசும்.
 
இப்படிப்பட்ட அறிவு ஜீவிகள் உள்ள ஊரில் ஜே.கிருஷ்ணமூர்த்தியை எப்படி அறிந்திருக்க முடியும்?
 
 

Knowledge is always accompanied by ignorance


A great many scientists in the West have gone into the question of the brain. They say that we are using only a very small part of the whole brain. We can observe whether this is so in ourselves, for it is part of meditation to find out—for ourselves—whether the whole brain or only a very small part is operating. Now, thought is the response of memory which has been stored through knowledge; knowledge is gathered through experience. That is, experience, knowledge, memory stored in the brain, then thought, then action. This is our pattern of living, and the whole process is based on this movement. Man has done this for the last million years. He has been caught in the cycle, which is the movement of thought. And within this area he has choice. He can go from one corner to the other and say, “This is my choice, this is my movement of freedom”—but it is always within the limited field of the known. And knowledge is always accompanied by ignorance because there is no complete knowledge about anything. So we are always in this contradictory state: knowledge and ignorance.

A Timeless Spring, p 163

srirangammohanarangan v

unread,
Aug 31, 2010, 1:29:26 PM8/31/10
to mint...@googlegroups.com
என்ன நேரேஷன் ஐயா!
 
நந்து என்று பெயர் கட்டிப் புறம் ஆக்கினீர் பாரும்,
அது பிரில்லியண்ட் ஐடியா!
 
எல்லாருக்கும் ‘நான்’ நான்’ என்று சொல்லி  நிகழ்ந்தவை-கூறலைச் சரியாக நகர்த்த முடியாது.
அன்றைய நானோடு இன்றைய நான் போய் சல்லாபம் செய்ய ஆரம்பிக்கும். பிறகு முரண்டு பிடிக்கும்.
 
இப்படிப் புறவயமாக்கிப் பெயரிட்டுவிட்டால் மிகவும் சௌகரியம்.
 
நந்துவுக்கு எப்படி ஜே கே அப்பீல் ஆகிறது என்பதை நாத்து நடுகின்ற இடம் அருமை! 
 
>>>>ஆனாலும், அங்கு அறிவு ஜொலித்த ஒரே இடம் பார்பர் ஷாப்தான். அங்கு போனால் வரிசையாக படம் தொங்கிக்கொண்டிருக்கும். ஸ்டாலின், மார்க்ஸ், இங்கர்சால், அம்பேத்கார் என்று. இவர்களெல்லாம் யார் என்று யாரும் இவனுக்கு விளக்கிச் சொன்னதில்லை. சவரக்கடையில் கிடக்கும் நாளிதழ்களைக் கூட தைர்யமாக எடுத்துப் படித்துவிட முடியாது. எவனாது முரடன், மிலிட்டரிக்காரன் வந்து விட்டான் எனில். படிக்கும் பேப்பரை அறைந்து வாங்கிப் படிப்பான். அங்கு என்றும் வாய் பேசியதில்லை. எடுத்தவுடன் கைதான் பேசும்.
 
இப்படிப்பட்ட அறிவு ஜீவிகள் உள்ள ஊரில் ஜே.கிருஷ்ணமூர்த்தியை எப்படி அறிந்திருக்க முடியும்?<<<<<<
 
 
அது எப்படி பார்பர் ஷாப்பைப் பிடித்தீர்?
 
என்ன அங்கதம்:--)) 
 
நிராத் ஸி சௌத்ரியின் இந்திய அனுபவங்கள் மாதிரி இருக்கிறது.
 
அடித்தளமே ஆர்வமிக அமைந்திருக்கிறது.
 
இனி வருவன ஒரு நல்ல இலக்கியம்தான்!
 
மரபு விக்கியில யாராவது துண்டு போட்டு வைங்க:--)))


 

--

devoo

unread,
Aug 31, 2010, 2:34:00 PM8/31/10
to மின்தமிழ்
>> நந்து என்று பெயர் கட்டிப் புறம் ஆக்கினீர் பாரும், அது பிரில்லியண்ட் ஐடியா! <<

'பூவணத்தெம் புனிதனார்’ பழைய இழையின் ஹீரோ இந்த வாண்டுதான்; அவனது
முதிர்வடையாத பார்வையில் அந்த ஒப்பற்ற சிவத்தலம் மனத்தில் இனிய
தோற்றங்களைப் பதிவு செய்தது. அது போன்றதான ஒரு சிவத்தலத்தில்
வாழ்ந்ததால் கிட்டத்தட்ட அதே அனுபவம்தான் அடியே னுக்கும். ஒருவேளை அந்த
ஒற்றுமை காரணமாக இருக்க வேண்டும்.

ஆழ்வார்க்கடியார் அருளியவற்றுள் இந்த இழையும், ‘அண்டம் மோழை எழ’
பதிவும் ஒரு நாளும் மறக்க முடியாதவை


தேவ்


On Aug 31, 12:29 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:


> என்ன நேரேஷன் ஐயா!
>
> நந்து என்று பெயர் கட்டிப் புறம் ஆக்கினீர் பாரும்,
> அது பிரில்லியண்ட் ஐடியா!
>
> எல்லாருக்கும் ‘நான்’ நான்’ என்று சொல்லி  நிகழ்ந்தவை-கூறலைச் சரியாக நகர்த்த
> முடியாது.
> அன்றைய நானோடு இன்றைய நான் போய் சல்லாபம் செய்ய ஆரம்பிக்கும். பிறகு முரண்டு
> பிடிக்கும்.
>
> இப்படிப் புறவயமாக்கிப் பெயரிட்டுவிட்டால் மிகவும் சௌகரியம்.
>
> நந்துவுக்கு எப்படி ஜே கே அப்பீல் ஆகிறது என்பதை நாத்து நடுகின்ற இடம் அருமை!
>
>  >>>>ஆனாலும், அங்கு அறிவு ஜொலித்த ஒரே இடம் பார்பர் ஷாப்தான். அங்கு போனால்
> வரிசையாக படம் தொங்கிக்கொண்டிருக்கும். ஸ்டாலின், மார்க்ஸ், இங்கர்சால்,
> அம்பேத்கார் என்று. இவர்களெல்லாம் யார் என்று யாரும் இவனுக்கு விளக்கிச்
> சொன்னதில்லை. சவரக்கடையில் கிடக்கும் நாளிதழ்களைக் கூட தைர்யமாக எடுத்துப்
> படித்துவிட முடியாது. எவனாது முரடன், மிலிட்டரிக்காரன் வந்து விட்டான் எனில்.
> படிக்கும் பேப்பரை அறைந்து வாங்கிப் படிப்பான். அங்கு என்றும் வாய்
> பேசியதில்லை. எடுத்தவுடன் கைதான் பேசும்.
>
> இப்படிப்பட்ட அறிவு ஜீவிகள் உள்ள ஊரில் ஜே.கிருஷ்ணமூர்த்தியை எப்படி
> அறிந்திருக்க முடியும்?<<<<<<
>
> அது எப்படி பார்பர் ஷாப்பைப் பிடித்தீர்?
>
> என்ன அங்கதம்:--))
>
> நிராத் ஸி சௌத்ரியின் இந்திய அனுபவங்கள் மாதிரி இருக்கிறது.
>
> அடித்தளமே ஆர்வமிக அமைந்திருக்கிறது.
>
> இனி வருவன ஒரு நல்ல இலக்கியம்தான்!
>
> மரபு விக்கியில யாராவது துண்டு போட்டு வைங்க:--)))
>

> ...
>
> read more »

N. Kannan

unread,
Aug 31, 2010, 6:31:28 PM8/31/10
to mint...@googlegroups.com
தேவ் சார்:

> 'பூவணத்தெம் புனிதனார்’  பழைய  இழையின் ஹீரோ  இந்த வாண்டுதான்;  அவனது
> முதிர்வடையாத பார்வையில்   அந்த  ஒப்பற்ற  சிவத்தலம்  மனத்தில் இனிய
> தோற்றங்களைப் பதிவு செய்தது.

அது என்ன வெறும் கோயிலா?
லா.ச.ரா சொல்வது போன்ற ஒரு அனுபவ ஸ்தலம்.
20/30 வருடங்களுக்குப் பின் முதல் முறை கோயிலுக்குப் போகிறேன் (எல்லோரும்
மேலே போய்விட்ட பின் எனக்கு அங்கு இருக்கும் ஒரே உறவு அக்கோயில்தான்).
அதே கோயில். அதே நடராஜபட்டர். அதே விபூதித்தட்டு.

‘மாமா! நமஸ்காரம்!’
‘யாரு கண்ணனா? எப்படி இருக்கே! சரி, உள்ளே போய் தரிசனம் பண்ணு, என்று
சொல்லிக் கொண்டே விபூதிப் பிரசாதம் தருகிறார்.

வேடிக்கை என்னவெனில் இவர் என்னை இத்தனை நாள் பார்க்கவில்லை. எப்படி
அடையாளம் கண்டு கொண்டார் என்பது வேறு விஷயம். ஆச்சர்யம் என்னவெனில், ஒரு
கேள்வி. வாயா வார்த்தைக்காவது? ‘என்னடா? எங்கே இருக்கே? இத்தனை
வருஷமாச்சே?’ ஊகூம். ஏதோ நேத்துப்பாத்தவனை இன்னிக்குப் பார்ப்பது போல்!!

அங்கு எதுவுமே மாறுவதில்லை என்று உணர்ந்து கொண்டேன்.
அவன் சாட்சியாக அங்கு அமர்ந்திருக்கிறான்.
அவன் அறியாத பொருளில்லை.
அவனுக்கு உறவாகாத பொருளும் இல்லை.
நேற்று, இன்று நாளை என்பதெல்லாம் அவனுக்கு இல்லை.
அவன் அம்பலத்தில் இன்று மட்டுமே உண்டு.

இவ்வளவும் நடராஜ பட்டர் என்னை வரவேற்றதில் இருந்தது. இப்போது யோசித்துப்
பார்த்தால் நடராஜ பட்டர் எப்படி இத்தனை நாள் உயிருடன் இருந்தார் என்பது
ஆச்சர்யம். நான் பார்த்த சிறுவயதிலேயே அவர் 50/60 வயதுக்காரராகவே
இருந்தார். அவரையும் என்னையும் விட்டால் கோயிலில் ஆள் இல்லை. அடுத்தமுறை
சென்ற போது அவரில்லை.

அவன் புனிதன். அவன் தாள் பணிதல் நம் கடன்.

க.>

N. Kannan

unread,
Sep 3, 2010, 10:51:19 PM9/3/10
to மின்தமிழ்
3.

“When the mind is acute, then it begins to question the environment,
the conditions, and in that questioning, intelligence is functioning;
and it is only intelligence that will lead man to the fullness of life
and to the discovery of the significance of sorrow" J.Krishnamurti

அந்த ஊரில் யாரும் கேள்வி கேட்பதில்லை. வீட்டில் கேள்வி கேட்டால் அறை
விழும். நந்துவின் சகோதரி இப்படி அம்மாவிடம் கேள்வி கேட்டு அடி
வாங்குவாள். அது பெரும்பாலும் நந்துவிற்கு மட்டும் வீட்டில் ஏன் சலுகைகள்
அதிகம் என்பது போன்ற கேள்விகள். அம்மா பதில் சொல்ல மாட்டாள் அறைதான்
விடுவாள். சித்திதான் பதில் சொல்லுவாள். ‘டீ! ஏண்டி அக்காவைத் தொந்தரவு
செய்யறே! ஏழுக்குப் பிறகு கண்ணே கண்ணு ஒண்ணே ஒண்ணுன்னு ஒரு ஆம்பிளைப்
பையன் பிறந்திருக்கான். அதுதான்’ என்பாள். சித்திக்கும் திட்டுவிழும்.
‘ஆமாம்! இவ பெருசாக் கண்டா!’. ‘அப்படிச் சொல்லாதே அக்கா! நந்து மாதிரி
ஒரு குழந்தை கிடைக்கணுமே’ என்று! சௌந்திரம் கேட்ட கேள்விக்கு விடை
கிடைக்காமல் கூடுதலாக நந்து மேல் எல்லோரும் பாசம் பொழிவதால் சௌந்திரம்
இன்னும் கூடுதல் எரிச்சலடைந்து அந்த இடத்தை விட்டு அழுது கொண்டே
போய்விடுவாள். நந்துவிற்கு சித்தியென்றால் உயிர். சித்திக்கும் அப்படியே.
ஆனால் நந்துவின் அம்மாவிற்கு எல்லோரையும் கட்டுப்பாட்டில்
வைத்திருப்பதில் குறி. நந்து வீட்டில் உட்கார்ந்து கொண்டு ஏதாவது சேட்டை
செய்து கொண்டிருக்கும்போது அடுப்படியில் இருக்கும் அம்மாவிற்கு அது
எப்படித் தெரியும் என்பது ஒரு மர்மம். ஆனால் அடுப்படியிலிருந்து அவள்
குறி பார்த்து வீசும் சின்ன டம்பளர் நந்துவைப் பதம் பார்ப்பதுண்டு. நந்து
அழுதால் சித்திதான் பதறி அடித்துக் கொண்டு ஓடிவருவாள்.

பள்ளியில் கேள்வி கேட்டால் பிரம்படி கிடைக்கும். அதுவும்
வாத்தியாருக்குத் தெரியாத கேள்விகளைக் கேட்டுவிடக் கூடாது! ஐரோப்பிய
வரலாறு என்று பாடம் இருக்கும். நெல்சன் எப்படி பிரெஞ்சுக் கடற்படையைத்
தோற்கடித்தான் என்று இந்திய மாணவர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான பாடம்
இருக்கும். டென்மார்க் பற்றி பூகோளம் பேசும். தமிழகத்தின் ஏதோவொரு
கிராமத்திலிருந்து வரும் வாத்தியாருக்கு மாணவனுக்குப் புரியும்
அளவிற்குத்தான் இந்த வெளிநாட்டுச் சமாச்சாரமெல்லாம் புரியும். அவரைப்போய்
ஏடாகூடமாக ஐரோப்பிய சரித்திர நுணுக்கங்களைக் கேட்டால் பிரம்படி விழும்.
தமிழ்ப் பாடமென்றாலும் அடிவிழும். அங்கொரு நொண்டிக்கை வாத்தியார்
இருந்தார். சோத்துக்கை முடம். எனவே "எல்லாம்" இடது கையில்தான். இதை
மாணவர்களும், மற்றவர்களும் அவருக்கு எப்படியோ உணர்த்திய வண்ணம் இருப்பதாக
ஆசிரியர் உணர்வார். அதனால் எப்போதும் ஓர் கொதி நிலை.

சட்டியிலே பாதி அந்தச்
சட்டுவத்தில் பாதி இட்டிருக்க
இட்டமுடன் நாடி வந்த சோனேசர்
இங்கு வா! என்றழைத்தவுடன்

பிள்ளை ஓடி வந்தது எவ்வாறு உரை!?

என்று இருக்கும் கேள்வி. முதலில் கேள்வி புரியும் படியாக இருக்க
வேண்டும். கேள்விக்கே பொருளுரை தேவைப்படும் போது பதில் எப்படி
எதிர்பார்க்கமுடியும்? பதில் சொல்லவில்லை எனில் பின்னி எடுத்துவிடுவார்.
அவருக்கு மாற்றுத்திறனாளர்களை தமிழ் சமூகம் நடத்தும் அவநிலைக்கு தான்
கொடுக்கும் பரிசு என்பது போல் அவர் தரும் அடிகள் ஒன்றுமறியா மாணவர்களின்
மீது மழையாய் பொழியும்!

சமூகத்தில் கேள்வி கேட்டால் கொலைதான் விழும்! அந்த ஊரில் சேர்வார்களுக்கு
செல்வாக்கு. அந்த ஊரின் பெரிய ரௌடி சேர்வார் வீட்டு ஆளு! தலித்துக்கள்,
முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஊரின் மையப்பகுதிவிட்டு விளிம்புப்
பரப்புகளில் வாழ்வர். அங்கு கொலை விழுந்தால் கூட இரண்டு நாள் கழித்துதான்
தெரியும். பல்வேறு வகையில் கொலை விழும். ஒரு நாள் எல்லோரும் கிசு, கிசு
என்று பேசிக்கொண்டிருந்தார்கள். முனீஸ்வரர் ஆல மரத்தில் ஒருவன்
தூக்கிட்டுத் தொங்குகிறான் என்று. நந்து தன் கோஷ்டியுடன் உடனே ஆற்றை
நோக்கி ஓடினான். இவனுக்கு ஆச்சர்யம் என்னவெனில் அந்த ஆலமரம் மிகவும்
சிக்கலான அமைப்புக் கொண்டது. மதிலைத்தாண்டி விழுதுகளை மண்மீது பாய விட்டு
சாய்ந்து நிற்கும் மரமிது. மதிலுக்கு உள்ளே, மரத்தடியில் முனீஸ்வரர்
சந்நிதி. மிகவும் சக்தி வாய்ந்த முனீஸ்வரர் என்று பெயர். அவரை மிதித்து
மரத்தில் ஏறி, இவன் தொங்கும் இடத்திற்கு வருவதற்குள் குளவி, தேள், தேனீ
இவை கொட்டி கீழே விழ வேண்டியிருக்கும் அல்லது கரடு முரடான வழுக்கு
மரத்தில் ஏறமுடியாமல் கீழே விழ வேண்டியிருக்கும். இவ்வளவு சிக்கலையும்
தாண்டி அவன் நடு மரத்திற்கு வந்து தூக்குப்போட்டுத் தொங்குகிறான் எனில்
அதுவொரு சாதனை என்று பாராட்டுப்பெற வேண்டியிருக்க ஏன் சாக வேண்டும்?
நந்து செத்தவனைப் பார்த்து கேள்வி கேட்டுக்கொண்டிருக்க ஊர்ப்பெரிசுகள்
சிறுவர்களை விரட்டினர். பிறகுதான் தெரிந்தது அது தூக்கு அல்ல, கொலை
என்று. போஸ்ட்மார்ட்டம் செய்யும் போது தெரிந்தது இறந்தவனின் கொட்டைகள்
நசுக்கப்பட்டு இறந்திருக்கிறான் என்று. இப்படி விநோதமாகக் கொலை விழும்
கிராமம் அது.

ஆனால் அச்சமூகத்தைக் கேள்விக்குறியாக்கி நின்றன கழகச் சுவரொட்டிகள்.
‘கடவுளை நம்புகிறவன் முட்டாள்! கடவுள் இல்லை. இல்லவே இல்லை!’ என்று.
இதைப் பெரிய கரிகொண்டு சண்முகபட்டர் வீட்டுச் சுவரில் வேண்டுமென்றே
எழுதிவிட்டான். அவரும் வெள்ளையடிக்க, இவன்களும் மீண்டும் எழுத என்று ஒரு
யுத்தமே அங்கு நடந்து கொண்டு இருந்தது. எனவே சொல்லாமலே
இரண்டுபட்டிருக்கும் ஊரில் இதுவொரு பெரிய பிரிவினையை, ஒரு நிழல்
யுத்தத்தை கிளப்பி விட்டிருந்தது.

இப்படி அடிவிழாமல் கேள்வி கேட்கப்படும் ஒரே இடம் பார்பர் ஷாப்பாக
இருந்தது. அதுவே அந்த ஊரின் அறிவாலயமாக இருந்தது. கழகத்தின் பாசறை என்று
பார்பர்ஷாப்பைச் சொல்லலாம். அங்குதான் புரட்சியின் கனல்கள் பொத்தி பொத்தி
காக்கப்பட்டன. அங்கும் அடிதடி நிகழும் வண்ணம் சூடு பரக்கும் விவாதங்கள்
நிகழ்தாலும் பார்பர் கையில் கத்தி இருப்பதால் எல்லோரும் கொஞ்சம் அடக்கியே
வாசிப்பதுண்டு.

ஆனால் இப்படிக் கேட்கப்பட்ட கேள்விகள் அச்சமூகத்தை முற்றும் முழுவதுமாக
மாற்றிவிடவில்லை. எல்லாம் அரைகுறை சாமாதானமாக, அச்சமூக அமைப்பில்
நிகழ்ந்த வரப்பு மாற்று உத்திகளாக மட்டுமே நிகழ்ந்தன. அம்மக்களை
அச்சமூகம் போட்டிருந்த தளைகளிலிருந்து முற்றும் முழுதுமாக விடுதலை
செய்யும் கேள்விகளை கேட்கும் திறனுள்ள அறிவாளி அந்த ஊரில் யாரும் இல்லை.

நந்துவைப் பொறுத்த மட்டில் அந்த ஊரின் ஒரே அறிவாளி அவன் அக்காள்
செல்லம்மாள்தான். அவள்தான் எல்லாப் பரீட்சையிலும் முதல் மார்க்
வாங்கினாள். இருக்கும் பரீட்சைகள் போதாதென்று தமிழ் மன்றப் பரீட்சையென்று
மானாமதுரை போயும், ஹிந்தி பிராத்மிக் பரீட்சையென்று மதுரை போயும் எழுதிக்
குவித்தாள். பாட்டுப் போட்டிகளில் வேறு கலந்து கொள்வாள். அந்த ஊருக்கு
யாராவது முக்கியப் பிரமுகர்கள் வந்து நடத்தும் விழாக்களில் இவளும், இவள்
தங்கையும்தான் இறை வணக்கம் பாடுவர். கயிற்றில் நடப்பது போன்ற
அருணகிரியாரின் பாடல்களையெல்லாம் அவர்கள் சரளமாகப்பாடுவர். மார்கழி
மாதத்தில் காலை நேரங்களில் பெரியகோயில் போய் திருப்பாவை பாடுவர்.
செல்லம்மாள்தான் அந்த ஊரில் நடந்த எஸ்.எஸ்/எல்.சி பரீட்சையில் முதல்
மதிப்பெண் பெற்றுத் தேர்ந்தாள். அவளே முதன்முறையாக கல்லூரி வாசலையும்
எட்டினாள். பாத்திமா கல்லூரி தந்த மேலைநாட்டு கிறிஸ்தவ மேனர்ஸ் மெல்ல,
மெல்ல நந்து வீட்டிற்கும் வந்தது. ஒரு கோடை விடுமுறையில் எப்படி ஒருவர்
உதவி செய்தால் ‘நன்றி’ சொல்வது என்று சொல்லிக்கொடுத்தாள். வீட்டிற்குள்
ஒருவருக்கொருவர் நன்றி சொல்வதா? அது யாரும் கேள்விப்படாத வழக்கமாக
இருந்தது. அது நல்ல பழக்கம் என்றாள்.

அவளுக்குப் பரிசாகக் கிடைக்கும் வியாசர் விருந்து, சக்கிரவர்த்தித்
திருமகன், பாரதியார் பாடல்கள், தாகூரின் கீதாஞ்சலி போன்ற
புத்தகங்களெல்லாம் நந்துவிற்கும் விருந்தாக அமைந்தன. அந்த ஊரில் பஸ்
ஸ்டாண்டிற்கு அருகில் ஒரு நூலகமுண்டு. அதுவே நந்துவின் அறிவாலயமாக
செயல்பட்டது. அங்குதான் வெளி உலகம் இவனுள் புகுந்தது. கலைக்கதிர் எனும்
நூல் அவனை மிகவும் ஈர்த்தது. ஆழிப்பேரலை பற்றியெல்லாம் அறியும் போது
வியப்பு மேலிட்டது.

ஆயினும் அந்த ஊர் நூலகத்திலும் ஜே.கே பற்றிய நூல்கள் இல்லை!

http://www.dailymotion.com/video/x9klzo_j-krishnamurti-6-biographie_webcam

srirangammohanarangan v

unread,
Sep 4, 2010, 4:58:41 PM9/4/10
to mint...@googlegroups.com
‘ஆமாம்! இவ பெருசாக் கண்டா!’. ‘அப்படிச் சொல்லாதே அக்கா! நந்து மாதிரி
ஒரு குழந்தை கிடைக்கணுமே’ என்று! சௌந்திரம் கேட்ட <<<
 
ரொம்ப செல்லம் கொடுத்துட்டா போல இருக்கு!!
 :--))


>வைத்திருப்பதில் குறி. நந்து வீட்டில் உட்கார்ந்து கொண்டு ஏதாவது சேட்டை
செய்து கொண்டிருக்கும்போது அடுப்படியில் இருக்கும் அம்மாவிற்கு அது
எப்படித் தெரியும் என்பது ஒரு மர்மம். ஆனால்< 
 
ஆமாண்ணா, அதுதான் எப்படின்னே விளங்கமாட்டேங்குது:--))) 

N. Kannan

unread,
Sep 4, 2010, 11:35:20 PM9/4/10
to மின்தமிழ்
4
 
"So words, language drive us, shape us, shape our thinking, our behaviour, our action. In realising that, the slavery to language, but if we know how to use language, the exact meaning of words, the content and the significance of the depth of the word, then we are using language unemotionally, unsentimentally, not identified with a particular word, then we can communicate with each other directly and very simply. If I stick to the word 'Hindu' or an 'Indian', and that word shapes my thinking, my prejudices, all that nonsense, then the word 'Indian' or 'Hindu' forces me to act in a certain way. But whereas if I am free of that word 'Hindu' with all its national, limited, superstitious significance, then I am free to understand the human being who is behind the word. Right? Are we meeting each other? At least I hope so."
 
 
 
"ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியைப் புரிந்து கொள்ள முதலில் மொழியின் தளைகளிலிருந்து விடுதலை பெற வேண்டும். இதுவே வாழ்வின் மிகப்பெரிய சிக்கல். நாம் மொழியை உருவாக்கினோம் என்று சொல்வதெல்லாம் பேத்தல். மொழியில் மனிதன் பிறக்கிறான். மொழி அவனை உருவாக்கி வழி நடத்துகிறது. மொழியை ஒரு பாண்டம் போல் பயன்படுத்தி இவன் யாக்கை நடைபெறுகிறது (பவதி! பிக்ஷாந்தேஹி!). மொழி இல்லையேல் இவனொரு மிருகம். ஆனால் மொழி வந்த பிறகும் இவன் ஒரு மிருகமாக வாழ்வதற்குக் காரணமென்ன? என ஆய்தல் மொழிக்கும், இவனுக்கும் இருக்க வேண்டிய நல்லுறவைப் புரிந்து கொள்ள உதவும். ‘மரம்’ எனும் சொல் ‘மரமல்ல’ என கிருஷ்ணாஜீ அடிக்கடி சொல்லுவார். மொழி இங்கு ஒன்றைச் சுட்ட வருகிறது. ஒன்றின் சூட்சும வடிவமாக (abstract form) மனத்தில் வந்து நிற்கிறது. ஆனால், மொழியையே ஒரு தாயாக, தங்கையாக, இன உணர்வாக இவன் உருவகித்துக் கொள்ள முயலும் போது, மொழி வெறி வந்து நிற்க, இவன் மீண்டும் ஓர் விலங்காகிறான்."
 
சேது நொண்டி, நொண்டி வீடு வந்து சேர்ந்த போது நந்துவின் அன்னைதான் (கோகிலம்) முதலில் கண்டாள். அப்படியே அவனை அள்ளி அணைத்து வந்து வீட்டில் இட்டு, அடிபட்ட இடத்திற்கு ஒத்தடம் கொடுத்தாள். எண்ணெய் தைலம் போட்டாள். அவன் அன்னைக்கு இதுவெல்லாம் ஒன்றும் தெரியாது. அதனால்தான் அந்த வீட்டில் அவள் ’சித்தி’. இவள் ’அம்மா’.  சேது அம்மாவைச் சித்தி என்றுதான் கூப்பிடுவான். சாதாரணமாக மடப்புரம் காளி போல் இருக்கும் அம்மா, சில நேரங்களில் மிகவும் கனிவாக இருப்பாள். அப்பொழுதுகள் மிக மென்மையானவை, அரியவை. ’குழந்தையை போட்டு இப்படி மாட்டு அடி அடிச்சிருக்கானே! இவன் உருப்புடுவானா?’ என்று கோகிலம் சொல்ல எல்லோர் கண்களிலும் கண்ணீர்.
 
இந்தி எதிர்ப்பு உச்சம் அடைந்திருந்தது. கட்சிப் போராட்டமாக இருந்த ஒரு செயல் மெல்ல, மெல்ல மக்களிடம் பரவ, அது மாணவர்களிடம் வந்து சேர்ந்த போது காய்ந்த சருகில் தீ பட்ட கதியாகிவிட்டது. இல்லையெனில் வேத பாடசாலையில் வேதமும், நாலாயிரமும் படிக்க வேண்டிய பையன், லாக்கப்பில் இருந்து மீண்டு வர வேண்டிய தேவையென்ன? கிச்சு ஐயர் வேண்டா வெறுப்பாக போலீஸ் ஸ்டேஷன் போனார். “சார்! ஐயரு! வந்திருக்கார்!’ ‘ஐயரா? ஏன்யா! இவனுகளெல்லாம் ஐயர் வீட்டுப் பயலுகளா? காவாலிப் பசங்க! என்ன தைர்யம் இருந்தா போலீஸ் வண்டி மேலே கல்லை விட்டு எறிவானுக? (இது பச்சைப் பொய். யாரும் கல்லை விட்டு எரியவில்லை. அதையொரு சாக்காக வைத்து மாணவர் எழுச்சியை அடக்க அரசு யத்தனித்ததுதான் உண்மை). சப் இன்ஸ்பெக்டர் கொதிப்பது போல் நடித்தார். பாவம் கிச்சய்யர் ஆடிப்போய்விட்டார். அவருக்கு ஒன்றும் தெரியாது. ‘சார்! இவன் அப்படியெல்லாம் வம்பு, தும்புக்கு போற பயல் இல்லை. ஏதோ தவறுதலாய் நடந்து போச்சு. நீங்க மன்னிச்சு விட்டுட்டங்க. வீட்டிலே ரொம்ப கவலைப்படறாங்க!’ என்று கெஞ்ச, காவல் அதிகாரி ஏதோ இரக்கம் உள்ள தேவன் என்பது போல், ஐயர் சமூகம் பற்றிய தன் விமர்சனத்தையும் சமயம் பார்த்து வைத்து விட்டு, அவனை பெயிலில் அனுப்ப ஒத்துக் கொண்டார். ‘நீங்க சொல்லறீங்களேன்னு இப்ப விடறேன்! இவன் மீண்டும் வம்பிலே மாட்டினா நாங்க என்ன செய்வோம்ங்கிறதுக்கு உத்திரவாதம் கிடையாது!’ என்று சொல்லி சேதுவை விடுவித்தார்கள். சேதுவுக்கு உள்ளூர பயம். ‘இவர் ஏன் இங்கே வந்தார்? இவர் வராமல் இருந்திருந்தால் இன்னும் இரண்டு நாளில் எப்படியும் வெளியே விட்டு விடுவார்கள். இந்த ஊர் ஜெயிலில் இத்தனை மாணவர்களை அடைத்து வைக்க இடமேது?’ என்று எண்ணினான். அவன் ஏன் அப்படி எண்ணினான் என்பது வெளியில் வந்தவுடன், காவல் நிலைய வாசலிலேயே நடந்தது. வெளியே வந்ததும் வராததுமா, அவனுக்கு முதலில் கிடைத்தது மாலை, மரியாதை அல்ல. கன்னத்தில் ஓங்கி ஒரு அறை. ‘ஏண்டா! காவலிப்பயலே! என்னை இங்கே வரைக்கும் கொண்டு வந்து விட்டு விட்டேயேடா!’ இவனுக்கு காவல்துறை கொடுத்த பரிசு, தந்தை தரும் பரிசு இரண்டையும் கட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்த போது சேது மிகவும் பரிதாபமாக இருந்தான்.
 
ஆனால், போலீஸ் செய்தது ஆஹூதியில் நெய் வார்த்தது போல் ஆனது. மாணவர் போராட்டம் மிகவும் வலுப்பெற்றது. முதலமைச்சர் ராஜீனாமா எதிர்பார்க்கப்பட்டது! தமிழகமே கொதித்தது! காவல்துறை பேருந்துகள் எரிக்கப்பட்டன. தமிழகத்தில் எதிர்ப்புணர்வை அடக்க இராணுவம் அழைக்கப்பட்டது. எங்கு பார்த்தாலும் ஊரடங்கு சட்டமும், சட்டி போலீஸ் (ரிசர்வ் போலீஸ்) நடமாட்டமுமாகவும் இருந்தது. பள்ளி இழுத்து மூடப்பட்டது.
 
இந்தப் புரட்சி வெடிக்கும் முன்னமே தமிழ் போராட்ட உணர்வை தமிழாசிரியர்கள் மாணவர் உள்ளத்தில் விதைத்தனர். பள்ளியில் தமிழ் ஆசிரியருக்கு அளவு கடந்த மரியாதை ஏற்பட்டது. அவர்களது ஒவ்வொரு சொல்லும் மந்திரச் சொல்லாகக் காணப்பட்டது! பாரதியாரும், பாரதிதாசனும் உரக்க பேசப்பட்டனர். ஒருவகையில் பின்னாளைய கழக வெற்றியில் தமிழ் நாட்டின் தமிழாசிரியர்களுக்கு பெரும் பங்கு இருந்தது.
 
தமிழ் அன்னையாகி அரியாசனத்தில் வந்தவுடன். இந்தி அரக்கியாகி, காலில் சங்கிலி போட்டு இழுத்துவரப்பட்டாள். இந்தி என்றால் என்னவென்றே தெரியாத கிராப்புரங்களில் பலர் அப்படியொரு அரக்கி கிளம்பிவிட்டாள் என்றே நம்பத்தொடங்கினர். எதிர்மறையாக அந்த அரக்கியைக் கொல்லும் ராமனாக, ‘கம்பரசம்’ எழுதிய அண்ணா உருவாக்கப்பட்டார். பாரதி, வள்ளலார், ஆழ்வார்கள் வசனங்கள் மேற்கோள் காட்டப்படாமல் கழகக் கண்மணிகளால் பேசப்பட்டன. அவர்களின் தமிழ் ஆற்றலைக் கண்டு தமிழகமே வியந்து நின்றது!
 
இயல்பாகவே ஒற்றை மொழிக் கலாச்சாரத்தில் திளைக்கும் கிராமப்புறங்களில் தமிழ் ஆட்சி மொழியாகும் என்ற எதிர்பார்ப்பு வந்து சேர்ந்தது. ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை இப்போதுதான் பெற்றது போலிருந்தது, ஆனால் முழு விடுதலை கழகங்களே தமிழர்களுக்கு அளிக்கும் என்று பேசப்பட்டது! ஆங்கிலத்திலிருந்து விடுதலை! இந்தியிலிருந்து விடுதலை! என்று கிராமப்புறம் எதிர்பார்த்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின் நடந்தது வேறு. எதிலிருந்து விடுதலை பெற வேண்டுமென நினைத்தார்களோ அதற்கே அடிமையாகி நின்றதுதான் நடந்தது. எந்த மரபைப் பற்றிய புரிதல் வர வேண்டுமென தமிழாசிரியர்கள் எதிர்பார்த்தார்களோ அந்த தமிழ் மரபு புறக்கணிக்கப்பட்டது. தமிழ் ஆட்சி பீடத்தில் வந்தால் தமிழ் கல்வி சிறப்புறும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்த்தபடி நடக்காமல் தமிழ் எடுத்துப் படித்தால் அவன் பயித்தியக்காரன் எனும் நிலையே வந்தது. எந்தத் தமிழாசிரியர்கள் இந்தி எதிர்ப்பு காலத்தில் முக்கியமாகப் பட்டார்களோ அவர்கள் இருபது ஆண்டுகளில் செல்லாக்காசு ஆனதுதான் நடந்தது. தமிழ் இருக்க வேண்டிய இடத்தில் ஆங்கிலம் வந்து அமர்ந்தது! இந்தி முற்றும் முழுவதுமாக பள்ளிப் பாடத்திட்டத்திலிருந்து அகற்றப்பட்டது! இந்திப் பண்டிட் திடீரென்று டிராயிங் மாஸ்டர் ஆகிவிட்டார். பண்டிட் மகாலிங்கத்திற்கும் ஓவியத்திற்கும் சம்பந்தமே கிடையாது. மேலும் அங்கு ஓர் ஓவிய ஆசிரியர் ஏற்கனவே இருந்தார். இருந்தாலும் இந்தி சொல்லிக் கொடுக்கக்கூடாது என்று ஆனபின் அவர்தான் என்ன செய்வார்? அவருக்கு ஏதாவதொரு சப்ஜெக்ட் தர வேண்டும். ஓவியப்பாடம் தரப்பட்டது.
 
ஆனால் கோகிலம் மிகவும் பயந்த தருணம் எதுவென்றால் மாணவர்கள் தமிழுக்காக தீக்குளிக்கத் துணிந்ததுதான். விடலைப் பருவம் என்பது மிகவும் உளவியல் சிக்கலுள்ள பருவம். பெற்றோர்களுக்கு பிள்ளைகளை எப்படி நடத்தி நல்ல குடிமகன்களாக மாற்ற வேண்டும் என்பதில் எந்தப் பயிற்சியும் கிடையாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் மாட்டை அடிப்பது போல் அடிப்பதுதான். நந்துவின் பள்ளிக்கு சில மாணவர்கள் காலில் கட்டையுடன் வருவார்கள். அடங்காத மாட்டை அடக்க காலில் கட்டை கட்டுவது வழக்கம். அதே உத்தியை இளம் பிள்ளைக்கும் பயன்படுத்தினால் பிள்ளைகள் மனது என்ன பாடு படும்? ஒன்று அம்மாணவர்கள் பின்னால் வன்முறை நிறைந்த ரவுடிகளாக வருவர். இல்லை முரட்டு போலீஸ் அதிகாரியாக வருவர். இல்லை இராணுவத்தில் சேருவர். இல்லை தற்கொலை செய்து கொள்வர். பிள்ளை தற்கொலை செய்து கொண்டால் பெற்றோர் திருந்த மாட்டார்கள். பழியைப் பெண்ணாட்டி மேல் போட்டு அவளைப் போட்டு மொக்கு, மொக்கு என்று மொக்குவர். இப்படிப் பட்ட கிராமத்தில் விடலைக்கு தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்து, தமிழுக்காக உயிர் கொடுத்தல் பெரிய ‘தியாகம்’ என்பது போல் காட்டப்படும் போது மாணவர்களில் பலர் சாகத்துணிந்தனர். இந்த மாணவர்களை அவர்கள் பெற்றோர்கள் சரியாக வளர்க்காததும் ஒரு முக்கிய காரணம். வன்முறை என்றால் என்னவென்று புரிந்து கொள்ளாத கிராமம். வன்முறை நிரம்பி வழிந்த கிராமம்.
 
இதில் அந்தணர், வேளாளர், கிறிஸ்தவர், முஸ்லிம் என்ற எந்தப் பாகுபாடும் கிடையாது. எல்லோர் வீடுகளிலும் வன்முறை நிரம்பி வழிந்தது. இந்த வன்முறையின் ஒரு வெளிப்பாடாகத்தான் தீக்குளிப்புகள் நிகழ்ந்தன. வாழ்வு மென்மையானது. வாழ்வு மலர் போன்று நிரந்தரமற்றது. வாழ்வு குகையில் வளர் சுடர். அதனைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். என்றெல்லாம் யாரும் சிந்திப்பதில்லை. எதற்கெடுத்தாலும் அடி. தாய்மை கொஞ்சம் கூட இல்லாத தாய்மார்கள் அந்தணர் குடியிருப்பிலும் இருந்தனர். அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் இயல்பாகவே வன்முறை உடையவர்களாக இருந்தனர். நந்துவோடு பூப்பந்து விளையாடும் பாலா, எதிர்ப்புறம் இருப்பவனை மட்டை கொண்டு தாக்க. பேட்மிண்டன் மட்டை இரண்டு துண்டமாகி விழுவதைக் கண்டு நந்து நடு, நடுங்கிப் போனதுண்டு. ஏனெனில் பாலாவை அவன் தாய் என்றும் அன்பாகப் பேசி அரவணைத்தது இல்லை. பல நேரங்களில் வாய் பேசாது, விளக்கமாரு பேசுவதை நந்து கண்டுள்ளான். விளக்கமாரில் அடிவாங்குவது துன்பம் தருவது. அந்தப் பள்ளியில் அடித்தால் உரைக்கும் வண்ணம் செய்யும் மரம், செடி எதுவென்று ஒரு ஆராய்ச்சியே நடந்தது. புளியம் விளாரு மிகவும் சிறந்தது என்று சொல்லி மாணவர்களை நல்லப் புளியம் விளாராகப் பார்த்து எடுத்து வரச் சொல்லுவர். இந்த அசடுகளும் எந்தப் புளியம் விளாரினால் தனக்கு அடிவிழப்போகிறதோ அதைப் பார்த்து பதவிசாக எடுத்து வந்து கொடுப்பர். ஆசிரியர் முதலில் அதை சோதிப்பது பெரும் பாலும் கொண்டுவரும் மாணவர் முதுகில்தான்.
 
இப்படியான வன்முறை சூழ்ந்துள்ள அக்கிராமத்தில் வளரும் சேது எங்காவது தீக்குளிக்கப் போய்விடுவானோ என்று கோகிலம் கவலைப்பட்டாள். சித்திக்கு விவரம் போதாது. அவளும் எட்டுப் பிள்ளை பெற்று எல்லாம் கொடுத்துவிட்டு இரண்டு தங்கி நிற்க அக்காவுடன் ஒண்டி வாழ்கிறவள். அந்த ஒத்தைப் பிள்ளையையும் ஒழுங்காய் பாதுகாக்க அவளுக்குத் தெரியாது. எனவே எல்லோருக்கும் அம்மாவான கோகிலம் இந்த சேது மீது இப்போது கூடுதல் கவனம் செலுத்தலானாள்.
 
 
Is it possible to end violence instantly?
 

Kamala Devi

unread,
Sep 5, 2010, 11:12:23 AM9/5/10
to mint...@googlegroups.com
கோகிலம் அம்மாதான் என்னை மிகவும் கவர்கிறார்.
கமலம்
 
http://www.kamalagaanam.blogspot.com



From: N. Kannan <navan...@gmail.com>

Subject: [MinTamil] Re: பருந்தின் ஆலவட்டம் - Flight of the Eagle

4
 
"So words, language drive us, shape us, shape our thinking, our behaviour, our action. In realising that, the slavery to language, but if we know how to use language, the exact meaning of words, the content and the significance of the depth of the word, then we are using language unemotionally, unsentimentally, not identified with a particular word, then we can communicate with each other directly and very simply. If I stick to the word 'Hindu' or an 'Indian', and that word shapes my thinking, my prejudices, all that nonsense, then the word 'Indian' or 'Hindu' forces me to act in a certain way. But whereas if I am free of that word 'Hindu' with all its national, limited, superstitious significance, then I am free to understand the human being who is behind the word. Right? Are we meeting each other? At least I hope so."
 
 
 

Geetha Sambasivam

unread,
Sep 5, 2010, 11:27:18 AM9/5/10
to mint...@googlegroups.com
தமிழ் அன்னையாகி அரியாசனத்தில் வந்தவுடன். இந்தி அரக்கியாகி, காலில் சங்கிலி போட்டு இழுத்துவரப்பட்டாள்.//

இந்தி ஆசிரியர்களையும் அப்படி நடத்தினாங்க சில மாணவர்கள்.  மதுரையில் சேதுபதி உயர்நிலைப்பள்ளியின் ஹிந்தி ஆசிரியர் ஆன என் அப்பாவைக் கொல்ல வேண்டி ஒரு பெரும்படையே எங்க வீட்டுக்கு வந்தது.  பள்ளியின் சக ஆசிரியர்கள் கிட்டத் தட்ட ஆறுமாதம் எங்களுக்கு மட்டுமில்லாமல் அப்பா பள்ளிக்குப் போகும்போதும் வரும்போதும் காவல் இருந்தனர். மறக்கமுடியாத காலம்!

2010/9/5 N. Kannan <navan...@gmail.com>
 

--

srirangammohanarangan v

unread,
Sep 5, 2010, 11:37:00 AM9/5/10
to mint...@googlegroups.com
On 9/5/10, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote:
தமிழ் அன்னையாகி அரியாசனத்தில் வந்தவுடன். இந்தி அரக்கியாகி, காலில் சங்கிலி போட்டு இழுத்துவரப்பட்டாள்.//

இந்தி ஆசிரியர்களையும் அப்படி நடத்தினாங்க சில மாணவர்கள்.  மதுரையில் சேதுபதி உயர்நிலைப்பள்ளியின் ஹிந்தி ஆசிரியர் ஆன என் அப்பாவைக் கொல்ல வேண்டி ஒரு பெரும்படையே எங்க வீட்டுக்கு வந்தது.  பள்ளியின் சக ஆசிரியர்கள் கிட்டத் தட்ட ஆறுமாதம் எங்களுக்கு மட்டுமில்லாமல் அப்பா பள்ளிக்குப் போகும்போதும் வரும்போதும் காவல் இருந்தனர். மறக்கமுடியாத காலம்!
 
It's higly pathetic.:--((( 
நிச்சயமா இந்தச் சூழலை வைத்துப் பார்க்கும் போது ஜே கே எங்க கிடைப்பார் இங்க....

kalairajan krishnan

unread,
Sep 6, 2010, 5:23:07 AM9/6/10
to mint...@googlegroups.com
On 9/3/10, N. Kannan <navan...@gmail.com> wrote:
3.

சமூகத்தில் கேள்வி கேட்டால் கொலைதான் விழும்! அந்த ஊரில் சேர்வார்களுக்கு
செல்வாக்கு. அந்த ஊரின் பெரிய ரௌடி சேர்வார் வீட்டு ஆளு!
 
​சேர்வார்? ​
 
சேரரவாருடன் ​சேரா​தே! ,,,,,,, பூசை வாங்காதே
என்று என் தாயார் அடிக்கடி திட்டுவார்
 
அன்பன்
கி. காளைராசன்
 
--
அன்னதானம் ​செய்வோம்,  கண்தானம் ​செய்வோம்.  இவ்விருதானங்களையும் சிவபெருமான் ஏற்றுக் ​கொள்கிறார்,

devoo

unread,
Sep 6, 2010, 5:36:04 AM9/6/10
to மின்தமிழ்
Sep 6, 4:23 am, kalairajan krishnan

>> சேர்வார்? <<


முக்குலத்தோரில் மூன்று பெரும்பிரிவுகள் உள்ளன.
கள்ளர், மறவர், அகம்படியர் என்னும் அகமுடையார்.
மறவர்கள் தங்களுக்குரிய பட்டமாக 'தேவர்' என்ற பட்டத்தைப்
பயன்படுத்திக்கொள்வர்.

கள்ளர்களில் பதினெட்டு உட்பிரிவுகளும் அவற்றுக்குள் இன்னும் உட்பிரிவு
களும் இருக்கும். பொதுவாக அவர்கள் 'அம்பலம்', அம்பலக்காரர்', 'சேர்வை',
'சேர்வார்' ஆகிய பட்டங்களை மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை
ஆகிய பகுதிகளில் போட்டுக்கொள்கிறார்கள். மன்றாயர், பல்லவராயர்,
காடுவெட்டி, காடவராயர், சோழகர், சோழர், இரட்டைக்குடையார்,
நாட்டார், தொண்டைமானார், தொண்டைமான் போன்ற சில பட்டங்களையும்
அவர்களில் சில குடியினர் போட்டுக்கொள்வார்கள்.

அகமுடையார், 'சேர்வை', 'சேர்வார்', 'பிள்ளை' என்னும்
பட்டங்களைப் போட்டுக்கொள்வார்கள். பிள்ளைமார்களில் சிலருக்கும்
'சேர்வார்' பட்டம் உண்டு

( அகத்தியர் குழுமம் )


தேவ்

N. Kannan

unread,
Sep 11, 2010, 12:00:05 AM9/11/10
to mint...@googlegroups.com
5.
 
• [Mr. Jiddu Krishnamurti]: ‘... does thought realise of itself that it is limited? I have to find out. I am being challenged. Because I am challenged I have great energy. Put it differently: does consciousness realise its content is itself? Or is it that I have heard another say: ‘Consciousness is its content; its content makes up consciousness’? Therefore I say, ‘Yes, it is so’. Do you see the difference between the two? ... So I am asking myself: has thought realised its own limitations? Or is it pretending to be something extraordinary, noble, divine? Which is nonsense because thought is based on memory. I see that there must be clarity about this point: that there is no outside influence imposing on thought saying it is limited. Then, because there is no imposition there is no conflict; it simply realises it is limited; it realises that whatever it does – its worship of god and so on – is limited, shoddy, petty (...) Verbally we can go only so far: what lies beyond cannot be put into words because the word is not the thing. Up to now we can describe, explain, but no words or explanations can open the door. What will open the door is daily awareness and attention – awareness of how we speak, what we say, how we walk, what we think. It depends on your state of mind. And that state of mind can be understood only by yourself, by watching it and never trying to shape it, never taking sides, never opposing, never agreeing, never justifying, never condemning, never judging – which means watching it without any choice. And out of this choiceless awareness perhaps the door will open and you will know what that dimension is in which there is no conflict and no time’.
 
(‘The Only Revolution’ 1970, pp. 130-131 (from ‘The Second Penguin Krishnamurti Reader’).
 
 
இவை ஞானமொழிகள். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி என்ன சொல்கிறார் என்பது நம்மில் எத்தனை பேருக்குப் புரிகிறது. நீங்கள் கையைத் தூக்கினாலும் என்னால் காண முடியாது. கண்டாலும் மெய்யுணரமுடியாது. இது புரியவில்லை எனில் ஏன் புரியவில்லை. காரணிகள் என்னென்ன? ஏன் புரிதலை ஒரு அளவிற்கு மேல்தான் வார்த்தைகளால் இட்டுச் செல்ல முடியும் என்கிறார் ஜே.கே? அனுபவத்தில் பட்டவை சொற்களுக்குள் பிடிபடும். அனுபவத்தை மேவிய மெய்மையை எப்படி உணர்த்துவது? ஏன் ஆலவாய் அண்ணல் ஆலமரத்திடை மௌனமாய் உபதேசிக்கிறார்? அப்படி என்னதான் சொல்கிறார். வாய்ச்சொல் ஏன் அருளவில்லை? மொழி மேவிய நிலையை ஒரு சாதாரணன் எப்படி அடைவது? வழி காட்டுகிறார் ஜே.கே!
 
வாய்ப்பற்ற பிரக்ஞை. வாய்ப்பற்ற பார்வை. வாய்ப்பற்ற அணுகல். வாய்ப்பற்ற அவதானம்.
 
இற்றைப் புள்ளியில்
எற்றைப் பொழுதும்
இற்றைப் பொழுதாய்
நிலையுற்று இருத்தல்.
 
அப்படி இருந்து பழகப்பழக, நினைவுகள் மெல்ல மனக்குளத்தில் படிந்து மறைகின்றன. இற்றைப்பொழுதில் இறைமை தாண்டவமாடத்தொடங்குகிறது. அத்தாண்டவம் காணுதலே தவம். அது ருத்ர தாண்டவமாக இருந்தாலும், ஆனந்த தாண்டவமாக இருந்தாலும் காணுதல் மட்டுமே கடமை! பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்ற வாய்ப்பில்லை. அது அப்படித்தான்! காணுதலில் அகம் அழிந்து காட்சியே நிற்கிறது. அக்காட்சியை எவ்வளவு முயன்றாலும் வார்த்தைப் படுத்த முடியாது. வார்த்தைகள் ‘சலாம்’ அடித்து அமர்ந்துவிடுகின்றன. உள்ளம் அமைதியில் ஆழ்கிறது. கொதி நிலை குறைகிறது.
 
வாய்ப்புகள் என்பதுதான் சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படை. வாய்ப்பற்ற வாழ்வு என்பதுதான் ஆன்மீகத்தின் ஆரம்பநிலை.
 
நந்து ரீடர் கிருஷ்ணமூர்த்தி என்றவுடன் ஆசையுடன் பார்த்தான். காரணம் கிருஷ்ணமூர்த்தி என்பதுதான் இவன் பெயரும். நம்மவர் ஒருவர் பற்றி உலகின் மிகப்பெரிய பதிப்பகமான பென்குவின் புத்தகம் போடுகிறது எனில், அது சாதாரண விஷயமில்லை என்று நந்துவிற்குப் புரிந்தது. ஆனால் புத்தகத்தை எடுத்துப் படித்தால் ஒன்றும் புரியவில்லை! ஏன் புரியவில்லை என்பது அப்போது நந்துவிற்குத் தெரியவில்லை!
 
பின்னால் புரிந்தது.
 
1. அவன் சிந்தனா மொழியாக தமிழ் இருந்தது!
2. அவன் சமய வாழ்வு இதைக் கற்றுத்தரவில்லை.
3. நந்து அப்போது பக்குவப்படவில்லை!
 
மொழி எப்படி நம்மை ஆட்கொண்டு வழி நடத்துகிறது என்பது கண்டோம். நந்துவின் சிந்தனா மொழியாக தமிழ்தான் இருந்தது அன்றுவரை. ஆங்கிலத்தின் பாதிப்பு இன்றுள்ள அளவு கூட அன்றைய பேச்சு, நடையில் இல்லை. ஆங்கிலம் கற்றுக் கொள்ள மாணவர்களுக்கும் ஆர்வமில்லை, தகுதியான ஆசிரியர்களும் இல்லை. சினிமாவெல்லாம் தமிழிலேயே நடந்தன. ஆங்கிலப்படம் பார்க்க வேண்டுமெனில் ரயிலில் ஏறி மதுரை செல்ல வேண்டும். அந்தப் பழக்கம் அவனுக்கு மிகப்பின்னால்தான் வந்தது, தன் அண்ணனுடன் மதுரை சென்று ஜேம்ஸ்பாண்ட் படம் பார்ப்பான். படம் புரிகிறதோ இல்லையோ ‘பலா’வான காட்சிகள் அவனைக் கிளர்ச்சியூட்டின. அவன் பள்ளியிறுதிவரை தமிழிலேயே படித்தான். பள்ளிக்காலத்தில் அவனுக்கு பாரதி, வள்ளலார், ராஜாஜி, கல்கி, சாண்டில்யன், சுஜாதா அறிமுகமாகியிருந்தனர். பக்தி இலக்கியம் மிகக்கொஞ்சமாக அறிமுகமாகியிருந்தது. சங்கம் மிக சொல்பம். மாறும் கல்வி போதானாமுறை இவன் காலத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டன. எல்லாப் பரிசோதனை முயற்சிகளிலும் இவன் இருந்தான். முதன் முறையாக ‘எலெக்டிவ்’ முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது மாணவனின் எதிர்காலம் ஒருவாறு நிர்ணயிக்கப்பட்டது. கலை அல்லது அறிவியல் என்பது துல்லியமாக பிரிக்கப்பட்டது. இவன் வகுப்பில் முதல் நிலை மாணவன் என்பதால் ஆசிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு தத்தம் துறைக்கு இழுத்தனர். கெமிஸ்ட்ரி வாத்தியார் முதலில் இழுத்துவிட்டார். அவர் அப்போதுதான் கல்லூரி முடித்துவிட்டு வந்திருந்தார். ஒரே உற்சாகம். பாலசுப்ரமணியன் என்று பேர். ஆனால், கணக்கு வாத்தியார் விடுவாரா? ‘நந்து! கணக்குதான் அறிவியல் மொழி. கணக்கு இல்லாமல், ஒரு காரியமும் நடக்காது. எனவே கணக்குப் பாடம் எடுத்துக் கொள்!’ என்றார். நந்து வேதியியலிருந்து கணக்கிற்கு மாறினான். ஆனால், பாலசுப்ரமணியன் சும்மா இருப்பாரா? இவன் வீட்டிற்கே வந்துவிட்டார். அவ்வளவுதான், அதுவே ஒரு பண்பாட்டு அழுத்தமாகப் போக, நந்து மீண்டும் வேதியியலுக்கு மாறினான். இவனுக்கு தமிழ் மிகவும் பிடித்திருந்தது. இவனது தமிழ் வாத்தியார் ஸ்ரீநிவாசன் நெடுமால் போல் உயர்ந்திருந்தார் அனைத்திலும! ஆயினும் அறிவியலே வென்றது. அதுவே சோறு போடும் எனும் எண்ணம் விதைக்கப்பட்டது.
 
ஆயினும், கோடை விடுமுறையில் நூலகம் சென்று தமிழ் நாவல்கள் எடுத்து வந்து படிப்பான். சாண்டில்யனின் யவனராணி மிகவும் பிடித்திருந்தது. கதை முடிந்ததும் அவளுக்காக அழுதான். தாத்தா ஸ்ரீனிவாசாச்சாரியார் ஒரு ராஜாஜி பக்தர். எனவே கல்கி தொடர்ந்து வாங்குவார். கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ முறையாக எடுத்து வைக்கப்பட்டு பைண்டு செய்யப்பட்டிருந்தது. பக்கத்துவீட்டு சுந்துவின் அப்பாவிற்கு இந்த பைண்டு வேலையெல்லாம் தெரியும். அவர்தான் முறையாக எல்லா இதழ்களையும் ஒன்றுவிடாமல் கோர்த்துக்கொடுத்தார். இவன் பாண்டி நாட்டுக்காரன். ‘வையை எனும் பொய்யாக்குலக்கொடி’ தவழும் தீராநதிக்காரன். ஆயினும் உண்மையில் பொய்க்காத காவிரி நதி பற்றி கல்கி சொல்லும் போது இவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. வந்தியத்தேவன் வந்து நின்றால் காலைத்தடவும் நதி இவனை ஏதோ செய்தது. இவன் பத்தாம் வகுப்பிற்கு வரும்போது சுஜாதாவின் கணேஷ், வசந்த் பிடித்துப் போயினர். தமிழ்வாணன் அறிமுகப்படுத்திய சங்கர்லாலிருந்து வசந்த், கணேஷ் மிகவும் வித்தியாசப்பட்டனர். சுஜாதா புதியதொரு உலகை நந்துவிற்கு அறிமுகப்படுத்தினார். இவன் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் கண்ட உலகுடன் அது ஒத்திருந்தது.
 
புகுமுக வகுப்பில்தான் முதன்முறையாக அனைத்தும் ஆங்கிலத்தில் சொல்லிக்கொடுக்கப்பட்டது. எல்லாப் பசங்களும் தடுமாறினர்.புரிகிறதோ இல்லையோ ‘மொட்டை உரு’ப்போட்டு பரிட்சை எழுதினர். கல்லூரி தமிழ்ப்பாடம் வித்தியாசமாக சொல்லி கொடுக்கப்பட்டது. அந்த வகுப்பில்தான் நந்து கொஞ்சம் வீட்டிலிருப்பது போல் உணர்ந்தான்.
 
இவன் டாக்டராக வேண்டும் என்ற ஆசையை யாரோ விதைத்துவிட்டனர். எப்போது யாரால், விதைக்கப்பட்டது என்று தெரியவில்லை. நந்து உயிரியல் படிக்கத் தொடங்கினான். பியூசி முடித்ததும் முதல் முயற்சி. கழகம் ஆட்சிக்கு வந்துவிட்டது. சோணையாத்தேவர் எம்.எல்.ஏ. கிச்சய்யர் இவனை அழைத்துக்கொண்டு சோணையா வீட்டிற்குப் போனார். எல்லாம் பார்த்துச் செய்வோம் என்றுதான் சொன்னார். ஆனால் இவன் பெயர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. கிச்சய்யர் காசு கொடுத்திருக்க வேண்டும் என்றனர். கிச்சய்யர் இருந்த காசையெல்லாம் செங்கண்மால் கோயிலில் போட்டுவிட்டு ஓட்டாண்டியாக இருந்தார். இவர் சொன்னால் சோணையா கேட்பார் என்றதால் போய் பார்த்துவந்தார். காலம் மாறி வருவதை அவர் உணரவில்லை. அடுத்த வருடமும் மருத்துவ முயற்சி தோல்வி. அதற்கடுத்த வருடமும். தோல்வி. மாணவர்கள் சொன்னார்கள் இவன் ஜாதிக்கு சீட் கிடைக்காது என்று. இவன் சிறிய தந்தை எஸ்.எஸ்.எல்.சி புத்தகத்தில் ஜாதி பேர் போடாமல், ‘பாலகிருஷ்ணன்’ என்று கையெழுத்துப் போட்டிருந்தார். இவன் கிராமத்துக்காரர்கள் பேசாமல் அதே மைய்யில் ‘பாலகிருஷ்ணக்குடும்பன்’ என்று மாற்றிவிடுங்கள், ரிசர்வ் சீட்டில் இடம் கிடைக்கும் என்றனர். பலர் அப்படியெல்லாம் செய்யக்கூடாது எஸ்.எஸ்.எல்.சி புத்தகம் என்பது நிலப்பட்டா போல, அதில் விளையாடக் கூடாது என்றனர். பெற்றோர் அற்ற நிலையில் இருந்த நந்து, கஷ்டப்பட்டு படித்தே முன்னேற வேண்டும் என்றுதான் யதார்த்தம் பேசியது. பி.எஸ்.ஸி முடித்தவுடன் ஜிப்மர் பரிட்சைக்கு எழுதினால் புதுவையில் கிடைக்கும் என்றனர். இவங்க ஊர் ஆஸ்பத்திரி கம்பௌண்டர், 5000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் வாங்கலாமென்று சேதி அறிந்து சொன்னார். ஐயாயிரம் ரூபாயா? யார் கொடுப்பார்கள்? இவ்வளவு பணத்திற்கு எங்கு போவது? [நந்து பின்னால் படித்து வேலை பார்க்கும் போது தன் பெண்ணை மருத்துவம் படிக்க வைக்கலாமா என்று யோசித்த போது லஞ்சத்தின் விலை 30 லட்சமாகக் கூடியிருந்தது. விலைவாசி இந்தியாவில் கூடிக்கொண்டே போகிறது!]. நந்து டாக்டராகிவிட வேண்டும் என்ற கனவில்தான் இன்னும் படித்தான். இவன் கிராமத்துக்காரன் என்பதால் மதுரைக்கார பையன்கள் இவன் பரிட்சையில் தேறமாட்டான் என்று பெட்டு கட்டினர். இவன் புகுமுக வகுப்பிலும், பிஎஸ்ஸியிலும் முதல் வகுப்பில் தேறியபோது அவன்களுக்கு ஆச்சர்யமும் பொறாமையும்!
 
இவன் பிஎஸ்ஸி படிக்கும் போதும் கல்வித்திட்டம் மாறியது. முதல் மொழி ஆங்கிலம். இரண்டாவது மொழியாக தமிழ் அல்லது பிரெஞ்ச் எடுத்துக் கொள்ளலாம் என்றது. இவன் இயல்பாக தமிழை எடுத்தான். ஆனால் அது இலக்கியத் தமிழ் அல்ல. அறிவியல் தமிழ். முதன்முறையாக அறிவியலைத் தமிழில் சொல்ல முடியுமா? என்று பல்கலைக்கழகம் சோதனை செய்து பார்த்தது. இவனது தமிழ்ப் பேராசிரியர் பொன்.தினகரன் ஆர்வமுடன் சொல்லிக் கொடுத்தார். இவன் தமிழில் ஏ பிளஸ் வாங்கினான். மொழித்தேர்வில் மார்க்கு கிடைப்பது மிக அரிது. நந்து ஆங்கிலக் கல்விமுறையில் படித்தாலும் தமிழே முன் நின்றது.
 
‘உலகைப் புரட்டக்கூடிய நெம்புகோல் கவிதையை உங்களில் யார் எழுதப்போகிறீர்கள்?’ என்று புதுக்கவிதை முழக்கம் மாணவர் உள்ளங்களில் பட்டுத்தெரித்தது! இவன் ஆங்கிலப் பேராசிரியர் நெடுமாறன் கூட இடையிடையே தமிழ்க் கவிதைகளை மேற்கோள் காட்டியே நடத்தினார். நந்து கவிதை செய்ய முயன்றான். அவனது கவிதை பீரிட்டு எழுந்தது பெண்களுடன் சேர்ந்து படிக்கும் எம்.எஸ்ஸியில்தான். ஹார்மோன்களின் பாய்ச்சலில் கவிதை விளைநிலமானது. இவன் கவிதைக்கு ஒரு ரசிகை கிடைத்தாள். அவளுக்காக இவன் கவிதை செய்தான்.
 
ஜே.கிருஷ்ணமூர்த்தி இன்னும் அவனுக்கு அறிமுகமாகவில்லை.
 
"So, the question is: Why have we such a driving need to fulfill, why are we so ruthlessly ambitious, why has sex such an extraordinary importance in our life? It is not a matter of the quality or number of one's needs, whether one has the maximum or the minimum, but why there is this tremendous urge to fulfill in family, in a name, in a position, and so on, with all the anxiety of it, the frustration, the misery - which society encourages and the church blesses."
 

Innamburan Innamburan

unread,
Sep 11, 2010, 2:44:47 AM9/11/10
to mint...@googlegroups.com
கவனத்துடன் படித்து வருகிறேன். 'ஜே.கே.யும் நானும்' என்பதை ஏற்கனவே
சொல்லிவிட்டேன்.

எனக்கு தெரிந்த வரையில், ஆன்மிகத்தில் நான்கு வகை:
1. மூலம்: அற்புதம்: விளக்கம் தேவை ஓரளவு புரிந்து கொள்ள. போகப் போக
தெளிவு பிறக்கலாம், பணிவு இருந்தால்: உதவி: கிருஷ்ணப்ரேமி, வேளுக்குடி,
கல்யாணபுரம், விசாகா ஹரி, மங்கையர்க்கரசி போன்றோர்.
2. ஆன்மிக அரைத்த மா அரைத்தல்: இது கொடி கட்டி பறக்கிறது,
வாக்சாலகத்தினால்; ஒற்றைக்கண்ணன் குருடர்களை வழி நடாத்துவது.
அரைப்பவர்களுக்கு செல்வம் பெருகும்; அறிவு குறையும்.
3. ஆன்மிகப்போலி: ஒரிஜினல் மாதிரி அமைத்து துட்டு பார்ப்பார்கள். ஏமாந்த
சோணகிரிகள் திருந்துவது கடினம்.
4. ஜே.கே., ஏக்னாத் ஈஸ்வரன் போன்றோர்: இவர்கள் இலச்சினைகளை களைந்து,
மூலத்தை, சமயம் தவிர்த்து, சிந்தித்து, புரிந்து பகிர்ந்து கொள்வார்கள்.
படிக்கணும்;அசை போடணும், மறுபடியும், மறுபடியும்.

ஜோஸஃப் காம்ப்பெல் தனிப்பிறவி.

சிலருக்கு இந்த அணுகுமுறை பிடிக்காது. அதனால் என்ன? ஒன்றும் குடி
முழுகிப்போய் விடவில்லை.
இன்னம்பூரான்


2010/9/11 N. Kannan <navan...@gmail.com>:
> 5.

Geetha Sambasivam

unread,
Sep 11, 2010, 3:07:04 AM9/11/10
to mint...@googlegroups.com
இவன் பாண்டி நாட்டுக்காரன். ‘வையை எனும் பொய்யாக்குலக்கொடி’ தவழும் தீராநதிக்காரன்//

அட?? ஆமாம் எனக்கும் இந்த உணர்வுகள் உண்டு. இன்னும் சொல்லப்போனால் மதுரையையும், பாண்டிய சாம்ராஜ்யத்தையும் பற்றி இன்னும் எந்தக் கதாசிரியர்களும் சரித்திர நாவல்கள் எழுதலை என்றும் அந்த அளவுக்கு அவங்க ஆராய்ச்சிகள் செய்யலையேனும் வருத்தப் பட்டுப்பேன். நா.பார்த்தசாரதி ( பாண்டிமாதேவி) கொஞ்சம் எழுதினார். (ஆலவாய் அழகன்)ஜெகசிற்பியனும், அகிலனும் (கயல்விழி) ஓரிரண்டு எழுதினாங்க. அகிலனின் கயல்விழி தான் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் அப்படினு சினிமாவா வந்ததாய்ச் சொல்லுவாங்க. சரியாத் தெரியலை!

2010/9/11 N. Kannan <navan...@gmail.com>
5.
 

devoo

unread,
Sep 11, 2010, 3:58:31 AM9/11/10
to மின்தமிழ்
அகிலனின் ‘ வெற்றித்திருநகர்’ பாண்டிய நாட்டுத் தொடர்புடையது

தேவ்

On Sep 11, 2:07 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
>  இவன் பாண்டி நாட்டுக்காரன். ‘வையை எனும் பொய்யாக்குலக்கொடி’ தவழும்
> தீராநதிக்காரன்//
>
> அட?? ஆமாம் எனக்கும் இந்த உணர்வுகள் உண்டு. இன்னும் சொல்லப்போனால் மதுரையையும்,
> பாண்டிய சாம்ராஜ்யத்தையும் பற்றி இன்னும் எந்தக் கதாசிரியர்களும் சரித்திர
> நாவல்கள் எழுதலை என்றும் அந்த அளவுக்கு அவங்க ஆராய்ச்சிகள் செய்யலையேனும்
> வருத்தப் பட்டுப்பேன். நா.பார்த்தசாரதி ( பாண்டிமாதேவி) கொஞ்சம் எழுதினார்.
> (ஆலவாய் அழகன்)ஜெகசிற்பியனும், அகிலனும் (கயல்விழி) ஓரிரண்டு எழுதினாங்க.
> அகிலனின் கயல்விழி தான் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் அப்படினு சினிமாவா
> வந்ததாய்ச் சொல்லுவாங்க. சரியாத் தெரியலை!
>

> 2010/9/11 N. Kannan <navannak...@gmail.com>

N. Kannan

unread,
Sep 11, 2010, 4:48:58 AM9/11/10
to mint...@googlegroups.com
2010/9/11 Innamburan Innamburan <innam...@googlemail.com>

> எனக்கு தெரிந்த வரையில், ஆன்மிகத்தில் நான்கு வகை:
> 1. மூலம்: அற்புதம்: விளக்கம் தேவை ஓரளவு புரிந்து கொள்ள. போகப் போக
> தெளிவு பிறக்கலாம், பணிவு இருந்தால்: உதவி: கிருஷ்ணப்ரேமி, வேளுக்குடி,
> கல்யாணபுரம், விசாகா ஹரி, மங்கையர்க்கரசி போன்றோர்.

இல்லை! ஜேகேயைப் புரிந்து கொள்ள அவருடன் தனித்து நின்று பழக வேண்டும்.
அவருடன் பல நடை போன பின் கிருஷ்ணப்பிரேமி, வேளுக்குடி என்ன சொல்கிறார்கள்
என்பது பிடிபடும். தளையை அறுப்பவர் கிருஷ்ணமூர்த்தி. பேருதான்
கிருஷ்ணமூர்த்தி இவர் சம்ஹாரமூர்த்தி. தீவிரமாக இறங்கும் போது
பயித்தியமாகாமல் பார்த்துக்கொள்வது இறையருள் ஒன்றே. இன்னும் பேசுவோம்.


> 4. ஜே.கே., ஏக்னாத் ஈஸ்வரன் போன்றோர்: இவர்கள் இலச்சினைகளை களைந்து,
> மூலத்தை, சமயம் தவிர்த்து, சிந்தித்து, புரிந்து பகிர்ந்து கொள்வார்கள்.
> படிக்கணும்;அசை போடணும், மறுபடியும், மறுபடியும்.
>

ஜேகே வழி ஞானவழி. தர்க்கத்தின் வழியே, இது இல்லை, இது இல்லை என்று போய்,
அறுக்கும் அறிவின் வாளும் அற்றுப்போய் நிராதரவாய் நிற்க வைத்துவிடும்.
சும்மாவா சொன்னார் சங்கரனார், ‘பஜ கோவிந்தம்! பஜ கோவிந்தம், கோவிந்தம் பஜ
மூடமதே! என்று :-)

ஆனால் அது மிக முக்கியமான பயிற்சி. இல்லையெனில் தமிழக ஆன்மீகப்
பதப்படுத்தலில் மெய்மை காண்பதரிது!!


> ஜோஸஃப் காம்ப்பெல் தனிப்பிறவி.

கேம்பல் நம்ம ரஜனீஷ் (ஓஷோ) போல. அருமையான ஆசிரியர். மெத்தப்படித்த
மெல்லிய இதயத்தான்!! எப்போதும் கேம்பலைக் கேட்கலாம். அவரொரு நல்ல கதை
சொல்லி.


> சிலருக்கு இந்த அணுகுமுறை பிடிக்காது. அதனால் என்ன? ஒன்றும் குடி
> முழுகிப்போய் விடவில்லை.


உண்மை. மிகவும் மேட்டுக்குடிகள் மட்டும் ஏதோ புரிந்தது போல்
உளறிக்கொட்டிக் கொண்டிருக்கும்! பாவம்!!

க.>

Geetha Sambasivam

unread,
Sep 11, 2010, 4:52:18 AM9/11/10
to mint...@googlegroups.com
ஆமாம், கிருஷ்ணதேவராயர் காலத்துக் கதை. தளவாய் அரியநாத முதலியார், நாகமநாயக்கர், விஸ்வநாத நாயக்கர் போன்றவர்களைப் பற்றிய தொடர்.  அது மறந்துவிட்டது. அவ்வளவாய் மனசில் நிற்கவில்லை!

2010/9/11 devoo <rde...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
360.gif

N. Kannan

unread,
Sep 11, 2010, 4:52:15 AM9/11/10
to mint...@googlegroups.com
ஆமாம் கீதா!

சங்கப்பாடல்களில் 50% மேல் இந்தக் குலக்கொடி பற்றித்தான். பாருங்கள்
வள்ளுவர் கூட நம்மவூரு என்கிறார்கள். ஒருகாலத்தில் தமிழகத்தின்
அறிவுஜீவிகளின் விளையாட்டுத்திடலாக இருந்த இடம் மதுரை. அது பொஇவுறு
வண்ணம் இன்னும் யாரும் எழுதவில்லை என்றுதான் தோன்றுகிறது.

க.>

2010/9/11 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

Innamburan Innamburan

unread,
Sep 11, 2010, 9:41:09 AM9/11/10
to mint...@googlegroups.com
ஜே.கே. அவர்களை பற்றி கண்ணனும் நானும் சொல்வது ஒன்றே. மொழி 'பரிபாடலில்' போல் மாற்றி மாற்றி பேசும். அவருடன் தனித்து ஒரு சிறிய அளவு பழகும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. 
இன்னம்பூரான்.

2010/9/11 N. Kannan <navan...@gmail.com>

N. Kannan

unread,
Sep 11, 2010, 7:56:25 PM9/11/10
to mint...@googlegroups.com
6
 
நந்துவின் சிந்தனாமொழி தமிழாக இருந்ததால் ஜே.கிருஷ்ணமூர்த்தி முதல் பார்வையில் உவப்பளிக்கவில்லை. ஜேகேயும் நம்ம வீட்டுப் பிள்ளைதான். ஆனால் பசுவிடமிருந்து கன்றைப் பிரிப்பது போல் வெள்ளையர் ஆதிக்கம் அடையாறு கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த கள்ளமற்ற சிறுவனை அவன் தாயிடமிருந்து, உறவுகளிடமிருந்து, தாய் மண்ணிடமிருந்து பிரித்துத் தனித்து கொடுமை செய்துவிட்டது. கிருஷ்ணமூர்த்தி சுந்தரத்தெலுங்கில் பேசிக்கொண்டு இருந்திருக்க வேண்டியவர். அவர் கடைசிவரை சொன்ன ஒரே தெலுங்குச் சொல், ‘அம்மா’ என்பது. அதுவும் தன் தாயைக் குறித்து அல்ல. அன்னிபெசண்ட் அம்மையாரை நோக்கி!! இந்தப் பிரிவினை, இத்தனிமை அவர் வேண்டிப் பெற்றதன்று. அவர் மேல் திணிக்கப்பட்டது. தங்கத்தைப் புடம் போடுவது போல் அவர் புடம் போடப்பட்டார். அவர் இந்திய மண்ணில் இயற்கையாக மலர்ந்திருக்க வேண்டிய மலர். இந்திய ஆன்மீக மரபின் ஒரு வித்து அவர். செயற்கையாக பழுக்கவைக்கப்பட்ட பழம் அவர். வெள்ளையர் உலகம் கண்ட கோயில் யானை அவர்!!
 
இவர் கிடைத்ததால் இந்திய ஞான மரபு என்பது எவ்வளவு தீவிரமானது என்பதை முதன்முறை மேற்குலகம் கண்டது. இவரிடம் சமரசமே கிடையாது. ‘என்னை நீ தனிமைப் படுத்தினாயா! உலகே! நீயும் படு அந்த அவதியை!! என்று பழி தீர்த்துக் கொண்ட மார்க்கம் ஜே.கே மார்க்கம்! கொஞ்சம் மூர்க்கமானதும் கூட. பயித்தியமான சில கேசுகளுண்டு. ஆனால், அவர் கடைசிவரை சமரசம் செய்து கொள்ளவில்லை. இவரை ‘கிழக்கின் நட்சத்திரம்’ என்றனர். இவரை அவதார புருஷராக்கி கோயில் கட்டினர் (தேவாலயம்-சர்ச்). இவர் அது தோற்றுவிக்கப்பட்ட கணத்திலேயே அழித்துவிட்டார். இவரை உருவாக்கி காத்து வந்த அன்னிபெசண்டின் நெஞ்சம் உடையும் வண்ணம் இவர் தியசோபிகல் சொசைடியை விட்டு விலகினார். Truth is a pathless land என்று நடக்க ஆரம்பித்துவிட்டார். அப்போது இவர் பதின்ம வயதினர். எங்கிருந்து வந்தது அந்த திடம்? அது வெறும் கோபம் தரும் பலமா? இல்லை, ‘அத்தைத்தின்று அங்கே கிடக்கும்’ இவ்வுலகை வெறுத்த மெய்மை தந்த திடமா (வைராக்கியம்)? குஜராத்தில் சுவாமி நாராயண் எனும் குழந்தை! இறைவனை நம்பி உலகைத் துறந்து வெளியே வந்துவிட்டது. இமயமலையெல்லாம் தனியே அலைந்தது. கல்லுக்கும் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் காவலன் யார்? ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியிடம் அறக்கட்டளை நிர்வாகிகள், ‘தாங்கள் இறந்துவிடும் பக்ஷத்தில் தங்கள் உடலை என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டனர். நம்மவூர் குருமார்களாக இருந்தால் ஒரு நீண்ட பட்டியல் தந்திருப்பர். தலையில் தேங்காய் உடை என்பதிலிருந்து ஆரம்பித்து சமாதி கட்டும்வரை. ஜேகே சொன்னார், ‘கடலில் எறிந்துவிடுங்கள்!’ என்று! கடைசிவரை அவர் எதிலும் சமரசம் செய்து கொள்ளவே இல்லை.
 
இவரை சமூகப் புரட்சியாளர் என்று காண்போருமுண்டு. இவ்வளவும் அவர் சாதித்ததற்கு அவர் மொழியிலிருந்து பெற்ற விடுதலை ஒரு காரணம். சமூகப் பதப்படுத்தல்கள் அதிகமற்ற தனிமை ஒரு காரணம். மொழியின் உண்மை வடிவைக் கண்டு மெய்சிலிர்த்தவர் ஜே.கே. ஆனால், அதை அடைவதற்கு முன் மொழியைச் சமூகம் பயன்படுத்தி வைத்திருக்கும் பதப்படுத்தலிலிருந்து விடுதலை பெற வேண்டும். ஜே.கேயின் பேச்சுக்களில் பெரும்பாலும் ஆங்கில மொழியின் வேர்ச்சொல் பற்றிய ஆய்வு இருக்கும். வேர்ச்சொல் மிக அர்த்த புஷ்டியாக இருக்கும். ஆனால் சமூகம் அதைப் பொருளற்ற இயந்திர கதியில் பயன்படுத்திவரும். ஜேகே அடிக்கடி சொல்வார் உலகில் மிகவும் கொஞ்சைப் படுத்தப்பட்ட சொல், ‘காதல்/அன்பு (Love)' என்பது என்று!!
 
ஆனால், பாவம் நந்து அப்போதுதான் தமிழை சுவைக்கத் தொடங்கியிருந்தான். இவன் படிப்பில் தமிழ் இலக்கியம் என்பதற்கே இடமில்லாமல் போன போது, இவனுக்கு ஆறுதலாக வந்து சேர்ந்தான் தாமரைச் செல்வன். ஒரு வருடம் சீனியர். வேறு துறை (பொருளாதாரம்). பேரா.நெடுமாறனின் மருமான். அவர் வாங்கும் அத்தனை புதுக்கவிதை நூல்களும் அவர் வாசிப்பிற்குப் பின் நேரடியாக நந்துவின் கைக்கு வந்துவிடும். நந்து கவிதை செய்த போது எழுதப்படாத ஸ்லேட்டுபோல் அவன் மனது இருந்தது. இவன் புதுக்கவிதை செய்தது பின்னால் பல தமிழ்த்துறை மாணவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது! ஒரு ஆய்வு மாணவர் சொல்லியே விட்டார், ‘நந்து நீவீர் கொடுத்து வைத்தவர். சங்கம் தொடங்கி காளமேகம் வரை எல்லாச் சிலுவையையும் சுமந்து கொண்டு நாங்கள் அலைகிறோம். நீர் சுமைதாங்கியாக இல்லாமல் சுதந்திரமாக எழுதுகிறீர். நாங்கள் எழுதினால் அத்தனை புலவரின் ஆவிகளும் கொட்ட கொட்ட விழித்துக்கொண்டு மிரட்ட ஆரம்பிக்கின்றன!!’ என்று சொல்லிச் சிரித்தார். நந்து ஜே.கேயை அறிந்து கொண்டபின் அதன் அர்த்தம் புரிந்தது! சுதந்திரம் என்பது இழப்பதற்கு ஒன்றுமில்லை எனும் நிலை! நந்து புதுக்கவிதை இயக்கத்தைப் பெரிதும் ஆதரித்தான். ஏனெனில் தமிழ்த் தாகமுடைய, ஆனால் தமிழ்த்துறை சாராதோருக்கு புகல்தரும் தருவாக அது இருந்தது!
 
 
Freedom and Authority can possibly never go together. Freedom and Intelligence can go together instead!
 
http://www.youtube.com/watch?v=w0cjoOIWi9U (சின்ன விழியம்)
 
 
நந்து கல்லூரி நாட்களில் ஜெயகாந்தன் முழுவதையும் படித்து முடித்திருந்தான். ஜெயகாந்தன் மதுரையில் வாழ்ந்தவர் என்பது அவனுக்கு ஒரு ஆறுதல். புதுக்கவிதை ஆசிரியர்கள் எல்லோரும் பழக்கமாகியிருந்தனர். ஆயினும் அவனுக்கு உண்மையான நவீன இலக்கியம் பரிட்சயமானது பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்த போதுதான். இவன் தன் சகோதரி வீட்டிலிருந்து நாகமலை புதுக்கோட்டைக்கு ரயிலில் தினம் வருவான். பல்கலைக் கழக ஆய்வு என்பது ஒரு கொத்தடிமை முறையில் அப்போது நடந்து வந்தது. கல்லூரிகளில் உயர் மதிப்பெண் பெற்று வரும் மாணவர்கள் மேலும் படிக்க வேண்டுமென்ற ஆவலில் பல்கலைக் கழகம் விரிக்கும் ஆய்வு வலையில் சிக்கிக் கொண்டனர். முதல் இரண்டு வருடங்களுக்கு எந்த ஸ்டைபண்டும் கிடையாது. தன் காலிலேயே நின்று பேராசிரியர்களுக்கு தங்கள் தனியாத ஆர்வத்தைக் காட்டி மெய்ப்படுத்த வேண்டும். எனவே, பெரும்பாலும் பணக்கார வீட்டுப் பையன்களே அக்காலத்தில் ஆய்வு செய்து வந்தனர். நல்லவேளை நந்து ஒரு வருடம் கல்லூரியில் வேலை பார்த்து காசு சேர்த்து வைத்திருந்தான். இப்படி இவன் சம்பாதிக்காமல் மேலே படிக்கப் போனதில் குடும்பத்தில் கொஞ்சம் வருத்தம். கல்யாணமாகாத சகோதரிகள் இருக்கும் போது வேலைக்குப் போய் கல்யாணம் செய்து வைக்காமல் இவன் தாந்தோன்றியாக ‘டாக்டர் பட்டம்’ வாங்கியே தீர்வது என்று பழிகிடக்கிறானே! என்று!
 
இவனுக்கு வழித்துணையாக வந்து சேர்ந்தாள் ராதா. அவளுக்கு இவனைப் பிடித்திருந்தது. அவள் இவனது பேராசிரியரிடம் காரியதரிசியாக வேலை பார்த்து வந்தாள். அவளுக்கு தி.ஜானகிராமன் கதைகளில் ஆய்வு செய்யும் ஒரு சௌராஷ்டிரக் கல்லூரி ஆசிரியரைத் தெரியும். எனவே அவரிடமுள்ள அத்தனை புத்தகங்களையும் நந்துவிற்கு ஒவ்வொன்றாய் கொண்டு வந்து கொடுத்தாள். தி.ஜானகிராமன் நந்துவிற்கு புதியதோர் உலகைக் காண்பித்தார். அவர் காட்டிய உலகு மென்மை உணர்வுகள் கொண்டதோர் உலகு. வீட்டிற்குள் கிடக்கும் மறைவான அழகைக் காட்டினார். உறவுகளில் புதைந்துள்ள மறை பொருள்களைக் காட்டினார். மோகமுள் எனும் பிரம்மாண்டம் மூலம் பிஞ்சில் தைத்த மோகமுள் என்னென்ன பாடு படுத்தும் என்று காண்பித்தார். நந்து பாபுவாகி யமுனாவிற்காக அலைந்தான். இவன் பார்த்திராத கும்பகோண வீதிகளில் மானசீகமாய் அலைந்தான். ரசனை, ருசி என்பது தீவிரமாக உட்புகுந்து இவன் அழகியலை முற்றும் முழுதுமாய் மாற்றியது. ராதாவே இவனுக்கு லா.ச.ராவையும் காட்டினாள். நந்துவின் முற்றும் படித்த பட்டியலில் ஜெயகாந்தன், தி.ஜா, லா.ச.ரா போன்றோர் சேர்ந்தனர். நந்துவிற்கு தி.ஜாவைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை. அவரது மரப்பசு கதாநாயகி போல் அவர் கையைத் தொட்டு உணர ஆசை. ஆனால், இவன் ஆசை நிறைவேறுவதற்கு முன் அவர் இறந்துவிட்டார். எனவே, லா.ச.ரா போகும் முன் அவரைக் காண இவன் புறப்பட்டான். 
 
நந்துவின் பல்கலைக் கழகம் லா.ச.ராவைக் கௌரவித்தது. புசு, புசுவென்ற புருவமும், தீர்க்கமான கண்களும் கொண்ட அந்த மனிதர் மேடையில் இப்படிச் சொன்னார். ‘என் ஆக்கத்தின் மேல் ஆய்வு செய்வதாகப் பேராசிரியர்கள் சொல்கிறார்கள். லா.ச.ராவைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் அவன் ஒரு முற்றுப்புள்ளி வைத்தாலும் அதில் பொருள் இருக்கும் என்பதை அறிய வேண்டும்’ என்றார். இப்படி சிந்திப்பது அவனுக்குப் பிடித்திருந்தது. மிகப்பின்னால் அவரை இவன் சந்தித்த போது, வாசற்கதவைத் திறந்து கொண்டே, ‘நீர் வைஷ்ணவரோ?’ என்றார். இதை எப்படி இவர் கண்டு பிடித்தார்? என்று நோக்கியபோது, ‘உனது கடுதாசியில் இந்தத் தேதி ‘தோதுப்படுமா?’ என்று கேட்டிருந்தாய். அப்பயன்பாடு வைஷ்ணவர்களுடையது!’ என்று சொன்ன போது இவன் விக்கித்துப்போகவில்லை. இதை எதிர்பார்த்து அனுபவிக்கத்தான் அவன் வந்திருந்தான். ஆறுமாதமாக ஒரு சிறுகதை எழுதுவதாகச் சொன்னார். வார்த்தை, வார்த்தையாக செதுக்கிக்கொண்டு இருக்கிறாராம். மதியம் முழுவதும் பேசிக்கொண்டு இருந்தனர். அவரோடு இருப்பது ஏதோ இறைச் சந்நிதியில் இருப்பது போல் பட்டது நந்துவிற்கு. மாலையாகிவிட்டது. பெரியவர் சாப்பிட வேண்டும். ‘மாமா! உத்தரவு கொடுங்கோ! கிளம்பறோம்!’ என்றான் நந்து (கூட வந்தது இவன் மருமான் கோபிநாத்). ‘நந்து உன்னை விடவே மனசு வரலைடா! சரி உள்ளே வா!’ என்று அழைத்துப் போனார். ‘மாமியையும் கூப்பிடுங்கள்! சேவிக்கிறோம்’ என்றனர். இவர் பழுத்த சிவனாகவும், மாமி அப்படியே அகிலாண்டேஸ்வரியாகவும் நந்துவிற்கு தோற்றமளிக்க அப்படியே சாஷ்ட்டாங்கமாக விழுந்து சேவித்தான். கையில் திருநீறு தட்டும் அதுவுமாக அவர் ஏதோ சித்த புருஷர் போல் இருந்தார். மீண்டும் வாசற்கதவுவரை வந்து வழி அனுப்பியவர், ‘நந்து, இது இந்த ஜென்ம உறவில்லைடா! நமக்கு முன்னாலேயே தொடர்பு இருக்கு! நன்னா இரு!’ என்று மீண்டும் ஆசீர்வதித்து வழி அனுப்பினார். 
 
 நந்துவின் முதற்கதை முன்னமே வெளிவந்து இருந்தது. ஆய்வுக் கொத்தடிமை வாழ்வில் இவனைத் தளிர்ப்பித்துக் கொண்டிருந்தது தமிழ். தமிழ்த்துறை மாணவர்களுடம் பழக ஆரம்பித்தவுடன் அவர்கள் இன்னும் சீரிய இலக்கிய கர்த்தாக்களை அறிமுகப்படுத்தினர். முதன்முதலாக ‘ஒரு புளியமரத்தின் கதை’ படித்தான். நல்ல இலக்கியம் படைக்க என்னென்ன வேண்டும் என்பதை நந்து புரிந்து கொண்டான். அவன் கவிதைகள் கணையாழியில் தொடர்ந்து வெளியாகத் தொடங்கின. சுஜாதாவின் தேர்வில் கூட இவன் கவிதைகள் தேறின. அது அவனுக்கு நம்பிக்கையை அளித்தது. அதே நேரத்தில் இவன் தமிழ் அறிவியலுக்கும் பயன்பட்டது. முதன்முறையாக ஒரு அறிவியல் நாடகம் எழுதி கணையாழிக்கு அனுப்பினான். அது வெளிவந்தது. திருச்சி வானொலி நிலையத்தில் அறிவியல் நிகழ்ச்சிகள் நடத்தித்தரும்படி அழைப்பு வந்தது. தான் கற்ற அறிவியலை பிறருக்குச் சொல்வதற்காக தமிழ் கற்ற நந்து அதை நன்கு பயன்படுத்தினான். நட்சத்திர நிகழ்ச்சியாக ஐன்ஸ்டைன் நூற்றாண்டுவிழா நிகழ்ச்சியொன்றை தயாரித்துத்தர நந்து அழைக்கப்பட்டான். அப்போது ஒரு பெரும் பட்டாளத்தையே நந்து அழைத்துக் கொண்டு திருச்சி போனான். அதில் பாடல்களும் இடம் பெற்றன. எழுதி இயக்கியது விவேகாநந்தாக் கல்லூரியில் பின்னால் முதல்வராக இருந்த வா.வே.சு (வி.வி.எஸ்). இவனது சகோதரியும் பாடினாள். கொத்தடிமை முறையில் 7 ஆண்டுகள் பிடித்தன இவன் ஆய்வு செய்து முடிக்க. இவன் பிறந்த சாதி அங்கும் வந்து அழிச்சாட்டியம் பண்ணியது. இவனது ஆய்வு நூலை அனுப்புவதில் எதிர்பாராத தாமதங்கள். பல்கலைக் கழகக் கொத்தடிமை முறையில் ஜாதிக்கு மிக முக்கிய பங்கு இருந்தது. துறைகளுக்கு அறிவியல் பேர் இருந்தாலும் நடைமுறையில் ஐயர் துறை, செட்டியார் துறை, நாடார் துறை, பிள்ளைமார் துறை என்றே இருந்தது. பல்கலைக் கழக நிர்வாகமும் அதற்கேற்றவாறே செயல்பட்டது.
 
இத்தனை கஷ்டங்களிலும் நந்துவிற்குத் துணையாக இருந்தது தமிழும், அவன் ஆக்கமுமே! இந்நிலையில் மொழி மேவிய ஒரு தேடல் என்பது நந்துவினால் செய்ய முடியாததாக இருந்தது. மேலும் மொழியின் ஆளுமை என்பது இன்னும் பிடிபடாமல் இருந்ததால் நந்து மேலும் மேலும் நவீன இலக்கியத்தில் தோய்ந்தான்.
 
A short introduction to J.Krishnamurti

Tthamizth Tthenee

unread,
Sep 13, 2010, 9:32:57 AM9/13/10
to mint...@googlegroups.com
நான் மிகக் கவனமாக நந்துவை பின் தொடர்ந்துகொண்டிருக்கிறேன்
 
என்னுடைய  மருமான் சுரேஷ் பெங்களூரில்  ஆடிட்டர் அசோசியேஷனில் ப்ரசிடெண்ட்
அவனுடைய மாமனார்  க்ரோம்பேட்டில் உள்ளார்,  ஜேகேவின் பரம ரசிகர் ,அது மட்டுமல்ல ஜேகேவை அணு அணுவாக படித்து  அவரைப்பற்றி புத்தகங்கள் எழுதியவர்,அவர் பேசும்போதுதான்  எனக்கு ஜேகேவின்  அருமை தெரிந்தது
 
அவர் எழுதிய பல  கட்டுரைகள்  எனக்கு கிடைக்கும்
அவற்றை தொகுக்க  முயல்கிறேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

devoo

unread,
Sep 13, 2010, 9:57:41 AM9/13/10
to மின்தமிழ்
>>நம்மவூர் குருமார்களாக இருந்தால் ஒரு நீண்ட பட்டியல் தந்திருப்பர். தலையில் தேங்காய் உடை என்பதிலிருந்து ஆரம்பித்து சமாதி கட்டும்வரை. ஜேகே சொன்னார், ‘கடலில் எறிந்து விடுங்கள்!’<<


ஜே கேயின் உயர்வைச் சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படிப் பொதுமையாகப்
பேசுவது தவறு; ச்ருங்ககிரி சங்கராசார்யர் சந்திரசேகர பாரதி அவர்கள் தம்
உடலை துங்காநதியில் இடச் சொன்னார். சீடர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அவரே
ஜலஸமாதியானார்; ஆனால் உடலை உடனே மீட்டுவிட்டனர்.

ஸ்வாமி ராம ஸுகதாஸ் அவர்களும் தாம் பயன்படுத்திவந்த சில பொருட் களையும்
தம் உடலோடு சேர்த்து எரியூட்டும்படி விராஸத் எழுதினார்; அடியார்கள்
அதன்படியே செய்தனர். 80 ஆண்டுகளுக்கு மேல் கீதையை விவரித்துவந்த
அவருக்கு ஒரு நினைவிடம் கூடக் கிடையாது. பதிப்புரிமை கோரப்படாத அவர்
எழுதிய புத்தகங்கள் மட்டுமே அவர்தம் வாழ்க்கையின் சின்னங்கள்

தேவ்

> மிரட்ட ஆரம்பிக்கின்றன!!’ என்று சொல்லிச் ...
>
> read more »

N. Kannan

unread,
Sep 13, 2010, 7:21:42 PM9/13/10
to mint...@googlegroups.com
நன்று தேவ்!
 
அவரை உயர்த்துவதற்காக அப்படிச் சொல்லவில்லை. யதார்த்ததைச் சொன்னேன். நான் ஜேகேயை என்றும் ஹீரோ ஒர்ஷிப் செய்ததில்லை. அவரைக் குருவாகக் கொள்ளக்கூடாது என்பது அவரின் போதனைகளுள் ஒன்று. அவர் ஒரு நல்ல தோழர். ஆத்ம நண்பன். அவ்வளவுதான்.
 
நீங்கள் தரும் சேதி மகிழ்வளிக்கிறது.
 
ஒரு ஜீவன்முக்தனை எப்படி நாம் அடையாளம் காண்பது? இது பற்றியெல்லாம் சிந்திப்போம்.
 
என்னைப் பொறுத்தமட்டில் இந்திய மண் தந்த பல பண்பாளர்களில் ஜேகே ஒருவர். அவரின் தேவை இக்காலத்திற்கு அவசியம். காரணங்கள் போகப்போக விளங்கும்.
 
க.>

2010/9/13 devoo rde...@gmail.com

Mohanarangan V Srirangam

unread,
Sep 13, 2010, 11:08:06 PM9/13/10
to mint...@googlegroups.com


2010/9/14 N. Kannan <navan...@gmail.com>

நன்று தேவ்!
 
அவரை உயர்த்துவதற்காக அப்படிச் சொல்லவில்லை. யதார்த்ததைச் சொன்னேன். நான் ஜேகேயை என்றும் ஹீரோ ஒர்ஷிப் செய்ததில்லை. அவரைக் குருவாகக் கொள்ளக்கூடாது என்பது அவரின் போதனைகளுள் ஒன்று. அவர் ஒரு நல்ல தோழர். ஆத்ம நண்பன். அவ்வளவுதான்.
 
நீங்கள் தரும் சேதி மகிழ்வளிக்கிறது.
 
ஒரு ஜீவன்முக்தனை எப்படி நாம் அடையாளம் காண்பது? இது பற்றியெல்லாம் சிந்திப்போம். 

முதலில் நம்மை நாம் எப்படி அடையாளம் காண்பது? :---(((
 
 
என்னைப் பொறுத்தமட்டில் இந்திய மண் தந்த பல பண்பாளர்களில் ஜேகே ஒருவர். அவரின் தேவை இக்காலத்திற்கு அவசியம். காரணங்கள் போகப்போக விளங்கும்.
 
க.>

2010/9/13 devoo rde...@gmail.com


 
ஜே கேயின் உயர்வைச் சொல்ல வேண்டும் என்பதற்காக  இப்படிப் பொதுமையாகப்
பேசுவது தவறு; ச்ருங்ககிரி சங்கராசார்யர் சந்திரசேகர பாரதி அவர்கள்  தம்
உடலை  துங்காநதியில் இடச் சொன்னார். சீடர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.  அவரே
ஜலஸமாதியானார்;  ஆனால் உடலை உடனே மீட்டுவிட்டனர்.

--

N. Kannan

unread,
Sep 13, 2010, 11:29:30 PM9/13/10
to mint...@googlegroups.com
ஜே கேயின் உயர்வைச் சொல்ல வேண்டும் என்பதற்காக  இப்படிப் பொதுமையாகப்
பேசுவது தவறு;
 
 
:-)
 
இன்னொரு சூட்சுமமுண்டு. ஆழ்வார்கள் பற்றிப் பேசும் போது வியாக்கியான நடை இயல்பாய் வருவது போல் ஜேகே பற்றிப் பேசும் அவரது தொணி மடலில் ஒலிக்கும். அது தவிர்க்கவியலாதது. ஜேகே அறிந்தோர்க்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரியும்.
 
க.>

N. Kannan

unread,
Sep 13, 2010, 11:37:50 PM9/13/10
to mint...@googlegroups.com
>> ஒரு ஜீவன்முக்தனை எப்படி நாம் அடையாளம் காண்பது? இது பற்றியெல்லாம் சிந்திப்போம்.
>
> முதலில் நம்மை நாம் எப்படி அடையாளம் காண்பது? :---(((
>


ஜேகே மட்டிக்கொண்டது இப்படித்தான். இக்காலத்தில் மெட்டல் டிடெக்டர்
வைத்து கடற்கரையில் தங்க மோதிரம், காசுகள் கிடக்கிறதா? என்று தேடுவது
போல், லெட்பீடர் ‘தன்’ உணர்வற்ற ஒரு ஜீவன் கடற்கரையில் உலாவுவதைக்
கண்டாராம். இவரே இறைத்தூதர் என்றாராம். ஜேகே மேடையில் போதும் போது
மூன்றாம் உயர்திணையில் வைத்துதான் தன்னைக் குறிப்பிடுவார். ஓ! அப்பாலகன்
என்பார்! யாரடா அது? என்றால் சிறுபிராயத்து ஜே.கே!! நந்து ஏன் இங்கு
வந்தான் என்று இப்போது புரிகிறதா?

அடியில் கையெழுத்துக் கிடையாது. பாசுரமடல்கள் செய்தபோதும் கையெழுத்துப்
போடவில்லை. அதுவொரு மரபு.

நம்மை நாம் அடையாளம் காண்பதொன்று, மற்றவர் எப்படிக் காண்கின்றனர் என்பது
மற்றொன்று.
‘நீ என்னைச் சேர்ந்தவன், நீயும் நானும் ஒன்று!’ என்றானாம் இறைவன்.
இவன் சொல்லியிருக்கிறான். ‘என் புத்தி என்ன சொல்கிறது என்றால். நான்
யாரையும் சேர்ந்தவன் அல்லன். நான் என்னைச் சேர்ந்தவன்’ என்றானாம். கற்றது
கைமண் அளவு :-)))

க.>

devoo

unread,
Sep 13, 2010, 11:58:10 PM9/13/10
to மின்தமிழ்
>>ஒரு ஜீவன்முக்தனை எப்படி நாம் அடையாளம் காண்பது?<<


'நிர்யோகக்ஷேம ஆத்மவாந்’ - சுருக்கமாகவும் கூறுகிறான், தொடர்ந்து
விரிவாகவும் கூறுகிறான் கீதாசார்யன்.

சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர் ஸ்ரீ ராமாநந்த பாரதி
அவர்கள்; நெல்லையில் புகழ்பெற்ற வக்கீலாக இருந்து துறவு மேற்கொண்டவர்.
கொல்லிமலையில் வாழ்ந்தார். அவரது இறுதி நெருங்கும் சமயத்தில் உடலை
எங்கு, எப்படி அடக்கம் செய்ய வேண்டுமென்று கேட்டனர் .’இயற்கை
பார்த்துக்கொள்ளும், கவலைப்பட வேண்டாம்’ என விடை கூறினார் அத்துறவி.
வெளியுலம் அறியாமல் வாழ்ந்து மறைந்த ஜீவந்முக்தர்கள் பலர்.

உங்கள் பதிவை விமர்சிக்கும் நோக்கம் இல்லை; வாய்ப்பு நேர்ந்ததால்
தெரிவித்தேன்


தேவ்

devoo

unread,
Sep 14, 2010, 12:49:26 AM9/14/10
to மின்தமிழ்
>> ‘நீ என்னைச் சேர்ந்தவன், நீயும் நானும் ஒன்று!’ என்றானாம் இறைவன்.
இவன் சொல்லியிருக்கிறான். ‘என் புத்தி என்ன சொல்கிறது என்றால்.
நான் யாரையும் சேர்ந்தவன் அல்லன். நான் என்னைச் சேர்ந்தவன்’ <<


நீ என்னைச் சேர்ந்தவன் - த்வம் மே

நான் என்னைச் சேர்ந்தவன் - அஹம் மே

உடலோடும் உலகோடும் தன்னை அடையாளப்படுத்தும்வரை ஒவ்வொரு தளத்திலும்
உலகைச் சேர்ந்தவர்களைத் தன்பால் கவன ஈர்ப்புச் செய்த வண்ணம் இருப்பான்;
பரத்தோடு அடையாளப் படுத்திக்கொண்டால் பரமஹம்ஸர் சொன்னதுபோல்
வெல்லப்பாகில் விழுந்த வெல்லப்பொம்மை


தேவ்

N. Kannan

unread,
Sep 14, 2010, 1:23:22 AM9/14/10
to mint...@googlegroups.com
அன்பின் தேவ்:

அதை நான் விமர்சனமாக எடுத்துக்கொள்ளவில்லை. தாங்கள் தரும் சமதளத்தகவல்
நம் தமிழ் அடியார்களை அறிந்து கொள்ள உதவுகிறது. பரமஹம்ச யோகாநந்தர்
அடக்கமாக வீட்டில் வளைய வளைய வரும் பெண் யோகிகள் பற்றிப் பேசுவார்.

எந்தரோ மகாநுபாவ!!

க.>

kalairajan krishnan

unread,
Sep 14, 2010, 3:37:17 AM9/14/10
to mint...@googlegroups.com
ஐயா கண்ணன் அவர்களுக்கு வணக்கம்,
 
திருப்பூவணத்தில் என்னிடம், ஜெ,கே,யின் "Surely, freedom from the self ... is the true function of man"  என்ற புத்தகம் ஒன்று உள்ளது,    ஆனால் ஆங்கிலத்தில் உள்ளதால் அதன் உட் பொருளை உணர்ந்து​கொள்ள இயலவில்லை,
 
தமிழாக்கம் இருந்தால் ​கொடுத்து உதவுங்களேன்,
 
அன்பன்
கி. காளைராசன்

--
அன்னதானம் ​செய்வோம்,  கண்தானம் ​செய்வோம்.  இவ்விருதானங்களையும் சிவபெருமான் ஏற்றுக் ​கொள்கிறார்,

N. Kannan

unread,
Sep 14, 2010, 8:12:25 AM9/14/10
to mint...@googlegroups.com
அன்பின் காளைராஜன்:

ஜேகேயின் திறவுகோலே மொழிதான். நான் தமிழ் மொழியின் தாக்கத்திலிருந்து
விடுபடும் போது வார்த்தைகள் நம் முழு கவனத்தையும் ஆக்கிரமிக்கின்றன.
அப்போது புரிதல் நடக்கிறது.

உதாரணமாக, ‘சித்தர்’ எனும் தமிழ் வார்த்தையைக் கேட்டவுடன் ஆயிரம்
எண்ணங்கள் நெஞ்சில் பாயும். அந்தக் கெடுபிடியில் சித்தர் எங்கோ
போய்விடுவார் :-)

மொழி பதத்துப் போய்விடுகிறது. தீ போல இருக்க வேண்டும் மொழி. மந்திரம்
போன்ற சொல் என்று பாரதியும் பிறரும் சொல்வது ‘தீக்குள் விரலை விடும்’
சமாச்சாரம்.

நான் அறிந்த ஜேகே முழுவதும் ஆங்கிலத்தில்தான். சில தமிழாக்கம் உள்ளதாக
அறிகிறேன். நான் வாசித்ததில்லை. இனி அவசியமும் இல்லை. ஒருமுறை
புரிந்துவிட்டால் மீண்டும் வாசிக்க வேண்டிய அவசியமில்லை. புரிந்தததை
வாழ்வின் நடைமுறை ஆக்குவதில்தான் இனி கவனம்.

திருப்பூவணத்தில் ஜேகே வாசிக்கும் ஒரே தமிழர் நீங்களாகவே இருக்கும் :-))

நாம் சந்தித்தால் நிரம்பப் பேசலாம். என்னுடைய உற்ற ஜெர்மன் தோழன் ஜேகே
புரியாமல் என்னிடம் வந்தவன்தான். எனக்கு தம்பி இல்லாத குறையைத் தீர்த்து
வைப்பவன்.

கண்ணன்.

2010/9/14 kalairajan krishnan <kalair...@gmail.com>:

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

kalairajan krishnan

unread,
Sep 14, 2010, 8:31:46 AM9/14/10
to mint...@googlegroups.com
ஐயா கண்ணன் அவர்களுக்கு
 
சென்னை வாசி ஸ்ரீ P.A.பாலகிருஷ்ணன் CLRI, அவர்கள் இப்புத்தகத்தை எனக்குக் ​கொடுத்தார்கள்,
தாங்கள் அன்புள்ளம் ​கொண்டு ​ஜே,​கே, யினை முடிந்த அளவிற்கு தமிழில் தாருங்களேன். 
 

N. Kannan

unread,
Sep 14, 2010, 8:50:06 AM9/14/10
to mint...@googlegroups.com
2010/9/14 kalairajan krishnan <kalair...@gmail.com>:

> தாங்கள் அன்புள்ளம் கொண்டு ஜே,கே, யினை முடிந்த அளவிற்கு தமிழில்
> தாருங்களேன்.
>

That is an impossible task!!
ஜே.கிருஷ்ணமூர்த்தி பேசிக்கேட்பது எளிது.
ஆனால் புத்தக வடிவிற்கு அது போகும் போது editorial assistance உண்டு.
ராஜகோபாலன் என்பவர் தன் வாழ்நாளையே ஜேகே புத்தகங்களைச் செப்பனிட
உதவியவர். அவ்வளவு எளிதாக மொழி பெயர்த்துவிட முடியாது. ஆங்கிலத்தில்
படிப்பதன் ஆதாயம் சொன்னேனே!! :-))

எனது தொடரில் ஜேகே பற்றி வரும் போது அவரது மூலச்சொற்களை அப்படியே
தந்துவிடுவேன். இது ஜேகேயின் கட்டளை.

க.>

kalairajan krishnan

unread,
Sep 15, 2010, 3:01:35 AM9/15/10
to mint...@googlegroups.com
Dear Sir,
His Book is on my Table.  I will read it.
yours
kalairajan

 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
Sep 15, 2010, 4:50:48 AM9/15/10
to mint...@googlegroups.com
அன்பின் காளைராஜன்:
 
ஆன்மீகப் பெரியவர்கள் எல்லோரும் சொல்லும் சேதி ஒன்றுதான். உங்களது அனுபவம், புரிதல் என்பவை என்னவென்று பிற யாரும் அறிய வாய்ப்பில்லை. ஒருக்கால் ஜேகே சொல்லும் பாடங்கள் (இதை Teaching என்கிறார்) உங்களுக்கு முன்பே தெரிந்திருக்கலாம்.
 
இத்தொடர் எழுந்ததன் காரணம் ஜேகேயை அறிமுகப்படுத்துவது அல்ல. நந்து எனும் கிராமத்துச் சிறுவன் எப்படி படிப்படியாக வளர்ந்து ஜேகே என்று உலகலாம் போற்றப்படும் ஒரு சிந்தனையாளரிடம் போய்ச்சேர்ந்தான் என்று சொல்வதுதான். இது முழுக்க, முழுக்க ஒரு முமூக்ஷுவின் பயணம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையில் போகிறோம். அதற்கு ஏதாவதொரு காரணமிருக்கும். யோசித்துப் பார்த்தால் ஒரு மறை திட்டம் புலப்படும். அரங்கனார் இந்த ஆன்மீகத்தேடலைப் பதியச் சொன்னார். அதனால் இந்த முயற்சி.
 
JK may not appeal to everybody. It does not matter.
 
வணங்கும் துறைகள் பல பலவாக்கி, மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி, அவை அவை தொறும்
அணங்கும் பலபல ஆக்கி, நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின்கண், வேட்கை எழுவிப்பனே

நம்மாழ்வார்
 
 
எதுவாகிலும், ஜேகேயைப் படித்தால், கேட்டால் நம் ஆங்கிலம் தெளிவுறுதல் திண்ணம் ;-)
 
க.>

2010/9/15 kalairajan krishnan <kalair...@gmail.com>

kalairajan krishnan

unread,
Sep 15, 2010, 5:19:41 AM9/15/10
to mint...@googlegroups.com
ஐயா கண்ணன் அவர்களுக்கு வணக்கம்

 
 
ஆன்மீகப் பெரியவர்கள் எல்லோரும் சொல்லும் சேதி ஒன்றுதான். உங்களது அனுபவம், புரிதல் என்பவை என்னவென்று பிற யாரும் அறிய வாய்ப்பில்லை.
 
முற்றிலும் உண்மை,

ஒருக்கால் ஜேகே சொல்லும் பாடங்கள் (இதை Teaching என்கிறார்) உங்களுக்கு முன்பே தெரிந்திருக்கலாம்.
 
இத்தொடர் எழுந்ததன் காரணம் ஜேகேயை அறிமுகப்படுத்துவது அல்ல. நந்து எனும் கிராமத்துச் சிறுவன் எப்படி படிப்படியாக வளர்ந்து ஜேகே என்று உலகலாம் போற்றப்படும் ஒரு சிந்தனையாளரிடம் போய்ச்சேர்ந்தான் என்று சொல்வதுதான்.
 
ஐயா,​
உங்களுக்கு அது ​​ஆலவட்டம்,
எனக்கு அது திருப்பூவண வட்டம்
 
05-09-2010 அன்று திருப்பூவணத்தில் ஒரு விழா நிகழ்ச்சியில் தமிழையா விநாயகம் அவர்களின் மகன் சீர்மிகு குமார் அவர்களைச் சந்தித்தேன்,
 
ஐயாவிடம் அதிகமாக அடிவாங்கியவர் அவராகத்தான் இருக்கும்,
 
அவரிடம் ​பேசிக் ​கொண்டிருககும் ​போது,
ஐயாவிடம் அடிவாங்கியவர்களை நான் பார்த்த காட்சிகள் மனத்தில் படமாக ஓடிக் ​கொண்டிருந்தன,
 
 
ஐயா தொடர்ந்து எழுதுங்கள்,  படித்துக் ​கொண்டே வருகிறேன்.
 
அன்பன்
கி. காளைராசன்

N. Kannan

unread,
Sep 15, 2010, 5:56:09 AM9/15/10
to mint...@googlegroups.com
2010/9/15 kalairajan krishnan <kalair...@gmail.com>:

> 05-09-2010 அன்று திருப்பூவணத்தில் ஒரு விழா நிகழ்ச்சியில் தமிழையா விநாயகம்
> அவர்களின் மகன் சீர்மிகு குமார் அவர்களைச் சந்தித்தேன்,
>

போச்சுடா! :-))


> ஐயாவிடம் அதிகமாக அடிவாங்கியவர் அவராகத்தான் இருக்கும்,
>

பாவம்.

நல்லவேளை விநாயம் எனக்குப் பாடமெடுக்கவில்லை. என் வாத்தியார்
ஸ்ரீநிவாசன். விநாயம் சார் மாணவர்களைப் பின்னிப் பெடலெடுப்பதைப் பார்த்தே
எனக்கு கழிசல். அடிபட்டவனுக்கு எப்படி இருக்கும்!!

ரொம்ப நாளைக்கப்புறம் எங்க டிராயிங் மாஸ்டரை மதுரையில் ஓரிடத்தில்
பார்த்தேன். ஆட்டோவில் போய்கொண்டிருந்த என்னை எப்படியோ கழுகுக் கண்ணால்
பார்த்து பிடித்துவிட்டார். நான் என் அக்காவைப் பார்க்கப் போய்
கொண்டிருந்தேன். இத்தனை வருடங்களுக்குப் பிறகும் தன் மாணவர்களை எப்படி
நினைவில் வைத்திருக்கிறார்கள் இவ்வாசிரியர்கள்? இல்லை அதுவொரு ஷ்பெஷல்
நிகழ்வா? திருப்புவனம் என்றாலே இப்போது எல்லாம் mystical ஆகத் தெரிகிறது.
!!

க.>

Subashini Tremmel

unread,
Sep 15, 2010, 2:44:44 PM9/15/10
to mint...@googlegroups.com
கண்ணன்,
இந்தத் தொடரை ரசித்துப் படித்தேன். நந்துவாக நீங்கள் கதை சொல்லும் விதம் மிக அருமை. உங்கள் நட்பினால் தானே எனக்கும் ஜே.கேயின் நூல்கள் அறிமுகமாகின. !
 
அன்புடன்
சுபா

 
2010/9/12 N. Kannan <navan...@gmail.com>

N. Kannan

unread,
Sep 15, 2010, 7:06:50 PM9/15/10
to mint...@googlegroups.com
2010/9/16 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

> கண்ணன்,
> இந்தத் தொடரை ரசித்துப் படித்தேன். நந்துவாக நீங்கள் கதை சொல்லும் விதம் மிக
> அருமை.

ஓ! நந்துவா! அது அவன்தான். நான் அவனில்லை :-))

க.>

Mohanarangan V Srirangam

unread,
Sep 15, 2010, 9:40:58 PM9/15/10
to mint...@googlegroups.com


2010/9/16 N. Kannan <navan...@gmail.com>
இப்படிச் சொல்லிச் சொல்லியே.....:--) 

பரவாயில்லை. இவுரு நந்துங்கறாரு. இன்னம்பூராரு ராஜுங்கறாரு. 
நான் தான் நானாகவே இருக்கேன். 
:--)) 

Hari Krishnan

unread,
Sep 15, 2010, 11:02:20 PM9/15/10
to mint...@googlegroups.com


2010/9/16 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

பரவாயில்லை. இவுரு நந்துங்கறாரு. இன்னம்பூராரு ராஜுங்கறாரு. 
நான் தான் நானாகவே இருக்கேன். 

எப்புடி? ராங்கனாகவா, ராங்க்ளனாகவா?  (I mean, wronger or wrangler?)  தமிழ்ல டபிள்யூ வித்தியாசம் தெரியவா போவுது....நல்லா ராங்குங்கோவ்....ராங்கிளுங்கோ.....

--
அன்புடன்,
ஹரிகி.

N. Kannan

unread,
Sep 15, 2010, 11:32:43 PM9/15/10
to mint...@googlegroups.com
> பரவாயில்லை. இவுரு நந்துங்கறாரு. இன்னம்பூராரு ராஜுங்கறாரு.
> நான் தான் நானாகவே இருக்கேன்.
> :--))


விட்டு விடுதலையாகி நிற்பாய்
அந்தச் சிட்டுக்குருவியைப் போல :-))

க.>

Nagarethinam

unread,
Sep 16, 2010, 12:29:37 AM9/16/10
to மின்தமிழ்
I was introduced to JK by a genius called Mohanamurthy, a fellow
scientist in ISRO some 30 years ago...

From there I started my journey to explore what Spirituality is.....

J K youmight know rebeled against Annebesant's mission which groomed
him to be their chief and became what he is today. I used to think
that he is the begining and end of Spirituality.

When you dig deeper, read other material say Living with
HimalayanMasters by Swamy Rama and the works of CarlosCasteneda you
undersand J K is a Socio philosopher and not a spiritualist.

i will send my manuscript for your considered opinion.

Hopefully this would be published and available during the forthcoming
chennai book-exhibition.

Good wishes

NATARAJAN

(I am wondering how you mail in Tamil...

Do you prepare text elsewhere and cut and past..... ??)

I am new to this forum and yet to understand it fully..


http://shake-hands-with-bramma.blogspot.com/
http://science-of-good-living.blogspot.com/

I have completed two of my works and ready forprint....

If you would llike to take another view you may visit my blog first
and if u likeit you mail me I will send the PDF files.


Thanks

NATARAJAN


On Sep 15, 4:50 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> அன்பின் காளைராஜன்:
>
> ஆன்மீகப் பெரியவர்கள் எல்லோரும் சொல்லும் சேதி ஒன்றுதான். உங்களது அனுபவம்,
> புரிதல் என்பவை என்னவென்று பிற யாரும் அறிய வாய்ப்பில்லை. ஒருக்கால் ஜேகே
> சொல்லும் பாடங்கள் (இதை Teaching என்கிறார்) உங்களுக்கு முன்பே
> தெரிந்திருக்கலாம்.
>
> இத்தொடர் எழுந்ததன் காரணம் ஜேகேயை அறிமுகப்படுத்துவது அல்ல. நந்து எனும்
> கிராமத்துச் சிறுவன் எப்படி படிப்படியாக வளர்ந்து ஜேகே என்று உலகலாம்
> போற்றப்படும் ஒரு சிந்தனையாளரிடம் போய்ச்சேர்ந்தான் என்று சொல்வதுதான். இது
> முழுக்க, முழுக்க ஒரு முமூக்ஷுவின் பயணம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையில்
> போகிறோம். அதற்கு ஏதாவதொரு காரணமிருக்கும். யோசித்துப் பார்த்தால் ஒரு மறை
> திட்டம் புலப்படும். அரங்கனார் இந்த ஆன்மீகத்தேடலைப் பதியச் சொன்னார். அதனால்
> இந்த முயற்சி.
>
> JK may not appeal to everybody. It does not matter.
>

> *வணங்கும் துறைகள் பல பலவாக்கி, மதி விகற்பால்


> பிணங்கும் சமயம் பலபல ஆக்கி, அவை அவை தொறும்
> அணங்கும் பலபல ஆக்கி, நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்

> இணங்கு நின்னோரை இல்லாய் நின்கண், வேட்கை எழுவிப்பனே*


> நம்மாழ்வார்
>
> எதுவாகிலும், ஜேகேயைப் படித்தால், கேட்டால் நம் ஆங்கிலம் தெளிவுறுதல் திண்ணம்
> ;-)
>
> க.>
>

> 2010/9/15 kalairajan krishnan <kalairaja...@gmail.com>> Dear Sir,

Tthamizth Tthenee

unread,
Sep 16, 2010, 9:27:45 AM9/16/10
to mint...@googlegroups.com
என்னதான்  ஆயிரம் நந்து போன்றோரைப் பற்றிப் படித்தாலும்  நாம் நாமாகவே  இருக்கிறோம்
 
மாற முடியவில்லை  என்பதே  உண்மை
 
கோடிகளில்  சிலர்தான்  நந்துவாக இருக்க முடியும்,
 
நானாக நான்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

Mohanarangan V Srirangam

unread,
Sep 16, 2010, 9:37:13 AM9/16/10
to mint...@googlegroups.com
ஜிங்..ங் ..ங்... சக். 

(அப்பா காது ஙொய்ங்குது :-)))

2010/9/16 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Sep 16, 2010, 10:32:09 AM9/16/10
to mint...@googlegroups.com
சில நேரங்களில்  ரீங்காரமாய்  இருக்கும்
 
பல நேரங்களில்  இப்படித்தான் இருக்கும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 

Mohanarangan V Srirangam

unread,
Sep 16, 2010, 1:01:48 PM9/16/10
to mint...@googlegroups.com
தமிழ்த் தேனியாரிடமாவது? பேசி ஜயிக்கறதாவது? நடக்கற காரியமா? 

தேனீ துரத்தறத்துக்கு முன்னாடி நாம வாபஸ் வாங்கிடணும். இல்லைன்னா கொட்டித்துன்னா என்ன ஆகும்? 
:--)))

2010/9/16 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Sep 17, 2010, 5:36:11 AM9/17/10
to mint...@googlegroups.com
தேனி  யாரையும்  தேடித்தேடி   துரத்திக் கொட்டாது
 
அதுவும் இந்த தமிழ்த்தேனீ  தேனை மட்டுமே  கொட்டும்
 
விஷத்தைக் கொட்டாது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 

N. Kannan

unread,
Sep 17, 2010, 6:39:54 AM9/17/10
to mint...@googlegroups.com
Hello Dr.NATARAJAN


2010/9/16 Nagarethinam <nataraj...@gmail.com>

I was introduced to JK by a genius called Mohanamurthy, a fellow
scientist in ISRO some 30 years ago...

From there I started my journey to explore what Spirituality is.....
 
 
No wonder! JK attracted many scientists including David Baum & Amit Goswamy.
 

When you dig deeper, read other material say Living with
HimalayanMasters by Swamy Rama and  the works of CarlosCasteneda you
undersand J K is a Socio philosopher and not a spiritualist.
------------
 
It is hard to place him in a familar bracket. He was a teacher, a revolutionary, social reformer, thinker, academic (he started several schools), poet.
 
............

i will send my manuscript for your considered opinion.

Hopefully this would be published and available during the forthcoming
chennai book-exhibition.
----------------
 
You mean, you have written a book?
 
.................



(I am  wondering how you mail in Tamil...

Do you prepare text elsewhere and cut and past..... ??)

I am new to this forum  and yet to understand it fully..
_______________________________________________
 
If you know how to write Tamil then it is very easy to do so here. Download New Horizon Media Writer  http://software.nhm.in/products/writer
 
You can key-in using English keyboard. Very simple. Try it now.
 
You are welcome to contribute & participate regularly.
 
Kannan

Innamburan Innamburan

unread,
Sep 17, 2010, 6:41:42 AM9/17/10
to mint...@googlegroups.com
துரத்தாத தேனியையும், துரத்தப்படாத பெண்ணழகியையும், யான் கண்டதில்லை, இப்பூவுலகில்.



2010/9/17 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Sep 17, 2010, 6:42:58 AM9/17/10
to mint...@googlegroups.com
அனுபவம் பேசுகிறது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 

Mohanarangan V Srirangam

unread,
Sep 17, 2010, 9:12:44 AM9/17/10
to mint...@googlegroups.com
துறை சான்ற பெரியோர்கள் பேசும் போது 
அமைதி காத்தல் சிறுவர்க்கழகு என்பதால் 
மௌனம் காக்கிறேன். 
:--))

2010/9/17 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

N. Kannan

unread,
Sep 24, 2010, 11:32:35 PM9/24/10
to mint...@googlegroups.com
 7.

Question: why is your teaching so purely psychological? There is no cosmology, no theology, no ethics, no aesthetics, no sociology, no political science, not even hygiene. Why do you concentrate only on the mind and its workings?

Krishnamurti: For a very simple reason, Sir. If the thinker can understand himself, then the whole problem is solved. Then he is creation, he is reality; and then what he does will not be antisocial. Virtue is not an end in itself; virtue brings freedom, and there can be freedom only when the thinker, which is the mind, ceases. That is why one has to understand the process of the mind, the ‘I’, the bundle of desires that create the ‘I’, my property, my wife, my ideas, my God. Surely it is because the thinker is so confused that his actions are confused; it is because the thinker is confused that he seeks reality, order, peace. Because the thinker is confused, ignorant, he wants knowledge; and because the thinker is in contradiction, in conflict, he pursues ethics to control, to guide, to support him. So, if I can understand myself, the thinker, then the whole problem is solved, is it not?

Collected Works of J. Krishnamurti, Vol IV. 1948 6th Public Talk, Bombay

 
நந்து வாழ்ந்த சூழல் சமயம் தொடர்பான தீவிரக் கேள்விகளைக் கேட்க அனுமதிக்கவில்லை. கிராமச் சூழலில் படிநிலை மிக முக்கியமாக இருந்தது. கேள்விக்கு அப்பாற்பட்டவராக கடவுள் இருந்தார். இவனைச் சுற்றி ஏதேதோ கதைகள், கோயில் முழுதும் புராணங்கள். வயற்காட்டில் வேறுவிதமான கதைகள், நடுகல், மூதாதையர் வழிபாடு, ஆவி பேசுதல், பேய் ஓட்டுதல், இரவில் நடமாடும் கருப்பு என்று. இவையெல்லாம் ஒருவகையில் பயம் கலந்த மனோநிலையைத் தந்தாலும், நந்துவின் கற்பனைக்கு இத்தனையும் உரம் போட்டன. நந்து ‘பத்ம நிலையம்’ எனும் அவன் வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்து கொண்டு கதை சொல்லத் தொடங்கினான்! ஆரம்பிக்கும் போதே கேட்பான், ‘எந்தக் கதை வேண்டும்? மர்மக்கதையா? மகாராஜா கதையா? என்று. கேட்போரின் தேர்விற்கு ஏற்றவாறு உடனே கதை எழும், நடமாடும், துள்ளிக் குதிக்கும். சகச் சிறார்கள் அப்படியே மெய் மறந்து கேட்டுக் கொண்டிருப்பர். பக்கத்து வீட்டுப் பாட்டியும், தப்பைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு கேட்பாள். அது நந்துவிற்கும் தெரியும். இக்கதைகளில் பேய், பிசாசு, தேவர்கள், அசுரர்கள், அரசர்கள் என்று எல்லோரும் வந்து போவர்.
 
பனையூரம்மன் என்று ஒரு கிராமத்துக்காரர் வருவார். நிண்ட நெடிய உருவம். கால்களில் கணையாழி. கைகளிலும் அதுவே. மரப்பாதுகை. கையில் சாட்டை. எடுத்து ஒரு வீச்சு வீசுவார். காற்றைக் கிழித்து விசிலடித்து வந்து ஓயும்! கையில் திருநீறு தட்டு வைத்திருப்பார். எல்லோரும் அவருக்கு அரிசி, பருப்பு, காசு கொடுப்பார்கள். அவர் யாரிடமும் பிச்சை கேட்க மாட்டார். தெருவில் நடந்து கொண்டே இருப்பார். மக்கள் நிறுத்தி விபூதிப் பிரசாதம் வாங்கிக்கொண்டு பிட்சை போடுவர். அக்கிரஹாரத்துச் சிறுமிகள் நடுங்கிக்கொண்டே வந்து போட்டுவிட்டு ஓடிவிடும். வீட்டுக்குள்ளிலிருந்து நடுங்கிக் கொண்டே மாமி பார்த்துக் கொண்டிருப்பாள். கிராம தேவதைகள் முரட்டுத்தனமானவை. புதூர் மாரியம்மன் கோயில் உற்சவம் பங்குனியில் வரும். சும்மாவே சூடு பறக்கும் சூழலில் வெறும் கையில் அக்கினிச் சட்டியை வைத்துக்கொண்டு வரும் இராசுச் சேர்வையைக் கண்டால் அக்கிரஹாரம் மிரளும். அக்னிக்கு உணவு என்ன? எண்ணெய்தானே! எல்லோரும் அக்கினிச்சட்டியில் நெய் விடுவர். அது இன்னும் பீரிட்டு எழும். பார்க்கவே பயங்கரமாக இருக்கும். கோரக்கன் கோயில் சாமி ஆடு பலி கேட்கும். ‘ஏதாவது தப்புப் பண்ணினால் சாமி கண்ணைக் குத்தும்’ என்று வீட்டுப் பெரியவர்கள் சொன்னால் குழந்தைகள் நம்பினர். கையில் வேல் வைத்துக் கொண்டு பால் காவடி எடுப்பவர்கள், உடலில் வேல்களைக் குத்திக்கொண்டு பாலஷண்முகர் கோயிலுக்குள் போவதைப் பார்த்தால் சாமி கண்ணைக்குத்தும், காதைக்குத்தும், நாக்கைக்குத்தும் என்று சொன்னாலும் குழந்தைகள் நம்பும் என்று தோன்றியது.
 
நந்துவின் வாழ்வில் எப்போதும் மரணபயம் சூழ்ந்திருந்தது. கிராமத்தில் மிகவும் அச்சம் தரக்கூடிய சொல் மரணம். யாரும் இச்சொல் கேட்கப்பயந்தனர். அதுவொரு அமங்கலச் சொல்லாக இருந்தது. ஆயினும், அவர்கள் வாழ்வை மரணம் சூழ்ந்தே இருந்தது. பாடை கட்டி, ‘கோவிந்தா! கோவிந்தா!!’ என்று நெருப்புச் சட்டியுடன் போகும் பயணங்களை நந்து பள்ளி செல்லும் போது பார்த்துக் கொண்டுதானிருந்தான். ஆயினும், அது பிறர் மரணம். அது நம் வீட்டிற்கு வந்துவிடக்கூடாது என்று எல்லோரும் பயந்தனர். கோயில் என்ற ஒன்று அங்கு இருப்பதே இந்தப் பயம் விளைவித்த கெடுபிடியோ என்று கூட நம்பும்படி அவ்வாழ்வு இருந்தது. சிவன் கோயிலில் சாம்பல் தருகிறார்கள். அது வாழ்வின் நிலையாமைக் குறிக்கிறது என்று யாரும் சொல்லித்தரவில்லை. சாம்பல் எனும் அமங்கலச் சொல்லை நீக்கி, விபூதி எனும் மங்கலச் சொல்லை உட்புகுத்தினர். கோயில் பட்டர் கொடுக்கும் விபூதிப் பிரசாதத்தில் மரணத்தின் எந்த வாடையும் உட்புகா வண்ணம் நல்ல செண்ட் போட்டுக் கொடுத்தார். சந்தனம், ஜவ்வாது போல் விபூதியும் மணக்கும்படி வைத்தனர். இவ்வளவு கவசங்களை உருவாக்கி வைத்திருந்தாலும் உண்மையைப் போட்டு உடைக்க குடுகுடுப்பாண்டிகள் அவ்வப்போது வந்து போயினர். அதுவும் அவன் நடு இரவில் வந்து குறி சொல்லும் போது எல்லோருக்கும் குலை நடுங்கும். ஏதாவது அமங்கலமாகச் சொல்லிவிடுவானோ என்று. ஆனாலும், என்ன சொல்கிறான் என்பதை அறியும் ஆவலும் இருப்பதால் எல்லோரும் கதவின் பின்னால் ஒளிந்து கொண்டு அவன் சொல்லும் குறியை அவ்வூரில் கேட்டனர்! யார் கண்டது, வீட்டின் கொல்லையில் ஏதாவது புதையல் இருக்கிறது என்று சொல்லிவிட்டால்? இப்படிக் குறி கேட்டு வீட்டுக் கொல்லையில் தோண்டத் தோண்ட புதையல் வராமல் நீர் வந்த வீடுகள் அதிகம். அதுவும் ஆற்றுப்படுகைக்கு அருகிலுள்ள வீடுகளில் பத்தடி தோண்டினால் நீர் வந்துவிடும். மழைக்காலங்களில் கிணறு நிரம்பி வழிவதைக் காண நந்துவிற்கு மிகவும் பிடிக்கும். ஆக, அந்த ஊரில் யாருக்கும் பிடிக்காத ஓரிடம் உண்டு என்றால் அது மயானம்தான். எல்லோரும் ஒரு நாள் அங்கு போய்த்தான் ஆக வேண்டும் என்பதை நந்து பின்னால் தெரிந்து கொண்ட போது நந்து உடைந்து போனான். வாழ்வின் அடிப்படையான கேள்விகள் புறம் தள்ளப்பட்டு, போலிச் சம்பிரதாயங்களும், மூடநம்பிக்கைகளும் அங்கு வளர்த்து எடுக்கப்பட்டன! ஏதாவது ஞான பூர்வமாகக் கேட்டால், ‘ஏண்டா வெட்டி வேதாந்தம் பேசிக்கொண்டு இருக்கிறாய்?’ என்று ஊர் சொல்லிவிடும். நந்துவிற்கு வேதாந்தம் என்றால் என்னவென்று தெரிந்திருக்க நியாயமில்லை. இந்திய மெய்யியல் பாடப்பயிற்சி என்பது துளியும் இல்லை. நசிகேதனுக்கு இருந்த வாய்ப்பு நந்துவிற்கு இல்லை. எனவே அங்கு அத்மபோதம் நிகழவில்லை. சடங்குகள் மண்டிக்கிடந்தன. கூடவே மூடநம்பிக்கைகளும்.
 
இப்பின்புலத்தில்தான் நந்துவின் ஆன்மீக வித்து பெரியார் ஈவேராவால் விதைக்கப்பட்டது. காலையில் எழுந்தவுடனேயே கோயில் சுவரில் நந்து காண்பது, ‘கடவுள் இல்லை! இல்லவே இல்லை! கடவுளை நம்புகிறவன் முட்டாள்!’ என்று அழிக்கமுடியாத கரிப்பட்டையாக எழுதப்பட்டிருக்கும். இதன் முரண்நகை அவனை இன்று கூட இம்சிக்கிறது. இல்லாத ஒன்றை இல்லை என்று சொல்வது பகுத்தறிவாகாது. இருப்பதைத்தான் இல்லையென்று சொல்ல முடியும். இப்பிரசாரத்திற்கு ஆதாரமாக நிற்பது பெரிய கோயில் சுவர். சிந்தனையின் முரண் தெள்ளத்தெளிவாக இப்பிரசாரத்தால் வெளிப்பட்டது. எங்கெல்லாம் சிந்தனை முரண் உள்ளதோ அங்கு குழப்பமும், தெளிவின்மையும் தாண்டவமாடும், பகுத்தறிவு மழுங்கிவிடும், மூடநம்பிக்கை வளரும் என்று ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி சொல்வதை நந்து பின்னால் கேட்கப்போகிறான். அந்தக் கிராமத்தில் இருந்த பெரிய மூடநம்பிக்கைகளில் ஒன்றாகப் பெரியார் பிரசாரமும் அமைந்துவிட்டது தமிழக முரண்நகை!
 
 
[ அருமையான விழியம். பதப்படுத்துதல் (social conditioning) என்பதைக் கணினிச் செயலி (சாஃப்ட்வேர்)யுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார். எப்படி நமது வாழ்வு சிந்தனை முரண்களால் ஆளப்படுகிறது என்பதையும் விளக்குகிறார். பின்னால் ஓடும் இசை உதவி என்பதைவிட உபத்திரவமாக் அமைந்துவிட்டது சோகம்]

N. Kannan

unread,
Sep 25, 2010, 11:09:05 PM9/25/10
to மின்தமிழ்

8.

You see to go into this one must have great humility; not humbleness, not sycophantism, not touching somebody's robes and saying 'I am very humble'. That quality of humility that has had no vanity, that has never known vanity. You understand? Otherwise it is not humility. Go into this carefully. Those who are vain, arrogant, full of their own importance and their own knowledge, their own realisation, and all that business, in that there is a sense of self-importance. And that state of mind then cultivates humility. Haven't you known all this? So a mind that has known vanity in any direction - scientifically, religiously, politically, the sense of achievement which gives one a great self-importance and arrogance - such a mind can never comprehend a quality which is totally free of vanity. We are meeting all this?

Intelligence, Love and Compassion http://www.jkrishnamurti.com/krishnamurti-teachings/view-text.php?tid=1336&chid=1035

J. Krishnamurti

Sixth Public Talk in Saanen

July 1979

 

பென்குயின் வெளியிட்டிருந்த ‘வாசகர் கிருஷ்ணமூர்த்தி’ என்ற நூலை முதன்முறையாக நூலகத்தில் பார்த்த போது நந்துவினால் உடனே ஈர்க்கப்பட்டு உள்ளே நுழைய முடியவில்லை. அப்புத்தகம் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் இருந்தது. நந்து அதிகமாக நான்பிக்‌ஷன் என்று சொல்லக்கூடிய புதினமல்லாத எழுத்துக்களை ஆங்கிலத்தில் வாசித்ததில்லை. சிந்தனையைத் தொடர்ச்சியாக ஆங்கில மொழி மூலம் நிறுத்துவது கடினமாக இருந்தது. ஆங்கிலம் அவன் வாழ்வில் மெல்லப் புகுந்து ஆளுமை செலுத்தத் தொடங்கியிருந்தும் அறிவியல் அல்லாத பிற துறைகளில் ஆங்கிலம் கொண்டு காலூன்றப்பழகவில்லை இன்னும். மேலும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் ஆங்கில நடை, நாவல்களில் படிக்கும் எளிய நடையல்ல. அது வேறொரு அறிவியல் நடையாக இருந்தது. புதிய உளவியல் கலைச் சொற்கள், குழூமக்குறியீடுகள். ஆங்கில அறிவியல் ஜார்கனே (கலைச்சொல்) இன்னும் கற்றுக் கொள்ள நிறைய இருந்த போது வேறொரு துறைக்குள் புகுந்து புதிய கலைச் சொற்களையும், அதன் ஆழ்பொருளையும் நோக்கும் காலவசதி நந்துவிடம் அப்போது இல்லை.

இரண்டாவதாக, அவன் வளர்ந்த சூழலில் வேதாந்த விசாரமோ, தத்துவ விசாரங்களோ சுத்தமாக இல்லை. கிராமத்தின் வாழ்வு சில கட்டங்களுக்குள் மீறாமல் சுற்றிக்கொண்டு இருந்தது. பக்மினிஸ்டர் ஃபூலர் எனும் அமெரிக்க விஞ்ஞானி, தத்துவப் பேராசிரியர், கவிஞர், பொறிஞர் சொல்லுவார், ‘எப்போது நான் ஒரு சுழற்சியின் நடுவில் இருக்கிறேன் என்று உணர்கிறேனோ அப்போதே அதிலிருந்து வெளியே குதித்துவிடுவேன்’ என்று. கிராமத்தில் அப்படி எந்த முயற்சியும் இருந்த மாதிரித் தெரியவில்லை. இருக்கின்ற வட்டத்தைவிட்டு வெளியே குதி என்று உரத்துச் சொல்லிக் கொண்டிருந்தவர் ஈ.வே.ரா பெரியார் ஒருவர்தான்.

மூன்றாவதாக, தத்துவ விசாரத்திற்குள் மூழ்க மனப்பக்குவம் வேண்டும். சங்கரர், ஞான சம்பந்தர் போன்றோருக்கெல்லாம் இளமையிலேயே இறையருளால் பிரம்மஞானம் வந்துவிட்டது. ஆங்கிலப்பாட டிக்டேஷன் செய்து கொண்டிருந்த இரமணருக்கு ‘தான்’ செத்துவிட்ட உணர்வு திடீரெனத் தோன்றியது. அதன் பின் அவன் எளிமையான பள்ளி மாணவனாக வாழ முடியவில்லை. முப்புரி நூலை எறிந்துவிட்டு, கோவணாண்டியாகிப் போனான். ஜிட்டு கிருஷ்ணமூர்த்திக்கும் இளமையிலேயே சுடர்விடும் அறிவு கிட்டியிருந்தது. பிரம்மஞானத்தைவிட வாழ்வதற்கு வேறேதும் துணை இல்லை என்று ஆகிப்போனவர்கள் இவர்கள். ஆனால், ஒரு சாதாரண மத்தியதரக் குடும்பத்தில் பிறந்த நந்துவிற்கு சுவைத்து வாழ்வதற்கு ஆயிரம் விஷயங்கள் இருந்தன. இளமையின் உச்சத்திலிருந்த நந்துவிற்கு தான் வசீகரமாக இருப்பதை உணரும் போக்குடன் உலகம் வசீகரமானது என்பதும் புரிந்தது. பல்கலைக் கழக வாழ்வு அவனுக்குப் புதியதோர் சுதந்திரத்தை அளித்திருந்தது. வீட்டின் நான்கு சுவரிலிருந்தும், கண்காணிக்கும் கண்களிலிருந்தும் விடுதலை கிடைத்திருந்தது. அதுவரை அவன் முதல் வகுப்பில் தேறிப்பெற்ற கல்வியின் இறுமாப்பு நெஞ்சு பூரா இருந்தது. தமிழும், கவிதையும் அவனுக்குப் புதியதோர் அவதாரத்தை அளித்தன. தோளில் ஒரு ஜோல்னாப்பை, மூக்குக் கண்ணாடி, முகத்தில் குறுந்தாடி, தலையில் தொப்பி, கண்களில், ‘உலகம் தூசு’ எனும் பார்வை. கையில் புதுக்கவிதை, இவையே அப்புதிய அவதார லட்சணங்கள். நான் எல்லோரிலும் மாறுபட்டவன் எனும் எண்ணம் வலுவாக இருந்தது. உன்னிலிருந்து உலகம் என்பது மாறுபட்டதல்ல. நீயே உலகம் என்று சொல்லும் ஜே.கே எப்படி ‘இந்த’ நந்துவிடம் நெருங்க முடியும்?

ஆதிசங்கர பகவத்பாதாள் ‘பஜகோவிந்தம்’ பாடும் போது ‘யௌவன கர்வம்’ என்றொரு பயன்பாடு செய்வார். அகப்பாடு (ஈகோ) என்பதற்கும் உடல் வலுவிற்கும் நிறையத் தொடர்புண்டு. இளமையில் கர்வம் நிறைய இருக்கும். இது மனிதர்களுக்கு என்று மட்டுமில்லை, விலங்கிற்கும் பொருந்தும். இளமை தரும் பூரிப்பு ஒருவகையான கனவுலக மிதப்பைக் கொண்டுவர கால் தரையில் பாவினால் ஆச்சர்யம். அப்போது பெரியோர் பேச்சு காதில் படாது. கோயில் என்பது இளம் பெண்களைக் காணும் இடமாகத்தோன்றும். கல்லூரி என்பது பொழுது போக்கும் இடமாகப் பரிமளிக்கும். உலகமே உண்டு களிக்கத் தோன்றிய பீடமாகத் தோன்றும்.

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ‘நெஞ்சுக்கு நீதி’ வேண்டும் என்று ஆரம்பிப்பார். அது என்ன நெஞ்சுக்கு நீதி? சமூக விலங்காக மனிதன் தாக்குப்பிடிக்க வேண்டுமெனில் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்று பழகிக்கொள்ள வேண்டும். எல்லோருடைய ஈகோவும் இறுகிக்கட்டிப் போயிருப்பதால் அதனுடன் மோதாமல், அதற்கு இதமாகத் தடவிக் கொடுக்கப் பழக வேண்டும். அப்போதுதான் தனது ஈகோ குத்துப்படாமல் இருக்கும். இப்படி சொல்லுக்கும், செயலுக்கும் சம்பந்தமில்லாத ஒரு போக்கை சமூகம் நம்மிடம் வளர்த்துவிடுகிறது. அங்கு நெஞ்சுக்கு நீதி இல்லை. சமூகத்தில் பாசாங்குத்தனத்திற்கு ஒரு மதிப்புண்டு. அதுவொரு பிழைக்கும் உத்தி கூட. பாசாங்குத்தனம் இல்லாத மனிதர் என்று எவரேனும் உண்டோ? ஆனால், ஆன்மீகப் பயணத்தில் இதற்கு இடமில்லை. மற்றோருக்குப் போக்குக்காட்டலாம். தனக்கே போக்குக்காட்ட முடியுமோ? ஆனால், அதுதான் நடக்கிறது. பாசாங்கு செய்து பழகிய மனது தனக்கும் பாசாங்கு செய்துவிடுகிறது. அப்போது நெஞ்சுக்கு நீதி கிடைப்பதில்லை. ஜே.கேயின் பாதையில் காலடி வைப்பதற்கு முன் நெஞ்சுக்கு நீதியும், நாணயமும் வேண்டும். போக்கற்ற, புகலற்ற, வெளிப்படையான நேர்காணல் நிகழ வேண்டும். அப்போதுதான் சுயதரிசனம் கிட்டும். ஜேகே நெறியில் உட்புகும் போது கிடைக்கும் முதல் பரிசு, ஒரு பேயறை!! ஆம், அவர் ஒரு தூய, தெளிவான கண்ணாடி போல் நம்மிடம் உள்ளதை உள்ளபடி காட்டிவிடுவார். நமது பொய்மையும், பாசாங்குப்போக்கும், வஞ்சகமும், நேர்மையற்ற நெஞ்சும், குறுக்கு புத்தியும் வெளிச்சம் போட்டுக் காட்டப்படும். நாணிக்குறுகிச் சாக வேண்டிவரும். தன்னுள் சாதல் என்பது ஆன்றோர்களால் பாராட்டப்படும் ஒரு செயல். ஒன்று செத்தால்தான் புதியதொன்று பிறக்கும்!

ஆனால் நந்து இதற்கெல்லாம் தயாராக அப்போது இல்லை. தானொரு அறிவுஜீவி எனும் இறுமாப்பு மண்டிக்கிடந்தது. இது பெரும்பாலும் அவனது போட்டிகள் நிரம்பிய கல்வி வாழ்வு கொடுத்த வரம் என்றுதான் சொல்ல வேண்டும். ஜே.கேயைத் தொட்ட அந்த நந்துவிற்குள் ஒரு தாமரை மலர் மணம் வீசக்காத்திருந்தாலும், வாழ்வு அவனுக்கு இளமையிலே மிகக்கஷ்டமான பாடங்களைக் கற்றுக் கொடுத்திருந்தாலும், அதையும் மீறி சாட்டையடி வாங்கி மரத்துப் போகும் தோல் போல் போட்டிகள் நிரம்பிய வாழ்வு அவனை முரடனாக்கியிருந்தது. முரடன் என்றால் உடல் வலுவில் அல்ல. நாவினால் சுடும் வல்லமை அவனிடம் இருந்தது. கனியிருக்க காயையே உண்ணச்சொல்லி சமூகம் அவனைப் பதப்படுத்தி வைத்திருந்தது. எனவே, அவன் பக்குவப்படவில்லை. ஜேகே கிட்ட வந்தும் அவனிலிருந்து எட்ட நின்றார்.

http://www.youtube.com/watch?v=JKvz3BdB2EE

[கேள்வி என்பது பற்றி தமிழ் அறிவுடை உலகம் நிரம்பப் பேசுகிறது. ஆனால் நம்மில் பலருக்கு ஒருவர் சொன்னால் எப்படிக் கேட்பது என்றே தெரியவில்லை. கேட்பது ஒரு கலை. ஜே.கிருஷ்ணமூர்த்தியை முழுமையாகக் கேட்டாலே அவர் சொல்லும் ஞான மாற்றம் நம்முள் நிகழும். ஆனால் அதற்கு முன் கேட்பது எப்படி என்று கற்றுக் கொள்ள வேண்டும். மிக அருமையான விழியம்!]

devoo

unread,
Sep 25, 2010, 11:52:45 PM9/25/10
to மின்தமிழ்
>> அகப்பாடு (ஈகோ) என்பதற்கும் உடல் வலுவிற்கும் நிறையத் தொடர்புண்டு <<


முற்றிலும் உண்மை.

வெகு இயல்பான மனம் கவரும் நடை. அதனால்தான் பருந்து வட்டமிடாதா என்று
தினமும் பார்க்க வைக்கிறது போலும் !! நந்து எந்த கட்டத்தில்
கண்ணனாகப் போகிறான் என்று அறிந்துகொள்ளும் குறுகுறுப்பும் ஒருபக்கம்
இருந்து வருகிறது

தேவ்


On Sep 25, 10:09 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 8.
>
> You see to go into this one must have great humility; not humbleness, not
> sycophantism, not touching somebody's robes and saying 'I am very humble'.
> That quality of humility that has had no vanity, that has never known
> vanity. You understand? Otherwise it is not humility. Go into this
> carefully. Those who are vain, arrogant, full of their own importance and
> their own knowledge, their own realisation, and all that business, in that
> there is a sense of self-importance. And that state of mind then cultivates
> humility. Haven't you known all this? So a mind that has known vanity in any
> direction - scientifically, religiously, politically, the sense of
> achievement which gives one a great self-importance and arrogance - such a
> mind can never comprehend a quality which is totally free of vanity. We are
> meeting all this?
>

> Intelligence, Love and Compassionhttp://www.jkrishnamurti.com/krishnamurti-teachings/view-text.php?tid...
>
> *J. Krishnamurti*

> என்பது பொழுது போக்கும் இடமாகப் ...
>
> read more »

Madhurabharathi

unread,
Sep 26, 2010, 12:14:47 AM9/26/10
to mint...@googlegroups.com


2010/9/26 N. Kannan <navan...@gmail.com>

8.

பென்குயின் வெளியிட்டிருந்த ‘வாசகர் கிருஷ்ணமூர்த்தி’ என்ற நூலை

 
'Krishnamurhty Reader என்பதை ‘வாசகர் கிருஷ்ணமூர்த்தி’ என்று பெயர்த்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
 
ரீடர் என்பதற்கு ஒருவர் எழுதிய பலவகை எழுத்துக்களின் தொகுப்பு என்று ஒரு பொருள் உண்டு. இங்கே அதுதான் பொருந்தும்.
 
 a book of collected or assorted writings, esp. when related in theme, authorship, or instructive purpose; anthology: a Hemingway reader. 
 
அன்புடன்
மதுரபாரதி

N. Kannan

unread,
Sep 26, 2010, 12:55:14 AM9/26/10
to mint...@googlegroups.com
ஓம்! நன்றி.
 
கிருஷ்ணமூர்த்தி ரீடர் என்றால் கிருஷ்ணமூர்த்தியை வாசிக்க வசதியளிக்கும் தொகுப்பு என்று சொல்லும் அதே நேரத்தில் இப்புத்தகமே வாசகனாக நிற்கிறது. புத்தகத்துள் புகுந்துவிட்டால் நாமும் வாசகனே. ஒரு உருவகமாகப் பட்டது!
 
க.>

2010/9/26 Madhurabharathi <madhura...@gmail.com>

kalairajan krishnan

unread,
Sep 28, 2010, 2:33:34 AM9/28/10
to mint...@googlegroups.com
ஐயா கண்ணன் அவர்களுக்கு வணக்கம்
 
 அங்கு கொலை விழுந்தால் கூட இரண்டு நாள் கழித்துதான்
தெரியும். பல்வேறு வகையில் கொலை விழும். ஒரு நாள் எல்லோரும் கிசு, கிசு
என்று பேசிக்கொண்டிருந்தார்கள். முனீஸ்வரர் ஆல மரத்தில் ஒருவன்
தூக்கிட்டுத் தொங்குகிறான் என்று. நந்து தன் கோஷ்டியுடன் உடனே ஆற்றை
நோக்கி ஓடினான். இவனுக்கு ஆச்சர்யம் என்னவெனில் அந்த ஆலமரம் மிகவும்
சிக்கலான அமைப்புக் கொண்டது. மதிலைத்தாண்டி விழுதுகளை மண்மீது பாய விட்டு
சாய்ந்து நிற்கும் மரமிது. மதிலுக்கு உள்ளே, மரத்தடியில் முனீஸ்வரர்
சந்நிதி. மிகவும் சக்தி வாய்ந்த முனீஸ்வரர் என்று பெயர். அவரை மிதித்து
மரத்தில் ஏறி, இவன் தொங்கும் இடத்திற்கு வருவதற்குள் குளவி, தேள், தேனீ
இவை கொட்டி கீழே விழ வேண்டியிருக்கும் அல்லது கரடு முரடான வழுக்கு
மரத்தில் ஏறமுடியாமல் கீழே விழ வேண்டியிருக்கும். இவ்வளவு சிக்கலையும்
தாண்டி அவன் நடு மரத்திற்கு வந்து தூக்குப்போட்டுத் தொங்குகிறான்
 
அன்று திகில் ஆலமரம்,
இன்று
திருப்பூவணநாதரின் திருவருளால்
ஆலமரம் அகத்திக்கீரை விற்கும் இடமாக மாறிவிட்டது, 
அன்பன்
கி. காளைராசன்
DSC_0117.JPG

coral shree

unread,
Sep 28, 2010, 3:17:31 AM9/28/10
to mint...@googlegroups.com
அய்யா, சத்தியமான வார்த்தை அய்யா.......தங்கள் அனுபவப் பாடம் சத்தியம் அய்யா.......

2010/9/17 Innamburan Innamburan <innam...@googlemail.com>

coral shree

unread,
Sep 28, 2010, 3:18:39 AM9/28/10
to mint...@googlegroups.com
நானும் ஆமோதிக்கிறேன் அய்யா........

2010/9/17 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

N. Kannan

unread,
Sep 28, 2010, 5:33:06 AM9/28/10
to mint...@googlegroups.com
2010/9/28 kalairajan krishnan <kalair...@gmail.com>:

> அன்று திகில் ஆலமரம்,

> இன்று அகத்திக்கீரை விற்கும் இடமாக மாறிவிட்டது,


ஹ..ஹா..இது வெளியே இருந்து எடுத்த படம்தானே? ஏனெனில் முன்பு அந்தக்
குட்டி சந்நிதி கிடையாது. அதன் மேல்தான் தொங்கினான்!!

இப்படி ஊர் மாறிக்கொண்டே இருந்தால் பழைய பேய் பிசாசு எல்லாம் எங்கு போகும்? :-)))

க.>

N. Kannan

unread,
Oct 1, 2010, 9:49:39 PM10/1/10
to மின்தமிழ்
ஆலவட்டம் 8
 

”One wonders why in a place like this we are being educated - for what? What is the relationship between this institution and the world? What place has knowledge, whether it is scientific, biological, or physics and so on - what relationship has that knowledge towards the world? And throughout the world we are all being educated along various lines and with their disciplines; and we human beings have very little place in this world. So one must, I feel, ask why these elaborate years of study, acquiring great deal of knowledge, great effort, and where is it all ending up? What place your scientific, and other disciplines, have relationship, actual, with the existing world? The existing world - the world in which we live our daily life, whether in America, Russia, Europe, or in India or Japan, that very life is being threatened by war....”
 
J. Krishnamurti
 
 

பல்கலைக்கழக நூலகத்தில் அறிமுகமான ஜே.கிருஷ்ணமூர்த்தியை நந்து மறந்து போயிருந்த காலத்தில் அவரை மீண்டும் நினைவு படுத்தியவன் சுவாமிநாதன். சக ஆய்வாளர். ‘நந்து! நான் காலாற நடக்கும் போது சிந்தனையின் ஒரு கீற்றுக் கூட என்னுள் துளிர்க்காத வண்ணம், நடக்கப் பயில்கிறேன்’ என்று ஒரு குண்டைத்தூக்கிப் போட்டான். அது எப்படி முடியும்?
 
கல்லூரி நாட்களில் நந்துவின் மிக நெருங்கிய நண்பர்கள் என்று இருவர் உண்டு. ரகு எனப்படும் ரகுநாதன் இயற்பியல் மாணவர். ஒரு வருடம் சீனியர். அவனது தந்தை தீவிர சோவியத் பக்தர். எனவே சோவியத் வெளியீடாக வரும் அனைத்து அறிவியல் நூல்களையும் ரகு படித்திருப்பார். சோமு இவனது நேரடி சீனியர். உயிரியல் மாணவர். சோமுவின் கையில் கலை குடி கொண்டிருந்தது. டார்வின் நூற்றாண்டுவிழா அமெரிக்கன் கல்லூரியில் ஏற்பாடாகியிருந்த போது சோமு மிகப்பெரிய டார்வின் வாழ்க்கைச் சரிதப் படங்களை வரைந்து கொடுத்து கல்லூரியின் பெருமையைக் கூட்டியிருக்கிறார். வெறும் சோப்பு, சோமு கையில் கிடைத்துவிட்டால் அதுவொரு வள்ளுவனாக, மானாக, மீனாக மாறும். சோமு நெல் மணியில் கூட சிற்பம் செதுக்கியுள்ளான். இந்த மூவரும் தினமும் மாலையில் காலாற நடந்து கோ.புதூரிலிருந்து மூன்றுமாவடிவரை நடந்து வருவர். வழியில் ஏதாவது பொய்கை தென்பட்டால் இளைப்பாறுவர். எப்போதும் அறிவியல் விந்தைகள் பற்றிய சிந்தனைகள். பிரபஞ்ச விசாரம்.
 
இப்படி இருக்கும் போது சுவாமிநாதன் சிந்தனையே இல்லாது நடக்க வேண்டும் என்கிறானே? ஏனென்று நந்துவிற்குக் குழப்பம். பின்னால் ஜே.கேயின் நூல்களை வாசித்த போதுதான் காரணம் புரிந்தது. ஜே.கே தினமும் நடை பயிலும் போது, ‘இற்றைத் தியான முறையாக’ (’now’ consciousness) சிந்தனைகள் இல்லாமல் முழுக்கவனமும் அந்த நொடியில் நடக்கும் நிகழ்வுகளுக்கு என்று இருப்பாராம். அதைப்படித்த பின் சுவாமியும் இப்படி முயன்று இருக்கிறான். அவன் எல்லாவற்றையும் லிட்டிரலாக எடுத்துக் கொள்வான். மதுரை அண்ணா நகரிலிருந்து தினமும் நாகமலை புதுக்கோட்டைவரை (30 கிமீ தூரம்) வரும் வழியில் வாக்மேன் இசையில் ஜேசுதாசின் பாடல்களைக் கேட்டு கொண்டு வருவான். காது பூரா இசை இருக்கும் போது வாய் சும்மா இருக்குமா? பாடத்தானே செய்யும்! ஆனால், இசையின் லயம் நெஞ்சை நிரப்பியிருக்கும் வேளையில் சுவாமி பாடுவது ஜேசுதாஸ் பாடுவது போலவே படுவதில் ஆச்சர்யமில்லைதான்! வந்தவுடன் சொல்லுவான், ‘நந்து, நான் ஜேசுதாஸ் போலவே பாடுவேன் தெரியுமோ?’ என்பான். எங்கே பாடிக்காட்டேன் என்றால்! அவன் குரலுக்கும், ஜேசுதாஸ் குரலுக்கும் ஏணி வைத்தும் எட்டாத தூரம்! பின்? சுவாமி படிக்கும், கேட்கும் நிகழ்வுடன் தன்வயப்படுகிறான். அது போது, அவன் வாசிக்கும், கேட்கும் பொருளாகவே மாறிவிடுகிறான். அதனால்தான், அவன் நந்துவிடம் ‘சிந்தனை ஒன்றின்றியே நடமாடும் கலை’ பற்றி விரிவாகப் பேசியிருக்கிறான்.
 
ஜேகேயைப் பின்பற்ற முடியாத இன்னொரு கூற்றுமுண்டு. ஜே.கே கனவு காண்பதில்லை எனும் கூற்று அது. இதை எப்படி நிரூபிக்க முடியும்? ஒரு வருடத்தில் 60,000 கனவுகள் நாம் காண்கிறோம் என்பதொரு கணக்கு. தினமும் 10 கனவாவது வந்து போகுமாம். நமக்கு நினைவில் இருப்பதில்லை. ஆனால் ஜே.கே தன் வாழ்க்கை சரிதத்தில் தான் கனவு காண்பதில்லை என்று சொல்லியிருக்கிறார். அதாவது, திருமாலின் அரிதுயில் போன்ற ஒன்று எனும் பொருளில். அதாவது தூக்கமென்றில்லை. அப்போதும் விழிப்பு நிலைதான். ‘இற்றைத்தியானம்’தான். இதை எப்படி பின்பற்ற முடியும்? நந்துவோ ஓர் கனவுத் தொழிற்சாலை!
 
சுவாமியின் ஒன்றுவிட்ட சகோதரனும் அதே பல்கலைக் கழகத்தில் கலைத்துறை ஆய்வாளனாக இருந்தான். அவன் ஜே.கே நூல்கள் எல்லாம் கற்றுத் தேர்ந்திருந்தான். அவர்கள் குடும்பம் நகரில் மிகவும் அறியப்பட்ட குடும்பம். தாய் தந்தை இருவருமே பேராசிரியர்கள். நல்ல செல்வாக்கான குடும்பம். ஜே.கே இப்படி செல்வாக்கான பேர்களிடம் மிகவும் பிரபலமாகியிருந்தார். அவரை அன்னிபெசண்ட் எடுத்து வளர்த்து ஆளாக்கியதால் ஜே.கேயின் வட்டமென்பது இந்திய உயர் குடும்ப வட்டமாக் அமைந்துவிட்டது. அவரது போதனைகள் செல்லச் சீமாட்டிகளுக்கும், செல்வந்தர்களுக்கும் என்றாகிவிட்டது. தேவர்களுக்கு பிரகஸ்பதி அமைந்தது போல் இந்திய மேட்டுக்குடியினருக்கு ஜே.கே அமைந்துவிட்டார். இதற்கொரு முக்கிய காரணம் மேட்டுக்குடியின் ஆதர்ச மொழியாக ஆங்கிலம் இருந்தது. ஜே.கேயின் கல்வி முழுவதும் ஆங்கிலத்திலேயே அமைந்துவிட்டது!
 
சுவாமி ஒரு நாள், மதுரை சுந்தரம் ஹாலில் மகராஜபுரம் விஸ்வநாதன் கச்சேரி இருக்கிறது வருகிறாயா? என்றழைத்தான். நந்துவின் குடும்பத்தில் இசை எப்போதும் இருந்தது. அவனது தாய் கோகிலம் போல் பாடுவாள் என்று அவனது தாத்தா அப்படியே பெயர் வைத்துவிட்டார். அவனது சித்தியும் பாடுவாள். சகோதரிகள் பாடுவர். நந்துதான் அதில் விதிவிலக்கு. சினிமாப்பாட்டு கேட்கும் ஆசாமி. அவனது அத்தான் திட்டுவார். ‘ஏண்டா சினிமாப்பாட்டு கேட்டு கெட்டுப் போகிறீர்கள்! நல்ல சம்பிரதாய சங்கீர்த்தனம் கேளுங்களடா!’ என்று.
 
கதை இப்படி இருக்கும் போது சுவாமி அவனது ஒன்றுவிட்ட சகோதரனான தினேஷை அறிமுகப்படுத்திய போது அவன் ஆச்சர்யத்துடன், ‘அறிவியல் மாணவர்களுக்கு சங்கீத ஞானம் கூட வருமோ?’ என்றான். நந்துவிற்கு மகா கடுப்பு. அது என்ன அப்படியொரு இளக்காரம்? அறிவியல் மாணவன் கவிதை செய்யும் போது பாட்டறிவு ஏன் இருக்காது? தான் கவிதை செய்வதாக நந்து சொன்னான். எந்த மொழியில் என்று கேட்டான் தினேஷ். நந்துவிற்கு இக்கேள்வியே விநோதமாக இருந்தது. கவிதை என்றாலே தமிழ் என்பதுதான் அவன் வாழ்வு. ஆனால் தினேஷ் அதைக் கேள்விக் குறியாக்கினான்.  ஆங்கிலத்தில் எழுதுவதில்தான் திறமை உள்ளது என்பது போல் தினேஷ் பேசினான். தான் ஆங்கிலத்தில்தான் கட்டுரைகளும், கவிதைகளும் செய்வதாகச் சொல்லி, ஜே.கே பற்றி எழுதிய சில கட்டுரைகளை சுவாமி மூலம் கொடுத்தனுப்புவதாகச் சொன்னான். கிட்ட வந்த ஜே.கே மீண்டும் எட்டப் போய்விட்டார்! தினேஷின் கட்டுரைகள் நந்துவிற்கு ஜே.கேயை அறிமுகப்படுத்தாமல் அந்நியப்படுத்தின.
 
ஜே.கே இந்திய அறிவுஜீவிகளின் குரு என்பது அப்போதுதான் புரிந்தது! நந்து தமிழில் அறிவுஜீவி. ஆயினும் அது ஒரு குந்துமணி அளவு குறைவுதான் என்று தமிழக அறிவுலகம் அவனுக்கு சுட்டிக்காட்டியது!
 

N. Kannan

unread,
Oct 3, 2010, 12:01:07 AM10/3/10
to மின்தமிழ்
முன்கதைச் சுருக்கம்:
 
நந்து ஒரு கிராமத்துச் சிறுவன். அவனது வாழ்வு மெல்ல, மெல்ல, கிராமம் தாண்டி நகரம் வந்து, பின் நாடு தாண்டி, கண்டங்கள் தாண்டி பயணப்பட்டபோது ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி எனும் சிந்தனையாளரை அறிந்து கொள்கிறான். அந்த அறிதல் அவன் வாழ்விற்கு பொருள் சொல்லியது. அவனது தேடலை உச்சப்படுத்தியது. இத்தொடர்பு தற்செயலாக நடந்ததா? இல்லை பல்வேறு நிகழ்ச்சிகளுக்குப் பின் ஒரு மறை தொடர்பு உள்ளதா? எனக்காண விழையும் தொடர் இது. 60 களில் ஆரம்பித்து 2010 வரை நீளும் கதை. அக்காலக்கட்டத்தின் பதிவாக மலர்கிறது. அக, புறப் போராட்டங்கள் பதிவாகின்றன. துணை போகும் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் விழியங்கள், நேர்காணல்கள், புத்தக மேற்கோள்கள் இம்முயற்சியில், இத்தேடுதலில் ஈடுபடும் வாசகனை நந்து அடைந்த புரிதலுக்கு இட்டுச் செல்கிறது. நமக்குத்துணை நாமே. ஏனெனில் இங்கு ஆராயப்படும் பொருளும், ஆராய்பவனும் ஒன்றே. இத்தொகுப்பு ‘கவினுலகம்’ வலைப்பதிவில் தொடர்ந்து வலையேறுகிறது.
 
 
10

Most of us are frightened of dying because we don't know what it means to live. We don't know how to live, therefore we don't know how to die. As long as we are frightened of life we shall be frightened of death. The man who is not frightened of life is not frightened of being completely insecure for he understands that inwardly, psychologically, there is no security. When there is no security there is an endless movement and then life and death are the same. The man who lives without conflict, who lives with beauty and love, is not frightened of death because to love is to die.

From: p. 75-77, Jiddu Krishnamurti, Freedom from the known, 1969  

நந்து போன்ற ஆய்வாளர்களின் கனவு அக்காலத்தில் அமெரிக்காவாக இருந்தது. நந்து படித்த கல்லூரி அமெரிக்கப் பாதிரிகள் ஆரம்பித்து வைத்த கல்லூரி. இவனது ஆங்கில விரிவுரையாளர் ஒரு அமெரிக்கர். இளைஞர். தனது மனைவியுடன் இவன் வாழ்ந்த கோசாகுளம் புதூரில் குடியிருந்தார். இருந்த காலங்களில் அவர் தமிழ் கற்று தினத்தந்தி வாசிக்கும் அளவிற்கு முன்னேறியிருந்தார். அறிவியல் புலத்தின் மேலாண்மையும் அமெரிக்கப் பேராசிரியர் ஒருவரிடமே இருந்தது. எனவே அமெரிக்கக்கனவு என்பது நந்துவிற்குப் புதிதல்ல. இந்திய சமுதாயம் மிகவும் கட்டுபெட்டித்தனமாக இருந்ததாக இவனும், இவனது சகாக்களும் கருதினர். அமெரிக்கா இவர்கள் எதிர்பார்க்கும் சுதந்திரத்தை வழங்குமென்று நம்பினர். சுவாமிநாதன் அவ்வாழ்வின் இன்னோரு கோணத்தை இப்படிக் காண்பான். ‘நந்து, சும்மா அமெரிக்காவில் போஸ்ட்டாக்காக இரண்டு வருடம் இருந்து ஒரு ஐந்து லட்சம் ரூபாய் சம்பாதித்துவிட்டு, இந்தியா திரும்பிவிட வேண்டும்’ என்பான். ஆனால், அமெரிக்கா போன இவன் சகாக்கள் யாரும் அப்படித் திரும்பவில்லை. காரணம் அமெரிக்காவின் வளமும், சௌகர்யமும் நம்மை இந்தியாவிற்கு மீட்டுவிடாது. சுஜாதா சொன்னது போன்று அமெரிக்கா எளிதாக ஒருவனைக் கடனாளியாக்கிவிடும். அங்கு கடன் வாங்குவது எளிது. வாங்கிய கடனைக் கட்ட ஒரு வாழ்நாள் போதாது. இப்படி அங்கு போய் கடன் வலையில் சிக்கிக்கொண்ட இந்தியர்கள்தான் அதிகம். ஆயினும் மோகம் என்பது குருடு. நந்துவின் கனவும் அமெரிக்கா செல்வதிலேயே இருந்தது.

ஆயினும் அமெரிக்கா செல்வதற்கு குறைந்த பட்ச தகுதியாக முனைவர் பட்டம் அக்காலத்தில் இருந்தது. இங்குள்ள முதுகலைப் பட்டம் அங்கு ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. எனவே அங்கு போய் மீண்டும் முதுகலை வகுப்பில் உட்கார நந்துவின் செட்டில் யாருக்கும் விருப்பமில்லை. எனவே கஷ்டமோ, நஷ்டமோ இந்தியாவில் எப்படியாவது ஒரு டிகிரியை வாங்கிவிட்டுப் பறந்துவிட வேண்டும் என்பதே எல்லோரின் கனவாக இருந்தது. இது முதல் பெரும் தடை. ஏனெனில் முனைவர் பட்டம் வாங்குவது சில துறைகளில் எளிதாக இருந்தது. பேராசிரியரின் பல்துறை செல்வாக்கு அதற்கு வெகுவாக உதவியது. செல்வாக்கில்லாத பேராசிரியர்களிடம் மாட்டிக்கொண்டவர்கள் படித்துப் படித்து தலை வழுக்கையாகி முதுமையுற்றதுதான் மிச்சம். எனவே, அநேக குடும்பங்கள் இப்படி முனைவர் பட்டம் வாங்கப் போகும் பிள்ளைகளுக்கு மணமுடிக்க முடியாத பெரிய சிக்கலில் இருந்தன. நந்துவின் குடும்பத்திலும் இப்பேச்சு தலை தூக்கினாலும், அதற்கு முன் நந்து தாண்ட வேண்டிய பெரிய தடங்களாக அவனது சகோதரிகள் திருமணம் இருந்தது. பெற்றோர் அற்ற, பிராமண குடும்பத்தில் ஒரு பெண்ணிற்கு வரன் பார்த்து மணம் முடிப்பது என்பது குதிரைக் கொம்பாக இருந்தது. நந்துவோ வீட்டின் இளைய பிள்ளை. படிப்பு தவிர வேறு அறிவு அற்றவன். ஆனால் அதற்காகப் பொறுப்பைத் தட்டவும் முடியாது. எனவே நந்து அமெரிக்கக் கனவை ஒத்தி போட வேண்டியிருந்தது. நூறு பேருக்கு எழுதினால் இரண்டு பேரிடமிருந்து பதில் வரும். அதில் பெரும் நம்பிக்கை வைத்து அடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கடிதங்கள் பேராசிரியர்கள் கண்ணில் பட்டுவிடக்கூடாது. ஏனெனில் அவர்களுக்கு உழைக்கும் ஒரு கை குறைந்துவிடும் என்ற அச்சமுண்டு. எனவே போர்க்கால ரகசிய நடவடிக்கை போல் எல்லாம் கச்சிதமாக முடிய வேண்டும். ஆனாலும் காட்டிக் கொடுத்துவிடும் ஒரு அபாயம் அமெரிக்க கான்சுலேட்டிடம் இருந்து வரும். நேர்காணலுக்குச் சென்னை செல்ல வேண்டும்.   சில நேரங்களில் பட்டமேற்படிப்பு செய்யும் பேராசிரியரின் சான்றிதழ் கேட்கும் வழக்கமும் உண்டு! அமெரிக்கன் கான்சுலேட்டில் அங்கு போய் மனுப்படிவம் வாங்குவதே பெரிய வேலை. காலை 5 மணிக்கெல்லாம் வாசலில் வரிசையிருக்கும். அலுவலகம் திறப்பதோ 10 மணி. இவ்வளவு கஷ்டப்பட்டு மனுவெல்லாம் கொடுத்தாலும் விசாக் கிடைக்குமென்பதற்கு எந்தவித உத்திரவாதமும் கிடையாது. இந்தியர்களை அமெரிக்காவின் சுமை என்றே அவ்வரசாங்கம் கருதியது. இங்கிருந்து வருபவன் எவனும் திரும்ப இந்தியா போகமாட்டான் என்பது அவர்களுக்குத் தெரியும். எனவே விசா தட்டிக் கழிக்கப்படுவதே அக்காலக்கட்ட வழக்கம்.

நாட்சி வதை முகாமில் கஷ்டங்களுடன் வாழ்ந்த எல்லோருக்குள்ளும் ஒரு பரஸ்பர நட்புறவு இருந்தது. அது எல்லோரும் சாகப்போகிறோம் எனும் உணர்வால் வந்ததல்ல. விடிவு நிச்சயம் ஒரு நாள் வரும் எனும் நம்பிக்கையால் வந்தது. வதை முகாம்களில் திருமணங்கள் கூட நடந்து முடிந்தன. நந்துவின் சகாக்களுக்குள் இப்படியான ஒரு பரஸ்பர நட்பு இருந்ததற்கு அடிப்படைக் காரணம், இத்தனை கஷ்டங்களுக்கும் விடிவாக அமெரிக்க விசா ஒரு நாள் கிடைத்துவிடும் எனும் நம்பிக்கைதான்.

ஆனால் கொத்தடிமை வாழ்வு இவர்களைச் சுண்டக் காய்ச்சியது. நந்து எவ்வளவு ரகசியமாக நடந்து கொண்டாலும், பேராசிரியர்களுக்குத் தெரியாமல் அங்கு ஒரு காரியமும் நடப்பதில்லை. எனவே, பட்டம் இன்னும் பெறாத நிலையில், கிடைத்துவிடும் எனும் நம்பிக்கையில் நந்து தொடர்பு கொண்ட அமெரிக்கப் பல்கலைக் கழகமொன்றின் முகவரியை இவன் பேராசிரியர் பெற்றுவிட்டார். அந்த வெளிநாட்டுப் பேராசிரியர் இவரிடம் நந்து பற்றி நற்சான்றிதழ் கேட்டிருந்தார். இவர் சான்றிதழ் வழங்காமல், அவனுக்கு பட்டம் கிடைக்க நாளாகும், ஆனால் தன்னால் அங்கு ஒரு வருடம் வரமுடியும் என்று எழுதிப் போட்டு, இவன் வாயில் மண்ணைப் போட்டுவிட்டு அவர் அமெரிக்கா பறந்துவிட்டார். நந்து மிகப்பின்னால்தான் காரியரதரிசி ராதா மூலம் அறிந்து கொண்டான். அவன் பட்ட மனக்கஷ்டத்தை சொல்லி மாளாது. ஆனால், பல்கலைக்கழகம் என்பது ஆப்பிரிக்க சிரங்கட்டி வனவிலங்கு சரணாலயம் போல் இருந்தது. வல்லமை உடையதும், ரகசியமாக தாக்காக்கூடியதும், நயவஞ்சகம் நிரம்பியதும் எப்போதும் வென்று கொண்டே இருந்தன. நந்து போன்ற வெள்ளந்திகள் மாடு போல் உழைத்துக் கொண்டு இருந்தனர்.

இந்தக் காலக்கட்டத்தை நந்து வேறொரு வகையில் பயனுள்ளதாக மாற்றினான். தனது சகோதரிகளுக்கு தீவிரமாக மாப்பிள்ளை தேட ஆரம்பித்தான். கிராமப்புறத்தில், ‘முன்னப்பின்ன செத்து இருந்தாத்தானே சுடுகாடு தெரியும்!’ என்பார்கள். அது போல் முன்னப் பின்ன கல்யாணம் செய்வித்திருந்தால் அல்லவோ இவனுக்கு முன் அனுபவம் இருக்கும். இவனோ வாயில் வெள்ளிக்கரண்டியுடன் பிறந்தவன். பெற்றோராலும், சகோதரிகளாலும் சீராட்டப் பெற்றவன். இவன் அறிந்த கல்யாணம் இவனது இரண்டாவது பெரிய சகோதரியின் கல்யாணம். அப்போது தாய், தந்தையர் இருந்தனர். கவலையற்ற வயது. செட்டியார் விடுதியில்தான் நடந்தது. மூன்று நாள் கல்யாணம். வெளியூரிலிருந்து உறவுகளெல்லாம் வந்திருந்தனர். ஊரார் வீட்டுக் கல்யாணம் போல் தயங்கித் தயங்கி கேட்க வேண்டியதில்லை. நேரடியாக அடுப்பறைக்குள் போய் வேண்டிய பக்ஷணங்கள் தயாராகும் போதே சாம்பிள் பார்க்க முடிந்தது. கூம்பு, கூம்பாக வைத்து அதன் சுவை எப்படியிருக்கும் என்றறியாத பக்ஷணவகையின் சுவையெல்லாம் அறிய முடிந்த கல்யாணம். அதிலும் கொஞ்சம் டென்ஷன் இருந்தது. லஞ்ச ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கு யாரோ வேண்டாத தகவல்கள் தந்துவிட கல்யாணச் செலவுகள் பற்றிய தகவல்களை தந்தையார் காண்பிக்க வேண்டிய நிர்பந்தம். அக்காலத்தில் நேர்மை இன்னும் கொஞ்சம் இருந்தது. அரசு லஞ்ச ஊழல் பற்றி கவலைப்பட்டது. ஆயினும் அவையெல்லாம் பெரியோர் விஷயங்கள். அவை நந்துவை பாதிக்கவில்லை. நந்து முதன் முறையாக மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்தில் வேடிக்கை பார்த்து, மாப்பிள்ளை ஊர்வலக் காரின் பின்னால் ஓடும் சிறுவனாக இல்லாமல், அந்தக் காரில் மாப்பிள்ளைக்கு அருகில் பயணிக்கும் ஒருவனாக அமர்ந்திருந்து அனுபவித்த காலம்.

அவையெல்லாம் வெறும் கனவாய் பழம் கதையாய் போனது இப்போது! யார் கண்கள் பட்டதோ! சீரும், சிறப்புமாக இருந்த குடும்பம் குலைந்து போனது! மகளைக்கண்டுவரச் சென்ற தந்தை மீண்டும் உயிருடன் திரும்பவில்லை! ஆஸ்பத்திரியிலிருந்து அள்ளிப்போட்டுக்கொண்டு வந்து சேர்ந்த இரவை நந்துவால் எப்படி மறக்க முடியும்? இரவெல்லாம் தூங்காமல், அண்ணா முழித்துவிடுவார் என்று அவர் கண்களையே பார்த்துக் கொண்டிருந்த மணித்துளிகள் மறக்குமா? அடிக்கொருதரம் கக்கத்துள் கை வைத்து ‘இன்னும் சூடு இருக்கு! தூங்கறது போலத்தானே இருக்கார், முழித்துவிடுவார்!’ என்று சகோதரிகள் சொல்லச் சொல்லச் குடும்பமே காத்திருந்தது, அண்ணா முழித்துக் கொள்வார் என்று. அவரது பயணம் மீண்டும் விழித்துக் கொள்ளாத பயணமென்று அவர்கள் அறியவில்லை. அந்த வீட்டில் விழுந்த முதல் சாவு அது. யாருக்கும் அனுபவமே இல்லை. இதை எப்படி எதிர் கொள்வது என்று! வனவிலங்குகளிலிருந்து மனிதன் வரை, சாவு என்பதை எப்படி எதிர்கொள்வது என்று எவையுமே விளங்கிக்கொள்ளவில்லை. இறந்து போன குரங்குக்குட்டி தோல் அழிந்து எலும்பாகிப் போகும்வரை தூக்கி அலைந்த குரங்கின் கதையை பின்னால் நந்து அறியப்போகிறான். ஆனால் அன்று அறியவில்லை. அன்று இரவுதான் அழுதான் என்றில்லை. நாட்கணக்காக அழுதான். வருடக்கணக்காக அழுதான். கண்ணீர் வற்றும்வரை அழுதான். ஒரே ஆறுதல் இவன் மட்டும் அழவில்லை. இவன் குடும்பமே கூட அழுதது. ஒரு சில நாட்கள் ஊர் கூட அழுதது! அவ்வளவு நல்ல மனிதர். இப்படி திடீரென்று போய்விட்டாரே! என்று. ‘இன்னும் நிலைத்து மூன்று இலை விடவில்லை. அதற்குள் இந்தக் குடும்பத்திற்கு இப்படி ஆகிவிட்டதே!’ என்று.

அதன் பின் மரணம் என்பது நந்துவிற்குப் பழகிப்போனது. இவனது தாத்தாவை எல்லோரும் கரிச்சுக்கொட்டியே அனுப்பி வைத்தனர். பின் சகோர பக்ஷி போல், சகாவின் பிரிவு தாங்காமல் தாய், பின் சிறிய தந்தை என்று ஒவ்வொருவராக போய்ச்சேர, மங்களம் நிரம்பி வழிந்த வீடு, அமங்கலமாகிப்போனது! அந்த வீட்டில் வாழ யாருக்கும் பிடிக்கவில்லை. மெல்ல, மெல்ல பெரிய அக்காவுடன் மதுரைக்கு குடி பெயர்ந்தனர். கிராமத்து நந்துவின் நகர நந்துவாக மாறிய காலக்கட்டம். அதுவரை ஆங்கிலம் பேசாத நந்து, முதன்முறை ஆங்கிலம் பேசப்பழகிய காலம். நான்கு தெருவிற்கு மேல் அறிந்திராத நந்து பெரிய நகரத்திற்குள் உலா வந்து, பெரிய கனவுகள் காணத் தொடங்கினான். ஒரு தந்தையின் பொறுப்பில் இரு சகோதரிகளுக்கு திருமணம் செய்வித்தான். அப்போதுதான் தெரிந்தது, ‘வீட்டைக் கட்டிப்பார்! கல்யாணம் நடத்திப்பார்!’ எனும் பழமொழியின் பொருள். கல்யாணம் என்பது எளிதான செயல் அல்ல. அது மனித ஊடகத்தின் புரியாத பல பரிமாணங்களுள் புகுந்து புறப்படும் சிக்கலான பயணம். நந்து முதன் முறையாக ஊர், ஊராக அலைந்தான். விசித்திர மனிதர்களைக் கண்டான். விசித்திரமான பேரங்களைப் பேசினான். கல்யாணம் என்பது சற்றேறக்குறைய ஒரு வியாபாரம் போல் நடைபெறும் தமிழக முறைமை கண்டு விசித்து நின்றான். இப்படிக் கூட மனிதர்கள் இருப்பார்களா? என்று முதன்முறையாக அறிந்து கொண்ட அனுபவங்கள். இரண்டு கல்யாணமும் முடிந்த போது நந்துவுள் வாழ்ந்து வந்த சிறுவன் காணாமல் போயிருந்தான். கண்ணாடி முன் பார்த்த போது தலையெல்லாம் நரைத்து அறுபது வயது கிழவன் போல் தோன்றினான்.

அவையெல்லாம் கிருஷ்ணமூர்த்தி அவனுடன் இல்லாத காலங்கள்.

<

embed id=VideoPlayback src=http://video.google.com/googleplayer.swf?docid=6765607872406834873&hl=en&fs=true style=width:400px;height:326px allowFullScreen=true allowScriptAccess=always type=application/x-shockwave-flash> </embed>

Tthamizth Tthenee

unread,
Oct 3, 2010, 1:30:39 AM10/3/10
to mint...@googlegroups.com
நந்துவுள் வாழ்ந்து வந்த சிறுவன் காணாமல் போயிருந்தான். கண்ணாடி முன் பார்த்த போது தலையெல்லாம் நரைத்து அறுபது வயது கிழவன் போல் தோன்றினான்.
அவையெல்லாம் கிருஷ்ணமூர்த்தி அவனுடன் இல்லாத காலங்கள்.
 
நாம் விழித்துக்கொள்ளும்போது  காலம் கடந்துவிடுகிறது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/10/3 N. Kannan <navan...@gmail.com>

நந்துவுள் வாழ்ந்து வந்த சிறுவன் காணாமல் போயிருந்தான். கண்ணாடி முன் பார்த்த போது தலையெல்லாம் நரைத்து அறுபது வயது கிழவன் போல் தோன்றினான்.

அவையெல்லாம் கிருஷ்ணமூர்த்தி அவனுடன் இல்லாத காலங்கள்.

Subashini Tremmel

unread,
Oct 3, 2010, 2:50:28 AM10/3/10
to mint...@googlegroups.com
பிரமிக்க வைக்கும் எழுத்து.  கதையோடு ஒன்றிச் சென்று நந்துவையும் அவன்  சோகத்தையும் நேரே பார்த்து கலங்க வைத்து விட்டது இந்தப் பகுதி.   
-சுபா
2010/10/3 N. Kannan navan...@gmail.com
...

completely insecure for he understands that inwardly, psychologically, there is no security. When there is no security there is an endless movement and then life and death are the same. The man who lives without conflict, who lives with beauty and love, is not frightened of death because to love is to die.

From: p. 75-77, Jiddu Krishnamurti, Freedom from the known, 1969 

நாட்சி வதை முகாமில் கஷ்டங்களுடன் வாழ்ந்த எல்லோருக்குள்ளும் ஒரு பரஸ்பர நட்புறவு இருந்தது. அது எல்லோரும் சாகப்போகிறோம் எனும் உணர்வால் வந்ததல்ல. விடிவு நிச்சயம் ஒரு நாள் வரும் எனும் நம்பிக்கையால் வந்தது. வதை முகாம்களில் திருமணங்கள் கூட நடந்து முடிந்தன. நந்துவின் சகாக்களுக்குள் இப்படியான ஒரு பரஸ்பர நட்பு இருந்ததற்கு அடிப்படைக் காரணம், இத்தனை கஷ்டங்களுக்கும் விடிவாக அமெரிக்க விசா ஒரு நாள் கிடைத்துவிடும் எனும் நம்பிக்கைதான்.

 

முழித்துவிடுவார்!’ என்று சகோதரிகள் சொல்லச் சொல்லச் குடும்பமே காத்திருந்தது, அண்ணா முழித்துக் கொள்வார் என்று. அவரது பயணம் மீண்டும் விழித்துக் கொள்ளாத பயணமென்று அவர்கள் அறியவில்லை. அந்த வீட்டில் விழுந்த முதல் சாவு அது. யாருக்கும் அனுபவமே இல்லை. இதை எப்படி எதிர் கொள்வது என்று! வனவிலங்குகளிலிருந்து மனிதன் வரை, சாவு என்பதை எப்படி எதிர்கொள்வது என்று எவையுமே விளங்கிக்கொள்ளவில்லை. இறந்து போன குரங்குக்குட்டி தோல் அழிந்து எலும்பாகிப் போகும்வரை தூக்கி அலைந்த குரங்கின் கதையை பின்னால் நந்து அறியப்போகிறான். ஆனால் அன்று அறியவில்லை. அன்று இரவுதான் அழுதான் என்றில்லை. நாட்கணக்காக அழுதான். வருடக்கணக்காக அழுதான். கண்ணீர் வற்றும்வரை அழுதான். ஒரே ஆறுதல் இவன் மட்டும் அழவில்லை. இவன் குடும்பமே கூட அழுதது. ஒரு சில நாட்கள் ஊர் கூட அழுதது! அவ்வளவு நல்ல மனிதர். இப்படி திடீரென்று போய்விட்டாரே! என்று. ‘இன்னும் நிலைத்து மூன்று இலை விடவில்லை. அதற்குள் இந்தக் குடும்பத்திற்கு இப்படி ஆகிவிட்டதே!’ என்று.

...

 

முதன்முறையாக அறிந்து கொண்ட அனுபவங்கள். இரண்டு கல்யாணமும் முடிந்த போது நந்துவுள் வாழ்ந்து வந்த சிறுவன் காணாமல் போயிருந்தான். கண்ணாடி முன் பார்த்த போது தலையெல்லாம் நரைத்து அறுபது வயது கிழவன் போல் தோன்றினான்.

அவையெல்லாம் கிருஷ்ணமூர்த்தி அவனுடன் இல்லாத காலங்கள்.

<

embed id=VideoPlayback src=http://video.google.com/googleplayer.swf?docid=6765607872406834873&hl=en&fs=true style=width:400px;height:326px allowFullScreen=true allowScriptAccess=always type=application/x-shockwave-flash> </embed>

--

N. Kannan

unread,
Oct 3, 2010, 5:14:30 AM10/3/10
to mint...@googlegroups.com
2010/10/3 Subashini Tremmel <ksuba...@gmail.com>

>
> பிரமிக்க வைக்கும் எழுத்து.  கதையோடு ஒன்றிச் சென்று நந்துவையும் அவன்  சோகத்தையும் நேரே பார்த்து கலங்க வைத்து விட்டது இந்தப் பகுதி.
> -சுபா


நன்றி சுபா. அது இன்னும் விரிவாக எழுத வேண்டிய பகுதி. ஆயின் இக்கதையின்
கருவிற்கு இவ்வளவு போதும் என்று நினைக்கிறேன். மரணத்தைப் புரிந்து
கொள்பவன் வாழ்கிறான்.

க.>

devoo

unread,
Oct 3, 2010, 6:13:15 AM10/3/10
to மின்தமிழ்
உயிரோட்டமுள்ள நடை.
சுருங்கச் சொன்னாலும் சோகத்தின் ஆழத்தை உணரச் செய்து விட்டீர்கள்.
மனம் கனத்தது

தேவ்

On Oct 2, 11:01 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
>  *முன்கதைச் சுருக்கம்*:


>
> நந்து ஒரு கிராமத்துச் சிறுவன். அவனது வாழ்வு மெல்ல, மெல்ல, கிராமம் தாண்டி
> நகரம் வந்து, பின் நாடு தாண்டி, கண்டங்கள் தாண்டி பயணப்பட்டபோது ஜிட்டு
> கிருஷ்ணமூர்த்தி எனும் சிந்தனையாளரை அறிந்து கொள்கிறான். அந்த அறிதல் அவன்
> வாழ்விற்கு பொருள் சொல்லியது. அவனது தேடலை உச்சப்படுத்தியது. இத்தொடர்பு
> தற்செயலாக நடந்ததா? இல்லை பல்வேறு நிகழ்ச்சிகளுக்குப் பின் ஒரு மறை தொடர்பு
> உள்ளதா? எனக்காண விழையும் தொடர் இது. 60 களில் ஆரம்பித்து 2010 வரை நீளும் கதை.
> அக்காலக்கட்டத்தின் பதிவாக மலர்கிறது. அக, புறப் போராட்டங்கள் பதிவாகின்றன.
> துணை போகும் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் விழியங்கள், நேர்காணல்கள், புத்தக
> மேற்கோள்கள் இம்முயற்சியில், இத்தேடுதலில் ஈடுபடும் வாசகனை நந்து அடைந்த
> புரிதலுக்கு இட்டுச் செல்கிறது. நமக்குத்துணை நாமே. ஏனெனில் இங்கு ஆராயப்படும்
> பொருளும், ஆராய்பவனும் ஒன்றே. இத்தொகுப்பு

> ‘கவினுலகம்<http://emadal.blogspot.com/>’

> வைத்து அடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கடிதங்கள் பேராசிரியர்கள் ...
>
> read more »

N. Kannan

unread,
Oct 3, 2010, 7:13:35 AM10/3/10
to mint...@googlegroups.com
நன்றி, தேவ்.
 
அத்தியாயம் ஒன்று திருப்பூவணப்படலம். மரணம் நந்துவை விரட்டுகிறது. ஜே.கேயின் வாழ்வுடன் சில ஒற்றுமைகள் உள்ளன. அவரது சகோதரர் நித்யாவின் மரணம் அவரை முற்றும் முழுவதும் மாற்றிவிடுகிறது. அதன் பின் தான் அவரது தேடுதல் தீவிரமடைகிறது.
 
இரண்டாவது படலம், மதுரைப்படலம். அது பின்னொரு சமயம் விரிவாக எழுத வேண்டும். இந்தக் கல்யாணப்படலம் இருக்கிறதே! மை! காட்! எல்லாம்..எல்லாம் வேறொரு சமயம்...
 
இதுவொரு தத்துவத்தேடல் கதை. தத்துவம் இன்னும் பேச வேண்டும். நல்லவேளையாக அதை ஜே.கே செய்கிறார் :-)) [மற்றவருக்கு போரடிக்குமோ? என்றொரு கவலை!]
 
க.>
 


 
2010/10/3 devoo <rde...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

devoo

unread,
Oct 3, 2010, 8:35:22 AM10/3/10
to மின்தமிழ்
இந்த இடத்தில் உங்கள் அனுமதியுடன் ஒருசில வார்த்தைகள்.

அரிய தகவல் என்று யார் மனத்தில் பட்டாலும் அதைப்பதிவிட வேண்டும் தனி நபர்
சார்ந்ததாயினும், பொதுத் தகவல் ஆயினும். நாம் எழுதுவது எல்லாமே
ஜனரஞ்ஜகமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. மின்னரங்கை ஒரு
பொழுதுபோக்குக் களமாக என்னால் பார்க்க இயலவில்லை; இதை ஆவணங்களின்
தொகுப்பாகவே காண்கிறேன். சீதாலட்சுமி அம்மா அவர்களின் அனுபவங்கள்,
இன்னம்பூர் ஐயாவின் குறிப்புகள், சுபா அவர்களின் எட்டயபுரப் பயணம்,
திரு.செல்வன் வெளியிட்டுவரும் பொருளாதாரம் சார்ந்த கருத்துகள்,
அரங்கனாரின் பதிவுகள், பானு குமார் அவர்களின் சமண சமயக் குறிப்புகள்
எல்லாமே பொருள் பொதிந்தவை.

‘எது பக்தி?’ இழையில் பிள்ளை திருநரையூர் நம்பியின் வைபவம்
கூறப்பட்டது; உடல் நெருப்பில் வேகும்போது அவர்தம் உள்ளம் விரஜையில்
மூழ்கித் தண்மை பெறுகிறது. கண்ணெதிரில் அருமை மகனும் தீயில் கருகுகிறான்;
‘பொறுத்துக்கொள் , குழந்தே ! அணித்தே தெரிகிறது கலங்காப் பெருநகர்;
கொஞ்ச நேரம்தான், இதோ நெருங்கி விட்டோம்’ தந்தையார் ஆறுதல் கூறுகிறார்.
மூவேடணைகளையும் அர்ச்சா பக்தி முடிவுக்குக் கொண்டுவந்து விட்டதே ! ஒரு
ஜீவந்முக்தனைப் போல உடல் சார்ந்த உணர்ச்சிகளை அவர் வெகு எளிதாக வென்று
விட்டாரே ! அரங்கனாரால் ஒரு சில வரிகளில் பக்தியை இத்தனை
விளக்கமாக எப்படிக் கூற முடிகிறது ?

இப்படி ஒரு பரிபக்வத்தை ஏற்படுத்துவதற்காகவே விக்ரஹ ஆராதனை
விதிக்கப்பட்டதோ ?

‘தஸ்ய ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய .....’ ம்ம்ம்

கண்ணன் சார், உங்கள் அனுபவப் பகிர்வில் தொய்வு வேண்டாம் என்று
கோருவதற்கே இத்தனையும் சொன்னேன். பகுதி பகுதியாக வெளியிடுங்கள்.
அப்பதிவுகள் உங்களைப் பின்பற்றி மற்ற நண்பர்களும் எழுதுவதற்குத்
தூண்டுகோலாக அமையட்டும்

தேவ்

> ...
>
> read more »

Innamburan Innamburan

unread,
Oct 4, 2010, 6:22:38 AM10/4/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
நான் கவனமாக படித்து வரும் இழை; பேசாமல்.

என் சம்பந்தப்பட்ட வரையில், இரண்டாவதாக என்னை பாதித்த தத்துவபோதகர்,
ஜே.கே. 'போதகர்' என்ற சொல் அவருக்கு சம்மதமில்லை தான். மற்றவர் சொல்வதை,
பொறுமையுடன் கேட்டு, சிறியவர்களையும் அதீத மரியாதையுடன் விளிக்கும்
அவரிடம் ஒரு நாள், என் முதல் போதகரை பற்றி சொன்னேன்.

அந்த முதல் போதகர், ஒரு ரோமன் கத்தோலிக்கர். ஸுப்ரீம் கோர்ட்டு
வழக்கறிஞர். அறிமுகம் ஆன கட்டம், துயரத்தின் உச்சகட்டம். ஆஸ்பத்திரியில்,
ஒரு மகனை இழந்து, இருவரின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்க, செயலிழந்த என்
தந்தைக்கு ஆறுதல் கூறி வந்த அவரின் மகனை, மருத்துவர்கள் கை விட, அவரே
ஹோமியோபதி வைத்தியம் செய்தார். நம்பிக்கை லவலேசமும் இல்லை. இந்த
சூழ்நிலையில் எனக்கு போதனை, சீரிய முறையில், வாழும் நெறிகளை பற்றி. அந்த
பையனும் மறைந்து விட்டான். (பிற்காலம் ஒன்று நிகழ்ந்தது; அதற்கு இது
இடமில்லை.) 'என் தோட்டத்தின் மலர் மீது அவனுக்கு விருப்பம்.' என்று
மட்டுமே சொன்னார். அவரை அணுகி ஆறுதல் கூற யாருக்கும் துணிவு வரவில்லை.
அந்த அளவுக்கு ஸ்திதப்பிரதஞ்ஞன் - அசையா நிலை.

வஸந்த விஹாரில் ஒரு நாள், மனபக்குவம் கிஞ்சித்தும் அடையாத சிறுவனான நான்,
இதை பிரஸ்தாபித்த போது, சற்று மெளனம் காத்த ஜே.கே. சொன்னார், 'I
understand your predicament, Sir. You shall get over it'.   தொடரும்
துணிவு எனக்கு இல்லை. பிற்காலம், திருமதி நந்திதா மேத்தாவுக்கு அவர்
அளித்த ஆறுதலை பற்றி திருமதி. புபுல் ஜயகர் சொல்ல கேட்டேன். பொருத்தமோ,
இல்லையோ, '...அவரது சகோதரர் நித்யாவின் மரணம் அவரை முற்றும் முழுவதும்
மாற்றிவிடுகிறது. அதன் பின் தான் அவரது தேடுதல் தீவிரமடைகிறது...'என்று
கண்ணன் எழுதியது, இந்த நிகழ்வை மறுபடியும் நினைவூட்டியது. பிறிது
கூறவேண்டியதை, உரிய தருணத்தில் நான் சொல்லக்கூடும்.
நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்


2010/10/3 devoo <rde...@gmail.com>

N. Kannan

unread,
Oct 4, 2010, 6:38:03 AM10/4/10
to mint...@googlegroups.com
நன்றி ‘இ’

உங்கள் மடல் கொஞ்சம் புரியவில்லை.

யாருடைய சோகத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள்? மதபோதகரின் சோகம் பற்றியா?
இல்லை உங்கள் வாழ்வில் நிகழ்ந்த சோகம் பற்றியா? ஜே.கே ஏன் உங்களிடம்” 'I
understand your predicament, Sir. You shall get over it'. என்று சொல்ல
வேண்டும்?

மற்றபடி புபுல் ஜெகரின் அறிமுகமே அவரது கணவரின் இழப்பிற்கு ஆறுதல் தேடும்
முகமாக அமைகிறது. அவர் எழுதியிருக்கும் கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கை
சரிதமே என் உணர்விற்கு அருகில் வந்து நிற்கிறது.

க.>

2010/10/4 Innamburan Innamburan <innam...@googlemail.com>:

N. Kannan

unread,
Oct 31, 2010, 3:35:46 AM10/31/10
to mint...@googlegroups.com
ஆலவட்டம் 11
 
Questioner: Is the ego always harmful? Is selfishness ever beneficial?
 
Krishnamurti: Self-centered attention and activity, positively or negatively, is the cause of strife and pain. How seriously is each one considering this problem? How earnest are we about discovering the truth of the nature and activity of the ego, the self? Our meditation and spiritual discipline have no meaning if first we are not clear upon this point. True meditation is not self-expansion in any form. So until we can have a common understanding of our purpose, there will be confusion, and right relationship between us will not be possible.
 
Reflections on the Self
 
 
பாற்கடல் கடைந்ததாக வரும் தொன்மம் பல்வேறு வகையில் பொருள் கொள்ளத்தக்கது. நேரடிப்பொருளாகப் பார்ப்போமெனில், பிரபஞ்சத் தோற்றத்தைச் சுட்டுவது போல் படும். இதை உருவகம் என்று கொண்டால் ஆக்கம் நிகழ முன்னேற்பாடு என்பது போல் படும். பாற்கடல் கடைந்த போது மிக அரிய பொருட்கள் வெளிப்பட்டன. காமதேனு எனும் எண்ணியதைக் கொடுக்கும் பசு, கற்பக தரு, தன்வந்திரி, மகாலக்ஷ்மி இப்படி. 2ம் உலகப்போரில் உலகம் சீரழிவுற்றுக் கிடந்த போது இவ்வகையான தோற்றங்கள் நிகழ்ந்தன. இத்தோற்றங்கள் இந்திய மண்ணில் நடைபெறும் என்று பிரம்மஞான சபையோர் நம்பினர். எனவே ஐரோப்பாவிலிருந்து ஒரு கோஷ்டி, கலக்கமுற்றுக் கிடக்கும் உலகில் தோன்றும் மாணிக்கங்களைக் கண்டறிய இந்தியா வந்தது. அவை கண்டது கொஞ்சமே. ஆனால் இந்தியாவில் தோன்றியதோ எண்ணற்ற மாணிக்கங்கள். அந்த மாணிக்கங்களுள் ஒன்றுதான் மதனபள்ளியில் தோன்றிய ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி. மண்ணின் வாசனை என்று ஒன்று உள்ளது. ஜே.கே எல்லா நிருவனப்பட்ட மதங்களையும், சிந்தனாமுறைகளையும் புறம் தள்ளினாலும் அவரது core teaching என்பது இந்திய மண்ணின் வாசனையோடுதான் இருந்தது. அதுவே ‘அகப்படு உள்மையம்’ எனும் ஈகோ களைதல் என்பதாகும். இதை செமத்திய மதங்கள் இந்தியா எடுத்துச் சென்றுள்ள உச்சத்திற்கு எடுத்துச் செல்லவில்லை என்றே சொல்லலாம்.
 
ஆனால், உள்மையம் இல்லாமல் சமூக ஜீவியாக செயல்படல் என்பது குதிரைக் கொம்பு ஆகும். அங்குதான் பிரச்சனையே கிளம்புவதாக நந்து நம்பினான்! உண்மையை சொல்லப்போனால் நந்து வளர்ந்த சூழலில் ஒருவரின் அகப்பாட்டை குளிர வைப்பது மிக முக்கியம் என்று கற்றிருந்தான். இதைக் கல்லூரி மொழியில் ‘குழையடித்தல்’ என்று சொல்லுவர். மிகச்சாதரணமான காரியமாக இருந்தாலும் கொழையடிக்க வேண்டும். நந்து அப்போது பள்ளிச் சிறுவன். கொய்யா மரத்தாத்தில் ஒரு பாட்டி இருந்தாள். இவள் சகோதரியுடன் உடன் வேலை செய்யும் ஒரு ஆசிரியையின் தாய். அந்தப்பாட்டி ஒரு மொட்டைப் பாட்டி. பாவம்! அவள் முடி இறக்கப்பட்டிருந்தாலும் அவள் அகப்பாடு இறங்கியதில்லை. அவளுக்கு மொட்டையாக இருப்பது பழகிவிட்டது. அவள் அடுப்புக்கரி வாங்கி வந்து பயன் படுத்திவிட்டு, சமையல் முடிந்தவுடன் அடுப்பை நீர் விட்டு அணைத்துவிட்டு மீண்டும் அக்கரியினைப் பயன்படுத்தும் நோக்கில் நல்ல வெய்யிலில் காயப்போட்டுக்கொண்டு இருந்தாள். இந்த வம்புக்கார ராமு சும்மாப் போகாமல், ‘பாட்டி! பாட்டி! இந்த கரி எங்கே வாங்கியது! இவ்வளவு பெரியதாக, நன்றாக உள்ளதே!’ என்றான். அவ்வளவுதான் சும்மாக்கிடந்த பாட்டியின் அகப்பாடு மெய்சிலிர்த்து விழித்துக் கொண்டது. அல்பமான அடுப்புக்கரி பற்றிய சமாச்சாரம்தானென்றாலும், பசங்க ஒரு விஷயம் பற்றிக் கேட்கிறார்கள் எனில் அதில் ஏதோ விசேஷம் இருக்கிறது, எதற்கு தகவலைச் சும்மாத் தர வேண்டுமென நினைத்துவிட்டாள். தகவல் பரிமாற்றம் என்பது கிராமப்புறங்களில் மிக சிக்கலானது. யாரும், யாரையும் நம்பி ஒரு விஷயத்தைச் சொல்லிவிடமாட்டார்கள். கலெக்டர் எப்போது தாலுகா ஆபீஸ் வருவார் என்று தெரிந்து கொள்ள வேண்டுமெனில் ஆபீஸ் கிளர்க்குக்கு காசு கொடுக்க வேண்டும். கிளர்க்கைப்பார்க்குமுன் பியூனுக்கு காசு கொடுக்க வேண்டும். சரி, கலெக்டர் வரும் போது மனுக்கொடுக்க வேண்டுமெனில், மனு பாரம் எங்கே வாங்க வேண்டுமென்று அறிந்து கொள்ள காசு கொடுக்க வேண்டும். பார்ம் வாங்கியபின் அதை எப்படி நிரப்புவது என்று அறிந்து கொள்ள காசு கொடுக்க வேண்டும். ஆக, தகவல் என்பது விலை மதிப்புடையது. யாரும், யாருக்கும் தகவலைச் சுலபமாகத் தந்துவிடமாட்டார்கள். அப்படியான ஊரில் பாட்டி மட்டும் தான் அடுப்புக்கரி எங்கே வாங்கினேன் என்னும் தகவலை அவ்வளவு எளிதாகத் தந்துவிடுவாளா? என்ன? எனவே, அவள் ராமுவைப் பார்த்து, ‘அதெல்லாம் சொல்லமுடியாது. ஒரு ஆள் மூள்ய்யமாக வாங்கியது!’ என்று ஒரு போடு போட்டாள். அல்பக்கரித் தகவல் தராத அந்தப்பாட்டி அன்றிலிருந்து ‘கரிப்பாட்டி’ என்று நந்துவால் அழைக்கப்பட்டாள்.
 
ஆனால் ஈகோ என்பதே அல்பம் என்று அறிந்து கொள்! என்று ஜேகே சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வது? வாழ்வே அல்பமான விஷயங்களைச் சுற்றி அல்பமான முறையில் சுழன்று கொண்டிருக்கும் போது, அல்பமான விஷயத்திற்கெல்லாம் ஈகோ வீறுகொண்டு எழுகிறது! மிக அல்பமாக அது பல்லிளித்துக் காட்டுகிறது. இந்த அல்பமான சிரிப்பிற்கு நந்து பழகியிருந்தான். அப்படிப்பலர் சிரிக்கும் போது இவனும் பல்லிளித்தான். சாதாரண பியூனிலிருந்து, துணை வேந்தர்வரை எல்லோரும் இப்படியானதொரு பல்லிளிப்பதை எதிர்பார்த்தனர். அல்பத்தனமாக அவர்களது அகப்பாட்டைக் குளிர்விக்க வேண்டியிருந்தது. அது கண்டு மாணவர் ஈகோ சிலிர்ப்பதுண்டு. ஆனால் சிலிர்ப்பதால் எந்தக்காரியமும் ஆவதில்லை. ‘இவன் போனால் காரியமாகாது! என்னத்தையாவது சொல்லி காரியத்தைக் கெடுத்துவிடுவான். நைச்சியமாகப் பேசி காரியத்தை சாதிக்கத் தெரிய வேண்டும்’ என்பது மிகச்சாதாரணமாக குடும்பங்களில் பேசப்படும் வசனம். நந்து நைச்சியமாகப் பேசுவதில் வல்லவனாக இருந்தான். முதல் சொல்லிலேயே பேசுபவரின் ஈகோ குளிரும் வண்ணம் பேசக்கற்றிருந்தான். மற்றவரின் ஈகோ குளிர்வதைக் கண்டு தன் ஈகோவும் சமனப்படுவதை அவன் அறியவில்லை.
 
ஜேகேயைத் தீவிரமாக அறிந்த போது கிடைத்த முதலடி, அகப்பாடு அல்பமானது என்ற பாடம். அவனுக்கு சமூகம் கற்றுக் கொடுத்த முதல் பாடமே அகப்பாட்டை எப்படி ஊட்டி வளர்ப்பது என்பதுதானே?! முழுச்சமூகமும் அகப்பாட்டின் வலையில் கட்டுப்பட்டு நடந்து கொண்டு இருக்கும் போது அகப்பாட்டை உணர்வதே தன்னை அறிதல் என்பதாக அமைந்தது சிக்கலாக இருந்தது. மாயாவியாகச் செயல்படும் அகப்பாட்டு தன்னை இனம் காட்டிக்கொள்ளுமா? என்ன? அது மட்டுமா? வள்ளுவர் சொல்கிறார், ‘கற்பவை கற்ற பின் நிற்க’ என்று. கற்றது எல்லாமே கசடாக இருந்துவிட்டால் அதிலேயே நின்று கொண்டு இருக்க வேண்டியது. கற்றதைக் கழட்டிவிடுவது அவ்வளவு சுலமானது என்று நந்து நம்பவில்லை!
 
பெர்னார்டு என்றழைக்கப்படும் பார்ணி நந்துவை முதன்முறை பார்த்த போதே கேட்ட முதல் கேள்வி, ஜேகே பற்றி நீ எவ்வளவு அறிந்து வைத்திருக்கிறாய்? என்பதே! நந்து அப்போது இந்தியப் பல்கலைக்கழக சூழ்ச்சி வலையிலிருந்து விடுபட்டு சுதந்திரம் பெற்றிருந்தான். ஜப்பானிய கல்வித்துறை வழங்கும் ஒரு சிறப்பு மானியம் பெற்று எஹிமே பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்து கொண்டிருந்தான். கீழைத்தேசங்களில் ஆங்கிலக்கல்வி சொல்லிக்கொடுக்க ஆயிரக்கணக்காக வரும் அமெரிக்க, ஆங்கில, ஆஸ்திரேலிய, கனேடிய ஆசிரியர்களில் பார்ணியும் ஒருவன். உண்மையில் இவர்களை ஆசிரியர்கள் என்று சொல்ல முடியாது. ஆங்கிலத்தை முதல் மொழியாகக் கொண்டவர்கள் எனும் தகுதியே அவர்களுக்கு வேலை வாய்ப்பைத் தந்தது. மேலும் அவர்கள் வெள்ளையர்களாக இருந்தால் கூடுதல் மதிப்பு. விளம்பரத்தில் தெளிவாகவே இன வேறுபாட்டைக் காட்டுவதில் ஜப்பானியரும், கொரியர்களும் தயங்குவதில்லை. ‘வெள்ளையின ஆசிரியர், ஆங்கிலம் தாய் மொழி. இவையே தகுதிகள்’ என்று விளம்பரங்கள் பேசும். பார்ணி போன்ற அமெரிக்கர்கள் இதையொரு சாக்காக வைத்துக் கொண்டு ஆசிய கலாச்சாரம், தத்துவமறிய கீழைத்தேசங்களுக்கு வருகின்றனர். பார்ணி 12 வயதிலிருந்து ஜேகேயின் நூல்களை வாசித்து வருபவன். ஏறக்குறைய ஜேகேயைக் கரைத்துக் குடித்து இருந்தான். எனவே நந்துவிற்கு விருப்பம் உண்டோ இல்லையோ, ஜேகே இறக்குமதி தொடர்ந்து நடந்து வந்தது. வேறு வழியில்லாமல் அறிவியல் போக மீதமிருந்த பொழுதுகளை ஜேகேயை அறிய செலவிட்டான். ஜப்பானில் வாரம் ஐந்து நாள் வேலை செய்து, உபரியாக சனியும் வேலை செய்து, மீதமிருக்கும் ஞாயிறு தினத்தில் பாதி நாள் வேலை செய்யும் நந்துவின் மீதி அரைநாளும் குடும்ப உறவிற்கு என்று போகாமல் ஜேகே எனும் ஞானியை அறிந்து கொள்வதில் போனது. நந்து ஜேகேயை மிகப்பெரிய விலை கொடுத்து வாங்க முற்பட்டான் நந்து!
 
01.J. Krishnamurti in United Nations,1985
 

Subashini Tremmel

unread,
Apr 3, 2011, 9:36:00 AM4/3/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
மீண்டும் எப்போது வருவான் நந்து..??
-சுபா

2010/10/31 N. Kannan <navan...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

கி.காளைராசன்

unread,
Apr 27, 2011, 7:49:30 AM4/27/11
to mint...@googlegroups.com
மீண்டும் எப்போது வருவான் நந்து..அண்ணா??
அன்பன்
கி.காளைராசன்

--
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,
http://www.freewebs.com/thirupoovanam/
அன்னதானம் செய்வோம், கண்தானம் செய்வோம். இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,

Reply all
Reply to author
Forward
0 new messages