புதுக்கொட்டை தமிழ் பிராமி நடுகல் கல்வெட்டு

152 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Oct 29, 2012, 10:28:55 PM10/29/12
to seshadri sridharan
தஞ்சாவூர், ஜூலை 20: புதுக்கோட்டை அருகே சங்க காலத் தமிழ் பிராமி எழுத்துப் பொறிக்கப்பட்ட நடுகல்லை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் அண்மையில் கண்டெடுத்தனர்.  கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லை ஆய்வு செய்ததன் மூலம் பண்டைய தமிழகத்தில் வாழ்ந்த வேளாண், கால்நடை மேய்ப்புச் சமூக மக்கள் எழுத்தறிவு கொண்டவர்களாக இருந்துள்ளனர் என்பது உறுதியாகிறது என்கிறார் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. திருமலை.  இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை மேலும் தெரிவித்தது:  இந்தப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டியல் - தொல்லியல் துறையைச் சேர்ந்த ஆய்வு மாணவர்கள் த. தங்கதுரை, எஸ். பாண்டியன், அ. மோசஸ் ஆகியோர் புதுக்கோட்டை பகுதியில் கடந்த வாரம் கள ஆய்வு மேற்கொண்டனர்.  அப்போது, புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டைக்கு அருகே துணி துவைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த நடுகல்லை கண்டெடுத்தனர்.  இதையடுத்து, புதுவை பல்கலைக்கழகப் பேராசிரியர் க. ராஜன், இந்திய தொல்லியல் துறை தெற்கு வட்டார இயக்குநர் து. தயாளன் உள்ளிட்டோர் அதைப் பார்வையிட்டனர்.  இந்த நடுகல்லில் கி.பி. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி (தமிழி) எழுத்துகள் இடம் பெற்றுள்ளன. இது இந்தியக் கல்வெட்டியலில் மிக முக்கியமானது. தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட 5-வது கல்வெட்டு இது.  நம் நாட்டிலேயே இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நடுகல்களில் காலத்தால் முற்பட்ட நடுகல்களில் இதுவும் ஒன்று என்றார் அவர்.  இந்த நடுகல்லை பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சு. ராசவேலு, ந. அதியமான், வி. செல்வகுமார், ம. பவானி, முன்னாள் பேராசிரியர் எ. சுப்பராயலு, கல்வெட்டு ஆய்வாளர் வெ. வேதாசலம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.  இதுகுறித்து ராசவேலு தெரிவித்தது:  தலா 2 அடி அகலம், நீளமுடைய இந்த நடுகல் முக்கோண வடிவில் உடைக்கப்பட்டு, எழுதப்பட்டுள்ளது. இதில் கோவென் கட்டிற் நெதிர, ணறு பொன்கொங்கர் விண்ணகோன், ஆ எறிஇத்து ஏவ அதவ்வனரு, அங்கபடைத தாணையன் கணங், குமரன் கல்  என 5 வரிகள் எழுதப்பட்டுள்ளன.  அதாவது, கோவன் கட்டி என்பவருக்கு அடுத்து வந்த பொன் கொங்கர் விண்ணகோன் காலத்தில் அதவன்னூரைச் சார்ந்த கணங்குமரன் என்பவர் ஆநிரைப் போரில் பசுக் கூட்டத்தைக் கைப்பற்றி இறந்தமைக்காக எடுக்கப்பட்ட நடுகல்.  கணங்குமரன் என்பவர் மெய்க்காவல் படைத் தலைவராகவும், கோட்டையைக் காக்கும் தலைவனாகவும் இருந்துள்ளது இந்தக் கல்வெட்டின் மூலம் தெரிய வருகிறது. தாணையன் என்பது கோட்டை அல்லது அரணைக் காக்கும் தலைவன் எனப் பொருள்படும். மேலும், அங்கப் படை என்பது அக்காலத்தில் இருந்த மெய்க்காவல் படையைக் குறிக்கும்.  இந்தக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட பொற்பனைக்கோட்டை, சங்கக் காலத்தில் கோட்டைப் பகுதியாக இருந்துள்ளது. இப்போதும், இந்தக் கோட்டையின் இடிபாடுகள் காணப்படுகின்றன.  எனவே, இந்தக் கோட்டையைக் காக்கும் தலைவனாக இப்போரில் இறந்த கணங்குமரன் இருந்திருக்க வேண்டும்.  இந்த நடுகல் கல்வெட்டில் உள்ள தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகளின் அமைப்பைப் பார்க்கும் போது, அரச்சலூர், அம்மன்கோவில்பட்டி, பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகளுக்கு முற்பட்டதாக உள்ளது.  எழுத்தமைப்புப்படி, இது கி.பி. 2 ஆம் நூற்றாண்டாகவும், கரூர் அருகே புகலூரில் கண்டெடுக்கப்பட்ட முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த சேரர் கல்வெட்டுக்குப் பிற்பட்டதாகவும் உள்ளது என்றார் அவர்.  இந்தக் கல்வெட்டில் இடம் பெற்றுள்ள கட்டி மரபினர் குறித்து அகநானூறில் உள்ள பாடல் வரிகள் மூலம் பல்கலைக்கழக இலக்கியத் துறைத் தலைவர் வ. குருநாதன் விளக்கினார். பின்னர், நடுகல்லை கண்டெடுத்த மாணவர்களையும், ஆய்வு செய்த பேராசிரியர்களையும் துணைவேந்தர் பாராட்டினார்.

தினமணி வெளியிட்ட செய்தி

seshadri sridharan

unread,
Oct 30, 2012, 1:31:50 AM10/30/12
to seshadri sridharan
" கோவென் கட்டிற் நெதிர, ணறு பொன்கொங்கர் விண்ணகோன், ஆ எறிஇத்து ஏவ அதவ்வனரு, அங்கபடைத் தாணையன் கணங், குமரன் கல் " என்பதற்கு என்னுடைய விளக்கம்

கோவன் என்பதே கோவென் என கொச்சை வழக்கில் எழுதப்பட்டுள்ளது. கட்டிற் என்பது கட்டிக்கு என பொருள்படும். எதிரன் என்பதே நெதிரன் என எழுதப்பட்டு உள்ளது. எதிரன் என்பதற்கு அடுத்தாகப் பதவி ஏற்ற எதிர்காலத்தவன் என்று பொருள் கொள்கின்றனர் அறிஞர். இதற்கு திருவண்ணாமலை செங்கம் வட்டம் ஆண்டிப் பட்டியில் கிட்டிய ஈய நாணயத்தில் சேந்தன் அதினன் எதிரான் என்ற சொல்லாட்சியைச் சான்றாகக் காட்டுகின்றனர். அதன் பொருள் அதினனுக்கு அடுத்தாக அரச பதவி ஏற்ற சேந்தன் என பொருள். ணறு என்பது நறு என்பதன் பிழையான குறிப்பு. பொன் என்பது அவன் சிற்றரசன் என்பதைக் குறிக்கும் பட்டம். கொங்கர் என்பது அரச மரபுப் பெயர். இதற்கு கொங்கிளவரைசர் என்ற நடுகல் சொல்லாட்சியை சான்றாகச் சுட்டலாம். விண்ணகோன் என்பது அவனது இயற்பெயரின் தமிழாக்கம் ஆகலாம்.  ஆ எறித்து - ஆநிரை கவர்ந்து எனப் பொருள். ஏவ - கட்டளையிட எனப் பொருள். இந்த ஏவ என்ற சொல் சகர மெய்யை முன்மிகையாகப் பெற்று சேவ > சேவகன் என்ற பின்னாளைய சொல் தோன்றக் காரணமானதாக கொள்ளலாம். இதன்படி ஏவ என்பதை படைத்தலைவன் எனப்பொருள் கொள்ளவும் இடமுண்டு. இந்த சேவகன் எனும் ஏவன் அதவ்வன் + ஆர் [= அத்+அவ்வன்] எனக் கொள்ளலாம். அவனுடைய அங்கப்படை தாணையனான கணன் குமரன் உடைய கல் - நினைவு கல். 


இதாவது, கோவன் கட்டிக்கு அடுத்தாக அரசுப் பதவி ஏற்ற நறு பொன்கொங்கர் விண்ணகோன் என்பவன் ஆநிரையைக் கவர அப்போது அவருடைய சேவகனான அதவ்வன் என்பவனுக்குக் கீழ் இயங்குபவனான அங்கப்படையின் முன்னணி (தாணையன்)  மறவனான கணன் குமரன் வீரசாவடைந்ததால் அவன் நினைவில் எழுப்பப்பட்ட நினைவுக் கல், நடுகல் எனப் பொருள். அல்லது அதவ்வன் ஆநிரையை மீட்டு வர ஏவியதால் அவனுடைய அங்கப்படையின் முன்னணிப் படையாள் கணன்குமரன் என்பவன் ஆநிரையை மீட்கும் போது வீரசாவடைந்தான் எனப்பொருள். 


இக்கல்வெட்டைப் பொற்பனைக் கோட்டையில் கண்டெடுத்ததாலேயே அக்கோட்டைக்குத் தலைவன் கணன் குமரன் என்றோ அல்லது அங்கு போர் நடந்தது என்றோ கொள்வது தவறு. கொங்கர் என்ற அரச மரபினர் கங்கராகவோ அல்லது அவரது கிளை மரபினராகவோ கொள்ளப்படுகின்றனர். கட்டி என்ற பெயரையும் கங்கரே கொண்டிருந்தனர் என்பது நோக்கத் தக்கது. இக்கல்வெட்டுச் செய்தி சுருக்கமாக இருப்பதால் அதவ்வன் விண்ணகோனின் சேவகனா அல்லது அவனது  படைஎடுப்பை எதிர்த்த பெயர் குறிக்கப்படாத இன்னொரு அரசனின் சேவகனா என்று முடிவு செய்யஇயலவில்லை. கணன்குமரன்  தரும்புரிக்கு சுற்றிடத்தில் நிகழ்ந்த ஆநிரைப் போரில் இறந்து அவன் புதுக்கோட்டை பகுதி வாழ்நன் என்பதால் அவனூரிலேயே அவன் நினைவில் இந்த நடுகல்லை நாட்டி இருக்கலாம். பின்பு சிதிலமைந்து குப்பை மேடாகிப் போன கோட்டைப் பகுதியில் அக்கல்லை யாரோ துணி துவைக்கத் தூக்கிவந்து போட்டிருக்கலாம்.

சேசாத்திரி

Geetha Sambasivam

unread,
Oct 30, 2012, 6:31:36 AM10/30/12
to mint...@googlegroups.com, seshadri sridharan
திரு சேஷாத்ரி, 

தலைப்பில் புதுக்கொட்டை என வந்திருக்கிறது.  அதைப் புதுக்கோட்டை என மாற்றவும்.  நன்றி.

2012/10/30 seshadri sridharan <ssesh...@gmail.com>
" கோவென் கட்டிற் நெதிர, ணறு பொன்கொங்கர் விண்ணகோன், ஆ எறிஇத்து ஏவ அதவ்வனரு, அங்கபடைத் தாணையன் கணங், குமரன் கல் " என்பதற்கு என்னுடைய விளக்கம்


தினமணி வெளியிட்ட செய்தி


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

seshadri sridharan

unread,
Nov 6, 2012, 10:05:19 PM11/6/12
to Geetha Sambasivam, mint...@googlegroups.com
அம்மணி இந்த தலைப்பை மாற்றுவது எப்படி என்று சொல்லித் தர வேண்டுகிறேன்.

சேசாத்திரி


2012/10/30 Geetha Sambasivam <geetha...@gmail.com>

DEV RAJ

unread,
Nov 7, 2012, 12:09:25 AM11/7/12
to மின்தமிழ்
தலைப்பில் ’புதுக்கோட்டை’ என இருக்க
வேண்டும்; மாணவர்களின் அரும்பணி
பாராட்டுக்குரியது


தேவ்

seshadri sridharan

unread,
Nov 7, 2012, 3:47:09 AM11/7/12
to mint...@googlegroups.com
ஐயா ஏற்கெனவே நிகழ்ந்துவிட்ட பிழையை மாற்றுவது எப்படி என எனக்குத் தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள் உடனே மாற்றிவிடுகிறேன்.

சேசாத்திரி

2012/11/7 DEV RAJ <rde...@gmail.com>

Subashini Tremmel

unread,
Nov 7, 2012, 9:00:52 AM11/7/12
to மின்தமிழ், Subashini Tremmel



2012/11/7 seshadri sridharan <ssesh...@gmail.com>

ஐயா ஏற்கெனவே நிகழ்ந்துவிட்ட பிழையை மாற்றுவது எப்படி என எனக்குத் தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள் உடனே மாற்றிவிடுகிறேன்.

திரு.சேசாத்ரி,

ஒருமுறை வெளியிடப்பட்ட செய்தியின் தலைப்பை மாற்ற இயலாது. மாறாக இந்த இழையை நான் லோக் செய்து விடலாம். நீங்கள்  சரியான வேறொரு தலைப்பில் இதே கட்டுரையை வெளியிட்டிருந்ததாக நினைவு. நான் இதனை லோக் செய்து விடவா? நீங்கள் அந்த மற்றொரு இழையில் அல்லது புதிய இழையில் உங்கள் கருத்தாடல்களைத் தொடரலாம்.

சுபா

சேசாத்திரி

2012/11/7 DEV RAJ <rde...@gmail.com>
தலைப்பில் ’புதுக்கோட்டை’ என இருக்க வேண்டும்; மாணவர்களின் அரும்பணி பாராட்டுக்குரியது

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

seshadri sridharan

unread,
Nov 7, 2012, 10:05:23 AM11/7/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
ஆனால் அந்த வேறொரு இழையின் பதிவு எனக்கு வரவே இல்லை. இந்த செய்தி பிற தளங்களில் வந்திருந்தாலும் என் தனிப்பட்ட கருத்தை பின்னூட்டமாக விளக்குவதற்காகவே இந்த இழையைத் தொடங்கினேன். தலைப்பை கடைசியில் தான் தட்டச்சு செய்தேன் அப்போது திடீரென்று மின்வெட்டு ஏற்பட்டதால் வேறு மின் இணைப்பு கொடுத்து பிழை உள்ளதா என்று பாராமலேயே அனுப்பிவிட்டேன்.

சேசாத்திரி

2012/11/7 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
Nov 7, 2012, 2:04:04 PM11/7/12
to seshadri sridharan, Subashini Tremmel, மின்தமிழ்
திரு.சேசாத்ரி,

மின்தமிழில் ”புதுக்கோட்டை தமிழ் பிராமி நடுகல் கல்வெட்டு” என்ற தலைப்பில் ஒரு இழை வெளிவந்திருக்கின்றது. இது உங்களுடையது தான்.
இங்கே உள்ளது.
 
இங்கேயே நீங்கள் தொடரலாமே.

சுபா


2012/11/7 seshadri sridharan <ssesh...@gmail.com>

seshadri sridharan

unread,
Nov 8, 2012, 1:20:56 AM11/8/12
to Subashini Tremmel, மின்தமிழ்
என் கீழ்க்கண்ட கருத்தை reply யில் அனுப்பி உள்ளேன் வருகின்றதா என்று பார்ப்போம்.


" கோவென் கட்டிற் நெதிர, ணறு பொன்கொங்கர் விண்ணகோன், ஆ எறிஇத்து ஏவ அதவ்வனரு, அங்கபடைத் தாணையன் கணங், குமரன் கல் " என்பதற்கு 
என்னுடைய விளக்கம். 

கோவன் என்பதே கோவென் என கொச்சை வழக்கில் எழுதப்பட்டுள்ளது. கட்டிற் என்பது கட்டிக்கு என பொருள்படும். எதிரன் என்பதே நெதிரன் என எழுதப்பட்டு உள்ளது. எதிரன் என்பதற்கு அடுத்ததாகப் பதவி ஏற்றவன், எதிர்காலத்தவன் என்று பொருள் கொள்கின்றனர் அறிஞர். இதற்கு திருவண்ணாமலை செங்கம் வட்டம் ஆண்டிப் பட்டியில் கிட்டிய ஈய நாணயத்தில் சேந்தன் அதினன் எதிரான் என்ற சொல்லாட்சியைச் சான்றாகக் காட்டுகின்றனர். அதன் பொருள்அதினனுக்கு அடுத்தாக அரச பதவி ஏற்ற சேந்தன் எனப் பொருள். ணறு என்பது நறு என்பதன் பிழையான குறிப்பு. பொன் என்பது அவன் சிற்றரசன் என்பதைக் குறிக்கும் பட்டம். கொங்கர் என்பது அரச மரபுப் பெயர். இதற்கு கொங்கிளவரைசர் என்ற நடுகல் சொல்லாட்சியை சான்றாகச் சுட்டலாம். விண்ணகோன் என்பது அவனது இயற்பெயரின் தமிழாக்கம் ஆகலாம்.  ஆ எறித்து - ஆநிரை கவர்ந்து எனப் பொருள். ஏவ - கட்டளையிட எனப் பொருள். இந்த ஏவ என்ற சொல் சகர மெய்யை முன்மிகையாகப் பெற்று சேவ > சேவகன் என்ற பின்னாளைய சொல் தோன்றக் காரணமானதாகக் கொள்ளலாம். இதன்படி ஏவ என்பதை படைத்தலைவன் எனப்பொருள் கொள்ளவும் இடமுண்டு. இந்த சேவகன் எனும் ஏவன் அதவ்வன் + ஆர் [= அத்+அவ்வன்] எனக் கொள்ளலாம். அவனுடைய அங்கப்படை தாணையனான கணன் குமரன் உடைய கல் - நினைவு கல். அங்கப்படை என்பதன் தெளிவான பொருள் விளங்கவில்லை. அதை மெய்க்காவல் படை எனக் கொள்வது தவறு. ஏனெனில் கல்வெட்டு முழுவதும் தமிழ்ச் சொற்களே உள்ள நிலையில் உடலைக்  குறிக்கின்ற அங்கம் என்ற சமற்கிருத சொல் வராது என நம்பலாம்..

இதாவது, கோவன் கட்டிக்கு அடுத்தாக அரசுப் பதவி ஏற்ற நறு பொன்கொங்கர் விண்ணகோன் என்பவன் ஆநிரையைக் கவர அப்போது அவருடைய சேவகனான அதவ்வன் என்பவனுக்குக் கீழ் இயங்குபவனான அங்கப்படையின் முன்னணி (தாணையன்)  மறவனான கணன் குமரன் வீரசாவடைந்ததால் அவன் நினைவில் எழுப்பப்பட்ட நினைவுக் கல், நடுகல் எனப் பொருள். அல்லது அதவ்வன் ஆநிரையை மீட்டு வர ஏவியதால் அவனுடைய அங்கப்படையின் முன்னணிப் படையாள் கணன்குமரன் என்பவன் ஆநிரையை மீட்கும் போது வீரசாவடைந்தான் எனப்பொருள். 

இக்கல்வெட்டைப் பொற்பனைக் கோட்டையில் கண்டெடுத்ததாலேயே அக்கோட்டைக்குத் தலைவன் கணன் குமரன் என்றோ அல்லது அங்கு போர் நடந்தது என்றோ கொள்வது தவறு. கொங்கர் என்ற அரச மரபினர் கங்கராகவோ அல்லது அவரது கிளை மரபினராகவோ கொள்ளப்படுகின்றனர். கட்டி என்ற பெயரையும் கங்கரே கொண்டிருந்தனர் என்பது நோக்கத் தக்கது. இக்கல்வெட்டுச் செய்தி சுருக்கமாக இருப்பதால் அதவ்வன் விண்ணகோனின் சேவகனா அல்லது அவனது  படைஎடுப்பை எதிர்த்த பெயர் குறிக்கப்படாத இன்னொரு அரசனின் சேவகனா என்று முடிவு செய்யஇயலவில்லை. கணன்குமரன்  தரும்புரிக்கு சுற்றிடத்தில் நிகழ்ந்த ஆநிரைப் போரில் இறந்து அவன் புதுக்கோட்டை பகுதி வாழ்நன் என்பதால் அவனூரிலேயே அவன் நினைவில் இந்த நடுகல்லை நாட்டி இருக்கலாம். பின்பு சிதிலமடைந்து குப்பை மேடாகிப் போன கோட்டைப் பகுதியில் அக்கல்லை யாரோ துணி துவைக்கத் தூக்கிவந்து போட்டிருக்கலாம். 

சேசாத்திரி


2012/11/8 Subashini Tremmel <ksuba...@gmail.com>
திரு.சேசாத்ரி,

Reply all
Reply to author
Forward
This conversation is locked
You cannot reply and perform actions on locked conversations.
0 new messages