பதஞ்சலி யோகம்

1,317 views
Skip to first unread message

ஜீவ்ஸ்

unread,
Jan 21, 2014, 1:23:53 AM1/21/14
to mint...@googlegroups.com
பதஞ்சலி யோகம் குறித்த  கட்டுரைகளை தொகுக்கலாம். ( கிகி... நானும் சில எழுதிருக்கேனாக்கும் )
 
 

Geetha Sambasivam

unread,
Jan 21, 2014, 3:10:47 AM1/21/14
to மின்தமிழ்
செய்ங்க, செய்ங்க.  தி.வா.வின் கட்டுரைகளா, உங்களோட கட்டுரைகளா? 


On Tue, Jan 21, 2014 at 11:53 AM, ஜீவ்ஸ் <jee...@gmail.com> wrote:
பதஞ்சலி யோகம் குறித்த  கட்டுரைகளை தொகுக்கலாம். ( கிகி... நானும் சில எழுதிருக்கேனாக்கும் )
 
 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Subashini Tremmel

unread,
Jan 21, 2014, 3:28:50 AM1/21/14
to மின்தமிழ், Subashini Tremmel
நல்ல முயற்சி. எனக்கு மிக ஆர்வம் உள்ளது பதஞ்சலி யோகம் பற்றி அறிந்து கொள்ள. 
எனது தற்போதைய சூழலில் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் இவ்வகை விஷயங்களை வாசிக்க நேரம் கிடைக்கின்றது. அதனால் தினம் சிறு பகுதி என்ற வகையில் பகிர்ந்து வந்தால் வாசித்து படிப்படியாக அறிந்து கொள்ள மிக உதவும்.

சரி.. நீண்ட நாளைக்குப் பிறகு வந்திருக்கின்றீர்கள். நல்வரது ஐயப்பன்.

சுபா


On Tue, Jan 21, 2014 at 7:23 AM, ஜீவ்ஸ் <jee...@gmail.com> wrote:
பதஞ்சலி யோகம் குறித்த  கட்டுரைகளை தொகுக்கலாம். ( கிகி... நானும் சில எழுதிருக்கேனாக்கும் )
 
 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Iyappan Krishnan

unread,
Jan 21, 2014, 4:22:21 AM1/21/14
to mintamil, Subashini Tremmel
​ஜெயமோகன் கொஞ்சம் ஆரம்பித்து நிறுத்தி விட்டார். முழுவதும் புத்தகமாய் வந்ததா தெரியவில்லை.
இதுவரைக்கும் கிடைத்தவை - இங்கே தொகுக்கிறேன்.
****
 
Over to Jeyamohan.
 
 
 
முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை          

பதஞ்சலி யோக சூத்திரம் போன்ற ஒரு புராதன நூலுக்குள் நுழைவதற்கு முன்பு வாசகர்களுக்கு வரக்கூடிய முக்கியமான ஐயங்கள் சிலவற்றை களைய வேண்டியுள்ளது. யோக சாதனை என்று கேட்ட உடனேயே அதை ஆன்மீகத்துடனும் கடவுளுடனும் தொடர்புபடுத்திக் கொள்வது பெரும்பாலோருக்கு இயல்பாக உள்ளது. யோகத்தை பற்றிய மிகத் தவறான புரிதல் அது.

நாம் வாழும் இச்சூழலில் இன்று தொடர்பு ஊடகங்கள் மிகவும் மலிந்துள்ளன. ஏராளமான விஷயங்களை தினமும் கேள்விப்பட்டபடி இருக்கிறோம். ஆனால் எவற்றையுமே உள்ளே சென்று ஆழத்தில் அறிவதற்கு நம்மால் முடிவதில்லை. அதற்கான அவகாசம் நமக்கில்லை. நம்முடைய லௌகீக ஆசைகள் முடிவற்றவை. அவற்றை நிறைவேற்றிக் கொள்ள செய்யவேண்டிய உழைப்பு ஒரு நாளும் ஓயாதது. ஆகவே அன்றாட அலுவல்கள் மற்றும் நாம் ஈடுபடும் தொழில் ஆகியவை தவிர அனைத்து விஷயங்களைப்பற்றியும் நாம் மேலோட்டமான சில பொதுப்புரிதல்களையே கொண்டுள்ளோம். அவற்றையே உண்மை என்று நம்பவும் செய்கிறோம். நமது வாழ்க்கையை உடனடியாக பாதிக்கும் ஆரோக்கியம் சம்பந்தமான விஷயங்களில் கூட நமது புரிதல்கள் பலசமயம் அபத்தமானவையாகவும், ஆபத்தான அளவுக்கு அரைகுறையானவையாகவும் உள்ளன. இந்நிலையில் ஆன்மீகம், தத்துவம், மதம் குறித்த விஷயங்களில் நமது புரிதல்கள் மிக மேலோட்டமானவையாக இருப்பதில் வியப்பில்லை .

அதைவிட அபாயகரமானது, அரைகுறையான புரிதல்கள் கொண்டவர்கள் அல்லது முற்றாக ஏதுமறியாதவர்கள் அவர்களுடைய கருத்தியல் அதிகாரத்தை நிறுவும் நோக்கத்துடன் பெரும்பாலான விஷயங்களை தவறாகச் சொல்லிப் பரப்பி வருவது. நம் சூழலில் நாம் மேலோட்டமாக அறிந்து , பரிசீலனை இல்லாமல் ஏற்றுக் கொண்டு இருக்கும் பல விஷயங்கள் அதிகார மோகம் கொண்ட அரசியல்வாதிகளால் வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பபட்ட பொய்கள் என்பதை சற்று முயற்சி செய்தால் நம்மால் அறியமுடியும் . தமிழகத்தில் கடந்த அரை நூற்றாண்டாக நம் மரபு சார்ந்த பல விஷயங்கள் அவற்றை பற்றி எள்முனைகூட அறியாத அரசியல்வாதிகளால் திரிக்கப்பட்டு பரப்பப் பட்டுள்ளன. அவற்றை களைவது நாம் உண்மையான அறிவை அடைவதற்கு அவசியமாக ஆகியுள்ளது . இதற்கு முக்கியமான வழிமுறை மூலநூல்களை பயில்வதுதான். குறைந்தது ஐம்பது நூல்களையாவது இந்திய சிந்தனையின் மூலநூல்களாக கொள்ளமுடியும், பதஞ்சலி யோக சூத்திரம் அவற்றில் முக்கியமானது . மிதமிஞ்சி விளக்கி விரிவாக்கம் செய்து அவற்றை அணுகமுடியாமல் செய்வதை தவிர்த்து நவீனகாலத்துக்கு உரிய சிந்தனைகளுடன் பொருத்தி மூலநூல்களை புரிந்துகொள்வது அவசியம். இது அதற்கானமுயற்சி.

ஆன்மீகம் ,தத்துவம், மதம்
====================

முதலில் ஆன்மீகம் தத்துவம் மதம் ஆகிய மூன்றும் வேறு வேறானவை என நாம் திட்டவட்டமாக புரிந்துகொள்ளவேண்டும். ஆன்மீகம் என்பது மனிதனின் அடிப்படையான கேள்விகளுக்கு உள்ளுணர்வின் மூலம் விடைதேடும் முயற்சி ஆகும். ”நான் யார்? எனக்கும் இப்பிரபஞ்சத்துக்கும் இடையேயான உறவென்ன? இங்குள்ள ஒவ்வொன்றும் எதனால் எப்படி ஏன் உருவம் கொண்டுள்ளன ? எப்படிச் செயல்படுகின்றன ?” என்றெல்லாம் தொடங்கும் முடிவற்ற அடிப்படைக் கேள்விகள் சிந்திக்க ஆரம்பித்த காலம் முதல் மனித மனத்தில் எழுந்து கொண்டிருப்பவை. மனிதனின் அறிவெல்லாமே இவ்வினாக்களுக்கு பதில் தேடி அவன் மேற்கொண்ட பயணத்தின் விளைவுகளே . அறிவியல் அக்கேள்விகளுக்கு புறவயமான தளத்தில் விடை தேடுகிறது . நேர் எதிர் திசையில் ஆன்மீகம் பயணம் செய்கிறது .அது அக்கேள்விகளுக்கு அகவயமான தளத்தில் விடைதேட முயல்கிறது .நுண்ணுணர்வுள்ள எவருமே இவ்விரு வழிகளில் ஏதேனும் ஒன்றை மட்டும் ஏற்று பிறிதை நிராகரிக்க மாட்டார்கள். ராமகிருஷ்ண பரம ஹம்சர் அறிவியலை நிராகரிக்கவில்லை ,ஐன்ஸ்டீன் ஆன்மீகத்தையும் நிராகரிக்கவில்லை .

இப்படிச் சொல்லலாம் . இந்திய மரபில் ‘இதம்’ என்ற சொல் ஆன்மீகத்தேடலின் முதல் கண்ணி ஆகும் . ‘இது ‘ என்று அதற்கு பொருள். ‘இது என்ன ?’ என்ற கேள்வியிலிருந்து தொடங்குகிறது ஆன்மீக தேடல் . இதற்கு அறிவியலாளன் அப்பொருளை எடுத்து புறவயமாக ஆராய்ந்து விடைகாண முயல்வான் .அப்பொருளை அவன் பல கூறுகளாக பகுத்து அறியலாம் . அப்பொருள் சிலிகன் இரும்பு போன்ற தாதுக்களினாலானது என்று அவன் சொல்லலாம். அத்தாதுக்கள் எந்தெந்த மூலக்கூறுகளினாலானது என அவன் விளக்கலாம் .அணுக்களாக அம்மூலக்கூறுகளை பிரிக்கலாம் . அணுவை துகள்களாகப் பிளக்கலாம். இது பகுத்தல்முறை . நேர்எதிர் திசையில் சென்று அப்பொருளை அவன் பிரபஞ்சத்தின் பிற பொருட்களுடன் தொடர்பு படுத்தி பார்க்கலாம். அதை மலையுடனும் நிலத்துடனும் சம்பந்தப்படுத்தி அதன் இயல்புகளை அறியலாம். இது தொகுத்தல் முறை .இவ்விரு முறைகளையும் சேர்த்தேகூட அவன் செய்யலாம் .

ஆனால் ஆன்மீகவாதி அப்பொருளை நோக்கி தன் கவனத்தை குவிப்பதில்லை . அப்பொருள் ஏன் அப்படி தனக்கு தெரிகிறது என அவன் யோசிப்பான். தன் புலன்கள் அப்படி அதை காட்டுகின்றன. புலன்கள் மூலம் அப்பொருளை அறிவது எது ? அப்பொருளை அது ஏன் கடினமானது என்கிறது — காரணம் மேலும் மென்மையான ஒன்றை அது அறிந்திருக்கிறது . அப்பொருளை அது ஏன் வடிவமற்றது என்கிறது — காரணம் அது வடிவம் என்றால் என்ன என்று அறிந்திருக்கிறது . ஆகவே அறிதல் என்ற செயலே அறிபடும்பொருளை தீர்மானிக்கிறது .அந்த அறிதலின் இயல்புகள் என்ன? இவ்வாறெல்லாம் ஆன்மீகம் தனக்குள்ளே ஆழ்ந்து தன்னை ஆராய்ந்து உள்ளே செல்லும் . ஆன்மீக அம்சமில்லாத அடிப்படைச் சிந்தனை இருக்க முடியாது .

ஆன்மீகம் தன் உள்ளுணர்வால் அறிந்ததை தனக்குத்தானே சொல்லும்போதே அது தத்துவமாக ஆகிவிடுகிறது .காரணம் அறிதலானது அந்த அறிதல் நிகழக்கூடிய அக்கணத்தில் கட்டற்றதாக வடிவமற்றதாக இருக்கிறது .அறிவாக அது மாற்றப்படும்போது அதற்கு எல்லையும் வடிவமும் உருவாகிவிடுகிறது .பேசப்பட்ட ,கேட்கப்பட்ட விவாதிக்கப்பட்ட ஆன்மீகம் உடனேயே தத்துவமாகிவிடுகிறது .அனுபவ நிலையில் அகவயமாக நிற்கும் ஆன்மீகமே தூயது . ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆழ்ந்த மனநிலை ஆன்மீகம் . அதை பிறருக்கு விளக்க அவர் சொல்லும் கதைகள் தத்துவம் ஆகிவிடுகின்றன .

தத்துவம் மூலம் சொல்லப்பட்டதை வாழ்க்கைமுறையாக மாற்றும் பொருட்டு நெறிகளும் ஒழுக்கங்களும் மரபுகளும் உருவாக்கப்படுகின்றன. அவற்றை நிலைநிறுத்தவே கோவில் , மடம் , புனிதநூல் போன்ற பல அமைப்புகள் உருவாகின்றன. இந்த நெறிகளும் மரபுகளும் அமைப்புகளும் சேர்ந்ததே மதம் ஆகும் . மதம் எப்போதுமே சில விடைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பதைக் காணலாம் .அவ்விடைகள் காலவதியாகும் போது மதமும் பழையதாகலாம். தேங்கிய மதம் பொருந்தாத பிடிவாதங்களும் மரபுகளும் நம்பிக்கைகளும் கொண்ட தீய சக்திகூட ஆகலாம்.

தத்துவம் மதத்தைப்போல சில விடைகளுடன் நின்று விடுவதல்ல . தத்துவவாதி கேள்விகளுடன் முன்னகர்கிறவன்தான். ஆனால் அவனுக்கும் ஓர் எல்லை உண்டு . தத்துவம் தன்னுடைய ‘உண்மையை நிர்ணயிக்கும் முறைக்கு’ கட்டுப்பட்டது . அம்முறை மறுக்கப்படுகையில் அதுவும் மறுக்கப்படுகிறது.ஆன்மீகம் எந்த கட்டுப்பாடும் இல்லாதது .காரணம் அது முழுமையாகவே அகவயமானது. அதற்கு எந்த நிரந்தரமான அமைப்பும் இல்லை .அதற்கு வடிவமும் இல்லை . ஆகவேதான் குப்பையில் கிடக்கும் சித்தனும் ஐந்துவேளை குளிக்கும் பக்தனும் ஒரே சமயம் ஆன்மீகவாதிகளாக இருக்க முடிகிறது .

யோகம் , தியானம் ,பிரார்த்தனை
=========================

நம்மில் பலர் இம்மூன்று விஷயங்களையும் ஒன்றாகவே இதுவரை எண்ணி வருகிறார்கள் . அதற்கேற்ப இன்று யோகம் மற்றும் தியானம் ஆகியவற்றை எளிமைப்படுத்தி கற்பிக்க முயலும் பல நிறுவனங்கள் இம்மூன்றும் ஒன்றே என்பது போன்ற ஒரு மனச்சித்திரத்தை உருவாக்கி வருகின்றன. இவை முற்றிலும் வேறு வேறானவை என்பதை வாசகர்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

பிரார்த்தனை என்பது கடவுள் என்ற கருத்தை ஏதேனும் வடிவில் ஏற்றுக் கொண்டவர்கள் அச்சக்தியிடம் தங்கள் கோரிக்கைகளை முன்வைப்பதாகும் . கடவுளை ஒரு ஆதி சிருஷ்டிகர்த்தர் என்றோ , பிதா என்றோ , ஆக்கி காத்து அழிக்கும் சக்தி என்றோ ,ஒவ்வொன்றிலும் உறையும் அறியமுடியாத மர்மமான வல்லமை என்றோ , பிரபஞ்ச இயக்கத்தை நடத்தும் பெருநியதி என்றோ எப்படி வேண்டுமானாலும் கொள்ளலாம் . பிரார்த்தனை என்பது அச்சக்தியிடம் செய்யப்படும் உரையாடல். அதனிடம் செய்யப்படும் வேண்டுகோள்.

தியானம் என்பது பிராத்தனையின் ஒரு நிலையாக கைகூடுவதாயினும் அதற்கு கடவுள் என்ற ஒருவர் இருந்தாக வேண்டிய அவசியமில்லை . நாத்திகர்களும் தியானம் செய்யலாம் .அடிப்படையில் மனதை ஒருமை படுத்துதல்தான் தியானம் என்பது . முதலில் மனதை கூர்ந்து கவனித்தல் . அதன் இயங்கு முறையை அறிந்து மெல்ல அதை கட்டுக்குள் கொண்டுவந்து அதன் சிதறுண்ட இயக்கத்தை சீரான வழியில் ஆற்றுப்படுத்துதல். தியானம் மனவல்லமையை அதிகரிக்கி£றது .

ஆனால் யோகம் என்பது தியானத்தை விட மேலான ஒன்று . யோகத்தின் தொடக்கப்புள்ளி தியானமே. ஆனால் யோகம் மனம் என்ற செயல்பாட்டை அதற்கு நேர் எதிர் திசைக்கு போய் இல்லாமலாக்க முயல்கிறது . தியானம் மனநதிக்கு கரைகட்டி சீராக ஓட செய்கிறது . யோகம் அந்நதியை திரும்ப அதன் உற்பத்தியிடத்துக்கே கொண்டு செல்ல முயல்கிறது . ஆகவே தியானம் எல்லாருக்கும் உரியது ,அவசியமானது . ஆனால் யோகம் அதன் பொருட்டு பிற அனைத்தையுமே விட்டு விட்டவர்களுக்கு மட்டுமே உரியது . வேறு செயல்களில் ஈடுபட்டபடி யோகத்தை செய்ய முடியாது . அறிவுப்பயிற்சிகூட யோகத்துக்கு தடையே .

யோகம் மத வழிபாடா ?
==================
தியானமே மதத்துடனும் கடவுளுடனும் பிரிக்கமுடியாத தொடர்பு உடையதல்ல என்றோம் .அப்படி இருக்க யோகம் மதத்துடனோ , கடவுளுடனோ தொடர்புடையது என்று சொல்ல வாய்ப்பே இல்லை .யோகம் முழுக்க முழுக்க உடல் , மனப்பயிற்சி மட்டுமே . யோகம் இந்தியமரபின் ஆறு தரிசனங்களில் ஒன்று . அடிப்படையில் இது நாத்திக தரிசனமாகும் . வெகுகாலம் யோகம் லௌகீக தரிசனமாகவே கருதப்பட்டது .பிற்காலத்தில் , குறிப்பாக சொல்லப்போனால் பகவத் கீதை இயற்றப்பட்ட ஐந்தாம் நூற்றாண்டில்தான் அதை ஆன்மீக மரபுகள் எடுத்தாள ஆரம்பித்தன. அதை விரிவாக பிறகு காணலாம் .யோகத்தின் மூல நூல்கள் எதிலுமே கடவுளுக்கு இடமில்லை . பதஞ்சலி யோக சூத்திரத்தில் கூட யோகப் பயிற்சியாளன் தன்னை தயாரித்துக்கொள்ள மேற்கொள்ளும் மனப்பயிற்சிகளில் ஒன்றாக மட்டுமே இறைவணக்கம் சொல்லப்பட்டுள்ளது . மேலும் யோகம் தத்துவ அடிப்படையிலே கூட கடவுள் என்ற கருதுகோளுக்கு எதிரானதாகவே இருக்கிறது . அது ஆதி இயற்கை என்ற கருதுகோளை பிரபஞ்சத்தின் மூலகாரணமாக வைத்த சாங்கிய மெய்ஞான மரபின் ஒரு பகுதி.

பழமையில் என்ன இருக்கிறது ?
=========================

தமிழ் சூழலில் இத்தகைய பழைய நூல் ஒன்றை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும்போது எழக்கூடிய முக்கியமான கேள்வி எதற்காக பழைய விஷயங்களை மீட்டுக் கொண்டுவரவேண்டும் என்பதுதான். இது ஒருவகையில் சரிதான். ஒரு சாதாரண வாசகனுக்கு பழைய விஷயங்கள் தேவை இல்லைதான். எளிய முறையில் தியானம் செய்யவோ, யோகம் பயிலவோ முயலும் ஒருவருக்கு கூட அவர் சார்ந்துள்ள அமைப்பு அளிக்கும் அறிமுகமே போதுமானது .

ஆனால் சுயமாக சிந்திக்க முயலக்கூடிய எவரும் பழைமையில் இருந்துதான் தொடங்கவேண்டும். ஏனெனில் எந்த சிந்தனையும் ஒரு தொடர்ச்சியின் விளைவாக உருவாவதேயாகும். ஏதாவது ஒரு துறையில் சுயமாக சிந்திக்கும் பயிற்சி கொண்டவர்கள் அத்துறையில் அதுவரை உள்ள மரபை உதாசீனம் செய்துவிட முடியாது என்பதை அறிவார்கள். . நமது மரபை கற்று விமரிசித்து மீறிவளர்ந்து முன்னெழவேண்டும். சாக்ரடீஸையும் ஸ்பினோசாவையும் ஹெகலையும் நீட்சேயையும் கற்று முன்னகர்ந்தவர்கள்தான் மேலை சிந்தனையை உருவாக்கியவர்கள் . நமது சுயமான சிந்தனையை நாம் அடையவேண்டும் , வெறும் மொழிபெயர்ப்புப்பணியே சிந்தனை என்று அமைந்துவிடக்கூடாது என்று இப்போதுபரவலாகசொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு நாம் நம் மரபுடன் ஆக்கபூர்வமான உறவைமேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படை விஷயம் இங்கே பேசப்படுவதே இல்லை. சிந்தனைகளை எவரும் அந்தரத்தில் உருவாக்கிக் கொள்ளமுடியாது.

பழைமை என்றால் காலாவதியானது என்ற எண்ணம் நமக்கு உண்டு. ஆனால் நாம் இந்திய பழைமையை ,தமிழ் பழைமையைமட்டுமே அப்படி சொல்வோம். மேலைபழமையை அப்படிச் சொல்லும் துணிச்சல் நமக்கு வராது, காரணம் மேலைப்பழமை மேலைநாட்டு புதுமையை தொடர்ந்து உருவாக்கியபடி இருப்பதை நாம் காண்கிறோம். இம்மானுவேல் காண்ட் பழையவர் என்று இன்று சொல்ல முடியாது, பின்நவீனத்துவக் கருதுகோள்கள் பல அவரிலிருந்து உருவாகி வருகின்றன. நீட்சே, ஹெகல் முதலியோரும் இன்றைய பின் நவீனசிந்தனைகளுக்கு உடனடி முன்னோடிகளாக இருக்கிறாகள். அந்தகோட்டை பின்னகர்த்தினால் ஸ்பினோஸாவின் வினாக்கள், சீனோவின் புதிர்கள், ஐயவாதிகளின் தர்க்க ஒழுங்குமுறை வரை செல்லும். நமது பழைமை ஏன் நமக்கு காலவதியானது என்று படுகிறது என்றால் ஒன்று நாம் அதனை கற்றதேயில்லை என்பதனால்தான். அவற்றை நவீனச்சூழலில் வளர்த்தெடுக்கவும் இல்லை .

தமிழில் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் நின்று சிந்திக்கும் நமக்கு முன்னோடியான சிந்தனையாளர்கள் நம் மரபில் யார்யார்? வைணவ சைவ உரையாசிரியர்கள், திருமூலர், ராமானுஜர், நம்மாழ்வார், திருவள்ளுவர் என அது பின்னோக்கி செல்லும். இவர்களில் பிற்கால சிந்தனையாளர்களான சைவ வைணவ ஆசாரியார்களை புரிந்துகொள்ள சில மூலநூல்களை புரிந்துகொள்ளவேண்டியுள்ளது. அவற்றில் முக்கியமானது பதஞ்சலி யோக சூத்திரம். நியாய சூத்திரங்கள், பிரம்மசூத்திரம் , சாங்கிய காரிகை மற்றும் முக்கியமான ஐந்து உபநிடதங்கள் ஆகியவை மற்ற நூல்கள். குறள், மணிமேகலை போன்ற சமண பௌத்த நூல்களை பயில அம்மதங்களுக்கு உரிய மூலநூல்களுடன் இம்மூல நூல்களும் அவசியமாக கற்கப்படவேண்டும். சாங்கியம் யோகம் நியாயம் வைசேஷிகம் வேதாந்தம் மீமாம்சை ஆகிய ஆறு தரிசனங்களும் இந்தியமரபில் உள்ள எல்லா சிந்தனை ஓட்டங்களிலும் அவற்றை தீர்மானிக்கக் கூடிய அடிப்படைக் கூறுகளாக உள்ளன.

உதாரணமாக பதஞ்சலி யோகசூத்திரங்கள் மீது பயிற்சி இல்லாத ஒருவர் திருமந்திரம், சிவஞானபோதம் இரண்டையும் எளியமுறையில்கூட புரிந்துகொள்ள முடியாது . நியாய தர்க்கமுறையில் சில அடிப்படைகளையேனும் அறியாமல் ஒருவர் வைணவ உரைகளுக்குள் நுழையவே இயலாது. அதாவது நாம் நம் மரபில் நமக்கு முன்புவரை இருந்த சிந்தனைகளை புரிந்துகொள்ள அச்சிந்தனைகளின் அடிப்படைத்தர்க்கங்களை அமைத்த சிலமூலநூல்களை முதலில்பயிலவேண்டியுள்ளது.

பழமை வழிபாடு மிக ஆபத்தானது .பலகாலம் நாம் அந்தச்சேற்றில் புதையுண்டு கிடந்தோம். பிறகு அதிலிருந்து மீண்டு பழமையை உதாசீனம் செய்யும் புதிய சேற்றில் சிக்கிக் கிடக்கிறோம். உலக சிந்தனையில் தங்கள் பங்களிப்பினை ஆற்றிய எந்த கலாச்சாரமும் தன்னுடைய பழைமையை போற்றியதும் அல்ல, உதாசீனம் செய்ததுமல்ல, சமகாலத்தேவைக்கு ஏற்ப ஆழ்மாக பயின்று விமரிசன ரீதியாக எதிர்கொண்டதே என்பதை நாம் காணலாம்.

எல்லாமே நம் மரபில் உள்ளது என்ற மூடநம்பிக்கை கொண்ட பலர் இன்று உண்டு. எல்லா சிந்தனைகளும், அறிவியல் கண்டுபிடிப்புகள் கூட
நம் முன்னோருக்கு தெரிந்திருந்தன என்ற பேச்சு அடிக்கடி நம் காதில் விழும். அதுவும் மரபை அறியாமல் வெறுமே வழிபட்டபடி இருப்பதன் விளைவே. இன்றைய தத்துவமும் அறிவியலும் பலமடங்கு வளர்ந்தவை என்பது உண்மையே. அதற்குக் காரணம் இந்நூற்றாண்டு அடைந்துள்ள மாபெரும் தகவல் தொடர்புவசதி. உலகம் முழுக்க உள்ள சிந்தனைகளை நாம் வீட்டில் இருந்தே கற்கமுடியும். கல்வி பரவலாக்கப்பட்டு விட்டிருக்கிறது. உயர்கல்விக்கான அமைப்புகள் பெருகியுள்ளன. ஆகவே நாம் இன்றைய சிந்தனைகளையே முதன்மையாகவும் முக்கியமாகவும் கற்று தெளியவேண்டும். அவற்றில்தான் நம் கால்கள் ஊன்றிருக்கவேண்டும்.அப்படியானால் எதற்காக பழைய சிந்தனைகளை கற்கவேண்டும்?

அறிவியலுக்கு சமகாலத்தன்மை முக்கியமானது. காரணம் அதன் அறிதல்முறைகளில் , அறிவமைப்பில் சீரான வளர்ச்சி உள்ளது. நியூட்டனுக்கு பிறகு ஐன்ஸ்டீன் கண்டிப்பாக ஒரு வளர்ச்சிநிலையே. இன்றைய இளம் அறிவியலாளன் கண்டிப்பாக நியூட்டனை விட பலமடங்கு விஷயம் தெரிந்தவனே. ஆனால் இலக்கியம் தத்துவம் ஆகிய இரு தளங்களிலும் இது பொருந்தாது.இலக்கியத்திலும் தத்துவத்திலும் வளர்ச்சிப்போக்கு என்று ஒன்று இல்லை என்பதே நாம் காண்பது. மாறுபட்ட கோணங்கள் வரலாம், மேலும் நுட்பமான தர்க்கங்கள் வரலாம். ஆனால் ஒரு முக்கியமான மூலதத்துவநூலின் பார்வை ஏறக்குறைய நிலையாகவே இருக்கும். அதன்பின்வந்த எல்லா விவாதங்களிலும் அதன் தரப்பு ஒலித்தபடியே இருக்கும். சாக்ரடீசின் ‘குடியரசு’ அதற்குப்பின் வந்த சிந்தனைகளால் வலிமைபெறுமேயல்லாது காலாவதியாகாது. இலக்கியமும் அதைப்போலத்தான்.கம்பனை பாரதி காலவதியாக்குவது இல்லை. இன்றைய புதுக்கவிதைகள் சங்க இலக்கியத்தை தாண்டிச்சென்றிருப்பதாக சொல்ல எவருமே துணியமாட்டார். ஆகவே இலக்கியத்திலும் தத்துவத்திலும் பழைமை என்பது எப்போதும் செல்லுபடியாக கூடிய ஒரு அடிப்படைக் கட்டமைப்புதான்.

மேலும் முக்கியமான ஒரு விஷயம் உண்டு. இலக்கியத்திலும்சரி தத்துவத்திலும் சரி முற்றிலும் புத்தம்புதிய சிந்தனை என ஒன்று உருவாக முடியாது. மனிதமனம் இயற்கையை எதிர்கொண்ட ஆரம்பநாட்களிலேயெ சிந்தனையின் அடிப்படைக்கேள்விகள், அடிப்படையான தர்க்கமுறைகள் முழுக்க உருவாகியிருக்கும். அவற்றில் விரிவாக்கமாகவும், அவற்றுக்கு இடையேயான விவாதமாகவும்தான் புதிய சிந்தனைகள் உருவாகின்றன.உதாரணமாக இன்றைய பின்நவீனசிந்தனைகளில் எந்தச் சரடையும் நாம் பின்னோக்கி நீட்டி கிரேக்க மரபுக்கு கொண்டு சென்று ஒரு துவக்கப்புள்ளியைக் காணமுடியும். மனிதன் சில அடிப்படைக் கோணங்களில்தான் பிரபஞ்சத்தை பார்க்கமுடியும் என்பது அவனது சிந்தனையின் எல்லையாக இருக்கலாம், அல்லது பிரபஞ்சத்தின் இயல்பாகவும் இருக்கலாம்.

ஆகவே நாம் பழைய மூலநூல்களைப் பயிலும்போது விதைகள் அடங்கிய ஒரு களஞ்சியம் நமக்கு கிடைக்கிறது. நமக்கு கற்பனை, தர்க்கத்திறன் ஆகியவற்றின் ஈரம் இருந்தால் அவைமுளைத்து நமது சிந்தனைகளை உருவாக்க கூடும்.​

​​...to be continued ...
 

Iyappan Krishnan

unread,
Jan 21, 2014, 4:24:32 AM1/21/14
to mintamil, Subashini Tremmel
​முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை,தொடர்ச்சி
 
 

யோகத்தின் வரலாற்றுப் பின்னணி

யோகத்தின் வரலாற்றுப்பின்னணி என்ன என்று புரிந்துகொள்வது யோகத்தை புரிந்துகொள்வதற்கு மட்டுமல்ல யோகத்தை புரிவதற்கும் அவசியமானது. தற்காலத்தில் யோக சாதனைகளில் பலவகைகளிலும் ஈடுபடுபவர்களிடம் அப்படிப்பட்ட புரிதல் ஏதும் இல்லை என்பது நாமறிந்ததே. யோகத்தை ஒருவிதமான பக்தியாக ‘ காதலாகி கசிந்து கண்ணீர் மல்கும்’ நிலையாக இவர்களில் சில விளக்கும் அபத்தமும் நமது சூழலில் நடந்துகொண்டுதான் உள்ளது. யோகம் எவ்விதமான மன எழுச்சிக்கும் எதிரான ஒன்று என்பதை அவர்கள் உணராமைக்கு காரணம் அதன் வரலாற்று இடத்தைப்பற்றிய அறிதல் இல்லாமையே.

பாரத தத்துவ மரபின் தொடக்கப்புள்ளி என்று வேதங்களை சொல்வது வழக்கம். குறிப்பாக ரிக் வேதம் .அதிலும் குறிப்பாக ரிக்வேதத்தில் உள்ள பத்தாம் மண்டிலம். அதில்தான் ஆன்மீக சிந்தனைக்கு அடிப்படையாக அமையக்கூடிய கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன . ஆதி தரிசனங்கள் பேசப்பட்டுள்ளன. வேதங்களில் பெரும்பகுதி தோத்திரப்பாடல்கள் மற்றும் பிரார்த்தனைகள் அடங்கியதே. அவற்றில் தத்துவத்துக்கு மிக குறைவாகவே பங்கு உள்ளது .அனுஷ்டானங்கள் , அதாவது வேள்வி மற்றும் வழிபாட்டுச் சடங்குகளுக்கு பாடப்படவேண்டிய மந்திரங்களாகவே அவை உள்ளன. அச்சடங்குகளின் நோக்கம் திட்டவட்டமான சில நன்மைகளே. அதிகாரம் ,செல்வம், வெற்றி, புகழ் முதலியவையே வேதங்களில் வேண்டப்படுகின்றன ஆகவேதான் கீதை முதலிய பிற்கால தத்துவ நூல்கள் வேதங்கள் உலகியல் நோக்கங்களை [சம்சாரத்தை] முன்வைப்பவை என்று சொல்லி நிராகரிப்பின் தொனியில் பேசுகின்றன. வேதங்கள் தத்துவ விவாதங்களுக்கு அடிப்படைகளாக அமைவதைப்பார்க்கிலும் வேள்வி மந்திரங்களாகவே பெரிதும் கருதப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வந்தன.

வேதங்கள் ஒற்றைப்படையான கருத்துத் தரப்பினை முன்வைப்பவை அல்ல. அப்படி ஒரு மாயத்தோற்றம் இன்று உருவாக்கப்பட்டுள்ளது . வேதகால ஞானிகளில் ஒருமைத்தரிசனம் அடைந்தவர்கள் உள்ளனர் .இருமை தரிசனத்தின் பால் நின்று தன்னை வழிபாட்டாளனாக வைத்துக் கொண்டவர்கள் உள்ளனர். நாத்திகர்களும் உள்ளனர் .குறிப்பாக வேதரிஷியாகிய பிரகஸ்பதியே பாரத லௌகீகவாத மதங்களின் முதல்குரு ஆவார் .வேதங்களின் அடிப்படைக் கருத்துக்கள் ஒன்றோடொன்று மோதி விவாதித்து உருவானதே உபநிடத காலகட்டம் . உபநிடதங்கள் ஏராளமாக உருவாகியிருந்துள்ளன. ஏறத்தாழ ஒத்த கருத்துள்ள உபநிடதங்களே தற்போது தொகுக்கப்பட்டு கிடைத்துள்ளன. அவற்றிலும் பலவகையான அடிப்படை கருத்துமாறுபாடுகள் உள்ளன. உபநிடத காலம் மாபெரும் தத்துவ விவாதங்களின் காலம் என்பதை அவை வலியுறுத்துகின்றன.

அந்த தத்துவ விவாதங்களின் விளைவாக பலவகைப்பட்ட பிரபஞ்சப் பார்வைகள் தத்துவத் தரப்புகளாக வலுப்பெற்று வளர்ந்தன .அவற்றையே தரிசனங்கள் என்கிறோம் . ஆறுதரிசனங்கள் முக்கியமானவை. அவற்றில் ஒன்றுதான் யோகம். அதன் வரலாற்று நிலை அதுவே .

ஏன் மாறுபட்ட தரப்புகள்?

ஏன் அத்தனை மாறுபட்ட தரப்புகள் காணப்படுகின்றன ? அப்படியென்றால் பாரத மெய்ஞானிகள் முழுமுற்றான உண்மையை அடையவில்லையா? பிற்காலத்தில் தனிமனிதர்களால் உருவாக்கப்பட்ட மதங்களுடன் ஒப்பிட்டால் நம் மரபின் கருத்து முரண்பாடுகள் நம்மை குழப்பக் கூடும். உபநிடதகாலத்தில் பல ஏசுக்கள் பல முகம்மதுக்கள் பல புத்தர்கள் இருந்திருக்கிறார்கள். ஏனெனில் உபநிடத காலம் என நாம் சொல்வது ஏறத்தாழ ஐநூறு வருட காலகட்டத்தையாகும். அக்கால முக்கிய நூல்கள் பிறகுதான் தொகுக்கப்பட்டன. அவர்களுக்குள் தரிசன வேறுபாடுகளும் காணப்பட்டுள்ளது சாதாரணமே. பிற்கால மெய்ஞானிகளுக்குள்தான் எத்தனை வேறுபாடுகள் உள்ளன அல்லவா?. அப்பட்டமான மதவெறியர்களன்றி வேறு எவருமே அவர்களில் ஒருவர் மட்டுமே ஞானி அவர் சொன்னது மட்டுமே உண்மை என்று சொல்லமாட்டார்கள்.

உண்மை ஒன்றே. அதை விளக்கும் விதமே மாறுபடுகிறது .விளக்கப்படும் போது பேருண்மை ஓர் அனுபவமாக அல்லாமல் ஓர் கருத்தாகவே நம்மை அடைகிறது .பிறவிக் குருடனுக்கு நிறத்தை விளக்கமுயல்வதுபோலத்தான் அதுவும்.அனுபவத்தை பற்றிய எந்த விளக்கமும் அனுபவத்துக்கு பதிலாகாது.அனுபவித்தறிந்த மெய்ஞானிகளின் அனுபவத்தை அவர்களுடைய சொற்கள் வழியாக சென்று துளியேனும் அடைய முயல்வதே அவசியமானது.அவர்கள் விளக்கங்களை ஒப்பிட்டு குழப்பம் அடையும்போது நாம் நம்முடைய அறியாமையையே வெளிப்படுத்துகிறோம். ‘பிரக்ஞையே பிரம்மம்’, ‘இங்குள்ள எல்லாவற்றிலும் இறை உறைகிறது’, ‘ அளவில்லா கருணையும் நிகரில்லா கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்’, ‘ ஆதியில் வார்த்தை இருந்தது’ போன்ற வரிகளுக்கிடையே ஆழமான அனுபவத்தின் அடிப்படையில் பெரிய வேறுபாடுகளில்லை. வேறுபாடுகள் புரிதலில் , தர்க்கத்தில், சூழலில்தான் உள்ளன
தரிசனங்களின் அடிப்படைகள்


உபநிடத காலத்த்திலேயே உருவாகி பிறகு வலுப்பெற்ற காலத்தை தரிசனங்களின் காலகட்டம் என்கிறார்கள் . தரிசனங்கள் ஆறு. சாங்கியம் யோகம் வைசேஷிகம் நியாயம் பூர்வ மீமாம்சம் உத்தர மீமாம்சம் [அல்லது வேதாந்தம்] . தரிசனங்கள் என்பவை அடிப்படையில் வேதங்களை விடவும் காலத்தால் முந்தியவை .அதிபுராதன காலத்தில் பழங்குடிகளாக வாழ்ந்த மனித மனத்தில் எப்படியோ உருக்கொண்டவை. பிறகு அவை மெல்ல மெல்ல தத்துவங்களாக வளர்ந்தன. உபநிடதங்களுடன் விவாதித்தே அவை வளர்ச்சி அடைந்தன என்று சொல்லலாம். அதேபோல உபநிடதங்களும் தரிசனங்களின் அடிப்படைக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டன என்று படுகிறது. பிறகு சில முதல் குருநாதர்கள் தரிசனங்களை தொகுத்து சூத்திர நூல்களை ஆக்கி தத்துவத் தரப்புகளாக , மதங்களைப்போல ஆக்கினார்கள் . அவ்வாறு தரிசனங்கள் நமது சிந்தனையின் முக்கிய அடித்தளங்கள் ஆயின.

சாங்கியத்தின் முதல்குரு ‘சாங்கிய காரிகை’ என்ற வகுத்துரை நூலை ஆக்கிய கபில மகரிஷி. யோகத்துக்கு ‘யோக சூத்திரங்களை’ ஆக்கிய பதஞ்சலி மகரிஷி முதல்குரு. ‘வைசேஷிக சூத்திர’ங்களின் ஆசிரியரான கணாத ரிஷி வைசேஷிகத்தின் முதல்குரு. ‘நியாய சூத்திரங்க’ளை ஆக்கிய கோதம ரிஷி நியாயத்தின் முதல்குரு எனப்படுகிறார்.பூர்வ மீமாம்சைக்கு ஜைமினியும் உத்தர மீமாம்சைக்கு பாதராயணரும் குருநாதர்கள் .

சாங்கிய தரிசனம் இப்பிரபஞ்சமானது செயலூக்கம் , செயலின்மை ,சமநிலை [ ரஜஸ், தமஸ், சத்வம்] என்ற முக்குணங்களினால் ஆன ஆதிப்பிரகிருதியால் [அல்லது மூலயியற்கை] ஆனதாக இருந்தது என்கிறது . அக்குணக்கள் அதில் முழுமையான சமநிலையிலிருந்தன. அந்த சமநிலை குலைய நேரிட்டமையால் ஆதியியற்கை செயல்பட ஆரம்பித்து நாம் காணுமிந்த சலனவடிவ பிரபஞ்சம் உருவாயிற்று. மீண்டும் அந்த செயல்வடிவை அடைவதே அவ்வியற்கையின் நோக்கம் என்கிறது சாங்கியம் . ஆகவே சாங்கியத்தின் அடிப்படைக் கருத்து பொருளிலிருந்தே பொருள் உருவாக முடியும் என்பதாகும். கருத்திலிருந்து பொருள் உருவாக முடியாது என அது வாதிட்டது . இதை அவர்கள் சத் காரிய வாதம் என்றார்கள் .

வேதங்கள் உபநிடதங்கள் போன்றவை பெரும்பாலும் முன்வைக்கும் கருத்து பிரக்ஞையே பொருளை நமக்கு கற்பித்துக் காட்டுகிறது என்பதாகும் . நமது பிரபஞ்சக்காட்சி நம் பிரக்ஞையின் விளைவு . ஒட்டுமொத்த பிரபஞ்சம் அதேபோன்ற ஓர் ஒட்டுமொத்த பிரக்ஞையின் விளைவு. பைபிள் கூட கடவுளின் சொல்லிலிருந்து பிரபஞ்சம் உருவானதாக சொல்கிறது . கடவுள் சக்தியால் பிரபஞ்சம் படைக்கப்பட்டதாக சொல்லும் குர் ஆன் கூட அதற்கு உரிய மூலப்பொருள் பற்றி சொல்லவில்லை. அறியமுடியாத மூலக்கருத்தையே அது உருவகம்செய்கிறது. அவை எல்லாமே கருத்துமுதல்வாத தரப்புகள் ஆகும். அந்த ஆதிமூலமான ‘கருத்தே’ கடவுள் அல்லது பிரம்மம் அல்லது அல்லா அல்லது யகோவா. ஆனால் சாங்கியம் பொருள்முதல்வாதத் தரப்பு. இந்த வேறுபாட்டை நாம் மிகத்தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.

வைசேஷிகமும் பொருள்முதல்வாத தரப்புதான். அது ஆதிப் பொருள் அணுக்களே என்கிறது .அடிப்படைப்பொருட்களான நிலம், நீர்,காற்று, நெருப்பு ஆகியவை அவற்றின் ஆகச்சிறிய துகள்களினாலான அணுக்களினாலானவையாகும். அவற்றின் கூட்டு மூலமே பிற பொருட்கள் உருவாகின்றன. வைசேஷிகத்தின் அடிப்படைக் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட துணைத்தரிசனமே நியாயம் ஆகும். நியாயம் இவ்வடிப்படைகளை தர்க்கபூர்வமாக எப்படி நிர்ணயிப்பது என்று பேசுகிறது. அதேபோல சாங்கியத்தின் துணைத்தரிசனமே யோகம் . நான்குமே அடிப்படையில் பொருள்முதல்வாதச் சிந்தனைகள். அதாவது அவை உருவகித்துக் காட்டும் பிரபஞ்சத்தில் கடவுளுக்கு ஸ்தானமே இல்லை .

வேதங்களை முழுமுதல் ஞானமாகவும் வேத அடிப்படையிலான விதிகளையும் சடங்குகளையும் மனிதனை மீறியவையாகவும் குறிப்பிடும் பூர்வ மீமாம்சை புரோகிதர்களின் தரிசனமாகும்.காது இன்று தனியான தரிசனமாக இயங்கவில்லை . ஆனால் இந்துமத்தின் பெரும்பாலும் எல்லா உட்கூறுகளிலும் அது ஊடுருவி உள்ளது.

முழுமுதல் கருத்துவடிவமான பிரம்மமே உண்மை மீதி எல்லாமே அதன் மாயத்தோற்றங்கள் என்று வாதிடுகிறது உத்தரமீமாம்சம். அது பிற்பாடு அத்வைதவேதாந்தமாக வளர்ந்தது .
யோகம் என்ற தரிசனம்

சாங்கியத்தின் பிரபஞ்சக் கொள்கையே யோகத்துக்கும் ஏற்புடையது.ஆகவே யோகம் சாங்கியத்துடன் பிணைக்கப்பட்டு ‘சாங்கியயோகம்’ என்றே முன்பு குறிப்பிடப்பட்டு வந்தது .

யோகம் எப்படி உருவாயிற்று என்றறிய நாம் ‘புருஷன்’ என்ற கருதுகோளை புரிந்துகொள்ளவேண்டும் . உபநிடதங்களுடன் சாங்கியம் விவாதித்தபோது ஒரு முக்கியமான வினா எழுந்தது . மூன்று குணங்கள் எப்படி ,எவரால் அறியப்படுகின்றன? அறியப்படாதபோது அவை இல்லை என்றல்லவா பொருள் ?

அதற்குப் பதிலாக சாங்கியர் உருவாக்கிய கொள்கைதான் ‘புருஷன்’ என்பது. பிரகிருதி என்பதை எப்படி உருவகிக்கிறோம் ? பூமியில் உள்ள அத்தனை பொருட்களையும் ஒட்டு மொத்தமாக தொகுத்து ஒற்றைப் பொருளாக கணித்து பிரகிருதி என்கிறோம் .அதேபோல எல்லா மனிதமனங்களையும் ஒன்றாக சேர்த்து உருவகிக்கப்பட்ட ஒற்றைப் பேரிருப்பே புருஷன் .

ஆதியியற்கை போலவே புருஷனும் ஆதிவடிவம் . முதலிறுதி அற்றவன். அவனே பிரகிருதியை பார்ப்பவன், அதன் குணங்களை அவனே அறிகிறான். அவனது அறிதல் மூலமே அக்குணங்கள் உருவாகின்றன.ஒவ்வொரு மனிதனிலும் உறைவது அந்த புருஷனின் ஒரு துளியே .ஆனால் அவனும் முக்குணங்களின் சமநி£லை சிதறடிக்கப்பட்ட நிலையில்தான் காணப்படுகிறான். அவன் தன்னை ஒரு துளியாகவே அறியமுடிகிறது.ஆகவே அவன் காணும் பிரகிருதியும் துளிகளாக உள்ளது . புல்நுனியில் தத்தளிக்கும் பனித்துளிமீது உருமாறியபடியே மிதந்துசெல்லும் மேகத்தை பார்க்க முயல்வதுபோன்ற செயல் இது.

ஆகவே முழுமுதல் அறிதலை சாத்தியப்படுத்தும் பொருட்டு யோகம் பிறந்தது. நவீன மொழியில் அதைஇப்படி சொல்லலாம். நாம் பிரபஞ்சத்தை நமது தேவைகள் ,ஆசைகள், நோக்கங்கள், விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அறிய முடிகிறது. அதாவது நாம் அறிவது நம்மால் திரிக்கப்பட்ட உண்மையையையே .[Distorted truth] மிகப் புறவயமானதாகக் கருதப்படும் அறிவியல் கருத்துக்களில்கூட அதுவே நிகழ்கிறது என கூறும் நவீன சிந்தனையாளர் உண்டு. அதேபோல நாம் நமது உடலின் அமைப்பு , நமது பிறப்பு வளர்ப்புச் சூழல் ,நமது பொதுவான அறிவுச்சூழல், நமது அறிவுத்துறைசார்ந்த தர்க்கங்கள் ,நமது ஆய்வு உபகரணங்கள் மற்றும் ஆய்வு முறை ஆகியவற்றுக்குக் கட்டுப்பட்டே நாம் உண்மையை அறிய முடிகிறது .நாம் அறியும் உண்மையானது அவ்வாறு எல்லை வகுக்கப்பட்டதாக உள்ளது. அதைவிட முக்கியமாக நம் அறிதல்களை கட்டுப்படுத்துவது மொழி உருவாக்கும் எல்லையாகும். வழக்கமான மொழி மட்டுமல்ல , அறிவியலிலும் கணிதத்திலும் பயன்படுத்தப்படும் அடையாளமொழி கூட உண்மையைக் கட்டுப்படுத்துகிறது. அதாவது நாம் அம்மொழிகள் வழியாக அறிந்து விவாதித்து நிறுவும் எந்த உண்மையும் அம்மொழிகளின் அடிப்படைத் தர்க்கத்துக்கு கட்டுப்பட்டது தான்.

அதாவது நாம் தற்பொழுது பல்வேறு அறிதல்முறைகள் வழியாக அடையும் உண்மையானது துண்டாடப்பட்ட உண்மையாகும் [Fragmented truth ] நவீன அறிவியலில் முக்கியமான குறைபாடாக பலகோணங்களில் பலரால் இது குறிப்பிடப்படுவதைக் காணலாம் .ஒரு துறையின் உண்மை பிற துறைகளால் நிராகரிக்கப்படுகிறது .மாசானபு ·புகுவேகாவின் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி ‘ என்ற மகத்தான நூலில் அவர் அத்தகைய ‘துண்டு உண்மை’கள் வேளாண்மையில் செயல்படுத்தப்பட்டதன் மூலம் எப்படி உலகம் பேரழிவை நோக்கி செல்ல ஆரம்பித்தது என நிறுவுவதை காணலாம். ஒரு சிறு துண்டு தான் உண்மை என்றால் மீதியெல்லாமே பொய் என்றுதானே பொருள்? ·புகுவேகா அவ்வடிப்படையில் ஐன்ஸ்டீனை முற்றாக நிராகரிக்கிறார் .அவர் அது ஒரு குறிப்பிட்ட கோணத்தில் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியை விளக்கும் அரை உண்மைதான் ,அதனால் எந்த பயனும் இல்லை என்கிறார் . ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’யில் ஒரு மகத்தான முழு உண்மையின் தரிசனத்தை ·புகுவேகா கண்டடைந்ததை அறியலாம்.

ஆகவேதான் மெய்ஞனிகள் ‘எல்லா கருத்துநிலை உண்மைகளும் அரை உண்மைகளே என்றார்கள்’ [All phenomenal truths are half truths - நடராஜ குரு Wisdom - The absolute is adorable என்ற நூலில்]பார்க்கும் தரப்பை முழுமைப்படுத்திக் கொள்ளுவதன் வழியாக பார்க்கப்படும் உண்மையை முழுமைப்படுத்திக் கொள்ள முடியும் என்ற அறிதலே யோகத்தின் ஆதாரம். அது மனதின் சலனங்களை முழுமையாக அழித்து குணங்களில்லாத ,சலனமற்ற ஒரு மனதை அடைய முயல்கிறது . அம்மனம் அறியும் பிரபஞ்சமும் குணங்களில்லாத ,சலனமற்ற ஒன்றாக விளங்கும் .அதுவே முழுமனம் Absolute mind] அது அறியும் உண்மையே முழு உண்மை [Absolute truth ]

மேற்கத்திய அறிவியங்கியல் [Epistemology] மீது மிதமிஞ்சிய நம்பிக்கையையும் மோகத்தையும் நமது கல்விமுறையிலிருந்து பெற்றுக் கொண்ட சிலர் உடனடியாக இந்தக் கருத்தை தூக்கி வீச முயலலாம். அவர்கள் மேற்கத்திய மொழியியல் [Linguistics] உளவியல் [psychology] போன்ற பல அறிவுத்துறைகளில் அதற்கான தேடல் உள்ளதைக் கவனிக்கவேண்டும். யோகம் ஒரு மாயத்தையோ மந்திரத்தையோ அல்லது அற்புதத்தையோ முன்வைக்கவில்லை . அது நம்பிக்கையையும் வலியுறுத்தவில்லை . அது வகுத்துரைப்பது பயிற்சிகளையே.

முழுமையான அறிதல் என்பது சாத்தியமா என்ற வினாவை , அறிவுத்துறைகளில் ஈடுபடும் நவீனமனதுக்கே உரிய [ஓர் எல்லைவரை அவசியமான ] ஐயநிலையுடன் [Skepticism ] அணுகலாம். ஆனால் யோகத்தின் பயன்கள் அதன் பல்வேறு திரிபு நிலைகளிலும் ,எளிமைப்படுத்தப்பட்ட நிலைகளிலும்கூட உலகங்கும் நிரூபிக்கப்பட்டவை என்பது நம் முன் உள்ள உண்மை. மிக ஆரம்பநிலையிலேயே கூட நம் மனதின் முழு சக்தியை பயன்படுத்த அவை உதவுகின்றன , நமது அறிதல்களில் மிக ஆழமான மாற்றங்களை உருவாக்குகின்றன .

 

... to be continued ..

 

Iyappan Krishnan

unread,
Jan 21, 2014, 6:28:57 AM1/21/14
to mintamil, Subashini Tremmel

3. யோகம் ஒரு முன்னுரை [தொடர்ச்சி ]

http://www.jeyamohan.in/?p=762


                                 

யோகத்தின் இன்றைய முகம்
பதஞ்சலி யோக சூத்திரம் முன்வைக்கும் யோக தரிசனத்தை நாம் சாங்கியதரிசனத்தின் துணைத்தரிசனமாகவே கற்கவேண்டும். இந்து ஞானமரபின் அனைத்து குருகுல அமைப்புகளிலும் கபில முனிவரின் சாங்கிய காரிகையும் பதஞ்சலி யோக சூத்திரங்களும் சேர்த்தே கற்பிக்கப்பட்டன. சொல்லப்போனால் ஆறுதரிசனங்களையும் ஒன்றாகவே கற்பது சிறந்தது. நாராயண குருவின் உவமையை இங்கே நினைவுகூரலாம். ஐந்து தரிசனங்களும் ஐந்து விரல்களைப் போன்றவை. அவை ஒன்றுசேர்ந்து செயல்பட்டாக வேண்டும். அந்த ஐந்துவிரல்களில் வேதாந்தம் சுட்டு விரல் என்றும் யோகம் கட்டைவிரல் என்றும் சொல்லப்படுவதுண்டு.அதாவது பிற அனைத்துத் தரிசனங்களுடனும் இணைந்து செயல்படும் தன்மை யோகத்துக்கு உண்டு. யோகம் ஒரு தரிசனத்துடன் இணையும்போது அது செயல்வடிவம்கொள்கிறது.

ஆனால் கடந்த ஐம்பதாண்டுகளாக யோகம் உலகளாவ பெற்ற கவனம் காரணமாக யோகசூத்திரம் மைய இடத்துக்கு வந்துவிட்டிருக்கிறது. பல குருகுலங்களில் பதஞ்சலி யோகசூத்திரம் மட்டுமே கற்பிக்கப்படுகிறது. பதஞ்சலி யோகசூத்திரம் பிற தரிசனங்களின் துணை இல்லாமலேயே நிற்கக் கூடிய ஒரு சுதந்திரமான பிரதி என்ற கௌரவம் அதற்கு கைவந்திருக்கிறது. ஆகவே இன்று அதை சாங்கியதரிசனத்தின் ஒரு பகுதியாக கருதவேண்டியதில்லை. எங்காவது சூத்திரங்கள் புரியாமல் ஆகுமென்றால் மட்டும் சாங்கிய தரிசனக் கருத்துக்களை தொட்டுக்கொண்டால்போதும்.

இத்தகைய மாறுதல் மரபுக்கு உகந்ததா என்ற கேள்வி எழலாம். இதன் மூலம் நாம் எதையாவது இழக்கிறோமா என்பது இன்னும் பொருத்தமான கேள்வி. காலமாறுதல்கள் பல விஷயங்களை தவிர்க்க முடியாதவையாக ஆக்குகின்றன என்பதே அதற்குப் பதில். நாம் இன்று கல்வி கற்கும் முறையும்சரி, சிந்திக்கும் முறையும் சரி, விவாதிக்கும் முறையும் சரி, நம் மரபு சார்ந்தவை அல்ல. நம்முடைய மரபான அறிவியங்கியல் இப்போது ஒரு பழைய விஷயமாக ஆகிவிட்டிருக்கிறது.

பண்டைக்காலத்தில் கருத்துக்களை நியாய சாஸ்திர அடிப்படையில் விவாதித்தார்கள். உண்மையை புறவயமாக வகுத்துக்கொள்வதற்கும் விவாதிப்பதற்குமான தர்க்க அடிபப்டைகளை வகுத்துச் சொல்லும் சிந்தனைமுறையே நியாயம். ஆறுதரிசனங்களில் ஒன்றாகவும், வைசேஷிக தரிசனத்தின் கிளையாகவும் விளங்கிய நியாயம் பின்னர் தனித்த வளர்ச்சியை அடைந்தது. அது வைசேஷிகத்தில் இருந்து முழுமையாகவே பிரிக்கப்பட்டது. நியாயம் ஒரு பிரபஞ்ச தரிசனம் என்ற நிலையில் இருந்து எல்லா பிரபஞ்சதரிசனங்களையும் வகுத்துக்கொண்டு விவாதிப்பதற்கான அடிப்படைத் தர்க்கக் கட்டுமானமாக ஆகியது.

இந்த வளர்ச்சிக்கு பௌத்தம் ஆற்றிய பங்களிப்பு மிக மிக முக்கியமானதாகும். பௌத்த ஆசிரியர்களில் அஸங்கர், வசுபந்து, நாகார்ஜ்ஜுனர், திக்நாகர், தர்மகீர்த்தி போன்று பெரும்பாலானவர்கள் நியாயத்துக்கு தங்கள் உரை ஒன்றை வழங்கியிருக்கிறார்கள். இந்த உரைகள் வழியாக நியாயம் மீண்டும் மீண்டும் பிறவி கொண்டு வளர்ந்தது. சென்ற நூற்றாண்டுவரைக்கும் நியாயமே நம்முடைய விவாத அரங்குகளை தீர்மானித்தது. நியாயம் கற்பதென்பது அறிவுச்செயல்பாட்டின் அடிப்படையாகக் கருதப்பட்டது.

இன்றும்கூட நாம் பழைமையான குருகுலங்களில் மரபான தத்துவக் கல்வி கற்றவர்களிடம் நம்முடைய அறிதல்களைப் பகிர்ந்துகொள்ள முடிவதில்லை. அவர்களின் கல்வி நியாய அடிப்படையில் அமைந்ததாக இருக்கிறது 1988 ல் விஷ்ணுபுரம் எழுதுவதற்காக பாலக்காட்டில் ஒரு மீமாம்சை அறிஞரைப் பார்க்கச்சென்றேன். அவருக்கு நான் சொன்னது புரியவில்லை. மீமாம்சை குறித்து மேலைநாட்டு அறிஞர்களின் எந்தக் கருத்தும் புரியவில்லை. காரணம் முற்றிலும் வேறான ஒரு அறிவியங்கியல் சார்ந்து நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன்.

ஆங்கிலக் கல்வி இந்தியாவில் பரவியபோது மேலைநாட்டு அறிவியங்கியல் நம்மிடையே செல்வாக்கு பெற்றது. ஐரோப்பிய சிந்தனைகள் அனைத்துமே கிரேக்க தர்க்கவியலை அடிபடையாகக் கொண்டவை. ஆங்கிலக் கல்வி இந்தியாவில் பரவிய ஆரம்ப நாட்களில் தர்க்கவியல் [லாஜிக்] மிக முக்கியமான ஒரு கல்வியாக இருந்தது. தர்க்கவியலின் ஒரு பகுதியாகவே மேலைத்தத்துவம் கற்பிக்கப்பட்டது. தர்க்கவியலில் பட்டப்படிப்பும் பட்டமேற்படிப்பும் படிப்பதும் ஆதாரமான கல்வியாகக் கருதப்பட்டன.

காரணம் அன்றைய பிரிட்டிஷ் அரசால் முன்னிறுத்தப்பட்ட சட்டம், அறிவியல் என்ற இரு துறைகளும் கிரேக்க தர்க்கவியலில் வேரூன்றியவை. அவையே நம் இன்றைய நவீன வாழ்க்கையை உருவாக்கின. ஆகவே மெல்லமெல்ல நியாயத்தின் அறிவியங்கியல் காலாவதியானது.

அக்காலத்தில் இந்தியவியல் [இண்டாலஜி] உருவாகியது. இந்திய மூலநூல்கள் ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் மொழியாக்கம்செய்யப்பட்டன. ‘இந்திய ஞானத்தை கிரேக்க தர்க்கவியல் சார்ந்து புரிந்துகொள்ளும் பெருமுயற்சி ‘ என்று நாம் இந்தியவியலை வகுத்துக் கொள்ளலாம்.

இந்தியவியல் வழியாகவே நாம் அனைவரும் இந்திய ஞானமரபை புரிந்துகொண்டிருக்கிறோம். இது ஒருவரலாற்று விபத்து. பலநூற்றாண்டுக்கால இடைவெளியால் நம் மரபான கல்வியமைப்புகள் அழிந்தன. நம்முடைய பொதுக்கல்வியும் மரபான முறையை அறவே மறந்து மேலைக்கல்விமுறையை சார்ந்ததாக ஆகியது. எனவே வேறு வழியில்லை

விவேகானந்தருக்கும் ராமகிருஷ்ணபரமஹம்ஸருக்கும் இடையேயான உரையாடலில் இந்த முரண்பாடு மீண்டும் மீண்டும் மேலெழுந்து வந்ததை விவேகானந்தர் பலவாறாகப் பதிவுசெய்திருக்கிறார். குறிப்பாக உருவ வழிபாடு சார்ந்து அவருக்கும் ராமகிருஷ்ணருக்கும் நிகழ்ந்த உரையாடலையும், பின்னர் விவேகானந்தர் ராமகிருஷ்ண பரமஹம்ஸரைப்புரிந்து கொண்டதையும் உதாரணமாகச் சொல்லலாம்.

ராமகிருஷ்ணர் வேதாந்தி. ‘பிரம்மமே நான்’ என உணர்ந்து சமாதியோகத்தில் அமர்பவர். ஆனால் கிருஷ்ணபக்தியிலும் காளிபக்தியிலும் ஆடிப்பாடி நெகிழ்ந்து கண்ணீர் விட்டு திளைக்கவும் செய்தார். அதை ஏற்க விவேகானந்தரால் முடியவில்லை. ஒன்று இன்னொன்றை மறுப்பது என்று அவர் புரிந்துகொண்டார். நீண்ட ஒரு ஆன்மீகப் பரிணாமத்திற்குப் பின்னரே அதிதூய ஆன்மீக அனுபவமும் உருவவழிபாடு சார்ந்த பக்தியும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் என்று உணர்ந்தார்.

இதே முரண்பாட்டை நாராயணகுருவுக்கு நடராஜகுருவுக்கும் இடையேயான உரையாடல்களிலும் நாம் காணமுடியும். விவேகானந்தர் பிற்பாடு ஆற்றிய பெரும்பணி என்பது இந்தியவியல் உருவாக்கி அளித்த மேலைத்தர்க்கரீதியான இந்தியசிந்தனைக் கட்டுமானத்த்தில் உள்ள இடைவெளிகளை கீழைத்தர்க்கத்தின் அறிதல்கள் மூலம் நிரப்புவதைத்தான். அதையே நடராஜ குருவும் செய்தார் என்று சொல்லலாம்.

நியாயத்தைப்போலவே யோகமும் அதன் மூலத்தரிசனமாகிய சாங்கியத்தில் இருந்து பிரிந்து தனியான வளர்ச்சியை அடைந்தது. அதை நிகழ்த்தியவர்களும் பௌத்தர்களே. பௌத்த யோகாசார மரபுக்குப் பின்னர் யோகம் என்பதே முற்றிலும் இன்னொன்றாக ஆகிவிட்டது. பின்னர் அந்த யோகமரபையே அத்வைதம் போன்ற பிற்காலத்தைய வேதாந்த மரபுகள் எடுத்தாண்டன.

இன்று நாம் காணும் யோகம் என்பது உண்மையில் இவ்வாறு பல படிகளிலாக பரிணாமம் கொண்டு வளர்ந்துவந்த ஒன்று. அந்த ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் மூலநூலாக நின்றுகொண்டிருக்கிறது பதஞ்சலி யோக சூத்திரம். இந்திய மரபில் ஒரு சிறப்பியல்பு உண்டு என்பதை நாம் காணலாம். பெரும்பாலும் மூலநூல்களை மறுவாசிப்பும் மறுவிளக்கமும் கொடுப்பதன் மூலமே சிந்தனை பரிணாமம் கொள்கிறது. பதஞ்சலி யோக சூத்திரமும் அவ்வாறு வளர்ந்ததுதான். இந்த உரை வரை.

ஆக, இந்த நூற்றாண்டில் நாம் பதஞ்சலி யோக சூத்திரத்தை அணுகும்போது அணுகும் அறிவுச்சூழலும் மாறிவிட்டிருக்கிறது. அந்நூலைப் பொருள்கொள்ளும் முறையும் மாறியிருக்கிறது. மேலைத்தருக்கப்பின்னணியில் பௌத்தம் வழியாக வளர்ந்து வந்த யோகத்தை நாம் இன்று வாசிக்கிறோம். ஆகவே அதை ஆறுதரிசனங்களில் ஒன்றாக வாசிக்க ஆரம்பிப்போம் என்றால் அது அதைச் சுருக்குவதாகவே அமையும்.

யோகத்தின் நவீனவாசிப்பு

இன்றைய உலகளாவிய சிந்தனைச் சூழலில் யோகத்தை நாம் எப்படி வாசிப்பது? வழக்கமாக செய்யப்படும் இரு வகை வாசிப்புகள் உண்டு. ஒன்று மத ரீதியான வாசிப்பு. பண்டைய ரிஷிகள் கண்டடைந்த மெய்ஞானத்தின் இறுதி வடிவம் அது என்று எடுத்துக்கொண்டு அதை வழிகாட்டிக் கட்டளைகளாக மட்டும் காண்பது. இரண்டு, பண்டைய சிந்தனைகளை தெரிந்துகொள்ளும் வரலாற்று ரீதியான ஆர்வம். இரண்டுக்கும் அவற்றுக்கான பங்களிப்பு உண்டு.

அவற்றுக்கும் அப்பால் ஒரு வாசிப்புச் சாத்தியமும் உண்டு என்பதைச் சுட்ட விரும்புகிறேன். கிரேக்க தத்துவ நூல்கள் கிரேக்க மதம் மற்றும் கிரேக்கப் பண்பாட்டின் விளைவுகள். ஆனால் மேலைத்தத்துவம் அவற்றை தத்துவமூலநூல்களாகக் கண்டு காலந்தோறும் வளர்ந்து வரும் தத்துவசிந்தனைகளுடன் தொடர்பு படுத்தி விவாதித்துக்கொண்டே இருக்கிறது. அத்தகைய ஒரு வாசிப்பு பதஞ்சலி யோக சூத்திரம் போன்ற நூல்களின் அடிப்படை மெய்யறிதல்களை மானுடப்பொதுவாக ஆக்கவும், மானுடசிந்தனையின் அனைத்து தளங்களுடனும் இணைத்து விரிவாகப்புரிந்துகொள்ளவும் உதவக்கூடியதாகும். அதுவே இன்றைய அடிப்படைத்தேவை என்பது என் எண்ணம்.

இவ்வாறான நவீன வாசிப்பில் நாம் தொடர்புபடுத்திக்கொள்ள வேண்டிய நவீனச் சிந்தனைகள் மூன்று தளங்களைச் சார்ந்தவை. ஒன்று தத்துவம். மேலைத்தத்துவ சிந்தனை என்பது தொடர்ச்சியான வளர்ச்சிப்போக்கு கொண்ட ஒன்று. அத்தகைய ஒரு சீரான வளர்ச்சி இந்திய சிந்தனையில் இல்லை என்பது உண்மை. அதற்கு பல காரணங்கள் உண்டு என்றாலும் முக்கியமான காரணம் இந்தியாவில் இன்று இந்திய சிந்தனை கற்பிக்கப்படுவதில்லை என்பதே. நாம் எட்டாம் வகுப்பு படிப்பதற்குள் சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாடில் வரை அறிமுகம் செய்துகொண்டு விடுகிறோம். இந்திய தத்துவத்தை சிறப்புப்பாடமாக எடுத்து பட்டமேற்படிப்பு படித்தாலொழிய கபிலரை நாம் அறிமுகம்செய்துகொள்ள முடியாது.

அத்துடன் நம் கல்விமுறையின் அடித்தளமாக இருப்பது மேலைநாட்டு அறிவியலும் தத்துவமும்தான். ஆகவே நம்முடைய சிந்தனைமுறையின் அடியில் இந்திய தத்துவமரபின் அம்சமே இல்லை. இதனால் நம்மால் இந்திய தத்துவ மரபை ஒரு தொல்பொருள் என்ற அளவில் தகவல்களாக மட்டுமே அணுக முடிகிறது. அதை நம் சிந்தனைகளுக்கான கருவியாகக்கொள்ள முடிவதில்லை. ஆகவே நம் தத்துவ மரபு நவீனகாலகட்டத்தின் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்படியாக வளர்க்கப்படவில்லை. சிற்சில விதிவிலக்கான தனிச்சிந்தனையாளர்கள் மட்டுமே கண்ணுக்குப் படுகிறார்கள்.

அது போதாது. ஒரு தத்துவமரபு ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்தின் பொதுச்சிந்தனையின் உள்ளே செயல்பட்டுக்கொண்டிருக்கும்போது மட்டுமே அதில் உண்மையான வளர்ச்சி நிகழமுடியும். கிரேக்க தத்துவ மரபு ஐரோப்பிய சிந்தனையின் அடித்தளமாக எப்போதுமே இருந்துகொண்டிருக்கிறது. இன்றைய நவீன சிந்தனையாளன்கூட கிரேக்க மரபில் இருந்துதான் தன் கருதுகோள் உருவாக்கத்தை தொடங்குகிறான், ஏற்றோ மறுத்தோ. ஆகவே மேலைத்தத்துவத்தில் உண்மையான வளர்ச்சி உள்ளது.

மேலும் இந்தியசிந்தனை சார்ந்த எதுவுமே உதவாத பழங்குப்பை என்று சொல்ல நாம் ஒரு நூற்றாண்டாக பழக்கப்பட்டிருக்கிறோம். மெக்காலேயின் புகழ்பெற்ற மேற்கோளில் அவர் ஒட்டுமொத்த இந்திய சிந்தனை அனைத்த்தையும் சேர்த்தால்கூட பத்தாண்டுகால பிரிட்டிஷ் இலக்கியம் மற்றும் தத்துவசிந்தனையின் அளவுக்கு நிகராகாது என்று சொல்கிறார். மெக்காலேயில் தொடங்கும் நம் கல்வித்துறை தலைமுறை தலைமுறையாக நம்மிடம் அந்த எண்ணத்தை உருவாக்குகிறது.

அதை ஒரு மானசீகமான அடிமைத்தனம் எனலாம். ஆனால் நம்முடைய பேரறிஞர்கள் இலக்கியவாதிகள் என பலர் அந்த எண்ணத்தை மீற முடியாதவர்கள். உதாரணமாக, நான் நன்கு அறிந்த இலக்கியவாதியான சுந்தர ராமசாமி இந்திய சிந்தனை என்பது அர்த்தமில்லாத பழங்கால தர்க்கங்களும் மூடநம்பிக்கைகளும் கலந்தது என்று எண்ணினார்.அவை காலாவதியாகிவிட்டன என்று குறிப்பிட்டார். ஆனால் அவருக்கு இந்திய சிந்தனை பற்றி எளிய அறிமுகம் கூட இருக்கவில்லை. அதேசமயம் மூவாயிரமாண்டு பழமையுள்ள சாக்ரடீஸ்,பிளேட்டோ, அரிஸ்டாடில் சிந்தனைகள் மானுட சிந்தனையின் அடித்தளங்கள் என்று அவர் சொல்வார், அவை அவருக்கு பழங்குப்பைகள் அல்ல.

இந்திய சிந்தனைகளை மத சிந்தனைகள் என அவர் சொன்னபோது சாக்ரடீஸ¤ம் கிரேக்க மதத்துக்குள் நின்றவரல்லவா, அவரும் ஆத்மா போன்ற உருவகங்கள் வழியாக சிந்தித்தவர் அல்லவா என்று நான் கேட்டேன். அப்போதுதான் அச்சிந்தனைகளிலும் அவருக்கு பெரிதாக அறிமுகம் இல்லை என்று உணர்ந்தேன். ஆனால் இந்த மனப்பிம்பம் அவரில் ஆழ வேரூன்றியிருந்தது. இது சராசரியான ஒரு இந்தியமனத்தின் அமைப்பு. நம்மைச்சூழ்ந்துள்ள பெரும்பாலானவர்கள் இந்தத் தளத்திலேயே இருக்கிறார்கள் என்பதைக் காணலாம்.

ஆகவே மேலைத்தத்துவத்தின் அடிப்படைகளுடனும் இன்றைய பரிணாமத்துடனும் பதஞ்சலி யோகசூத்திரத்தை நாம் ஒப்பிட்டு வாசிக்கும்போது ஏராளமான புதிய சாத்தியங்களைக் கண்டடைய முடியும். அதற்கு பதஞ்சலி யோகசூத்திரத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை நாம் தத்துவப்படுத்திக்கொள்ள வேண்டும்.மேலைத்தத்துவம் உருவாக்கியிருக்கும் கோட்பாடுகளுடன் அவற்றை இணைத்து யோசிக்க அது நமக்கு உதவும்

இரண்டாவதாக, மேலை உளவியல். பதஞ்சலி யோக சூத்திரத்துடன் ஒப்புநோக்கையில் மேலை உளவியல் குழந்தைப்பருவத்திலேயே இருக்கிறது என்பதே என் எண்ணம். அதை முக்கியமான சில உளவியலாளர்களுடனான உரையாடலிலும் நான் கேட்டதுண்டு. மேலும், மேலை உளவியலின் பல ஆதாரக் கோட்பாடுகள் பதஞ்சலி யோகம் போன்ற கீழை யோகவியலில் இருந்து கடன்பெற்றவை.

ஆனால் மேலை உளவியல் நவீன அறிவியலுக்குரிய தர்க்கத்தைக் கொண்டிருக்கிறது. அதாவது கிரேக்க தர்க்கவியலில் இருந்து பிறந்து இன்று எல்லா சிந்தனைகளுக்கும் அடிபப்டையாக இருக்கும் மேலை அறிவியங்கியலில் அது அமைந்திருக்கிறது. நாம் கல்விக்கூடங்களில் கற்பதும் சிந்திப்பதும் அதில்தான். ஆகவே பதஞ்சலி யோகம் போன்ற பண்டையச் சிந்தனைகளை நாம் மேலை உளவியலுடன் ஒப்பிட்டுப்பார்க்கும்போது அவற்றை புரிந்துகொள்வதும் விவாதிப்பதும் எளிதாகிறது.

பதஞ்சலி யோகத்தை உளவியலும் உளம் கடந்த இருப்பு குறித்த ஆய்வும் என்று பொதுவாக வகுத்துக்கூறலாம். அதன் அடிப்படைகள் பல மேலை உளவியலை வைத்துப்பார்த்தால் புரிந்துகொள்ள எளிதானவை. அதே சமயம் பதஞ்சலி சொல்வதை ‘நிரூபிக்க’ மேலை உளவியலை துணைகொள்வது போன்ற அபத்தமும் வேறில்லை. பட்டப்படிப்புப் பாடத்தை பத்தாம் வகுப்புப் பாடத்தை வைத்து நிரூபிக்க முயல்வது போன்றது அது

மூன்றாவதாக, மொழியியல். பதஞ்சலி அடிப்படையில் மனித இருப்பு அல்லது தன்னிலை குறித்த தரிசனத்தை முன்வைக்கிறார் எனலாம். சமகாலச் சிந்தனையில் இந்த கருதுகோள்கள் குறித்த விரிவான ஆய்வுகள் மொழியியலில்தான் நிகழ்ந்துள்ளன. ஆகவே மொழியியலின் கோட்பாடுகளை பதஞ்சலியை புரிந்துகொள்ள பயன்படுத்தலாம்.

அத்தகைய ஒரு நவீன வாசிப்புக்கு இன்றியமையாத தேவை பதஞ்சலி யோகசூத்திரத்தை நவீன மனநிலையுடன் அணுகுவதாகும். நவீன மனநிலை என்றால் நான் இப்படி வகுத்துக் கொள்கிறேன். 1. ஒரு ஞானத்தை ஒரு இனம், மொழி, மதம், பண்பாட்டுக்குள் நிறுத்திவிடாமல் மானுடப்பொதுவான ஞானமாக அதை எடுத்துக்கொண்டு ஆராய்வது. 2. ஒரு ஞானத்தை ஒரு குறிப்பிட்ட காலத்தின் வெளிப்பாடாகக் கருதாமல் எப்போதைக்குமான ஞானமாக எடுத்துக்கொண்டு ஆராய்வது 3. அதன் மீது பக்தியோ வெறுப்போ இல்லாத தர்க்கபூர்வ அணுகுமுறை

அத்தகைய ஒரு வாசிப்பு பதஞ்சலியை நமக்கு இன்னும் நெருக்கமாகக் கொண்டுவரக்கூடும்

தந்திரமும் யோகமும்

இத்தகைய ஓர் ஆய்வுக்கு முன் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் உள்ளது. தாந்திரீக மரபு உருவாக்கியிருக்கும் தியான, உபாசனை முறைகளுக்கும் பதஞ்சலிக்கும் நேரடித் தொடர்பு இல்லை. அவை வேறு வேறு. பல ஆசிரியர்களின் யோக முறைகளில் இந்த மயக்கம் நிகழ்ந்து பலவகையான புரிதல் இடர்களை உருவாக்கியிருக்கிறது. பலர் பதஞ்சலி யோகசூத்திரத்தையே தாந்திரீக பாணியில் விளக்குவதையும் நான் வாசித்திருக்கிறேன்.

நெடுங்காலமாகவே யோகமரபும் தாந்த்ரீக மரபும் இரு தனிப்போக்குகளாக செயல்பட்டு வந்துள்ளன. இரு மரபுகளும் கொண்டும் கொடுத்தும் வளர்ந்தவை என்பதனால் அவற்றுக்கு இடையே பல பொதுக்கூறுகளும் உண்டு என்பதை மறுக்கமுடியாது. இந்து தாந்த்ரீக மதங்களும் சரி, பௌத்தத்துக்குள் உள்ள வஜ்ராயனம் போன்ற தாந்த்ரீக பிரிவுகளும்சரி, யோகத்தை தங்களுக்காக மறு ஆக்கம் செய்து கையாண்டன என்பதையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும். ஆனாலும் அவை இரண்டும் வேறு வேறுதான்.

என்ன வேறுபாடு? அடிப்படையே வேறு வேறு என்பதுதான். யோகம் தன் மனத்தை அவதானிப்பதில் தொடங்குகிறது. அதை கட்டுப்படுத்தி அதன் ஆழங்களை அறியும் ஒரு தொடர்செயல்பாடு அது. மனத்தின் வெளிப்பாடுகளில் அதற்கு ஆர்வம் இல்லை. அதன் மூலத்தை நோக்கிச் செல்வதையே அது இலக்காகக் கொள்கிறது. அதற்காக பலவகையான பயிற்சிகளை அது உருவாக்கிக் கொள்கிறது. அத்தனை பயிற்சிகளுக்கும் நோக்கம் அகத்தை அறிந்து கடந்து சென்று அதன் சாரத்தில் அமர்தல் மட்டுமே.

நேர் மாறாக தாந்த்ரீக மரபு என்பது மனவெளிப்பாடுகளையே முதலில் கருத்தில் கொள்கிறது. மனத்தின் வெளிப்பாடுகளை ஒவ்வொன்றாக பயின்று அறிந்து வென்று கடந்துசெல்லுதல் அதன் வழிமுறை. அச்சம் காமம் வன்முறை போன்று மனத்தின் ஆதார வெளிப்பாடுகள் ஏராளமானவை. ஒவ்வொன்றையும் அறிவதே தாந்த்ரீகம் முன்வைக்கும் விடுதலை மார்க்கமாகும்.கடந்துசெல்லுதலே விடுதலை அல்லது முக்தி என்பது அதன் அறிதல்.

மனம் வெளிப்படுவது குறியீடுகள் வழியாகவே. ஆகவே தாந்த்ரீகம் குறியீடுகளை ஏராளமாக உருவாக்கிக் கொள்கிறது. நம்முடைய புராணங்கள் சிற்பங்கள் போன்ற ஏராளமான குறியீடுகள் தாந்த்ரீகத்தால் உருவகிக்கப்பட்டவையே. அதேபோல நம் உடல், மனம் பற்றியும் தாந்த்ரீகம் ஏராளமான குறியீடுகளை உருவாக்கியிருக்கிறது. அக்குறியீடுகளை பருண்மையான உண்மைகளாக எடுத்துக்கொள்வர்கள் பலர்.

தாந்த்ரீகம் இரு வழிகளை கடைப்பிடிக்கிறது. அவை இடது வலது என பிரிக்கப்பட்டு வாமாசாரம் தட்சிணாச்சாரம் என்று சொல்லப்படுகின்றன. மனவெளிப்பாடுகளை அறிய அவ்வெளிபபடுகளையே மனதால் நிகழ்த்தி அதன் எல்லையை அறிவது ஒரு வழி. அதாவது காமத்தை வெல்ல காமத்தையே பழகுவது. அச்சத்தை வெல்ல அச்சமூட்டுவதற்குள்ளேயே நுழைவது. மரணத்தை அச்சமென்றால் சுடுகாட்டு பிணம் மீது அமர்ந்து தியானம்செய்வது போன்ற ஒரு உக்கிரமான வழி அது. இதுவே இடதுமுறை. அல்லது வாமாச்சாரம்.

மன வெளிப்பாடுகளை வெல்ல அவ்வெளிப்பாடுகளை உன்னதமாக்கிக் கொள்ளலாமென்பது இன்னொரு வழி. காமத்தை வெல்ல அதை குறியீடாக ஆக்கி அக்குறியீட்டை கலைகளாக ஆக்கி அக்கலையின் உன்னதங்கள் வழியாக காமத்தை அறிந்து கடந்துசெல்லலாம். அச்சம் வன்முறை அருவருப்பு என அனைத்தையுமே அவ்வாறு கடந்துசெல்லலாம். உன்னதமாக்கல் என்பது இம்முறையின் முக்கியமான வழிமுறை. சடங்குகள் பூஜைமுறைகள் கலைகள் என அதற்கு பல வழிகளை அது கண்டடைந்துள்ளது. இது வலதுமுறை–தட்சிணாச்சாரம்.

நாம் தமிழ் சித்தர் மரபு என்று சொல்லும் மரபில் இருவகை தாந்த்ரீகர்களும் உள்ளனர். இரு மரபுகளுமே யோகத்தை தங்கள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்கின்றன. இவ்விரு மரபுகளும் பலவகையான உருவகங்களையும் குறியீடுகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.அக்குறியீடுகள் எளிமையான சித்தர் பாடல்கள் வழியாக சாதாரண மக்களிடம் வரும்போது அவை அப்படியே நேரடியாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு யோகம் குறித்து ஏராளமான நம்பிக்கைகள் நம்மிடையே புழங்குகின்றன. உடலில் உள்ள மூலாதாரம் முதலிய ஒன்பது சக்திமுனைகள் பற்றிய பேச்சு ஓர் உதாரணம். அவை முறையே காமம்,பசி,மூச்சு,பேச்சு,இதயம், சிந்தனை, உள்ளுணர்வு, உயிருணர்வு, பேருணர்வு என்ற நிலைகளைச் சுட்டுபவை. ஆனால் உடம்பிலேயே அவை உள்ளன, தொட்டுக்கூட பார்க்க முடியும் என்ற அளவில் அவை புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன. தியானத்தில் நெற்றிப்பொட்டில் ஒளி தெரிவது போன்ற பல நம்பிக்கைகள் இவ்வாறு தாந்த்ரீக உருவகங்களை நேரடியாக எடுத்துக்கொள்வதன் விளைவுகளே.

இன்னும் அடுத்தபடிக்குச் சென்று அணிமா மகிமா போன்ற அட்டமாசித்திகளும் யோகத்தால் வசமாகும் என்றும் முக்காலமும் தெரியும் என்றும் சொல்லக்கூடியவர்கள் உள்ளனர். சிலர் கல்லைக் கடித்து தின்னுதல் போன்ற ஹடயோக வித்தைகளையும் யோகத்துடன் தொடர்புறுத்துகிறார்கள். அவையெல்லாமே தாந்த்ரீக மரபின் குறியீடுகள். பதஞ்சலி யோகத்துக்கும் அவற்றுக்கும் தொடர்பில்லை என்பதை உணரலாம். அத்தகைய எளிய உருவகங்களை உதறிவிட்டுத்தான் நாம் பதஞ்சலி யோகத்தை அணுக வேண்டும்.

பதஞ்சலி யோகம் மாயவித்தையோ, ரகசிய வித்தையோ ஒன்றும் அல்ல. அது மிக திட்டவட்டமாக எழுதப்பட்டு புறவயமாக முன்வைக்கப்பட்ட ஒரு ஞானம். அதை குருமரபுகளில் தெளிவாகவே கற்றறிந்திருக்கிறார்கள். அதில் சில பகுதிகள் நமக்கு விளங்காதவையாக இருக்கலாம்– ஏனென்றால் அது பயிலப்பட்ட மரபுகளில் பதினேழாம் நூற்றாண்டு முதல் ஓர் அறுபடல் உள்ளது. அதில் இடைச்செருகல்களும் இருக்கலாம். ஆனாலும் அது திட்டவட்டமான ஒரு தத்துவ -நடைமுறை நூலேயாகும்.​

Natrajan Kalpattu Narasimhan

unread,
Jan 21, 2014, 7:12:03 AM1/21/14
to Minthamil
ஆகவேதான் கீதை முதலிய பிற்கால தத்துவ நூல்கள் வேதங்கள் உலகியல் நோக்கங்களை [சம்சாரத்தை] முன்வைப்பவை என்று சொல்லி நிராகரிப்பின் தொனியில் பேசுகின்றன.சாராம்

 சாராம்சத்தையா அல்லது சம்சாரத்தையா?  ஆன்மீகம் பற்றி எழுத முனைந்த போதும் சம்சார பந்தம் விடாது போலும்!


2014/1/21 Iyappan Krishnan <jee...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


Iyappan Krishnan

unread,
Jan 22, 2014, 2:29:59 AM1/22/14
to mintamil

2014/1/21 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>

 சாராம்சத்தையா அல்லது சம்சாரத்தையா?  ஆன்மீகம் பற்றி எழுத முனைந்த போதும் சம்சார பந்தம் விடாது போலும்!


​சம்சார சாராம்சத்தை நல்லாவே கவனிக்கறீங்க தாத்தா :))
 


Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

Subashini Tremmel

unread,
Jan 22, 2014, 2:38:39 AM1/22/14
to மின்தமிழ், Subashini Tremmel



2014/1/21 Iyappan Krishnan <jee...@gmail.com>
​ஜெயமோகன் கொஞ்சம் ஆரம்பித்து நிறுத்தி விட்டார். முழுவதும் புத்தகமாய் வந்ததா தெரியவில்லை.
இதுவரைக்கும் கிடைத்தவை - இங்கே தொகுக்கிறேன்.
****
 
Over to Jeyamohan.
 
 
..

ஆனால் சுயமாக சிந்திக்க முயலக்கூடிய எவரும் பழைமையில் இருந்துதான் தொடங்கவேண்டும். ஏனெனில் எந்த சிந்தனையும் ஒரு தொடர்ச்சியின் விளைவாக உருவாவதேயாகும். ஏதாவது ஒரு துறையில் சுயமாக சிந்திக்கும் பயிற்சி கொண்டவர்கள் அத்துறையில் அதுவரை உள்ள மரபை உதாசீனம் செய்துவிட முடியாது என்பதை அறிவார்கள். . நமது மரபை கற்று விமரிசித்து மீறிவளர்ந்து முன்னெழவேண்டும். சாக்ரடீஸையும் ஸ்பினோசாவையும் ஹெகலையும் நீட்சேயையும் கற்று முன்னகர்ந்தவர்கள்தான் மேலை சிந்தனையை உருவாக்கியவர்கள் . நமது சுயமான சிந்தனையை நாம் அடையவேண்டும் , வெறும் மொழிபெயர்ப்புப்பணியே சிந்தனை என்று அமைந்துவிடக்கூடாது என்று இப்போதுபரவலாகசொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு நாம் நம் மரபுடன் ஆக்கபூர்வமான உறவைமேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படை விஷயம் இங்கே பேசப்படுவதே இல்லை. சிந்தனைகளை எவரும் அந்தரத்தில் உருவாக்கிக் கொள்ளமுடியாது.

பழைமை என்றால் காலாவதியானது என்ற எண்ணம் நமக்கு உண்டு. ஆனால் நாம் இந்திய பழைமையை ,தமிழ் பழைமையைமட்டுமே அப்படி சொல்வோம். மேலைபழமையை அப்படிச் சொல்லும் துணிச்சல் நமக்கு வராது, காரணம் மேலைப்பழமை மேலைநாட்டு புதுமையை தொடர்ந்து உருவாக்கியபடி இருப்பதை நாம் காண்கிறோம். இம்மானுவேல் காண்ட் பழையவர் என்று இன்று சொல்ல முடியாது, பின்நவீனத்துவக் கருதுகோள்கள் பல அவரிலிருந்து உருவாகி வருகின்றன. நீட்சே, ஹெகல் முதலியோரும் இன்றைய பின் நவீனசிந்தனைகளுக்கு உடனடி முன்னோடிகளாக இருக்கிறாகள். அந்தகோட்டை பின்னகர்த்தினால் ஸ்பினோஸாவின் வினாக்கள், சீனோவின் புதிர்கள், ஐயவாதிகளின் தர்க்க ஒழுங்குமுறை வரை செல்லும். நமது பழைமை ஏன் நமக்கு காலவதியானது என்று படுகிறது என்றால் ஒன்று நாம் அதனை கற்றதேயில்லை என்பதனால்தான். அவற்றை நவீனச்சூழலில் வளர்த்தெடுக்கவும் இல்லை .

தமிழில் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் நின்று சிந்திக்கும் நமக்கு முன்னோடியான சிந்தனையாளர்கள் நம் மரபில் யார்யார்? வைணவ சைவ உரையாசிரியர்கள், திருமூலர், ராமானுஜர், நம்மாழ்வார், திருவள்ளுவர் என அது பின்னோக்கி செல்லும். இவர்களில் பிற்கால சிந்தனையாளர்களான சைவ வைணவ ஆசாரியார்களை புரிந்துகொள்ள சில மூலநூல்களை புரிந்துகொள்ளவேண்டியுள்ளது. அவற்றில் முக்கியமானது பதஞ்சலி யோக சூத்திரம். நியாய சூத்திரங்கள், பிரம்மசூத்திரம் , சாங்கிய காரிகை மற்றும் முக்கியமான ஐந்து உபநிடதங்கள் ஆகியவை மற்ற நூல்கள். குறள், மணிமேகலை போன்ற சமண பௌத்த நூல்களை பயில அம்மதங்களுக்கு உரிய மூலநூல்களுடன் இம்மூல நூல்களும் அவசியமாக கற்கப்படவேண்டும். சாங்கியம் யோகம் நியாயம் வைசேஷிகம் வேதாந்தம் மீமாம்சை ஆகிய ஆறு தரிசனங்களும் இந்தியமரபில் உள்ள எல்லா சிந்தனை ஓட்டங்களிலும் அவற்றை தீர்மானிக்கக் கூடிய அடிப்படைக் கூறுகளாக உள்ளன.

உதாரணமாக பதஞ்சலி யோகசூத்திரங்கள் மீது பயிற்சி இல்லாத ஒருவர் திருமந்திரம், சிவஞானபோதம் இரண்டையும் எளியமுறையில்கூட புரிந்துகொள்ள முடியாது . நியாய தர்க்கமுறையில் சில அடிப்படைகளையேனும் அறியாமல் ஒருவர் வைணவ உரைகளுக்குள் நுழையவே இயலாது. அதாவது நாம் நம் மரபில் நமக்கு முன்புவரை இருந்த சிந்தனைகளை புரிந்துகொள்ள அச்சிந்தனைகளின் அடிப்படைத்தர்க்கங்களை அமைத்த சிலமூலநூல்களை முதலில்பயிலவேண்டியுள்ளது.

பழமை வழிபாடு மிக ஆபத்தானது .பலகாலம் நாம் அந்தச்சேற்றில் புதையுண்டு கிடந்தோம். பிறகு அதிலிருந்து மீண்டு பழமையை உதாசீனம் செய்யும் புதிய சேற்றில் சிக்கிக் கிடக்கிறோம். உலக சிந்தனையில் தங்கள் பங்களிப்பினை ஆற்றிய எந்த கலாச்சாரமும் தன்னுடைய பழைமையை போற்றியதும் அல்ல, உதாசீனம் செய்ததுமல்ல, சமகாலத்தேவைக்கு ஏற்ப ஆழ்மாக பயின்று விமரிசன ரீதியாக எதிர்கொண்டதே என்பதை நாம் காணலாம்.

எல்லாமே நம் மரபில் உள்ளது என்ற மூடநம்பிக்கை கொண்ட பலர் இன்று உண்டு. எல்லா சிந்தனைகளும், அறிவியல் கண்டுபிடிப்புகள் கூட
நம் முன்னோருக்கு தெரிந்திருந்தன என்ற பேச்சு அடிக்கடி நம் காதில் விழும். அதுவும் மரபை அறியாமல் வெறுமே வழிபட்டபடி இருப்பதன் விளைவே. இன்றைய தத்துவமும் அறிவியலும் பலமடங்கு வளர்ந்தவை என்பது உண்மையே. அதற்குக் காரணம் இந்நூற்றாண்டு அடைந்துள்ள மாபெரும் தகவல் தொடர்புவசதி. உலகம் முழுக்க உள்ள சிந்தனைகளை நாம் வீட்டில் இருந்தே கற்கமுடியும். கல்வி பரவலாக்கப்பட்டு விட்டிருக்கிறது. உயர்கல்விக்கான அமைப்புகள் பெருகியுள்ளன. ஆகவே நாம் இன்றைய சிந்தனைகளையே முதன்மையாகவும் முக்கியமாகவும் கற்று தெளியவேண்டும். அவற்றில்தான் நம் கால்கள் ஊன்றிருக்கவேண்டும்.அப்படியானால் எதற்காக பழைய சிந்தனைகளை கற்கவேண்டும்?

அறிவியலுக்கு சமகாலத்தன்மை முக்கியமானது. காரணம் அதன் அறிதல்முறைகளில் , அறிவமைப்பில் சீரான வளர்ச்சி உள்ளது. நியூட்டனுக்கு பிறகு ஐன்ஸ்டீன் கண்டிப்பாக ஒரு வளர்ச்சிநிலையே. இன்றைய இளம் அறிவியலாளன் கண்டிப்பாக நியூட்டனை விட பலமடங்கு விஷயம் தெரிந்தவனே. ஆனால் இலக்கியம் தத்துவம் ஆகிய இரு தளங்களிலும் இது பொருந்தாது.இலக்கியத்திலும் தத்துவத்திலும் வளர்ச்சிப்போக்கு என்று ஒன்று இல்லை என்பதே நாம் காண்பது. மாறுபட்ட கோணங்கள் வரலாம், மேலும் நுட்பமான தர்க்கங்கள் வரலாம். ஆனால் ஒரு முக்கியமான மூலதத்துவநூலின் பார்வை ஏறக்குறைய நிலையாகவே இருக்கும். அதன்பின்வந்த எல்லா விவாதங்களிலும் அதன் தரப்பு ஒலித்தபடியே இருக்கும். சாக்ரடீசின் ‘குடியரசு’ அதற்குப்பின் வந்த சிந்தனைகளால் வலிமைபெறுமேயல்லாது காலாவதியாகாது. இலக்கியமும் அதைப்போலத்தான்.கம்பனை பாரதி காலவதியாக்குவது இல்லை. இன்றைய புதுக்கவிதைகள் சங்க இலக்கியத்தை தாண்டிச்சென்றிருப்பதாக சொல்ல எவருமே துணியமாட்டார். ஆகவே இலக்கியத்திலும் தத்துவத்திலும் பழைமை என்பது எப்போதும் செல்லுபடியாக கூடிய ஒரு அடிப்படைக் கட்டமைப்புதான்.

மேலும் முக்கியமான ஒரு விஷயம் உண்டு. இலக்கியத்திலும்சரி தத்துவத்திலும் சரி முற்றிலும் புத்தம்புதிய சிந்தனை என ஒன்று உருவாக முடியாது. மனிதமனம் இயற்கையை எதிர்கொண்ட ஆரம்பநாட்களிலேயெ சிந்தனையின் அடிப்படைக்கேள்விகள், அடிப்படையான தர்க்கமுறைகள் முழுக்க உருவாகியிருக்கும். அவற்றில் விரிவாக்கமாகவும், அவற்றுக்கு இடையேயான விவாதமாகவும்தான் புதிய சிந்தனைகள் உருவாகின்றன.உதாரணமாக இன்றைய பின்நவீனசிந்தனைகளில் எந்தச் சரடையும் நாம் பின்னோக்கி நீட்டி கிரேக்க மரபுக்கு கொண்டு சென்று ஒரு துவக்கப்புள்ளியைக் காணமுடியும். மனிதன் சில அடிப்படைக் கோணங்களில்தான் பிரபஞ்சத்தை பார்க்கமுடியும் என்பது அவனது சிந்தனையின் எல்லையாக இருக்கலாம், அல்லது பிரபஞ்சத்தின் இயல்பாகவும் இருக்கலாம்.

ஆகவே நாம் பழைய மூலநூல்களைப் பயிலும்போது விதைகள் அடங்கிய ஒரு களஞ்சியம் நமக்கு கிடைக்கிறது. நமக்கு கற்பனை, தர்க்கத்திறன் ஆகியவற்றின் ஈரம் இருந்தால் அவைமுளைத்து நமது சிந்தனைகளை உருவாக்க கூடும்.​

​​...to be continued ...
 
சிந்தனைக்கு நல்ல பகிர்வு.

சுபா

Iyappan Krishnan

unread,
Jan 22, 2014, 1:38:53 PM1/22/14
to mintamil, Subashini Tremmel
http://www.jeyamohan.in/?p=763

சூத்திரம் ஒன்று

 ”அத யோக அனு சாசனம்”

[ஆதலால் யோகத்தை வகுத்துரைப்போம் ]

அத என்ற இந்த சொல்லாட்சி குறித்து இந்து மெய்ஞான மூலநூல்களை ஆய்வுசெய்தஅறிஞர்கள் பலர் பலவாறாக பேசியுள்ளார்கள் . அத என்றால் ஆதலால் என்றோ , இனிமேல் என்றோ பொருள் கொள்ளலாம். இதை நமது சூத்திரங்கள் பல ‘என்ப’ என்று முடிவதுடன் நாம் ஒப்பிட்டு பார்க்க முடியும். அதாவது பதஞ்சலி முனிவர் யோகத்தைப்பற்றி பேசும் முதல் அறிஞர் அல்ல. ஏற்கனவே விரிவாக பேசப்பட்டுள்ளது. அவர் அதை வகுத்தும் தொகுத்தும் உரைக்க மட்டுமே முற்படுகிறார் .

பெரும்பாலான சூத்திர நூல்களில் இந்த அமைப்பு காணப்படுகிறது . உதாரணமாக வேதாந்த சூத்திரம் ” அதாதோ பிரம்ம ஜிக்ஞாஸா ” என்று துவங்குகிறது. [ ஆதலால் பிரம்ம ஞானம் தேடுபவனே...] இதற்கு இரு வகை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது அந்த தளத்தின் ஞானியால் முன்வைக்கப்படும் அதிகாரபூர்வ குரல் ஆதலால்தான் ‘ஆதலால்’ என துவங்குகிறது என்கிறார்கள்.

அதனுடன் சங்கரர் வேறுபடுகிறார் . பிரம்ம ஞானத்தை அடைவதற்கு முன்பு பலவிதமான பயிற்சிகளை செய்யவேண்டியுள்ளது. ஞானத்தில் பக்குவபப்ட்ட பிறகே யோகம் பயில வேண்டும். ஞானமில்லா யோகப்பயிற்சி வெறும் பழக்கமாகவே ஆகும். ஆகவே தத்துவ ஞானம் கனிந்தபின் பிரம்மஞானத்தை பெற முன்வரும் மாணவனை அழைத்து பேசுவதனாலேயே இந்த சொல்லாட்சி வந்துள்ளது என்கிறார் அவர்.

ராமானுஜர் சற்று மாறுபட்ட சித்திரத்தை அளிக்கிறார் . அவரை பொறுத்தவரை வேதத்தில் சொல்லப்பட்டுள்ள கர்ம காண்டத்தை  அதாவது உலகியல்செயல்பாடுகளை முடித்த பின்னரே ஒருவன் யோகத்துக்குள் நுழைதல் வேண்டும். ராமானுஜர் ஜைமினியின் மீமாம்சா சூத்திரங்களில் உள்ள நெறிகளை தர்ம அனுசாசனமாக அதாவது தர்மநெறிகளாகக் காண்கிறார் . அவற்றைச் செய்து  அதன் வழியாக தர்மத்துக்கான தேடல் அடங்கிய பிறகே பற்றற்ற ஞானத்துக்கான தேடல்– அதாவது யோகம்– துவங்குகிறது என்கிறார் ராமானுஜர். ராமானுஜ மரபில் இல்லறம் முழுமை பெறாமல் துறவறம் அனுமதிக்கப்படவில்லை.

பதஞ்சலிக்கு முன்னரே பல யோக நூல்கள் பல வடிவில் இருந்திருக்கின்றன என்பதற்கு ஐயமில்லை .அவற்றை பரிசோதித்து ‘சூத்திரங்கள்’ ஆக வகுத்தார் பதஞ்சலி. இப்படி வகுப்பதையே அவர் ‘அனுசாசனம்’ என்கிறார் . இதுவே பதஞ்சலியின் கொடை ஆகும்.

சம்ஸ்கிருதத்தில் அனுசாசனம் என்ற சொல்லுக்கு கட்டளை நெறிகாட்டல் வகுத்துக்கூறல் என்றெல்லாம் பொருள் கொள்ளப்படுகிறது. ஆகவே ஒரு விவாதத்தின் மூலம் உருவான இறுதிக் கணிப்புகள் இவை என கொள்ளலாம்.

சூத்திரம் என்பதை தமிழில் தேற்றம் என்ற சொல்லால் குறிப்ப்பிடலாம்.  இங்கே ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சூத்திரங்கள் தர்க்கங்கள் அல்ல. அவை முடிவுகள். அவை நம்மிடம் விவாதிக்க முற்படவில்லை. ஆகவே காரண காரிய விளக்கத்தை அளித்து விளக்கும் குரலோ, வாதிடும் போக்கோ இவற்றில் இல்லை. சூத்திரங்களின் இயல்பும் நோக்கமும் அது அல்ல. நாம் இவற்றை மனப்பாடம் செய்யவேண்டும். அதன் பிறகு அச்சொற்களை மனதுள் போட்டு உருட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது அவை மேன்மேலும் பொருள்களை அளித்தபடி நம் மனதில் விரிந்தபடியே போகும்.

அதாவது இவை மனன மந்திரங்கள். தியானத்தில் நாம் வழிகாட்டியாக கொள்ள வேண்டியவை. தியானத்தில் நமக்கு உருவாகும் அனுபவம் மூலமே இவற்றை நாம் உண்மையில் புரிந்துகொள்ள முடியும்.  ஓவியத்தைப்பற்றிய ஒரு பயிற்சித் தகவல் ஓவியம் வரையும்போது மேலும் பொருள் பொதிந்ததாக ஆவைதைப்போல . ஒவியம் வரையாமல் அதை வெறும் சொற்பொருளாக மட்டுமே பெற்றுக் கொண்டோமென்றால் அவற்றை நாம் சில சமயம் தவறாகவும் பல சமயம் அரைகுறையாகவும் புரிந்து கொள்ளலாம். அது அபாயகரமானதாகும்

ஆகவே இந்த வரிகளை நமது தர்க்கத்தை நோக்கி திருப்பிக் கொள்ளக் கூடாது . அப்படித் திருப்புவோமெனில் நாம் மிக அர்த்தமற்ற ஒரு மன இயக்கத்தை சென்றடைவோம். ஆனால் அகங்காரம் காரணமாக அதை மிக அறிவார்ந்த ஒரு செயல்பாடாக எண்ணி சுய திருப்தியும் கொண்டிருப்போம். இது மிக அகவயமான ஒரு கருத்துரு பற்றிய விவாதம் . அந்த அகவய அனுபவத்தின் தளத்துக்கு செல்லாமல் இதை புறவய தளத்தில் வைத்து விவாதிப்பதையே அபத்தம் என்றேன். உதாரணமாக ஒரு முறை கூட இசை கேட்காத ஒருவர் இசையைப்பற்றிய இலக்கணங்களை மட்டும் கற்று அவற்றைப்பற்றி ஓயாமல் பேசிக் கொண்டிருந்தால் அதை நீங்கள் எப்படி மதிப்பிடுவீர்கள்?

உண்மையில் நமது தேசத்தில் இம்மாதிரி  ‘திண்ணை வேதாந்தம் ‘ ஆலமரக்காடு போல விழுதும் வேரும் பரப்பி வளர்ந்துள்ளது. நமது பெரிய சாபமே இதுதான். நமது மரபில் உள்ள அகவயமான கருத்துக்களை அரையும் குறையுமாக கற்றுக் கொண்டு அவற்றை புறவயமான கருத்துருக்களுடன் ஒப்பிட்டுக்கொண்டும், பலவகையான உருவகங்களை கற்பனையால் உருவாக்கியபடியும் நாட்களை கழிப்பது. அனுபவத்தால் அர்த்தப்படுத்தப்படாதவரை இவ்வகை மூளையோட்டல்களினால் எந்த பயனும் இல்லை. மட்டுமல்ல, இவை அகங்காரத்தை வளர்த்து சிந்தனையை தவறான திசையில் கொண்டு சென்று விட்டிருப்பதனால் சம்பந்தப்பட்டவர் எதையுமே ஒழுங்காக யோசிக்க முடியாத குதர்க்கவாதியாக மாறிவிடும் அபாயமும் உண்டு. வேதாந்தம் உட்பட எல்லா ஞானமரபும் இவ்வகை ஆட்களை உருவாக்குகின்றன. இம்மாதிரி மனிதர்கள் அதிகமாக படிக்கப் படிக்க மேலும் மேலும் அபத்தமான குதர்க்கவாதிகளாக ஆகி பொருளிழந்து போகிறார்கள்.

இவை இந்த நூலை அணுகுவதற்கு அவசியமான மனத்தயாரிப்புகள். இந்த சூத்திரம் ஒரு நூல் வரையறைசெய்து சொல்லும் செயலை தொடங்குவதற்கான முகாந்திரமாக அமைகிறது எனலாம்

சூத்திரம் இரண்டு

 

” யோக: சித்த விருத்தி நிரோத: “

[யோகமென்பது உளச்செயல் தடுத்தல் ]

பதஞ்சலி யோகத்தின் இந்த சூத்திரமளவுக்கு புகழ்பெற்ற சூத்திரங்கள் நமது மரபில் குறைவு. தேவைப்பட்ட இடத்திலும் தேவைப்படாத இடத்திலும் சகட்டுமேனிக்கு இந்த சூத்திரம் பயன்படுத்தப்படுகிறது . இவ்வாறு பலவகையான அறிஞர்களால் பலவிதமாக பயன்படுத்தப்படுவதனால் மிதமிஞ்சி விளக்கப்பட்டு ஒரு கட்டத்தில் இச்சூத்திரமே ஓர் அடர்ந்த புதர் போல ஆகிவிட்டிருக்கிறது . ஆகவே நாம் இதன் சொற்களை மட்டுமே கணக்கில் கொண்டு பேசுவது நல்லது என்பது என் எண்ணம்.

ஓர் உவமை .பிரபஞ்சத்தை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அது எல்லா திசையிலும் பரவி விரிந்து சென்றபடியே இருப்பதாக கண்டார்கள். கற்று நிரம்பும் பலூன் ஒன்று விரிவடைகையில் அதில் உள்ள புள்ளிகள் விலகி செல்வது போல பால்வழிகள் விலகி செல்கின்றன என்றார்கள். இது ·ப்ரிஜோ காப்ரா தன் ‘தாவோ ஆ·ப் ·பிசிக்ஸி’ல் அளிக்கும் உவமை.

இவ்வாறு பால்வழிகள் விலகி செல்லும் வேகத்தை கணக்கிட்டார்கள் . அதை எதிர் திசைக்கு போட்டு பார்த்து இப்பிரபஞ்சம் எப்படி ஒரே பொருளாக ஒரு காலத்தில் இருந்திருக்க கூடும் என்று கண்டடைந்தார்கள். எப்போது பெருவெடிப்பு ஒன்று நிகழ்ந்து அதன் துகள்கள் நட்சத்திர மண்டலங்களாக மாறி விலகிச் செல்ல ஆரம்பித்திருக்கும் என்று கண்டார்கள்.

இதை நாம் மனதுக்கும் ஓர் உதாரணமாக போட்டுப் பார்ப்போம். நாம் நம் மனதை அறியும்போது அது ஓயாமல் இயங்கியபடியே இருப்பதைக் காண்கிறோம். நாம் கவனித்தாலும் கவனிக்காவிட்டாலும் அது செயல்பட்டபடியே இருக்கிறது அல்லவா? நாம் மனம் என்று சொல்வது எதை? மனதின் பிம்பங்களின் இந்த ஓட்டத்தைத்தான்.

ஆனால் மனம் என்பது அதுதானா? எந்தக் கருவி அந்த படங்களை தயாரிக்கிறது? எது அவற்றை ஒளிபரப்புகிறது ? எதன் மீது அவை ஓடுகின்றன? அதை பார்ப்பது எந்த விழி?

மனம் என்பது எண்ணங்களின் தொடரோட்டமும் அந்தத் தொடரோட்டத்தை அறியும் இன்னொரு ஓட்டமும் ஆகும். அவற்றில் எது எதை கண்காணிக்கிறது என்பது அந்தத் தருணத்தில் நாம் எப்படி உணர்கிறோம் என்பதைப்பொறுத்தது மட்டுமே. நாம் மனதைக் கவனிக்க ஆரம்பித்ததுமே நாம் கவனிக்கிறோம் என்பதைக் கவனிக்க ஆரம்பிக்கிறோம்.

ஆம், மனம் இயங்கியபடியே இருக்கும் நிலையில் சாதாரணமாக நம்மால் அதை அறிய முடியாது. அப்படி அறிய முயன்றோமெனில் அம்முயற்சி இன்னொரு மன ஓட்டமாக மாறி ஏற்கனவே ஓடியபடி  இருக்கும் மற்ற மன ஓட்டங்களுடன் கலந்து விடும். பெரும்பாலானவர்கள் தியானம் செய்யும்போது ”இதோ நான் தியானம் செய்கிறேன்.ஆம் நான் தியானம் செய்கிறேன் . அடாடா நான் தியானமல்லவா செய்கிறேன் . சரி இனி தியானம் செய்யலாம். சரி மீண்டும் முயன்று பார்ப்போம் ”  என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.

இங்கே உள்ள சித்தவிருத்தி என்ற சொல் மிக முக்கியமாக கவனிக்கப்படுகிறது. ‘உளச்செயல்’ என்று உள்ளத்தை வரையறுக்கிறது பதஞ்சலி சூத்ரம். அதாவது மனதை ஒரு அமைப்பாக அல்லது பொருளாக அது காணவில்லை. ஒரு நிகழ்வாகவே காண்கிறது. தீபோல. அது ஒரு நிகழ்வு மட்டுமே. மனமெனும் ஓயா நிகழ்வே மனம். மனமெனும் நிகழ்வை மனம் அறிவதே மனம்.

அந்த அறியும் மனம் எது? அதுவும் நிகழ்வா? அந்நிகழ்வில் மாறாதுள்ள விதி என ஏதும் உள்ளதா? நட்சத்திர மண்டலங்களை எதிர்திசைக்கு கொண்டு செல்ல வைப்பதுபோல பிரிந்து சிதறி செல்லும் நம் மனதையும் நேர் எதிர்த் திசைக்குச் செல்லவைத்தால் அவை சென்று சேரும் அந்த துவக்கப்புள்ளி எதுவாக இருக்கும்? யோசித்திருக்கிறோமா? காமம் குரோதம் மோகம் அகங்காரம் என்று விரியும் இந்த ஓயாத மனநாடகத்தின் விதைகள் எங்கே உள்ளன? ஆன்மீக தாகம் ,அறிவுத்தாகம், விடுதலைத்தாகம், சுயத்துக்கான தவிப்பு என்றெல்லாம் நாம் அடையாளம் கொடுக்கும் இச்சா சக்தியின் ஊற்றுக்கண்கள் எங்குள்ளன? 

யோகம் என்றால் மனதைக் கையாள்வதற்கான ஒரு பயிற்சி . கையாளும் விஷயத்தை முதலில் அறிந்தாக வேண்டும். அதற்கு மனதை நிறுத்தி அதை கூர்ந்து கவனிக்கவேண்டும். எனவேதான் மனதை கட்டுப்படுத்துதல் , நிறுத்துதல் என ‘ நிரோத ‘ த்தை முதலிலேயே பதஞ்சலி சொல்கிறார்.

இது நம் மூலநூல்களில் பலவற்றின்  முக்கியமான இயல்பாகும். எது அந்நூலின் சாராம்சமான கருத்தோ அது முதலிலேயே சொல்லப்பட்டுவிடுகிறது. உதாரணமாக ஈசாவஸ்ய உபநிடதம் முதல் வரியிலேயே அதன் மையக்கருத்தைச் சொல்லிவிடுகிறது– இவற்றிலெல்லாமே இறை குடிகொள்கிறது . [ ஈசோ வாஸ்யம் இதம் சர்வம் ] .

யோகம் என்றால் என்ன? மனம் என்பது ஒரு நதி, அதி ஊற்றுக்கு கொண்டு செல்லல். மனம் ஒரு மரம் , அதை விதைக்குக் கொண்டு செல்லல். மனம் ஒரு பறவை, அதை முட்டைக்குக் கொண்டு செல்லல். அதை முதலிலேயே  சொல்லிவிட்டு எப்படி என்ற வினாவை எதிர்கொள்கிறது பதஞ்சலி யோக சூத்திரம்.
 

Iyappan Krishnan

unread,
Jan 22, 2014, 2:27:58 PM1/22/14
to mintamil, Subashini Tremmel
http://www.jeyamohan.in/?p=771

சூத்திரம் மூன்று

ததா த்ருஷ்ட்டு: ஸ்வரூபே அவஸ்தானம்

[அப்போதே பார்ப்பவன் தன்னிலையில் உறைகிறான்]

இந்தச் சூத்திரத்தில் மூன்று சொற்கள் உள்ளன. மூன்று தன்னிலைகள் என இதை வகுக்கலாம். திருஷ்டு என்றால் பார்ப்பவன், அவதானிப்பவன், உணர்பவன். மனதை உணரும் தன்னிலை என்று இதைச் சொல்லலாம். இரண்டாவது சொல் ஸ்வரூபம். தன்னுடைய உண்மையான அகநிலை. அல்லது தூய தன்னிலை. இங்கே இன்னும் அது ஒரு உருவகம்தான். மூன்றாவது அவஸ்தை. அந்த தூய நிலையில் உறைதல் என்ற நிலை. தான் என தன்னை உணர்பவன் அந்த உணர்தல் மூலம் உருவாகும் அலைகள் அனைத்தையும் அடக்கி இல்லாமலாக்கிக் கொண்டால் மட்டுமே தூய தன்னிலையாக தன்னை உணர்ந்து அந்நிலையில் அமைய முடியும் என்று இச்சூத்திரத்தை விளக்கலாம்

இச்சூத்திரத்தில் அவஸ்தானாம் என்ற சொல்லை சுட்டிக்காட்டுவது மரபு. அதாவது தூய தன்னிலை என்பது ஒரு அறிதல் அல்ல. அது நிலை. ஒரு அமைதல்தான்.

ஓர் உவமை மூலம் விளக்கலாம். நான்குபக்கமும் நிலைக்கண்ணாடிகள். நடுவே ஒரு சுடர் விளக்கு. நாம் காண்பது விளக்குகளினாலான ஒரு மாபெரும் வெளி. இதுவே நம் மனம். சுடரைக் காண நாம் முதலில் செய்ய வேண்டியது ஆடிகளை களைதல். அப்போது சுடர் மட்டும் எஞ்சுகிறது.

அதாவது மனதை அறியும் செயலாலேயே மனம் அலைகளாக ஆகிறது. அலைகள் அடங்காமல் மனதை அறிவதும் சாத்தியமல்ல. இச்சிக்கலையே யோகம் முதலில் எதிர்கொள்கிறது.

தடாகத்தின் ஆழத்தைக் காண்பதற்கு முதலில் அதன் அலைகள் அடங்கவேண்டும்.  மனச்செயல்பாட்டை நிறுத்தாமல் மனதை உருவாகும் அடிப்படை அமைப்பை , மனதின் ஆழத்தை நாம் காணமுடியாது.

சூத்திரம் நான்கு

வ்ருத்தி ஸாரூப்யம் இதரத்ர

[உளச்செயல் தோற்றம் பிறவற்றிலேயே]
யா பெரல்மான் எழுதிய குழந்தைகளுக்கான அறிவியல் அறிமுக நூலான ‘பொழுதுபோக்குப் பௌதிகம்’ நூலில் ஒரு வினா. “உங்களால் முகம் பார்க்கும் கண்ணாடியைப் பார்க்க முடியுமா?” . சின்னவயதில் ஏன் பார்க்க முடியாது என்ற எண்ணமே நம் மனதில் எழும். பெரல்மான் சொல்வார், நாம் கண்ணாடியை பார்க்க முடியாது , அதன்மீது பிரதிபலிப்பவற்றையே காண்கிறோம் என. எதையுமே பிரதிபலிக்காத கண்னாடி கண்ணுக்கு தென்படாது .

சாதாரணமாக மனம் என நாம் சொல்வது எதை ? மனதில் ஓடுவதைத்தான். மனதில் ஓடுவது மனம் எதையெல்லாம் எதிர்கொள்கிறதோ அதெல்லாம்தான். மனம் என்பது ஒரு மாபெரும் எர்திர்வினை மட்டுமே. நாம் மனமென அறிவதெல்லாம் மனதில் பிறவிஷயங்கள் பிரதிபலிப்பதைத்தான். ஒரு நிபுணர் நம்மை மனவசியம் செய்து நம் மனதை ‘அப்படியே’ பதிவுசெய்தால் அதில் என்ன இருக்கும்? நம்மைச்சுற்றி உள்ள விஷயங்கள்தான் சிக்கலான முறையில் பின்னிப்பிணைந்து காணப்படும். அபப்டியானால் நம்மைச்சுற்றி உள்ளவற்றின் ஒரு சிக்கலான வடிவம்தான் நமது மனமா?

மிக இயல்பாக தன்னிச்சையாக நாம் நம் சூழலை பிரதிபலித்தபடியே இருக்கிறோம். ஓர் ஆதிவாசியின் மனம் காட்டுக்குள் வைக்கப்பட்ட கண்ணாடி . நகரச்சாலையோரம் வைக்கப்பட்ட கண்ணாடிதான்  நாகரீக மனிதனின் மனம்.

அதே போலநம்மை சூழலும் பிரதிபலிக்கிறது. மனச்சுமையுடன் கடற்கரைக்கு சென்றால் நம்மை அறியாமலேயே மனம் ஓர் விடுதலையை அடைகிறது. கடல் என்ற விரிவு நம் மனத்தை விரிய வைக்கிறது . மறு கணம் நம் மனம் கடலை நம் துயரங்களின் அலைகளாக அறிய ஆரம்பிக்கிறது. திரும்பிவிடுகிறோம். நமக்குள் இருப்பனவற்றையே நாம் வெளியிலும் காண்கிறோம். நிகழ்மனம் மற்றும் அறியும் மனம்போல இங்கே இன்னொரு இரட்டை ஓட்டத்தை நாம் காண்கிறோம்.

நாம் பிறவற்றில் , அதாவது நம்மைச்சுற்றி உள்ள இயற்கையில்  காண்பது நம் மனதின் செயல்பாடுகளையே. நமது கோபம் , உற்சாகம் அனைத்தும் நம்மைச்சுற்றியுள்ளவற்றில் நமக்கு தெரிகிறது. இயற்கையில் நாம் காணும் ‘உணர்ச்சிகள்’ ‘அழகுகள்’ எல்லாமே நம்  மனதிலிருந்து வெளிவருபவைதான்.

திரைப்படத்தின் படத்தொகுப்பில் இதற்கு நல்ல உதாரணம் உண்டு. பாறைமீது அலையடிக்கும் கடலின் அலையை அவன் அவளிடம் தன் காதலை சொன்னதும் காட்டினால் அதன் அர்த்தம் மனஎழுச்சி. அக்காதலி  இறந்துபோனபிறகு தாடியுடன் அவன் வந்து கடற்கரையில் அமர்ந்திருக்கும்போது அதே கடலைலையைக் காட்டினால் அது துயரக் கொந்தளிப்பாக தெரிகிறது.

இலக்கியத்தில் சூழல் விவரிப்புகள் எப்போதுமே மனத்தின் வெளிவிளக்கங்கள்தான். கதையில் மழை பெய்கிறது என்றால் அது கதாபாத்திரங்களின் மனதில் பெய்யும் வேறு ஒரு மழையின் வெளிக்குறியீடுதான் . சங்க இலக்கியங்கள் மனதை நேரடியாக சொல்வதேயில்லை, இயற்கையைப் பற்றி மட்டுமே சொல்கின்றன. அதில் மனதை ஏற்றி சொல்கின்றன. நிலமாக அக்கவிதைகளில் தெரிவது மனமே. பிற்பாடு இலக்கண ஆசிரியர்கள் இதை தற்குறிப்பேற்ற அணி என்றார்கள்.

நம்மைச்சுற்றி விரிந்து பரந்து கிடக்கும் இவையெல்லாமே நம் மனதின் காட்சிவடிவம்தான். நம்மையே நாம் எங்கும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இவ்விரு தளத்தையும் வகுக்கிறது இந்தச் சூத்திரம். விருத்தி என்றால் உளச்செயல். ஸாரூப்யம் என்றான் தோற்றம் . இதரத்ர என்றால் பிறவற்றில்.

பிறவற்றிலேயே நாம் உளச்செயலை காணமுடியும் என வகுக்கிறது இந்தச் சூத்திரம். நாம் மனதை நோக்கி அதைக் காணமுயன்றால் காண்பது வெளியே உள்ளவற்றை. வெளியே நோக்கினால் காண்பது  உளச்செயலின் படிமங்களை. ஆக மனம் என எப்போதும் நாம் பிறவற்றையே கண்டுகொண்டிருக்கிறோம்.
 
ஏன் நிலைக்கண்ணாடியை நாம் காணமுடிவது இல்லை. ஏனெனில் அது முழுமையாக பிரதிபலிக்கும் தன்மையை கொண்டுள்ளது என்பதனாலேயே. ஆனாலும் பிரதிபலிக்கும் பிம்பங்கள்தான் கண்ணாடி என்று சொல்லிவிடமுடியாது. பிரதிபலிக்கும் செயலைச் செய்தபடி ஒரு கண்ணாடி காணப்படாமல் இருந்துகொண்டிருக்கிறது.

இங்கே ஸாரூப்யம் என்ற சொல்லை சற்று கவனிக்கச் சொல்வார்கள். ஸ+ரூப்யம் என்றால் தோற்றம் என்று சொல்வதுடன் குறிப்பாக சமானமான தோற்றம் என்றும் சொல்லல்லாம். அது இச்சூத்திரத்துக்கு மேலதிகப் பொருளை அளிக்கிறது.

சூத்திரம் ஐந்து
வ்ருத்தய: பஞ்சதய்ய: கிளிஷ்டா அக்ளிஷ்டா

[உளச்செயல்கள் ஐந்து. தெரிந்தவை ,அருவமானவை]


மனம் செயல்படும் முறை ஐந்துவகையானது என்று வகுக்கும் பதஞ்சலி யோக சூத்திரம் அவை யாவை என இதற்கு அடுத்த சூத்திரத்தில் சொல்கிறது. இங்கே அந்த ஐந்தும் இரு வகையானவை என்று சொல்லப்படுகிறது. க்ளிஷ்ட என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு தெளிந்த, திட்டவட்டமான என்ற பொருள்கள் உண்டு. அதற்கு எதிர்பதம் அக்ளிஷ்ட .

நம் மன இயக்கம் எதுவாக இருப்பினும் அதில் ஒரு சிறு பகுதியே நமக்கு தெரிகிறது இன்னொரு பகுதி தெரியாததாக உள்ளே மறைந்துள்ளது. மரத்தை நாம் பார்க்கும்போது வேர் கண்ணுக்குத்தெரிவது இல்லை .சிந்தனை கற்பனை உள்ளுணர்வு ஆகிய அனைத்துக்குமே இது பொருந்தும்.

ஒரு பறவையைப் பார்க்கிறோம். அடையாளங்களைவைத்து இது மைனா என்ற முடிவுக்கு வருகிறோம். அப்படி அடையாளம் காண்பதும் புரிந்துகொள்வதும் நாம் அறிந்த தளம் . ஆனால் அதேசெயல்பாட்டின் அறியாத தளம் ஒன்று நமக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறது. அப்பறவையை நாம் வேறு பலவிதமான வகைகளில் உள்வாங்கிக் கொண்டுமிருக்கிறோம். அது நமக்குள் ஒரு படிமமாக ஆகி விட்டிருக்கலாம். நம் கனவில் அது முற்றிலும் வேறு வகையில் வெளிப்பாடு கொள்ளலாம்.

நம் மனஓட்டத்தில் நம் செயல்களுடன் [ கர்மம்  ] சம்பந்தப்பட்டவையே நமக்கு தெரிகின்றன.  நம் உள்ளுணர்வுகள் மற்றும் பிறவிக்குணங்கள் [வாசனா ] ஆகியவற்றுடன் தொடர்புள்ளவை நமக்கு தெரிவதேயில்லை. செயல்களுடன் தொடர்புடையனவற்றை மேல்மனம் அல்லது பிரக்ஞை சார்ந்தவை என்றும் உள்ளுணர்வுகளுடன் தொடர்புடையனவற்றை ஆழ்மனம் அல்லது நனவிலி சார்ந்தவை என்றும் ஒரு புரிதலுக்காக ஒப்பிட்டுக் கொள்ளலாம். 

எல்லா மனச்செயல்களிளும் ஒரு முக்கியமான பகுதி தெரியாததாக , தெரிந்துகொள்ள முடியாததாக உள்ளது என்பதே இதற்கு பொருள். நவீன உளவியலில் இதற்கு ஏராளமான விளக்கங்கள் உள்ளன. தெரிந்துகொள்ள முடியாத அந்த பகுதியே மனிதர்களின் இயல்புகளை தீர்மானிக்கிறது என்று ·ப்ராய்டியம் சொல்கிறது. அதை அறிவதற்காக உருவாக்கப்பட்டதே  உளப்பகுப்பாய்வு என்ற ·ப்ராய்டிய வழிமுறை.
  [தொடரும் ]

Iyappan Krishnan

unread,
Jan 22, 2014, 2:28:51 PM1/22/14
to mintamil, Subashini Tremmel

சூத்திரம் ஆறு

ப்ரமாண விபர்யாய விகல்ப நித்ரா ஸ்ம்ருதய: 

[ அவையாவன, யதார்த்தம், பொய்யறிவு, திரிபு , துயில்நிலை , நினைவுகூர்தல் ]
                                     

மனச்செயல்பாடுகளை ஆறுவகையாக பிரித்துப் பார்க்கின்றது யோகம். இங்கே பிரமாணம் என்ற சொல் வகுத்து அறியப்பட்டது என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. புலன்களாலும் தர்க்கத்தாலும் நாம் அறியக்கூடிய அனைத்துமே பிரமாணம் என்பதில் அடங்கும். யதார்த்த அறிவு என்று இதை சொல்லலாம்.

இது சிறகுகள்கொண்டிருக்கிறது வானில் பறக்கிறது ஆகவே இது பறவை . இது சிறியதாக உள்ளது, சிறகுகள் நீலச்சாம்பல் நிறம். நீலச்சாம்பல் நிறமுள்ள சிறகுகள் கொண்ட சிறிய பறவை மைனா எனப்படும். ஆகவே இது மைனா. இவ்வாறு நாம் கண்டு கேட்டு யோசித்து அறிகிற செயல்பாடுதான் பிரமாணம். இது நம்மில் இடையறாது நடந்து கொண்டிருக்கிற மனச்செயல்பாடு .

அறிதல் நிகழும்போதே கூடவே அறிதல்பிழைகளும் நிகழ்கின்றன. அப்பறவை இரைதேடுவதாக நாம் நினைப்போம், அது கூடுகட்ட சுள்ளிதேடிக் கொண்டிருக்கலாம். இதை பொய்யறிவு என்று யோகம் வகுக்கிறது. யோகத்தின் நிர்ணயப்படி அறிதலுடன் சேர்ந்தே பொய்யறிதலும் நிகழ்கிறது. அறிவின் அடியிலேயே பொய்யறிவும் குடிகொள்கிறது. விளக்குடன் நிழலும் வருவதுபோல எந்த அறிவும் அதனுடன் தொடர்புள்ள ஓர் அறியமையையும் நமக்கு அளிக்கிறது.

சட்டென்று கேட்டால் இது வியப்பு தரலாம், யோசித்துப் பார்த்தால் எத்தனை பெரிய உண்மை இது என நமக்கு தெரியும் . ஓர் அறிதல் இன்னொரு முக்கியமான அறிதலை மறைத்துவிடலாம். அறிவியல் ஞானம் கவித்துவ நுண்ணுணர்வை அழுத்திவிடக்கூடும் அல்லவா? ஓர் உண்மை அதன் தீவிரம் மற்றும் நுட்பம் காரணமாகவே அதன் மறுபக்கத்தை நமக்குத்தெரியாமல் செய்துவிடக்கூடும் . ஒருமகத்தான விஷயத்தை நாம் அறிந்ததுமே நம் மனம் அடையும்பரவசம் இன்னொரு விஷயத்தைக் காணமுடியாதவர்களாக ஆக்கிவிடலாம்.ஆகவேதான் அறிதல்கள் அனைத்தையும் ஐயப்படவேண்டும் , அவை முழுமையானவை என்று நம்பிவிடக்கூடாது என்று சொல்லப்படுகிறது. 

அறிதல் அறியாமை இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஓர் அறிதல் நமக்கு அறியாமையை அளிக்கக் கூடும். அது நம் அறியாமையை நமக்கு காட்டலாம். அதேபோல அறியாமை என்பது ஒருஅறிதலே . எனக்கு மேற்கத்திய இசை தெரியாது என நான் தெரிந்துகொள்ளுவதையே நான் அறியாமை என்கிறேன் இல்லையா? பூமிக்கு அப்பால் இப்பிரபஞ்ச வெளியில் நாம் அறியாத , அதாவது நாம் அறியவில்லை என்று கூட அறியாத , பலகோடி விஷயங்கள் உள்ளன. அவற்றை நாம் நம் அறியாமையில் சேர்ப்பதில்லையே. நாராயணகுருவின் ‘அறிவு’ என்ற சிறு தத்துவ நூல் இதை விளக்குகிறது. யோகமரபின்படி அறிவு அறியாமை இரண்டுமே இருவகை அறிதல்கள்தான். அவை பிரிக்கமுடியாதவை 

அறிந்தவை நம் மனதில் கொள்ளும் மாறுதல்கள், அதாவது திரிபுகள் அடுத்த மனசெயல்பாடு. நாம் அறிபவை எல்லாமே நமக்குள் வந்த உடனேயே ஒரு மாறுதலை அடைந்துவிடுபதை நாம் அவதானித்திருப்போம். ஒரே விஷயத்தை ஒன்பது பேர் பார்த்து தங்கள் மனப்பதிவை எழுதினால் ஒன்பதுவகை சித்திரம் நமக்கு கிடைப்பது இதனால்தான். நாம் அறிந்த அறிவு உடனடியாக ‘நம்முடைய’ அறிவாக ஆகிவிடுகிறது. பாத்திரத்துக்கு ஏற்ப மாறும் நீர்போல.

மைனாவைப் பார்த்ததுமே ஒருவர் ‘மைனாவை சாப்பிட முடியாது, காடையை சாப்பிடலாம்’ என்று அந்த புரிதலை உருமாற்றிக் கொள்ளலாம். இன்னொருவருக்கு எப்படியோ அது ‘பேனா ‘வுடன் தொடர்பு கொண்டு விடலாம் . இன்னொருவர் ‘மை’ [My] என்ற சொல்லுடன் அப்பறவையை தொடர்புபடுத்தி வைத்திருக்கலாம் . இன்னொருவருக்கு ஒரு சிறுவயது நினைவு வரலாம். நாம் அறிபவை எல்லாமே நமக்குமட்டுமே உரிய சொந்த அறிதல்களாக உடனடியாக மாறிவிடுகின்றன. மூவர் சேர்ந்து பார்த்த ஒரு மைனாவை பற்றி பேசினால் அவர்கள் ஒருவரோடொருவர் விவாதிக்கவே முடியும் ! நம் மன இயக்கத்தில் மிக முக்கியமான ஒன்று இந்த திரிபுநிலை.

மேற்குறிப்பிட்ட மூன்றுவகையான மன இயக்கங்களும் அடங்கி நாம் அடையும் ஆழ்ந்த நிலைதான் துயில்நிலை. இங்கே நித்ர என்ற வடமொழிச்சொல்லை தோராயமாகவே துயில் என்று மொழியாக்கம் செய்திருக்கிறேன். அது யோக மரபில் மிக ஆழமான பொருள் கொண்ட கலைச்சொல் . புத்தரின் யோக நித்திரை பற்றி நாம் கேட்டிருப்போம். விஷ்ணுவின் நித்திரைநிலை மகாயோகம் எனப்படுகிறது. யோக மரபுகளில் துயில் என்றால் ஓர் உடல் சார்ந்த நிலை அல்ல.

இப்படி விளக்குகிறேன். மரம் விதை நிலையில் உள்ளது. உலர்ந்த விதைமீது நீர் படாமலிருந்தால் அதற்குள் உள்ள மாபெரும் மரம் பலநூறு ஆண்டுகள் தூங்கக்கூடும். விதைக்குள் மரம் ஒரு நுண்வடிவில் , கரு வடிவில் உள்ளது. அதேபோல மனம் என்று நாம் சொல்லும் அத்தனை பேரியக்கங்களும் நமக்குள் கரு வடிவில் இருந்து பிறகு முளைத்து வளர்ந்து காடாக மாறி நிறைந்தவைதாம். துயில்நிலையின்போது அவை திரும்ப கருவடிவுக்கு சென்றுவிடுகின்றன . இதுதான் யோக மரபின் துயில் என்னும் உருவகம்.

ஆகவேதான் தூங்கும் புத்தர்,  தூங்கும் விஷ்ணு போன்ற சிலைகளுக்கு முக்கியமான குறியீட்டுப் பொருள் உள்ளது. விஷ்ணு பிரபஞ்சமே தன் உடலாக கொண்டவர். விஷ்ணுவின் மகாயோக நிலையில் காலம் கருவடிவில் உள்ளது . பிரபஞ்சங்களும் கருவடிவில்தான் உள்ளன. அதாவது சிருஷ்டிக்கு முந்தைய நிலை அது. புத்தரின் உடலை பிரபஞ்ச நியதியின் , மகாதர்மத்தின் வடிவமாக கொள்வது பௌத்த மெய்யியல் மரபு. அதை அவர்கள் தர்மகாயம் என்கிறார்கள் .யோகாசார பௌத்த மரபின்படி  யோகநித்திரையில் உள்ள புத்தர் மகாதர்மம் தன் முடிவற்ற இயக்கத்தை கருவடிவில் மட்டுமே நிகழ்த்தும் நிலையை குறிக்கிறார். 
 
ஆகவே நம் மன இயக்கமானது அதன் அலைகளை. கிளைபரப்பலை நிறுத்தி உள்ளே சென்று கருவடிவில் இயங்கும் நிலையே துயில்நிலை. துயில்நிலையிலும் மனம் செயல்பட்டபடியேதான் உள்ளது. நம் மன இயக்கத்தின் முக்கியமான ஒரு சரடுதான் அது. விழிப்பின் நாம் பார்த்த மைனா அதன் பல்வேறு சாத்தியங்களுடன் நம் மனதில் உள்ளது. இடைவிடாது வளர்ந்து மாறியபடியே இருக்கும் ஒன்றாகவே நாம் நம் விழிப்பில் மைனாவை உணர்ந்திருப்போம். மைனா ஒரு தகவலாக, ஒரு படமாக, ஒரு குறியீடாக, ஒரு ஒலியாக நம் மனதில் மாறி மாறி தெரியும்.   மைனா நம் ஆழ்மனதில் அதன் கருவடிவில் இறங்குவது துயிலில் தான். மைனா ஒரு கருத்தாக சுருக்கப்பட்டுவிடுகிறது. அதாவது சாராம்சப்படுத்தப்பட்டுவிடுகிறது. நம் விழிப்புநிலையில் எந்த மையப்புள்ளியில் இருந்து மைனாவைப்பற்றிய பலவகையான மனச்சித்திரங்களும் எண்ணங்களும் பிறந்து விரிகின்றனவோ அந்த மையப்புள்ளி மட்டுமே எஞ்சும் நிலை அது. 

அதற்கடுத்த நிலை என்று நினைவுகூர்தல் நிலை சொல்லப்படுகிறது . நாம் அறிந்தவற்றை நினைவுகூர்வது இல்லை. மாறாக நம் மனதில் சாராம்சப்படுத்தி வைத்துள்ளவற்றையே நினைவுகூர்கிறோம் என்று நமக்குத்தெரியும். மைனாவை நினைவுகூரும்போது உடனே நாம் அப்போது அருகே இருந்த குளத்தில் விழுந்த தன் நிழலையும் சேர்த்தே நினைவுகூரலாம். மைனாவும் நம் பள்ளிப்பருவமும் சேர்ந்தே நினைவுக்கு வரலாம். அல்லது நம்மால் தர்க்கபூர்வமாக வகுத்துக் கொள்ள முடியாதபடி சம்பந்தமில்லாத பற்பல படங்களை, உணர்வெழுச்சிகளை மைனாவின் நினைவு நம்மில் கிளர்த்தலாம்.உள்ளே போகும்போது புறவுலகு சார்ந்த ஓர் அறிதலாக இருந்த மைனா வெளியேவரும்போது அகம்சார்ந்த ஒரு அடையாளமாக மாறிவிட்டிருக்கிறது. பறவையாக உள்ளே போய் படிமமாக மீண்டுவருகிறது

ஆக பதஞ்சலி மன இயக்கம் என்று சொல்லும்போது புறவுலகம்  நம் மனதுக்குள் சென்று உருமாறி நம்முடைய அகத்தின் ஒரு துளியாக மாறி மீண்டு வருவது வரையிலான ஒரு சுழற்சியையே ஐந்துபடிகளாக சொல்லிவிடுகிறார். இதன் விரிவாக்கத்தை மீண்டும் காணலாம்.

சூத்திரம் ஏழு

ப்ரத்யக்ஷ,அனுமான, ஆகமா ப்ரமாணானி

[நேர்க்காட்சி , ஊகம், முன்னறிவு என பிரமாணங்கள்  மூன்று]

 

பிரமாணம் என பதஞ்சலி சொல்லும் புறவய அறிதல்  மூன்றுவகை. 

பிரத் + அக்ஷ [ அக்ஷம்-கண்]  என்ற சொற்சேர்க்கையின் சரியான பொருள் கண்முன் என்பதே. புலனறிவு என்று இதை வகுக்கலாம். கண்டுகேட்டு உண்டு உயிர்த்து தொட்டு அறியும் அறிவுதான் பிரத்யட்சம் . இது என்ன என்றவினாவுக்கு நம் புலன்கள் அளிக்கும் விடை அது.

ஆனால் நம் புலனறிதல்கள் துண்டுபட்டவை.  மைனாவை மென்மை, இனிய ஒலி , அழகிய நிறம் என்ற மூன்று தனி அறிதல்களாக நாம் உள்வாங்கிக் கொள்கிறோம். அம்மூன்றையும் ஓர் அறிதலாக மாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது . அதை அனுமானம் அல்லது ஊகம் என்று சொல்கிறார். இடைவெளியில்லாது நம் அகம் நம் புலனறிதல்களைத் தொகுத்து ஊகங்களாக மாற்றியபடியே இருக்கிறது .

இவ்வாறு நாம் ஊகங்களை நிகழ்த்துகையில் அதற்கு அடித்தளமாக இருப்பது நமது முன்னறிவு ஆகும். ஒரு புதிய அறிதலை அதற்கு முன்பே நாம் அறிந்த அனைத்து அறிதல்களையும் பயன்படுத்தித்தான் நாம் அடைகிறோம்.  அறிதல் என்பது தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும் ஒரு செயல்பாடு. பறவையைப்பற்றி நாம் அறிந்த அனைத்துமே ஒரு மைனாவை நாம் அறிவதற்கு உதவுகின்றன .

முன்னறிவே இல்லாமல் அறிதல் நிகழ முடியுமா என்ற வினா பொதுவாக எல்லா அமர்வுகளிலும் எழுப்பப் படுகிறது. சிறிய குழந்தை முதன்முதலில் அறியக்கூடிய  ஒரே ஒரு அறிதலை வேண்டுமானால் அப்படி சொல்லலாம் என்பது நமக்கு உடனே தோன்றுகிறது. முதன் முதலில் மைனாவைப் பார்க்கும் குழந்தை உடனே கையை நீட்டி அதை ‘ க்கா ‘  என்று தானறிந்த முன்னறிவுடன் சம்பந்தப்படுத்திவிடும். முதன்முதலில் காக்காவைப்பார்த்ததும் அதை தன் துணியாக எண்ணி ‘த்து’ என்று சொல்லக் கூடும். முதலில் துணியைப்பார்த்ததும் அம்மாவின் உடையாக எண்ணி ‘ம்மா’ என்று சொல்லலாம். முதலில் அம்மாவைப் பார்த்ததும் அது முலைக்கண்ணை சுவைப்பது பற்றிய முன்னறிவுடன் தொடர்பு படுத்தி சுவைக்கும் ஒலியை ‘ ம்ம்ம் ‘ என எழுப்புகிறது. துள்ளுகிறது. ஆனால் முலைக்கண் ?

யோசியுங்கள். முலைக்கண்ணைபற்றிய அறிதலுடன்தானே அது பிறக்கிறது? பிறந்த மறுகணமே அதனால் முலையை சப்ப முடியும். முன்னறிவு என்பது இங்கே அடையப்பெற்றது அல்ல. அது கொண்டுவரப்படுவது. உயிரியல்பின் ஒரு பகுதி. ஆகவேதான் ஆகமா என்றார் பதஞ்சலி. [கமனம் என்றால் வருதல். ஆகமம் என்றால் வந்தது ] முன்னறிவு ஒருவனில் இயல்பாக உள்ளது.

முக்கியமான ஓர் அறிதல் இது. நமது அறிதல்களின் சாத்தியங்கள் அவற்றின் எல்லைகள் இரண்டையுமே இது காட்டுகிறது. நாம் நமது அடிப்படை உள்ளுணர்வுகள் பலவற்றுடன்தான் பிறந்திருக்கிறோம். அவற்றை அடித்தளமாகக் கொண்டுதான் நமது எல்லா அறிதல்களும் நிகழ்ந்துகொண்டுள்ளன. அவற்றின் எல்லைகளை நாம் மீறிப்போகவே முடியாது.

எப்படியெல்லாம் மேகங்களில் மிதந்தும் காற்றுகளில் அலைந்தும் சிந்தித்தாலும் நமது சிந்தனை என்ற பட்டத்தின் நூல் கீழே முன்னறிவு என்ற நூல்பிடியில்தான் உள்ளது. அந்நூல்கண்டு நமது அடிப்படையான மிருக நினைவுகளாக இருக்கலாம். அல்லது நமது இன ,கலாச்சார நினைவுகளாக இருக்கலாம்.

இங்கே தத்துவ மாணவர்களுக்குச் சொல்ல ஒரு முக்கியமான விஷயம் உள்ளது. பதஞ்சலி ஆகம என்று சொல்லும் சொல் நம் மரபிலே பலவாக விளக்கப்பட்டுள்ளது. அதை ‘முன்னோரிடமிருந்து வந்த அறிவு’ என்று கொள்வது வழக்கமான மத உரைகளில் காணப்படுகிறது. வழிபாட்டுமுறைகளை வழிவழியாகப் பெற்று செய்துகொண்டிருக்கும் முறையை பதிவுசெய்த நூல்கள் அகமங்கள் எனப்பட்டன. ஆகவே ஆகமங்கள் என்னும்போது வழிவழியாக வந்த நூல்கள் என்ற பொருளில் நம் மரபில் பயன்படுத்தப்படுகிறது.

வேறுசில நூல்களில் மூன்று பிரமாணங்களில் மூன்றாவது வருவது ‘சுருதி’ [ பிரத்யட்சம், அனுமானம், சுருதி] என்று சொல்லப்படுகிறது. வேதங்களை ஞானத்தின் அடிப்படைகளாக கருதும் மீமாம்சகர்கள் சுருதி என்றால் வேதமே என்று வகுத்து எல்லா அறிதல்களுக்கும் வேதங்களே அடிப்படை என்று விளக்க முற்படுகிறார்கள். சாதாரணமாக இன்றைய இந்துமதச் சொற்பொழிவுகளை கேட்பவர்கள் இவ்விளக்கத்தையே கேட்டிருப்பார்கள்.

அதேபோல வைதிகர்கள் வேதங்களை சொல்லும்போது மற்றவர்கள் தங்கள் மூலநூல்களை அவ்விடத்தில் வைப்பார்கள். அறிதல் எப்போதுமே முன்னோர்வகுத்த சாத்திரங்களை மீறக் கூடாது, மீற முடியாது என இவர்கள் சொல்வார்கள். பதஞ்சலி யோகசூத்திரம் என்ற மூலநூலில் இத்தகைய வரையறை இல்லை என்பதை வாசகர் காணலாம்.

நாராயண குரு நடராஜ குரு நித்ய சைதன்ய யதி என மூன்று ஆசிரியர்களுமே மாஅகம என்பதை முன்னோர் அறிவு என்ற விளக்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல. மதம்சார்ந்து அளிக்கப்பட்ட வாசிப்புகளாக மட்டுமே அவற்றை அவர்கள் காண்கிறார்கள். அவற்றை ‘முன்னறிவு’ என்றே அவர்கள் கொள்கிறார்கள். அதாவது கருவிலேயே மனிதனுக்குள் உருவாகிவிடும் அறிவு. எல்லா உயிரினங்களிடமும் பிறப்பிலேயே வந்துவிடும் அடிப்ப்டை அறிவ்ய்.

மூலநூல்[Canon] என்று எதுவும் பொதுவாக இந்துமெய்ஞான மரபில் இல்லை. மீமாம்சகர்கள் வேதங்களை மாற்றமில்லா மூலநூல்களாக கொள்வார்கள். அது மட்டுமே இந்து ஞானமரபில் உள்ள மூலநூல்வாதம். மற்ற தரிசனங்களைப் பொறுத்தவரை மூலநூல்கள் என்பவை தத்துவ நூல்களே. அதாவது ஏற்று ஒழுகவேண்டியவை அல்ல, கற்று ,பயின்றுவிவாதித்து தெளியவேண்டியவை .ஆகவே முன்னறிவை மூலநூல் என்றோ மூத்தோர் சொல் என்றோ விளக்க இந்துமெய்ஞான மரபில் இடமில்லை என்பதே உண்மையாகும். பிற்கால பக்திமரபுதான் அப்படிப்பட்ட் விளக்கத்தை அடைந்திருக்கிறது. யோகமாணவன் அதை தவிர்த்து முன்னகர்வதே முறை.

[தொடரும்]

Geetha Sambasivam

unread,
Jan 22, 2014, 10:51:42 PM1/22/14
to மின்தமிழ், Subashini Tremmel
கொஞ்சம் விஷய கனமுள்ள கட்டுரைகளை ஒவ்வொன்றாக வெளியிட்டிருக்கலாமோ?  இது என் தனிப்பட்ட கருத்து.   என் போன்றவர்கள் அவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்ள முடியாது. :))) 


2014/1/23 Iyappan Krishnan <jee...@gmail.com>


Subashini Tremmel

unread,
Jan 23, 2014, 3:11:32 AM1/23/14
to மின்தமிழ், Subashini Tremmel
ஒரு நாளைக்கு ஒரு கட்டுரை என வழங்கினால் வாசித்து கருத்து சொல்ல வசதியாக இருக்கும். நம்மில் பலர் பணிகளில் இருப்பவர்கள். கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் தான் மடல்களை வாசிக்க முடியும். அதில் ஒரே நாளில் எல்லாவற்றையும் வாசிப்பது என்பது மிகச் சிரமம். நிறைய வழங்கும் போது நாளை வாசிப்போம் என ஸ்டார் போட்டு வைத்தால் பின்னால் அது புதிய மடல்களுக்குப் பின் பின்தங்கிகிவிடும் என்பதோடு வாசிகக்வும் மறந்து விடும் நிலை ஏற்படும். 

இதுவரை நான் 1 பதிவு மட்டுமே வாசித்திருக்கிறேன். பிரித்து இடைவெளியிட்டு பதிந்தால் நன்று ஐயப்பன்.

சுபா


2014/1/23 Geetha Sambasivam <geetha...@gmail.com>

கொஞ்சம் விஷய கனமுள்ள கட்டுரைகளை ஒவ்வொன்றாக வெளியிட்டிருக்கலாமோ?  இது என் தனிப்பட்ட கருத்து.   என் போன்றவர்கள் அவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்ள முடியாது. :))) 


2014/1/23 Iyappan Krishnan <jee...@gmail.com>


Innamburan S.Soundararajan

unread,
Jan 23, 2014, 4:24:55 AM1/23/14
to mintamil, Subashini Tremmel
Truly said. Actually, each of Pathanjali Sutra  has to be contemplated quietly for some time, before we access the next.

In classes, we are strictly advised to rush and get brushed.

Innammburan
--

Iyappan Krishnan

unread,
Jan 23, 2014, 4:40:34 AM1/23/14
to mintamil, Subashini Tremmel
​I understand that. the problem now is I dont have system access at home. so when ever i find time, I paste it here.
 
anyways... Jemo collection is over as of now. will continue with others one by one.

Subashini Tremmel

unread,
Jan 28, 2014, 3:07:07 AM1/28/14
to Iyappan Krishnan, மின்தமிழ், Subashini Tremmel
இப்பகுதியை வாசித்தேன். தெளிவான நடையில் நல்ல அறிமுகமாக  அமைகின்றது.
பகிர்வுக்கு நன்றி.

சுபா



2014-01-21 Iyappan Krishnan <jee...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Jan 29, 2014, 2:39:04 AM1/29/14
to மின்தமிழ்
தொடர்ந்து இதே இழையில் ஆசான் திரு ஜீவ்ஸ் எழுதிய கட்டுரைகளும், அதன் பின்னர் திரு தி.வாசுதேவன் என்னும் திவாஜி அவர்களின் கட்டுரைகளும் இடம்பெறும்.  அனைவரும் கலந்து கொண்டு அவரவர் கருத்தையும், சந்தேகங்களையும் , யோகம் குறித்த மேல் அதிகத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.   நன்றி.





2014-01-28 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Jan 29, 2014, 2:41:44 AM1/29/14
to மின்தமிழ்
முதலில் ஆசான் ஜீவ்ஸ் அவர்களின் எழுத்தில் பதஞ்சலி யோகம்.


"என்னப்பா நல்ல ஸ்லிம்மாயிட்ட "
" இல்லையா பின்ன இப்பல்லாம் நான் யோகா போறேன்ல "
" ஓ டெய்லி எவ்வளவு மணி நேரம் ? "
" தினத்துக்கும் அரை மணி நேரம் போதும் சார். உடம்பு அப்படியே லேசாய்டும் "

சிலர் இல்லை, பலர் இது போன்ற பேச்சுகளை பரவலாக கேட்டிருக்கலாம். சில நாட்களுக்கு முன்பு கூட ஒருவர் " உடம்பு பெருத்துடுச்சு சார். யோகா போயி உடம்பு குறைக்கலாம்னு இருக்கேன். " அப்படிங்கறார். ஆனா யோகா என்றால் என்ன? இவர்கள் கருத்தில் கொண்டிருக்கும் யோகம் என்பது உண்மையில் "யோகம்" தானா ?


பெரும்பாலோர் கொண்டுள்ள அபிப்பிராயம் யோக ஆசனம் மற்றும் தியானம் தான் யோகா என்பது. நிறைய இடங்களில் "இவ்விடம் யோகா மற்றும் தியானம் சொல்லித்தரப்படும்" என பலகை வைத்து இருப்பவர்களைப் பார்த்தால் வருத்தமாக இருக்கும். யோகத்தில் தியானம் அடங்கிவிடுகிறது, அப்புறம் என்ன அதை தனியாக சொல்லித்தருவது?

தவிர புத்தகத்தைப் பார்த்தும் வீடியோக்களை பார்த்தும் நானும் யோகா பண்ணுகிறேன் பேர்வழி என்று சிலர் காலைத் தூக்கித் தலையில் வைத்து, பின் என்னமோ செய்து கொண்டு கையும் காலும் பின்னிக்கொண்டு ஒரு புது ஜந்துவாய் காட்சியளிப்பார்கள். அதைப் பிரித்தெடுக்க எத்தனை அவஸ்தைப் படுவார்களோ! அதனால்தான் சில வித்தைகளை குருவின் துணையின்றி கற்கக் கூடாது என்று சொல்வார்கள்.

ஒரு ஜென் கதையும் உண்டு.

ஒரு மாணவன் குருவிடம் சென்றான். அந்த குரு வாள் சண்டையில் நிகரில்லாதவர் எனப் பெயர் பெற்றவர். அவரிடம் வாள்பயிற்சி என்பது ஒரு பெருமைக்குரிய விஷயமாக இருந்தது.

"குருவே நான் வாள்பயிற்சி பெறவேண்டும். முழுமையாக வாள்பயில எத்தனை காலமாகும்?"

"பத்துவருடங்கள் ஆகும்!"

"என் தந்தை தனியாக வீட்டுக்காக உழைக்கிறார். நான் அதிக நேரம் செலவழிக்கத் தயாராக உள்ளேன் அப்படியானால் எத்தனை நாளாகும்?"

"இருபது வருடமாகும்."

"தயவு செய்து என் நிலைமையை புரிந்துக் கொள்ளுங்கள். என்னுடைய உழைப்பு வீட்டுக்கு மிக அவசியம். என் தந்தை மிகவும் வயதானவர். அதனால் வாள் பயிற்சிக்கப்புறம் நான் வேலை செய்து என் வீட்டு மக்களைக் காக்க வேண்டும். எவ்வளவு கடினமான உழைப்பு வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறேன். வெகு விரைவில் கற்க வேண்டும். எத்தனை காலமாகும் சொல்லுங்கள்"

சிறிது நேரம் யோசித்த குரு சொன்னார்

"உன்னுடைய பிரச்சினை எனக்குப் புரிகிறது. நீ வாள் பயில குறைந்தது 30 வருடங்களாவது ஆகும்," என்றார்

ஆக எதையும் அவசரத்திலோ தானாகவோ நிர்பந்தத்தாலோ கற்க முயன்றால் அது முழுப் பயனளிக்காது.

மருத்துவம், விற்பயிற்சி மற்றும் யோகம். இவைகளில் எதையும் தானாக கற்றுக்கொண்டு தவறாக முயற்சித்தால் அது பெரும் வினையில் முடியும் ஆபத்து உள்ளது. அத்தனை பயிற்சி தேவை. ஒவ்வொரு பொருளையும் அலசி அப்புறம் இது சரி இது தவறு எனத் தெரிந்து, பின்பு மற்றவர்களுக்கு சொல்லித் தருபவர் ஆசான். ஆயிரம் வேரைக் கொன்றால் அரை வைத்தியன் என்பது பழமொழி. (இதைத் திரித்து சொன்னவர்கள் யாராயிருந்தாலும் அவரை இ.பி. கோ வில் போட வழிதேடுங்கள், என்ன செலவானாலும் பின்னால் பார்க்கலாம்). ஆயிரம் வேர் ஆயிரம் பேர் ஆனதில் ஒரு மருத்துவனுக்கு ஆயிரம் பேரைக் கொல்லும் லைசன்ஸ் தந்து விட்டார்கள்.

[சரி விஷயத்துக்கு வருவோம். இங்கு நான் பதஞ்சலி சூத்திரங்களை தனித் தனியாக சொல்ல வரவில்லை. சொல்லவும் தெரியாது. நான் தமிழில் படித்ததில் புரிந்துகொண்டதை, பிறர் வழியாக அறிந்ததை மட்டும் இங்கு தருகிறேன். சரியா தவறா என நீங்கள் தான் சொல்லவேண்டும்..]
 



2014-01-29 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Jan 31, 2014, 3:36:48 AM1/31/14
to மின்தமிழ்
உலகிற்கு பதஞ்சலி முனிவர் தான் யோக தருமத்தைத் சொல்லித் தந்ததாகவும் அவர் ஆதிசேடனின் அம்சம் என்றும் ஐதீகம். யோக வகுப்புகளில் முதல் மந்திரமே அவரைப் போற்றி தான் ஆரம்பிக்கும். 

"யோகேன சித்தஸ்ய " என்று ஆரம்பிக்கும் மந்திரம்
 
 
யோகேன சித்தஸ்ய பதேன வாசாம்
மலம் சரீரஸ்ய து வைத்ய கேன !
யோபாகரோத்தம் ப்ரவரம் முனீனாம்
பதஞ்சலீம் ப்ராஞ்ஜலி ராநதோஸ்மீ !!

..


பதஞ்சலி முனிவர் இடுப்புக்கு மேலே மனித உடலும், கீழே ஒரு பாம்பு வடிவ உடலும் கொண்டிருப்பார் என சொல்லப்படுகிறது. அவர் எழுதிய மூன்று நூல்கள் மிகவும் பிரசித்தம். வாக்கு, மனம், உடல் என மூன்றுக்குமாய் மஹாபாஷ்யம் (இலக்கண நூல்), யோக சாத்திரம், மற்றும் சரகம் எனப்படும் ஆத்திரேய சம்ஹிதை (ஆயுர்வேதம்). இவரைப் பற்றிய செய்திகள் பதஞ்சலி விஜயம் என்ற நூலில் உள்ளதாம். படித்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும். எழுதியவர் இராம பத்திர தீக்சிதர்.

பதஞ்சலி முனிவருக்கும் ராமானுஜருக்கும் சற்று தொடர்புடைய கதை கூட உண்டு.

ஆயிரம் மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தருவதற்காக ஆதிசேடன் அம்சமான இவர் ஆயிரம் தலை கொண்டு திரையின் பின்னால் இருந்து போதித்ததாக ஒரு கதை உண்டு. மாணவர்களை எந்தக் காரணம் கொண்டும் திரையினை விலக்க வேண்டாம் என்று சொல்லி பாடம் தொடர்ந்தவர், ஒரு மாணவன் ஆசிரியர் திரைக்கு பின்னால் என்ன தான் செய்கிறார் என்று திரையை விலக்கியதால் மூச்சுக் காற்றினால் அனைவரும் இறந்து போனார்களாம் ஒரு மாணவன் தவிர. அந்த மாணவனும் பாடத்தை கட் அடித்து வெளியில் சென்றதால் தப்பித்தான் என்று வரும்

அவர் பாம்பு வடிவில் இருந்தாரோ இல்லையோ அது நமக்குத் தேவையில்லை. அவர் சொன்ன கருத்துகள் அற்புதமானவை. மதம் கடந்து உணர்ந்து செயல்படக் கூடியவை என்பது என் கருத்து.

யோகம் என்பது செயல்- ஆக்ஷன். ஒரு தத்துவமோ அல்லது புத்தகமோ அல்ல. அதாவது yoga என்பதின் வேர் "yuj", to bind together, yoke, union. சமாதி நிலை என்பதும் இதை தான் குறிக்கிறது. [சமாதின்ன உடனே கண்ணம்மா பேட்டை நினைவுக்கு வருதா? அங்க இருக்கிறவங்க மீளாச்சமாதிக்குப் போனவங்க. அந்த சமாதியும் இந்த சமாதியும் ஒண்ணா இருக்குமோ! ஒரு பேச்சு வழக்கு கிராமங்களில் உண்டு- எப்பாவாச்சும் செத்திருந்தா தானே சுடுகாட்டுக்கு போறதெப்படின்னு தெரியும் அப்படின்னு. இரண்டையும் அனுபவச்சிப் பார்த்தா தான் தெரியும் போல.]யோகம் என்பது பிரபஞ்சத்துடன் ஒன்றும் நிலையைக் குறிக்கிறது. 

அதெல்லாம் இருக்கட்டும், யோகம் என்பது மனிதனின் வாழ்வில் எதற்குத் தேவை என்ற கேள்வி எழும்..

ஒரு ஜென் துறவி வில்வித்தையில் சிறந்தவர். அவரை ஒரு இளைஞன் போட்டிக்கு அழைத்தான். அவனும் சாதாரணமானவன் அல்லன். பல இடங்களில் போட்டியிட்டு முதலிடத்தைப் பிடித்தவன். தன் வித்தையில் அபார நம்பிக்கையுடையவன். தன் திறமையை நிரூபிக்க ஒரு மரத்தில் வெகு சிறிய வட்டம் வரைந்து தூரத்தில் இருந்து அம்பெய்து அதன் மையப் புள்ளியை தைத்தான். அதோடில்லாமல் தைத்த அம்பின் மேல் மற்றொரு அம்பெய்தி அதை சரிபாதியாகப் பிளந்தான். "இதை உங்களால் செய்ய முடியுமா. முடியாதெனும் பட்சத்தில் உங்கள் தோல்வியை இப்போதே ஒப்புக் கொள்ளவேண்டும்"

இதற்கு பதிலிறுக்காத துறவி அவனை ஒரு மலைக்கு தன்னுடன் வருமாறு சொன்னார். சற்று உயரமான வலுவற்று ஆடிக் கொண்டிருக்கும் மரத்தில் கிளையின் மேல் நின்று கொண்டு தூரத்தில் இருந்த ஒரு மரத்தை நோக்கி அம்பெய்தார். குறி தவறாமல் அம்பும் மரத்தில் தைத்தது. மற்றொரு அம்பெய்தார். அது முதல் அம்பை பாதியாய் கிழித்து தைத்து நின்றது. 


கீழிறங்கிய துறவி சொன்னார்

"இப்போது உன்னுடைய முறை"

மரக் கிளையில் ஏறியதும் இவனுக்கு மிகுந்த பயம் ஏற்பட்டுவிட்டது. தான் கீழே விழுவோமோ என்ற பயத்தில் வில்லின் நுனியைக் கூட தொடவில்லை. வேகமாக கீழே இறங்கிவிட்டான். உடனே துறவி சொன்னார், "உன்னுடைய வில் ஆளுமையில் சிறிதேனும் சந்தேகமில்லை. ஆனால் உன் மனதின் ஆளுமை வருந்தத்தக்கதாக இருக்கிறது. அது உன்கைவசம் வரும்வரை நீ உன்னை சிறந்த வில்லாளன் என்று சொல்லிக் கொள்ளாதே" என்றார்.

தொடரும்...



Subashini Tremmel

unread,
Jan 31, 2014, 4:00:29 AM1/31/14
to மின்தமிழ், Subashini Tremmel
ஆரம்பமே சுவாரஸ்யமாக இருக்கின்றது. 
தொடருங்கள்.

சுபா


2014-01-29 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Innamburan S.Soundararajan

unread,
Jan 31, 2014, 4:50:15 AM1/31/14
to mintamil, Subashini Tremmel
இந்த இழையில், பதஞ்சலி யோகம் பற்றி தத்துவ ஞானி ரோஹித் மேத்தா அவர்களிடம் பாடம் கேட்டும், மந்தைவெளி யோகமந்திரத்தில் இடுப்புக்கு மேலே மனித உடலும், கீழே ஒரு பாம்பு வடிவ உடலும் ஆக அமைக்கப்பட்டிருக்கும் பதஞ்சலி முனிவரை சிலாரூபத்தில் வணங்கியும் இருந்து வந்த நான், எழுதத் தயங்கினேன், இது திசை மாறி பயனித்ததால். ஸுபாஷிணி முதலில் எழுப்பிய வினா ஒரு திசை. வந்த பதில்கள் பல திசைகள். இந்த பின்னணியில் கீதாவின் இடுகை  தெளிவை தருகிறது. தொடருக.
இன்னம்பூரான்
2014-01-31 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

Geetha Sambasivam

unread,
Feb 1, 2014, 9:44:53 PM2/1/14
to மின்தமிழ்
பதஞ்சலி யோகசூத்ரம் நாலு பாதங்கள்- சமாதி, சாதனா, விபூதி, கைவல்ய பாதம் என்றும் இவையனைத்தும் சேர்ந்து மொத்தம் எட்டுவகையான வழிமுறைகளில் சொல்லுகிறது. யமம். நியமம், ஆசனம், பிராணயமம், பிரத்யாகரம், தாரணை, தியானம் கடைசியாக சமாதி. எந்த ஒரு மனிதன் இந்த எட்டு வகையிலும் தேர்ந்து விடுகிறானோ அவன் மிகப்பெரிய புண்ணியவான்.. பாக்கியசாலி.. ஒரு மஹான் or Top blah blah. இதை ராஜயோகம் என்றும் அழைப்பார்கள். இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். இதெல்லாம் எழுத தகுதியானவனா நான் என்பதே தெரியாத நிலையில் எழுதி கொண்டு இருக்கிறேன். தொடங்கியாகிவிட்டது. முடிந்த வரையில் எழுதி முடித்து விடுகிறேன். பெரியோர்கள் மன்னிக்க!!


1.யமம்:


-------
ஒரு தனி மனிதன் சமூகத்தில் எப்படிப் பழக வேண்டும், இருக்க வேண்டும் என்பது விளக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து உட் பிரிவுகள் உண்டு. அஹிம்சை, சத்யம், திருடாமை, பிரம்மச்சர்யம், தன்னலமின்மை.

முதலாவதாய் அஹிம்சை.

சொல்லாலும் செயலாலும் மற்றவர்களைத் துன்புறுத்தாமல் இருப்பது. மற்ற உயிர்களிடம் அன்பு செலுத்துவது, மற்ற உயிர்களை மதித்தல், செடி கொடியாகட்டும், சக உயிர்களாகட்டும் எதற்கும் மதிப்பளிக்கவேண்டும். 

எங்கப்பா கட்டிடக் கலை வல்லுனர் ( Sculptor ). ஏதேனும் கட்டிடம் அடிக்கால் நடும் போது பூமி பூசை என்று ஒன்று போடுவார்கள். ஏன் என்று கேட்பதுண்டு. அப்போது அவர் சொன்னது, அந்த இடத்தில் இருக்கும் உயிர்களை மெல்ல விலக்கி சுத்தம் செய்து, பூமித்தாயிடம் உன்னை வெட்டப் போகிறேன்... அனுமதி கொடு என்று பிரார்த்தித்து பின்னர்தான் துவங்க வேண்டும் என.

அஹிம்சை என்பது ஆடு கறி தின்று கொண்டே காருண்ய ஒழுக்கம் பேசுவதல்ல.... பாரவண்டியில் மாட்டைப் பூட்டி அதிக பாரம் ஏற்றி பின், மாடு பாவம் என்று போலி கண்ணீர் வடிப்பதில்லை.

தன்னுயிர் போல பிற உயிர்களையும் கருதும் நோக்கு அது தான் அஹிம்சை. ஆனாலும் தன்னை கொல்லவரும் பசுவையும் கொல்லலாம் என்றும் சொல்கிறார்கள். ம்ம் தன் உயிருக்கு ஆபத்து என்று வரும்போது எந்த தர்மமும் நிலைக்காது போலும்.

உடலாலும் மனதாலும் பிறருக்கு தீங்கு வராமல் காப்பதும் அஹிம்சை தான். ஒருவன் நான் யாரையும் அடித்ததில்லை துன்புறுத்தியதில்லை எனலாம். ஆனால் அவன் பேச்சைக் கேட்டு சிலர் மனம் துன்புறுவார்களேயானால் அவன் அஹிம்சையில் இருந்து தவறியவன் ஆகிறான்.

"கொல்லான் புலாலை மறுத்தானைக் கைக்கூப்பி
எல்லா உயிரும் தொழும்"

என்கிறது உலகப் பொதுமறை. அஹிம்சைக்கு உதாரணப் புருஷனான காந்தியடிகள் கீதையை ஒப்புக் கொண்டாலும் அதில் போர் மற்றும் வன்முறையை ஒப்புக் கொள்ளவில்லை.

மனதால் நினைப்பது வாக்கில் வந்து செயலாகவும் மாறக் கூடிய சாத்தியம் இருப்பதால் முடிந்த வரை நல்லததையே நினை என்கிறது பதஞ்சலி யோகம்.

பாரதி பாடல்களில் இரு இடங்களில் (இன்னும் பல இடங்களில் இருக்கலாம் நான் படித்தவரையில் சொல்கிறேன்) அருமையாக சொல்லப்பட்டு இருக்கும்.

"... விசையுறு பந்தினைப் போல் உள்ளம்
வேண்டிடும் படி செல்லும் உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன் நித்தம்
நவமென சுடர் விடும் உயிர் கேட்டேன்... "

அதாவது விசையொடு பந்தைச் சுவற்றில் எறிந்தால் அது எவ்வளவு வேகமாகச் செல்லுமோ அவ்வளவு வேகமாக செல்லும் உடல் வேண்டும். ஆனால் நசையறு மனம்... ஆசையே இல்லாத மனம் வேண்டும் என்கிறார்..

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லதே எண்ணல் வேண்டும்...

ஒரு கதை உண்டு. 

ஒரு ராஜா, எப்பவுமே நல்ல மனுஷன். எந்த ஒருத்தரையும் கனிவோட பாக்குற ஆள். அவரோட குடி மக்கள் யாரும் அவரை எந்த நேரத்திலும் சந்திக்க இயலும். அப்படிப் பட்டவர். ஒரு நாளும் யாரையும் கடிஞ்சு பேசினது கிடையாது. 

ஒரு நாள் அவர் தன்னோட காலை உணவு முடிஞ்சதும் வெளியே போறார். போகும் போதே ஒரு விதமான சலிப்பு, சோகம், எதிராளி மேல் எரிந்து விழத் தோன்றும் உணர்வு. எப்படியோ கஸ்டப்பட்டு அதெல்லாம் அடக்கி அரண்மனைக்கு திரும்பிடறார். 

ஆனா அவருக்கு ஆச்சரியம் ஏன் இப்படியான எண்ணங்கள் தோன்றியது அப்படின்னு. அமைச்சரைக் கூப்பிட்டு கேக்கறார். அவருக்கு ஒண்ணும் புரியல. நிமித்தக் காரன் " நீங்க காலையில யார் முகத்துல முழிச்சீங்க " அப்படிங்கறான். அதுக்கு ராஜா தன் புள்ளை முகம் தான்னு சொல்றார். வேற யாரோன்னு சொல்லிருந்தா அவங்களை கைக் காட்டிருப்பான். ஆனா ராசாவோட புள்ளையாச்சே. அதனால நிமித்தக் காரன் சும்மா ஆயிட்டான். 

அப்ப அந்த அரசரோட ஆசான், குல குரு வரார். அவரு கிட்ட கேக்கறான். 

" சாமி ஏன் எனக்கு இப்படி ஆச்சு ஏன் என் எண்ணங்கள் இப்படி மாறியது " அப்படின்னு.

உங்களில் யாருக்கேனும் இதற்கான பதில் தெரிந்திருப்பின் இங்கே பதியுங்கள். இதற்கான பதிலும், இது தொடர்பான ஜென் கதையுடன் நாளை சந்திக்கிறேன். 
****
 
அரசரின் இராஜ குரு, பலமுறை யோசித்தும் இதற்கான விடை கிடைக்கவில்லை. பின்பு அரசனிடம் கேட்டார். குறிப்பாக யார்மீதாவது உங்களுக்கு அதிக கோபம் வந்ததா இன்று என்று கேட்டார். ராஜாவும் யோசிச்சு அப்புறம் சொன்னார். ஆமா அரண்மனை சமையக் காரன் மேல அத்தனை கோபம் வந்தது. கொன்னுடலாம்னு கூட தோணுச்சு. ஆனா ஏன்னு தெரியலன்னார். 

ராஜகுரு அரண்மனை சமையல் காரனை வரச்சொல்லி ஆளனுப்பிட்டு ராஜா கிட்ட சொன்னார். இப்போ என்ன மாதிரியான நிகழ்வுகள் இருந்தாலும், அந்த சமையல்காரனை நீங்கள் மன்னிச்சு விட்டுடனும் அப்படின்னு, ராஜாவும் ஒத்துக்கிட்டார். 

சமையல் காரன் கிட்ட கேட்டப்ப அவன் சொன்னான். 

" காலைல வீட்ல எனக்கும் எம் பொஞ்சாதிக்கும் சண்டைங்க. என் மச்சான் இருக்கானே.. சந்தனக் கட்டை வியாபாரி. அவன் வீட்டுல நிறைய சந்தனக் கட்டை விக்காம தேங்கிட்டுது. அவன் என் பொண்டாட்டி கிட்ட சொன்னான் இராஜா செத்தா சந்தனக் கட்டை வாங்குவாங்க. நம்ம ராஜாவும் செத்துட்டா என் சந்தனக் கட்டை மொத்தமும் வித்துடுமேன்னு. ராஜாவை இப்படிச் சொன்னதுல எனக்கு கோவம் வந்து சண்டை போட்டுட்டேன். அப்புறம் சமையல் செய்யும் போது எனக்கே ஒரு எண்ணம் வந்தது. இந்த ராஜா செத்துப் போயிட்டா, மச்சான் பணக்காரன் ஆகிட்டா நாமும் பணக்காரனாகிடலாமே அப்படின்னு. ஆனா சமையல் முடிச்சுட்டு உக்காந்து கடவுள் கிட்ட மன்னிப்பு கேட்டுட்டேன் ஐயா.. இது மாதிரி எண்ணம் எனக்கு வந்ததுக்கு. இதுக்கு என்ன தண்டனை குடுத்தாலும் நான் ஏத்துக்கறேன் " அப்படின்னான். 

ராஜகுரு சொன்னார். 

"நாம் எந்த எண்ணங்களுடன் ஒரு செயலை ஆரம்பிக்கிறோமோ அந்த எண்ணங்களின் சக்தி அந்த செயலில் ஊடுறுவுகிறது. இவன் சமையல் செய்யும்போது மனைவி மீதான கோபமும், பின் உங்களின் மீதான மரண எண்ணமும் சேர்த்து சமையல் செய்திருக்கிறான். ஆகவே அது உங்களையும் பாதித்து இருக்கிறது." என்றார். 

நம்மையே எடுத்துக் கொள்வோம். காரணமே இல்லாமல் திடீரென்று ஏனென்றே தெரியாமல் நமக்கு அழுகை உணர்வு வரும். ஏனென்றே தெரியாமல் யார் மீதாவது எரிந்து விழத் தோன்றும். இதெல்லாம் ஏன் என்று யோசித்திருக்கிறோமா ?

இதனால் தான் பெரியவர்கள் வீட்டில் சமையல் செய்யும் போது சண்டை போடாமலும், அல்லது நல்ல மந்திரங்கள் , நல்ல பாடல்கள் சொல்லிக் கொண்டே அதாவது சந்தோஷமான மனநிலையில் செய்ய வேண்டும் என்பார்கள். 

அவர் மிகப் பெரிய ஜென் துறவி. அவர் தினமும் கடற்கரையில் தியானம் செய்யும் போது அவரைச் சுற்றி சீகல் எனும் கடற்பறவை விளையாடும். சில அவர் மீதும் அமர்ந்து செல்லும். இதை அந்த கடற்கரையில் தினம் விளையாடும் சிறுவன் பார்த்தான். அவனுக்கு அந்த பறவையோடு விளையாடும் ஆவல் ஏற்பட்டு துறவியிடம் கேட்கிறான். உங்களைச் சுற்றி தினமும் பறவை வந்து விளையாடுகிறதல்லவா ? அவற்றில் ஒன்றை எனக்குப் பிடித்துத் தாருங்கள் விளையாடுவதற்கு என்று. துறவியும் நாளை பிடித்துத் தருகிறேன் என்கிறார். 

மறுநாள் காலையில் அந்தத் துறவி தியானத்தில் அமர்ந்திருந்த போது ஒரு பறவையும் அவர் அருகில் வரவில்லை. காரணம் அவரின் எண்ணத்தில் ஏற்பட்ட மாற்றம். 

வனவியல் புகைப்படத் துறையிலும் இது காணலாம். பறவைகளை புகைப்படம் எடுப்பவர் அந்தச் சூழலுடன் ஒன்றி, பறவைகளை முழு மனதுடன் நேசிப்பவராயின் நீங்கள் மூன்றடி, இரண்டடி தூரத்தில் நின்று கூட பறவைகளை படம் எடுக்க இயலும். ஆனால் படம் எடுக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இருந்தால்.. பறவை நீங்கள் இருபதடி தூரத்தில் இருக்கும் போதே பறந்து சென்றுவிடும். 
 
இந்த மனதின் ஆற்றல் குறித்து ஒரு பக்தி கதையும் உண்டு. 

ஒரு ஊர்ல ரெண்டு பெண்கள் பசுஞ்சாணத்தில் வரட்டி செஞ்சு வித்திட்டிருந்தாங்க. இதுல ஒருத்தி செய்த வரட்டிகளை, இன்னொருத்தி திருடி எடுத்துகிட்டா. ரெண்டு பேருக்கும் இதனால் சண்டை வந்துச்சு.

துக்காராம்னு ஒரு பெரியவர். விட்டல ரங்கன் உபாசகர். பெரிய மகான் அந்த ஊருக்கு வந்திருந்தார். அவர் கிட்ட இந்த பிரச்சினைய தீத்து வைங்க சாமி, நான் கஸ்டப்பட்டு தட்டின வரட்டி எல்லாம் இந்த பெண் திருடிக்கிட்டா... எனக்கு என்னோட வரட்டிகள் வேணும்னு பஞ்சாயத்தக் கொண்டுபோனாங்க. 
துக்காராம் அந்த வரட்டிகளை கையில் எடுத்து, ஒவ்வொன்றாக காதுல வச்சு பாத்தார். அப்புறம் வரட்டிகள இங்க கொஞ்சம் அங்க கொஞ்சம்னு எடுத்து வச்சார். அப்புறம் அவங்க கிட்ட கேட்டார்.

" உங்கள்ல யாரு வரட்டி தட்டும் போதும் " விட்டல விட்டலா " அப்படின்னு சொல்லிக்கிட்டே வேலை செய்யறது " அப்படின்னு. திருட்டுக் கொடுத்தப் பெண் வந்து, நாந்தான்னு சொல்ல, வலது பக்கம் எடுத்து வச்சக் குவியலைக் காட்டி இவை உன்னோடது, நீ எடுத்துக்கலாம்னு சொன்னார். அது மிகச் சரியான எண்ணிக்கையா அந்தப் பெண்மணி திருட்டுக் கொடுத்த அதே அளவு இருந்தது. ரெண்டு பேருக்கும் ஆச்சரியம். திருடினவளும் ஒத்துக்கிட்டு மன்னிப்புக் கேட்டுட்டு இது எப்படி கண்டுபிடிச்சீங்கன்னு கேட்டாங்க. 
" நாம் சொல்லும் வார்த்தைகளின் அதிர்வலைகள் எங்கும் மறைந்து போவதில்லை. இவள் சொன்ன விட்டல நாமம் இந்த வரட்டியில் பதிந்திருந்தது. எப்போதும் அது அதிர்வலைகளாக வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது. ஆகவே என்னால் எளிதாகக் கண்டுபிடிக்க முடிந்தது " அப்படின்னாராம்

 

எழுதியது ஜீவ்ஸ் ஐயப்பன் கிருஷ்ணன்.

Natrajan Kalpattu Narasimhan

unread,
Feb 1, 2014, 10:34:13 PM2/1/14
to Minthamil

2014-02-02 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

வனவியல் புகைப்படத் துறையிலும் இது காணலாம். பறவைகளை புகைப்படம் எடுப்பவர் அந்தச் சூழலுடன் ஒன்றி, பறவைகளை முழு மனதுடன் நேசிப்பவராயின் நீங்கள் மூன்றடி, இரண்டடி தூரத்தில் நின்று கூட பறவைகளை படம் எடுக்க இயலும். ஆனால் படம் எடுக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இருந்தால்.. பறவை நீங்கள் இருபதடி தூரத்தில் இருக்கும் போதே பறந்து சென்றுவிடும். 

நூத்துக்கு நூறு உண்மை இது.  கீழே உள்ளதைப் படிக்கவும்:

ஆள்காட்டிக் குருவி

Inline image 2

ஆள்காட்டிக் குருவி தனது முட்டைகளை எப்படி மிகக் கவனமாக காப்பாற்றிக் கொள்கின்றன என்று பாருங்கள்.

 

ஓரு பறவை அடைகாத்துக் கொண்டிருக்கும் போது மற்றொரு பறவை சற்றே உயரமான இடத்தில் நின்று கொண்டிருக்கும்.  ஆடு மாடுகளோ, மனிதர்களோ தரையில் உள்ள முட்டைகளை நோக்கி நடந்தால், காவல் காக்கும் பறவை, கிரக்...கிரக்... என சன்னக் குரலில் அபாய ஒலி எழுப்பும்.  உடனே அடைகாத்துக் கொண்டிருக்கும் பறவை எழுந்திருக்காமல் குனிந்தபடியே சிறிது தூரம் நடந்து சென்று பின் இரு பறவைகளுமாக ஆகாயத்தில் கிளம்பி கூட்டை நோக்கி நடப்பவரை / நடப்பதை விமானம் தாக்குவது போலத் (dive bombing) தாக்குதல் செய்யும்.  அவ்வாறு செய்யும் போது, ஆங்கிலத்திலே “Did you do it?  Did you do it?” என்று கேட்பது போன்ற ஒலியினை எழுப்பும் ஆதலால் இப்பறவைகளை Did you do it bird’ என்று சிலர் வேடிக்கையாக அழைப்பார்கள்.  இப்போது புரிகிறதா இந்தக் குருவியை ஏன் ஆள்கட்டிக் குருவி என்று பலரும் அழைக்கிறார்கள் என்பது?

 

இவ்வளவு கவனத்துடன் தன் முட்டைகளையும் குஞ்சுகளையும் பாதுகாக்கும் குருவியை நான் சில நாட்கள் தொடர்ந்து படம் பிடித்து வந்தேன்.  முதலில் கேமராவை மட்டும் கூட்டின் அருகில் வைத்து விட்டு தூரத்தில் இருந்து “ரிமோட் ரிலீஸ்” மூலம் படம் பிடித்து வந்த நான் கொஞ்சம் கொஞ்சமாக அருகில் சென்று இறுதியில் அதனைத் தடவிக் கொடுத்தேன்.  பின் அடை காத்துக் கொண்டிருந்த பறவையை கையில் எடுத்து சுமார் இரண்டடி தூரத்தில் விட்டு அது தன் கூட்டினை அடையும் போது படம் எடுத்தேன்.

 

 

 

 

ஒரு முறை எனது நண்பர் ஒருவரை அப்பறவையைதடவிக் கொடுக்கச் செய்து எடுத்த படம்

இதோ.       


Inline image 1                 

Yellow wattled Lapwing being stroked.jpg
Y.W.Lapwing-modified -11-11-2013.png

Geetha Sambasivam

unread,
Feb 4, 2014, 7:56:02 AM2/4/14
to மின்தமிழ்
மனம் மனம் மனம், இது குறித்து ஏன் இவ்வளவு விளக்கங்கள் இது குறித்து? பதஞ்சலி சூத்திரத்தின் இரண்டாவது பாடலின் ஆரம்பத்தை கவனியுங்கள். 
” யோக: சித்த விருத்தி நிரோத: “

சித்தம் விருத்தியாவதை தடுத்தல். அதாவது உள்ளத்தின் செயல்களை நிறுத்துதல். பாலகுமாரன் கதைகளைப் படித்தவர்களுக்கு இது குறித்து ஓரளவு புரியலாம். அவர் அடிக்கடி கதைகளினூடே சொல்லுவார். தன்னுள்ளே தன்னை கவனித்து செயல்களை சரி செய்தல் அப்படிங்கற மாதிரி. மனம் அது அடங்காத ஒரு தொடர் நிகழ்வு. ஒன்றில் தொடங்கி எங்கோ சென்று முடியும். 

முகத்தில் ஒரு சிறிய கொப்புளம், காலையில் கண்ணாடியில் பார்க்கும் போது தெரிகிறது. அட இந்தக் கொப்புளம் எப்படி வந்தது, இந்தக் கொப்புளம் பெரியதானால் என்னாவது, ஒருவேளை இது கேன்சர் கொப்புளமாக இருந்தால்? அறுவை சிகிச்சை செய்தால் ? என் முகமே பாழாய்ப் போகுமே... 

அட, கொப்புளம் என்னமோ வெறும் சூட்டுக் கொப்புளம் தான். ஆனால் மனம் அதற்குக் கொடுக்கும் வடிவம் இருக்கிறதே... பேய் மனது. 

தியானம் செய்ய அமர்கிறோம். மனதில் உறுதியோடு, எதைக் குறித்தும் நினைக்காமல் தியானம் செய்வேன் என்று சங்கல்பம் செய்து கொண்டே அமர்கிறோம். அப்போது தான் எதிர்த்த வீட்டுக்காரன் வாங்கிய புதிய கார் நினைவுக்கு வரும். அட.. என்ன மாதிரியான கார் சார் அது. பி.எம்.டபில்யூ. சூப்பர் பவர் சார். சும்மா உக்காந்தா காத்துல பறக்கிற மாதிரி இருக்கும். ப்ச்.. நான் என்ன பண்றேன்.. தியானம் பண்ணனும்னு உக்காந்துட்டு காரைப் பத்தி யோசிக்கிறேன். ச்சை. தியானம். ஓம்.. ஓம்... பக்கத்து வீட்ல வந்திருக்கிற வீட்டுக்காரங்க பொண்ணு நல்ல டைப் தான். நல்ல அழகு. நல்ல உடை , நல்ல பாவனை.... என்ன சரியா முகங்கொடுத்துப் பேசமாட்டேங்கிறாங்க. அடச்சை. தியானம் தியானம்... ஓம் .. ஓம்.. 

விரியும் எண்ணங்கள் எங்கும் எதற்கும் கட்டுப் படுவதில்லை. எதைக் கொண்டு அடக்குவீர்கள் அதை. காமம், குரோதம், நன்மை, தீமை, உள்நாடு வெளிநாடு, நண்பன் பகைவன், என எதற்கும் அது எல்லை வகுத்துக் கொள்வதில்லை. அழகான மரம் ஒன்று பார்க்கிறீர்கள். அந்த மரத்தில் உங்களுக்கு ஏதோ ஒன்று குறைவது போல் தோன்றுகிறது. இது கொய்யா மரம் இல்லை தான். ஆனால் இதில் கொய்யா பழுத்தால் ? உடனே மனது அந்த மரத்தில் கொய்யாக்கனிகளை தொங்க விட்டு வேடிக்கைப் பார்க்கிறது. எதிரி, எப்போதும் அவனால் தொல்லை. இவன் இறந்துப் போனால் என்ன ? உடனே மனம் அவனை விதவிதமாய் கொன்று வேடிக்கைக் காட்டுகிறது. இது அடங்குமா ?

அதை அடக்க முடியாது. ஆனால் அதன் வளர்ச்சியை நிறுத்த நம்மால் முடியும் ? எப்படி ? அதைச் சொல்லத் தொடங்குவதற்கான ஆரம்பமாகத்தான் இந்த சூத்திரத்தையே சொல்லுகிறார். அதாவது விடையை முதலில் சொல்லிவிட்டு, அதை அடையும் வழியை பின்னால் சொல்லிக் கொண்டுச் செல்கிறார். 


எளிய உதாரணத்தோடு சொல்வதென்றால் ஜென் என்றால் என்ன என்று சீடன் கேட்க, அதற்கு குரு 
" உண்ணும் போது உண்ணுவது, உறங்கும் போது உறங்குவது. இது தான் ஜென்" 

என்கிறார். ஜென் இதில் அடங்கிவிடுகிறது. உங்களால் உண்ணும் போது உணவை மட்டும் யோசிக்கவும், உறங்கும் போது தூக்கத்தை மட்டும் நேசிக்கவும் முடியுமே ஆனால், நீங்கள் யோகி என்று உலகம் போற்றும். 

இது குறித்து விரிவாக "சும்மா இரு, சொல் அற " என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை இங்கே வாசிக்கக் கிடைக்கும்
****

...மீண்டும் சந்திப்போம்... இறையருள் நாடினால் ...

Geetha Sambasivam

unread,
Feb 9, 2014, 5:36:22 AM2/9/14
to மின்தமிழ்
யோக மார்க்கம் --பதஞ்சலி யோகம் -- பகுதி ஒன்று

எழுதியது திருமூர்த்தி வாசுதேவன்
 

இந்த சுற்றில் முன் அதிகம் பேசாமல் விட்ட யோக மார்க்கத்தைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

ஞான சாதனங்களான கர்மா முதலானவைகளை உபதேசிக்கிற சாத்திரங்கள் தர்சனம் எனப்படும். அவை ஆறு இருக்கின்றன. சாங்க்யம், யோகம், நியாயம், வைசேஷிகம், பூர்வ - உத்தர மீமாம்சை என்பன அவை. சாங்க்யம் கபிலரால் செய்யப்பட்டது.

முதலில் யோக விஷயத்தை உபதேசம் செய்தவர் ஹிரண்யகர்பர். பதஞ்ஜலி அதை சூத்திர வடிவமாக்கினார். யோக சாஸ்திரத்தால் சித்த குற்றங்களையும் வியாகரண பாஷ்யத்தால் சொற் குற்றங்களையும் வைத்திய சாஸ்திரத்தால் சரீர தோஷங்களையும் போக்க உதவினார் என போற்றுகிறார்கள்.

இந்த பதஞ்சலி யோக சாஸ்திரத்துக்கு எட்டு வியாக்கியானங்கள் உண்டு.
யோகம் என்றால் யோக ஆசனங்கள்தான் நமக்கு உடனே நினைவுக்கு வருகிறது. ஆனால் யோகம் என்பதற்கு இணைதல் என்பதே பொருள். ஐக்கியம்; ஆன்மா பரமான்மாவுடன் ஐக்கியமாதல் எனலாம்.

இந்த நூல் முக்கியமாக ஞானம் பெற தீக்ஷை கிடைத்தவருக்கே உரித்தாகும். இன்று யோகம் உலகமெங்கும் பரவிவிட்டது. பல வேறு மாற்றங்களும் அடைந்துவிட்டது. பல போலிகளும் வந்தாகிவிட்டது.

பதஞ்ஜலி 195 சூத்திரங்களிலேயே ஒரு நம்பத்தகுந்த தத்துவமும் வழிமுறையும் சொல்லி இருக்கிறார். அவை இங்கு பதியப்படுகின்றன. சமஸ்கிருத மூலமும் தமிழில் சுக்குமி லகுதி ப்பிலி ரீதியிலும் எழுதப்பட்டுள்ளது. இதன் பொருளை எளிய முறையில் புரிய வைக்க முயன்று இருக்கிறேன். சூத்திர வடிவில் இருப்பதால் இதற்கு வியாக்கியானம் தேவைப்படுகிறது. நிச்சயமாக இதுதான் பொருள் என்று இல்லை. ஆழ்ந்து யோசிப்போருக்கு வேறு பொருள் கிட்டக்கூடும்.

இதில் ஒரு ருசி வந்து தகுந்த குருவை நாட அவர் முழுவதும் வேறு விதமாகக் கூட புரியவைக்க முடியலாம்....



அர்த்தமெல்லாம் வேறுதான் அகராதியும் வேறுதான்:

நாம பார்க்கப்போகிறது  தியரி மட்டுமே. இது யோகத்துக்கு ஒரு கிராஷ் கோர்ஸ் இல்லை. விடாமுயற்சி உள்ளவருக்கே இது பயனாகும். பற்றின்மையும் அப்பியாசமும் மிக அவசியம். நமக்கு இவற்றை அடையவே பெரு முயற்சி வேண்டும்.

படித்து உடனே புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம். நிதானமாகவே படிக்க வேண்டும். கலைச்சொற்களை சரியாக உள்வாங்கிக்கொள்ள வேண்டும். ஏனெனில் அது அடுத்த வரிகளில் வரும். அப்போது இது என்ன என்று விழிக்கக்கூடாது. சாதாரணமாக மற்ற இடங்களில் வரும் பொருள் இங்கே இல்லாமல் போகலாம். யோக சாஸ்திரத்தின் அகராதி தனியேதான். குழம்ப வேண்டாம்.

 இதை பயிலுவதற்கு ஒரு குரு அவசியம் தேவை. தயை செய்து யாரும் குரு மேற்பார்வை இல்லாமல் முயற்சி ஆரம்பித்து அவஸ்தை பட வேண்டாம். அப்படி ஒன்றும் செய்யவும் முடியாது என்பதால்தான் தைரியமாக இதைப் பதிப்பிகிறேன். சுலபமாக சித்தத்தை ஒருமுகப்படுத்து என்று சொல்லிவிட்டு போய்விடுவார். சித்தம்ன்னா என்ன, ஒருமுகப்படுத்துவதுன்னா என்ன, எப்படி செய்வது என்று சொல்ல குருதான் வர வேண்டும். படித்து புரிய முடியாதென்றால் ஏன் இதை பதிக்கிறேன் எனில் ஏதோ ஒரு
தூண்டுதலாலேயே. யாருக்கோ பயன்படும்.

முதலில் வருவது சமாதி யோகம். இதில் யோகம் என்பது என்ன என்பதைப்பற்றி சிறிது விளக்கி பின் வெவ்வேறு வகையான சமாதிகளைப்பற்றி சொல்லப்படுகிறது. அடுத்து வரும் சாதனா பாதத்தில் எப்படி சமாதி அடையப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. விபூதி பாதத்தில் அடையப்படும் சித்திகள் குறித்தும், கடைசியாக கைவல்லிய பாதத்தில் 
கைவல்லியத்தை அடைவது குறித்தும் சொல்லப்படுகிறது.

சித்திகள் குறித்து ஒரு தவறான அபிப்பிராயமே பொதுவாக காணப்படுகிறது. அவை மனதானது வெவ்வேறு இடங்களில் நிலை பெறும்போது தானாகவே தோன்றுவன. துணை உற்பத்தி (by products) அல்லது பக்க விளைவுகள் (side effects) எனலாம். ஆனால் இவை சாதகனுக்கு முன்னேற்றத்தை காட்டும் போது இலக்கை விட்டு விலகவும் ஹேதுவாகலாம். சித்திகளின் மகத்துவத்தில் மயங்கும் சாதகன் இலக்கான கைவல்லியத்தை அடைய தடையுண்டாகும். ஆசைகளை விடும்போதுதான் மனம் நிலை பெறுகிறது என்றாலும் ஆசைகள் மீண்டும் முளைத்து சாதகன் நிலை கீழிறங்கக்கூடும்.

 மனிதனின் யத்னத்தில் சமாதி கிட்டுவதை விட ஈஸ்வர பக்தியால் இன்னும் விரைவில் நல்ல சமாதி கிட்டுகிறது என்பது நினைவில் வைத்துக்கொள்ளத்தக்க ஒன்று...




Geetha Sambasivam

unread,
Feb 10, 2014, 6:32:06 AM2/10/14
to மின்தமிழ்
யோக மார்க்கம் --பதஞ்சலி யோகம் -- பகுதி ஒன்று

எழுதியது திருமூர்த்தி வாசுதேவன்


अथ योगानुशासनम् ।।1।।

அத² யோகா³நுஶாஸநம் || 1||

[யோக சாத்திரத்தை பதஞ்சலி விளக்குகிறார்.] யோக சாஸ்திரம் தொடங்கப்படும்.

யோகம் என்பதென்ன?

योगश्चित्तवृत्तिनिरोधः ।।2।।

யோக³ஶ்சித்த வ்ரு«த்தி நிரோத⁴: || 2||

சித்தத்தின் விருத்தியை (வளர்ச்சியை) அடக்குதல் யோகம்.

சூத்திரங்களில் இதான் பிரச்சினை. சுலபமா சொல்லிவிட்டு போய் விட்டார்! இப்போது சித்த விருத்தி என்றால் என்ன? அடக்குவது என்றால் என்ன என்றெல்லாம் ஆராய வேண்டும். ஆராய்ந்து மிகச்சரியான விடை கண்டு பிடித்துவிட்டால் சாஸ்திரமே படித்ததாகும்! போகட்டும், நாம் இங்கே
மேலோட்டமாகத்தான் பார்த்துக்கொண்டு போகிறோம்.

சித்தம் என்பதென்ன? வேறு பதிவில் இதை பார்த்தோம். அந்தக்கரணத்தின் ஒரு பகுதி. எளிமையாக சொல்ல மனதின் வேறு வடிவம் எனலாம். எதையாவது யோசிக்க ஆரம்பித்து தொடர்ச்சியாக அதைப்பத்தியே யோசித்துக்கொண்டு போனால் அது சித்தம் ஆகும். சப்ஜெக்டை விட்டு வேறு வழியில் போவது இல்லை. சாதாரணமாக நாம் எதையாவது யோசிக்க ஆரம்பிக்கிறோம். சற்று நேரத்திலேயே வேறு எண்ணம் கிளைத்து வேறு எதையோ யோசித்துக்கொண்டு இருக்கிறோம். இதை சரியாக அறிய ஒரு சின்ன சோதனை செய்து பாருங்கள். இதை படிக்க ஆரம்பிக்கு முன் எதைப்பற்றி நினைத்துக்கொண்டு இருந்தீர்கள்? அதற்கு முன்? அதற்கு முன்? இப்படியே ஆராய்ந்தால் 5 நிமிடங்கள் முன் யோசிக்க ஆரம்பித்ததும் இப்போது யோசிப்பதும் இடையில் யோசித்தவையும் பலவாக இருக்கும். இப்படி பல வழியிலும் ஓடுவது மனசு.

 மனம் போகிற போக்கில் விடாமல் மனசை கட்டுப்படுத்தி குவித்து சிதறாமல் ஒரே வழியில் ஓடுவது சித்தம். இப்படி சித்தம் தொடர்ந்து ஓடுவதையும் கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை கட்டுப்படுத்தி கடைசியில் நிறுத்திவிட்டால் அது யோகம். 


  तदा दृष्टुः स्वरूपेऽवस्थानम् ।।3।।

ததா³ த்³ரு«ஷ்டு​: ஸ்வரூபே'வஸ்தா²நம் || 3||

அப்படி செய்யும் போது [சைதன்யமான (இயங்கு சக்தியாக) உள்ள புருஷனுக்கு] தன் சொந்த வடிவில் இருப்பு ஏற்படுகிறது.
போன சூத்திரம் சுலபமா இருந்தது. உடனே அடுத்தது டெக்னிகல் ஆயிடுத்து! அப்படி செய்யும் போது ....- புரியுது. சித்தத்தை அடக்கும்போது. சைதன்யம்? புருஷன்? சைதன்யம் என்பது இயக்கு சக்தி. எது நம்மை –உடம்பை, மனசை- இயக்குகிறதோ அது. புருஷன் என்பது இங்கே (யோக சாஸ்திரத்தில்) ஜீவாத்மாவை குறிக்குது. ஜீவாத்மாவை 'கண்ணைக்கட்டி', தான் வேற ஏதோ ன்னு நினைக்க வெச்சதே இந்த அந்தக்கரணம்தான். மனசு, சித்தமெல்லாமே அந்தக்கரணம்தான். அதனால அந்தக்கரணம் நிற்கும் போது, தான் சொந்த நிலையில் இருப்பது ஜீவனுக்கு தெரிஞ்சு போகும்.

  वृत्तिसारूप्यमितरत्र ।।4।।

வ்ரு«த்தி ஸாரூப்யமிதரத்ர || 4|| 

ஏனைய (யோகமில்லா) காலத்தில் [புருஷனுக்கு சாத்விகம், ராஜசம், தாமஸம் முதலிய] வ்ருத்திகளோடு ஒன்றாய் இருக்கும் தன்மை ஏற்படுகிறது.

சரி அப்ப ஜீவன் யோகத்திலே இல்லாத போது எப்படி இருக்கும்? ஏதோ எண்ணங்கள் ஓடிகிட்டே இருக்கு. அந்த எண்ணங்கள் சாத்விகமா இருக்கலாம்; ராஜசமா இருக்கலாம்; தாமசமா இருக்கலாம். எப்படி இருந்தாலும் அது கண்ணாடியில் அழுக்கு இருக்கிறாப்போல இருக்கு. இந்த அழுக்கை நீக்குவது ரொம்ப கடினமான வேலையே. நல்லாவே ஒட்டிகிட்டு இருக்கும்.

இந்த ராஜசம் தாமசம் சாத்விகம் எல்லாம் என்ன?




Geetha Sambasivam

unread,
Feb 13, 2014, 11:11:30 PM2/13/14
to மின்தமிழ்
யோக மார்க்கம் --பதஞ்சலி யோகம் -- பகுதி ஒன்று

எழுதியது திருமூர்த்தி வாசுதேவன்




वृत्तयः पञ्चतय्यः क्लिष्टाक्लिष्टा ।।5।।
வ்ரு«த்தய: பஞ்சதய்ய: க்லிஷ்டாக்லிஷ்டா || 5|| 

தாமசமும் ராஜஸமும் சாத்விகமும் ஆன மனோ விருத்திகள் ஐந்து வகையாகும்.

மனசோட வளர்ச்சி- விரிவு - ஐந்து விதமாம். அவை சாத்விகமாகவோ ராஜசமாகவோ தாமசமாகவோ இருக்கலாம்.
 ஏதோ க்ளிஷ்டா ன்னு சொல்லி இருக்கே? மன பாதிப்பு. [மனக் கிலேசம் என்ற வார்த்தை இதை ஒட்டினதே.] ராஜச, தாமஸ மனோ வ்ருத்திகள் வீண் மன பாதிப்பை செய்வதால் அவை கிலிஷ்டா. இதனால் சுக, துக்கங்கள் உண்டாகும்.
சாத்விக மனோ வ்ருத்தி செய்கிற பாதிப்பு வீண் இல்லை. அதனால் அது அக்லிஷ்டா. இந்த வகை மன வளர்ச்சியால் தான் யார் என்கிறது மறந்து போனாலும் இது மோக்ஷத்திற்கு வழி வகுக்கும்.

प्रमाणविपर्ययविकल्पनिद्रास्मृतयः ।।6।।
ப்ரமாண விபர்யய விகல்ப நித்³ரா ஸ்ம்ரு«தய: || 6|| 

இவை (சித்த விருத்திகள்) பிரமாணம், விபர்யயம், விகல்பம், நித்திரை, ஸ்ம்ருதி ஆகியன.
இதெல்லாம் என்னன்னு அடுத்து வருகிறது.


प्रत्यक्षानुमानागमाः प्रमाणानि ।।7।।
ப்ரத்யக்ஷாநுமாநாக³மா: ப்ரமாணாநி || 7|| 

பிரமாணம் என்பதென்ன? பிரத்யக்ஷம் (நேரடி அனுபவம்), அனுமானம் (ஊகம்), ஆகமம் ஆகியன பிரமாணங்கள் ஆகும்.
(அனுபவத்தால் உண்டானதை மற்றதற்கு பொருத்தி பார்ப்பது ஆகமம்.)
நம் கண் காது முதலான புலன்களாலே சிலதை அறிஞ்சு கொள்கிறோம். இது நேரடி அனுபவம். இது ஒரு பிரமாணம்.
முன் அனுபவத்தாலே சிலது தெரிஞ்சுக்கிறோம். நெருப்பை நேரடியா பார்த்து இது நெருப்புன்னு தெரிஞ்சு கொள்கிறோம். இது ப்ரத்யக்ஷம். முன் ஒரு முறை நெருப்பு இருக்கிற இடத்தில் புகை இருக்குன்னு பார்த்தோம். இப்ப புகையை மட்டும் எங்காவது பார்க்கும் போது "ஓஹோ! இங்கே நெருப்பு இருக்கு" ன்னு ஊகம் செய்கிறோம். இது ஒரு வகை. நெருப்பு என்கிற வார்த்தையை கேட்கும்போது நேரடியா பாக்கலைன்னாலும் இந்த நெருப்பையும் புகையையும் சம்பத்தப்படுத்தி நினைக்கிறது ஆகமம்.
இவை அத்தனையும் பிரமாணம்.

विपर्ययो मिथ्याज्ञानमेतद्रूपप्रतिष्ठम् ।।8।।
விபர்யயோ மித்²யாஜ்ஞாநமேதத்³ ரூப ப்ரதிஷ்ட²ம் || 8|| 

ஒரு வஸ்துவின் உண்மை சொருபத்தை வெளிப்படுத்தாத பொய்யான ஞானம் விபர்யயம். 
இது பின்னால் மாறிவிடக்கூடியது. (சிப்பியில் வெள்ளி காண்பது) ஒரு பொருளோட "உண்மை" நிலையை தெரிவிப்பது யதார்த்த ஞானம். இல்லாத ஒரு நிலையை இருப்பதா காட்டுவது மித்யா ஞானம். கடற்கரையிலே ஒரு சிப்பி கிடக்குது. அது வெய்யிலில் பளபளக்கிறது ன்னு பார்த்து ஓ! இது ஏதோ வெள்ளியிலே பண்ண பொருள் ன்னு நினைக்கிறோம். இது மித்யா ஞானம் அல்லது விபர்யயம். கிட்டே போய் பார்க்க அது சிப்பின்னு தெரியுது. அப்ப நம் கருத்தை மாத்திக்கிறோம். இப்படி மாறுவதே விபர்யயத்தோட முக்கிய லக்ஷணம்.



 
 

Geetha Sambasivam

unread,
Feb 18, 2014, 6:45:26 AM2/18/14
to மின்தமிழ்
 யோக மார்க்கம் --பதஞ்சலி யோகம் -- பகுதி ஒன்று

எழுதியது திருமூர்த்தி வாசுதேவன்


விகல்பம்

शब्दज्ञानानुपाती वस्तुशून्यो विकल्पः ।।9।।
ஶப்³த³ஜ்ஞாநாநுபாதீ வஸ்துஶூந்யோ விகல்ப​: || 9||

ஒலியால் உண்டு செய்யப்பட்ட ஞானத்தை அனுசரித்து உண்டாவது விகல்பம். இது முன்னேயே சொன்னிங்களேன்னா கொஞ்சம் வித்தியாசம் இருக்கு. இது வஸ்துவின் உண்மையை எதிர் பார்ப்பது இல்லை. ஒரு மனிதனுடைய புத்தகம் ன்னு சொல்லும் போது மனிதன் வேறு; புத்தகம் வேறு; ஆனால் இரண்டுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு என்று தெரியும். இதில் உண்மை இருக்கு. ஆனா மலடியின் பிள்ளை ன்னு சொல்லும் போது மேலோட்டமா அர்த்தம் சம்பந்தம் இருக்கு, ஆனாலும் இது உண்மையா இருக்க முடியாது. இப்படி உண்மை இருக்கானு கவலைப்படாம ஒரு விஷயத்தை புரிஞ்சுகிறது விகல்பம்.



நித்திரை

अभावप्रत्ययालम्बना वृत्तिर्निद्रा ।।10।।
அபா⁴வ ப்ரத்யயாலம்ப³நா வ்ரு«த்திர் நித்³ரா || 10||
\
முன் கூறிய விருத்திகள் இல்லாததற்கு காரணமான தமோ குணத்தை விஷயமாக உடைய விருத்தி நித்திரை ஆகும்.
இது ரஜோ சத்வ குணங்களால் உண்டாகும் விருத்திகளை அழிக்கும்.
மூன்று குணங்களும் எப்போதும் இருந்தாலும் ஒரு குணம் மேலோங்கி மற்றதை அழிக்கக்கூடும். இப்படி தமோ குணம் மேலோங்கி மற்றதை அழிக்கலாம்.
விழிப்பு நிலையும் இல்லாம, கனவு நிலையும் இல்லாம தூங்கும்போது தமோ குணமே மேல் நிற்கும். இதை சுசுப்தி என்பர். கனவு நிலயில் நாம் பல செயல்களை செய்யலாம்; இல்லை சாந்தமாகவும் இருக்கலாம். அதனால கனவு நிலையில் ரஜோ சத்வ விருத்திகள் இருக்கும். சுசுப்தி என்கிறது ஆழ் உறக்கம். இதுவும் ஸமாதியும் ஒன்று இல்லை. ஸமாதியில் இந்த தமோ குண விருத்தி இராது.


ஸ்ம்ருதி

अनुभूतविषयासंप्रमोषः स्मृतिः ।।11।।
அநுபூ⁴த விஷயா ஸம்°ப்ரமோஷ​: ஸ்ம்ரு«தி​: || 11||

அனுபவிக்கபட்ட விஷயத்தின் நாசமில்லா அறிவு ஸ்ம்ருதி விருத்தி ஆகும்.


அனுபவிச்சது ன்னு சொல்லும் போது இது பிரமாணமா இருக்கணுமே? இது வேற. அனுபவத்தில ஸ்தூலமாக பார்த்ததை நினைவில் வைப்பது அனுபவம். அதே விஷயத்தில் கண்ணுக்குத் தெரியாத ஒரு விஷயத்தை கிரகித்து கொண்டால் அது ஸ்ம்ருதி. ஒரு கோவிலுக்குப் போய் ஸ்வாமி தர்சனம் செய்கிறோம். அங்கே கண்ணால பார்த்தது ஒண்ணு. ஆனால் அனுபவிச்சது கண்ணால பாத்ததுக்கும் மேலே வேற ஒண்ணு. இது ஸ்ம்ருதி.







Geetha Sambasivam

unread,
Mar 14, 2014, 4:41:58 AM3/14/14
to மின்தமிழ்
 யோக மார்க்கம் --பதஞ்சலி யோகம் -- பகுதி ஒன்று

எழுதியது திருமூர்த்தி வாசுதேவன்




अभ्यासवैराग्याभ्यां तन्निरोधः ।।12।।
அப்⁴யாஸவைராக்³யாப்⁴யாம்° தந்நிரோத⁴​: || 12||

இந்த விருத்திகளை அடக்கி தன் சுய நிலையில் நிற்பது பயிற்சியாலும், பற்றின்மையாலும் இயலும்.


யோகம் என்கிறது சித்தத்தை நிறுத்துவதுன்னு சொல்லியாச்சில்ல? அத எப்படி நிறுத்தறது என்பதே கேள்வி.
வைராக்கியம் என்கிறது பற்றின்மை. தப்பா பிரயோகத்திலே வந்துடுத்து. அதை திடம் (determination) என்கிற அர்த்தத்திலே பயன்படுத்தறோம். உலக சம்சாரங்களில பற்றை விட்டுவிட்டு தொடர்ந்து அப்பியாசம் - பயிற்சி செய்ய சித்தம் நின்று யோகம் உண்டாகும். அதெப்படி பற்று விடறதுன்னா – புலன்கள் எது பின்னால ஓடுதோ அதிலே இருக்கிற குற்றங்களை- தோஷங்களை பார்க்க ஆரம்பிக்கணும். ஆமாம்; துரியோதனப் பார்வை வேணும். அல்லது குணங்களை விமர்சிக்கணும். இப்படி செய்வதை பழக சித்தத்திற்கு வெளியே செல்லும் நாட்டம் குறைந்து போகும். இது விருத்தி நிரோதம் ஆகும்.
நமக்கு சக்கரை வியாதி இருக்கு. ரொம்ப பிடிச்ச மை.பா வை பார்கிறோமா? இதை இப்ப சாப்பிடலாம், ஆனா அப்புறம் சர்க்கரை அதிகமாகி யார் அவஸ்தை படுகிறதுன்னு எண்ணம் வரணும்
ஒத்தனுக்கு சோறு சில நாட்கள் கிடைக்கலை. காட்டு வழியிலே போகும் போது அங்க இலை போட்டு நல்ல சாப்பாட்டு போட்டு வெச்சு இருக்கு. சாப்பிட ஆசைதான். அப்ப இன்னொருத்தன் வந்து சொல்கிறான், "ஏம்பா, ஆளில்லாத வனத்தில இப்படி சாப்பாடு போட்டு வெச்சு இருக்குன்னா ஏதோ சூது இருக்குன்னு புரிஞ்சுக்க வேணாமா? இதை கேட்டு உணர்ந்த சாப்பிட உட்கார்ந்த ஆசாமி ஒடிப்போயிடறான். பசியாக இருந்தாலும் இப்படி அறிவு வந்துவிட்டா மனசு திரும்பிவிடும். இதப்போல விஷயத்தில் குற்றங்களை காண்பதால் ஏற்படுவது வைராக்கியம். இல்லாவிடில் ரஜோ விருத்தி அடங்கியதால் தமோ விருத்தி மேலோங்கும். சித்தமும் லயமாகிவிடும். இது நித்திரையாகும்.


तत्र स्थितौ यत्नोऽभ्यासः ।।13।।
தத்ர ஸ்தி²தௌ யத்நோ'ப்⁴யாஸ​: || 13||

இவ்விரண்டில் பயிற்சி (அப்பியாஸம்) என்பது ரஜோ தமோ விருத்திகளை நீக்கி யமம், நியமம் முதலான சாதனையை பின்பற்றுவது. ராஜசத்தால் விஷயங்கள் அதிகமாகிற விக்ஷேபம் என்பது உண்டாகும். தமஸ் விருத்தியானால் லயம் ஆகும். அதாவது விஷயங்கள் குறைந்து போகும். இது நல்லதுன்னு மேம்போக்கா தோன்றினாலும் அப்படி இல்லை. இப்படி வைராக்கியம் வரும் போது விவேக ஞானத்தை பயிற்சி செய்ய வேண்டும். இந்த ரஜஸ் தமஸ் இரண்டும் குறைந்து சத்வம் அதிகமாகி ஏகாக்ரதை வரணும். அதை எப்படி கொண்டு வரதுன்னா....


स तु दीर्घकालानैरन्तर्य्यसत्कारसेवितो दृढभूमि ।।14।।

ஸ து தீ³ர்க⁴காலா நைரந்தர்ய்ய ஸத்கார ஸேவிதோ த்³ரு«ட⁴பூ⁴மி || 14||

அந்த பயிற்சியானது நீண்ட காலமும் இடைவிடாதும் ஶ்ரத்தை , பிரமசர்யம், தவம் இவற்றுடன் பல வழிகளிலும் செய்யப்பட வேண்டியது. அப்படி செய்யும் போது அது திடப்படுகிறது.

குருவிடமும் சாஸ்திரத்திடமும் விஶ்வாசத்துடனும், வரும் இடையூறுகளை பொருட்படுத்தாமலும் இடைவெளியில்லாமல் அப்பியாசிக்க வேண்டும். ஒரு காட்டுக்காளையை போன்றது சித்தம். காளையை வண்டியில் கட்டி சவாரி செய்ய விருப்பமுள்ளவன் காளையை அதன் விருப்பப்படி ஓட விடமாட்டான். வண்டியில் கட்டும்போது சண்டித்தனம் பண்ண இடம் தர மாட்டான். முயற்சியை கைவிடமாட்டான். முடியாதுன்னு தோணும்போது முன்னே செய்து வெற்றி அடைஞ்சவர்களை பாத்து நம்பிக்கை கொள்வான். மெள்ள மெள்ள அதை எப்படியும் வசப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கையுடன் அதை வழிக்கு கொண்டு வருவான். 





Geetha Sambasivam

unread,
Mar 15, 2014, 5:21:30 AM3/15/14
to மின்தமிழ்
 யோக மார்க்கம் --பதஞ்சலி யோகம் -- பகுதி ஒன்று

எழுதியது திருமூர்த்தி வாசுதேவன்


வைராக்கியமே பல வகை

दृष्टानुश्रविकविषयवितृष्णस्य वशीकारसंज्ञा वैराग्यम् ।।15।।

த்³ரு«ஷ்டாநு ஶ்ரவிக விஷய வித்ரு«ஷ்ணஸ்ய வஶீகார ஸம்°ஜ்ஞா வைராக்³யம் || 15||

ஸ்த்ரீ, அன்னம், பானம், ஐஸ்வர்யம், முதலான பார்க்கக்கூடியதிலும்; வேதம் சொன்ன சொர்க்கம், பிரகிருதி, லயம், போன்ற பார்க்க முடியாத விஷயங்களிலும் ஆசையில்லாத சித்தம் "இவை எல்லாம் என்னை சேர்ந்தவை; ஆனால் நான் இவற்றை சேர்ந்தவனில்லை"ன்னு நம்மை அலைக்கழிக்கும் விஷயங்களை விலக்கும் புத்தி (உபேக்ஷை) வசீகார வைராக்கியம் (பற்றற்ற நிலை) ஆகும்.

இந்த வைராக்கியமே பல வகையானது. எது சாரமானது, எதில் சாரமில்லைன்னு குரு மூலமும், சாஸ்திரங்கள் மூலமும் தெரிந்து, அவற்றை விலக்க முயற்சி எடுப்பது யதமான வைராக்கியம். அப்படி முயற்சி செய்து "இதெல்லாம் விலக்கிவிட்டோம்; இதெல்லாம் இன்னும் விலக்கனும்" ன்னு அறிகிறது வியதிரேக வைராக்யம். இப்படியே போகும்போது நமக்கு 'இது நல்லது, இது கெட்டது' ன்னு ஒரு அபிப்ராயம் இருக்கும் இல்லையா? அதையும் விலக்குவது ஏகேந்திரிய வைராக்கியம். அதாவது நல்லது மேலே விருப்பமும், கெட்டது மேலே வெறுப்பும் கூட இல்லாம இருக்கிறது.

இந்த வைராக்கியங்கள் கூட போதாதாம். இவற்றால் ஞானம்ன்னு நினைச்சுகிற போலி குற்றமுள்ள - ஞானம் வரக்கூடுமாம். அதனால் சூத்திரம் சொல்லுவது நாலாவது வகையான வசீகார வைராக்கியம். அது என்னன்னு முதல்லேயே பார்த்தாச்சு இல்லையா?



பர வைராக்கியம்
 

तत्परं पुरुषख्यातेर्गुणवैतृष्णयम् ।।16

தத்பரம்° புருஷக்²யாதேர் கு³ணவைத்ரு«ஷ்ணயம் || 16||

புருஷ சாக்ஷாத்காரம் உண்டான பிறகு ஸ்தூல ஸூக்ஷ்ம ரூபங்களான குணங்களில் இருந்து பற்றற்று இருப்பது எது உண்டோ அது பரவைராக்கியம்.

தோஷங்களை பார்த்து வசீகார வைராக்யம் வந்தது. இது அடுத்து வரும் பர வைராக்கியத்துக்கு காரணமாகிறது. குரு-சாஸ்த்திர துணையோடு புருஷனின் (ஜீவாத்மாவின்) சாக்ஷாத்காரம் கிடைக்கிறது. இதிலேயே நின்று பயிற்சி செய்வது தர்மமேகத்யானம் என்கிறாங்க. இதனால ரஜோ, தமோ குண அழுக்கு முழுவதும் போயிடும். சத்வத்திலேயே நிலைக்கும். அப்போது சித்தம் தெளிவாயிடும். இதை கைவல்ய நிலைன்னும் பராகாஷ்டை ந்நும் சொல்வதுண்டு. இந்த நிலையிலே மன கிலேசங்கள் (சஞ்சலம்) யோகியை விட்டு நீங்கும். சம்சார பந்தங்கள் அறும்.




Geetha Sambasivam

unread,
Mar 24, 2014, 5:35:27 AM3/24/14
to மின்தமிழ்
ஸம்ப்ரக்ஞாத ஸமாதி.
 

वितर्कविचारानन्दास्मितारूपानुगमात् संप्रज्ञातः ।।17।।

விதர்க விசாராநந்தா³ ஸ்மிதாரூபாநு க³மாத் ஸம்°ப்ரஜ்ஞாத: || 17||

விதர்கம் (பருப்பொருளை காணல்), விசாரம் (ஸூக்ஷ்ம வடிவை சிந்தித்தல்) ,ஆனந்தம் (ரஜோ, தமோ சம்பந்தம் சிறிது இருக்கும் போது இந்திரியங்களால் அறியப்படும் ஆனந்தம்), அஸ்மிதை (சித்தம் மட்டுமே உள்ளதென அறிதல்) இவை சொரூபத்துடன் சேர்ந்து இருப்பதால் உண்டாவது ஸம்ப்ரக்ஞாத ஸமாதி.

மற்ற விஷயங்களின் கலப்பில்லாமல் சித்தத்தை ஒரு விஷயத்தில் வைப்பது பாவனை ஆகும்.
பாவனை ஒரு பருப்பொருளில் இருக்கலாம். இது விதர்க்கம். ஒரு லிங்கம் (குறி), தெய்வ வடிவம், ஜ்யோதி இப்படி. இதுக்கு ஒரு உருவம் இருக்கும். ஒரு சப்தம்- சொல்- அதை குறிக்கும். இந்த பாவனையோட அடைகிறது ஸவிதர்க்கம்.
அல்லது பாவனை பருப் பொருளில் இல்லாம இருக்கலாம். இதுக்கு முன்னோ பின்னோ ஒரு தோற்றம் இராது. இதை எந்த சொல்லும் குறிக்காது. இந்த பாவனையோட அடைகிறது நிர்விதர்க்கம்.
பாவனை கண்ணுக்கு தெரியாத ஸூக்ஷ்மமான பொருளில் இருக்கலாம். ஸூக்ஷ்ம வஸ்துவை சாக்ஷாத்கரிப்பது விசாரம் ஆகும். தன் மாத்திரை (ஆகாசம் முதலான பஞ்சபூதங்கள் ஸ்தூலமாக உண்டாகும் முன் இருக்கிற ஸூக்ஷ்ம நிலை), அந்தக்கரணம் இவற்றோட ஸூக்ஷ்ம வஸ்துவை விஷயமா எடுத்து கொண்டு பாவனை செய்யலாம். இது ஸவிசாரம். இதோட தேசம், காலம் சேரலைன்னா அது நிர்விசாரம்.

மேலும்....
 

ஸவிசாரத்துக்கு உதாரணம் பார்க்கலாமா? மனசையே எடுத்துக்கலாம். அது என்ன செய்கிறது, எங்கே போகிறது ன்னு கவனிக்கிறது ஸவிசார பாவனை. (இதுவே ரமணர் காட்டிய வழி.)
விதர்க்கம், விசாரம் இரண்டும் சேர்ந்தது க்ராஹ்ய ஸமாதி (த்யானம்). அதெப்படி இரண்டும் ஒண்ணா சேரும்ன்னா.... ஒரு பொருளோட தோற்றம், அதோட ஸூக்ஷ்ம சொரூபம் ரெண்டையுமே ஒரே நேரத்திலே த்யானிக்கலாம் இல்லையா?
சத்வமான சித்தம் ரஜோ, தமோ சலனங்களோட த்யானம் செய்கிறப்ப இந்திரியங்கள் மூலமா சுகமும் பிரகாசமும் அனுபவிக்கப்படும். இது ஆநந்தம்.
மூடிய கண் முன்னே கோடி சூர்ய பிரகாசத்தோட ஏதோ தெரிகிறது. இல்லை அருமையான மல்லிகைப்பூ வாசனை உணர்கிறோம். தென்றல் வருடின மாதிரி உணர்கிறோம். அபூர்வமான இசை கேட்கிறது. இவை எல்லாம் ரஜோ தமோ குண சலனங்கள். சத்வ சித்தம் அனுபவிக்கும் போது இவை ஆநந்தம் ஆகும்.
இப்படி ரஜோ, தமோ சலனங்கள் இல்லைன்னா அது ஸாஸ்மிதம். இந்த அஸ்மிதத்திலே சத்வமான சித்தம் இருக்கு என்கிறது மட்டுமே உணரலாம். வேற தூல, ஸூக்ஷ்ம இந்திரிய (புலன்கள்) சமாசாரம் ஒண்ணுமே தெரியாது.
இந்த விதர்க்கம், விசாரம், ஆநந்தம், அஸ்மிதை நாலுமே ஒரு வகை.- ஸம்ப்ரக்ஞாத ஸமாதி.
ப்ரக்ஞை ன்னு கேள்வி பட்டிருக்கோம் இல்லையா. உணர்ச்சி. அனெஸ்தடிஸ்ட் ஊசி போட்டார். ப்ரக்ஞை போயிடுத்து. ஆபரேஷன் நடந்ததே தெரியாது என்கிறோம். ஸமாதியிலே ஏதோ ஒரு உணர்ச்சி இருந்தா அது ஸம்ப்ரக்ஞாத ஸமாதி.

Suba.T.

unread,
Mar 24, 2014, 1:45:38 PM3/24/14
to மின்தமிழ், Subashini Tremmel
ஆரம்பம் எளிமையாக ​​சிறப்பாக அமைந்துள்ளது.

சுபா



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Suba.T.

unread,
Mar 24, 2014, 1:47:23 PM3/24/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-02-10 12:32 GMT+01:00 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
யோக மார்க்கம் --பதஞ்சலி யோகம் -- பகுதி ஒன்று

எழுதியது திருமூர்த்தி வாசுதேவன்

​..

ஏனைய (யோகமில்லா) காலத்தில் [புருஷனுக்கு சாத்விகம், ராஜசம், தாமஸம் முதலிய] வ்ருத்திகளோடு ஒன்றாய் இருக்கும் தன்மை ஏற்படுகிறது.

சரி அப்ப ஜீவன் யோகத்திலே இல்லாத போது எப்படி இருக்கும்? ஏதோ எண்ணங்கள் ஓடிகிட்டே இருக்கு. அந்த எண்ணங்கள் சாத்விகமா இருக்கலாம்; ராஜசமா இருக்கலாம்; தாமசமா இருக்கலாம். எப்படி இருந்தாலும் அது கண்ணாடியில் அழுக்கு இருக்கிறாப்போல இருக்கு. இந்த அழுக்கை நீக்குவது ரொம்ப கடினமான வேலையே. நல்லாவே ஒட்டிகிட்டு இருக்கும்.

அருமையான விளக்கம்.
சுபா
​​

இந்த ராஜசம் தாமசம் சாத்விகம் எல்லாம் என்ன?




--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Suba.T.

unread,
Mar 24, 2014, 1:50:20 PM3/24/14
to மின்தமிழ், Subashini Tremmel
மிக எளிமையாக பேசுவது போலவே விளக்கம் தருவது டெக்ஸ்டை படித்து புரிந்து கொள்ள மிக உதவுகின்றது. அருமையாக வழங்கியிருக்கின்றீர்கள் திவாஜி.

சுபா
​​

 
 யோக மார்க்கம் --பதஞ்சலி யோகம் -- பகுதி ஒன்று

எழுதியது திருமூர்த்தி வாசுதேவன்

 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Geetha Sambasivam

unread,
Mar 25, 2014, 8:35:07 AM3/25/14
to மின்தமிழ்
அஸம்ப்ரக்ஞாத ஸமாதி.
 

विरामप्रत्ययाभ्यासपूर्वः संस्कारशेषोऽन्यः ।।18।।

விராம ப்ரத்யயாப்⁴யாஸ பூர்வ​: ஸம்°ஸ்கார ஶேஷோ'ந்ய​: || 18||

விருத்தி இல்லாமைக்கு காரணமான பர வைராக்கியத்தோட பயிற்சியை உபாயமாக உடையதும், சம்ஸ்காரத்தை மட்டும் மீதமாக உடையதுமான யோகமே மற்றது (அஸம்ப்ரக்ஞாத ஸமாதி.)

ஸம்ப்ரக்ஞாத ஸமாதியிலே ஒரு விஷயத்தில் பாவனை வைக்கப்பட்டது இல்லையா? அதிலே சித்த விருத்தி கொஞ்சம் இருந்தது. ஆனால் அலைய விடாம ஒரே விஷயத்தில வைக்கப்பட்டது என்பதே அதில சிறப்பு. ஆனா யோகம்ன்னா சித்த விருத்தியை நிறுத்தறது ன்னு இல்லை பார்த்தோம்? ஆக நாம் இதையும் தாண்டனும். அப்ப எதோட பயிற்சி செய்யணும்? முன்னே பர வைராக்கியம்ன்னு பார்த்தோமில்லையா? எல்லாவற்றிலிருந்தும் பற்றற்று இருப்பது- அதே உபாயம்.
இது அஸம்ப்ரக்ஞாத ஸமாதி. இப்ப யோகியோட நிலை என்ன? ஸ்தூல -பருப் - பொருட்களோட சம்பந்தமில்லை; ஸூக்ஷ்ம பொருட்களோட சம்பந்தமில்லை. இந்திரியங்களோட சம்பந்தமில்லை. ஏன் இப்படி சம்பந்தமில்லை? ஏன்னா ஒரு சித்த விருத்தி இல்லாம இவற்றோட சம்பந்தம் இருக்க முடியாது. என் கண், என் காதுன்னு ஒரு எண்ணம் இருந்தாதானே அவற்றோட சம்பந்தம் இருக்க முடியும்? அந்த எண்ணங்களே இல்லாம போயிடும்.
பின்னே என்னதான் மிஞ்சி இருக்குன்னு பார்த்தா, சித்தத்தோட சம்ஸ்காரம் – இவ்வளோ நாள் பயிற்சி செய்ததால இருக்கிற பண்பு- மட்டுமே ஒட்டிக்கொண்டு இருக்குமாம்.

அட! பர வைராக்கியத்திலே எல்லாம் விட்டுப்போயிடும்ன்னு சொன்னாபோல இருக்கேன்னா, ஆமாம், முந்தைய சம்ஸ்காரம் எல்லாம் விட்டுடும்; ஆனா இப்ப பழகுகிற பர வைராக்கியம் ஒரு சம்ஸ்காரத்தை உண்டு பண்ணுமே? அது மிஞ்சும். இது கொஞ்சம் விசேஷமானதால் இது வேற ஒரு சித்தத்தை –எண்ண ஓட்டத்தை- தோற்றுவிக்காது. இதுக்கு அடுத்தபடியான மோக்ஷத்தில இந்த சித்தம் கூட இல்லாம போயிடும். அந்த சித்தத்தோட ஒட்டிக்கொண்டு இருக்கிற சம்ஸ்காரமும் போயிடும். 

பவ பிரத்யயம்
 
भवप्रत्ययो विदेहप्रकृतिलयानाम् ।।19।।
ப⁴வ ப்ரத்யயோ விதே³ஹ ப்ரக்ரு«தி லயாநாம் || 19||

பவ பிரத்யயம்:
அவித்தையை காரணமாக உடைய ஸமாதியானது தேகமற்றவர்களுக்கு, பிரக்ருதியில் லயமடைந்தவர்களுக்கு உண்டாகிறது.
ரத்தம், மாம்சம், மேதஸ், எலும்பு, மஜ்ஜை ஆகியன உள்ளவர் தேகம் உடையவர். இது நாமெல்லாம். இந்திரியங்கள், பஞ்ச பூத தன் மாத்திரைகள், (ஆகாசம் முதலான பஞ்சபூதங்கள் ஸ்தூலமாக உண்டாகும் முன் இருக்கிற ஸூக்ஷ்ம நிலை) அஹங்காரம், மகத்துவம் இவற்றை உடையது ஸூக்ஷ்ம சரீரம். இந்திரன் முதலான தேவர்கள் இப்படி இருக்காங்க. இந்த இந்திரியங்கள், அஹங்காரம் எல்லாம் இருக்கிறதாலேதான் இவங்களுக்கும் நம்ம மாதிரி கோப தாபங்கள், ஆசைகள் எல்லாம் இருக்கு. இவர்களோட புண்ணியம் அனுபவிச்சு தீர்ந்ததும் திருப்பி சம்சாரத்திலே கிடக்க வேண்டியதுதான். (தேவர்களும் கடவுளும் வேற வேறன்னு தெரியும்தானே?)

சரி, பிரக்ருதியில் லயம் அப்படின்னா என்னது?
இந்த உலகங்கள் எல்லாம் எதுலேந்து வந்ததோ அந்த மூலப்பொருள் ப்ரக்ருதி. ஆகாசம், வாயு, அக்னி, நீர், மண் எல்லாமே இதுலிருந்து வந்தவையே. இவற்றோட பலவித சேர்க்கையால உலகத்தில பார்க்கிற விஷயங்கள் எல்லாம் உருவாச்சு. இந்த மூலப்பொருளோட லயம் ஆகமுடியும். ப்ரக்ருதி என்பதே மாயை ஆனதால் இதுவும் அவித்தையாக சொல்கிறாங்க.

உபாசனா காலத்திலே இந்திரியங்களை, பஞ்சபூத தன் மாத்திரைகளை, அஹங்காரத்தை, புத்தி தத்துவத்தை ஆன்மாவாக உபாசிக்கிறதுண்டு. பிரக்ருதியையும் உபாசிக்கிறதுண்டு. ஆன்மாவுக்கு ரூபம்ன்னு ஒண்ணு தெரியாதில்லையா! அப்போது அந்த அந்த தத்துவத்தில் பல மன்வந்தர காலம் லயமாக இருப்பர். இந்திரிய உபாசனை செய்தவர்களுக்கு அந்த இந்திரியத்துக்கு அபிமானி தேவதையின் சொரூப ப்ராப்தி கிட்டும். (விவரங்கள் பின்னாலே விபூதி பாதத்திலே வரும்.)

நம் உண்மை சொரூபத்தை தெரியாம மறைக்கிறது ஆவரண சக்தி. இதில் பல மட்டம் இருக்கு. பிரக்ருதியை உபாசிக்கிறவங்க இந்த மறைப்பில் பல மட்டங்களை கடந்து பிரகிருதியின் மறைப்பு வரை போய் பிரக்ருதியாவே ஆகிடுவாங்க. மனசையும் அனுபவத்தையும் இவங்களால் உற்பத்தி செய்து கொள்ள முடியும். ஆனாலும் மாயை விடலை இல்லையா? ஒரு நூறாயிரம் வருஷங்கள் ஆனா பிறகு தேவர்களாகி திருப்பி உழல வேண்டியதுதான்.
இரண்டிலேயும் மறு பிறப்பு இருக்கு. அதனால முமுக்ஷுக்கள் இந்த வகை ஸமாதியை விரும்புவதில்லை.

திவாஜி

unread,
Mar 27, 2014, 4:31:08 AM3/27/14
to mint...@googlegroups.com, Subashini Tremmel
நன்றி சுபா! பேச்சு நடை போல மற்றவர் மனசை எளிதாக சென்றடைவது வேறு இல்லை என்பது என் கருத்து. அதனால் கூடுமான வரை அப்படித்தான் எழுதுகிறேன்!


On Monday, 24 March 2014 23:20:20 UTC+5:30, Suba.T. wrote:
மிக எளிமையாக பேசுவது போலவே விளக்கம் தருவது டெக்ஸ்டை படித்து புரிந்து கொள்ள மிக உதவுகின்றது. அருமையாக வழங்கியிருக்கின்றீர்கள் திவாஜி.


Geetha Sambasivam

unread,
Mar 30, 2014, 7:50:07 AM3/30/14
to மின்தமிழ்
உபாய பிரத்யயம்


श्रद्धावीर्यस्मृतिसमाधिप्रज्ञापूर्वक इतरेषाम् ।।20।।

ஶ்ரத்³தா⁴ வீர்ய ஸ்ம்ரு«தி ஸமாதி⁴ ப்ரஜ்ஞா பூர்வக இதரேஷாம் || 20||

உபாய பிரத்யயம்: விதேஹ லயர், பிரகிருதி லயர் ஆகியோரை விட வேறானவர்களுக்கு ஶ்ரத்தையும் அதனால் தாரணையும், அதனால் த்யானமும், அதனால் த்யானிக்கப்பட்டதின் சாக்ஷாத்காரத்தால் ஸமாதியும் இது வலுப்பட்டு ஸம்ப்ரக்ஞாத ஸமாதியும் நிகழ உபாயம் உண்டாகிறது. இந்த உபாயங்கள் வேண்டும் என்று குருவை அண்டுதலும், அவரால் உபதேசிக்கப்பட்டது இதற்கு அனுசரனையாக உள்ள யுக்திகள் – இவற்றை விஷயமாக கொண்ட சித்தத்தின் தெளிவே ஶ்ரத்தை ஆகும். அம்மா குழந்தையை பாதுகாக்கிறது போல ஶ்ரத்தை அப்பியாசம் செய்கிறவங்களை எல்லா இடையூறுகளிலிருந்தும் காப்பாற்றும்.
இந்த ஶ்ரத்தை பயிற்சி செய்வோருக்கு தாரணையில் ஈடுபாட்டை உண்டாக்கும். இதுவே வீர்யம். அதால் த்யானிக்கிற தத்துவத்தில் நிலைப்பாடு உண்டாகும். இது ஸ்ம்ருதி. இது முறையே ஸமாதி, ஸம்ப்ரக்ஞாத ஸமாதி, அஸம்ப்ரக்ஞாத ஸமாதி என கொண்டுவிடும்.


வேகம்! 

तीव्रसंवेगानामासन्नः ।। 21||
தீவ்ர ஸம்°வேகா³நா மாஸந்ந​: ||21||

உபாயத்தை அனுஷ்டிப்பதில் தீவிர வேகமுள்ளவருக்கு ஸமாதி கிடைப்பது தாமதமற்றதாகிறது.

मृदुमध्याधिमात्रत्वात्ततोऽपि विशेषः ।।22।।
ம்ரு«து³ மத்⁴யாதி⁴ மாத்ரத்வாத்ததோ'பி விஶேஷ​: || 22||

உபாய அனுஷ்டானத்தில் தீவிர வேகத்திலும் உள்ள வேகமானது ம்ருது தீவ்ரம், மத்திய தீவ்ரம், அதி மாத்ர தீவ்ரம் என வகைப்படும். இதனால் ஸமாதியிலும் அதன் பலன் கிடைப்பதிலும் வேறுபாடு உண்டாகும்.
அடுத்து திடுதிப்பென்று ஒரு திருப்பம் வருகிறது!


ஈஶ்வரன் 

ईश्वरप्रणिधानाद्वा ।।23।।

ஈஶ்வர ப்ரணிதா⁴நாத்³வா || 23||

ஈஸ்வரனுடைய பக்தி விசேஷத்திலிருந்தோ [மிக விரைவில் ஸமாதி லாபம் உண்டாகிறது.]
முன்னே பார்த்தது எல்லாம் ஜீவனின் முயற்சியில் செய்தவை. இப்போது ஈஸ்வர பக்தியால் மிக விரைவில் ஸமாதி உண்டாகும் என சொல்லப்படுகிறது. இந்த வழியில் க்லேசங்கள் ஏதும் இரா. ஆகவே இது சுலபமாக சாத்தியமாகும்.

क्लेशकर्मविपाकाशयैरपरामृष्टः पुरुषविशेष ईश्वरः ।।24।।

க்லேஶ கர்ம விபாகாஶயைரபராம்ரு«ஷ்ட​: புருஷ விஶேஷ ஈஶ்வர​: || 24||

ஈஸ்வரனின் சொரூபம்: அவித்யை, அஸ்மிதை, ராகம், துவேஷம், அபிநிவேஷம் ஆகிய ஐந்தாலும்; தர்மம், அதர்மம் இவற்றாலும்; தர்ம பலன்களான ஜன்மம், ஆயுள், போகம் இவற்றாலும்; சித்தாரூடமான சம்ஸ்காரங்களாலும்; முக்காலத்திலும் சம்பந்தம் பெறாதவனும், ஜீவனை விட வேறானவனும் ஆனவன் ஈஸ்வரன். ஜீவன் என்ன முயற்சி செய்தாலும் ஈஸ்வரனாக முடியாது.

முக்காலத்திலும்ன்னு சொல்லி இருக்கு இல்லையா? அதனால ஒரு வேளை ஜீவன் ரொம்ப முன்னேறி ஈஸ்வரனுக்கு நிகரான சக்திகளை பெற்றாலும் ஈஸ்வரனாக முடியாது. பிரகிருதி சம்பந்தம் இல்லாம கைவல்ய நிலையிலே இருந்தாக்கூட ஒரு காலத்திலே க்லேசங்களோட இருந்ததால ஈசனாக முடியாது. பிரகிருதி லயமடைந்தாலும் வியவகாரிகங்களிலே (நடைமுறையிலே) பந்தம் இருக்கும்; தேவர்களும் மனிதர்களும் போல் போகம் அனுபவிக்கிறது தெரியும்; தாக்ஷ்ணிக பந்தம் இருக்கும். யோக சித்தாந்தப்படி கைவல்ய நிலை அடைந்தவர் முன்னரே இந்த பந்தங்களை அனுபவிச்சுட்டு அப்புறமே கைவல்ய நிலை அடைந்தவர். ஈஸ்வரனுக்கோ முக்காலங்களிலும் பந்தங்களில்லை.
ஜீவனுக்கு புருஷன் என்று பெயர். க்லேசங்கள் அந்தக்கரணத்தை சார்ந்தவை. இந்த அந்தக்கரணமே ஜீவனோட முக்கிய லக்ஷணம். ஆகவே ஜீவனுக்கு அந்தக்கரணத்தோட க்லேசங்களால உண்டாகும் சுக துக்கங்களுடைய சம்பந்தம் உண்டு. ஈஸ்வரனோ தன் சங்கல்பத்தாலேயே எதையும் சாதிக்க வல்லவன்.

Geetha Sambasivam

unread,
Apr 2, 2014, 7:43:01 AM4/2/14
to மின்தமிழ்
ஈசன் -ஜீவன்
 
तत्र निरतशयं सर्वज्ञ्यबीजम् ।।25।।

தத்ர நிரதஶயம் ° ஸர்வஜ்ஞ்ய பீ³ஜம் || 25||

எல்லாவற்றையும் அறிந்திருப்பதற்கு (ஞானத்திற்கு) காரணமான அறிவின் உயர்வு-தாழ்வு தன்மை ஈஸ்வரனிடத்தில் முடிவற்றதாகிறது. (நிரதிசயம்).
உலகத்திலே மக்கள் ஒருவரை விட ஒருவர் அறிவு அதிகமுள்ளவர் குறைவுள்ளவர் என்று உள்ளது. ஆனால் ஈஸ்வரனுடைய அறிவு எதனுடனும் ஒப்பிடமுடியாதது.
ஈஸ்வரன் சர்வக்ஞன், தயை உள்ளவன். அப்படியானால் ஜீவர்களை ஏற்றத்தாழ்வுடன் படைப்பானேன் என்று கேள்வி எழும். ஒரு குயவன் பானை செய்ய முக்கியம். மண்ணும் முக்கியம். குயவன் என்னத்தான் கெட்டிக்காரனாக இருந்தாலும் மண் நன்றாக இல்லையானால் பானை நன்றாக இராது. மண்ணை பிசையும் நீர் உப்பு நீராக இருந்தால் பானை சரியாக வராது. அது போல ஈஸ்வரன் சிருஷ்டிக்கு காரணம் ஆனாலும் அந்த அந்த ஜீவனின் முன் பிறவியில் சம்பாதித்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவே பிறவியை தருவார். (இப்படி ஈஸ்வரன் சிருஷ்டிக்கு நிமித்த காரணம் மட்டுமே என்பர்.) பின்னே தயை எங்கே வந்தது என்றால் சாஸ்திரங்களை கொடுத்து இருக்கிறார். அதன் மூலம் வைராக்கியமும் தன்னிடம் பக்தியும் ஏற்பட்டு உபாசிக்கிறவர்களுக்கு பிரகிருதியின் பந்தத்தை நீக்கி கைவல்யம் அளிப்பார்.

ஈசன்...


स एषः पूर्वेषामपि गुरुः कालेनानवच्छेदात् ।।26।।

ஸ ஏஷ​: பூர்வேஷாமபி கு³ரு​: காலேநாநவச்சே²தா³த் || 26||

அந்த ஈஸ்வரன் ஆதியில் உண்டான பிரம்மா முதலானவர்களுக்கும் குருவாக இருக்கிறார். காலத்தால் ஆயுளின் அளவு கூறப்படாமல் இருக்கிறார்.

तस्य वाचकः प्रणवः ।।27।।

தஸ்ய வாசக​: ப்ரணவ​: || 27||

பிரணவமானது அவருக்கு வாசகமாகும். (பெயராகும்.)
பிரணவம் என்பது பகவானின் மங்களகரமான சுபத்தை செய்யும் குணத்தை குறிக்கும். எப்படி ஒரு குழந்தை தன்னை "அம்மா" என்று அழைப்பதால் அன்னை மகிழ்வாளோ அது போல பகவான் தன்னை குறிக்கும் பிரவணத்தை கூறி தன்னை உபாசிப்பவன் மீது சந்தோஷம் கொண்டு அவனுக்கு கைவல்யம் முதலான நன்மைகளை செய்கிறார்.


ப்ரணிதானம்
 
तज्जपस्तदर्थभावनम् ।।28।।

தஜ்ஜபஸ்தத³ர்த² பா⁴வநம் || 28||

அந்த பிரணவத்தை ஜபிப்பது, அதன் பொருளான பரமாத்மாவை அடிக்கடி மனதில் இருத்தி த்யானிப்பது ப்ரணிதானம் எனப்படும்.

ஜபம் என்பதன் பொருள் மந்திரத்தின் அக்ஷரங்களை மனதில் வாங்கி மனோ விருத்தியை ஆவிருத்தி செய்வதே. அப்போது பிரணவத்தின் பொருளான பரம்பொருளையும் அடிக்கடி மனத்தால் த்யானித்து வர வேண்டும். இது ப்ரணிதானம். உபாம்சு ஜபம் எனவும் சொல்வர். இதற்கு முன் படி வாசிக ஜபம்.

Geetha Sambasivam

unread,
Apr 3, 2014, 6:30:33 AM4/3/14
to மின்தமிழ்
ப்ரணிதானத்தால்...

ततः प्रत्यक्चेतनाधिगमोऽप्यन्तरायाभावाश्च ।।29।।

தத​: ப்ரத்யக் சேதநாதி⁴ க³மோ'ப்யந்தராயா பா⁴வாஶ்ச || 29||

ஈஸ்வர ப்ரணிதானத்தால் தேகம் முதலானவற்றை விட வேறாக அறியப்படுகின்றவனும் சேதனனுமான ஜீவனுடைய உண்மையான அறிவும் உண்டாகிறது; வியாதி முதலான யோகாப்யாச தடைகளின் நிவிருத்தியும் உண்டாகிறது.

எந்த வஸ்துவை த்யானிக்கிறோமோ அதன் உண்மையான ஞானம் அல்லவா உண்டாக வேண்டும்? பரமாத்மாவை த்யானிக்க ஜீவனுக்கு தன் சொரூப ஞானம் எப்படி உண்டாயிற்று? ஜீவனும் ஈஸ்வரனும் ஒன்று இல்லையானாலும் யோக சித்தாந்தப்படி அவற்றின் சொரூபம் ஒன்றே. (அத்வைத சித்தாந்தத்தில் கூடஸ்தனும் பிரம்மமும் வேறில்லை என்பது போல)


யோகாப்யாசத்துக்கு விக்கினங்கள்:
 
व्याधिस्त्यानसंशयप्रमादाऽऽलस्याऽविरतिभ्रान्तिदर्शानाऽलब्धभूमिकत्वानवस्थितत्वानि चित्तविक्षेपास्तेऽन्तरायाः ।।30।।

வ்யாதி⁴ ஸ்த்யாந ஸம்°ஶய ப்ரமாதா³''லஸ்யா' விரதி ப்⁴ராந்தி த³ர்ஶாநா' லப்³த⁴ பூ⁴மிகத்வாநவஸ்தி² தத்வாநி சித்த விக்ஷேபாஸ்தே'ந்தராயா​: || 30||

யோகாப்யாசத்துக்கு விக்கினங்கள்:
வியாதி = வாதம், பித்தம், சிலேஷ்மம் என்ற தாதுக்களின் அன்னரசமான ரத்தத்தின் இந்திரியங்களுடைய இயற்கைக்கு மாறான நிலையும்,
ஸ்த்யான = கர்மம் செய்வதற்கு சித்தத்தின் நிலையும்
சம்சயம் = சந்தேகங்கள்
பிரமாத = யோகங்களை அனுஷ்டிக்காமல் இருப்பது
ஆலச்ய = சோம்பல், எதிலும் பிரவ்ருதி இல்லாமல் இருத்தல்.
அவிரதி = விஷயத்தில் ஆசை
பிராந்தி தர்சன = சாஸ்திரம் கூறியதை தவறாக புரிந்துகொள்ளுதல்.
அலப்த பூமிகத்வ = ஸமாதியின் கீழ் படியை அடையாமல் இருப்பதும்
அனவஸ்தி தத்வானி = கிட்டிய ஸமாதி நிலையில் சித்தம் நிலை பெறாமை.
சித்த விக்ஷேபா = மனத்தை அலைக்கழிக்கிற தோஷங்கள்
இவற்றில் எவை உண்டோ அவை யோகத்துக்கு விக்கினங்களாம் .


சித்தத்தின் சலன தன்மையுடன் உண்டாகின்றவை.
 
दुःखदौर्मनस्याङ्गमेजयत्वश्वासप्रश्वासा विक्षेपसहभुवः ।।31।।

து³​:க² தௌ³ர் மநஸ்யாங்க³மே ஜயத் வஶ்வாஸப்ரஶ்வாஸா விக்ஷேப ஸஹபு⁴வ​: || 31||

துக்கம், (ஆத்யாத்மிக, ஆதி பௌதிக ஆதி ஸத்விக துன்பங்கள்.)
தௌர் மநஸ்ய =ஆவலுக்கு தடையேற்பட்ட காலத்தில் மனதில் உண்டாகும் கலக்கமும்.
அங்க³மே ஜயத்வ = சரீரத்தின் அவயங்களின் ஆட்டமும்
ஶ்வாஸ = இஷ்டமில்லாவிட்டாலும் வெளிக்காற்று உள் செல்லுதலும்
ப்ரஶ்வாஸா = இஷ்டமில்லாவிட்டாலும் உள் காற்று வெளி செல்லுதலும்
ஆகிய இந்த நான்கும் சித்தத்தின் சலன தன்மையுடன் உண்டாகின்றவை.
இந்த விக்கினங்களை தவிர்க்க நல்ல உபாயம் பிரணவம் முதலான மஹா மந்திர ஜபங்களும், இவற்றின் பொருளான பரமாத்மாவை மனதில் இருத்துவதும்தான்.

Geetha Sambasivam

unread,
Apr 4, 2014, 7:39:45 AM4/4/14
to மின்தமிழ்
பக்தி, வைராக்கியம் இல்லையெனில்??? 


तत्प्रतिषेधार्थमेकतत्त्वाभायासः ।।32।।
தத் ப்ரதிஷேதா⁴ர்த²மேகதத்த்வாபா⁴யாஸ​: || 32||

அந்த விக்கினங்களை தவிர்க்க ஏதாவது தத்துவம் ஒன்றில் மனதை நிறுத்தி த்யானம் செய்வதே.
சூத்திரம் 29 இல் ஈஸ்வர ப்ரணிதானம் விக்கினங்களை போக்கும் எனச்சொல்லப்பட்டது. அந்த திட பக்தி, வைராக்கியம் இல்லையெனில் என்ன செய்வது? ஏதேனும் ஒரு மூர்த்தியில் மனதை நிறுத்தி தாரணை, த்யானம் செய்து வர வேண்டும். வேறு வஸ்துவிடம் லயித்த மனது வியாதி முதலான துக்கங்களை உணராது.


மற்றவருடன் உறவு.....
 

मैत्रीकरुणामुदितोपेक्षाणां सुखदुःखपुण्यापुण्यविषयाणां भावनातश्चित्तप्रसादनम् ।।33।।

மைத்ரீ கருணா முதி³தோபேக்ஷாணாம்° ஸுக² து³​:க² புண்யாபுண்ய விஷயாணாம்° பா⁴வநாதஶ் சித்த ப்ரஸாத³நம் || 33||

சுக துக்கமுள்ளவர்கள், புண்ய அபுண்யம் செய்பவர்கள் விஷயத்தில் முறையே சிநேகம், கருணை, தயை, உதாசீனம் ஆகியன கொள்ள சித்தத்தில் தெளிவு உண்டாகிறது.

சித்தத்தை சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிடில் அசூயை முதலான குணங்கள் அங்கே குடி ஏறி விடும். பின் அவ்விடத்தில் ஸமாதி உண்டாகாது.
அதற்கு என்ன வழி? பிறருக்கு துக்கத்தை தரக்கூடாது. முடிந்த வரை மற்றவர் துக்கத்தை போக்க வேண்டுமென சங்கல்பம் செய்து கொள்ளவேண்டும். அப்படிச் செய்ய மற்றவருக்கு உபகாரம் செய்கிறோமோ இல்லையோ அபகாரம் செய்யாது இருப்போம்.

மற்றவருக்கு - சுகமாக இருப்பவரிடம் நட்பு வேண்டும். துக்கமுள்ளவரிடம் கருணை வேண்டும். புண்ய சீலர்களிடம் ப்ரீதி இருக்க வேண்டும். புண்யம் செய்யாதவரிடம் உதாசீனம் இருக்க வேண்டும். (அப்போதுதான் வெறுப்பு இல்லாதிருக்கும். எனக்கு மிகவும் பயனானது இது.)
இப்படி செய்ய ரஜோ தமோ குணங்கள் போய் சத்வம் பெருகும்.



தெளிவு...
 

प्रच्छर्दनविधारणाभ्यां वा प्राणस्य ।।34।।
 ப்ரச்ச²ர்த³நவிதா⁴ரணாப்⁴யாம்° வா ப்ராணஸ்ய || 34|| 

பிராண வாயுவை, யோக சாஸ்திரத்தில் சொல்லியபடி (உள்ளே இருக்கும் காற்றை) வெளிவிடுதல், அல்லது உள்ளிழுத்து அடக்கி வைத்தல் (கும்பகம்) இவற்றாலாவது தெளிவு ஏற்படும். 
இங்கே ரேசகம் என்று சொல்லியிருந்தாலும் பூரகம், கும்பகம், ரேசகம் மூன்றும் அடங்கிய பிராணாயாமம் என்றே பொருள் கொள்ள வேண்டும் என பாஷ்யங்கள் சொல்கின்றன.
மனத்தெளிவுக்கு வேறு உபாயங்களும் உள்ளன.

Geetha Sambasivam

unread,
Apr 7, 2014, 7:10:08 AM4/7/14
to மின்தமிழ்
ஸம்யமம்
 

  विषयवती वा प्रवृत्तिरुत्पन्ना स्थतिनिबन्धिनी ।।35।।
 விஷயவதீ வா ப்ரவ்ரு«த்திருத்பந்நா ஸ்த²திநிப³ந்தி⁴நீ || 35|| 


யோக சாஸ்திரங்களில் சொல்லிய விஷயங்களில் பிரவ்ருத்தியை உண்டான மனது தெளிந்த நிலைக்கு சாதனமாகிறது.

தாரணை, த்யானம், ஸமாதி மூன்றுக்குமே ஸம்யமம் எனப்பொதுப் பெயர். இவற்றை எவ்விடத்தில் வைத்து பயிற்சி செய்தால் என்ன பிரவ்ருத்தி (ஈடுபாடு) ஏற்படுகிறது என்பது இருக்கிறது. மூக்கின் நுனியில் சித்தத்தை வைத்து சம்யமம் செய்ய திவ்ய வாசனை அனுபவம் ஏற்படும்;  நாக்கின் நுனியில் வைக்க ருசி அனுபவம்; உள் மோவாய்க் கட்டையில் ரூபம். நாக்கின் நடுவில் தொடுதல்; நாக்கின் மூலத்தில் சப்தம். இப்படி ஒவ்வொரு இடத்தில் பிரவ்ருத்தி ஏற்பட்டு அங்கே சித்தம் நிலைபெறுகிறது.
சாஸ்திரங்கள் சொல்லும் வழியில் செல்ல சந்தேகங்கள் நீங்கும். சந்தேகமும் பயமும் நீங்க சாஸ்திரங்கள் உபதேசித்த விவேகம் –க்யாதி முதலியவற்றின் பலனில் நம்பிக்கை ஏற்படும். இந்த நம்பிக்கை அந்த வழியில் திடமான பிரவ்ருத்தியை உண்டாக்கும்.

வேறு உபாயங்களும் உண்டு.


விலகிய துக்கம்
 

विशोका वा ज्योतिष्मति ।।36।।
 விஶோகா வா ஜ்யோதிஷ்மதி || 36||

துக்கம் ரஜோ குணத்தின் பரிணாமம். அந்த துக்கம் விலகிய அதிக சாத்விக பிரகாசம் உள்ளதாக இருக்கிற பிரவ்ருத்தி மனதை நிலை பெறச்செய்கிறது.

  वीतरागविषयं वा चित्तम् ।।37।।
 வீதராக³விஷயம்° வா சித்தம் || 37||

விலகிய ஆசையை உடையவர்களின் சித்தத்தை விஷயமாக உடைய சித்தம் நிலை பெறுகிறது.
அதாவது யாருடைய சித்தம் ஆசையை விட்டுவிட்டதோ, அவர்களை இடைவிடாமல் த்யானிக்கிற சித்தம் நிலைபெறும். வியாசர், சுகர் முதலானோர் அப்படிப்பட்ட சித்தத்தை உடையவர்கள்.

சித்தம் நிலைக்க...
 

स्वप्ननिद्राज्ञानालम्बनं वा ।।38।।
 ஸ்வப்ந நித்³ராஜ்ஞாநாலம்ப³நம்° வா || 38|| 

ஸ்வப்னத்திலும் சுசுப்தியிலும் அறியப்பட்ட வஸ்துவை த்யானம் செய்கிற சித்தம் நிலைத்து நிற்கிறது. 
பகவானை ஆராதனை செய்வதாக கனவு காண்கிறோம். அப்படியே விழித்து அந்த காட்சியை மனதில் இருத்தினால் சித்தம் நிலைபெறும். அது போல் சுசுப்தியில் ஏற்படும் சுகானுபவத்தை மனதில் இருத்தினாலும் சித்தம் நிலைபெறும்.

Suba.T.

unread,
Apr 7, 2014, 1:56:51 PM4/7/14
to மின்தமிழ், Subashini Tremmel


2014-02-14 5:11 GMT+01:00 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
​..

பிரமாணம் என்பதென்ன? பிரத்யக்ஷம் (நேரடி அனுபவம்), அனுமானம் (ஊகம்), ஆகமம் ஆகியன பிரமாணங்கள் ஆகும்.
(அனுபவத்தால் உண்டானதை மற்றதற்கு பொருத்தி பார்ப்பது ஆகமம்.)
நம் கண் காது முதலான புலன்களாலே சிலதை அறிஞ்சு கொள்கிறோம். இது நேரடி அனுபவம். இது ஒரு பிரமாணம்.
முன் அனுபவத்தாலே சிலது தெரிஞ்சுக்கிறோம். நெருப்பை நேரடியா பார்த்து இது நெருப்புன்னு தெரிஞ்சு கொள்கிறோம். இது ப்ரத்யக்ஷம். முன் ஒரு முறை நெருப்பு இருக்கிற இடத்தில் புகை இருக்குன்னு பார்த்தோம். இப்ப புகையை மட்டும் எங்காவது பார்க்கும் போது "ஓஹோ! இங்கே நெருப்பு இருக்கு" ன்னு ஊகம் செய்கிறோம். இது ஒரு வகை. நெருப்பு என்கிற வார்த்தையை கேட்கும்போது நேரடியா பாக்கலைன்னாலும் இந்த நெருப்பையும் புகையையும் சம்பத்தப்படுத்தி நினைக்கிறது ஆகமம்.
இவை அத்தனையும் பிரமாணம்.

विपर्ययो मिथ्याज्ञानमेतद्रूपप्रतिष्ठम् ।।8।।
விபர்யயோ மித்²யாஜ்ஞாநமேதத்³ ரூப ப்ரதிஷ்ட²ம் || 8|| 

ஒரு வஸ்துவின் உண்மை சொருபத்தை வெளிப்படுத்தாத பொய்யான ஞானம் விபர்யயம். 
இது பின்னால் மாறிவிடக்கூடியது. (சிப்பியில் வெள்ளி காண்பது) ஒரு பொருளோட "உண்மை" நிலையை தெரிவிப்பது யதார்த்த ஞானம். இல்லாத ஒரு நிலையை இருப்பதா காட்டுவது மித்யா ஞானம். கடற்கரையிலே ஒரு சிப்பி கிடக்குது. அது வெய்யிலில் பளபளக்கிறது ன்னு பார்த்து ஓ! இது ஏதோ வெள்ளியிலே பண்ண பொருள் ன்னு நினைக்கிறோம். இது மித்யா ஞானம் அல்லது விபர்யயம். கிட்டே போய் பார்க்க அது சிப்பின்னு தெரியுது. அப்ப நம் கருத்தை மாத்திக்கிறோம். இப்படி மாறுவதே விபர்யயத்தோட முக்கிய லக்ஷணம்.


​எளிமையான விளக்கம்.
இந்த 3 வகை பிரமாணங்களும் நமது மனதில் மீண்டும் மீண்டும் தொடர்ந்து எழுந்து நம் சிந்தனையை நடத்திச் செல்பவை தானே?

சுபா

Geetha Sambasivam

unread,
Apr 15, 2014, 12:50:47 AM4/15/14
to மின்தமிழ்
சித்தம் நிலைக்க...-2
 

यथाभिमतधयानाद्वा ।।39।।
 யதா²பி⁴ மதத⁴யாநாத்³வா || 39|| 

தனக்கு பிடித்த ரூபத்தை த்யானம் செய்வதால் சித்தம் நிலைபெறும்.
34- 38 சூத்திரங்கள் உடலை ஒட்டிய விஷயங்கள் சம்பந்தமான உபாயங்களை கூறின. (ஆந்தரம்) இது உடலுக்கு வெளியில் உள்ள விஷயத்தை உபாயமாக கூறுகிறது. (பாஹ்யம்). 


சித்தம் நிலைபெற்றதற்கு சோதனை...
 

34- 38 சூத்திரங்கள் உடலை ஒட்டிய விஷயங்கள் சம்பந்தமான உபாயங்களை கூறின. (ஆந்தரம்). இது உடலுக்கு வெளியில் உள்ள விஷயத்தை உபாயமாக கூறுகிறது. (பாஹ்யம்).

परमाणुपरममहत्त्वान्तोऽस्य वशीकारः ।।40।।

பரமாணு பரம மஹத்த்வாந்தோ'ஸ்ய வஶீகார​: || 40||

ஸூக்ஷ்ம விஷயத்தில் பிரவேசித்த இந்த சித்தத்திற்கு பரமாணு முதல் பரம மஹத்தானதை முடிவாக கொண்ட எல்லா விஷயங்களிலும் தடங்கல் இல்லாமை ஏற்படுகிறது.
இதுவே சித்தம் நிலைபெற்றதற்கு சோதனை.


சாக்ஷாத்காரத்தின் ரூபங்கள்
 

क्षीणवृत्तेभिजातस्येव मणेग्रहीतृग्रहणग्राह्येषु तत्स्थतदञ्जनता समापत्तिः ।।41।।

க்ஷீண வ்ரு«த்தேபி⁴ ஜாதஸ்யேவ மணே க்³ரஹீத்ரு« க்³ரஹண க்³ராஹ்யேஷு தத் ஸ்த²த த³ஞ்ஜநதா ஸமாபத்தி​: || 41||

க்ஷீணமடைந்த (நலிவுற்ற) ராஜஸ, தாமஸ வ்ருத்திகளை உடைய சித்தத்திற்கு இயற்கையில் சுத்தமான மணி போன்ற கிரகிப்பவன் – ஆத்மா- விடத்திலும், கிரகிக்கும் சாதனமான இந்திரியங்களிடத்திலும், கிரகிக்கப்படும் விஷயங்களிடத்திலும் சாக்ஷாத்காரம் உண்டாகிறது.

இதை ஸமாபத்தி என்றும் சொல்வர்.

பச்சை புல்வெளியில் லயித்த சித்தத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் இருந்தபோது ஒரு மாடு அதன் மீது ஓடியதால் அவர் அலறினார். அவர் முதுகில் குளம்புகளின் சுவடுகள் உண்டானதாக கதை. இது புல்வெளியுடன் ஏற்பட்ட ஏகாக்ரத்தையால் உண்டானது. இது கிரகிக்கப்பட்ட விஷயத்தில் உண்டானதால் கிராஹ்ய ஸமாதி.
இது போல இந்திரியங்கள் (10) மனஸ், புத்தி, அகங்காரம் என 13 வித அஹம் தத்துவங்களுடன் ஏகாக்ரம் (ஒன்றுதல்) ஏற்படலாம். விஷயத்தை கிரகிக்கும் சாதனத்தில் ஸமாதி என்பதால் இதை கிரஹண ஸமாதி என்பர்.
இதையும் தாண்டியது ஆன்மா. இதில் ஏற்படும் ஸமாதி கிரஹீத்ரு ஸமாதி ஆகும்.
சாக்ஷாத்காரம் இப்படிப்பட்ட ரூபங்கள் உள்ளது.

Geetha Sambasivam

unread,
Apr 21, 2014, 7:35:19 AM4/21/14
to மின்தமிழ்
ஸவிதர்க்க ஸமாதி.
 

तत्र शब्दार्थज्ञानविकल्पैः संकीर्णा सवितर्का समापत्तिः ।।42।।

தத்ர ஶப்³தா³ர்த²ஜ்ஞாந விகல்பை​: ஸம்°கீர்ணா ஸவிதர்கா ஸமாபத்தி​: || 42||

முன் சொல்லிய ஸமாதிகளுள் சப்தம், அர்த்தம், அர்த்தத்தைப்பற்றிய ஞானம் இவற்றின் பேதம் தெரியாமல் இருக்கும் நிலைக்கு ஒப்பான சாக்ஷாத்காரம் ஸவிதர்க்கம் எனப்படும்.

கோ என்ற சம்ஸ்க்ருத சப்தம் ஒரு சொல். அதற்கு பசு என்பது பொருள். கோ என்று கேட்கும் போது அது நம் புத்தியில் ஒரு ஞானத்தை உண்டாக்குகிறது. ஒரு சொல்லின் சப்தம், பொருள், அறிவு மூன்றும் வேறானாலும் அவற்றை ஒன்றாக சம்பந்தப்படுத்தி அறிவது விகல்ப ஞானம். இதற்கு ஒப்பானதே ஸவிதர்க்க ஸமாதி. இதில் சப்தம், பொருள், ஞானம் மூன்றும் ஒன்றாக கலந்ததாகவே கொள்ளப்படும்.


நிர்விதர்க்க ஸமாதி
 

स्मृतिपरिशुद्धौ स्वरूपशून्येवार्थमात्रनिर्भासा निर्वितर्का ।।43।।

ஸ்ம்ரு«தி பரிஶுத்³தௌ⁴ ஸ்வரூப ஶூந்யே வார்த² மாத்ர நிர்பா⁴ஸா நிர்விதர்கா || 43||

சங்கேதம் (குறிப்பு) என்ற சக்தி-ஞானம் விலகியபோது ஸமாதி பிரக்ஞையானது தனக்குரிய க்ராஹகத்வம் என்ற பிரக்ஞா ரூபத்தால் இல்லாதது போல ஆகி, அபேதமற்ற பசு முதலிய க்ராஹ்யத்தோடு (அர்த்தத்தோடு) மட்டும் பிரகாசிக்கின்ற ஸமாதியானது நிர்விதர்க்க ஸமாதி எனப்படுகிறது.
எளிமையாக சொல்ல: நினைப்பில் சுத்தி ஏற்பட்டு சுய ரூபத்தில் உள்ளபோது வேறுபாடில்லாமல் பொருள் மட்டுமே உணரப்படும்போது அது நிர்விதர்க்கம் ஆகும்.
ஒவ்வொரு சொல்லுக்கும் அதன் பொருளுக்கும் இறைவன் ஒருவித குறிப்பை உலகை படைக்கும்போதே ஏற்படுத்தி உள்ளார். சப்தம், பொருள், அறிவு மூன்றும் வேறானாலும் அவற்றை ஒன்றாக அறிவதற்கு சங்கேதம் என்ற சக்தி காரணமாகும். இது இல்லாதபோது பொருள் மட்டுமே தோற்றத்தை அடைந்து நிற்கும். இந்த ஸமாதி நிர்விதர்க்க ஸமாதி. (இந்த சங்கேதம் இருக்கும்போது அது ஸவிதர்க்க சமாதி; நேற்று பார்த்தோம் இல்லையா?)

மேற்கண்ட இரண்டும் ஸ்தூல விஷயமான ஸமாதியை விளக்குகின்றன.


サムスン
 

サムスン  (samsung)

இது என்ன? 
இது சர்வ சாதாரணமா இந்தியாவில புழங்கற சொல்!
ஆனால் இதை பார்க்கும்போது அது தெரியலை இல்லையா?
இதே போலத்தான் கோ என்ற வார்த்தையும். சாதாரணமா தமிழ் படிச்சு இருந்தாக்கூட யாரும் இதுக்கு பசுமாடு என்று பொருள்ன்னு சொல்லைன்னா ....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..... ஆங்கிலம் எழுதி இருக்கிறதா நினைச்சு போ ன்னு அர்த்தம் பண்னிடுவாங்க. அப்ப இந்த சித்திரம் - ஆமாம், அதுக்குன்னு ஒரு பொருள் தெரியறவரை அது ஒரு சித்திரமாத்தான் இருக்கும்- என்னத்தை குறிக்குதுன்னு யாரும் சொல்லும் வரை நமக்கு அது ஒரு அறிவையும் உண்டு பண்ணாது. அதை தெரிஞ்சு கொண்டபின் அதை எப்போ பார்த்தாலும் சட்டுன்னு நமக்கு அது என்னனும் அது தொடர்பான விஷயங்களும் உடனே நினைவு வரும்.
ஆக ஒரு சித்திரத்தை வார்த்தையாக ஆக்குகிறது நம் அறிவுதான். அந்த வார்த்தையுடன் சில விஷயங்களை சம்பந்தப்படுத்தி புரிஞ்சு கொள்வதும் நம் அறிவுதான். பழகின பிறகு எல்லாத்தையுமே ஒண்ணாதான் புரிஞ்சுப்போம். பழகாத வரை எல்லாம் வேறு வேறாத்தான் தோணும். இதைத்தன் போன பதிவிலே சொன்னோம்.
அது சரி முதல் வரிலே எழுதி இருக்கிறது என்ன? ஹிஹிஹி! கண்டு பிடிங்க!

Geetha Sambasivam

unread,
Apr 22, 2014, 12:25:35 AM4/22/14
to மின்தமிழ்
ஸ்தூல சமாசாரம்...
 

एतयैव सविचारा निर्विचारा च सूक्ष्मविषया व्याख्याता ।।44।।

ஏதயைவ ஸவிசாரா நிர்விசாரா ச ஸூக்ஷ்ம விஷயா வ்யாக்²யாதா || 44||

முன் கூறப்பட்ட ஸ்தூல விஷயமுடைய ஸவிதர்க்க, நிர்விதர்க்க ஸமாதியை கொண்டே பரமாணு முதலிய ஸூக்ஷ்ம வஸ்துக்களை விஷயமாக உடைய ஸவிசாரம், நிர்விசாரம் என்று சொல்லப்படும் சமாபத்தி (ஸமாதி) தெளிவாக உபதேசிக்கப் பட்டதாகிறது.

ஸ்தூல சமாசாரம் எளிதாக புரிகிறது. ஒரு குடம் என்றால் அது ஸ்தூலமாக இருப்பதால் எளிதாக புரிகிறது. ஸூக்ஷ்ம வஸ்துக்கள் அப்படி புரிவதில்லை.
பெயர்களும் ரூபங்களும் (உருவங்களும்) நிரம்பியுள்ள இவ்வுலகத்தில் கீழ் மட்ட ஸவிசார, நிர்விசார ஸமாதிகளை புரிந்து கொள்வதே கடினம்.
ஸூக்ஷ்ம ஸமாதி ஸவிசாரம், நிர்விசாரம் என இரு வகைப்படும். இதை வகைப்படுத்த விஷயமாவது (parameter) பரமாணு மட்டுமில்லை; பஞ்ச தன் மாத்திரை முதல் ப்ரக்ருதி வரை உள்ள தத்துவங்களும் கூட. இவை ஸூக்ஷ்ம மானதால் ஸூக்ஷ்ம ஸமாதி என பெயர் வந்தது.


ஸூக்ஷ்மமானவை ...
 

सूक्ष्मविषयत्वं चालिङ्गपर्यवसानम् ।।45।।

ஸூக்ஷ்ம விஷயத்வம்° சாலிங்க³பர்யவஸாநம் || 45||

மேற்கூறிய ஸமாதிக்கு ஸூக்ஷ்மமான விஷயத்தை உடைய தன்மையும் பிரதானத்தை முடிவாக உடையது.

ஸூக்ஷ்மமானவை யாவை?
பரமாணுக்கள் ஐந்து வகைப்படும். பஞ்ச தன் மாத்திரைகளில் ஒவ்வொரு தன் மாத்திரையும் அதனதன் பரமாணுவுக்கு முக்கிய காரணம் ஆகும். மற்றதன் பரமாணுவுக்கு அங்கமாகும். (வேதாந்தத்தில் பஞ்சீகரணம் பற்றி அறிந்தவருக்கு இது புரிய சுலபமாக இருக்கும். ஆனால் வேறானது.)

பரமாணுக்கள் ஐந்து.

௧.பார்த்திவம். ௨.ஆப்யம். ௩.தைஜசம் ௪.வாயவ்யம். ௫.நாபசம்
முக்கிய காரணங்கள்: ௧.பார்த்திவம். – கந்தம் (வாசனை). அங்கம்: ரசம் ரூபம் ஸ்பர்சம் சப்தம்
௨.ஆப்யம். - ரசம்.- அங்கம்: ரூபம் ஸ்பர்சம் சப்தம்
௩.தைஜசம் – ரூபம் அங்கம்: ஸ்பர்சம் சப்தம்
௪.வாயவ்யம்.- ஸ்பர்சம் அங்கம்: சப்தம்
௫.நாபசம் – சப்தம்.

இந்த பரமாணுக்கள் காரியங்கள். அதாவது (result) ரிசல்ட். இவற்றுக்கு காரணம் (cause) தன் மாத்திரைகள். பரமாணுக்கள் மிக சிறியன ஆயினும் ஸ்தூலமானவை.

தன் மாத்திரைகள் ஸூக்ஷ்ம மானவை. இவை எங்கிருந்து வந்தன? அஹம் தத்துவத்திலிருந்து வந்தன. அது தன் மாத்திரைகளை விட ஸூக்ஷ்மமானது. அஹம் மஹத் தத்துவத்தில் இருந்து வந்தது. மஹத் தத்துவம் பிரக்ருதியில் இருந்து உண்டானது. இந்த ப்ரக்ருதி பரம ஸூக்ஷ்மமானது.

பரமாணு முதல் ப்ரக்ருதி முடிய அனைத்தும் ஒன்றை விட ஒன்று ஸூக்ஷ்ம மானது. ஆகவே இங்கு உபதேசிக்கப்பட்ட ஸமாதி, ப்ரக்ருதி வரை உள்ள ஸூக்ஷ்ம வஸ்துக்களை விஷயமாக கொண்டது

Geetha Sambasivam

unread,
Apr 29, 2014, 8:34:33 AM4/29/14
to மின்தமிழ்
ஸம்ப்ரக்ஞாத ஸமாதிகள்....
 

ता एव सबीजः समाधिः ।।46।।

தா ஏவ ஸபீ³ஜ​: ஸமாதி⁴​: || 46||

முன் சொன்ன அனைத்தும் பந்தத்திற்கு சாதனமான க்ராஹ்யத்தை (பற்றை) உடைய ஸமாதி ஆகும்.
அதாவது அது ஸமாதி ஆனாலும் ஒரு விஷயத்தை பற்றி நிற்கிறது.
ஸவிதர்க்கமும் நிர்விதர்க்கமும் பருப்பொருளை பற்றி நிற்கிறது. ஸவிசாரமும் நிர்விசாரமும் ஸூக்ஷ்ம பொருளை பற்றி இருக்கின்றன. இவை நான்காலும் மோக்ஷம் கிடைக்காது. இவை நான்கும் ஸம்ப்ரக்ஞாத ஸமாதிகள் எனப்படும்.

41 – 45 சூத்திரங்களில் ஸமாதி வகைகள் விளக்கப்பட்டன. க்ரஹீத்ரு, க்ரஹணம். க்ராஹ்யம் – அதாவது பற்றுவோன், பற்று, பற்றப்பட்டது இவற்றை கொண்டு பிரிக்கப்பட்டது.

க்ராஹ்யத்தில் பற்றப்பட்டது ஸ்தூலமா இல்லை ஸூக்ஷ்மமா என்பதை வைத்து பிரிக்கப்பட்டது. ஸ்தூலத்தில் ஸவிதர்க்கம், நிர்விதர்க்கம் என இரண்டு வகை ஆயிற்று. ஸூக்ஷ்ம ஸமாதியில் ஸவிசாரம், நிர்விசாரம் என இரண்டு வகை ஆயிற்று. பற்றுதல், பற்றுவோன் என்பனவற்றை விஷயமாக கொண்டு சவிகல்பம், நிர்விகல்பம் என இரண்டு வகை ஆயிற்று.
மேலும் க்ரஹணத்தை மட்டும் கொண்ட ஸமாதியில் ஆனந்தத்துடன் – ஸானந்தம்; ஆநந்தம் மட்டும் (கேவல ஆநந்தம்) என இரண்டு வகை ஆயிற்று.

மூன்றாவதாக க்ரஹீத்ரு ஸமாதியில் அஸ்மிதை உடன் கூடியது, ஸாஸ்மிதை. அஸ்மிதை மட்டுமே கேவல அஸ்மிதை என இரண்டு வகை ஆயிற்று. சப்தம் ஆனது அர்த்தம், ஞானம் இவற்றுடன் கூடிய போது ஸவிகல்பம் என்றும், சப்தம் அர்த்தத்தை விட்டு ஞானத்துடன் மட்டும் கூடிய போது நிர்விகல்பம் என்றும் ஆயிற்று.
 
  

நிர்விசார ஸமாதி...
 

निर्विचारवैशारद्येऽध्यात्मप्रसादः ।।47।।

நிர்விசார வைஶாரத்³யே'த்⁴யாத்ம ப்ரஸாத³​: || 47||

நிர்விசார ஸமாதிக்கு ஆதிக்யம் உண்டாகும் போது கிலேச வாசனைகள் இல்லாத சித்தத்தில் தெளிவு ஏற்படுகிறது.
நிர்விசார ஸமாதியை பழக ரஜோ, தமோ குணங்கள் நீங்கி சத்வம் மேலிடும். அதனால் அவித்தை முதலான கிலேசங்களின் வாசனை நீங்கும், இப்படிப்பட்ட சித்தத்தில் அறிவு உண்டாகும். இந்த ஞானம் உண்டானவன் ஆன்மாவை எல்லாவற்றிலும் சிறந்ததாக கண்டு கொள்கிறான். அப்படி ஞானம் வராதவர்களைப் பார்த்து இவன் துக்கப்படுகிறான்.
இப்படிப்பட்ட நிர்விசார ஸமாதி சித்திக்கவே ஒவ்வொரு சாதகனும் முயற்சி செய்ய வேண்டும்.

Geetha Sambasivam

unread,
Apr 30, 2014, 7:25:53 AM4/30/14
to மின்தமிழ்
ருதம்பரா ..
 

ऋतंभरा तत्र प्रज्ञा ।।48।।

ரு«தம்‌ப⁴ரா தத்ர ப்ரஜ்ஞா || 48||

சித்தத்தெளிவு ஏற்பட்ட போது உண்டாகும் அறிவு ருதம்பரா எனப்படும்.

இந்த நிர்விசார ஸமாதியில் சத்தியமான வஸ்துவின் தோற்றமே கிடைப்பதால் ருதம்பரா என்ற பெயர் இந்த பிரக்ஞைக்குப் பொருத்தம். இத்தகைய நிலை தர்மமேக ஸமாதிக்கு இட்டுச்செல்லும்.

ருதம்பரா அல்லது சத்தியமான பிரக்ஞை..
 

श्रुतानुमानप्रज्ञाभ्यामन्यविषया विशेषार्थत्वात् ।।49।।

ஶ்ருதாநுமாந ப்ரஜ்ஞாப்⁴யா மந்யவிஷயா விஶேஷார்த²த்வாத் || 49||
ஶ்ருத அநுமாந ப்ரஜ்ஞாப்⁴யாம் அந்ய விஷயா விஶேஷார் த²த்வாத் 

சப்தத்தாலும் அனுமானத்தாலும் உண்டாகிற பிரக்ஞையை விட இது வேறானது. அது சாமான்யமானது. இந்த ருதம்பரா பிரக்ஞை அவற்றுக்கு எட்டாததை விஷயமாக உடையது.
ஞானம் பிரமாணங்களால் உண்டாகும். இவற்றில் சப்தமும், அனுமானமும் சாமான்ய ஞானத்தையே தரும். மலையில் புகை என்றால் அது மலையில் புகை இருக்கிறது என்ற சாமான்ய ஞானத்தையும், அங்கே ஏதோ எரிகிறது, அதனால் புகை வருகிறது என்ற சாமான்ய ஞானமும் கிடைக்கும். ஏன் புகை? எப்படிப்பட்ட நெருப்பு? எப்படி வந்தது போன்ற விசேஷ ஞானம் கிடைக்காது.

பிரத்யக்ஷம் என்பது இன்னொரு பிரமாணம். இது இரு வகை. சாமான்ய ப்ரத்யக்ஷம், யோக பயிற்சியால் உண்டாகும் ப்ரத்யக்ஷம்.

சாமான்ய ப்ரத்யக்ஷம் புலன்களால் ஏற்படுகிறது. இதன் வீச்சு குறைவானது. புலன்களில் குற்றம் இருந்தால் அது ஞானத்தை பொய்யாக்கி விடுகிறது. ஒரு புலன் அறிவதை மற்றொன்று அறிவதில்லை. அதனால் அப்படியே உண்மை ஞானம் கிடைத்தாலும் விசேஷமான ஞானம் ஒன்றும் முழுமையாக கிடைப்பதில்லை.

யோக ப்ரத்யக்ஷ ஞானம் அப்படி இல்லை. அது இந்திரியங்களை சார்ந்து இல்லை. ப்ரக்ருதி வரை உள்ள ஸூக்ஷ்ம வஸ்துக்களை க்ரஹிக்கும். புதையல் போன்ற மறைந்துள்ளவற்றையும் கிரஹிக்கும். வேறு தேசம், லோகம் இவற்றிலுள்ளதையும் கிரஹிக்கும். அகவே இந்த யோகஜ ப்ரத்யக்ஷ ஞானத்தை ருதம்பரா அல்லது சத்தியமான பிரக்ஞை என உபதேசிக்கிறார்.

இயற்கையில் சுத்த சத்வ புத்தி எல்லாவற்றையும் பிரகாசப்படுத்தக்கூடியது. ஆனால் தமோ குணத்தால் மறைக்கப்பட்டு இருப்பதால் அது இந்திரியங்கள் அறிவதை மட்டுமே பிரகாசப்படுத்துகிறது. யோகப்பயிற்சியால் தமோ குணம் விலக இந்திரியங்கள் துணை இல்லாமலே அனைத்தையும் யோகி அறிகிறான்.
இப்படி மேலான நிலைக்கு செல்லாமல் தாழ்ந்த நிலையிலேயே இருப்பவர்களை கண்டு ருதம்பரா பிரக்ஞன் சோகப்படுகிறான்.

Geetha Sambasivam

unread,
May 1, 2014, 8:33:20 AM5/1/14
to மின்தமிழ்
வ்யுத்தான சம்ஸ்காரத்துக்கு தடை..
 

तज्जः संस्कारोऽन्यसंस्कारप्रतिबन्धी ।।50।।

தஜ்ஜ: ஸம்°ஸ்காரோ'ந்ய ஸம்°ஸ்கார ப்ரதிப³ந்தீ⁴ || 50||

தஜ்ஜ: ஸம்°ஸ்காரோ அந்ய ஸம்°ஸ்கார ப்ரதிப³ந்தீ⁴

மேற்கூறிய ருதம்பரா பிரக்ஞையால் உண்டான நிரோத சம்ஸ்காரமானது வேறு வ்யுத்தான சம்ஸ்காரத்துக்கு தடை செய்வதாக ஆகிறது.

வெளியில் உள்ள சப்தம் முதலான விஷயங்களையே சித்தம் பற்றி செல்கிறது. இது பல ஜன்ம பழக்கம் ஆகும். இது வ்யுத்தான சம்ஸ்காரம் எனப்படும். தத்துவ பழக்கம் பெற வைராக்கியம் முதலான சாதனங்கள் உள்ளன. இந்த தத்வ பழக்கம் இதை தடை செய்யும். ருதம்பரா பிரக்ஞா ஏற்படில் இது முழுதும் தடை செய்யப்பட்டதாகும். அவித்தை முதலிய க்லேசங்கள் குறைந்து சித்தம் விவேக க்யாதியை அடைந்து செய்ய வேண்டிய காரியம் ஏதுமில்லாததாய் காரணத்தில் லயம் அடைந்து விடும். இந்த நிலையில் யோகியின் சித்தம் தன் காரியம் என்று எதையும் செய்ய சக்தி இல்லாமல் ஆகிவிடுகிறது. இப்படி.....

அஸம்ப்ரக்ஞாத ஸமாதி
 

तस्यापि निरोधे सर्वनिरोधान्निर्बीजः समाधिः ।।51।।

அஸம்ப்ரக்ஞாத ஸமாதி:

தஸ்யாபி நிரோதே⁴ ஸர்வநிரோதா⁴ந்நிர்பீ³ஜ: ஸமாதி⁴: || 51|| 

ஸம்ப்ரக்ஞாத ஸமாதியில் சம்ஸ்காரத்தினுடையதும் அதன் பிரக்ஞையின் உடையுதுமான நிரோதம் (தடை) உண்டான போது, எல்லாம் தடை செய்யப்பட்டதால் தன்னிலை மாறுவதற்கு ஏதுமில்லாத அஸம்ப்ரக்ஞாத ஸமாதி உண்டாகிறது.

யோக சாஸ்திரம் கேட்டலும், பொருளை மனனம் செய்வதும், புருஷனை மட்டும் த்யானம் செய்யும் பழக்கமான தர்மமேக ஸமாதியை உண்டாக்கும். பின் பர வைராக்கியம் என்ற பிரக்ஞையின் தெளிவு ஏற்பட்டு தர்மமேக ஸமாதியில் ருசி உண்டாகும். புருஷனை மட்டும் த்யானிக்க அதன் சாக்ஷாத்காரம் ஏற்படுகிறது; நிர் பீஜ யோகம் சித்திக்கிறது. [அதாவது சித்தம் முளை விடுவதில்லை.] இதுவே பழக, வேலையில்லாமல் சித்தம் அதன் காரணமான பிரக்ருதியில் ஒடுங்கிவிடும். செய்ய வேண்டிய காரியம் ஏதும் இருந்தால்தானே சித்தம் அதன் காரணத்தை விட்டு கிளம்பிப்போகும்? இப்படிப்பட்ட நிலை அடைந்த பின் செய்ய ஏதுமில்லை. யோகி புருஷனின் ஸ்வரூப மாத்திரத்தில் நிலை பெற்று முக்தனாகிறான்.

ஸமாதி பாதம் முடிந்தது.

Geetha Sambasivam

unread,
May 6, 2014, 6:04:28 AM5/6/14
to மின்தமிழ்
2. ஸாத⁴நா பாதம்
 

तीयः साधनापादः
த்³விதீய: ஸாத⁴நாபாத³:

முதல் பாதத்தில் யோகத்துக்கு வைராக்கியமும் பயிற்சியும் தேவை என வலியுறுத்தப்பட்டது. இவை இரண்டும் உண்டாக சித்த சுத்தி அவசியம். இது கர்ம அனுஷ்டானத்தால் கிடைக்கிறது.

तपःस्वाध्यायेश्वरप्रणिधानानि क्रियायोगः ।।1।।
கர்ம விபாகம்:
தப: ஸ்வாத்⁴யாயேஶ்வர ப்ரணிதா⁴நாநி க்ரியா யோக³: || 1||
தப: ஸ்வாத்⁴யாய ஈஶ்வர ப்ரணிதா⁴நாநி க்ரியா யோக³:
 
தபஸும் ஸ்வாத்யாயமும் பலனை எதிர்பாராது செய்யப்பட்ட கர்மங்களை இறைவனுக்கு அர்ப்பணிப்பதும் கர்ம யோகமாகும்.

தபஸ் என்பது சிலவற்றை கைக்கொண்டு கடைப்பிடிப்பது. அவை; ப்ரம்ஹசர்யம் என்ற இந்திரிய நிக்கிரஹம்; குரு சேவை; உண்மையே பேசுதல்; வாயால் பேசாதிருத்தல்; எந்த வகையிலுமே தொடர்பு கொள்ளாதிருத்தல் (காஷ்ட மௌனம்); (தொடர்பிலிருந்து முழுதும் விலகுவதான) ஆசார மௌனம்; ப்ரம்ஹச்சாரி, க்ருஹஸ்தன், வானப்ப்ரஸ்தன் போன்ற தனக்குரிய ஆஸ்ரம தர்மங்களை கடைப்பிடித்தல்; குளிர்-சூடு மகிழ்ச்சி-துக்கம் போன்ற இரட்டைகளை பொறுத்தல்; மிதமான ஆகாரம் ஆகியவை. இங்கே தபஸ் என்பது உடலை ஒன்றும் கொடுக்காமல் காயப்போடுவது அல்ல. அப்படி இருப்போர் யோகம் பழகுவது கடினம்.
ஸ்வாத்யாயம் என்பது சாதாரணமாக வேதத்தை கற்றலைக் குறிக்குமானாலும் இங்கே ப்ரணவம் முதலான மந்திர ஜபங்களும் மோக்ஷத்துக்கானதை குரு மூலம் கற்றலையும் குறிக்கும்.
ஈஶ்வர ப்ரணிதானம் என்பது செய்யும் அனைத்து காரியங்களையும் பகவானுக்கு அர்ப்பணித்துவிட்டு புண்ணியத்துக்கான கர்மாவைக்கூட நாடி செய்யாதிருத்தல்.


க்லேசங்கள் யாவை?
 

अविद्यास्मितारागद्वेषाभिनिवेशाः पञ्च क्लेशाः ।।3।।

அவித்³யாஸ்மிதாராக³த்³வேஷாபி⁴நிவேஶா: பஞ்ச க்லேஶா: || 3|| 

க்லேசங்கள் (மனச்சலனங்கள்) என்று சொன்னவை யாவை எனில் அவித்யை, அஸ்மிதை, ராகம், த்வேஷம், அபிநிவேஷம் ஆகிய ஐந்தாம்.

Nagarajan Vadivel

unread,
May 6, 2014, 7:17:47 AM5/6/14
to மின்தமிழ்


சவடால் வைத்தி


Geetha Sambasivam

unread,
May 10, 2014, 8:52:02 AM5/10/14
to மின்தமிழ்
க்லேசங்களின் குணம்:
 

முந்தையது சின்னதாக போனதால் இந்த பதிவு கொஞ்சம் பெரியது. :-))

अविद्या क्षेत्रमुत्तरेषां प्रसुप्ततनुविच्छिन्नोदाराणाम् ।।4।।

அவித்³யா க்ஷேத்ரமுத்தரேஷாம்° ப்ரஸுப்ததநுவிச்சி²ந்நோதா³ராணாம் || 4|| 

ப்ரஸுப்தம், தனு, விச்சின்னம், உதாரம் என ஒவ்வொன்றிலும் 4 பிரிவுகளை உடைய அவித்யைக்கு அதன் மேல் உள்ள மற்ற அஸ்மிதா, ராகம், த்வேஷம், அபிநிவேஷம் ஆகியவற்றுக்கு அவித்யை உற்பத்தி ஸ்தானம் ஆகிறது.
அவித்யை முதல் க்லேசம். இதுவே பின் வரும் க்லேசங்களுக்கு மூலமாக இருக்கிறது. இதில் 4 பரிமாணங்கள் –அவஸ்தைகள்- உண்டு.


சில விஷயங்கள் கண் காது முதலிய புலன்களுக்கு பிடிபடாது. அப்படி ஒரு உருவத்துடன் உள்ளது   ப்ரஸுப்தாவஸ்தை.
அடுத்து சிலது புலன்களுக்கு பிடிபடும். ஆனாலும் ஒரு காரியத்தை செய்ய வேண்டிய காரணம் - முகாந்திரம் ஏதும் இல்லாததால் சும்மா இருக்கும். இந்து தனு அவஸ்தை.
ஆனால் அப்படி செய்ய விடாமல் ஏதோ பலமான தடை இருக்கிறதால் செயலில் இல்லை. இப்படிப்பட்டது விச்சேத அவஸ்தை.
புலன்களுக்கு பிடிபடும்; தான் தன் காரியத்தை நடத்த மத்த எதன் உதவியும் தேவையில்லை. அது தன் காரியத்தை தடை ஏதுமின்றி நடத்தும். இது உதார அவஸ்தை.
இந்த நான்கு பரிணாமங்களும் -அவஸ்தைகளும் - அவித்தை முதலான எல்லா க்லேசங்களுக்குமே உண்டு.
அவித்தை இல்லாமல் மற்ற க்லேசங்கள் உருவாக மாட்டா. அதனால்தான் அவித்தை க்ஷேத்திரம் அல்லது பிரசவ பூமி எனப்படும்.
ப்ரஸுப்தாவஸ்தையும் தனுவும் புலன்களுக்கு பிடிபடாதாகையால் ஸூக்ஷ்மமானவை. விச்சேதாவஸ்தாவும் உதாராவஸ்தாவும் வெளிப்படையாக ஸ்தூலமாக தெரியும்.

ப்ரக்ருதி லயம் அடைந்தவருக்கு எல்லா க்லேசங்களுமே ப்ரஸூப்தங்களாவே இருக்கும். அதாவது மறைந்து இருக்கும்; வெளிப்படாது.
யோகம் பயில்வோருக்கு க்லேசங்களை விரோதமாக பாவிப்பதால் இவை தனுவாக இருக்கும். அதாவது வெளிப்பட காரணம் வாய்பு இல்லாமல் சும்மாயிருக்கும்.
சாதாரணமாக க்லேசங்கள் விருத்தியாகி வலுப்பட்டு ப்ரஸுப்தா தனுவாகி, அது விச்சின்னமாகி பின் உதாரமும் ஆகும். அதாவது முழுமையாக வெளிப்படும். ஸ்தூலமாகி விட்ட அவஸ்தையை சுத்த சத்வகுணத்தில் பகவானின் த்யானத்தால் போக்கிக்கொள்ளலாம். வளர்ந்துவிட்ட இவற்றை சித்த நிரோதத்தால் போக்க முடியாது. ஸூக்ஷ்மமான அவஸ்தைகளை சித்த நிரோதத்தால் போக்கலாம். 
உதாரணமாக ராகத்தையும் (ஆசையையும்) அதன் விளைவான க்ரோதத்தையும் செயலுக்கு வந்த பின் பகவானை வேண்டியே போக்கிக்கொள்ள வேண்டும். இவை ஸூக்ஷ்மமாக இருந்து முளை விடும் காலத்துக்கு முன்பே சித்தத்தை கட்டுப்படுத்தி பயிற்சியால் போக்கடிக்கலாம்.

க்ரியா யோகத்தின் பலன்: 


समाधिभावनार्थः क्लेशतनूकरणार्थश्च ।।2।।

ஸமாதி⁴ பா⁴வநார்த²: க்லேஶ தநூகரணார்த²ஶ்ச || 2||

கர்ம யோகமானது அவித்தை முதலான கிலேசங்களின் குறைத்தலை பலனாக உடையது. இது ஸமாதியின் உற்பத்தியையும் பலனாக கொண்டது.
கர்மம் செய்ய செய்ய க்லேசங்கள் (மனச்சலனங்கள்) குறையும். ஸமாதியில் ஈடுபட ஒரு ஈர்ப்பு உண்டாகிறது.

--

Geetha Sambasivam

unread,
May 12, 2014, 9:27:34 AM5/12/14
to மின்தமிழ்
அவித்யா
 

अनित्याशुचिदुःखानात्मसु नित्यशुचिसुखात्मख्यातिरविद्या ।।5।।

அநித்யாஶுசி து³​:கா²நாத்மஸு நித்ய ஶுசி ஸுகா²த்மக்²யாதிரவித்³யா || 5||

அநித்தியமாகவும் அசுத்தமாகவும் துக்கமாகவும் அனாத்மாவாகவும் உள்ளவற்றில் நித்தியம், சுத்தம், சுகம், ஆத்மா ஆகியவற்றை காண்பதே அவித்யா.

இந்த உலகம் அநித்தியம். என்றோ ஒரு நாள் அழியும். தேவர்களாயினும் ஒரு நாள் புண்யங்களை அனுபவித்து தீர்த்தபின் மீண்டும் மனித ஜன்மம் எடுக்க வேண்டும். இப்படி எண்ணாமல் உலகம் என்றும் இருக்கும், நித்தியம் என்றும்; அல்லது யாகங்கள் செய்து தேவனானால் நித்தியமாக சுகமாக இருக்கலாம் என்று எண்ணியும் வருவது அவித்தை. நம் உடம்பையும் புலன்களையும்தான் ஆத்மா என்று எண்ணுகிறோம். இதுவும் அவித்தை காரணமாகவே.


அவித்தையின் சொரூபம்:
 


अनित्याशुचिदुःखानात्मसु नित्यशुचिसुखात्मख्यातिरविद्या ।।5।।

அநித்யாஶுசி து³:கா²நாத்மஸு நித்ய ஶுசி ஸுகா²த்மக்²யாதிரவித்³யா || 5|| 

அநித்தியமாகவும் அசுத்தமாகவும் துக்கமாகவும் அனாத்மாவாகவும் உள்ளவற்றில் நித்தியம், சுத்தம், சுகம், ஆத்மா ஆகியவற்றை காண்பதே அவித்யா.

இந்த உலகம் அநித்தியம். என்றோ ஒரு நாள் அழியும். தேவர்களாயினும் ஒரு நாள் புண்யங்களை அனுபவித்து தீர்த்தபின் மீண்டும் மனித ஜன்மம் எடுக்க வேண்டும். இப்படி எண்ணாமல் உலகம் என்றும் இருக்கும், நித்தியம் என்றும்; அல்லது யாகங்கள் செய்து தேவனானால் நித்தியமாக சுகமாக இருக்கலாம் என்று எண்ணியும் வருவது அவித்தை. நம் உடம்பையும் புலன்களையும்தான் ஆத்மா என்று எண்ணுகிறோம். இதுவும் அவித்தை காரணமாகவே.
இதே போல யாருக்கோ ஏற்படும் சுக துக்கங்களை நமதாக எண்னுகிறோம். கிரிக்கெட் மாட்ச் பார்க்கும்போது ஒரு அணி ஜெயித்தால் சந்தோஷப்படுகிறோம். வேறு அணி ஜெயித்தால் துக்கப்படுகிறோம். சினிமாவில் கதாநாயகி படும் கஷ்டங்களை நமதாக நினைத்து அழுகிறோம். வில்லனைப்பார்த்து கோபப்படுகிறோம். ஏன் வாழ்க்கையிலேயே நம் குடும்பத்தினர் சுக துக்கங்களை நமதாக எண்ணுகிறோம். இதுவும் அவித்தையே.

Suba.T.

unread,
May 12, 2014, 1:21:41 PM5/12/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-05-12 15:27 GMT+02:00 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
​..
அவித்தையின் சொரூபம்:
 


अनित्याशुचिदुःखानात्मसु नित्यशुचिसुखात्मख्यातिरविद्या ।।5।।

அநித்யாஶுசி து³:கா²நாத்மஸு நித்ய ஶுசி ஸுகா²த்மக்²யாதிரவித்³யா || 5|| 

அநித்தியமாகவும் அசுத்தமாகவும் துக்கமாகவும் அனாத்மாவாகவும் உள்ளவற்றில் நித்தியம், சுத்தம், சுகம், ஆத்மா ஆகியவற்றை காண்பதே அவித்யா.

இந்த உலகம் அநித்தியம். என்றோ ஒரு நாள் அழியும். தேவர்களாயினும் ஒரு நாள் புண்யங்களை அனுபவித்து தீர்த்தபின் மீண்டும் மனித ஜன்மம் எடுக்க வேண்டும். இப்படி எண்ணாமல் உலகம் என்றும் இருக்கும், நித்தியம் என்றும்; அல்லது யாகங்கள் செய்து தேவனானால் நித்தியமாக சுகமாக இருக்கலாம் என்று எண்ணியும் வருவது அவித்தை. நம் உடம்பையும் புலன்களையும்தான் ஆத்மா என்று எண்ணுகிறோம். இதுவும் அவித்தை காரணமாகவே.
இதே போல யாருக்கோ ஏற்படும் சுக துக்கங்களை நமதாக எண்னுகிறோம். கிரிக்கெட் மாட்ச் பார்க்கும்போது ஒரு அணி ஜெயித்தால் சந்தோஷப்படுகிறோம். வேறு அணி ஜெயித்தால் துக்கப்படுகிறோம். சினிமாவில் கதாநாயகி படும் கஷ்டங்களை நமதாக நினைத்து அழுகிறோம். வில்லனைப்பார்த்து கோபப்படுகிறோம். ஏன் வாழ்க்கையிலேயே நம் குடும்பத்தினர் சுக துக்கங்களை நமதாக எண்ணுகிறோம். இதுவும் அவித்தையே.

​உணமைதான்.​
​எளிய விளக்கம். 
அருமை.

சுபா


யோக மார்க்கம் --பதஞ்சலி யோகம் -- பகுதி ஒன்று

எழுதியது திருமூர்த்தி வாசுதேவன்

  

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Geetha Sambasivam

unread,
May 19, 2014, 8:07:09 AM5/19/14
to மின்தமிழ்
அஸ்மிதா:


दृग्दर्शनशक्त्योरेकात्मतेवास्मिता ।।6।।

த்³ரு«க்³ த³ர்ஶந ஶக்த்யோரேகாத்மதேவாஸ்மிதா || 6|| 
த்³ரு«க்³ த³ர்ஶந ஶக்த்யோ: ஏகாத்மதேவ அஸ்மிதா 
பொருட்களை பார்க்கின்ற புருஷன், அதற்கு உதவுகின்ற தர்சன சக்தியான ஸத்வ குண மயமான புத்தி இவை ஒன்றான உருவமுள்ள தன்மையானதாக தோன்றுவது அஸ்மிதை என்ற க்லேசமாகும்.
ஆத்மாவின் சாயல் சுத்த சத்வ புத்தியில் பிரதிபலிக்கும், இந்த பிம்பமே பார்க்கிறவர். பார்க்கப்படுவன ப்ரக்ருதியில் இருந்து உண்டானவை. இவை அனாத்மா. புருஷனையும் பார்க்கும் சத்வ புத்தியில் உள்ள பிம்பத்தையும் ஒன்றாக நினைப்பது அஸ்மிதையாகும்.
இவை இரண்டும் வேறுபட்டவை என்ற ஞானமே விவேக க்யாதி.

ராகம்:
 
सुखानुशयी रागः ।।7।।

ஸுகா²நுஶயீ ராக³: || 7|| 

சுகத்தையும் அதை அடையும் சாதனத்தையும் அனுசரித்து உண்டாகிற சித்த விருத்தி ராகம் ஆகும். இது நல்லதாக- உதாரணமாக மோக்ஷத்தை அடைய வேண்டும் - என்றும் இருக்கலாம். அல்லது மலினமான விஷயங்களிலும் இருக்கலாம். ஒரு முறையோ சில முறையோ பல முறையோ அனுபவித்த சுகத்தின் நினவு வந்து, அது போன்ற சுகமும், அது ஏற்படும் சாதனமும் மீண்டும் வேண்டும் என தோன்றும். இது ஒருவனை அடிமை ஆக்கிவிடுகிறது. பின் இதை அடைய மனிதன் என்ன வேண்டுமானாலும் செய்ய தூண்டப்படுவான்.
பிறர்க்கு ஏற்படும் சுகத்தை தன் சுகமாக யார் கருதுகிறானோ அவனுக்கு ராகம் ஏற்படுவதில்லை; ஒழிந்துவிடுகிறது. இது விலகினால் சித்தமும் மழை பெய்து நின்றதும் தெளியும் நீர் போல தெளிவாகிவிடும்.

Geetha Sambasivam

unread,
May 20, 2014, 4:31:06 AM5/20/14
to மின்தமிழ்
துவேஷம்:


दुःखानुशयी द्वेषः ।।8।।

து³:கா²நுஶயீ த்³வேஷ: || 8|| 

மோஹத்தின் காரணமாக அனுபவிக்கப்படும் துக்கம் அல்லது அதன் சாதனம் – இவற்றால் உண்டாகும் சித்த விருத்தியானது த்வேஷமாகும்.

ஒரு பொருளுக்கு ஆசைப்படுகிறோம். அது கிடைக்காமல் போகிறது. இன்னொருவருக்கு கிடைத்து விடுகிறது. அதனால் தடையாக இருந்ததின் மீதும் அதை அடைந்த மற்றவர் மீதும் த்வேஷம் உண்டாகலாம். ராகமே த்வேஷதிற்கு வித்து.
அனுபவித்த துக்கத்தின் நினைவும் தோன்றலாம்; துக்க சாதனம் பார்க்கக்கூடியதாக இருக்கலாம், அல்லது அத்ருஷ்டமாகவும் இருக்கலாம். நம்மை ஹிம்சித்தது மிருகமோ, விரோதியோ, நோயோ, விபத்தோ, மற்ற வேதனைகளோ இருக்கலாம். இந்த நினைவுகளே நம்மை மீண்டும் அவற்றை அனுபவிக்க வைக்கின்றன. த்வேஷத்தை உருவாக்குகின்றன.
இப்படி உண்டாகும் த்வேஷத்தை விலக்குவது எப்படி? தன்னைப்போல மற்ற மனிதர்களையும் பிராணிகளையும் துக்கப்பட விடக்கூடாது என்ற கருணையே த்வேஷத்தை நீக்கி சித்தத்தை தெளிய வைக்கும்


அபிநிவேசம்:
 

स्वरसवाही विदुषोऽपि तथारूढ़ोऽभिनिवेशः ।।9।।

ஸ்வரஸவாஹீ விது³ஷோ'பி ததா²ரூஃ‌டோ⁴'பி⁴நிவேஶ: || 9|| 

{பகுத்தறிவு இல்லாத ப்ராணிகளுக்கு எப்படியோ} அப்படியே சாஸ்திரங்களின் அனுமானங்கள் மூலம் பின்னால் வரும் முக்தியையும் முன்னால் உள்ள பந்தத்தையும் நன்கு அறிந்தவர்களுக்கும் கூட முந்தைய ஜன்மத்தின் அனுபவத்திலிருந்து உண்டாகும் வாசனையை ஒட்டி ஏற்படுவது அபிநிவேசம் ஆகும்.
முந்தின ஜன்மங்களில் ஏற்பட்ட மரண துக்கத்தை அனுபவித்ததில் ஏற்பட்ட வாசனையின் கூட்டம் ஸ்வரஸம் எனப்படும். இதுவே பண்டிதர் முதல் பாமரன் வரை எல்லாஒரையும் இனி எனக்கு மரணம் வேண்டாம் என நினைக்க வைக்கிறது. இந்த ஸ்வரஸத்தை ஒட்டி உண்டாவதே அபிநிவேசம்.
க்லேசங்களையும் அவற்றை நீக்கும் உபாயங்களை உபதேசித்தார். இவற்றை தேய்க்க கிரியா யோகங்களும் மைத்ரீ முதலிய சித்த பரிகர்மங்களுமே.

Geetha Sambasivam

unread,
May 21, 2014, 8:53:37 AM5/21/14
to மின்தமிழ்
க்லேசத்தை போக்க:
 

ते प्रतिप्रसवहेयाः सूक्ष्माः ।।10।।

க்லேசத்தை போக்க:
தே ப்ரதி ப்ரஸவஹேயா​: ஸூக்ஷ்மா​: || 10||

அந்த ஸூக்ஷ்மமான க்லேசங்கள் தனது காரணத்தில் லயம் செய்வித்தால் போக்கத்தக்கவை.

சித்தத்தை அஸ்மிதையில் லயம் செய்ய ஸூக்ஷ்ம நிலையிலுள்ள க்லேசங்கள் விலகிவிடும். பலனைத் தரக்கூடிய க்லேசங்கள் கிரியாயோக அனுஷ்டானத்தாலும் மைத்ரீ போன்ற சித்த பரிகர்மத்தாலும் விலகும் என்று முன்னமேயே சொல்லிவிட்டார்.

இப்போது மீண்டும் ஏன் இந்த பேச்சு வந்தது?

மண்ணெண்னையை ஊற்றி வைத்த பாத்திரத்தில் அதை உடனே காலி செய்தாலும் அதன் வாசனை விடாது. அதை நெருப்பில் இட்டால்தான் வாசனையும் போகும். அது போல க்லேசங்கள் ஸ்தூலமாக இருந்து அவற்றை நீக்கிக்கொண்டாலும் அவை இன்னும் ஸூக்ஷ்மமாக இருக்கும். அவையும் விலக சித்தத்தை அதன் காரணமான அஸ்மிதையில் லயப்படுத்த வேண்டும்.
அஸ்மிதை அவித்தைதான். ஆனாலும் அதில் ஒரே அவித்தை புருஷனுக்கும் புருஷ நிழலுக்கும் உள்ள வேற்றுமையை அறியாமையே. இந்த நிலையில் இந்திரியங்கள் முதலானவை கட்டுப்பட்டாகிவிட்டது. ஆகவே சித்தம் இந்த நிலைக்கு செல்ல சூக்ஷ்ம க்லேசங்கள் விலகிவிடும்.


க்லேசத்தை முற்றிலும் போக்க:

  ध्यानहेयास्तद्वृत्तयः ।।11।।
க்லேசத்தை முற்றிலும் போக்க:
த்⁴யாநஹேயாஸ்தத்³வ்ரு«த்தய​: || 11||

த்⁴யாந ஹேயாஸ் = (புருஷனின்) த்யானத்தினால் முற்றிலும் விலக்கத்தக்கவை (ஆகின்றன); தத்³வ்ரு«த்தய​: =(க்ரியா யோகத்தால் தேயும்படி செய்யப்பட்ட க்லேசங்களின் ஸ்தூல) வ்ருத்திகள்.
துணியில் அழுக்கு படிந்தால் அதை உதறி அலசுகிறோம். நிறைய அழுக்கு இதில் போய்விடும். அப்போதும் போகாத அழுக்கை நீக்க சோப்பு தூள் போட்டு துவைக்கிறோம். ஆனாலும் அழுக்கு முழுவதும் போவதில்லை. மீதம் உள்ள அழுக்கு அந்த துணி நாசமாகும் போதுதான் போகும்.
அது போல க்லேசத்தை நீக்க மைத்ரீ போன்ற சித்த பரிகர்மங்களாலும், மிகும் ஸ்தூல க்லேசங்கள் கிரியா யோகத்தாலும் போனாலும், மிச்சம் உள்ள ஸூக்ஷ்ம க்லேசங்கள் புருஷ த்யானத்தால் அஸ்மிதையில் லயப்படுத்துவதால் மட்டுமே போக்க முடியும்.

Geetha Sambasivam

unread,
May 22, 2014, 3:37:52 AM5/22/14
to மின்தமிழ்
கர்மாசயம்:
 
क्लेशमूलः कर्माशयो दृष्टादृष्टजन्मवेदनीयः ।।12।।
கர்மாசயம்:
க்லேஶமூல​: கர்மாஶயோ த்³ரு«ஷ்டாத்³ரு«ஷ்டஜந்மவேத³நீய​: || 12||

க்லேஶ மூல​: கர்மாஶயோ த்³ரு«ஷ்ட அத்³ரு«ஷ்ட ஜந்ம வேத³நீய​:
(அவித்யையை) க்லேசங்களை காரணமாக உடைய (சித்தத்தில் உள்ள) கர்ம வாசனைகள் பார்க்கக்கூடிய இந்த ஜன்மத்திலும், பார்க்க முடியாத அடுத்த ஜன்மங்களிலும் அனுபவிக்கத்தக்கவை ஆகின்றன.
அவித்தை, அஸ்மிதை, ராகம், த்வேஷம், அபிநிவேஷம் ஆகியவற்றிலிருந்து கர்ம வாசனைகள் உண்டாகின்றன. இந்த வாசனைகள் அடுத்த பிறப்பை உறுதி செய்கின்றன. ஆயுள், போகம், இவற்றையும் தருகின்றன. அவித்தை, அஸ்மிதை ஆகிய க்லேசங்களையும் தருகின்றன.
இவற்றை விலக்குவது எப்படி?
தீவிரமாக செய்யப்பட்ட மந்திர ஜபம், தபஸ், ஸமாதி இவற்றாலோ; ஈஶ்வரன், தேவதை, மகரிஷி, மற்ற மகான்கள் இவர்களின் ஆராதனத்தாலோ புண்ய கர்ம வாசனை உண்டாகின்றது. இது அதே ஜன்மத்தில் பலன் தர ஆரம்பிக்கும். இதே போல் தீவிர வேகத்தில் பயந்தவன், வியாதியஸ்தன், ஏழை, நம்பியிருப்பவன், மஹான்கள், தபஸ்விகள் ஆகியோருக்கு செய்யப்படும் அபசாரத்தால் உண்டாகும் பாப கர்ம வாசனைகளும் அதே ஜன்மத்தில் பலனை தரும். இது போலத்தான் நந்திகேஸ்வரர் செய்த புண்ணியத்தால் மனித சரீரம் விடுத்து தேவ சரீரம் அதே ஜன்மத்தில் பெற்றார். நகுஷன் அத்ரி மகரிஷிக்கு செய்த அபசாரத்தால் அதே ஜன்மத்தில் மலைப்பாம்பானான்.
க்லேசமற்ற யோகிக்கு அடுத்த ஜன்மத்தில் பலன் தர கர்ம வாசனை இராது. அதே போல் நரகத்தின் வேதனையை அனுபவிக்கும் பிராணிக்கு புண்யம் பாபம் தரும் கர்ம வாசனை இராது.


க்லேசங்கள் செய்யக்கூடியது:
 
सति मूले तद्विपाको जात्यायुर्भोगाः ।।13।।
க்லேசங்கள் செய்யக்கூடியது:
ஸதி மூலே தத்³விபாகோ ஜாத்யாயுர்போ⁴கா³​: || 13||

ஸதி மூலே தத்³விபாகோ ஜாத்யாயுர்போ⁴கா³​:
க்லேச ரூபத்தில் உள்ள காரணமானது உள்ளபோது அவற்றின் பலன் உண்டாகிறது. அவை பிறப்பு, ஆயுள், போகம் ஆகியனவாகும்.
க்லேசங்கள் நீங்கி விட்டவனுக்கு கர்ம வாசனையும் அதன் பலன்களும் ஏற்படுவதில்லை. ஆசை இல்லாதவன் கர்ம பலனை அனுபவிக்கவும் இச்சை இல்லாதவனாகிறான். பயமில்லாததால் சோகமும் இராது. விவேக க்யாதி என்ற அக்னி இருப்பின் அது க்லேசங்கள் என்ற விதைகளை வறுத்துவிடும். வறுத்த நெல் முளைக்காதது போல க்லேசங்கள் இல்லாவிடில் கர்மவாசனை பலன் தராது.
கர்ம வாசனையால் ஏற்படுவது:
1.பிறப்பு: தேவ ஜென்மமா, மனுஷ்ய ஜென்மமா, விலங்கா தாவரமா என்பன. 2. ஆயுள்: எவ்வளவு காலம் தேகம் - இந்திரியங்களின் சேர்க்கை நீடிக்கும் என்பது. 3.போகம் என்பது இந்திரியங்களால் கிடைக்கும் சுக அனுபவங்கள்.
மரணம் ஏற்படும்போது வளர்ச்சியை அடைந்த அநேக கர்மங்கள் சேர்ந்தே பிறப்பை கொடுக்கின்றன. அந்த ஒரே உடலால் விசித்திரமான போகம் ஏற்படும். மேலும் கர்மங்கள் தனித்தனியாக பிறப்பு, ஆயுள், போகம் இவற்றை தனித்தனியாகவோ, சேர்ந்தோ கொடுக்கவும் கூடும்.
கர்மா மூலம் உண்டாகும் ஜென்மங்கள் பற்றி சில கேள்விகள் உள்ளன.
ஒரு கர்மம் ஒரு ஜென்மத்தை மட்டும் உண்டுபண்ணுமா அல்லது பல ஜென்மங்களை உண்டு பண்ணுமா?
இல்லை அநேக கர்மங்கள் சேர்ந்து ஒரு ஜென்மத்தை உண்டாக்குமா?
அல்லது அவை அநேக ஜென்மங்களுக்கு வழி செய்கின்றனவா?
ஒரு கர்மம் ஒரு பிறப்பை மட்டுமோ அல்லது அநேக பிறப்புக்களையோ தராது. நம் கர்மாக்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் ஒவ்வொன்றும் ஒரு ஜன்மம் அல்லது பல ஜென்மங்களை தருமானால் பெரிய காத்திருப்பு பட்டியல்தான் தேவை. ஆகவே அநேக கர்மாக்கள் சேர்ந்து ஒன்றோ பலவோ ஜென்மங்களை தருகின்றன. ஒரு ஜன்மத்தில் பலன் தரும் கர்மாக்களில் பிரதானமாக ஒன்று இருக்கும். அது அப்போதே பலன் தருவது, மற்றவை இதனுள் அடங்கும். இந்த கர்மாக்களே ஆயுளையும் நிர்ணயிப்பதாக கண்டோம் அல்லவா? மரண காலத்தில் கர்மாக்கள் நேரத்தை நிர்ணயித்ததுடன் பலனை கொடுத்து தீராததால் அடுத்த ஜன்மாவையும் தருகின்றன. இதே கர்மாக்களால் அவன் அடுத்த ஜென்மத்தின் போகங்களையும் அனுபவிக்கிறான்.
பிரதான கர்மா பலமாக இருக்க மற்றவை அதற்கு எதிராக பலன் தர வேண்டியிருப்பின் தடை உண்டாகி வெகு காலம் காத்திருக்க வேண்டியிருக்கலாம். கர்மா சரியாக உருவாகாமல் நாசம் ஆகவும் செய்யலாம். பிரதான கர்மாவுக்கு விரோதமாக இல்லாமல் இருப்பின் நடு நடுவே தன் பலனை கொடுத்து விடலாம். அதற்கு ஒத்துப்போனால் சேர்ந்தேவும் கொடுத்துவிடலாம்.
"புண்யே பாபம் அபநுததி" என்ற படி புண்ணியத்தால் பாபத்தின் விளைவை தடுத்துக்கொள்ளலாம்.
சில கர்மாக்கள் -ஜ்யோதிஷ்டோமம் போன்ற யாகங்களில் புண்ணியமும் பாபமும் கலந்தே வருகின்றன. யாகங்களால் சுவர்க்க வாசம் கிட்டினாலும் தேவர்களாலும் கஷ்டம் அனுபவிக்க நேருகிறது.
வரும் ஜன்மத்தில் நிச்சயமாக பலன் தரும் கர்மங்கள் மரணப்பிரகாசகம் எனப்படும். இவை இப்போது பலன் தரத்தொடங்கிவிட்ட கர்மாக்கள். மரணத்தை தருவதுடன் அடுத்து அனுபவிக்க வேண்டியவைகளுக்கு தகுந்த சூழ்நிலையையும் இவை உண்டு பண்ணிக்கொள்ளும்.
இதனாலேயே கர்மாவானது இன்ன பலன் இப்போது தரும் என்று நிச்சயித்து சொல்ல முடியாமல் இருக்கிறது.

Geetha Sambasivam

unread,
May 25, 2014, 8:50:14 AM5/25/14
to மின்தமிழ்
விபாகம்:
 

ते ह्लादपरितापफलाः पुण्यापुण्यहेतुत्वात् ।।14।।
விபாகம்:
தே ஹ்லாத³பரிதாபப²லா​: புண்யாபுண்யஹேதுத்வாத் || 14||

தே =அவை; ஹ்லாத³=சுகம்; பரிதாப =துக்கம்; ப²லா​: = பலன்கள்; புண்ய அபுண்ய ஹேதுத்வாத் = புண்ணியங்கள் புண்ணியங்கள் அல்லாதன இவற்றை காரணமாக உடையதால்.
அந்த ஜாதி ஆயுள் போகம் ஆகியன புண்ணியம் பாபம் இவற்றை ஹேதுவாக உடையதால் சுக துக்கங்களை தருகின்றன. புண்யம் ஆனாலும் பாபமானாலும் அவை அவற்றுக்கு தகுந்த ஜாதி ஆயுள் போகம் ஆகியவற்றை உண்டாக்க முயற்சி செய்கின்றன. இரண்டையுமே விலக்க முயற்சி செய்ய வேண்டும்.


விவேகிக்கு துக்கம்!
 

परिणामतापसंस्कारदुःखैर्गुणवृत्तिविरोधाच्च दुःखमेव सर्वं विवेकिनः ।।15।।
பரிணாம தாப ஸம்°ஸ்கார து³​:கை²ர் கு³ண வ்ரு«த்தி விரோதா⁴ச்ச து³​:க²மேவ ஸர்வம்° விவேகிந​: || 15||

{गुणवृत्ति =गुणवृत्य கு³ண வ்ரு«த்தி -கு³ண வ்ரு«த்தய - பாட பேதம்.}

(பரிணாமம்) துக்க வடிவான ராகத்தின் மாறுதல் ரூபமாகவும்; (தாபம்) துக்கத்தையோ துக்க சாதனத்தையோ எண்ணும்போது த்வேஷ ரூபமாகவும்; (ஸம்ஸ்காரம்) சுகானுபவத்திலிருந்து சித்தத்தில் உண்டாகும் வாசனா ரூபமாகவும், மூவகையாக உள்ள துக்கங்களுடன் சேர்ந்திருப்பதால், குணங்களுக்கிடையே விரோதம் ஏற்படாததால் (திருஷ்ட அத்ருஷ்டமாக உள்ள விஷய சுகங்கள் ) எல்லாமே யோகத்தில் பிரவேசம் செய்த விவேகிக்கு துக்கமாகவே ஆகிறது.
ஆசை இல்லாமல் சுகத்தை நாடுவதில்லை. ஒரு விஷயத்தில் உண்டாகுமாசையே அது கிடைத்த போது சுகமாக பரிணாமிக்கிறது - மாறுகிறது. அது கிடைக்கவில்லையானால் தாபம் உண்டாகிறது. கிடைக்காமல் செய்தவரிடம் துவேஷம் உண்டாகிறது
ஒரு போதும் இந்திரியங்களின் ஆசையை பூர்த்தி செய்ய இயலாது. அனுபவிப்பதால் இன்னும் வேண்டும் என்ற எண்ணம் உண்டாகுமே தவிர போதும் என்று தோன்றாது. அதனால் அனுபவித்து ஆசையை தீர்க்க முடியாது. அது எரிந்து கொண்டிருக்கும் பெரு நெருப்பை நெய் கொட்டி அணைப்பது போலாகும். ஒரு விஷயத்தை அனுபவித்து உண்டாகும் சுகம் மேன் மேலும் அதை விரும்பி தேட வைக்கிறது. ஆகவே விஷய சுகம் என்பது நாம் அடைந்த காரியம் ஆனாலும், அதற்கும் ஆசை என்கிற துக்க வடிவ காரணத்துக்கும் வித்தியாசம் இல்லை. 
ஆகவே உண்மையில் விஷயங்களில் இந்திரியங்கள் போகாமல் திருப்புவதே சுகம்; ஆசையை முன்னிட்டு இந்திரியங்கள் விஷயங்களில் செல்லுதலே துக்கம்.

Geetha Sambasivam

unread,
May 26, 2014, 6:00:53 AM5/26/14
to மின்தமிழ்
ஹேயம்: 

हेयं दुःखमनागतम् ।।16।।
ஹேயம்° து³​:க²மநாக³தம் || 16||

அனாகதம் துக்கம் ஹேயம். 
வரப்போகின்ற துக்கமானது ஸம்ஸாரம் எனப்படும்.
துக்கம் எது என்று பார்த்தோம். அதை உண்டாக்குவது எது, வரப்போகிற துக்கத்துக்கு காரணம் என்ன? அதை நீக்குவது எபப்டி என்றும் பார்க்கப்போகிறோம்.
துக்கத்தில் மூன்று வகை. முன்பே பார்த்தது போல கடந்தது அதீதம். நிகழ்வது வர்த்தமானம். வரப்போகிறது அனாகதம்.
அனுபவிக்கப்பட்ட துக்கம் முடிந்து போனது; அது பிரச்சினை இல்லை. நிகழ்வது அதற்கான நீக்கும் உபாயம் அறிந்து நீக்கினால் போய்விடும்; அறிவதற்கு முன்னே கூட நடந்து முடிந்துவிடலாம். எனவே வரப்போகும் துக்கத்தை நீக்குவதைப்பற்றிதான் சாதகன் யோசிக்க வேண்டும்; அதுவே முக்கியம். வரப்போகின்ற துக்கமானது ஸம்ஸாரம் எனப்படும்.
இந்த ஸம்ஸாரத்துக்கு காரணம் என்ன?


ஸம்சாரத்தின் காரணம்: 

द्रष्टृदृश्ययोः संयोगो हेयहेतुः ।।17।।
ஸம்சாரத்தின் காரணம்:
த்³ரஷ்ட்ரு«த்³ரு«ஶ்யயோ​: ஸம்°யோகோ³ ஹேயஹேது​: || 17||

த்ரஷ்டாவுக்கும் த்ருஷ்யத்துக்கும் சேர்க்கையானது வரவுள்ள துன்பத்திற்கு (காண்பவனுக்கும் காணப்படுவதற்கும் உள்ள சேர்க்கையானது ஹேயத்துக்கு) காரணமாகிறது.

புருஷனே த்ரஷ்டா (காண்பவன்). ப்ரக்ருதி புருஷனை விட வேறானது. ப்ரக்ருதியின் வடிவம் சுகம், துக்கம், மோஹம் ஆகியவை. ப்ரக்ருதியும் அதன் எல்லா காரியங்களும் த்ருச்யம் (காணப்படுவது) ஆகும். இவை அனத்துமே புத்தி மூலமாக அறியப்படுவதால் புத்தியையே காணப்படுவது எனச்சொல்லலாம். ஆகவே புருஷனுக்கும் புத்திக்கும் ஏற்படும் சேர்க்கையே ஸம்ஸாரத்துக்கு காரணமாகும். 
புத்தி புருஷனுக்கு வெகு அருகில் இருக்கிறது. காந்தக்கல் இரும்பை இழுப்பது போல புத்தி புருஷனை இழுக்கப்பார்க்கிறது. புருஷனின் நிழல் போன்ற ஒன்றை இழுத்தும் விடுகிறது. தான் வேறு, புருஷன் வேறு அல்ல என்பதாக இது காட்டுகிறது. பிரதிபிம்பமான புருஷனுக்கு இந்த புத்தி மூலம் புலப்படும் அத்தனையும் போக விஷயங்கள் ஆகின்றன. இதனால் புத்தி பார்க்கப்பட்ட விஷயமாயிற்று. உண்மையில் எதனுடனும் சேராது இருக்கும் புருஷன் த்ரஷ்டாவாகிறான். இப்படியாக ஒரு சேர்க்கை அவித்தையால் ஏற்படுகிறது. அவித்தை அனாதி - துவக்கமில்லாதது; ஆகையால் இந்த சேர்க்கையும் அனாதியே.
பிரலய காலத்தில் கூட க்லேசங்களும் கர்மமும் வாஸனைகளும் அந்தக்கரணத்துடன் ப்ரக்ருதியில் ஒடுங்குகின்றன. கோடை காலத்தில் மண்ணோடு மண்ணாக கலந்த விதைகள் மழைக்காலத்தில் மீண்டும் முளைப்பது போல சிருஷ்டி காலத்தில் இவை மீண்டும் வெளிக்கிளம்புகின்றன. 
துக்கத்துக்கு காரணமான இந்த சேர்க்கையை யோக சாதன அனுஷ்டானத்தால் போக்க முடியும். செருப்பு மாட்டிக்கொண்டு நடப்பவன் காலில் முள் தைக்காததைப்போல சேர்க்கையான காண்பவன், காணப்படுவது, காணப்படும் செயலான சம்யோகம் ஆகிய மூன்றும் வெவ்வேறு என அறியும் யோகி இவை ஒன்று சேர்வதை தவிர்க்கும் வழிகளை கடைபிடித்து துக்கத்தை தொலைக்கிறான். மாறுதல் அடையும் சித்தமே தாபம் அடையும்; ஆன்மா தாபமடையாது. சித்தத்தில் பிரதி பலித்த ஆன்மாவின் நிழலே தாபமடைந்தது போல தோன்றுகிறது.
அடுத்து காணப்படுவதின் சொரூபத்தை பார்க்கலாம்.

Geetha Sambasivam

unread,
May 30, 2014, 2:48:13 AM5/30/14
to மின்தமிழ்
காணப்படுவதின் சொரூபம்.


  प्रकाशक्रियास्थितिशीलं भूतेन्द्रियात्मकं भोगापवर्गार्थं दृश्यम् ।।18।।
ப்ரகாஶக்ரியாஸ்தி²திஶீலம்° பூ⁴தேந்த்³ரியாத்மகம்° போ⁴கா³பவர்கா³ர்த²ம்° த்³ரு«ஶ்யம் || 18||

ப்ரகாஶ க்ரியா ஸ்தி²தி ஶீலம்° பூ⁴த இந்த்³ரிய ஆத்மகம்° போ⁴க³ அபவர்க அ³ர்த²ம்° த்³ரு«ஶ்யம் 

த்ருஷ்யம் எனப்படுவது..
புத்தியின் வளர்ச்சி (வ்ருத்தி) மூலமான பிரகாசத்தையும்; ப்ரயத்னம் (முயற்சி), சேஷ்டை ஆகிய செயல்கள் (க்ரியா) இவற்றையும்; இவ்விரண்டையும் தடை செய்யும் விஷயத்தையும் இயல்பாக உடையது.
மேலும் ஸ்தூல பஞ்ச பூதங்கள்; ஸூக்ஷ்மமான பஞ்ச தன் மாத்திரைகள்; ஞான கர்ம இந்திரியங்கள்; ஆத்மா இவற்றின் சமூகமாகவும், விஷய சுக துக்க மோக்ஷங்களின் பலன் தருவதாகவும் ஆகிறது.
புத்தி வ்ருத்தியால் உண்டாகின்ற பிரகாசம் ஸத்வ குணத்தின் இயல்பு (தர்மம்). க்ரியா ரஜோ குணத்தின் இயல்பு. இவற்றை தடை செய்வது தமோ குணத்தின் இயல்பு - தர்மம். போகமும் மோக்ஷமும் புத்தியால் அறியப்படுவன. ஆகவே அதையே சார்ந்தவை. ஒரு அரசனின் படை பெறும் வெற்றி தோல்வி அரசனையே சார்வது போல புத்தி அறிகிற விஷயங்கள் அதன் எஜமானனான புருஷனை சார்கிறது. உண்மையில் புருஷன் அசங்கன்; போக மோக்ஷத்துக்கு சம்பந்தம் இல்லாதவன்.
முக்குணங்கள் சேர்ந்து சரீரத்தை உண்டாக்கும் போது சத்வ குணம் மிகுந்தால் அது தேவ சரீரமாகும். தமோ குணம் மிகுந்தால் தாவர மிருக சரீரமாகும். இந்த மூன்று குணங்கள் இல்லாத ஜீவன் ஏதும் ப்ரக்ருதியில் இருந்து உண்டான லோகம் எதிலும் இல்லை.


உத்பத்தி... 


  विशेषाविशेषलिङ्गमात्रालिङ्गानि गुणपर्वणि ।।19।।
விஶேஷாவிஶேஷ லிங்க³மாத்ராலிங்கா³நி கு³ணபர்வணி || 19||

விஶேஷ = ஐந்து மஹா பூதங்கள், பத்து இந்திரியங்கள், மனது ஆகிய 16 விகாரங்கள் 
அவிஶேஷ = பஞ்ச தன் மாத்திரைகள் + அஸ்மிதை 
லிங்க³மாத்ர = மஹத் தத்துவம்
அலிங்கா³நி = பிரதானம் என்கிற ப்ரக்ருதி 
கு³ணபர்வணி = ஸத்வம் முதலான குணங்களின் வேறு உருவங்களாக ஆகின்றன.
லிங்கம் என்பது குறி. குறிப்பில்லாமல் ப்ரக்ருதி இருக்கிறது. இதில் முக்குணங்களும் சமமாக இருக்கும். அதை இன்னது என்று குறித்து காட்ட முடியாதில்லையா? அதனால் அது அலிங்கம். 
இந்த ப்ரக்ருதியில் இருந்து உண்டாகிறது மஹத் தத்வம். மஹத் தத்துவத்துக்கு கொஞ்சமாவது அடையாளம் காட்டலாம். சத்வ குணம் மேலோங்கி மற்றவை அதற்குள் அடங்கி இருக்கும். அதற்கு மேல் அதை விளக்க முடியாது. ஆகவே அது லிங்க மாத்ரம்.
மஹத்தத்வத்திலிருந்து அஹம் தத்வம் உற்பத்தி ஆகும். அதில் இருந்து பஞ்ச தன்மாத்திரைகளும் அஸ்மிதையும். இவை அதிகம் விசேஷமாக பாகு படாதவை. ஆகவே அவிசேஷம். இவற்றில் இருந்து என்னென்ன உற்பத்தி ஆகும்? ஐந்து மஹா பூதங்கள், பத்து இந்திரியங்கள், மனது ஆகிய இவை நன்கு பாகுபட்டவை. ஆகவே விசேஷம்.

உத்பத்தி கிரமம்: உயர்வு தாழ்வில்லாத குணங்கள் உள்ள ப்ரக்ருதி.
அதிலிருந்து மஹத் தத்துவம். அதிலிருந்து அஹம் தத்துவம். இதில் எந்த குணமும் மற்றவற்றில் அடங்கி இருக்கலாம். 
இந்த அஹம் தத்துவத்தில் இருந்து தமோ குணம் பிரதானமான (முக்கியமான) போது சப்த தன் மாத்திரை உண்டாகும்.(முதல் பாதம் 45 வது சூத்திரத்திலே கொஞ்சம் பார்த்தோம் இல்லையா? ஸூக்ஷ்மமானவை எவைன்னு பார்க்கும் போது) இந்த சப்த தன்மாத்திரைக்கு அசாதாரணமான லக்ஷணம் சப்தம். (இதே போல பெயரை ஒட்டி அதன் அதன் அசாதாரணமான லக்ஷணத்தை அறியலாம்.) ஒவ்வொன்றிலிருந்து எது வருகிறது எனப்பார்க்கலாம். சப்த தன்மாத்திரை> ஸ்பர்சம் > ரூபம் > ரஸம் >கந்தம். தமிழில் சொல்ல ஒலி>தொடுதல்> வடிவம்>சுவை>மணம்.
இந்த வரிசையில் பின்னோக்கிப் பார்க்க ஒன்றில் மற்றவற்றின் குணங்கள் இருக்கும். அதாவது மணத்தில் சுவை, வடிவம், தொடுதல், ஒலி ஆகிய குணங்கள் இருக்கும். சுவையில் மணம் நீங்கலாக வடிவம், தொடுதல், ஒலி ஆகிய குணங்கள் இருக்கும். வடிவத்தில் மணம், சுவை நீங்கலாக தொடுதல், ஒலி ஆகிய குணங்கள் இருக்கும். தொடுதலில் மணம், சுவை,வடிவம் நீங்கலாக ஒலி மட்டும் இருக்கும். ஒலியில் மற்ற குணங்கள் இருக்காது.
இவை அவிசேஷங்கள். ஸூக்ஷ்மமானவை.
இவற்றிலிருந்து பருப்பொருளான (ஸ்தூலமான) ஆகாசம்; அதிலிருந்து வாயு; அதிலிருந்து அக்னி: அதிலிருந்து நீர்; அதிலிருந்து நிலம் ஆகியன உண்டாகும்.
சத்வ குண பிரதானமான அஹம் தத்துவத்திலிருந்து மனசு உண்டாகிறது.
ரஜோ குண பிரதானமான அஹம் தத்துவத்திலிருந்து இந்திரியங்கள் (கர்ம, ஞான) உண்டாகின்றன.
அடுத்து லயக்கிரமம்.

Geetha Sambasivam

unread,
Jun 12, 2014, 5:42:10 AM6/12/14
to மின்தமிழ்
லயக்கிரமம்
 

லயக்கிரமம்: உத்பத்தி ஆன அதே கிரமத்தின் நேர்மாறான கிரமத்தில் லயம் உண்டாகும். அதாவது எது எங்கிருந்து வந்ததோ அதிலேயே லயமாகிவிடும். அதாவது நிலம் நீரிலும்; நீர் அக்னியிலும்; அக்னி வாயுவிலும்; வாயு ஆகாசத்திலும் லயமாகும். ஆகாயம் அது வந்த தமோ குண பிரதானமான அஹம் தத்துவத்தில் லயமாகும்.
இதே போல இந்திரியங்கள் ஒன்றில் ஒன்று லயமாகி அவை வந்த ரஜோ குண பிரதானமான அஹம் தத்துவத்தில் லயமாகும்.
மனசு அது வந்த சத்வ குண பிரதானமான அஹம் தத்துவத்தில் லயமாகும். இந்திரியங்கள் மனதில் லயமாகி அது அஹம் தத்துவத்தில் லயமாகும் என்றும் சிலர் அபிப்பிராயப் படுகிறார்கள்.
அஹம் தத்துவம் மஹத் இலும், அது ப்ரக்ருதியிலும் லயமாகும். இந்த ப்ரக்ருதி நிலையே இயற்கையானதால் இதுவே நித்யம். அதிலிருந்து வருபவை அவற்றின் வேலை முடிந்தபின் லயமாகி விடும் என்பதால் அவை அநித்தியம்.
எந்த நிலையானாலும் முக்குணங்களும் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கின்றன. ஆகவே இவற்றுக்கு உத்பத்தியும் இல்லை நாசமும் இல்லை.
ஒருவர் பல பசு மாடுகளை வைத்து இருக்கிறார். சௌகரியமாக இருக்கிறார். இப்போது இவருக்கு ஏழ்மை இல்லை. பசுக்கள் எல்லாமே ஒரு வேளை நோய் தாக்கி இறந்து போனால் அவர் ஏழ்மை அடைவார். அவரை ஏழை என்பர். ஆனால் அவர் அப்படியேதானே இருக்கிறார்? ஏழ்மை என்பது பசுக்களின் இருப்பை பொறுத்ததே தவிர அவரை பொறுத்ததில்லை. இதே போல குணங்கள் உத்பத்தி ஆகவும் இல்லை: அழியவும் இல்லை. அவை வெளிப்படும்; அல்லது சூக்ஷ்மமாக இருக்கும். அதனால அதன் தற்கால பாதிப்பை பொருத்து ஒருவரது குணம் அழிந்ததாகவோ உத்பத்தி ஆனதாகவோ சொல்கிறோம்.
இப்படி கிரமமாக ஒன்றிலிருந்து ஒன்று தத்வ ரூபமாக மாறுதல்களை அடைகின்றன. கடைசியில் கிடைத்த விசேஷங்கள் 16 உம் அதற்கு மேல் தத்வ மாறுதல் அடையா. ஆனால் அவற்றின் சொரூபம் தர்மம் லக்ஷணம் அவஸ்தை என மாறுதல் அடையும்.

த்ரஷ்டா
 

द्रष्टा दृशिमात्रः शुद्धोऽपि प्रत्ययानुपश्यः ।।20।।
த்³ரஷ்டா த்³ரு«ஶிமாத்ர​: ஶுத்³தோ⁴'பி ப்ரத்யயாநுபஶ்ய​: || 20||

த்³ரஷ்டா = காண்பவன் (புருஷன்); த்³ரு«ஶி மாத்ர​: = ஞான ஸ்வரூபமாக மட்டும் (உள்ளான்); ஶுத்³தோ⁴'பி =(எந்த மாறுதலும் இல்லாமல்) சுத்தனாக உள்ளான்; ப்ரத்யய =(இருப்பினும்) புத்தியை; அநு பஶ்ய: =அனுசரித்து பார்க்கிறவன் (ஆகிறான்.)

புருஷன்தான் த்ரஷ்டா. இவன் ஞான சொரூபன்; அதாவது புருஷனின் தர்மம், ஞானம் என்று இல்லை; அவனேதான் ஞானம். இவனுக்கு மாறுதல் (பரிணாமம்) இல்லை என்றாலும் புத்திக்கு அவை உள்ளன. சப்தம் முதலான விஷயங்கள் புத்திக்கு எட்டாது போனால் நாம் அவற்றை அறியமாட்டோம். விதிவிலக்காக ஏதோ ஒரு சமயம் மட்டும் ஸம்பிரக்ஞாத ஸமாதியின் காலத்தில் உள்ள ஸூக்ஷ்ம விஷயங்களையும் ஸமாதி கலைந்து எழும் (வ்யுத்தான) காலத்தில் உள்ள ஸ்தூல விஷயங்களையும் புருஷன் அறிவான். ஆகவே புருஷன் வேறு, புத்தி வேறு. 
மேலும் புத்தி கர்மம், க்லேசம், வாசனை, இந்திரியம் ஆகியவற்றுடன் சேர்ந்துகொண்டு புருஷார்த்தத்தை உண்டு பண்ணுகிறது. ஆகவே புத்தி பிறருக்காக ஏற்பட்டது, பரார்த்தம் எனப்படும். புருஷன் வேறு யாருக்காகவும் ஏற்படவில்லை. சாந்தம், கோரம், மூடம் என புத்தி முக்குணங்களாக உள்ளது. ஆனால் இந்த புத்தியின் விருத்தியில் புருஷன் பிரதி பிம்பமாக பிரகாசப்படுத்துவானே தவிர அவன் புத்தியைப் போல விஷயத்தை ஒட்டி எந்த மாறுதலையும் அடைய மாட்டான். ஆனால் அந்த விஷய வடிவமாக இருப்பதாக தோற்றம் அளிக்கிறான். இதுதான் 1-4 இல் "வ்ருத்தி ஸாரூப்யம் இதரத்ர" எனப்பட்டது. இருந்தாலும் நடைமுறை சௌகரியத்துக்காக புருஷனை காண்பவனாக (த்ரஷ்டாவாக) பல இடங்களில் சொல்லப்படும்.

Geetha Sambasivam

unread,
Jun 13, 2014, 8:19:54 AM6/13/14
to மின்தமிழ்
த்ருஷ்யம்
 

तदर्थ एव दृश्यस्याऽऽत्मा ।।21।।
தத³ர்த² ஏவ த்³ரு«ஶ்யஸ்யா''த்மா || 21||

த்³ரு«ஶ்யஸ்ய = த்ருஶ்ய வஸ்துவினுடைய; ஆத்மா = சொரூபம்; தத்= த்ரஷ்டாவின்; அர்த² ஏவ = அபவர்க்கத்தையும் போகத்தையுமே பிரயோஜனமாக உடையது.
த்ரஷ்டாவான புருஷனுக்கு போகம், அபவர்க்கம் என்ற முக்தி ஆகியவற்றை ப்ரக்ருதி உண்டு பண்ணுகிறது. பார்க்கிறவன் இல்லாமல் பார்க்கப்படும் பொருளுக்கு பிரயோசனம் இல்லை. ஆகவே த்ரஷ்டா (பார்க்கிறவன்) இருப்பதால்தான் த்ருஷ்யம் (பார்க்கப்படும் பொருள்) இருக்கிறது. 


ஒருவன் முக்தி அடைந்துவிட்டால் ...
 

कृतार्थ प्रति नष्टमप्यनष्टं तदन्यसाधारणत्वात् ।।22।।
க்ரு«தார்த²ம் ப்ரதி நஷ்டமப்ய நஷ்டம்° தத³ந்ய ஸாதா⁴ரணத்வாத் || 22||

த்ருஷ்யமானது, க்ருதார்த்தம் =முக்தி அடைந்த ஒருவனைக்குறித்து; நஷ்டமபி = நாசமானாலும்; தத³ந்ய = அவனைவிட வேறான; ஸாதா⁴ரணத்வாத் = சாமான்யர்களுக்கு; அநஷ்டம்° = நாசமாகாமல் ஆகும்.

த்ரஷ்டா இருப்பதால்தான் த்ருஷ்யம் இருக்கிறது என்றால் ஒருவன் முக்தி அடைந்துவிட்டால் அவன் பார்த்த பொருட்கள் எல்லாம் அழிந்துவிடும் என்றில்லை. ப்ரக்ருதி ஒன்றுதான் என்றாலும் சீவர்கள் அனேகர். எவன் அனுபவிக்க வேண்டியதை எல்லாம் அனுபவித்துவிட்டானோ, எவன் முக்தியை அடைந்து விட்டானோ அவனுக்கு ப்ரக்ருதியால் ஆக வேண்டியது ஏதுமில்லை. அதனால் அவனைப்பொறுத்த வரை மட்டுமே அவை நாசமாகின்றன. மற்றவர்களுக்கு அவை இருக்கவே இருக்கும். அவர்களுக்கு ப்ரக்ருதி செய்ய வேண்டியதை செய்து கொண்டே இருக்கும். முக்தனை பொறுத்த வரை அதனால் பிரயோசனம் ஒன்றுமில்லை.


ஸம்யோகம்
 

स्वस्वामिशक्त्योः स्वरूपोपलब्धिहेतुः संयोगः ।।23।।

ஸ்வஸ்வாமி ஶக்த்யோ​: ஸ்வரூபோபலப்³தி⁴ ஹேது​: ஸம்°யோக³​: || 23||

ஸ்வ (சக்தி) = த்ருஷ்யமாக இருக்கும் தன்மை; ஸ்வாமி ஶக்த்யோ​: = த்ரஷ்டாவாக இருக்கும் தன்மை (இவற்றுக்குரிய யோக்யதை உடைய); ஸ்வரூப = பற்பல வடிவமான புத்தியின் த்ருஷ்ய சொரூபம் , ஸ்வாமியின் த்ரஷ்டா சொரூபம்; உபலப்³தி⁴ = போகம், முக்தி (அபவர்க்கம்) இரண்டின் தோற்றத்துக்கு; ஹேது​: = காரணமாக இருப்பது; ஸம்°யோக³​: = ஸம்யோகம் ஆகும்.

இதுவே பலவாறாக ஸ்வ-ஸ்வாமி பாவம், த்ருஷ்யமாயும், த்ரஷ்டாவாயும் இருத்தல்; போக்யமாயும்- போக்தாவாகவும் இருத்தல் எனப்படுகிறது.

ப்ரக்ருதிக்கோ அதனால் ஏற்பட்ட புத்திக்கோ சுயமாக யோக்யதை ஏதுமில்லை. அவை ஜடமாகும். புருஷன் தன் அருகில் உள்ள புத்தியால் காண்பிக்கப்படும் விஷயங்களை பிரகாசப்படுத்துகிறான். (வெளிச்சம் போட்டுக்காட்டுகிறான்) அதனால் அவற்றுக்கு ஒரு யோக்யதை உண்டாகிறது. அவை நுகர் பொருட்கள் (போகம்) ஆகின்றன. இவற்றால் - இந்த போகங்களால், புருஷன் நுகர்வோன் (போக்தா) ஆகிறான். எப்படி எனில் நுகர்தல் (போகம்) ஏற்பட்டதே புருஷனின் சக்தியால்தான். இப்படி பரஸ்பரம் ஒரு யோக்யதை உண்டாக்கப்படுகிறது. இப்படி எது உண்டாக்குகிறதோ, அந்த காரணமே ஸம்யோகம் ஆகும்.

Geetha Sambasivam

unread,
Jun 14, 2014, 7:53:53 AM6/14/14
to மின்தமிழ்
ஸம்யோகத்துக்கு காரணம்: 

  तस्य हेतुरविद्या ।।24।।

தஸ்ய ஹேதுரவித்³யா || 24||

தஸ்ய =அதன் (முன் சொன்ன த்ருச்ய-த்ரஷ்டா ஸம்யோகத்தின்) ஹேது = காரணம்; அவித்³யா = அஞ்ஞானம்.
அந்த காரணம் என்னவென்றால் அஞ்ஞானம். 
புருஷனுக்கும் ப்ரக்ருதிக்கும் நான் என்ற வேறுபாடு தோன்றும் போது அது பிரமை (பிரமம்)[பிரம்மம் இல்லை!] ஆகிறது. இந்த பிரமை உள்ள சித்தம் ப்ரலய காலத்தில் ப்ரக்ருதியில் ஒடுங்கும் (லயமாகும்). சிருஷ்டி காலத்தில் வெளிப்பட்டு புருஷனின் நுகர்பொருள் (போக்யம்) ஆகிறது. இப்படி ஸம்யோகம் ஆகும்போது அவிவேகிக்கு பந்தம் ஏற்படுகிறது. அவித்தை விலகி, அதனால் ஏற்பட்ட ஸம்யோகமும் விலகின விவேகிக்கு பந்தம் ஏற்பட காரணம் இல்லை. அதனால் முக்தி அடைகிறான். அவிவேகிக்கு பந்தம் உள்ளதால், அவித்யையின் வாசனை இருப்பதால் ப்ரக்ருதியில் லயமானாலும் முக்தி ஏற்படாது. விவேகக்யாதி, தர்மமேக ஸமாதி ரூபத்தை அடையும் போதுதான் சித்தம் வறுபட்ட விதை மீண்டும் முளைக்காதது போல வாசனைகள் நீங்கி வளர்ச்சி அடைதலை நீங்கும். அப்போது புருஷன் மட்டுமே இருப்பதால் அந்நிலை மோக்ஷம் ஆகும்.


ஹேயத்தின் ஹானம் என்கிற மோக்ஷம்:
 
तदभावात् संयागाभावे हानं तद्दृशेः कैवल्यम् ।।25।।

தத³பா⁴வாத் = ஸம்°யாகா³பா⁴வே ஹாநம்° தத்³த்³ரு«ஶே​: கைவல்யம் || 25||

தத³பா⁴வாத் = அது நிகழ்வதால் (வாசனையுடன் கூடிய அவித்யை நாசமாவதால்) ஸம்°யாக³= புத்தி புருஷன் சம்பந்த ரூபமான ஹேயத்துக்கு; அபா⁴வ: = நாசம்; ஹாநம்° தத்³ = அந்த ஹானமே த்³ரு«ஶே​: = புருஷனுக்கு; கைவல்யம்= முக்தி ஆகிறது.

வாசனையுடன் கூடிய அவித்யை விவேக - க்யாதியால் நாசமடைகிறது. அவித்தையால் ஏற்பட்ட புத்தி சம்பந்தமும் விலகிவிடுகிறது. அப்போது புருஷன் எத்தகைய சம்பந்தமும் இன்றி தன் சொரூபத்தில் இருப்பான். இதுவே கைவல்யம் என்கிற முக்தி.

மோக்ஷம்:
 

विवेकख्यातिरविप्लवा हानोपायः ।।26।।

விவேகக்²யாதிரவிப்லவா ஹாநோபாய​: || 26||

விவேகக்²யாதி: = ப்ரக்ருதி சம்பந்தமில்லாத புருஷனை சாக்ஷாத்கரிப்பது; அவிப்லவா = (மித்யாக்ஞான வாசனையால்) தடை செய்யப்படாத; ஹாந உபாய​: = மோக்ஷத்துக்கு காரணமாகிறது. 
ப்ரக்ருதி வேறு புருஷன் வேறு என்று அறிவதே விவேகக்யாதி. இது சாஸ்திர அப்யாஸத்தால் உண்டாகும். இருப்பினும் வெகு கால பழக்கத்தால் இது நாசமாக வாய்ப்பு இருக்கிறது. ஆகவே விவேக க்யாதி ஏற்பட்டதும் இதை அடிக்கடி மனனம் செய்து நிலைநாட்டி விட்டால் எல்லா விஷயங்களிடத்திலும் வைராக்கியம் ஏற்படும். புருஷன் பால் ஈர்க்கப்பட்ட சித்தம் அதையே ஆவ்ருத்தி செய்து வளர்த்துவரும். இந்த த்யான மகிமையால் இயங்கு சக்தியான புருஷ பிரதி பிம்பத்தை அனுபவிக்கலாம். இது வாசனைகளால் ஏற்படும் பொய்யறிவை நாசமாக்கும். பிராரப்தமான சரீரம் தொலைந்து போகும். இனி துக்கமே ஏற்படாத மோக்ஷம் கிடைக்கும்.

Geetha Sambasivam

unread,
Jun 16, 2014, 8:01:35 AM6/16/14
to மின்தமிழ்
விவேக க்யாதி:
 
तस्य सप्तधा प्रान्तप्रान्तभूमिःप्रज्ञा ।।27।।

தஸ்ய ஸப்ததா⁴ ப்ராந்தபூ⁴மி​: ப்ரஜ்ஞா || 27||

தஸ்ய = விவேக க்யாதியை அடைந்த யோகிக்கு; ஸப்ததா⁴ = ஏழு விதமான; ப்ராந்தபூ⁴மி​: = இருப்புக்களை உடைய நிலைகள்; ப்ரஜ்ஞா= அறிவானது.
விவேக க்யாதியை அடைந்த யோகிக்கு அறிவானது ஏழு விதமான இருப்புக்களை உடைய நிலைகள் ஆக ஆகிறது. 
சர்வ சாதாரணமாக பிரக்ஞையுடன் இருக்கிறோம் என்கிறோம். அதாவது அறிவு செயல்பட்டு கொண்டிருக்கிறது. வாசனையால் தடை செய்யப்படாத நிலைத்த விவேகக்யாதி உண்டானதும் ஆத்ம ஸ்வரூபத்தைத்தவிர வேறு தோற்றம் எதுமில்லாமல் அவித்யை விலகிவிட்ட யோகிக்கும் கூட இது செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் அதில் ஏழு விதம் இருக்கிறது. 
இதில் காரியத்தை விடும் பிரக்ஞைகள் நான்கு. சித்தத்தை விடும் பிரக்ஞைகள் மூன்று.

காரியத்தை விடும் பிரக்ஞைகள்: அறிய வேண்டும் என்ற இச்சை (ஜிக்ஞாஸா), விலக்க வேண்டும் என்ற விருப்பம் (ஜிஹாஸா), புதிதாக ஒன்றை அடைய வேண்டும் என்ற விருப்பம் (ப்ரேப்ஸா), புதிதாக ஒன்றை செய்ய வேண்டும் என்ற எண்ணம் (சிகீர்ஷா) .
யோகிக்கு உண்டாகும் அறிவு அறிய வேண்டும் என்ற இச்சையை போக்கிவிடும். புதிதாக எதையும் அவன் அறிய வேண்டியது இல்லை. 
விலக்க வேண்டும் என்ற விருப்பம் நீங்கும். எல்லாவற்றையும் விலக்கிவிட்ட பின் விலக்க ஒன்றுமில்லை என்பது புரிகிறது. 
கைவல்ய நிலை அடைந்தபின் வேண்டியன எல்லாம் அடையப்பட்டுவிட்டதால் அடைய வேண்டுவதும் வேறு ஒன்றுமில்லை என்பது புரிகிறது. 
விவேக க்யாதியை சம்பாதித்து கொண்டுவிட்டதால் செய்வன எல்லாம் செய்தாகிவிட்டது; செய்ய வேண்டுவதாக புதிதாக ஒன்றுமில்லை. இது நான்காவது பிரக்ஞை.

காரியங்களை விட்டா போதுமா? மனசால செய்கிறவற்றையும் விட வேண்டும் இல்லையா?

சித்தத்தை விடும் பிரக்ஞைகள்: "என் புத்தி ஸத்வமானது; அது செய்ய வேண்டியதை செய்து முடித்து விட்டது" என சித்தத்தை விடுதல் முதலாவது.
மலை உச்சியிலிருந்து நழுவும் கற்பாறைகளுக்கு பிடிப்பு இல்லாமல் போவது போல புத்தி முதலிய குணங்களுக்கும் காரணத்தில் லயமாவதால் நாசமடைகின்றன. அவற்றால் பயன் ஏதும் இல்லை. ஆகையால் அவை மீண்டும் உத்பத்தி ஆக மாட்டா. இது இரண்டாம் ப்ரக்ஞை.
யோகி குணங்களை கடந்து சொரூபத்தில் மட்டில் இருக்கிறான். சித்துடன் ஒரே ரஸமாக ஆகிறான். இது சித்தத்தை விடும் மூன்றாம் ப்ரக்ஞை.
இந்த மூன்றாம் ப்ரக்ஞை உண்டாக சாதனங்கள் என்ன?.....


ப்ரக்ஞைக்கான சாதனங்கள்:

योगाङ्गनुष्ठानादशुद्धिक्षये ज्ञानदीप्तिराविवेकख्यातेः ।।28।।

யோகா³ங்க³நுஷ்டா²நாத³ஶுத்³தி⁴க்ஷயே ஜ்ஞாநதீ³ப்திராவிவேகக்²யாதே​: || 28||

யோகா³ங்க³= யோக அங்கமான (யமம் முதலான எட்டையும்); அநுஷ்டா²நாத்³ = பழகுவதால்; அ³ஶுத்³தி⁴ = (அவித்யா, அஸ்மிதா, ராகம், த்வேஷம், அபிநிவேஷம், புண்ணியம், பாபம் ஆகிய) அசுத்திகளின்; க்ஷயே = தேய்தல்; ஆவிவேக க்²யாதே​: = விவேக க்யாதி உண்டாகும் வரையுள்ள ; ஜ்ஞாந தீ³ப்தி = ஸம்ய ஞானத்தின் ஒளியானது (உண்டாகிறது.)
யமம், நியமம் முதலான சாதனங்களை எவ்வளவுக்கெவ்வளவு அநுஷ்டிக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அவித்யை முதலான அசுத்திகள் தேய்கின்றன. இதனால் ஞானத்தின் பிரகாசமும் அவ்வளவு அதிகமாகிறது. விவேகக்யாதி உண்டாகும் வரை இது பெருகிக்கொண்டே போகிறது. (சத்வம் முதலான குணங்கள் புருஷன் இவற்றின் ஸ்வரூபத்தை இன்னதென்று அறிதலே விவேகக்யாதி)
கோடரி மரத்தை சிதைப்பது போல தர்ம அனுஷ்டானம் அஞ்ஞானத்தை சிதைக்கிறது.
வேறு காரணமின்றி தர்மமே சுகம் உண்டாக காரணமாம்.
---
அடுத்து வருவதை படிக்க வேண்டும் புரிந்து கொள்ள வேண்டும் என அவசியம் இல்லை.

PG: இப்படிப்பட்ட தர்ம வ்ருத்திக்கு காரணங்களை பட்டியலிடலாம்: உத்பத்தி; ஸ்திதி; அபிவ்யக்தி; விகாரம்; ப்ரத்யயம்; ஆப்தி; வியோகம்; அன்யத்வம்; த்ருதி.
உத்பத்தி காரணம்: விக்ஞானத்தில் இன்னது என்று பகுத்து அறிய முடியாத நிலையை போக்கி நிகழ் கால இருப்பை உண்டு பண்ணுவதால் மனதே விஞ்ஞானத்தின் உத்பத்திக்கு காரணம்.
ஸ்திதி காரணம்: உடம்பின் ஸ்திதிக்கு ஆகாரம் காரணமாகும். அதே போல மனதின் ஸ்திதிக்கு புருஷார்த்தம் காரணம். அஹம் தத்துவத்தில் இருந்து மனது வந்தது. எந்த புருஷார்த்தத்தையும் கருதாத வரை மனது நிலையாக இருக்கும். அர்த்த காமத்தை கருதும் போது அது நிலையில் இருந்து நழுவிவிடும். நிலையாக இருப்பது மனசுக்கு இன்றியமையாதது.
அபிவ்யக்தி காரணம்: தானாகவோ இந்திரியங்கள் மூலமோ கருப்பு வெளுப்பு போல ரூபங்களின் பேதத்தை கண்டு கொள்வது அபிவ்யக்தி ஆகும். அரிசி முதலாவை அன்னமாக விகாரமடைய அக்னி காரணமானது போல் சப்தம் முதலானவை மனதின் விகாரத்துக்கு காரணமாகும். 
விகார காரணம்: கண்டு என்ற முனிவருடைய தவத்தை கலைக்க ப்ரம்லோசா என்ற அப்சரஸ் அனுப்பப்பட்டாள். அவள் அவருக்கு சமீபத்தில் வல்லகீ என்ற தன் வீணையில் இசை எழுப்ப முனிவரின் மனது இந்திரியங்களின் வழியே சென்று விகாரமடைந்தது.
ப்ரத்யய காரணம்: புகையை காணும்போது அக்னி உள்ளதென தெரிகிறது. அக்னியின் ஞானத்துக்கு புகை பற்றிய அறிவு காரணமாகிறது. இதுவே ப்ரத்யய காரணம்.
ஆப்தி காரணம்: கிடைப்பது. ப்ர சேர்த்து ப்ராப்தி என்பர். யோகாங்கங்களை அனுஷ்டிப்பது விவேகக்யாதி கிடைப்பதற்கு (ப்ராப்திக்கு) காரணம். அதுவே அசுத்திக்களை போக்குவதால் அசுத்திகளின் வியோகத்துக்கும் கூட (அழிதல்) காரணம் ஆகும்.
அன்யத்வம்: வேறாக ஆக்குதல். ஒரு தங்க நகையை தட்டான் அழித்து வேறு நகையாக்கும்போது அது அன்யத்வம் ஆகும்.
த்ருதி காரணம்: இந்திரியங்கள் நிலைத்து நிற்க சரீரம் காரணமாகிறது.
இந்த 9 வித காரணங்களில் யோகானுஷ்டானம் அசுத்தி வியோகத்திற்கும் ஞான ப்ராப்திக்கும் காரணமாகிறது.
--
இங்கே யோகாங்கங்கள் என்று ஆரம்பித்தாரே அவை என்னென்ன?

Geetha Sambasivam

unread,
Jun 17, 2014, 4:05:40 AM6/17/14
to மின்தமிழ்
யோகத்தின் அங்கங்கள்
 

இங்கே யோகாங்கங்கள் என்று ஆரம்பித்தாரே அவை என்னென்ன?

  यमनियमासनप्राणायामप्रत्याहारधारणाध्यानसमाधयोऽष्टावङ्गानि ।।29।।

யம நியமாஸந ப்ராணாயாம ப்ரத்யாஹார தா⁴ரணா த்⁴யாந ஸமாத⁴யோ'ஷ்டாவங்கா³நி || 29||

யமம், நியமம், ஆஸநம், ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், தா⁴ரணா, த்⁴யாநம், ஸமாதி⁴ ய: = இவை; அஷ்டா = எட்டு; அங்கா³நி = (யோக பயிற்சியின்) அங்கங்களாகும்.


யமம்:
 

अहिंसासत्यास्तेयब्रह्मचर्यापरिग्रहा यमाः ।।30।।

அஹிம்°ஸாஸத்யாஸ்தேயப்³ரஹ்மசர்யாபரிக்³ரஹா யமா​: || 30||


அஹிம்°ஸா = அஹிம்சை, ஸத்ய = ஸத்யம், அஸ்தேயம், ப்³ரஹ்மசர்யம், அபரிக்³ரஹா (ஆகியன) யமா: = யமம் எனப்படும்.

அஹிம்சை என்பது எப்போதும் மன மொழி மெய்களால் எந்த பிராணிக்கும் துரோகம் - தீங்கு செய்யாமல் இருத்தல். இதுவே யோக சாதனங்களுள் மிகச்சிறந்ததாகும்.

வாக்கும் மனசும் உண்மையிலேயே நிற்பது ஸத்யம். பிறருக்கு தீங்கு ஏற்படாமல் பேசுவது என்பது ஸத்யம். இது மிக நுட்பமானது.

ஒரு காலம் ஒரு மகரிஷி காட்டில் தவம் செய்து கொண்டு இருந்தார். ஸத்யதபஸ் என்று பெயர். எக்காலமும் உண்மை பேசுவது என்பது அவர் கொண்டிருந்த ஒரு விரதம். ஒரு நாள் இவர் தவம் கலைந்து எழும் வேளை சில திருடர்கள் அரச மாளிகையில் களவாடி காட்டு வழியே ஓடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ரிஷி தவம் செய்து கொண்டிருந்த வழியே ஓடினர். கடும் கோபத்துடன் துரத்தி வந்த அரச சேவகர்கள் ரிஷியைப்பார்த்து "திருடர்கள் இவ்வழியே போனார்களா?" என்று கேட்க ரிஷியும் திருடர்கள் போன வழியை காட்டிக்கொடுத்தார். அந்த வழியே போன சேவகர்கள் திருடர்களை பிடித்து அடித்தனர். அதில் ஒரு திருடன் அடி தாங்காது இறந்தான். இந்த ஜீவன் இறக்க யார் காரணம் என விசாரித்த பெரியோர்கள் ரிஷியே காரணம் என தீர்ப்பளித்தனர். ரிஷி மௌனமாக இருந்திருந்தால் திருடர்களை பிடித்திருக்க மாட்டார்கள்; அடித்திருக்க மாட்டார்கள்; ஒரு ஜீவனும் இறந்து போயிருக்காது என்பது வாதம். ஹிம்சை தருமானால் உண்மையை சொல்லாதிருப்பதே ஸத்யம்.


ஸத்யம் ப்3ரூயாத் ப்ரியம் ப்3ரூயாத் ந ப்3ரூயாத் ஸத்யம் அப்ரியம்|

ப்ரியம் ச நாந்ருதம் ப்3ரூயாத் ஏஷ த4ர்மஸ் ஸநாதந: || -மஹா பாரதம்.


பிறருக்கு தீங்கிழைக்காத உண்மையே பேச வேண்டும். உண்மையானாலும் பிறருக்கு தீங்கிழைக்குமானால் மௌனத்தை அநுஷ்டிக்கவேண்டும். பிறருக்கு ப்ரியமாக இருக்கும் என்று பொய் சொல்வதும் தகாத செயல். இது மஹாபாரதத்தில் வரும் கதை. இப்படி செய்வதே வேத சாஸ்த்திரங்களில் சொல்லிய புராதனமான தர்மமாகும்.


சாஸ்திர சம்மதம் இல்லாமல் பிறர் சொத்தை கைப்பற்றுதலே ஸ்தேயம் என்ற திருட்டு. இதை விலக்குவதே அஸ்தேயம். ஒருவனுக்கு கொடுக்க மனமில்லாத போது பல காரணங்கள் காட்டி அவனைக் கட்டாயப்படுத்தி அவனது பொருளை பெற்றுக்கொள்வதும் திருட்டாகும்.


முன் பார்த்த கதையில் ரொம்பவே கடுமையா இருக்கே என்று நினைத்தால் அடுத்த கதையை படியுங்கள். இதுவும் மஹாபாரதத்தில் ராஜ தர்ம பர்வத்தில் 24 ஆவது அத்தியாயத்தில் வருவது.

Geetha Sambasivam

unread,
Jun 30, 2014, 1:18:04 AM6/30/14
to மின்தமிழ்
ப்ரம்மசர்யம்...
 

முன் பார்த்த கதையில் ரொம்பவே கடுமையா இருக்கே என்று நினைத்தால் அடுத்த கதையை படியுங்கள். இதுவும் மஹாபாரதத்தில் ராஜ தர்ம பர்வத்தில் 24 ஆவது அத்தியாயத்தில் வருவது.

சங்கர் லிகிதர் என்று இரு சகோதரர்கள். பாஹுதை என்ற நதிக்கரையில் தனித்தனியே பூக்களும் கனி மரங்களும் உள்ள ஆசிரமங்கள் அமைத்து தீவிர ஆசார அனுஷ்டாங்களுடன் தவம் செய்து வந்தனர். ஒரு நாள் தம்பி லிகிதர் அண்ணனை பார்க்க சென்றபோது அவர் வெளியே போயிருந்தார். பசி மேலிட்ட தம்பி அண்ணனின் ஆசிரமத்தில் இருந்த பழ மரத்தில் இருந்து பழங்களை கொய்து சாப்பிட்டார். அப்போது திரும்பி வந்த அண்ணன் "நீ செய்தது தவறு. மரத்தின் சொந்தக்காரனுக்கு தெரியாமல் பழங்களை பறித்து உண்டது திருட்டுக்கு சமம். நீ அரசனிடன் சென்று தகுந்த தண்டனை பெற்று வா" என்றார். தம்பியும் பதிலுக்கு வாதம் செய்யாமல் நேரே அரசனிடம் சென்று நடந்ததைச் சொல்லி தண்டனை தரும்படி கேட்டார். அரசனும் "இது ஒன்றும் குற்றமில்லை. தண்டனை தேவையில்லை" என்று கூற லிகிதர் அதை ஒத்துக் கொள்ளவில்லை. தர்ம சங்கடத்தில் ஆழ்ந்த அரசன் சாத்திரப்படி தண்டனை விதித்து 'கைகளை வெட்டுங்கள்' என உத்தரவிட்டான். தண்டனையும் நிறைவேற்றப்பட்டது. வெட்டுப்பட்டு மணிக்கட்டுக்கு கீழ் ஒன்றுமில்லாத கைகளுடன் அண்ணனிடம் சென்று நடந்ததை தெரிவித்தார். அண்ணன் "நல்லது. நீ நதிக்கு சென்று நீராடி அர்க்யம் கொடுத்து தர்ப்பணம் செய்து வா" என்றார். கைகள் இல்லாமல் எப்படி அர்க்யம் கொடுப்பது என்று கூட கேட்காமல் நதிக்கு சென்று குளித்து நீரில் கைகளை விட்டு ஏந்த வெட்டுப்பட்ட கைகள் மீண்டும் வளர்ந்துவிட்டன. மகிழ்ச்சியுடன் மீதி கடன்களை முடித்து ஆச்ரமம் திரும்பினார் லிகிதர். முளைத்த கைகளை கண்டு சங்கரும் மிகவும் சந்தோஷப்பட்டு தம்பியை உணவளித்து போற்றினார்.
ஆகையால் பிறர் சொத்துக்கு ஆசைப்படலாகாது.

ரஹஸ்ய இந்திரியத்தை அடக்குவது ப்ரம்மசர்யம் ஆகும். யோகாங்கானுஷ்டானம் செய்பவ்வன் ஸ்த்ரீக்களை ஆவலுடன் பார்ப்பதும் அவர்களுடன் நெருங்கி பழகுவதும், ஆவலுடன் தொடுவதும் கூடாது. அது ப்ரம்மசர்ய அனுஷ்டானத்துக்கு இது பங்கம் ஏற்படுத்தும். ஆகவே அவசியம் விலக்க வேண்டும்.


அபரிக்ரஹம்
 

அபரிக்ரஹம் என்பது விஷயங்களில் ஆசை கொள்ளாதிருத்தல். சாஸ்திர சம்மதமான வழியிலும் எதிர்பாராதும் சில சமயம் நமக்கு சில பொருட்கள் கிடைக்கலாம். இதில் ப்ரதிக்ரஹம் என்பது சாஸ்திரம் அனுமதிப்பது. அதாவது செய்த ஒரு வேலைக்கு பதிலாக ஒரு பொருளை பெற்றுக்கொள்வது. இருந்தாலும் கொடுக்கும் நபரைபொறுத்து இதில் பாபம் சம்பவிக்கக்கூடும்.

ஒரு மஹான் பசியுடன் ஒரு ஊருக்குச் சென்றார். அங்கிருந்த ஒருவன் அவரை வரவேற்று உணவளித்தான். மகிழ்ச்சியுடன் உண்டு திண்னையில் சிரம பரிகாரம் செய்து கொண்டிருக்கும்போது அவருக்கு சித்தத்தில் கலக்கம் ஏற்பட்டது. நீர் வைக்கப்பட்ட வெள்ளிப்பாத்திரத்தை துணியில் மறைத்துக்கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் குறுக்கு வழியே தப்பிப்போனார். சற்று நேரம் சென்றபின் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து யோசனை செய்தார். “நம் செய்தது தவறில்லையா? ஏன் இப்படி மனசு கெட்டுப்போயிற்று? நம் தவம் எங்கே? ஆகையால் இதை திருப்பி கொடுத்துவிட்டு விசாரித்துக்கொண்டு வர வேண்டும்”. இப்படி சிந்தனை செய்து அந்த வீட்டுக்கு திரும்பினார். அந்த தம்பதிகளோ மஹான் வீட்டுக்கு வந்து உணவருந்தியதை நினைத்து ஆனந்தத்துடன் இருந்தார்களே தவிர பாத்திரம் தொலைந்ததை கூட அறியவில்லை. மஹான் பாத்திரத்தை கொடுத்துவிட்டு "உண்மையை சொல்லுங்கள் நீங்கள் எப்படி ஜீவனம் நடத்துகிறீர்கள்?” என்று கேட்டார். வெல வெலத்து போன வீட்டுக்காரர் தான் இரவில் திருடி ஜீவனம் செய்வதாக ஒத்துக்கொண்டார். மாஹானும் ப்ராணாயாமத்தால் தோஷத்தை போக்கிக்கொண்டு தன் நல்ல வழிக்கு போய்விட்டார்.
யோகியானவன் சாஸ்திரப்படி பெற்றாலும் உண்மையில் தோஷமுள்ளவனின் வஸ்து யோகியைக் கெடுத்துவிடும். கொடுப்பவன் தோஷமில்லாதவனா என்று கூடிய வரை ஆராய்ந்தே எதையும் வாங்கிக்கொள்ள வேண்டும்.

Geetha Sambasivam

unread,
Jul 3, 2014, 8:52:56 AM7/3/14
to மின்தமிழ்
முன் கூறிய அஹிம்சை முதலியவற்றில் யோகிகள் நடந்து கொள்ள வேண்டிய முறை.
 

  जातिदेशकालसमयानवछिन्नाः सार्वभौमा महाव्रतम् ।।31।।
ஜாதிதே³ஶகாலஸமயாநவசி²ந்நா​: ஸார்வபௌ⁴மா மஹாவ்ரதம் || 31||

ஜாதி, தே³ஶ, கால, ஸமய, அநவசி²ந்நா​: ஸார்வபௌ⁴மா மஹாவ்ரதம்.

ப்ராஹ்மணன் முதலிய ஜாதியாலும்; தீர்த்தம் முதலான இடத்தாலும்; சதுர்தசீ போன்ற காலத்தாலும்; ப்ராம்ஹணனுக்கு உணவிடுதல் போன்ற அநியத காலங்களாலும் எவ்விதத்திலும் தடை செய்யப்படாதவையாக எல்லா பூமிகளிலும் அல்லது அவஸ்தைகளிலும் தொடர்ந்து வருவதாக உள்ளது மஹா விரதமாகும்.

சிலர் சில விஷயங்களை கடை பிடிக்கிறார்கள். இன்னிக்கு வெள்ளிக்கிழமை- அசைவம் சாப்பிட மாட்டேன் என்பார்கள். அது போலவே காசிக்கு /கயாவுக்கு/ தனுஷ்கோடிக்கு வந்திருக்கிறேன், இன்னிக்கு அமாவாசை என்று பலவற்றை சொல்லி அசைவம் சாப்பிடுவதில்லை என்பர். இது ஒரு நோக்கத்தில் நல்லதுதான். ஆனால் இது யோகாங்கமான அஹிம்சை இல்லை. யோகாங்க அஹிம்சை இப்படி ஒரு ஜாதி, இடம், காலம் போன்ற எந்த விசேஷமும் இல்லாமல் தடையற்ற எல்லாருக்கும் எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் காட்டப்படும் அஹிம்சையாகும். இதே போல மற்ற ஸத்யம், பிறர் சொத்தை அபகரிக்காமை (அஸ்தேயம்), ப்ரஹ்மசர்யம், அபரிக்ரஹம் ஆகியவற்றில் கொள்ள வேண்டும். இப்படி ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் எந்த காலமும் எந்த இடத்திலும் அனுஷ்டிக்கப்படுவது மஹா விரதமாகும்.


நியமங்கள் 


  शौचसंतोषतपःस्वाध्यायेश्वरप्रणिधानानि नियमाः ।।32।।
ஶௌசஸம்°தோஷதப​:ஸ்வாத்⁴யாயேஶ்வரப்ரணிதா⁴நாநி நியமா​: || 32||

ஶௌசம், ஸந்தோஷ, தப​, ஸ்வாத்⁴யாய, ஈஶ்வர ப்ரணிதா⁴நாநி (ஆகியவை) நியமா​: = நியமங்களாகும்.

ஶௌசம் என்பது மண், நீர், பசுக்களின் சாணம் இவற்றால் வெளியே சுத்தம் செய்வதும், மதம், அசூயை முதலிய மன அசுத்தங்களை நீக்குவதும் ஆகும்.
ஸந்தோஷம் என்பது தெய்வாதீனமாக கிடைத்ததை தவிர அதிகமானவற்றில் ஆசை கொள்ளாதிருத்தல்.
தபம் என்பது குளிர்-வெப்பம், பசி - தாகம், போக்கு-வரவு போன்ற இரட்டைகளை பொறுத்துக்கொள்வது.
ஸ்வாத்யாயம் என்பது ப்ரணவ ஜபம் செய்தல்; அல்லது மோக்ஷ சாதகமாக சாஸ்திரங்களை அத்தியயனம் செய்தல். ஈஶ்வர ப்ரணிதாநாநி என்பது தான் செய்யும் எந்த செயலையும் இறைவனுக்கு அர்ப்பணிப்பது.
முன்பு யமத்தில் செய்யக்கூடாதன (don'ts) சொல்லப்பட்டது. நியமத்தில் செய்ய வேண்டியன (do s) சொல்லப்பட்டது. இவற்றை செய்யும் காலத்தில் ஏற்படக்கூடிய இடையூறுகளை விலக்குவது எப்படி?

இடையூறுகள்
 

वितर्कबाधने प्रतिपक्षभावनम् ।।33।।
விதர்கபா³த⁴நே ப்ரதிபக்ஷபா⁴வநம் || 33||

விதர்கபா³த⁴நே = (ஹிம்சை முதலான யோகானுஷ்டான விரோதிகளால்) இடையூறுகள் நேரும் போது; ப்ரதி பக்ஷ பா⁴வநம் = அவற்றுக்கு எதிரான பாவனையே இருக்க வேண்டும்.

நல்ல செயல்கள் செய்வதெனில் அவற்றுக்கும் இடையூறுகள் நேரும் அல்லவா? சில சமயம் பொய் சொல்லியே தீர வேண்டும் என்பது போல அனைத்து செய்யக்கூடாதனவும்ம் செய்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் உண்டாலாம். அப்போது இடையூறுகளுக்கு எதிரான விஷயங்களையே மனதில் பாவிக்க வேண்டும். தீய செயல்களை செய்வதை நாம் அடியோடு விட்டுவிட்டோம். இனி அவற்றை செய்வது உண்ட உணவை வாந்தி எடுத்து அதை மீண்டும் உண்பது போல ஆகும் என எண்ண வேண்டும். இப்படிச்செய்ய அவற்றின் மீதுள்ள நாட்டம் விலகிவிடும்.
இந்த இடையூறுகளைக் குறித்து விரிவாக காணலாம்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jul 3, 2014, 9:00:58 AM7/3/14
to mintamil

+1

Geetha Sambasivam

unread,
Jul 21, 2014, 8:48:13 AM7/21/14
to மின்தமிழ்
இடையூறுகள் மேலும்... 


वितर्का हिंसादयः कृतकारितानुमोदिता लोभक्रोधमोहपूर्वका मृदुमध्याधिमात्रा   दुःखाज्ञानन्तफला इति प्रतिपक्षभावनम् ।।34।।
விதர்கா ஹிம்°ஸாத³ய​: க்ரு«தகாரிதாநுமோதி³தா லோப⁴க்ரோத⁴மோஹபூர்வகா ம்ரு«து³மத்⁴யாதி⁴மாத்ரா து³​:கா²ஜ்ஞாநந்தப²லா இதி ப்ரதிபக்ஷபா⁴வநம் || 34||

விதர்கா = இடையூறுகள்; ஹிம்°ஸாத³ய​: = ஹிம்சை முதலானவை; க்ரு«த = தன்னால் செய்யப்பட்டவை; காரித = பிறரால் செய்யப்பட்டவை; அனு மோதி³தா = ஒருவனுக்கு நிகழ்ந்த ஹிம்சையை நல்ல வேளையாக நடந்தது என மகிழ்ச்சியுடன் எண்ணுவதுமாகும்; லோப⁴ க்ரோத⁴ மோஹ பூர்வகா= லோபம், க்ரோதம், மோஹம் இவற்றை காரணமாகக் கொண்டவை; ம்ரு«து³மத்⁴யாதி⁴மாத்ரா = மெதுவாகவும், நடு நிலையாகவும், அதிகமானதாவும்; து:க அஜ்ஞாநந்த பலா = (நரகம் முதலான) துக்கத்தையும், அக்ஞானத்தையும், முடிவில்லாத பிராந்தி, சந்தேகம் முதலியவற்றை பயனாக கொண்டவையாகவும் ஆகின்றன; இதி ப்ரதிபக்ஷபா⁴வநம் = இப்படியாக விதர்க்க விரோதியை எண்ண வேண்டும்.

விதர்க்கங்கள் மும்மூன்று விதங்கள். இவை ஒவ்வொன்றும் மும்மூன்று விதங்கள். ஆக இவை 81 வகைகள். 
ஒருவன் தானே ஹிம்சை செய்யலாம். தூண்டிவிட்டு பிறரால் செய்யலாம். இல்லை தெய்வாதீனமாக நடந்த ஹிம்சை ஒன்றை எண்ணி "நல்லா வேணும்" என்று சந்தோஷப்படுவதாக இருக்கலாம். (க்ருதம், காரிதம், அனுமோதிதம் என்ற ஹிம்சைகள். )

இப்படி செய்கிற ஹிம்சைகள் மனம், சொல், உடலால் இருக்கலாம்.

இப்படி தானே செய்கிற ஹிம்சைக்கு தூண்டுதல் ஆசையாக இருக்கலாம் (அதன் பெயர் லோபம்). தனக்கு தீங்கிழைத்தவன் மீதுள்ள கோபத்தால் செய்வது குரோதம். ஹிம்சை செய்வதால் தனக்கோ மற்றவர்களுக்கோ லாபம் ஏற்படும் என நினைத்து செய்தல் மோஹம். இப்படி லோபம், குரோதம், மோஹம் என்று மூன்று காரணங்கள் இருக்கலாம். இது போன்றவை வேகாரிதம் ஆகும். இப்படி இதே போல பிறர் மூலம் தூண்டிவிட்டு செய்வது, நடந்ததை எண்ணி மகிழ்வது இவற்றிலும் மும்மூன்றாக மொத்தம் 9 விதம்.

இவை தீவிரத்தை பொறுத்து மிதம், மத்தியமம், அதி மாத்ரம் என மூன்றாகும். இவை ஒவ்வொன்றும் மீண்டும் மெதுவில் மெது, மெதுவில் மத்தியமம் என்பது போல மும்மூன்று விதமாகும். ஆக மொத்தம் 81. இப்படியாக ஹிம்சைகள் வரும்போது அவற்றை விரோதியாக பாவித்து பிரதி பக்ஷ பாவனம் செய்ய வேண்டும்.

இப்படியான ஹிம்சையை செய்ய நரகம் முதலான துக்கமும், பசு போன்ற பிறவி எடுத்து அக்ஞானமும், அல்லது இதே பிறவியில் அறிவு மயக்கம், சம்சயம் முதலானவையும் உண்டாகும் என எண்ணுபவனுக்கு இந்த தடைகள் விலகி விடுகின்றன. இவ்விதமாகவே அஸத்யம், ஸ்தேயம், அப்பிருமச்சரியம், பரிக்கிரஹம், அசௌசம், அஸந்தோஷம், அதபஸ், அஸ்வாத்யாயம், ஈச்வர பிரணிதானம் செய்யாமை ஆகியனவும் தனித்தனியாக 81 வித தடைகளாக ஆகும். இப்படி நேரும் போதெல்லாம் அவற்றின் விளைவை -துக்கம் அக்ஞானம், முடிவற்ற துன்பம் ஆகியனவற்றை -எண்ணிப்பார்ப்பவன் இந்த தடைகளில் இருந்து தப்பிக்க ப்ரதிபக்ஷ பாவனம் செய்கிறான்.

இப்படி தடைகளை தாண்டி இடையூறு ஏதுமின்றி யோகாங்க அனுஷ்டான சாதனை செய்வோருக்கு ஸித்திகள் ஏற்படுகின்றன.


அஹிம்ஸா ஸித்தி 


  अहिंसाप्रतिष्ठायां तत्सन्निधौ वैरत्यागः ।।35।।
அஹிம்°ஸாப்ரதிஷ்டா²யாம்° தத்ஸந்நிதௌ⁴ வைரத்யாக³​: || 35||

அஹிம்°ஸா =அஹிம்சையில்; ப்ரதிஷ்டா²யாம்° = நிலைத்து நின்றவுடன்; தத்ஸந்நிதௌ⁴ = அவன் சந்நதியில்; வைர த்யாக³​: = விரோதத்தை விட்டுவிடுவதானது உண்டாகிறது.
எவன் இந்த 81 வகை ஹிம்சைகளையும் விரோதியாக பாவித்து விலக்கி அஹிம்சையை கடைபிடிக்கிறானோ அவன் முன்னிலையில் இயற்கையாக விரோதம் காட்டும் உயிர்கள் கூட (பூனை- எலி; பசு - புலி; பாம்பு -கீரி) பரஸ்பரம் சினேகத்துடன் பழகும்.


ஸத்ய ஸித்தி: 


  सत्यप्रतिष्ठायां क्रियाफलाश्रयत्वम् ।।36।।
ஸத்யப்ரதிஷ்டா²யாம்° க்ரியாப²லாஶ்ரயத்வம் || 36||

ஸத்ய = ஸத்தியத்தில்; ப்ரதிஷ்டா²யாம்°= நிலை நின்றவன் (முன்னிலையில் அவன் வாக்குக்கு ); க்ரியா = கிரியை; ப²லா = பலனை; ஶ்ரயத்வம் = அடையும் தன்மையுடையதாகிறது. 
81 வகை அஸத்தியங்களையும் விலக்கி சத்தியமானது நிலைநாட்டப்பட்டால் (ஸத்தியப்பிரதிஷ்டை இருப்பவன்) சொல்வது பலிக்கும். ஒரு கடைநிலை நபரைப்பார்த்து நீ நல்லவனாவாய் என்றால் அப்படியே நல்லவனாகி விடுவான். நீ சொர்க்கம் போவாய் என்றால் அப்படியே சொர்க்கத்துக்கு போய்விடுவான். இப்படி புதிதாக ஒரு கிரியை அல்லது பலனை தர வல்லவன் சத்ய பிரதிஷ்டை உள்ளவன்.

Geetha Sambasivam

unread,
Jul 24, 2014, 4:55:08 AM7/24/14
to மின்தமிழ்
அஸ்தேய ஸித்தி: 

आस्तॆय प्रतिश्ठायाम् सर्वरत्नॊपस्थानम् |37||

அஸ்தேய ப்ரதிஷ்டா²யாம்° ஸர்வரத்னோபஸ்தா2னம் ||37||

அஸ்தேய = பிறர் சொத்தில் ஆசை கொள்ளாதிருத்தல்; ப்ரதிஷ்டா²யாம்°= நிலை நின்றவன்(க்கு); ஸர்வ ரத்னோபஸ்தா2னம் = பூமியிலுள்ள எல்லா ரத்தினங்களும் எதிர்படுகின்றன.


ப்ரம்ஹசர்ய சித்திகள்: 

  ब्रह्मचर्यप्रतिष्ठायां वीर्यलाभः ।।38।।
ப்³ரஹ்மசர்யப்ரதிஷ்டா²யாம்° வீர்யலாப⁴​: || 38||

ப்³ரஹ்மசர்ய ப்ரதிஷ்டா²யாம்° = பிரம்மசர்யத்தில் நிலை பெற்றவனுக்கு (ரகசிய இந்திரியத்தை அடக்கி வீர்யத்தை வீணாகாமல் செய்பவனுக்கு) வீர்ய = ஒப்புயர்வற்ற ஸாமர்த்தியம்; லாப⁴​: = கிடைக்கிறது. 
(இந்த ப்ரம்மச்சரிய பிரதிஷ்டை இல்லாதவர் செய்யும் மந்திர உபதேசம் வீணாகிறது. இக்காலத்தில் மந்திரங்கள் பலிப்பதில்லை என உபதேசம் பெற்றவர் எண்ணுகின்றனர்)


அபரிக்ரஹ சித்திகள்:


  अपरिग्रहस्थैर्ये जन्मकथान्तासंबोधः ।।39।।
அபரிக்³ரஹஸ்தை²ர்யே ஜந்மக தா²ந்தாஸம்°போ³த⁴​: || 39||

அபரிக்³ரஹஸ்தை²ர்யே = பரிக்ருஹம் செய்யாதவனுக்கு; ஜந்ம கதா²ந்தா = முன் பிறவிகளின்; ஸம்°போ³த⁴​: = தன்மையும் தெளிவும் உண்டாகிறது.
சாதாரணமாக யாரும் ஏதும் இலவசம் என்று கொடுத்தால் 'அப்பாடா' என்று வாங்கி வைத்துக் கொள்கிறோம். அது தவறு. ஒரு பொருளை ஒருவரிடம் வாங்கும் போது கண்ணுக்குத் தெரியாமல் (அத்ருஷ்டமாக) சிலதையும் வாங்கிக்கொள்கிறோம். இதனால் விஷயம் அறிந்த பெரியோர்கள் யாரிடமும் எதுவும் கேட்டோ, தானாக வந்தாலுமோ கூட அப்படியே பெற்றுகொள்ள மாட்டார்கள். இப்படி வாங்கிக்கொள்வது பரிகிரஹம் ஆகும். அபரிக்ரஹம் அப்படி வாங்காமல் இருப்பது.

Geetha Sambasivam

unread,
Jul 26, 2014, 7:09:45 AM7/26/14
to மின்தமிழ்
நியம சித்திகள்:

  शौचात्स्वाङ्गजुगुप्सा परैरसंसर्गः ।।40।।
ஶௌசாத்ஸ்வாங்க³ஜுகு³ப்ஸா பரைரஸம்°ஸர்க³​: || 40||

ஶௌசாத் = சுத்தத்தில் (நிலை பெற்றவனுக்கு) ; ஸ்வாங்க³= ஸ்வ அங்க= தன் உடலில்; ஜுகு³ப்ஸா = வெறுப்பும்; பரை = மற்றவர் சரீரத்துடன்; அஸம்°ஸர்க³​: = சேராமையும் (உண்டாகிறது)
[பிற கலாசாரங்கள் கைகுலுக்குவதையும், கட்டித்தழுவுவதையும் ஆதரித்தாலும் ஹிந்து கலாசாரத்தவர் சாதாரணமாக அப்படி செய்ததில்லை. அப்படித்தான் ஸ்ருதிகளும் சாஸ்திரங்களும் விதித்து உள்ளன. பிற சரீரங்களை தொடாமல் பழகி பின் தன் சரீரத்தின் மீதும் வெறுப்பு உற்று இனி சரீரம் வேண்டாம் என வைராக்கியம் கொண்டு முக்திக்கு முயற்சிக்க வேண்டுமென தாத்பர்யம்.]


மனதின் அழுக்கு நீங்குவது..
 

सत्त्वशुद्धिसौमनस्यैकाग्रतेन्द्रियजयात्मदर्शनयोग्यत्वानि च ।।41।।

ஸத்த்வஶுத்³தி⁴ஸௌமநஸ்யைகாக்³ரதேந்த்³ரியஜயாத்மத³ர்ஶநயோக்³யத்வாநி ச || 41||

ஸத்த்வஶுத்³தி⁴ = மனதின் அழுக்கு நீங்குவதும்; ஸௌமநஸ்ய = (அதன் மூலம்) நல்ல மனமாக தெளிவு அடைவதும்; ஐகாக்³ர = குவிக்கப்பட்ட ; இந்த்³ரிய= இந்திரியங்களின்; ஜய = ஜெயிப்பதும்; ஆத்ம த³ர்ஶந = ஆன்மாவை தரிசிப்பதற்கு (ஆத்ம ஞானத்துக்கு) யோக்³யத்வாநி ச = யோக்யனாக உள்ள தன்மையும் கூட [பவந்தி= உண்டாகின்றன.] 
நீர், சவுக்காரம், மண் இவற்றால் உடலில் உண்டாக்கிக்கொள்வது பாஹ்ய சௌசம். மனதில் உள்ள காமம் குரோதம் முதலியவற்றை போக்குவது ஆந்தர சௌசம். 40 இல் வெளி சுத்தம் சொல்லப்பட்டது. இங்கே உள் சுத்தம் சொல்லப்படுகிறது. ஆந்தர சௌச ப்ரதிஷ்டை அடைந்தவனுக்கு சித்தத்தின் காம க்ரோதாதிகள் நீங்குகின்றன. இதனால் சித்தம் தெளிந்து இந்திரியங்கள் தன் வசப்படும். அப்படி ஆகும்போது மனது ஆத்மக்ஞானத்தை அடைய யோக்கியதையை அடைகிறது.


ஸந்தோஷப் ப்ரதிஷ்டை:
 

संतोषादनुत्तमः सुखलाभः ।।42।।

ஸம்°தோஷாத³நுத்தம​: ஸுக²லாப⁴​: || 42||

ஸம்°தோஷாத்³= கிடைத்தது போதுமென்ற எண்ணத்தில் இருந்து; அநுத்தம​: =நிகரற்ற; ஸுக²லாப⁴​: = சுகம் கிடைக்கிறது.
தெய்வாதீனமாக கிடைத்ததில் திருப்தி அடைந்து அதைவிட உயர்ந்தவற்றில் ஏற்படக்கூடிய ஆசையை கொள்ளாதிருத்தல் சந்தோஷம் எனப்படும். அப்படிப்பட்ட சந்தோஷத்தில் நிலைபெற்றவனுக்கு ஈடு இணையில்லா சுக லாபம் உண்டாகிறது.
ஆசையை ஒழிப்பதால் உண்டாகும் சுகத்தின் பதினாறில் ஒரு பங்குக்கு கூட "உலகில் விஷய அனுபவத்தால் உண்டாகும் சுகமும், தேவ லோகத்தில் கிடைக்கும் சுக2மும் ஈடு ஆக மாட்டா"
யச்ச காமம் சுக2ம் லோகே யச்ச திவ்யம் மஹத்சுக2ம்| த்ருஷ்ணாக்ஷய ஸுக2ஸ்யைதே நார்ஹத: ஷோடஷீம் கலாம் ||
தன் யௌவனத்தை தானம் செய்த புரூவிடம் தந்தை யயாதி சொல்கிறார்:
யா துஸ்த்யஜா து3ர்மதிபி: யா ந ஜீர்யதி ஜீர்யத:| தாம் த்ருஷ்ணாம் ஸம்த்யஜத் ப்ராக்ஞா ஸுகே2நைவ அபி4பூர்யதே ||
கெட்ட புத்தி உள்ளவர்களுக்குத்தான் ஆசையை விட முடியாது. கிழவனானவனுக்கு இந்திரியங்கள் கிழத்தனத்தை அடைவது போல ஆசையும் கிழத்தனத்தை அடைய வேண்டும். புத்திமானான புருஷன் ஆசையை விலக்கினால் அவனுக்கு சுக நிறைவு ஏற்படும்.

Geetha Sambasivam

unread,
Jul 29, 2014, 7:57:41 AM7/29/14
to மின்தமிழ்
தபஸில் நிலை நிற்பதால் உண்டாகும் பலன் : 

  कायेन्द्रियसिद्धिरशुद्धिक्षयात्तपसः ।।43।।

காயேந்த்³ரியஸித்³தி⁴ரஶுத்³தி⁴க்ஷயாத்தபஸ​: || 43||

காய -உடலின்; இந்த்³ரிய = இந்திரியங்களின்; ஸித்³தி⁴ = சித்தியானது; அஶுத்³தி⁴ = அசுத்தியின்; க்ஷயாத் = தேய்தலால்; தபஸ​: தபஸால் (உண்டாகிறது)

தபஸால் தமோகுணத்தின் காரியமான ஆவரணம் முதலியன தேய்ந்ததும் சரீர சித்திகளான அணிமா முதலியவைகளும் இந்திரிய சித்திகளான தொலை தூரத்தில் ஒலிப்பதை கேட்டல் (தூர ச்ரவணம்) முதலானதும் உண்டாகின்றன.


ஸ்வாத்யாயம்:


  स्वाध्यायादिष्टदेवतासंप्रयोगः ।।44।।

ஸ்வாத்⁴யாயாதி³ஷ்டதே³வதாஸம்°ப்ரயோக³​: || 44||

ஸ்வாத்⁴யாயாத்³ = சுய அத்யாயத்தினால்; இஷ்ட தே³வதா =இஷ்டர்களின், தேவதைகளின்; ஸம்°ப்ரயோக³​:= தரிசனமும் கிடைக்கிறது.
ஸ்வாத்⁴யாயம் என்பது தன் வேத பாகத்தையோ, ப்ரணவம் அல்லது தனக்கு உபதேசிக்கப்பட்ட மந்திரங்களையோ அல்லது மோக்ஷ சாதனமான நூல்களையோ தினசரி பயின்று வருதல். இதை திடமாக செய்ய இஷ்டர்கள் எனப்படும் மகரிஷிகளுடைய தரிசனமும் தேவதைகளின் தரிசனமும் கிடைக்கிறது. அவர்கள் இவனுக்கான காரியங்களையும் செய்கின்றனர் என்று பாஷ்யங்கள் சொல்கின்றன. 


ஈச்வர பிரணிதானம்:

  समाधिसिद्धिरीश्वरप्रणिधानात् ।।45।।

ஸமாதி⁴ஸித்³தி⁴ரீஶ்வரப்ரணிதா⁴நாத் || 45||

ஈஶ்வர ப்ரணிதா⁴நாத் = எல்லாவற்றையும் ஈச்வரனிடம் அர்ப்பணிப்பதால்; ஸமாதி⁴ ஸித்³தி⁴ =ஸமாதியானது சித்திக்கிறது.
இறைவனிடம் எல்லா கர்மங்களையும் அர்ப்பணித்து அவரிடம் பக்தி செலுத்தி விட்டால் அது ஈஶ்வர ப்ரணிதா⁴நம். இதனால் வேறு தேசத்தில் உள்ளதையும், வேறு எந்த காலத்தில் உள்ளதையும் தடையில்லாமல் அறிந்து கொள்கிற திறமை உண்டாகும்.

இது வரை யமம் நியமம் ஆகியவற்றால் உண்டாகும் பலன்களைப் பார்த்தோம். இனி ஆசனம் முதலிய யோகாங்களின் பலன்களைப் பார்க்கலாம்.

Geetha Sambasivam

unread,
Aug 24, 2014, 8:34:07 AM8/24/14
to மின்தமிழ்
ஆஸநம்

  स्थिरसुखमासनम् ।।46।।

ஸ்தி²ரஸுக²மாஸநம் || 46||

ஸ்தி²ர = ஸ்திரமான, அசைவையுண்டாக்காத; ஸுக²ம் =சுகத்தை தருவதுமானது; ஆஸநம் =ஆசனமாகும்.
இவை பலவிதமாக சொல்லப்படுகின்றன. இவற்றில் (வாசஸ்பதி மிஸ்ரர் வ்யாக்கியானத்தை ஒட்டி) சிலதை பார்க்கலாம்:
1.பத்மாஸனம். 2.பத்ராஸனம்.3.ஸவஸ்திகம். 4.தண்டகாஸனம். 5. ஸோபாஸ்ரயம். 6. பர்யங்காஸனம்.7.க்ரௌஞ்ச நிஷதனம். 8.ஹஸ்தி நிஷதனம். 9.உஷ்ட்ர நிஷதனம். 10. ஸமஸம்ஸ்தானம். 11. ஸ்திர ஸுகம்.
பத்மாஸனம் என்பது இரண்டு பாதங்களையும் இரு துடைகள் மீது வைத்து உட்காருதல்.
இரண்டு குதி கால்களையும் வ்ருஷணத்தின் சமீபத்தில் சேர்த்து வைத்து அதன் மீது இரண்டு கைகளையும் வைத்துக்கொள்ளுதல் பத்ராஸனம்.
இடது காலை மடக்கி வலது துடை, முழங்கால் இவற்றின் இடையிலும் அதேபோல வலது காலை மடக்கி இடது துடை, முழங்கால் இவற்றின் இடையிலும் வைத்துக்கொள்ளுதல் ஸ்வஸ்திகம். 
பூமியில் உட்கார்ந்து கால்களை நீட்டி இரண்டு குதி கால்களையும் காலில் உள்ள விரல்களையும் ஒன்று சேர்த்து செய்வது தண்டாஸனம்.
பூமியில் உட்கார்ந்து இரண்டு முழங்கால்களையும் சேர்த்து இடுப்பை சுற்றி ஒரு வஸ்திரம் அல்லது பட்டு முதலியவற்றால் சுற்றிக்கட்டிக்கொள்வது ஸோபாச்ரயம். முழங்காலில் கையை வைத்துப் படுத்துக் கொள்ளுதல் பர்யங்காஸனம். க்ரௌஞ்சம் என்ற பட்சி பூமியில் உட்கார்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி தானுமிருப்பது க்ரௌஞ்ச நிஷ்தனம். யானை பூமியில் படுத்தால் போல் தான் இருப்பது ஹஸ்தி நிஷதனம். பூமியில் படுத்த ஒட்டகத்தைபோல இருப்பது உஷ்ட்ர நிஷதனம் பூமியில் உட்கார்ந்து இரண்டு முழங்கால்களையும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைத்துக்கொள்வது ஸம்ஸம்தானம். எப்படி இருந்தால் உடலுக்கு நிலையான சுகம் ஏற்படுமோ அப்படி இருப்பது ஸ்திரசுகம்.


ஆசனத்துக்கான ஸாதனம்: 


  प्रयत्नशैथिल्यानन्त्यसमापत्तिभ्याम् ।।47।।
ப்ரயத்நஶைதி²ல்யாநந்த்யஸமாபத்திப்⁴யாம் || 47||

ப்ரயத்ந ஶைதி²ல்ய= சரீரத்தை ஒரு நிலைக்கு கொண்டுவர எடுத்துக்கொள்ளும் முயற்சியை குறைத்துக்கொள்வதும்; அநந்த்ய = ஆதிசேஷனிடத்தில்; ஸமாபத்திப்⁴யாம் = மனதைச் செலுத்துவதும்; (ஆசன ஜயத்துக்கான சாதனங்கள்.)

கொஞ்சம் ஆச்சரியமா இருக்கு இல்லே?! ஏதேனும் செய்ய முடியலைன்னு சொன்னா இன்னும் முயற்சி செய்ன்னு சொல்வதே சாதாரணமாக பார்ப்பது. இங்கே மாறாக சொல்கிறார். ஆசனம் சரியா வரல்லியா, ரொம்ப முயற்சி செய்யாதே! மஹா விஷ்ணுவோட ஆசனமா இருக்கிற ஆதி சேஷனை வேண்டிக்கொள் என்கிறார்.

ஆசன ஜயம் ஏற்பட்டதற்கு அறிகுறி:
 

ततो द्वन्द्वानभिघातः ।।48।।
ததோ த்³வந்த்³வாநபி⁴கா⁴த​: || 48||

தத: = அதனால் (ஆசன ஜயத்தால்); த்³வந்த்³வ = (குளிர் சூடு போன்ற) இரட்டைகளால்; அநபி⁴கா⁴த​: = பீடை உண்டாவதில்லை.
சாதாரணமாக நம் வாழ்க்கையில் இந்த இரட்டைகளை நிறையவே பார்க்கலாம். துக்கம் சுகம்; சூடு குளிர் , இது போல. அதாவது ஒரு விஷயத்தின் இரு முனைகள். சில விஷயங்கள் - சூடு போல- ஒரு நீண்ட அளவில் எங்கே வேண்டுமானலும் இருக்கலாம் இல்லையா? நமக்கோ ஒரு குறிப்பிட்ட அளவே பிடிக்கும். காப்பியில் சர்க்கரை இவ்வளவுதான் இருக்கணும், அப்போதுதான் நமக்கு பிடிக்கும் என்று இருக்கலாம். அப்படி இல்லாமல், கூடுதலோ குறைவோ எவ்வளவு இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் இருப்பதையே இரட்டைகளால் பீடை என்றது. குளிர் காலமானாலும் வெயில் காலமானாலும் ஒரே மாதிரி பாவிக்கிறதும் இதேதான்.

இப்படி ஒரு சித்தி ஏற்பட்டபின் செய்யக்கூடியது ப்ராணாயாமம்.

Geetha Sambasivam

unread,
Aug 26, 2014, 4:48:30 AM8/26/14
to மின்தமிழ்
ப்ராணாயாமத்தின் லக்ஷணம்:


तस्मिन्सति श्वासप्रश्वासयोर्गतिविच्छेदः प्राणायामः ।।49।।
தஸ்மிந்ஸதி ஶ்வாஸப்ரஶ்வாஸயோர்க³திவிச்சே²த³​: ப்ராணாயாம​: || 49||

தஸ்மிந்ஸதி = அப்படி ஆசன ஜயம் ஏற்பட்டபின்; ஶ்வாஸ = வெளிக்காற்றை உள்ளிழுத்தலான சுவாசம்; ப்ரஶ்வாஸயோர் = உள்ளிருக்கும் வாயுவை வெளிவிடுதல் ஆகியவற்றின்; க³தி = கதியை விச்சே²த³​: தடை செய்யும்; ப்ராணாயாம​: =பிராணாயாமத்தை (செய்ய வேண்டியதாகும்). 

மூச்சை உள்ளிழுப்பது, வெளிச்செலுத்துவது, இந்த இரண்டுக்கும் நடுவில் மூச்சை உடலில் அப்படியே நிறுத்துவது. இந்த மூன்றும் இயற்கையாக நிகழ்வன. இப்படி இயற்கையாக நிகழ்வதை நிறுத்துவது பிராணாயாமம்.
இங்கேயும் நமக்கு கொஞ்சம் வித்தியாசமாக தோன்றலாம். யோகா குரு மூச்சை இழு, பிடி, விடு என்று கற்று கொடுத்து இருக்கலாம். ஆனால் பாதஞ்சல சாஸ்திரத்தில் மேலும் பல வகைகள் உண்டு. மூச்சை இயல்பாக எடுக்கும் நேரத்தில் எடுக்காமல் இருப்பதும், வெளிவிடும் நேரத்தில் வெளிவிடாமல் இருப்பதும் கூட ப்ராணாயாமமே! (சோதனை செய்து பார்க்காதீங்க. குரு முகமாகவே பயில வேண்டும்.)


பிராணாயாமத்தின் விசேஷ லக்ஷணம்:
 

பிராணாயாமத்தின் விசேஷ லக்ஷணம்:

स तु बाह्याभ्यन्तरस्तम्भवृत्तिर्देशकालसंख्याभिः परिदृष्टो दीर्घसूक्ष्मः ।।50।।
ஸ து பா³ஹ்யாப்⁴யந்தரஸ்தம்ப⁴வ்ரு«த்திர்தே³ஶகாலஸம்°க்²யாபி⁴​: பரித்³ரு«ஷ்டோ தீ³ர்க⁴ஸூக்ஷ்ம​: || 50||

ஸ = அந்த ப்ராணாயாமத்தின்; து பா³ஹ்யாப்⁴யந்தர = உடலுக்கு வெளியேயும் உள்ளேயும் விருத்தி உடையதாகவும்; ஸ்தம்ப⁴ வ்ரு«த்திர் = வெளியே அனுப்பாமலும் உள்ளே இழுக்காமலும் அப்படியே நிறுத்துவதாகவும் {ஆகும்.} தே³ஶ கால ஸம்°க்²யாபி⁴​: = (அந்த மூன்று வித ப்ராணாயாமங்கள்) நிற்கின்ற தேச, கால, மாத்திரை (duration) ஆகியவற்றால்; பரித்³ரு«ஷ்டோ = பார்க்கப்பட்டதாக; தீ³ர்க⁴ = நீளமாகவும்; ஸூக்ஷ்ம​: =ஸூக்ஷ்மமாகவும் (ஆகின்றது.)

பிராணாயாமத்தில் மூச்சை உள்ளிழுப்பது பூரகம். இது உள்முக வளர்ச்சி (ஆப்யந்தர விருத்தி). வெளிச்செலுத்துவது ரேசகம். இது வெளிமுக வளர்ச்சி (பாஹ்ய விருத்தி). இந்த இரண்டுக்கும் நடுவில் மூச்சை உடலில் அப்படியே நிறுத்துவது கும்பகம். ஸ்தம்பித்து நின்றேன் என்கிறோமல்லவா? தூண் போல நிற்பது. உடலில் காற்று அப்படி நிற்பதால் இது ஸ்தம்ப விருத்தி. இவை மூன்றும், இவற்றின் தேசம் காலம், கால அளவு இவற்றைப் பொறுத்து நெடியதாகவும், நுட்பமானதாயும் ஆகின்றன. பிராணாயாமத்தில் வழக்கமாக மூச்சை விடுவதை, இழுப்பதை விட அதிக காலமும் தூரமும் விட, இழுக்க பழக வேண்டும். அதே போல மூச்சு நிற்கும் காலத்தையும் அதிகமாக்க வேண்டும். [குரு இல்லாமல் இதை பயிற்சி செய்ய வேண்டாம். வேண்டுமென்றே மேல் தகவல்கள் தரவில்லை.] பயிலப்பயில வாயு அதிக நேரம் நிற்பது தீர்க்க நிரோதம் எனப்படும். இது பின்னர் சூக்ஷ்மமாகிவிடும். மூச்சு ஓடுகிறதா இல்லையா என்று அறிவதே கடினமாகும் படி மெலிதாக ஆகும்.

துரீய பிராணாயாமம்:
 
துரீய பிராணாயாமம்:
बाह्याभ्यान्तरविषयाक्षेपी चतुर्थः ।।51।।
பா³ஹ்யாப்⁴யாந்தரவிஷயாக்ஷேபீ சதுர்த²​: || 51||

பா³ஹ்யாப்⁴யாந்தர = வெளியிலும் உள்ளேயும் போயிருக்கிற; விஷய = [தேசமாகிய] விஷயத்தின்; ஆக்ஷேபீ = அறிந்து செய்யும் ப்ராண நிரோதம்; சதுர்த²​: = [துரீயம் என்னும்] நான்காவதாகும்.
வெளியே வாயு நிற்குமிடம் வெளி தேசம்; உள்ளே நிற்கும் நாபிச்சக்ரம் முதலான இடங்கள் உள் தேசம். இன்ன தேசத்தில் வாயு நிற்கிறது என்ற அறிவுடன் செய்வது துரீய பிராணாயாமம் ஆகும்.
இது கும்பக பிராணாயாமம் போலவே இருக்கிறதே என்றால்:
இப்படி செய்ய வேண்டும் என அறிந்து கும்பக பிராணாயாமத்தை உடனே செய்ய முடியும். இதில் மூச்சை இழுக்கிறோம், வெளி விடுகிறோமே தவிர வேறு விஷய நிச்சயம் இல்லை. இந்த உள்ளே வெளியே என்பது என்ன என்று சரிவர தெரிந்த பின்னரே துரீய பிராணாயாமத்தை செய்ய இயலும். இதற்கு பலத்த முயற்சி தேவை.

Geetha Sambasivam

unread,
Aug 31, 2014, 9:42:16 AM8/31/14
to மின்தமிழ்
பிராணாயாமத்தின் நடுவாந்திரப்பலன்:
 
ततः क्षीयते प्रकाशावरणम् ।।52।।

தத​: க்ஷீயதே ப்ரகாஶாவரணம் || 52||

தத​: = அதனால்; (பிராணாயாமத்தை பயிற்சி செய்வதால்) க்ஷீயதே = தேய்கின்றன (அழிகின்றன); ப்ரகாஶாவரணம் = பிரகாச ஆவரணம் = பிரகாசத்தை மூடி இருப்பது (சுத்த சத்வ மயமான சித்தத்தில் உள்ள பாபங்களும் அவித்தை முதலான தோஷங்களும்);
பிராணாயாமத்தின் உத்தம பலன் கிடைக்கு முன்னே நடுவாந்திர பலனான சித்த தோஷங்களும் சித்த காரியமான பாபங்களும் அழிதல் கிடைக்கிறது.

தாரணைகளில் யோக்யதை ... 

धारणासु च योग्यता मनसः ।।53।।
தா⁴ரணாஸு ச யோக்³யதா மநஸ​: || 53||

தா⁴ரணாஸு = (ஸூக்ஷ்ம லக்ஷ்ய) தாரணைகளில்; ச யோக்³யதா =கூட யோக்யதையும்; மநஸ​: = மனதுக்கு (உண்டாகிறது)
பிராணாயாமத்தினால் தாரணைக்கு மனது தயாராகிறது. 
இது வரை கூறிய யமம், நியமம், ஆஸனம், ப்ராணாயாமங்களால் சுத்தம் செய்யப்பட்ட மனதை உடையவனுக்கு ப்ரத்யாஹார பலன் உண்டாகிறது. ப்ரத்யாஹாரம் எனில்...


ப்ரத்யாஹார​ம்
 

स्वविषयासंप्रयोगे चित्तस्वरूपानुकार इवेन्द्रियाणां प्रत्याहारः ।।54।।
ஸ்வவிஷயாஸம்°ப்ரயோகே³ சித்தஸ்வரூபாநுகார இவேந்த்³ரியாணாம்° ப்ரத்யாஹார​: || 54||

ஸ்வவிஷயா = தமது விஷயங்களில்; ஸம்°ப்ரயோகே³ = (சப்தம் முதலானவற்றுடன்) சம்பந்தம் விலகியபோது; சித்த ஸ்வரூபாநுகார இவ =சித்தத்தின் சொரூபத்தை அனுசரிப்பது போல; இந்த்³ரியாணாம்° = இந்திரியங்களின்; ப்ரத்யாஹார​: = ப்ரத்யாஹாரமாகும்.

சப்தம் முதலானவை மோகம், ராகம் முதலானவைகளை உண்டு பண்ணக்கூடியவை. இவற்றில் இந்திரியங்கள் செல்லும்போது அது யோகத்துக்கு இடையூறாகும். முன் சொன்ன யமம், நியம, ஆஸன, ப்ராணாயாமங்களை சரியாக செய்து வருபவருக்கு சித்தம் தன் இயல்பான சத்வ தன்மையை அடையும். இப்படி தெளிவதால் வெளி விஷயங்களிடத்தில் பற்று குறைந்து விடும். இந்திரியங்களும் சித்தத்தைப்போலவே சத்வமாகிவிடும். இந்த்ரியங்கள் விஷயங்களை நாடாததால் மனதும் தூய்மையாக இருக்கும். மனம் தத்துவத்தை நாடி நிற்குமானால் இந்திரியங்கள் தம் பால் அதை இழுக்கா. இதுவே ப்ரத்யாஹாரம் எனப்படும்.

Geetha Sambasivam

unread,
Sep 2, 2014, 8:48:04 AM9/2/14
to மின்தமிழ்
இரண்டாம் பாதம் நிறைவு
 

  ततः परमा वश्यतेन्द्रियाणाम् ।।55।।
தத​: பரமா வஶ்யதேந்த்³ரியாணாம் || 55||

தத​: = அதனால்; பரமா =மேலான; வஶ்யதா = வசப்பட்டு இருக்கும் தன்மை; இந்த்³ரியாணாம் = இந்திரியங்களுக்கு உண்டாகின்றது.

இந்திரியங்கள் சித்தத்துக்கு வசப்பட்டபின் அதை விட்டு விலகாமல் இருப்பதே மேலான தன்மை ஆகும். இது ப்ரயாஹாரத்தினால் அடையப்படுகிறது.

இது வரை யோகத்துக்கு பகிரங்க சாதனங்களான யமம், நியமம், ஆஸனம், ப்ராணாயாமங்களைப் பற்றி சொல்லப்பட்டது. வரும் மூன்றாம் பாதத்தில் யோகத்துக்கு அந்தரங்க சாதனங்களான தாரணை, த்யானம், ஸமாதி ஆகியன சொல்லப்படும். 

இரண்டாம் பாதம் நிறைவுற்றது.

மூன்றாம் பாதம்
 

तृतीयो विभूतिपादः  த்ரு«தீயோ விபூ⁴திபாத³​:
மூன்றாம் பாதம்:

விபூதி என்பதற்கு இங்கே திருநீறு என பொருள் இல்லை; சித்தி என்பது பொருள். சாதனா மார்க்கத்தில் கொஞ்சம் ஈடுபாடும் சிரத்தையும் உண்டாகும் பொருட்டு இவை சொல்லப்படுகின்றன. தாரணை, த்யானம், ஸமாதி ஆகியவை மொத்தமாக ஸம்யமம் எனப்படுகின்றன. இந்த ஸம்யமத்தாலேயே சித்திகள் உண்டாக வேண்டும். தாரணை, த்யானம், ஸமாதி ஆகியவை இதே வரிசையில் நிகழ வேண்டும்.
(இந்த ஸம்யமத்தை நன்றாக உள்ளே வாங்கிக்கொள்ளுங்கள். இனி அடிக்கடி வரும்!) 

"மனஶ்சஞ்சலம் அஸ்திரம்" என்பது மனதை விளக்குகிறது. மனதானது நிலையற்றது; அலைபாய்வது. அதுதான் அதற்கு இயல்பே. ஆகவே அது எதையாவது பற்றிக்கொண்டால்தான் நிலையாக இருக்கும். நியமம் முதலான பகிரங்க சாதனங்கள் அதை பந்தத்தில் ஆழ்த்தும் எதிலும் பற்றாமல் விரட்டின. மனதுக்கு மாறாமல், பந்தத்தை உண்டு பண்ணாத, நிர்விகல்ப ஸமாதி வரை உள்ள உத்தம பலனை அடைய எந்த வஸ்துவின் சம்பந்தம் இன்றியமையாததோ அதன் சம்பந்தம் ஏற்படுத்தும் முறையான தாரணையை இப்போது உபதேசிக்கிறது. 

தாரணை வகைகள் 


  देशबन्धश्चित्तस्य धारणा ।।1।।
தே³ஶப³ந்த⁴ஶ்சித்தஸ்ய தா⁴ரணா || 1||

தே³ஶ ப³ந்த⁴ = சரீரத்தின் (உள்ளும் வெளியுமான இடத்தில்) கட்டுப்பட்டு (அசைவற்று) நிற்பது; சித்தஸ்ய = சித்தத்தின்; தா⁴ரணா = தாரணை ஆகும்.

மனதுக்கு பந்தம் தராதவை சுப ஆஶ்ரயம் எனப்படும். இது உள்ளே இருக்கலாம்: வெளியே இருக்கலாம் (ஆந்தரம், பாஹ்யம்). சாஸ்திரப்படி தயாரித்த பஞ்ச லோகத்தாலான பகவானின் மூர்த்திகளில் குரு சொல்லிக்கொடுத்தப்படி மந்திரத்தால் தேவதையை ஆவாஹனம் செய்து அதில் மனதை செலுத்துவது வெளி (பாஹ்ய) தாரணை.

இப்படி பயிற்சி செய்வதுடன் சரீரத்திலுள்ள நாபி- சக்கரம், ஹ்ருதய -புண்டரீகம், ஸஹஸ்ராரம், நாசிகையின் (மூக்கின்) நுனி, நாக்கின் நுனி ஆகிய இடங்களில் மனசுக்கு சம்பந்தம் ஏற்படுத்துவது ஆந்தர தாரணை. 

Geetha Sambasivam

unread,
Sep 10, 2014, 8:18:05 AM9/10/14
to மின்தமிழ்
தாரணைக்கும் த்யானத்துக்கும் வித்தியாசம்.... 

तत्र प्रत्ययैकातानता ध्यानम् ।।2।।
தத்ர ப்ரத்யயைகாதாநதா த்⁴யாநம் || 2||

தத்ர = அங்கு; ப்ரத்யய = த்யானிக்கப்படும் வஸ்துவைப்பற்றி உண்டாகும் சித்த விருத்தியின்; ஏகதாநதா = ஒன்றேயான (வேறு விஷய கலப்பில்லாத தொடர்ச்சியான பிரவாஹமே) த்⁴யாநம் [ஆகும்]

இந்த தாரணைக்கும் த்யானத்துக்கும் என்ன வித்தியாசம்?

இரண்டுமே சித்த விருத்திதான். தாரணையில் மற்ற விஷயங்களிடத்தில் உண்டாகும் சித்த விருத்திகள் குறுக்கிடலாம். அதை கஷ்டப்பட்டு அடக்க வேண்டும். த்யானத்தில் அப்படி இராது. மற்ற சித்த விருத்திகள் எந்த முயற்சியும் இல்லாமல் விலகிப்போம்.
எப்படி தாரணை செய்வது? விஷ்ணு புராணம் சொல்லுகிறது: ப்ராணாயாமத்தால் வாயுவை வசப்படுத்த வேண்டும்; ப்ரத்யாஹாரத்தால் இந்திரியங்களை வசப்படுத்த வேண்டும்; பிறகு சுபாஶ்ரயத்தால் மனதை பந்தம் வராது காக்க வேண்டும். அம்மனதை பகவானின் சொரூபத்தில் நிலைப்படுத்துதல் ஆந்தர தாரணை. த்யானம் பெறும் வரை இதை பயிற்சி செய்து வர வேண்டும். த்யானத்தை அதற்கு முன் உள்ள யமம், நியமம், ஆஸனம், ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணை ஆகிய யோகத்தின் அங்கங்கள் ஏற்படுத்துகின்றன.


ஸமாதியின் சொரூபம்: 


  तदेवार्थमात्रनिर्भासं स्वरूपशून्यमेव समाधिः ।।3।।
ததே³வார்த²மாத்ரநிர்பா⁴ஸம்° ஸ்வரூபஶூந்யமேவ ஸமாதி⁴​: || 3||

ததே³வ = அதுவே (முன் சொன்ன த்யானமே); அர்த²மாத்ர நிர்பா⁴ஸம்°=த்யானிக்கப்பட்ட வஸ்துவின் வடிவுடன் கூடிய; ஸ்வரூப ஶூந்யம் ஏவ = (சித்த விருத்தியின்) ஸ்வரூபம் இல்லாத சூன்யம் போன்றதே; ஸமாதி⁴​: = ஸமாதியாகும்.

த்யானிக்கப்படும் பொருளிலேயே (வஸ்துவிலேயே) சாதகனால் சித்தத்தை நிலை நிறுத்த முடியும்; ஆனாலும் சித்த விருத்தி கொஞ்சம் ஏற்பட்டாலும் பொருளின் (வஸ்துவின்) முழு சொரூபம் கிடைக்காமல் போய்விடும். ஸமாதி நிலையில் த்யானம் பொருளின் (வஸ்துவின்) சொரூபத்தில் முழுமையாக கலந்து விடுவதால் அதன் சொரூபம் மட்டுமே கிடைக்கும்; சித்த விருத்தியின் சொரூபம் கொஞ்சம் கூட இல்லாமல் போகும்.

வஸ்து, செயல், சாதகன் இவற்றில் ...
வஸ்துவும் செயலும் மட்டும் இருப்பது த்யானம்.
வஸ்து மட்டும் இருப்பது ஸமாதி.


ஸம்யமம் 


  त्रयमेकत्र संयमः ।।4।।
த்ரயமேகத்ர ஸம்°யம​: || 4||

த்ரயம் = [தாரணை, த்யானம், ஸமாதி - இம்] மூன்றும்; ஏகத்ர = ஒரே விஷயத்தில் செய்யப்படும் போது; ஸம்°யம​: = ஸம்யமம் எனப்படும்.


ஸம்யம பயிற்சியின் பலன்:

  तज्जयात्प्रज्ञालोकः ।।5।।
தஜ்ஜயாத்ப்ரஜ்ஞாலோக​: || 5||

தஜ்ஜயாத் =அதை வெற்றி கொள்வதால்; ப்ரஜ்ஞாலோக​: = ஸமாதி பிரக்ஞையின் பிரகாசம் உண்டாகிறது. 

ஸம்யமம் ஆனது எவ்வளுக்கெவ்வளவு நிலை பெறுகிறதோ அவ்வளக்கவ்வளவு ஸமாதியின் அறிவும் தெளிவாக உண்டாகிறது.

D S Mahadevan

unread,
Sep 10, 2014, 1:45:11 PM9/10/14
to mint...@googlegroups.com
நன்றி.  இதை நன்கு விளக்கி எழுதலாமே!

Geetha Sambasivam

unread,
Sep 10, 2014, 8:56:16 PM9/10/14
to மின்தமிழ்
திரு மஹாதேவன், உங்கள் கேள்வியைத் திரு வாசுதேவன் அவர்களுக்கு அனுப்புகிறேன்.  அவர் எழுதியதை சுபாவின் சொன்னதற்கு ஏற்ப இங்கே வெட்டி ஒட்டுகிறேன். 

திவாஜி

unread,
Sep 11, 2014, 4:56:43 AM9/11/14
to Geetha Sambasivam, மின்தமிழ்

2014-09-11 6:25 GMT+05:30 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
2014-09-10 23:15 GMT+05:30 D S Mahadevan <dsmah...@gmail.com>:
நன்றி.  இதை நன்கு விளக்கி எழுதலாமே!

எதை விளக்க வேண்டும் என்று சொன்னால் நலம்....

Innamburan S.Soundararajan

unread,
Sep 11, 2014, 4:59:24 AM9/11/14
to mint...@googlegroups.com
படிச்சுண்டு வரேன்.


--









இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Geetha Sambasivam

unread,
Sep 25, 2014, 5:23:03 AM9/25/14
to மின்தமிழ்
எதில் ஸம்யமம் செய்வது?:
 

 तस्य भूमिषु विनियोगः ।।6।।
தஸ்ய பூ⁴மிஷு விநியோக³​: || 6||

தஸ்ய = அதன் (ஸம்யமத்தின்); பூ⁴மிஷு = மேலுள்ள நிலைகளில்; விநியோக³​: = பயன் உண்டாகிறது.
ஒரு மட்ட ஸம்யமம் கைவரப்பெற்றால் அடுத்த கட்டம் எதுவோ அதில் ஸம்யமம் செய்ய வேண்டும். கீழ் மட்ட ஸம்யமம் கைவராமல் அடுத்த மட்ட ஸம்யமம் முயற்சி செய்தல் வீணாகும்.
ஸ்தூலமான விஷயமுள்ள ஸவிதர்க ஸமாதியை சாதித்துவிட்டதும் சாதகன் அதற்கு மேலுள்ள ஸூக்ஷ்ம விஷயமான நிர் விதர்க்க ஸமாதியை விரும்புகிறான். அதில் ஸம்யமம் செய்து அதில் ஸித்தி பெறுகிறான். இதே போல சவிசார வெற்றியை அடைந்த சாதகன் நிர்விசார வெற்றியை அடைய முயற்சி செய்ய வேண்டும். ஈஸ்வர பிரசாதத்தால் மேல் நிலை அடைந்தவன் கீழ் நிலையில் ஸம்யமம் செய்தல் அவசியமில்லை. ஆனால் அவரவர் யோக அனுபவத்தால் மேல், கீழ் நிலைகளை உணர வேண்டுமே அல்லாது எந்த சாஸ்திரமும் அதை சொல்ல இயலாது.


ஸம்ப்ரக்ஞாத ஸமாதிக்கு அந்தரங்க சாதனங்கள்:
 

त्रयमन्तरङ्गं पूर्वेभ्यः ।।7।।

த்ரயமந்தரங்க³ம்° பூர்வேப்⁴ய​: || 7||

த்ரயம் = (தாரணை, த்யானம், ஸமாதி இந்த) மூன்றும்; அந்தரங்க³ம்° = (ஸம்ப்ரக்ஞாத ஸமாதிக்கு அவசியமான) அந்தரங்க சாதனங்களாகும். = பூர்வேப்⁴ய​: = முன் சொன்னவற்றைக் காட்டிலும் (யமம் முதலானவை)
முன் சொன்ன யமம் முதலானவற்றைக் காட்டிலும் ஸம்ப்ரக்ஞாத ஸமாதிக்கு தாரணை, த்யானம், ஸமாதி இந்த மூன்றும் அவசியமான அந்தரங்க சாதனங்களாகும்.

அஸம்ப்ரக்ஞாத ஸமாதிக்கு பகிரங்க சாதனங்கள்: 

 तदपि बहिरंङ्गं निर्बीजस्य ।।8।।

தத³பி ப³ஹிரம்°ங்க³ம்° நிர்பீ³ஜஸ்ய || 8||

தத³பி = (தாரணை முதலான) அவையே; ப³ஹிரம்°ங்க³ம்° = பகிரங்கமானவை; நிர்பீ³ஜஸ்ய = நிர்பீஜ ஸமாதிக்கு.

தாரணை, த்யானம், ஸமாதி ஆகியன ஸம்ப்ரக்ஞாத ஸமாதிக்கு அந்தரங்க சாதனங்கள் ஆனாலும் அவை அஸம்ப்ரக்ஞாத பிரக்ஞாத நிர்பீஜ ஸமாதிக்கு பகிரங்க சாதனங்கள் ஆகும்.


ப்ரக்ஞை இருக்கும் போது உண்டாவது ஸம்ப்ரக்ஞாத ஸமாதி. அதனால் அப்போது சித்தத்தின் பரிணாமம் என்ன என்று தெரிகிறது. அஸம்ப்ரக்ஞாத ஸமாதியில் ப்ரக்ஞை இல்லை. அதனால் சித்தத்தின் பரிணாமம் அப்போது என்ன என்று தெரிவதில்லை; தெரிவதில்லை என்பதால் பரிணாமம் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. தாரணை, த்யானம், ஸமாதி ஆகியன சித்தத்தின் நிலை என்பதால் அவை அஸம்ப்ரக்ஞாத ஸமாதியில் உள்ளே இருப்பதாக – அந்தரங்கமானதாக – சொல்ல முடியாது.



நிரோத மாறுதல் (பரிணாமம்):
 

  व्युत्थाननिरोधसंस्कारयोरभिभवप्रादुर्भावौ निरोधक्षणचित्तान्वयो निरोधपरिणामः ।।9।।

வ்யுத்தா²நநிரோத⁴ஸம்°ஸ்காரயோரபி⁴ப⁴வப்ராது³ர்பா⁴வௌ நிரோத⁴க்ஷணசித்தாந்வயோ நிரோத⁴பரிணாம​: || 9||

(யதா= எப்போது) வ்யுத்தா²ந நிரோத⁴ ஸம்°ஸ்காரயோ: = (க்ஷிப்தம், விக்ஷிப்தம், மூடம் ஆகிய மூன்று அவஸ்தைகளில் எந்த மாறுதலும் இல்லாமல்) சுத்த ஸத்வமாக ஆக உரிய நிரோத நிலையினுடைய; அபி⁴ ப⁴வ ப்ராது³ர் பா⁴வௌ = வ்யுத்தானத்தின் குறைவும், நிரோதத்தின் விருத்தியும் ஏற்படுமோ; நிரோத⁴ க்ஷண சித்தாந்வயோ = நிரோதம் ஏற்படும் கணத்தில் சித்தத்துக்கு ஏற்படும் சேர்க்கையே: நிரோத⁴பரிணாம​: =நிரோத பரிணாமம் ஆகும். 
சித்தத்தின் தர்மம் வளர்ச்சி அல்லது ஒடுங்குதல். சித்தம் வளர்ச்சிமுகமாக (வ்யுத்தானத்துடன்) இருக்கும்; அல்லது தேய் முகமாக (நிரோதத்தில்) இருக்கும். ஒன்று வளர ஒன்று குறையும். சித்தத்திற்கு வெகு காலமாக வெளிக்கிளம்பியே பழக்கம். பயிற்சியால் சித்தம் நிரோதம் அடைய, ஒடுங்குதல் என்ற தர்மம் அதிகமாகி மேலும் மேலும் அது வலுப்பட்டு தேய்முகமாகும். இதுவே நிரோத பரிணாமம்.

Geetha Sambasivam

unread,
Oct 6, 2014, 7:22:50 AM10/6/14
to மின்தமிழ்
சித்த பரிணாமம், ஸமாதி பரிணாமம்:
 

  तस्य प्रशान्तवाहिता संस्कारात् ।।10।।

தஸ்ய ப்ரஶாந்தவாஹிதா ஸம்°ஸ்காராத் || 10||

தஸ்ய = நிரோதம் அடையும் சித்தத்திற்கு; ஸம்°ஸ்காராத் = நிரோத ஸம்ஸ்காரத்தில் இருந்து; ப்ரஶாந்த வாஹிதா = ப்ரசாந்தமான விக்ஷேப வாசனை இல்லாத ஸம்ஸ்கார பிரவாகம் (உண்டாகிறது) 
ஸமாதி பரிணாமம்:
 

सर्वार्थतैकाग्रतयोः क्षयोदयौ चित्तस्य समाधिपरिणामः ।।11।।

ஸர்வார்த²தைகாக்³ரதயோ​: க்ஷயோத³யௌ சித்தஸ்ய ஸமாதி⁴பரிணாம​: || 11||

ஸர்வார்த²தா = விக்ஷிப்த தன்மை; ஏகாக்³ரதயோ​: = ஒருமுகப்பட்ட தன்மை; (இவற்றுக்கு முறையே) க்ஷய = தேய்வும்; உ த³யோ = உதிப்பதும்; சித்தஸ்ய =சித்தத்தின்; ஸமாதி⁴ பரிணாம​: = ஸமாதி பரிணாமம் ஆகும்.

தன்னிலையில் இருந்து வெளி வரும் சித்தம் க்ஷிப்தம், விக்ஷிப்தம், மூடம் ஆகிய மூன்று நிலைகளை அடையக்கூடும்.
க்ஷிப்தம் என்பது: ரஜோ குண மேலீட்டால் வெளிப்பட்ட சித்தம் அருகாமையிலோ தூரத்திலோ உள்ள சுக துக்க விஷயங்களை சென்று அடைதலாகும். 
மூடம் என்பது: தமோ குண மேலீட்டால் இது செய்யத்தகுந்தது இது செய்யத்தகாதது என்ற பகுத்தறிவின்றி கோபம் முதலான உணர்ச்சிகளுடன் சம்பத்தப்பட்டு காரியம், தூக்கம், சோம்பல் ஆகியவறில் நிலை பெறுதலாகும். 
சத்வ குணம் மேலிட்டு சுகமாக இருக்கும் நிலை விக்ஷிப்தம் ஆகும். இந்த விக்ஷிப்தம் யோகம் இல்லை. ஏனென்றால் தமோ ரஜோ குண மூலமுண்டாகும் நிலையற்ற தன்மைக்கு செல்லவும் கூடும்; அல்லது அது மாறி சத் வஸ்துவில் நிலை அடையவும் கூடும். மேல் சொன்ன மூன்றும் ஸர்வார்த்ததை எனப்படும்.
சத் வஸ்துவில் நிலை அடைந்து த்யானிக்கத்தகுந்த வஸ்து தவிர வேறு எதிலும் நாட்டம் செல்லாது இருப்பதே ஏகாக்ரம் ஆகும். இதுவே மோக்ஷத்துக்கு சாதனம்; இதுவே சமாதி பரிணாமம். 

விக்ஷேப அழிவும் ஏக்காக்ரதையும் ஒரே நேரத்தில்:
 

 शान्तोदितौ तुल्यप्रत्ययौ चित्तस्यैकाग्रतापरिणामः ।।12।।

ஶாந்தோதி³தௌ துல்யப்ரத்யயௌ சித்தஸ்யைகாக்³ரதாபரிணாம​: || 12||

சித்தஸ்ய = சித்தத்தின்; ஶாந்த உதி³தௌ = விக்ஷேபம் போவதும் சாந்தம் உதிப்பதும்; துல்ய ப்ரத்யயௌ = இரு ஸமானமான விருத்திகளும்; ஏகாக்³ரதா பரிணாம​: = ஏகாக்ரதையின் பரிணாமங்களாகும்.

விக்ஷேபம் முற்றிலும் போவதற்கும் ஏகாக்ரதை வருவதற்கும் இடையில் எந்த நிலையும் இல்லை. (ஸூர்யன் உதிக்க இருட்டு அகலுவது போல.) நிரோத வழியில் பெருக்கு ஏற்படும்போது முன்னிருந்த நிலை போய் இன்னும் மேலான நிலை வர வர மேலும் மேலும் மேலான நிலைக்கு கொண்டு போகும் புதிய மாற்றம் (விருத்தி) ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். இது இரண்டும் தனித்தனியே ஏற்படாமல் ஒன்றாகவே ஏற்படுகின்றன. இதுவே நிரோத பரிணாமம் ஆகும். 

சித்த விருத்திகள் மஹாபூதங்களுக்கும் இந்திரியங்களுக்கும் பொருந்தும்:
 

एतेन भूतेन्द्रियेषु धर्मलक्षणावस्थापरिणामा व्याख्याताः ।।13।।

ஏதேந பூ⁴தேந்த்³ரியேஷு த⁴ர்மலக்ஷணாவஸ்தா²பரிணாமா வ்யாக்²யாதா​: || 13||

ஏதேந = மனதின் பரிணாமத்தை உபதேசித்ததாலேயே; பூ⁴தேந்த்³ரியேஷு = (ப்ருத்வீ முதலான) மஹா பூதங்களிலும், (சக்ஷு முதலான) இந்திரியங்களிலும்; த⁴ர்ம லக்ஷணாவஸ்தா² = தர்மம், லக்ஷணம் அவஸ்தை ஆகிய; பரிணாமா: = மாறுதல்கள்; வ்யாக்²யாதா​: = விவரிக்கப்படுகின்றன.

மனதின் பரிணாமத்தை உபதேசித்ததாலேயே ப்ருத்வீ முதலான மஹா பூதங்களிலும், கண் முதலான இந்திரியங்களிலும் தர்மம், லக்ஷணம் அவஸ்தை ஆகிய மாறுதல்கள் விவரிக்கப்படுகின்றன.


பரிணாமம் என்பது மாறுதல் அடைந்த நிலை. அவை தர்ம பரிணாமம், லக்ஷண பரிணாமம், அவஸ்தா பரிமாணம் என மூன்று வகையாகும்.

ஒரு வஸ்து எப்படிப்பட்டது என்பதற்கு அதன் அணுக்கள் காரணமாகும். இது தர்ம பரிணாமம். மண் கட்டியாக இருக்கிறது. அது குடமாகும் போது குடமும் மண்தான் என்றாலும் கட்டி என்ற இயல்பு போய் குடம் ரூபம் என்ற இயல்பாக ஆகிவிடுகிறது. இதே போல சித்தத்தின் வெளிநாட்டம் என்ற தர்மம் போகும்போது அகமுக நாட்டம் (நிரோதம்) என்பது தர்மம் -இயல்பு- ஆகிவிடும். இது தர்ம பரிணாமம். 

மேலும் ஒரு பரிணாமம் காலத்தை ஒட்டி மூன்றாகும். இந்த முக்காலங்களும் லக்ஷணமாகும். அனாகதம் என்பது வரவிருக்கிறது; வர்த்தமானம் என்பது நிகழ் காலம்; அதீதம் என்பது கடந்த காலம். இப்போது மண்ணாக இருப்பது எதிர்காலத்தில் குடமாகும் என்றால் மண்ணாக 'இருப்பது' வர்த்தமான பரிணாமம். இப்போது குடமாக இருப்பது எதிர்காலங்களில் உடைந்து மண்ணாகிவிடும். அது அனாகத லக்ஷணம்.

அவஸ்தை என்பது இருப்பு என்று பொருள் படும். மண் குடமாவது இன்று எனில் அது வர்த்தமான அவஸ்தை; நாளை எனில் அது அனாகத அவஸ்தை; அடுத்த கல்பத்தில் உண்டாகும் என்பது அனாகததமமான அவஸ்தை. இது அவஸ்தா பரிமாணம்.

Geetha Sambasivam

unread,
Oct 10, 2014, 7:18:39 AM10/10/14
to மின்தமிழ்
மேற்சொன்ன பரிணாமங்களுடைய தர்மீ:
 

 शान्तोदिताव्यपदेश्यधर्मानुपाती धर्मी ।।14।।
ஶாந்தோதி³தாவ்யபதே³ஶ்யத⁴ர்மாநுபாதீ த⁴ர்மீ || 14||

ஶாந்த = ஒரு காலத்தில் வேலை செய்து முடித்த; உதி³த = தற்காலத்தில் புதிய வேலை செய்து கொண்டுள்ள; அவ்யபதே³ஶ்ய = காரியத்துக்கு சக்தியாக இருக்கிற; த⁴ர்ம =தர்மத்தை; அநுபாதீ தொடர்ந்து அனுபவிப்பது; த⁴ர்மீ =தர்மீ என்கிற வஸ்துவாகும்.

 ஒரு காலத்தில் வேலை செய்து முடித்த, தற்காலத்தில் புதிய வேலை செய்து கொண்டுள்ள காரியத்துக்கு சக்தியாக இருக்கிற தர்மத்தை தொடர்ந்து அனுபவிப்பது தர்மீ என்கிற வஸ்துவாகும். 

தர்மீ என்பது என்ன? அது ஒரு வஸ்து. எந்த காரியம் நடக்கவும் ஒரு சக்தி பின்னால் வேண்டி இருக்கிறது. அது இல்லாமல் காரியம் நடப்பதில்லை. காரியம் மாறிக்கொண்டே இருந்தாலும் அதன் பின் உள்ள சக்தி அப்படியே இருக்கிறது. அந்த காரியம் நடக்க காரணமாக இருப்பது இந்த தர்மீதான். இது காரியம் நடக்காத போதிலும் மறைந்து இருக்கிறது. தகுந்த நேரம் வரும் போது அது வெளிப்படும்.

யோக சித்தாந்தப்படி காரணம் என்பது தர்மீ; கார்யம் தர்மம். மண் தர்மீ; குடம் தர்மம். காரியம் முடிந்தாலும் காரணம் எஞ்சும். குடம் உடைந்தாலும் மண் எஞ்சும்.
காரணத்தில் காரியம் சக்தி ரூபமாக மறைந்துள்ளது. சரியான நேரத்தில் வெளிப்படுகிறது. எந்த காரணத்தில் எந்த காரியம் உள்ளதென நம்மால் பிரித்து அறிய இயலாது. இப்படி சக்தியாக மட்டும் இருக்கும் நிலை அவ்யபதேச்யநிலையாகும். 


தர்மீயான வஸ்துவுக்கு மாறுதல் உண்டாக காரணம்:
 

क्रमान्यत्वं परिणामान्यत्वे हेतुः ।।15।।

க்ரமாந்யத்வம்° பரிணாமாந்யத்வே ஹேது​: || 15||

க்ரமாந்யத்வம்° = தோன்றும் முறையில் உள்ள வேறுபாடானது; பரிணாமாந்யத்வே = மாறுதலடையும் தர்மங்களில் வேறுபாட்டுக்கு; ஹேது​:= ஏதுவாகும். (நினைவாக; தெரிவிப்பதாக; அந்த விஷயமாக அறிவை உண்டாக்குவதாக.)

தோன்றும் முறையில் உள்ள வேறுபாடானது மாறுதலடையும் தர்மங்களில் வேறுபாட்டுக்கு ஏதுவாகும்.
காரணம் காரியமாகும் போது ஒரே மாதிரி மாறுவதில்லை. இது ஏன் என்றால் தோன்றும் முறையில் உள்ள வேறுபாட்டால்.

மண் பொடியாக இருக்கலாம் அல்லது உருண்டையாக இருக்கலாம். நீரின் ஓட்டம் கல்லை அரித்து அரித்து மண் பொடி உண்டாகிறது. அவை திரண்டு மண் உருண்டை ஆகலாம். இது தோன்றும் முறை - கிரமம். இந்த தோன்றும் முறையில் உள்ள வேறுபாடானது அதன் தோற்றத்தில் -பொடியாக இருப்பதற்கும், உருண்டையாக இருப்பதற்கும் - வேறு பாட்டை உண்டு செய்கிறது.

மண்ணில்; புதைந்த மரம் கரியாகிறது. ஆனால் வேறுவிதமாக இது உண்டானால் - அதிக அழுத்தம் உண்டானால் அதுவே வைரமாக ஆகிறது. தோன்றும் முறையில் வேறுபாடு மாறுதல் என்ன என்பதை நிர்ணயிக்க காரணமாகிறது.

இதே போல் லக்ஷண பரிணாமமும் அவஸ்தா பரிணாமமும்.

PG: குதிரில் கொட்டி வைத்த நெல் அப்படியே விட்டால் காலப்போக்கில் பொடியாகிவிடுகிறது. (சூர்ணாவஸ்தை) இது எப்போது நிகழ்கிறது? எப்போதுமே நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. தானியத்தில் இந்த பரிணாமம் நடந்துகொண்டேதான் இருக்கும். திடு திப்பென்று தான்யம் பொடியாகிவிடுவதில்லை.

எப்போதும் நிலையாக இருப்பது தர்மீ மட்டுமே. சொரூபமோ, லக்ஷணமோ, அவஸ்தையோ மாறிக்கொண்டேதான் இருக்கும். காமம், சுகம் போன்ற சில பரிணாமங்கள் நேரில் அனுபவத்தால் தெரிகிறது. ஆனால் சில பரிணாமங்கள் பார்க்க முடியாதவை. ஆகமம், அனுமானம் போன்றவற்றால் ஊகித்து அறிய வேண்டியன.
அப்படிப்பட்ட மறைவான மாற்றங்கள் கீழ் கண்டவாறு பிரிக்கப்படுகிறது:
1. நிரோதம். 2. கர்மம். 3.ஸம்ஸ்காரம். 4. பரிணாமம். 5. ஜீவனம். 6. சேஷ்டை. 7. சக்தி.
இவ்வேழு விருத்திகளும் பரோக்ஷமானவை (காண இயலாதவை). 
நிரோதம், ஸம்ஸ்காரம், பரிணாமம் பற்றி முன்பே பார்த்துவிட்டோம். 
புண்ணியமும் பாபமும் கர்மங்கள் ஆகும். 
சித்தம் முக்குண வடிவம்; அதில் ஒவ்வொரு கணமும் மாறுதல் நடப்பது அனுமானத்தாலேயே அறிய வேண்டி இருக்கிறது.
மூச்சு வருகிறது என்பதில் இருந்து உயிர் இருக்கிறது என - ஜீவனம்- ஊகித்து அறியப்படும்.
சரீரங்களின் சேஷ்டையில் இருந்து ஊகித்து அறியக்கூடிய சித்தத்தின் க்ரியைதான் சேஷ்டை. ஒருவன் முகத்தைப்பார்த்து இவன் கண்ணுல குறும்பு மின்னுது. ஏதோ குறும்பு செய்ய சிந்தனை ஓடுதுன்னு அறிகிறோம்.
கார்யங்களின் ஸூக்ஷ்ம -இருப்பே - அவஸ்தையே சக்தி.
---
இது வரை ஸம்யமங்களின் தர்மங்களை பார்த்தோம், இனி ஸம்யமத்தால் விஷய வசீகார ஞானம் பெறும் சித்திகள் சொல்லப்படும். 


முக்காலத்தையும் அறிந்து கொள்ள....
 

परिणामत्रयसंयमादतीतानागतज्ञानम् ।।16।।ணாமத்ரயஸம்°யமாத³தீதாநாக³தஜ்ஞாநம் || 16||

பரிணாம த்ரய= (தர்ம, லக்ஷண, அவஸ்தை என்ற) மூன்று பரிணாமங்களில்; ஸம்°யமாத்³ = ஸம்யமம் செய்ய; அதீத அநாக³த = இறந்த காலத்திலுள்ளதும், எதிர்காலத்தில் உள்ளதும் (பற்றிய); ஜ்ஞாநம் = ஞானம் (கிடைக்கும்)

சித்தம் இயற்கையில் சத்வமானது. அஞ்ஞானம் என்கிற அழுக்கால் மூடப்பட்டதால் இயற்கை குணம் வெளிப்படாமல் இருக்கிறது. ஸம்யமத்தால் இந்த அழுக்கை போக்கினால் இந்திரியங்களின் உதவி இல்லாமலே சித்தம் விஷயங்களை அறிந்துகொள்ளும்.
[ஸம்யமம்? முன்னேயே பார்த்தோம். தாரணை, த்யானம், ஸமாதி - இம் மூன்றும் ஒரே விஷயத்தில் செய்யப்படும் போது ஸம்யமம் எனப்படும். இந்த சொல் இனி அடிக்கடி வரும். ஆகையால் சரியாக புரிந்து கொள்ளுங்கள்.]

தர்மீயை பொறுத்த விஷயங்கள் எதிர்காலத்தில் இருந்துவிட்டு, நிகழ்காலத்துக்கு வந்து பின் இறந்த காலத்துக்கு சென்றுவிடுகிறது. தாரணை, த்யான, ஸமாதிகளால் ஸம்யமம் செய்ய முக்காலத்தையும் அறிந்து கொள்ளலாம்.

இப்படி மேலே இன்னும் பல விஷயங்களை சொல்லிக்கொண்டு போவர். கேட்க ஆசையாக இருந்தாலும் அடைய வேண்டும் என்ற உந்துதல் இருந்தாலும் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த ஸம்யமம் என்று ஒன்றைச்சொல்லுகிறார்களே அதுதான் நமக்கு பிரச்சினை. இது பல காலம் செய்த முறையான பயிற்சியால் உண்டாவது. There are no short cuts. யமம் முதலான வெளிமுகப் பயிற்சிகளும் தாரணை முதலான உள் முகப்பயிற்சிகளும் சரியாக செய்தால்தான் இவை சித்திக்கும். த்யானம் என்பது வெளி சிந்தனையே இல்லாமல் இருப்பது என்று சொல்லும் போது நாம் போக வேண்டிய தூரம் எவ்வளவு என்று அறிந்துகொள்ளலாம். இலக்குடன் முழுக்க முழுக்க ஒன்றிவிடுவதே ஸம்யமமாகும். இது நம்மால் சாதாரணமாக முடியாது. எதில் அப்படி ஒன்றுகிறோம் என்பதைப் பொறுத்து என்ன சித்திக்கும் என்று சொல்லப்படுகிறது.

Geetha Sambasivam

unread,
Apr 9, 2015, 6:04:49 AM4/9/15
to மின்தமிழ்
எல்லா ப்ராணிகளின் சப்தம் குறித்த ஞானம்...
 
शब्दार्थप्रत्ययानामितरेतराध्यासात्संकरस्तत्प्रविभागसंयमात्सर्वभूतरूतज्ञानम् ।।17।।
ஶப்³தா³ர்த²ப்ரத்யயாநாமிதரேதராத்⁴யாஸாத்ஸம்°கரஸ்தத்ப்ரவிபா⁴க³ஸம்°யமாத்ஸர்வபூ⁴தரூதஜ்ஞாநம் || 17||

ஶப்³த³= சப்த; அர்த² = பொருள்; ப்ரத்யயாநாம் = சப்தம், அர்த்தம் இவற்றால் புத்தியில் ஏற்படும் விருத்தி; இதரேதர அத்⁴யாஸாத் ஸம்°கர = இரண்டாலும் ஏற்படும் குழப்பம்; தத் ப்ரவிபா⁴க³ =இந்த மூன்றும் தனித்தனி என அறிந்து; ஸம்°யமாத் =ஸம்யமம் செய்ய; ஸர்வபூ⁴த ரூத ஜ்ஞாநம் = எல்லா ப்ராணிகளின் சப்தம் குறித்த ஞானம் (ஏற்படுகிறது). 
பசுவை கொண்டு வா என்ற சொற்களை கேட்பதாக வைத்துக்கொள்வோம். பசு என்று கேட்டதும் அந்த சப்தம் என்ன? அர்த்தம் என்ன? ஞானம் என்ன என்று கேட்டால் பசு என்பதே பதிலாகும். ஆனால் பசு என்பது ஒரு சப்தம் மட்டுமே: அதை கேட்டதும் உண்டாவது இன்ன பொருள் என்பதும் கற்பிக்கப்பட்டதே; அந்த சப்தம் இன்னதை குறிக்கிறது என்பதும் கற்பிக்கப்பட்டதே. இப்படி கற்பிப்பது சித்தத்தின் வேலை.
எல்லாம் ஒன்றாகவே இருப்பது போல தோற்றத்தை கொடுத்தாலும் அவற்றை பிரித்து தனித்தனியே ஸம்யமம் செய்பவன் உலகில் உள்ள எல்லா ப்ராணிகளின் சப்தத்தையும் அந்த சப்தத்தின் பொருளையும் ஞானத்தையும் அறிவான்.

ஸ்ரீமத் ராமாயணத்தில் கேகய ராஜா இப்படிப்பட்ட சித்தி அடைந்திருந்ததாக கதை உள்ளது. அவன் ராணியுடன் அந்தரங்கமாக இருக்கையில் திடீரென்று சிரிக்கிறான். ஏன் என்று அவனது மனைவி கேட்கையில் கட்டிலின் கீழ் இரண்டு எறும்புகள் பேசிக்கொண்டு இருப்பதை கேட்டதாயும் அதனால் சிரிப்பு வந்ததாயும் சொல்கிறான். அது என்ன என்று கேட்ட மனைவியிடன் "போக அங்கமான ஸத்ய ப்ரதிஷ்டை முதலியவற்றில் சித்தி அடைந்த ஒரு பெரியவர் பிராணிகள் பேசுவதை அறியும் முறையை உபதேசித்து இருக்கிறார். அதை வெளியில் சொல்ல முடியாது. அப்படி சொன்னால் உயிருக்கு ஆபத்து வருமென சொல்லி இருக்கிறார்" என்கிறான். இது போல பல பழைய கதைகளிலும் காணலாம்.


முற்பிறவியை அறியும் உபாயம்: 

संस्कारसाक्षात्करणात्पूर्वजातिज्ञानम् ।।18।।

ஸம்°ஸ்காரஸாக்ஷாத்கரணாத்பூர்வஜாதிஜ்ஞாநம் || 18||

ஸம்°ஸ்கார =(சித்தத்தில் உள்ள) ஸம்ஸ்காரத்தை; ஸாக்ஷாத் கரணாத் = ஸாக்ஷாத்கரிப்பதால்; பூர்வ ஜாதி ஜ்ஞாநம் = முன் பிறவி குறித்த ஞானம் (உண்டாகின்றது)

சித்தத்தில் உள்ள வாசனைகளில் ஒன்று நினைவை மட்டும் தரும். இன்னொன்று பிறப்பு, ஆயுள், சுகம், துக்கம் ஆகிய அனுபவங்களை தரக்கூடியது. கோடி கல்பங்கள் ஆனாலும் ஒருவரது செய்கைகள் அதற்கான பலனைத்தராது தேய்வதில்லை (नाभुक्तम् क्षीयते कर्म कोटि शतैरपि - நாபு4க்தம் க்ஷீயதே கர்ம கோடி ஶதைரபி). ஒருவரால் ஒரு சமயம் செய்யப்பட்ட செய்கைகள் ஸம்ஸ்கார ரூபத்தில் தன் பலனைத் தரும் வரையில் அசைவற்று இருக்கும் (कताचित् स्वक्रुतम् कर्म कूटस्तमिव तिष्टति - கதாசித் ஸ்வக்ருதம் கர்ம கூடஸ்தமிவ திஷ்டதி)
பொதுவாகவே எவன் எதில் ஸம்யமம் செய்கிறானோ அங்குள்ளவற்றை ஸம்யம பலத்தால் அவன் அறிகிறான்.
இப்படிப்பட்ட ஸம்ஸ்காரங்களில் ஸம்யமம் செய்து அவற்றை நேரில் காண்பவனுக்கு எந்த அனுபவம் இந்த ஸம்ஸ்காரத்தை கொடுத்ததோ அந்த அனுபவம் என்ன என்று தெரிகிறது. இதுவே பூர்வ ஜன்ம ஞானமாகும். யோகி இதே போல மற்றவரின் ஸம்ஸ்காரத்தில் ஸம்யமம் செய்தால் அவருடைய பூர்வ ஜன்மத்தைப்பற்றி அறிகிறார்.


பிறரின் சித்தத்தில் ஸம்யமம்.. 

 प्रत्यस्य परचित्तज्ञानम् ।।19।।
ப்ரத்யஸ்ய பரசித்தஜ்ஞாநம் || 19||

ப்ரத்யஸ்ய =ராகம் முதலானவை குடி கொண்டுள்ள தன் சித்த விருத்தியை ஸம்யமம் செய்ததால்; பரசித்த=மற்ற சித்தங்களின்; ஜ்ஞாநம் = அறிவு ஏற்படுகிறது.
பிறர் மனது எத்தகையது என்பதை அறிதலானது, ராகம் முதலானவை குடி கொண்டுள்ள தன் ஸம்ஸ்காரங்களை ஸாக்ஷாத்கரிப்பதால் ஏற்படுகிறது. அட! அதுதான் போன சூத்திரத்தில சொல்லிட்டாரே? ஏன் திருப்பி? 

  न च तत्सालम्बनं तस्याविषयीभूतत्वात् ।।20।।
ந ச தத்ஸாலம்ப³நம்° தஸ்யாவிஷயீபூ⁴தத்வாத் || 20||

ஸ ஆலம்ப³நம்° = ராகம் முதலியன குடிகொண்ட; தஸ்ய = அந்த ஸம்யமத்துக்கு; அவிஷயீ பூ⁴தத்வாத் = விஷயமாக ஆகாததால்; ந ச தத் = அந்த பிறருடைய சித்தம் ஸம்யமத்தால் அறியப்பட மாட்டாது. 
பிறர் சித்தம் சுத்தமாக இல்லாமையால் அதில் ஸம்யமம் செய்ய இயலாது; பொதுவாக அதை அறியலாமே தவிர அதில் ஏற்படும் சலனங்களை அறிய முடியாது.

குழப்புதா? 
தெரிந்த ஏதோ ஒரு விஷயத்தில்தான் ஸம்யமம் செய்ய முடியும். தெரியாத விஷயத்தில் செய்ய இயலாது.
தன் சம்ஸ்காரத்தில் ஸம்யமம் செய்யும் போது அதே போல் சம்ஸ்காரம் இருக்கும் பிறரின் சித்தத்தில் ஸம்யமம் ஏற்பட முடியும். அப்போது அவருடைய சித்தத்தை அறிய முடியும்.
ஆனால் தன் சித்தத்தில் ஏற்படுவதற்கு மாறான விஷயங்கள் பிறர் மனதில் ஏற்பட்டால் அதை அறிய முடியாது.
ஒரு காட்சியை பார்க்கிறோம். நமக்கு ஏற்படும் அதே மனத்தாக்கம் பிறருக்கும் ஏற்படுமேயானால் அதை நாம் அறிந்து கொள்ளலாம். மற்றவருக்கு வேறு மனத்தாக்கம் ஏற்பட்டால் அதை அறிய முடியாது. 


யோக மார்க்கம் --பதஞ்சலி யோகம் -- பகுதி ஒன்று
எழுதியது திருமூர்த்தி வாசுதேவன்


 பல மாதங்கள் தாமதத்திற்குப் பின்னர் இன்று மீண்டும் வெளியிட ஆரம்பித்துள்ளேன். தாமதம் ஆனதற்குக் காரணம் நானே. பற்பல வேலைகளிலும், அடுத்தடுத்து வீட்டில் வேலைகளாலும் பல வேலைகளை நிறுத்தி வைக்கும்படி ஆகி விட்டது.  இனி சரியாகும் என்று எதிர்பார்க்கிறேன்.  பொறுத்தருள்க!  நன்றி!

Oru Arizonan

unread,
Apr 9, 2015, 1:49:45 PM4/9/15
to mintamil
கீதா அம்மா அவர்களே,
தாங்கள் "ஶாந்த" என்ற சொல்லுக்கு "ஒரு காலத்தில் வேலை செய்து முடித்த" என்ற பொருளைப் பதிந்திருக்கிறீர்கள்.  ஆனால், அப்படிப்பட்ட பொருளை நான் இதுவரை படித்ததில்லை. 

 அமைதியடைந்த , நிறுத்தப்பட்ட, முடிவடைந்த, என்றுதான் படித்திருக்கிறேன். " [ஒரு காலத்தில் செய்யப்பட்டு] முடிவடைந்த" என்று,  "ஒரு காலத்தில் செய்யப்பட்டு] "என்பதைத் தங்கள் விளக்கமாக அடைப்புக் குறியில் கொடுத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

ஏனெனில், முதலில் தாங்கள் கொடுத்தது பதவுரை.  பதவுரையில் சொற்களுக்கு திரிபு இல்லமால் விளக்கம் கொடுக்கவேண்டும் என்பதே விதி.  பிறகு, பொழிப்புரையில்  தங்கள் விளக்கத்தைக் கொடுத்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது.

நான் எழுதியது அதிகப்பிரசங்கித்தனம் என்று தோன்றினால், என்னை மன்னிக்க.

ஒரு அரிசோனன் 


शान्त[1] : Monier William's Sanskrit-English Dictionary, 2 nd Ed. 1899    Report an error about this Word-Meaning
mfn.
  • (perhaps always w.r. for 1. शात q.v.) = शानित L.
  • thin, slender Hariv. R. (Sch.)
शान्त[2] : Monier William's Sanskrit-English Dictionary, 2 nd Ed. 1899    Report an error about this Word-Meaning
mfn.
  • (fr. √1. शम्) appeased, pacified, tranquil, calm, free from passions, undisturbed Up. MBh. &c.
  • soft, pliant Hariv.
  • gentle, mild, friendly, kind, auspicious (in augury ; opp. to दीप्तAV. &c.
  • abated, subsided, ceased, stopped, extinguished, averted ( शान्तम् or धिक् शान्तम् or शान्तम् पापम्, may evil or sin be averted! may God forfend! Heaven forbid! not so!) ṠBr. MBh. Kāv. &c.
  • rendered ineffective, innoxious, harmless (said of weapons) MBh. R.
  • come to an end, gone to rest, deceased, departed, dead, died out ib. Ragh. Rājat.
  • purified, cleansed W.
m.
  • an ascetic whose passions are subdued W.
  • tranquillity, contentment (as one of the रसs q.v.)
  • N. of a son of Day MBh.
  • N. of a son of मनु तामस MārkP.
  • N. of a son of शम्बर Hariv.
  • N. of a son of इध्म-जिह्व BhP.
  • N. of a son of आप VP.
  • N. of a देवपुत्र Lalit.
  • Emblica Officinalis L.
  • Prosopis Spicigera and another species L.
  • a kind of दूर्वा grass L.
  • partic. drug (= रेणुकाL.
  • N. of a daughter of दश-रथ (adopted daughter of लोम-पाद or रोम-पाद and wife of ऋष्य-शृङ्गMBh. Hariv. R.
  • (with जैनs) of a goddess who executes the orders of the 7th अर्हत् L.
  • N. of a शक्ति MW.
n.
  • tranquillity, peace of mind BhP.


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Geetha Sambasivam

unread,
Apr 9, 2015, 11:53:47 PM4/9/15
to மின்தமிழ், Tirumurti Vasudevan, Vasudevan Tirumurti
திரு அரிசோனருக்கு,

மிக்க நன்றி.  தங்கள் சந்தேகம் திரு தி.வா. (திருமூர்த்தி வாசுதேவன்) அவர்களுக்கு அனுப்பப்படுகிறது. விரைவில் அவர் பதில் கூறுவார். 

2015-04-09 23:19 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
கீதா அம்மா அவர்களே,
தாங்கள் "ஶாந்த" என்ற சொல்லுக்கு "ஒரு காலத்தில் வேலை செய்து முடித்த" என்ற பொருளைப் பதிந்திருக்கிறீர்கள்.  ஆனால், அப்படிப்பட்ட பொருளை நான் இதுவரை படித்ததில்லை. 

 
யோக மார்க்கம் --பதஞ்சலி யோகம் -- பகுதி ஒன்று
எழுதியது திருமூர்த்தி வாசுதேவன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Geetha Sambasivam

unread,
Apr 10, 2015, 9:20:41 AM4/10/15
to மின்தமிழ்
கண்ணுக்கு தெரியாமல்... 

  कायरूपसंयमात्तद्ग्राह्यशक्तिस्तम्भे चक्षुष्प्रकाशसंप्रयोगेऽन्तर्धानम् ।।21।।
காயரூபஸம்°யமாத்தத்³க்³ராஹ்யஶக்திஸ்தம்பே⁴ சக்ஷுஷ்ப்ரகாஶஸம்°ப்ரயோகே³'ந்தர்தா⁴நம் || 21||

காய ரூப ஸம்°யமாத் = தன் உடலின் ரூபத்தில் ஸம்யமம் செய்வதால்; தத்³ க்³ராஹ்ய ஶக்தி = அதை கிரகிக்கும் சக்தி; ஸ்தம்பே⁴ = நின்றுவிடும்; சக்ஷுஷ் ப்ரகாஶஸம்° ப்ரயோகே³ = கண்களின் ப்ரகாச சக்தி சேராமையால்; அந்தர்தா⁴நம் = கண்ணுக்கு தெரியாமல் ஆகிறது.

நம் கோட்பாடுகளின் படி ஒரு பொருளை நாம் பார்க்க வேண்டுமானால் நம்மிலிருந்து ஒரு சக்தி கிளம்பி அந்த பொருளை அடைந்து அதனுடன் சேர வேண்டும். அப்போதுதான் அந்த பொருள் காணப்படும். தன் உடலில் ஸம்யமம் செய்வதால் அப்படி ஒரு சக்தி தன்னுடன் சேர உடல் மறுக்கும். அதனால் அந்த உடல் பிறர் கண்களுக்குத் தெரியாது. இது போலவே எல்லா இந்திரியங்களும். ஓசை, தொடுதல், சுவை, வாசனை ஆகியவற்றில் ஸம்யமம் செய்து அவற்றை பிறருக்கு புலப்படாதபடி மறைக்க இயலும். இப்படியும் சித்திகள் உண்டு.


மரணம் எப்போது என அறிதல்...
 
सोपक्रमं निरुपक्रञ्च कर्म तत्संयमादपरान्तज्ञानमरिष्टेभ्यो वा ।।22।।
ஸோபக்ரமம்° நிருபக்ரஞ்ச கர்ம தத்ஸம்°யமாத³பராந்தஜ்ஞாநமரிஷ்டேப்⁴யோ வா || 22||

ஸோபக்ரமம்° = இப்போது பலன் தரும் நிலையில் உள்ளது; நிருபக்ரஞ்ச = வேறு காலத்தில்தான் பலன் கொடுக்கும், இப்போது கொடுக்காதது; கர்ம (என) கர்மம் (இரு வகையாகும்) தத் ஸம்°யமாத்³= அதில் ஸம்யமம் செய்வதில் இருந்து; அரிஷ்டேப்⁴யோ வா = (அல்லது) தோன்றும் அசுபக்குறிகளில் இருந்தோ; அபராந்த ஜ்ஞாநம் =மரணம் எப்போது என்ற ஞானம் ஏற்படுகிறது.


வெய்யிலில் உலர்த்திய துணி போல பலன் கொடுக்க தயாராக உள்ள கர்மா உடனடியாக பலனை கொடுத்துவிடும். மற்றபடி காற்று, வெய்யில் இல்லாத இடத்தில் உலர்த்திய துணி போல பலன் கொடுக்க தயாராக இல்லாத கர்மா உடனடியாக பலனை கொடுக்க முடியாது. அது அதன் காலக்கிரமத்தில்தான் கொடுக்கும். அது வரை அது சித்தத்தில் ஸம்ஸ்கார ரூபமாகவே இருக்கும். இந்த கர்மாக்கள் எப்போது பலன் தரும் என்பதை அறிவதன் மூலம் ஒருவன் தன் ஆயுளின் முடிவு காலத்தை அறிந்துகொள்ளலாம்.

சோப கர்மத்தை அறியும் யோகி அதை சீக்கிரம் அனுபவித்து முடிக்க முயற்சி செய்வான். அப்போதுதானே கணக்கு தீர்ந்து பூஜ்யத்துக்கு வந்து மோக்ஷம் கிடைக்கும்? ஏதேனும் கர்மம் அனுபவிக்க பாக்கி இருக்கும் வரை மறு பிறவி இருந்து கொண்டே இருக்கும். அதனால் யோகி பல உடல்களை எடுத்து அனுபவித்து தீர்த்துவிடுவான். ஒரே உடலால் அத்தனையும் அனுபவிக்க உடல் தாக்குப்பிடிக்காது.

யோக பயிற்சி இல்லாதவரும் தன் கடைசி காலம் நெருங்குவதை தெரிந்துகொள்ளலாம்.
கைகளால் காதுகளைப் பொத்திக்கொள்ள பிராணன்களின் சப்தம் கேட்காமை; நிமித்தமின்றி யமதூதர் போன்றோரை காண்பது; நிமித்தமின்றி சொர்கம் போன்றவற்றை காண்பது - இவை அசுப குறிகளாகும்.

மேலும் வைத்ய ரத்னாகரம் கூறுகிறது:
தனது நாக்கையும் மூக்கின் நுனியையும் இரண்டு புருவங்களின் மத்தியையும் ஆயுளின் இறுதியை எட்டியவர் காண்பதில்லை. அதாவது மரணம் சமீபித்துவிட்டால் இவற்றை காண முடியாது.
திடீரென பெருத்தும் இளைத்தும் திடீரென வேறு மாதிரி மாறி விடுபவர்களும் 6 மாதங்களுக்குள் இறப்பர்.
நல்ல குளிரால் பீடிக்கப்பட்டு இருந்தாலும், நல்ல சரீர புஷ்டி இருப்பினும் எந்த மனிதனின் நெற்றியில் பனி போன்ற வியர்வை உண்டாகிக் கழுத்துக் குழியில் தங்கி அங்கிருந்து மார்பு வரை வழிந்தோடுகிறதோ அவன் விரைவில் இறப்பான்.
இரவில் எரிச்சலும் பகலில் குளிரும் கண்டத்தில் சிலேஷ்மமும் (சளி) நாக்கில் வறட்சியும், கண்களில் குங்குமம் போன்ற சிவப்பும் நாக்கு கருமையடைந்து எப்போதும் நீர் வடிதலும் நரம்புகள் எப்போதும் ஸ்தூலமாகவும் ஸூக்ஷ்மமாகவும் இருப்பதும் மரண காலம் நெருங்கிவிட்டதை குறிக்கும்.

மித்ரத்தன்மையும் கருணையும்:
  मैत्र्यादिषु बलानि ।।23।।

மைத்ர்யாதி³ஷு ப³லாநி || 23||

மைத்ரி ஆதி³ஷு =மைத்ரீ முதலானவற்றில்; (ஸம்யமம் செய்யின்) ப³லாநி = பலவிதம் (பலவிதமான சக்திகள் உண்டாகும்)

முன்பு உலகில் சுகமாக இருக்கும் சத்துக்களிடம் மித்ரத்தன்மை வேண்டும் என்று பார்த்தோம் இல்லையா? அப்படி செய்யும் யோகி அதில் ஸம்யமம் செய்யின் உலகில் உள்ள எல்லா ஜீவர்களையும் சுகம் அனுபவிப்போராக செய்யும் திறன் உண்டாகிறது.
துக்கமுளோரிடன் உள்ள துக்கத்தை போக்க வேண்டுமென பாவிப்பவனுக்கு துக்கத்தில் இருந்தோ அதன் காரணங்களில் இருந்தோ அப்பிராணிகளை காப்பாற்றும் திறன் உண்டாகின்றது. புண்ணியம் செய்வோரிடம் திருப்தியை எண்ணுபவனுக்கு எதிலும் நடுநிலை வகிக்கும் திறன் உண்டாகின்றது. பாபிகளிடம் சித்தம் செல்வது ஸம்யமம் ஆகாது. அதனால் பலனில்லை. 

Oru Arizonan

unread,
Apr 10, 2015, 12:38:56 PM4/10/15
to mintamil
திவாஜி அவர்கள் அருமையாக  விளக்கம் எழுதியுள்ளார்.  

ஒரு தாழ்மையான விண்ணப்பம்.  

முக்கியமான இடங்களில் சொற்களை வடமொழியில் எழுதி உள்ளதால் பலருக்கும் புரிந்துகொள்வது கடினமாக இருக்கும். (உ-ம்): ஸம்யமம், ஸ்தூலம், ஸூக்ஷ்மம், கண்டம்.

"சிலேஷ்மம் (சளி)" என்று குறிப்பிட்டதைப்போல அடைப்புக்குறியில் அனைவரும் புரிந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களைக் கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்குமே!

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba.T.

unread,
Apr 10, 2015, 12:43:40 PM4/10/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-04-10 18:38 GMT+02:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
திவாஜி அவர்கள் அருமையாக  விளக்கம் எழுதியுள்ளார்.  

​மற்றொரு இழையில் இப்படி குறிப்பிட்டிருக்கின்றீர்கள் திரு அரிசோணன்.
&&

2015-04-10 18:10 GMT+02:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
//மேகலா ஜி//

இப்படி 'ஜி'போட்டு எழுதுவதைக்கண்டால் எனக்குச் 'சீ'யென்று ஆகிவிடுகிறது.  உடலெல்லாம் பற்றி எரிகிறது.  வலிந்து வேறொரு மொழியைப் புகுத்தித்தானாகவேண்டுமா செல்வன்?

&&​
 

​இங்கேயோ நீங்களே திவாஜி எனக் குறிப்பிடுகின்றீர்கள்.
இவரது பெயர் திருமூர்த்தி வாசுதேவன். தாங்கள் இதுவரை அறியாமல் இருந்தால் இது உதவும் என்ற கருத்தில் இச்செய்தியை வழங்குகின்றேன்.

சுபா

Malarvizhi Mangay

unread,
Apr 10, 2015, 1:17:55 PM4/10/15
to mint...@googlegroups.com

வாதம் பித்தம் சிலேட்டுமம் _இது சிலேஷ்மமா?

Oru Arizonan

unread,
Apr 10, 2015, 1:21:31 PM4/10/15
to mintamil
//இங்கேயோ நீங்களே திவாஜி எனக் குறிப்பிடுகின்றீர்கள்.//

திருமூர்த்தி வாசுதேவன் அவர்கள் தனக்குத்தானே "திவாஜி" என்ற பட்டத்தைச் சூட்டிக்கொண்டார் என்பதை நான் அறிவேன்.  எனவே, பெயர்ச்சொல் என்ற முறையில் அவரது புனைப்பெயரான "திவாஜி" என்ற சொல்லை அவருக்கு மரியாதை அளிக்கும் வகையில் அப்படியே கையாண்டேன்.

ஆனால், மேகலா அவர்களுக்கு, "மேகலா ஜி" என்றெழுதி "ஜி" என்ற அடைமொழி கொடுப்பதைப்பற்றிய எனது கருத்தையே எழுதினேன்.  அது என் கருத்து மட்டுமே!

"திவாஜி" என்ற புனைப்பெயருக்கும், "மேகலா ஜி"  அடைமொழி கொண்ட பெயருக்கும் உள்ள வேறுபாட்டை என்னால் காணமுடிகிறது.

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Apr 10, 2015, 1:28:07 PM4/10/15
to mintamil
//சிலேட்டுமம் _இது சிலேஷ்மமா//

ஆமாம்.  "ஷ்" என்னும் வடமொழி ஒலிப்பு  தமிழ் இலக்கணப்படி "ட்" ஆகி, ஸ்லேஷ்மம் என்னும் சொல், சிலேட்டுமம் ஆக உருப்பெறுகிறது.

Geetha Sambasivam

unread,
Apr 14, 2015, 4:30:52 AM4/14/15
to மின்தமிழ்
யானை பலம் பெறுதல், தூர திருஷ்டி:
 
बलेषु हस्तिबलादीनि ।।24।।

ப³லேஷு ஹஸ்திப³லாதீ³நி || 24||

ப³லேஷு = (யானை, கருடன், வாயு ஆகியோரின்) பலத்தில் ஸம்யமம் செய்ய; ஹஸ்தி ப³லாதீ³நி = அவற்றின் பலம் கிடைக்கும். இயற்கையிலேயே சித்தம் மிக்க பலம் வாய்ந்தது. ஸம்யமம் சேர்ந்தால் சாதிக்க இயலாதது ஏதுமில்லை.

  प्रवृत्त्यलोकन्यासात्सूक्ष्मव्यवहितविप्रकृष्टज्ञानम् ।।25।।

ப்ரவ்ரு«த்த்யலோகந்யாஸாத்ஸூக்ஷ்மவ்யவஹிதவிப்ரக்ரு«ஷ்டஜ்ஞாநம் || 25||

ப்ரவ்ரு«த்த்ய லோக ந்யாஸாத் = (பாதம் 1 சூத்திரம் 36) ஜ்யோதிஷ்மதீ ப்ரவ்ருத்தியில் ஜ்யோதிசில் ஸம்யமம் செய்யின்; ஸூக்ஷ்ம வ்யவஹித = ஸுக்ஷ்மமாக உள்ளவற்றில்; விப்ர க்ரு«ஷ்ட ஜ்ஞாநம் = அறிவு உண்டாகிறது. 
வெகு நுண்ணிய பரமாணு, வெகு தூரத்தில் உள்ள மஹாமேரு, வெகு ஆழத்தில் உள்ள புதையல்கள் இவற்றின் தெளிந்த அறிவு உண்டாகிறது.

பத லோகங்களில் ஞானம்:
 
भुवनज्ञानं सूर्ये संयमात् ।।26।।

பு⁴வநஜ்ஞாநம்° ஸூர்யே ஸம்°யமாத் || 26||

பு⁴வநஜ்ஞாநம்° = புவனங்களைப்பற்றிய அறிவு; ஸூர்யே =சூரியனில்; ஸம்°யமாத் = ஸம்யமம் செய்யின்.

சூர்ய மண்டலத்தில் ஸம்யமம் செய்யும் யோகிக்கு எல்லா உலகங்களையும் பற்றிய ஞானம் உண்டாகிறது.

இப்படியே எந்த இடத்தில் ஸம்யமம் செய்கிறோமோ அந்த இடத்தை பற்றி முழுதும் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.
--- 
புவனங்கள் ஏழு. பூமியின் சரியான நடுவில் மஹாமேரு பர்வதம் தூண் போல் உள்ளது. (north pole) மேருவின் பின் பக்கம் பூலோகம். அடியில் அவீசி நரகம். இதை அடுத்து வரிசையாக மஹாகாலம், அம்பரீஷம், ரௌரவம்,மஹாரௌரவம், கால சூத்திரம், அந்ததாமிஸ்ரம் என 6 நரகங்கள். மஹாகாலம் பூமியிலும்; அம்பரீஷம் நீரிலும்; ரௌரவம் நெருப்பிலும் மஹாரௌரவம் வாயுவிலும்; காலசூத்திரம் ஆகாசத்திலும்; அந்ததாமிஸ்ரம் தமஸ் ஆகிய இருளிலும் உள்ளன. இவற்றுக்கு பாப கர்மாக்களின் பலனை அனுபவிக்க ஜீவர்கள் செல்கின்றனர். புண்ணிய கர்மாக்களின் பலனாகிய சுகத்தை எல்லோரும் விரும்புகின்றனர்; ஆனால் புண்ணிய கர்மாக்களை செய்வதில்லை. பாப கர்மாக்களின் பலனாகிய துக்கத்தை எல்லோரும் வெறுக்கின்றனர்; ஆனால் பாப கர்மாக்களை ஆவலுடன் செய்கின்றனர்.
மேலும் மஹாதலம், ரஸாதலம், அதலம், சுதலம், விதலம், தலாதலம், பாதாலம் என 7 பாதாலங்கள் உள்ளன.

நக்ஷத்திரங்கள் 

चन्द्रे ताराव्यूहज्ञानम् ।।27।।
சந்த்³ரே தாராவ்யூஹஜ்ஞாநம் || 27||

சந்த்³ரே =சந்திர மண்டலத்தில் (ஸம்யமம் செய்ய); தாரா வ்யூஹ ஜ்ஞாநம் = நக்ஷத்திரங்களின் தனித்தனியான நிலைகளின் ஞானம் ஏற்படுகிறது.

  ध्रुवे तद्गतिज्ञानम् ।।28।।
த்⁴ருவே தத்³க³திஜ்ஞாநம் || 28||

த்⁴ருவே =துருவ நக்ஷத்திர மண்டலத்தில் (ஸம்யமம் செய்ய); தத்³க³தி = நக்ஷத்திரங்களின் சஞ்சாரம் ஜ்ஞாநம் (குறித்த) ஞானம் (ஏற்படுகிறது.)

இது வரை வெளியே உள்ளவற்றில் ஸம்யமம் செய்வதன் பலன்களை சொன்னார். இனி உள்ளே உள்ளவை. இவை ஆந்தர சித்திகள் ஆகும்.


Oru Arizonan

unread,
Apr 14, 2015, 1:20:16 PM4/14/15
to mintamil
ஸம்யமம் என்ற சொல் அடிக்கடி குறிப்பிடப்பட்டுள்ளது.  அதற்குச்சரியான தமிழ்ச்சொல்லை எழுதினால், அனைவராலும் புரிந்துகொள்ள எளிதாக இருக்கும்.

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Geetha Sambasivam

unread,
Apr 15, 2015, 8:32:08 AM4/15/15
to மின்தமிழ், Tirumurti Vasudevan, Vasudevan Tirumurti
ஒரு அரிசோனரே,
உங்கள் வேண்டுகோள் திரு தி.வா. அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.  நன்றி.

Geetha Sambasivam

unread,
Apr 16, 2015, 11:40:41 PM4/16/15
to மின்தமிழ்
ஆந்தர சித்திகள்:
 
  नाभिचक्रे कायव्यूहज्ञानम् ।।29।।

நாபி⁴சக்ரே காயவ்யூஹஜ்ஞாநம் || 29||

நாபி⁴ சக்ரே = நாபியில் உள்ள சக்கரத்தில் (ஸம்யமம் செய்ய); காய வ்யூஹ = உடலைப்பற்றிய; ஜ்ஞாநம் = ஞானம் உண்டாகிறது.
நாபிச்சக்ரம் உடலின் நடுவில் இருந்து கொண்டு உடல் முழுதும் பரவியுள்ள நாடிகளுக்கு ஆதாரமாக உள்ளது. எனவே இதி ஸம்யமம் செய்ய முழு உடலைப்பற்றிய ஞானம் கிடைக்கும்.

  பசி, தாகங்களை நீக்குதல்:

कण्ठकूपे क्षुत्पिपासानिवृत्तिः ।।30।।

கண்ட²கூபே க்ஷுத்பிபாஸாநிவ்ரு«த்தி​: || 30||

கண்ட²கூபே =உள் நாக்குக்கு கீழே உள்ள கிணறு போன்ற இடத்தில் (ஸம்யமம் செய்ய); க்ஷுத் பிபாஸா = பசி, தாக; நிவ்ரு«த்தி​: = நீக்குதல் கிடைக்கிறது.

சித்தம் நிலை பெற உபாயம், சித்த புருஷர்களை காண: 

कूर्मनाड्यां स्थैर्यम् ।।31।।

கூர்மநாட்³யாம்° ஸ்தை²ர்யம் || 31||

ஆமை போன்றது நெஞ்சுக்குழிக்கு (கண்டகூபத்துக்கு) கீழ் உள்ள நாடி. அதில் ஸம்யமம் செய்ய மனம் வெளியே சஞ்சரிக்காது. ஆமை உடலை உள்ளிழுத்துக்கொள்வது போல் மனம் உள்ளிழுக்கப்படும்.

  मूर्धज्योतिषि सिद्धदर्शनम् ।।32।।

மூர்த⁴ஜ்யோதிஷி ஸித்³த⁴த³ர்ஶநம் || 32||

மூர்த⁴ ஜ்யோதிஷி = உச்சந்தலையில் (பிரம்ம ரந்திரத்தில்) [ஸம்யமம் செய்ய]; ஸித்³த⁴ த³ர்ஶநம் = சித்த புருஷர்களின் தரிசனம் கிடைக்கிறது.

ஊஹத்தால் உண்டாகும் சித்தி, சித்த வாஸனா ஞானம்: 

प्रातिभाद्वा सर्वम् ।।33।।

ப்ராதிபா⁴த்³வா ஸர்வம் || 33||

ப்ரதிபா என்பது முன் பின் எந்த ஆலோசனை காரணம் இன்றி மனதில் திடீரென ஏற்படும் ஒரு வித ஞானம். இதை ஆங்கிலத்தில் இன்ட்யூஷன் என்பர். தமிழில் ஊகம் எனலாம்.

ப்ராதிபா⁴த்³வா = பிரதிபையில் ஸம்யமம் செய்யின்; ஸர்வம் = எல்லாம் (தெரிய வருகிறது.)

சூரியன் உதயமாகு முன் அருணன் உதயாமாக உலகில் எல்லாம் தெரிவது போல; விவேக க்யாதி வரு முன் ஸூசகமாக சித்தத்தில் ப்ரதிபை தோன்றுகிறது. இதில் ஸம்யமம் செய்யும் யோகி மற்ற ஸம்யமங்களின் தேவை இன்றி எல்லாவற்றையும் அறிந்து கொள்கிறான்.

  हृदये चित्तसंवित् ।।34।।

ஹ்ரு«த³யே சித்தஸம்°வித் || 34||

ஹ்ரு«த³யே = ஹ்ருதயத்தில் (ஸம்யமம் செய்யின்); சித்த ஸம்°வித் = சித்தத்தின் அறிவு உண்டாகிறது.

இங்கு சொல்லப்படும் ஹ்ருதயம் பௌதிக ஹ்ருதயம்தான். (மார்பில் தாமரை மொக்கு போல் தலைகீழாக தொங்கும் மாம்ஸ பிண்டம்.) 

Geetha Sambasivam

unread,
Apr 18, 2015, 8:20:24 AM4/18/15
to மின்தமிழ்
புருஷனைப்பற்றிய ஞானம். :
 
सत्त्वपुरुषयोरत्यन्तासंकीर्णयोः प्रत्ययाविशेषो भोगः  परार्थत्वात्स्वार्थसंयमात्पुरुषज्ञानम् ।।35।।
Patanjali Yoga sutra:
ஸத்த்வபுருஷயோரத்யந்தாஸம்°கீர்ணயோ​: ப்ரத்யயாவிஶேஷோ போ⁴க³​: பரார்த²த்வாத்ஸ்வார்த²ஸம்°யமாத்புருஷஜ்ஞாநம் || 35||

அத்யந்தா ஸம்°கீர்ணயோ​: = உண்மையில் வேறானவையான; ஸத்த்வ புருஷயோர் = சத்வ புத்தியுடையதும் ஆத்மாவுடையதும்; ப்ரத்யயா விஶேஷோ = தனித்தனியானவை என்ற ஞானம் இல்லாமையே; போ⁴க³​: =போகமாகும்; பரார்த²த்வாத் = புருஷனுக்காக ஏற்பட்ட அந்த போகத்தைக் காட்டிலும் உயர்ந்தது; ஸ்வார்த²= சித்த ஸ்வரூப- பிரதி பிம்ப விஷயமான; ஸம்°யமாத் = ஸம்யமம் செய்யும் போது உண்டாகும்; புருஷஜ்ஞாநம் = புருஷனைப்பற்றிய ஞானம்.

புத்தி சத்வ, ரஜ, தமோ குண நிலைகளை உடையது. புருஷனோ இவற்றில் எதிலும் சம்பந்தப்பட்டாமல் அன்னியமானவன். இந்த ஞானம் - நினைப்பு இல்லாவிட்டால் நான் சுகமாக இருக்கிறேன்; துக்கமாக இருக்கிறேன் என்று ஜீவனுக்கு சுக துக்க அனுபவ போகம் உண்டாகிறது. இங்கு புத்தி தனக்கென்று எந்த பிரயோஜனமும் எதிர்பாராமல் வேலை செய்கிறது; அது புருஷனான ஜீவனின் போகம் அபவர்க்கம் இரண்டின் பிரயோஜனத்தை மட்டுமே எதிர் பார்க்கிறது. இதனால் புத்தி மூலம் ஏற்படும் போகம் புருஷனுடையதே.
தெளிவான புத்தியில் புருஷனின் ப்ரதி-பிம்பம் (நிழல்) ஏற்படுகிறது. புத்தி காட்டித்தரும் விஷயங்களை இந்த புருஷ நிழல் அனுபவிக்கிறது. இந்த புத்தி பரார்த்தம் என்றும் புருஷ நிழல் ஸ்வார்த்தம் என்றும் சொல்லப்படுகின்றன. இந்த புருஷ நிழலில் ஸம்யமம் செய்வது ஸ்வார்த்த ஸம்யமம். இதனால் புருஷனைப்பற்றிய ஞானம் உண்டாகிவிடும்.


மேலும் புருஷனைப்பற்றிய ஞானம்:
 

Patanjali Yoga sutra:

ततः प्रातिभश्रावणवेदनादर्शास्वादवार्ता जायन्ते ।।36।।

தத​: ப்ராதிப⁴ஶ்ராவணவேத³நாத³ர்ஶாஸ்வாத³வார்தா ஜாயந்தே || 36||

தத​: =அதிலிருந்து (பயிற்சியால் வரும் புருஷ ஸம்யமத்தில் இருந்து); ப்ராதிப⁴ = ஊஹ மாத்திரமான ஞானமும்; ஶ்ராவண = எந்த சப்தத்தையும் கேட்பதும்; வேத³நா = தோலால் எந்த தொடு உணர்வையும் அறிவதும்; ஆத³ர்ஶா = எந்த ரூபத்தையும் கண்ணால் பார்ப்பதும்; ஆஸ்வாத³= நாக்கால் எந்த ருசியையும் அறிவதும்; வார்தா = மூக்கால் எந்த வாசனையை நுகர்வதும்; ஜாயந்தே =ஏற்படுகிறது.

"அப்பாடா! இப்படி எல்லாமே தெரிய வரும் ன்னா வேற என்ன வேணும்" என்று தோன்றுகிறதா? அதைப்பற்றி அடுத்து சொல்கிறார்.

  ते समाधावुपसर्गा व्युत्थाने सिद्धयः ।।37।।
தே ஸமாதா⁴வுபஸர்கா³ வ்யுத்தா²நே ஸித்³த⁴ய​: || 37||

தே = அவை; ஸமாதௌ⁴ = (நிர்விகல்ப) ஸமாதி விஷயத்தில்; உபஸர்கா³= விரோதிகளாக; வ்யுத்தா²நே = ஸமாதியிலிருந்து வெளி வந்த காலத்தில்; ஸித்³த⁴ய​: ஸித்திகளாவன (ஆகின்றன).
யோகத்தின் பரம ப்ரயோஜனம் நிர்விகல்ப ஸமாதியை அடைவது. அந்த வழியில் ஸமாதி கலைந்து வெளிவரும் காலத்தில் ஏற்படும் இந்த சித்திகள் ஜீவனை திசை திருப்ப வாய்புண்டு. அப்போது அவை எதிரிகள் ஆகின்றன. ஆகவே இவற்றில் நிலைத்து நிற்காமல் மேலே சாதனை செய்ய வேண்டும்.

உடலைவிட்டு உடல் பாயும் சித்தி..
 
Patanjali Yoga sutra:

बन्धकारणशैथिल्यात्प्रचारसंवेदनाच्च चित्तस्य परशरीरावेशः ।।38।।
ப³ந்த⁴காரணஶைதி²ல்யாத்ப்ரசாரஸம்°வேத³நாச்ச சித்தஸ்ய பரஶரீராவேஶ​: || 38||

ப³ந்த⁴காரண = பந்தத்துக்கு காரணமான (தர்ம அதர்மங்களுக்கு); ஶைதி²ல்யாத் = ஸம்யமம் மூலம் தளர்ச்சி ஏற்பட்டு இருப்பதினாலும்; ப்ரசார = நாடிகளில்; ஸம்°வேத³நாச்ச = ஸம்யமத்தாலும்; சித்தஸ்ய = சித்தத்தின்; பர ஶரீர ஆவேஶ​: = தன் சரீரத்தை விட வேறு சரீரத்தில் பிரவேசித்தல் (உண்டாகிறது).

இயற்கையில் எங்கும் நிறையக்கூடிய சித்தம் அந்தந்த ஜீவர்களின் தர்ம அதர்மங்களால் ஒரு உடம்பிலேயே கட்டுண்டு இருக்கிறது. இதுவே பந்தம் ஆகும். ஸம்யமத்தால் கர்ம நாசமடைந்து இந்த கட்டு தளர்ந்து போனதால் பந்தம் விடுகிறது. மேலும் நாடிகளில் ஸம்யமம் செய்ய சித்தத்தின் சஞ்சார ஸ்தானம் பற்றி அறியப்படுகிறது. இந்நிலை அடைந்த சித்தம் வேறு எந்த உடலிலும் பிரவேசிக்கலாம். இது ப்ரவேசித்தல் சித்தத்தின் ஆளுகையில் உள்ள பிராணன் இந்திரியங்கள் ஆகியவையும் கூடவே ப்ரவேசிக்கும். இதுவே பர ஶரீர ஆவேஶம் என்னும் உடலைவிட்டு உடல் பாயும் சித்தி ஆகும்.

Geetha Sambasivam

unread,
Apr 19, 2015, 4:04:17 AM4/19/15
to மின்தமிழ்
ஆகாயத்தில் செல்லும் தன்மை 

Patanjali Yoga sutra:

उदानजयाज्जलपङ्ककण्टकाकदिष्वसङ्ग उत्क्रान्तिश्च ।।39।।
உதா³நஜயாஜ்ஜலபங்ககண்டகாகதி³ஷ்வஸங்க³ உத்க்ராந்திஶ்ச || 39||

(ஸம்யமமத்தால்) உதா³ந =உதானன் என்ற வாயுவை; ஜயாத் = ஜெயிக்க; ஜல = நீர்; பங்க= சேறு (பங்கஜம் = சேற்றில் முளைக்கும் [பூ]); கண்டகா = முள்; ஆதி³ஷு = முதலியவற்றில்; அஸங்க³ = சம்பந்தமின்மை; உத்க்ராந்திஶ்ச = ஆகாசத்தில் செல்லும் தன்மையும்; (உண்டாகிறது).

இந்திரியங்களின் விருத்தி உள் வெளி (ஆந்தரம், பாஹ்யம்) என இரு வகை. உருவம் சப்தம் முதலியன குறித்து ஏற்படும் அறிவு பாஹ்யம். உள்ளே வாயுக்களின் சலனத்தை ஒட்டி ஏற்படும் விருத்தி ஆந்தரம். இந்த உள் விருத்தி எல்லா இந்திரியங்களுக்கும் பொதுவானது. வாயுக்களின் சலனம் இல்லாவிடில் இந்திரியங்களும் உள் விருத்தி அடையா. மூக்கு முதல் ஹ்ருதயம் வரை சலனம் உள்ளது ப்ராண விருத்தி. ஹ்ருதயம் முதல் நாபி வரை உள்ளது ஸமான விருத்தி. இது உட்கொண்ட ஆகாரத்தை ரத்தமாக்குகிறது. (செரிமானம், சத்து உள்ளே செல்லுதல்). நாபி முதல் பாதம் வரை அபான விருத்தி. இது சரீரத்தின் கழிவுப்பொருட்களை வெளித்தள்ளுகிறது. மூக்கின் நுனி முதல் தலையின் உச்சி வரை உதானன். இதுவே உயரக்கிளம்ப ஏதுவாகும். (ஏனைய நூல் ஒன்றில் ஹ்ருதயம் முதல் உச்சி வரை என்றூம் சொல்லி இருக்கிறது) உடல் முழுதும் நிறைந்து உள்ளது வியானன். இவை எல்லாவற்றிலும் சிறந்தது ப்ராண விருத்தியே. இவற்றில் உதானனில் ஸம்யமம் செய்து ஜெயித்தவனால் நீர், சேறு, முள் ஆகிய எதன் மீதும் பாதிப்பு இல்லாமல் நடந்து போக முடிகிறது. மேலும் மரண காலத்தில் அர்ச்சிராதி மார்கங்கள் வழியாக மேலான லோகங்களை அடையவும் இயலும். இதையே ஆகாயத்தில் செல்லும் தன்மை என்றனர். மணிப்ரபை என்ற வ்யாக்கியான நூலில் தனிஷ்டப்படி மரணத்தை அடைவான் என்று பொருள் செய்யப்பட்டு இருக்கிறது.

அக்னி போல் சரீரம் ஜ்வலிக்க...
 
Patanjali yoga sutra
 समानजयात्प्रज्वलनम् ।।40।।
ஸமாநஜயாத்ப்ரஜ்வலநம் || 40||

(ஸம்யமமத்தால்) ஸமாந = ஸமானன் என்ற வாயுவை; ஜயாத் = ஜெயிக்க; ப்ரஜ்வலநம் = அக்னி போல் சரீரம் ஜ்வலிக்கிறது. 
இந்த அக்னி நாபிச்சக்ரம் அருகில் உள்ளது.
இந்த சித்தி குறித்து காளிதாசன் குறிப்பிடுகிறார். “தாக்ஷாயணியின் தகப்பன் அவளை அவமதித்தான். அந்த சந்தர்பத்தில் அவள் யோகாக்னியின் மூலம் தன் பழைய சரீரத்தைவிட்டு புதிய சரீரத்தில் நுழைய பர்வத ராஜனின் பத்னியான மேனாதேவியிடம் வந்து சேர்ந்தாள்.”

கேட்கும் திறன்...
 
Patanjali Yoga sutra:

श्रोत्राकाशयोः संबन्धसंयामाद् दिव्यं श्रोत्रम् ।।41।।
ஶ்ரோத்ராகாஶயோ​: ஸம்°ப³ந்த⁴ஸம்°யாமாத்³ தி³வ்யம்° ஶ்ரோத்ரம் || 41||

ஶ்ரோத்ர =சுரோத்திரம் என்னும் இந்திரியம்; ஆகாஶயோ​: = ஆகாயம் ஆகியவற்றின்; ஸம்°ப³ந்த⁴ = ஸம்பந்தத்தில்; ஸம்°யாமாத்³ = ஸம்யமம் செய்ய; தி³வ்யம்° = திவ்யமானதாக (மறைந்த சப்தம், தூரத்தில் உள்ள சப்தம், சூக்குமமான சப்தம்; இவற்றை கிரஹித்தல் ) ஶ்ரோத்ரம் = கேட்கும் திறன் ஆகிறது.

இதே போல் நுகர்தல், தொடுதல், சுவை, காணல் ஆகிய இந்திரியங்களுக்கு நிலம், வாயு, நீர், ஒளி ஆகிய ஐம்பூதங்கள் ஆதாரமாகும். சப்தங்களுக்கு ஆகாசமும், வாசனகளுக்கு நிலமும், சுவைக்கு நீரும், ரூபத்துக்கு தேஜஸும் ஆதாரங்களாகும். இவற்றின் சம்பந்தத்தை ஸம்யமம் செய்து ஸாக்ஷாத்கரித்துவிட்டால் இந்திரியங்களுக்கு -எங்கோ இருக்கும் ஒலியை கேட்பது போன்ற - அசாதாரண அதாவது திவ்யத் தன்மை ஏற்பட்டுவிடுகிறது.


ஆகாயத்தில் பறத்தல்: 

Patanjali yoga sutra

  कायाकाशयोः सम्बन्धसंयमालघुतूलसमापत्तेश्चाऽऽकाशगमनम् ।।42।।

காயாகாஶயோ​: ஸம்ப³ந்த⁴ஸம்°யமாலகு⁴தூலஸமாபத்தேஶ்சா''காஶக³மநம் || 42||

காய ஆகாஶயோ​: = உடல் ஆகாசம் இவற்றின்; ஸம்ப³ந்த⁴ = சம்பந்த; ஸம்°யமாத் = ஸம்யமம் செய்வதாலும்; லகு⁴ தூல ஸமாபத்தேஶ்ச = மிக மெல்லிய பஞ்சு முதலானவற்றில் தாரணா-த்யான ஸமாதிகளாலும்; ஆகாஶ க³மநம் = ஆகாயத்தில் சஞ்சரித்தல் (உண்டாகிறது)
ஒரு இடைவெளி இருக்குமிடத்தில்தான் சரீரம் இருக்க முடியும். ஆகாசமோ எங்கும் வியாபித்து இருக்கிறது. சரீரம் இருக்குமிடத்தில் ஆகாசம் இருக்கவே இருக்கும். இந்த சம்பந்தத்தில் தாரணா, த்யானம் செய்து ஸாக்ஷாத்கரித்துவிட்டால் ஒருவனுக்கு பக்ஷிகள் போல வானத்தில் பறக்கும் சக்தி உண்டாகிறது. அல்லது பஞ்சு முதல் பரமாணு வரை உள்ள மிக நுண்ணிய லகுவான பொருட்களில் ஸம்யமம் செய்து லகுத்வம் என்ற குணத்தை ஸாக்ஷாத்கரித்துவிட்டால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் சக்தி கிடைக்கிறது. 
It is loading more messages.
0 new messages