வினைத்தொகை

1,030 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Aug 31, 2017, 9:08:44 AM8/31/17
to மின்தமிழ், vallamai
வினைச்சொற்களில் தன்வினை, பிறவினைகள் உண்டு. வினைத்தொகைகளில் வல்லொற்று மிகாது. 

இதற்கான சான்றுகளைப் பழைய இலக்கியங்கள் காட்டுகின்றன. அவற்றில் சில பார்ப்போம்.

பண்ணுதலைப் பயன் ஆர் பாடல் - இந்த அருட்பாவில் ஆர்பாடல் என்பது பிறவினை வினைத்தொகை.
பண்ணுத லைப்பயனார் பாடலும் நீடுதலும்
   பங்கய மாதனையார் பத்தியு முத்தியளித்து

கு-ரை: "பங்கய மாதனையார்" என்றதனை, முதற்கண் வைத்து உரைக்க. "ஆர் பாடல்" என்றது. பிறவினை வினைத்தொகை. "அளித்து" என்னும் எச்சம், செயப்பாட்டு வினையாய் நின்ற "எண்ணு" என்றதனோடு முடிந்தது.

இந்த எடுத்துக்காட்டுப் போல, பிறவினை வினைத்தொகைகள் இலக்கியங்களில் பரக்கக் காணலாம்.

ஓய்மா/ன் - சங்க கால வேளிர் பெயர். ஓய்க்கும் மா = ஓய்க்கும் குதிரை என்ற பொருள். அக் குதிரைகளைக்
கொண்ட வேளிர்களுக்கு ஓய்மா எனப்பெயர்.  ஓய்குதிரை.
ஓய்க்கின்ற பணி = ஓய்பணி.  ஓய்க்கின்ற பளு, சுமை = ஓய்சுமை, ஓய்பளு ..

நா. கணேசன்

இறைவன் உயிர்பால் கொண்ட கருணையால் உயிருக்குத் தன்னைக் காட்டாது மறைத்து நின்று பக்குவப்பட வைத்து பின் அவ்வுயிரின் பிறப்பை நீக்கும் அருட்செயலை ‘மறை’ என்னும் சொல் குறிக்குமென கொண்டால் ‘மறைகாடு’ என்னும் சொற்றொடர் பொருள் பொருந்தி வரக்கூடும்.

ஐயா திரு. நு.த. லோகசுந்தரம் அவர்கள் ‘மறை’ என்பது வினைத்தொகை என்று பொருள் கொண்டதும் இங்கு கவனிக்கத் தக்கது.

மறைகாடு என்று இருந்தால் வினைத்தொகை. வல்லொற்று மிகுந்தால் வேற்றுமைப் பொருள் என்னும் டாக்டர் பொன்முடி மடலைப் பாருங்கள்.

வினைத்தொகையில் ஒற்று மிகுவதில்லை.

இரு பெயர்ச்சொல்கள் இணையும்போது ஒற்று மிகும்:
சிறைச்சாலை - சிறை ‘cell' உடைய சாலை ‘’< 'saalaa, building, campus"
உரைக்கிழத்தி - உரை ‘சொல், vAc in Sanskrit', கிழத்தி - தேவி. உரைக்கிழத்தி = வாக்தேவி என்பதன் தமிழாக்கம்.
அரிதல் என்பதன் பெயர்ச்சொல்: அரை. அரிந்த கீரை. அரைக்கீரை.
கணிப்பொறி - கணி = computer, பொறி - எந்திரம். கணிப்பொறி lit. computer machine
etc.,

N. Ganesan

unread,
Aug 31, 2017, 9:26:49 AM8/31/17
to மின்தமிழ், vall...@googlegroups.com
உலகம் முழுதும் பழமையான மக்கள் இனங்களில் மாதவிடாய் விலக்கு தீட்டு/தீண்டம் என்னும் வழக்கம் இருக்கிறது. இதனை ஒரு பெண்புலவர் அழகாகச்
சங்கத் தமிழில் பதிவு செய்துள்ளார். இப்பாடலைப் பற்றி CTamil என்னும் லிஸ்ட்டில் விரிவாகப் பேசினோம். உவேசா, ஔவை, ... எனப் பலர் விரிவாக
விளக்கியுள்ளனர்.

புறநானூறு:

பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
உழுத்ததர் உண்ட ஓய்நடைப் புரவி
கடல்மண்டு தோணியின் படைமுகம் போழ 
நெய்ம்மிதி அருந்திய கொய்சுவல் எருத்தின்
தண்ணடை மன்னர் தாருடைப் புரவி
அணங்குடை முருகன் கோட்டத்துக்
கலந்தொடா மகளிரின் இகழ்ந்து நின்றவ்வே. 

ஓய்நடைப் புரவி என்பது பிறவினையாக ஆளப்படுகிறது.
ஓய்புரவி = ஓய்குதிரை - (எதிரிகளை) ஓய்க்கும் குதிரை. 
நற்றிணையில் ‘ஓய்பசிச் செந்நாய்’ என்ற தொடருக்கு
பசித்த, மான் போன்றவற்றை விரட்டி ஓய்க்கும் செந்நாய்கள் என்பது
பொருந்தும். ஆமான் (Gaur) கன்றை ஓய்பசிச் செந்நாய்கள் அடிக்கும்

நற்றிணையில் ஓய்பசி = பிறவினை வினைத்தொகைக்கு நல்ல உதாரணம்.
வினைத்தொகையில் ஒற்று மிகாது. கணிப்பொறி, அரைக்கீரை, உரைக்கிழத்தி
இவை இரு பெயர்ச்சொற்கள் இணைந்தவை. அதனால் ஒற்று மிகுகிறது.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 31, 2017, 9:46:33 AM8/31/17
to மின்தமிழ், vall...@googlegroups.com, Banukumar Rajendran
ஒரு புகழ்மிக்க இலக்கிய உதாரணம்:

திருக்குறளில் “ஆபயன்”. இது வினைத்தொகை. எனவே, ஒற்று மிகுதல் இல்லை.

சிலம்பில் (கி.பி. 5-ம் நூற்றாண்டு) ‘ஆப்பயன்’ - இது இருபெயர்ச்சொற்கள் கொண்ட தொடர். 
மறைக்காடு (= வேதவனம், வேதாரண்யம்) போல “ஆப்பயன்” = ஆ + பயன், இரண்டுமே பெயர்ச்சொற்கள்.
மரைக்காடு (மரையை உடைய காடு), கறைச்சட்டை (கறையைக் கொண்ட சட்டை), ஆப்பயன் = ஆத்தருபயன்கள்.

ஆப்பயன், ஆபயன் - வேறுபாடு  இருபெயர்ச்சொல் இணைப்பு, வினைத்தொகை கொண்டு அறியலாம்.
இரா. பானுகுமார் பதிவு

2013-ல் பேசினோம்: ஆய கலைகள் என்பதற்கும் ஆயக்கலைகள் என்பதற்கும் உள்ள வேறுபாடு.

Oru Arizonan

unread,
Aug 31, 2017, 7:32:39 PM8/31/17
to vallamai, மின்தமிழ்
எடுத்துக்காட்டுப் போல ==> எடுத்துக்காட்டுபோல என்றேயிருக்கவேண்டும்.  இவ்விடம் பகரஒற்று மிகாது.

ஒரு அரிசோனன்

வேந்தன் அரசு

unread,
Aug 31, 2017, 9:05:24 PM8/31/17
to vallamai, மின்தமிழ்
கொய்சுவல் ஒரு வினைத்தொகை

1 செப்டம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 5:02 அன்று, Oru Arizonan <oruar...@gmail.com> எழுதியது:
எடுத்துக்காட்டுப் போல ==> எடுத்துக்காட்டுபோல என்றேயிருக்கவேண்டும்.  இவ்விடம் பகரஒற்று மிகாது.

ஒரு அரிசோனன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Aug 31, 2017, 9:17:55 PM8/31/17
to மின்தமிழ், vallamai
2017-08-31 18:05 GMT-07:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
கொய்சுவல் ஒரு வினைத்தொகை

நூற்றுக்கணக்கில் பிறவினை வினைத்தொகை உதாரணங்கள் இலக்கியங்களில் உள்ளன.
ஓய்பசி (ஓய்க்கும்பசி), அடுகளிறு ( மாற்றாரை அடுக்கும் களிறு), ஓய்புரவி (ஓய்க்கும் புரவி),
அரிகீரை (மக்கள் அரிக்கும் கீரை. அரி- வினையின் தொழிற்பெயர்: அரை. எனவே அரைக்கீரை), ...

தொல்காப்பியரோ, பவணந்தி முனியோ, இலக்கண விளக்கம் வைத்தியநாத நாவலரோ,
ஆறுமுக நாவலரோ, இற்றைநாள் மொழியாளரோ வினைத்தொகை இருவகைத்து.
(1) தன்வினைத்தொகை, (2) பிறவினைத்தொகை. தன்வினைத்தொகையில் ஒற்று மிகாது.
ஆனால், பிறவினைத்தொகையில் ஒற்று மிகவேண்டும் என்று எழுதக் காணோம்.

வினைத்தொகை - தன்வினை, பிறவினை - இரண்டுக்குமே ஒற்று மிகுவதில்லை.

நா. கணேசன் 
Message has been deleted

N. Ganesan

unread,
Aug 31, 2017, 10:10:37 PM8/31/17
to மின்தமிழ், vallamai

2017-08-31 18:05 GMT-07:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
கொய்சுவல் ஒரு வினைத்தொகை

ஐகார உயிர்மெய்யுடன் வினைச்சொல் நிலைமொழியாக வருமாயின் பிறவினை வினைத்தொகையில் ஒற்று மிகாது.
ஆறுமுக நாவலர் இதற்கோர் எடுத்துக்காட்டு தருகிறார்:
வனைகலம். இது போலவே அனைத்து ஐகார உயிர்மெய் ஈற்றுடன் உள்ள பிறவினை வினைத்தொகைகளில் காணலாம்.

ஆறுமுக நாவலர், இலக்கணச் சுருக்கம்.

”வினைத்தொகை:
விரிகதிர் ஈபொருள்
அடுகளிறு வனைகலம்
ஆடு பாம்பு அஃகுபிணி
பெருகுபுனல் ஈட்டுதனம்
விஞ்சுபுகழ் மல்கு சுடர்
உண்கலம் தின்பண்டம்
கொல்களிறு கொள்கலம்
செய்கடன் தேர்பொருள்
வீழ்புனல்
ஏவலொருமை வினைமுற்றும் வினைத் தொகையும் வன்றொடர்க் குற்றியலுகரவீற்றனவாயினும், அவற்றின் முன் வரும் வல்லினம் மிகாமை காண்க.”

நூற்றுக்கணக்கில் பிறவினை வினைத்தொகை உதாரணங்கள் இலக்கியங்களில் உள்ளன.
ஓய்பசி (ஓய்க்கும்பசி), அடுகளிறு ( மாற்றாரை அடுக்கும் களிறு), ஓய்புரவி (ஓய்க்கும் புரவி),
அரிகீரை (மக்கள் அரிக்கும் கீரை. அரி- வினையின் தொழிற்பெயர்: அரை. எனவே அரைக்கீரை), ...

தொல்காப்பியரோ, பவணந்தி முனியோ, இலக்கண விளக்கம் வைத்தியநாத நாவலரோ,
ஆறுமுக நாவலரோ, இற்றைநாள் மொழியாளரோ வினைத்தொகை இருவகைத்து.
(1) தன்வினைத்தொகை, (2) பிறவினைத்தொகை. தன்வினைத்தொகையில் ஒற்று மிகாது.
ஆனால், பிறவினைத்தொகையில் ஒற்று மிகவேண்டும் என்று எழுதக் காணோம்.

வினைத்தொகை - தன்வினை, பிறவினை - இரண்டுக்குமே ஒற்று மிகுவதில்லை.

நா. கணேசன் 

-- 

N. Ganesan

unread,
Aug 31, 2017, 11:48:32 PM8/31/17
to மின்தமிழ், vallamai

2017-08-31 18:05 GMT-07:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
கொய்சுவல் ஒரு வினைத்தொகை

இன்னுஞ் சில பிறவினை வினைத்தொகை.

(அரசன்) செய்கோயில், (ஆசாரி) செய்தேர், (நாபிதன்) கொய்சடை  (மண்ணான்) வெளுதுணி, ....

(அநுகரணவோசை) சுரசுர எழுப்பும் புன்னை: சுரசுர என இலைகள். எனவே, சுரபுன்னை - வினைத்தொகை.
hissing sound tree என்பர் ஆங்கிலத்தில். 

N. Ganesan

unread,
Sep 1, 2017, 9:55:14 PM9/1/17
to மின்தமிழ்
On Thu, Aug 31, 2017 at 4:32 PM, Oru Arizonan <oruar...@gmail.com> wrote:
எடுத்துக்காட்டுப் போல ==> எடுத்துக்காட்டுபோல என்றேயிருக்கவேண்டும்.  இவ்விடம் பகரஒற்று மிகாது.

புலவர்கள் எழுதிப் பார்த்துள்ளேன். கிவாஜ, தீபம் நா, பார்த்தசாரதி (சமுதாயவீதி), ....

நா. கணேசன்
 
ஒரு அரிசோனன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Oru Arizonan

unread,
Sep 1, 2017, 10:52:32 PM9/1/17
to mintamil
On Fri, Sep 1, 2017 at 6:54 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Thu, Aug 31, 2017 at 4:32 PM, Oru Arizonan <oruar...@gmail.com> wrote:
எடுத்துக்காட்டுப் போல ==> எடுத்துக்காட்டுபோல என்றேயிருக்கவேண்டும்.  இவ்விடம் பகரஒற்று மிகாது.

//புலவர்கள் எழுதிப் பார்த்துள்ளேன். கிவாஜ, தீபம் நா, பார்த்தசாரதி (சமுதாயவீதி), ....

நா. கணேசன்//

 அவர்கள் எழுதியதை ஸ்கான் செய்து இவண் பதிந்து நிறுவுங்கள்.  மேலும், அவர்களுக்கு உள்ள சுதந்திரம், நம்மைப்போன்ற சாமானியர்களுக்கு இல்லை.

வின்ஸ்ட்டன் சர்ச்சில் சொன்னார் என்பதற்காக ஆங்கிலத்தில், triphibian என்ற சொல் சேர்க்கப்பட்டது.  நீங்களும், நானும் அப்படி எழுதக்கூடாது.

நான் தமிழறிஞன் இல்லாவிட்டாலும், தமிழண்ணல் இராம. பெரியகருப்பன் அவர்களிடம் தமிழ் பயின்றவன்.

இரண்டாம் வேற்றுமை உருபு இருந்தால்தான் ஒற்றுமிகும்.  இரண்டாம் வேற்றுமையைச் சுட்டும் வெறும் பெயர்ச்சொல்மட்டும் இருந்தால் அங்கு ஒற்றுமிகாது.

[உ-ம்]

இராமனைப் போல என்று எழுதலாம்.
ஆனால்,  வேற்றுமை உருபான 'ஐ'யை நீக்கிவிட்டு எழுதவேண்டுமானால் இராமன்போல என்றே எழுதவேண்டும்.
மேலும், போல என்னும் சொல் இராமன் என்ற பெயர்சொல்லுடன் இணைந்துள்ளதையும் காணுக.

ஒரு அரிசோனன்

N. Ganesan

unread,
Sep 1, 2017, 11:12:40 PM9/1/17
to மின்தமிழ், vallamai

On Friday, September 1, 2017 at 7:52:32 PM UTC-7, oruarizonan wrote:

நிறையக் கொடுக்கலாம்:

பரிதியார் திருக்குறள் உரையில் ’காட்டுப்போல’ என்கிறார்.

நாஞ்சில்நாடன், ஒரு ’இந்நாட்டு மன்னர்’
"கோச்ச நல்லூர்' என்று வழக்கமாகவும், 'கோச்சடைய நல்லூர்' என்று இலக்கணச் சுத்தமாகவும் அழைக்கப்படும் அந்த ஊரில் உத்தேசமாக நூறு வீடுகள் இருக்கும். நூறு வீடுகளில் மக்கள் வழி, மருமக்கள் வழி, சைவர்கள் (இந்த வைப்பு முறை மக்கள் தொகை விகிதத்தை அடிப்படையாகக் கொண்டதே அல்லாமல், உயர்வு தாழ்வு என்ற நிலையை உள்ளடக்கியதல்ல என்று தண்டனிட்டுச் சொல்லிக்கொள்கிறேன்.) என்ற பிரிவில் உட்பட்ட வேளாளர்கள் மொத்தம் அறுபது வீடுகள். (செங்குந்தர், காணி யாளர், கார்காத்தார், வீரசைவர், துளு வேளாளார்கள் ஆகியோரின் பிரதிநிதித்துவம் எப்படி இங்கே இல்லாமல் போகலாம் என்பதில் இந்தக் கதாசிரியனுக்கு மிகுந்த மனத்தாங்கல்.)

'கிராமம்' என்றும் 'பிராமணக்குடி' என்றும் அழைக்கப்படுகிற 'எவ்வுயிர்க்கும் செந்தன்மை பூண்டொழுகும்' வீடுகள் ஏழு. பூணூல் போட்டவர்கள் எல்லாரும் 'ஐயர்கள்' என்ற நினைப்பே வேளாளர் களிடம் ஏகபோகமாக இருப்பதால், அங்கும் என்ன வாழுகிறது என்று தெரியாமல், அவர்களின் 'ஒற்றுமை'யின் மேல் ஏகப் பொறாமை. இது தவிர இந்து சமய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டுப் போல - நாடார், தேவர், வண்ணார், நாவிதர் என்று பல பகுப்புக்கும் ஆட்பட்ட இந்துக்களும் அங்கே உண்டு.

---------

தீபம் நா. பார்த்தசாரதி (தமிழ் பயின்றவர்)

”அவள் குரல் யாழ்மீட்டுப் போல இருக்கிறது” எனலாம்.
யாழ்மீட்டு = யாழை வாசித்தல்.

தமிழண்ணலை நான் நன்கறிவேன். வீட்டுக்கும் சிலமுறை வந்துள்ளார்.

நா. கணேசன்

 அவர்கள் எழுதியதை ஸ்கான் செய்து இவண் பதிந்து நிறுவுங்கள்.  மேலும், அவர்களுக்கு உள்ள சுதந்திரம், நம்மைப்போன்ற சாமானியர்களுக்கு இல்லை.

வின்ஸ்ட்டன் சர்ச்சில் சொன்னார் என்பதற்காக ஆங்கிலத்தில், triphibian என்ற சொல் சேர்க்கப்பட்டது.  நீங்களும், நானும் அப்படி எழுதக்கூடாது.

நான் தமிழறிஞன் இல்லாவிட்டாலும், தமிழண்ணல் இராம. பெரியகருப்பன் அவர்களிடம் தமிழ் பயின்றவன்.

இரண்டாம் வேற்றுமை உருபு இருந்தால்தான் ஒற்றுமிகும்.  இரண்டாம் வேற்றுமையைச் சுட்டும் வெறும் பெயர்ச்சொல்மட்டும் இருந்தால் அங்கு ஒற்றுமிகாது.

[உ-ம்]

இராமனைப் போல என்று எழுதலாம்.
ஆனால்,  வேற்றுமை உருபான 'ஐ'யை நீக்கிவிட்டு எழுதவேண்டுமானால் இராமன்போல என்றே எழுதவேண்டும்.
மேலும், போல என்னும் சொல் இராமன் என்ற பெயர்சொல்லுடன் இணைந்துள்ளதையும் காணுக.

ஒரு அரிசோனன்

N. Ganesan

unread,
Sep 1, 2017, 11:22:13 PM9/1/17
to மின்தமிழ், vall...@googlegroups.com

On Friday, September 1, 2017 at 8:12:40 PM UTC-7, N. Ganesan wrote:

On Friday, September 1, 2017 at 7:52:32 PM UTC-7, oruarizonan wrote:

On Fri, Sep 1, 2017 at 6:54 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

On Thu, Aug 31, 2017 at 4:32 PM, Oru Arizonan <oruar...@gmail.com> wrote:
எடுத்துக்காட்டுப் போல ==> எடுத்துக்காட்டுபோல என்றேயிருக்கவேண்டும்.  இவ்விடம் பகரஒற்று மிகாது.

//புலவர்கள் எழுதிப் பார்த்துள்ளேன். கிவாஜ, தீபம் நா, பார்த்தசாரதி (சமுதாயவீதி), ....

நா. கணேசன்//

நிறையக் கொடுக்கலாம்:

பரிதியார் திருக்குறள் உரையில் ’காட்டுப்போல’ என்கிறார்.

”அவள் குரல் யாழ்மீட்டுப் போல இருக்கிறது” எனலாம்.
யாழ்மீட்டு = யாழை வாசித்தல்.

அவன் தற்குறி என்பதை
’அவன் கைநாட்டுப் போல’ என்கிறோம்.

N. Ganesan

unread,
Sep 1, 2017, 11:48:20 PM9/1/17
to மின்தமிழ்

On Friday, September 1, 2017 at 7:52:32 PM UTC-7, oruarizonan wrote:

On Fri, Sep 1, 2017 at 6:54 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

On Thu, Aug 31, 2017 at 4:32 PM, Oru Arizonan <oruar...@gmail.com> wrote:
எடுத்துக்காட்டுப் போல ==> எடுத்துக்காட்டுபோல என்றேயிருக்கவேண்டும்.  இவ்விடம் பகரஒற்று மிகாது.

//புலவர்கள் எழுதிப் பார்த்துள்ளேன். கிவாஜ, தீபம் நா, பார்த்தசாரதி (சமுதாயவீதி), ....

நா. கணேசன்//

 அவர்கள் எழுதியதை ஸ்கான் செய்து இவண் பதிந்து நிறுவுங்கள்.  மேலும், அவர்களுக்கு உள்ள சுதந்திரம், நம்மைப்போன்ற சாமானியர்களுக்கு இல்லை.

வின்ஸ்ட்டன் சர்ச்சில் சொன்னார் என்பதற்காக ஆங்கிலத்தில், triphibian என்ற சொல் சேர்க்கப்பட்டது.  நீங்களும், நானும் அப்படி எழுதக்கூடாது.

நான் தமிழறிஞன் இல்லாவிட்டாலும், தமிழண்ணல் இராம. பெரியகருப்பன் அவர்களிடம் தமிழ் பயின்றவன்.

இரண்டாம் வேற்றுமை உருபு இருந்தால்தான் ஒற்றுமிகும்.  இரண்டாம் வேற்றுமையைச் சுட்டும் வெறும் பெயர்ச்சொல்மட்டும் இருந்தால் அங்கு ஒற்றுமிகாது.

ஆய்தம் என்பதைப்பற்றி நச்சினார்க்கினியர் பின் வருமாறு கூறுவர் ஆய்தமென்ற ஓசைதான் அடுப்புக்கூட்டுப் போல மூன்று புள்ளி வடிவிற்றென்பது உணர்த்தற்கு "ஆய்தமென்ற முப்பாற்புள்ளியும்” என்றார்.

கூட்டு அமைத்து கறிக்கூட்டுப்போல சமையல் செய்து (நுகர்வன). முருகவேள் பன்னிருதிருமுறை (வ.சு. செங்கல்வராயபிள்ளையவர்கள்).
 
நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 1, 2017, 11:54:26 PM9/1/17
to மின்தமிழ்

On Friday, September 1, 2017 at 7:52:32 PM UTC-7, oruarizonan wrote:

On Fri, Sep 1, 2017 at 6:54 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

On Thu, Aug 31, 2017 at 4:32 PM, Oru Arizonan <oruar...@gmail.com> wrote:
எடுத்துக்காட்டுப் போல ==> எடுத்துக்காட்டுபோல என்றேயிருக்கவேண்டும்.  இவ்விடம் பகரஒற்று மிகாது.

//புலவர்கள் எழுதிப் பார்த்துள்ளேன். கிவாஜ, தீபம் நா, பார்த்தசாரதி (சமுதாயவீதி), ....

நா. கணேசன்//

 அவர்கள் எழுதியதை ஸ்கான் செய்து இவண் பதிந்து நிறுவுங்கள்.  மேலும், அவர்களுக்கு உள்ள சுதந்திரம், நம்மைப்போன்ற சாமானியர்களுக்கு இல்லை.

தமிழில் அப்படி ஒரு விதி இருப்பதாக யானறியேன். என் போன்ற சாமானியர்கள் தமிழில் காட்டுப்போல, ஊட்டுப்போல, மீட்டுப்போல, கூட்டுப்போல என்றெல்லாம்
தமிழறிஞர்கள் எழுதுவதுபோல எழுதலாம் என்றுதான் தோன்றுகிறது.

வடமொழியில் நீங்கள் சொல்வது நடக்கலாம். தமிழில் அறிஞர்கள் எழுதிக் காட்டியுள்ளதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
உ-ம்: தமிழறிஞர்கள் சங்க இலக்கியம் கற்று மரைக்காடு என்பது தான் மறைக்காடு எனத் திரிந்து, புராணக்கதைகளுக்கு இடம் கொடுத்தது என்று எழுதினர்.
அதனைச் சிரமேற்கொண்டு மரைக்காடு என அவ்வூர் மக்கள் பயன்படுதுகின்றனர். மாயவரம் மயிலாடுதுறை ஆனதுபோல, அரசாங்கம்
மரைக்காடு என மாற்றலாம்.

நா. கணேசன்
 
வின்ஸ்ட்டன் சர்ச்சில் சொன்னார் என்பதற்காக ஆங்கிலத்தில், triphibian என்ற சொல் சேர்க்கப்பட்டது.  நீங்களும், நானும் அப்படி எழுதக்கூடாது.

நான் தமிழறிஞன் இல்லாவிட்டாலும், தமிழண்ணல் இராம. பெரியகருப்பன் அவர்களிடம் தமிழ் பயின்றவன்.

இரண்டாம் வேற்றுமை உருபு இருந்தால்தான் ஒற்றுமிகும்.  இரண்டாம் வேற்றுமையைச் சுட்டும் வெறும் பெயர்ச்சொல்மட்டும் இருந்தால் அங்கு ஒற்றுமிகாது.

[உ-ம்]

இராமனைப் போல என்று எழுதலாம்.
ஆனால்,  வேற்றுமை உருபான 'ஐ'யை நீக்கிவிட்டு எழுதவேண்டுமானால் இராமன்போல என்றே எழுதவேண்டும்.
மேலும், போல என்னும் சொல் இராமன் என்ற பெயர்சொல்லுடன் இணைந்துள்ளதையும் காணுக.

ஒரு அரிசோனன்

N. Ganesan

unread,
Sep 2, 2017, 1:53:44 PM9/2/17
to வல்லமை, mint...@googlegroups.com, vallamai
நானும் இலக்கணங்களை ஆராய்ந்து துழாவிப் பார்த்தேன். யாருமே வினைத்தொகையில்
ஒற்று மிகும் என்று கூறவில்லையே. 

தொல்காப்பியரோ, பவணந்தி முனியோ, இலக்கண விளக்கம் வைத்தியநாத நாவலரோ,
ஆறுமுக நாவலரோ, இற்றைநாள் மொழியாளரோ வினைத்தொகை இருவகைத்து.
(1) தன்வினைத்தொகை, (2) பிறவினைத்தொகை. தன்வினைத்தொகையில் ஒற்று மிகாது.
ஆனால், பிறவினைத்தொகையில் ஒற்று மிகவேண்டும் என்று எழுதக் காணோம்.

உ-ம்: அரிகரண்டி, அரிகீரை, வனைகலம் (ஆறுமுக நாவலர் காட்டும் உதாரணம்) - பிறவினை வினைத்தொகைகள்.
ஒன்றிலும் “க்” என்று வல்லெழுத்து மிகுவதில்லை.

தமிழ் இலக்கண நூல்களில் வினைத்தொகைக்கு ஒற்று மிகும் என்று இருந்தால்
யாராகிலும் கொடுத்தால் படித்துப் பார்க்கிறேன். 

N. Ganesan

unread,
Sep 8, 2017, 12:24:00 AM9/8/17
to மின்தமிழ், வல்லமை
துளு, மலையாளம் போல, தமிழில் அரி = தானியம் ’grain' என்று இருக்கிறதா எனப் பார்த்தேன்.
அரிபிரியம் ‘shortage of grain' என்றுள்ளது என்கிறது ஃபெப்ரீசியஸ் அகராதி.

J.P.Fabricius Tamil and English Dictionary

”அரிபிரியம், (vulg. அரிபிரி), scarcity of grain and other commodities.”

பிரியம் ‘scarce, rare' - வடசொல். எனவே, சந்தியில் ஒற்று மிகுவதில்லை.

நா. கணேசன்

----------

வெள்ளரிப்பழம் - அரி (=seed. Cucumber was first domesticated in Indus valley and reached Mesopotamia. Just like sesame (eLLu))
அரி  என்பது அரிசியின் பழஞ்சொல். அது விதை, தானியம், முத்து, ரத்னம், சிலம்பின் பரல் இவற்றுக்கு விரிந்துள்ளது. 
அரிசியை விட அரி பழமையானது என பிங்கலந்தையை மேற்கோள் காட்டுகிறார் ரா. பி. சேதுப்பிள்ளை.
அதேபோல, மறி பற்றியும் பிங்கலந்தையில் உள்ளது. பிங்கலந்தைதான் நமக்கு யா/ஆ/ஆச்சா என்பது
Shorea species, யாவகம் என்னும் தீவுப் பெயர்க்காரணம் என அறிவிப்பது.

அரி, மறி, யா(= ஆச்சா = சாலம்) - இந்தப் பழந்தமிழ்ச் செய்திகள் தருவது பிங்கலமே.

N. Ganesan

unread,
Sep 13, 2017, 10:52:57 AM9/13/17
to மின்தமிழ், tiruva...@googlegroups.com, housto...@googlegroups.com, வல்லமை
அரி-தல் என்னும் வினைச்சொல் வினைத்தொகையாக வரும்போது ஒற்று மிகுதலில்லை.
அடுகளிறு, ஊறுகாய் போன்ற தன்வினை வினைத்தொகைகளிலும்,
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் காட்டும் பிறவினை வினைத்தொகைகளிலும் (உ-ம்: வனைகலம்)
வினைச்சொல் நிலைமொழிகளின் பின்னர் வல்லெழுத்து (க்,ச்,த்,ப்) மிகுவதில்லை.
அரிதல் என்னும் வினைச்சொல்லுக்கான வினைத்தொகைகளின் சில எடுத்துக்காட்டுகள் பார்ப்போம்.

அரிவாள்
அரிகயிறு - Cord at the entrance to a fort so contrived as to cut off the hand that grasps it; தொட்டகையை யரி யும் நூற்பொறி. (சீவக. 104, உரை.)
அரிகண்டம்
அரிகரப்பான் Itchy eczema; அரிக்குங் கரப்பான். (தைலவ. தைல. 133.)
அரிகறையான்
அரிகால்
அரிதாள்
அரிகிணை 
அரிகீரை
அரிகூடம்
அரிசிரங்கு
அரிதொடர்
அரிபடைவட்டம்
அரிபிளவை
அரிகூலி
அரிகொழி
அரிசரி 

அரி என்பது பெயர்ச்சொல்லாக வினையில் இருந்து தோன்றும்.
இது, அரிக்கட்டு (அரிவிக்கட்டு), அரிக்கண்சட்டி (perforated vessel) போன்றவற்றில் காண்கிறோம்.
அரி = உள்துளை. அரிக்கண் = perforation.

நா. கணேசன்

அரிதரு செந்நெற் சூட்டி னடுக்கிய வடுக்கல் சேர்ப்பார்;  
பரிவுறத் தடிந்த பன்மீன் படர்நெடுங் குன்று செய்வார்;
சுரிவளை சொரிந்த முத்தின் சுடர்ப்பெரும் பொருப்பு யர்ப்பார்;
விரிமலர்க் கற்றை வேரி பொழிந்திழி வெற்பு வைப்பார்.
                                - பெரியபுராணம்

அரி - நெற்கற்றை; அரி - அரியப்பட்டது. செயப்படு 
பொருளுணர்த்தும் விகுதி புணர்ந்து கெட்டது. இது உழவர் 
இந்நாளிலும் வழங்கும் உயர்ந்த தனித் தமிழ்ச் சொற்களில் ஒன்று, 
நெல் முதல்களைக் கையாற் சேர்த்து அரிதலால் பெறும் கற்றையை, 
அரி என்பர்.

அரி - சூடு - நெல் விளைந்த பின்னர்ச் 
செய்யப்படுந் தொழில்கள் அரிதல், சூடு அடுக்குதல் முதலியன. 
இவை, - நெற்குவை சேர்த்தல் புற்போர் சேர்த்தல் வரை - இது 
முதல் மூன்று பாட்டாலும் கூறப்பெற்றன. பெரும் பான்மை பற்றி 
நாற்றுநடுதல் முதல் குவை சேர்த்தல்வரை நெல்லையே விரித்துச் 
சொன்னார். பிற, கரும்பு - வாழை - முதலியவையும் இவ்வாறே 
அவ்வவற்றிற்குப் பொருந்துமாறு அமைத்துக் கொள்க

ராம் காமேஸ்வரன்

unread,
Sep 13, 2017, 12:00:53 PM9/13/17
to மின்தமிழ்
//அரிக்கண்சட்டி (perforated vessel)//

அரிக்கஞ்சட்டி arikka -caṭṭi
n.
Dial. var. of அரிக்குஞ்சட்டி.

அரிக்குஞ்சட்டி arikku -caṭṭi
n. <அரி3-+.
Large-mouthed shallow pot for cleaning rice;
அரிசி களையுஞ் சட்டி.
http://www.tamilvu.org/slet/servlet/lexpg?pageno=124

N. Ganesan

unread,
Sep 13, 2017, 1:12:28 PM9/13/17
to மின்தமிழ்

On Wednesday, September 13, 2017 at 9:00:53 AM UTC-7, ராம் காமேஸ்வரன் wrote:
//அரிக்கண்சட்டி (perforated vessel)//

அரிக்கஞ்சட்டி arikka -caṭṭi
n.
Dial. var. of அரிக்குஞ்சட்டி.

அரிக்குஞ்சட்டி arikku -caṭṭi
n. <அரி3-+.
Large-mouthed shallow pot for cleaning rice;
அரிசி களையுஞ் சட்டி.
http://www.tamilvu.org/slet/servlet/lexpg?pageno=124

arikkuJcaTTi above is different. I was talking about arikkaN-caTTi.

There is a clear difference between words, arikkaNcaTTi vs. arikkumcaTTi.
While arikkumcaTTi is solid, arikkaNcaTTi  has holes. This can be seen
in ceramics made in India for 5000 years.

arikkaNcaTTi is used as a middle vessel in liquor distillation, cooking
vegetables etc., arikkaN caTTi goes as mid-layer among three vessels.
http://www.frontline.in/multimedia/dynamic/02358/FL17_BINJOR_PERFOR_2358924g.jpg
http://www.frontline.in/arts-and-culture/heritage/harappan-surprise/article7053030.ece

N. Ganesan

N. Ganesan

unread,
Sep 13, 2017, 11:33:47 PM9/13/17
to மின்தமிழ், tiruva...@googlegroups.com, housto...@googlegroups.com, வல்லமை
சிவசிவா சந்தவசந்தத்தில் எழுதிய பதில்:
<<<
உங்கள் வினா: "வினைத்தொகையில் ஒற்று (க்,ச்,த், ப்) மிகுவதுண்டா? "
விடை: வினைத்தொகையில் வலி மிகாது.

விரிவான விளக்கத்தையும் உதாரணங்களையும் படிக்க ஆவல் இருந்தால், ஆறுமுக நாவலரின் இலக்கணச் சுருக்கம் உங்களுக்கு உதவும். 

வினைமுற்று வினைத் தொகைகளின் முன் வல்லினம் புணர்தல்
105. 
வினைமுற்று வினைத்தொகைகளின் ஈற்றுயிர் முன்னும்ய ர ழ வொற்றுகளின் முன்னும் வரும் வல்லினம் மிகாதியல்பாம்அச்சொற்களின் ஈற்று லகர ளகர ணகர னகரங்கள்வல்லினம் வந்தால் திரியாதியல்பாம்.

>>>

செ. ரா. செல்வா பலரும் செய்யும் பிழையைச் சுட்டிக்காட்டியுள்ளார். திருநிறைசெல்வி, புனைபெயர் என்பதே சரி. வினைத்தொகையில் வலிமிகாது. எனவே, புனைப்பெயர் எனத் தற்காலத்தில் எழுதுதல் பிழை. தவிர்க்கப்படவேண்டியது.

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE_(%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D)

புனைபெயர்[தொகு]

புனைபெயர் என்பது ஊறுகாய் என்பது போன்ற வினைத்தொகை. புனைதல் என்றால் அணிதல், கற்பித்தல், அலங்கரித்தல், தரித்தல், எழுதுதல், செய்தல், உருவாக்குதல் என்று வெவ்வேறு இடங்களில் பொருள் தரும். புனைந்த பெயர், புனைகின்ற பெயர், புனையும் பெயர் என பல காலநிலை வினைகளை உள்ளடக்கிய வினைத்தொகை ஆகையால் அதில் ஒற்று மிகாது. புனைஇ என்றால் புனைந்து அணிந்து என்று பொருள். புனைசுருட்டு என்பது ஏமாற்று, மோசம் போன்ற பொருளைத் தரும் இன்னொரு வினைத்தொகை. இதே போல இன்னொரு சொல்லும் வெகுவாகத் தவறாக வழங்கும். திருநிறைசெல்வன், திருநிறைசெல்வி என ஒற்று மிகாமல் வரவேண்டும் (வினைத்தொகை - திருநிறைந்த, திருநிறைகின்ற, திருநிறையும் செல்வன்/செல்வி). ஆனால் பிழையாக ஒற்று மிகுத்து எழுதுவர் பலர். ஊறு"க்"காய் என்றால் எப்படிப் பிழையோ அப்படி இதுவும் பிழை. --செல்வா 04:34, 29 மார்ச் 2010 (UTC)

----------------------

முகப்புபக்கம் எண் : 
தொடக்கம்

தொகைகள்51கி. செம்பியன்

11. வினைத்தொகை (அல்வழிப் புணர்ச்சி)

      "வினையின் தொகுதி காலத்து இயலும்" என்பது தொல்காப்பியர் நூற்பா. 
வினைத்தொகை என்பது காலத்தின்கண் நிகழும். வினைச் சொல்லின் முதல் மட்டும் 
நின்று, வினைச்சொல்லின் குணமாகிய (character) காலம் காட்டும் இடைநிலைகளும்,
(த், ட், ற், இன், ய; கு, டு, று, இரட்டிப்பு/கிறு, கின்று, ஆநின்று/ப், வ்) காலம் 
காட்டும் விகுதிகளும் (று, றும், து, தும், டு, டும், கு, கும்/மின்,உம், ஈர், ஆய், க, இய,
இயர், இ, மார், ப, உம், ஆ) மறைந்து, பெயர்ச்சொல்லைத் தழுவிக்: காலம் காட்டும் 
இடைநிலைகளும் விகுதிகளும் மறைந்தாலும், முக்காலத்திற்கும் பொருத்தி வரும்.
சுடு சரம்
சுடு - வினைச்சொல்லின் வேர்; சரம் பெயர்ச்சொல். நன்னூலார் 'காலங் கரந்த 
பெயரெச்சம் வினைத்தொகை' என நூற்பா செய்துள்ளார்.
சுட்ட சரம் (இறப்பு) 
சுடுகின்ற சரம் (நிகழ்வு 
சுடும் சரம் (எதிர்)
இப்பெயரெச்சங்களில் உள்ள காலத்தை மறைத்துவிட்டால், அவை மூன்றுக்கும் 
அடிச்சொல்லான 'சுடு' என்பது மட்டும் நின்று, முக்காலங் களையும் காட்டும். 
கரந்த என்றால் மறைந்த என்பது பொருள். 

எடுத்துக்காட்டு 
அரி வாள்
அலை கடல்

(ஒற்று மிகுத்து எழுதக்கூடாது; அலைக்கடல் 
என மிகுத்தால், அலையை உடைய கடல் 
என இரண்டாவதாகும்)
அழி பசி
அழு மூஞ்சி
ஆடு அரங்கு
ஆகு ஊழ்
முகப்புபக்கம் எண் : 
தொடக்கம்

தொகைகள்52கி. செம்பியன்

இலங்கு நூல் 
உறை பதி 
உறை பனி 
உறை பொருள் 
ஊறு காய் 
எரி மலை 
எறிவேல் 
ஏவு கணை 
ஓடு காலி 
கடி நாய் 
கலை மகள்(கலைத்த, கலைக்கின்ற, கலைக்கும் 
மகளை இப்படிச் சொல்லலாம்; 
கலைக்கு உரிய மகள் என 
நான்காவதாகவும் கருதலாம்)
கனை கழல்(கனைக்கின்ற - ஒலிக்கின்ற)
குடிநீர் 
குரை கழல் (ஒலிக்கின்ற கழல்) 
கொல் களிறு 
சுடு காடு 
சுடு சரம் (அம்பு) 
சுடு சோறு 
செய் குன்று 
சுழல் கோப்பை 
சுழல் விளக்கு 
சூழ் வினை 
செல் செலவு 
தாழ் குழல் 
திங்கள் வாழ் சடை 
முகப்புபக்கம் எண் : 
தொடக்கம்

தொகைகள்53கி. செம்பியன்

திருநிறை செல்வி
திருநிறை செல்வன் 
திருவளர் செல்வி
திருவளர் செல்வன்
ஒற்றெழுத்து மிகுக்கக் கூடாது
தீதுதீர் மதுரை
தேய்பிறை
தொடர் ஓட்டம்
தொடர் சொற்பொழிவு
நடுகல்
நிறைகுடம்
பாய் கலை
பாய் புனல்
புணர் பொழுது
போகு ஊழ்
மறைபொருள்
மூடுபனி
வளர் பிறை
விடு கணை (அம்பு)
விடு முறை
விரி கதிர்
விளை வயல்
வீழ் புனல்
வெடி குண்டு

      வருபுனல், தருசுடர், நடந்திடு குதிரை என வினைப்பகுதி 
விகாரப்பட்டும் வினைத்தொகை வரும்.

iraamaki

unread,
Sep 17, 2017, 5:18:27 AM9/17/17
to mint...@googlegroups.com
அரிதலும் அரித்தலும் வெவ்வேறு வகைப்பட்ட வினைகள். முந்தையது தன்வினை. பிந்தையது பிறவினை.
 
தன் கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டு போனதென்று சொல்பவருக்கு நாம் எதையும் விளக்கமுடியாது. எனவே  நீங்கள் என்ன விளக்கஞ் சொன்னாலும் திரு.கணேசன் தான் சொன்னதே சரியென்பார்.
 
அன்புடன்,
இராம.கி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 17, 2017, 7:19:53 AM9/17/17
to மின்தமிழ்
2017-09-17 2:17 GMT-07:00 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>:
அரிதலும் அரித்தலும் வெவ்வேறு வகைப்பட்ட வினைகள். முந்தையது தன்வினை. பிந்தையது பிறவினை.

அறிவேன், ஐயா. 

அரிக்கண் = துளைக்கண். அரி = உள்துளை.

அரிக்கண் + சட்டி = அரிக்கண்சட்டி = துளைகொண்ட பாத்திரம்.

சாராயம் காய்ச்சும்போது, அரிக்கண்சட்டி (துளைகொண்ட பாத்திரம்) நடுவே
பயன்பட்டுள்ளது. இதனை சிந்து சமவெளிக் காலத்தில் இருந்து
செராமிக்ஸ் காட்டுகிறது.

arikkuJcaTTi above is different. I was talking about arikkaN-caTTi.

There is a clear difference between words, arikkaNcaTTi vs. arikkumcaTTi.
While arikkumcaTTi is solid, arikkaNcaTTi  has holes. This can be seen
in ceramics made in India for 5000 years.

arikkaNcaTTi is used as a middle vessel in liquor distillation, cooking
vegetables etc., arikkaN caTTi goes as mid-layer among three vessels.
http://www.frontline.in/multimedia/dynamic/02358/FL17_BINJOR_PERFOR_2358924g.jpg
http://www.frontline.in/arts-and-culture/heritage/harappan-surprise/article7053030.ece

அரிசி, கீரை போன்றவை களையவும் துளைகொண்ட தட்டு, பாத்திரங்கள் உள்ளன.
அரிக்கண் = perforation.

வினைத்தொகைகளில் ஒற்றெழுத்து மிகாது.

நா. கணேசன்
 
தன் கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டு போனதென்று சொல்பவருக்கு நாம் எதையும் விளக்கமுடியாது. எனவே  நீங்கள் என்ன விளக்கஞ் சொன்னாலும் திரு.கணேசன் தான் சொன்னதே சரியென்பார்.
 
அன்புடன்,
இராம.கி.

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 17, 2017, 7:42:27 AM9/17/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com

On Wednesday, September 13, 2017 at 9:00:53 AM UTC-7, ராம் காமேஸ்வரன் wrote:
//அரிக்கண்சட்டி (perforated vessel)//

அரிக்கஞ்சட்டி arikka -caṭṭi
n.
Dial. var. of அரிக்குஞ்சட்டி.

அரிக்குஞ்சட்டி arikku -caṭṭi
n. <அரி3-+.
Large-mouthed shallow pot for cleaning rice;
அரிசி களையுஞ் சட்டி.
http://www.tamilvu.org/slet/servlet/lexpg?pageno=124

arikkuJcaTTi above is different. I was talking about arikkaN-caTTi.

There is a clear difference between words, arikkaNcaTTi vs. arikkumcaTTi.
While arikkumcaTTi is solid, arikkaNcaTTi  has holes. This can be seen
in ceramics made in India for 5000 years.

arikkaNcaTTi is used as a middle vessel in liquor distillation, cooking
vegetables etc., arikkaN caTTi goes as mid-layer among three vessels.
http://www.frontline.in/multimedia/dynamic/02358/FL17_BINJOR_PERFOR_2358924g.jpg
http://www.frontline.in/arts-and-culture/heritage/harappan-surprise/article7053030.ece

N. Ganesan

அரிக்கண் சட்டி (perforated vessels) : சில உதாரணங்கள் பார்ப்போம்.

Some pots were found with holes punched in the sides. Pots like this may have been used to create fermented drinks like beer

A distinctive Indus pottery type, the perforated jar; this example comes from Harappa. Such jars are usually found inside large bowls, a combination perhaps used as brewing equipment, with the perforated jar, wrapped in cloth, serving as a strainer. (J. M. Kenoyer, Courtesy Department of Archaeology and Museums, Government of Pakistan)

அரிக்கண் = துளைக்கண். அரி = உள்துளை.

அரிக்கண் + சட்டி = அரிக்கண்சட்டி = துளைகொண்ட பாத்திரம்.

சாராயம் காய்ச்சும்போது, அரிக்கண்சட்டி (துளைகொண்ட பாத்திரம்) நடுவே
பயன்பட்டுள்ளது. இதனை சிந்து சமவெளிக் காலத்தில் இருந்து
செராமிக்ஸ் காட்டுகிறது. அரிசி, காய்கறி களைய அரிக்கண் சட்டிகள்
பயன்படுத்துகிறோம். Perforation என்பதற்குப் பழைய காலத்தில் இருந்து
பயன்படும் டெக்னிக்கல் வார்த்தை ‘அரிக்கண்’ என்பதாகும்.
அதனைத் தற்காலத் தமிழ் தொலைத்துக் கொண்டுள்ளது.

நா. கணேசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 17, 2017, 4:34:39 PM9/17/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Wednesday, September 13, 2017 at 3:45:35 PM UTC-7, siva siva wrote:
உங்கள் வினா: "வினைத்தொகையில் ஒற்று (க்,ச்,த், ப்) மிகுவதுண்டா? "
விடை: வினைத்தொகையில் வலி மிகாது.

விரிவான விளக்கத்தையும் உதாரணங்களையும் படிக்க ஆவல் இருந்தால், ஆறுமுக நாவலரின் இலக்கணச் சுருக்கம் உங்களுக்கு உதவும். 

வினைமுற்று வினைத் தொகைகளின் முன் வல்லினம் புணர்தல்
105. 
வினைமுற்று வினைத்தொகைகளின் ஈற்றுயிர் முன்னும்ய ர ழ வொற்றுகளின் முன்னும் வரும் வல்லினம் மிகாதியல்பாம்அச்சொற்களின் ஈற்று லகர ளகர ணகர னகரங்கள்வல்லினம் வந்தால் திரியாதியல்பாம்.

நன்றி, சிவசிவா. 

எந்தவகை வினைத்தொகையில் வலிமிகுதல் இல்லை.
  • தொகைநிலைத் தொடர்களில் வரும் வல்லினம் மிகாமை

i) அல்வழியில் உள்ள தொகைநிலைத் தொடர்களில் ஒன்றான வினைத்தொகை மிகவும் அற்புதமான தொகை. ஊறுகாய் என்று சொன்னதும், நம் நாவில் அந்தக் காயின் சுவை ஊறி நிற்கும். நேற்று ஊறிய காய், இன்று ஊறுகின்ற காய், நாளையும் ஊறும் காய் – ஊறுகாய். மூன்று காலங்களையும் காட்டும் இடைநிலைகள் என்னும் உருபுகள் மறைந்திருப்பதால், வினைத்தொகை எனப்பட்டது. வினைத்தொகையில் வரும் வல்லினம் கட்டாயம் மிகாது. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வரும் வல்லினம் மிகும் எனப் பார்த்தோம். ஆனால் வினைத்தொகையில் மட்டும் நிலைமொழி வன்தொடர்க் குற்றியலுகரமாக இருந்தாலும் வல்லினம் மிகாது.

சான்று:

நாட்டு + புகழ் = நாட்டுபுகழ் 
ஈட்டு + பொருள் = ஈட்டுபொருள்

இவ் வன்தொடர்க் குற்றியலுகரங்களின் முன்வரும் வல்லினம் வினைத்தொகையில் மிகவில்லை.

சுடு + காடு = சுடுகாடு 
நடு + கல் = நடுகல் 
குடி + தண்ணீர் = குடிதண்ணீர் 
மூடு + பனி = மூடுபனி 
சுடு + சோறு = சுடுசோறு 
விடு + கதை = விடுகதை 
திருவளர் + செல்வன் = திருவளர் செல்வன் 
திருவளர் + செல்வி = திருவளர் செல்வி

ii) இரண்டு சொற்களோ, இரண்டுக்கு மேற்பட்ட சொற்களோ வரும்போது, அச்சொற்களின் இறுதியில் உம்மை மறைந்திருப்பது உம்மைத் தொகை எனப்படும். உம்மைத்தொகையில் வரும் வல்லினம் மிகாது.

2017-09-13 11:16 GMT-04:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
வினைத்தொகையில் ஒற்று (க்,ச்,த், ப்) மிகுவதுண்டா? நான் பார்த்தவரையில் காணோம். வினைச்சொல் பெயர்ச்சொல்லாக மாறும்போது
ஒற்று மிகும். உ-ம்: அரிக்கட்டு (அரி = தானியக் கதிர்க்கட்டு). இரண்டு பெயர்ச்சொற்பிணை. ஆனால், அரிகீரை = வினைத்தொகை.

வினைத்தொகை - ஒற்று மிகுமா? ஏதாவது காட்டுகள் உண்டா?

நன்றி,
நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Sep 17, 2017, 8:30:03 PM9/17/17
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com

18 செப்டம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 2:04 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

On Wednesday, September 13, 2017 at 3:45:35 PM UTC-7, siva siva wrote:
உங்கள் வினா: "வினைத்தொகையில் ஒற்று (க்,ச்,த், ப்) மிகுவதுண்டா? "
விடை: வினைத்தொகையில் வலி மிகாது.

விரிவான விளக்கத்தையும் உதாரணங்களையும் படிக்க ஆவல் இருந்தால், ஆறுமுக நாவலரின் இலக்கணச் சுருக்கம் உங்களுக்கு உதவும். 

வினைமுற்று வினைத் தொகைகளின் முன் வல்லினம் புணர்தல்
105. 
வினைமுற்று வினைத்தொகைகளின் ஈற்றுயிர் முன்னும்ய ர ழ வொற்றுகளின் முன்னும் வரும் வல்லினம் மிகாதியல்பாம்அச்சொற்களின் ஈற்று லகர ளகர ணகர னகரங்கள்வல்லினம் வந்தால் திரியாதியல்பாம்.

நன்றி, சிவசிவா. 

எந்தவகை வினைத்தொகையில் வலிமிகுதல் இல்லை.
  • தொகைநிலைத் தொடர்களில் வரும் வல்லினம் மிகாமை

i) அல்வழியில் உள்ள தொகைநிலைத் தொடர்களில் ஒன்றான வினைத்தொகை மிகவும் அற்புதமான தொகை. ஊறுகாய் என்று சொன்னதும், நம் நாவில் அந்தக் காயின் சுவை ஊறி நிற்கும். நேற்று ஊறிய காய், இன்று ஊறுகின்ற காய், நாளையும் ஊறும் காய் – ஊறுகாய். மூன்று காலங்களையும் காட்டும் இடைநிலைகள் என்னும் உருபுகள் மறைந்திருப்பதால், வினைத்தொகை எனப்பட்டது. வினைத்தொகையில் வரும் வல்லினம் கட்டாயம் மிகாது. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வரும் வல்லினம் மிகும் எனப் பார்த்தோம். ஆனால் வினைத்தொகையில் மட்டும் நிலைமொழி வன்தொடர்க் குற்றியலுகரமாக இருந்தாலும் வல்லினம் மிகாது.

சான்று:

நாட்டு + புகழ் = நாட்டுபுகழ் 
ஈட்டு + பொருள் = ஈட்டுபொருள்

இவ் வன்தொடர்க் குற்றியலுகரங்களின் முன்வரும் வல்லினம் வினைத்தொகையில் மிகவில்லை.

சுடு + காடு = சுடுகாடு 
நடு + கல் = நடுகல் 
குடி + தண்ணீர் = குடிதண்ணீர் 
மூடு + பனி = மூடுபனி 
சுடு + சோறு = சுடுசோறு 
விடு + கதை = விடுகதை 

திருவளர் + செல்வன் = திருவளர் செல்வன் 
திருவளர் + செல்வி = திருவளர் செல்வி

சுடுசோறு எனும்போது சோ மெலிகிறது. அதேபோல் திருவளர்செல்வியில் செ’ மெலியுமா?

thiruvaLarchelvi or thiruvaLarselvi??? 

N. Ganesan

unread,
Sep 17, 2017, 10:46:54 PM9/17/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
ஆகுபெயர் வகைகளாக 18 வகைகளைப் பகுத்து அவை ஒவ்வொன்றுக்கும்
எடுத்துக்காட்டுகளைக் கூறிப் பல இலக்கண நூல்கள் உள்ளன.

"பொருள் முதல் ஆறோடு அளவைசொல் தானி
கருவி காரியம் கருத்தன் ஆதியுள்
ஒன்றன் பெயரான் அதற்கியை பிறிதைத்
தொன்முறை உரைப்பன ஆகுபெயரே"
                                     - நன்னூல் - 290

இங்குள்ளோரில் பலர் வினைத்தொகை வகைகளின் பெயர்களும்,
உதாரணங்களும் கூறிட இயலும். வினைத்தொகை வகைகளின்
பெயர்களும், உதாரணங்களும் பார்ப்போம்.

செயப்படுபொருள் வினைத்தொகை:

(1)
நிகழ்த்துகலை = நிகழ்த்தப்படுகின்ற கலை என்பது போல முக்காலமும் கரந்து பொருள்தரும்.

(2) 
பெய்வளை = பெய்யப்படுகின்ற வளை என்பது போல முக்காலமும் கரந்து பொருள்தரும்.
பெய்வளை - செயப்படுபொருளில் வந்த வினைத்தொகை.

(3) 
குலுங்குமரம் - செயப்படுபொருள் வினைத்தொகை:
காற்றால் என்பதை வருவித்துக் காற்றால் குலுக்கப்பட்ட மரம் என்று பொருள்தரும்.

(4) 
உண்பொருள் -
(உயிரி ஒன்றால்) உண்ணப்பட்ட பொருள் என்பது போல முக்காலமும் கரந்து பொருள்தரும்.
‘உண்பொருள்’ செயப்படுபொருளில் நின்ற வினைத்தொகை. 

(5) 
அணிகலம் - 
மக்களால் அணியப்படுகிற கலம் எனச் செயப்படுபொருளில் நின்ற வினைத்தொகை. 

(6)
தொழுகழல் :- தொழப்படுங் கழலடி . செயப்படு பொருளில் நின்ற வினைத்தொகை 

இன்னும் பல செயப்படுபொருளில் நின்ற வினைத்தொகை உதாரணங்கள் இருக்கும்.
தெரிந்ததைத் தாருங்கள். பார்ப்போம்.

நன்றி,
நா. கணேசன்

On Wednesday, September 13, 2017 at 3:45:35 PM UTC-7, siva siva wrote:
உங்கள் வினா: "வினைத்தொகையில் ஒற்று (க்,ச்,த், ப்) மிகுவதுண்டா? "
விடை: வினைத்தொகையில் வலி மிகாது.

விரிவான விளக்கத்தையும் உதாரணங்களையும் படிக்க ஆவல் இருந்தால், ஆறுமுக நாவலரின் இலக்கணச் சுருக்கம் உங்களுக்கு உதவும். 

வினைமுற்று வினைத் தொகைகளின் முன் வல்லினம் புணர்தல்
105. 
வினைமுற்று வினைத்தொகைகளின் ஈற்றுயிர் முன்னும்ய ர ழ வொற்றுகளின் முன்னும் வரும் வல்லினம் மிகாதியல்பாம்அச்சொற்களின் ஈற்று லகர ளகர ணகர னகரங்கள்வல்லினம் வந்தால் திரியாதியல்பாம்.

நன்றி, சிவசிவா. 

எந்தவகை வினைத்தொகையிலும் வலிமிகுதல் இல்லை.

N. Ganesan

unread,
Sep 23, 2017, 5:59:00 AM9/23/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
"செயப்படுபொருள், செய்பொருள், கருமம், காரியம் என்பன ஒரே பொருளைத் தருவன.

வினைமுதல் (எழுவாய்) செய்யும் தொழிலின் பயனை ஏற்பது எதுவோ அது செயப்படுபொருள் எனப்படும்."

செய்பொருள் வினைத்தொகை:

” தொழுகழல் :- தொழப்படுங் கழலடி . செயப்படு பொருளில் நின்ற வினைத்தொகை . 
` அறு கயிறு ` செய்பொருள் வினைத்தொகை . மறைகள் நிறைநாவர் ( தி .1 ப .71 பா .5).”

உறுகயிறு ஊசல் போல ஒன்று விட்டு ஒன்று பற்றி
மறுகயிறு ஊசல் போல வந்துலவு நெஞ்சம்
பெறுகயிறு ஊசல் போலப் பிறைபுல்கு சடையாய் பாதத்து
அறுகயிறு ஊசல் ஆனேன் அதிகை வீரட்டனாரே 
                          - அப்பர்

அறுகயிறு - அறுபடு கயிறு - செய்பொருள் வினைத்தொகை.
இதுபோல,
அலைமனம் - அலைபடு மனம்
திரைகடல் - திரைபடு கடல்
குலுங்குமரம் - குலுங்கல்படு மரம்
செய்பொருள் வினைத்தொகை.

ஆனால், இவற்றையே
அறுக்கப்படு கயிறு, அலைக்கப்படு மனம், திரைக்கப்படு கடல், குலுக்கப்படு மரம்
என்று பார்த்தால் செயப்படுபொருளில் நின்ற வினைத்தொகை ஆகிறது அல்லவா? 

கேள்வி:
செய்பொருள் வினைத்தொகை எல்லாவற்றையும்
செயப்படுபொருள் வினைத்தொகை என்றும் பார்க்கலாமா?

நன்னூல், ஆறுமுக நாவலர் காண்டிகையுரை:
”320 செய்பவன் கருவி நிலஞ்செயல் காலஞ்
செய்பொரு ளாறுந் தருவது வினையே.
 
செய்பவன் கருவி நிலம் செயல் காலம் செய்பொருள் ஆறும் = கருத்தாவும் காரணமும் இடமும் செயலும் காலமும் செயப்படுபொருளும் ஆகிய அறுவகைப் பொருளையும், தருவது வினை = தருவது தெரிநிலை வினைச்சொல்லாம்.”

நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 10, 2017, 10:27:54 AM10/10/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
வினைத்தொகைகளில் அரிய உதாரணங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவ்வகையில், ஒரு குழந்தையின் பெயர் வினைத்தொகையாக
அமைந்தது நினைவுக்கு வருகிறது.

கலிபோர்னியாவில் தமிழ்த் தம்பதியர் ஒரு குழந்தையைத் தத்து எடுத்துவரும் போது, பெயரை ‘மலர்’ என வைக்க எண்ணினர். அதற்கு முன்னர் அவர்கள் வாழ்வினில் ஒரு சோக நிகழ்வு. அப்போது யாரோ மலர் என்றால் வாடிவிடுமே என்று சொல்ல, ’இருமலர்’ எனப்பெயரிட்டனர். என்றும் இருக்கும் மலர் என்ற பொருளில். அதாவது, இருமலர் வினைத்தொகையாய் இட்ட பெயர். அழகான பெயர்.

இருமலர் என்ற வார்த்தை எங்காவது பாடலில் இதுபோல வினைத்தொகையாய் பயன்பட்டிருக்கிறதா?
இரு- என்றால் கரிய, பெரிய பண்புகாட்டும் அடையாக வரும். பெண்பாற்பெயர் வினைத்தொகையாக அமைத்தது புதுமை.

நன்றி,
நா. கணேசன்

சேது

unread,
Oct 10, 2017, 11:49:32 PM10/10/17
to மின்தமிழ்
வினைத்தொகையில்2சொல்இருக்கும்.1.முதனிலைத்தொழிற்பெயர்.2.பெயர்.இருமை பண்புச்சொல்,பெருமை என்பதுபொருள்.இருமலர் என்றால்பெரு\மா பொருள்.மாமலராள்என்றதொடரைநோக்குக..இருத்தல்-இரு உண்டு..இருவுக்குப்பலபொருள் உண்டு.

On Thursday, August 31, 2017 at 6:38:44 PM UTC+5:30, N. Ganesan wrote:
வினைச்சொற்களில் தன்வினை, பிறவினைகள் உண்டு. வினைத்தொகைகளில் வல்லொற்று மிகாது. 

இதற்கான சான்றுகளைப் பழைய இலக்கியங்கள் காட்டுகின்றன. அவற்றில் சில பார்ப்போம்.

பண்ணுதலைப் பயன் ஆர் பாடல் - இந்த அருட்பாவில் ஆர்பாடல் என்பது பிறவினை வினைத்தொகை.
பண்ணுத லைப்பயனார் பாடலும் நீடுதலும்
   பங்கய மாதனையார் பத்தியு முத்தியளித்து

கு-ரை: "பங்கய மாதனையார்" என்றதனை, முதற்கண் வைத்து உரைக்க. "ஆர் பாடல்" என்றது. பிறவினை வினைத்தொகை. "அளித்து" என்னும் எச்சம், செயப்பாட்டு வினையாய் நின்ற "எண்ணு" என்றதனோடு முடிந்தது.

இந்த எடுத்துக்காட்டுப் போல, பிறவினை வினைத்தொகைகள் இலக்கியங்களில் பரக்கக் காணலாம்.

ஓய்மா/ன் - சங்க கால வேளிர் பெயர். ஓய்க்கும் மா = ஓய்க்கும் குதிரை என்ற பொருள். அக் குதிரைகளைக்
கொண்ட வேளிர்களுக்கு ஓய்மா எனப்பெயர்.  ஓய்குதிரை.
ஓய்க்கின்ற பணி = ஓய்பணி.  ஓய்க்கின்ற பளு, சுமை = ஓய்சுமை, ஓய்பளு ..

நா. கணேசன்

இறைவன் உயிர்பால் கொண்ட கருணையால் உயிருக்குத் தன்னைக் காட்டாது மறைத்து நின்று பக்குவப்பட வைத்து பின் அவ்வுயிரின் பிறப்பை நீக்கும் அருட்செயலை ‘மறை’ என்னும் சொல் குறிக்குமென கொண்டால் ‘மறைகாடு’ என்னும் சொற்றொடர் பொருள் பொருந்தி வரக்கூடும்.

ஐயா திரு. நு.த. லோகசுந்தரம் அவர்கள் ‘மறை’ என்பது வினைத்தொகை என்று பொருள் கொண்டதும் இங்கு கவனிக்கத் தக்கது.

மறைகாடு என்று இருந்தால் வினைத்தொகை. வல்லொற்று மிகுந்தால் வேற்றுமைப் பொருள் என்னும் டாக்டர் பொன்முடி மடலைப் பாருங்கள்.

வினைத்தொகையில் ஒற்று மிகுவதில்லை.

இரு பெயர்ச்சொல்கள் இணையும்போது ஒற்று மிகும்:
சிறைச்சாலை - சிறை ‘cell' உடைய சாலை ‘’< 'saalaa, building, campus"
உரைக்கிழத்தி - உரை ‘சொல், vAc in Sanskrit', கிழத்தி - தேவி. உரைக்கிழத்தி = வாக்தேவி என்பதன் தமிழாக்கம்.
அரிதல் என்பதன் பெயர்ச்சொல்: அரை. அரிந்த கீரை. அரைக்கீரை.
கணிப்பொறி - கணி = computer, பொறி - எந்திரம். கணிப்பொறி lit. computer machine
etc.,

N. Ganesan

unread,
Oct 11, 2017, 12:01:42 AM10/11/17
to மின்தமிழ்
2017-10-10 20:49 GMT-07:00 சேது <sethura...@gmail.com>:
வினைத்தொகையில்2சொல்இருக்கும்.1.முதனிலைத்தொழிற்பெயர்.2.பெயர்.இருமை பண்புச்சொல்,பெருமை என்பதுபொருள்.இருமலர் என்றால்பெரு\மா பொருள்.மாமலராள்என்றதொடரைநோக்குக..இருத்தல்-இரு உண்டு..இருவுக்குப்பலபொருள் உண்டு.

நன்றி. இரு = இரண்டு, கரிய, பெரிய - பொருள்கள் அறிவோம்.
இருமலர் = வினைத்தொகையாய் வாடாமலர்/நித்யபுஷ்பம் என்ற பொருளில் காண்டல் அரிது.
அவ்வகையில், ஒரு பெண்பெயர் அமைந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டேன்.
 
--

தேமொழி

unread,
Oct 11, 2017, 12:53:46 AM10/11/17
to மின்தமிழ்

On Tuesday, October 10, 2017 at 7:27:54 AM UTC-7, N. Ganesan wrote:
வினைத்தொகைகளில் அரிய உதாரணங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவ்வகையில், ஒரு குழந்தையின் பெயர் வினைத்தொகையாக
அமைந்தது நினைவுக்கு வருகிறது.

கலிபோர்னியாவில் தமிழ்த் தம்பதியர் ஒரு குழந்தையைத் தத்து எடுத்துவரும் போது, பெயரை ‘மலர்’ என வைக்க எண்ணினர். அதற்கு முன்னர் அவர்கள் வாழ்வினில் ஒரு சோக நிகழ்வு. அப்போது யாரோ மலர் என்றால் வாடிவிடுமே என்று சொல்ல, ’இருமலர்’ எனப்பெயரிட்டனர். என்றும் இருக்கும் மலர் என்ற பொருளில். அதாவது, இருமலர் வினைத்தொகையாய் இட்ட பெயர். அழகான பெயர்.

இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்து அமிழ்தம் என்றாலும் வேண்டேன் - .... 151 
-- தமிழ் விடு தூது

N. Ganesan

unread,
Oct 11, 2017, 1:16:58 AM10/11/17
to மின்தமிழ், vallamai

On Tuesday, October 10, 2017 at 9:53:46 PM UTC-7, தேமொழி wrote:

On Tuesday, October 10, 2017 at 7:27:54 AM UTC-7, N. Ganesan wrote:
வினைத்தொகைகளில் அரிய உதாரணங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவ்வகையில், ஒரு குழந்தையின் பெயர் வினைத்தொகையாக
அமைந்தது நினைவுக்கு வருகிறது.

கலிபோர்னியாவில் தமிழ்த் தம்பதியர் ஒரு குழந்தையைத் தத்து எடுத்துவரும் போது, பெயரை ‘மலர்’ என வைக்க எண்ணினர். அதற்கு முன்னர் அவர்கள் வாழ்வினில் ஒரு சோக நிகழ்வு. அப்போது யாரோ மலர் என்றால் வாடிவிடுமே என்று சொல்ல, ’இருமலர்’ எனப்பெயரிட்டனர். என்றும் இருக்கும் மலர் என்ற பொருளில். அதாவது, இருமலர் வினைத்தொகையாய் இட்ட பெயர். அழகான பெயர்.

இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்து அமிழ்தம் என்றாலும் வேண்டேன் - .... 151 
-- தமிழ் விடு தூது

நன்றி. 

இருந்தமிழ் - முக்காலமும் ஏற்கும் வினைத்தொகை என்று கொள்ளுதல் சிறப்பு. 
நன்னூல் பாயிரத்தில் ’குணகடல், குமரி, குடகம், வேங்கடம் எனும் நான்கெல்லையின்
இருந்தமிழ்க்கடலுள்’ என்றுள்ளது.

https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/af/தொல்காப்பியம்_நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/page25-809px-தொல்காப்பியம்_நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf.jpg
மூன்று கடல்களும், வடக்கே வேங்கடம் என்னும் நான்கு எல்லைக்குள்
இருந்தமிழ் என்பதில் சிறப்பு/பெருமை உடைய என்பதிலும்
வினைத்தொகையாகக் கொள்ளுதல் சிறப்பு. ‘இருந்த பெரும் தமிழணங்கே” (பெ. சுந்தரனார், தமிழ்த்தாய் வாழ்த்து).

பாண்டியனை அறிவுறுத்தி சமணரைக் கழுவேற்றிய செயலை ஆற்றிய மந்திரி குலச்சிறையாரைப்
புகழும் பாட்டில் இருந்தமிழ்நாடு என்பதிலும் வினைத்தொகையாக இருந்தமிழ்நாடு எனக் கொள்ளலாம்.
தமிழறிஞர்கள் பலர் திருவள்ளுவரைச் சமணர், எல்லோருக்கும் வாழ ஒரு நூல் இயற்றினவர் என வரலாறு, இலக்கிய ஆய்வு, மரபுகள்’
எனக் காட்டிவிட்டாலும், சைவர்கள் மடல்களைப் படிக்கும்போது, ‘இருந்தமிழ்நாடு’ குலச்சிறை மனநிலை
உள்ள ‘இருந்தமிழ்நாடு’ வினைத்தொகை எனினும் அமையும்.

அருந்தமி ழாகரன் வாதி 
    லமணைக் கழுநுதிமேல்
இருந்தமிழ் நாட்டிடை யேற்றுவித் 
    தோனெழிற் சங்கம்வைத்த
பெரும்தமிழ் மீனவன் தன்அதி 
    காரி பிரசமல்கு
குருந்தவிழ் சாரல் மணமேற் 
    குடிமன் குலச்சிறையே 

இருந்தமிழ் - பெருமைமிக்க தமிழ்; செந்தமிழ் ``தமிழ் நாட்டிடை ஏற்றுவித்தோன்`` என்றாராயினும் `தமிழ் நாட்டிடை யிருந்த அமணை ஏற்று வித்தான்` என்றலே கருத்து என்க.
 
நா. கணேசன்

இருமலர் என்ற வார்த்தை எங்காவது பாடலில் இதுபோல வினைத்தொகையாய் பயன்பட்டிருக்கிறதா?
இரு- என்றால் கரிய, பெரிய பண்புகாட்டும் அடையாக வரும். பெண்பாற்பெயர் வினைத்தொகையாக அமைத்தது புதுமை.

N. Ganesan

unread,
Oct 11, 2017, 1:32:24 AM10/11/17
to மின்தமிழ், vallamai
இருதமிழ் என்றால் வினைத்தொகை. இரு- verbal root.

இரும்+தமிழ் = இருந்தமிழ். வினைத்தொகை ஆகாது.

தொடுவான் - வினைத்தொகை.
ஆனால், தொடும்வானம் - வினைத்தொகை இல்லையே.

இங்கே பார்க்கலாம்:
50. திருந்துமொழி - வினைத்தொகை
51. பொருந்துமொழி - வினைத்தொகை
52. திரைகவுள் - வினைத்தொகை
53. உயர்சினை - வினைத்தொகை
54. ஒழுகுநீர் - வினைத்தொகை
55. புனைகலம் - வினைத்தொகை
56. உருள்தேர் - வினைத்தொகை
57. ஈர்வளை - வினைத்தொகை
58. படுகாலை - வினைத்தொகை
59. துஞ்சு மார்பம் - வினைத்தொகை
60. நிறைமதி - வினைத்தொகை
61. திருந்தடி - வினைத்தொகை
62. மொய்கழல் - வினைத்தொகை
63. அலைகடல் - வினைத்தொகை
64. வீங்குநீர் - வினைத்தொகை
65. களிநடம் - வினைத்தொகை
66. விரிநகர் - வினைத்தொகை
67. அகல் முகில் - வினைத்தொகை
68. படர் முகில் - வினைத்தொகை
69. கிளர்திறம் - வினைத்தொகை
70. பொழிகரி - வினைத்தொகை
71. பொழிமறை - வினைத்தொகை
72. செய்குன்று - வினைத்தொகை
73. ஆடரங்கு - வினைத்தொகை
74. தாழ்பிறப்பு - வினைத்தொகை
75. உறை வேங்கடம் - வினைத்தொகை
76. துஞ்சு முகில் - வினைத்தொகை
77. வளர் கூடல் - வினைத்தொகை
78. இரைதேர் குயில் - வினைத்தொகை
79. சுழி வெள்ளம் - வினைத்தொகை
80. சுடரொளி - வினைத்தொகை
81. உயர்எண்ணம் - வினைத்தொகை
82. உயர் மரம் - வினைத்தொகை
83. முதிர்மரம் - வினைத்தொகை
84. தொடுவானம் - வினைத்தொகை
85. பொங்கு சாமரை - வினைத்தொகை

NG

nkantan r

unread,
Oct 11, 2017, 7:28:56 AM10/11/17
to மின்தமிழ்
நெடுந்தேர் எனும் சொல்லைத் தேடுமிடத்து, இணையம் பல இடங்களில் (உரையில்) நெடுதேர் எனும் சொல்லைக் காட்டுகிறது.

http://www.tamilvu.org/slet/l1200/l1200uri.jsp?book_id=22&song_no=301

http://www.tamilvu.org/slet/l1270/l1270exp.jsp?x=734&y=723&bk=334&z=l12702b3.htm

( இஃதுபோல் பல tvu பக்கங்கள்..)

https://ta.m.wikisource.org/wiki/பக்கம்:திருக்குறள்_உரை.pdf/155

இப்பக்கம் குன்றக்குடி அடிகளார் உரையைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது.

நெடுதேர் எனும் சொல் சரியானதா??

rnk

N. Ganesan

unread,
Oct 11, 2017, 8:41:43 AM10/11/17
to மின்தமிழ்

On Wednesday, October 11, 2017 at 4:28:56 AM UTC-7, nkantan r wrote:
நெடுந்தேர் எனும் சொல்லைத் தேடுமிடத்து, இணையம் பல இடங்களில் (உரையில்) நெடுதேர் எனும் சொல்லைக் காட்டுகிறது.

http://www.tamilvu.org/slet/l1200/l1200uri.jsp?book_id=22&song_no=301

http://www.tamilvu.org/slet/l1270/l1270exp.jsp?x=734&y=723&bk=334&z=l12702b3.htm

( இஃதுபோல் பல tvu பக்கங்கள்..)

tvu பெரும்பணம் செலவாகிச் செய்யும் பக்கங்கள். மக்கள் வரிப்பணம், ஆனால், தட்டுப்பிழைகள் பல.
அவற்றில், இந்த நெடுதேர் ஒரு உதாரணம்.
 
https://ta.m.wikisource.org/wiki/பக்கம்:திருக்குறள்_உரை.pdf/155

இப்பக்கம் குன்றக்குடி அடிகளார் உரையைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது.

இது மெஷின் எழுத்துணரிப் பிழை.
 
நெடுதேர் எனும் சொல் சரியானதா??

இல்லை. நெடுந்தேர் தான் சரி.

NG
 
rnk

N. Ganesan

unread,
Oct 11, 2017, 9:24:28 AM10/11/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
2017-10-11 4:28 GMT-07:00 nkantan r <rnka...@gmail.com>:

நெடுதேர் எனும் சொல் சரியானதா??

கடுமா, கடுவினை, ... போல,
நெடுவாயில், நெடுநாள், நெடுநேரம், நெடுமாறன், நெடுமரம் நெடுவரை, நெடுவாடை, ... உள்ளன.

ஆனால், தகர வர்க்க வருமொழிப் பண்புத்தொகைகளில் “நெடும்” என்றே உள்ளது.
நெடுந்தேர், நெடுந்தொலைவு, ....

இருந்தமிழ் - பண்புத்தொகை.  (நெடுந்தேர், ... போல)

சங்கத் தமிழின் பல அரிய பதங்களை விளங்கிக்கொள்ள நச்சினார்க்கினியர் துணைவருகிறார்.
ஆச்சா என்பது யா மரம், அது சால மரம் (sal wood) என நாம் புரிந்துகொள்ளச்
செய்பவர் அவரே. அரைநாள் என்றால் Equinox என்பதை விளக்கியவரும் நச்சரே.
மதுரையில் பாரத்வாஜ கோத்திரத்தில் அவதரித்த சிவ பிராமணர் [1].

இருந்தமிழ், கரும்புலி போல ஒரு பண்புத்தொகை. நச்சினார்க்கினியர் விளக்கம்:
“இனிக் கரும்பார்ப்பான் கரும்பார்ப்பனி கரும்பார்ப்பார் கருங்குதிரை கருங்குதிரைகள் என வரும். இவற்றுட் கரியனாகிய பார்ப்பான் கரியளாகிய பார்ப்பனி கரியராகிய பார்ப்பார் கரியதாகிய குதிரை கரியனவாகிய குதிரைகள் என ஐம்பாலினையும் உணர்த்தும் பண்புகொள்பெயர் தொக்கவாறு காண்க. இவற்றுட் கருமை என்னும் பண்புப்பெயர் தொக்கதேற் கருமையாகிய பார்ப்பானென விரித்தல் வேண்டும்; அங்ஙனம் விரியாமையிற் பண்புகொள் பெயர் தொக்கதென்று உணர்க.

வெற்றிலை வெற்றுப்பிலி வெற்றடி வெற்றெனத்தொடுத்தல் என்றாற் போல்வனவற்றுள் வெறுவிதாகிய இலையென்பது பாக்குங் கோட்டு நூறுங் கூடாததாய பண்புணர்த்தி ஈறு தொகுதலின் மருவின் பாத்தியவாய் நின்று ஒற்றடுத்தது. வெறுவிதாகிய உப்பிலியென்றது சிறிதும் உப்பிலியென நின்றது. ஏனையவும் அன்ன. இங்ஙனம் ஐம்பாலுந் தொகுத்தற்கு உரிய முதனிலையாதலிற் புணர்த்தலாகாமை கூறினார். 

இனி ஆடரங்கு செய்குன்று புணர்பொழுது அரிவாள் கொல்யானை செல்செலவு என நிலம் முதலாகிய பெயரெச்சந்தொக்க வினைத்தொகைகளை விரிக்குங்கால், ஆடினவரங்கு எனச் செய்த என்னும் பெயரெச்சத்து ஈறு விரிந்த அகர ஈறு இறப்பு உணர்த்தியும், ஆடாநின்றவரங்கு ஆடுமரங்கு எனச் செய்யுமென்னும் பெயரெச்சத்து ஈறு விரிந்த உம்மீறு நிகழ்வும் எதிர்வும் உணர்த்தியும், அவற்றானாய புடைபெயர்ச்சியைத் தோற்றுவித்து இரண்டு பெயரெச்சமும் ஒருசொற்கண் ஒருங்கு தொக்கு நிற்றலின் அதனை ஒரு பெயரெச்சத்தின்கண் அடக்கிப் புணர்ககலாகாமையிற் புணர்க்கலாகாதென்றார். உம்மிறுதி நிகழ்வும் எதிர்வும் உணர்த்துமாறு "வினையின்தொகுதி" (சொல்-415) என்னம் எச்சவியற் சூத்திரத்துட் கூறுதும். இவ் வும் ஈறு இரண்டு காலமும் ஒருங்குணர்த்துதற் சிறப்பு நோக்கிச் செய்த என்பதனை ஆசிரியர் முற்கூறாராயினர்.”

இளம்பூரணர் உரை:
“கருஞ்சான்றான் என்றது பணபுத் தொகை, இது கரும் எனப் பண்புணர நின்றது. கருஞ்சான்றானெனத் தொகையாயவழி, கருமென்பது கரியானெனப் பால்காட்டி நிற்றலில் புணர்க்கப்படாதாயிற்று.”

தொல்காப்பியமும், பாலவியாகரணமும்:

“உவப்பு,  உவகை,  உவந்தான்,  உவந்து,   உவந்த,  உவவா  என்னும்
பெயர்க்கும் வினைக்கும் முதனிலையாக வரும் ‘உவ’ என்னும் உரிச்சொற்கு
அடியாகக் குறிப்புப்பற்றி வருவது  உவ்  என்னும் குறைச்சொல்லாகும். கார்,
கரி, கருப்பு, கருமை, கருத்தல்,  கரிந்தான், கரிந்து,  கரிந்த,  கரியா  எனப்
பெயர் வினைகட்கு முதனிலையாக  வரும்  கருவென்னும்  உரிச்சொல்லின்
அடி பண்பு பற்றி வரும் ‘கர்’ என்னும் குறைச்சொல்லாகும்.”

“இனிக் கரும்பார்ப்பான், கரும்பார்ப்பனி,  கரும்பார்ப்பார், கருங்குதிரை,
கருங்குதிரைகள்  எனப்   பண்புத்தொகைமொழிகளுள்  ‘கரும்’   என்னும்
குறைச்சொல்-கரியன், கரியள், கரியர், கரியது, கரியவை எனப்  பின்மொழிக்
கேற்பப்   பொருள்தந்து   பாலுணர்த்தும்.   பிரிந்து   நின்றவழி   அஃது
பாலுணர்த்துதற்கு ஏலாமையான் பண்புத் தொகைகளின் முதனிலைச்
சொற்கள் மருவின் பாத்தியவாதல் காண்க.”

நா. கணேசன்

[1]   நச்சினார்க்கினியர்
     உரைச்சிறப்புப்பாயிரம்

பாற்கடல் போலப் பரந்த நன்னெறி
நூற்படு வான்பொரு ணுண்ணிதி 1னுணர்ந்து
போக்கறு கேள்விப் புலவோர் புலத்தி
னாற்பொருள் பொதிந்த தூக்கமை யாப்பினைத்
2தேக்கிய சிந்தைய னாகிப் பாற்பட
வெழுத்துஞ் சொல்லும் பொருளுமிம் மூன்று
மிழுக்கற வாய்ந்த 3வழுக்கிறொல் சீர்த்தித்
தொல்காப் பியமெனுந் தொடுகடற் பரப்பை
மறுவுங் குறைவு மின்றி யென்றுங்
கலையி னிறைந்த கதிர்மதி யென்ன 10
நிலையுடை கலத்தி னெடுங்கரை காணாக்
கல்லா மாந்தர் கற்பது வேண்டியு
நல்லறி வுடையோர் நயப்பது வேண்டியு
முரையிடை யிட்ட காண்டிகை யுரைத்தும்,
ஆன்றோர் 4புகழ்ந்த வறிவினிற் றெரிந்து 15
சான்றோ ருரைத்த தண்டமிழ்த் தெரிய
லொருபது பாட்டு 5முணர்பவர்க் கெல்லா
முரையற 6முழுதும் புரைபட வுரைத்தும்,
ஒலித்திரைத் தலத்தி னுணர்ந்தோ ருரைக்குங்
கலித்தொகைக் கருத்தினைக் காட்சியிற் கண்டதற் 20
குள்ளுறை யுவமமு மேனை யுவமமுந்
தெள்ளிதிற் றெரிந்து திணைப்பொருட் கேற்ப
வுள்ளுறை யுவமத் தொளித்த பொருளைக் 
கொள்பவர் கொள்ளக் குறிப்பறிந் துணர்த்தி
யிறைச்சிப் பொருளுக் கெய்தும் வகையைத்
திறப்படத் தெரிந்து சீர்பெறக் கொளீஇத்
முறைப்பட வினையை முடித்துக் காட்டிப்
பாட்டிடை மெய்ப்பாடு பாங்குறத் தெரித்துப்
பாற்பட நூலின் யாப்புற வுரைத்த 30
நாற்பெயர் பெயரா நடப்பக் கிடத்திப்
போற்ற வின்னுரை பொருள்பெற 1விளம்பியும்,
வையம் புகழ்ந்து மணிமுடி சூட்டிய
பொய்யில் வான்கதை பொதிந்த செந்தமிழ்ச்
சிந்தா மணியைத் தெண்கடன் மாநிலம்
வந்தா தரிப்ப 2வண்பெரு வஞ்சிப்
பொய்யா மொழிபுகழ் மையறு காட்சித்
திருத்தரு முனிவன் கருத்திது வென்னப்
பருப்பொருள் கடிந்து 3பொருட்டொடர்ப் படுத்து
வினையொடு முடியப் புனையுரை யுரைத்தும், 40
நல்லறி வுடைய தொல்பே ராசான்
கல்வியுங் காட்சியுங் காசினி யறியப்
பொருடெரி குறுந்தொகை யிருபது பாட்டிற்
கிதுபொரு ளென்றவ னெழுதா தொழிய
விதுபொரு ளென்றதற் கேற்ப வுரைத்தும்,
தண்டமிழ் 4தெரித்த வண்புகழ் மறையோன்
வண்டிமிர் சோலை மதுரா புரிதனி
லெண்டிசை விளங்க வந்த வாசான்
பயின்ற கேள்விப் பாரத்து வாச
னான்மறை துணிந்த நற்பொரு ளாகிய 50
தூய ஞான நிறைந்த சிவச்சுடர்
தானே யாகிய தன்மை யாள
னவின்ற வாய்மை நச்சினார்க் கினிய
5னிருவினை கடியு மருவியம் பொதியின்
மருவிய குறுமுனி தெரிதமிழ் விளங்க
வூழி யூழி காலம். 
வாழி வாழியிம் மண்மிசை யானே.
 
Reply all
Reply to author
Forward
0 new messages